All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயைத் தீண்டினால்! - கதைத் திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 16


(பொருளடக்கம்)

மர்மங்களுள் மர்மமாம்!

மர்மங்களுக்கு தொடர்ச்சி உண்டாம்!


அதிர்ச்சியில் ஒரு கணம் உறைந்து போன மைதிலிக்கு.. அந்த ஒரு கணம் உயிர் போய்.. பின் திரும்பி வந்தது போல் இருந்தது. இத்தனை வருடங்களாக.. பைத்தியங்கள் போல்.. வெறி பிடித்தாற் போன்று.. கரடு முரடான மலைகளில் தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவர்கள் தேடிய பெட்டி.. அவர்களுடய வீட்டிலேயே தான் இருக்கிறதா!


இன்னும் தான் பார்த்ததை மைதிலியால் நம்ப முடியவில்லை. மெல்ல அதைத் தொட்டுப் பார்த்தாள். மங்கிய நிறத்துடன் இருந்த நகைகளில் ஒன்றை எடுத்தாள். அதன் கனம்.. அது இரண்டு கிலோ இருக்கும் என்றுத் தெரிந்தது. பெரிய பெரிய வேலைப்பாடுகளுடன் இருந்த நகைகளில் சிலது பாசிப் படித்தாற் போன்று இருந்தது. சிலவற்றில்.. மண் நன்றாக அப்பியிருந்தது. பெட்டியின் ஒரு பக்கமாக மெல்ல பார்வையை ஓட்டியவளின் கண்ணில் தங்கத்தால் ஆன சொம்பு ஒன்று பட்டது. நைய்ந்து போன துணியால் அதன் வாயை கட்டப்பட்டிருந்தது. அதை மெல்ல திறந்தாள். அதில் தங்க நாணயங்கள் இருந்தன. ஒரு அடி உயரத்தில் சாமி சிலைகளும் இருந்தன. ஆனால் இரண்டு அடி அகலமும் நீளமும் கொண்ட பெட்டியில் கால்வாசி அளவே தங்கங்கள் இருந்தன. காற்றில் கற்பூரம் கரைவது போல் தங்கமும்.. புழுதி பட்டு கரைந்து விட்டதோ என்றுத் தோன்றியது.


அப்பொழுது தான் கவனித்தாள். அந்த பெட்டியின் அருகில்.. இந்த காலத்தில் உபயோகிக்கும் ட்ரெலி அமைப்பு கொண்ட சூட்கேஸ் இருந்தது. இது எப்படி இங்கே.. என்றுத் திகைத்தவள், அதை ஆர்வத்துடன் திறந்தாள். அதிலும் தங்கங்கள் இருந்தன. ஆனால் சுத்தமாக இருந்தன. அவை பழங்கால நகைகள் தான் என்று அதன் வடிவமைப்பில் தெரிந்தது. இரண்டையும் மாறி மாறிப் பார்த்த மைதிலிக்கு புரிந்த விசயம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


இந்த பெட்டியை அவள் முதலில் கண்டுப்பிடிக்கவில்லை. ஏற்கனவே இன்னொருவர் கண்டுப்பிடித்து.. மண் மற்றும் பாசி படிந்ததை கொஞ்சம் கொஞ்சமாக சுத்தம் செய்து.. இந்த பெட்டியில் சேகரித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவர்கள் இங்கு தான் கண்டுப்பிடித்தார்களா.. அல்லது வேறு இடத்தில் கண்டுப்பிடித்து அதை இங்கு மறைத்து வைத்திருக்கிறார்களா என்றும் சந்தேகம் ஏற்பட்டது. மேலும் இன்னொரு சந்தேகமும் தோன்றியது. அதாவது அவர்கள் கண்டுப்பிடித்தாகி விட்டது. ஆனால் இன்னும் தேடுவது போல் பாசாங்கு செய்துக் கொண்டிருக்கிறார்கள். அது யார்?


மாறனின் ஆவியாக நடிக்கும் அந்த உருவமா!


அப்பாவா?


அத்தையா?


அந்த இன்னொரு கும்பலா?


சூர்யா சந்தேகப்படுவது போல்.. அவளது சித்தப்பாவா?


அல்லது சூர்யாவா?


என்று வரைக் கூட அவளது எண்ணங்கள் சென்றன.


வேண்டியதைக் கண்டுப்பிடித்த பின்பும்.. ஏன் இன்னும் தேடுவது போல் பாசாங்கு காட்டுகிறார்கள். மற்றவர்களுக்கு பங்கு கிடைக்க கூடாது என்றா.. என எண்ணமிடும் போதே.. மைதிலிக்கு என்னவோ உறுத்தியது. அது என்னவென்று யோசித்துப் பார்த்தவள், பரபரப்புடன் சுற்றிலும் பார்த்தாள்.


ஆம் இரண்டடி இரண்டு அங்குலத்தில் மொத்தம் நான்கு பெட்டிகளை திருடிக் கொண்டு சென்றார்கள். மற்றவை எங்கே? மைதிலிக்கு ஒன்றும் புரியவில்லை. ஒன்று மட்டும் எப்படிக் கிடைத்தது என்றுக் குழம்பினாள். ஒருவேளை மற்றவைகளை வேறு இடத்தில் மறைத்து வைத்திருக்கிறார்களோ.. என்று நன்றாக தேடிப் பார்த்தாள். அங்கிருந்த சிறு அலமாரிகளில் தேடினாள். இது போன்று வேறு பெட்டிகள் அதற்கு கீழ் இருக்கிறதா என்றுப் புரட்டிப் போட்டுப் பார்த்தாள். நன்றாக தேடிப் பார்த்தவளுக்கு.. இன்னொரு எண்ணம் தோன்றியது.


அவள் முதலில் சென்ற வழி வேறு.. இந்த கதவை மறைக்கும்படி.. மாட்டப்பட்டிருந்த துணி இவளது கையில் சிக்கவும், இங்கு வந்திருக்கிறாள். ஒருவேளை நேராக சென்றால்.. அங்கும் இது போல் அறை இருந்து.. அதில் மீதி பெட்டிகள் இருக்குமோ என்று நினைத்தவள், அங்கு சென்றுப் பார்க்க தீர்மானித்தாள்.


ஆராய ஆராய மனதில் இருந்த பயங்கள் அகல்வதை உணர்ந்தாள். அவளுக்கு சூர்யாவின் நினைவு வந்தது. அவனோடு இருந்த தைரியம் தன்னுடனும் ஒட்டிக் கொண்டாதோ.. என்றுப் புன்னகையுடன் எண்ணமிட்டபடி.. மீண்டும் பெட்டிகளை மூடி வைத்தவள், இந்த பெட்டிகள் கிடைத்ததும் சூா்யாவின் உதவியுடன் அவள் நினைத்ததை செயல்படுத்த வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். பின் அங்கிருந்து வெளியே வந்தவள்.. மீண்டும் பழையபடி.. துணியால் அந்த கதவை மறைத்தாள். பின் பழையபடி தவழ்ந்து சென்றாள். சிறிது நேரத்திலேயே.. மேடு போல் பகுதியில் அவளது கால் தட்டுப்பட்டது. மெல்ல கையை நீட்டி முன் இருந்த மேட்டினை தடவிப் பார்த்தாள். அடுத்து ஒரு மேடு இருந்தது. அப்பொழுதே.. அது படிக்கட்டு என்றுத் தெரியவும்.. அதில் தவழ்ந்தவாறே ஏறத் துவங்கினாள்.


ஏனெனில்.. வெகுநேரம் காற்று உள்ளே புக முடியாதபடியான பகுதியில் இருந்ததால்.. அவளுக்கு லேசாக மூச்சு முட்டுவது போல் இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் அவளுக்கு வெளிக் காற்று அவசியம் என்றும் அவளுக்கு புரிந்தது. ஆனால் இதுவரை வந்துவிட்டு.. செல்ல அவளுக்கு விருப்பமில்லை. ஓரத்தில் தடவியாறு மேலே ஏறினாள். ஏனெனில் அந்த அறையை போன்று எதாவது அறை தென்ப்படுகிறதா என்றுப் பார்க்கலானாள். போக போக.. அந்த பகுதி பெரிதாகுவது தெரிந்தது. அந்த படிக்கட்டும் ஓரு சுவற்றோடு நின்றது.


அப்பொழுது மனிதர்களின் பேச்சு குரல் கேட்டது. யாரோ வருகிறார்களோ என்று வந்த வழியே திரும்பி எட்டிப் பார்த்தாள். யாரும் வருவது போல் தெரியவில்லை. பின் வேறு எங்கே இருந்து வருகிறது என்றுப் பார்த்தாள். சுவற்றோரம் காதை வைத்த பொழுது.. பழைய கால ஓவியம் இருந்த இடத்தில் ரவீந்தரின் குரல் கேட்டது.


ரவீந்தர் “வீடு புல்லா தேடியாச்சு! அவளோட ரூமிலும் இல்ல. வெளியேயும் போகலை. இன்னும் இந்த இடம் மட்டும் தான் தேடிப் பார்க்கலை. ம்ம்! தேடுங்க.. நமக்கு நேரமில்லை. அவளை பலி கொடுத்தால் தான்.. நினைத்தது நடக்கும்.” என்றான்.


ஓவியத்தில் காதை வைத்துக் கேட்டுக் கொண்டிருந்த.. மைதிலி அதிர்ச்சியில் உறைந்துப் போனாள். அவளது அத்தை பெட்டிகளுக்காக அவளை பலி கொடுக்கும் வரை செல்லக் கூடுமா என்று அதிர்ச்சியாக இருந்தது. அப்பொழுது அவள் ஏறி வந்த வழியில் யாரோ வரும் சத்தம் கேட்டது. மைதிலி இன்னும் அதிர்ச்சியில் ஸ்தம்பித்து போனாள்.


அப்பொழுது அந்த பக்கம் இருந்து கதவு சாத்தப்படும் சத்தம் கேட்டது. இந்த பக்கம் யாரோ வரும் ஆராவார சத்தம் நெருங்கியது. இன்னும் ஒடுங்கியவளாய் சுவற்றோரம் ஒட்டிய பொழுது.. அவளது கையில் சிறு தாழ்பாள் தட்டுப்பட்டது. உடனே ஓசை எழுப்பாமல் மெல்ல திறந்தாள். அது அவர்கள் பழைய பொருட்களை போட்டு வைக்கும் அறை! இத்தனை வருடங்களாக இந்த அறைக்கு பலமுறை வந்திருக்கிறாள். இந்த அறையில் இருந்து இப்படியொரு.. கதவு இருப்பதை எவ்வாறு கவனிக்காமல் விட்டாள் என்று வியந்தாள்.


மேலும் அன்று தாத்தாவை கொல்ல மாறனும்… அவனுடைய நண்பர்களும் மாளிகைக்கு வந்து.. தாத்தாவின் காவலர்களிடம் இருந்து தப்பித்து.. எவ்வாறு பெட்டிகளை எடுத்து சென்றார்கள்.. என்றுத் தற்பொழுது புரிந்தது. ஆனால் அவர்களது கொள்ளு தாத்தா.. பழைய சாமான்களை போட்டு வைத்திருக்கும் இந்த அறை தான் கஜானா அறை என்றும்.. இதில் இருந்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு ஓடினார்கள் என்று பாதி உண்மையை மறைத்திருக்கிறார். இங்கு வந்து ஒளிந்துக் கொண்டவர்கள்.. இந்த கதவின் வழியாக சென்று அந்த சுரங்க பாதையை கடக்கையில்.. அங்கு இருந்த மறைவான இடத்தில் இருந்த நகைகளை களவாடிக் கொண்டு சென்றிருக்கிறார்கள். பல விசயங்கள் புரிந்ததில்.. மைதிலிக்கு தெளிவு பிறந்தது போன்று இருந்தது. அப்பொழுது சுரங்க பாதையின் கதவிடம் இருந்து சத்தம் வரவும், மைதிலி வேகமாக அங்கிருந்த பழைய மர அலமாரிக்கு பின்னால் மறைந்துக் கொண்டாள்.


முதலில் பெரிய கால் மட்டும் தெரிந்தது. பின் முழு உருவமும் உள்ளே நுழைந்தது.. அதைப் பார்த்த மைதலி.. அதிர்ச்சியில் உறைந்தாள். தொண்டையில் இருந்து வந்த அலறலை வாயில் கையை வைத்து.. அடக்கினாள்.


ஏனெனில் பெரிய உருவம் ஜடா முடியுடன் கருப்பாக ஏழடி உயரத்தில் நின்றுக் கொண்டிருந்தது. முதலில் மாறன் என்று அவள் பார்த்த பயந்த ஆத்மா.. தற்பொழுது.. பயமுறுத்தும் மனிதனாக தெரிந்தது. அவ்வளவு உயரத்தில் அவள் மனிதர்களை பார்த்தது இல்லை. திரும்பி.. அலமாரியில் சாய்ந்தவளின் இதயத்துடிப்பு பல மடங்கு அதிகரித்தது. உயர்ந்த நின்ற.. அந்த உருவத்திடம் தனியாக ஒரு அறையில் மாட்டிக் கொண்டிருப்பது உணரவும்.. தானே அவளைப் பயம் தோற்றிக் கொண்டது. பின் மெதுவாக எட்டிப் பார்த்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்தது. தனது கையில் இருந்த செல்ஃபோனில் ஏதோ எண்களை அழுத்திக் கொண்டிருந்தான் அவன்!


ஆம்! அவன் தான்!


அவளது பயம் தற்பொழுது முற்றிலும் அகன்றிருந்தது.


அடுத்த சில நிமிடங்களில்.. வீட்டிலிருந்து இந்த அறைக்கு வரும் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டது. அவனும் மறைந்துக் கொள்ள நினைப்பான் என்று அவள் எண்ணினாள். ஆனால் அவனோ.. பதட்டமில்லாமல் நின்றிருந்தான்.


மைதிலி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருக்கையில்.. கற்பகம் கதவை திறந்துக் கொண்டு வந்தாள். பின் கதவை நன்றாக சாத்திவிட்டு.. அவனிடம் நேராக வந்தவள்..


சற்று மெல்லிய குரலில் “சிங்கு! மைதிலி இப்போ கீழே அவ அம்மா கூடத் தனியாக தான் இருக்கிறா! அவ புருஷன்காரன்.. மலைக்கு போயிருக்கான்.. என்ன நடக்குதுனு கண்டுப்பிடிக்க போறானாம். அவனை ஆதிகேச ஐயாவும் நம்ம ஆட்களும் பார்த்துப்பாங்க! போனவன் உசிரோட வீடு திரும்ப மாட்டான். புதுசா புருஷன் வந்ததில் இவ ரொம்ப ஆடற! பழைய பயம் போகுது போல தெரியுது. அதுனால அவளைப் பயமுறுத்த சொல்லியிருக்கார். அதைச் செய்யு..” என்றாள்.


அதற்கு அவன் “டிக்கே! டிக்கே! உன்கா கம்முரா டர்வாஜா பன்த் ஹெ னா! (அவங்க அறையின் சாத்தியிருப்பார்களே) எப்டி போவணும்? கதவை தட்டுணுமா?” என்றுக் கேட்டான்.


கற்பகம் “யோவ்! பஞ்சாப்பில் இருந்து நீ இங்கே வந்து எத்தனை வருஷம் ஆச்சு! இன்னும் முழுசா தமிழ் பேச மாட்டேன்கிறே! நீ ரூமுக்கு போக வேணாம், சன்னலோட கதவை திறந்து நில்லு போதும்..” என்றாள்.


இவற்றைக் கேட்டுக் கொண்டிருந்த மைதிலிக்கு திகைப்பாக இருந்தது. இத்தனை வருடங்களாக.. யாரோ அவர்களை ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறார்கள். அவளது கொள்ளு தாத்தா மாறனை கொன்றுவிட்டதால்.. அந்த ஆத்மா.. அவர்களைப் பழிக்கு பழி வாங்க அவர்களது குடும்பத்திற்கு விடாது கெடுதல்களை செய்துக் கொண்டிருக்கிறது.. என்று அவர்கள் நினைத்து கொண்டிருக்கிறார்கள். சிறு வயதில் இருந்தே அவளுக்கு அவ்வாறு சொல்லி தான் வளர்க்கப்பட்டாள். அவள் மட்டும் இல்லாது.. இதனால் அவளது குடும்பம் எத்தனை மனவுளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறது.


மாறனின் ஆத்மா‌ என்பது கட்டுக்கதை.. அவ்வாறு அடிக்கடி அவர்கள் முன் தோன்றுவது ஒரு மனிதன் தான் என்று சூர்யா உடனே கண்டுப்பிடித்து விட்டான். இந்த விசயத்தை சித்தப்பாவிடம் கூற வேண்டும் கோபத்துடன் எண்ணினாள். அவளது தாத்தாவை பார்த்துக் கொள்ள வந்திருக்கும் கற்பகமும் இதற்கு உடந்தையாக இருப்பாள் என்று எண்ணிப் பார்க்கவில்லை. இன்னும் இதுபோல் உடன் இருந்து அவர்களுக்கு எத்தனைப்‌ பேர் துரோகம் செய்கிறார்கள்.. அனைவரின் மேலும் சந்தேகப்பட்டாள். கற்பகம் ஆதிகேசன் என்று கூறவும், அவள் கூறிய ஆதிகேசன் யார் என்று யோசித்து பார்த்தாள்.


நான்கு வருடங்களுக்கு முன்.. அவர்களின் வீட்டிற்கு.. ஒரு ஜோசியக்காரன் அவனாக வந்து.. அவர்களது குலதெய்வம் அனுப்பியதாக குறி கூறி.. அந்த பெட்டிகளை கண்டுப்பிடித்தே ஆகணும் என்று ஆசையை ஏற்படுத்தி விட்டான். அவன்தான்.. இன்னொரு கும்பலின் தலைவனாக இருப்பான் என்றும் அவள் நினைத்துப் பார்க்கவில்லை. அந்த ஜோசியன் யாராக இருக்கும்.. என்று அவளது மனம் படபடத்தது. இப்பவே.. சூர்யாவை பார்க்க வேண்டும் போல் இருந்தது. ஏனெனில் அந்த ஜோசியக்காரன் ஆதிகேசன் தனது அடியாட்களுடன் சூர்யாவை கொல்ல திட்டமிட்டுக்கிறான். அதனால் சூர்யா மலைக்கு ஏறுவதற்குள்.. அவனைத் தடுக்க வேண்டும்.


கவனமாக நின்றிருந்தவள் அவர்கள் சென்றுவிட்டார்களா என்றுப் பார்க்க எட்டிப் பார்த்த பொழுது அவளது கரம் அவள் சாய்ந்து நின்றிருந்த.. பழைய அலமாரி கீழே பிடிமானம் உடைந்திருந்தால் அப்படியே சாய்ந்தது. அதனோடு விழுந்தவளை.. கற்பகமும், அந்த பஞ்சாப்காரனும் திடுக்கிட்டு பார்த்தார்கள். மைதிலியை அங்கு பார்த்ததும் கற்பகம் “நாம் பேசினதை கேட்டுட்டா.. அவளை பிடி! சரத்சிங்..” என்கவும், அந்த சரத்சிங்.. மைதிலியை நோக்கி வந்தான்.


அலமாரியோடு கீழே விழுந்த மைதிலி சுதாரித்து எழுந்த வேளையில் அந்த ஆஜபாகுவாய் இருந்தவன், அவளை நோக்கி வரவும், மைதிலி சட்டென்று திரும்பி வந்த வழியாக சென்று அதன் கதவைச் சாத்தி தாளிட்ட முயற்சித்தாள். அதற்குள் கதவை அடைந்திருந்தவன், கதவைத் திறக்க முயலவும், அவனது பலத்துடன் போராட முடியாது.. மைதிலி அந்த கும்மிருட்டு சுரங்க பாதையில் இறங்கினாள்.


வரும் பொழுது நிதானமாக படிக்கட்டில் ஏறி வந்தவள், சின்னதாக கட்டப்பட்டியிருந்த பழைய கால படிக்கட்டில் வேகமாக இறங்கியதால் கால் இடறி உருண்டாள். ஏழடி உயரமும் அதற்கு ஏற்றால் போன்ற பருமனும் கொண்டவன்.. அவ்வாறு விழுந்து விடக் கூடாது என்று சற்று நிதானமாக இறங்கி வந்தான். அதற்குள் கீழ் படிக்கட்டையும் தாண்டி உருண்டு வந்திருந்த மைதிலி.. தங்கங்கள் கொண்ட பெட்டி இருக்கும் சிறு அறையைத் தாண்டி விழுந்திருந்தாள். அந்த சரத்சிங்.. கையில் டார்ச் லைட்டுடன் பாதி படிக்கட்டு இறங்கி வந்துவிட்டதை பார்த்தவள், அந்த சிறு அறைக்குள் அவனிடம் மாட்டிக் கொள்வதை விட.. இங்கிருந்து தப்பித்து செல்வது மேல் என்று தொடர்ந்து சென்றாள்.


வலியும்.. அவனது கையில் கிடைத்து விடக் கூடாது என்ற அச்சமுமாக வேகமாக தவழ்ந்து சென்றுக் கொண்டிருந்த மைதிலி.. அவ்வப்போது.. திரும்பிப் பார்த்தாள். சற்று மேலே ஏறும் இடத்திற்கு வந்த பொழுது திரும்பிப் பார்த்தாள்.


அந்த சரத்சிங்.. கையில் டார்ச்சுடன் வேகமாக தவழ முடியாமல் தவழ்ந்து வந்துக் கொண்டிருந்தான். ஒரு கையில் டார்ச் வைத்துக் கொண்டு வேகமாக தவழ முடியாததால் அவனது கையில் இருந்து.. டார்ச் லைட்.. நழுவி கீழே விழுந்தது. அந்த தடுமாற்றத்தைப் பயன்படுத்திக் கொண்ட மைதிலி வேகமாக திரும்பி.. புதர்கள் வளர்ந்து இருந்ததை ஒதுக்கிவிட்டு வேகமாக ஏறி.. அந்த பாதையில் ஏறினாள். அங்கு படிக்கட்டுகள் போல்.. மரப்பலகைகள் இருப்பதைத் தடவிப் பார்த்தாள். அப்பொழுதே.. தான் வந்த பாதை இதுவல்ல என்றுப் புரிந்தது.


பஞ்சாப்காரன் எங்கு வருகிறான் என்றுப் பார்ப்பதற்காக திரும்பிப் பார்த்துவிட்டு, திரும்பிய பொழுது.. அவன் டார்ச்சை கீழே விட்டதால்.. இருள் சூழ்ந்துவிட்டது. அந்த இருட்டில் தான் முதலில் இங்கு வந்த பாதையில் புதர்கள் இல்லை என்றுக் கூட யோசிக்காமல்.. கிடைத்த வழியில் ஏறி வந்துவிட்டாள். தற்பொழுதே இது வேறு பாதை என்பதை உணர்ந்தாள்.


இந்த வேறு பாதை தன்னை எங்கு கொண்டு சேர்த்து விடுமோ என்று அச்சம் கொண்டாலும்.. திரும்பி செல்வதை விட.. துணிந்து முன்னேறி செல்ல முடிவெடுத்தாள். மரப்படிக்கட்டில் மெல்ல ஏறும் போது.. சிறு வெளிச்சம் தென்பட்டது. அந்த மரப்படிக்கட்டில் ஏறி முடிக்கவும், சற்று எம்பினாலும்.. அவளது தலை கூரையைத் தொட்டு விடக் கூடிய உயரத்திலும் இருவர் தாராளமாக போக கூடிய அகலமும் கொண்ட நீண்ட சுரங்கபாதை இருந்தது. ஒரிடத்தில் சிறு பேட்டரி லைட் எரிந்துக் கொண்டிருந்தது. அதைக் கண்டு.. மைதிலியின் விழிகள் விரிந்தன.


தலைக்கு மேல் உறுதியான மரப்பலகையால் ஆனா கூரையும்.. மண்கள் அரித்த தூண்கள் ஓரத்தில் வரிசையாக அமைந்திருக்க.. அதற்கு இடையில் பக்கவாட்டில் செங்கற்களால் ஆனா சுவர் உறுதியாக நின்றிருந்தது. பல வருடங்களுக்கு முன் கட்டியிருந்த சுரங்கபாதை என்பதால்.. மதியம் பெய்த மழையின் காரணமாக மழைநீர் சொட்டு சொட்டாக அந்த கூரையில் இருந்து சொட்டிக் கொண்டிருந்தது. குளிர் உடலையும் உள்ளத்தையும் ஊடுருவ குளிராலும்.. பயத்தாலும் சிறிது நடுங்கியவாறு அந்த பாதையில் சென்றுக் கொண்டிருந்தாள். அந்த பஞ்சாப்காரன் தன்னைத் துரத்திக் கொண்டு வருவானோ என்று பயந்து அவ்வவ்போது திரும்பிப் பார்த்தவாறு நடந்தாள்.


சிறிது தொலைவு சென்ற நிலையில் அங்கேயும்.. ஒரிடத்தில் பாதை இரண்டாக பிரிந்தது. எதில் செல்வது என்று ஒரு கணம் திணறியவள், வலது புறம் இருக்கும் பாதைக்குள் செல்ல முடிவெடுத்தாள்.


சிறிது நேரத்திலேயே சில்லென்ற காற்றை உணரவும், வேகமாக சென்றவள், அங்கும் இருபது படிக்கட்டுகள் இருந்தன. அதில் வேகமாக ஏறியவள், அங்கு ஓவியம் வரையப்பட்ட கதவு இருப்பதைப் பார்த்தாள். அதை ஆர்வத்துடன் திறந்து வெளியே வந்தவள், திகைத்தாள். அந்த சிறு அறையில் அவளுக்கு முன்.. சரியாக பராமரிக்கப்படாத அம்மன் சிலை இருந்தது. சுற்றிலும் பார்த்தவளுக்கு.. இது கோவிலின் கர்ப்பகிரகம் என்றுத் தெரிந்தது.


இது எந்த இடம் என்றுத் திகைத்தவாறு மீண்டும் சுற்றிலும் பார்த்தவள், அங்கு இருந்த சன்னலை திறந்து.. வெளியே தெரிந்த காட்சியை பார்த்து.. மேலும் திகைத்தாள்.


அவர்களது ஜமீன் மாளிகை நன்றாக தெரிந்தது. அப்பொழுதே இது எந்த இடம் என்று மைதிலிக்கு தெரிந்தது. அவளது கொள்ளு தாத்தா கட்டிய கோவில் அது! கோவில் கட்டித் தருவது போல் கட்டித் தந்து அவரது மாளிகையில் இருந்து வெளியேற சுரங்கப்பாதை அமைத்துள்ளார்.


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 17


(பொருளடக்கம்)

திடம் தந்தான் மங்கைக்கு..!

மெய் அறிந்தான் கயவனின்!

சதி அறியாமல் போனானே!



அவளது வீட்டில் இருந்து தோண்டப்பட்ட சுரங்கவழிப் பாதை அங்கிருந்த கோவிலில் முடியவும், திகைத்தவளாய் நின்றிருந்த மைதிலிக்கு எல்லாம் மாயஜாலம் போல் இருந்தது. கூடவே மர்மமுமாகவும் இருந்தது.


அத்தை குடும்பத்திடம் தப்பித்து.. தோட்டத்தில் ஒளிந்தவளுக்கு.. அங்கு இருந்த சுரங்கப்பாதையே அதிர்ச்சியளித்தது என்றால்.. அந்த சுரங்கப்பாதையில் அமைந்துள்ள சிறு அறையில்.. அவர்கள் இத்தனை நாட்கள் தேடிய பெட்டி இருந்தது அதிர்ச்சியின் உச்சிக்கே அழைத்து சென்றது. மொத்தம் நான்கு பெட்டிகளில் ஒன்று மட்டும் இருந்த மர்மம்.. அவளைத் திகைப்புற செய்தது. அடுத்து தொடர்ந்த மர்மப் பாதை.. அவர்களது ஸ்டோர் ரூமில் முடிந்தது ஆச்சரியம் என்றால்.. அவர்கள் இத்தனை நாட்கள் மாறனின் ஆவி என்று பயந்த உருவம் மனிதாக அவள் முன் நின்றிருந்தது அதிர்ச்சியாக இருந்தது. கூடவே அவளது அத்தை குடும்பம் அவளது உயிரை எடுக்க தேடுவதும், மாலையில் சென்ற தந்தை இன்னும் வீடு திரும்பாததும்.. ஆவியாக நடிக்க வந்தவன்.. ஜோசியர் சொல்லி வந்திருக்கிறான் என்று மர்மமாக இருப்பதும்.. என்று பல கேள்விகளும், அதிர்ச்சியுமாக இருந்தவள், அந்த சுரங்கப்பாதையிலேயே இன்னொரு பாதையில் சென்று இங்கு வந்து நிற்கிறாள்.


மாட்டிக் கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்.


சூர்யாவை கொல்ல.. அந்த ஜோசியனும்.. இன்னும் சில ஆட்களும் சென்றிருக்கிறார்கள். அவனைத் தாக்கும் முன்.. சூர்யாவை பார்த்து எச்சரிக்க வேண்டும். சூர்யா சித்தப்பாவுடன் சென்றிருக்கிறானா.. அல்லது தனியாக சென்றிருக்கிறானா என்றுத் தெரியவில்லை. தனியாக சென்றிருந்தால்.. சித்தப்பாவையும் அழைத்துக் கொண்டு செல்ல வேண்டும்.. ஆனால் சித்தப்பா தற்பொழுது எங்கே இருப்பார்.. என்று அவளுக்கு தெரியவில்லை. அவசரத்தில் ஃபோனையும் எடுத்து வரவில்லை. இவ்வாறு பலவாறு எண்ணியப்படி.. திரைசீலையை விலக்கி.. கம்பிகளால் ஆனா கதவைத் திறக்க முயன்றாள். ஆனால் அது முன்னால் பூட்டப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தாள். என்ன செய்வது.. திகைத்தாள்.


அவளுக்கு தெரிந்த வரை.. இந்த கோவில் பல வருடங்களாக பூட்டப்பட்டிருக்கிறது. இதன் சாவி யாரிடமும் இருக்கும்.. என்று அவளுக்கு தெரியாது. வெளியேற முடியாமல் இங்கே நிற்பதை விட.. வந்த வழியாக சென்றால்.. அவளுக்கு மிகுந்த ஆபத்து காத்திருக்கிறது. வெகுநேரம் இங்கு நிற்கவும் முடியாது.


என்ன செய்வது பதட்டத்துடன் சுற்றிலும் பார்த்தவளின் கண்ணில் அந்த அம்மன் சிலை பட்டது. சன்னல் வழியாக வந்த நிலாவின் ஒளியில் அந்த அம்மன் சாந்தமாக காட்சியளிப்பது போன்று இருந்தது. சூர்யா கூறியது அவளுக்கு நினைவிற்கு வந்தது. கோவில்களுக்கு வருபவர்கள் நல்ல எண்ணத்துடன் வருவதால்.. வேண்டுதலாக அவர்கள் கேட்டபடி நல்லதே நடக்கிறது என்றுக் கூறினான். அதன்படி ‘இந்த இடத்தில் இருந்து எப்படியாவது வெளியேற வேண்டும்.’ என்றுக் கண்களை மூடி வேண்டிக் கொண்டாள்.


இமைகளை மெல்ல திறந்துப் பார்த்தாள். அம்மன் அதே சாந்தமான நிலையில் தான் காட்சியளித்தார். மைதிலிக்கு அந்த நிலையிலும் சிரிப்பு தான் வந்தது. இதென்ன சினிமாவா! சாமி படத்தில் வர மாதிரி.. சாமி கிட்ட வேண்டியதும்.. அவளது கையில் சாவியை கொடுப்பதற்கு!


மீண்டும் திரைசீலையை விலக்கி.. யாராவது வருகிறார்களா.. அவர்களிடம் உதவி கேட்கலாமா என்றுப் பார்த்தாள். கும்மிருட்டில்.. அருகில் இருந்த மலைதொடர்களே வரி வடிவமாக தான் தெரிந்தது. வேறு யாரும் தென்படவில்லை. அந்த பஞ்சாப்காரன்.. அவள் தோட்டத்தில் இல்லை என்றதும்.. இந்த வழியாக வந்து விடுவானோ என்றும் அச்சமாக இருந்தது. எனவே இங்கு வந்த வழியின் கதவின் தாழ்பாளை மீண்டும் சரிப்பார்த்துக் கொண்டவள், அந்த கதவிலேயே நெற்றியை சாய்த்து சிறிது நேரம் நின்றுவிட்டாள்.


திடுமென ஒன்றுத் தோன்றவும்.. நிமிர்ந்தவள், அங்கிருந்த பழைய இரும்பு அலமாரியில் சாவியை தேட ஆரம்பித்தாள். ஆம்.. எப்படியும் வெளியே பூட்டப்பட்டிருக்கும். அவ்வாறு எனில்.. இந்த சுரங்கப்பாதையின் வழியாக வெளியே வருபவர்கள்.. உள்ளிருந்து திறப்பதற்காக சாவி இங்கு மறைத்து வைத்திருக்க கூடும்.. என்ற நம்பிக்கையுடன் அங்கு தேடிப் பார்த்தாள்.


காற்றினால் கெட்டியான திருநீறு மற்றும் குங்குமங்கள், நைய்த்து போன அம்மனின் புடவைகள் போன்றவை தான் இருந்தன. சாவி அங்கு இல்லாது.. எழுந்தவளின் கண்ணில் அம்மன் சிலை பட்டது. மெல்ல அம்மன் சிலை முன் அமர்ந்தவள், அம்மனின் பீடத்தில் கரங்களால்.. தடவியாறு தேடினாள். அப்பொழுது அம்மனின் காலுக்கு அடியில் சிறு இடைவெளி தெரிந்தது. ஐந்து விரல்கள் நுழைய கூடிய அளவில் இருந்த.. இடைவெளில் மெல்ல விரல்களை விட்டவளுக்கு அவள் தேடியது கிடைத்தது. ஆம் சாவி அங்கு தான் இருந்தது. மகிழ்ச்சியுடன் அதை எடுத்துக் கொண்டு.. திரைசீலையை விலக்கி விட்டு.. கம்பியால் ஆனா.. கதவிற்குள் ஒரு கையை வெளியே விட்டு திறக்க முயன்றாள்.


அவ்வாறு திறப்பது பதட்டத்தில் இருந்த மைதிலிக்கு சிரமமாக இருந்தது. அந்த பதட்டத்தில் அவளது கையில் இருந்து சாவி நழுவி கீழே விழுந்தது. மைதிலிக்கு ஒரு நிமிடம் உலகமே சுற்றியது. நல்லவேளை சாவி.. கதவின் அருகே தான் விழுந்திருந்தது. எனவே மெல்ல கையை நீட்டி எடுத்தவள், இம்முறை நிதானமாக செயல்பட்டாள். சீக்கிரமே பூட்டை திறந்து விடவும், வெளியே வந்தவள், மறக்காமல் கதவை மீண்டும் சாத்திவிட்டு.. பூட்டியதும் சாவியை திரையை விலக்கி.. உள்ளுக்குள் கையெட்டும் தொலைவில் மறைவாக வைத்தாள்.


பின் மர்ம மாளிகையை போல் தெரிந்த தனது வீட்டை பார்த்தவள், தோட்டத்தில் ஆள் நடமாட்டம் இருப்பதைப் பார்த்தாள். அவர்கள் யார் என்றுப் பார்த்து.. நேரத்தை வீணடிக்காமல்.. சூர்யாவை தேடி விரைந்தாள்.


—-----------------------------------------------------


பின்னால் கரங்கள் கட்டப்பட்ட நிலையில் சோமேஸ்வரன் நடக்க.. அவருக்கு.. பின் சூர்யா நடந்து வந்துக் கொண்டிருந்தான்.


சோமேஸ்வரன் “எனக்கு வயசு எவ்வளவு தெரியுமா! ஐம்பத்திரெண்டு.. இப்படி வயசாகினவனை கட்டி வச்சு கூட்டிட்டு போறீயே! என்னால் நடக்க முடியலைப்பா..” என்றார்.


அதற்கு சூர்யா “என்னது உங்களுக்கு வயசாகிடுச்சா.. நீங்க என்னை மாதிரி.. நாலு ஆட்களுக்கு சமம்! குஸ்தி வாத்தியார் வேற! எதுக்கு கயிற்றை கழற்றி விடணும்.. உங்க கிட்ட நான் அடி வாங்கிறதுக்கா..” என்றுச் சிரித்தான்.


சோமேஸ்வரன் “சூர்யா!” என்றுத் திரும்ப எதானிக்கவும், அவரது பின்னங்கழுத்தில் கையை வைத்து திரும்ப விடாமல் செய்த சூர்யா “நேரா பார்த்து பேசிட்டே நடங்க..” என்றான்.


சோமேஸ்வரன் “நான் உன் சின்ன மாமனார்” என்றார்.


அதற்கு சூர்யா “உங்க சொந்தக்காரங்களை எப்படி நீங்க துரத்தினீங்கனு இவ்வளவு விளக்கமாக சொன்ன பிறகும்.. இந்த சென்டிமென்டல் பேச்சு தேவையா...” என்றுச் சிரித்தான்.


பின் சோமேஸ்வரன் தனது பாசாங்கை விட்டவராய் “நீ சொன்னது ஒன்று கூட உண்மை இல்லை. நான் என்ன பைத்தியமா! பெட்டி கிடைத்த பிறகும்.. தொடர்ந்து தேடுவதற்கு! நீ சொல்கிற அளவிற்கு.. எல்லாம் நான் புத்திசாலி இல்லை. நானும் மற்றவங்களைப் போல தேடிட்டு தான் இருக்கேன்.” என்றார்.


சூர்யா “அப்போ எதுக்கு என்னைக் கொல்ல பார்த்தீங்க?” என்றுக் கேட்டான்.


சோமேஸ்வரன் “உன்னைக் கொல்ல பார்த்தேனா! அந்த அளவிற்கு நான் மோசமானவன் இல்லை. நீ எல்லாம் தெரிந்து தான் பிளன் போட்டு இங்கே வந்திருக்கே! மைதிலி கிட்ட ரெஃப்பரன்ஸ் மட்டும் தான் கேட்டுருக்கே! நான் குஸ்தி மாஸ்டர் தான்.. அதனால.. நீ என்னை வீழ்த்திய வேகத்தை வைத்தும்.. ஸ்கில்ஸ் வைத்தும் உன்னை சாதாரணமானவனா கணக்கு போட முடியாது. எங்களை கவுர்மென்ட்டிடம் மாட்ட வைக்க தான் நீ வந்திருக்கே என்று எனக்கு தெரியும். அதனால் கத்தியைக் காட்டி மிரட்டி.. உன்கிட்ட இருந்து விசயத்தை கறக்க நெனைச்சேன்.” என்றார்.


அதற்கு சூர்யா “நான் சொன்னதை எல்லாம் மறுத்த மாதிரி.. நானும் நீங்க சொன்னதை மறுக்கிறேன்.” என்றுச் சிரித்தான்.


அதைக் கேட்டு நன்றாகவே சிரித்த சோமேஸ்வரன் “ஒருவேளை.. நீ சொன்ன மாதிரி நான் பெட்டியை வைத்திருந்தாலும்.. அது எங்கே இருக்கு என்றுச் சொல்வேன் என்று நினைக்கிறாயா?” என்றார்.


அதற்கு சூர்யா “கண்டிப்பா சொல்ல மாட்டிங்க.. உங்களைச் சொல்ல வைப்பேன். அப்பவும் முடியலைன்னா.. இறந்த சோமேஸ்வரன் இறந்ததாகவே இருக்கட்டும். நான் கொஞ்சம் மோசமானவன் தான்!” என்றுச் சிரித்தவாறுக் கூறினான்.


சோமேஸ்வரன் “இத்தனை வருஷமா.. இவ்வளவு கஷ்டப்பட்டது.. உன் கையால் சாவதற்கா.. உன்னால் அது முடியும் என்று நினைக்கறீயா..” என்றுச் சிரித்தவர், பின் “என் மேலே உனக்கு டவுட் எப்படி வந்துச்சு? என் அண்ணன், அக்கா என்று எல்லாரும் தான் தேடறாங்க..” என்றுக் கேட்டார்.


அதற்கு சூர்யா “அவங்க மேலே எனக்கு டவுட் இருந்துச்சு! அவங்கெல்லாம் பக்கா வில்லன்கள் என்று நெனைச்சேன். ஆனா போக போக நடந்த விசயங்களை ஆராய்ந்த போது அவங்க எல்லாம் நமத்து போன பட்டாசுகள்.. அவ்வளவு டேன்ஞ்ர் இல்லை என்றுத் தெரிந்தது. ஆனா நீங்க அப்படியில்லை. அதுமட்டுமில்லாமல் ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கு போடுவது போல்.. எந்த பக்கத்தில் இருந்து கணக்கு போட்டாலும் விடையாக நீங்க தான் வரீங்க..” என்றான்.


சோமேஸ்வரன் “எப்படி?” என்றுக் கேட்கவும், சூர்யா “பாம்பின் கால் பாம்பறியும் என்றுச் சொல்வாங்களே..” என்றுச் சிரித்தான்.


சோமேஸ்வரன் “அது சரிதான்! அப்பறம் என்னவோ உளறினாயே! நான் பெட்டிகளை பதுக்கி வைத்திருக்கிறேன் என்று.. எதை வச்சு சொல்லுறே?” என்றுக் கேட்டார்.


அதற்கு சூர்யா “நீங்க தான் சொன்னீங்க..” என்றான்.


சோமேஸ்வரன் “என்ன?” என்று சூர்யாவின் புறம் திரும்பினார்.


சூர்யா அவரது குழப்பமான முகத்தைப் பார்த்து சிரித்துவிட்டு, “பெட்டிகளை இன்னும் தேடுவதற்கு ரிஷன் என்ன சொன்னீங்கனு ஞாபகம் இருக்கா.. இன்னொரு கேங் தேடிட்டு இருக்கிறாங்க.. அப்போ பெட்டி இருக்கு என்று நம்பறாங்க.. அந்த நம்பிக்கையில் நாங்களும் தேடறோம் என்றுச் சொன்னீங்க! அப்போ உங்க குரல்ல இன்னும் நம்பிக்கையை தெரிஞ்சுது. அதாவது.. எஸ் ஐ காட் இட்.. என்று சந்தோஷப்படும் ஒருத்தனோட முகமும் கண்களும் எப்படியிருக்குமோ.. அப்படியிருந்துச்சு! அந்த நம்பிக்கை இங்கே யார் முகத்திலும் பார்க்கலை. மைதிலி, மைதிலியின் அப்பா, அவளது அத்தை குடும்பம்.. என்று எல்லாரோட முகத்திலும் சலிப்பும்.. இன்னும் கிடைக்கலையே என்கிற ஆத்திரம் தான் இருந்தது. உங்க கிட்ட தான் நம்பிக்கையையும் நிதானாத்தையும் பார்த்தேன். அதை வச்சே.. அந்த பெட்டி எங்கே இருக்கு என்று உங்களுக்கு தெரியும் என்று கெஸ் செய்தேன். பிகாஸ் நீங்க மற்றவங்களுக்காக எதையும் செய்யறவரு இல்லை. உங்களுக்காக செய்யறவர்.” என்று‌ ஏளனத்துடன் கேட்டான்.


பின் சூர்யா தொடர்ந்து “உங்களை ஏன் டேன்ஞ்ர் என்றுச் சொன்னேன் என்பதைத் தெரிஞ்சுக்கோங்க! என்னோட ஸ்பிஷிக்கல் ஸ்ட்ரென்த்தை பாராட்டினீங்க! மென்டல் ஸ்ட்ரென்த் கேப்பஸிட்டி பற்றி தெரிய வேண்டாமா..” என்றுக் கூற ஆரம்பித்தான்.


“மைதிலியோட அத்தை.. அவளிடம் கல்யாணமாகாதவன் பலி ஆவானு ஜோசியக்காரன் சொன்னான்.. அவன் சொன்ன மாதிரியே நீங்க இறந்துட்டிங்க என்றுப் புலம்பினார். ஆனா நீங்க தான் இறக்கவே இல்லையே! அப்போ அந்த ஜோசியக்காரனுக்கும் உங்களுக்கும் ஒரு சம்பந்தம் இருக்கு என்றுத் தெரிந்தது. அந்த ஜோசியக்காரன் தான் ஆரம்ப புள்ளி வச்சது. அது நீங்க சொல்லி இருக்கலாம். அது தொடர்பா யோசிச்சா.. எல்லா விசயத்திற்கும் பின்னாடி நீங்க இருப்பது தெரிந்தது. இந்த வீட்டு தோட்டக்காரனா நீங்க தான் வேலை செய்துட்டு இருக்கீங்க.. அப்போ உங்களுக்கு அந்த தோட்டம் அத்துபடி.. அப்போ ஆவியார் நடித்தவன் மாயமாய் மறைந்து போனது எப்படினு உங்களுக்கு கண்டிப்பா தெரிந்திருக்கும். அதாவது அங்கே மறைஞ்சுக்கிற மாதிரி இடம் இருக்கு என்று நான் கெஸ் செய்கிறேன். அது உங்களுக்கு தெரியும் என்றுச் சொல்கிறேன். என்னா தான்.. ஸ்பைடர் மேன் மாதிரி.. பைப் வழியாக மனிதன் ஒருத்தன் இறங்கினான் என்றாலும்.. அட்லீஸ்ட் தப்பித்து ஓடும் போதாவது பார்த்திருக்கலாம். ஆனா நான் பார்த்த போது.. அவன் அங்கே எங்கேயும் இல்லை. சோ அவன் உங்களோட உதவியோட தான் தப்பியோடிருப்பான். அப்போ மாறனோட ஆவியாக நடிப்பவனுக்கும் உங்களுக்கும் தொடர்பு உண்டு. அப்போ.. அவன் நீங்க ஏற்பாடு செய்த ஆள் தான்! என்ன நான் சொன்னது கரெக்ட்டா! இப்படித்தான்.. இங்கே இத்தனை வருஷங்களா நடந்த எதாவது விசயத்தைத் தொட்டாலும்.. அது கூட நீங்க கனெக்ட் ஆகறீங்க! உங்களுக்கு எல்லா விசயங்களும் தெரியும். எனக்கு நடந்த விசயங்களைப் பற்றியெல்லாம் தேவையில்லை. அந்த பெட்டிகள் எங்கேனு சொல்லுங்க போதும்..” என்றுச் சிரித்தான்.


தற்பொழுது கரங்கள் கட்டப்பட்ட நிலையில்.. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு நேராக நின்றிருந்தார்கள்.


ஏதோ சொல்ல வாயைத் திறந்த சோமேஸ்வரன் பின் அமைதியாக அவனை முறைத்தார். அதைக் கண்டு சிரித்த சூர்யா “என்ன மிஸ்டர் சோமேஸ்வரன் ஷாக்கா இருக்கா! இங்கே வந்த ஒரு நாளில் எனக்கு கொடுத்த வேலையில் பாதி முடிச்சுட்டேன். தேங்க்ஸ் யு அன்ட் மைதிலி! இங்கே எப்படி வருவது என்று யோசிச்சுட்டு இருந்தேன். ஆனா நீங்களே என்னை வரவழைச்சுட்டிங்க! இன்னும் கொஞ்சம் முன்னாடியே இங்கே வந்திருந்தா… எப்பவோ விசயத்தை முடிச்சுருப்பேன்.” என்றான்.


சோமேஸ்வரன் “சோ அந்த பெட்டிக்காக தான் நீ இங்கே வந்திருக்கே?” என்றுக் கேட்டார்.


அதற்கு சூர்யா ஆம் என்றுத் தலையை ஆட்டினான். சோமேஸ்வரன் தொடர்ந்து “நாங்க உன்னை யுஸ் செய்யலை. நீதான் எங்களை யுஸ் செய்துட்டே?” என்றார்.


சூர்யா “ம்ம்! அப்படியும் சொல்லலாம்.” என்றான்.


மேலும் சோமேஸ்வரன் “அப்போ மைதிலி கெஸ் செய்தது சரித்தான்! அவள் சந்தேகப்பட்டதும் சரிதான்.. எங்களைக் குழப்பி விட்டுட்டு.. அந்த பெட்டியை நீ எடுத்துட்டு போக தான் வந்திருக்கே!” என்றார்.


அதற்கு சூர்யா “மைதிலி புத்திசாலி! ஆனா அவளை முட்டாளாய் வளர்த்த உங்களுக்கு தேங்க்ஸ் சொல்லவா.. இல்லை.. பனீஷ் செய்யவா! என் சாய்ஸ் பனீஷ்மென்ட்.. உங்களை அந்த மலையில் இருந்து உருட்டி விடலாம் என்று இருக்கேன்.” என்றுச் சிறுச் சிரிப்புடன் ஏளனமாக கூறியவாறு அவரை நோக்கி நடந்தவன், அவரது உதட்டோரத்தில் தோன்றிய சிறு ஏளனச்சிரிப்பைக் கண்டு நின்றுவிட்டான்.


சூர்யாவின் புருவம் யோசனையில் சுருங்கியது. ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தான். அவன் திரும்பிப் பார்த்தவேளையில் அவனது தலையில் பலமாக அடி ஒன்று விழ.. தடுமாறினான். அவ்வேளையை பயன்படுத்திக் கொண்ட சோமேஸ்வரன், தனது ஒரு காலால்.. அடிப்பட்ட அவனது தலையில் எட்டி உதைத்தார். முதலில் விழுந்த அடியில் தடுமாறிய சூர்யா.. தற்பொழுது சோமேஸ்வரன் அடித்த அடியில் சுருண்டு விழுந்தான்.


—---------------------------------


பரந்து விரித்த மலைத் தொடரில் சாலையோரம் சிறு மலைக்குன்று இருக்கிறது.. அதில் மூச்சு வாங்க மைதிலி ஏறிக் கொண்டிருந்தாள். அடுத்த நாள் அஷ்டமி என்றாலும்.. பௌர்ணமி முடிந்து எட்டாம் நாள் வெளிச்சம் நன்றாகவே பரவியிருந்ததால்.. மைதிலியால் இருட்டை பற்றிய கவலை இல்லாமல் ஏற முடிந்தது. முடிந்த வரை.. வேகமாக ஏறியவளுக்கு அந்த மலைத் தொடரில் சூர்யா தற்பொழுது எங்கே இருப்பான் என்று எல்லாம் தெரியாது. ஆனால் அவனைப் பார்த்துவிடுவோம் என்ற நம்பிக்கையில் வேகமாக ஏறினாள்.


சிறிது நேரத்திலேயே மலைக்குன்றில் ஏறி விட்டாள். அங்கிருந்து நிலா வெளிச்சத்தில் இருவர் ஒருவர் பின்னர் ஒருவராக நடந்துச் சென்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள். அது அவளது கணவனும் சித்தப்பாவாகவும் இருக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் முன்பை விட வேகமாக மலைக்குன்றில் இருந்து இறங்க ஆரம்பித்தாள், அவர்கள் தான் என்று ஊர்ஜீதம் செய்த பின் அழைக்கலாம் என்று நினைத்தாள். ஏனெனில் அது ஆபத்தான இடம்!


அதன்படி.. கரடுமுரடான பாதையில் நிதானமாக இறங்கினாள்.. அவர்களது உருவம் நிலாவின் வெளிச்சத்தில் நன்றாக தெரிந்த போது.. அவர்கள் தான் என்று ஊர்ஜீதமாகியது. மகிழ்ச்சியுடன் அவர்களை அழைக்க எண்ணியவள்.. அவர்களது நிலையைக் கண்டு அதிர்ச்சியுடன் நின்றுவிட்டாள்.


ஏனெனில் அவளது சித்தப்பா.. உடல் முழுவதும் கயிரால் கட்டப்பட்டு முன்னால் சென்றுக் கொண்டிருக்க.. சூர்யா அவருக்கு பின்னால் சென்றுக் கொண்டிருந்தான்.


அவர் என்னவோ கூற தலையைத் திருப்பினார். ஆனால் சூர்யா அவரது பின்னங்கழுத்தில் கையை வைத்து திருப்பிய விதம் கண்டு அதிர்ந்தாள். தன்னிடம் சித்தப்பாவின் மேல் அவனுக்கு நம்பிக்கை இல்லை என்றுக் கூறியவன் தான்! ஆனால் அதற்கு அவரை இவ்விதத்தில் நடத்துவான் என்று நினைத்துப் பார்க்கவில்லை. கோபமும், குழப்பமும் மேலிட.. அப்பவும், அவனை அழைத்து.. சூர்யாவிற்கு சங்கடத்தை ஏற்படுத்த விரும்பாமல்.. அவர்களை நோக்கி சென்றாள்.


ஓரிடத்தில அவர்கள் ஒருவரை நேராக பார்த்தவாறு ஒருவர் நிற்கவும்.. வேகமாக இறங்கியவள், அவர்களை நெருங்கிய பொழுது.. அவளது சித்தப்பா.. சூர்யாவை பார்த்து நேராக பார்த்து முறைத்தவாறு நின்றிருப்பது தெரிந்தது. அதற்கு மேல் பொறுக்க மாட்டாமல்.. சூர்யாவை அழைக்கலாம் என்று வாயைத் திறந்த பொழுது.. சூர்யா அவளது சித்தப்பாவிடம்.. வந்த வேலையில் பாதியை முடிச்சுட்டேன் என்றுக் கூறியதைக் கேட்டு அதிர்ந்தாள். அடுத்து அவளது சித்தப்பா பெட்டிக்காக வந்திருக்கிறாயா என்றுக் கேட்கவும், அதற்கு ஆம் என்று தலையை ஆட்டினான். அதைக் கேட்ட மைதிலிக்கு இதயம் சுக்கலாக உடைந்தது போன்று இருந்தது. அப்பொழுதே.. அவள் சூர்யாவின் எத்தனை காதலும், நம்பிக்கையும் வைத்திருக்கிறாள் என்று அவளுக்கு புரிந்தது. ஆனால்.. மிகவும் ஒழுக்கமானவன் போல் பேசி, அவளுக்கு அறிவுரை கூறி.. அவளை அதிகாரம் செய்து.. அவளுடன் இருந்த ஒவ்வொரு நிமிடத்திலும் இந்த விசயத்தை மறைத்து.. அவளை ஏமாற்றிவிட்டது புரிந்தது.


அவளுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் நடிப்பு என்ற அவளது மனதில் வார்த்தை மீண்டும் அவளது மனதில் ஒலிக்கவும், சுருக்கென்று இதயத்தில் ஊசியை குத்தியது போன்ற வலியை உணர்ந்தவள், கூடவே சூர்யா அவளது சித்தப்பாவை கொல்ல போவதாக கூறிவிட்டு நெருங்கவும், அதிர்ச்சியடைந்தாள். அவளது வலியும், அழுகையும் ஆத்திரமாக மாற.. அங்கிருந்த மரக்கட்டையால் அவனை ஓங்கி அடித்தாள்.





 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

நவம்பர் மாதம் தொடங்க இருக்கும்.. கதையில் இருந்து சின்ன டீசர்..

நேற்றே தரலாம் என்று இருந்தேன். ஆனால் இன்று எனது பிறந்தநாள்.. எனவே இந்த நாளிலேயே இங்கு தருகிறேன்.😊😊😊

இந்த மாதிரி.. கதைகள் பல வந்திருக்கலாம்.. ஆனால் எனது பாணியில் எவ்வாறு வருகிறது என்றுப் பார்க்கலாம்..

----------------------------


குடை வேண்டாமே.. இப்படிக்கு அடை மழை!



டீசர்


தனது தோழி அகிலாவின் வற்புறுத்தலில் இங்கு வந்தது தவறோ என்று அதிரா காலம் தாழ்த்தி வருத்தம் கொண்டாள். இது அகிலாவின் குடும்பத்தினர் மாலத்தீவிற்கு மேற்கொண்ட இன்பசுற்றுலா.. கூடவே அவளது பெற்றோரை போன்ற பெரும் பணக்காரர்களின் கேளிக்கை சங்கமம்! இங்கு அவளுக்கு என்ன வேலை!


அகிலா தனது அன்னையிடம் தனக்கு துணைக்கு என்று யாரும் இல்லை! அவளது பெற்றோருடனும்.. அவனது அண்ணனிடம் அவளுக்கு பிடிப்பு என்று ஒன்று இல்லை. அதனால் அங்கு தனித்து விடப்பட்டு போன்றிருக்கும். அதனால் அதிரா கண்டிப்பாக வர வேண்டும் என்று வற்புறுத்தி அழைத்து வந்தாள்.


அதிரா அவளது அன்னைக்கும்.. அதிரா சிறிது நாட்கள்.. இங்கு இருப்பது நல்லது இல்லை.. என்று இருக்கவும், அதிரா சம்மதம் தெரிவிக்க.. அவளது அன்னையும் சம்மதித்தாள். ஏனெனில் நின்று போன திருமணத்தைப் பற்றி துக்கம் விசாரிக்க என்று வரும் சொந்தங்களை எதிர் கொள்ளும் திறன்.. அதிராவிற்கு இல்லை.


ஆனால் அதற்கு பயந்து.. அகிலாவின் துணைக்கு என்று வந்து தான் தனித்து விடப்பட்டு விட்ட உணர்வு தோன்றவும் தான்.. இங்கு வந்தது தவறோ என்று அதிராவிற்கு உறைத்தது. இனி அவளால் திரும்பி செல்லவும் இயலாது. எந்த பிளைட் பிடிக்க வேண்டும்.. அதன் நேரம் போன்ற விபரங்கள் தெரியும். ஆனால் பயணத்திற்காக பணம் அவளிடம் இல்லை.


என்ன செய்வது என்று திணறலுடன் சுற்றிலும் பார்த்தவாறு நின்றிருந்தவளுக்கு.. தன்னை யாரோ உற்று நோக்குவது போன்று இருக்கவும், இதயம் சில்லிட்டது. அந்த திசையை பார்க்க தைரியமில்லாது.. அதற்கு எதிர் திசையில் வேகமாக சென்றாள்.


—--------------------------------------


“அ..அ..அ..ர்ஜுன் போதும் போகலாம்..” என்று அவளது குரல் நடுங்கியது.


ஆனால் அவளது குரலில் இருந்த நடுக்கத்தைப் பற்றிக் கவலைக் கொள்ளாது. அர்ஜுன் அவளது கரத்தை இறுக்கமாக பிடித்துக் கொண்டு முன்னேறிக் கொண்டு சென்றான்.


செல்ல செல்ல அந்த காட்டின் மரங்கள் அடர்ந்து காணப்பட்டு அந்த பகல் வேளையிலும் இருட்டடித்து காணப்பட்டது.


அர்ஜுன் உற்சாக குரலில் “எஸ் வந்தாச்சு! எப்படியிருக்கு இந்த இடம்?” என்றுக் கேட்டான்.


சுற்றிலும் பார்த்த அதிராவிற்கோ பயத்தில் உச்சி முடி சிலிர்த்தது போன்று இருந்தது. ஏனெனில் சுற்றிலும் அவளது உயரத்தில் பெரிய பெரிய மலர்கள் இருந்தது. அதைப் பார்த்தது.. அவளுக்கு படங்களில் ஆளை விழுங்கும் பெரிய மலர்கள் தான் நினைவிற்கு வந்தது.


எனவே சட்டென்று அவனது கரத்தை உதறிக் கொண்டு ஓட முயன்றாள்.


அர்ஜுனின் குரல் ஓங்கி ஒலித்தது.


“நில்லு அதிரா! என் பர்மிஷன் இல்லாம இங்கிருந்து போக முடியாது.”


அதிரா “நான்தான்.. என்னை விட்டுருங்க! உங்க அந்தஸ்த்து நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு சொல்லிட்டேனே..” என்று அழுங்குரலில் கூறினாள்.


அதற்கு அர்ஜுன் “நான் பதில் கேட்கலை. என் பர்மிஷன் இல்லாம நீ இங்கிருந்து போக முடியாதுனு தான் சொன்னேன். காட் இட்!“ என்று அழுத்தமான குரலில் கூறியவன், அதே அழுத்தமான நடையுடன் அவளை நோக்கி வந்தான்.


—---------------------------------------------------------------


பின்னால் இருந்து அணைத்தவனின் இறுக்கமான பிடியில்.. அதிராவிற்கு பயத்தையும்.. மயக்கத்தையும் ஒருங்கே உணர்ந்தாள். அவனது கரங்களை அகற்ற முயன்ற அவளது முயற்சி தோல்வியே தழுவியது.


“அதி..” என்று கிறக்கமான குரலில் அவளது காதில் அழுத்த முத்தமிட்டவனின்.. உதடுகள் கீழே இறங்கி அவளது கழுத்து வளைவில் பதிந்தது.


“அர்ஜுன் இது சரியில்லை விடுங்க..” என்ற அவளது குரலும் அவனது காதில் விழவில்லை.


அப்பொழுது அந்த கதவு திறந்தது.


திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்த அதிரா அங்கு அர்ஜுனின் தோழி ரிஷிதா நிற்பதை கண்டு மேலும் அதிர்ந்தாள். அர்ஜுனும் சங்கடப்பட்டு விட்டு விடுவான்.. என்று நினைத்தாள். ஆனால் அவனோ அவளை விடாது மட்டுமின்றி.. ரிஷிதாவிடம் “ஒகே தெரியாம கதவை திறந்திட்டே! கதவை சாத்திட்டு போயிடு..” என்றுக் கூறினான்.


—------------------


அதிரா மெல்ல எட்டிப் பார்த்தாள். அங்கு மூச்சு வாங்க அர்ஜூன் அவளைத் தான் தேடிக் கொண்டிருந்தான்.


அதிரா வின் பார்வை கிளம்பி தயாராக இருந்த பயணிகள் படகின் மீது படிந்தது.


அர்ஜூன் கண்ணில் படாமல்.. அந்த படகில் ஏறி விட்டால்.. அவள் தப்பி விடுவாள். ஆனால் அவனின் கண்ணில் படாமல் எப்படி செல்வது என்று திகைத்தாள். அப்பொழுது நண்பர்கள் குழு ஒன்று வேகமாக.. படகை நோக்கி செல்லவும்.. இதுதான் தருணம் என்று.. அவர்களுடன் சட்டென்று கலந்து கொண்டாள். போட்டிருந்த ஜெர்கீனை திருப்பிப் போட்டுக் கொண்ட.. தன்னுடைய புத்திசாலித்தனத்தை மெச்சியவாறு.. தலையை குனிந்தவாறு.. அங்கிருந்த பெண்ணுடன் ஒட்டியவாறு நடந்தவளின் இதயம்.. பரபரப்புடன் தேடிக் கொண்டிருந்த அர்ஜூனை கடக்கையில் வேகமாக துடித்தது.


இதோ அவனைக் கடந்து விட்டால் இன்னும் அவளால்.. நம்ப முடியவில்லை. இதோ நான்கடி தூரத்தில் படகில் ஏற வைத்திருக்கும் பலகையை நெருங்கி விட்டாள். மகிழ்ச்சியில் உள்ளம் குதுகலிக்க பலகையில் காலை வைத்த போது.. சட்டென்று அவள் பின்னால் இழுக்கப்படுவதை உணர்ந்தவள், அடுத்த நொடி.. அர்ஜூனின் கைவளைக்குள் இருப்பதை அதிர்ச்சியுடன் உணர்ந்தாள்.


மெல்ல விழிகளைத் திருப்பி அவனைப் பார்த்தாள்.


அர்ஜூன் "என்னை விட்டு போக ட்ரை செய்து.. எனக்கு வெறியை ஏத்தாதே அதி.." என்று இறுகிய குரலில் எச்சரித்தவன், இத்தனை நேரம் அவனது மனம் பட்ட தவிப்பை தணிக்க.. சட்டென்று குனிந்து அவளது இதழில் தனது வலிய உதடுகளை அழுத்த பதித்தான்.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 18


(பொருளடக்கம்)

இரு பொறி எரிய..

ஒன்று அழிக்குமாம்!

ஒன்று அளிக்குமாம்!


சோமேஸ்வரன் உதைத்ததில்.. விழுந்த சூர்யாவின் முதுகில்.. மண்ணில் புதைந்திருந்த.. பாறை குத்தியது. அதனால் ஏற்பட்ட வலியில் சுருண்டவனுக்கு அந்த வலி கூட பொருட்டாக தெரியவில்லை. மைதிலியை அங்கு பார்த்தது தான் அதிர்ச்சியாக இருந்தது.


கையில் மரக்கட்டையுடன் பித்து பிடித்தவள் போல் நின்றிருந்த மைதிலியை அழைத்த சோமேஸ்வரன் “மைதிலி! என் ஷுவில் சின்ன கத்தி ஒண்ணு ஒளிச்சு வச்சுருப்பேன். அதை எடுத்து என் கைக்கட்டை அறுத்து விடு! சீக்கிரம்.. இவன் எழுந்துட்டா டேன்ஞ்ர்” என்றார். மைதிலி.. இன்னும் திகைப்புடன் நின்றிருந்தாள்.


சோமேஸ்வரன் “மைதிலி சீக்கிரம்!” என்றுக் கத்தினார்.


மரக்கட்டையுடன் அதிர்ச்சி மாறாமல் நின்றிருந்த மைதிலிக்கு.. சோமேஸ்வரனின் கத்தல் சுயநிலைக்கு வர தேவையாக இருந்தது. எனவே தனது கையில் இருந்த மரக்கட்டையை கீழே போட்டுவிட்டு.. சோமேஸ்வரனின் ஷுவில் இருந்து சிறு கத்தியை எடுத்து.. சோமேஸ்வரனின் கட்டுக்களை அறுத்தாள். அவளது கண்களும் கைகளும் கட்டுக்களை ஒரு காரியத்தில் ஈடுபட்டிருந்தாலும்.. சூர்யா தரையில் விழுந்து கிடக்கிறான் என்பது தான் அவளது மனதில் ஓடிக் கொண்டிருக்கிறது.


சோமுஸ்வரனின் கட்டுக்கள் அவிழ்க்கப்பட்டதும்.. மைதிலி கீழே போட்டிருந்த.. கட்டையை எடுத்தவர், அது கொண்டு சரமாரியாக சூர்யாவை அடிக்க ஆரம்பித்தார். அவன் மேலும் வலியில் சுருண்டான். சூர்யாவை உதைக்க காலை ஓங்கிய பொழுது, மைதிலி “சித்தப்பா..” என்று அலறினாள்.


காதில் இரு கைகளையும் வைத்து அடைத்துக் கொண்டு.. கண்களை இறுக்க மூடியவாறு நின்றிருந்தாள். மைதிலியை திரும்பிப் பார்த்த சோமேஸ்வரன் இது சரியில்லை என்பது போல் தலையசைத்தார். சூர்யாவை புரட்டிப் போட்டு அவரைக் கட்டிய கயிற்றின் மீதியை எடுத்தவர், அது கொண்டு.. சூர்யாவை கரங்களைப் பின்னால் இழுத்து வைத்து கட்டியவாறு “என்ன மைதிலி! இவனுக்காக பாவம் பார்க்கிறாயா! கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்ன பேசினான் என்றுக் கேட்டே தானே! நீ சரியாக தான் கெஸ் செய்திருக்கிறே! அதனால தான் இவனை நோட்டம் விட்டேன். ஆனா இவன்.. என்னையே..” என்று ஆத்திரத்துடன் பற்களைக் கடித்துக் கொண்டு தனது கோபத்தை அந்த கடைசி முடிச்சை இறுக்குவதில் காட்டினார்.


பின் முகத்தில் வழிந்த வியர்வையை துடைத்தவாறு எழுந்தவர், “இவன் போலீஸ் டிப்பார்ட்மென்ட்டை சேர்ந்தவனு நான் சந்தேகப்பட்டது சரியா போச்சு மைதிலி! யாரோ போலீஸிற்கு இன்பார்ம் செய்திருக்காங்க! இதுக்கு தான் உன் அப்பாவை மலைக்கு அடிக்கடி போக வேண்டாம்னு வார்ன் செய்யுனு சொன்னேன். குறைந்த கூலிக்கு ஆளுங்க கிடைச்சாங்கனு.. சரியாக விசாரிக்காம ஆள் அட்ரஸ் தெரியாதவனுகளைக் கூட்டிட்டு வந்து.. மலையை தோண்டற வேலையை செய்யச் சொல்லிருப்பார். அதில் எவனோ ஒருத்தனுக்கு டவுட் வந்து.. போலீஸிற்கு சொல்லியிருப்பானு நினைக்கிறேன். இப்படித்தான் நாலு நாளுக்கு முன்னாடி நாலு பேரை கூட்டிட்டு வந்தார் தானே.. அதில் ஒருத்தனை காணோம்.. என்று அடுத்த நாள்.. மீதி பேர் வந்திருப்பாங்க போல! அவங்க கதி என்னாச்சுனு தெரியுமா!” என்றுக் கேட்டவர், அடுத்து இருந்த மலையுச்சியை காட்டி.. “மாறன் ஆவி அடிச்சிருச்சு! எல்லாரும் ஜாலியா நினைச்சுட்டாங்க.. இங்கே புதையல் கிடக்கு.. எல்லாரும் தோண்டலாம்.. கிடைச்சவங்க எடுத்துக்கலானு! ஆனா இன்னும் அந்த மாறன் ஆவி காவல் காத்துட்டு தான் இருக்கு! அவங்க அங்கே இன்னேரம்.. பொறுக்க எலும்பு கூட இல்லாம இருப்பாங்க!” என்றார்.


பின் “நாம் சொல்கிறபடி கேட்கிற பலியாடு என்று நினைத்து பாம்பை கூட்டிட்டு வந்திருக்கிறோம் மைதிலி..” என்று சூர்யாவை வெறுப்புடன் பார்த்தார்.


ஆனால் மைதிலி.. சோமேஸ்வரனின் பேச்சுக்களைக் கேட்கும் மனநிலையில் இல்லை!


அவள் பிறந்ததில் இருந்து.. இதுவரை யாரும் கொடுக்காத தைரியத்தையும், தன்னம்பிக்கையையும்.. நல்லதே நடக்கும் என்ற திடத்தையும் கொடுத்த சூர்யா அவளது மனதிலும் வாழ்க்கையிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தான். அவளது உலகம் புதிதாக பிறந்தது போன்ற பிம்பத்தை கொடுத்தான். அப்படிப்பட்டவன்.. அவளை ஏமாற்றியிருக்கிறான் என்பதை அவளால் இன்னும் நம்ப முடியவில்லை. ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை.. மிகுந்த அதிர்ச்சியில் இருந்தாள்.


சோமேஸ்வரன் இறுக்க கட்டியதால்.. ஏற்பட்ட வலியை பற்களைக் கடித்து அடக்கிய சூர்யா மெல்ல மைதிலியை பார்த்தான். அவளோ அவர்களைப் பார்க்காது.. வேறு திசை பார்த்தவாறு நின்றிருந்தாள். அவளது பக்கவாட்டு தோற்றமே.. அவளது மனநிலையைப் பறைச்சாற்றியது.


கசந்த சிரிப்பை சிந்திய சூர்யா “என்னை கடைசி வரை நம்புனு சொன்னேனே மைதி! ஆனா அவசரப்பட்டுடியே!” என்று வருத்தத்துடன் கூறினான்.


கண்களில் இருந்து கண்ணீர் தானே வழியவும், அதை அழுத்தமாக துடைத்தவள், அவன் புறம் திரும்பி “நான் கேட்ட போதே.. நீ ஆமானு சொல்லியிருக்கலாமே சூர்யா! ஆனா நான் உன் மேலே சந்தேகப்பட்டு கேட்கும் போதெல்லாம் அப்படியெல்லாம் இல்லைனு பொய் சொல்லியிருக்கே தானே! பொய் சொல்லிட்டு நம்புன்னா எப்படி நம்பறது சூர்யா! நாங்க முட்டாள்தனமான வேலைகளைச் செய்துட்டு இருக்கோம்.. என்றுச் சொல்லி.. எங்களை முட்டாள் ஆக்க தான் பிளன் போட்டு வந்தியா! அப்போ.. நம்மளோட பர்ஸ்ட் மீட்டிங் எல்லாம் பிளன்படி தானா! நீ பேசியது எல்லாம் பொய்யா! என்னைப் பார்த்ததும்.. உனக்கு வேல்லென்த் அப்படினு சொன்னதெல்லாம் சும்மாவா..” என்றவளுக்கு அதற்கு மேல் கூற முடியாமல் அழுகை வெடித்து வரும் போலிருந்தது.


அதற்கு சூர்யா “பாதியில் என்னைப் பற்றித் தெரிந்தால்.. இப்படித்தான் பேசுவேன்னு தெரியும் மைதி! அதுனால தான் கடைசி வரைனு வெயிட் செய் என்றுச் சொன்னேன்! நான் சொல்லித் தெரிவதை விட.. நீயே தெரிஞ்சுக்கும் போது.. நான் சொன்னதெல்லாம் உண்மைத்தான்னு தெரியும் என்றுச் சொன்னேன். இன்னும் பல உண்மைகள் உனக்கு தெரிய வரும் மைதி!” என்றான்.


மைதிலி ஆத்திரமும், அழுகையுமாக “ஆமா நானே தெரிஞ்சுகிட்ட உண்மை படு பயங்கரமா இருந்துச்சு சூர்யா! என் சித்தப்பாவை கொல்ல போறீயா! உன்னோட அடுத்த குறி நானா..” என்றாள்.


அதற்கு சூர்யா “நீ முழு உண்மையை இன்னும் தெரிஞ்சுக்கில மைதி!” என்று வருத்தமான சிரிப்புடன் கூறினான்.


அப்பொழுது இடைப்புகுந்த சோமேஸ்வரன் “அவன் கூட என்ன பேசிட்டு..” என்று அவரது பாக்கெட்டில் வைத்திருந்த கைக்குட்டையை கொண்டு.. சூர்யாவின் வாயைக் கட்டினார்.


பின் மைதிலியிடம் “நீ எதுக்கு தனியா இங்கே வந்தே?” என்றுக் கேட்டார்.


அப்பொழுதே தான் அவர்களைத் தேடி வந்ததிற்காக காரணம் அவளுக்கு நினைவிற்கு வந்தது.


உடனே மைதிலி “சித்தப்பா! நாம இத்தனை நாளா தேடிட்டு இருந்த பெட்டி.. நம்ம மாளிகைக்குள்ள தான் இருக்கு..” என்றுப் பரபரப்புடன் கூறினாள்.


அதைக் கேட்ட சோமேஸ்வரன் அதிர்ந்தவராய் அவளைப் பார்த்தார்.


மைதிலி தொடர்ந்து.. “பின் தோட்டத்தில் இருக்கிற என் ரூமோட பால்கனிக்கு கீழே.. புதரு எல்லாம் வளர்ந்திருக்கே.. அதுக்குள்ள சின்ன சுரங்கப் பாதை இருக்கு சித்தப்பா! அதுக்குள்ள போனா.. சின்ன ரூம் இருந்துச்சு! அதுல தான் தங்க நகைகளோட பெட்டி இருந்துச்சு!” என்றாள்.


சோமேஸ்வரன் “நீ எப்படி கண்டுப்பிடிச்சே?” என்றுக் கேட்கவும், மைதிலி “இதைக் கேட்டா இன்னும் ஷாக் ஆவீங்க.. அத்தையோட பேமலியே என்னை பலி கொடுக்க திட்டம் போட்டிருக்காங்க! அவங்க கிட்ட இருந்து தப்பிக்க.. ஒளிஞ்ச இடத்தில் தான்.. அந்த சுரங்கப்பாதை இருந்துச்சு! அது மட்டுமில்லாம மாறன் ஆவியாக ஒருத்தன் இத்தனை நாட்களா நடிச்சுட்டு இருந்திருக்கான். அவனை ஏற்பாடு செய்தது ஆரம்பத்தில் ஜோசியம் சொன்ன.. அந்த ஆதிகேஷன்..” என்றுப் படபடவென பார்த்தவற்றைக் கூறிக் கொண்டிருந்தாள்.


அவளது பேச்சில் இடையிட்ட சோமேஸ்வரன் “இப்போ அந்த பெட்டி எங்கே?” என்றுக் கத்தினார். அவரது ஓங்கிய குரலில் திடுக்கிட்ட மைதிலி “அங்கேயே தான் இருக்கு..” என்று மெல்லிய குரலில் என்றாள்.


சோமேஸ்வரன் “நிஜமா அங்கே தான் இருக்கா.?” என்றுக் கேட்டார்.


அவரது கேள்வியிலும் தோரணையிலும்.. திகைத்த மைதிலி “ஆமா சித்தப்பா..” என்றாள்.


சோமேஸ்வரன் “நீ எடுத்துட்டு வரலையா..” என்றுக் கேட்டார்.


மைதிலி இன்னும் சிறுத்த குரலில் “அது பெரிய பெட்டி.. கனமா இருக்கு! எப்படி எடுத்துட்டு வருவது?” என்றாள்.


பெட்டியை கண்டுப்பிடித்து விட்டேன் என்று அவள் கூறியதைக் கேட்டு சந்தோஷமடைவார்.. அல்லது அதிர்ச்சியடைவார்.. என்று எண்ணினாள். ஆனால் அவரது முகத்தில் இருந்த பாவனை அவள் இதுநாள் வரை முற்றிலும் அறியாதது. அவளைக் குழப்பமும் அடைய வைத்தது.


சோமேஸ்வரன் “நாம்.. இத்தனை நாட்களா பட்ட கஷ்டம் வீண் போகலை. இதை நீ யார் கிட்டயாவது சொன்னியா” என்றுச் சந்தேகத்துடன் கேட்டார்.


மைதிலி “இல்ல சித்தப்பா! அந்த ஆதிகேஷனோட ஆட்கள்..” என்று சூர்யாவை பார்த்தவள், உள்ளே போன குரலில் “இவரைக் கொல்ல போறதா.. பேசினதைக் கேட்டு.. நேரா இங்கு தான் ஓடி வரேன்.” என்று யார் முகத்தையும் பார்க்காது கூறி முடித்தாள்.


சோமேஸ்வரன் “குட்! அந்த பெட்டியை அங்கே யார் வச்சுருப்பாங்க! அதை திருடன் மலையில் இல்ல புதைச்சு வச்சான்?” என்று அவர் போக்கில் கேட்டார்.


மைதிலி “எனக்கு மூணு பேர் மேலே டவுட்! ஒண்ணு என் அப்பா, அடுத்தது அத்தை பேமலி, அப்பறம்..” என்று சூர்யாவை பார்த்தாள்.


வாயைக் கட்டிவிட்டதால்.. கண்களால் சிரித்தபடி.. மெல்ல எழுந்தமர்ந்தவன், தொடர்ந்து பேசு என்பது போல் தலையை ஆட்டினான்.


மைதிலி அவனைப் பார்த்தவாறு “சூர்யா மேலே டவுட்டா இருக்கு! இதுல சூர்யா தான் மறைத்து வைத்திருப்பான் என்று ஸ்ட்ரான்ங்கா நம்பறேன்.” என்றாள்.


சோமேஸ்வரன் எப்படி என்பது போல் பார்க்கவும், மைதிலி “அப்பாவா இருந்திருந்தா.. நிச்சயம் அவரோட நடவடிக்கையே மாறியிருக்கும். அத்தை பேமலிக்கு கிடைச்சுருந்தா.. அவங்க இன்னும் என்னைத் தேடிட்டு இருந்திருக்க மாட்டாங்க! இதுல எந்த பதட்டமும் இல்லாம.. திடமா இருக்கிறது சூர்யா தான்! அது மட்டுமில்லாம ஆரம்பித்தில் இருந்தே… எல்லாத்தையும் தட்டிப் பேசினார்.” என்று சூர்யாவை பார்த்தவளின் பார்வையில்.. ‘ஏன் என்னை ஏமாற்றினே?’ என்ற வலி இருந்தது.


உடனே சோமேஸ்வரன் சூர்யாவின் சட்டை காலரை பிடித்து எழுப்பி “மரியாதையா சொல்லு! அந்த பெட்டி உனக்கு எப்படி கிடைச்சுது? மீதி பெட்டி எல்லாம் எங்கே வச்சுருக்கே?” என்று உலுக்கினார்.


சோமேஸ்வரன் உலுக்கிய உலுக்கலில் சூர்யாவின் சட்டையே கிழிந்து விடும் போன்று இருந்தது. ஆனால் சூர்யா சிரித்தான். அவனது சிரிப்பை சோமேஸ்வரன் குழப்பத்துடன் பார்த்தார். சூர்யா தனது சிரிப்பை நிறுத்தவில்லை. பின் அவனது கண்களில் இருந்த சிரிப்பு மறைந்து.. கூர்ப்பெற்றது. சூர்யாவின் சட்டையை பிடித்திருந்த சோமேஸ்வரனின் பிடி தளர்ந்தது.


அப்பொழுது மைதிலி “சித்தப்பா!” என்று மெல்ல அழைத்து “நான் பெட்டி கிடைச்சுருச்சுனு மட்டும் தான் சொன்னேன். ஒரு பெட்டி தான் கிடைச்சுதுனு சொல்லவே இல்லையே..” என்றாள்.


ஒரு கணம் சோமேஸ்வரன் திகைப்புடன் இருவரையும் மாறி மாறிப் பார்த்தவர், “ஒரு பெட்டி கிடைச்சுருக்கு என்றுத்தான் சொன்னே மைதிலி! நான் நீ சொன்னதைத் தான் சொன்னேன்.” என்றார். அதைக் கேட்டு சூர்யாவின் தோள்கள் மேலும் சிரிப்பில் குலுங்கியது.


மைதிலி “நான் சொல்லுலை சித்தப்பா! இப்படி பொய் சொல்லாம அமைதியா நின்றிருந்தா கூட உங்களை நம்பியிருப்பேனே! இப்போ யோசிச்சு பார்த்தா.. பல விசயங்களில் குழப்பமா இருக்கு! நான் முதல்ல பெட்டி கிடைச்சுருச்சுனு சொன்னதும்.. நீங்க எப்படிக் கண்டுப்பிடிச்சேனு கேட்டீங்க! எப்படி கிடைச்சுது.. எங்கே இருக்குனு என்கிறது தானே நான் கேட்டதிற்கு இயல்பான பதிலா வந்திருக்கணும். சரி அதை விடுங்க.. அடுத்தது இப்போ அந்த பெட்டி எங்கேனு கேட்டிங்க.. அதாவது நான் எடுத்திருப்போனனு என் மேலே டவுட்டா! எல்லாத்தையும் விட.. அங்கே ஒரு பெட்டி தான் இருக்குனு எப்படித் தெரியும்? அப்போ அந்த பெட்டி அங்கே இருந்தது உங்களுக்கு தெரியுமா! இல்லை நீங்க தான் அங்கே கொண்டு போய் வச்சீங்களா! ஏன்னா நான் முதலில் பார்த்ததும்.. வீட்டுக்குள்ளவே இருக்கிற பெட்டியை இத்தனை வருஷமா.. மலையை குடைஞ்சு தேடிட்டு இருந்தோமானு தான் முதல்ல தோணுச்சு! ஆனா உங்களுக்கு அப்படித் தோணுலை. எல்லாமே குழப்பமா இருக்கே சித்தப்பா! ஏன் சித்தப்பா பேசாம இருக்கீங்க பதில் சொல்லுங்க சித்தப்பா!” என்றாள்.


சோமேஸ்வரன் “என்ன மைதி! நான் பதட்டத்தில் வார்த்தையை விட்டதை வச்சு.. என்னை சந்தேகப்படற.. அப்போ திக்கு வாய் இருக்கிறவங்க எல்லாம் குற்றவாளிங்களா?” என்றுக் கேட்டு சிரித்தார்.


ஆனால் மைதிலி “சரி சித்தப்பா! அந்த விசயத்தை எல்லாம் விடுங்க! இப்பவும் சரி.. சாயந்திரமும் சரி.. அத்தை பேமலி என்னை கொல்ல பார்க்கிறாங்கனு சொன்னேன். ஆனா நீங்க அதுக்கு பெருசா.. ஏன் ரியாக்ஷன் கொடுக்கலை? அப்போ நீங்களும் அதைத்தான் எதிர்பார்த்தீங்களா! ஆதிகேஷன் ஜோசியர் தான் எல்லாத்திற்கும் காரணம் என்றுச் சொல்றேன். அதுக்கும் உங்க கிட்ட இருந்து எந்த வித ரியாக்ஷனும் இல்லை! ஏன் சித்தப்பா?” என்றுக் கேட்டாள்.


சோமேஸ்வரன் “உன் மேலே நான் வச்சுருக்கிற பாசத்தையே நம்பலையா மைதிலி! நான் இறந்துட்டேன்னு மற்றவங்களை ஏமாற்றி.. நாலு வருஷமா பைத்தியம் மாதிரி.. இந்த காட்டுல நடக்கிற பல பயங்கரங்களைத் தாண்டி.. சுத்திட்டு இருக்கேன். இது எல்லாம் எதுக்கு? உனக்கு கிடைக்க வேண்டியது உனக்கு கிடைக்கணும் என்றுத்தான்! எனக்கு பிள்ளையா குட்டியா! ஆனா நான் டன்க் ஸ்லீப் ஆகி ஏதோ சொன்னதை வச்சு.. என்னை சந்தேகப்பட்டு பேசிட்டு இருக்கே! இது எல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது.. இவனா..” என்று சூர்யாவை பார்த்தார். அவனோ.. அவர் திணறுவதை சிறுச் சிரிப்புடன் வேடிக்கை பார்த்தவாறு நின்றிருந்தான்.


பின் சோமேஸ்வரன் மைதிலியை பார்த்து “என் மேலே சந்தேகப்படற.. ரைட்! மகேஸ்வரனின் பெண் எப்படியிருப்பே! நீ இப்படியெல்லாம் பேசுவதற்கு காரணம்.. இவன்தான்! இவன் என்னையும் உன்னையும் நன்றாக குழப்பி விட்டுருக்கான். நீயே இப்போ பார்த்தே தானே! இப்பவும் நான்தான்.. அதை மறைத்து வைத்து உன்னை ஏமாற்றுகிறேன்னு நம்ப வைத்திருக்கிறான். அவன் மாட்டிக் கொள்ளாமல் இருக்க.. முதல்ல உன் மேல் காதல்னு நாடகம் ஆடினான். அது பலிக்கலை. அதுனால இப்போ என் மேலே பழியை போட்டு தப்பிக்க பார்க்கிறான். என் மேலே உனக்கு இருக்கிற சந்தேகத்தை நான் போக்குகிறேன் மைதிலி! நான் உன் அப்பா மாதிரி! அதுக்கு முன்னாடி இவன் ரொம்ப டேன்ஞ்ர் இவனை ஒருவழி செய்துட்டு அப்பறம் நாம் பேசலாம்.” என்றார்.


சோமேஸ்வரன் இத்தனை வார்த்தைகள் பேசியிருக்கே.. சூர்யாவோ வாயும் கையும் கட்டப்பட்ட நிலையில் 'என் மேல் நம்பிக்கை இல்லையா?' என்ற கேள்வியை கண்ணில் தேக்கியவாறு அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.


மைதிலியின் கண்களில் விரக்தியே மீதியிருந்தது. அவளது வாழ்வில் அவள் மிகவும் நம்பிய இருவர் பொய்த்து போய் தன் முன் நிற்பதைப் பார்த்தாள். இருவரில் யாரை நம்பவும் என்று முடிவு எடுக்க முடியாமல் திணறினாள்.









 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 19


(பொருளடக்கம்)

ஒரு பொறியை அணைக்க..

மறு பொறி கிளம்ப..

பொறியின் ஆதியை அறியாரோ!



சோமேஸ்வரனையும் சூர்யாவையும் வெறுப்புடன் பார்த்த மைதிலிக்கு எதையும் யோசிக்க முடியவில்லை. எனவே கண்களை இறுக்க மூடி சில கணங்கள் நின்றாள்.


பின் மெல்ல இமையை திறந்தவள், அதே நிதானத்துடன் அவர்களை நோக்கி வந்த மைதிலி சூர்யாவை பார்த்து “கொஞ்சம் யோசிச்சா.. உனக்கே எல்லா உண்மைகளும் தெரியும் என்றுச் சொன்னே! இதுக்கு மேலே யோசிக்க எனக்கு பயமா இருக்கு.. சூர்யா! தெரிந்து கொண்ட உண்மைகளோட வீரியத்தையே என்னால் தாங்கிக்க முடியல. அதுனால மீதியை நீயே சொல்லு..” என்று அவனது வாய் கட்டை அவிழ்க்க போனாள்.


ஆனால் சட்டென்று அவளது கையைப் பற்றித் தடுத்த சோமேஸ்வரன் "நீ தப்பான ஆள் கிட்ட உண்மையை கேட்கிறே மைதிலி! நல்லா யோசிச்சு பாரு.. நாம கரெக்ட்டா.. ஒரு இலக்கை நோக்கி போயிட்டு இருந்தோம். கிட்டத்தட்ட நெருங்கிவிட்ட நேரத்தில்.. இவன் வந்த பிறகு எத்தனை குழப்பங்கள், எத்தனை பிரச்சினை.. உன் உயிருக்கே ஆபத்து வந்துச்சு. நீயே தான் அவன் மேலே சந்தேகப்பட்ட.. நீ சந்தேகப்பட்டது சரியா இருந்துச்சு! நம்ம இரண்டு பேருக்குள்ள சண்டையை மூட்டி‌ விட்டுட்டு அவன் பெட்டியை எடுத்துட்டு போக பார்க்கிறான். அவனை பேச விடாதே! அவனை என்கிட்ட விடு!" என்று சூர்யாவை முறைத்தார்.


அதற்கு மைதிலி "இன்னும் உங்க கிட்ட இருந்து எனக்கு சரியான பதில் வரல சித்தப்பா! அவன் என்ன சொல்கிறானு பார்க்கணும்." என்று சூர்யாவின் வாயில் இருந்த கட்டை அவிழ்த்து விட்டாள்.


கழுத்தை அசைத்து.. தன்னை சரிச் செய்துக் கொண்ட சூர்யா “என் கைக்கட்டையும் அவிழ்த்து விடு மைதி.." என்றான்.


அதற்கு மைதிலி "ஏன்? என் சித்தப்பா உன்னை ஒண்ணும் செய்ய மாட்டார். அவரை நான் நம்பறேன்.” என்றாள்.


அதைக் கேட்டு சிரித்த சூர்யா “நான் எனக்காக சொல்லுலை மைதி! உனக்காக சொல்கிறேன். நான் சில உண்மைகளை சொன்ன பிறகு.. அவர் உன்னை ஒண்ணும் செய்யக் கூடாதில்ல. அப்படி ட்ரை செய்தா நான் தடுக்கணுமே!” என்று முறுவலித்தான்.


அதற்கு மைதிலி “என் சித்தப்பா அப்படியெல்லாம் செய்ய மாட்டார்.” என்றவளுக்கு கண்ணீரும் முறைப்பும் ஒருங்கே வரவும், அதை அவர்களுக்கு காட்டாமல்.. சோமேஸ்வரனின் கட்டை அறுக்க பயன்படுத்திய கத்தி கொண்டு சூர்யாவின் கட்டை அறுக்க ஆரம்பித்தாள்.


உடனே சோமேஸ்வரன் "வேண்டாம் மைதிலி! அவன் உன் கழுத்தில் கத்தியை வச்சு என்னை மிரட்டுவான்." என்று இறுகிய குரலில் எச்சரித்தார்.


ஆனால் மைதிலி.. அவர் பேசியதைக் காதில் வாங்காமல் சூர்யாவின் கயிற்றை முழுவதுமாக அறுத்தாள்.


தனது கைக்கட்டை கழன்றதும்.. மணிக்கட்டை ஆட்டிப் பார்த்தவன், "உன்னை நினைச்சா பெருமையா இருக்கு மைதி! பல விசயங்களை தைரியமா கடந்து வந்திருக்கே! சூப்பர்! நிஜமா இதை உன் சித்தப்பாவோ நானோ எதிர்பார்க்கலை. என்னை விட அவர் ரொம்பவே ஷாக்கில் இருக்கார். கொஞ்சம் யோசிச்சா நீ எல்லாரையும் மிஞ்சிடுவே மைதி! நீயே ஆல்மோஸ்ட் சில விசயங்களைக் கண்டுப்பிடிச்சுட்டே! நானும் சில விசயங்களைத் தெரிஞ்சுக்கிட்டேன். இரண்டையும் கனெக்ட் செய்தா முழு உண்மையும் கிடைத்திரும்..” என்றுக் கூறியவன், திடுமென அவளை நோக்கி பாய்ந்தான்.


மைதிலி அதிர்ந்து நோக்கையில் அவளது கரத்தைப் பற்றி.. இழுத்தவன், அவளுக்கு பின்னால் கையை உயர்த்தி யாரையோ அடிக்க.. தரையில் பலமாக விழுந்த சத்தம் தான் கேட்டது.


மைதிலி மெல்ல திரும்பி பார்த்த பொழுது.. சோமேஸ்வரன் கையில் கத்தியுடன் தரையில் கிடக்க.. சூர்யா அவரை நோக்கி பாய்ந்தான். அப்பொழுதே.. அவளது சித்தப்பா அவளை கத்தி கொண்டு.. அவரது கைக்குள் வைக்க நினைத்திருக்கிறார். அதை சூர்யா தடுத்திருக்கிறான்.


அதன் பின் இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர் அல்ல என்பது போல் சண்டையிட்டார்கள். மைதிலி திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அன்று இரண்டாம் முறையாக அவளது நம்பிக்கையை உடைத்து.. முற்றிலும் அவளிடம் இருந்து விலகி போனது போல் தெரிந்தார்.


சோமேஸ்வரன் தனது கையில் இருந்த கத்தியை கொண்டு.. சூர்யாவை ஆக்ரோஷத்துடன் குத்த முயன்றுக் கொண்டே இருந்தார். ஒவ்வொரு முறையும் சூர்யா இலாவகமா தடுத்துக் கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில் இருவரும் அடித்துக் கொண்டு இருபக்கமும் விழுந்தார்கள். சூர்யா சுதாரித்துக் கொண்டு எழும் முன்.. சோமேஸ்வரன் எழுந்து சட்டென்று.. கத்தியை ஓங்கிக் கொண்டு வந்தார். உடனே சூர்யா சட்டென்று தனது சட்டையின் அடியில் கையை விட்டு.. கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்தவன், கண்ணிமைக்கும் நேரத்தில்.. சோமேஸ்வரன் கையில் இருந்த கத்தியை குறிப் பார்த்து சுட்டான். சரியாக அந்த கத்தியில்.. குண்டு பட்டு.. கத்தி தெறித்து விழுந்தது. இதை எதிர்பார்க்காத சோமேஸ்வரன் அதிர்ந்து நின்றார். அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொண்ட சூர்யா.. அவரை அடித்து வீழ்த்தினான். அது சைலன்ட் ரக துப்பாக்கி என்பதால்.. அந்த இடம் இவர்களது கைக்கலப்பின் சத்தத்தைத் தவிர அமைதியாக தான் இருந்தது.


தரையில் விழுந்த சோமேஸ்வரன் சுதாரித்து எழும் முன்.. அவர் முன் துப்பாக்கியை நீட்டிய சூர்யா “நீல் டவுன் மிஸ்டர் சோமேஸ்வரன்! ரைஸ் யுவர் ஹென்ட்ஸ் அன்ட் டொன்ட் நெவர் எவர் ட்ரை டு டூ எனி சில்லி தின்ங்க்ஸ்! அதர்வைஸ் ஐ வில் நெவர் எஸிடெட் டு சூட் யு!” என்று மிரட்டினான்.


மூச்சு வாங்க எழுந்த சோமேஸ்வரனுக்கு சூர்யா சொல்வதை செய்வதைத் தவிர வேறு வழியில்லை. எனவே இரு கரங்களையும்.. உயர்த்திக் கொண்டு.. மண்டியிட்டு அமர்ந்தார்.


சூர்யாவின் பார்வை.. மெல்ல மைதிலியிடம் சென்றது. அவள் சூர்யா துப்பாக்கி பயன்படுத்தியதில் அதிர்ச்சியில்.. உறைந்து நின்றிருந்தாள்.


சூர்யா தோள்களைக் குலுக்கியவாறு “ஸாரி மைதிலி! இதை யுஸ் செய்யாமலேயே விசயத்தை முடிச்சுரலாம்னு நினைச்சேன். ஆனா..” என்று கண்களால்.. சற்று தள்ளி விழுந்த கத்தியை கட்டினான்.


முற்றிலும் வேறாய் தெரிந்த தனது சித்தப்பாவை பார்த்தவளுக்கு.. அவரின் இந்த முகம் பயத்தையும்.. அதிர்ச்சியையும் கொடுத்தது.


பின் சூர்யா “ஒகே! நாம் விட்ட விசயத்தை தொடரலாமா! எனக்கு சில விசயங்கள் தெரிந்தது. அந்த விசயங்களுக்கு கூட உனக்கு தெரிந்த விசயங்களை கனெக்ட் செய்தால்.. புது விசயங்களும் தெரியுது. சில கேள்விகளுக்கு பதில் சொல்லு.. பிறகு எல்லாத்தையும் கனெக்ட் செய்து முதல்ல இருந்து சொல்கிறேன்!” என்றான்.


பின் சூர்யா “உன் கொள்ளு தாத்தா இறந்த பின்.. கொஞ்ச வருடங்களாக.. அமைதியாக இருந்த மாறன் ஆவி மேட்டர் எப்போ மறுபடியும் வந்துச்சு?” என்றுக் கேட்டான்.


மைதிலி “முப்பது வருஷத்திற்கு முன்னாடி.. புதுசா கல்யாணமான ஜோடி பார்த்திருக்காங்க!” என்றாள்.


சூர்யா “அந்த மாறன் ஆவியாக நடிக்க வந்தவனை நீ பார்த்திருக்கே ரைட்..” என்றுக் கேட்கவும், அவள் ஆம் என்று தலையை ஆட்டினாள்.


சூர்யா “அப்போ முப்பது வருஷத்துக்கு முன்னாடி இருந்து அவன் நடிச்சுட்டு இருக்கிறான்.” என்றதும் மைதிலி “ஆமா! அவங்க அப்படித்தான் பேசிட்டாங்க..” என்றுப் பரபரப்புடன் கூறியவள், தொடர்ந்து “சிங்! இத்தனை வருஷமா இங்கே இருக்கே இன்னும் தமிழ் சரியா பேச கத்துக்கலையானு.. கற்பகம் சொல்லிட்டு இருந்தா..” என்றான்.


அதைக் கேட்டு தற்பொழுது சூர்யா பரபரப்பானான்.


“உன் சித்தப்பா.. குஸ்தி எங்கே கத்துக்கிட்டார்?” என்றுக் கேட்டான்.


மைதிலி “பஞ்சாப்பில்.. அங்கே டூருக்கு போனவர், அங்கேயே நான்கு மாதம் தங்கிட்டாருனு என் அம்மா சொல்லியிருக்காங்க!” என்று அவள் கூற கூறவே விடை தெரிந்துவிட்ட அதிர்ச்சியில் பிளந்த வாயை கரம் கொண்டு அடைத்தாள்.


மைதிலியிடம் கேள்வி கேட்டாலும்… சூர்யாவின் பார்வையும் துப்பாக்கியும்.. சோமேஸ்வரனை நோக்கி தான் இருந்தது.


அவரிடம் இருந்து பார்வை எடுக்காது.. சூர்யா “பஞ்சாப்பில் குறிப்பிட்ட சில குடும்பங்களில்.. ஆண்கள் சர்வசாதாரணமாக ஏழடி இருப்பாங்க! அவங்க கோதுமை கலரில் டார்க்கா தான் இருப்பாங்க! சோ டூருக்கு போன உன் சித்தப்பா.. அங்கே குஸ்தி கத்துக்கிறேன் என்றுக் கூறி.. தங்கிய காலத்தில்.. இந்த பஞ்சாப்காரனை பார்த்து.. மாறனோட ஆவியா நடிக்க இங்கே கூட்டிட்டு வந்திருக்கிறார். உன் சித்தப்பா.. முப்பது வருஷமா இந்த முயற்சியில் ஈடுபட்டுட்டு இருந்திருக்கிறார்.” என்றான்.


பின் மைதிலி “ஆனா ஆதிகேஷன் தான்… அந்த பஞ்சாப்காரனை நடிக்க ஏற்பாடு செய்திருக்கார் என்றுப் பேசிட்டாங்க?” என்றாள்.


அதற்கு சூர்யா “யார் பேசிக்கிட்டாங்க?” என்றுக் கேட்டான்.


மைதிலி “கற்பகமும்.. அந்த பஞ்சாப்காரனும்.. ஸ்டோர் ரூமில் பேசிக்கிட்டதை நான் ஒட்டு கேட்டேன்.” என்றான்.


சூர்யா “கற்பகம்.. ஓ.. உன் தாத்தாவை பார்த்துக்கிற லேடி! ஆனால் ஸ்டோர் ரூமில் பேசிக்கிட்டாங்களா..!” என்கவும், மைதிலி “ஆமாம்! அந்த சுரங்கப்பாதையோட மற்றொரு என்ட்.. ஸ்டோர் ரூமில் தான் முடியுது. அங்கே அதான் அவங்க என்னைப் பார்த்துட்டாங்க.. அவங்க கிட்ட இருந்து தப்பிச்சு வந்தேன்.” என்றவள், எந்த பாதையின் வழியாக என்றுக் கூற நினைத்தவள்.. சொல்ல வாயெடுக்கையில் சூர்யா தொடர்ந்து பேசினான்.


அதற்கு லேசாக சிரித்த சூர்யா “ஆதிகேஷனுக்கும்.. உன் சித்தப்பாவிற்கும் தொடர்பு இருக்கலாம். அப்படித்தான் முதல்ல நினைச்சேன். இல்லைன்னா.. அந்த ஆதிகேஷனும்.. இவர் ஆட்டுவிக்கிற ஆளில் ஒருத்தராக இருக்கலாம்.” என்றான்.


அதைக் கேட்டு அதிர்ந்த மைதிலி ‘எப்படி’ என்பது போல் பார்த்தாள்.


சூர்யா “ஜஸ்ட் எ கெஸ்! ஆதிகேஷன் தான்.. எல்லாத்திற்கும் காரணம் என்று நீ கண்டுப்பிடித்தே! ஆனா இப்போ நம்ம கண்ணு முன்னாடி.. இருக்கிற இவரே வாயை விட்டு உளறி.. இவருக்கும் முக்கிய பங்கு இருக்கு என்று மாட்டிக்கிட்டார். எப்படி அவருடைய தேடலுக்கு முதல்ல பஞ்சாப்காரன், அப்பறம் உன்னை, அப்பறம் என்னை.. எல்லாம் யுஸ் செய்ய நினைத்தாரோ.. அதே மாதிரி அந்த ஜோசியனையும் யுஸ் செய்திருக்கலாம். சோ.. எல்லாத்திற்கும் காரணம் இவர்தான் என்றுச் சொல்கிறேன். எப்படி என்றுச் சொல்லட்டுமா..” என்றான்.


சோமுஸ்வரன் சிறு ஏளனச்சிரிப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டார். ஆனால் அதைப் பற்றி.. சூர்யா கவலைப்படவில்லை. ஆனால் அவனது கவனத்தை அவரிடம் இருந்து திருப்பவும் இல்லை. அவரின் மேல் கவனத்தை வைத்தவாறு கூற ஆரம்பித்தான்.


“உன் சித்தப்பாவும் உன்னை மாதிரி தான்.. சின்ன வயசுல இருந்தே.. இந்த மலையில்.. நம்மளோட சொத்தை ஒருத்தன் திருடிட்டு போய் புதைத்து வச்சுருக்கான் என்றுச் சொல்லி.. வளர்க்கப்பட்டிருக்கலாம். அந்த வெறியால் தான்.. இருபத்தியொரு வயசுலேயே இந்த வேலையை ஆரம்பித்திருக்கிறார். ஏழடி உயரத்தில் இருக்கிற ஆளைக் கூட்டிட்டு வந்து மாறனோட ஆவி என்று பயமுறுத்திட்டு.. மலையில் தேடிப் பார்த்திருக்கிறாங்க! ஆனா பலன் ஜீரோவாக இருக்கவும், நாலு வருஷத்திற்கு முன்னாடி எல்லாரோட ஆசையை கிளப்பி விட்டிருக்கிறார். எல்லாரும் சேர்ந்து தேடினா கிடைக்கும் என்று நினைச்சுருக்கார். அப்பறம் தான் அந்த ஒரு பெட்டியை கண்டுப்பிடிச்சுருக்கிறார். ஆனா எல்லாருக்கும் அதில் ஷேர் போகும் என்று ரியலைஸ் செய்திருக்கிறார். தான் மட்டும் அனுபவிக்கணும் என்று பேராசை பட்டிருப்பார். அதனால முதல்ல உன் பெரியப்பா குடும்பத்தை துரத்தி விட்டார். உன் அப்பாவிற்கும்.. உன் அத்தைக்கும் ஏதோ பிரச்சினையை கிளப்பி விட்டிருக்கிறார். அப்பறம் இறந்தது போல் காட்டிட்டு.. உன்னைக் கூட்டு சேர்த்திட்டு.. தேட ஆரம்பித்திருக்கிறார்.”


“பிகாஸ் அவர் உயிரோட இருந்தால்.. அவர் எல்லார் கூடவும் ஷேர் செய்யணும். நீ மட்டும் என்றால்.. உன்னை கழற்றி விடுவது எளிது. அப்பறம் அந்த மாறன் ஆவியை மேட்டரை மறுபடியும் ஆரம்பித்து.. இம்முறை உங்களை டார்கெட் செய்து பயமுறுத்தியிருக்கிறார். அப்பறம்.. அவர் இதுக்கு நடுவுல தொடர்ந்து மற்ற பெட்டியை தேடிட்டு இருந்திருக்கிறார். உன் அப்பாவோட முயற்சியையும் மாறன் ஆவியா நடிக்கிறவனை வைத்து தடுத்திருக்கிறார். உன் அத்தை பேமலியை இன்னொரு மாதிரி திசை திருப்பி விட்டிருக்கிறார். உன் அப்பாவிற்கு என்ன டார்கெட் என்றுத் தெரியலை. உன் அத்தை பேமலிக்கு ஜோசியர் மூலம்.. உன்னை பலி கொடுக்க சொல்லிட்டு.. அப்பறம் அந்த விசயத்தை.. போலீஸிடம் போட்டுக் கொடுத்து மாட்ட வைக்க பிளன் போட்டிருக்கலாம். உன் பெரியப்பா பேமலியை ஆல்ரெடி.. அனுப்பியாச்சு! இப்படி இருந்த டைமில் ஹெல்ப் செய்வேன் என்று என்னைக் கூட்டிட்டு வந்து.. அவருக்கு ஆப்பை அவரே தேடிட்டார்.” என்றுச் சிரித்தான்.


அவள் கூறிய விசயங்களையும்.. அவன் கண்டுப்பிடித்த விசயங்களையும்.. வைத்து சூர்யா இணைத்து.. இத்தனை வருடங்களாக நடந்துக் கொண்டிருப்பதைக் கூறியதைக் கேட்டு மைதிலி அதிர்ந்து நின்றாள்.


சூர்யா “இதிலும் பல மர்மங்கள் இருக்கு மைதிலி! அதற்கு உன் சித்தப்பா தான் பதில் சொல்லணும்.” என்றுவிட்டு அவரை நோக்கி சென்றவன், தனது கையில் இருந்த துப்பாக்கியை அவரது நெற்றிப் பொட்டில் அழுத்தினான்.


பின் “முப்பது வருடங்களுக்கு முன் மாறன் மாதிரி.. நடிக்க ஒரு ஆள் கூட்டிட்டு வந்தீங்க ஒகே! முதலில் உங்க தாத்தா.. அதே மாதிரி நடிக்க ஆள் ஏற்பாடு செய்தார். அதைத்தான் நீங்களும் செய்திருக்கீங்க! ஆனா.. மைதிலியோட கொள்ளு தாத்தா இறந்தது எப்படி? இப்போ கூட இருந்துட்டே துரோகம் செய்கிற உங்களை மாதிரி.. உங்க தாத்தா இருந்த காலக்கட்டத்தில் இருந்த கருப்பு ஆடு யார்?” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்டு சோமேஸ்வரனும் மைதிலியும் அதிர்ந்துப் போனார்கள். அவர்கள் இந்த கோணத்தில் யோசித்ததில்லை.


சூர்யா தொடர்ந்து “அந்த பெட்டி எங்கே கிடைத்தது? மைதிலி சொன்ன சுரங்கப்பாதை இருப்பது உங்களுக்கு எப்போ தெரிந்தது? மீதி பெட்டிகள்.. எங்கே என்றுத் தெரியுமா? அந்த ஆதிகேஷன் யார்? முதலில் உங்களுக்கு பதில் தெரியாத கேள்வியை கேட்டுட்டேன் ஸாரி! ஆனா இதெல்லாம் உங்களுக்கு தெரிந்த கேள்விகள்.. எக்ஸாமிற்கு வந்தா.. ஹன்டர்ட்டு மார்க்ஸ் வாங்கி தரக் கூடிய கேள்விகள்! அதனால் பதில் சொல்லுங்க..” என்றான்.


சோமேஸ்வரன் மெல்ல சிரித்தார். பின் “நீ இத்தனை கேள்விகள் கேட்டே தானே! நான் ஒரே கேள்வி கேட்கிறேன். நீ யார்?” என்றுக் கேட்டார். மைதிலியின் பார்வை சூர்யாவிடம் கேள்வியாக திரும்பியது.


சூர்யா முறுவலித்தவாறு “இதற்கு எத்தனையோ தரம் பதில் சொல்லியாச்சு! இப்போ நீங்க புதுசா இன்னொன்றையும் சேர்த்திருக்கீங்க.. போலீஸ் டிப்பார்ட்மென்ட்டை சேர்ந்தவன் என்று! அப்பறம் என்ன நான் ஐம்முகம் கொண்டவன்!” என்றவனின் கண்கள் அந்த இருட்டிலும் பளபளத்தது.


அப்பொழுது வேகமாக இரு மரக்கட்டைகள் பறந்து வந்தன. ஒரு கட்டை.. சரியாக துப்பாக்கியை வைத்துக் கொண்டிருந்த சூர்யாவின் மணிக்கட்டை நோக்கி வந்தது. மற்றொன்று அவனது தலையை நோக்கி வந்தது. தனது தலையை நோக்கி வந்த கட்டையை சட்டென்று திரும்பி பற்றிய சூர்யாவினால்.. தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியை காப்பாற்ற முடியவில்லை. அவனது கையில் வைத்திருந்த துப்பாக்கி கீழே விழவும், அதை சோமேஸ்வரன் சட்டென்று குனிந்து எடுத்து சூர்யாவை நோக்கி நீட்டினார்.


தற்பொழுது சூர்யா கரங்களை உயர்த்தியவாறு பின்னால் சென்றான். மைதிலி என்ன நடந்தது என்று உணரும் முன்.. ஒருவன் அவளை நடத்திக் கொண்டு வந்து.. சூர்யாவுடன் நிற்க வைத்தான். அவர்கள் யார் என்று மைதிலிக்கு தெரிந்துவிட்டது. அவர்கள் சோமேஸ்வரனின் சிருஷ்யர்கள்! சில இளைஞர்களுக்கு மல்யுத்தம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்பொழுது.. பொழுதுபோக்காக மைதிலிக்கு பட்டது. தற்பொழுது இந்த வேலைக்காகவே அவர் ஆட்களை ஏற்பாடு செய்து தயார் செய்துள்ளார் என்று மைதிலிக்கு புரிந்தது.


சுற்றிலும் நின்ற.. நான்கு இளைஞர்களைப் பார்த்த சூர்யா “இவங்க தான் உங்களோட கூலிப்படையா?” என்றுச் சிரித்தான்.


ஆனால் சோமேஸ்வரன் சூர்யாவை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.


“கொஞ்ச நேரத்தில் என்னையே கலங்கடிச்சுட்டே இல்ல! என்னோட இரகசியங்கள் சிலதையும் தோண்டிப் பார்த்துட்டே இல்ல..” என்று தனது கையில் வைத்திருந்த துப்பாக்கி கொண்டே.. சூர்யாவின் முகவாயில் குத்தவும், அவன் தடுமாறி நின்றான்.


பின் மைதிலியை பார்த்த சோமேஸ்வரன் “மாறனை மாதிரி இருக்கிறானு சொன்னதும்.. நான் அவனை எப்படியாவது கூட்டிட்டு தானே வரச் சொன்னேன். உன்னை யார் காதலிச்சு கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வரச் சொன்னது?” என்று உறுமினார்.


பின் தனது ஆட்களைப் பார்த்து “ஏன் லேட்?” என்றுக் கர்ஜீத்தார்.


அதில் ஒருவன் “ஸார்! சரத்சிங் மாட்டிக்கிட்டான், கற்பகம் அங்கிருந்து தப்பிச்சு வந்து இதைச் சொன்னாங்க..” என்றுப் பரபரப்புடன் கூறினான்.


அதைக் கேட்ட சோமேஸ்வரன் அதிர்ந்தவராய் “என்ன சொல்றே?” என்றுக் கத்தினார்.


அதற்கு அவன் “ஆமாங்க! நீங்க சொன்ன மாதிரி.. மைதிலியை பயமுறுத்த சுரங்கப்பாதையின் வழியாக மாளிகைக்குள் சென்றவன், அங்கே என்ன நடந்துனு தெரியலை. திரும்பி சுரங்கப்பாதையின் வழியாக வெளியே வந்திருக்கிறான். அப்போ அங்கே நின்றுட்டு இருந்த உங்க அக்காவை பார்த்தவன், இப்போ அவங்க கண்ணுல பட்ட.. வேஷம் கலைந்திரும்னு பின் கேட்டை நோக்கி ஓடியிருக்கான். அப்போ.. கால் தடுக்கி விழுந்ததில்.. அவனது நெற்றியில் நல்ல அடி! அந்த சத்தம் கேட்டு திரும்பி அவனைப் பார்த்தவங்களுக்கு.. அவன் மனுஷன் தான்னு தெரிஞ்சுருச்சு. அப்போ பிடிப்பட்டுட்டான்.” என்று அவன் கூறி முடிப்பதற்குள்.. அவனின் கன்னத்தை சோமேஸ்வரன் அறைந்திருந்தார்.


பின் “போச்சு! போச்சு! நான் இத்தனை வருஷமா.. இரகசியமா வைத்திருந்தது.. உங்களை மாதிரி முட்டாள்களால் எல்லாம் போச்சு! முதலில் நீதான் தொடங்கி வச்சே!” என்று மைதிலியை பார்த்து கத்தினார். பின் சுற்றிலும் கோபத்துடன் பார்த்துவிட்டு “ஆல் ஆர் ஸ்பாய்லிங் மை கேம்..” என்று விண்ணை பார்த்து கத்தினார்.


அப்பொழுது சூர்யா “ஹலோ ஆதிகேஷன் அலைன்ஸ் சோமேஸ்வரன்! பிளேம் செய்ய வேண்டியது நீங்க இல்லை. மைதிலி தான் உங்க மேலே பிளேம் வைக்கணும்.” என்றவனின் விழிகளில் கோபம் தெறித்தது.


அவர் மைதிலியை பார்க்க அவள் அவரைத் தான் வெறித்து பார்த்தவாறு நின்றிருந்தாள்.


மைதிலி மெல்ல “நீங்க தான் என்னை கொல்ல சொன்னீங்களா சித்தப்பா! அந்த பக்கம் அப்படிச் சொல்லிட்டு.. இந்த பக்கம் எனக்காக இந்த புதையலை தேடற மாதிரி பொய் சொல்லிட்டு இருக்கீங்களா சித்தப்பா!” என்று முகத்தில் கசப்புடன் கேட்டாள்.


அதற்கு சோமேஸ்வரன் தோள்களைக் குலுக்கி விட்டு “ஒகே! ஒகே! நான் சில விசயங்களை ஒத்துக்கிறேன். உன் புருஷன் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்றேன். ஆமாம்.. சூர்யா சொல்வது சரித்தான்! என்ன தான் என் அப்பா.. என்னை அடக்கி வச்சாலும்… எங்களோட சொத்து.. அந்த மலைக்குள்ள புதைத்து கிடக்கு என்ற வெறி.. எனக்குள்ள எரிந்துக் கொண்டு இருந்தது. அப்போ காலேஜ் டூர் விசயமாக பஞ்சாப்பிற்கு போனேன். என் தாத்தா போட்ட பிளனே.. நானும் செய்ய நினைச்சேன். அதனால என்ன வருதுனு பார்த்துரலானு இருந்தேன். நீ கெஸ் செய்தது சரிதான்! மாறனின் ஆவி பயம் காட்டி யாரையும் அங்கே வர முடியாம செய்ய தான் முடிந்தது. ஆனால் பெட்டிகள் கிடைக்கலை. ரொம்ப ஓய்ந்து போயிட்டேன். அதுக்கு பிறகு நீ கெஸ் செய்ததும் சரிதான்! நானே ஜோசியக்காரனாக வேஷம் போட்டுட்டு போய்.. குறி சொல்கிற மாதிரி சொல்லி.. என் பிரதர்ஸ் வச்சு தேட ஆரம்பித்தேன். அப்போ நான் தனியாக ஒரு பக்கம் தேடிய போது தான்.. அந்த புதையல் கிடைச்சுது.” என்றுவிட்டு பேச்சை நிறுத்தினார்.


பின் “எங்கே கிடைத்தது என்றுச் சொல்லணுமா! எப்படிச் சொல்வேன் என்று நினைக்கறீங்க! அப்பறம் நீங்களும் அங்கே தேட ஆரம்பிச்சுருவீங்களே!” என்றுச் சிரித்தவர், சூர்யாவை நோக்கி குனிந்து “ஒருவேளை நீங்க இப்போ உயிரோட இங்கிருந்து போனால் தான்!” என்றுவிட்டு நிமிர்ந்தார்.


பின் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.


“அப்பறம் அதை எங்கே மறைஞ்சு வைக்கிறது என்பது பிரச்சினையா போன போது தான்! அந்த சுரங்கப்பாதை இருக்கிறதை கண்டுப்பிடிச்சேன். அங்கேயே மறைச்சு வச்சேன். அப்பறம் மீதி பெட்டிகளை தேடினேன். என் பெரிய அண்ணனை சரத்சிங்கை ஆவியாக நடிக்க வைத்து.. பயமுறுத்தி துரத்தினேன். அவரைச் சமாதானப்படுத்த நான் போய்.. காணாமல் போய் இறந்து போயிட்டதா நம்ப வச்சேன். சின்ன அண்ணனுக்கு.. சாப்பிடற சாப்பிட்டில் கொஞ்சம் கொஞ்சமா விஷம் கலந்துக் கொடுக்க சொன்னேன். ரவீந்தர் மற்றும் கார்த்திகேயனோட பொண்டாட்டிகளையும் ஆவி பயம் காட்டி.. வீட்டை விட்டு துரத்தினேன். சாந்தி அக்காவிற்கு குலதெய்வம் அப்படி இப்படினு சொல்லி.. தேக்கி வச்சேன். மைதிலிக்கு அவ அப்பா மேலேயும் சாந்தி அத்தை மேலேயும் இருக்கிற கோபத்தை உபயோகித்து அவளை என் பக்கம் இருக்க வச்சுட்டேன். அப்பறம் மொட்டையடிச்சுட்டு அந்த வீட்டிலேயே தோட்டக்காரனாக வேலை செய்து.. நான் பாதுகாப்பாக வச்சே புதையலை காவல் காத்தேன். நைட்டில்.. என் ஆட்களோட.. மீதி பெட்டிகளை தேடுவேன். சோ நீங்க கெஸ் செய்தது ஆல்மோஸ்ட் கரெக்ட்..” என்றுச் சிரித்தார்.


பின் சோமேஸ்வரன் தொடர்ந்து “எஸ்! நீ முதலில் கேட்ட கேள்விக்கு என்கிட்ட பதில் இல்லை. என் தாத்தாவை கொன்றது யார்? என்னோட பாட்டி? அப்பறம் அவரோட தம்பி.. இப்படி லைன்னா இறந்திருக்கிறாங்க.. மாறனோட ஆவி கண்டிப்பா அவர்களைக் கொன்றிருக்காது. ஏன் என்றால்.. அப்படியொன்று இல்லவே இல்லை! அப்போ அவர்களை கொன்றது யாராக இருக்கும் என்று நீ கேட்ட பிறகு தான் எனக்கும் அதிசயமாக இருக்கு! அப்போ எனக்கும் ஒரு வாத்தியார் இருக்கான். யார் அவன் என்று எனக்கு தெரிந்துக் கொள்ள ஆர்வமாக இருக்கு! என்னை மாதிரியே மொத்த சொத்தை அவனுக்கு சொந்தமாக்க.. யாரோ முயன்று இருக்கிறாங்க யார் அது?” என்று யோசனையில் ஆழ்ந்தார்.


பின் தலையை ஆட்டிவிட்டு “அதை நான் கண்டுப்பிடிச்சுக்கிறேன். உனக்கு இந்த மேட்டர் இனி தேவையில்லை. நீ போகலாம். இந்த உலகத்தை விட்டு..” என்று கடகடவென சிரித்தார்.


சூர்யாவின் நெற்றிப் பொட்டில் அழுத்தமாக துப்பாக்கியை வைத்தார். மைதிலி “வேண்டாம்..” என்று அலறினாள்.


ஆனால் சூர்யாவின் முகத்தில் சிறிது கூட பயம் இல்லை.


சூர்யா “நீங்க எப்பவும் அரைகுறை தான் போல..” என்றுச் சிரித்தான். சோமேஸ்வரன் என்ன சொல்கிறாய் என்பது போல் புருவத்தை சுருக்கி பார்த்தார்.


சூர்யா “நான் இத்தனை விசயங்களை சொன்னேனே.. ஆனா ஒரு விசயத்தைப் பற்றி மட்டும் பேசலையே. அதை நீங்க கவனிக்கலையா..” என்றுச் சிரித்தான்.


சோமேஸ்வரன் ‘என்ன’ என்பது போல் பார்க்கவும், சூர்யா “இந்த இடத்தில் நீங்க மட்டும் தான் பெட்டிகளை தேடறீங்களா..” என்றுக் கேட்டான்.


உடனே சுருங்கி இருந்த சோமேஸ்வரனின் புருவங்கள் விரிந்தன.


அதே நேரத்தில் சரியாக அவரது கையை நோக்கி துப்பாக்கி குண்டு ஒன்று பாய்ந்து வந்து சரியாக உள்ளங்கையை பதம் பார்த்தது. வலியில் அவர் துப்பாக்கியை கீழே போடவும், சூர்யா அதை கையில் எடுத்துக் கொண்டான். அதே நேரத்தில்.. சோமேஸ்வரனின் ஆட்கள் நான்கு பேரை.. எட்டு ஆட்கள் கொண்ட குழு சுற்றி வளைத்தது. அவர்கள் முப்பதுகளில் இருக்கும் இளைஞர்களாக இருந்தார்கள்.


மைதிலியும் சோமேஸ்வரனும் திகைத்து நோக்குகையில் கீழே விழுந்த துப்பாக்கியை கையில் எடுத்திருந்த.. சூர்யா “எஸ்! இந்த இடத்தில் இன்னொரு குரூப்பும் பெட்டியை தேடறாங்க தானே! நானும் அந்த குரூப் தான்..” என்றான்.










.



 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 20


(பொருளடக்கம்)

தேடி வந்த வினையின் பயன்..

ஓங்கி நின்று அச்சுறுத்த..

முற்பகல் செய்யின்..

பிற்பகல் விளைந்ததை காண்பீர்!


சோமேஸ்வரனுடன்… அவனுடைய ஆட்களை இழுத்துக் கொண்டு சென்று ஒன்றாக மண்டியிட்டு நிற்க வைத்தார்கள். ஒருவன் அவர்களுடன் மைதிலியை அமர வைக்க முற்படும் போது.. சட்டென்று சூர்யா அவளின் கரத்தைப் பற்றி தன் புறம் இழுத்தான்.


ஆனால் மைதிலி அவனிடம் இருந்து தனது கரத்தை விடுவிக்க போராடவும், எளிதாக அவளை அடக்கியபடி “நீ ஜீனியஸ் மைதிலி! என்னைப் பற்றி சரியா கெஸ் செய்துட்டே! அதே மாதிரி நான் உன் புருஷன்! அதனால பிடிச்ச கையை விட மாட்டேன்.” என்று பலமாக இழுக்கவும், அவனது கைவளைத்திற்குள் வந்தாள்.


அவனைச் சுற்றி நின்றிருந்தவர்கள் ‘இவள் தேவையா’ என்பது போல் பார்த்தார்கள். ஆனால் சூர்யா அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவனது கவனம் கண்களில் கனலைக் கக்கியவாறு அவனைப் பார்த்துக் கொண்டிருந்த சோமேஸ்வரனிடம் சென்றது.


சோமேஸ்வரன் “யாருடா நீங்க எல்லாம்..” என்று உச்சஸ்தாயில் கத்தினார்.


அப்பொழுது ஒருவன் முன் வந்து.. சோமேஸ்வரனின் கன்னத்தில் வயது வித்தியாசம் பார்க்காமல் அறைந்து “நீ யாருடா முதல்ல அதைச் சொல்லு! என்ன இந்த ஊருக்கு ஆபத்பாண்டவனா..” என்று ஆத்திரத்துடன் கத்தினான்.


இன்னொருவன் முன்னே வந்து.. சோமேஸ்வரனின் சட்டையை பிடித்து உலுக்கினான்.


சிறு வயதில் இருந்து அன்பு காட்டும் சித்தப்பா சுயம் மாறியிருந்தாலும்.. மைதிலி அவர் மேல் வைத்திருந்த அன்பும், மரியாதையையும் மாறாததால்.. அவளையும் மீறி “சித்தப்பா..” என்று கத்தியவாறு சூர்யாவின் பிடியில் இருந்து விடுவித்துக் கொண்டு அவரை நோக்கி செல்ல முயன்றாள். ஆனால் சூர்யா அவளது முயற்சியை தடுத்தான். ஆனால் அனைவரின் பார்வையும் மைதிலியின் மேல் விழுந்தது.


அதைக் கண்டு அவர்களின் கவனத்தை மீண்டும் சோமேஸ்வரனிடம் திருப்ப.. சூர்யா “அவர்தான் யாரு நீங்க என்றுக் கேட்கிறாரே! சொல்லிருங்க.. நாம் யார் என்று அவருக்கு தெரிந்தால்.. தான்! அவருக்கு நீங்க கொடுக்கிற தண்டனையோட அர்த்தம் புரியும்.” என்றான்.


அவனது யுக்தி வெற்றி பெற்றது.


சோமேஸ்வரனின் முன் வந்து நின்ற ஒருவன் “நாங்க உங்க எதிரிகள்.. உங்களை இத்தனை வருஷமா அலைக்கழித்தவங்களோட விழுதுகள் நாங்க! இத்தனைப் பட்டும்.. இன்னும் அடங்காம இருக்கிற உங்களோட கொட்டத்தை முழுவதுமாக அடக்க வந்தவங்க நாங்க! ஆனா நாங்க செய்ய வேண்டிய காரியம் அதுவே நடந்துட்டு இருக்கிறதைப் பார்த்து அமைதியா வேடிக்கை பார்த்துட்டு நின்றுட்டோம். உங்களுக்குள்ளவே அடிச்சுட்டா கண்டிப்பா யாராவது ஒருத்தங்க ஜெயிப்பாங்க! அப்படி ஜெயிச்சுட்டு ஒத்தை ஆளா வரும் போது.. உனக்கு லாக் போடலானு நினைச்சோம். இதோ வந்துட்டோம். ஆனா இறந்து போன நீ மறுபடியும் வருவேனு எதிர்பார்க்கலை.” என்றுச் சிரித்தான்.


சோமேஸ்வரன் புரிந்தும் புரியாமலும் பார்த்தார்.


அவன் “உன்னோட தாத்தா அடிச்சே கொன்ற.. மாறன் மற்றும் அவனோட நண்பர்களோட வாரிசுகள் நாங்க!” என்றவனின் விழிகள் சிவந்தன.


அதைக் கேட்டு சோமேஸ்வரன் மட்டுமில்லாது மைதிலியும் அதிர்ந்து தான் போனாள்.


சோமேஸ்வரன் அதிர்ந்தவராய் சூர்யாவை பார்த்து “அப்போ நீ நிஜமாலுமே.. மாறனோட வாரிசா!” என்றவர், மறுப்பாக தலையசைத்தார். பின் தனக்கு தானே கூறிக் கொள்பவர் போல் “இல்லை! உன்னோட குடும்பத்தை பற்றி நல்லா விசாரித்தேன். உன் தாத்தா வரை கூட விசாரித்தேன். உன்னோட அம்மாவோட பெரெண்ட்ஸோட நெட்டிவ் பிளெஸ் திருநெல்வேலி சைட்! உன் அப்பாவோட பெரெண்ட்ஸோட நெட்டிவ் பிளெஸ் ஆந்திரா சைட்..” என்றார்.


முறுவலித்தவாறு முன்னே வந்த சூர்யா “நான் மாறனோட வாரிசு இல்லை. நான் டிடெக்ட்டிவ் ஏஜென்ஸியை சேர்ந்த ஆள்! உன் முன்னாடி நிற்கிற விதார்த் தான் உண்மையான மாறனோட வாரிசு! மற்றவங்கெல்லாம் மாறனுடன் கொலை செய்யப்பட்ட நண்பர்களோட வாரிசுகள்.. இப்போ புரிந்ததா.. நாங்க எப்படி ஒண்ணு சேர்ந்தோம் என்று..” என்றான்.


விதார்த் என்பவன் “நாங்க வந்தது இந்த பெட்டிக்காக இல்லை. உங்களோட அழிவை பார்க்க..! என்னோட பாட்டி அவரோட அப்பாவான மாறன் கொல்லப்பட்டதைக் கூறிய போது.. எனக்கு வயசு பதினைந்து.. இப்போ எனக்கு வயசு முப்பது.. இந்த பதினைந்து வருஷமா! அதைப் பற்றி.. நினைச்சு.. நினைச்சு வெறியை ஏத்தி வச்சுருக்கேன். உனக்கு ஒரு விசயம் தெரியுமா! என்னோட இருபதாவது வயசுல நான் இந்த ஊருக்கு வந்திருக்கேன். இந்த மலைக்காட்டில் மாறன் தாத்தாவோட ஆவி சுத்துனு சொன்னாங்க! அதை நம்பி.. உடனே இங்கே ஓடி வந்து அதைத் தேடி அலைஞ்சுருக்கேன். அது உண்மையாக இருக்க கூடாதானு என்னுள் ஒரு நப்பாசை! ஆனா இப்போ தான் நீ பேசியதில் இருந்து அவன் ஒரு மனிதன் என்றுத் தெரிந்தது.” என்றான்.


சோமேஸ்வரன் அதிர்ச்சியுடன் பார்க்கவும், விதார்த் “உன்னை இங்கே கூட்டிட்டு வருவதாக முதலிலேயே சூர்யா சொல்லிட்டான். நீ சூர்யாவை அட்டெக் செய்து பிடித்து வைத்த போதே வந்துட்டோம். நீ உண்மைகளை உளறவும், கேட்டுட்டு இருந்தோம்.” என்றுச் சிரித்தான்.


பின் “நீயும் சாகப் போறதுக்கு முன்னாடி சில உண்மைகளை தெரிஞ்சுக்கிறியா! நானும் முதல்ல இருந்து சொல்றேன். இங்கே என் தாத்தாவின் ஆவி இருக்கும் என்றுத் தேடி வந்த இடத்தில்.. என் பாட்டி சொன்னது போக மீதி உண்மைகள் தெரிஞ்சது. முதலில் இருந்தே உங்க குடும்பம்.. இந்த ஊர் சனங்களை அடிமைகள் மாதிரி வைத்திருந்தது. அவர்களை ஏமாற்றி.. உடைமைகள் மற்றும் பெண்களை பறித்தது.. என்று நீங்க செய்த அக்கிரமங்களை தெரிஞ்சுட்டேன். அப்பவே.. உங்க மாளிகைக்கு வந்து.. எல்லாரையும் கொல்லணும் என்று நினைச்சேன். ஆனா அப்போ வயசும் பத்தலை தைரியமும் பத்தலை. ஊருக்கு திரும்பிப் போயிட்டேன். என் மனசுல.. என்னை மாதிரி.. மாறன் தாத்தாவோட இறந்தவங்க குடும்பமும் இப்படித்தானே.. ஆத்திரப்பட்டு கொண்டிருக்கும்.. என்று எண்ணம் ஓடிட்டு இருந்துச்சு. மறுபடியும் வந்து.. மாறன் கூட இருந்தவங்களைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தேன். மாறன் தாத்தா.. தன்னுடைய நண்பர்களின் குடும்பத்தையும் அப்பவே வேறு ஊருக்கு அனுப்பிட்டு தான் இந்த காரியத்தில் ஈடுபட்டார் என்றுத் தெரிந்து.. அவர் மேலே எனக்கு மதிப்பு கூடியது. அவங்களோட சொந்தங்கள் இருக்கிற இடத்தை ஊர் சனங்கள் அவ்வளவு சீக்கிரம் சொல்லுலை. உங்க தாத்தா மேலே இருக்கிற பயமும்.. அவர் செய்த கொடுமையும் அவர்களை அவ்வாறு மறுக்க வைத்தது. ஆனா.. யாருக்கும் தெரியாத மாறனை பற்றிய விசயங்கள் பாட்டி எனக்கு சொல்லியிருக்காங்க அதை அவங்க கிட்டச் சொன்னே். அப்போ தான் இந்த ஊர்ல இருக்கிற வயசான தாத்தா.. இங்கிருந்து தப்பித்து போன மாறனோட உறவுக்காரங்க போன இடத்தைப் பற்றி சொன்னாங்க! அதாவது நீ சூர்யாவை வச்சு செய்ய நினைச்ச வேலையை நான் பத்து வருஷத்துக்கு முன்னாடியே செய்துட்டேன்.” என்றுச் சிரித்தான்.


பின் விதார்த் தொடர்ந்து “ஒவ்வொருவராய் போய் அணுகினேன். அங்கே இருந்த பக்கத்து வீட்டுக்காரங்க.. அவங்களைப பற்றித் தெரியலைனு சொன்னாங்க! அவங்களோட இன்னொரு சொந்தக்காரங்களைப் பற்றியோ நண்பர்களைப் பற்றியோ தான் தெரியுனு சொன்னாங்க! அவங்க கிட்ட போனேன். அவங்களோ இன்னொருத்தரை தான் தெரியுனு சொல்வாங்க! அவங்களையும் விடாம போய் பார்ப்பேன். அவங்களைப் பார்த்து.. அவங்க மூலமா.. நான் சந்திக்க வேண்டியவங்களை சந்திப்பேன். ஆனா நான் எல்லாரையும் தேடி சந்தித்து முடித்திருந்த போது.. அவங்க எல்லாம் மூன்றாம் தலைமுறையாய் வந்து நின்றிருந்தாங்க! நாங்க பல விசயங்களை ஷேர் செய்துட்டோம். உங்க குடும்பத்தை பழிக்கு பழி வாங்க தீர்மானித்தோம். நாங்கெல்லாம் போன வருஷம் இங்கே வந்து பார்த்த போது.. நீங்க எல்லாம் பிரிந்து போய்.. எல்லாரும் பெட்டி தேடிட்டு இருக்கிறது தெரிந்தது. உங்க குடும்பமும் சீரழிச்சு கிட்டத்தட்ட போயிருந்தது தெரிந்தது. நீ இறந்துட்டாத தான் சொன்னாங்க! எல்லாரும் பைத்தியங்கள் மாதிரி இருந்தீங்க! எங்களுக்கு சந்தோஷமாக இருந்தது.” என்றுச் சிரித்தான். அவனுடன் சுற்றி நின்றிருந்தவர்களும் சேர்ந்து சிரித்தார்கள்.


விதார்த் “அந்த பெட்டிக்காக பேய்கள் மாதிரி சுத்தறதை வேடிக்கை பார்க்க நன்றாக இருந்தது. அதுனால நீங்களே அடிச்சுட்டு் சாவதைப் பார்க்க நினைச்சோம். ஆனா உங்களோட தேடுதல்கள் தீவிரமா இருக்கிறதையும், மைதிலி மற்றும் கற்பகத்தோட நடவடிக்கையில் சில மாற்றங்கள் இருப்பதைப் பார்த்து சந்தேகப்பட்டோம். அந்த பெட்டி கிடைச்சுருச்சோனு எங்களுக்கு டவுட்! அந்த பெட்டியில் இருக்கிற தங்கங்கள் கிடைச்சுட்டா.. நீங்க பழைய மாதிரி கொட்டத்தை ஆரம்பிச்சுருவீங்கனு எனக்கு தெரியும். புலி தனது கோடுகளை மாற்றிக் கொள்வது இல்லை. அதே மாதிரி.. அந்த மாறன் ஆவி மேட்டரும் எங்களுக்கு வியப்பா இருந்துச்சு! முடிந்தவரை நாங்க பிடிக்க நினைச்சோம். ஆனா தொலைவில் பார்த்த மனிதனை பிடிக்க போவதிற்குள் ஆள் காணாமல் போயிருவான். யார் சொல்லி அவன் இத்தனை வருஷங்களா ஏமாத்திட்டு இருக்கிறான் என்றுத் தெரிஞ்சுக்க நினைத்தோம். அப்போ நீதான் இதற்கு பின்னால் இருக்கிறே என்று தெரியாது. ஆனா நீ ஒரு குரூப் பீப்பிளோட வந்து.. குறிப்பிட்ட இடத்தை தோண்டிப் பார்த்துட்டு.. அங்கே பார்த்தாச்சு.. என்பதற்காக சிக்னலை வச்சுட்டு போவதும், உன் அண்ணனும் ஒரு குரூப் ஆட்களோட வந்து பெட்டிகளை தேடுவதையும் நாங்க கண்காணிச்சுட்டு தான் இருந்தோம். நாங்களும் சில இடங்களில் தேடிப் பார்த்தோம். ஒருவேளை உங்களுக்கு பெட்டி கிடைச்சுட்டா.. அதை அபேஸ் செய்யறது தான் எங்களோட பிளன்! ஆனா ரொம்ப இழுத்துட்டு போன மாதிரி ஃபீல்! இதை சீக்கிரம் முடிக்க நினைத்தோம். அதுக்கு முன்னாடி இத்தனை விபரங்களை எங்களுக்கு யார் சொன்னாங்க என்றுத் தெரியணுமா! முனுசாமி தான்! உங்க வீட்டுக்குள்ளவே நாங்க வைத்திருந்த ஸ்பை!” என்றான்.


இதை மைதிலியோ சோமேஸ்வரனோ முற்றிலும் எதிர்பார்க்கவில்லை. அவர்களது உண்மை ஊழியர் என்று நினைத்தவர், அவர்களை உளவு பார்த்திருக்கிறார் என்பதை நம்ப முடியவில்லை.


விதார்த் தொடர்ந்து “ரொம்ப மும்மரமா நீ தேடுவதை வச்சு உனக்கு எதோ தெரிந்திருக்கும் என்று நினைச்சோம். ஆனால் நீதான் இறந்த சோமேஸ்வரன் என்று நினைக்கலை. இந்த மாதிரி உங்க குடும்பத்தில் என்ன நடக்குதுனு தெரிந்துக் கொள்ள தான்.. சதீஷ் மூலமா அவனுக்கு தெரிந்த டிடெக்ட்டிவ் ஏஜென்ஸியை அணுகினோம். அங்கே.. முனுசாமி கொடுத்த படத்தில் இருந்த மாறனோட தோற்றத்துடன் சூர்யா இருக்கிறதைப் பார்த்து வியந்தோம். எங்களுக்கு அடிச்சது ஒரே கல்லில் இரண்டு மாங்காய்! அவனை யுஸ் செய்ய நினைச்சோம்.” என்றான்.


மைதிலி தனது கையை இறுக்க பற்றியிருந்த சூர்யாவை பார்த்தாள். அவனது முகத்தில் எவ்வித சலனமும் இல்லை. விதார்த் பேசுவதைக் கவனத்துடன் கேட்டுக் கொண்டிருந்தான்.


விதார்த் “அவன் பலே கில்லாடி தான்! பல விசயங்களை ஆராய்ந்து இங்கே வந்த ஒரு நாளில் கண்டுப்பிடிச்சுட்டான். வாவ்! எவ்வளவு விசயம் நடந்திருக்கு..” என்று சூர்யாவை பார்த்தான்.


பின் விதார்த் சோமேஸ்வரனை பார்த்து “முனுசாமி கடைசியா சொன்ன விசயம் என்னவென்று தெரியுமா! நீ மாறனாக நடிக்க அனுப்பியவனை உன் அக்காவோட மகன் பார்த்து அவன் ஒரு மனிதன் என்றுக் கண்டுப்பிடிச்சுட்டாங்க! அவனைக் கட்டி வைத்து.. அடித்து யார் என்று விசாரித்திருக்காங்க! அவன் ஆதிகேஷன் என்றுச் சொல்லியிருக்கிறான் என்றுச் சொல்லியிருக்கான். நல்ல ஆளைத் தான் பிடிச்சுருக்கே! உனக்கு விசுவாசமாக தான் இருக்கான். அதனால கோபம் கொண்ட உன் அண்ணனும் அக்காள் பேமலியும்.. ஜோசியரை தேடிப் போயிருக்காங்க! இன்னும் நீ உயிரோட இருக்கிறதும்.. நீதான் அந்த ஜோசியன் என்பதும் அவர்களுக்கு தெரியாது. அதனால இறந்த நீ இறந்ததாகவே இருக்கட்டும் என்று நினைக்கிறேன்.” என்று தனது துப்பாக்கியை சோமேஸ்வரன் முன் நீட்டினான்.


மைதிலி பதட்டத்துடன் சூர்யாவை பார்த்தாள். அவனோ உணர்ச்சிகளற்று விதார்த் அடுத்து பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.


விதார்த் “டொன்ட் வெர்ரி! உன்னை துப்பாக்கியில் சுட்டு கொல்ல மாட்டேன். அடிச்சு தான் கொல்ல போறேன். அப்போ தானே உன்னையும் உன் கூட வந்தவங்களையும்.. என் தாத்தாவோட ஆவி கொன்னதா செய்தி பரப்ப முடியும். அப்பறம் உங்க வீட்டிற்கு போக போகிறோம். அங்கே நீ மறைச்சு வச்ச பெட்டியை எடுத்துட்டு வந்த பின்.. நாளைக்கு அந்த சுரங்கப்பாதையில் பாறையை வெடிக்க உதவுகிற.. பாம் வைக்க போகிறோம். ஆச்சுவலா நாளைக்கு இடி இடிக்கும் போது.. சத்தத்துடன் சத்தமாக இந்த வெடியை வைத்து.. மலையை பெயர்த்து பெட்டியை தேடலாம் என்று வாங்கி வைத்திருந்தோம். அது இப்போ எப்படி ஹெல்ப் செய்து பார்த்திங்களா..” என்றுச் சிரித்தான்.


சதீஷ் என்பவன், தனது தோளில் மாட்டியிருந்த பையை இறுக பற்றி.. வெடி அதில் தான் இருக்கிறது.. என்றுச் சொல்லாமல் சொன்னான்.


பின் விதார்த் தொடர்ந்து “நாளை பகல் வேளையில் எல்லாரும் இருக்கும் போது.. அந்த பாழடைந்த மாளிகையின் அஸ்திவாரம் ஆட்டம் கண்டால் என்னவாகும் என்றுத் தெரியும் தானே! இத்தோட உங்க வம்சமே அழிந்தது.” என்றுவிட்டு கடகடவென சிரித்தான்.


உடனே சோமேஸ்வரன் “மத்த பெட்டிகள் எங்கே இருக்கு என்றுத் தெரிஞ்சுக்க வேண்டாமா!” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்ட விதார்த் “என்ன உன் இறப்பைத் தள்ளிப் போடலாம் என்றுப் பார்க்கறீயா! நீ கொஞ்ச நாளாக ஆற்றோரம் தேடிட்டு இருந்தே! அப்போ ஏன்னு புரியலை. இப்போ புரியுது. அந்த பெட்டி ஆற்றுக்கு அருகில் தானே கிடைச்சுது! இனி நாங்க தேடிக்கிறோம். நீ வேணுன்னா ஆவியா வந்து நாங்க செய்யறதைத் தடுக்க பாரு..” என்றுவிட்டு ஏதோ ஜோக் சொன்னது போல் சிரித்தான்.


விதார்த் கூறியதைக் கேட்ட மைதிலி அதிர்ந்தாள். ஏனெனில் சூர்யா மாறனின் ஆவி தன் மீது புகுந்தது போன்று நடித்த போது.. அந்த பெட்டிகளை ஆற்றில் வீசியதாக தான் கூறினான். அதன்பின் கேட்டதிற்கு.. வாயிற்கு வந்ததைக் கூறினேன் என்றுக் கூறினான். ஆனால் தற்பொழுது அதுதான் நடந்திருக்கு! மைதிலிக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி தாக்கியதில்.. உறைந்து நின்றாள்.


விதார்த்கும் மற்றொருவனும்.. சோமேஸ்வரனின் கைகளை கட்ட முயலவும், உறைந்து நின்ற மைதிலி சுயநிலை மீண்டவளாய் “நீங்கெல்லாம் மாறனோட வாரிசுகளா! சேம் ஆன் யு ஆல்!” என்று கத்தினாள்.


தற்பொழுது அனைவரின் கவனமும் மைதிலியின் பக்கம் திரும்பியது.


சூர்யா மைதிலியை பற்றி தனது கைவளைக்குள் வைக்க முயன்றான். ஆனால் ஒரே திமிறலில் அவனிடம் இருந்து விடுப்பட்ட மைதிலி விதார்த்தை பார்த்து “மாறன் என் தாத்தாவை கொல்ல பார்த்தான் என்றால்.. அதுல ஒரு நியாயம் இருந்துச்சு! ஆனா அவனை என் தாத்தா கொன்றது.. அநியாயம் தான்! அது அநியாயம் என்றால்.. நீங்க இப்போ செய்யறது என்னது!” என்றாள்.


அவளை நோக்கி வந்த விதார்த் “நீ சூர்யா கிட்ட நின்னுட்டு இருந்ததாலே.. உன்னை மறுந்துருவேனு நினைச்சுட்டியா! கையை காலை கட்டி.. உன்னை அந்த சுரங்கப்பாதையில் போடப் போறேன். அந்த ஜமீன் மாளிகை இடிந்து விழும் போது.. நீயும் மண்ணோடு மண்ணாக சமாதி ஆகிருப்பே..” என்றவாறு அவளை மேலும் நெருங்கும் போது.. அவர்கள் இருவருக்கும் இடையே சூர்யா வந்து நின்றான்.


அதைப் பார்த்த விதார்த் “வாட் சூர்யா! இந்த மேரேஜ்ஜை நிஜமாலுமே சீரியஸா எடுத்திட்டியா! மதியம் விளையாட்டுக்கு சொன்னேனு நினைச்சேன். உனக்காக ஒரு பொண்ணு அங்கே காத்துட்டு இருக்கு! அதை மறந்துராதே!” என்றான்.


அதற்கு சூர்யா “அந்த பொண்ணை நான் சூஸ் செய்யலை ஸார். என் பெரெண்ட்ஸ் தான் சூஸ் செய்தாங்க! ஆனா நான் என்னோட மனைவியாக தேர்ந்தெடுத்தது மைதிலி தான்! அதுனால.. ப்ளீஸ் வேண்டாம் ஸார்!” என்றான்.


விதார்த் “அவள் உன் மனைவியா!” என்றுவிட்டு கடகடவென சிரித்தவன், பின் “எனக்கு அவ என் தாத்தாவை துடிக்க துடிக்க கொன்ற குடும்பத்தோட வாரிசா தான் தெரியுறா சூர்யா! இந்த மலைகளை சுற்றி நல்லா பார்! இங்கே என் தாத்தா நாலு நாள்ல துடிக்க துடிக்க இறந்திருக்கார். அவரோட மரண ஓலம் இந்த மலை முழுக்க நிரம்பியிருக்கு! அவரோட ஆத்மா.. இந்த காற்றோட கலந்திருக்கு! அவரோட குருதியில.. மரங்கள் வளர்ந்திருக்கு! என் தாத்தாவோட கடைசி நிமிடங்களை நான் இப்பவும் உணர மாதிரி இருக்கு சூர்யா! என் தாத்தாவிற்கு மட்டுமில்ல சூர்யா! என் தாத்தாவை விட பல மடங்கு கொடுமைகள் இந்த ஊருக்கு செய்திருக்காங்க! இதற்கு காரணமான இந்த குடும்பத்தை அழிக்காமல் நான் விட மாட்டேன்.” என்றுவிட்டு.. சூர்யாவை தாண்டிச் செல்ல முற்பட்டான்.


ஆனால் அவனது மார்பில் கரத்தை வைத்து நிறுத்திய சூர்யா அவனது கண்களை நேராக பார்த்து “இவளை நெருங்க மட்டுமில்ல.. நீ நினைத்ததை எதையும் நான் நடக்க விட மாட்டேன் விதார்த்! இது சரியில்லை..” என்று கர்ஜீத்தான்.


அவனது கர்ஜனைக்கு பிண்ணனி இசைக்கும் வகையில்.. இடி ஒன்று பயங்கர சத்தத்துடன் இடித்தது.


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 21


(பொருளடக்கம்)

நீதி போதிக்க ஒருவன் இருக்க!

நீதி கைப்பொருள் அல்ல..

நினைத்தவர் கையிலெடுக்க!


சூர்யா கூறியதைக் கேட்டு ஒரு கணம் திகைத்த விதார்த் பின் மெல்ல சிரித்தவாறு “டொன்ட் பிளே சூர்யா! நீ என்ன சொல்றேனு புரிந்து தான் சொல்றீயா! இதுக்கும் எங்களை விட.. இந்த விசயத்தைப் பற்றி உனக்கு நல்லா தெரியும். அப்படியிருக்கும் போது.. என்ன பேச்சு இது சூர்யா!” என்றுச் சிறுக் கண்டிப்புடன் கேட்டான்.


சூர்யா “அவங்க செய்த அநியாயத்திற்கு எது நியாயமோ.. அதைச் செய்யாம அழிக்க நினைக்கறீங்க! அதை என்னால அனுமதிக்க முடியாது ஸார்!” என்றான்.


விதார்த் “உன் கிட்ட யார் அனுமதி கேட்டாங்க சூர்யா! ஏன் இந்த திடீர் பல்டி! ஓ.. மைதிலியை கல்யாணம் செய்துட்டதாலே.. அவங்க குடும்பத்தில் ஒருவனா மாறிட்டதாலா!” என்று இளக்காரத்துடன் கேட்டான்.


அதற்கு மறுப்பாக தலையசைத்த சூர்யா “மனிதநேயம் தான் காரணம் ஸார்! நான் அவர் கிட்ட மலையில் இருந்து உருட்ட போறேனு சொன்னது வெறும் மிரட்டல்! ஆனா நீங்க கொடுக்க போவது அவரோட விதி! அதற்கு தண்டனை கொடுங்க.. நானே ஹெல்ப் செய்கிறேன். அதை விட்டுட்டு.. வேண்டாம் ஸார்! ஒருத்தரோட இறப்பை நாம் டிசைட் செய்யக் கூடாது ஸார்!” என்றான்.


‘என்ன இவன்’ என்றுச் சலிப்புடன் முகத்தைத் திருப்பிய விதார்த், அடுத்த கணம் துப்பாக்கியை சூர்யாவின் நெற்றி பொட்டில் வைத்திருந்தான்.


“ஸாரி சூர்யா! நாம் எதற்காக ஒன்று சேர்ந்தோம் என்பது தெரிந்தும்.. அதை நீ தடுக்க பார்க்கிறே என்றால்.. உன்னையும்.. அவர்களுடன் சமாதி ஆக்குவதை தவிர எனக்கு வேற வழியில்லை.” என்றான்.


அப்பொழுது கண்ணை பறிக்கும் மின்னலும், காதைப் பிளக்கும் இடியும் இடித்தது.


ஒரு கணம்.. அங்கிருந்த அனைவருமே.. தடுமாறியவர்களாய்.. காதையும், கண்ணையும் மூடிக் கொண்டார்கள். ஆனால் அந்த வேளையை பயன்படுத்திக் கொண்ட சூர்யா சட்டென்று விதார்த்தின் கையில் இருந்த துப்பாக்கியை பறித்தவன், அவனைத் திருப்பி.. அவனது கழுத்தை தனது கரங்களால் வளைத்தான். ஒரு கரம் விதார்த்தின் கழுத்தை வளைத்திருக்க.. மற்றொரு கரம் அவனது நெற்றியோரத்தில் துப்பாக்கி கொண்டு அழுத்திக் கொண்டிருந்தது.


அந்த இடியின் சத்தத்தில் தடுமாறிவிட்டு.. பழைய நிலைக்கு வந்தவர்கள் கண்ட காட்சி இதுதான்! விதார்த்துடன் வந்தவர்கள் திடுக்கிட்டு “சூர்யா.. என்னதிது!” என்றுக் கத்தினார்கள். சதீஷ் தனது துப்பாக்கியை எடுத்து சூர்யா புறம் நீட்டி “வேண்டாம் சூா்யா” என்றான்.


சோமேஸ்வரன் நிம்மதியுடன் எழ முற்படவும், சூர்யா “டொன்ட் மூவ்.. மிஸ்டர் சோமேஸ்வரன்! நீங்க ஒண்ணும் மகாத்மா இல்லை! விதார்த்தை தடுத்தேன் என்பதற்காக நீங்க நல்லவர் ஆகி விட மாட்டிங்க!” என்றவன், மைதிலியிடம் “மைதிலி! இன்னொருத்தனிடமும் கன் இருக்கு அதை வாங்கிட்டு வா..” என்றான்.


மைதிலி திகைத்து நின்றது ஒரு கணம் தான்.. சூழ்நிலையின் விபரீதம் புரியவும், அடுத்த கணம் மெல்ல சதீஷை நோக்கி சென்றாள்.


சூர்யாவின் கவனம்.. தான் பற்றியிருந்த விதார்த்திடமும், மைதிலியிடமும்.. அவள் நெருங்கும் போது.. சதீஷ் ஏதேனும் விபரீதம் செய்துவிடக் கூடாது என்று அவன் மீதும் இருந்தது. அதனால் சோமேஸ்வரனை கவனிக்க தவறிவிட்டான். சோமேஸ்வரனின் கவனம் சதீஷின் துப்பாக்கியின் மீதிருந்தது.


மைதிலி சதீஷை நெருங்கிய வேளையில் மெல்ல சூர்யாவை பார்த்தார். சூர்யாவின் கவனம்.. தன் மீது இல்லாதிருப்பதைக் கண்ட சோமேஸ்வரன் சட்டென்று எழுந்து.. மைதிலி நெருங்கும் முன் சதீஷின் கையில் இருந்த துப்பாக்கியை தட்டிப் பறித்தவர், மைதிலியின் முதுகில் துப்பாக்கியை வைத்து தன் பக்கம் இழுத்துக் கொண்டார். கூடவே சதீஷின் தோளில் மாட்டியிருந்த பையை எடுத்து தனது தோளில் போட்டுக் கொண்டார்.


இதை எதிர்பாராத சூர்யா சோமேஸ்வரனின் தோள்பட்டையை குறி வைத்து சுட எதானித்தான். ஆனால் அதற்குள் சோமேஸ்வரன் சிறிதும் தயங்காது.. விதார்த்தை பார்த்து சுட்டார். அதைப் பார்த்த சூர்யா சட்டென்று விதார்த்துடன் குனிந்து குண்டில் இருந்து தப்பிக்க முயன்றான்.


எவ்வளவு விரைவாக செயல்பட்டாலும்.. துப்பாக்கி குண்டு சூர்யாவின் தோளை உரசி சென்றது. அதே நேரத்தில் துளித் துளியாக துளிர்த்துக் கொண்டிருந்த மழை வலுத்தது.


சோமேஸ்வரனிடம் துப்பாக்கி இருக்கவும், அவரது ஆட்கள் எழுந்து.. சோமேஸ்வரனிடம் சென்று நின்றார்கள்.


இந்த துப்பாக்கியில் எத்தனை குண்டுகள் இருக்கிறது என்று சோமேஸ்வரனுக்கு தெரியாது. இதை வைத்துக் கொண்டு இங்கே நின்று இத்தனை பேரையும் சமாளிப்பது மிகவும் கடினம். எனவே இங்கிருந்து தப்பித்து சென்று.. அவர் மறைத்து வைத்த பெட்டியை எடுத்துக் கொண்டு இந்த ஊரை விட்டு ஓடுவது தான் நல்லது என்று சோமேஸ்வரன் முடிவெடுத்தார்.


எனவே தனது சிஷ்யர்களிடம் “இனி அவங்க கிட்ட கன் இருக்காது. உங்களுக்கு மல்யுத்தம் தெரியும். அவங்களை ஈஸியா பீட் செய்திரலாம். அவர்களை அடித்து.. எப்பவும் போல.. இந்த செங்குத்து மலையில் இருந்து தள்ளி விடவோமே.. அந்த மாதிரி தள்ளி விட்டுருங்க..! எல்லாரையும் சமாளிச்சுட்டு.. நாம எப்பவும் சந்திக்கும் இடத்திற்கு வாங்க.. நான் அங்கே வெயிட் செய்யறேன்.” என்று வேகமாக கட்டளைகளை பிறப்பித்துவிட்டு மைதிலியினை ஒரு கரத்தில் பற்றிக் கொண்டு விரைந்தார்.


கடைசி நேரத்தில்.. அவருக்கு ஆபத்து ஏற்பட்டால் பணய கைதியாக மைதிலி தேவைப்படுவாள் என்று அவளை இழுத்துக் கொண்டு திரும்பியும் கூடப் பாராமல் சென்றார். அவருக்கு ஏழு பேரிடம் விட்டுச் சென்ற தனது சிருஷ்யர்களை பற்றி கவலையில்லை. வழக்கமாக சந்திக்கும் இடத்தில் சந்திக்கலாம் என்றுக் கூறியிருந்தார். ஆனால்.. அவர் அங்கு செல்லப் போவதில்லை. தனக்கு கிடைத்த புதையலை பங்கு போடும் எண்ணம் அவருக்கு இல்லை. அதற்கு அவருடன் பிறந்தவர்களையே ஏய்ப்பதே சிறந்த உதாரணம்!


சோமேஸ்வரன் சுட்டதில் இருந்து தப்பிக்க குனிந்த சூர்யா குண்டடி பட்டதில்.. விதார்த்துடன் தரையில் விழுந்திருந்தான். நல்லவேளை அவனது தோளில் சதை பிய்ந்துக் கொண்டு குண்டு சென்றுவிட்டது. இரத்தம் அந்த இடத்தில் இருந்து வழிந்துக் கொண்டிருக்க.. விழுந்த சூர்யா சுதாரித்து எழும் போது.. மலை சரிவில் இறங்கிக் கொண்டிருந்த சோமேஸ்வரன் மற்றும் மைதிலியின் தலைகள் தான் அவனுக்கு தெரிந்தது. பின் அதுவும் அவனது கண்ணில் இருந்து மறைந்தது. நொடியில் அங்கு நடந்ததை சூர்யா கணித்துவிட்டான்.


இங்கே இருப்பவர்களை அவனது ஆட்கள் கொண்டு சமாளிக்க கூறிவிட்டு.. மைதிலியை வைத்து அவரை நெருங்குபவர்களை மிரட்ட.. அவளை அழைத்துக் கொண்டு அந்த பெட்டியை எடுக்க விரைகிறார். அவன் அவரைத் தடுத்து.. மைதிலியை மீட்க வேண்டும். எனவே குண்டு உரசி சென்றதால் வழித்துக் கொண்டிருந்த இரத்தத்தால் ஏற்பட்ட வலியை பொறுத்துக் கொண்டு.. எழ முயன்றான். ஆனால் அவனது அடிப்பட்ட கையில் யாரோ உதைக்கவும், வலியில் சுருண்டு விழுந்தான். பின் அவனது சட்டையை பிடித்து நேராக இழுத்த போது.. தன்னை அடித்தவர் யார் என்றுப் பார்த்தான். விதார்த் கோபத்தில் கண்கள் சிவக்க நின்றிருந்தான்.


“என்னடா! நடுவில் நியாயதஸ்தான் ஆகிட்டியா!" என்று மீண்டும் குத்துவிட்டான்.


கீழே விழுந்த சூர்யாவை மீண்டும் சட்டையை பற்றி எழுப்பி "என் தாத்தாவையும்.. அவரோட கூட்டாளிகளையும் கொன்று இந்த ஊர் மக்களையே கொடுமைப்படுத்திக் கொண்டிருந்த இந்த குடும்பத்தை கூட்டோட அழிப்பது, அவங்க வெறி பிடித்த மாதிரி தேடிக் கொண்டிருந்த பெட்டிகளைக் கைப்பற்றுவது என்றுத் தானே பிளன் போட்டோம். அது உனக்கு தெரியும் தானே! இப்போ எல்லாத்தையும் நாசம் செய்யப் பார்க்கறீயா..” என்று அவனது சட்டையை பிடித்து உலுக்கினான்.


விதார்த் அடித்த அடியில் பல் உதட்டில் கிழித்து இரத்தம் வடிந்துக் கொண்டிருக்க மெல்ல சிரித்த சூர்யா “அந்த பெட்டியில் இருக்கிற தங்கத்தை வைத்து மைதிலி என்ன செய்ய நினைத்தாள் என்பதைக் கேட்காமல் இருந்திருந்தால்.. ஒருவேளை உங்க திட்டத்திற்கு ஒத்துழைத்திருப்பேன். ஆனா நீங்க!” என்றுச் சலித்துக் கொண்டு.. வெறுப்புடன் விதார்த்தின் மார்பில் கையை வைத்து தள்ளினான். ஆனால் அடுத்த நிமிடமே விதார்த்தின் சட்டையை கொத்தாக பற்றி முரட்டுத்தனமாக இழுத்தவன், கண்கள் பளபளக்க “நீ மாறனின் வாரிசா.. பேராசைக்கும் பழிக்கு பழி வாங்குவதற்கும் வித்தியாசம் தெரியுமா உனக்கு.." என்று ஆக்ரோஷத்துடன் கூறியவன், அதே ஆக்ரோஷத்துடன் சற்றும் எதிர்பாராத வகையில் விதார்த்தின் தாடையில் குத்தினான். அந்த அடி தாளாமல் விதார்த் நான்கடி தள்ளிப் போய் விழுந்தான்.


மீண்டும் சோமேஸ்வரனும் மைதிலியும் சென்ற திசையில் செல்ல துவங்கினான். ஆனால் எட்டி அவனது காலை பற்றிய விதார்த் சூர்யாவை கீழே தள்ளி அவனை நகர விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டான்.


“விடுங்க ஸார்! நான் மைதிலியை காப்பாற்ற மட்டுமில்ல.. அந்த சோமேஸ்வரனையும் தப்பிக்காமல் பார்க்கணும்.” என்றுவிட்டு காலை உதறிவிட்டு செல்ல முயன்றான்.


ஆனால் விதார்த் எழுந்து "சூர்யா.." அவனின் முன் வரவும், விதார்த்தின் சட்டையை பிடித்து உலுக்கிய சூர்யா “வேக் அப் விதார்த் ஸார்! வேக் அப்! நீங்க அநியாயம் செய்தவங்களைப் பழிக்கு பழி வாங்கலாம் என்றுத் தொடங்கிய இந்த மிஷன்.. இப்போ தங்கங்களோடு இருக்கிற பெட்டியை கைப்பற்றணும்.. என்கிற பேராசையில் வந்து முடித்ததை நீங்க உணரலையா! ப்ளீஸ் வேக் அப்!” என்று உலுக்கிவிட்டு அவனைப் பிடித்து தள்ளினான்.


மூச்சு வாங்க நின்றிருந்த.. விதார்த் சூர்யாவை திகைப்புடன் வெறித்தவாறு நின்றிருந்தான். சூர்யாவின் வார்த்தைகள் அவனைச் சுட்டன.


அப்பொழுது ‘ஆ..’ என்ற அலறல் கேட்டது. இருவரும் சத்தம் வந்த திசையில் திரும்பிப் பார்த்தார்கள். சோமேஸ்வரனின் ஆள் ஒருவன்.. விதார்த்துடன் வந்தவனை அடித்து.. மலையின் விளிம்பை நோக்கி இழுத்து சென்றுக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அது மட்டுமில்லாது.. சோமேஸ்வரனின் மற்ற ஆட்களிடம் விதார்த்துடன் வந்தவர்கள்.. அடி வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள். உடனே இருவரும் அவர்களை நோக்கி ஓடினார்கள். விதார்த்தும்.. சூர்யாவும் இருவரும் இணைந்து செயல்படவும்.. சோமேஸ்வரனின் ஆட்களை எளிதாக வீழ்த்தினார்கள். அவர்கள் நான்கு பேரையும் கட்டிப் போட்ட பின்.. சூர்யா “விதார்த் ஸார்! நான் போகணும்..” என்கையில் விதார்த் “சோமேஸ்வரன் பெட்டியை எடுக்க தான் போயிருக்கான். கூடவே நாங்க கொண்டு வந்த பாம்மையும் எடுத்துட்டு போயிருக்கான். நான் சொன்னதை அவன் செய்யப் போறான் என்று நினைக்கிறேன். நாம் சீக்கிரம் போகணும்.” என்றான்.


சூர்யா சந்தேகமாக பார்க்கவும், விதார்த் “என்னைப் பற்றி யோசிக்க நேரமில்லை சூர்யா! ஆனா எல்லாம் முடித்ததும் உன்கிட்ட சில விசயங்கள் பர்ஷனலா பேசணும்.” என்றான்.


அதற்கு சூர்யா “கண்டிப்பா..” என்றான். பின் இருவரும் சோமேஸ்வரனின் ஆட்களைப் பார்த்துக் கொள்ள கூறிவிட்டு.. மாளிகையை நோக்கி ஓடினார்கள். பலத்த மழை அவர்களின் ஓட்டத்தின் வேகத்தை தடை செய்தது. ஆனால் விடாமல் இருவரும் ஓடினார்கள். அங்கு அவர்கள் கண்ட காட்சி.. அவர்களைப் பயமுறுத்தியது. ஏனெனில் அந்த ஜமீன் மாளிகை இருள் சூழ்ந்து காணப்பட்டது. மின்சாரம் மழையினால் துண்டிப்பட்டதா.. இல்லை சோமேஸ்வரன் துண்டித்தாரா என்று இருவரும் அறியவில்லை.


விதார்த் சூர்யாவை பார்த்தான்.


சூர்யா “நாம் இரண்டு பேரும் ஒரே இடத்திற்கு போவதை விட.. ஆளுக்கு ஒரு வழியில் போகலாம். அப்போ தான்.. சோமேஸ்வரனை தப்பிக்காமல் பிடிக்க முடியும். நாம் வந்த வேகத்திற்கு இன்னும் அவர் இந்த மாளிகையை விட்டுப் போயிருக்க மாட்டார் என்று நினைக்கிறேன். அங்கே யாருக்கும் தெரியாம போக தான் ட்ரை செய்வார். அதனால் நான் சுரங்கப்பாதை வழியாக போய் பார்க்கிறேன். உடனே அவர் இன்னொரு வழியில் தப்பித்து போகாம ட்ரை செய்வார். அதனால் நீங்க ஸ்டோர் ரூமில் இருங்க! மாளிகையில் இருக்கிறவங்களையும் வார்ன் செய்து வெளியே போக சொல்லிருங்க!” என்றான்.


விதார்த் “ஆர் யு ஸ்யோர்?” என்றுக் கேட்கவும், சூர்யா “எஸ் ஸார்! என் வைஃப் அவங்க கிட்ட மாட்டியிருக்கா.. என்னால் வெளியே வெயிட் பண்ணி என்ன நடக்குதுனு பார்க்கிற அளவிற்கு பொறுமையில்லை.” என்றவன், விதார்த்திடம் “எத்தனை பாம் வைத்திருந்தீங்க?” என்றுக் கேட்டான்.


விதார்த் சிறுக் குன்றலுடன் “நாலு..” என்கவும், சூர்யா அவனை வெறுப்புடன் பார்த்தான்.


பின் இருவரும் முன்பை விட வேகமாக மாளிகையை நோக்கி சென்றார்கள். சூர்யா பின் தோட்டதில் இருக்கும் மைதிலியின் அறைக்கு கீழ் வந்தான். அங்கு சுவற்றோரம் வளர்ந்திருந்த புதர்களை விலக்கி.. ஏதேனும் பாதை தென்படுகிறதா என்று ஆராய்ந்தான்.


சுவற்றோரத்தின் அடிப்பகுதியில் பரபரப்புடன் சுரங்கப்பாதையை தேடினான். ஒரிடத்தில் தரையின் கீழ்பகுதியில் ஒரு பாதை போவதைப் பார்த்தவன், வேகமாக அதனுள் இறங்கினான். வேகமாக இறங்கியவன்.. தவழ்ந்து செல்லும் பாதையை அடைந்த போது.. டமார் என்று வெடிக்கும் சத்தம் கேட்டது. சட்டென்று உடலை குறுக்கி படுத்துக் கொண்டான். அவனது மனம் உடனே மைதிலிக்காக அடித்துக் கொண்டது. தனது மேல் மண் சரிந்து இருக்க அதைத் தட்டி விடக் கூட தோணாது. பாக்கெட்டில் இருந்த சிறு டார்ச் லைட்டை அடித்துப் பார்த்தான். அவன் இறங்கி வந்த பாதை முழுவதும் மண் சரிந்து மூடியிருந்தது. பின் நேராக டார்ச் லைட்டை அடித்தான். நல்லவேளை அந்த இடம்.. ஒன்றும் ஆகவில்லை. அப்பொழுது மீண்டும் வெடிச்சத்தம் ஒன்று உள்ளே கேட்டது. அவனது பின்னால் இருந்து மண் சரிந்து அவனது கால்களை மறைத்து முதுகு வரை பரவியது.


ஆனால் சூர்யா “மைதிலி..” என்று அலறினான்.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 22


(பொருளடக்கம்)

புதைந்த தங்கங்கள் போல்..

தங்க மனங்களும் புதையுமோ!





இதுநாள் வரை.. இப்படியொரு உணர்வை சூர்யா அனுபவித்தது இல்லை. உயிர் நாடியில் இருந்து உள்ளம் வரை வலியெடுத்தது போன்று இருந்தது. மீண்டும் மைதிலி என்று அழைத்துப் பார்க்க வாயெடுத்தவனுக்கு நாக்கு மேலண்ணத்துடன் ஒட்டிக் கொண்டது. அவனது இதயம் துடிக்கும் சத்தம் அவனுக்கு தெள்ள தெளிவாக கேட்டது.


அப்பொழுது அவனது பாக்கெட்டில் வைத்திருந்த செல்பேசி ஒலித்தது. அவசரமாக அழைப்பை ஏற்று காதில் வைத்து ‘ஹலோ’ என்றான்.


அந்த பக்கம் விதார்த் “தேங்க் காட்!” என்று நிம்மதியுடன் கூறியவன், தொடர்ந்து “நல்லவேளை நீ உள்ளுக்குள்ள போகலை. சோமேஸ்வரன் பயந்த மாதிரியே சுரங்கப்பாதையில் வெடி வச்சுட்டான் போல! இந்த கட்டிடமே ஒரு தரம் ஆடிய மாதிரி இருந்தது. இங்கே வெளியே போன மகேஸ்வரன் மற்றும் கணேஷன், ரவீந்தர் இன்னும் வரலை. மற்றவங்களை முனுசாமி உதவியோட வெளியே அனுப்பிட்டேன்.” என்றான்.


அவன் பேச பேச.. இடைப்புகுந்த சூர்யா “அந்த பக்கம் சோமேஸ்வரன் வெளியே வந்தாரா! நீங்க பார்த்திங்களா” என்றுக் கேட்டான்.


அதற்கு விதார்த் “இல்லை சூர்யா! அனேகமாக நான் இங்கே வருவதற்குள்ளவே சோமேஸ்வரன் வெடியை வச்சுட்டு வெளியே போயிருப்பான் என்று நினைக்கிறேன். அவன் உள்ளே இருக்கும் போது.. வெடியை வெடிக்க வைக்க அவன் ஒன்றும் முட்டாள் இல்லை. சீக்கிரம் வா நாம் சோமேஸ்வனை பிடிக்க வேண்டும் நான் முன்னே போறேன்.” என்றான்.


அதைக் கேட்ட சூர்யா “அப்போ மைதிலி..” என்கவும், விதார்த்திடம் சிறு தயக்கம் பிறந்தது. பின் “என் பிளன்படி வெடியை வைத்தவன், அடுத்து நான் சொன்னதையும் செய்திருக்கலாம்.” என்றான்.


அதற்கு சூர்யா “நீங்க முன்னாடி போங்க.. நான் வெளியே வந்தால்.. மைதிலியோட தான் வருவேன்.” என்றான்.


அதைக் கேட்டு அதிர்ந்த விதார்த் “சூர்யா நீ உள்ளேயா இருக்கே!” என்கவும்.. சூர்யா “ஆமா ஸார்!” என்றான்.


விதார்த் “வேண்டாம் வெளியே வந்திரு சூர்யா! மொத்தம் மூணு பாமும் வெடிச்சுருக்கு! இன்னும் ஒரு வெடி பேலன்ஸ் இருக்கு! அதை எங்கு வேண்டுமென்றாலும் டைம் செட் செய்து வைத்திருந்தால் என்ன செய்வே! அந்த சுரங்கப்பாதைக்கு மேலே இருக்கிற போர்ஷன் எந்த நேரத்திலும் விழுகிறே பொஷிஷன்ல இருக்கு..” என்றான்.


அதைக் கேட்டு அதிர்ந்த சூர்யா “தென் ஐ டொன்ட் வான்ட் டு வேஸ்ட் மை டைம் வித் யு..” என்று அழைப்பைத் துண்டித்தவன், தனது பேன்ட் பாக்கெட்டில் வைத்தான். அதுவரை எதற்கும் அஞ்சாதவனுக்கு… மைதிலிக்கு எதாவது ஆகிவிட்டால் என்ற பயத்தில் உடலும் உள்ளமும் நடுங்கியது. எனவே நடுக்கத்துடன் செல்பேசியை பாக்கெட்டில் போட்ட பொழுது.. அது நழுவி கீழே விழுந்துவிட்டது. அதைக் கவனிக்கும் மனநிலையில் சூர்யா இல்லை. அவனது அடிவயிற்றில் இருந்து புறப்பட்ட துயரம் ஓலமாய் வந்தது.


“மைதிலி..” என்றுக் கத்தினான்.


அவனது குரலே திரும்பி அவனுக்கு ஒலித்தது. சூர்யா மனதின் மொத்த தைரியத்தை கூட்டினான். அப்பொழுது ஏனோ மைதிலி சூர்யா என்று அழைப்பது போன்று இருந்தது. மீண்டும் அந்த அழைப்பு கேட்கவும், இறந்து போன அவனது செல்களும், உணர்வுகளும் உயிர் பெற்றது. ஆம் மைதிலியின் அழைப்பு கேட்கிறது.


உடனே சூர்யா “மைதிலி இதோ வரேன்..” என்று தனது முதுகில் இருந்த மணல்களை தட்டிவிட்டு முன்னேறி சென்றான். அவன் நகர்ந்ததும்.. அவனது மேல் இருந்த மண் சரிந்து செல்பேசியை மூடியது. அந்த நேரத்தில் மீண்டும் விதார்த் அவனை அழைத்தான். விதார்த்திற்கு தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளார் என்ற தகவலே வந்தது.


சூர்யா முன்னேறி செல்ல செல்லவே மைதிலி என்று அழைத்தவாறு தான் சென்றான். தனது குரல் அவளுக்கு தைரியத்தை கொடுக்கும் என்று நம்பினான். அதுபோல்.. அவளது பதில் குரல் தனக்கும் திடத்தை தரும் என்று நினைத்தான்.


கையில் சிறு டார்ச் லைட்டுடன் தவழ்ந்தவாறு சென்றுக் கொண்டிருந்தவன்.. சிறிது தொலைவில் மண் சரிந்து பாதை மூடியிருப்பதைக் கண்டு அதிர்ந்தான்.


“மைதிலி எங்கே இருக்கே?” என்றுக் கத்தினான்.


மைதிலி “நீ வந்த பாதையிலேயே ஓரத்தில் சின்ன மரக்கதவு இருக்கும் சூர்யா! அந்த கதவை திறந்தால் சின்ன ரூம் இருக்கு.. அங்கே இருக்கேன். இங்கே என்னால நகர முடியலை. சீக்கிரம் வா சூர்யா!” என்றவளின் குரலில் அழுகையாக மாறியது.


உடனே சூர்யா "அழாதே மைதி! தைரியமா இரு.. நான் வந்துருவேன்." என்றவனுக்கு அதுவரை அவளது குரல் கிணற்றில் இருந்து கத்தினால் ஒலிப்பது போன்று இருந்தது. ஆனால் தற்பொழுது அக்குரல் அவனுக்கு பின்னால் இருந்து ஒலித்தது போன்று இருந்தது. எனவே அவள் கூறிய கதவை தாண்டி வந்துவிட்டது தெரிந்து.. இருபக்கமும் தடவிப் பார்த்தவாறு வந்த வழியே திரும்பி சென்றான்.


ஓரிடத்தில் துணி ஒன்று இருக்கவும், அங்கு மரக்கதவை உணர்ந்தான். எனவே மீண்டும் மைதிலியை அழைத்து உறுதி செய்துக் கொண்டவன், டார்ச் அடித்து அதில் இருந்த சிறு தாழ்ப்பாளை திறந்துக் கொண்டு வேகமாக உள்ளே சென்றான். ஆனால் அங்கு கண்ட காட்சி அவனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.


ஏனெனில் அந்த சிறு அறையில் பழைய பொருட்கள் தாறுமாறாக கிடக்க.. அந்த அறையின் ஒரு பகுதியில்.. மண் சரிந்து கிடந்தது.


மைதிலி “சூர்யா..” என்கவும், குரல் வந்த இடத்தை நோக்கி கவனமாக சென்றான். அங்கு மரத்தால் ஆனா அலமாரி ஒன்று சரிந்து.. அருகில் இருந்த பெட்டியின் மேல் விழுந்திருக்க.. அதற்கு அடியில் சிறு இடைவெளியில் மைதிலி கரங்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தாள். அவளது கால் பகுதி முழுவதும் மண் சரிந்து புதைந்திருந்தது.


அந்த அலமாரியை தனது தோள்களால் முட்டு கொடுத்த சூர்யா “மெல்ல நகர்ந்து வெளியே வா.. மைதி!” என்றான்.


மைதிலியும் மெல்ல வந்தாள். அந்த பழைய கால அலமாரியின் கனமும் அதன் மேல் விழுந்த மண்ணின் கனமும் சூர்யாவின் தோளை அழுத்தி பெரும் வலியை கொடுத்தது. ஆனால்.. மைதிலிக்கு ஒன்றும் ஆகிவிடக் கூடாது என்பதைத் தவிர அவனது மனதில் ஒன்றும் இல்லை. மைதிலி முழுவதுமாக வெளியே வந்ததும்.. மெதுவாக அலமாரியை விட்டவன், ஓய்ந்து போய் மண்டியிட்டு அமர்ந்திருந்தவளின் கட்டை அவிழ்த்து விட்டான். கட்டை அவிழ்த்ததுமே.. மைதிலி சூர்யாவின் கழுத்தை கரங்களால் இறுக கட்டிக் கொண்டாள்.


மைதிலி கேவல்களுக்கு இடையே “என்னோட லைஃப் அவ்வளவுத்தான்னு நினைச்சுட்டேன் சூர்யா..” என்றாள். அவளது முதுகை ஆதரவா தடவிக் கொடுத்த சூர்யா “அதெப்படி! என்னோட தொல்லை எல்லாம் நீ தாங்க வேண்டாமா! அவ்வளவு சீக்கிரமா நான் உன்னை விட்டுருவேனா..” என்றான்.


முகத்தை நிமிர்த்தி அவனைப் பார்த்த மைதிலியின் முகத்தில் அழுகையும் சிரிப்பும் ஒருங்கே தோன்றியது. பின்பே அவனது தோளில் காயத்தைப் பார்த்தவள், “சூர்யா” என்றுத் திகைத்தாள்.


அவளது கண்ணீரை துடைத்த சூர்யா “ஆமா மைதி! காயம் ஆகிருச்சு! முதல்ல இதுக்கு மருந்து போடணும். அப்பறம் நாம் நல்லா பல வருஷங்கள் வாழ்வோம். இதை மட்டும் மனசில் அழுத்தமாக பதிய வச்சுக்கோ மைதி!” என்றான்.


அவனது குரலில் திகைத்த மைதிலி “என்னாச்சு சூர்யா?” என்றுக் கேட்கவும், சூர்யா சிறுத் தயக்கத்துடன் “இந்த சுரங்கப்பாதையில் நான் இறங்கி வந்த.. பாதை மண்சரிந்து மூடியிருச்சு! நேரா போற வழி எங்கே போகுது?” என்றுக் கேட்டான்.


மைதிலி என்ன என்று அதிர்ந்தாலும் “டொன்ட் வெர்ரி சூர்யா! நேரா போகிற வழி ஸ்டோர் ரூமிற்கு தான் போகுது. அந்த வழியாக போயிரலாம்.” என்றாள்.


வியர்வையினால் கன்னத்தில் ஒட்டியிருந்த அவளது முடிக்கற்றை ஒதுக்கிவிட்டவாறு “அந்த வழியிலும்.. மண் சரிந்திருக்கு மைதிலி!” என்றவன், “நாம் வந்த வழியாக போய்.. அங்கே சரிந்த மண்ணை கொஞ்சம் கொஞ்சமா அகற்ற முடியுதானு பார்க்கணும்.” என்றவன், கீழ்மட்டத்தில் இருக்கும் இப்பகுதியில் இருந்து.. மண்ணை தோண்டினால் இன்னும் இறங்கும்.. என்பதை அவளிடம் கூறவில்லை. அதுபோல்.. சோமேஸ்வரன் இன்னொரு வெடியை வெடிக்காமல் வைத்திருக்கிறார் என்பதையும் கூறவில்லை.


ஆனால் மைதிலி “இல்லை சூர்யா இன்னொரு வழியும் இருக்கு! அதுவும்.. இங்கே இறங்கி வந்தோம் தானே.. அதுக்கு பக்கத்தில் தான் இருக்கு! நான் இங்கிருந்து.. அதுவழியாக தான் தப்பித்து வந்தேன். அந்த வழி இந்த வழி மாதிரி இருக்காது. தாராளமாக இருவர் நடந்து வரக் கூடிய அளவிற்கு பெரிதாக இருந்துச்சு! மரத்தால் ஆனா கூரை.. செங்கற்களால் ஆனா பக்க சுவர்.. சின்ன பேட்டரி லைட்.. என்று அது ரொம்ப வசதியாக இருக்கும். அதன் வழியாக தான் நான் வெளியே வந்தேன். தோட்டத்தில் வழியா வரலை.” என்றாள்.


மைதிலி கூறியதைக் கேட்ட சூர்யா பரபரப்புற்றான். அவளது தோள்களைச் சந்தோஷத்துடன் பிடித்து “தட்ஸ் குட்! வா மைதிலி..” என்று அவளை முன்னே போக விட்டு.. பின்னே சென்றான். அப்பொழுது தடார் என்ற சத்தம் கேட்கவும், திரும்ப முயன்ற மைதிலியிடம் “நேரா பார்த்து சீக்கிரம் போ.. மைதிலி” என்று அவளை திரும்ப விடாமல் செய்தான். அந்த அறையை விட்டு செல்லும் போது.. சூர்யா மெல்ல திரும்பிப் பார்த்தான். அங்கு மைதிலி சிக்கி கொண்டிருந்த பகுதி முழுவதுமாக மண் சரிந்து மூடியிருந்தது.


தனது பாக்கெட்டில் இருந்த செல்பேசியை எடுக்க நினைத்தவன்.. செல்பேசி இல்லாதிருப்பதைக் கண்டு திகைத்தான்.


சூர்யாவிற்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. சுரங்கப்பாதையின் முன்னும் பின்னும் மண் சரிந்து மூடியிருக்க.. அவர்கள் சென்றுக் கொண்டிருக்கும் வழியும்.. சிறு அதிர்வு நிகழ்ந்தாலும் மண் சரிந்து மூடி விடும். இவர்கள் இருவரும் வெளியே செல்ல சாத்தியக் கூறுகள் மிகவும் குறைவு. ஆனாலும் அந்த குறைவான வாய்ப்பின் மீது நம்பிக்கையை வைத்துக் கொண்டு.. மைதிலிக்கு தைரியம் கொடுத்துக் கொண்டு.. அதில் அவனும் திடம் பெற்றவாறு.. மைதிலி கூறிய வழியை நோக்கி சென்றார்கள்.


முன்னே தவழ்ந்தவாறு சென்றுக் கொண்டிருந்த மைதிலியிடம் பேச்சு கொடுத்தவாறு கையில் வைத்திருந்த டார்ச் லைட்டின் மூலம் அவளுக்கு வெளிச்சத்தை காட்டியபடி சென்றான். மைதிலியும் அவனுக்கு பதில் அளித்தவாறு சென்றாள்.


“சித்தப்பா! என்னை இங்கே வரை இழுத்துட்டு வந்து.. கட்டிப் போட்டுட்டு.. பாதி தங்கம் பெட்டியிலும், பாதி தங்கம் ஒரு பையிலும் இருந்துச்சு.. அதையெல்லாம் அந்த பையில் போட்டுட்டு போயிட்டார். என்னைத் திரும்பியும் கூடப் பார்க்கலை. அவரை நம்பி.. நான் எவ்வளவு பெரிய முட்டாளா இருந்திருக்கேன்.” என்றுக் கசந்த புன்னகை சிந்தினாள்.


அதற்கு சூர்யா “நீ முட்டாளா! நீ இருக்கும் போதே.. எனக்கு இந்த வழியில் போக பயமா இருக்கு! ஆனா நீ தனியா இங்கே வந்து பல விசயங்களைக் கண்டுப்பிடித்து தைரியமா இங்கிருந்து வெளியேயும் போயிருக்கே! நீ பயங்கரமான தைரியசாலி மைதிலி! உன் கிட்ட நான் பாடம் கத்துக்கணும்.” என்றான்.


அதைக் கேட்டு முறுவலித்த மைதிலி “அதற்கு நீ தான் காரணம்! நான் சொன்னேனே நினைவிருக்கா.. உங்க கூட இருந்தா பாஸிட்டிவ் வைப்பை ஃபீல் செய்கிறேன்னு! அதே மாதிரி உன்னோட தைரியமும் திடமும் எனக்கும் ஒட்டிக்கிச்சுனு நினைக்கிறேன்.” என்றாள்.


அதற்கு சூர்யா “அப்போ என்னை ஒட்டிக்கிட்டு இருந்தால்.. உனக்கு எதுவும் நடக்காதுனு புரிந்தால் சரி..” என்றுச் சிரித்தான்.


ஆனால் மைதிலி “சூர்யா” என்று திகைத்தாள். சூர்யா தாண்டி எட்டிப் பார்த்தான். அங்கு.. வழி முழுவதும் மண்சரிந்து.. முட்டு சந்து போன்று இருந்தது.


அவளைத் தாண்டி முன் சென்ற சூர்யா “நான் வந்த வழி இதுதான்! மைதிலி நீ சொன்ன வழி எங்கே?” என்றுக் கேட்டான்.


மைதிலி குழப்பத்துடன் “அப்போ ரொம்ப இருட்டா இருந்துச்சு சூர்யா! நான் இறங்கி வந்த வழியினு நினைச்சு.. ஏறினேன். ஆனா ஏறின பிறகு தான்.. அது வேற வழியினு தெரிஞ்சுது.” என்றுத் தட்டு தடுமாறிக் கூறினாள்.


சூர்யா “ஹெ ரிலேக்ஸ்! ஜஸ்ட் எப்படி அந்த வழியில் போனே என்று மட்டும் நினைவில் வச்சு சொல்லு! வேற எதையும் யோசிக்காதே!” என்றான்.


அவனின் நிதானமான பேச்சு வேலை செய்யவும், மைதிலி நன்றாக யோசித்துப் பார்த்தவள், “ஆங்! நான் ஏற நினைத்து பழைய வழியின் முன் தான் இருந்தேன். ஆனா அந்த பஞ்சாப்காரன் எங்கே இருக்கிறான் என்றுப் பார்க்க திரும்பி விட்டு ஏறும் போது.. புதர் மாதிரி வளர்ந்திருந்த செடிகளை விலக்கி விட்டு ஏறினேன்.” என்றுக் கூறினாள். அதுவே சூர்யாவிற்கு போதுமானதாக இருக்க.. “நீ இங்கேயே இரு மைதி! பக்கத்தில் வராதே!” என்று எச்சரித்துவிட்டு.. அவளது கையில் டார்ச்சை கொடுத்தவன், அந்த மண்சரிவை நெருங்கினான்.


மெல்ல கரங்களை விட்டு.. மெதுவாக மண்ணை வாரி போட்டான். நான்கு முறை.. இவ்வாறு போட்டவனின் கையில் இலை ஒன்று தட்டுப்படவும், பரபரப்புற்றாலும்.. அதைச் செயலில் காட்டாமல் நிதானமாகவே செயல்பட்டான்.


இன்னும் நான்கு முறை மெதுவாக அள்ளி எடுத்து போட்ட போது.. சிறு இடைவெளி தென்பட்டது. அப்பொழுது சூர்யா அடைந்த நிம்மதியின் அளவு அளாவிலாது. பின்னால் இருந்த மைதிலி கட்டிக் கொண்டு.. நெற்றியில் அழுத்த முத்தமிட்டான். பின்.. அ்ந்த இடைவெளியை மண்களை வாரி இறைத்து போட்டு ஒரு ஆள் உள்ளே புக கூடிய அளவிற்கு பெரிது செய்தவன், முதலில் மைதிலியை மெல்ல ஏற்றிவிட்டான்.


மைதிலியை ஏற்றிவிடும் போதே.. சூர்யாவிற்கு இன்னொரு விசயம் தலைக்குள் ஓடியது. தான் இறங்கி வந்த வழியாக சோமேஸ்வரன் வெளியேற வாய்ப்பில்லை. ஸ்டோர் ரூமின் வழியாகவும் செல்ல வாய்ப்பில்லை. ஏனெனில் அங்கு விதார்த் நின்றிருந்தான். எனவே சோமேஸ்வரன் இந்த வழியாக தான் தப்பித்து சென்றானோ! அல்லது இன்னும் அங்கு இருப்பானோ.. என்று சந்தேகம் தோன்றியது. எனவே மைதிலி ஏறியதும்.. அவனும் பின்னே ஏறினான். மைதிலி.. ஏதோ கூற வாயைத் திறக்கவும், அவளது வாயின் மேல் கையை வைத்த சூர்யா “ஷ்ஷ்! உன் சித்தப்பா இங்கே இருந்தாலும் இருக்கலாம். என் பின்னால் சத்தம் போடாமல் வா..! நாம் தப்பித்து செல்ல இந்த ஒரு வழி தான் இருக்கு!” என்கவும், மைதிலி மேலும் அவனுடன் ஒட்டிக் கொண்டாள். மரப்படிக்கட்டு போன்று இருந்ததில் மெல்ல இருவரும் ஏறினார்கள். முன் சிறு ஈரப்பதத்துடன் இருந்த பகுதி தற்பொழுது நன்றாகவே ஈரமாக இருப்பதை மைதிலி உணர்ந்தாள்.


இருவரும் எழுந்து நின்று நடந்து செல்லும் பகுதி வந்துவிடவும், சூர்யா சுற்றிலும் பார்த்தவாறு செல்ல அவனுக்கு பின்னால் மைதிலி மெல்ல வந்தாள். நீண்ட பாதையில் மெதுவாக சென்றுக் கொண்டிருக்கும் போது. அங்கு பாதை இரண்டாக பிரிந்தது. சூர்யா கேள்வியாக மைதிலியை பார்க்கவும், அவள் வெளியேறிய வழியை கண்களால் காட்டினாள்.


சூர்யா “அப்போ அந்த வழி?” என்றுக் கேட்கவும், மைதிலி தனக்கு தெரியாது என்பது போல் தலையை ஆட்டினாள்.


அப்பொழுது “நீங்களா!” என்று ஆத்திரமும் அதிர்ச்சியும் நிறைந்த குரலில் இருவரும் திரும்பிப் பார்க்க அங்கு சோமேஸ்வரன் தோளிலும் கையிலும் பையுமாக அவர்களைப் பார்த்தவாறு நின்றுக் கொண்டிருந்தார்.


உடனே சூர்யா அவரை நோக்கி ஓடவும், கையில் இருந்த வெடியை டைம் செட் செய்து போட்டுவிட்டு அங்கிருந்த சிறு படிக்கட்டில் ஏறியவர், சூர்யா அங்கு வருவதற்குள்.. கதவை தாளிட்டு விட்டார்.


அந்த வெடி.. இன்னும் ஐந்து நிமிடங்களில் வெடிக்க நேரத்தை எண்ணிக் கொண்டிருந்தது.



 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 23


(பொருளடக்கம்)

இறுதி நெருங்குகிறதோ!

கயவனுக்கோ!

கதைக்கோ!

தலைவனுக்கோ!





அவர்கள் வெளியேற இருந்த ஒரு வழியையும் அடைத்துவிட்டு.. சோமேஸ்வரன் சென்றுவிடவும், மைதிலி திகைத்து நின்றுவிட.. சூர்யா கதவை நோக்கி வேகமாக சென்று கதவை திறக்க முற்பட்டான். பலமாக குலுக்கினான். அந்த பழைய கால மரக்கதவு.. சூர்யாவின் தாக்குதலால் ஆடியது என்றாலும் சிறிது கூட நகரவில்லை. பின் பலமாக தனது கால்களால் உதைத்தான். அப்பொழுதும் பயனில்லை.


முதலிலேயே சோமேஸ்வரனிடம் அடி வாங்கியது.. தோளில் குண்டடி பட்டது.. என்று சூர்யாவின் சக்தியை உறிஞ்சியிருந்தது. எனவே சோர்வுடன் முட்டியில் கரத்தை வைத்து மூச்சு வாங்கினான்.


அப்பொழுது மைதிலி “சூர்யா.. இன்னும் ஒரு நிமிஷம் தான் இருக்கு..” என்று பீதியுடன் கூறவும், சூர்யா சட்டென்று சென்று அதில் இருந்த பட்டனை அணைத்தான். அதைக் கண்டு நிம்மதியுற்ற மைதிலியிடம் “இதை நீ செய்திருப்பேனு நினைச்சு தான் நான் அங்கே கதவு கூட மல்லுக்கட்டிட்டு இருந்தேன். இந்த கதவை எப்படி திறக்கிறது..” என்றவாறு சுற்றிலும் பார்த்தான்.


மைதிலி “நாம் இப்போதைக்கு பாதுகாப்பான இடத்தில் தான் இருக்கோம். அவர் போன போயிட்டு போறார். இன்னேரம் அவர் வைத்திருக்கும் காரில் ஏறி.. கிளம்பிப் போயிருப்பார்.” என்றாள். பல விசயங்களைக் கடந்து வந்ததால்.. ஏற்பட்ட அலுப்பு அவளை அவ்வாறாக பேச வைத்தது.


அதற்கு சூர்யா “அவர் எங்கே போனாலும் நான் விட மாட்டேன்.” என்றுவிட்டு மேற்கூரையை சிறிது கவலையுடன் பார்த்தான்.


இந்த இடமும் என்னேரமும் அழியலாம். ஏனெனில் மரத்தால் ஆன கூரை.. மழையின் ஈரத்தை தாங்க முடியாமல்.. நீரில் ஊறிப் போய் ஆங்காங்கே சிறு விரிசலுடன் காணப்பட்டது. அந்த விரிசல்களின் வழியாக நீர் சொட்டு போட்டுக் கொண்டிருந்தது. அது என்னேரமும்.. கனம் தாங்காமல் விழலாம். அதை மைதிலிக்கு சொல்லி அச்சுருத்த சூர்யா விரும்பவில்லை.


எனவே அவளை மென்மையான பார்வையால் வருடிவிட்டு சுற்றிலும் பார்த்தவன்.. இன்னொரு பாதையை கண்டான். மைதிலியையும் தன்னுடன் அழைத்துக் கொண்டு சிறு எதிர்பார்ப்புடன் அங்கு சென்றான். அவன் எதிர்பார்த்தது போல்.. அங்கு சோமேஸ்வரன் தங்கிக் கொள்ளும் சிறு அறை போன்று இருந்தது. கட்டில், விசிறியுடன் சிறு பாத்திரங்களும் இருந்தது. மேலும் அங்கு என்ன பொருட்கள் இருக்கின்றன.. என்று சூர்யா ஆராய்ந்தான்.


மைதிலி திகைத்தவளாய்.. “சித்தப்பா இத்தனை நாளா இங்கே தான் தங்கியிருந்தாரா! எத்தனை வேலைகளை செய்து.. எப்படியெல்லாம் எங்களை ஆட்டிப் படைத்து.. அவரோட ஆதாயத்திற்கு எங்களை யுஸ் செய்து.. இப்படி சுயநலமா இருந்திருக்கிறார். இன்னும் என்னால நம்ப முடியலை.. சூர்யா!” என்றாள்.


அவளது கையில் சிறு கம்பியை கொடுத்த சூர்யா “இப்போதைக்கு இதை நம்பு! நாம் இந்த இடத்தை விட்டுப் போக இது ஒண்ணு தான் வழி!” என்றுவிட்டு.. தனது கையில் பெரிய கட்டை ஒன்றை எடுத்துக் கொண்டான். பின் அவளை அழைத்துக் கொண்டு கதவிடம் சென்றவன், கதவில் தெரிந்த சிறு இடுக்கில் அவளிடம் இருந்த கம்பியை சொருகி இறுக பற்றிக் கொள்ள கூறியவன், தனது கையில் இருந்த கட்டை கொண்டு அடித்து எம்பினான். அவனது முயற்சி விரைவிலேயே பலன் அளித்தது. கதவில் விரிசல் விழவும், தற்பொழுது கட்டை கொண்டு அந்த விரிசலில் ஓங்கி அடித்தான். கதவு பிளக்கவும் அதைப் பிடித்து இழுத்து பிய்த்து விட்டு.. முதலில் வெளியே போனவன், தலையில் யாரோ ஓங்கி அடித்ததில்.. விழுந்தான். இதை எதிர்பாராத மைதிலி அதிர்ச்சியுடன் பார்கையில் கையில் உண்டியல் இரும்பு பெட்டியுடன் சோமேஸ்வரன் அவள் முன் வந்தார்.


ஆம் சோமேஸ்வரன் இன்னும் அந்த கடவுள் கர்ப்பகிரகத்தில் இருந்து வெளியே போகவில்லை.


இந்த சுரங்கப்பாதை வழியாக மைதிலியும் சூர்யாவும் வருவார்கள் என்று எதிர்பாராத சோமேஸ்வரன்.. அங்கு நின்று அவர்களுடன் சண்டையிட்டு நேரத்தை கடத்த விரும்பாதவராய்.. கையில் இருந்த இன்னொரு வெடியையும் டைம் செட் செய்து.. வீசிவிட்டு கதவை திறந்து கடவுள் கர்ப்பகிரத்திற்குள் சென்றவர், கதவை மீண்டும் நன்றாக இழுத்து தாளிட்டார். அந்த பக்கத்தில் இருந்து சூர்யா கதவை திறக்க இடித்துக் கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டு இளக்காரத்துடன் சிரித்தார். பின் தான் வழக்கமாக தான் சாவி வைக்கும் இடத்தில் கையை விட்டு சாவியை துழாவியவர் அங்கு சாவி இல்லாதிருப்பது கண்டு திகைத்தார். அவசரமாக சுற்றிலும் பார்த்தார்.


மைதிலி அதை எடுத்து வேறு இடத்தில் வைத்து விட்டதை அவர் அறியவில்லை. வேறு எங்காவது வைத்து விட்டோமா.. என்று.. சுற்றிலும் தேடிப் பார்த்தார். ஆனால் தொங்கிக் கொண்டிருந்த திரைசீலைக்கு அடியில் பார்க்க தவறிவிட்டார். கதவை இடித்துக் கொண்டிருந்த சத்தம் நின்றதும்.. திகைத்து பார்த்தார். இன்னும் வெடி வெடிக்காதிருக்கவும், அதை சூர்யா நிறுத்திவிட்டான் என்றுத் தெரிந்தது. அதில் குறைந்தப்பட்ச குறைந்த நேரமே ஐந்து நிமிடங்கள் தான்!


வெடியை வெடிக்க செய்யாமல் நிறுத்திய சூர்யா என்னேரமும் கதவை உடைத்துக் கொண்டு வந்துவிடலாம் என்று சோமேஸ்வரன் சாவியை தேடுவதை விட்டு.. அந்த இரும்பு கதவை உதைத்து.. இடித்து திறக்க முயன்றார். ஆனால் அது பழைய இரும்பால் ஆனதால் என்பதால்.. வலுவானதாக இருந்தது. வெறிக் கொண்டாற் போன்று ஆட்டிய போது.. மீண்டும் சுரங்கவழிப்பாதை கதவில் இருந்து சத்தம் கேட்கவும், தனது பைகளை கீழே வைத்துவிட்டு.. அங்கிருந்த உண்டியல் பெட்டியுடன் சூர்யாவை தாக்க தயாராக நின்றார். இன்னும் அங்கு சோமேஸ்வரன் இருப்பார் என்று எதிர்பாராத சூர்யா உள்ளே வந்து சோமேஸ்வரனின் தாக்குதலுக்கு ஆளானான்.


சோமேஸ்வரனின் வெறி அத்துடன் அடங்கவில்லை. மைதிலியை பார்த்ததும்.. அவளையும் அடிக்க அந்த இரும்பு பெட்டியை ஓங்கிக் கொண்டு சென்றார். ஆனால் சட்டென்று எழுந்த சூர்யா அவரது கரத்தைப் பற்றித் தடுத்தான்.


அவ்வளவுத்தான் தப்பித்தாகிவிட்டது என்று நினைத்த சோமேஸ்வரன் மீண்டும் அந்த சிறு கர்ப்பகிரகத்திற்குள் மாட்டிக் கொண்டதில் ஏற்கனவே வெறியுடன் இருந்தவர், சூர்யா அவரைத் தடுக்கவும்.. இன்னும் வெறியேறியவராய்.. கீழே விழுந்திருந்தவனின் மேல் ஏறி அமர்ந்தவர், அந்த இரும்பு பெட்டி கொண்டு அடிக்க ஓங்கினார். மைதிலி அலறியவாறு அவரது கையை பிடிக்க முயன்றாள். ஆனால் அவரது உதறலில் அருகில் இருந்த சுவற்றில் மோதி விழுந்தாள். பின் மீண்டும் அடிக்க முயற்சித்த போது.. சூர்யா அந்த பெட்டியை பிடித்து அவரது முயற்சியை தடுத்தான். அந்த அடி மட்டும் அவனது மேல் பட்டிருந்தால்.. மண்டை பிளப்பது நிச்சயம்!


சோமேஸ்வரன் உதறியதில் மைதிலி விழுந்த இடத்தில் தான்.. அவள் சாவியை வைத்திருந்தாள். அவளது கரம் அதில் பட்டது. கர்ப்பக்கிரகத்தின் இரும்பு கதவு இன்னும் திறக்கப்படாமல் இருப்பதைப் பார்த்தாள். அப்பொழுதே.. அவளது சித்தப்பா இந்த சாவி கிடைக்காமல் தான் இன்னும் இருக்கிறார் என்றுப் புரிந்தது. அவளது கூடவே அவளது தலை அருகே.. பையையும் பார்த்தாள். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவளுக்கு புரிந்துவிட்டது. சட்டென்று பையுடன் எழுந்தவள், சாவி கொண்டு பூட்டை திறந்து.. கதவை திறந்துக் கொண்டு.. தங்கம் இருந்த பையுடன் வெளியே ஓடினாள்.


தங்கங்கள் இருந்த பையை மைதிலி எடுத்துக் கொண்டு ஓடுவதைப் பார்த்து திகைத்த.. சோமேஸ்வரன் சூர்யாவை அடிப்பதை விட்டு.. எழுந்து அவளை துரத்திக் கொண்டு ஓடினார்.


சூர்யாவினால் மைதிலியின் சாமர்த்தியத்தை மெச்சாமல் இருக்க முடியவில்லை. ஒரு கணம் மூச்சை இழுத்துவிட்டு தன்னை சமாளித்துக் கொண்ட சூர்யா அடுத்த நிமிடமே.. எழுந்து சோமேஸ்வரனை நோக்கி ஓடினான்.


விரைவிலேயே மைதிலியை பிடித்துவிட்ட சோமேஸ்வரன்.. முதலில் அவளது தோளில் இருந்த பையை பிடுங்கியவர், அவளை அடிக்க கையை ஓங்கிய பொழுது.. முதுகில் விழுந்த அடியில்..தடுமாறி விழுந்தார்.


விழுந்தவர் திரும்பிப் பார்த்தார். அங்கு சூர்யா கம்பீரமாக நின்றிருந்தான். சூர்யாவின் கதை முடிந்தது என்று ஒவ்வொரு தரமும்.. நினைத்துக் கொண்டிருக்கும் பொழுது மீண்டும் அவரைத் தேடி வந்து வீழ்த்தும்.. சூர்யாவை பார்க்க முதல் முறையாக சோமேஸ்வரனுக்கு அச்சமாக இருந்தது. இன்னும் மழை பலமாக பெய்துக் கொண்டிருக்க.. அந்த மழை இரவில்.. சூர்யாவை பார்க்க இன்னும் சோமேஸ்வரனுக்கு பீதியை கிளப்பியது.


சூர்யா மைதிலியிடம் திரும்பி “ஆர் யு ஒகே மைதிலி!” என்றான்.


மைதிலி “நான் ஒகே! உனக்கு ஒன்றும் ஆகலையே!” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் பொழுதே சோமேஸ்வரன் எழுந்து ஓடினார். மைதிலி திகைப்புடன் பார்க்கவும், சூர்யா “இனிமேல் அவரால் எங்கும் ஓட முடியாது." என்று பார்வையால் அவரை சுட்டிக் காட்டினான்.


தோளில் தங்கங்கள் கொண்ட பையுடன் மலை ஏற முடியாமல் ஏறிக் கொண்டிருந்தார்.


பின் சூர்யா திரும்பி மாளிகையை பார்த்தான். அங்கு விதார்த் சில ஆட்களுடன் சுரங்கப்பாதையை மூடியிருந்த மண்களை அகற்ற முற்பட்டான். அதைப் பார்த்த சூர்யா மைதிலியிடம் "மைதி! அவங்க நம்மளை காப்பாத்தா தான்.. மண்ணை அகற்றி வேலையை செய்துட்டு இருக்காங்க! இந்த மழையில இது அவங்களுக்கே ஆபத்தாகிடும். நீ சீக்கிரம் போய் அவங்களைத் தடுத்து.. நாம் சேஃப் என்று சொல்லிடு. நான் இவரை பார்த்துக்கிறேன்." என்றான்.


ஆனால் மைதிலி செல்லாது கண்களில் காதலை தேக்கி வைத்துக் கொண்டு அவனை நேராக பார்த்து "நாம் சேஃப் தானே..!" என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா "கண்டிப்பா சேஃப் தான்! நீ சீக்கிரம் போ! பீல்டிங் சாய்ந்திர போகுது." என்கவும், மைதிலி அடுத்த நிமிடமே மைதிலி அவர்களைப் பார்த்து ஓடினாள்.


மைதிலி போவதைப் பார்த்துவிட்டு திரும்பி சோமேஸ்வரனை பார்த்த சூர்யாவின் முகம் இறுகியது.


சோமேஸ்வரன் மூச்சு வாங்க மலையேறி கொண்டிருக்க அவரது பின்னால் வேகமாக ஏறிய சூர்யா “போதும் சோமேஸ்வரன்! நீங்க ஓடினது போதும்! இந்த தங்கத்திற்காக நீங்க நிறையா இழந்துட்டிங்க! கடைசியில் உயிரையும் இழந்திராதீங்க! இந்த மழை நேரத்தில் மலைக்காட்டிற்குள் போவது ரொம்ப டேன்ஞ்ர்! அதுவும் இந்த ஊர் இடிக்கு.. மனிதர்கள் என்றால் ரொம்ப பிடிக்குது.” என்றான்.


ஆனால் சோமேஸ்வரன் பேயை கண்டவர் போல்.. எதற்கு இவ்வாறு மலையேறுகிறோம் என்றுத் தெரியாமல் ஏறினார். அவரது மனம் சுயநிலை இழந்திருப்பது சூர்யாவிற்கு புரிந்தது. எனவே அவரை கீழே கூட்டி வர.. அவனும் வேகமாக ஏறினான். அவரது இந்த நிலை.. வாழ்வில் அனைவரும் சந்திப்போம்.


வேகமாக ஏறியவர்.. நடுவில் இருந்த புதரை தாண்டிச் சென்றார். அப்பொழுது.. அதில் இருந்த முட்கள் அந்த ட்ரவல் பேக்கின் அடிப்பகுதியில் மாட்டிக் கொண்டது. இவரும் முரட்டுத்தனமாக இழுக்கவும், அடிப்பகுதி கிழிந்து.. அதில் இருந்த தங்க காசுகள் கீழே விழுந்தன. அது தெரியாமல்.. சோமேஸ்வரன் மலை ஏறிக் கொண்டிருந்தார்.


சூர்யா “ஹலோ பேக் கிழிஞ்சுருச்சு..” என்றான். ஆனால் அவர் காதில் விழாதவர் போல் ஏறிக் கொண்டிருந்தார்.


பின் தங்கக் காசுகளுடன் சிறு பதக்கங்கள் விழுந்தது. சூர்யா எங்கு வருகிறான் என்றுப் பார்க்க திரும்பியவர், காசுகளும் பதக்கங்களும் கம்மல்களும் விழுந்திருப்பதைப் பார்த்து.. அவசர அவசரமாக எடுத்து.. அந்த கிழிந்த பையினுள்ளே மீண்டும் போட்டார். கிழிந்து இருந்த பகுதியின் வழியாக சில தங்க காசுகள் விழுந்துக் கொண்டும் இருந்தது. அவருக்கு அருகில் சென்ற சூர்யா சற்றும் யோசியாது.. பளார் என்று கன்னத்தில் அறைந்தான். செவிப்பறை கிழிந்துவிடும் போன்று அவன் அறைந்ததில்.. கையில் இருந்த பையை விட்டு சற்று தள்ளிப் போய் விழுந்தவருக்கு.. சுற்றும் புறமும் உறைத்தது. நிமிர்ந்து பார்த்தார். அங்கு சூர்யா நின்றிருந்தான்.


உடனே எழுந்து சென்று.. சூர்யாவின் சட்டையை பிடித்து உலுக்கி.. “நீ யார் சொல்லு!” என்றுக் கத்தினார்.


அதற்கு சூர்யா “நான் உங்க மருமகன்!” என்றுவிட்டு தனது சட்டையை விடுவித்துக் கொண்டான். ஆனால் சோமேஸ்வரன் சூர்யாவை தாக்க வரவும், அவரது தாக்குதலில் இருந்து விலகிய சூர்யா “சொன்னா கேளுங்க! என் கூட வந்திருங்க! நீங்க செய்த குத்தங்களை ஒத்துக்கிட்டு சரணடைஞ்சுருங்க! இப்போதைக்கு உங்களுக்கு சேஃப்பான இடம் அதுதான்! பிகாஸ் விதார்த், உங்க ரிலேட்டிவ்ஸ், மைதிலி என்று எல்லாரும் உங்க மேலே பயங்கர கோபத்தோட இருக்கிறாங்க! இத்தோட நிறுத்திக்கோங்க..” என்றான்.


அதற்கு சோமேஸ்வரன் வெறிக் கொண்டாற் போன்று கத்தினார்.


“முடியாது! எல்லாரையும் அழிப்பேன். இப்போ வந்திருக்கிறவங்க மாறனோட வாரிசா! சூப்பர் மாறனோட வாரிசுகளை எல்லாம் அழித்து.. அவனோட இந்த உலகத்தில் பிறந்ததிற்கான அடையாளத்தையே அழிப்பேன். அந்த நான்கு பேர் தான் என்னோட சிருஷ்யர்கள் என்று நினைச்சுட்டியா! இன்னும் இருக்காங்க! இந்த தங்கத்தை அவங்க கிட்ட வீசினா.. இன்னும் வருவாங்க! அவங்களை வச்சு.. மாறனோட வாரிசுகளை அழிப்பேன். மற்ற பெட்டிகளை தேடுவேன். அதற்கு பங்கிற்கு வருகிறவர்களை அழிப்பேன்.” என்றார்.


சூர்யா நிதானத்துடன் “என்னைத் தாண்டித் தான் எல்லாத்தையும் செய்ய முடியும்.” என்றான்.


அதைக் கேட்டு சத்தமாக சிரித்த சோமேஸ்வரன் “என்னோட முதல் டார்கெட்டே நீதான் சூர்யா..” என்றார்.


அதற்கு சூர்யா “அது உங்களால் முடியாது.” என்றான்.


சோமேஸ்வரன் “அப்படியா..” என்றவாறு அருகில் கூரான கட்டை ஒன்றை எடுத்தார்.


ஆனால் சூர்யா சிறிதும் அசராது “நிஜமா உங்களால் முடியாது. பிகாஸ் நான் சூர்யா இல்லை. நீங்க இரும்பு உண்டியலில் அடிச்சீங்களே அப்பவே அவன் இறந்துட்டான். அப்போ நான் யார்..” என்றுச் சிரித்தான்.


அப்பொழுது “சூ.. சூ.. சூ.. ர்யா..” என்றுத் திக்கு திணறலுடன் குரல் கேட்கவும், சோமேஸ்வரன் சூர்யாவை தாண்டிப் பார்த்தார். அங்கு மைதிலியும் விதார்த்தும் அதிர்ச்சியுடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இந்த கதை.. வேறு தளம் ஒன்றில் அடையாளத்தை மறைத்து.. நடந்த கதை போட்டிக்காக எழுதிய கதை..

இறுதி சுற்று கூட தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் எனக்கு மிகுந்த திருப்தியை கொடுத்த கதை இது..

வித்தியாசமான கருத்தை கூறியிருப்பேன்.

சாமி வருவதும்.. பேய் பிடிப்பதும்.. ஒன்று தான்‌... அதாவது.. ஒரு விசயத்தில் தீவிரமாக இருக்கும் போது.. அதனுடன் கலப்பது தான்‌..

சூர்யாவிற்கு இக்கதையில் நடந்தது அதுதான்..

முதலில் மாறனாக மாறினான். பின்.. முருகனாக மாறினான்.

இக்கதைக்கு தொடர்ந்து கருத்து தெரிவித்து உற்சாகப்படுத்தியதற்கு நன்றி..

இனி அடுத்த கதையுடன் தீபாவளி நாளன்று சந்திப்போம்‌‌..

அனைவரின் வீட்டிலும் மகிழ்ச்சியும்.. நிம்மதியும் என்றும் பெருகட்டும்..

நன்றி
 
Status
Not open for further replies.
Top