All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam,
I'm silent reader. இது தான் ஃபர்ஸ்ட் கருத்து நா ஏழுதறது. உங்க எல்லா கதையும் நா படிச்சிருக்கேன்.
கதை ஃபுல்லா ஆதித்யா....!
ஆதித்யாவவா நீங்க தான் வாழ்ந்து இருக்கீங்க சான்சே இல்ல செம சூப்பரா இருக்கு உங்க எல்லாம் கதையும் மத்தவங்க உணர்வை பிரதிபலிக்கிற மாதிரி இருக்கு ஆனா அவங்களோட உணர்வுகளை எவ்வளவு தெளிவா எழுதறீங்க. கதைல ஆதியோ மீராவா வாழ்ந்து இருக்காங்க.
ஆனந்தசங்கர் அப்பா கேரக்டரா பார்க்கும்போது கரெக்டாதான் இருக்கு ஆனா தன்னோட பிள்ளைங்களுக்கு
அவரரோட கருத்த திணிக்கும் போது ரொம்ப மோசமான விஷயம். விஜய்க்கு பதிலாக அவரோட பசங்கள கொஞ்சம் நம்பி இருக்கலாம்.

மீராவோட காதல் ஆதிய மீட்டெடுத்து சா ஆதியோட காதல் மீராவை தலைநிமிர வைத்து சா கடைசி வரைக்கும் ரொம்ப விறுவிறுப்பா போச்சு.மீரா ஆதியை புரிஞ்சுக்கரதிலிருந்து காதல் செய்வதிலிருந்து ஆதிய ஆதித்யாவை மீட்டெடுக்கிறது எல்லாம் சூப்பர் மேடம். ஆதி யோட மன ஓட்டத்தை ஓவியத்தின் மூலமா சொல்லி இருக்கிறீர்கள் அது கண்ணால பாக்குற மாதிரியே இருக்குது உங்களோட வர்ணனை.

மொத்தத்தில் உங்க கதை ரொம்ப சூப்பரோ சூப்பர்
வாவ்.. நீங்க எந்தளவிற்கு கதையை உணர்ந்து படித்திருக்கீங்க.. என்பது உங்க கமெண்ட்டில் தெரிகிறது.

மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜி , முதல் கேள்வி நீங்க மனோதத்துவ மாணவியோ? ஆனந்த சங்கர் உங்க வாழ்வை வாழாமல் பிள்ளைகளை ஆட்டு மந்தைகளாய் வளர்த்து, அனைத்தும் எனக்கே தெரியும் என்ற ஆணவத்தில் ஆடி ஒரு சிரு தோல்வியை தாள முடியாமல் மனநலம் பாதிப்பில் தனியறையில் !!!! வெளியில் பார்க்க அரண்மனை உள்ளே ஒரே புழுக்கம், ஆதி அச் சிறையில் இருந்து சிறு விடுதலையில் மற்றவர் முக பாவனை படிக்கச் கற்றுக்கொண்டாய் ,காவ்யா வடிவில் மரு அடி உன் மனதில், கார்த்தி நல் நட்பு சகலத்தையும் பொறுத்துக்கொள்ளும் நீ கொஞ்சம் சறுக்கிட்டே /மீரா அவ்வ்ளவு பிடிவாதமா காதலில் விழுந்தும் உன் காலதாமதம் ஆதியை நிழல் உலகை நோக்கி செல்ல வைத்தது, உன் காதலினால் நிழலில் இருந்து ஆதி நிஜத்துக்கு திரும்புவது அருமை. தந்தை எட்டடி பாய்ந்தால் மகன் பதினாறடி பாய்ந்துவிட்டான். கிளைமாக்ஸ் வாவ் .முதலில் ஆதியின் செயல்கள் கோபத்தை கிளப்பி; படிப்படியாக அவன் சோகம் பார்த்து; அவனின் புத்திசாலித்தனத்தில் வியந்த ;முடிவான காதலில் கரைந்துவிட்டோம் .வாழ்த்துக்கள் ராஜி.
மிக்க நன்றிகள்..💜🙏

அச்சோ இல்லைங்க.. நான் படித்தது பிளஸ்டூ வரை தான்..😁

போற்றி பாடடி நம் காதலை கதையை அப்டேட் கொடுத்த போது.. விஸ்காம் மாணவியா என்று ஒருத்தங்க கேட்டாங்க..🙄

படிக்காத மேதையாகிட்டேன்..🤣🤣

அழகான விமர்சனத்திற்கு நன்றிகள்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Such a amazing story lots of tnqs to given this story mam oru movie Partha feel enaku aathiyum meera vaimum marakka konja naal aagum :) Oru muran padana storya irunthalum sari normal story analum sari Unga way of writing chance se illa Semma
வாவ்.. மிக்க நன்றிகள்..

தற்பொழுது பெருகி வரும் எழுத்தாளர்களில் இருந்து தனக்கு என்று தனி பாணி.. அமைவது கடினம்..

அதை நான் செய்திருக்கிறேன் என்றால்.. வாசகர்களின் ஊக்கமே காரணம் மிக்க நன்றிகள்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam,story romba nalla irunthathu mam....

அவளை புரியாமல் அவளும்

அனைத்தும் புரிந்தும் அவனும்

இடையில் ' கௌரவம் ' என்பதில் சிக்கும் அவனின் வாழ்வும்

அவனை நிழல் உலகில் இருந்து மீட்டு எடுக்கும் அவளும்

அவனுக்கு நிழலை மட்டும் அல்ல நிஜமும் நான் தான் என புரிய வைத்த அவளும்

இருவரின் அன்பும் உடலும் உயிரை போல நிழலும் நிஜமும் போல தான்😍😍

வாழ்த்துக்கள் mam💐💐
வாவ்.. செம..

அழகாய்.. கதையின் சாரத்தை.. சிறு வரிகளில் அடக்கிட்டிங்க மிக்க நன்றிகள்💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Excellent story mam... Intha story psychological ah Elloroda charecterium and avarkaloda attitude entha confuse illama alga koduthirikinga Intha story la hero oda charecter romba aluthamana thu... Avanoda character ah endha idathilium confuse agama and ahdi Elloroda manasula enna ninakirainga nu solrathu excellent mam.. mera oda Kadal arumai...athi palaiya Mathiri mathi...ahdi avanoda appa vukae appu vachu aduthu aduthu movements are super...ahdi ninaicha mathiri merav udan kadhal vazlkai amachukitan... super ❤
Writerji your stories are different.... Athuvum intha story tuff ahna subject eduthu... Ithula vara oru oru character kum irukira attitude kodutha vidam super and Amazing ...😍😍😍😘😘
வாவ்.. மிக்க நன்றிகள்..

ஆமாம்.. இக்கதையில் பல திருப்பங்களும் குழப்பங்களும் வரும்.. அதை வாசகர்கள் குழப்பமில்லாமல் புரிந்துக் கொள்ள வேண்டும் என்று கவனமாக எழுதினேன். மிக்க நன்றி💜🙏
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi Raji, கதை👌👍!. அழுத்தமான கதை, ஏதோ மர்மம் நிறைந்த கதை மாறி இருந்தது எனக்கு. வித்யாசமான காதல் கதை😁. எபி க்கு எபி எனக்கு ஏதோ suspense வச்சமாரி செம்ம டென்ஷன் ஆயிருச்சு. கடைசி எபிக்கு போயிருலாமான்னு கூட யோசிச்சேன்😜. But அப்டி skip பண்ணவும் முடியல😂😜. எல்லா எபியும் பொறுமையா படிக்கிறமாரி பண்ணிடீங்க😊. விமரசனைத்துக்குகனா கேள்விகளுக்கு நீங்களே நிறைய பதில்(last epi) சொல்லிட்டிங்க. So, hero பத்தி, அவங்க அப்ப்பா பத்தி விடலாம்... ஆதி - என்னடா ரொம்ப buildup கொடுக்குறீங்களே ன்னு நினைச்சேன் ஆனா, (rough and tough aa iruparunu நினச்சேன் ) epdi oru hero ஆ எதிர்பாக்கல. கார்த்திக் 🤔 - எவ்ளோ matured ஆ problem handle பன்னி இருந்தான், அவன்கிட்ட இப்டி எதிர்பாக்கல 😔.. கொஞ்சம் கஷ்டமாவும் இருந்தது 😔😔. Dr. மேல கொஞ்சம் சந்தேகம் இருந்தது, ஆனா, கார்த்திக் கிட்ட தான் ஆதி பத்தி சொல்லுவானு எதிர்பாக்கல. சின்ன சின்ன விஷயத்தையும் (ஆதி மீராகிட்ட சொல்ற/guessing விஷயமும், கார்த்திக் ஆதி கிட்ட எதிர்பார்த்த விஷயமும் ) இரண்டு இடத்திலயும் அழகா சொல்லிருப்பிங்க..👏👌. ரொம்ப ரொம்ப நல்லாருந்தது. 👌😊🤩. வாழ்த்துக்கள்! Take care!! 😊
மிக்க நன்றிகள்..💜🙏

கதையை ரொம்ப இரசித்து படித்திருக்கீங்க போல..

கதையென்று பார்த்தால் சாதாரண கதைதான்..

பணக்காரத்துவம் பிடிக்காத ஹீரோ.. தனக்கு என்று.வாழ்வு வரும் பொழுது..வீட்டை.விட்டு வந்து விடுகிறான்.

ஆனால் நான் எழுதும் போது.. எனது பாணியில் வந்து வித்தியாசப்படுத்தி காட்டுவது எனக்கு மகிழ்ச்சியே..நன்றி
 
ராஜி சிஸ்டர் எழுதிய "நிழல் தேடும் நிஜம் நீயடி"... ஆதித்யா... காண்பவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் திறமை இவனிடம் இருக்கிறது... இவனின் சிறுவயது தனிமைகளும் ஏக்கங்களும் அதிகம்...😞 மீரா..... ஆதித்யாவின் மேல் இவள் கொண்டுள்ள காதல் அலாதியானது ❤️ தன்மேல் மீராவுக்கு இருக்கும் காதலை அவளை உணரச் செய்யும் இடங்கள் அனைத்தும் அழகு ❤️ பிறந்து வளர்ந்த நாட்டையும் பெற்றவர்களையும் விட்டு தன் காதலை மட்டுமே நம்பி வரும் இவளுக்கு பாட்டி கொடுக்கும் அறிவுரைகள் அனைத்தும் அருமை ❤️
ஆதித்யா தன் நிலையிலிருந்து தன்னை தானே அவன் மீட்டெடுப்பது அருமையோ அருமை 👍👍அவன் உணர்வுகளையும் அதை அவன் தன்னவளிடம் விளங்குவதையும் மீராவின் மனநிலைகளையும் மிகவும் அழகாக எழுதியிருக்கிறார் ஆசிரியர்👍
தன் காதலால் ஆதித்யாவை இவள் மீட்டெடுப்பது அருமை ❤️❤️
ஆனந்த் சங்கர்... இவரைப்போல் சொத்துக்காகவும் கௌரவத்திற்காகவும் வாழும் மனிதர்கள் இன்னும் இருக்கிறார்கள் 😞தன் செக்ரட்டரியின் மேல் கொண்டுள்ள நம்பிக்கையை தன் பிள்ளைகள் மேலும் வைத்திருக்கலாம் 😞
ஆதிக்காக மீரா ❤️
மீராவிற்காக ஆதி ❤️
வாவ்....
சூப்பரோ சூப்பர் 🤩😍
இந்த எழுத்தாளரின் எழுத்துக்கள் மீது எப்போதும் எனக்கு ஒரு மயக்கம் உண்டு 🥰 தன் எழுத்துகளால் எப்போதும் நம்மை கட்டிப் போட்டுவிடுவார்....❤️மன உணர்வுகளும்..நெகிழ்வுகளும்...அதிகம் உள்ள இவரின் கதைகளில் இருந்து நாம் வெளிவருவது சிரமமே...
மற்றுமொரு அருமையான கதை ❤️❤️❤️
Good luck dear 💐🥰❤️
Keep rocking 🥰💐🌹
 

Kirukalepandi

Active member
மிக்க நன்றிகள்..💜🙏

கதையை ரொம்ப இரசித்து படித்திருக்கீங்க போல..-:love::)

கதையென்று பார்த்தால் சாதாரண கதைதான்..

பணக்காரத்துவம் பிடிக்காத ஹீரோ.. தனக்கு என்று.வாழ்வு வரும் பொழுது..வீட்டை.விட்டு வந்து விடுகிறான்.- s, hero தனியா இருக்கும் போது இத செஞ்சுருக்கலாம் னும் தோணும்.. நிழல் உலகத்தில் இருந்து வர அவருக்கும் பிடிக்கல போல... But, அவனுக்குன்னு ஒரு பிடிப்பு வந்ததுக்கு அப்புறம்தான் இதப்பத்தி யோசிக்கிறான்.

ஆனால் நான் எழுதும் போது.. எனது பாணியில் வந்து வித்தியாசப்படுத்தி காட்டுவது எனக்கு மகிழ்ச்சியே..நன்றி- கண்டிப்பா ... 🤩🥰 🙏. இன்னும் நிறைய நிறைய (உங்கள் பாணியில் )கதைகளை எழுத வாழ்த்துக்கள்.💐
 

Sriraj

New member
ஹாய் ராஜி மா,

ராஜி அன்புவின் நிழல் தேடிடும் நிஜம் நீயடி..!!


நாயகன் - ஆதித்யா சங்கர்
நாயகி - மீரா ஹரிஹரன்

ஆதித்யா - கம்பீரமான அழகன். அழுத்தமும் - கூர்மையான புத்தியும் பெற்ற ஆண் மகன். மென்மை கலந்த கடினம் நிரம்பிய சுந்தரன். தன்னவளுக்கு உயிரான கணவன்.😊

மீரா - கலகலப்பான பெண்ணவள். சுயம் அதிகம் பெற்ற மங்கை. மென்மையான குணமும் - ஆழ்ந்த புரிதலும் பெற்ற அழகி. தன்னவனுக்கு யாதுமாகிய சித்திர பாவை.😊



நிழல் தேடிடும் நிஜம் நீயடி…💞

அழுத்தமான காதல் கதை.💞



உலகின் ஒரேத்தில் தன் வாழ்க்கையை குதூகலமும் - சந்தோஷமுமாக வாழ்கிறாள் அவள்…🥰

விதியின் சதிராட்டத்தில் மன்னவனின் வருகை…🥰

அவனின் வாழ்க்கையின் ஆரம்பமா முடிவா என இரு கோட்பாடுகளுடன் பயணம் செய்யும் நிலை…😊

நிலையின் தீவிரம் அறியாது மாறனின் காதல் அம்புகள் இவ்விரு இதயங்களை தொட...💘


அதனின் உள்ளார்ந்த அன்பை உணரும் நேரமோ அழகிய தருணமாய் மாற…💘

கடலின் அலை போல் இவர்கள் வாழ்க்கையின் அலைகள் மாறிட…🌊

காதலை தாண்டிய பிணைப்பு இவர்களுள்…💕💕

பிணைந்த பினைப்பு இறுக்கமாய் மாறும் முன் பேரலையாய் பல தடங்கல்கள்…

தடங்களின் தடங்களாய் இவ்விருவர் மனம்…

அதையும் தாண்டி பல சுபமான சம்பவங்கள்…😊

இன்பமும் - துன்பமும் வானிலை ஆய்வு போல் இவர்கள் வாழ்க்கையில் வர…😊

காலமும் - நேரமும் நிற்காமல் ஓட…
பல பிரச்சனைகள்- வலிகள் வந்த வண்ணம் இருக்க... தங்கள் அளப்பரிய அன்பில் திடமாய் இருந்தன காதல் உள்ளங்கள்…😊

தங்கள் அன்பில் உறுதியாய் நின்று விதியின் சதியை மதியால் வென்று என அழகிய வாழ்க்கையை சிறப்பாய் வாழ்ந்தார்கள் இரு காதல் ஜீவிகள்…😊


நிழல் தேடிடும் நிஜம் நீயடி…💞


நிழலாய் ஓர் வேதனை!
நிழலாய் ஓர் வலி!
நிழலாய் ஓர் அழுகை!
நிழலாய் ஓர் குமுறல்!
நிழலாய் ஓர் இயலாமை!
நிழலாய் ஓர் கடினம்!
நிழலாய் ஓர் அழுத்தம்!
நிழலாய் ஓர் உண்மை!
நிழலாய் ஓர் புதிர்!
நிழலாய் ஓர் இறுக்கம்!
நிழலாய் ஓர் மாயம்!❣

யாதும் நிழலாய் இருக்க…

நிஜமாக ஓர் இன்பம்!
நிஜமாக ஓர் சிரிப்பு!
நிஜமாக ஓர் இனிமை!
நிஜமாக ஓர் திடம்!
நிஜமாக ஓர் இயல்பு!
நிஜமாக ஓர் மென்மை!
நிஜமாக ஓர் யதார்த்தம்!
நிஜமாக ஓர் விடை!
நிஜமாக ஓர் தளர்வு!
நிஜமாக ஓர் காட்சி!
நிஜமாக ஓர் வாழ்க்கை…!❣

யாவும் நிஜமாய் இருக்க…

ஆழமான நிழல் அழகிய முத்தான நிஜத்தை வந்தடைந்ததோ…

நிழல் நிஜத்துடன் கலந்ததோ…

இது தான் காதலின் விதியோ…
விதியினை நேயம் எனும் மதியினால் வென்றதோ…

அழகிய வெற்றியை பறைசாற்றுவதாய் நிழலும் நிஜமும் ஒன்றாய் கலந்து நிழல் நிலவாய் ஜொலித்ததோ…

அழகிய நிலவில் அழகாய் கலந்தது தொலைந்து போன உண்மையின் நிழல்…💞❣❣🌹🌹


அழகான காதல் கதை. அதை அழகாய் தந்த ராஜிமாவிற்கு என் அன்பான வாழ்த்துக்களும் - அன்பும்.💐💐

மேலும் பல கதைகள் எழுதிட என் அன்பு வாழ்த்துக்கள்…💐💐


அன்புடன்
ஸ்ரீராஜ்

 
Top