கற்பனை உலகம்...!
வணக்கம் தோழிகளே...! இனிய காலையில் கற்பனை என்பது சோம்பேறித்தனமா..? என்ற கேள்வி எழும் போதே...அதற்கு விடையும் கிடைக்கின்றது. அலசலாம் வாருங்கள்.
படத்தில் கதிரவனின் கவிதை...
மனம் எல்லா உலகையும் வலம் வர ஆசைப் படுகின்றது. ஆம்...
ஆசைகள் இல்லா மனங்கள் எங்கே? - அதன்
ஓசைகள் எல்லாம் முழங்கும் சங்கே!
மனத்தின் ஆசைகள் கற்பனைக்கு எட்டாத உயரத்தில் இருந்தாலும் விடா முயற்சியில் முடியும் ஒன்றே!
அறிந்தவன் வெல்வான்,
அறிவாயோ மானுடனே...!
பணம் பணம் என்று அலைபவன் அதை செலவளித்து அனுபவித்தானா என்றால்... கிடைக்கும் விடை எதிர்மறையே!
பணத்தை முடக்கி முடக்கி, பயத்தை வளர்த்து, நிஜத்தில் தவித்து நிழலில் சாகின்றான் என்பதே விதி.
புரிந்து கொண்டு புணர் ஜென்மம் கொண்டால் ஜெயித்திடுமே அவன் மதி.
கற்பனைக்கு எங்கும் எதிலும் புகுந்திட ஆசை....
அருமையான வரிகள், நிஜத்தில் சாத்தியமாகா விஷயம் கூட கற்பனையில் இனிக்கும் உண்மையே.
கற்பனை என்ற ஒன்று வருவதனால் தான் மானுடம் உயிக்கின்றது. இன்று இல்லாத ஒன்று நாளை கிடைக்கும் என்ற நம்பிக்கையை கொடுப்பது கற்பனா சக்தியே.
கற்பனை விவேகமே...!
கற்பனை வளமே கவிதைக்கு வரமே..!
கவிதை பொழிந்தால் தான் காவியம் சிறக்கும்... காப்பியம் ருசிக்கும்.
இந்த நாள் நம் கற்பனை உலகில் நிஜத்தின் தீர்வு காண என் இனிய வாழ்த்துக்கள் நன்றி.