அமரஞ்சலி...
அமரத்துவம் ஆகும் பயணத்தில் அஞ்சலி...
அவள் பெண்ணமைக்கான அஞ்சலி...
அவள் காதலை சமாதியாக்கும் அஞ்சலி...
அவள் நம்பிக்கை வேரறுக்கும்
அஞ்சலி...
அவள் காலத்தின் முன் பலியான
அஞ்சலி...
அவன் வஞ்சத்தில் வஞ்சியவளின்
அஞ்சலி...
இது தான் பெண்....
20 வயதின் பெண்ணின் முதிர்ச்சி, சுமைகளை சுமந்ததன் சோர்வில் தோள் சாய்ந்த நேர்த்தில் நம்பிக்கையை வேரறுக்கும் பாடத்தைக் கற்று தெளிய தயாரகிய பெண்...
தனக்கான தோள் என்று தனை மறந்து ஆறுதல் தேடிய நேரம் உலகம் இது தான் அவள் என 20வயது முதிர்ந்த பெண்ணை பழி தூற்றும்....
மாற்றாள் மணாளன் வேறொரு பெண்ணின் மணம் உணர துடித்து பிதற்றும் நாயகனின் கையில் அறிவிழந்தவளாக அவளை தூற்ற தயாராகும் ஹீரோ ஆர்மீஸ்...
அஞ்சலி இது தான் இந்த கதையின் உலகம்....
உசாராக இரு இல்லையேல் நீ கண்ணீரால் நான்கு எபி அழுது கரைந்தாலும் நீ அவன் தோளில் அழுது கரைந்த இந்த நிகழ்வை தான் கதை உலகம் சொல்லி உனை தூற்றும்...
உனக்கு தெரியுமா அவன் வேறொருவளின் கணவன் என்று...
இல்லையெனில் நான் கூறியது போல் நீ பேதை பெண்ணாகி போவாய்...
வேலியே பயிரை மேயும் என்ற பாடம் நீ கற்றுக்கொள்ள போகிறாயா??? சிந்தித்து செயலபடு.. ஆனால் சிந்திக்கும் உன் திறனை அவன் மழங்கடிதது தான் இந்த கதையின் நாயகனின் வீரம்
நீ இழைத்த தூதரகத்தில் அவன் வென்று வெற்றி முரசு கொட்டிக்கொண்டு இருக்கிறான்...
இன்று அவனிழைக்கும் தூதரகத்தில் நீ இழப்பதை என்ன செய்தும் திரும்ப பெற இயலாது என்பதை மறவாது...
ஸ்ரீ மா இப்படி தன்னை மறந்த நிலையில் இருக்கும் அவளை அவன் பழி வாங்க நினைப்பது பச்சை தூரோகம் என்ற வார்த்தை பத்தாது...
செமயான திருப்பம்.. அடுத்த எபிக்கு வெயிட்டிங் ஸ்ரீ மா