Samvaithi007
Bronze Winner
ம்ம்ம்வாசுமா,
நம்ம அபியை இப்படி டீலுல விட்டுட்டு,
மேடம் ஹாயா வெளியில கிளம்பிட்டாங்க. நம்ம சோகம் இதயத்தை விட்டு வெளியில் வர மாட்டேங்கிறதே !
கல்லு மாதிரி கனமாய் கிடக்குதே!
வில்லி இப்படி ஜல்லி ஜல்லியாய் உடைத்து விட்டார்களே!
நாயகிமா எப்படி தாங்கிக்குவாங்கன்னு தெரியலையே வாசுமா!
நம்ம மன்னனை முதல்ல கிரீடத்தை கழட்ட வைத்தார்கள்.
மண்டியிட வைத்தார்கள்.
மன்னிப்பு கேட்க வைத்தார்கள்.
இப்ப நாடு கடத்த போறாங்களே
வாசுமா!
காதலும் பழியும் இணைந்து குழியாய் மாறி அவனை புதைத்ததே !
கொடி உடனும் பூக்கள் உடனும் பூத்துக்குலுங்க வேண்டிய வேளையில்,
வேராய் மாறி மண்ணில் புதைந்தானே!
நீர் ஊற்ற வேண்டியவள் அமிலம் ஊற்றினால்,
வேர் மட்டும் அழுகாமல்,
நாமும் சேர்ந்து அல்லவா அழுகின்றோம்!
நம்மையும் கண்ணீரில் மிதக்க விட்டிட்டு வெளில போனாங்களால.. வேற வழியில்லாம போனாங்களோ... வில்லி விஜியம்மாவிற்கே வெளிச்சம்...
போனவங்க திரும்பி தானே ஆகனும்...
சிறு கற்கள் தான் ஒன்றுகூடினால்..
மலையை உருவாக்கும...
இந்த மாமியின் வீட்டையே நேரே குறிபார்க்கும்....
அமிலம் ஊற்றியவரை கொண்டே பன்னீர் தெளித்திட வைப்போம்...
மலரை( மிளிர்)கொண்டே அவன் கதறலை துடைப்போம்...
அவனவள் மடி சாயும் வரை அவளவனை தாயாய் மடி தாங்கும் போர்கொடி தூக்குவோம்....
பாலைவனம் நந்தவனம் ஆகும் வரை நயனிமாவின் வில்லி வேளைக்கு எதிர்ப்பை பலமாய் தெரிவிப்போம்...
அபயனையே அபயம் கேட்க வைத்த இந்த நயனிமாவை நல்லாவே போட்டு படுத்தி எடுப்போம்....
Last edited: