All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாழ்க்கை வாழ்வதற்கே !

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அன்றோ! பெண்கள் வீட்டின் கண்கள் என்றார்கள்.
இன்றோ! பெண்கள் நாட்டின் கண்கள் என்ற நிலையில், நம் பெண்களின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.


நாம் நம் வீட்டு உறவுகளுக்கு வழி காட்டினால், எல்லா வீடும் எழுந்து விடும்.
வீட்டை நிமிர்த்து, நாடு நிமிரும்!
காட்டை நிமிர்த்து, நாடு செழிக்கும்!


நன்றி.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறிவா...? அனுபவமா...?


இனிய தோழிகளே,
அறிவும் அனுபவமும் இருந்தால் வாழ்வில் எதையும் சாதிக்கலாம். அறிவிருந்தும் அனுபவமில்லாமல் எதையும் செய்ய முடியாதவர் பலர்.

30883269.jpg
 
Last edited:

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறிவின் பெருமை

அறிவு பணத்தில் மூழ்கி
உண்மை ஓட்டத்தில் மூழ்கி
மனம் மோகத்தில் மூழ்கி
எண்ணம் ஆடம்பரத்தில் முழ்கி
மக்கள் கடனில் மூழ்கி
வாழ்க்கை சோகத்தில் மூழ்கி
தொடர்ச்சியாக சமுதாயமும்
அறியாமையில்
மூழ்க

தொடங்கிவிட்டது....
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனாதையான அறிவு

பலத்தை மறக்கடித்து
காலம் போகிறது

-- இப்படிக்கு அனாதையான அறிவு...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அறிவு இது....!



அங்கமுடைந்தால் வருவது - முறிவு
தங்கமான நட்பு களங்கமானால் வருவது - முறிவு
உங்கள் அங்கங்களால் வரும் வியாதி - சொறிவு
உங்கள் அங்கங்களில் வரும் வியாதியும் - சொறிவு
பங்கம் இல்லா கண்ணாடி காட்டுவது - தெறிவு
திங்களை நேரில் பார்க்கும் போது காண்பதும் - தெறிவு
எங்கும் உங்களை உயர வைப்பது - அறிவு
என் தங்கத் தமிழ் தந்த அறிவு இது.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உனக்கு அறிவு இருக்கா ?

உங்களிடம் யாரும் கேட்டால்??இதோ பதில்

Posted By Vimal On Januar 19th, 2012 11:03 AM | Featured, பொது அறிவு


அறிவு>அறிவு (Knowledge) என்பது உணர்தலாலும், அனுபத்தாலும், கற்பதாலும் கிடைக்கப்பெறுவைகளாகும். அறிவு என்பது ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரை கிடைப்பவைகளாகவே உள்ளன. அதனை படித்தவர்களுக்கு மட்டுமே அறிவு இருப்பது போன்றும், அறிஞர்கள் என்றும் ஒரு தோற்றப்பாடு பொதுவாக அநேகமானோரிடம் காணப்படுகின்றன. அத்தோற்றப்பாடு முற்றிலும் தவறானது. அறிவு என்பது எல்லோருக்கும் உண்டு, மனிதரல்லாத விலங்குகளுக்கும் உண்டு. அவற்றை இயற்கையறிவு, உணர்வறிவு, படிப்பறிவு, பட்டறிவு, கல்வியறிவு, தொழில்சார் அறிவு, துறைச்சார் அறிவு, அனுபவ அறிவு, பொது அறிவு, ஆள்மனப்பதிவறிவு என பல்வேறு வகைகளாகப் பிரிக்கலாம். இந்தப்பிரிவுகளை பல்வேறு உற்பிரிவுகளாக வகுத்துக்கூறலாம். எடுத்துக்காட்டாக அறிவை கூட சிலர் பேரரறிவு, சிற்றறிவு என்று வகைப்படுத்தும் முறைமையும் உள்ளது.

இயற்கையறிவு>இயற்கையறிவு என்பது இயற்கையைப் பற்றி அறியும் அல்லது கற்கும் அறிவன்று. அது இயற்கையிலேயே கிடைக்கப்பெறும் அறிவைக் குறிக்கும். ஒரு குழந்தை பிறந்தவுடன் கிடைக்கப்பெறும் அறிவு இயற்கையறிவு ஆகும். அது முதலில் பசியை உணரும் அறிவை இயற்கையறிவாகவே கொண்டுள்ளது. அதனாலேயே பசித்தால் குழந்தைகள் அழத்தொடங்கிவிடுகின்றன. அதன்பின் உணரும் அறிவை பெறுகின்றது. அதாவது தாயின் முளைக்காம்பை தொட்டதும் அதையுணர்ந்து (அழுகையை நிறுத்தும்) பாலறுந்தத் தொடங்கிவிடும். இதன் வளர்ச்சிப்போக்கில் பாலைத் தரும் தாயை அறியும் அறிவையும், அவரிடத்தில் அன்புகொள்ளும் அறிவையும் பெற்றுக்கொள்ளும். இவைகளை இயற்கையறிவு எனலாம்.
அறிவும் உணர்வும்>
தமிழில் அறிவு எனும் சொல்லுக்கான வரைவிலக்கணத்தையே; ஆங்கிலச் சொல்லான Knowledge கொண்டிருப்பதாகக் கொள்ள முடியாது. ஏனெனில் தமிழில் விலங்குகளுக்கு ஐந்தறிவு என்றும், மனிதர்களுக்கு ஆறறிவு என்றும் கூறும் வழக்கம் தொன்றுதொட்டு இருந்து வருகிறது. ஆனால் ஆங்கிலத்திலோ Five Sense, Sixth Sense என்று கூறும் வழக்கைக்கொண்டுள்ளனர். அதாவது இந்த „sense“ எனும் சொல் அறிவு, புலன், உணர்வு போன்றவற்றுடன் தொடர்புக்கொண்ட ஒரு வரைவிலக்கணத்தைத் தருகின்றது. தமிழில் ஐம்புலன் என்று கூறும் ஒரு கூற்று இருப்பதனையும் நோக்கலாம்.
கல்வி அறிவு>ஒரு பாடசாலையில் கற்பிப்பதை ஒரு மாணவன் உடனடியாக அவற்றை விளங்கிக்கொள்கின்றான் என்றால், அது அம்மாணவரின் கிரகிக்கும் ஆற்றலின் தன்மையையே காட்டுகிறது. அதேவேளை ஒழுங்காக பாடங்களில் கவனம் செலுத்தாத மாணவனை அறிவற்றவன் என்று கூறவும் முடியாது. சிலவேளை அம்மாணவன் விளையாட்டுத் துறையிலோ, வேறு எதாவது ஒரு துறையிலோ அறிவதில் ஆர்வம் மிக்கவராக இருக்கலாம். இங்கே அறிவு என்பது தாம் ஆர்வம் கொள்ளும் துறைச்சார்ந்து பெற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே எல்லோரது அறிவும் ஒரே மாதிரியானதாகவும், ஒரே தன்மைக்கொண்டதாகவும் இருப்பதில்லை. அதேவேளை கல்வியால் கிடைக்கப்பெறும் அறிவை கல்வியறிவு என்று மட்டுமே கூறலாம்.
எழுத்தறிவு>எழுத்தறிவு என்பது எழுத வாசிக்க அறிந்துள்ள அறிவைக் குறிக்கும். அதேவேளை ஒருவர் சிறப்பாக எழுதக்கூடியவராயின் அவரை சிறப்பான எழுத்தாற்றல் மிக்கவர் என்பதே பொருத்தமானதாகும். இந்த எழுதும் ஆற்றலையும் சிலர் முறைப்படி கற்று பெற்றுக்கொள்பவர்களும் உளர். தமது ஆர்வத்தின் காரணமாக அற்புத ஆற்றல்மிக்க எழுத்தாளர்களாய் ஆவோரும் உளர்.
ஆள்மனப்பதிவறிவு>ஆழ்மனப்பதிவறிவு என்பது தாம் பிறந்த, வாழ்ந்த சூழலிற்கு ஏற்ப பிறராலோ, வாழும் நாட்டின் அரசியல் அமைப்புக்கு அமைவாக ஆழ்மனதில் பதிந்து அதுவே சரியென ஏற்றுக்கொள்ளும் அறிவெனலாம். எடுத்துக்காட்டாக: பிறந்த ஒரு குழந்தையை அது தானாக உணர்ந்துக்கொள்ளும் முன் வேறு ஒரு தம்பதியினர் எடுத்து தமது குழந்தை என்று கூறு வளர்ப்பதால், அக்குழந்தை தமது பெற்றோர் அவர்களே என ஆழ்மனதில் பதிந்துக்கொள்ளும் அறிவு ஆழ்மனப்பதிவறிவு எனலாம். இன்னுமொரு எடுத்துக்காட்டாக: GOD எனும் ஆங்கிலச் சொல்லின் ஒலிப்பை இந்தியத் தமிழர்கள் „காட்“ என்பதே சரியெனும் அறிவையும், இலங்கைத் தமிழர்கள் „கோட்“ என்பதே சரியெனும் அறிவையும் கொண்டிருப்போம். ஒரே தமிழரான நாம் ஒரு வேற்று மொழி சொல் தொடர்ப்பில் இத்தகைய உறுதியை எவ்வாறு கொண்டிருக்கிறோம் எனில் நாம் பிறந்த வளர்ந்த நிலப்பரப்பின் அரசியல் எல்லைக்கோடுகள் நிர்ணயிக்கும் சிலவிதிமுறைகள் எம்மனதில் ஆழப்பதிந்து அதுவே சரியெனும் மனநிலையிக்கு நாம் சென்று விடுவதே காரணமாகும். இதனையே ஆழ்மனப்பதிவறிவு எனப்படுகின்றது. குறிப்பாக சிவபெருமான் அடித்ததாலேயே எல்லோரதும் முதுகில் தழும்பு இருக்கின்றது என இந்துக்கள் நம்பும் நம்பிக்கை போன்ற ஒவ்வொரு மதங்களின் உள்ள வெவ்வேறு கருத்துக்களை அப்படியே உள்வாங்கி அதுவே சரியென கொள்ளுதலும் ஆழ்மனப்பதிவறிவின் வெளிப்பாடே ஆகும்.
பட்டறிவு>அறிவு என்பது ஒரு மனிதனைப் பற்றியோ, ஒரு நிறுவனத்தைப் பற்றியோ அல்லது ஏதாவது ஒரு பொருள் பற்றியோ (அறிந்து)தெரிந்து கொள்வது ஆகும். இந்த அறிவைப் பெறும் வழிகள்: 1.கூரிய நோக்கு(perception) 2.கல்வி கற்கும் முறை(learning process) 3.விவாதித்து முடிவுக்கு வருதல்(debates) 4.செவிகளைத் திறந்து வைத்துக் கொள்ளுதல்(open ears) – கேள்வி அறிவு 5.தனக்குத்தானே விவாதிக்கும் முறை(reasoning) நாம் அனுபவத்தினாலோ, புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவோ அல்லது ஏதாவது காரண, காரியங்களினாலோ பெறுகிறோம். அறிவு என்பதன் முழுமையான விளக்கம் நம் தத்துவ மேதைகளிடையே காலம் காலமாக நடந்து வரும் விவாதமாகும். இன்றும் இந்த விவாதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. அறிவு என்பதற்கு சரியான விளக்கம் தரவேண்டுமென்றால் ஒரு செயல் ஏரண விதிகளால்(logically) நியாயப்படுத்தபட்டதாகவும், உண்மையாகவும், அனைவராலும் நம்பக்கூடியதாகவும் இருக்க வேண்டும். (Plato) ஆனால் இவை மட்டுமே ஒரு செயலை அறிவு என்று சொல்லுவதற்கு தகுதியான அளவுகோல் இல்லை என்று வாதிடுவோரும் உண்டு. அறிவு பல வகைப்படும். ஒவ்வொரு கணத்திலும் நாம் பாடுபட்டு(அநுபவித்து) அறியும் அறிவு பட்டறிவு(experience). ஒவ்வொரு சூழ்நிலையிலும் ஏற்படும் அறிவுத்திறனை சூழ்நிலை அறிவு என்று வகைப்படுத்தலாம். புத்தகங்களில் பெறுவதை புத்தக அறிவு என்றும், சமூக வழி பெறுவதை சமூக அறிவு என்றும் பல வகை உண்டு. சூழ்நிலை அறிவு மொழி, கலாசாரம், பண்பாடு இவற்றோடு நெருங்கிய தொடர்பு உடையது.

படித்ததில் பிடித்தது.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனுபவம் கற்கிறேன்

மனிதனாய் பிறந்த வாழ்க்கையிதில்
மனிதனாகவே நானிருக்கிறேன் ,
மற்றவர்கள் ?

ஓடி ஓடி உதவிசெய்தேன்
உபசரித்து நலம்செய்தேன்
பிரதிபலன் பாராமல்
அர்பணிப்போடு நானிருக்கிறேன் .............

அன்பான குணமிருந்தும்
உதவுகின்ற மனமிருந்தும்
உற்றநேரத்தில் உதவியிருந்தும்
நன்றியை மறந்துவிட்ட நன்றிகெட்ட உலகமிது .....

எனைத்தேடி வந்தவர்க்கு
இல்லையென்று சொன்னதில்லை
துன்பமென்று வந்தவர்க்கு
துணைபுரிய சலித்ததில்லை ...........

அடுத்தவர் கண்ணீரை
துடைக்க துணிந்திருக்கிறேன்
எவரும் புண்படும்
செயலை மறுத்திருக்கிறேன் ..........

புன்முறுவல் செய்திருக்கிறேன்
இன்சொல் உதித்திருக்கிறேன்
நற்செயல் செய்திருக்கிறேன்
நல்லெண்ணத்தோடு இருந்திருக்கிறேன் ..........

நான் என்ற மமதை இல்லை
பிறர் என்று பேதமில்லை
என்னோடு சமாகவே
இணைத்து வாழ்கிறேன் சமமாக ..............

இருந்தும் ,

தன்னலம் கொண்டவர்கள்
தலைக்கனம் கொண்டவர்கள்
நன்றியை மறந்தவர்கள்
நாளடைவில் மறந்தார்கள் .............

உதவிசெய்த உள்ளத்தை
உதறிதள்ளி போனார்கள்
நேசித்த நெஞ்சத்தை
நெஞ்சுடைத்து விட்டார்கள் ..........

பாசவேச்ம் போட்டு
விஷஉறவு கொண்டார்கள்
ஏமாற்றி விட்டார்கள்
என்னை ஏக்கம்கொள்ள வைத்தார்கள் ........

உதவிகேட்ட என்னை
உதாசீனம் செய்தார்கள்
உள்ளம் நோக என்னெதிரே
மனம்நோக பேசினார்கள் ..........

கலங்காத மனமிதை
கலங்க செய்தார்கள்
கடுமையான மனஉளைச்சல்
தந்துவிட்டு போனார்கள் ...........

எதிரியென்று சொன்னவரோடு
இணங்கிபோனார்கள்
நண்பனாக இருந்த என்னை
எதிரியென நினைத்தார்கள் ........

இருக்கும்வரை வேஷம் போட்டு
பிடுங்கிகொண்ட உறவுகூட்டம்
வடிந்தபோது வதைக்கிறது
வாழ்க்கையே என்னை வெறுக்கிறது ..........

பால்வைத்து கடிகண்டேன்
பாம்பின் விஷம் நன்குணர்ந்தேன்
வலிவந்து துடிக்கும் வேளையில்
உதவிக்குகூட ஆளைக்காணோம் .........

கஷ்டம் வந்தவேளையிலே
உண்மை நிலை புரிந்துகொண்டேன்
துன்பம்கூட நல்லதற்குத்தான்
வேஷத்தை அடையாளம் கண்டேன் .......

அனுபவம் கண்டேன் வாழ்வின் அர்த்தம் புரிந்தேன்
அனுபவங்களால் தெளிவடைந்தேன்
நேற்றிருந்த குழப்பம் களைந்து
இன்றுமுதல் தெளிவடைந்தேன் ...........

எனக்கு நான் மெய்யென்று
உறவு எல்லாம் பொய்யென்று
மனம் முழுதும் பதிந்துவிட்டேன்
மனம் மாற முயன்று விட்டேன் !

படித்ததில் ரசித்தது
 
Top