All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Jayanthi Krishna

Active member
அஞ்சலியை வைத்து அமர் என்ன பிளான் பண்றான்... அஞ்சலி அவனுக்கு என்ன துரோகம் செஞ்சா... :unsure::unsure:

ஏதுவ இருந்தாலும் நல்லது நடந்தால் சரிதான். பிளாஷ்பாக் ரொம்ப சோகமா இருக்கே ...:cry::cry:
 

vijirsn1965

Bronze Winner
anjali moolam thanathu prodect yai pramote seiya virumbinanoo surya prakhash naduvil vanthu avvalai kuzhappi vittaanoo naduvil amar thangai sharmila veru suryavailove pannukiraaloo 2 uds serththu padiththean romba arumaiyaaha superaha irunthathu mam(viji)
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்... அமரின் கலக்கத்தைக் கண்டு எங்கள் மனமும் கலங்கிய பதிவு...

கல்லூரிப் படிப்பை அப்போது தான் முடித்து தங்கப்பதக்கத்தோடு வந்த அமருக்கு எவ்வளவு பெரிய அதிர்ச்சியான தகவல்.. அவன் மகிழ்ச்சியே காணாமல் போய் விட்டதே... 21 வயதே முடிந்த மகனுக்கு தந்தை அல்லது தாய் யாராவது ஒருவர் வழிநடத்தல் இருந்தால் அவன் கலங்காமல் இருந்திருப்பான்... தொழிலையும் சீர் செய்ய வேண்டும்... தங்கையையும் பார்த்து கொள்ள வேண்டும்... அமருக்காக இல்லையென்றாலும் அவன் தங்கைக்காக அவன் அம்மா கொஞ்ச காலம் உடன் இருந்திருக்கலாம்...

பாவம் பத்மினி ராஜ்குமாரிடம் நிறைய காலமாகவே சித்ரவதை அனுபவித்து விட்டார்கள் போல.. அதனால் அமர் படிப்பு முடித்தவுடன் மாமனார் எழுதிய உயில் அனைவருக்கும் தெரியப்படுத்தி அமரை பரம்பரை தொழிலை கையில் எடுக்க வைத்து அவர் மகளையும் அவனிடம் ஒப்படைத்து விட்டு சந்நியாச வாழ்க்கைக்கு சென்று விட்டார் போலும்... அமருக்கு இது இருண்ட காலம்... ஆனாலும் அவன் அம்மா அவனுக்கு மந்திரியே ஏனெனில் வீரதேவை பார்க்க செய்து அப்போதைய பிரச்சனையை சமாளித்து சொந்த வீட்டிற்கு வந்தாலும்.. அடுத்த அடி எடுத்து வைக்கா நிலைமை அமருக்கு ...

ஸ்ரீ மேம் அமருடைய படிப்படியான அணுகு முறைகள் தாங்கள் சொல்லிய விதம் அருமை...

முன்பே உதவிய வீரதேவை பணப்பிரச்சனைக்காக அமர் அணுக அங்கே மஹிமா கண்ணில் இவன் பட... அச்சச்சோ! அமரின் கண்ணியத்தைக் கண்டு காதலாய் மாறி இருந்தா கூட பரவாயில்லையே... அடிமை சிக்கி விட்டான் அல்லவா நினைத்தாள்... பணப்பிரச்சனை முடிந்தாலும் விளம்பரம் இல்லா வியாபாரம் ஏது? அதுவும் பெண்களுக்கான முக பூச்சுக்கு.. மிஸ்.இந்தியாவை அணுக அதுவும் தோல்வியில் முடிய அப்போது தான் அமர் கண்ணில் பட்டால் துள்ளி குதிக்கும் மானாக நம் சின்னஞ்சிறு சிட்டு அஞ்சலி... ஸ்ரீ மேம் அமர் தான் முதன் முதலில் அஞ்சலியை face cream adல் அறிமுகப் படுத்துகிறானா? இருந்தாலும் அவள் பெயரையே வைத்துள்ளான் என்றால்???

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம் தங்கள் பாணியில்.. அடுத்த பதிவை எதிர் நோக்கி வழி மேல் விழி வைத்து...

வாழ்த்துக்கள்...
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயோ ஐயோ 😭😭😭😭😭 எதுக்கு இந்த அமர் இவ்வளவு நல்லவனா இருக்கான் 😞😞😞
 

Banu Swara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இனிமே யாராவது பாப்பா பீப்பான்னு சொல்லிக்கிட்டு வரட்டும் மூஞ்சிலயே மிளகாய் அரைச்சி பூசிடுறேன்... சரியான விஷ பூச்சி அவ 😡😡😡😡
 
Top