sivanayani
விஜயமலர்
நருமு உங்க எல்லா பதில்களும் படிச்சேன். நிஜமா நீங்கள் எனக்கு சப்போர்ட் பண்றதெல்லாம் வேற லெவல் தங்கம். என்னன்று நன்றி சொல்ல தெரியல. உங்கள் அத்தனை கருத்துக்கும் நன்றிபா. அப்புறம் பெரிய மன்னிப்பு கேட்டுக்கிறேன். கொஞ்சம் பிசி. இதுக்குள்ள வந்து நேரத்தை செலவிட முடியல. அதால என்னை மன்னிச்சிருங்க.நிச்சயம் மகிழ் முடிவில் என்க்கு மகிழ்ச்சியே.
கண்டிப்பா மகிழ் மகிழ்ச்சியாக வாழ்க்கை அமைந்து இருந்தாலும் மகிழ்வாக வாழ்ந்து இருக்கமாட்டாங்க அவங்களுடை துன்பம் இப்போதாவது குறைந்ததில் மகிழ்ச்சி.
மகிழ் அவர் கணவருடன் ஒரு நல் வாழ்கை அமைந்து, குழந்தைகளுடன் மகிழ்ந்து வாழ்ந்து இருந்தால் நிச்சயம் நான் இப்படி சொல்லி இருக்கமாட்டேன்.
யுத்தம் செய்த காயத்தை விட இப்படி பட்ட மனித அரக்கன் கூட தினமும் வேசி பட்டம் வாங்கிட்டு, அரக்கனின் தாயும் கொடூர அரக்கியாக இருக்கும் போது எதற்கு இந்த துர்வாழ்க்கை??
வாழும் வரை நண்பர்களாக, வாழ்ந்து, குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க போராடுவோம் என்று மீண்டும் நம்பிக்கை துளிர் விட்டு தன் இருப்பிடம் செல்பவர்களின் வாழ்வு இனியாவது கருணை வைக்க வேண்டி பொல்லாத இறைவனையே மனம் வேண்டுகிறது .
நீங்க சொல்றது சரி. வாழ்க்கைங்கிறது கொஞ்ச காலத்துக்குத்தான். அந்தக் கொஞ்சக்காலத்தில் மகிழ்ச்சியாக கணவன் குழந்தைகள் அப்படின்னு வாழணும். அந்த மகிழ்ச்சியைக் கொடுக்கக் கூடிய கணவனே, அவளை வலிக்கச் செய்தால்? எதுக்காக வாழணும்? யாருக்காக வாழணும்? ஏன் வாழணும். அப்படி வாழ்ந்திட்டான்னு யாராச்சும் சிலை வச்சிடப் போறாங்களா? இல்லைல... பிறகு எதற்காக உயிரைப் பணயம் வச்சு ஒரு குடிகாரன் கூட இருக்கணும். எனக்கு அதில் உடன்பாடு கிடையாது. அதனால்தான் முடிவை இப்படி மாத்தினேன். இத்தனை காலம் பட்ட வலிகள் போதும். இனியாவது மகிழ் தனக்காக, தன் மகிழ்ச்சிக்காக, தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழட்டும். சுதந்திரனும் அப்படியே. இனியாவது அவன் புது வாழ்க்கையை வாழட்டும்