sivanayani
விஜயமலர்
இது ரொம்ப ஓவர் சொல்லிட்டேன்... இதில ஒண்ணுத்துக்கும் நா லாயக்கு போல தெரியலையே...அன்னமிட்ட கைகளோ காய்ந்த வயிற்றை குளிர்விக்கும் !
அள்ளித்தந்த கைகளோ வறண்ட வாழ்க்கையை வளமாக்கும் !
நீர் வார்த்த கைகளோ தவிக்கும் தாகம் தீர்க்கும் !
வரம் தரும் கைகளோ வண்ண வாழ்க்கையை தரும் !
மாலையிட்ட கைகளோ மங்கைக்கு மங்களம் தரும் !
ஆனால் விஜிமா !
உங்கள் கை.....
காயங்களும், சோகங்களும், தாக்கங்களும், ஏக்கங்களும்,
வெறுமையும், வெற்றிடமும்,
சுழற்றி அடிக்கும் சுழலுக்குள் இருக்கும் பெண்மைகளுக்கு....
தாய்மை தந்த கை அம்மா !
எழுத்து அமுதம் ஊட்டடிய அன்னையே !
கற்பனைக்கு உயிர் ஊட்டியவளே!
வெம்மைக்கு குளிர் ஊட்டியவளே!
உயிர் சென்று தித்திக்கும் நிந்தன் எழுத்தினை,
சுவைத்தேன் ! ரசித்தேன் !
மகிழ்ந்தேன் !
அட்சய ஊற்றாய் நின் எழுத்துக்கள் பொங்கட்டும் !
எங்கள் மனதும் நிறைந்து தங்கட்டும் !
காயங்களும், சோகங்களும், தாக்கங்களும், ஏக்கங்களும்,
வெறுமையும், வெற்றிடமும்,
சுழற்றி அடிக்கும் சுழலுக்குள் இருக்கும் பெண்மைகளுக்கு....
தாய்மை தந்த கை அம்மா !
மங்குனி அமைச்சரே இதோ என்னை புகழ்ந்து கவிபாடும் பலபத்திர ஓணாண்டிக்கு பொன் முடிப்புக்கள் பரிசாக கொடுங்கள்...
சரி மன்னா..
சற்று பொறு.. இப்போதில்லை.. மிகுதியையும் பாடி முடியட்டும்... அதன் பிறகு நீ சென்று எடுத்துவா...
உத்தரவு மன்னா..
எழுத்து அமுதம் ஊட்டடிய அன்னையே !
கற்பனைக்கு உயிர் ஊட்டியவளே!
வெம்மைக்கு குளிர் ஊட்டியவளே!
உயிர் சென்று தித்திக்கும் நிந்தன் எழுத்தினை,
சுவைத்தேன் ! ரசித்தேன் !
மகிழ்ந்தேன் !
ஆஹா அருமை அருமை அருமை... நின் கவி பாடும் அழகு கண்டு மெய்மறந்து பொய்வேட்டேனடா...அமைச்சரே... பொன்முடிப்பு மட்டுமல்ல, அப்படியே வைர வைடூரியங்களையும் எடுத்துக்கொண்டு வாரும்... நம் புலவன் போகும்போது கை நிறைய கொண்டு செல்லவேண்டும்... சரி புலவரே... மிகுதியையும் பாடும்.. பாடும்...
அட்சய ஊற்றாய் நின் எழுத்துக்கள் பொங்கட்டும் !
எங்கள் மனதும் நிறைந்து தங்கட்டும் !
அருமை அருமை... இவ்வளவுதானா இல்லை இன்னும் மிச்சம் மீதி இருக்கிறதா
இவ்வளவுதான் மன்னா...
அடுத்த வாட்டி என் புகழ் பாடும்போது, இன்னும் கொஞ்சம் லெந்தாக பாடவேண்டும்... புரிந்ததா... எங்கே அமைச்சரே.. நான் கேட்டது போல எடுத்துவந்தீரா...
மன்னிக்க வேண்டும் மன்னா... நம் கஜானா காலியாக உள்ளது...
அடடே... முதல்லயே... சொல்லி இருக்க கூடாதா... நான் வேறு வாக்கு கொடுத்து விட்டேன்... வாக்கு தவறினால் இந்த புலிகேசி சீ நயனி என்று உலகம் பழிக்கும் நிலைக்கு வந்துவிட்டேன்... ம்.... இப்போது என்ன செய்வது... ஏன் புலவரே... உமது பரிசை இன்ஸ்டால்மென்டில் தந்தால் பெற்றுக்கொள்வீரா....
ஆமாம் ப்ரபோ
நல்லது நல்லது திங்கள் புதன் வெள்ளி மூன்று நாளும் உமக்காக கதை பதிவேன் அதையே என் பரிசாக வைத்துக்கொள்ளும்... இப்போது என்னை பற்றி ஒரு கவி பாடும்... பாடி பாரும்...
மன்னா கொஞ்சம் தடவை எடுத்து வரலாமா.. அவசரத்துக்கு கவி கவியாய் நிற்கிறது...
சரி சரி எடுத்து பாடும்...