All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

வாழ்க்கை வாழ்வதற்கே !

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தோற்பதை விட துவங்காததே அவமானம்!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இன்னொரு நாள்
இன்னொரு நாள்களுக்குள் கண்ணீருடன் ஒளிந்திருக்கிறது வாழ்க்கைக்கான ஒத்திவைப்பு.
இன்னொருநாள் வரலாம் என்கிற சமாதானம்.
இன்னொருநாள் சரியாகிவிடும் என்கிற எதிர்ப்பார்ப்பு
இன்னொருநாள் சந்திக்கலாம் என்கிற முடிவு.
தெரியாத இன்னொருநாள் எத்தனை தெரிந்த நாள்களுக்கு வடிக்காலைத் திறக்கிறது.

இன்னொருநாள் என்பது மனங்களின் ஓரம் நிறுத்தப்படும் பொய்க்கால் குதிரை. இன்னொருநாள் என்பது வானத்தை நோக்கி கலையும் சிறுவன் தவறவிட்ட ஓர் ஒற்றைப் பலூன்.
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோம்பேறி

118615.gif

ஆதங்கப் படுவதில்
அர்த்தமில்லை
நீ
அதற்காக
பாடு படாத வரை...

சோம்பேறிகளின் மாநாட்டு
தலைவன் நீ என்று
அறிவித்த போதிலும்....
நீ அங்கு செல்ல மறுக்கிறாய்
உன் சோம்பேறி தனத்தால்.

கோபம் கொள்கிறாய்,
ஆவேசம் அடைகிறாய்,
வெட்டி பந்தா போடுகிறாய்,
உழைப்பு தான்
உயர்வு தரும் என்பதை
மறந்து விட்டு....

தேனீக்கு கொட்ட தெரியும்.
வண்டுக்கு பறக்க தெரியும்.
காற்றுக்கு அடிக்க தெரியும் .
மனிதா நீ...
மறந்து விட்டாய்.
உனக்கு உழைக்க
தெரியும் என்பதை...
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோம்பேறி...


இன்றைய-
சாதனையாளர்கள்-
நேற்றைக்கு-
சோம்பேறிகள்-
இல்லை!

இன்றைய-
சோம்பேறிகள்-
நாளைக்கு-
சாதிக்க-
போவதில்லை!
 

Mithravaruna

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) ! [படித்ததில் ரசித்தது]



நான் சுமாரகப் படிப்பவன் தான், எதிலும் அக்கறை செலுத்தாமல் சோம்பேறியாகவே தான் இருந்தேன்.


"டேய் சோம்பேறி" என்று எங்காவது யாராவது யாரையாவது கூப்பிட்டால் நான் தன்னிச்சையாக திரும்பி பார்த்துவிடுவேன். அந்த அளவு அந்த பெயர் என்னுடன் ஒட்டி உறவாடியது.

சோம்பேறி என்ற அடைமொழி மட்டுமின்றி, தாழ்வு மனப்பான்மையில் நான் இருந்தேன் என்பது எனக்கு திருமணம் ஆகும் வரை தெரியவில்லை.

திருமணம் முடிந்து ஒரு வாரத்தில், என்னைப் பற்றி புரிந்து கொண்ட மனைவி கமலா,

"உங்களால சாதிக்க முடியுங்க..." என்றால் மென்மையாக

"என்னமோ நீதான் சொல்றே.. எனக்கு நம்பிக்கை இல்லை"

"இங்கே பாருங்க... நாளையிலிருந்து நான் சொல்றபடி கேளுங்க..."

"சொல்லுமா ..." வேண்டா வெறுப்பாக சொன்னேன்

அன்றைக்கு சாயங்காலமே, என்னை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்குச் சென்று நல்ல விதமான ஆடைகைளை வாங்கினாள்

"ஒரு மனுசனுக்கு முக்கியம் தோற்றம் தாங்க..."

"ம்"

"நல்லா நீட்டா டிரஸ் பண்ணினால், ஒரு பெருமிதம் வரும், அப்பறம் பொறுப்பு வரும்"

"ம்"

அவள் சொல்லியபடி, அவள் எடுத்துவைக்கும் ஆடைகளை அணிந்து அலுவலகம் சென்றுவர ஆரம்பித்தேன். ஆரம்பத்தில் என்னை ஒரு மாதிரியாக கிண்டல் செய்தவர்கள், பின் உடைகளின் தேர்வுகளைக் குறித்துப் பாராட்டினார்கள். முதல் முறையாகப் வெளியில் இருந்து பாராட்டு என்னை கொஞ்சம் மாற்றியது. அதன் பிறகு நேர்த்தியாக இன்சர்ட் பண்ணி உடைகள் அணிய ஆரம்பித்தேன்.

"என்னங்க, உங்களுக்கு தெரியாத விசயம் ஒன்னுமே இல்லை, ஆனால் தெரிந்தது போல் காட்டிக் கொள்ளவேண்டாம் என்று நீங்கள் தயங்குகிறீர்கள் ..."

"ம், முந்திரிக் கொட்டைன்னு எல்லாம் சொல்லுவார்களே ...!"

"தயக்கத்தைவிடுங்கள், நாலு பேருக்கு மத்தியில் நாம் பேசும் போது, தெரிந்ததைச் சொல்வதற்கு என்ன தயக்கம் ?" கையை அன்பாகப் பற்றிக் கொண்டு கேட்டாள்

"ம்..."

"ஒண்ணும் தெரியாதவங்க தெரிந்தது போல் முந்திக் கொண்டு பேசுவதைத்தான் முந்திரிக் கொட்டை என்று சொல்லுவார்கள், உங்களுக்கு இருப்பது தாழ்வு மனப்பான்மை, அதை விடுங்க " என்றாள் ஆதரவாக

"ம், முயற்சி பண்ணுகிறேன்...கமலா !"

மறுநாள் அலுவலகத்தில் ஒரு முக்கிய மீட்டிங்கில் எல்லோரும் முடிவெடுக்க தயங்கிய விசயத்தில் மெல்ல தயங்கி தயங்கி நான் விளக்கிச் சொல்லிய முடிவால், அலுவலகத்தில் ஒரு நல்ல ப்ராஜக்ட் பற்றிய தெளிவு பிறந்தது.

மேனேஜர் கூப்பிட்டு,

"மிஸ்டர் மனோ, இந்த ப்ராஜக்ட் பற்றி இவ்வளவு நல்லா தெரிஞ்சி வச்சிருக்கிங்க, இதை நீங்களே ஹேண்டில் பண்ணினால் தான் சரியாக முடிக்க முடியும் என்று நினைக்கிறேன், இதை புரோசீட் பண்ணுங்க" என்று கைக் குளுக்கினார்.

என்னிடம் அந்த ப்ராஜக்ட் ஒப்படைக்கப்பட்டது.

முதல் முறையாக எனக்கு மிகப் பெரிய பொறுப்புக் கொடுக்கப்பட்டதை நினைத்து பெருமிதம் வந்தது. அந்த ப்ராஜக்டை நல்ல முறையில் செய்து பாராட்டு பெறவேண்டும் என்று பொறுப்புணர்வு எனக்கு ஏற்பட்டு, அது சமபந்தமாக முழுக்கவனத்தையும் செலுத்தி வெற்றிகரமாக முடித்தேன்.

அதன் பிறகு அடுத்தடுத்து ப்ராஜக்ட்டுகள் என்னிடம் ஒப்படைக்கப்பட்டு பதவி உயர்வு கொடுக்கப்பட்டது, நான் எப்பவுமே எதிர்பார்க்காத கார், வீடு என என் வசதிகள் கூடிக் கொண்டே போனது. என்னை சாதரணமாகப் பார்த்தவர்கள் கூட நிமிர்ந்து பார்க்க ஆரம்பித்தனர். என் பழக்க வழக்கங்களில் மிடுக்கு தெரிவதாக சிலர் வெளிப்படையாகவே பாராட்டினர்.

ஒரு நாள் தூங்குவதற்கு முன்பு,

"ஏங்க, உங்களுக்கு இவ்வளவு திறமை இருக்கிறப்ப நாம ஏன் பிஸ்னஸ் ஆரம்பிக்கக் கூடாது ?" என்று கேட்டாள் மனைவி கமலா

"ம், பண்ணலாம் அதுக்கு திறமை மட்டுமே போதாது, வேலை வாங்கும் திறமையும் இருக்கவேண்டும், தேடித் தேடி பிஸ்னஸ் பிடிக்கவேண்டும் ..."தயங்கி சொன்னேன் நான்

"நீங்கள் சொல்வது சரிதான், பிஸ்னஸ் ஆரம்பித்து கொடிகட்டிப் பறக்கிறவர்கள் எல்லோரும் எல்லாவித அனுபவமும் பெற்று வருவதில்லை, பிஸ்னசில் நுழைந்த பிறகே சில புதுவித அனுபவம் கிடைக்கும், முதல் போட்டால் லாபம் எடுக்கவேண்டும் என்ற உணர்வு எல்லாவற்றையும் திறம்பட செய்யதுவிடும்...!" தலையை மென்மையாக வருடியபடி சொன்னாள்

அவளுடைய பேச்சு நம்பிக்கை கொடுத்தாலும், தயங்கிய படி

"சரி, செஞ்சு பார்ப்போம் " என்றேன்

கமலா எண்டர்ப்ரைசஸ் என்று முதலில் ஆரம்பித்த நிறுவனம் சூடுபிடிக்க ஒருவருடம் ஆகியது,

"சப் காண்டரக்டரிடம் கொடுக்கும் வேலையை ஏன் நாமே, இன்னுமொரு கம்பெனி ஆரம்பித்து செய்யக் கூடாது ? நான் வேண்டுமானால் புதுக் கம்பெணியை பார்த்துகொள்கிறேன், குழந்தைகள் தான் பெரியவர்கள் ஆகிவிட்டார்களே" என்றாள்

"ம்.அதுவும் நல்ல யோசனைதான் ..."

"ஆமாங்க, நமக்கு தேவையானது மட்டும் அல்லாமல், மற்ற கம்பெனிகளுக்கும் ஆர்டர் எடுத்துச் செய்யலாமே" என்று சொன்னாள்

பிஸினஸ் விரிவடைந்தது, தொழில் அதிபர் என்ற பட்டம் பின்னால் ஒட்டிக் கொண்டது

என்னை ஆரம்பத்தில் கேலி பேசியவர்கள் என்னிடமே வேலை கேட்டு வந்தார்கள்.

இப்பொழுதெல்லாம் சக்ஸஸ்புல் பிஸ்னஸ் மேன் என்று என்னைக் கைக்காட்டுகிறார்கள்

என் மனைவி என்மீது நம்பிக்கை வைத்து படிப்படியாக என் காலடியில் அமைத்த ஏணி என்னை உயரத்தில் கொண்டு நிறுத்தியிருந்து.


மெசேஜ் : திறமையானவர்கள் முன்னுக்கு வருவது சாதாரண விசயம். ஆனால் சோம்பேறிப் பையன்களை சுறுசுறுப்பு மாமன்னர் ஆக்குவது பெரும்பாலும் குடும்ப உறுப்பினர்களால் தான் முடியும், சோம்பேறிப் பையன்களின் திறமைகளை அடையாளம் காணுவது என்பதும் தன் சோம்பேறிக் கணவரை விட்டுக்கொடுக்காமல் உயர்த்துவதும் ஒரு மனைவியால் மட்டுமே முடியும்.

முடிவாக... உற்சாகப்படுத்தி நம்மை உயர்த்துபவர்கள் நம்மீது உண்மையான அக்கறை கொண்டவர்களாக இருந்தால் மலையும் எந்த சோம்பேறிக்கும் மடுவாகும் !
 
Top