All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

நினைவிலும் நீதானடி என்னுயிரே..

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே..
#######$################
அனலரசு பெயரிலே அனலை வைத்திருக்கும் ஒருவனை அன்பாலே கட்டி போடும் பெண்ணருத்தி அன்பினி..
$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$$

மாமா...மாமா கூப்பிட்டு கொண்டே உள்ளே வந்தாள்...அன்பினி...எங்க இருக்கிங்க....மாமா கூப்பிட...

எவ்வடி என பேரனை உரிமை கொண்டாடுவது...நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமா .போடி வேலை பார்த்து ....நக்கலடித்தார் அழகம்மா.

எல்லாம் உரிமை உள்ளவங்க தான் ...நான் பொறந்தவுடனே உன்ற பேரனுக்கு எனக்கும் முடிச்சு போட்டாரு...தாத்தாவு...இதுல இடையில நீ எதுக்கு கிழவி வர..

ஊர்ல இருக்கிறவ எல்லாம் என் பேரனை உரிமை கொண்டாடுவீங்க.நான் வேடிக்கை பார்க்கனுமா....போடி போக்கத்தவளே...

கிழவி...ஏன் உன் பேரன் இப்படி சூடாகவே இருக்கான் தெரிஞ்சுருச்சு....பேரல தான் அனல் இருக்கு நினைச்சேன்...ஆனால் உன் கூடவே இருக்கிறார்ல எரிமலையா பொங்கிறாரு...கல்யாணம் ஆகட்டும் ...அப்பறம் இருக்கு உனக்கு கிழவி...ஐஸ்ல உன்னை தினமும் குளிப்பாட்டல நான் அன்பினி இல்லை ஆமாம் சொல்லிபுட்டேன்...

அட போடி என்னை ஐஸ்ல குளிப்பாட்ட போறாயா .. என்ற பேரனையும் நெருங்க முடியாது ...போய் வேலையை பாரு...

ம்க்கூம்...இந்த கிழவி இருக்கும் வரை ஒன்றும் நடக்காது ...மாமாவை எப்படி தான் நெருங்குவது...புரியலயே ....நகத்தை கடித்தபடி நின்று கொண்டிருந்தாள்...
மாடிப்படியில் இருந்து இறங்கி வரும் சத்தம் கேட்க திரும்பிய அன்பினி மலைத்துதான் போனாள்...ஆறயடி உயரத்தில் கம்பீரமாக வேட்டி சட்டையில மாநிறமாக மதுரைவீரன் போல இறங்கி வந்த அழகில் சொக்கி நின்றாள்....

அவள் அங்கு நிற்பதை பொறுத்துபடுத்தாமல்...அப்பத்தா சாப்பாடு எடுத்து வை ....டைனிங் டேபிளுக்கு செல்ல...இதோ..ராசா..சொல்லிவிட்டு அன்பினி பார்த்து இப்ப தெரியாதாயடி உன் பவிசு...போய் உன் வேலை பாரு...ரம்பையே வந்தாலும் என்பேரனை மயக்க முடியாது...ம்க்கூம்...முகத்தை தோள்பட்டையில் இடித்தபடி போனார் அனலரசின் அப்பத்தா அழகம்மா...

போகும் இருவரையும் முறைத்தபடி நின்றாள் அன்பினி..அழகு கிளியா ஒருத்தி நிற்பதை பார்க்காமா பக்கி கிழவி பின்னால் போகுதே ..லூசு மாமா உனக்கு இருக்குடா நீயா நானா பார்த்திடலாம்...மனதிற்குள் பேசிப்படி நிமிர்ந்து பார்க்க...அங்கு அனலரசு அவளை முறைத்தான்...நீ என்ன நினைக்கிறேன் எனக்கும் தெரியுமடி...வெலவெலத்து போனாள்..அவன் முறைக்கும் பார்வைக்கு.....

பிகு...முதல் டீசர்..பா...எப்படி இருக்கு...உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் ... என்னை வளர்த்து கொள்ள உதவும்...தவறுகள் இருந்தாலும் சுட்டிக் காட்டுங்கள்...😍
 

சசிகலா எத்திராஜ்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே
############################

ராசா...எங்க இருக்கபா கொஞ்சம் கீழே இறங்கி வாய்யா...உன்னை பார்க்க ஊர்காரங்க எல்லாம் வந்திருக்காங்க...அழகம்மா தன் பேரனை கூப்பிட்டார்...இதோ வரேன் சொல்லியபடி இறங்கிய அனலரசு ஊரில் உள்ள பெரியவர்கள் எல்லாரும் ஒன்றாக வந்திருப்பதை பார்த்து புருவத்தை சுருக்கிவன் வாங்க சொல்லி கை கூப்பியவன் எல்லாருயும் உட்காரச் சொன்னான்...வந்திருப்பவர்கள் அனைவருமே உறவுகாராங்க தான்....பங்காளிகளும் மாமா மச்சான் தான் ...வணக்கம் தம்பி....ம்ம் ..சொன்னவன்...அப்பத்தா எல்லாருக்கும் காபித் தண்ணி குடித்திங்களா...தம்பி சொல்லுனுங்களா...இங்கே வந்தாலே எல்லாமும் கொடுத்துவிடுவாங்க...அதில் எந்த குறைபாடும் இல்லைங்க...அப்ப வேற என்ன குறை எல்லாரும் சேர்ந்து வந்திருக்கிங்க...என்ன விசயம் சொல்லுங்கள் ...அது தம்பி..நம்ம அன்பினி புள்ள இருக்குல...அது உங்ககிட்ட ஒரு விஷயத்தை சொல்ல சொல்லுச்சு....அது தான் வந்தோம்..எல்லாரும் சேர்ந்து போய் தான் சொல்லனும் சொல்லிட்டா...தலை சொறிந்தபடி...சொல்ல சொல்ல அனலரசின் முகம் இறுகி எழுந்து நிற்க அங்கிருப்பவர்கள் அத்தனை பேரும் எழுந்தவர்கள்....தம்பி...நாங்க சொல்லவருவதை கேட்காமல எழுந்திட்டிங்களே...அங்கிருந்தவர்களைப்
பார்த்த அனலரசு..பெரியப்பா உங்களை எல்லாம்...அந்த சுண்டெலி சொல்லுச்சு ஊரே வந்திருக்கிங்க...கொஞ்சம்மாச்சு வயதுகுரியவர் மாதிரி நடந்துக்கோங்க..அவச் சொல்ல சொன்னாலாம் ..நீங்க சொல்ல வந்திங்களா...பல்லை கடித்தப்படி வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தவன்..வாசல்படியில் நிழலாட நிமிர்ந்த பார்த்தான்...அங்கே ஓரத்தில் எட்டி எட்டிப் பார்த்தப்படி நின்று கொண்டிருந்தாள் ...அனலரசு சொல்லிய சுண்டெலி...அன்பினி...அவளை உக்கிரமாக முறைத்தப்படி...என்ன சொன்னாள் ..அவளுக்கு சீக்கிரம் பரிசம் போட்டு கண்ணலாம் கட்டி வாழனுமா...அவளுக்கு யாருய்யா இருக்கா ..நாங்க தானே அதுதான் கேட்க வந்தோம்....பரிசம் போட்டு கண்ணாலம் பண்ண இங்கே எதுக்கு வந்திங்க...என்ன ராசா இப்படி சொல்லற...அவ உன்னை பிறந்திருந்து நினைச்சுகிட்டு வாழற புள்ளையா ..மன வருந்தும்படி பேசாதே ..அப்பாத்தா...சத்தமிட அய்யா ராசா...வந்தவங்களுக்கு பலகாரம் கொடுத்து சாப்பிட்டு போகச் சொல்லு...நான் கிளம்பறேன் ..கிளம்பினான்...தம்பி ..எதுவும் சொல்லாமா கிளம்பினா எப்படி...கேட்டவரை முறைத்தவன்....திரும்பி வேக வேகமாக வெளியே சென்றவன் அங்கு நின்றிருந்தவளை முறைத்தபடி...சென்றான்...அவன் முறைத்ததைப் பார்த்து மனதுக்குள் நடுங்கினாலும் வெளியே கெத்தாக அவனை பார்த்த சுண்டெலி....ஏன் கிழவி...காலையில உன் பேரனுக்கு மிளகாயை அரைத்து காபி தண்ணீல கலந்து கொடுத்தியா...இப்படி காரமா பேசறாங்க ...உள்ளே பேசிப்படி நுழைந்தாள் அன்பினி...

-------------------------------------------------------------------
மாமா ..திரும்பியவன்...இனி என் முகத்தில முளிக்க கூடாது ...இந்த வீட்டில் நீ இருக்கலாம்...என் எதிரே வரக்கூடாது ...அப்படி வந்தே உன்னை கொன்னு போட்டுருவேன்...நினைக்காதே ..என்னை நானே அழிச்சுக்குவேன் ..கண்கள் சிவந்து மூக்கு விடைத்து கன்னத்து எலும்புகள் துடிக்க பேசவதைப் பார்த்தப்படி நின்றாள் அன்பினி...

சசி ஜெகநாதன் ...

விஜயதசமி முன்னிட்டு சின்னதா ஒரு பகுதி...படித்துவிட்டு எப்படி இருக்கு சொல்லுங்கள்....
 
Top