விஜிமா !
மில்க்கி ( அதான் தாமரை மா ) , வாசுமா, புனிதாமா, நந்துமா எல்லாரும் உங்க கூட பேசுறத பார்த்து ஜோதியில் ஐக்கியமான ஆளு நானு.
மனதைத் தொட்ட எழுத்தாளர்கள் என நான் எழுதி வைத்த துண்டு சீட்டு,
உங்கள் இனிய அறிமுகத்தால்,
காணாமல் போனது.
"தொடர்கதையா ஐயோ வேண்டாம்! " என இருந்த என்னை,
உங்கள் தொடருக்காக தொங்க வைத்த, ஏங்கவைத்த, தேவதையே!
மொழி வழி, விழி நுழைந்து,
விரல் வழி விண்ணப்பம் போட வைத்த செல்ல வில்லியே!
நிறைய கதைகள்,
மனதைத் தொட்டதுண்டு,
அறிவைத் தொட்டதுண்டு,
ஆனால் உங்கள் கதை,
இல்ல கதவை தட்டியது.
அபயனை இனிய உறவாய் ஏற்றது.
கம்பன் வீட்டு கட்டு தரியும் கவி பாடும்.
உங்கள் கதையின், கருத்து திரியில், ஒளிரும் எழுத்துக்கள்
எல்லாம் கவியாகவே மிளிரும்.
உங்கள் வரிகளில் தெறித்த உயிர்களில் வெறி பிடித்து,
நான் உதிர்த்த கருத்துக்களாம்,
கண்ணாடி கற்களை,
நீங்கள், உங்கள் பதில் என்னும் ஒளியால் சிதற செய்து,
வர்ண மயம் ஆக்கி விட்டீர்கள்.
கதையை, விதையாய் விதைத்து, விருட்சமாய் வேரூன்றிய,
வித்தையே !
மண்ணில் புதைந்தால் கரித்துண்டு வைரமாய் மாறுமாம்.
உங்கள் எழுத்தில் புதைந்த இந்த
கரித்துண்டுக்கு,
உங்கள் மனதில் புதைந்து, நட்பு மலராய் மாறும் வரம் வேண்டும்.