மிக மிக அழகா சொல்லி இருக்கீங்க... நிச்சயமா அவளால் உடனே அவனை சரின்னு ஏத்துக்க முடியாது. அவளுக்கு காலம் வேண்டும். அந்த காலத்தை அபயனும் கொடுத்திட்டான்... நீ உணரும்வரை காத்திருப்பேன்னு... ஆனா ஒன்னு தாமரை,
"அதே விக்னேஸ்வரின் மகள் தான் ஆராதனா.. அபயன் அவளுக்கும் தண்டனை வழங்குவானா.. மாட்டான் அவ அம்முக்குட்டி செல்லக் கட்டி.. அப்போ.. தமயந்தி மகளா பிறந்தது தான் ம்ளிரின் குற்றறமா.." என்று சொல்லி இருந்தீங்க... இதில எனக்கு உடன்பாடு இல்ல, ஏன்னா, தமயந்திக்கும், விக்னேஸ்வரனுக்கு காதலால் பிறந்தவள் அவள். மகாராணி. ஆனா ஆராதனா அப்படி அல்ல. காமத்துக்கும் காதலுக்கும் கொடூரமான கற்பழிப்பின் மூலம் பிறந்தவள். அவளுக்கு தந்தையாக மாறி காத்துக்கொண்டவன் அவன்... அவள் வேறு இவள் வேறு.
எந்த நீதி நூலில் இல்லா விட்டாலும், தாய் தந்தையின் சொத்து குழந்தைக்கு போவது போல, அவர்கள் செய்த நன்மை தீமையும் குழந்தைகளுக்கு போகும். இதை யாரும் மறுக்க முடியாது. அதுதான் உண்மையும் கூட... மிளிர் விக்னேஸ்வரனுக்கு மகளாக பிறந்ததே அவள் செய்த பாவம். ஆராதனா காந்திமதிக்கு மகளாக பிறந்தது அவள் செய்த புண்ணியம்.
நீங்கள் சொல்வதை முழுமனதோடு ஏற்றுக்கொள்கிறேன். மிளிரின் காயம் மிக பலமானது. அதை எளிதில் தூக்கி எரிந்து விடமுடியாது. இதையே அபயனும் உணருகிறான். இருவரை இணைக்கும் பாலம். காதல். அவன் காதல் மெய் காதல் என்பதை இவள் புரிந்தால், தன மனதில் உள்ள வழிகளை ஒதுக்கிவிட்டு அவன் பால் சாய்வாள்... ஆனால் எப்போது என்பதுதான் கேள்வி.
அருமை அருமை தாமரை.