வாழ்த்துக்கள் ராஜிமா,
நான் ஆதி - மீராவை விட்டு வந்து விட்டேனா? இல்லை அங்கேயே இருக்கிறேனா என்று புரியாமல் ஆதியை போல நிஜம் தேடும் நிழலில் நின்று கொண்டு இருக்கிறேன். மகிழன் போல என்னை அங்கேயே மூழ்கி போக செய்து விட்டு, வெளி வரமுடியாத படி செய்து விட்டிர்கள். ஹப்பா, எந்த மாதிரியான கதை களம். ரொம்ப சவால். நிறைய தைரியம் வேண்டும். மொத்தத்தில் ராஜியால் மட்டுமே முடியும் என்று எனக்கு தெரியும்.
உங்கள் கதையில் நாங்கள் ஒன்று எதிர்பார்த்தால் கண்டிப்பாக அது அப்படி இருக்காது என்பது நிச்சயம். கார்த்திக் - மீரா ஜோடி என்றதுமே என் மனது மணி அடித்தது. நம்பாதே என்று. ஹா ஹா சரி தான். ஆதி வந்து விட்டான். மீராவை கார்த்திக் இடம் இருந்து பிரித்து ஆயிற்று. ஆனால் அங்கே எந்த வித சப்பை கட்டும் இல்லாமல், நேர்த்தியான காரணங்கள் இருந்தது, ஆதி - மீரா ஜோடியை ஏற்று கொள்வதற்கு.
ஆதிக்கு தன் மேல் பிடித்தம் இல்லை என்று மீரா உணர்ந்து இருந்தால் கண்டிப்பாக அவன் பின்னால் போய் இருக்க மாட்டாள். ஆனால் அவனுக்கு தன் மேல் ஏதோ ஒரு உணர்வு இருக்கிறது என்று மீரா உணர்ந்து கொண்ட பின்னே, அவனின் பின்னால் விடாமல் சுற்றி அவனின் மீதான தன் காதலை உணர்த்தி, திருமணம் வரை சென்று இருக்கிறாள். எந்த இடத்திலும் எப்படி அவள் கார்த்திகை விரும்பி விட்டு, அவன் நண்பனை மனதில் நினைக்க முடிந்தது? என்ற கேள்வி எனக்குள் எழவே இல்லை. அதில் நீங்கள் கில்லாடி என்று எனக்கு தெரியும்.
மீரா வீட்டில் அவளை புரிந்து கொண்டு, அவளை நல்லது கிடைக்க போராட வேண்டும் என்று தயார் செய்து அவள் மீதான நம்பிக்கையை காட்டிய விதம் அழகாக இருந்தது. இப்படி ஒரு நம்பிக்கை எல்லா பெண்ணுக்கும் அவர்கள் வீட்டில் கிடைத்தால் போதும், எல்லா பெண்களும் ஜெயித்து விடலாம்.
ஆனந்தசங்கர் - என்ன மனுஷன் யா அவரு. அவர் ஆளுமை உங்கள் எழுத்துக்களில் தெறித்தது. அவரே ஆன்டி ஹீரோ மாதிரி கெத்து. பாவம் பக்கவாதம் வந்து படுக்க வச்சுடீங்க... கொஞ்சம் வருத்தம் தான். கீதா போன்ற பணக்காரர்களின் மனைவிகளுக்கு எப்போதும் பேசும் அதிகாரம் கிடையாது தான். எல்லாவற்றையும் கண்டும் காணாமல் ஊமையாக இருந்து விட வேண்டும் என்பது தான் சிலர் வீட்டில் எழுதப்படாத விதி. ஆனால் அதுவே ஒருவனின் மனதை அப்படி பாதித்திருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளமுடியாத உண்மை தான்.
ஆதித்யா - அவனை உங்களால எவ்ளோ வச்சு செய்ய முடியுமோ அவ்ளோ செஞ்சுட்டிங்க. ஹப்பா அவனை அடிச்சு துவைச்சு காயப்போட்டு அயன் பண்ணுறதுக்கு முன்னாடி மீரா வந்துட்டா. சுற்றி இருக்கும் உறவுகளின் தவறுகள் ஒருவனை எந்த அளவுக்கு குற்றவுணர்வுக்குள் கொண்டு போகும் என்று ரொம்ப நேர்த்தியா (இதற்கு மேலும் யாராலும் சொல்ல முடியுமா தெரியலை) சொல்லி இருந்தீங்க. அவனின் பகுதியை படிக்கும் போது எனக்கே கொஞ்சம் குழப்பம், நாம் இப்போது நிழலில் இருக்கிறோமா? நிஜத்தில் இருக்கிறோமா? என்று. ஹிப்னாடிசம் எனக்கு பண்ணின மாதிரி இருந்தது. சுற்றி இருப்பவர்கள் எல்லாம் பைத்தியமாக இருக்கும் போது தான் மட்டும் ஒழுங்காக இருந்தால் அது எப்படி? இது தான் ஆதியின் நிலைமை.
கார்த்திக் - ஐயோ பாவம் ஒரு நல்ல பையனை காதலிக்க வைத்து, அதுவும் உனக்கு இல்லைடா என்று அவனை திசை திருப்பி, கடைசியில் அவனையே அவன் நண்பனுக்கு வில்லன் ரேஞ்சில் யோசிக்க வைத்து சத்தியமாக இப்படி ஒரு திருப்பத்தை எதிர்பார்க்கவே இல்லை. வேற லெவல்.
ஆதியின் முன் மதி நிறைய பேரிடம் இருக்கும். நமக்கே சில வேளைகளில் தோன்றும். ஆனால் நீங்கள் சொன்ன மாதிரி கொஞ்சம் சிந்தித்தால் நாமும் எல்லாம் யோசித்து செயல் படலாம். ஒரு இடத்தில் மகிழன் ஆதியின் ஒரு கேள்வியில் மூன்று கேள்வியை உள்ளடக்கி கேட்டதற்கு அவனை மெச்சி கொள்வான் மனதில். நான் அந்த இடத்தில் உங்களை மெச்சி கொண்டேன். ஆனந்த சங்கர் போன்ற அப்பாக்கள், கீதா போன்ற அம்மாக்கள் இப்படி ஒரு ஒரு குழந்தையை பாதிப்புக்கு ஆளாக்குகிறார்கள். சிலர் அதோடேயே வாழ்கிறார்கள். சிலர் தங்களை மீட்டு கொள்கிறார்கள்.
உங்கள் கதைகளில் நெறய அழுத்தம் தந்த கதை என்று நான் உணர்கிறேன். இன்னும் ஆதி இருந்த இருட்டு அறை, அவனின் ஓவியங்கள், இது மட்டுமே கண் முன் நிழலாடுகிறது. சின்ன சின்ன விஷயமும் கவனித்து அதற்கான விளக்கம் எல்லாம் அருமையாக சொல்லி இருந்தீங்க. எங்கும் எந்த இடத்திலும் எனக்கு ஏன் இப்படி? என்ற கேள்வி வரவே இல்லை. நிழலாய் ஆதி, நிஜமாய் மீரா அவனை மீட்டு நிஜத்திற்கு கொண்டு வந்து விட்டாள். அமைதியான வாழ்க்கை, பணம் புகழ் பகட்டு இல்லாத வாழ்க்கை, ஆதி விரும்பிய வாழ்க்கை அவனுக்கு கிடைத்து விட்டது. இது போதும். என்ன வேணா நடக்கட்டும் நான் சந்தோசமா இருப்பேன். உசுரு இருக்கு வேறென்ன வேண்டும் உல்லாசம் இருப்பேன்.
ஆதியின் மனநிலை. வாழ்த்துக்கள் ராஜிமா..