All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Banumathi Balachandran

Well-known member
இனி என்ன நடக்கப் போகிறது அமரின் இந்த அதிரடிக்கு அஞ்சலியின் நடவடிக்கையை காண காத்திருக்கிறேன்
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? நாயகனும் நாயகியும் சந்தித்து கொண்ட பதிவு..

விமானத்தில் ஏறி எளிமையான தோற்றத்திலேயே அனைவரையும் கவரும் அஞ்சலிக்கு தன் உடை கண்டு கழிவிரக்கம்... ஆனால் பக்கத்தில் அமர்ந்த பெரியவர் அவள் அழகை கண்டு ஏஞ்சல் என்றும் அவள் ஆங்கில புலமை கண்டும் வியக்கிறார்...

ஒவ்வொரு செயலிலும் அவளுக்கு அமர் நினைவுக்கு வருகிறான்... அப்போது அந்த அளவிற்கு அவள் நலவிரும்பியாக அமர் இருந்துள்ளான்... ஏதோ விளையாட்டுத்தனமான நம்பிக்கை துரோகம் என்று தெரியாமல் செய்து விட்டாளோ?

அமரை பார்த்த அஞ்சலிக்கு அதிர்ச்சி என்றால் அமருக்கோ அவளை அனைவர் முன்னிலையிலும் தெரிந்தவள் போலே காட்டி கொள்ள வில்லையே? கேர் டேக்கர் என்றால் வீட்டையும் அவனையும் பார்த்து கொள்ளனுமா? மனைவி என்ற ஸ்தானத்திற்கு அடி போடுகிறானோ?

அவன் அறைக்கு சென்ற பின் அவளை நலம் விசாரிக்கிறான் அதுவும் பேபி என்று அழைத்து... அஞ்சலி உடனே முன்பிருந்த அதே வெல்விஷர் அமர் என்று நினைத்து இத்தனை நாட்கள் சொல்லி அழ ஆள் இல்லாமல் தவித்த அஞ்சலிக்கு தனக்கும் ஆறுதல் சொல்ல ஆள் கிடைத்த சந்தோஷத்தில் அவனிடம் ஓடி போய் சரணடைகிறாள்...

சரணடைந்த அவன் பேபியை தாயாக அரவணைப்பானா? இல்லை பழி வாங்கும் உணர்வு மேலோங்கி அவளை அதள பாதாளத்தில் தள்ளுவானா?

ஸ்ரீ மேம் அவள் ஓடி போய் அவனிடம் சரணடைந்த காட்சி எங்கள் கண் முன் நிழற் ஓவியமாய்.. கண் கலங்க செய்து விட்டீர்கள்..

அற்புதமான பதிவு.

அடுத்து என்ன சொல்லி அவளை கஷ்டப்படுத்த போகிறானோ என மனமெல்லாம் அவன் பதிலை எதிர் நோக்கி..
 

TM Priya

Well-known member
Aruna and dharun ah katti anjali ah paniya vaikran Amar...first epdiyo ipo Amara true va love panra Anjali :giggle::giggle:iva summa irukamana andha mahima lusa niyabagapaduthra:mad::mad:flashback vandhadhu....amar gold medal vangirukan..andha santhosathai mulusa anupavika indha suryaprakash vidala:(:(padmini ammaku maganai ninaichu pooripu:love::love:indha amar oda appa avan velaiyai senjitu iruppan:mad::mad::mad::(nice epi mam..waiting for next epi
 

Subasini

Well-known member
அமரஞ்சலி...


யாருக்கு இழைத்தாளோ துரோகம்
அவன் தோள்களில் இளைந்தாள்...


மரணமும் மஞ்சமும்
இணைகோடுகளாய் அமர்
எனும் புள்ளியில்...


இளையும் அவளோ காதலில் பெண்டாளுபவனோ
மாற்றாளின் மணாளன்...


அறியா வயதில் அறிந்து செய்த துரோகம்
அனைத்தும் கற்றுணர்ந்த வெற்றியாளன் கையில்
அவள் கற்பென நின்றது...


காதலை உணர்ந்தவளோ
பலியாக....
பழியென நின்றவன் கூற்றில் நியாயமில்லை...


அவன் பொருளிழந்தான்
அவளோ தன் அடையாளம் இழந்தாள்...
தன் நிலை இறங்கினாள்...
ஊரார் முன் தலையிறங்கினாள்...
கடமைக்காய் போராடினாள்
கற்பை காப்பாற்ற
அகங்காரமாய் வலம் வந்தாள்...


தவறிழைப்பதும், துரோகமும் இந்த ஆண் சமூகத்தின் அடையாளம் அன்றோ...
பெண்களுக்கு பழி தான் வழியோ...


அவளின் துரோகத்தின் விலை அவள் கற்பானால்...
அவள் மானத்தின் விலை வரும் காலங்களில் அவன் நிம்மதி, உறக்கம், அவன் வாழ்க்கை என பயணிக்கும்....


ஸ்ரீ மா....


அவன் என்ன கரடியாக கூவினாலும்... இப்ப இருக்கும் சூழலில் அவனிழைப்பது அக்கரமத்தின் உச்சம்....


ஆண் பல துரோகத்தின் பிடியில் இருந்து பிய்ந்து கொண்டு வர முடியும் ஆனால்....
அவனால் ஏற்பட போகும் இந்த சூழல்....


மற்றவர்களுக்கு இவனுக்கு வித்தியாசம் இல்லாமல் போகும்...


ஆண் தானே ஆணவமாக ஆடுகிறான்....
பணம் படைத்தவன் பந்தாடுகிறான்...


இவன் தங்கையை பாதுகாப்பானாம் மற்றவளை பழி வாங்குவானாம்😂 ஆணின் நியாயமும் தீர்ப்பும் ஆபாரம்....
பொறுப்பில்லாமல் பெற்றவள் ஊராரை உட்டி வளர்த்திட போதும் ,
தன் பிள்ளை தரிகெட்டு கிடக்கும் இவனை சரி செய்ய தவறிய தாய்... அவளின் நம்பிக்கையை சின்ன பின்ன மாக்கிய ஆசை மகன்....


அவன் நீங்க நியாமான எந்த சூழலில் நிற்க வைத்தாலும் சரி அவன் தாய் முன் அவன் தலை இறங்கி தான் போகும் நினைக்கிறேன் ஸ்ரீ மா....


கடந்த கால நினைவுகள் இவன் என்ன கஷ்ட என்ன பார்கலாம் இவனின் நியாயம்... இவனை பொங்க பானையில் இட்டு பொங்க சந்தர்ப்பம் கிடைக்காமல் போகாது...


பெண்ணே!!! சேற்றில் உலண்டவனின் தோளில் சாய்ந்தததால அவளின் மேல் சேறாகியது இதோ....


உண்மையில் அவன் மேல் கோபம் தான் ஸ்ரீ மா வருது.. அவனோட துரோகம் என்ற வார்த்தை படிக்கும் போது அப்படி என்ன பெரிய துரோகம் தான் யோசிக்க தோனிச்சு பீல் வரை😂😂😂 அமரர் பக்கா வில்லன் தான் என்று சொல்லிக்கொண்டே 😂😂 சொந்தம் என்ற பெண்ணை விட்டு துரோகத்தின் பின் பயணிக்கும் மடையன் 😂😂
மனசே ஆறவில்லை ஸ்ரீ மா 😂😂
 
Top