Amutham
Member
thank you so much for the clarificationமிக மிக மிக நன்றி அமுதம். என்னுடைய விளக்கம் இதுதான்.
உயிர் விட்டால் உயிர் பெற முடியுமா? அனுமதியின்றி காற்றுப்பட்டு கற்பு போனதே என்று உயிர் விட்ட மெழுகுதிரிக்கு அவன் மீண்டும் உயிர் கொடுக்கிறான் அல்லவா... அப்போ உயிர் இழந்தால் எப்படி உயிர் கொடுக்க முடியும். ஒரு பெண்ணும் கர்ப்பிழந்தாலும், வாழ்வு போனதே என்று உன் வாழ்க்கையை அழித்து விடாதே. ஒருவன் வாழ்வு கொடுத்தால் அதை ஏற்றுப்பிரகாசமாக மிளிர்ந்து நில் என்பதே அதன் பொருள். அப்போதுதான் அவளுடைய வாழ்வும் மலரும். அங்கே உயிர் என்பது வாழ்வு அல்லது மானம் என்பதை குறிக்கிறது. மானம் என்பது உயிருக்கு நிகரானதுதானே.
கற்பு என்பது ஒழுக்கத்தயும் மீறி அவளுடைய உரிமை. கற்பழித்தல் என்பது ஒரு பெண்ணின் அனுமதியின்றி அவளை காயப்படுத்துதல் அவள் சந்தோஷத்தை அழித்தலுக்கு நிகரானது. கற்பு என்பது அவளுடைய உடமை. அது யாருக்கு கொடுக்கப்படவேனுடம் என்பது அவள் முடிவு செய்ய வேண்டியது. அதை வேண்டா ஒருவன் அனுமதி கேட்காது அழிதத்துச் சென்றால் அது கற்பழித்தல்தான். அவளுடைய உணர்வை, மகிழ்ச்சியை, உரிமையை, அவள் அனுமதி இன்றி அழிக்கப்படுவது. இது என்னுடைய விளக்கம். வாசகர்களுக்கு வேறு மாதிரி புரியும். திருக்குறளுக்கு திருவள்ளுவர் என்ன விளக்கம் நினைத்தாரோ நான் அறியேன். ஆனால் நாங்கள் புது புது விளக்கங்கள் கொடுக்கிறோம் அல்லவா. அதுபோலத்தான்.