Mithravaruna
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!
இனிய தோழி,
துரோகத்தின் தூண்டலில்
துடிக்கும் மனங்களே!
நீ பார்க்கும் பார்வையில் வேற்றுமை...!
அவன் பார்வை காமத்தில்!
அவள் பார்வை காதலில்!
அவர்கள் மனமோ துரோகத்தில்...!
காக்கும் கரங்கள் காமத்தில்
கனலாய் சுட்டெரிக்க...
நோக்கும் விழிகள் காதலில்
புனலாய் நீர்வடிக்க...
துரோகத்தின் பிடியில் துடித்தாலும்
மோகத்தின் பிடியில் வெடித்தாலும்
காதலின் பிடியில் மடிந்ததேன்...?
ஓ காதலே! உன் வேகத்தில்
விவேகமும் வீழ்ந்த ரோகம்!
காதல் என்பதே கானலோ
என்றெண்ணும் சோகம்!
பெண்ணே! புதுமைப் பெண்ணாய்
சக்தியாய் நிமிர்ந்தாலும்
காளியாய் சம்ஹாரம் செய்தாலும்,
காதலின் பிடியில் கரையும் நீ
தாய்மையின் திரு உருவே!
அன்பின் அருமருந்தே!
அன்பெனும் பிடியில்
அரவணைத்த அன்பனே!
அன்னையாய் பெண்ணை
உயிராாய் வளர்த்துவிட்டு,
உரிமை மீறிய துரோகத்தில்
தன்மானத்தில் சிங்கமாய்
சிலிர்க்கும் மன்னவனே!
உன் அன்பின் அரிச்சுவடியில்
தன்மானத்தின் தாத்பர்யம்
தலை நிமிரும் நேரம்
பிள்ளையாய் இருந்தாலும்
பிறக்காதோ காருண்யம்!
கண்முன்னே காணும் தோற்றங்கள்!
காணப் பொறுக்கா மாற்றங்கள்!
ஆனால், மானுடா?
மனிதம் மீறிய தன்மான எழுச்சி....
தாமதம் இல்லாமல்
தகர்க்கும் உளியே! - அது
அறிவை அறுக்கும் தனியே!
அன்பே மறுக்கும் உனையே!
இதுவே, வாழ்வின் கடையே!
கடையாகும் முன்னே!
கடைத்தேற வந்ததோ
பெண்ணே! உன் காதலே!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
இனிய தோழி,
துரோகத்தின் தூண்டலில்
துடிக்கும் மனங்களே!
நீ பார்க்கும் பார்வையில் வேற்றுமை...!
அவன் பார்வை காமத்தில்!
அவள் பார்வை காதலில்!
அவர்கள் மனமோ துரோகத்தில்...!
காக்கும் கரங்கள் காமத்தில்
கனலாய் சுட்டெரிக்க...
நோக்கும் விழிகள் காதலில்
புனலாய் நீர்வடிக்க...
துரோகத்தின் பிடியில் துடித்தாலும்
மோகத்தின் பிடியில் வெடித்தாலும்
காதலின் பிடியில் மடிந்ததேன்...?
ஓ காதலே! உன் வேகத்தில்
விவேகமும் வீழ்ந்த ரோகம்!
காதல் என்பதே கானலோ
என்றெண்ணும் சோகம்!
பெண்ணே! புதுமைப் பெண்ணாய்
சக்தியாய் நிமிர்ந்தாலும்
காளியாய் சம்ஹாரம் செய்தாலும்,
காதலின் பிடியில் கரையும் நீ
தாய்மையின் திரு உருவே!
அன்பின் அருமருந்தே!
அன்பெனும் பிடியில்
அரவணைத்த அன்பனே!
அன்னையாய் பெண்ணை
உயிராாய் வளர்த்துவிட்டு,
உரிமை மீறிய துரோகத்தில்
தன்மானத்தில் சிங்கமாய்
சிலிர்க்கும் மன்னவனே!
உன் அன்பின் அரிச்சுவடியில்
தன்மானத்தின் தாத்பர்யம்
தலை நிமிரும் நேரம்
பிள்ளையாய் இருந்தாலும்
பிறக்காதோ காருண்யம்!
கண்முன்னே காணும் தோற்றங்கள்!
காணப் பொறுக்கா மாற்றங்கள்!
ஆனால், மானுடா?
மனிதம் மீறிய தன்மான எழுச்சி....
தாமதம் இல்லாமல்
தகர்க்கும் உளியே! - அது
அறிவை அறுக்கும் தனியே!
அன்பே மறுக்கும் உனையே!
இதுவே, வாழ்வின் கடையே!
கடையாகும் முன்னே!
கடைத்தேற வந்ததோ
பெண்ணே! உன் காதலே!
வாழ்த்துக்கள் தோழி, நன்றி
Last edited: