அமரஞ்சலி...
யாருக்கு இழைத்தாளோ துரோகம்
அவன் தோள்களில் இளைந்தாள்...
மரணமும் மஞ்சமும்
இணைகோடுகளாய் அமர்
எனும் புள்ளியில்...
இளையும் அவளோ காதலில் பெண்டாளுபவனோ
மாற்றாளின் மணாளன்...
அறியா வயதில் அறிந்து செய்த துரோகம்
அனைத்தும் கற்றுணர்ந்த வெற்றியாளன் கையில்
அவள் கற்பென நின்றது...
காதலை உணர்ந்தவளோ
பலியாக....
பழியென நின்றவன் கூற்றில் நியாயமில்லை...
அவன் பொருளிழந்தான்
அவளோ தன் அடையாளம் இழந்தாள்...
தன் நிலை இறங்கினாள்...
ஊரார் முன் தலையிறங்கினாள்...
கடமைக்காய் போராடினாள்
கற்பை காப்பாற்ற
அகங்காரமாய் வலம் வந்தாள்...
தவறிழைப்பதும், துரோகமும் இந்த ஆண் சமூகத்தின் அடையாளம் அன்றோ...
பெண்களுக்கு பழி தான் வழியோ...
அவளின் துரோகத்தின் விலை அவள் கற்பானால்...
அவள் மானத்தின் விலை வரும் காலங்களில் அவன் நிம்மதி, உறக்கம், அவன் வாழ்க்கை என பயணிக்கும்....
ஸ்ரீ மா....
அவன் என்ன கரடியாக கூவினாலும்... இப்ப இருக்கும் சூழலில் அவனிழைப்பது அக்கரமத்தின் உச்சம்....
ஆண் பல துரோகத்தின் பிடியில் இருந்து பிய்ந்து கொண்டு வர முடியும் ஆனால்....
அவனால் ஏற்பட போகும் இந்த சூழல்....
மற்றவர்களுக்கு இவனுக்கு வித்தியாசம் இல்லாமல் போகும்...
ஆண் தானே ஆணவமாக ஆடுகிறான்....
பணம் படைத்தவன் பந்தாடுகிறான்...
இவன் தங்கையை பாதுகாப்பானாம் மற்றவளை பழி வாங்குவானாம்
ஆணின் நியாயமும் தீர்ப்பும் ஆபாரம்....
பொறுப்பில்லாமல் பெற்றவள் ஊராரை உட்டி வளர்த்திட போதும் ,
தன் பிள்ளை தரிகெட்டு கிடக்கும் இவனை சரி செய்ய தவறிய தாய்... அவளின் நம்பிக்கையை சின்ன பின்ன மாக்கிய ஆசை மகன்....
அவன் நீங்க நியாமான எந்த சூழலில் நிற்க வைத்தாலும் சரி அவன் தாய் முன் அவன் தலை இறங்கி தான் போகும் நினைக்கிறேன் ஸ்ரீ மா....
கடந்த கால நினைவுகள் இவன் என்ன கஷ்ட என்ன பார்கலாம் இவனின் நியாயம்... இவனை பொங்க பானையில் இட்டு பொங்க சந்தர்ப்பம் கிடைக்காமல் போகாது...
பெண்ணே!!! சேற்றில் உலண்டவனின் தோளில் சாய்ந்தததால அவளின் மேல் சேறாகியது இதோ....
உண்மையில் அவன் மேல் கோபம் தான் ஸ்ரீ மா வருது.. அவனோட துரோகம் என்ற வார்த்தை படிக்கும் போது அப்படி என்ன பெரிய துரோகம் தான் யோசிக்க தோனிச்சு பீல் வரை
அமரர் பக்கா வில்லன் தான் என்று சொல்லிக்கொண்டே
சொந்தம் என்ற பெண்ணை விட்டு துரோகத்தின் பின் பயணிக்கும் மடையன்
மனசே ஆறவில்லை ஸ்ரீ மா