நினைவிலும் நீதானடி என்னுயிரே.
அத்தியாயம் ...3
"நிழலாக உன்னை
தொடருகிறேன். நிஜமாக
மனதினுள் மந்திரமாக
ஜெபிக்கிறேன் உந்தன் பெயரை!!!"
அன்பினின் மனம் அனலரசு பார்வையிலே பஸ்பமானது ..ஒரு பார்வைக்கே நடுநடுங்கி போகிறேன்...ஆனால் உன்னை என்னால் விட முடியாது மாமா.. என் உடம்பிலுள்ள ஒவ்வொரு 'செல்'லும் மாமா மாமா உச்சரிக்கும் அளவுக்கு உன்னை எனக்கு பிடிக்கும்..நீ வெறுத்தே ஒதுங்கினாலும் தினமும் உன்னை தேடி வந்துக் கொண்டே இருப்பேன் ..
எந்தன் அன்பு கண்டிப்பா உன்னை மாற்றிவிடும். யாரோ செய்த தவறுகளுக்கு பின்வினை நானாகி போனதே என் விதி போல.உன்னால் என்னை வெறுக்க முடியுமா ..மற்றவர்கள் பார்வைக்கு நீ என்னை உதாசீன படுத்துவதாக தெரிந்தாலும் என் பார்வையில் என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும் தெரியும் . ஆனால் அதை உன்னால் ஒத்துக் கொள்ள முடியாது . விருப்புக்கும் வெறுப்புக்கும் ஓர் நூலிலை வித்தியாசம் தான் ..அந்த நூலிலை தாண்டி நீ என்னிடம் வந்து தான் ஆகனும்..அதுவரை உன்னை தினமும் தேடி வந்து உன் பார்வையிலே இருப்பேன்.. உன் காயங்களுக்கு நான் மருந்தாக தான் இருக்கனும் நினைக்கிறேன்.
உன் மனதை காயபடுத்துவதற்குயல்ல .. எப்ப நீங்கள் புரிந்து கொள்வீர்கள் தெரியவில்லை காலங்கள் கடுகாகி போய் கொண்டே இருக்கிறது . துயத்துடன் நடந்து கொண்டிருந்தாள் அன்பினி..
தூரத்தில் அன்பு ..ஏய் அன்பு நில்லடி...ஓடி வந்தாள் தேன்மொழி..அருகில் வந்து புசு புசுவென்று மூச்சுவாங்க நின்றவள் அன்பினியைப் பார்த்து முறைத்தாள்... ஹனி என்னடி காலையில இரயில் வண்டி மாதிரி புசு புசு மூச்சுவிடறே ..
ஏண்டி சொல்ல மாட்டே.. தினமும் உன் அம்மாத்தாவிடம் நான் தானே பாட்டு வாங்கிறேன். நீயென்ன ஜாலியா உன் மாமனை பார்க்க போய்விடுகிறாய்... அது வாசலிலே தவம் கிடக்கது நீ வர வரைக்கும். காபி தண்ணீ கூட குடிக்காமா.. வயசான காலத்தில் அதை ஏண்டி கஷ்ட படுத்திர... அவளை திட்டிக் கொண்டிருக்க அன்பினியின் முகம் கலங்கி கருவளைஞ்சு போச்சு... அதுவரை பேசிக் கொண்டிருந்த தேன்மொழி அன்பினி முகத்தை பார்த்தும் அமைதியானாள்.. சாரிடி அன்பு ஒரு கோபத்தில் திட்டி விட்டேன் உன்னை பற்றி தெரிஞ்சிருந்தும் சாரிடா...
அன்பினி சட்டென்று தன் முகபாவத்தை மாற்றி புன்னகை தாங்கி "ஹேய் ஹனி "அம்மாத்தா சாப்பிடாமல் இருக்கவும் உனக்கு கோபம் அது தானே ..விடுடி நான் போய் பார்க்கிறேன்.. நீ சாயங்காலம் ஆத்தங்கரைக்கு வந்துவிடு அங்கே பேசலாம் சொல்லியபடி ஓடிக் கொண்டிருந்தாள். கண்ணுக்கு கெட்டாத தூரத்தில் காற்றாய் பறந்தாள் அன்பினி .
அம்மாத்தா அம்மாத்தா கூப்பிட்டவள் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருந்த வைரம்மாள் அருகில் உட்கார்ந்த அன்பினி அவர் கையை அழுத்தியவள் ஒன்றும் பேசாமல் இருக்க அவள் முகத்தை பார்த்தவர் இன்றும் அதே கதை தான் போல .. மனதினுள் நினைத்துக் கொண்டு கையை அழுத்தி உனக்கு நான் இருக்கேன் தைரியமாக இரு .. மௌனமாக உணர்வால் உரைத்தார்.
ஒரு நிமிடம் இருவரும் பேசாமலே இருந்தவர்கள் அம்மாத்தா வா சாப்பிடலாம் நான் வர வரைக்கும் காத்திருக்க கூடாது சொல்லிருக்கேன்ல .. இப்படி செய்தா உடம்பு கெட்டு போகாதா..சமையலறையில் இருந்த இட்லியும் சட்னியும் இரண்டு தட்டில் வைத்து எடுத்து வந்தவள் ''டைமண்ட் '' உன் கைப்பக்குவம் யாருக்கும் வராது.. அப்ப சட்னி காரசாரமாக இருக்கு சப்கொட்டிச் சாப்பிட... நிஜமாவா சொல்லர கண்ணு .. ஆமாம் டைமண்டு..அந்த பியூட்டிக்கு அதெல்லாம் வராது .. அழகாம்மாவை கிண்டல் பண்ணினாள். ஆனால் பாரு அதுக்கே அலட்டிக் கொண்டு சாப்பிடுகிறது மாமு..அதும் நீ வைக்கிற கறிக் குழம்புக்கு சொத்தே எழுதி தந்துவிடுவார்... இந்த மாதிரி ருசியா சாப்பிட்டா அவ்வளவு தான் சொல்லிக் கொண்டே சாப்பிட்டாள் அன்பினி... அவள் பேசுவதை பார்த்தபடி ஏன் கண்ணு நாளைக்கு கறிக் குழம்பு வைச்சு தரேன் கொண்டு போய் கொடுமா.. அச்சோ வேண்டாம் டைமண்டு ருத்ர தாண்டவம் ஆடுவார். இன்னும் கொஞ்சம் நாளாகட்டும் அப்ப. நம் வீட்டில வைத்து தரலாம்.. ம்ம் சொன்ன வைரம்மாளும் மனதினுள் இந்த புள்ளைக்கு எப்ப தான் விடிவுக் காலம் வரும் தெரியலயே..
அனலரசு காரில் போய் கொண்டிருந்தான். சுகந்தமான காற்றும் இறுகிய அவன் மனதை லேசாக்க வழியில்லாமல் தோற்றதது..வாழ்க்கையில் நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களையும் மகிழவதற்கு வழியில்லாமல் மனதை இறுக்கிக் கொண்டு தொழிலே வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் முழுமூச்சும் தொழிலில் கொடிகட்டி பறக்கனும்...இனி ஏமாறக் கூடாது எந்த வழியிலும்,எண்ணியவன் காலையில் வீட்டில் நடந்ததை நினைத்தால் கோபம் தான் வருகிறது. அப்பாத்தாவிற்கு எனக்கு எதும் தெரியாது நினைத்து அந்த சுண்டெலி கூட சேர்ந்து கொண்டு லூட்டி அடிக்கது.யாரை வேண்டாம் ஒதுக்க நினைப்பதை மீண்டும் வீட்டில் சேர்க்க நினைக்கும் அப்பாத்தாவிற்கு எப்படி சொல்வது. இப்ப தான் மனம்விட்டு சிரித்து சந்தோஷமாக இருந்து கொண்டு இருக்காங்க.இல்லை என்றால் எனக்காக சிரிப்பதும் சாப்பிடவதும் இருப்பாங்க. அவங்களுக்கு தான் விட்டு கொடுக்க வேண்டிய தா இருக்கு ...இல்லைனா சுண்டெலி என் பார்வையிலே உன்னை எரித்துருப்பேன்..அன்பினி திட்டிக் கொண்டே போய் கொண்டிருந்தான்.அவள் என்னை நெருங்கவதற்கு எவ்வளவு தைரியம் வேண்டும் .. இதுக்கு சீக்கிரம் ஒரு முடிவு எடுக்க வேண்டும் மனதினுள் நினைத்தான்.அங்கோ இவனை எப்படி வீழ்த்தாலாம் தன் சின்ன மூளை வைத்து ஆலோசித்துக் கொண்டிருந்தாள் அன்பினி தன் தோழி தேன் மொழிவுடன்..
ஹேய் பிரண்ஸ் அடுத்த பகுதி போட்டு விட்டேன் கொஞ்சம் லேட் ஆகிவிட்டது இனி சீக்கிரம் கொடுக்கிறேன் உங்கள் கருத்துக்களை கூறுங்கள்