All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க ஸ்ரீ மேம்? அஞ்சலியை வெளி நாட்டிற்கு கூட்டி செல்ல அமர் போட்ட சதிராட்டம்...

அமர் குழந்தைகளுக்கு தகுந்தார் போல் விளையாடுவதும் தோல்வியை ஒப்பு கொள்வதும் அழகென்றால் கதை சொல்லும் போது அந்த பாத்திரமாகவே மாறி குழந்தைகளை சந்தோஷப்படுத்துவது அழகோ அழகு... அமரின் செயல்கள் கண் முன் நிழற்காட்சியாய்... அபாரம் ஸ்ரீ மேம்...

அவன் குழந்தைத்தனமான செயலை கண்டு ரசிக்கும் தாய் இவன் சேற்றில் முளைத்த செந்தாமரை என்பது சரியென்றால் அவன் சேரில் புரளும் பன்றி என்று.. ஸ்ரீ மேம் உங்களிடம் நிறைய சண்டை பிடிக்க வேண்டும்.. அது எப்படி செல்லலாம் நம்ம ஹீரோவை பன்றி என்று... அவன் அப்படி ஆனதற்கான காரண காரியத்தை அலச வேண்டாமா? போங்க ஸ்ரீ மேம் எங்க ஹீரோவை பார்த்து இப்படி சொல்லிடீங்களே?

அம்பிகா மகன் செந்தில் அஞ்சலி மேல் ஒரு கண் வைத்துள்ளான் என்று நினைத்தேன் ஆனால் இவள் தங்கையை சீரழிக்க பார்த்தானே? இவனுக்கெல்லாம் எல்லாம் செருப்புப்படி பத்தாது விஷம் வைத்து கொல்லணும்...

அஞ்சலி பாவம் போலிஸ்க்கும் போக முடியாமல் தன்னாலும் தண்டனை வழங்க முடியாமல் கதறி தவிக்கிறாள்... இதில் அமரின் உள்குத்து ஏதாவது இருக்குமோ?

ராம்குமார் இவன் என்ன ஜென்மமோ? அதனால் தான் பத்மினி விட்டு விட்டு போய் விட்டார்களா? அச்சோ! அமரும் இப்படித்தான் என்று தெரிய வரும் போது அவங்க இதயம் தாங்குமோ?

பாண்டுவும் ரகுவும் ஃபோனை திருடி ஜெயிலில்.. பத்தே நாளில் விடுதலை ஆகி வந்து விட்டார்கள் இதிலும் அமரின்????

அஞ்சலியை அவள் தந்தை அண்ணன் பழி வாங்க துடிப்பது போல் அமரை அவன் தந்தை துடிக்கிறார்.. இருவரும் இதிலிருந்து மீள்வார்களா?

கேர் டேக்கராக அஞ்சலியை வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல வலை வீசும் அமர் அவளை காப்பாற்றவா? இல்லை பழி வாங்கவா?

பாண்டு அடித்த அடியில் பார்வதி மயங்கி விழுந்து விட்டாள்... அவள் நிலை என்ன?

போங்க ஸ்ரீ மேம் இருந்தாலும் நீங்க இப்படி சொல்லி இருக்க கூடாது... எங்க ஹீரோவை போய் பன்றி என்று சொல்லி விட்டீர்களே... எங்கள் மனம் தாங்குமா? எங்கள் மனம் தான் தாங்குமா? இருந்தாலும் நீங்க இப்படி சொல்லி இருக்க கூடாது.. ஹா! ஹா!

அற்புதமான பதிவு ஸ்ரீ மேம்...

வாழ்த்துக்கள்..
 

TM Priya

Well-known member
பார்வதிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்ட் போட்டாச்சு...ரைட்டு மா...
பாண்டு,ரகு ஜெயிலுக்குப் போயிட்டாங்க மகிழ்ச்சி மேம்...அகிலா வந்தமா ஒரு அட்டெனன்ஸ் போட்டாமா போய்ட்டே இருப்போம் அதுமட்டும் இல்லாம வேறவழியில்லாம வந்தாளம் என்ன டிசைனோ:sneaky::sneaky:தருண் தாயுமானவனா மாறி சாப்ட வைத்தது செம..அதிலும் இது அன்பினால் நெய்த கூடு.அவர்கள் மூவருக்கும் மட்டுமேயான அன்பான கூடு அழகான வரிகள்😍😍👌👌

வீர்தேவ் பணத்திற்குப் பதிலாக மகளை திருமணம் செய்யச் சொன்னதே தவறு..இதில் அமரை விட மூத்தவள் வேறா🧐🤦‍♀️அமர் பாவம் மா...மிருதுளா,மஹிமா:mad::mad:
திட்டமிட்டு அஞ்சலியை அமர் அவன் வலைக்குள் வீழ்த்தி விட்டான்...சூப்பர் மா
 

Chitra Balaji

Bronze Winner
Ava அம்மா va konnutaana அந்த ஆளு அப்பா vayum புள்ளை yum jail ah potaachi..... Thambi.. தங்கச்சி யா தனியா vittutu ivala வேலைக்கு poitu vara முடியாது அது avangaluku பாதுகாப்பு இல்ல nu அந்த Gopal kitaye மறுபடியும் pesi அந்த care taker ku othukitu amar oda trust muliyama avangala கான்வென்ட் la sethutaa...... Ithu ellaa thukum பின்னாடி avan இருக்கான் nu avaluku theriyala....... இங்க அமர் oda மாமனார் nuku odambu seri இல்லையா அவரு kita வாங்கின கடன் kaaga அந்த பேய் ah கல்யானம் panni இருக்கான்..... அஞ்சலி பண்ணின துரோகம் thunaala தான் avvallavu கஷ்டம் pattaanaa....... இப்போ avanodaya மாமனார் business yum இவன் தான் paathukanum.... அம்மா பொண்ணு yum எல்லா தெரிஞ்சிகிட்டு avana மடக்க plan பண்றாங்க...... Enna aaga pooguthoo.... Super Super mam.... Semma semma episode
 

Subasini

Well-known member
அமரஞ்சலி....


ஒரு பெண்ணின் வாழ்வில் வலி மட்டுமே வருமா...இதோ இவளுக்கு எல்லாமே வலி தான் காதலும் கூட...
இரும்பின ஒத்த பெண்... அவளை உருக்க கோப நெருப்போடு நெருக்கும் மற்றொருவளின் கணவன்...


என்ன மாதிரியான வலி இவளுடையது.... கேட்கும்போது மனசு கனக்கும் போது கடந்து போக போற அவளுக்கு....


இவளின் தூரோகம் தான் France ல் இருக்குமோ என்ற கவலை என்னை பிடித்து தின்கிறது...


தன் தங்கைக்கும், தப்பிக்கும் அவள் ஒரு அன்னையாய் இருக்க...
அவன் மனைவியோ அன்னையாக முயற்சிக்க இரண்டுக்கும் நடுவே நான் பயணிக்கிறேன்...


வாழ்க்கை அவளை செப்பனிட்டு விட்டது இனி அவளை அசைக்க முடியுமானால் அது அன்பால் இருக்குமே அன்றி அரிதாரம் இட்ட வார்த்தைகள் இல்லை... இத்தனை இறுகிய அவளை உருக்கும் இடம் தான் அவள் பயணிக்கும் இடம் என்று நான் நினைக்கிறேன் பார்க்கலாம் ஸ்ரீ மா உங்க ட்விஸ்ட் எப்படி இருக்கிறது எனறு...


படிக்க ஆவலோடு இருக்கிறேன்...


அவன் திருமணத்திற்கு அவள் தூரோகதிற்கும் இடையே ஒரு இணைப்பு இருக்கிறது... அப்படியா ஸ்ரீ மா...


என்னமோ ஆனால் எபி படிச்சுட்டு என்ன ஒரு எமோஷனல்... அவள் மன்னிப்பை கேட்கும் இடம் அந்த சீன் கண் முன் வலம் வந்தது படிக்கும் போது... அருமை ஸ்ரீ மா ❤️❤️❤️


இறுகித்தான் நிற்கிறேன்
இரும்பாகி வளைகிறேன்
இருட்டில் தவிக்கிறேன்
தனித்து நடக்கிறேன்
தோளுக்கு ஏங்குகிறேன்
தோல்விக்கு துணை நிற்கிறேன்
தோற்று கொடுக்கிறேன்
துன்பத்தை அணைக்கிறேன்
தூரோகத்தை சுவாசிக்கிறேன்
வேதனையை விரும்புகிறேன்
அன்பிற்கு முன் உருகி
உருத்தெரியாமல் சரணடைகிறேன்
அதில் எனையே பணையமாக்கினேன்...
அஞ்சலி...
அஞ்சனம் பூசிய விழி எழிலானவள்
அஞ்சனம் வழிநீரில் கரைந்து
கன்னங்களை கரைபடிந்ததாக்கும்
தருணத்தை அவன் உருவாக்கிய இந்த விதி என்ற பெயரில் அவன் செய்த சதி...
அதை உடைக்க வரும் மதியென அவன் முன் நிற்பது அவன் பெற்றவள் என்றானால்...


அடுத்த எபிசோட் வெயிட்டிங் ஸ்ரீ மா ❤️❤️ படிக்க படிக்க கற்பனை சும்மா பறக்குது... என்ன ரொம்ப யோசிக்க வைக்கிறீங்க 😂😂
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே!

இனிய தோழி,

கூடில்லா குஞ்சுகள்
திசைக்கொன்றாய் சதிராட
விதியின் ஆட்டமும்
மதியின் ஓட்டமும்
சதியின் கை சேர
துரோகத்தின் வாழ்வு தன்னை
சூது கவ்வும்!

அமரத்துவமானவன்
அமர்த்தலான செய்கையில்
அடைக்கலம் கொண்ட
அறியாக் கிள்ளைகள்
அரங்கம் ஏறினாலும்
அழியாதோ துரோகங்கள்!

கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல்
சொல்லுக்கு சொல் - என்று
மல்லுக்கு நின்றால்
துரோகத்தின் துலாபாரம்
துலாக்கோலை நிலை நாட்டி
அந்தரத்தில் நிறுத்தாதோ...?

பெருந்தகையானவர்
பெருமைகள் காக்க
மீளா துயரில்
சிக்கிய வாழ்வில்...
சிக்கல்கள் பின்னலாய்
நலுங்காமல் இறுகும் நேரம்...
சுயமான ஆசையின்
சுதந்திர தாகங்கள்
சுழலாய் சுழற்றுமோ...?

அமரஞ்சலி இது
அமத்துவம் காட்ட வந்த
அமரகாவியமே!


வாழ்த்துக்கள் தோழி, நன்றி
 
Last edited:
Top