sivanayani
விஜயமலர்
நயனி மா
வேல்விழியாள் மறவன்....
மிக அற்புதமான ஒரு வரலாற்றுப்பயணம்...
கதை அமோகம்...
காட்சிகள் நீங்க அமைத்த விதம் வாவ்...
அழகிய மொழி,நடை ...அர்த்தம் செறிந்த வசனங்கள்..அடடா
..மீண்டும் மீண்டும் வாசிக்க வைத்த ஆயுத சமரும் காதல் சமரும்...
எனக்கு இலங்கைக்கே....கரிகாலன் காலத்திற்கே சென்றுவிட்ட உணர்வு நயனி மா...☺☺☺☺☺
போர்க்கள காட்சிகள் நீங்க வர்ணித்த அழகியலில்...நான் மிரண்டே போனேன்...காதல் காட்சிகள் போலவே அதையும்...அதிகப்படுத்தல் இன்றி அதே நேரம் கண்களுக்குள் காட்சிகள் விரியும் வண்ணம் ...அது மிக கடினம்..நீங்க அநாயாசமா செய்து காட்டி இருந்தீங்க
உங்க திறமை எங்களுக்கு தெரியும் என்றாலும் ...வேல்விழியாள் மறவன் எங்களுக்கு காட்டியது...உங்களின் தனி பரிமாணம்....வேறு முகம்....
என்னா தமிழ்
செம்மையான இனிக்கும் தமிழ்...
உழைப்புகடின உழைப்பு
வரலாற்று நிகழ்வை....காட்சிகளுக்குள் கொண்டு வந்து சுவாரஸ்யமாக கொடுத்த ஞானம்
வியந்து நிற்கிறேன் நயனி மா....
உங்களுக்கு நிகர் நீங்க தான்...இதை நான் உரக்க சொல்வேன்
வரலாற்றுப் பயணம் வெற்றிகரமா முடிந்து விட்டது...அநபாயன்..கரிகாலன்..பூங்கோதை...ரொம்பவே மிஸ் பண்ணுவேன்
புத்தகம் சீக்கிரம் இங்கேயும் வெளியிடுங்கள்...நாங்க அநபாயன் பூங்கோதை ய பத்திரமா வச்சு..குழந்தைகளுக்கும் காட்டுவோம்...சோழப் பேரரசின் வலிமை...சிறப்பு....இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான தொடர்பை....☺☺☺☺☺☺☺புரிந்துகொள்ள உதவும் தரவாக இது இருக்கும்
வாழ்த்துக்கள் நயனி மா....வெற்றிகள் தொடரட்டும்
எஃபி ல தற்போது சிறப்பான வரலாற்று நாவல் சொல்லுங்க னு ஒரு கதை ஆரவலர் கேட்டதற்கு....நிறைய பேர் உங்க பேரை சொல்லி வேல்விழியாள் மறவனை சொல்லியிருந்தாங்க..
இன்னமும் பேரும் புகழும் நம் மறவனைத் தேடி வரும்உங்களையும்..
எனக்கு எதற்காக நன்றி நயனி மா
சுவையான சத்தான உணவு கொடுத்து சாப்பிடு னா...சப்பு கொட்டிகிட்டு சாப்டதுக்கா ஹி ஹி...நன்றி நன்றி...வயிறும் மனசும்...நிறைக்க பரிமாறிய உங்களுக்கும் நன்றிலவ் யூ நயனி மா...எப்பவும்....
wow thamarai you Mad my day. வாசகர் இன்றி எழுத்தாளன் இல்லை. ஒரு சிறந்த எழுத்தாளனுக்கு கிடைக்கவேண்டிய விருதே சிறந்த வாசகரின் வாழ்த்துரைதான். அதுவே ஒரு எழுத்தாளரிடமிருந்து கிடைக்கும்போது, அதன் சுவையே தனிதான். நான் சிறந்த எழுத்தாளர் எல்லாம் இல்ல தாமரை. அப்படி ஆக்கப்பட்டிருக்கேன் உங்களால். நான் கூறும் நன்றி என் மனதில் இருந்து உணர்வாய் வெளிவந்தது. கண்கள் பனிக்க தலைவணங்கி என் நன்றியை உங்களுக்கு காணிக்கை ஆக்குகிறேன். மிக மிக மிக நன்றி தாமரை. 'எஃபி ல தற்போது சிறப்பான வரலாற்று நாவல் சொல்லுங்க னு ஒரு கதை ஆர்வலர் கேட்டதற்கு....நிறைய பேர் உங்க பேரை சொல்லி வேல்விழியாள் மறவனை சொல்லியிருந்தாங்க..'அப்படின்னு சொல்லி இருந்தீங்க... கேக்கிறப்பவே சந்தோஷமா இருக்கு தாமரை. எதோ சாதிச்சது போல ஒரு உணர்வு. என்ன சொல்ல நிறைவா இருக்கு.