All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ப்ரியா நிலாவின் “என் நிஜமே நீ தானடி” - கதை திரி

Status
Not open for further replies.

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 31


விஸ்வநாதன் இல்லம்


தன்னுடைய தந்தை கூறிய விஷயத்தின் தாக்கத்தில் இருந்து சாராவால் அவ்வளவு எளிதில் வெளியில் வர முடியாமல் அதிர்ச்சியுடன் நாதனையே பார்த்து கொண்டு இருந்தாள்.


நாதன் ,” இப்போ சொல்லு நீயும் உன்னோட அம்மாவும் தான் வானதியும் அவ அம்மாவும் வாழ்ந்த வாழ்கையை வாழ்ந்துட்டு இருக்கீங்க. அவங்க இல்ல “ என்று ஆவேசமாக கூறினார்.


அதை கேட்ட சாராவால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. இன்னொருவர் வாழ்ந்த இடத்தில் இருப்பதை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எதிலும் முதலாவதாக இருந்தே பழக்கப்பட்டவள் இன்று அனைத்திலும் இரண்டாவதாக அடுத்தவர் விட்டு கொடுத்து அதில் தாங்கள் வாழ்வது அவமானமாக தோன்றியது. ஆனாலும் ஆதியை அவளால் விட்டு கொடுக்க முடியவில்லை. இவ்வளவு நாள் அவனை எப்படியாவது அடைய வேண்டும் என்ற எண்ணம் எப்போது வெறியாக மாறியது அவளுக்கே தெரியாது இப்போது அதை மாற்றி கொள்ளவும் தோன்றவில்லை என்பதை விட தன்னால் மாற்றி கொள்ள என்ற எண்ணமே மனம் முழுவதும் வியாபித்து கொண்டு ஒரு வித பயத்தை ஏற்படுத்தியது.


சாரா,” இதை ஏன் இத்தனை நாளாக என் கிட்ட சொல்லலை “ என்று ஆதங்கமாக கேட்டாள்.


நாதன் ,” அவங்க ரெண்டு பேரும் ஏதோ ஒரு மூலைல நல்லா வாழ்ந்துட்டு இருப்பாங்கன்னு நெனச்சிட்டு தான் நானும் நிம்மதியா இருந்தேன். அவங்க கூட இருந்த வரைக்கும் அவங்க அருமை எனக்கு தெரில அதுக்கு அப்புறம் தான் புரிஞ்சுது நான் தப்பு பண்ணிட்டேன்னு. ஆனா இப்போ அதை பத்தி யோசிச்சி எந்த பிரயோசனமும் இல்லயே…. வாழ்க்கை ரொம்ப தூரம் போய்டுச்சு. கடமையேன்னு தான் இப்போ ஏதோ வாழுந்துட்டு இருக்கேன் “ என்று விரக்தியாக பேசிக் கொண்டிருந்தவரை பார்த்த சாரா, “ இப்போ என்ன தான் அப்பா சொல்ல வரிங்க…. அம்மா கோவக்காரங்க தான். தன்னோட வாழ்க்கைய தக்க வச்சிக்கறத்துக்கு என்ன வேணாலும் பண்ணுவாங்க ஆனா இன்னொருத்தவங்க இருந்த இடத்தில தன்னை எப்பவும் நினைச்சுக் கூட பாக்க மாட்டாங்க “ என்று ஆவேசமாக கூறியவளை அமைதியாக பார்த்தார் நாதன்.


நாதன்,” உன்னோட அம்மாவ பத்தி உன்னை விட எனக்கு நல்லாவே தெரியும். எனக்கு இப்போ ஒரு சந்தேகம் இருக்கு அது மட்டும் உறுதியாக ஆட்டும் அப்புறம் இருக்கு உங்க அம்மாவுக்கும் மாமாவுக்கும். இதுக்கு மேலயும் என்னோட மகளா நான் கஷ்டபட விடமாட்டேன். என்னோட பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு அதை நீயும் உன்னோட அம்மாவும் மறந்துடாதீங்க. ஆதிய மறந்துட்டு வேற வேலை இருந்த பாக்குற வழிய பாரு…. கணவன் மனைவிக்குள் சண்டைகள் வரும் ஆனா அதுலயும் காதல் இருக்கும். என்னை ஒரு பொருளா தான் அவ நினைச்சா நான் அவளுக்குன்னு ஆன பிறகு என் மேல எந்த பிடித்தமும் இல்லாமல் ஆயிடுச்சு. நாங்க ரெண்டு பேரும் சந்தோஷமா சிரிச்சி பேசி நீ பாத்து இருக்கியா…. இது எல்லாமே எனக்கும் லேட்டா தான் புரிஞ்சிது. நீயாவது நல்லா இருக்கணும்ன்னு தான் நான் ஆசை படுறேன். இல்லை நான் இப்படி தான் இருப்பேன்னு நெனச்சா நீயும் உன் அம்மா மாதிரி தான் உன் வாழ்க்கைய அழிச்சிப்ப “ என்று கோவமாக கூறி விட்டு சென்றவரையே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தாள் சாரா. இது நாள் வரை நாதன் இவ்வளவு பேசி சாரா கண்டதே இல்லை. இன்று அவர் பேசியதையனைத்தும் அவள் மனதிற்குள் உழன்று கொண்டே இருந்தது.


சில நாட்களுக்கு பிறகு…..


வர்மா பேலஸ்



ஷக்தி, “ எப்படியோ ஒரு வழியா உன்னோட அண்ணன் வீட்டுக்கு வரதுக்கு வழிய கண்டுபிடிச்சிட்டான் போலையே “ என்று ஹால் சோபாவில் அமர்ந்து கொண்டிருந்த ஷர்மிளாவிடம் வம்பு வளர்த்து கொண்டிருந்தான் ஷக்தி.


ஷர்மீ,” உங்களுக்கு என்னோட அண்ணனா ஏதாவது சொல்லலன தூக்கமே வாரதே…. இப்போ தான் அவரு அண்ணி வந்ததுக்கு அப்பறம் சந்தோஷமா இருக்காரு அது உங்களுக்கு பொறுக்காதே. அவர் மேல கண்ணு வைக்கரதே உங்க வேலையா போச்சு”.


ஷக்தி , “ ஆமா என்னோட கண்ணை எடுத்து அவன் மேல வெச்சிட்டு நான் குருடனாவா சுத்த முடியும். என் கிட்ட எல்லா வேலையையும் குடுத்துட்டு அவன் மட்டும் ஜோலியா பொண்டாட்டிக்கூட ஊர் சுத்திட்டு இருக்கானேன்னு ஒரு வாயித்தெரிச்சல் தான்….” என்று கண் சிமிட்டி கூறியவனை பார்த்து இரண்டு வாயிலேயே போட்டாள் ஷர்மீ.


இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டு இருக்கும் போது கேட்ட ஹாரன் சத்தத்தில் ஆதியும் வானதியும் வந்ததை அறிந்த இருவரும் எழுந்து வெளியில் சென்று காரில் இருந்து இறங்கியவர்களை அணைத்து கொண்டனர்.


ஷக்தி,” என்ன ஆதி இன்னும் ஒரு ரெண்டு மூணு மாசம் கழிச்சு வருவன்னு நெனச்சேன்….. பரவலா சிக்கிரம் வந்துட்டியே அதிசயம் தான்” என்று கலாய்த்தவனின் மண்டையிலயே ஒன்று வைத்தான் ஆதி.


தன் கையால் தலையை தொட்டு பார்த்து கொண்டே,” உண்மைய தானடா சொன்னேன்… அதுக்கு என் உனக்கு இப்டி கோபம் வருது ஒரு வேல அது தான் நெனசிட்டு இருந்தியா என்ன அதை நன் கண்டுப்பிடிசிட்டேன்னு தானா அடிச்ச “ என்று தன் மனதில் இருந்ததை அப்படியே கூறியவனிடம் என்ன கூறுவது என்று தெரியாமல் சிரிப்புடன் அவனை அணைத்து கொண்டான்.


அவன் முதுகை தட்டிய ஷக்தி, “ ஜோக்ஸ் அபர்ட் ஆதி…. எத்தனை நாள் உன்னோட வாழ்க்கை நல்ல படியா மாறாதன்னு அந்த கடவுள் கிட்ட வேண்டி இருக்கேன் தெரியுமா…… இப்போ உன்னை இப்படி பாக்க ரொம்ப சந்தோஷமா இருக்கு. உன் முகத்துல இருக்க இந்த சிரிப்பு எப்பவும் உன்கிட்ட இருக்கணும் “ என்று கண்கலங்க கூறியவனிடம் ,” அதுக்கு என்ன டா நீங்க எல்லாரும் என் கூட இருக்கும் போது எனக்கு என்ன குறை…. அதுவும் இல்லாம என்னோட பொண்டாட்டி என் கூடவே இருக்கும் போது என்னோட சந்தோஷம் அதிகமா தான் ஆகுமே தவிர குறையாது “ என்று ஷர்மிளாவுடன் சிரித்தபடியே வீட்டிற்குள் செல்லும் வானதியை பார்த்து கொண்டே பேசியவனை அழைத்த கொண்டு உள்ளே சென்றான் ஷக்தி.


வானதி, “ அண்ணா நான் உங்க மேல ரொம்ப கோவமா இருக்கேன் “ என்று உள்ளே வந்தவனை பார்த்து கூறியவளின் அருகில் வேகமாக சென்று அமர்ந்த ஷக்தி, “ அய்யோ தங்கச்சி என்னமா ஆச்சி நான் என்னமா பண்ணேன் “.


வானதி, “ உங்களுக்கு ஒண்ணுமே தெரியாது அப்படி தான…. எனக்கே தெரியாம நான் தூங்கிட்டு இருக்கும் போது ஐடியா குடுத்து இவர் கூட என்ன அனுப்பி வெச்சது நீங்க ரெண்டு பேரும் தான “.


ஷர்மீ,” அண்ணி எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை எல்லாமே இதோ ஷக்தி மாமா தான் பண்ணாரு. நான் அவர் சொன்னது மட்டும் தான் பண்ணேன். நீங்க எது பண்றதா இருந்தாலும் அவர தான் பண்ணனும் “ என்று உடனே அந்தர் பல்ட்டி அடித்தவளை வாயில் கையை வைத்து கொண்டு பார்த்தவன் இதற்கு காரணமானவனை திரும்பி முறைத்தான்.


அவனோ இதற்கும் அவனுக்கும் எந்த தொடர்பும் இல்லாதது போல் ஃபோன்னில் தீவிரமாக எதையோ பார்த்து கொண்டே இவனை பார்த்து நக்கலாக சிரித்தான்.


ஷக்தி, “ வானதி மா…. நான் ஒண்ணுமே பண்ணலை மா. எல்லாமே இதோ இங்க ஒண்ணுமே தெரியாத மாதிரி இருக்கானே அவனோட வேலை தான்….. “ என்றவன் அவள் அருகில் சென்று வானதியின் கைகளை பிடித்து கொண்டு , “ ஆனாலும் அவன் என்ன பண்ணாலும் உன் மேல இருக்க காதல் நாள தான் பண்ணான். அவன் சொல்லி என்னால எதுவும் மறுக்க முடியாத நாள தான் நானும் இதை செஞ்சேன் உனக்கு என் மேல கோவமா இருந்தா இந்த அண்ணனா மன்னிச்சிடு மா…. ஆனா கோவம் மட்டும் படாத “ என்று சோகமாக பேசியவணை பார்த்து கலகலவென சிரித்த வானதி, “ அண்ணா நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன் நீங்க என்னடான்னா இவ்வளவு சீரியஸா பேசிட்டு இருக்கிங்க. அவர் ஏற்கனவே எல்லாத்தையும் என் கிட்ட சொல்லிட்டாரு “ என்றவளை பார்த்து நிம்மதியாக சிரித்தான் ஷக்தி.


இவ்வாறு சிறிது நேரம் அங்கு சிரிப்புடன் சில உரையாடல்கள் நிகழ்ந்து கொண்டிருந்தது. ஷக்தியுடன் சிலவற்றை பேச வேண்டியிருந்ததால் இருக்கையில் இருந்து எழுந்த ஆதி ஷக்தியை அழைத்து கொண்டு வானதியிடம்


ஆதி,” ஆருந்யா நீ ரொம்ப டயர்டா இருப்ப போய் ரெஸ்ட் எடு நான் ஷக்தி கிட்ட கொஞ்சம் ஆபீஸ் விஷயமா டிஸ்கஸ் பண்ண வேண்டியது இருக்கு சரியா “ என்று கூறியவனிடம் தலை அசைத்து விட்டு படியேறி சென்று விட்டாள். அவள் தங்கள் அறைக்குள் சென்றதை உறுதி படுத்திக்கொண்ட ஆதி ஷக்தியை அழைத்து கொண்டு கீழே இருந்த அலுவலக அறைக்குள் நுழைந்தான். ஷர்மிளாவும் அவர்கள் வரும் போதே இரவு உணவு உண்டு விட்டு வந்ததால் எழுந்து அனைவருக்கும் காஃபி தயாரிக்க சென்று விட்டாள்.


முக்கியமாக பேச வேண்டும் என்று அழைத்து விட்டு வந்ததில் இருந்து எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்து தீவிரமாக யோசித்து கொண்டு இருந்தவனை குழப்பமாக பார்த்த ஷக்தி அவனின் மவுனத்தை கலைக்கும் விதமாக, “ ஆதி பேசணும் சொல்லிட்டு எதுவும் பேசாமல் அமைதியாக இருந்த என்ன அர்த்தம்…. ஏதாவது பிரச்சனையா ஆதி “. அவனை ஒரு பெருமூச்சுடன் கண்டவன் வானதி அவனிடம் கூறிய அவளின் கடந்த காலத்தை பற்றி விவரமாக விவரித்தான்.


அதை கேட்டவுடன் சில நேரம் அங்கே மௌனனமே ஆட்சி செய்தது. பிறகு ஷக்தி, “ ஆதி நீ சொன்னத என்னால நம்பவே முடியல. இப்படியெல்லாம் கூடவா பண்ணுவாங்க . அந்த சந்திரிகாவும் அவங்க அண்ணனும் இவ்வளவு மோசமானவங்களா இருப்பாங்கன்னு நினைக்கவே இல்லை. இதையெல்லாம் கேட்கும் போது எனக்கே கோவமா வருது நீ என்னடா அமைதியாக இருக்க…. “ என்று ஆவேசமாக கூறினான்.


நிதானமாக இருக்கையில் சாய்ந்த ஆதி, “ எனக்கு அவங்க மேல கோவம் இல்லன்னு நான் உன் கிட்ட சொன்னேனா ஷக்தி “.


ஷக்தி, “ அப்புறம் ஏன்டா அமைதியா இருக்க….. நீ சொன்னதை எல்லாம் வெச்சி பாத்தா அவங்க ரொம்ப மோசமானவங்க போல மாதிரி தெரிது…. அதுவும் அந்த சந்திரன் பத்தி அரசல் புரசலா கேள்வி பட்டு இருக்கேன் அவன் நிறைய இல்லிகல் பிஸ்னஸ் பண்றான் அதுவும் இல்லாமல் அவன் ரொம்ப மோசமானவன் ஆதி “ என்று அவன் கூறிக் கொண்டு இருக்கும் போதே கதவை தட்டிவிட்டு ஷர்மிளா இருவருக்கும் காஃபியை வைத்து விட்டு சென்று விட்டாள்.


அவள் செல்லும் வரை அமைதியாக இருந்த ஆதி, “ ஷக்தி நீ இங்கிலீஷ் ல ஒரு பழமொழி கேள்வி பட்டு இருக்கியா “ என்று சம்பந்தம் இல்லாமல் கேட்டவனை குழப்பமாக என்ன என்பதை போல் பார்த்தான்.


ஆதி, “ அது என்ன தெரியுமா, every powerful man in the world has his rival அதை என்னிக்கும் மறக்க கூடாது. நான் அமைதியா இருக்கேன்னா அதுக்கு ஒரு காரணம் இருக்கு “ என்றவன் தன் முன்னால் இருக்கும் காஃபி கப்பை கையில் எடுத்தவன் அதை அருந்தி கொண்டே, “ லைப்ல எதையும் அனுபவிச்சு செய்யணும். அது காஃபி குடிக்கரதா இருந்தாலும் சரி இல்ல யாரையாவது இருந்த இடம் தெரியாமல் மொத்தமா இல்லாம செய்யரதா இருந்தாலும் சரி “ என்ற ஆதியின் கூற்றில் குடித்து கொண்டிருந்த காஃபி புரை ஏறியது ஷக்திக்கு.


ஷக்தி, “ ஆதி கொலை எதுவும் பண்ண போறியா டா “ என்றவனுக்கு மறுப்பாய் புன்னகையுடன் தலையசைத்தாலும் அது அவன் உதடுகளில் மட்டுமே இருந்தது. அது சத்தியமாய் அவன் கண்களில் இல்லை என்பதை உணர்ந்த ஷக்திக்கு ஒரு விஷயம் மட்டும் தெளிவாய் புரிந்தது என்னவென்றால் இவன் ஏதோ விவகாரமாக செய்ய போகிறான் என்பது மட்டும் தான்.


ஆதி , “ நீ கேட்ட கேள்விக்கு பதில் நாளைக்கு காலையில உனக்கு கிடைக்கும்…. இப்போ போய் தூங்கு ஷர்மீ காத்திட்டு இருப்பா “ என்றவன் ஷக்தியிடம் பேசிவிட்டு மேலே தன்னுடைய அறைக்கு சென்ற போது வானதி ஆழுந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை தொந்தரவு செய்ய விருப்பம் இல்லாமல் குளியலறைக்கு சென்று தன்னை சுத்தப்படுத்தி கொண்டு வந்து அவளருகில் படுத்து கொண்டான் ஆதி. அந்த இரவு நேரத்தில் மெல்லிய வெளிச்சத்தில் அழகு தேவதையாக உறங்கி கொண்டிருந்தவளை தன் வாழ்நாள் முழுவதும் பார்த்து கொண்டே இருக்க வேண்டும் என்றாலும் சலிக்காமல் பார்க்கலாம் என்ற எண்ணம் அவனுக்குள் எழுந்தது.


அவளரியாமல் அவன் சில காரியங்கள் செய்து விட்டு தான் வந்து இருக்கிறான். அவையனைத்தும் அவள் முகத்தில் தற்போது உறங்கும் போது இருக்கும் இந்த அமைதியும் நிம்மதியும் என்றும் அவள் வாழ்நாள் முழுவதும் நிலைக்க வேண்டும் என்பதற்காகவே தான். நாளைய விடியலில் என்னனென்ன செய்ய வேண்டும் என்பதை வானதியின் முகத்தை பார்த்து கொண்டே யோசித்து கொண்டிருந்தவனை எப்போது நித்திராதேவி ஆக்கிரமித்தாள் என்பதை அவனே அறியவில்லை.


நாளைக்கு ஆதி செய்ய போகும் விஷயத்தால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதை நாமும் பொறுத்திருந்து காண்போம்…..


மிராண்டாடும் மானே

உன் கண்கள் காட்டுவாய்…..

தேனில் அமிழுந்த

உன் வார்த்தை கசக்குமா…..

மலரும் மாலை இனிய வேலை...

இனிது இனிது இளமை புதிது

என் நெஞ்சின் ராகம்

எங்கே எங்கே

நான் போக வேண்டும்

அங்கே அங்கே….


நிஜமாகும்…..
 
Last edited:

Vimala subramani

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 32


ஒவ்வொரு நாள் விடியலும் ஒவ்வொருவருக்கும் பல விதமாக அமைகிறது. அதில் யாருக்கு எப்படி அமையும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. அது காலத்தின் கையில் தான் உள்ளது. அது போல இன்று விடிய போகும் இந்த விடியல் யாருக்கு எப்படி அமைய போகிறது என்பதை நாமும் அனைவரையும் போல அதன் போக்கிலேயே காண்போம்.


வர்மா இல்லம்


காலையில் இருந்தே ஆதியின் இல்லம் பரபரப்பாக இருந்தது. அதற்கு காரணம் அனைவரையும் முக்கிய விஷயமாக வெளியில் அழைத்து செல்வதாக சொல்லி தயாராக கூறிருந்தான் ஆதி. எங்கு செல்கிறோம் என்று கேட்டவர்களிடம் வெறும் பார்வையையே பதிலாக தந்துவிட்டு சென்றுவிட்டான். கீழே இருந்த இருவரையும் பரபரப்பாக கிளம்ப கூறியவன் தன்னுடய அறைக்குள் வந்த உடன் அமைதியே உருவாக உறங்கி கொண்டிருக்கும் வானதியை எதிரில் இருக்கும் இருக்கையில் அமர்ந்து கன்னத்தில் கை வைத்து கொண்டு இமைக்காமல் ரசித்து கொண்டு இருந்தான் .


தன்னை யாரோ வெகு நேரமாக பார்த்து கொண்டிருப்பதை உள் உணர்வு உணர்த்தியதோ என்னவோ தூக்கத்தில் இருந்து மெதுவாக கண்களை திறந்த வானதிக்கு எதிரில் தன்னையே பார்த்து கொண்டிருக்கும் கணவனே காலையில் தரிசனம் தந்தான். கண் விழித்து எழுந்தது கூட தெரியாமல் இன்னும் கண்கூட சிமிட்டாமல் பார்க்கும் ஆதியின் அருகில் மெதுவாக எழுந்து வந்தவள் அவன் முகமருகில் கையை அசைத்தவளின் அசைவில் நிகழ்காலத்திற்கு வந்த ஆதி, “ எழுந்துட்டிய டா…. “ என்று கேட்டபடி இருக்கையில் இருந்து எழுந்தான்.


வானதி, “ என்ன காலையிலேயே பகல் கனவா… நான் எழுந்தது கூட தெரியாமல் எதை பாத்துட்டு இருக்கீங்க “.


ஆதி,” நான் உலகத்தையே மறந்துட்டு பாத்துட்டு இருக்கும் போதே தெரிய வேண்டாம் அது என்னோட அழகு பொண்டாட்டிய தான்னு “ என்று பேசியபடியே தன் எதிரில் நிற்ப்பவளின் தோளில் கையை போட்டு தனக்கருகில் இழுத்தவன் அவளையே குறுகுறுவென பார்த்தான்.


அவனின் பார்வையில் இருந்த அர்த்தத்தை புரிந்து கொண்டவள் வெட்கம் கொண்டு அவன் அசந்த நேரத்தில் அவனிடமிருந்து தள்ளி நின்று கொண்டவளை பார்த்து சிரித்தவன்,” ஹோய் என்ன தப்பிச்சிட்டன்னு நினைக்கிறிய உன்னை நான் அப்புறம் பாத்துகறேன். நாம இப்போ ஒரு முக்கியமான இடத்துக்கு போகனும் சோ நான் உனக்கு டிரஸ் எடுத்து வெச்சிருக்கேன். அதை போட்டுட்டு ரெடியாகு “ என்று கூறியவன் தன்னுடைய கைப்பேசியை எடுத்து கொண்டு வெளியே சென்று விட்டான்.


சிறிது நேரம் கழித்து ஃபோன் பேசிக்கொண்டே அறையினுள் நுழைந்த ஆதி அவனுக்கு முன் நடக்கும் காட்சியை கண்டு மெய்மறந்து நின்றுவிட்டான். அங்கு குளித்து முடித்த வானதி ஆதி வைத்து விட்டு சென்ற தங்க நிற புடவையில் கரும்பச்சை நிறம் கொண்ட ஜாக்கெட் அணிந்து அதற்கேற்ப சின்னதாக நகைகள் அணிந்து கண்ணாடியில் தன்னை சரிபார்த்து கொண்டிருந்தவளை கண்டவுடன் அப்படியே நின்றுவிட்டான்.


அவளை கண்களால் அளந்து கொண்டே நடந்து வந்து பின்னிருந்து அணைத்த படியே, “ இந்த புடவையில நீ அப்படியே தேவதை மாதிரி இருக்க. பேசாம நாம எங்கேயும் போகாம இங்கேயே இருந்துடலாம “ என்று கூறியவணை அவன் கைகளை இறக்கி விட்டு பின்னால் திரும்பி முறைத்தாள் வானதி.


ஆதி,” சரி இப்படி பாசமா பார்த்தா நிஜமாவே நான் பிளான் மாத்திடுவே போல… உடனே கிளம்புனா தான் நல்லது. ஆனா ஏதோ ஒன்னு குறையர மாதிரி இருக்கே “ என்று பார்வையால் மேலிருந்து கீழாக ஆராய்ந்தவனை சற்று வெட்கம் மேலிட சிரிப்புடன் ரசித்து கொண்டு இருந்தாள் வானதி.


வானதி, “ எல்லாமே சரியா தான் இருக்கு. உங்க பார்வை தான் ஆரம்பத்துல இருந்து சரியில்ல “.


ஆதி,” ஆன்…. கண்டுபிடிச்சிட்டேன். கொஞ்சம் இரு “ என பேசியபடியே அவளுக்கு பின்னால் இருந்த டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த குங்கும சிமிழை திறந்து அதில் உள்ள குங்குமத்தை விரலில் எடுத்து உச்சி வகுட்டில் வானதியின் கண்களை பார்த்து கொண்டே அழுத்தமாக வைத்து விட்டான் ஆதி. பெண்ணவள் அப்படியே சிலிர்த்துப்போனாள். நொடி பொழுதில் நடந்த இந்த நிகழ்வின் தாக்கத்தில் இருந்து இருவராலும் வெளியில் வர முடியாமல் கண்களில் காதலோடு பார்த்து கொண்டே இருந்தனர். அதில் ஆதியின் இதழோரம் ரசனையான புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது.


அறையில் இருந்த கடிகாரத்தின் ஓசையில் இருவரும் தன்னிலை அடைந்து வெளியில் வந்து தாயாராக இருந்த இருவரையும் அழைத்து கொண்டு சென்றான் ஆதி. வழி நெடுகிலும் எங்கு செல்கிறோம் என்று கேட்ட கேள்விகள் அனைத்திற்கும் மௌனமான புன்னகையே பதிலாக தந்து காரை ஓட்டுவதிலேயே கவனமாக இருந்தான். சிறிது தூரம் சென்றதும் வானதிக்கு அது எந்த இடத்திற்கு செல்லும் பாதை என்பதை ஓர் அளவுக்கு புரிந்து கொண்டதால் அமைதியாக இருந்து விட்டாள்.


அவள் நினைத்ததை போலவே மீனாட்சி அம்மா நடத்தும் ஆசிரமத்தினுள் நுழைந்து கார் நின்றதும் இறங்கிய வானதியின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்தது. காரணம் அந்த இடம் முழுவதும் விழா கோலம் பூண்டிருந்தது. எதற்காக என்று கேட்பதற்காக ஆதியின் புறம் திரும்பி பார்த்தால் அவன் அங்கிருந்த யாரிடமோ முக்கியமாக பேசிக்கொண்டிருந்தான்.
அதே நேரம் அங்கு வந்த மித்ரா,” என்ன மேடம்…. என்னாலம் உங்களுக்கு நியாபகம் இருக்கா “ என்றவளின் குரலில் திரும்பிய வானதி அவளை இறுக்கமாக அணைத்து விடுவித்தாள்.


வானதி,” என்ன கிண்டல் பண்றியா…. உண்மைய சொல்லனும்னா உனக்கு தான் நான் ஒருத்தி இருக்கேன் அப்படின்றது மறந்து போச்சு இல்லனா… இங்க நடக்கிறத பத்தி என் கிட்ட சொல்லி இருப்ப தான “.


மித்ரா, “ அப்படி இல்லடி. அண்ணா தான் உனக்கு சர்பிரைஸ் குடுக்க போறேன்னு சொல்லி இந்த ஏற்பாடு எல்லாம் பண்ணிருக்காரு. இல்லனா உன் கிட்ட சொல்லாம இருப்பேனா “.


வானதி,” உனக்கு என்னை விட உன்னோட அண்ணன் முக்கியமாக போயிட்டாரு. பரவால விடு அப்படி என்ன சர்பிரைஸ் வெசிருக்காருன்னு பாக்கலாம் “ என்று இருவரும் பொதுவாக பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு வந்த ஆதி, “ ஆருந்யா… வா உள்ளே போலாம் எல்லாரும் நமக்காக காத்துட்டு இருப்பாங்க “.


வானதி,” இன்னும் நீங்க இங்க என்ன நடக்குதுன்னு சொல்லவே இல்லையே அருள்… “.


ஆதி,” இவ்வளவு தூரம் வந்துட்டீங்க. அப்படியே கொஞ்சம் உள்ள வந்துட்டா எதுக்கு அப்படின்னு தெரிஞ்சிட போகுது வாங்க மேடம் “ என்றவனை கோபமாக முறைத்தவள். அவனை தாண்டி ஒரு அடி எடுத்து வைத்தவளை நகர விடாமல் கைகளை அழுத்தி பிடித்த ஆதி,” சந்தோஷமா இருந்தாலும் சரி கோவமா இருந்தாலும் சரி என் கூடவே தான் இருக்கணும் விட்டுட்டு போகனும் அப்படின்ற எண்ணம் விளையாட்டுக்கு கூட எப்பவும் வர கூடாது வானதி. இது தான் கடைசியாக இருக்கணும் இதை நான் உனக்கு சொல்றது. என்னோட கண் பார்வையில இருந்தும் விலகனும்ன்னு நினைக்காத” என்று குரலில் அழுத்தத்துடன் கூறியவனின் கையை மென்மையாக பிடித்து, “ எதுக்கு இவ்வளவு கோவம் அருள். நான் உங்களை விட்டு எங்கயும் போக மாட்டேன் சரியா. பாருங்க அதுக்குள்ள உங்க முகம் எப்படி மாறிடுச்சு. என்னோட பேரும் வானதியா மாறிடுச்சு. என்னோட புருஷன் எப்பவும் சிரிச்ச முகமா தான் இருக்கணும் “ என்றவளின் கண்களில் தெரிந்த காதலில் அவனுடைய கோவம் குறைந்து காதல் ஆட்கொண்டது.


நேரமாவதை உணர்ந்து ஆதியை அழைக்க வந்த ஷக்தி, “ இங்க வந்துமா உங்க ரொமான்ஸ் முடியல. எங்க போனாலும் இப்படியே நிக்க வேண்டியது. அங்க நல்ல நேரம் முடிய போகுதுடா ”.


ஆதி, “ அது எப்படிடா நாங்க ரெண்டு பேரும் ஒன்னா இருந்த உனக்கு பொறுக்க மாட்டேங்குது கரெக்ட்டா வந்துட்ற “.


ஷக்தி, “ எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம். முதல்ல வாங்க ரெண்டு பேரும் “ .
வானதியின் கையை பற்றியபடி நிகழ்ச்சி நடக்கும் அறைக்குள் நுழைந்தான் ஆதி.


சுற்றி இருப்பவர்களை பார்த்த படியே உள்ளே வந்த வானதி அங்கு மேடையில் இருந்த வார்த்தைகளை பார்த்து அதிர்ச்சியில் ஆதியை திரும்பி பார்த்தாள். அவள் பார்ப்பதை உணர்ந்தும் எதுவும் கூறாமல் மேடைக்கு அழைத்து சென்று இருக்கையில் அமர வைத்ததும் நிகழ்ச்சி ஆரம்பமாகியது.


அந்த நிகழ்ச்சியின் சாராம்சம் இதுதான். மீனாட்சி அம்மா நடத்தி கொண்டு இருக்கும் ஆசிரமம் மற்றும் ஆதியின் தந்தை நடத்தி வந்த டிரஸ்ட் இவ்விரண்டையும் ஒன்று இணைத்து ஒரே அமைப்பாக மாற்றி அமைத்து அதை கவனித்து கொள்ளும் பொறுப்பு மீனாட்சி அம்மாவிற்கும் இந்த அமைப்பை நிர்வகிக்கும் பொறுப்பை வானதிக்கும் அளிக்கும் நிகழ்ச்சி இது. மேலும் ஏற்கனவே இந்த ட்ரஸ்ட்டில் இருந்த முக்கியமானவர்கள் அனைவரிடமும் கலந்து உரையாடி விட்டு இந்த முடிவை எடுத்து விட்டு மற்ற அனைவருக்கும் இதை அறிவிக்கவே இந்த ஏற்பாடு. இந்த விஷயம் ஷக்தி மற்றும் ஷர்மிளா இருவருக்குமே தெரியும் வானதிக்கு இது ஒரு சர்பிரைஸ் ஆக இருக்க வேண்டுமென்பதற்காக எதுவும் தெரியாததை போல் இருந்தனர்.


இவையனைத்தையும் நினைத்தபடியே மேடையில் இருந்த மைக்கில் பேசிக் கொண்டு இருக்கும் ஆதியை வெச்சக் கண்ணு வாங்காமல் பார்த்து கொண்டு இருந்தாள் வானதி. உண்மையில் அவள் இந்த அதிர்ச்சியில் இருந்தே வெளியில் வரவில்லை. கணவன் தனக்கு பின்னால் என்னவெல்லாம் செய்து இருக்கிறான் என்பதை நினைக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது. அதே நேரம் இதை நம்மால் செய்ய முடியுமா என்பதில் அச்சமாகவும் இருந்தது.


ஆதி, “ இந்த அமைப்பு மூலமா நிறைய நல்ல காரியங்கள் செய்ய இருக்கோம். கல்வி, மருத்துவம் இன்னும் மற்ற உதவி எல்லாம் நியாயமா கிடைக்க வேண்டியவங்களுக்கு கிடைக்கணும் அப்படின்றதுக்காக தான் இந்த அமைப்பு. இதுல ஒரு தனி குழு இருக்கு அதுல அவங்க உதவி தேவைப்படுறவங்கள சரியா கண்டுபிடிச்சு இங்க கூட்டிட்டு வருவாங்க. இந்த யோசனையை குடுத்ததே என்னோட மனைவி தான் “ என்று கடைசி வரியை அவளை பார்த்து கொண்டே கூறி முடித்தவுடன் அந்த அரங்கம் முழுவதுமே கைத்தட்டல்களால் நிறைந்தது.


என்றோ ஒரு நாள் தனிமையில் தன்னுடைய மனதில் இருந்ததை கூறியதை இன்று நிஜமாக்கிய கணவனை நினைக்கும் போது அவள் கண்களில் நிறைந்தது. ஆதி வந்து அவளை எழுப்பி அவள் கைகளில் ரீமொட்டை வைத்தது எதுவும் அவள் கவனத்தில் பதியவில்லை. அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளை அதை அழுத்துமாறு கண்காட்டினான். அதில் தன்னிலை அடைந்தவள் ஆதியின் கையையும் பிடித்து பட்டனை அழுத்தி அந்த போர்ட்டை திறந்து வைத்தாள்.


அதில் Nathi charitable foundation trust என்று பொன்னிற எழுத்துகளால் எழுதி இருந்தது. அதை கண்டதும் அவள் கண்களில் இருந்த கண்ணீர் வெளியே விழுந்தது. அதை துடைத்து கொண்டே வேண்டாமென்று தலையசைத்து கொண்டே அவளை தோளோடு அணைத்து கொண்டான் ஆதி. இதை கீழிருந்து பார்த்து கொண்டு இருக்கும் அனைவருக்கும் மகிழ்ச்சியாக இருந்தது.


அதற்கு பிறகு நடந்தது அனைத்தும் வேகமாக நடந்தது. அனைவரிடமும் பேசிய ஆதியின் கண்கள் வானதியை தேடி கொண்டிருந்தது. அவளை காணாமல் வெளியில் வந்து பார்த்த பொழுது தன் தேடலுக்கு உரியவளோ அங்கு இருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவளை கண்டு ஆசுவாசமடைந்தவன் தலையை கோதியவாறு அவள் அருகில் வந்து அமர்ந்தான்.


அவள் உணர்ச்சிவசப்பட்டு இருப்பதால் அவளே பேசட்டும் என்று அவனும் அமைதியாக இருந்தான்.நேரம் போனதே தவிர அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பதால் அவனே பேச்சை ஆரம்பித்தான்.


ஆதி,” உள்ள வரவரைக்கும் பேசிட்டு இருந்தவ இப்போ ஏன் எதுவும் பேசாம அமைதியா இருக்க ஆருந்யா. ஒரு வேளை உனக்கு இது பிடிக்கலையா “ என்றவனின் வாயில் கையை வைத்து தடுத்தவள், “ நீங்க எவ்வளவு பெரிய காரியம் செஞ்சி இருக்கீங்க தெரியுமா… என்னோட இத்தனை வருஷத்து கனவ நிறைவேற்றி குடுத்து இருக்கீங்க. அது எப்படி எனக்கு பிடிக்காம போகும்” என்று பேசியவாறு கையை இறக்கியவளின் கையை தன்னுடைய கைக்குள் வைத்து கொண்டான் ஆதி.


ஆதி, “ எல்லாருக்கும் இதுல ரொம்ப சந்தோஷம். ஆனா இத நான் யாருக்காக பண்ணேனோ அவங்க முகத்துல சந்தோஷத்துக்கு பதில கண்ணுல கண்ணீர் தான வருது”.


வானதி, “ இது சந்தோஷதுல வர கண்ணீர். இதுக்கு எல்லாம் நான் தகுதியானவ தானன்னு எனக்கு யோசனையாக இருக்கு “ என்றவளின் கண்ணீரை துடைத்தவன், “ இதுக்கு நீ மட்டும் தான் தகுதியானவ. இதை நிர்வாகம் பண்ணவும் உன்னால முடியும். உன்கூட நான் எப்பவும் துணையா இருப்பேன். நீ எதை பத்தியும் கவள படக்கூடாது சரியா. “


சரியென்று தலையசைத்தவள், “ எனக்காக நீங்க இவ்வளவு பண்றீங்க ஆனா நான் உங்களுக்கு எப்பவும் கஷ்டத்தை மட்டும் தான் குடுத்து இருக்கேன் “.


ஆதி, “ இப்போ என்ன நீ எனக்கு ஏதாவது ஒன்னு செய்யணும் அதன. அப்படினா நீ எப்பவும் அழவே கூடாது. இந்த முகத்துல நான் எப்பவும் சிரிப்ப மட்டும் தான் பாக்கணும்.” அவன் அவ்வாறு கூறியதும் கண்களை துடைத்து கொண்டு அவனை பார்த்து காதலோடு சிரித்தாள் வானதி.அதை கண்ட ஆதி தானும் சிரித்தவாறு,” இது தான் என்னோட வாழ்நாள் முழுதும் நீ எனக்கு குடுக்கர பரிசு” என்றதும் இருவரும் ஒன்றாக சிரித்தனர்.


இருவரையும் சாப்பிட அழைக்க வந்தவர்கள் இவர்களின் இந்த சந்தோஷத்தை கண்டு இப்படியே இருவரும் என்றும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு அங்கு இருந்து சென்றனர்.


வானதி, “ அப்புறம் அருள் நமக்கு ஒரு முக்கியமான ஒரு வேளை இருக்கு அதையும் நம்ம உடனே செய்யணும் “.


ஆதி,” மித்ரா – கதிர் கல்யாணம் அதான. நம்மோட அடுத்த வேளை அது தான் ஓகே வா. அண்ணன் அண்ணி ஸ்தானதுல இருந்து நம்ம ரெண்டு பேரும் இந்த கல்யாணத்தை அடுத்த முகூர்த்ததுல நடத்திடலாம் . நேரம் ஆயிடுச்சு நாம சாப்பிட போலாமா “ என்றவன் அவளின் கையை பிடித்து கொண்டு சாப்பிட அழைத்து சென்றான் .


இவர்கள் இவ்வாறு இருக்க அங்கு சந்திரன் இவர்கள் இருவர் மீது கொலைவெறியோடு இருந்தார்.
மும்பையில் சந்திரனுக்கு நிறைய சொத்துக்கள் வர காரணம். எதுவும் அவர் தன்னுடைய சொந்த உழைப்பில் உருவாகியது அல்ல. மற்றவர்களை ஏமாற்றி அதன் மூலம் உருவானது. அதில் முக்கியமாக மருந்து கம்பனி மூலமாக பல கலப்படமான தடைசெய்யப்பட்ட மருந்துகளை விற்பனை செய்வது. அதுமட்டுமில்லாமல் மருத்துவமனை என்கிற பேரில் சிறு குழந்தைகளில்ருந்து பெரியவர்கள் வரை கடத்தி அவர்களின் உடல் உறுப்புகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது போன்ற பல தவறான தொழில்களில் முன்னணி வகித்து கொண்டிருக்கிறார். தற்பொழுது அங்கு அவர் உருவாக்கிய தொழில் சாம்ராஜ்ஜியம் அனைத்தையும் சரிந்து தேடப்படும் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார் சந்திரன். இதற்கு காரணம் அந்த ஆதி தான் என்பதை அறிந்து அவனுக்கு கைப்பேசியில் அழைத்தார் .


அனைத்து வேலையையும் முடிந்ததும் வானதியையும் ஷர்மியையும் வீட்டிற்கு அனுப்பி விட்டு ஆதியும் ஷக்தியும் அலுவலகத்திற்கு வந்து வேலை விஷயமாக பேசிக்கொண்டிருக்கும் போது இடைமறித்த கைப்பேசியை சிரித்தபடியே எடுத்து காதில்வைத்தான்.


சந்திரன்,” எதுக்காக இப்படி பண்ண. உன்ன நான் சும்மா விட மாட்டேன் ஆதி “ என்று எடுத்த எடுப்பிலேயே கத்தினார்.
ஆதி,” ஏன் இப்படி கத்துறிங்க சந்திரன். நீங்க இந்நேரம் போலீஸ் ஸ்டேஷன்ல இருப்பிங்கன்னு நெனச்சேன். நீங்க என்ன எனக்கு கால் பண்ணி பேசிட்டு இருக்கீங்க ஒரு வேளை உங்கள வெளிய எடுக்க என்னோட உதவி ஏதாவது உங்களுக்கு தேவப்படுதா”.


சந்திரன்,” நீ யார் கூட மோதுறன்னு தெரியாம மோதுற ஆதி”.


ஆதி, “ அது எல்லாம் தெரிஞ்சி தான் எல்லாத்தையும் செஞ்சேன். பிஸ்னஸ்ல எனக்கு வந்த எல்லாம் பிரச்சனைக்கும் காரணம் நீன்னு தெரியாத அளவுக்கு நான் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல. அது கூட போன போகுதுன்னு விடலாம். ஆனா நீ என்னோட மனைவிய கொல்ல பாத்துருக்கியே உன்னை எப்படி சும்மா விட முடியும் “ என்றதுக்கு சந்திரனிடம் இருந்து அமைதியே பதிலாக வந்தது.


ஆதி, “ அப்புறம் நான் ஏன் அமைதியா இருந்தேன்னு கேட்கிறிய. ஒருத்தன் கதைய முடிக்கனும்னா அவன் வரலாற அழிக்கணும் அதுக்கு முதல்ல அவனோட அடையாளத்தை இல்லாம பண்ணனும். அதை தான் உனக்கு நான் பண்ணியிருக்கேன். அதான் உனக்கு எதிரா எல்லா ஆதாரத்தையும் கண்டுபிடிச்சு எங்க குடுக்கணுமோ அங்க குடுத்துட்டேன். இப்போ இன்டர்நேஷனல் லெவெல்ல தேடப்பட்ற முதல் குற்றவாளி நீ. முடிஞ்சா தப்பிச்சிக்கோ”.


அவன் பேசியதில் பயங்கரமாக கோபமடைந்த சந்திரன் அங்கு இருந்த கண்ணாடி பொருளை தரையில் தூக்கி அடித்து கொண்டே எழுந்து நின்று,” நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்ட ஆதி. அவ்வளவு சீக்கிரம் யாரலையும் என்னை நெருங்க முடியாது. நீ யாருக்காக இது எல்லாம் பண்ணேன் எனக்கு தெரியும். அவளையும் சரி உன்னையும் சரி நான் சும்மா விட மாட்டேன்.”


ஆதி, “ முதல்ல உன்னை நீ காப்பாத்திக்கோ. நான் நினைச்சி இருந்த உன்னை ஒரே நிமிஷத்துல இல்லாம பண்ணிருக்க முடியும். ஆனா சாவுன்றது ஒரு மனிதனுக்கு விடுதலை…. அதுல இருந்து அவ்வளவு சிக்கிரம் உனக்கு விடுதலை கிடைச்சிருமா…. அப்புறம் நீ செத்துட்டா நான் யாருக்கு தண்டனை குடுக்கரது. எத்தனை பேரோட வாழ்க்கைய அழிச்சிருப்ப. இனி தான் உன் அழிவு காலம் ஆரம்பம். முடிஞ்சா தப்பிச்சிக்கோ “ என்று கூறிவிட்டு வைத்தவனின் பேச்சை கேட்டு சந்திரனின் கோவம் உச்சத்தை அடைந்தது. அவரின் மனதிற்குள் பழிவெறி கொழுந்து விட்டு எரிய ஆம்பித்தது ,’ உன்னோட பலவீனம் எதுன்னு எனக்கு தெரியும் ஆதி. ஒரே கல்லுல ரெண்டு மாங்காயா. என்னோட பழைய பகையையும் இப்போ இருக்க பகையையும் ஒன்னா தீத்துக்கரேன். இனிமே நான் யாருன்னு காட்ரேன்’ என்று மனதினில் சூளுரைத்தவர் தன் தங்கையின் உதவியோடு தலைமறைவானார்.


சந்திரனின் கோவத்தால் ஆதி மற்றும் வானதியின் வாழ்க்கையில் நிகழ என்னவென்பதை நாமும் பொறுத்திருந்து காண்போம்.

கண் என்ற போர்வைக்குள்

கனவென்ற மெத்தைக்குள்

வருவாயா? வருவாயா?

விழுந்தாலும் உன் கண்ணில்

கனவாக நான் விழுவேன்….

எழுந்தாலும் உன் நெஞ்சில்

நினைவாக நான் எழுவென்….



நிஜமாகும்.
 
Status
Not open for further replies.
Top