சசிகலா எத்திராஜ்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே
அத்தியாயம் ..6
உதாசீன மாக
வெறுப்பாக காட்டும்
உந்தன் பேரன்பில்
ஊற்றாக பெருகியதே
என்னுள் ....
இரவு முழுவதும் தூங்காமல் பழைய நினைவுகளின் தாக்கத்தில் புரண்டபடியே இருந்தவன் நேற்று மாலை அன்பினியை அடித்ததும் அவள் முகம் கன்றி சிவந்து நீளக் கண்களில் கண்ணீர் கரைக்கட்டி
"நீயா" என்னை அடித்தது பார்த்தும் இன்னும் எத்தனை அடி வேண்டுமானலும் அடித்துக் கொள் நின்ற தோரனையும் என்னை வெறுத்தாலும் உன்னை விடமாட்டேன் அவளுடைய மன தைரியத்தை பார்த்த அவ்வினாடியே அவளை விட்டு விலகியே ஆகனும் முடிவு செய்தவன் வழியில் நின்றவளை விலக்கிவிட்டு விருட்டென காரை எடுத்து கிளம்பியவன் சென்னைக்கும் போகும் முடிவை எடுத்தான் அனலரசு.
எதை கண்டு பயந்து ஓட எண்ணுகிறான் அவனுக்கே புரியவில்லை .இங்கிருந்தால் இன்னும் அவளை துன்புறுத்தி விடுவேன் ,வார்த்தையாலே வதம் செய்துவிடுவேன் எண்ணினான் போல ..அவனாலே தன் மனதின் எண்ணங்கள் போற போக்கை கணிக்க முடியாமல் திகைத்தவன் இந்த பிரச்சினை தீர ஒரே வழி இங்கிருந்து கிளம்புவது தான். அவளும் அப்பாத்தாவும் சேர்ந்து பண்ணும் லூட்டி ஜீரணிக்க முடியவில்லை. இத்துண்டு இருந்துக் கொண்டு விழியாலே என்னை ஆட்டி வைக்கிறா.என் ஒற்றைக் கோபத்தை கூட அவளால் தாங்க முடியாது தெரிந்தும் தினமும் வந்து பார்வையாலே வதம் செய்யும் அவளை விட்டு விலகியே ஆக வேண்டும் எண்ணியவன் படுக்கையை விட்டு எழுந்து தன் காலை வேலைகளை விரைவாக முடித்தான் அனலரசு..
ஊரில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு வீட்டினுள்ளே வர அழகம்மா எல்லாரும் வாங்க சொல்லி அமர செய்தவர் "என்ன" காலையிலே வந்திரீக்கிங்க என்ன விசயம் கேட்டார்...
வந்திருந்தவர்கள் ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்தவர்கள்
ஆத்தா தானே காலையில் விரசா கிளம்பி வீட்டுக்கு வா சொல்லுச்சு இப்ப என்ன இப்படி கேட்கதே.. முளித்தவர்கள் அங்கிருந்த அனலரசின் பெரியப்பா ஆத்தா" நீ" தான் வீட்டுக்கு எல்லாரும் வாங்க ஒரு விஷயம் பேசி முடிவு எடுக்கனும் போன் பண்ணி சொன்னீங்க அன்பினி புள்ள சொல்லுச்சு அதான் எல்லாரும் வந்தோம்..
சரி சரி வயசாச்சுல அது தான் மறந்துட்டேன் போல தலையை ஆட்டியபடி சொன்னவர் மாடியை நோக்கி குரல் கொடுத்தார்.""ராசா, ராசா "எங்கய்யா இருக்கே கொஞ்சம் கீழே இறங்கி வாய்யா உன்னை பார்க்க ஊர்க்காராங்க எல்லாரும் வந்திருக்காங்க கூப்பிட்டார் அழகம்மா.
அப்பாத்தவின் குரலைக் கேட்டதும் எட்டிக் கீழே பார்த்தவன் பெரியவர்கள் எல்லாரும் ஒன்றாக வந்துருப்பதை பார்த்து புருவத்தை சுருக்கி யோசித்தபடி கீழே இறங்கி வந்தான் அனலரசு.
வாங்க பெரியப்பா, எல்லாரும் வாங்க சொல்லி பங்காளிகளையும் மாமா மச்சான்களையும் வரவேற்றான்.
அவர்கள் எதிரில் அமர்ந்தவன் அப்பாத்தா எல்லாருக்கும் குடிக்க காபித் தண்ணீ கொடுத்திங்களா அவரைப் பார்த்து கேட்டான்..
தம்பி சொல்லுனுமங்கலா, இங்கே வந்தாலே சாப்பாடு காபி எல்லாம் கொடுத்துவிடுவாங்கலே அதில் எல்லாம் எந்த குறைபாடும் இல்லைங்க.
அப்ப வேற என்ன குறை எல்லாரும் சேர்ந்து வந்திருக்கீங்க, என்ன விசயம் சொல்லுங்கள்.
அனலரசின் பெரியப்பா திகைத்து அழகம்மா முகத்தை பார்க்க அவர் விழியாலே சேதி சொல்ல அதைப் புரிந்துக் கொண்டு அது வந்து தம்பி நம்ம அன்பினி புள்ள இருக்குல ..அது உன்கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல சொல்லுச்சு,அது தான் வந்தோம் எல்லாரும் சேர்ந்து போய் தான் சொல்லனும் சொல்லிருச்சு தலையை சொறிந்தபடி சொல்ல சொல்ல அனலரசின் முகம் இறுகி எழுந்து நிற்க அங்கிருப்பவர்கள் எல்லாரும் எழுந்து நின்றவர்கள் தம்பி நாங்க சொல்ல வருவதை கேட்காமலே எழுந்திட்டீங்களே...
அங்கிருந்த அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவன் பெரியப்பா உங்களை எல்லாம், அந்த சுண்டெலி சொல்லுச்சு ஊரே திரண்டு வந்துருக்கீங்க. கொஞ்சமாச்சும் வயதுகுரியவர்கள் மாதிரி நடந்துக் கொள்ளுங்கள் அவ சொல்ல சொன்னாலாம், நீங்க சொல்ல வந்தீங்களா பல்லைக் கடித்தபடி வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தவன்,வாசல்படியில் நிழலாட அங்கே நிமிர்ந்து பார்த்தான்.
அங்கே ஓரத்தில் எட்டிப்பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் அனலரசு சொல்லிய சுண்டெலி அன்பினி.அவளை உக்கிரமா முறைத்தவன் என்ன சொன்னாள் பெரியப்பாவைப் பார்த்து கேட்க
அவர் அன்பினிக்கு சீக்கிரம் பரிசம் போட்டு கண்ணாலம் கட்டி வாழனுமா,அவளுக்கு யார் இருக்கா
நாங்க தானே இருக்கிறோம். அது தான் தம்பிகிட்ட கேக்கலாம் ,பேச பேச அனலரசின் முகம் மேலும் மேலும் இறுகி போனது.
யார் யாருக்கோ கல்யாண பண்ண இங்கே எதுக்கு வந்தீங்க ..
"என்ன ராசா இப்படி சொல்லரீங்க"
அவ பிறந்தப்பவே அவ உனக்கு தான் முடிவு செய்தது தானே, ஏதோ கால கோளாறு ஏதே ஏதோ நடந்துவிட்டது. அவளுக்கு யாரு இருக்கா ,மன நோகும்படி பேசாதீங்க சொன்னார் அனலரசின் பெரியப்பா காளியப்பன்.
அப்பாத்தா சத்தமிட்ட அனலரசை நேக்கி வந்த '' அய்யா ராசா'' வந்தவங்களுக்கு பலகாரம் கொடுத்து சாப்பிட்டு போகச் சொல்லுங்கள் நான் கரும்பு ஆலைக்கு போய்யிட்டு அப்படியே சென்னை கிளம்பிறேன் ,சொல்லி கிளம்ப, தம்பி எதுவும் சொல்லாமல் கிளம்பினால் எப்படி, கேட்டவரை முறைத்தவன், வேக வேகமாக வெளியே சென்றவன் வாசல்படியில் நின்றிருந்தவளை முறைத்துவிட்டு சென்றான்.
அவன் முறைத்தைப் பார்த்து மனதுகுள் நடுங்கினாலும் வெளியே கெத்தாக பார்ப்பதைப் போல பார்த்தவள், உள்ளே திரும்பி ''ஏன்'' கிழவி காலையிலே காபியில் சர்க்கரைக்கு பதிலா மிளகாய் பொடியை கலந்து கொடுத்திட்டியா, இப்படி காரமா பேசறாங்க..
ஏண்டி பேச மாட்டே, என் பேரன் பல்லுல தண்ணீ கூட படாமல் கிளிம்பிட்டான்,அப்படியே சென்னைக்கு வேற போறான், போய்யிட்டு எப்ப வருவானா தெரியலயே புலம்பியபடி சோபாவில் அமர அவர் அருகில் வந்த அன்பினி, காலடியில் அமர்ந்து உன் பேரன் சென்னை போகட்டும் ''பியூட்டி'' அடுத்த நாளே இங்கு வரவச்சிடலாம் ''நீ கவலைபடாதே'' சொல்ல ''என்னடி'' பண்ணப் போற என்கிட்ட சொல்லிட்டு செய்..உங்கிட்ட சொல்லாமலா அதுயெல்லாம் சொல்லிட்டு தான் செய்வேன், அதிலே மெயின் கேரக்டரே நீ தானே அழகம்மாவை பார்த்து கண்ணயடித்தாள்...