All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Subasini

Well-known member
அமரஞ்சலி...

அழகு தான்...
பறவையென பறக்க துடிக்கும் பாவையை கட்டி போட்டது போன்று செயல் அவளை இப்படி செயல் பட வைப்பது இயல்பு தான்...

இவ்வளவு அறிவு உள்ள வியாபார காந்தம் அவளை அழைத்து அவளுக்கான பொறுப்பை தெளிவாக புரிய வைத்து இருந்தால் புரிந்து கொண்டிருப்பாள்... அதை விட்டு இவன்,இனி, அவள் தந்தை மூன்று பேரும் சேர்ந்து அவளை ஆட்டி படைத்தால் இப்படி தான் இருக்கும்...

குழந்தை பிள்ளை இவ்வளவு பெரிய உலகத்தில் பயணிக்க தயாராகும் போது அங்கே இருக்கும் மனிதர்கள் பற்றிய கருத்தை அவளுக்கு புரிய வைக்க வேண்டிய கடமை இந்த இருவருக்கும் இருக்கு என்பதை மறந்து செயல் படுங்கின்றனர் அப்பறம் வந்து பழி வலி என்று பிதற்றி அவள் வாழ்க்கையில் புயலை புரட்ட வழி வகை செய்கிறான்...


மேகங்ககூட்டங்களாய்
அவள் ஆசைகள்...

மெல்ல காற்றென ஊடுருவி
கலைத்தான்...

கண்களில் கனவுகளை வண்ணகளாக வரைந்தாள்...

அவன் வெற்றக்காய் வரைந்தது
ஒவியமென்றபோதும் கலைத்தான்....

கலைந்தது ஒவியமல்ல
திறந்த வானில் பறந்த பட்டாம்பூச்சியின்
வாழ்க்கை...

தங்கையின் வாழ்க்கை பற்றிய சிந்தித்தான் ஆனால் அறிந்தே அஞ்சலி வாழ்க்கை திசை திருப்பினான்...
அது அவள் வாழ்வில் பல வேதனையை தந்தது அவளுக்கு மட்டுமே அல்ல அவனுக்கும் தான்...

வாழ்க்கை அதன் போக்கில் பயணிக்கும் பயணம் அதை திசை திருப்பினால் இப்படி தான் நம்மையும் புரட்டி போடும்...

அவளை குற்றம் சொல்ல என்ன இருக்கிறது அவள் இயல்பு என்ன என்று தெளிவாக இருக்கும் போது...

அவன் தங்கையின் பொறாமை தீயில் கருகியது என்ன என்பதை இனி வரும் எபியில் படிக்க வாய்ப்பு இருக்கும் நினைக்கிறேன்...

வெயிட்டிங் ஸ்ரீ மா அடுத்த எபிக்கு..
 

Chitra Balaji

Bronze Winner
Oooooooooooo மூணு வருஷம் appram நடக்க pora miss மும்பை ku avala இப்போ irunthe அவனுடைய product ah vechi ready பண்றான் ah avanala தான் ellame kadachi இருக்கு அவன் avana வெளிய kaattukaamal pannanum ethiringa jaasthini பயந்து ava kita ettaye நிக்கிறான் ஆனா iva avan mela வன்மம் paaraatura அது என்னமோ அவன் mela oru kovam..... சூர்யா vuku ivala pathi therinji thaan ava muliyama avanodaya business ah முடக்க try panni இருக்கான் போல.... அவன் தங்கச்சி ku ava avala vida அழகு nu sonna ஒடனே appadi ஒரு பொறாமை...... Super Super mam...... Semma semma episode
 

Maryvijay

Bronze Winner
அஞ்சலி அமர் அழகு சாதன பொருட்கள் உபயோகம் செய்து விட்டு அமர் பேட்டி கொடுக்க சொல்லும் போது நன்றாக இல்லை என்று சொல்லி விடுவாள் என்று நினைக்கிறேன்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

படபடக்கும் பட்டாம்பூச்சியின் ரீங்காரம்
பதின்வயது சிட்டாய் பறக்கும் ஸ்ருங்காரம்!
ஆசையின் அலையில் கனவாய் மலரும்
ஓசையில் வளையும் கட்டழகுப் பருவம்!

கட்டிப் போட்டாலும்
விட்டுப் பறக்கும்
வண்ணக்கிளி!
வெட்டுப் பேச்சால்
மெட்டுப் படிக்கும்
செல்லக்கிளி!
கனவை எட்டிவிட
கனாக்காணும் கோலாகலம்!

வெடுவெடுக்கும் வண்டின் ரீங்காரம்
காளைவயது நிமிர்வாாய் சிலிர்க்கும் ஸ்ருங்காரம்!
வெற்றியின் வழியில் நனவாய் புலரும்
கூற்றினில் குழையும் இளமைப் பருவம்!

கட்டிப் போட்டாலும்
எட்டிப் பிடிக்கும்
காளை அவன்!
மிடுக்குப் பேச்சால்
முடுக்கி எடுக்கும்
கட்டுக் காளை!
நனவைத் தொட்டுவிட
கனாக்காணும் குதூகலம்!


வயதின் ஓட்டத்தில் அவள்
மனதின் ஓட்டத்தில் அவன்
கதையின் ஓட்டத்தில் நாம்...!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? முதல் அறிமுகமே இருவருக்குமே நல்லவிதமாக அமையவில்லை என்பதை எடுத்துக் காட்டிய பதிவு...

அஞ்சலி பத்தாம் வகுப்பு படிக்கும் சின்ன பெண்... அந்த வயதில் தன்னிடம் யாராவது சரியாக பழகாது முகம் திருப்பினால் அதற்கான எதிர்வினை படு மோசம்...

அமருக்கு தன் எதிரிகளுக்கு தெரியாமல் அஞ்சலியை உருவாக்க நினைக்க.. அதனால் அவளிடம் பாராமுகம் காட்டுகிறான்... இதை அறியாத அஞ்சலி அவள் செய்யும் ஒவ்வொரு செயலுமே அவனுக்கு ஏட்டிக்கு போட்டியாய்...

அதற்கு சான்றாக கார் கண்ணாடி உடைத்தல், நீச்சல் குளத்தில் விளையாடுதல் மற்றும் சிறு விபத்துக்கு அமரை பதற வைத்து அதை கண்டு அஞ்சலி சந்தோஷப்படுதல்... அனைத்திலுமே இருவருக்கும் முரண்பாடு ஏற்பட்டு விட்டது...

மிஸ்.மும்பைக்காக தயாராகும் அஞ்சலி அவளை தயார் படுத்திய அமரை புரிந்து கொள்ள பக்குவமில்லா வயது... கனியாவது அவளிடம் அனைத்தையும் சொல்லியே தயார் செய்து இருக்கலாம்...

இதில் வேறு அமர் தங்கை ஷர்மி அவளே மாடலிங் வர நினைப்பது அமர் வேண்டாம் என்று மறுப்பது இங்கேயிருந்தே அமர் சிறுபிள்ளை கோபம் என்று நினைக்க ஷர்மி தன்னை மறுக்கிறான் என்ற எதிர்மறை எண்ணம் உருவாக ஆரம்பம்...

எதிரியான சூர்யபிரகாஷை அஞ்சலி மற்றும் ஷர்மி அமருக்கு பிடிக்காத செயலை செய்ய காரணம் ஆகலாம்...

அருமையான விறுவிறுப்பான பதிவு... அடுத்து என்ன நடக்க போகிறதோ என எதிர்பார்க்க வைத்த பதிவு...
 

ilakkiyamani

Bronze Winner
nice ubdate sri mam,pidithathai sappittu,ninaitha neram vilaitadi,aasaipattathai seithu santhosamaga irukkum vayathu pennai,kattu paduthinaal avalukku kastamaga than irukkum,amaroda plan sema (y)(y)sri mam,next epikaga waiting
 

vijirsn1965

Bronze Winner
ippothan kadhai romba interesting ah irukku than productiku velambhara model ah anjaliyai thayaar seikiraan anjaliyum vilaiyaattu thanamaaha kuzhanthaithanamaha irukkiraal avvalavu adam veru superb mam very nice arumai(viji)
 
Top