Vimala subramani
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 7
அந்த அழகான இரவை என்றுமே அவர்களால் மறக்கவே முடியாது. அன்றைக்கு மட்டும் சந்திரன் தன்னுடைய வெளிச்சத்தை அந்த காடு முழுக்க பரவ செய்து அந்த அழகிய காட்டை இன்னும் அழகாக்கியது போல் தோன்றியது. ஒருவருக்கு தெரியாமல் மற்றவர் மனதில் இருவருமே தன்னுடைய தடத்தை பதித்து விட்டதை இன்னும் அவர்களுக்கு தெரியவில்லை ஆனால் சுற்றி இருந்த இயற்கைக்கு அது நன்றாகவே தெரிந்தது போல ஈரக்காற்றாக மாறி இருவரையும் தழுவி சென்று குளிரை பரப்பியது. அந்த காட்டின் குளிர் வானதிக்கு மிகவும் பழகிய ஒன்று என்பதால் அவளுக்கு பெரிதாக எந்த பாதிப்பும் இல்லை ஆனால் ஆதிக்கு இது மிகவும் புதிது. ஆதலால் அவனால் வெகு நேரம் தாக்கு பிடிக்க முடியாமல் அவன் உடல் குளிரில் நடுங்க தொடங்கியது. அவனுடைய நடுக்கத்தை கண்ட வானதி இரவு நேரத்தில் அதுவும் இந்த காட்டில் இது போல் ஒரு சூழ்நிலை ஏற்படும் என்பது தெரிந்ததால் தான் வரும் வழியில் இருந்த சில விறகு குச்சிகளை அவள் சேகரித்து கொண்டு வந்தாள். அது இப்போது நல்லதாக போய் விட்டது என்று எண்ணியப்படி அவள் அமர்ந்து இருந்த இடத்தில் இருந்து எழுந்து தான் கொண்டு வந்த விறகுகளையும் கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த இலைகள் மற்றும் குச்சிகள் என அனைத்தையும் எடுத்து அதில் சிலதை ஒன்றாக வைத்து கொண்டிருந்தாள். அவள் செய்வதை பார்த்தவன் ஒன்றும் புரியாமல் எழுந்து அவள் அருகில் அமர்ந்தான்.
ஆதி, “ என்ன பண்ணிட்டு இருக்க…. நீ வரும் போதே இந்த குச்சிய எடுத்துட்டு வந்தல அப்பவே கேக்க நினைச்சேன் “ என்று தனக்கு எதிரில் அமர்ந்து விறகுகளை அடுக்கி கொண்டு இருந்தவளை பார்த்து கேட்டான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவள், “ இராத்திரி நேரத்தில இங்க ரொம்ப குளிரும்ன்னு எனக்கு தெரியும்….எனக்கு இந்த கிளைமேட் பழக்கப்பட்டது. ஆனால் உங்களுக்கு புதுசுன்னு எனக்கு தெரியும்…. எப்படியும் இங்க தங்கற மாதிரி ஆயிடுச்சு….அதான் தீமூட்றத்துக்கு தேவப்படும்ன்னு எடுத்துட்டு வந்தேன். இப்போ அதுக்கு தான் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கேன் “ என்று கூறியவளை பார்த்து கொண்டிருந்தபோது மனதில் ஏதோ ஒன்று தோன்றியது. தான் கூறாமலே தனக்காக யோசித்து செய்து கொண்டிருந்தவளை பார்த்த போது அவனுடைய அன்னையின் நினைவு வந்தது.
வானதி, “ சார் மேட்ச் பாக்ஸ் வச்சிருக்கீங்கலா “ என்று கேட்டவளை முறைத்தவன், “ என்ன பார்த்த எப்படி இருக்கு எனக்கு எந்த கேட்டப்பழக்கமும் கிடையாது “ என்று கோவப்பட்டவனை பார்த்து கையெடுத்து கும்பிட்டவள், “ ஐயோ சாமி தெரியாமல் கேட்டுட்டேன் என்னை விட்ருங்க…நெருப்பு மூட்றதுக்கு மேட்ச் பாக்ஸ் தேவப்ப்படும் ஒரு வேலை உங்ககிட்ட இருக்குமோன்னு கேட்டேன் “ என்று பாவமாக கூறியவளை பார்த்தவனுக்கு சிரிப்பு தான் வந்தது.
அதே சிரிப்புடன், “ விறகு எடுத்துட்டு வந்தா பத்தாது அதுக்கு தீமூட்றதுக்கு மேட்ச் பாக்ஸ் தேவப்ப்படும்ன்னு உனக்கு தெரியாத …இப்போ என்ன பண்ணூவ” என்று கேட்டவனை பார்த்தவள் ஒன்றும் கூறாமல் அங்கு கீழே கிடந்த இரு கற்களை எடுத்து ஒன்றோடு ஒன்று வேகமாக சிறிது நேரம் தேய்த்தாள். அதன் பலனாக அந்த காய்ந்த சறுகுகள்குள் நெருப்பு பற்ற ஆரம்பித்தது. அதை கண்டவள் மகிழ்ச்சியுடன் அவனை பார்த்து சிரித்தாள். முதலில் அவள் செய்வதை வித்தியாசமாக பார்த்து கொண்டிருந்தவன் திடீரென்று தீ பற்றவும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுவும் அவள் சிரிப்ப்பதை கண்டவன் மனதில் இந்த இருள் சூழ்ந்த இந்த காட்டிற்குள் பிரகாசமாக அவள் முகம் அந்த நெருப்பிற்க்கு நடுவில் அவ்வளவு அழகாக தெரிந்தது. அவளின் முகத்தை இப்போது தான் அவன் தெளிவாக காண்கிறான். அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய மனதில் தோன்றிய வரிகள்...
ஒளியிலே தெரிவது தேவதையா
உயிரிலே கலந்தது நீயில்லையா
இது நேசமா நெசம் இல்லையா
உன் நெனவுக்கு தெரியலையா
கனவிலே நடக்குதா கண்களும்
காண்கிறதா காண்கிறதா....
அவளுடைய கண்கள் இரண்டும் ஒரு சுழலைப் போல் அவனை உள்ளுக்குள் இழுத்துக் கொண்டு இருந்த நேரம், “ சார் பாத்திங்களா நெருப்பு உண்டாக்க மேட்ச் பாக்ஸ் தேவையில்ல கொஞ்சம் நிதானமும் பொறுமையும் கொஞ்சம் மூலையும் இருந்தா போதும்... இப்போ பாத்திங்களா...” என்று அவனை பார்த்து சிரித்தாள். அவளுடைய குரலில் நிகழ்காலத்துக்கு வந்தவனுக்கு மீண்டும் அவள் கண்களை சந்திக்க முடியவில்லை முகத்தை வேறுபுறம் திருப்பியவன், “ நீ புத்திசாலி தான் நான் ஒதுக்கறேன் “ என்று அமைதியாக ஒப்புக்கொண்டான். இருவரும் அமைதியாக அந்த நெருப்பில் குளிர் காய்ந்தனர். சிறிது நேரத்திற்கு பிறகு வானதிக்கு தூக்கம் கண்களை சுழற்ற ஆரம்பித்தது. அவள் அந்த மண்டபத்தில் இருந்த தூணில் சாய்ந்து தூங்க ஆரம்பித்தாள். ஆதி தூங்காமல் தங்களை சுற்றி எதாவது மிருகங்கள் வருகிறதா என்று பார்த்து கொண்டு அமர்ந்திருந்தான். நேரங்கள் செல்ல செல்ல தூக்கம் அவனையும் தன்னுள் இழுத்தது . அவனும் மற்றுமொரு தூணில் சாய்ந்து உறங்க ஆரம்பித்தான். இருவரின் மனதிலும் காதல் என்னும் தீ பற்ற தொடங்கியதற்கு சாட்சியாக வானதி எரிய வைத்த நெருப்பு அமைதியாக எரிந்து கொண்டிருந்தது. அதை அவர்கள் உணர்வது எப்போது என்று காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
காலை நேரம் எவ்வளவு விரைவில் இரவு இந்த காட்டை சூழ்ந்ததோ அவ்வளவு வேகமாக சூரியன் இந்த காட்டிற்குள் தன் கதிர்களை பரப்ப ஆரம்பித்தான். இதுவரை சில நேரம் வண்டியின் சத்தத்தில், சில நேரம் தூங்காமல் எனா இப்படி தான் பல நாட்கள் ஆதியின் பொழுது விடியும் ஆனால் இன்று அதிகாலை வேளையின் பனிக்காற்று மற்றும் பறவைகளின் கீச் கீச்சென்ற கானத்தில் அவனுக்கு அழகாக விடிந்தது. எழுந்தவுடன் அவன் கண் முன்னால் தோன்றிய பச்சை பசேல் என்ற காட்சி அவன் கண்களுக்கு குளிர்ச்சியாக இருந்தது. இது போன்ற ஒரு அழகான விடியலை அவன் கண்டதும் இல்லை இனியும் காண்ப் போவதும் இல்லை என்று தோன்றியது. மனதில் எழுந்த புத்துணர்ச்சியுடன் சுற்றி பார்த்தவன் தன் அருகில் இருந்த வானதியை காணாமல் திகைத்தான். இவள் எங்கே சென்றாள் என்று நினைத்தப்படி எழுந்து நின்று தன்னுடைய கண்களை நாலாப்புறமும் திருப்பி பார்த்தவனின் பார்வையில் அவளுடைய பேக் அங்கு இருப்பது பட்டது , ‘ பேக் இங்க தான் இருக்கு இவ எங்கே போய் இருப்பா ‘ என்று யோசித்து கொண்டிருக்கும் போது தன் முன் கேட்ட காலடி சத்தத்தில் அது யாரென்று அறிந்தவன் கோவத்தொடு நிமிர்ந்து பார்த்தவனின் பார்வை ரசனையாக மாறியது. குளித்து முடித்து புத்தம் புது மலராக தன் முன் நிற்ப்பவளை கண்டதும் அவனின் கோவம் காணாமல் போனது.
தூக்கத்தில் இருந்து விழித்து பரப்பரப்புடன் தேடிக் கொண்டிருந்த ஆதியை பார்த்தவள், “ என்ன சார்.... என்ன ஆச்சி ...அப்படி எத காலைல எழுந்த உடனே தேடிட்டு இருக்கீங்க..” என்று கேட்டவளை கண்டு முறைத்தவன், “ எங்கயாவது போறதா இருந்தா என்ன எழுப்பி இருந்து இருக்கலாம்ல உன்ன காணனோம் தான் தேடிட்டு இருக்கேன்... ஆனா நீ ஜாலியா குளிச்சிட்டு வந்து இருக்க.... உன்ன பாத்தா பிக்னிக் வந்த மாதிரி இருக்கு ட்ரெஸ் எல்லாம் பக்காவா பாக் பண்ணி எடுத்துட்டு வந்து இருக்க... ஒரு வேள என்ன கடத்த ப்ளான் பண்ணி இருக்கியா.... “ என்று எழுந்தவுடன் அவள் இல்லாததால் ஏற்ப்பட்ட எரிச்சலில் அவளிடம் கோவத்தை காட்டினான்.
அவன் கூறியதை கேட்டவள், “ சார் நீங்க எப்பவும் இப்படி தானா இல்ல இப்ப தான் இப்படியா... இல்ல தெரியாம தான் கேக்கறேன் உங்கள மாதிரி ஒரு துர்வாசரா யாராவது கடத்த இப்படி ஒரு ப்ளான் அதுவும் என்னை நானே பிரச்சனைக்குள்ள தள்ளுற மாதிரி பன்னுவாங்களா... கோவம் வந்தா என்ன பேசறோம்ன்னு யோசிக்கவே மாட்டிங்காளா... எப்பவாவது பட்ட தான் கோவத்துக்கு மதிப்பு இல்லனா எரிச்சல் தான் வரும் “ என்று மூச்சு விடாமல் பேசியாவளை கண்டவன் தேவை இல்லாமல் டென்ஷன் ஆகி அவளை கத்திவிட்டதை உணர்ந்தவன், “ காலைல எழுந்தவுடனே காணோம்... இந்த காட்ல எங்கயாவது போயிட்டியோ ன்னு கொஞ்சம் டென்ஷன் ஆயிட்டேன்...அதான் உன் கிட்ட காட்டிட்டேன்...அதனால....அது....வந்து...ச...சாரி “ என்று தயங்கியப்படி பேசியவனை கண்டு உண்மையில் வானதிக்கு சிரிப்பு தான் வந்தது.
வானதி, “ நீங்க முன்ன பின்ன யார் கிட்டயும் சாரி கேட்டு இருக்க மாட்டிங்க போல இருக்கு... பரவால விடுங்க இனிமே அடிக்கடி கோவப்படாதிங்க சரியா.... நான் எப்பவும் சீக்கிரம் எழுந்துடுவேன்.. நீங்க வேற நல்லா தூங்கிட்டு இருந்தீங்க அதான் எழுப்ப வேண்டாம்ன்னு குளிக்க போனேன்... அதுவும் இல்லாம இது மலைப்பகுதி இங்க இருந்து வெளிய எங்கயாவது போனோம்ன்னா எப்பவும் ஒரு ட்ரெஸ் நான் எடுத்துட்டு தான் போவேன்... அது இப்போ எனக்கு யூஸ் ஆயிடுச்சு ... சரி நேரம் வேற ஆகுது நீங்களும் போய் குளிச்சிட்டு வாங்க....இங்க பக்கத்துல ஒரு அருவி இருக்கு ரொம்ப அழகா இருக்கும் இங்க யாரும் வர மாட்டாங்க நீங்க தாராளமா குளிக்களாம்... இந்தாங்க இது என்னோட துண்டு தான் யூஸ் பண்ணிக்கொங்க “ என்று துண்டை நீட்டியவளின் கையில் இருந்து வாங்கினான். அவர்கள் இருந்த இடத்திலிருந்து சிறிது தூரம் அழைத்து சென்றவள், “ இங்க இருந்து கொஞ்சம் உள்ள போனா அருவி வந்துடும்... இந்த ஓடைய பாத்துட்டே நேரா போங்க “ என்று வழி காட்டியதை கேட்டு கொண்டு அந்த ஓடையை ஒட்டியப்படி இருந்த பாதையில் நடந்து சென்றான்.
அவனை அனுப்பி விட்டு முன்னே இருந்த இடத்திற்கு வந்தவள் தன்னுடைய துணியை பேக்கில் அடுக்கி கொண்டிருந்த போது அவனுடைய வாட்ச் அங்கு இருப்பதை பார்த்தவள் அதை கையில் எடுத்து, “ என் கையில வச்சிக்க சொல்லிட்டு போனா என்ன... இப்படியா கீழ வச்சிட்டு போவாங்க காணாம போய்ட்ட என்ன பன்றது... சரி நம்ம பேக் உள்ள வைப்போம் அப்பறம் கொடுத்துக்கலாம் “ என்று அதை தன்னுடைய பையில் துணிக்கு நடுவில் வைத்தாள்.
அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அவனை அழைத்து சென்ற இடத்திற்கு சென்றவள் அங்கிருந்த ஓடையில் இருந்த பெரிய பாறையின் மீது அமர்ந்து கொண்டு தன்னை சுற்றியுள்ள சூழலை ரசிக்க ஆரம்பித்தாள். இயற்கையை ரசிக்க ஆரம்பித்தவுடன் மனம் லேசாகவும் சந்தோசமாகவும் மாறியது. அந்த சூழ்நிலையை காணும் போது அவளுக்கு பாட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. தன் மனதில் தோன்றிய பாடலை பாட ஆரம்பித்தாள்.
புல்வெளி புல்வெளி தன்னில்
பனித்துளி பனித்துளி ஒன்று
தூங்குது தூங்குது பாரம்மா
அதை சூரியன் சூரியன் வந்து
செல்லமாய் செல்லமாய் தட்டி
எழுப்புது எழுப்புது ஏனம்மா
இதயம் பறவை போலாகுமா
பறந்தால் வானமே போதுமா
நான் புல்லில் இறங்கவா
இல்லை பூவில் உறங்கவா
என்று அவள் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தாள். அங்கு அருவியில் குளித்து முடித்தவன் காதில் ஒரு அழகிய குரலில் பாடல் ஒலித்தது. அதில் அவன், “ இந்த காட்டுக்குள்ள யாரு இவ்வளவு அழகா பாடுறது...” என்று எண்ணியவன் வேகமாக அங்கிருந்து சிறிது தூரம் சுற்றி பார்த்து கொண்டே நடந்தவன் கண்ணில் அந்த அழகிய ஒடையின் ஒரமாக இருந்த பாறையின் மீது அமர்ந்தப்படி பாடிய வானதியே தென்ப்பட்டாள். தன்னை மறந்து அவள் பாடிக் கொண்டிருந்த தோற்றம் அந்த குரல் இரண்டும் அவன் மனதில் அழியாத ஓவியமாக பதிந்தது. அவள் கண்ணில் படாதவாறு மறைந்து நின்று அவள் பாடுவதை ரசிக்க ஆரம்பித்தான்.
துள்துள்துள் துள்துள்துள்துள்ளென
துள்ளும் மயிலே
மின்னல் போல் ஓடும் வேகம்
தந்தது யாரு
ஜல்ஜல்ஜல் ஜல்ஜல்ஜல்ஜலென
ஓடும் நதியே
சங்கீதா ஞானம் பெற்று தந்தது யாரு
மழையன்னை தருகின்ற
தாய்ப்பால் போல்
வழியுது வழியுது வெள்ளை அருவி
அருவியை முழுவதும் பருகி விட
ஆசையில் பறக்குது
சின்னக்குருவி...
பூவண்ணமே எந்தன் மனம்
புன்னகையே எந்தன் மதம்
வானம் திறந்திருக்கு பாருங்கள்
எனை வானில் ஏற்றிவிட
வாருங்கள்....
கண்களை மூடி அவள் பாடலை ரசித்துக் கொண்டிருந்தவன் பாடல் நின்றவுடன் கண்களை திறந்து பார்த்தான். அங்கு பாறையின் மீது அமர்ந்திருந்தவள் ஒடுகின்ற நீரை கையில் எடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது அவள் பின்னாடி ஒரு யானை வந்து நின்றதை கண்டு அவன் பயந்து கொஞ்சம் அவள் அருகில் வேகமாக வந்தவன், “ ஏய்...இங்க பாரு அங்க இருந்து எழுந்து வா “ என்று கத்தினான்.
திடீரென்று தன் வலதுப்பக்கத்தில் கேட்ட குரலில் திரும்பி பார்த்தவள் அவன் கத்தியதை கேட்டதும் வேகமாக எழுந்த போது அவள் கால் அந்த பாறையின் மீது இருந்த நீரில் வழுக்கி விழ இருந்தாள். அவள் விழுவதை கண்டவன் பதட்டத்துடன் அவள் அருகில் செல்வதற்குள் அங்கு நடந்ததை பார்த்தவன் கண்கள் ஆச்சிர்யத்தில் விரிந்தது.
எங்கே விழுந்து விடுவோமோ என்று நினைக்கும் நேரம்... அவள் விழுவதற்குள் அவள் இடதுப்பக்கம் இருந்த யானை தன் தும்பிக்கையால் அவளை தூக்கி புல் தரையில் இறக்கி விட்டது. அதை பார்த்தவள் கண்களில் பாசத்துடன் அந்த யானையை வருடி கொண்டிருந்த போது, “ சீக்கிரம் இந்தப் பக்கம் வா இன்னும் அங்க என்ன பாத்துட்டு இருக்க “ என்று ஆச்சரியத்தில் இருந்து வெளியே வந்தவன் வேகமாக அவளை தன் பக்கம் அழைத்தான்.
ஆனால் வானதி அவன் கூறியதை கேட்டவுடன், “ சார் பயப்படாதிங்க இவன் ஒன்னும் பண்ண மாட்டான். நீங்க பக்கத்துல வாங்க “ என்று அவனிடம் கூறியவள். அந்த யானையின் புறம் திரும்பி அதன் தும்பிக்கையை பாசமாக வருடிக் கொண்டே, “ கணேசா.... எப்படி இருக்க... நான் உன்ன பாக்கத்தான் நேத்தே வந்தேன். இப்போ கூட உன்ன கூப்பிடனும்ன்னு நினைச்சிட்டு இருந்தேன்.... அதுக்குள்ள நீயே வந்துட்ட “ என்று கேட்டாள். அதற்கு யானையும் அவளின் முகத்தை தான் தும்பிக்கையால் மோப்பம் பிடித்தது
இதை பார்த்து கொண்டிருந்த ஆதி ஒன்னும் புரியாமல் நின்று கொண்டிருந்தான். அவனிடம் இருந்து எந்த சத்தமும் வராததால் அவனின் புறம் திரும்பி பார்த்தவள் அவன் அசையாமல் நிற்பதை பார்த்து, “ சார்... நான் நேத்து சொன்னேன்ல என் தம்பி அது இவன் தான் பெயர் கணேசன். இவனுக்கு பத்து வயசு தான் ஆகுது. ரொம்ப அழகா இருக்கான்ல “ என்று கூறியவளை கண்டவன், “ என்ன இந்த யானை தான் உன் தம்பியா.... “ என்று அதிர்ச்சியுடன் கேட்டவனை பார்த்த கணேசன் தன்னுடைய காதை ஆட்டி, தலையை குலுக்கி பிளிறியது. அந்த சத்தத்தை கேட்ட ஆதிக்கு சிறிது பயம் தோன்றியது. அதற்குள் வானதி, “ கணேசா... கோவப்படாத அவர் நமக்கு தெரிஞ்சவர் தான். அவருக்கு கைக்குடு “ என்றவள் ஆதியின் புறம் திரும்பி, “ சார் நீங்களும் கைய குடுத்து அறிமுகம் ஆகிக்கோங்க “ என்று கூறினாள். அவள் கூறியப்பிறகு கணேசனும் அமைதி அடைந்து அவள் கூறியதை போல் செய்தது. ஆனால் ஆதி இன்னும் அவள் குடுத்த அதிர்ச்சியில் இருந்து வெளி வராததால் அவர்களை பார்த்தப்படியே நின்றுக் கொண்டிருந்தான். இது வேலைக்கு ஆகாது என்று நினைத்தவள் அவன் அருகில் வந்து அவன் கையை கணேசனிடம் நீட்டினாள். அவள் நீட்டுவதை பார்த்த கணேசனும் தான் தும்பிக்கையால் அவனின் கையை பிடித்து மோப்பம் பிடித்தது. தன் கையில் ஏற்ப்பட்ட கூச்சத்தில் அவன் உடம்பு சிலிர்த்தது. வானதியிடம் அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் தன் கண்களால் அவளிடம் கேட்டான்.
அதை சிரிப்புடன் பார்த்தவள், “ அவனுக்கு உங்கள பிடிச்சிருக்கு... இனி அவன் உங்கள எங்க பாத்தாலும் நியாபகம் வச்சிப்பான் “ என்றாள்.
ஆதி, “ நீ என்ன சொல்ற அது எப்படி ஒரு தடவ பாத்த உடனே நியாபகம் வச்சிக்க முடியும் “
வானதி கணேசன் பக்கத்தில் சென்று அவனை பார்த்து கொண்டே, “ சார் பொதுவா மனிதர்களுக்கு அப்பறம் யானைக்கு தான் நிறைய நியாபக சக்தி இருக்கும். அது மட்டும் இல்லாமல் மோப்ப சக்தியும் அதிகம். உங்க வாசனையை வச்சே கண்டு பிடிச்சிடுவான். இவங்களுக்கு கேட்கும் திறனும் அதிகம். அவங்க இருக்க ஏரியாவுள எங்க உங்க குரல் கேட்டாலும் நீங்க தான்ன்னு கண்டுப்பிடிச்சிடுவாங்க. இப்போ கூட நான் பாடுனதும் என் குரல கேட்டு என்னை பாக்க வந்துட்டான் பாத்திங்களா.... அப்பறம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குரல் வேறுப்பாடு மொழிகளுக்கு இடையேயான வேறுப்பாடு எல்லாமே யானையால இனம் கண்டுப்பிடிக்க முடியும் “ என்று கூறியவளை கேட்டு பிரம்மிப்புடன் பார்த்தான்.
வானதி, “ இதுக்கே அசந்துட்டா எப்படி இன்னும் நிறைய இருக்கு மனிதர்களை போல யானையும் உணர்ச்சி வசப்படக்கூடிய உயிரினம். உறவினர்கள் இறந்துட்டா நாம இறுதி சடங்கு செய்றது மாதிரி இவங்க கூட்டத்துல யாராவது இறந்துட்டா மத்த எல்லா யானைகளும் சேர்ந்து இறுதி சடங்கு செய்வாங்க. சந்தோசமாக இருந்தாலும் அதக் கொண்டாடுவாங்க. முக்கியமா நமக்கு இருக்க மனநோய் இவங்களுக்கும் இருக்கு. தன்னுடைய துணை இறந்துட்டா அந்த வருத்ததுலலேயே இன்னொரு துணையும் இறந்துடும். உயிர் போற வலியே வந்தாலும் யானை அலறாது துடிக்காது. ஒருத்தவங்கல பாக்கணும்னா முந்நூறு கிலோ மீட்டர் தூரம் கூட தேடி போவாங்க. இப்படி சொல்லிட்டே போலாம்.... என்ன ஒரு அழகான படைப்பு இல்ல. எனக்கு தெரிஞ்சி கடவுள் நல்ல மனநிலமைல இருக்கும் போது படைச்சிருப்பார்ன்னு தோணும் “ என்று தன்னை மறந்து கூறிக் கொண்டிருந்தாள்.
அவள் கூறியதை கேட்டப்பிறகு ஆதிக்கு யானையின் மீது ஒரு பெரிய மரியாதையே எழுந்தது. பாசமாக அவர்கள் பக்கம் திரும்பினான் ஆனால் அவர்கள் ஒரு தனி உலகத்தில் இருந்தனர். தண்ணீரை ஒருவர் மீது ஒருவர் தெளித்து விளையாடி கொண்டிருந்தனர்.அதை சிரிப்புடன் பார்த்தவன் மனதில் இந்த உலகத்தில் கூடப்பிறந்தவர்கள் மீதே பாசம் இல்லாத போது இவள் இந்த யானையை தன்னுடைய தம்பியாக எண்ணி பாசமாக இருப்பதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது. அவன் இது வரை அவன் தங்கையின் மேல் பாசமாக இருந்தாலும் அதை அவன் காட்டியது இல்லை இங்கு நடந்ததை பார்க்கும் போது இனி அதுப்போல இல்லாமல் தன்னிடம் அன்பு செலுத்துபவர்கள் இடமாவது கொஞ்சம் அன்பாக இருக்க வேண்டும் என்று நினைத்தவன். இவள் நான் நினைத்தத்தை போல் இல்லாமல் ஒவ்வொரு முறையும் வித்தியாசமாக தெரிவதை போல் அவனுக்கு தோன்றியது.
வானதி, “ சரி கணேசா நேரம் ஆயிடுச்சு இவர வேற நான் பத்திரமா கூட்டிட்டு போகணும்... அதுவும் இல்லாம இனிமே என்னால அடிக்கடி உன்னை பாக்க வர முடியாது “ என்று கூறியவுடன் கணேசன் வருத்தத்துடன் அவளை விட்டு வேறு புறம் திரும்பி கொண்டான். அங்கு நடப்பதை சுவாரஸ்யமாக பார்த்து கொண்டிருந்தான் ஆதி.
வானதி வேகமாக அவன் முன் சென்று தும்பிக்கையை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “ கோவப்படாத கணேசா.... உனக்கு எல்லாமே தெரியும் போன தடவ வந்த போது நான் எல்லாத்தையும் சொன்னேன்ல... இப்போ நான் இங்கயிருந்து போயே ஆகனும் வேற வழியில்லை... நீயும் என்னை புரிஞ்ச்சிக்கலனா எப்படி... எனக்கு உன்ன விட்டா வேற யாரும் இல்லை “ என்று கண்ணில் கண்ணீரோடு பேசியவளை கண்ட கணேசன் கலங்கிய கண்களோடு அவளின் கண்ணீரை தன் தும்பிக்கையால் துடைத்தது. வானதியும் அவனின் கண்ணீரை துடைத்து விட்டு அவனை அணைத்து கொண்டாள். அதை பார்த்துக் கொண்டிருந்த ஆதியின் கண்களும் லேசாக கலங்கியது.
வானதி, “ நீ கவலப்படாத நான் என்னால முடியும் போது எல்லாம் உன்ன பாக்க வருவேன்...ஏன்னா என்னால உன்னை பாக்காம இருக்க முடியாது... அது உனக்கே தெரியும்ல.... சரி அங்க உன் அம்மா வெயிட் பன்றாங்க நீ போ... நானும் கிளம்புறேன் “ என்று அவள் பேசுவதை கேட்ட ஆதியும் அவர்கள் அருகில் வந்து, “ நானும் உன்ன வந்துப்பாக்குறேன்... இப்போ நாங்க கிளம்புறோம்” என்று அவனை தன் கைகளால் வருடியப்படி கூறினான்.
வானதியும் அவனை பிரிந்து இரண்டு அடி எடுத்து வைத்தவளை கணேசன் தன் தும்பிக்கையால் போக விடாமல் பிடித்து அழுகும் குரலில் பிளிறியது. அதைக் கேட்டவள், “ கணேசா... அக்காவா அழ வைக்காத நல்ல பிள்ளையா என்ன வழி அனுப்பி வைக்கனும்... உனக்கு நான் எதுவும் தரல அடுத்த முறை வரும் போது உனக்கு பிடிச்சது எல்லாம் வாங்கிட்டு வரேன் சரியா “ என்று கூறியவளின் கையை விட்டு விட்டு தலையின் மீது ஆசிர்வாதம் செய்தான் கணேசன். அதை ஏற்றவள் தன்னை தூக்குமாறு செய்கை செய்தால் அவனும் அவளை தும்பிக்கையால் தூக்கியவுடன் அவனின் நெத்தியில் முத்தம் வைத்தாள்.பிறகு கீழே இறங்கியவள் அவனிடம் இருந்து விடைப்பெற்று சென்று விட்டாள். கணேசனும் தன் அன்னையுடன் அங்கிருந்து காட்டிற்குள் சென்று மறைந்தனர். இனி வானதி வந்தால் மட்டுமே கணேசன் வருவான்.
தன்னுடைய பேக்கை எடுத்துக் கொண்டு இருவரும் காட்டை விட்டு வெளியே செல்லும் பாதையில் நடந்து கொண்டிருந்தனர். சிறிது தூரம் சென்ற பிறகும் அமைதியாகவே நடந்தனர். இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர். வானதி தன்னுடைய உறவான கணேசனை பிரிந்த வருத்தத்தில் இருந்தாள். ஆதியின் மனநிலை முற்றிலும் வேறாக இருந்தது. இங்கு வரும் போது இருந்தவனை விட செல்லும் போது அவனுள் நிறைய மாற்றங்கள். வானதியோடு இருந்த இந்த ஒரு நாளை அவனால் மறக்கவே முடியாது என்று அவனுக்கு தோன்றியது. இவளை போல் ஒருத்தியை இதுவரை அவன் கண்டதும் இல்லை இனி காணப் போவதும் இல்லை. அவளுடன் நடந்து கொண்டிருக்கும் பாதை இன்னும் நீண்டுகொண்டே செல்லாத என்ற எண்ணம் அவனுக்கு தோன்றும் போது இருவரும் காட்டை விட்டு வெளியே வந்து விட்டனர்.
சூரியனின் வெளிச்சம் முகத்தின் மேல் பட்டவுடன் சுயநினைவுக்கு வந்தவள், “ சார்... காட்டை விட்டு சீக்கிரமா வெளிய வந்துட்டொம் போல அதுவே எனக்கு தெரில... ஒரு வழியா உங்கள கூட்டிட்டு வந்து இங்க விட்டுட்டேன் இப்ப தான் எனக்கு நிம்மதியா இருக்கு... என்னால தான் உங்களுக்கு ரொம்ப கஷ்டம் அதுக்காக என்னை மன்னிச்ச்சிடுங்க.... இனிமே நம்ம சந்திப்போமான்னு தெரியல இருந்தாலும்.... உங்க வாழ்க்கை சந்தோஷமா அமைய என்னுடைய வாழ்த்துகள் “ என்று சொல்லி தன்னுடைய கையை அவனை நோக்கி நீட்டினாள்.
ஆதி, “ நீ சொன்ன மாதிரி என்னை கூட்டிட்டு வந்து விட்டுட்ட..... உனக்கும் என்னுடைய வாழ்த்துகள். இப்போவாவது உன் பெயர் என்னன்னு சொல்ல கூடாத “ என்று அவள் கையை பிடித்துக் கொண்டே கேட்டான். அவள் கையை பிடித்த அந்த நொடி அவனுக்குள் மின்சாரம் பாய்ந்ததை போல் இருந்தது. அவள் பெயரையாவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று அவனுக்கு ஆர்வமாக இருந்தது.
அவன் கையை பிடித்தவுடன் அவளுக்கும் ஏதோ ஒரு உணர்வு தோன்றியது. அதுவும் இல்லாமல் அவன் பெயரை கேட்டதும் அவனை பார்த்து சிரித்துக் கொண்டே, “ நம்ம சந்திப்பு இந்த ஒரு தடவையோட முடிஞ்சிடுச்சின்னா ரெண்டும் பேரும் பெயர தெரிஞ்சி கிட்டு என்ன பண்ண போறோம். ஒரு வேள.... விதி நம்ம திரும்பவும் சந்திக்கனும்ன்னு இருந்தா அப்போ நான் என் பெயர் என்ன... எங்க இருக்கேன்ன்னு எல்லாத்தையும் சொல்றேன்.... நீங்களும் சொல்லுங்க... இப்போ நம்ம இப்படியே பிரிஞ்சி போறது தான் நம்ம ரெண்டு பேருக்குமே நல்லது..... எப்பவும் இந்த நாளை என்னால மறக்கவே முடியாது “ என்றாள் தெளிவாக. அவள் கூறுவதும் அவனுக்கு சரியென்று தான் பட்டது. ஒரு முறை சந்தித்தவுடன் ஏற்ப்படும் இந்த உணர்வுக்கு என்ன பெயர் வைப்பது என்று அவனுக்கும் தெரியவில்லை. அதனால் இதை இத்துடன் நிறுத்துவது தான் சரியென்று தோன்றியது.
ஆதி, “ நீ சொல்றதும் சரி தான் என்னாலையும் இந்த நாளா மறக்கவே முடியாது....சரி பாத்து பாத்திரமா போயிடுவல “ என்று கேட்டதற்கு ஆமென்று தலையசைத்தவளைப் பார்த்து, “ சரி அப்போ நான் கிளம்புறேன் “ என்று கூறி இருவரும் விடை பெற்றுக் கொண்டு எதிர் எதிர் திசையில் நடந்து சென்றனர்.
அவர்கள் இருவரும் ஒருவருக்காக ஒருவர் படைக்கப்பட்டவர்கள் என்று தெரியாமல் பிரிந்த இருவரும் மீண்டும் விதியின் வசத்தால் ஒன்று இணைவார்களா....அதை காலம் தான் தீர்மானம் செய்ய வேண்டும்....அதுவரை நாமும் காத்திருப்போம்....
இது இது இது இது காதலா
என் இதயத்திலே ஒரு கூக்குரல்
அது அது அது அது காதல்தான்
என தடவியதே என் பூவிரல்....
பூக்கூடை போலே தான்
என் வசம் மோதினாய்
கூழாங்கல் போலே தான்
உடைகிறேன் ஏந்தினாய்
இதயம் எங்கே இயங்கும் என்று
உன்னால் கண்டேன் இப்போது....
உந்தன் உயிரோடு உயிர் சேரும்
ஓர் நொடி
வாழ்வே முடிந்தாலும் அது
போதும் சேரடி.....
நிஜத்தை தேடும்....
உங்களின் கருத்துக்களை “ என்
நிஜமே நீ தானடி “ கதையின்
கருத்து திரியில் மறக்காமல்
பகிர்ந்து கொள்ளுங்கள்.....
.