அமரஞ்சலி...
வார்த்தை தரும் நம்பிக்கை சில நேரம் செயல் தருவதில்லை...
தாயின் மடியில் இருந்து கொண்டே அழும் பிள்ளை"அம்மா தானே தங்கம் சொன்னேன்"என்ற இந்த வார்த்தை தரும் ஆறுதல் சில நேரம் அவள் கையின் வெப்பத்தின் அருகாமை உணராது ....
அது தான் இந்த வயது தான் 15 to20 ...
நம் வாழ்வில் பயணமாகும் இந்த காலக்கட்டத்தில் பல மனிதர்களை புரட்டி போடும் இதோ இவளையும் புரட்டி போட்டு விட்டது...
எது செய்வதாக இருந்தாலும் அதன் நன்மைகள் பற்றி சொல்லி இருக்க வேண்டாமா... தன் சுயநலம் காரணமாக செய்யும் எந்த செயலும் மற்றவரும் சுயநலமாக திசை திருப்பி பயன் பெறுவர்.,
அவள் ஒரு கம்பெனி மாடல் என அங்கரிக்கும் போது அதற்கான தொழில் முறையை செய்து இருக்க வேண்டும் இல்லையேல் தன் போட்டி கம்பெனி பற்றிய விழிப்புணர்வு தந்து எச்சரிக்கை செய்ய வேண்டும் இதையெல்லாம் விட்டு மின் விளக்குகள் பார்த்து செல்லும் விட்டில் பூச்சி பருவத்தில் இருக்கும் அவளை கடிந்தோ பழி வாங்கியோ என்ன செய்ய...
என்னமோ ஆகட்டும் அவன் பொருட்களின் சில வேதியியல் மாற்றமே அவள் உடலை பதம் பார்க்க, அவன் தொழில் எதிரியின் சூழ்ச்சியோ அவள் வாழ்க்கையை பதம் பார்த்து விட்டது...
அவளின் இந்த நிலையில் வந்து நிறுத்த காரணமாக இருப்பது இந்த அமரேந்தர் தான் நன்றாக தெரியுது...
கனவுகள் நடக்கவில்லை என்றால் அடுத்த கனவு என மனம் பயணித்து போய் வாழ்க்கை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்...
21வயதில் அவள் இந்த பக்குவம் வருவாள் என்றால் கண்டிப்பாக மாற்றி அமைந்திருக்கும்.. இந்த பணம் படைத்தவரின் விளையாட்டில் ஒரு பொருளாக அவளை ஆட்டி படைத்திருக்க மாட்டாங்க...
இனி இவன் தங்கை என்ன பண்ணினாளோ... அவள் பங்கிற்கு தெரியவில்லை...
மனமோ துள்ளி
வரும் வெள்ளமாய்
திசை திருப்பும்
அவளவன் மனமோ
வஞ்சமென துடிக்க
பாவையோ பலியாகி
தன் நிலை தாழ
தனித்து நிற்க
காதலென அவள்
பாய்ந்து வர
பழியென மதகாய்
ஆண் நிற்க
விழியிலோ கார்
சூழ இடியென
முகம் சிவக்க
மனமோ புயலென
புரட்ட இதோ மீண்டும்
ஒரு சுனாமி
அவள் வாழ்க்கையை
தூக்கி அடிக்க
செயலற்று தான்
போனாள் பணம்
படைத்தவனின் சதுரங்க
ஆட்டத்தில் பலியான
ராணியாய்...
ஸ்ரீ மா...
இந்த அண்ணண் தங்கை வாழ்க்கையில் வந்த இந்த அஞ்சலி பாவம் தான்...
சூ.பி மற்றும் அமர் தங்கைக்கும் உள்ள கனெக்சன் என்ன எப்படி என பல விதமாக மனதை குடைய...
அப்போது ஒரு கேள்வி....
நல்லா தெரியும் சூ.பி அவளை ஏமாத்தறான் என்று... அப்பறம் அவன் பின்னாடி சுத்தம் தங்கையை தலைவர் எப்போ பழி வாங்குவார் என்ற கேள்வியோடு...
உங்க பழி வாங்கும் இலக்கணம் கொஞ்சம் செப்பிட்டு போங்க ஹீரோ சார்
அடுத்த கட்ட திருப்பத்தை எதிர்பார்த்து இருக்கும் வாசகி
எப்படியும் ஹீரோ ஆர்மீ சார்பா அருமையாக வேலை போய்ட்டு இருக்கு...
வாழ்த்துக்கள் ஸ்ரீ மா
ஆனால் இனி வரும் காலங்களில் அவன் பண்ண போகும் வேலைக்கு அவனுக்கு என்ன செய்ய போறீங்க என ஒரு ஹிண்டு எங்கையாவது தந்து ஹைலைட் பண்ணி விடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்
...
ஆனாலும் இப்பவும் அவன் தான் ஸ்ரீ மா தவறு...
சின்ன குழந்தை நம்பி அதன் மேல் மிகப்பெரிய பொறுப்பு வைத்தது தப்பு.. இல்லை என்றால் அவளுக்கான பொறுப்பு என்ன புரிய வைத்திருக்க வேண்டும்... கண்டிப்பாக அதற்கான முயற்சி பண்ணி இருப்பா...
ஆண் என்ற ஆணவம்... நாம தானே எல்லாம் செய்யறோம் நம்மை மீறி எங்கே போவா என்ற திமிர்
அப்படி தானே
இந்த போஸ்ட் போட்டு நான் ஓடிட்டேன்