கண்டிப்பா மாதாஜி பதினோரு வயதில் இருந்தே எந்த தப்பும் பண்ணாம தன்னோட வாழ்க்கையையே இழந்திருக்கான்..., அவன் அக்காக்கு நியாயம் செய்யணும் என்கிற எண்ணத்தோட இருக்கிறவனுக்கு தன்னோட காதல் மட்டுமில்லை அதன் பின்பான வாழ்வும் பெருசா தெரியலை.., ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட களங்கத்துக்கு இன்னொரு பெண்ணை களங்க படுத்துறது என்னைக்கும் தீர்வாகாது...!!! ஆனா விஸ்வநாதன் மாதிரி ஆளுக்கு அதை விட சிறந்த தண்டனை இருக்கபோறது இல்லைன்னு அவன் நெனச்சது தப்பில்லை அதே சமயம் அந்த ஆளு மகளுக்கு ஏற்ப்பட கொடுமையை நெனச்சி காலம் முழுக்க கண்ணீர் விட்டு கதறவிட விட்டிருந்தான்னா அது அபயனுக்கான வெற்றி, அவன் அக்காக்கான நியாயம் சிறப்பா செய்யபட்டிர்க்கும்.., பட் அந்த ஆளு பொட்டுன்னு போயிட்டதால அவன் பழி வாங்கினதே அர்த்தம் இல்லாம போனது மட்டும் இல்லாம ரெண்டு பேரோட வாழ்க்கையிலும் அழிக்க முடியா வடுவா பதிஞ்சு போச்சு.
ஆத்திரத்தில் அறிவிழக்காம எந்த செயலை செய்யும் முன்பும் ஒரு முறைக்கு நூறுமுறை அதன் சாதகபாதகத்தை கணித்து செயல்படுவது சிறந்தது... இங்க விதுலன் பழி வாங்க நெனச்சானே தவிர அது அந்த ஆளை சரியா போய் சேருமான்னு யோசிக்காம விட்டதன் விளைவு மிளிரின் காதல் மனம் பெரிதாக அடிபட்டு போனது..., அவளை நோகடித்ததன் மூலம் அவன் வாழ்வும் காயப்பட்டு போனது.
(இது என்னோட பார்வை மட்டுமே மாதாஜி இதை பழிவாங்கும் படலமா இல்லாம அப்படலம் அதன் நோக்கத்தில் இருந்து மாறுபட்டு எத்தகைய எதிர்மறை விளைவை ஏற்படுத்தி இருக்குன்னு நான் பார்க்கிறேன்)
டேய் லூசு பயலே உன்னோட நோக்கம் விஷ்வாவை கதரவிடறது ஆனா அந்த ஆளு பொட்டுன்னு போய்ட்டான் அப்போ எதுக்கு நீ இந்த தேவையே இல்லாத ஆணியை ப்ளக் பண்ணின
மடப்பயலே....
View attachment 30076