All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

Samvaithi007

Bronze Winner
வாசுமா,
நம்ம அபியை இப்படி டீலுல விட்டுட்டு,
மேடம் ஹாயா வெளியில கிளம்பிட்டாங்க. நம்ம சோகம் இதயத்தை விட்டு வெளியில் வர மாட்டேங்கிறதே !
கல்லு மாதிரி கனமாய் கிடக்குதே!
வில்லி இப்படி ஜல்லி ஜல்லியாய் உடைத்து விட்டார்களே!
நாயகிமா எப்படி தாங்கிக்குவாங்கன்னு தெரியலையே வாசுமா!

நம்ம மன்னனை முதல்ல கிரீடத்தை கழட்ட வைத்தார்கள்.
மண்டியிட வைத்தார்கள்.
மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
இப்ப நாடு கடத்த போறாங்களே
வாசுமா!

காதலும் பழியும் இணைந்து குழியாய் மாறி அவனை புதைத்ததே !

கொடி உடனும் பூக்கள் உடனும் பூத்துக்குலுங்க வேண்டிய வேளையில்,
வேராய் மாறி மண்ணில் புதைந்தானே!

நீர் ஊற்ற வேண்டியவள் அமிலம் ஊற்றினால்,
வேர் மட்டும் அழுகாமல்,
நாமும் சேர்ந்து அல்லவா அழுகின்றோம்!
ம்ம்ம்
நம்மையும் கண்ணீரில் மிதக்க விட்டிட்டு வெளில போனாங்களால.. வேற வழியில்லாம போனாங்களோ... வில்லி விஜியம்மாவிற்கே வெளிச்சம்...
போனவங்க திரும்பி தானே ஆகனும்...
சிறு கற்கள் தான் ஒன்றுகூடினால்..
மலையை உருவாக்கும...
இந்த மாமியின் வீட்டையே நேரே குறிபார்க்கும்....
அமிலம் ஊற்றியவரை கொண்டே பன்னீர் தெளித்திட வைப்போம்...
மலரை( மிளிர்)கொண்டே அவன் கதறலை துடைப்போம்...
அவனவள் மடி சாயும் வரை அவளவனை தாயாய் மடி தாங்கும் போர்கொடி தூக்குவோம்....
பாலைவனம் நந்தவனம் ஆகும் வரை நயனிமாவின் வில்லி வேளைக்கு எதிர்ப்பை பலமாய் தெரிவிப்போம்...
அபயனையே அபயம் கேட்க வைத்த இந்த நயனிமாவை நல்லாவே போட்டு படுத்தி எடுப்போம்....
 
Last edited:

Suji1

Active member
Ada pommaaaaa........ennovo nee mattum than kashta patta mathiri vidhulan ah pottu paada paduthara.....avan unna uyirah ninaicha ore karanathukkaga romba than pesura.....nee oru naal patta valikku ivlo pesara....unnala vidhu evlo vali anubavikkaranu theriyuma.....unna oru naal kashta padithunathukku avan self ah anubavikkaran.....athu mattum illa uyira panayam vachu unna kaapathinathukku nalla nandriya kaatra ma....ungappa panna paavathukku neenga enna madam senjeenga....ithu varaikkum yethavathu innovating avanukkaga senjeengala....paavam vidhu........hate u mrithu.......viji pls give next ud soon....also enna pannuveengalo ethu Manningham intha mrithu vidhukitta lo lo lonnu pinnadiye alaiyanum...avana suthalla vittathukku nalla anubavikkanum.....waiting....
 
Meenalochini

Well-known member
தவாமீ (தாமரை மா, வாசுகி மா, மீனாமா😀😀😂😂🤣🤣) மேல பாரத்தைப் போட்டு நானும் இன்னைக்கு கவிதை மாதிரியே ஒன்ன எழுதலாம் என்கிற முடிவுக்கு வந்துட்டேன்..
எதை யோசிச்சாலும் முன்னாடியே அதை யாரோ சொன்ன மாதிரியே இருந்திச்சு😂😂 இருந்தாலும், இதை நான் தான்.. நான் மட்டும் தான் எழுதினேன் ப்ளீஸ் எப்படியாவது நம்புங்க😀😀😂😂🤣🤣

காதலை வேண்டிய கணவனவன்
மனக் காயப்பட்டு கிடக்கிறான்....
கடந்த கால பாவத்தை போக்கும் வழியறியாது தவிக்கின்றான்..

மங்கையவள் இதய கங்கையில் மூழ்கி பாவக் கணக்கை முடித்திட துடிக்கின்றான்.
மிளிரும் நங்கையவள் பனிக்கல்லாய் உறைந்திட திகைக்கின்றான்...

காதல் கனவு தெளிந்த காரிகையோ
நிஜத்தில் நிஜத்தை கண்டு நடுங்குகிறாள்...
காதல் போர்வையை விலக்கி விட்டு
மனப் பயத்தில் குளிர் ஜன்னி கண்டு பிதற்றுகிறாள்...

மன்னிப்பை மன்னவன் வேண்ட...
காதலும் மன்னிப்பும் பிறர் சொல்லி வருவதில்லை...
அப்படி வந்தால் அது காதல் என்றே சொல்லுவதற்கில்லை

வஞ்சியவள் மறைத்து வைத்துள்ளாள் என்றே நினைத்து
காதல் மனதை தேடுகிறான் அவள் நினைவில் அவன் குழைந்து...

திருமணக் கனவு கனலாய் ஆனதில்
இதயமும் அன்று சிதையில் மெல்லச் சரிந்தது...
காதல் நெஞ்சம் மொத்தமும் எரிந்தது..

மரணித்த அவள் காதல் மனம் மீண்டும் ஜனிக்க வேண்டும்
அதற்கு இன்னும் பல காலம் மனக் கருவறையில் அவளை அவன் சுமக்க வேண்டும்...

சுமப்பது எத்தனை காலம் என்ற கேள்விக்கு விடையில்லை
காதலை ஜெயித்தவன் இங்கு யாருமில்லை..

மங்கையவள் காதல் மனம் உயிர்த்தெழும் அந்நொடி
அனைத்து சோகங்களும் விலகாதோ உன்னை விட்டு ஓடி???
சபாஷ் டா செல்ல குட்டி!
 
தாமரை

அருமையா இருக்கு புஷ்பா மா😍😍😍😍😍

பனியாய் உறைந்தவளை... தன் காதல் நெருப்பில் இளக்கவிழைந்தனை ...

எரித்த பின்பும் முளைவிட
பெண்மனது.. பனைவிதை அல்லனை..

பாலிட்ட தயிராய் காதலில் உன் செயல்.. மொத்தப் பாலையும்..திரித்து தோய்த்தனை..

மத்தால் கடைபட்டு.. வெண்ணை உருளும் நேரத்தில்..
தாழி விரிந்தனை...

தாங்கி எடுத்த தன்னவளை..
காய்ச்சப் பொறுத்தால் ...
காலம் துணை செய்ய.....நல்நெய் அடைவனை..
*********
பி.கு.
இது கவிதையல்ல😷😷😷😷 பா..
 
தாமரை

தாமரை
ம்ம்ம்
நம்மையும் கண்ணீரில் மிதக்க விட்டிட்டு வெளில போனாங்களால.. வேற வழியில்லாம போனாங்களோ... வில்லி விஜியம்மாவிற்கே வெளிச்சம்...
போனவங்க திரும்பி தானே ஆகனும்...
சிறு கற்கள் தான் ஒன்றுகூடினால்..
மலையை உருவாக்கும...
இந்த மாமியின் வீட்டையே நேரே குறிபார்க்கும்....
அமிலம் ஊற்றியவரை கொண்டே பன்னீர் தெளித்திட வைப்போம்...
மலரை( மிளிர்)கொண்டே அவன் கதறலை துடைப்போம்...
அவனவள் மடி சாயும் வரை அவளவனை தாயாய் மடி தாங்கும் போர்கொடி தூக்குவோம்....
பாலைவனம் நந்தவனம் ஆகும் வரை நயனிமாவின் வில்லி வேளைக்கு எதிர்ப்பை பலமாய் தெரிவிப்போம்...
அபயனையே அபயம் கேட்க வைத்த இந்த நயனிமாவை நல்லாவே போட்டு படுத்தி எடுப்போம்....
ஹா ஹா அவங்க ரொம்ப உஷாரு வாசுமா..

அவங்களும் என்னென்னவோ பண்ணி சேர்க்க பார்க்கறாங்க.. சேர்க்க முடியலையே.... இரண்டு ஆர்மியையும்..
 
Nayaki

Bronze Winner
கூறு கெட்ட சிறுக்கி,
உன்ன நேத்து தாண்டி அப்பிடி புகழ்ந்தேன்...
உடனே உனக்கு ஏறிகிச்சு.ஆமா அவன் பண்ணியது தப்பு தான். உன்ற மனசையும், உடலையும் அழிச்சுட்டான். அதை விட ஆயிரம் வலிகளை அனுபவிச்சுட்டான், அனுபவிக்கிறான்... கிளிபுள்ளைக்கு சொல்ற மாதிரி, இப்போது அவன் ஏன் உன்ன தொட்டானுங்கிற காரணத்தை சொல்றான்... அது சரினு உனக்கும் தெரியும், ஆனா ஒத்துக்க உன்ற ஈகோ தடுக்குது... அன்று நடந்த தவறுக்கு அவன் காரணமா இருக்கலாம்.. ஆனா இன்று நடக்க விருந்த்துக்கு இருவருமே பொறுப்பு .. மறந்திராத...
உன்னுடயை உணர்வுகளை அவன் எவ்வளவு அழகா உணர்ந்து அதற்கு தீர்வும் சொல்லி, உன்னிடம் யாசிக்கிறான்..யாசிக்காவிட்டாலும் உதறிதள்ளாமல் இருந்திருலக்கலாம்..
உன் வார்த்தைகள் ஒவ்வொன்றும் நாகப்பாம்பின் விசத்தை விட வீரியமா வருது... இவ்வீரியத்தை குறைக்க எந்த கீரிப்புள்ள வந்து உன்ன கொத்தப்போகுதோ..
டேய் மகனே நான்தான் உனக்கு அவ்வளவு தூரஞ் சொன்னேனே கேட்டயா...அந்த புள்ளைக்கு நிலையான ஒரு புத்தி வரட்டும்.. பொறு...இனி அவளை பாத்து பாவம்பட்டு நீ கடைசியில பரிதாபமான நிலைக்கு போயிறாத.. அபயா கலங்காதே, உன்னுடைய காதலுக்கு நிகரானது அவளுடையதும். நீ போதுமான மட்டும் உணர்தீட்ட, இனி அவளாக உன்னை உணர்ந்து தேடி வரும் வரை பொறுத்திரு மகனே.
 
Pushpaprathap

Well-known member
அருமையா இருக்கு புஷ்பா மா😍😍😍😍😍

பனியாய் உறைந்தவளை... தன் காதல் நெருப்பில் இளக்கவிழைந்தனை ...

எரித்த பின்பும் முளைவிட
பெண்மனது.. பனைவிதை அல்லனை..

பாலிட்ட தயிராய் காதலில் உன் செயல்.. மொத்தப் பாலையும்..திரித்து தோய்த்தனை..

மத்தால் கடைபட்டு.. வெண்ணை உருளும் நேரத்தில்..
தாழி விரிந்தனை...

தாங்கி எடுத்த தன்னவளை..
காய்ச்சப் பொறுத்தால் ...
காலம் துணை செய்ய.....நல்நெய் அடைவனை..
*********
பி.கு.
இது கவிதையல்ல😷😷😷😷 பா..
அருமையோ அருமை தாமரை மா செம்ம... இது கவிதை இல்லை அதற்கும் மேல.. பால் திரிந்தாலும் திணராமல் அபயன் காத்திருந்து முயற்ச்சித்தால் நல் நெய் கிடைக்கப் பெறுவான். வாவ் என்ன அருமையான பொருள். எங்க வீட்லயும் தான் பால் , தயிர், நெய் எல்லாம் இருக்கு ஆனா எனக்கு ஏன் எதுவும் தோண மாட்டேங்குது. இனிமே காபி, டீ போடும் போது கூட யோசிக்கறத நிறுத்தவே மாட்டேன். மறுபடியும் ஏதாவது கவிதை மாதிரி ஒன்ன நான் எழுதினா அதுக்கும் நீங்க தான் பொருப்பு சொல்லிட்டேன். 😁😁😂😂🤣🤣
 
Top