சசிகலா எத்திராஜ்
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நினைவிலும் நீதானடி என்னுயிரே..
###############################
முதல் அத்தியாயம், ------1
பிரம்பஞ்சமே
அன்பு என்னும்
ஒற்றை வார்த்தையில்
உள்ளயடங்கியதே...
''அன்பினி''... ஏய்..அன்பு எங்கடி போன...காலையிலிருந்து கண்ணலேயே தண்டுபடுலேயே...அன்பினின் அம்மாத்தா வைரம்மாள் வாசலுக்கு வந்தார்...தட்டு தடுமாறி ..கண்ணுக்கு மேலே கை வைத்து தூரத்தில் தெரிகிறாளா...பார்த்துக் கொண்டிருந்தார்...இந்த புள்ள எங்க தான் போச்சு...புலம்பியபடி நின்று கொண்டிருக்க அந்த பக்கம் வந்து கொண்டிருந்த தேன் மொழியை பார்த்தவர்...ஏ தேனு உன் கூட்டாளியை பார்த்தியா... எங்க போனா காலையில் காபித்தண்ணீ கூட குடிக்காமா போய்யிட்டா...
ஆத்தா அவ காலையில் எங்க போவா உனக்கு தெரியாதா...தினமும் இப்படி வாசலிருந்து அவ பெயரை ஏலம் விட்டுருக்க...ஆமாடி எனக்கு வேலை இல்லை பாரு....தினமும் சொல்லமா சொல்லாமா போவது தான் அவளுக்கு வேலையா போச்சு..இன்னிக்கு வரட்டும் அவ காலை நறுக்கி அடுப்பில வைக்கிறேன்....திட்டிக் கொண்டே உள்ளே போக...ஆத்தா...என்னடி...என்கிட்ட தான் இத்தனை திட்டு திட்டற...அவளை பார்த்தும் கண்ணு செல்லம் கொஞ்சதா போறே ....தினமும் இதே தானே நடக்கது....அவ எங்கயும் போக மாட்டா வந்துவிடுவா நீ உள்ளே போ ஆத்தா...அவரை அனுப்பினாள் தேன் மொழி...
அன்பு இருக்கடி உனக்கு தினமும் உன் அம்மாத்தா கோபபடுத்துவதே வேலையா போச்சு...திட்டிக் கொண்டே போனாள் அன்பினின் தோழி தேன்மொழி...
அன்பினி காற்றைப் போல பறக்க..போகும் வழியெல்லாம் இவ எதுக்கு இத்தனை வேகமா போற...தினமும் இவளுக்கு இதே வேலையா போச்சு...அங்கு நின்றுருந்த அன்பினி சித்தப்பா ஏகாம்பரம் புலம்பிய படி...ஏ..அன்பும்மா மெதுவா போடா..சொல்லி நிமர்ந்தவர் கண்ணுக்கு தெரியாத தூரம் காணவில்லை அவளை..காதில் வாங்கியபடி சரி...சித்தப்பூ...காற்றாய் பறந்திருந்தாள்... அன்பு மெதுவாடி என்ன தான் அவசரமோ...அவளுடைய பெரியம்மா...சத்தமிட....சரிரிரீ....ஒடினாள்...
அன்பினி செதுக்கிய சிலை போல இருக்கயா..சொல்லவதைப் போல பொன்னை வார்த்த எடுத்த தங்கச்சிலை ....இன்றைய நாகரிகம் போல இல்லாமல் பாவாடை தாவணி அணிந்த அழகி... பிறை நெற்றியில் சாந்து பொட்டும் வில்லாக வளைந்த புருவமும் நீண்ட கயல்விழிகளில் மையிட்டு நாசியில் ஓற்றை கல் மூக்குத்தி அவள் முகத்துக்கே அழகூட்ட..மெல்லிய இதழ்கள் பட்டு போல பளபளக்க...தாடையில் அழகுக்கு திருஷ்டி பட்டுவிடாத கரு மச்சம் இயற்கை அவளுக்கு அளிக்க ....மென்மையான இளந்தென்றல்...
அழகியான அவளுக்கு அழகு என்பதை பொருட்டு இல்லாமல் பழகும் வெகுளியானவள் .....ஒடிக்கொண்டே..ஊரில் உள்ளவர்களுக்கு பதில் சொல்லிபடி ஒடியவள் மூச்சு வாங்க நின்றால் அந்த அழகான பழைய காலத்து வீட்டின் முன்...
சுற்றிலும் பசுமையாக மரமும் செடி கொடிகளும் நிறைந்த அதன் நடுவில் வெள்ளை நிறத்தில் மட்டும் பெயிண்ட் அடித்து கம்பீரமாக நின்றது...அந்த வீட்டில் உள்ள மனிதர்களைப் போலவே...பெரிய வாசலும் இருபக்கமும் திண்ணையும்...உள்ளே நுழைந்தவுடன் முற்றமும்...ஒருபக்கம் அடுப்பாங்கரை ..மறுபக்கத்தில் விருந்தினர்கள் வந்த அமர மரச்சேர்களும்...ஒவ்வொரு பொருளும் இடமும் பழையது அழியவில்லை பறைசாற்றி கொண்டிருந்தது...மரக் கைப்பிடி பிடித்து படிகளில் ஏறினால் அங்கு விசாலமான ஹாலும்...எதிரே எதிரே அறைகளும் ..பழையதை அப்படியே இந்த காலத்துகேற்ப மாற்றி அமைத்திருந்தார்கள் ....
ஏலே...ராசு...ராசு..கூப்பிட்டப்படி வந்த அழகம்மா எங்கடா போனிங்க....பால் கறந்தீங்களா..இல்லையா ..சத்தமிட்டபடி..பின்பக்கம் மாட்டு தொழவத்திற்கு போனார்...ஆத்தா...அங்கே இருங்க இதோ கொண்டு வரேன்...பாலைக் கறந்து கொண்டு வந்தவன்....அதை கையில் வாங்கியவர்...அவனை முறைத்துப் பார்த்தார்...ராசு...மண்டைச் சொறிந்தபடி...ஆத்தா இன்னிக்கு கொஞ்சம் தூங்கிட்டேன்...நாளைக்கி வெரசா வந்தரேன்....தினமும் இதே தான் ...போடா ...போய் மாட்டை எல்லாம் குளிப்பாட்டி வைக்கோல போடு ....எங்க உன்ற பொண்டாட்டி ...வந்துவிட்டாளா...இல்லை அம்மணி இன்னும் தூங்கிட்டு இருக்காளா....அய்யோ..ஆத்தா அவ அப்பவே வந்துட்டா....ம்ம்...போய் பார்க்கிறேன்...நீ போய் ஜோலியை முடி...சொல்லிவிட்டு உள்ளே போனார்...அஞ்சலை...ஏண்டி அஞ்சலை..கூப்பிட ஆத்தா..வந்துட்டேன் ...அவர் முன் வந்தவள் அவர் கையிலிருந்த பாலை வாங்கிக் கொண்டு போனாள்...சீக்கிரம் காபித் தண்ணீ போட்டு வா.. சொல்லியபடி வெளி வாசலுக்கு வந்தார்...அழகம்மா...அன்பினியும் அதே நேரத்தில் வாசலில் நிற்க...இருவரும் ஒருவரை ஒருவர் முறைத்து பார்த்துவிட்டு .. காலையிலே வந்துட்டா...இவளை ஏண்டி..இரயில் எஞ்சின் போல மூச்சரைக்க ஒடி வரனுமா....மெதுவா வர மாட்டியா..அழகம்மா...திட்டிக் கொண்டிருக்க...அவர் திட்டுவதை கேட்டபடி சுற்றி சுற்றி பார்த்தாள்...என்னடி நான் பேசறேன் எங்கயோ பார்க்கிற...அவரும் பார்க்க ..மெதுவா அடியெடுத்து அவருகில் வந்தவள்...அவருடைய கன்னத்தை பிடித்து கிள்ளி முத்தமிட்டு கலகலவென்று சிரித்தாள்....அவள் முத்தமிட்டதை பார்த்தவர்..வெட்கி போய்.அவளைப் போலவே யாரும் பார்த்துவிட்டாங்களா சுற்றி பார்த்தவர்...ஏய் உன்கிட்ட எத்தனை தடவை சொல்லிருக்கேன்... கொஞ்சி குலவிகிட்டு இருக்கே....போடி அங்கிட்டு
அழகம்மா திட்ட...ஏய் கிழவி...நான் தானே கொடுத்தேன்...என்னமோ தாத்தா கொடுத்தமாதிரி சிலிர்த்துகிற.....சொல்லியவள்...எங்கே....என் மாமன காணாம்...அவருக்கு கொடுக்கனும் நினைப்பதெல்லாம் கிழவிக்கு கொடுக்க வேண்டியதா இருக்கு..
முணுமுணுப்படி உள்ளே எட்டிப் பார்த்தாள்...அவள் உள்ளே பார்ப்பதை பார்த்தவர்..வாய் மட்டும் ஏழு ஊருக்கு அடிப்பா ..அவனைக் கண்டதும் பொட்டி பாம்பாய் மாறிவிடுவாள்...வாயைப் பாரு...போய் எதும் வேறு ஜோலியை பாரு...அவள் தலையில் தட்டியவர்....அவன் உள்ளே தான் இருக்கான்....அவள் காதுயருகில் சொல்லிவிட்டு ...ஏண்டி அஞ்சலை...இன்னுமா காபித் தண்ணீ போடறவ....எம்புட்டு நேரமாகது...அன்பினி பார்த்து கண்ணையடித்துவிட்டு உள்ளே போனார்...அழகம்மா ....அன்பினி..இந்த வயசில இந்த கிழவி இப்படி கண்ணயடிதே...வயசில...அம்மாடியோ..எங்க தாத்தா..ஏன் இப்படி இருக்கிறார் புரிஞ்சிருச்சு...தனக்குள்ளே பேசியபடி....உள்ளே நுழைந்தாள்...
நினைவிலும் நீதானடி முதல் அத்தியாயம் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை கூறுங்கள் நானும் எழுத்துலகில் புதியவள்...என் முயற்சிக்கு உங்கள் ஆதரவு தாருங்கள் தோழிகளே..