Vimala subramani
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25
வானதியின் கண்ணில் இருந்து வழிந்த கண்ணீரை கீழே விழாமல் தன்னுடைய விரல்களால் பிடித்த ஆதி அவளின் கண்களை நேருக்கு நேராக பார்த்து, “ நீ என்னோட மனைவி இனி உன்னோட சுக துக்கம் எல்லாத்துலையும் எனக்கும் பங்கு உண்டு. உன் முகத்துல என்னைக்கும் நான் சந்தோஷத்தை மட்டும் தான் பாக்கணும்….. உன் கண்ணுல இருந்து கண்ணீர் வந்தா அதுக்காப்புறம் நான் உயிரோட வாழுறதுல எந்த அர்த்தமும் இல்லை. அதை எப்பவும் உன் நியாபகத்துல வெச்சிக்கோ “ என்று அவன் சற்று அழுத்தத்துடன் கூறியதை கேட்ட அடுத்த நொடி அவள் கண்ணில் வழிந்த கண்ணீர் அப்படியே நின்றது. அதன் பிறகு நடந்த அனைத்து சம்பிரதாயங்களும் அமைதியாகவே நடைபெற்றது. கால் விரலில் மெட்டி இடும் சடங்கின் போது வானதியின் பாதத்தை ஒரு மலரை ஏந்துவதை போல கையில் ஏந்தி ஒரு காலில் மெட்டி இட்ட ஆதி அடுத்து வலது காலை எடுத்து மெட்டி அணிவித்த பிறகும் விடாமல் பிடித்து இருப்பதை கண்ட வானதி அவனிடமிருந்து தன்னுடைய காலை விடுவிக்க முயற்சிசெய்தும் அவளால் முடியவில்லை. காரணம் அவனுடைய பிடி அவ்வளவு அழுத்தமாக இருந்தது.
ஆதியின் நெடு நாள் ஆசை வானதியின் காலில் இருந்த ஆறாவது விரலை ஒரு முறையாவது தொட வேண்டும் என்பது இன்று அந்த வாய்ப்பு அதுவும் உரிமையோடு கிடைத்திருக்கும் போது அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. அதை தொடுவதற்குள் அவள் காலை பின்னுக்கு இழுப்பதை உணர்ந்த ஆதி அவளின் காலை பிடித்து அந்த ஆறாவது விரலை ஆசையாக வருடினான். அந்த வருடலை ஆதியால் நிறுத்தவே முடியும் என்று தோன்றவில்லை காரணம் அதன் மென்மையில் தன்னையே தொலைத்து இருந்தான். வானதிக்கு அது ஒரு மாதிரியாக இருந்தது. அனைவரும் அங்கு இருந்ததால் அவளால் அவனிடம் கோவமாக எதுவும் கூறவும் முடியவில்லை. அவன் அசந்த நேரம் அவளுடைய காலை இழுத்து கொண்டாள். அதை கண்டவன் சிறிது ஏமாற்றமாக இருந்தாலும் இருக்கும் இடத்தை கருத்தில் கொண்டு எதுவும் கூறாமல் அமைதியாக எழுந்து கொண்டான்.
திருமணம் முடிந்த பிறகு நேராக அனைவரும் ரிஜீஸ்டர் ஆபீஸ் சென்று திருமணத்தை முறையாக பதிவு செய்தனர். அப்போது தான் ஆதிக்கு உண்மையிலேயே மிகவும் நிம்மதியாக இருந்தது. ஷக்தியும் ரிஷியும் ஆதியை அணைத்து தங்களுடைய வாழ்த்தை தெரிவித்தனர். மித்ராவும் வானதிக்கு தன்னுடைய வாழ்த்தை தெரிவித்தாள். அங்கு நடந்த எதுக்கும் அவள் எந்த உணர்வையும் காட்டாது அமைதியாகவே நின்று இருந்தாள். அவளுடைய உணர்வுகளை ஆதியும் கவனிக்க தவறவில்லை. அவள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் நிலையில் இருப்பதை புரிந்து கொண்டவன் அனைவரையும் தன்னுடைய இல்லத்திற்கு அழைத்து சென்றான்.
மீனாட்சி அம்மா மற்றும் கதிர், குடும்பத்தினரும் பாதி வழியிலேயே கிளம்பி விட்டனர். மீதி இருந்தவர்களை ஏற்றி கொண்டு அந்த பெரிய கார் பிரம்மாண்டமான வர்மா பேலஸ்க்குள் நுழைந்தது. மாளிகையின் அழகை கண்ட வானதியின் கண்கள் அங்கிருந்த அனைத்தையும் ரசனையுடன் அளவிட்டு கொண்டிருந்தது. முதன்முதலாக இப்படி ஒரு பெரிய அரண்மனை போன்ற வீட்டை பார்த்த மித்ராவும் ஆச்சரியத்துடன் பார்த்தாள். காரில் இருந்து இறங்கிய ஆதி வானதி இறங்குவதற்காக மறுபுறம் வந்து கதவை திறந்து அவளுடைய கையை பிடித்து அழைத்து கொண்டு வாசலில் நின்றான். ஷர்மிளாவும் மித்ராவும் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றனர். தன்னுடைய மனங்கவர்ந்தவளை பல தடைகள் தாண்டி கரம் பிடித்து இன்று அவன் வாழும் வீட்டிற்குள் அழைத்து செல்லும் இந்த நொடி அவன் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
ஆதி தன்னுடைய கையை பிடித்ததும் வானதிக்கு அவன் பிடியில் இருந்து விடுவித்து கொள்ள தான் எண்ணினாள் ஆனால் அனைவரின் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சியை கெடுக்க அவளுக்கு விருப்பம் இல்லை என்பதால் தனிமையில் அவனுடன் பேசும் சந்தர்ப்பத்திற்காக காத்திருக்க ஆரம்பித்தாள். தன்னுடைய வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு நகர்வதற்க்கு சான்றாக ஆதியின் வீட்டிற்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள். உள்ளே வந்தவர்களை இருக்கையில் அமர வைத்த ஷர்மிளா வானதியின் அருகில் அமர்ந்து, “ இன்னிக்கு எங்க எல்லார் முகத்திலும் இருக்க சந்தோஷத்துக்கு நீங்க தான் காரணம்..... என் அண்ணனோட வாழ்க்கையில மட்டும் இல்ல இந்த வீட்டுக்கே வெளிச்சமா வந்தவங்க நீங்க தான்.... உங்களுக்கு என் மேல எதாவது கோவமா அண்ணி.... நான் உங்கள அண்ணின்னு கூப்பிடலாமா “ என்று கண்ணில் ஆசையோடு வானதியின் கைகளை பிடித்துக் கொண்டு கேட்டவளின் கன்னத்தில் இன்னொரு கையை வைத்து, “ நீயும் எனக்கு மித்ரா மாதிரி ஒரு சிஸ்டர் தான்.... உனக்கு என்னை எப்படி கூப்பிடனும்ன்னு தோனுதோ அப்படியே கூப்பிடு.... அப்புறம் நான் ஏன் உன் மேல கோவப்படபோறேன் அப்படியெல்லாம் எதுவும் இல்லை “ என்றவளை பார்த்து முகத்தில் புன்னகையுடன் தலையசைத்தாள்.
ஷர்மீ, “ இல்ல நேத்துல இருந்து நீங்க என் கிட்ட பேசலையா அதான் உங்களுக்கு ஏன் மேல எதாவது கோவமோன்னு நினைச்சிட்டேன்....”.
வானதி, “ சாரி ஷர்மீ.... நான் வேற ஏதோ யோசனையில இருந்தேனா அதான்.... இனிமே அப்படி எதுவும் நடக்காது சரியா “.
ஷர்மீ, “ உங்க கிட்ட பேசினதுல நான் மறந்தே போய்ட்டேன்... நீங்க என் கூட வாங்க அண்ணி “ என்று கூறியப்படி அவளின் கையை பிடித்து அழைத்து சென்றாள். அவர்களை பின் தொடர்ந்து மித்ராவும் பின்னாலேயே சென்றாள். இதுவரை நடந்த அவர்களின் உரையாடலை கேட்டு கொண்டிருந்த ஆதி, ‘ கோவம் எல்லாம் நம்ம மேல தான் போலயே.... இவ கிட்ட தனியா சிக்னோம் அவ்வளவு தான்.... ஏற்கனவே கண்ணாலேயே எரிக்கற மாதிரி பாக்குறா ‘ என்று புலம்பி கொண்டிருந்தவன் அருகில் வந்த ஷக்தி, “ நீ எல்லாரையும் மண்டைய பிச்சிக்க வெச்சி தான் பாத்து இருக்கேன்.... இப்போ நீயே தனியா புலம்பறத பாக்கும் போது செம சிரிப்பா வருது ஆதி“ என்று வாயிற்றை பிடித்து சிரித்தவனை முறைத்தான் ஆதி.
ஷக்தி, “ ஜோக்ஸ் அபார்ட்.... எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு ஆதி... எங்க இப்படியே இருந்துடுவியோன்னு நான் பயந்துட்டேன்.... கூடிய சீக்கிரம் வானதி உன்னை புரிஞ்சிகிட்டு நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழனும் “ என்று கூறி ஆதியை அணைத்து கொண்டான் ஷக்தி. ஆதியும் பதிலுக்கு அவனை சிரிப்புடன் அணைத்து கொண்டான்.
வானதியை அழைத்து கொண்டு பூஜை அறைக்கு வந்த ஷர்மீ வானதியை விளக்கு ஏற்ற சொன்னாள். அவள் அன்புடன் கூறியதை தட்ட முடியாமல் வானதியும் விளக்கை ஏற்றி விட்டு நிமிர்ந்தவளிடம் பூஜை அறையின் வலது பக்க சுவற்றில் பெரிதாக மாட்டப்பட்டு இருந்த ஒரு படத்தை சுட்டிக்காட்டி, “ இவங்க தான் எங்களோட அம்மா அப்பா.... அதாவது உங்க மாமனார் மாமியார்.... நான் சின்ன குழந்தையா இருக்கும் போதே அம்மா இறந்துட்டாங்க.... எனக்கு எல்லாமே என் அப்பா தான் அவரும் மூணு வருஷத்துக்கு முன்னாடி இறந்துட்டார்.... இப்போ மட்டும் அவரு இருந்து இருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டு இருப்பார் “ என்று உணர்ச்சி வசப்பட்டு பேசிக் கொண்டிருந்தவளின் குரல் எதுவும் வானதியின் செவியில் விழவே இல்லை.
அந்த படத்தில் கம்பீரமாக சிரித்து கொண்டிருந்த கருணாகரன் மீதே இருந்தது. அவளுக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை தான் காண்பது கனவா இல்லை நனவா என்ற குழப்பத்துடன் பூஜை அறையில் இருந்து வெளியே வந்து கொண்டிருந்தவள் காதில், ‘ உன்னை என்னோட மருமகளா ஆக்கிக்கனும்ன்னு எனக்கு ஆசையா இருக்கு மா... ஆனா நீயும் பிடிக்கொடுக்கவே மாட்டேங்கற.... உன்னை மாதிரி ஒரு பெண்ண மருமகளா அடைய நான் கொடுத்து வெச்சி இருக்கணும்.... இந்த விஷயத்துல நீயும் என் மகன் மாதிரி தான் ‘ என்று அவர் அவளிடம் ஆசையாக கூறிய வார்த்தைகளே ரீங்காரம் இட்டு கொண்டிருந்தது
வானதி, ‘ அப்படினா நான் யாருன்னு அருள்க்கு தெரியுமா தெரியாத.... எனக்கு ஒரே குழப்பமா இருக்கே. இதை தெளிவுபடுத்தனும்ன்னா அவர் கிட்ட இதை பத்தி கேட்டே ஆகனும் ‘ யோசித்து கொண்டிருந்தவள் அருகில் வந்த மித்ரா, “ ஆரூ... நான் எவ்வளவு நேரமா கூப்பிட்டுட்டு இருக்கேன் அப்படி என்ன யோசனை... சரி நான் கிளம்புறேன் “ என்று அவள் கூறியதும், “ மித்ரா நீ எங்க கிளம்புற நீ எங்கையும் போக கூடாது.... உன்னை தனியா இருக்க என்னால அனுமதிக்க முடியாது.... நீ என் கூட தான் இருக்கணும் “.
மித்ரா, “ இல்ல வானதி.... அது சரியா வாராது. நான் அங்க நம்ம அபார்ட்மென்ட்ல இருக்கறது தான் நல்லது “ என்று அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தவளின் குரலில் இவர்கள் பக்கம் வந்த ஷக்தி, “ மித்ரா.... சிஸ்டர் சொல்றதும் சரி தானே. நீ அங்க தனியா இருந்து என்ன செய்ய போற “.
மித்ரா, “ இல்ல சார்.... நான் அங்க இருக்கறது தான் சரியா வரும்... “ என்று அவர்களிடம் என்ன சொல்லி சாமாளிப்பது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தாள். இதை கவனிக்காததை போல் அமர்ந்து இருந்தவனை கண்ட வானதி, ‘ இங்க என்ன நடந்துட்டு இருக்கு.... இவர் எனக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லாதது மாதிரி ப்போனா பார்த்துட்டு இருக்காரு ‘ என்று அவள் மனதிற்குள் திட்டியதை கேட்டதை போல் இருக்கையில் இருந்து எழுந்து அவர்கள் அருகில் வந்தவன், “ மித்ராவுக்கு விருப்பம் இல்லாதத எதுக்கு செய்ய சொல்றீங்க...” என்றவன் மித்ராவிடம், “ மித்ரா இன்னும் ஒரு மாசத்துல உனக்கும் கதிருக்கும் கல்யாணம்... நான் அவங்க வீட்டுல பேசிட்டேன். அப்புறம் சுமதின்னு ஒரு அம்மா இனிமே உனக்கு துணையா இருப்பாங்க.... அவங்க ரொம்ப வருஷமா இங்க வேலை பாக்குறவங்க தான் சரியா இப்போ நீ கிளம்பு “ என்று அவன் அழுத்தமான குரலை கேட்ட மித்ராவிற்கு இதை நீ கேட்டே ஆக வேண்டும் என்ற கட்டளையிடுவதை போல் தோன்றியதால் அவளும் சரியென்று அவனிடம் ஆமொதித்தவள்.
மித்ரா, “ சார்.... அது.... நான் சொல்றேன்ன்னு தப்பா நினைச்சிக்காதீங்க..... எனக்கு எல்லாமே வானதி தான்.... அவளை கொஞ்சம் பத்திரமா பாத்துக்கொங்க “ என்று சற்று தயக்கத்துடன் கூறியவளை பார்த்த ஆதி , “ என்னோட பொண்டாட்டியா பாத்துக்க எனக்கு தெரியும்.... அதுவுமில்லாம அவ என்னோட சாம்ராஜ்யத்தோட மகாராணி “ என்று அவன் கூறியதை கேட்ட மித்ரா மகிழ்ச்சியுடனே அனைவரிடமும் விடைபெற்று கொண்டு வானதியிடம் பிறகு வந்து சந்திப்பதாக கூறி விட்டு சென்று விட்டாள்.
ஷக்தியும் ஷர்மியும் உள்ளே சென்றதும் இன்னும் வாசலையே பார்த்து கொண்டிருந்த வானதியின் அருகில் சென்று அவளின் தோள் மேல் கை வைத்த ஆதியின் கையை தட்டி விட்ட வானதி , “ உங்க மனசுல நீங்க என்ன நினைச்சிட்டு இருக்கீங்க.... எல்லாரோட வாழக்கையையும் நீங்க தான் முடிவு எடுப்பீங்களா.... யார கேட்டு மித்ரா கிட்ட இப்படி பேசி அவள அனுப்பி வெச்சீங்க.... அதையும் ஒர்டெர் பண்ற மாதிரி பேசிறீங்க...... எனக்கு தெரியும் அவ உங்க கிட்ட வேலை பாக்குறவ இந்த வீட்ல இருந்தா உங்களுக்கு கௌவுரவ குறைச்சல் அதான.... “ என்று கோவமாக கத்திக் கொண்டிருந்தவள் அவன் அவளையே இமைக்காமல் பார்த்து சிரிப்பதை கண்டு, “ நான் கோவமா உங்கள திட்டிட்டு இருக்கேன்.... நீங்க சிரிச்சிட்டே இருக்கீங்க “ என்று எரிச்சலாக கேட்டாள்.
ஆதி, “ இப்போ நான் மித்ராக்கு கல்யாணம் ஏற்பாடு பன்னது தப்புன்னு சொல்றியா இல்ல.... உன் கிட்ட கேட்காம முடிவு பன்னது தப்புன்னு சொல்றியா “ என்று கைகளை கட்டிக் கொண்டு அவளிடம் கேட்டான். அதற்கு அவள் என்ன கூறுவது என்று தெரியாமல் அமைதியாக இருப்பதை கண்ட ஆதி ஒரு பெருமூச்சுடன், “ ஆருந்யா... இங்க என்ன பாரு “ என்று அவளின் முகத்தை தன்னுடைய முகத்தை நோக்கி நிமிர்த்தியவன், “ மித்ராக்கு இங்க இருக்கறதுக்கு அன்கம்போர்டபிள்ல இருக்கும்ன்னு எனக்கு முன்னாடியே தெரியும் அதை உன்கிட்ட எப்படி சொல்றதுன்னு தெரியாம தான் அவ யோசிச்சிட்டு இருந்தா.... அதுவும் இல்லாமா மித்ராவும் கதிரும் ரொம்ப நாளா லவ் பன்றாங்க.... நம்ம கல்யாணத்துக்காக தான் அவங்க காத்துட்டு இருந்தாங்க.... அதான் அதை தள்ளி போட வேண்டாம்ன்னு பேசி முடிச்சிட்டேன்.... இது உனக்கே புரியும் ஆனா என் மேல உனக்கு இருக்க கோவம் வேற எதையும் யோசிக்க விடாமா பன்னுது... இப்போ போய் நீ ரெஸ்ட் எடு. இது உன்னோட வீடு நீ உனக்கு பிடிச்ச மாதிரி இருக்கலாம் சரியா..... அப்புறம் இன்னொரு விஷயம் நான் யாருகிட்டயும் இதுவரைக்கும் இவ்வளவு பொறுமையா பேசினது இல்ல அதுக்கான அவசியமும் வந்தது இல்ல இதுல நீ மட்டும் தான் விதி விலக்கு “ என்றவன் அவளிடம் மென்மையாக கூறியவன் வேகமாக படியேறி சென்று விட்டான். அவன் பேசியதை பற்றி யோசித்து கொண்டிருந்தவள் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.
விஸ்வநாதன் இல்லம்
சாரா அவளின் அறையில் வலது கையில் கூர்மையான கத்தியை கொண்டு தன்னுடைய இடது கையை அழுதுகொண்டே வெட்டி கொள்ள கிட்டே எடுத்து செல்லும் போது எதர்ச்சையாக அந்த பக்கம் வந்த சந்திரிகா அவள் செய்ய போகும் காரியத்தை கண்டு பதட்டத்துடன் வந்து அவள் கையில் இருக்கும் கத்தியை தட்டி விட்டார். அந்த கத்தியும் பளிங்கு தரையில் நங்கென்ற சத்தத்துடன் கீழே விழுந்தது. வெளியே சென்று இருந்த சந்திரன் சாராவின் அறையில் கேட்ட சத்தத்தில் உள்ளே வந்தார். சாரா செய்ய இருந்த செயலில் கோவம் கொண்டு அவளை அரைய போகும் போது சந்திரன் வந்து பிடித்து என்ன நடந்தது என்று கேட்டார்.
சந்திரிகா, “ என்னை எதுக்கு ணா தடுத்தீங்க.... அவ என்ன காரியம் செய்ய இருந்தா தெரியுமா.... இவ இப்படி ஒரு முடிவு எடுக்கவா நான் இவ்வளவு பாசம் கொட்டி வளர்த்தேன்.... இதுவரைக்கும் இவ கேக்கரத்துக்கு முன்னாடியே எல்லாத்தையும் கொண்டு வந்து குடுத்தேன் “ என்று அவர் சாராவை பார்த்து கோவமாக பேசினார்.
சாரா, “ நான் கேட்கரதுக்கு முன்னாடியே எல்லாத்தையும் குடுத்த நீங்க.... நான் ஆதி வேணும்ன்னு ஆசைப்பட்டேன் ஆனா அது நடக்காமா போய்டுச்சே அந்த வானதிகிட்ட நான் தோத்து போயிட்டேன்.... அவ யாரு ஒரு சாதாரண ஸ்கூல் டீச்சர்.... என்கிட்ட இல்லாதது எது அவகிட்ட இருக்கு... என்கிட்ட அழகு, பணம், படிப்பு, அந்தஸ்து இப்படியெல்லாத்துலையும் நான் ஒரு படி மேல தான் இருக்கேன்.... அப்படி இருந்தும் ஆதிக்கு ஏன் என்னை பிடிக்கல.... நான் ஆரம்பத்துல அவரோட ஸ்டேட்டஸ் பாத்து தான் கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு விரும்பனேன். இப்போ உண்மையிலே அவர லவ் பன்றேன்... அவர் எனக்கு இல்லையென்றதே என்னால தாங்கிக்க முடியல “ என்று ஆவேசமாக கத்தியவளை பார்த்த மத்த இருவருக்கும் வேதனையாகவும் அதே சமயம் கோவமாகவும் இருந்தது.
சந்திரிகா, “ அப்படி அவன் மேல உனக்கு என்ன காதல்... அவன் நம்மள ஒரு பொருட்டா கூட மதிக்கறது இல்ல “.
சாரா, “ அவரோட அந்த திமிரும் கர்வமும் தான் அவர்கிட்ட எனக்கு பிடிச்சி இருக்கு “ என்று அழுதபடியே கூறினாள்.
சாராவை அங்கிருந்த கட்டிலில் அமர வைத்து பக்கத்தில் அமர்ந்த சந்திரன், “ நான் வாழுறதே உங்க சந்தோஷத்துக்காக தான் அப்படி இருக்கும் போது நீ இப்படி ஒரு முடிவு எடுக்கலாம.... நீ என்னைக்கும் சிரிச்சிட்டே இருக்கணும் அதுக்கு யாராவது தடையா வந்தா அவங்கள நான் அழிக்காமா விட மாட்டேன்.... இப்ப என்ன அந்த ஆதிய நீ கல்யாணம் பன்னிக்கனும் அவ்வளவு தான.... இனி நீ கவலப்படாத என்ன செஞ்சாவது நான் நீ ஆசைப்பட்டத நிறைவேத்துறேன் “ என்று அவர் கூறியதும் சற்று ஆசுவாசம் அடைந்தவளை சமாதானம் செய்து தூங்க வைத்து விட்டு வெளியே வந்த இருவருக்கும் என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சந்திரிகா, “ பாத்தியா அண்ணா.... அப்ப எனக்கு வந்த நிலைமை இப்ப என்னோட பெண்ணுக்கு வந்து இருக்கு... எல்லாத்துக்கும் அந்த வான்மதியோட பொண்ணு தான் காரணம்.... அவள கொல்ற எல்லா முயற்சியும் தோல்வியிலேயே முடிது “.
சந்திரன், “ அந்த ஆதி தான் அவகிட்ட கூட நெருங்க முடியாத அளவுக்கு பக்கவா எல்லா ப்ளானும் பண்ணி வெச்சி இருக்கான். அதுக்கு முன்னாடி நீ என்கிட்ட எதாவது ஒரு விஷயத்தை மறைக்கீறியா.... அப்படி எதாவது இருந்தா சொல்லு. சாராவோட விஷயம் நடக்கறதுக்கு முன்னாடியே வானதியா கொல்ல முடிவு எடுக்க காரணம் என்ன “ என்று அவர் கேட்டதும் இதற்கு மேல் உண்மையை மறைத்து பயன் இல்லை என்பதை புரிந்து கொண்ட சந்திரிகா, “ அது வந்து....என் மாமனார் இருக்கார்ல அவர் இந்த சொத்தை எல்லாத்தையும் அவரோட முதல் வாரிசான அந்த வானதி பெயர்ல தான் எழுதி வெச்சி இருக்காரு..... அதை அனுபவிக்கற உரிமை மட்டும் தான் எங்களுக்கு இருக்கு அதுவும் இல்லாமா அந்த உயிலொட ஒரிஜினல் பத்திரம் எங்க இருக்குன்னே தெரியல. எனக்கு என்ன பன்றதுனே தெரியலை.... அதனால தான் அவளை கொன்னுட்டா பிரச்சனை தீர்ந்திடும்ன்னு நினைச்சேன்.... இதை உங்ககிட்ட அப்பவே சொல்லனும்ன்னு தான் நினைச்சேன் ஆனா உங்களுக்கு திரும்பவும் தொந்தரவு குடுக்க மனசு வரல அதனால தான் சொல்லல அண்ணா “.
சந்திரன், “ என்னமா நீ இதை என்கிட்ட சொல்லி இருந்தா அப்பவே இந்த பிரச்சனைய முடிச்சிருக்கலாம்.... இப்ப பாத்தியா. நான் தான் தப்பு பன்னிட்டேன் அவங்கள தடையமே இல்லாம அழிச்சிட்டு இங்க இருந்து போய் இருக்கணும்.... இப்ப நாம கொஞ்சம் பொறுமையா தான் இருக்கணும்.... அந்த ஆதி ஒன்னும் சாதாரண ஆள் கிடையாது. அவன் அசந்த நேரமா பாத்து தான் நாம காரியத்த முடிக்கனும்..... சரி விடு பாத்துக்கலாம். நீ போய் சாராவோட இரு “ என்று அவரை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தவர் முகம் பெரும் யோசனையில் மூழ்கியது.
வர்மா பேலஸ்
இரவு உணவை சாப்பிட்டு கொண்டிருந்த அனைவரின் மனதிலும் என்றும் இல்லாத நிம்மதியோடு என்றும் இல்லாத அளவுக்கு சற்று அதிகமாகவே உண்டனர் வானதியை தவிர. புது இடம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும் அவள் மனதில் காலை பூஜை அறையில் கண்ட படத்திலேயே எண்ணம் இருந்தது. ஆதி அவளின் முகம் ஏதோ ஒரு யோசனையில் இருப்பதை கவனித்து கொண்டு தான் இருந்தான். ஆனால் எதுவும் கூறாமல் எழுந்து அறைக்கு சென்று விட்டான். அனைவரும் உண்டு முடித்தவுடன் ஷர்மீ வானதிக்கு அலங்காரம் செய்து ஆதியின் அறை முன்னால் அழைத்து சென்றவள், “ அண்ணி.... இது தான் அண்ணணோட ரூம் போங்க... உங்க திங்ஸ் எல்லாத்தையும் ஏற்கனவே ஷிப்ட் பன்னிட்டோம் “ என்றவள் அவளிடம் விடைபெற்று கொண்டு கீழே சென்று விட்டாள்.
காலையில் இருந்தே ஆதியின் அறைக்குள் செல்ல தயங்கி கொண்டே கீழே இருந்த அறையிலேயே தாங்கி கொண்டாள். அவனை அந்த அறையில் தனியாக சந்திக்க சிறிது தயக்கமாகவே இருந்தது. அந்த வீட்டை முழுதாக சுற்றி பார்க்கவே அவளுக்கு அந்த நாள் முழுவதும் சரியாக இருந்தது. உண்மையில் அந்த வீடு முழுவதும் அவ்வளவு அழகாக எல்லா ரசனைகளையும் கொட்டி கட்டியதை போல் இருந்தது. இப்படி ஒரு வீட்டை உருவாக்கியதற்காக அவள் மனதார ஆதியை பாராட்ட தான் செய்தாள். அந்த வீட்டில் அவள் பார்க்காத ஒரே இடம் ஆதியின் அறை மட்டும் தான். இதுவரை அவன் அறைக்குள் முழுதாக யாரையும் அவன் நுழைய விட்டதில்லை என்று ஷர்மிளா சொல்லியதை கேட்டவள் உள்ளே எவ்வாறு செல்வது என்று தெரியாமல் அங்கேயே நின்றவள். சிறிது நேரம் கழித்து ஒரு ஆழ்ந்த மூச்சை வெளிப்படுத்தி விட்டு ஆதியின் அறைக்குள் முதன்முதலாக நுழைந்தாள்.
சாப்பிட்டு விட்டு வேகமாக அறைக்குள் வந்த ஆதி வானதியின் வருகைக்காக ஆவலாக காத்திருந்தான். நேரம் செல்ல அவள் ஏன் இன்னும் வரவில்லை என்று டென்ஷனோடு இருந்தவன் அங்கிருந்த இருக்கையில் அமரும் போது கதவை திறந்து கொண்டு காலில் மெட்டியோடு சேர்ந்த கொலுசு சத்தத்துடன் ஒரு தேவதையாக உள்ளே நுழைந்தவளின் மீது இருந்து அவனால் பார்வையை எடுக்கவே முடியவில்லை. இதுவரை அவள் மீது கண்ணியமாக மட்டுமே பார்த்து கொண்டிருந்தவனின் பார்வை இன்று முதன்முறையாக ஆசையுடன் அவளை தழுவியது. அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்து அவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை மனதில் எண்ணியபடியே உள்ளே வந்தவள் அப்போது தான் அங்கு ஆதி நின்று கொண்டு தன்னையே பார்ப்பதை கண்டாள். அவன் அருகில் சென்று நின்றும் கூட அவனிடம் எந்த அசைவும் இல்லை. கண்களை கூட இமைக்காமல் வானதியை தான் பார்த்துக் கொண்டிருந்தான்.
வானதி, “ நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசனும் “ என்றவளின் குரலில் தன்னுனர்வு அடைந்தவன் அவளிடம், “ எனக்கு ஒரு மெயில் செக் பண்ண வேண்டிய வேலை இருக்கு.... நீ ரூம்குள்ள போய் ரெஸ்ட் எடு நான் வந்துடுறேன் “ என்றவன் இடது புறம் இருந்த அலுவலக அறைக்குள் சென்று விட்டான். அவன் அந்த அறைக்குள் சென்ற பிறகு தான் அவள் அந்த முழு இடத்தையும் சுற்றி பார்த்தாள். அந்த வரவேற்பு அறையின் இடப்பக்கம் ஒரு அறை வலப்பக்கம் ஒரு அறை இருந்தது ஆனால் அது பூட்டப்பட்டு இருந்தது. அங்கிருந்த சுவற்றில் ஆதியின் ஆளுயர புகைபடம் பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது. அதில் இருந்த அவனுடைய கம்பீரம் மற்றவர்களை அவனிடம் மறுப்பேச்சு பேச முடியாத அளவுக்கு இருந்தது. பிறகு அவளுக்கு நேராக ஒரு அறை இருந்தது அது தான் படுக்கையறை ஆக இருக்கும் என்று எண்ணியப்படி அதை திறந்து உள்ளே சென்றாள். அந்த அறையில் இருந்து அனைத்தும் அவ்வளவு அழகாக இருந்தது. தன்னுடைய கண்களால் அனைத்தையும் சுற்றி பார்த்து கொண்டிருந்தவள் இடது புற சுவற்றில் இருந்ததை கண்டு ஆச்சர்யத்தில் அவள் கண்கள் பெரிதாக விரிந்தது. மூன்று ஆண்டுகள் முன்பு நீலகிரி காட்டில் ஒரு பெரிய நீர் ஓடையில் ஒரமாக இருந்த பாறையில் வானதி முகம் முழுவதும் புன்னகையுடன் அமர்ந்து இருக்க அவள் பின்னால் அருவி ஆர்ப்பரித்து கொட்டுவதை போல் மிகவும் அழகாக அந்த சுவர் முழுவதும் ஆக்கிரமித்து பெரிதாக மாட்டப்பட்டு இருந்தது அந்த ஓவியம்.
அவள் கண்களை அவளாலே நம்ப முடியவில்லை ஏன்னெனில் அதில் அவள் அவ்வளவு அழகாக இருந்தாள். அதன் அருகில் சென்று அவள் வருடி கொண்டிருந்த போது தன்னுடைய வேலையை முடித்து கொண்டு ஆதி அந்த அறைக்குள் வந்தான். வந்தவனின் கால்கள் அவனை அறியாமலே வானதியின் முன்னால் நின்றது. தனக்கு அருகில் தோன்றிய காலடி சத்தத்தில் திரும்பி பார்த்தவளின் முன்னால் ஆதி நிற்ப்பதை கண்டாள் ஆனால் அவன் பார்வை முழுவதும் அந்த ஓவியத்தின் மீது தான் இருந்தது.
வானதி, “ இந்த படத்தை வரைஞ்சது யாரு “ என்று கேட்டவளின் குரலில் அவளை பார்த்து, “ உன்னோட நிழல யாராவது தொட்டக்கூட என்னால பொறுத்துக்க முடியாது அப்படி இருக்கும் போது உன்னோட ஓவியத்தை வேற யாரையாவது வரைய விட்டுடுவேனா.... உண்மைய சொல்லனும்ன்னா இந்த படத்தை முடிக்கும் போது தான் நீ என் மனசுல எந்த அளவுக்கு நிறைஞ்சி இருக்கே அப்படின்றது எனக்கு தெறிஞ்சிது.... இப்படி நான் ரசிச்சி வரைஞ்ச நிழலுக்கு முன்னாடி நிஜமா நீ நிக்கற இந்த நொடிக்காக எத்தனை நாள் காத்திட்டு இருந்தேன் தெரியுமா.... இன்னிக்கு அது நடந்தும் கூட அந்த சந்தோஷத்தை முழுமையா அனுபவிக்க முடியலை “.
ஆரம்பத்தில் அவன் கூறுவதை அமைதியாக கேட்டு கொண்டிருந்தவள் கடைசியாக அவன் சொல்லியதை கேட்டவுடன், “ அதுக்கு காராணம் யாரு.... நீங்க தான. எல்லா தப்பையும் பண்ணிட்டு இப்போ அப்பாவியா ஏன் கிட்ட நடிக்கிறீங்களா “ என்று அவள் கேட்டவுடன் இதுவரை இருந்த அமைதியான நிலை மாறி அவனுக்குள் கோவம் ஏற ஆரம்பித்தது.
ஆதி, “ உனக்கு எவ்வளவு தைரியம் இருந்த நான் நடிக்கறேன்ன்னு சொல்லுவ.... என்னை பார்த்த நடிக்கறவன் மாதிரியா இருக்கு... உன்ன தவிர வேற யாராவது இதை சொல்லி இருந்தா அவன் உயிரோட இங்கயிருந்து போய் இருக்க மாட்டான். நீயா இருக்கறதுனால தான் “ என்றவன் முன்னால் வந்து நின்றவள் , “ நானா இருக்கறதுனால நீங்க ஒன்னும் பொறுமையா இருக்க தேவையில்லை.... இப்போ உங்களுக்கு என்னை அடிக்கனும்ன்னு தோணுச்சுன்னா அடிங்க “ என்றவளை உண்மையிலேயே அடிக்க கையை ஒங்கினான். அவன் கையை ஓங்கியதில் கண்ணை மூடிக் கொண்டவள் இன்னும் தன் மீது அவனுடைய கைப்படாததை உணர்ந்து கண்ணை திறந்தவள் முன்னால் கைகளை கட்டிக் கொண்டு அவளையே ஆழுந்து பார்த்து கொண்டிருந்தான் ஆதி.
ஆதி, “ பயந்துட்டியா.... உன் மேல சின்ன துரும்பு பட்டக்கூட என்னால தாங்கிக்க முடியாது அப்படி இருக்கும் போது நானே உன்னை அடிப்பேனா. உன்னை கஷ்டப்படுத்தினா அது உன்னவிட எனக்கு தான் அதிகமா வலிக்கும் “.
வானதி, “ இப்படி சொல்ற நீங்க தான் என்னை கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி இருக்கீங்க.... அது எனக்கு எவ்வளவு வலிய குடுக்கும்ன்னு உங்களுக்கு ஏன் புரியல.... அந்த இடத்துல தான் நீங்க உண்மையிலேயே என்னை காதலிக்கறீங்களான்னு எனக்கு சந்தேகம் வந்துச்சு... “.
ஆதி, “ நான் உன்னை எந்த அளவுக்கு காதலிக்கறேன் இப்போ சொன்னா புரிஞ்சிக்க கூடிய நிலமையில நீ இல்லை.... நான் உன் மேல எந்த அளவுக்கு ஆசை வெச்சி இருக்கேன்ன்னு காமிக்க எனக்கு ஒரு நிமிஷம் ஆகாது.... என்னோட ஆருந்யாவால இப்படி என்னோட மனசு நோகுற அளவுக்கு பேச முடியுமா.....சரி என்னை நீ கேள்வி கேக்குறியே.... நீ என்னை காதலிச்ச தான” என்று அவன் கேட்டதும் வானதியால் அதற்கு பதில் கூற முடியாமல் வேறுபுறம் திரும்பி கொண்டாள்.
அவள் முகத்தை பிடித்து தன்னை நோக்கி திருப்பியவன் பிடிவாதமாக , “ எனக்கு இப்ப பதில் வேனும் சொல்லு... “ என்றவனின் கையை தட்டி விட்டவள், “ ஆமா நான் காதலிக்கறேன் ஆனா உங்கள இல்லை நான் காதலிச்ச அருள் நீங்க இல்ல.... அவருக்கு என்னை கஷ்டப்படுத்த தெரியாது “
அவள் தன்னை காதலிப்பதை கூறியதும் அவனுக்கு அப்படியே வானத்தில் மிதப்பதை போல் இருந்தது. நெருப்பாய் சுட்டவளே நீராய் குளிர வைத்தாள்.... இந்த விந்தை காதலில் மட்டுமே சாத்தியம். இதற்கு மேல் இவளை பேச விட்டால் இப்போது இருக்கும் சந்தோஷமான மனநிலையை அனுபவிக்க முடியாது என்பது அவனுக்கு தெளிவாக புரிந்தது.
ஆதி, “ எப்படியோ நீ என்னை காதலிக்கறேன் சொன்னது அதுவும் முதலிரவு அன்னைக்கு சொன்னது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு தெரியுமா செல்லம்... “ என்று கண்சிமிட்டி கூறியவனை பார்த்தவளின் மனதில், ‘ நான் என்ன சொன்னாலும் அவனுக்கு சாதகமா எடுத்துக்கறானே..... சும்மா இருந்தவன் கிட்ட நானே வாய குடுத்து மாட்டிக்கிட்டேனே.... இன்னைக்கு என்ன நாளுன்றதையே மறந்துட்டியே வானதி... எப்படியாவது தப்பிச்சிடு ‘ என நினைத்து கொண்டு நிமிர்ந்த போது அவளுக்கு மிக நெருக்கமாக அவன் நிர்ப்பதை கண்டு அதிர்ந்து பின்னாடி நகரும் போது புடவை தடுக்கி கீழே விழ இருந்தவளை இடுப்பில் கையை குடுத்து தூக்கி நிறுத்தினான் ஆதி.
அவள் மனதில் ஓடுவதை அவள் முகத்தில் வந்து போகும் பாவனைகளை வைத்தே கண்டு கொண்டவன் அவளிடம், “ எதுக்கு இவ்வளவு பதட்டம்... கல்யாணம் தான் உன் விருப்பம் இல்லாம நடந்துடுச்சு மத்தது எல்லாம் உன் விருப்பத்தோடு தான் நடக்கும்.... கவலப்படாத அதுக்காக என்னால உன்னை தொடாமா எல்லாம் இருக்க முடியாது சரியா.... இப்போ போய் தூங்கு மீதிய நாளைக்கு பேசலாம் “ என்று அவளின் உச்சந்தலையொடு முட்டி கூறியவனிடம் விட்டால் போதும் என்று ஓடியவள் கட்டிலின் ஒரு பக்கத்தில் சென்று படுத்து கொண்டாள்.
தன்னுடைய கை அவள் மீது பட்டதும் அவள் முகம் சிவப்பதை மறைப்பதற்க்கு அவனிடமிருந்து விட்டால் போதும் என்று ஓடியவளை நினைக்கும் போது அவனுக்கு சிரிப்பாக வந்தது. கட்டிலின் இன்னொரு பக்கம் சென்று படுத்தவனின் மனது பல நாட்கள் கழித்து நிம்மதியாக இருந்தது. பல பேர் தன்னை சுற்றி இருந்தும் தனிமையில் வாழ்ந்தவனின் வாழ்க்கை முழுவதும் துணையாக ஒருத்தி வந்து விட்டதால் ஏற்பட்ட நிம்மதி அது. அவள் தன்னருகில் இருக்கிறாள் என்ற மகிழ்ச்சியே அவனுடைய கண்களை உறக்கம் சீக்கிரமாக தழுவியது.
அவன் படுத்ததும் உறங்கியதை கண்டவளுக்கு எரிச்சலாக வந்தது. அவள் மனதில், ‘ என்னென்னமோ கேக்கனும்ன்னு வந்தேன் ஆனா எதையும் கேக்க முடியாம போயிடுச்சு.... நாளைக்கு காலையில இதை பத்தி கேட்டே ஆகனும்.... ஆமா அவ்வளவு கோவம் மனசுகுள்ள இருந்தும் அவர் தொட்டதும் ஏன் என்னால எதுவும் பேச முடியல ‘ என்ற யோசனையிலேயே இருந்தவளுக்கு புது இடம் என்பதாலும் தாமதமாகவே உறக்கம் வந்தது.
இருவருக்குள்ளும் இருக்கும் மெல்லிய திரை விலகி காதல் இவர்கள் வாழ்வில் மீண்டும் மலருமா.... என்பதை நாமும் பொறுத்திருந்து காண்போம்....
கோபம் கொள்ளும் நேரம் வானம்
எல்லாம் மேகம் காணாமலே
போகும் ஒரே நிலா
கோபம் தீரும் நேரம் மேகம் இல்லா
வானம் பௌர்ணமியாய் தோன்றும்
அதே நிலா இனி எதிரிகள்
என்றே எவருமில்லை பூக்களை
விரும்பா வேர்களில்லை நதியை
வீழ்த்தும் நாணல் இல்லையே இது
நீரின் தோளில் கைபோடும் ஒரு
சின்ன தீயின் கதையாகும்
திரைகள் இனிமேல்
தேவையில்லையே.....
நிஜத்தை தேடும்....
உங்களின் கருத்துக்களை “ என்
நிஜமே நீ தானடி “ கதையின்
கருத்துதிரியில் மறக்காமல்
பகிர்ந்து கொள்ளுங்கள்....