All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயைத் தீண்டினால்! - கதைத் திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 8


(பொருளடக்கம்)

மங்கையவளின் சொரூபம் காண்பீர்!

காற்றாய் போனவனின் அருவம் காண்பீர்!


சூர்யா கூறியதைக் கேட்ட.. மைதிலி அவனது கழுத்தில் இருந்த கத்தியை மெல்ல அகற்றிவிட்டு “என் மேலே பாவப்பட்டு.. என்னோட பிளனுக்கு ஒத்துழைப்பே என்றுத்தான்.. என் தாத்தா, பாட்டி செய்த கொடுமைகள், இன்னும் என் குடும்பத்தில் இருக்கிறவங்க.. அந்த பெட்டிக்காக அடிச்சுக்கிறதை அப்படியே சொன்னேன். ஆனா நீ அதை வச்சே.. நானும் அவங்கள்ல ஒருத்தி தான் என்பதைக் கண்டுப்பிடிச்சுட்டியா! ஸ்மார்ட் தான்..” என்றாள்.


சூர்யா “ஸ்மார்ட்டா! படு முட்டாள் நான்! இல்லைன்னா எனக்கு நானே.. இப்படியொரு புதைக்குழி தோண்டியிருப்பேனா..” என்று அவனது பார்வை அவளது கழுத்தில் கட்டியிருந்த மாங்கல்யத்திடம் சென்றது.


மைதிலி “புதைக்குழியா! புதையல்குள்ள தான் விழுந்திருக்கே! உனக்கு கொஞ்சம் பங்கு வாங்காம போவியா என்ன?” என்றவள், தொடர்ந்து “முதல் நாள் உன்னைப் பார்த்த போது.. எனக்கு சரியா அடையாளம் தெரியலை. ஆனா அடுத்த நாள் வந்து பக்கத்தில் உட்கார்ந்தே பார்! நான் பிரமிச்சுட்டேன். அந்த மாறன் மாதிரியே இருந்தே! நீ யாருனு எனக்கு பெரிய டவுட் வந்திருச்சு! ஆனா நீ ஜாலியா பேசிட்டு போகவும், எனக்கு சொத்தென்று ஆகிருச்சு! நீ வேற ஆள் தான் என்றுத் தெரிஞ்சுருச்சு! ஆனா மாறன் மாதிரி இருக்கிற உன்னை விட மனசில்லை. பிரெண்ட்லியா வந்து பேசினே.. அதை நானே கெடுத்துட்டேனோ என்று இருந்தது. அதுதான் பின்னால் வந்தேன். ஆனா நீ.. நான் உன் மேலே பிளர்ட் ஆகிட்டேன்.. என்றுப் பேசினதும்.. என்ன தான் மாறன் மாதிரி இருந்தாலும் தெரியாத ஆம்பிளை கூட பழக்கம் வச்சுக்கிறது நல்லதில்லை.. என்றுப் போயிட்டேன். ஆனா எனக்கு உன் நினைப்பாக தான் இருந்துச்சு! அடுத்த நாள் கீழே காபி ஷாப்பில் இருந்தே! உன்னைப் பார்த்ததும்.. என்னால் உன் மேலே இருந்து கண்களை எடுக்க முடியலை. நீ அந்த மாறனாக இருந்திருக்க கூடாதா.. அட்லீஸ்ட் அந்த மாறன் வம்ச வழியாக இருந்திருக்க கூடாதா என்று இருந்துச்சு! அந்த கொஞ்ச நிமிடங்களில் நீ எனக்கு அந்த மாறனாகவே தெரிந்தே! அதுதான் என்னையும் அறியாம அப்படிப் பார்த்துட்டு இருந்தேன்னு நினைக்கிறேன்.” என்றாள்.


சூர்யா “ம்ம்! அன்னைக்கு உன்னோட பார்வைக்கு அர்த்தம் புரியலை. அர்த்தம் புரிந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்.” என்றான்.


அதற்கு மைதிலி “நல்லவேளை உனக்கு புரியலை.” என்றுவிட்டு தொடர்ந்து “கண்ணுக்கு முன்னே.. மாறனை மாதிரி இருக்கிற உன்கிட்ட அதைச் சொல்ல முடியலை. பிகாஸ் உனக்கும் அவனுக்கும் உருவ ஒற்றுமையை தவிர வேற எந்த சம்பந்தமும்.. இல்லை. அதனால் வீணாக அதையெல்லாம் சொல்லி.. உன்னோட பணத்தாசையை கிளப்பிவிட்டுட்டா என்ன செய்ய.. அதனால் அப்படியே விட்டுருலாம் என்று நினைச்சேன். ஆனால் நீ போயிட்டா.. உன் மூலம் எதாவது காரியம் ஆகலாம். உன்னை மிஸ் செய்துட்டு கிடைச்ச சான்ஸை மிஸ் செய்திருவேனோனு.. என்ன முடிவு எடுக்கிறதுனு திணறிட்டு இருந்தேன். அப்போ தான் நீயே வந்து என் பார்வைக்கு அர்த்தம் என்னவென்று கேட்டே.. ஐயம் இம்பிரஸ்ட்டு! ஆனா எதையும் சொல்ல முடியலை. ஆனால் நீ வேற மாதிரி.. லவ் என்றுப் பேச்சை கொண்டு போகவும், உன்னை கத்தரித்து அனுப்பறது தான் சரி என்று அப்படியெல்லாம் இல்லைனு அனுப்பிட்டேன். ஆனா.. அப்பவும் பெரியதா கிடைத்த சான்ஸை மிஸ் செய்துட்டேனோனு மனசுக்குள்ள ஓரமா உறுத்திட்டே இருந்துச்சு! அப்போ தான் நீ திரும்பியும் வந்தே! எனக்கும்.. நீ எனக்கு கிடைத்த மிக பெரிய சான்ஸ் என்றுப் புரிந்தது. அதனால தான்.. நீ லவ் என்றுச் சொன்னதும் ஒத்துக்கிற மாதிரி பேசினேன். உன்னை என் கூட தக்க வச்சுக்க.. கல்யாணம் செய்துக்கலாம் என்றுச் சொல்லி அவசரமா கல்யாணமும் செய்துட்டேன். அப்பவும்.. நீ மாறன் மாதிரி இருப்பதால்.. அவனோட பேரன்.. அப்படி வாரிசோ என்று டவுட்டா இருந்துச்சு! ஆனா வரும்போது.. நீ உன் பேமலியை பற்றிப் பேசினதில்.. உனக்கும் மாறனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுத் தெரிந்தது. இப்போ எங்களோட வலைக்குள்ள மாட்டிக்கிட்டே.. நான் சொன்னதைச் செய்துத் தான் ஆகணும்.” என்றாள்.


எதையோ சொல்ல வாயைத் திறந்த சூர்யா.. பின் தலையசைத்துவிட்டு “முதலில் நான் ஒத்துக்கணும்.” என்றான்.


மைதிலி “நீ ஒத்துக்கலைன்னா என்ன நடக்கும் என்றுச் சொல்லிட்டேன். கேட்க நத்திங் மாதிரி தெரிந்தாலும்.. நடக்கும் போது.. பயங்கரமா இருக்கும். நீதான் மாறனோட வாரிசு என்றுப் பொய் சொன்னேன் என்று வை.. என் அப்பா உன்னைக் கூட்டிட்டு போய் சித்திரவதை செய்வார். இல்லைன்னா.. மாறனோட ஆவி உன் மேலே ஏறிடுச்சுனு பொய்யா கதை பரப்பி விட்டுருவேன். அப்பறம் ஊர் சனங்க கிட்ட இருந்து நீ தப்ப முடியாது.” என்று மிரட்டினாள்.


அதற்கு சூர்யா “உன்னோட டப்பா பிளன் அதை விட பயங்கரமா இருக்கு..” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “அந்த ஆவி.. அவனை மாதிரியே நான் இருக்கிறதாலே.. அந்த புதையல் எங்கேனு சொல்லுமா..” என்று மேலும் சிரித்தான்.


மைதிலி “உன்கிட்ட வந்து சொல்லுமா இல்லையானு எனக்கு தெரியாது. ஆனா.. மாறன் மாதிரி இருக்கிற ஆள் என்கிட்ட வச்சுக்க நினைத்தேன். மாறனோட வைஃப்.. உயிருடன் தான் தப்பித்து ஓடியிருக்காங்க! உன்னைக் காட்டித் தான் அவங்களை வரவழைக்கணும். அப்பறம் ஆல்மோஸ்ட் நாங்க நெருங்கிட்டோம். இன்னும் நான்கு மலை தான் இருக்கு.. மற்ற மலைகள்ல நாங்களும்.. என் அப்பாவோட ஆட்களும் ஒருத்தருக்கு தெரியாமல் ஒருத்தர் தேடிப் பார்த்தாச்சு! நான் ஏன் இவ்வளவு அவசரப்பட்டேன் என்றால்.. எங்க பேமலியை தவிர.. இன்னொரு கும்பலும் தேடிட்டு இருக்காங்க!” என்கையில் சூர்யா மெல்ல சிரித்து “உன்னுடன் இருக்கும் இன்னொரு கூட்டாளி யாரு..” என்றுக் கேட்டான்.


மைதிலி சிரித்துவிட்டு “நான் இத்தனை சொல்றேன். ஆனா நீ நான் பேசியதை வச்சு துருவி துருவி கேட்டு என் வாயில் இருந்து ஒவ்வொரு விசயமாக கறந்துட்டு இருக்கே! ஒகே சொல்றேன். உனக்கு தெரிந்து தான் ஆகணும். நானும் என் கடைசி சித்தப்பா.. சோமேஸ்வரனும் நாலு வருஷமா தேடிட்டு இருக்கோம்.” என்றாள்.


சூர்யா “ம்ம்! உன் சித்தப்பா.. இறந்து போனதா நம்ப வச்சு.. அவர் ஆட்டத்தில் இல்லை என்பது போல காட்டியிருக்கீங்க! அதுவும் உன் சொந்த அப்பாவுக்கு தெரியாம செய்யறே! வாவ்..” என்றான்.


மைதிலி அசட்டையுடன் “ஆமா! அவர் கிட்ட இருந்து சீதனம் எதிர்பார்க்காத பெரிய இடத்து சம்மதம் வந்தா.. அவங்க கிட்ட என்னை கல்யாணம் பண்ணி கொடுத்துட்டு.. அவரோட பாழா போன மகனுக்கு தான் எல்லாம் கொடுக்க போகிறாராம். அவன் கல்யாணம் பண்ணிட்டு வந்தது.. பெரிய.. அரசியல்வாதியோட பொண்ணு! இங்கே இருக்கிற நிலைமையைப் பார்த்து அவ விட்டுட்டு போயிட்டா! அவளோட அப்பா.. என் அப்பா மேலேயும், கார்த்திகேயன் மேலேயும் கோபமா இருக்கிறாங்க! அதனால அந்த பொண்ணை மறுபடியும் வரவழைக்க.. இந்த பெட்டிகளைக் கண்டுப்பிடிச்சு கார்த்தி கூட சேர்த்து வைக்க போகிறாராம். என் அத்தை மட்டும் என்னவாம்.. அவங்களும் எதோ பிளன் போட்டு வச்சுருக்காங்க!” என்றாள்.


அதைக் கேட்ட சூர்யா “வாவ்! ஒருத்தருக்கு ஒருத்தர் குறைஞ்சவங்க இல்லை. எல்லாரும் உங்களோட பரம்பரை சொத்துக்காக போட்டிப் போடறீங்க..” என்றதும், மைதிலி “இதுல தப்பு என்ன இருக்கு..” என்றாள்.


அடுத்து என்ன நடந்தது என்று அவள் உணரும் முன்.. அவளது கையில் இருந்த கத்தி தற்பொழுது சூர்யாவின் கைக்கு இடமாறியிருக்க.. அந்த கத்தி.. அவளின் கழுத்தை பதம் பார்க்க தயாராக இருந்தது.


சூர்யா “இதுல என்ன தப்பா! எல்லாமே தப்பு! இத்தனை அக்கிரமங்களையும் செய்துட்டு.. எங்க சொத்துனு.. வெறி பிடிச்ச நாய் மாதிரி சுத்தறீங்க! ஒருத்தன் உங்களோட சொத்தை திருடினதுக்கு.. எத்தனை கொலை எத்தனை வெறி! எத்தனை கோபம்! ஆனா உங்க பரம்பரை.. இந்த மக்களுக்கு செய்ததிற்கு.. அவங்க உங்களை வச்சு செய்யாம எப்படி இருக்கிறாங்க..” என்று இறுகிய குரலில் கேட்டான்.


சூர்யாவின் குரலில் இருந்த இறுக்கம் மைதிலிக்கு திகிலை ஏற்படுத்தியது.


மைதிலி “அதுதான் நாங்க அழிஞ்சுட்டோமே! சுத்தியும் பாரு.. இது எப்படி இருந்த அரண்மனை தெரியுமா! ரிப்பேர் ஆனா ஃபேனை ரிப்பேர் செய்ய கூட வழியில்லாம உட்கார்ந்திருக்கோம். பேருக்கு தான் பெரிய வீடு! இப்போதைக்கு வீட்டுக்கா பின்னாடி இருக்கிற நிலத்தில் இருந்து வரும் குத்தகை பணம் வரும் அதில் தான்.. இந்த வீடு நடக்குதுன்னா.. நம்புவியா! மற்ற செலவுக்கு எல்லாம்.. இந்த வீட்டில் இருந்து எதாவது ஒரு பொருள் அடகு கடைக்கு போகும். இப்போ நான் கோவை வந்த செலவு கூட.. உன் அம்மா நாலு மாசமா சேர்த்தி வச்ச பணத்தில் தான்! இனி என் அம்மா மறுபடியும் சேர்த்தணும். நாங்க கொஞ்சம் கொஞ்சமா ஒண்ணும் இல்லாத நிலைக்கு வந்துட்டு இருக்கோம். பணம் மட்டுமில்ல மரியாதை, மதிப்பு, அதிகாரம், பாசம், அன்பு, உறவு என்று ஒண்ணும் இல்லாத நிலைக்கு போயிட்டு இருக்கோம். இதைப் பார்த்துட்டு எப்படி என்னால் கையைக் கட்டிட்டு உட்கார்ந்திருக்க முடியும்.” என்றவளின் கண்களில் இருந்து தானே கண்ணீர் வழிந்தது.


பின் “பணம் இருந்தா தான் மதிப்பு! அந்த பெட்டியில் எங்களோட பரம்பரை சொத்தும் இருக்கு! அது வந்த பிறகு எங்களோட நிலைமை எப்படி மாறும் என்றுப் பாரு..” என்றாள்.


அதற்கு சூர்யா “ஒண்ணும் இல்லைன்னா உழைச்சு சாப்பிடுங்க.. யார் வேண்டானு சொன்னாங்க! எல்லாத்தோட கை கால் எல்லாம் நல்லா தானே இருக்கு! நீ படிச்சுருக்கே தானே!” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “எனக்கு மற்றவங்க கிட்ட வேலை செய்யது ஒண்ணும் பிராப்ளம் இல்லை. ஆனா எங்களுக்கு கிடைக்க வேண்டியது.. இப்படி அநியாயமா மண்ணோடு மண்ணா கிடக்குது. அதை ஏன் விடணும். மற்றவங்க எங்களுக்கு தான் வேணுமினு நினைக்கிறது, பேராசை.. ஆனா நானும் என் சித்தப்பா நினைக்கிறது எங்களோட உரிமை! நாங்க ஏன் அதை விட்டுத் தரணும். அதற்காக என்ன வேண்டுமென்றாலும் செய்வோம்.” என்றதும் சூர்யா “உனக்கு எதுக்கு அந்த சிரமம்! அதை நானே செய்கிறேன்.” என்று அழுத்துபவன் போல்.. கையை கொண்டு போனவன், அவளது பயந்த விழிகளைப் பார்த்து கத்தியை வீசிவிட்டு.. அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தவன், “ஒரு பைத்தியக்கார கும்பல்ல வந்து மாட்டிக்கிட்டேன்.” என்றுச் சிகையை கையால் கோதினான்.


மைதிலி “எங்களோட கஷ்டமும்.. அதுக்கு நாங்க படற பாடும் உனக்கு பைத்தியக்காரத்தனமாக தான் தெரியும். ஒகே மக்களை ஏமாத்தி.. கொடுமை செய்தததிற்கு தான்.. எங்க வம்சத்தில் யாருமே சரியா வாழலையே! தண்டனை தான் அனுபவிச்சாச்சே! அந்த ஆவியோ ஆத்மாவோ.. இன்னும் எங்களை ஆட்டி வச்சுட்டு இருக்கு! நீ நம்பலைன்னாலும்.. இதுதான் உண்மை. என் சித்தப்பா சில ஆட்களோட போன போது.. யாரோ தள்ளற மாதிரியும், முதுகில் அடிக்கிற மாதிரியும் உணர்ந்திருக்காங்க! என் சித்தப்பா ஏழடி உயரத்தில் கருப்பா உருவத்தை பார்த்திருக்கார். அவர் பொய் சொல்லுலை. எங்களை இன்னும் துரத்திட்டு தான் இருக்கு! அந்த ஆத்மா துரத்த துரத்த தான்.. அங்கே போகணும் என்று என் சித்தப்பா போறார். நான் இன்னும் பார்த்தது இல்லை. ஆனா சில சமயம் எனக்கு பின்னாடி யாரோ நின்று உறுமும் சத்தத்தைக் கேட்டுக்கேன். நான் திரும்பியும் கூடப் பாா்க்காம வியர்க்க விறுவிறுக்க ஓடி வந்திருக்கேன். இப்படிக் கிட்டத்தட்ட எழுபது வருஷமா எங்களை துன்புறத்திட்டு இருக்கு! இந்த ஊர் சனங்க.. எங்களை இளக்காரமா பார்த்துட்டு இருக்காங்க! இதை விட என்ன தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறே..” என்று மூச்சு வாங்க பேசினாள். அவளது படபடப்பான பேச்சிற்கு தகுந்த போன்று காற்று பலமாக வீசியது. சன்னல் மற்றும் பால்கனியின் மூலம் நுழைந்த காற்று.. அவளது ஆடைகளையும் சிகையையும் கலைத்தது.


மைதிலி காற்றில் பறந்த தனது கூந்தலை ஒதுக்கிவிட்டு சூர்யாவை பார்த்தாள். மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்த சூர்யா “ஒகே! ஒகே! போதும்.. எனக்கு தலை வலிக்குது. ஒரே நெகட்டிவ் வைப்ஸ்..” என்றுச் சுற்றிலும் பார்த்தான்.


அதற்கு சிரித்த மைதிலி “இப்போ புரியுதா எங்க கஷ்டம்! நாங்க இங்கேயே தான் இருக்கோம். சில சமயம் தலையே வெடிச்சுரும் போல இருக்கும். ஆனா ஒண்ணை ஒத்துக்கிறேன். இதுவரை யார் கிட்டயும் பார்க்காத பாஸிட்டிவ் வைப் உன்கிட்ட எனக்கு கிடைச்சுது. நீ மட்டும் எனக்கு ஹெல்ப் செய்தால்..” என்றாள்.


சூர்யா “சரி இந்த விசயம் பேசியது போதும். நம்ம விசயம் பேசலாமா..” என்றுக் கேட்டான்.


மைதிலி “நீ எத்தனைத் தரம் கேட்டாலும் என் பதில் அதே தான் சூர்யா! உன்னால் இங்கே இருந்து போக முடியாது. அட்லீஸ்ட் எங்க காரியம் முடியும் வரை! அப்படிப் போக நினைத்தால்.. உன் பெரெண்ட்ஸ் வீட்டிலும் உன்னால் நிம்மதியா இருக்க முடியாது. அதுக்கு நான் சொல்கிறபடி நடந்துட்டு நிம்மதியா இருந்துட்டு வரலாம்.” என்றாள்.


அதற்கு சூர்யா “நான் நம்ம விசயம் என்றுச் சொன்னேன்.” என்றான்.


மைதிலி “என்ன வி..வி..விசயம்?” என்றுக் கேட்டவளுக்கு.. பின்பே விசயம் புரிய.. “இந்த கல்யாணத்தை ஒன்றும் இல்லாததாக செய்யவும் முடியும். அதனால் டொன்ட் வெர்ரி! நான் உன்னை இந்த ரிலேஷன்ல பிடிச்சு வைக்க மாட்டேன். உன்னை இங்கு கூட்டிட்டு வர வேற வழியில்லாமல்.. தான் மேரேஜ்ஜை யுஸ் செய்துட்டேன். நீ எங்களுக்கு ஹெல்ப் செய்வதாக பிராமிஸ் செய்தால்.. நீ எனக்கு நல்ல பிரெண்டாக இருக்கலாம். காரியம் முடிந்ததும் உனக்கு கொடுக்க வேண்டிய பங்கு தரப்படும்.” என்றாள்.


அதைக் கேட்ட சூர்யா அழுத்த தனது சிகையை கோதிவிட்டு எழுந்தான். பின் “என்ன பேசி முடிச்சுட்டியா! இனி நான் பேசட்டுமா! ஒகே நான் இங்கே இருக்கேன். நானும் தேட ஹெல்ப் செய்கிறேன். அப்படி அந்த ஆவி என்று அங்கே என்ன செய்கிறது என்பதையும் பார்க்கிறேன். ஆனா நீ என் மனைவியாக தான் இருக்கணும். இந்த ரிலேஷனில் இருந்து கழன்று விடலானு நினைக்க கூடாது. நான் உன் ஹஸ்பென்ட் நீ என்னோட வைஃப் இதை மாத்த கூடாது, மாற்றவும் முடியாது. எனக்கு என் வைஃப் வேண்டும்.” என்றுக் கூறியவாறு எட்டுக்களை வைத்து நெருங்கியவன், கடைசி வார்த்தை கூறிய பொழுது.. தனது வலது கரம் கொண்டு அவனது முதுகில் கரம் வைத்து இழுத்து.. தன்னுடன் இறுக்கினான்.


சூர்யா அவள் நினைத்ததிற்கு மாறாக பேசுவதை விழியகல கேட்டுக் கொண்டிருந்த மைதிலி.. சட்டென்று அவனோடு தன்னை இறுக்கவும், அதிர்ந்தவளாய்.. அவனது மார்பில் கரத்தை வைத்து தள்ள முயன்றபடி.. “சூர்யா! என்னதிது? என்ன செய்யறீங்க?” என்றுப் பதறினாள்.


சூர்யா “பிகாஸ்! ஐ லவ் யு..” என்றுவிட்டு கரத்தை எடுத்துக் கொள்ள நினைத்தான். அப்பொழுது.. படார் என்று அவளது சன்னல் கதவு காற்றுக்கு அடிக்கும் சத்தம் கேட்கவும், சட்டென்று அவளது முகம் பற்றி குனிந்தவன், அவளது இதழை முரட்டுத்தனமாக ஆக்கிரமித்தான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்..

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்) - பிரிதிலிபியில் அனைத்து யூடிகளையும் பதித்துவிட்டேன்.

தினமும் ஒரு யூடி என்று.. படிக்க ஆரம்பிக்கலாம். மொத்தம் 61 யூடிகள்..

படித்து தங்களது கருத்துக்களைப் பகிருங்கள்..

நன்றி..

"காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)", - பிரதிலிபியில் படிக்க :,


இந்திய மொழிகளில் எண்ணற்ற படைப்புகளை இலவசமாக வாசிக்கலாம், எழுதலாம் மற்றும் கேட்கலாம்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 9


(பொருளடக்கம்)

அருவம் அது பொய்யோ! மெய்யோ!

மங்கையவள் மிரள்வதைக் காண்பீர்கள்!


சூர்யா ஆக்ரோஷத்துடன் அவளது இதழ்களில் தனது உதடுகளைக் கலக்க விட்டுக் கொண்டிருக்க.. அவனது ஆக்ரோஷத்திற்கு.. பிண்ணனியாக சன்னல் கதவு சூறைக்காற்றில் அடிக்கும் சத்தமும், திரைசீலைகள் காற்றின் வேகம் தாங்காமல்.. கம்பியில் இருந்து விடுப்பட போராடும் சத்தமும் கேட்டது. அந்த திரைசீலைகள் போல் தான் மைதிலியும்.. அவனிடம் இருந்து விடுப்பட போராடினாள். ஆனால்.. அவளது முயற்சிகளை ஒரு கரத்தால் அடக்கியவன், மறுக்கரத்தால்.. அவளைத் தன்னுடன் மேலும் மேலும் இறுக்கினான்.


அப்பொழுது சாந்தியின் அத்தை குரல் கேட்டது.


“மைதிலி! மைதிலி!” என்றவாறு கதவைத் தட்டினார்.



சூர்யாவின் ஆக்ரோஷத்துடன் போராடிக் கொண்டிருந்தவள், தனது அத்தையின் குரல் கேட்டு.. இன்னும் அவனிடம் இருந்து விடுபடப் போராடினாள். கதவின் அடிக்கும் சத்தத்தை மீறி.. சாந்தியின் குரல் சூர்யாவின் காதில் எட்டவும், அவளது இதழ்களை விட்டு.. மெல்ல நிமிர்ந்தான்.


மைதிலி மாறாத அதிர்ச்சியுடன் “சூ..சூர்யா! உங்க கிட்ட நான் இப்படி எதிர்பார்க்கல!” என்று அவனது மார்பில் கையை வைத்து.. தன்னிடம் இருந்து பிரிக்க முயன்றாள். ஆனால் சூர்யா “யார் அந்த சூர்யா..” என்று உறுமிவிட்டு.. மெல்ல தனது பிடியை விட்டான்.


அதைக் கேட்ட மைதிலி முற்றிலும் திகைத்தவளாய் அவனைப் பார்த்தாள். அப்பொழுதே.. தன்னுடன் ஒட்டியிரு்நத அவனது உடல் சில்லிட்டு இருப்பதை உணர்ந்தாள். அவனது முகமும் சற்று மாறி கல்லென இருப்பது போன்று இருந்தது. அவள் உணர்ந்த விசயம் அவளுக்கு திகிலுட்டவும், அவளது மார்புகூட்டை விட்டு இதயம் வெளியே வந்துவிடும் போன்று துடித்தது. அப்பொழுது சூர்யாவின் பிடி நழுவியதும்.. மைதிலி அடுத்த நிமிடம் அம்பென கதவை நோக்கி விரைந்தவள், கதவைத் திறந்துக் கொண்டு வெளியே சென்றாள்.


பல முறை அழைத்தும் திறக்கப்படாததால்.. சாந்தி தானே திறந்து விடலாமா என்று யோசித்த வேளையில் மைதிலி கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.


மூச்சு வாங்க நின்ற மைதிலி.. தனது உதடுகளை அழுத்த துடைக்க கையை உயர்த்தியவள், சாந்தியின் பார்வை அங்கு செல்லவும், உயர்த்திய கரத்தை தாழ்த்திக் கொண்டாள்.


ஆனால் சாந்திக்கு என்ன நடந்திருக்கும் என்றுப் புரிந்துவிட்டது. எனவே பதறிய நெஞ்சை அடக்கிக் கொண்டு “மைதிலி நான் உன்கிட்ட கொஞ்சம் பேசணும். நீ மேரேஜ் செய்துட்டு வந்ததும்.. நான் கோபப்பட்டது… உன் நல்லதுக்கு தான்! ஏன்னா..” என்று அவர் முடிப்பதற்குள்.. மைதிலி “ஓ பேசலாமே! இப்பவே உங்க ரூமிற்கு வரவா..” என்று சாத்தியிருந்த கதவைச் சிறு அச்சத்துடன் பார்த்தவாறு கூறினாள்.


உடனே மைதிலி பலமாக தலையை ஆட்டினாள். அப்பொழுது அங்கு வேகமாக வந்த.. கயல்விழியை மைதிலியை பார்க்காது.. சாந்தியிடம் “உங்களை.. சாப்பாடு மட்டும் தானே கொடுத்துட்டு வரச் சொன்னேன்.” என்றாள். அப்பொழுது தான்.. சாந்தியின் கையில் இருந்த பெரிய சாப்பாட்டு கெரியரை மைதிலி கவனித்தாள்.


சாந்தி “அவ என் கூடப் பேச ஆசைப்படற.. நீங்க ஏன் அண்ணி தடுக்கறீங்க..” என்று கயல்விழியிடம் வாதம் செய்யவும், பொறுமையிழந்த கயல்விழி.. கெரியரை பிடுங்கி.. மைதிலியின் கையில் திணித்துவிட்டு “இங்கே இருக்கிற வரை.. உன் வீட்டுக்காரரை விட்டு ஒரு நொடி கூடத் தனியாக இருக்காதே! அவர் கூடவே இரு! அப்பறம் அவரைக் கூட்டிட்டு நாளைக்கே அவங்க வீட்டுக்கு போயிரு! இப்போ சாப்பிட்டதும் போன கூட எனக்கு சந்தோஷம் தான்..” என்றார்.


தனது அன்னை கூறியதைக் கேட்டு ஏற்கனவே அதிர்ச்சியில் இருந்த மைதிலி மேலும் அதிர்ந்தவளாய் “அம்மா!” என்கவும், கயல்விழி “சொன்னதைச் செய்..” என்று எரிந்து விழுந்தார். ஆனால் மைதிலி.. சற்றுமுன்.. நிகழ்ந்ததையும், அவள் உணர்ந்ததையும் நினைத்து அஞ்சியவளாய்.. அச்சத்துடன் “அம்மா!” என்று அவளுடன் ஒன்ற வந்தாள். ஆனால் நிலைமை புரியாது.. மகள் ஒன்றவும், கயல்விழி கோபத்துடன் மைதிலி பிடித்து கதவைத் திறந்து உள்ளே தள்ளிவிட்டு சாத்தினார்.


கையில் கெரியருடன் நின்ற மைதிலி சிறு பதட்டமும், கோபமுமாக சூர்யாவை மெல்ல பார்த்தாள். அவன் அதே இடத்தில் தான் நின்றிருந்தான். ஆனால் நெற்றியை தடவியவாறு தலைகுனிந்து நின்றிருந்தான். அவள் உள்ளே வந்த ஆரவாராம் கேட்டு நிமிர்ந்தவன், வேகமாக அவளை நோக்கி வந்தான். உடனே.. மைதிலியின் கால்கள் தானே பின்னே நகர்ந்தன.


வேகமாக அவளது அருகில் வந்தவனுக்கு அந்த காற்றிலும் வியர்ந்திருந்தது.


குழப்பத்திலும் பயத்திலும் இருந்த மைதிலி.. பின்னே நகர்ந்தவாறு “சூ.. சூர்யா! வேண்டாம் பக்கத்துல வராதே! நீ யாரு..” என்கையில் அருகில் வந்திருந்த சூர்யா அவளது தோளைப் பற்றி.. “என்னைப் பிடிக்காத பெண்ணை கிஸ் செய்ய நான் என்ன பைத்தியமா! ஆனா எப்படி??” என்று அவளிடமே குழப்பத்துடன் கேட்டான்.


சூர்யா கூறியதைக் கேட்டு.. திகைப்படைந்த மைதிலி.. அவனது குரலில் இருந்த நடுக்கத்தைக் கண்டு குழப்பத்துடன் அவனை நன்றாக பார்த்த போது.. அவனது கையும் உடலும் சிறிது நடுங்குவதைக் கண்டாள்.


மைதிலி “பின்னே ஏன்..” என்று அவள் கூறியதைக் கேட்க அவன் அங்கு இல்லை. தனது பையை எடுத்து தோளில் போட்டவன் “என்னால் உன்னோட உதவாக்கரை பிளனுக்கு ஒத்துழைக்க முடியாது. இங்கே ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது. என்ன வேண்டுமென்றாலும் பண்ணிக்கோ! தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கிட்டேன் என்பதற்காக.. நீ என் கூட வருகிறே என்றால் கூட்டிட்டு போறேன்.” என்றவன், திடுமென தனது கழுத்தை அழுத்தி தடவினான்.


முன்னுக்கு முரணாக பேசும் சூர்யாவை மைதிலி அதிர்ச்சியுடன் பார்த்தாள். அவனது செய்கைகளும் அவளுக்கு அச்சத்தை கிளப்பியது. அவளுக்கு இன்னொரு சந்தேகம் தோன்றி பயமுறுத்தியது. அவள் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே.. சூர்யா சுற்றிலும் பார்த்தவாறு “இங்கே இன்னொருத்தரும் இருக்காங்க..” என்றான்.


அதைக் கேட்ட மைதிலி அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றாள். அவளது உடலும் வெலவெலத்தது. தொண்டையில் அடைத்துக் கொண்டிருந்த வார்த்தையை எச்சில் கூட்டி விழுங்கிவிட்டு மெல்ல “யா.. யா..ருமில்லையே..” என்றாள்.


அதற்கு மறுப்பாக தலையசைத்த சூர்யா “இல்லை! இங்கே இன்னொருத்தரும் இருக்காங்க.. கொஞ்ச நேரத்திற்கு முன்.. இதை நான் ஃபீல் செய்தேன். அப்பறம் பார்த்தா.. உன்னை கிஸ் செய்துட்டு இருந்தேன். நீ என்கிட்ட இருந்து விடுபட போராடினே! அதெல்லாம் எனக்கு தெரியுது. நானும் விடலாம் என்று நினைச்சேன். ஆனால் என் உடம்பு என் பேச்சை கேட்கலை. இப்போ மறுபடியும் அதே மாதிரி யாரோ இங்கே இருக்கு இருக்கிற ஃபீல்..” என்றவாறு சுற்றிலும் பார்த்தான்.


சூர்யா கூறியதைக் கேட்ட மைதிலியின் உள்ளமும் உடலும் வெடவெடத்தது.


எனவே “சூ..ர்யா! எ..ன்ன சொ..ல்றே?” என்று வார்த்தைகள் அவளுக்கு தந்தியடித்தது. அப்பொழுது.. அவளது செல்பேசி அழைத்தது. பேர் குறிப்பிடாமல் செல்பேசி எண் மட்டும் இருந்தது. அது யாரோட எண் என்று அவளுக்கு தெரியும். எனவே வேகமாக எடுத்து அழைப்பை ஏற்று காதில் வைத்து “சித்தப்பா..” என்றுக் கிட்டதட்ட அலறினாள்.


அந்த பக்கம் அவளது சித்தப்பா சோமேஸ்வரன் “மைதிமா! அந்த பையன் என்ன சொல்றான்.. நமக்கு உதவுறேன்னு சொன்னானா! அப்படியில்லைன்னா என்கிட்ட சொல்லு! நீ அனுப்பிய விபரங்களை வச்சு.. அந்த பையனோட வீடு.. குடும்பம் எல்லாத்தையும் பற்றி விசாரிச்சுட்டேன். இங்கே அவன் நமக்கு உதவலைன்னா! அங்கே அவனோட குடும்பத்தோட உயிருக்கு உத்தரவாதம் இல்லை. என்னோட ஸ்டூடன்ட்டை அனுப்பியிருக்கேன். அவனை மிரட்டி வச்சுருக்கே தானே! இல்லை நான் வரணுமா..” என்றுக் கேட்டார்.


உடனே மைதிலி “சித்தப்பா! நீங்க இங்கே சீக்கிரம் வாங்க..” என்றாள். அவளது குரலில் இருந்த பதட்டத்தைக் கண்டு சோமேஸ்வரன் “என்னாச்சு மைதிலி! அவன் உன்னை ஏமாத்திட்டானா! அங்கே இல்லையா?” என்று வரிசையாக கேள்விகளை அடுக்கினார்.


மைதிலி “சி.. சித்தப்பா! சீக்கிரம் வாங்க! இங்கே இருப்பது மா..மாற..” என்றவாறு சூர்யாவை பார்த்தவள், அதிர்ச்சியில் உறைந்தாள். அவளது கையில் இருந்து செல்பேசி நழுவி விழுந்தது. ஏனெனில் கிளம்புகிறேன் என்று தோளில் பையை போட்டிருந்தவன், தற்பொழுது மேசையின் முன் இருந்த நாற்காலியில் சட்டமாக உட்கார்ந்துக் கொண்டு.. இலையைப் பரப்பி வைத்துவிட்டு சாப்பாட்டு கெரியரை எடுத்து மேசையின் மீது வைத்திருந்தான்.


மைதிலி தன்னைப் பார்ப்பதைப் பார்த்தவன், “வா வந்து பரிமாறு..” என்றான்.


மைதிலிக்கு கால்களில் வேரோன்றியது போல் நகர்த்த முடியவில்லை.


அடுத்து சற்று கனத்த குரலில் சூர்யா “வந்து பரிமாறுன்னு சொன்னேனில்ல!” என்றான்.


மெல்ல அவனை நோக்கி வந்த மைதிலிக்கு.. என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எனவே திடத்தை வரவழைத்த குரலில் “ஸ்டாப் ஆக்டிங் சூர்யா!” என்றாள்.


ஆனால் சூர்யா அவளைத் துளையிடும் பார்வையுடன் “எனக்கு பசிக்குது சாப்பாடு போடுனு சொன்னேன்.” என்றான்.


அந்த பார்வையை மைதிலியால் தட்ட முடியவில்லை. நடுங்கும் விரல்களால் கெரியரை கழற்றினாள். அவள் கழற்றி ஒவ்வொன்றாய் எடுத்து வைத்துக் கொண்டிருக்கும் போதே.. “என்ன சொல்றான் சோமேஸு?” என்றான்.


மைதிலி மேலும் திகைத்தவளாய்.. அவனை நேராக நோக்கி மெல்லிய குரலில் “மா.. மா.. மாறன்..” என்கவும், சூர்யாவின் தலை ஆம் என்று ஆடியது.


பின் நன்றாக நாற்காலியில் சாய்ந்தமர்ந்தவன், “என்கிட்ட என்ன கேட்கணும்? உங்களோட நகை பெட்டிகள் இருக்கிற இடமா!” என்று இளக்காரத்துடன் கேட்டான்.


பின் “அது இன்னேரம் மண்ணோடு மண்ணாக ஆகிருக்கும்.” என்று கடகடவென சிரித்தவன், சட்டென்று எழுந்து அவளை நெருங்கி நின்று.. “நான் அந்த பெட்டிகளை அங்கே புதைத்து வைத்தேன் என்று எப்பொழுது சொன்னேன். அதையெல்லாம் எப்பவோ ஆற்றில் வீசி விட்டேன். அது தெரியாமல்.. முட்டாள்கள் மாதிரி.. மலையை தோண்டி தேடிட்டு இருக்கீங்க..” என்று சத்தமாக சிரிக்க ஆரம்பித்தான்.


மைதிலி சிலையென நின்றிருந்தாள்.


சத்தமாக மேலே பார்த்து சிரித்தவன், திடுமென சிரிப்பதை நிறுத்திவிட்டு.. மைதிலியின் பின்னங்கழுத்தில்.. கரத்தை வைத்து தனது முகத்தருகே அவளை இழுத்தான்.


“எங்க ஊரு சனங்களுக்க நீங்க செய்த அக்கிரமங்களுக்கு.. தண்டனை இன்னும் அனுபவிப்பீங்க..” என்றவன், அவளது கழுத்தடியில் முகத்தை கொண்டு சென்று நுகர்ந்தான். பின் அவளது காதில் “இன்னொருத்தனின் மனைவியை பெண்டாள்வது என்றால்.. எப்படியிருக்கும் என்றுத் தெரியுமா..” என்று அவளது கழுத்தடியில் முகத்தை புதைத்தவன், அவளைத் தன்னுடன் இறுக்கினான்.


அவனது வார்த்தை கேட்டு அதிர்ச்சியடைந்த மைதிலி அவனது தோளில் பற்றி. குலுக்கியவாறு “சூர்யா! சூர்யா! சூர்யா” என்றுக் கதறினாள்.


காதை தேய்த்தவாறு நிமிர்ந்த சூர்யா “ஏன் இப்படி கத்தறே! என் காது போச்சு..” என்றுவிட்டு அவளை விட்டு விலகி நின்றான்.


மைதிலி கண்களில் இருந்து கண்ணீர் வழிய.. சற்றுமுன் கத்தியதில்.. தொண்டை வரண்டடிருக்க.. இது எதையும் பற்றியும் கவலைப்படாது. அவளது இதயம் கூட சில நொடிகள் அதன் வேலையை நிறுத்தி ஓய்வெடுத்துவிட்டு.. பின் ஓய்வெடுத்ததிற்கு ஈடு செய்ய பன்மடங்காக துடித்தது.


வாயைத் திறந்தவளுக்கு வாயில் இருந்து வார்த்தைகள் வரவில்லை.


சூர்யாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மலர்ந்தது.


“ஆமா எனக்கு பேய் பிடிச்ச மாதிரி நடிச்சேன்.” என்றுவிட்டு.. தனது மணிக்கட்டை உயர்த்தி நேரத்தைப் பார்த்தான்.


“ஒரு அரை மணி உன்னால் என் நடிப்பை தாங்க முடியலை. நீ என்னை மிரட்டறீயா?” என்றுச் சிரித்தான்.


திகைத்து நின்ற.. மைதிலியின் முன் சொடுக்கிட்டு அழைத்த சூர்யா “டவுட்டு எல்லாம் வேண்டாம் நான் சூர்யா தான்! என்னவோ என்னை மிரட்டினியே! அதுதான் மிரட்டல் என்றால் எப்படியிருக்கும் என்றுக் காட்டினேன்.” என்றான்.


இன்னும் மைதிலி அதிர்ச்சியில் இருந்து விடுபடாமல் இருக்கவும், “படத்துல வர மாதிரி.. காத்தடிச்சா.. நடுங்கி, வியர்த்து, வாய்ஸ் மாடுலேஷன் கொண்டு வந்து ஆவி வந்துருச்சு என்கிற மாதிரி நடிக்கிறப்போ.. நீ பார்த்த படத்தை நான் பல தடவை பார்த்துட்டேன்.. என்றுச் சொல்வேன்னு நினைச்சா.. நீ பயந்து நடுங்கிறே! அந்தளவிற்கு எல்லாரும் கட்டி விட்ட கதை.. ஒருத்தரை ஒருத்தர் பயமுறுத்தி வச்சுருக்கு..” என்றான்.


மைதிலி மெல்ல வாயைத் திறந்து “சூர்யா..” என்கவும், “நானே தான்..” என்றான்.


மைதிலி “நீ.. நடிச்சியா! இல்ல.. இல்ல! அப்படினு நினைச்சே.. ஆனா உன்னை நடிக்க வச்சுருக்கு! உனக்கும் தெரியாம நீ ஒரு நிமிஷம் மாறனாவே மாறினே! நான் பார்த்தேன்.” என்றாள்.



—---------------------------


அதே நேரத்தில்.. அந்த மலைத் தொடரில் வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்து கொண்டிருந்தது. இரு மலைகளின் இணைப்பில் ஓடிக் கொண்டிருந்த ஆறு.. பெருக்கெடுத்து ஓடி.. அந்த மலையில் விளிம்பில் நீர்வீழ்ச்சியாக கொட்டிக் கொண்டிருந்தன.


அந்த பெரிய மலைகளின் மேலிருந்து கொட்டிய நீரின் வீரியத்தால்.. நீர்வீழ்ச்சி கொட்டும்.. இடத்தில் இருபது அடி ஆழத்தில் உள்ள மணல் கூட புறப்பட்டு மேலே வந்தது. அதனோடு ஒரு பெட்டியும் மேலே வந்தது.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 10


(பொருளடக்கம்)

மூடர்கள் தோண்டினால்

கல்லும் மண்ணுமாம்!

தலைவன் தோண்டினால்..

மெய்களும் மர்மங்களும்!



மைதிலி கூறியதைக் கேட்ட சூர்யா “வாட்! நான் ஒன்றும் அந்தளவிற்கு செல்ஃப் கன்ட்ரோல் இல்லாதவன் இல்லை! என்ன செய்யறேன்னு தெரிஞ்சு தான் செய்யறேன்.” என்றான்.


ஆனால் மைதிலி மறுப்பாக தலையசைத்து குழப்பத்துடன் “சூ.. சூர்யா! உண்மையைச் சொல்லு! யார் நீ! நான் கோவை வந்திருக்கிறது தெரிந்து தான் வந்தியா! அதனால் தான்.. என்னைப் பார்த்ததும் காதல், கேட்டதும் கல்யாணம் என்று உடனே எல்லாத்துக்கு ஒத்துக்கிட்டியா? இங்கே வந்ததும்.. என் வாயைக் கிளறி.. எல்லா விசயத்தை வாங்கியிட்டே! யார் நீ? நீதான் அந்த இன்னொரு கும்பலா? இல்லை மாறனோட வாரிசா? இப்போ என்கிட்ட பேசிட்டு இருப்பது சூர்யாவா? மாறனா?” என்றுப் படபடத்தாள்.



அதற்கு சூர்யா “ஸ்டாப் திஸ்! எல்லாத்திலும் சந்தேகம்! இந்த விசயத்தைத் தவிர உன் மூளை வேற விசயத்தை நினைச்சு பார்க்காதா! லவ், மேரேஜ் விசயத்தில் எல்லாம் பிளன் போட்டு ஒருத்தரை ஏமாற்றுற ஆள் நானில்லை. அதனால் தான்.. மாறனா தொடர்ந்து என்னால நடிக்க முடியல. எனக்கு உன்கிட்ட குட் லவ் வேவ்லேன்த் ஓடினது உண்மை! அதுக்காக நான் என்னோட மேரேஜ்ஜை நிறுத்தனதும் உண்மை! நீ மேரேஜ் செய்துக்கலாமா என்றுக் கேட்டதும்.. என் பெரெண்ட்ஸை மீட் செய்ய போகும் போது.. அவங்க தவிர்க்க முடியாத நிலையில் போகலாம் என்றுத் தான் மேரேஜ்ஜிற்கு ஒகே சொன்னேன். இதையெல்லாம் பொய் என்றுச் சொல்றே! கொஞ்ச நேரம் பொய்யா நடிச்சதை உண்மைன்னு சொல்றே!” என்று அவளை விசித்திரமாக பார்த்தான்.


பின் தொடர்ந்து “இந்த பேய் புடிக்கிறது, சாமியாடறது, எதாவது விசயத்தால.. அதையே பற்றியே நினைச்சு மென்டல் டிஸ்டர்ப் ஆவது, டிப்ரெஷன்ல சுசைட் வரைக்கும் போவது.. எல்லாம் ஒன்று தான்! இதுக்கு எல்லாம் சுத்தி இருக்கிற வைப் தான் காரணம்! அதாவது நம்மை சுற்றி என்ன நினைக்கிறாங்களோ.. அதையே நாமும் நினைப்போம். நினைக்கிற விசயங்கள்.. ஆழ் மனசு வரை போய்.. அது மூளைக்கு கட்டளையிடும்.. அதை உடம்பு கேட்கும்.. அவ்வளவுத்தான்! இப்போ கோவிலுக்கு போன மனசு நல்லாயிருக்கு என்றுச் சொல்வதும், துக்கவீட்டுக்கு போனா தானா அழுகை வருவதும் அப்படித்தான்! அங்கே கோவையில்.. சந்தோஷமான விசயத்திற்கு வந்திருந்தே.. அதுனால உன்கிட்ட லவ்வபிள் குட்வைப்ஸ் இருந்துச்சு! அங்கே அழகான தேவதை மாதிரி தெரிந்தே! இங்கே.. கட்டின புருஷன் கழுத்தில் கத்தி வைக்கிற வரை.. போக கூடிய அளவிற்கு.. சூனியகாரி மாதிரி தெரியுறே! நான் இங்கே வந்ததும்.. அந்த நெகட்டிவ் வைப்பை நான் உணர்ந்தேன். உன்னோட பேச்சு.. ஷப்பா! இந்த விசயங்களைப் பற்றியே சின்ன வயசுல இருந்து நினைச்சுருப்பே போல! உன் மனசுல பதிந்து மனப்பாடமா ஆகிடுச்சு! வேற எதாவது பற்றி நினைச்சா.. தப்பு என்கிறது போல வளர்ந்துருங்க!” என்று வருத்தத்துடன் பார்த்தான்.


சூர்யா பேசியதைக் கேட்ட மைதிலி தலையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்துவிட்டாள்.


சூர்யா தொடர்ந்து “நீ புதையல் தேடிட்டு இருக்கேனு.. உன்னைத் தடுக்க.. அந்த மாறன் ஆவியா உன் பின்னாடி சுத்துகிறானு நீயே மைன்ட்ல பிக்ஸ் செய்து வச்சுட்டே! அதனால் தான் என்னோட மொக்க ஆக்டிங்கில் இருக்கிற ஓட்டைகளை கூடக் கண்டுப்பிடிக்க முடியாம! எனக்குள்ள நிஜமாலுமே மாறன் ஆவி புகுந்திருச்சுனு நினைச்சுருக்கே! இப்போ சும்மா விளையாடியது தப்பு போல! அப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி உன் தாத்தா என்னைப் பார்த்து மாறன் என்று வந்தார் தானே! அது மனநிலை சரியில்லாமல் என்றால்.. உன்னோடதும் அப்படித்தான்..” என்றான்.


மைதிலி மெல்ல நிமிர்ந்து “இல்லை! மாறன் ஆவியை நான் உணர்ந்துருக்கேன்.” என்றாள்.


அதற்கு சூர்யா “அதற்கு பேர் இல்லுயுசன் மைதி! தனியா எதாவது இடத்துல நம்ம பின்னாடி யாராவது வராங்களோனு நினைச்சுட்டு போன.. யாரோ வர மாதிரி தான் தோணும். தட்ஸ் ஆல்..” என்று அவளுக்கு ஏற்பட்டிருக்கும் பிரம்மையை தெளிய வைக்க முயன்றான்.


ஆனால் சூர்யா கூறிய விசயங்களை ஏற்றுக் கொள்ளவும், முடியாமல் ஒதுக்கவும் முடியாமல்.. நெற்றியை தாங்கியவாறு மைதிலி அமர்ந்திருந்தாள்.


தற்பொழுது மைதிலியை பார்த்தால் சூர்யாவிற்கு பாவமாக இருந்தது. இத்தனை நாட்கள் வரை.. உண்மை என்று நம்பி.. பயந்து வாழ்ந்ததை.. சட்டென்று தான் பொய் என்றுக் கூறியதை அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமல் திணறுகிறாள் என்றுப் புரிந்தது.


மைதிலி “அப்போ! என்னோட சித்தப்பா மட்டுமில்ல.. ஊர்க்காரங்க, என் அப்பாவோட ஆட்கள்.. என்று எல்லாரும் பெரிய கருப்பு உருவத்தைப் பார்த்ததா சொல்றாங்க.. அதுவும் பொய் என்றுச் சொல்றீயா! எல்லாரும் ஒரே மாதிரி பொய் சொல்றாங்களா?” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா தாடையை தடவியவாறு “அது நிச்சயம் நடிக்க ஏற்பாடு செய்த ஆள் தான்! இன்னொரு கும்பலும் தேடறாங்க என்றுக் கண்டுப்பிடிச்ச உங்களால.. அதுவும் மனுஷன் தான் என்று கண்டுப்பிடிக்க முடியலையா..” என்றுக் கேட்டான்.


மைதிலி ஓய்ந்தவளாய்.. தன் முன்.. இருந்த மேசையில் தலையைக் கவிழ்த்துக் கொண்டாள்.


சூர்யா மென்மையான குரலில் “மைதி! இப்போ ஒன்றும் எதுவும் கெட்டுப் போகவில்லை. இந்த விசயத்தை எல்லாம் உன் மூளையில் இருந்து எடுத்து வீசிட்டு என் கூட வந்திரு! இன்னும் நமக்குள்ள அந்த ஈர்ப்பு இருக்கா என்றுப் பார்க்கலாம். இல்லைன்னா எத்தனையோ அரேன்ஜ் மேரேஜ் ஈர்ப்பு என்று ஒன்று இல்லாமல் நடந்திருக்கு.. அவங்க வாழ்க்கையை முதல்ல இருந்து தொடங்குகிற மாதிரி.. நாமளும் முதல்ல இருந்து தொடங்கலாம். ஒருத்தரை ஒருத்தர் சகிச்சுட்டு.. லவ் செய்துட்டு பொறுமையா ஹான்டில் செய்துட்டு வாழலாம்." என்றான்.


உடனே தலை நிமிர்ந்து பார்த்த.. மைதிலி “முடியாது. என்னால் வர முடியாது. கிட்டத்தட்ட நெருங்கிட்டோம். அந்த பெட்டிகள் எங்களுக்கு தான்..” என்றவள், திடுமென “மாறன் ஆவி புகுந்த மாதிரி.. நடிச்ச போது.. சும்மா தானே பெட்டிகளை ஆற்றில் போட்டுட்டேன்னு சொன்னே..” என்றுச் சந்தேகமாக கேட்டாள்.


சூர்யா தலையில் அடித்துக் கொண்டு “நான் இத்தனைச் சொன்ன பிறகும்.. உன் நினைப்பு அங்கே தானே போகுது. ஆமாம் சும்மா தான் சொன்னேன். ஆனால் நான் சொன்னது நடந்தும் இருக்கலாம். ஒருவேளை மாறன் புதைத்து வைத்திருந்தால்.. மாறன் மறுஜென்மம் எடுத்து வந்து.. புதைத்த இடத்தில் தோண்டிப் பார்த்தால் கூடக் கிடைக்காது. கிட்டத்தட்ட எழுபது வருஷம் என்றுச் சொல்றே.. எப்படி புதைத்த இடத்திலேயே அது இருக்கும் என்று நினைக்கிறே! பூமி சுழலும் என்றுத் தெரியும் தானே.. உலகம் சுற்றும் போது.. எழுபது வருஷத்துக்கு முன்னே புதைத்த.. பெட்டிகள் புதைத்த இடத்தில் இருந்து இடம் மாறலாம். இன்னும் ஆழமாக கூட புதைந்து போகலாம். அந்த இடத்தில் பாறை விழுந்திருக்கலாம்.. இல்லைன்னா பெரிய மரம் வளர்ந்திருக்கலாம். அந்த இடத்துல பெட்டிகளை தேடுவது கடல்ல ஒரு ரூபா காயினை போட்டுட்டு தேடற கதை தான்! இத்தனை வருஷத்துல இந்த மாதிரி எத்தனை இயற்கை சீற்றங்கள் வந்துச்சோ!” என்று வெளியே சோ என்றுச் சத்தத்துடன் கொட்டிக் கொண்டிருக்கும் மழையைக் காட்டினான்.


பின் தொடர்ந்து “என்னை கேட்டா.. இன்னும் அந்த புதையலை தேடிட்டு இருக்கிறது.. முட்டாள்தனம் மட்டுமில்லை. அநியாயமும் கூட!” என்று அவளை முறைத்தான்.


சூர்யா கூறியதைக் கேட்டு.. மைதிலி பேச்சிழந்து போனாள். சூர்யா கூறியவை நடக்க கூடியவையே! ஆனாலும் என்று அவளது மனம் சண்டித்தனம் செய்தது.


எனவே மைதிலி சூர்யாவை பார்த்து “உனக்கு நான் ஒரு கதை சொல்லட்டுமா! ஒருத்தன் இப்படித்தான் புதையலைத் தேடுகிறேன் என்று ரொம்ப ஒரு நாள் முழுக்க தோண்டினானாம். ஆனா கிடைக்கவேயில்ல.. ஒரு கட்டத்தில் சலிச்சு போய்.. எழுந்து போயிட்டான். அதைப் பார்த்து.. வந்த இன்னொருத்தன் தோண்டின ஒரு அடியிலேயே அந்த புதையல் கிடைச்சுருச்சு! அந்த மாதிரி நடந்திருக்க கூடாது தானே..” என்றாள்.


உடனே சூர்யா “இடியட்! இடியட்! அது விடாமுயற்சிக்கு சொல்ற கதை.. அதைப் போய் எது கூட கம்பேர் செய்யறே!” என்று அவளைத் திட்டிவிட்டு “இன்னும் பெட்டிகளை தேடுவது முட்டாள்தனம் என்று நான் சொன்னதை மட்டும் தான் கவனிச்சியா.. அடுத்து அநியாயம் என்றுச் சொன்னேனே.. அதைக் கவனிக்கலையா..” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “அது எனக்கு தேவையில்லை..” என்று முடியை சிலுப்பினாள்.


“இந்த திமிரு தான்..” என்று ஏதோ திட்டப் போனவன், ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு அவளைச் சில கணங்கள் அழுத்தமாக பார்த்த சூர்யா “ஆல்ரைட்! நான் உனக்கு ஹெல்ப் செய்யறேன். பட் எனக்கு எல்லா டிடெய்ல்ஸூம் வேணும். யார் யார் உன் கூட இருக்காங்க.. எனக்கு தெரிந்து நாலு குரூப், நீ உன் சித்தப்பா, உன் அப்பாவும் உன் அண்ணனும், உன் அத்தை பேமலி, அப்பறம் இன்னொரு கும்பல் ரைட்டா! இதுல உங்க எல்லாரையும் ஆட்டிவிக்கறது. அந்த ஃபோர்த் கும்பல் தான் பிகாஸ். அவங்க தான்.. மாறன் மாதிரி ஒரு ஆளை உலாத்த விடறாங்க.. என்பது என்னோட கெஸ்! அப்பறம் அங்கே நடக்கிற மர்ம சாவிற்கும் அவங்க தான் காரணம்! சோ உங்க எல்லாரையும் விட அவங்க ரொம்ப பவர்புல்! அங்கே இருக்கிற மலைகளில் எத்தனை மலைகளை கம்பளீட்டா.. செக் செய்துருக்கீங்கனு சொன்னே! அதை என்னால் ஏத்துக்க முடியாது. அப்பறம் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு! முதலில் இருந்தே தனித்தனியாக தான் தேடனீங்களா?” என்றுக் கேட்டான்.


மைதிலி “இல்லை முதலில் கொள்ளு தாத்தாவும், தாத்தாவும் தேடிட்டு இருந்தாங்க.. அப்போ.. கொள்ளு தாத்தாவும் பாட்டியும் இறக்கவும், தாத்தா தேடறதை கைவிட்டுட்டார். இருபது வருஷம் அதைப் பற்றி எந்த பேச்சும் இல்லை. ஆனா முப்பது வருஷத்து முன்னாடி மறுபடியும்.. மாறன் ஆவியை ஊர் சனங்க பார்த்தாங்க! அப்போ தான் தாத்தா கட்டிவிட்டது கதையில்லை நிஜம் என்று எங்க குடும்பத்திற்கு தெரிந்தது. அப்பறம் நாலு வருஷத்துக்கு முன்னாடி.. என் சித்தப்பா, அப்பா, பெரியப்பா, அத்தையோட ஹஸ்பென்ட் என்று எல்லாரும் ஒன்றாக தான் தேடனாங்க! அப்பறம் இப்படித் தேடறதில் ப்ரோஜனமில்லைனு பெரியப்பா ஒருதரம் சொன்ன போது.. அப்பா சண்டை போட்டார். அதனால பெரியப்பா.. கிடைச்சா நீங்களே வச்சுக்கோங்கனு சொல்லிட்டு.. சில நில பத்திரங்களை வாங்கிட்டு இது போதுனு போயிட்டாங்க! அப்போ அப்பாவுக்கு பேராசை அதிகமாகிருச்சு! சித்தப்பாவுக்கு கல்யாணம் இல்லை. அதனால.. முழுசா கிடைச்சதும்.. அவருக்கும் அவரோட மகனுக்கு தான்னு கணக்கு போட்டார். அப்போ தான் நாங்க.. தனியா தேடலானு கணக்கு போட்டோம். சித்தப்பா சமாதானப்படுத்தப் போனவர்.. அப்படியே மலைக்கு போய்.. அங்கேயே இறந்துட்டார் என்று.. பொய்யாய் சேதி கட்டிட்டோம். சித்தப்பா குஸ்தி வாத்தியார்.. அதனால அவரோட ஸ்டூடன்ட் எட்டு பேரை சேர்த்துட்டு.. மூணு மூணு பேரா.. அப்பா தேடாத நாட்களில் தேடுவாங்க! அப்போ தான் இன்னொரு கும்பலையும்.. மாறன் ஆவி அங்கே உலாத்துவதையும் பார்த்தாங்க..” என்றாள்.


அவள் கூறுவதைக் கவனமாக கேட்ட சூர்யா “ஆரம்பத்தில் இருந்தே.. இப்படித் தோண்ட தான் ஆரம்பிச்சீங்களா.. இல்லை.. எதாவது க்ளு கிடைக்குதானு பார்த்தீங்களா?” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “ம்ம்! என் கொள்ளு தாத்தா.. மாறனோட வைஃப் காணாம போனலும்.. மத்த பேமலி மெம்பர்ஸ் கிட்ட நல்லா விசாரிச்சார். எதுவும் கிடைக்கலை. அவங்களுக்கு.. மாறன் இப்படி அவரைக் கொல்ல போய்.. அங்கிருந்து திருடிட்டு போவான் என்றே தெரியாதுனு சொன்னாங்க..” என்றாள்.


மாறனின் பார்வை துளையிட்டது.


“எப்படி விசாரிச்சாரு?”


மைதிலியின் தலை தானே கவிழ்ந்தது.


ஆத்திரத்ததுடன் பற்களை கடித்த.. சூர்யா “ஒகே! நான் முதலில் இருந்து துவங்கிறேன்.” என்றான்.


மைதிலி மெல்ல “நீ ஏன் எனக்கு ஹெல்ப் செய்யணும் என்று நினைக்கிறே! முதலில் ஆவது.. என்னோட பிளாக்மெயில்.. மிரட்டினதுனு, பேய் என்றுப் பயமுறுத்தியது என்றுச் சொல்லலாம். ஆனா அதெல்லாம் உனக்கு ஒரு பொருட்டே கிடையாது. பின்னே ஏன்..” என்றுக் கேட்டவளின் கண்களில் சந்தேகம் தோன்றியது.


சூர்யா “முதல் காரணம் நீ! இரண்டாவது காரணம் மூணு தலைமுறையா உங்க குடும்பத்தை ஆட்டுவிக்கிற பிரச்சினையை ஒரு கை பார்க்கலாம் என்றுத்தான்! மூன்றாவது காரணம்.. உங்களோட முட்டாள்தனத்திற்கு முற்றுபுள்ளி வச்சு நல்ல பாடம் கற்றுக் கொடுக்கணும் என்று ஆசை! ஒருவேளை அந்த பெட்டிகள் கிடைச்சுதுன்னா.. உங்க குடும்பத்தில் இருக்கிற யார் கைக்கும் போக கூடாது.. அதுக்கு தான்..” என்றான்.


மைதிலி “என்னது!” என்று அதிர்ந்தவள், “நாலு வருஷமா எனக்காக என் சித்தப்பா..” என்கவும், பொறுமையிழந்தவனாய் “உன் சித்தப்பா எப்போ வருவார்?” என்றுக் கேட்டவன், தொடர்ந்து “நீ உன் சித்தப்பாவை யுஸ் செய்யலை. உன்னை அவர் யுஸ் செய்துட்டு இருக்கிறார். உன்னோட குலப்பெருமை, பணத்தாசையை அவர் கிளப்பி விட்டிருக்கிறார். நீங்க ரெண்டு பேரும் கண்டுப்பிடிச்சா.. உன்னை ஏமாத்திட்டு.. எடுத்துட்டு போவது அவருக்கு வசதியாக இருக்குமில்ல!” என்றான்.


மைதிலி சிறு ஏளனச் சிரிப்புடன் “நாங்க ஏழுபது வருஷமா மண்டையை உடைச்சுட்டு இருக்கிற விசயம் இது! நீ ஒற்றை ஆளா.. எல்லாத்தையும் சமாளிக்கிறேன்னு சொல்றே! தைரியம் தான்.. ஆனா அசட்டு தைரியம்! ஜாக்கிரதை.. அப்பறம் உடம்புல உயிர் இருக்காது.” என்றவளுக்கு ஏனோ நறுக்கென்று இதயத்தில் குத்துவது போன்று இருந்தது. தனது முகத்தை அவளுக்கு காட்டாதிருக்கும் பொருட்டு.. முகத்தை திருப்பி எங்கோ பார்த்தாள்.


முறுவலுடன் அவள் புறம் சரிந்து.. அவளது முகவாயைப் பற்றித் தன்புறம் திருப்பிய.. சூர்யா “முதல் காரணத்தை இதனால தான் சொன்னேன். நீ என்னை ஏமாத்தினாயோ! ஜஸ்ட் இன்பெக்ஸ்வேஷனோ! இல்லைன்னா.. உன்னை ரொம்ப லவ் செய்யறனோ! இது எதுவும் இல்லாம மேரேஜ் என்கிற கமிட்மென்ட்டிற்கு கட்டுப்படறமோ! வாட் எவர்.. நான் உன்னை விட மாட்டேன். உன் மனசுல, புத்தியில இருக்கிறதை எல்லாம் கிளியர் செய்து.. என் கூட கூட்டிட்டு தான் போவேன். எனக்கு எதாவது நடுவில் ஆகுதுன்னா.. அதையும் பார்த்திரலாம்.” என்றான்.


அவனது கையில் தனது முகவாயில் இருந்து அகற்றிய மைதிலி “சூர்யா! நாம் பிரெண்ட்ஸா இருந்துக்கலாம்.” என்றவாறு மெல்ல நாற்காலியில் இருந்து எழுந்தாள். ஆனால் அவளது நோக்கம் புரிந்து உடன் எழுந்த சூர்யா “எனக்கு நீ என் பொண்டாட்டியாக தான் வேணும்.” என்று அவளைத் தனது கைவளைக்குள் இழுத்தான். அவனிடமிருந்து விடுபட மைதிலி திமிறினாள். அப்பொழுது அவளது கைப்பட்டு.. கழற்றி வைக்கப்பட்டிருந்த கெரியர் டிபன்.. அப்படியே மேசையில் இருந்து தரையில் விழுந்தது.


சாப்பாடு, குழம்பு, இரசம், பொரியல் என்று அனைத்தும் சிதறி கிடக்க.. அதன் நிறம் மாறியிருந்தது மட்டுமில்லாது, நுரை போல் ஆங்காங்கு இருந்து.. உணவில் விஷம் கலக்கப்பட்டிருக்கு என்பதை நன்கு பறைசாற்றியது.


—-----------------------


கீழே அறையில்.. மைதிலிக்கு மட்டும் விஷ முறிவு மருந்தை கொடுக்க என்று கையில் வைத்துக் கொண்டு நின்றிருந்த சாந்தி “மேலே போய் பார்க்கட்டுங்களா.. சாப்பாடு கொடுத்துட்டு வந்து அரைமணி நேரமாச்சு! அப்பறம் இந்த விஷமுறிவு மருந்து மைதிலிக்கு வேலை செய்யாம போயிற போகுது.” என்கவும், கணேஷன் போ என்று தலையசைத்தார்.


—-------------------------------


மைதிலியை அறையிற்குள் தள்ளிவிட்டு வேகமாக படியிறங்கி வந்த.. கயல்விழி.. அறைக்குள் சென்றார். அங்கு கயல்விழியின் அலமாரியில் இருந்த பொருட்கள் தாறுமாறாக கிடந்தன. பயத்துடன் சென்றுப் பார்த்தார். அவர் பயந்தது போல்.. இத்தனை வருடங்களாக.. தனது மகளுக்கு கொடுக்கலாம் என்று பத்திரப்படுத்தி வைத்திருந்த அவளது சில நகைகளை காணவில்லை.


ஜீப்பில் சென்றுக் கொண்டிருந்த மகேஸ்வரனின் இந்த நகையை விற்று.. செய்யும் வேலைகளைக் கணக்கு போட்டுக் கொண்டிருந்தது.


—-----------------------------


தலைப்பாகை கட்டிக் கொண்டு மார்பு வரை.. தொங்கும் அளவிற்கு.. தாடியை வைத்துக் கொண்டு கிட்டத்தட்ட முகத்தை முக்கால்வாசி அளவிற்கு.. மறைத்தார் சோமேஸ்வரன்! பின் நெற்றி முழுவதையும் மறைக்கும் அளவிற்கு.. குங்குமத்தை வைத்துக் கொண்டு.. ஆள் அடையாளம் தெரியாதவாறு வேடமிட்டுக் கொண்டவர்.. ஜமீன் மாளிகையை நோக்கி ஜோசியரை போல் சென்றார்.


ஆம்! அவர்களது ஆசையை மீண்டும் கிளப்பி விட்ட ஜோசியர் சோமேஸ்வரன் தான்!


—---------------------------------


“வாட்! ஹீ டிமென்ட்டிங் மோர் மணி!” என்று எரிச்சலுடன் ஒரு குரல் கத்தியது.


அதற்கு “வேற வழியில்லை! கொடுத்து தான் ஆகணும். பஞ்சாப்பில் இருந்து நமக்காக வந்திருக்கிறான். கிட்டத்தட்ட முப்பது வருஷமா நம்ம கூட வந்து இங்கே இருக்கான். அவனோட மகனுக்கு உடம்பு சரியில்லையாம்.. பணம் வேணுன்னு கேட்கிறான்.” என்றான்.


அதற்கு எரிச்சல் குரலுக்கு சொந்தக்காரன் “ம்ம்! அவன் ஜாலியா நடுவில் டூர் மாதிரி போயிட்டு வந்து.. நாலு புள்ளைகளை பெத்து.. அதுல ஒருத்தனுக்கு கல்யாணத்தை வேற பண்ணி வச்சுருக்கான்.” என்று ஏளனத்துடன் கூறினாலும் கேட்ட தொகையை அவனது அக்கவுண்ட்டில் பாஸ் செய்ய முயன்றவன் பலத்த மழை காரணமாக நெட்வொர்க் கிடைக்காமல் திண்டாடினான்.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 11


(பொருளடக்கம்)

துணைவனாய் அவனிருக்க!

கிலி கொள்ளும் பேதை!

முன் அவன் எனில்..

இன்றிவனோ!



வேகமாக படியேறி சென்ற சாந்தி.. அந்த பழங்கால கதவை.. உள்ளே தாழிட்டு இருந்ததால்.. சிறு கம்பியை கையோடு கொண்டு வந்திருந்தார். அதை அந்த சிறு இடைவெளியின் உள்ளுக்குள் விட்டு.. எடுத்தால்.. உள்ளே தாழிட்ட தாழ்பாளை மேலே எடுத்துவிடலாம்.


ஏனெனில் கண்டிப்பாக இருவரும் மயங்கி கிடப்பார்கள் என்று அவர் நிச்சயமாக இருந்தார். கம்பியை வைக்க போகும் வேளையில்.. கதவு தானாக திறந்தது. அவர் திகைத்து பார்க்கையில்.. கதவை திறந்துக் கொண்டு மைதிலி வெளியே வந்தாள்.


அவளைப் பார்த்து திகைத்த சாந்தி “நீ சாப்பிடலையா மைதிலி?” என்றுக் கேட்டார்.


அதற்கு மைதிலி “ரெண்டு பேரும் சாப்பிட்டோமே! சாப்பிட்டதும்.. குட்டி தூக்கம் போடலாம் என்று இருக்கிறேன்.” என்றாள்.


அதைக் கேட்ட சாந்தி திகைத்தார்.


சாப்பிட்டதும்.. நரம்புகளைப் பாதிக்கும் விஷத்தை தான் கயல்விழி கொடுத்த உணவில்.. சாந்தி கலந்திருந்தார். அவர்களுக்கு மைதிலி வேண்டும் எனவே அவளுக்கு மட்டும்.. கொடுக்க என்று மாற்று மருந்து எடுத்து வந்திருந்தார். யார் என்ன எப்படி என்று விசாரித்தால்.. மாறன் ஆவியின் மேல்.. பழியைப் போடலாம் என்றுத் திட்டமிருந்தார்கள். ஆனால்.. விஷம் கலந்த உணவை சாப்பிட்டு இருவருக்கும் ஒன்றும் ஆகாமல் இருப்பதைக் கண்டு திகைத்தார். ஒருவேளை சிறிதளவே கலந்திருப்பேனோ.. அதனால் தான் அவர்களுக்கு தூக்கம் மட்டும் வந்திருக்கிறது என்று நினைத்தார்.


மைதிலி “என்ன விசயம் அத்தை?” என்றுக் கேட்கவும், சாந்தி சுதாரித்தவராய் “நான் உன் கூடத் தனியா பேசணும்னு சொன்னேனே மைதிலி..” என்றார்.


மைதிலி யோசிக்கவும்.. உள்ளே இருந்து சூர்யாவின் குரல் கேட்டது.


“போ மைதிலி..”


மைதிலி தலையைத் திருப்பி சூர்யாவை பார்க்கவும், அவன் ‘போ’ என்பது போல் தலையை அசைத்தான்.


மைதிலி சரி என்று தலையை ஆட்டிவிட்டு.. “வாங்க அத்தை..” என்று அவருடன் சென்றார்.


மைதிலியும் சாந்தியும் அகன்றதும் சூர்யா மெல்ல வந்து கதவை திறந்துப் பார்த்தான். இருவரும் படியிறங்குவதைக் கண்டவனின் பார்வை சுற்றிலும் சென்றது. பின்.. அந்த பழங்கால கதவை சாத்தியவன், தாழிட்டான். அது பழங்கால கதவு என்றாலும்.. நல்ல தடிமானமாக இருந்தது. அதனால் ஒட்டுக் கேட்பது என்பது முடியாத ஒன்று! அதன் மங்கிய வேலைப்பாட்டை தடவியவன், “புதையலை கூடவே வச்சுருக்காங்க… ஆனா இதை அழிச்சுட்டு.. இன்னேரம் அழிந்திருக்கும் புதையலுக்காக அடிச்சுட்டு இருக்காங்க..” என்று முணுமுணுத்தான்.


தரையில் சிதறிய விஷம் கலந்த உணவுகளைப் பார்த்தான்.


சற்று முன்.. உணவில் விஷம் கலந்திருப்பதைக் கண்டு மைதிலி திகைத்து நிற்கையில்.. சூர்யா “உன் அத்தை குடும்பம் இந்தளவுக்கு போகுமா..” என்று இளக்காரத்துடன் கூறியவன், தொடர்ந்து “அவங்க வேற வழியில் பெட்டிகளை தேடிட்டு இருக்காங்க என்று நினைச்சோம். இதுதான் அவங்க வழியா..” என்றான். மைதிலிக்கும் அதிர்ச்சி தான்!


சூர்யா “அவங்க உன் கிட்ட தனியாக பேசணும் என்றுச் சொன்னாங்க தானே! அது என்னவென்று பார்க்கணும். அதுனால அடுத்த முறை கூப்பிட்டால் போ! உன் அப்பா கூட.. என் கூடப் பேசணும் என்றுச் சொன்னார் தானே!” என்றான்.


மைதிலி “என்னைக் கொல்வதால்.. என்ன ப்ரோஜனம்?” என்றுத் திகைத்தாள்.


சூர்யா “பெட்டிக்கு சொந்தம் கொண்டாட ஒரு ஆள் குறையலாம்.” என்றான்.


இருவரும் பேசிக் கொண்டே சுத்தம் செய்துக் கொண்டிருக்கும் பொழுது.. ஏதோ தோன்ற.. மைதிலியை கதவை திறக்க கூறினான். அவன் சந்தேகப்பட்டது போல்.. வெளியே சாந்தி நின்றிருந்தார். அவருடன் மைதிலியை அனுப்பிவிட்ட சூர்யா மீதி இருப்பதை விரைந்து சுத்தம் செய்துவிட்டு.. தனது பையை எடுத்தான். அதில் இருந்த சிம் கார்ட்டை எடுத்து செல்பேசியில் பொருத்தி அதை இயங்கினான். அதில் இருந்த ஒரு எண்ணிற்கு அழைப்பு விடுத்து காத்திருந்தான்.


அந்த பக்கம் அழைப்பை ஏற்றதும் எடுத்த எடுப்பில் “ஸார் விஷ் மீ! ஐ டைடு அப் வித் மைதிலி!” என்றான்.


அந்த பக்கம் என்ன சொன்னார்களோ.. நன்றாக சிரித்த சூர்யா “இல்லை ஸார்! இது பார்ட் ஆஃப் த பிளன் இல்லை! சரி விசயத்திற்கு வருகிறேன். நான் ஆணி வேரை கண்டுப்பிடிச்சுட்டேன் ஸார்! ஆனா நாம் நினைத்ததை விட.. இங்கே நிலைமை ரொம்ப மோசமாக இருக்கு! இன்னும் ஆழமா ஆராய்ந்தா.. பல விசயங்கள் வரும் போல தெரியுது. குற்றங்கள் செய்துட்டு இருக்கோம் என்றுத் தெரியாம.. குற்றத்திற்கு மேலே குற்றங்கள் செய்துட்டு இருக்காங்க! அவங்களைப் பொருத்தவரை.. குடும்பத்திற்குள் நடக்கிற பிரச்சினை! ஆனா இதோட வீரியம் புரியலை.” என்றான்.


பின் அந்த பக்கம் பேசுவதைக் கவனமாக கேட்டான்.


பின் சூர்யா “என் வீட்டை நோட்டம் விடற ஆளுங்க.. இவங்க ஆளுங்க தான்! அவங்களை நீங்க நோட்டம் விடுங்க!” என்றான். பிறகு அந்த பக்கம் என்ன கூறினார்களோ.. அதைக் கேட்டு சிரித்தவன், “டொன்ட் வெர்ரி ஸார்! என்னை நான் மேனேஜ் செய்துப்பேன். ஆனா நான் சொல்கிற வரை.. யாரும் இதில் இன்டர்பியர் ஆகாதீங்க! அப்படி ஆனா.. அவங்களோட பெட்டியை தேடினாங்க… இது குடும்ப பிரச்சினை என்று முடிச்சுருவாங்க! இதை விட ஆவியோட வேலை என்றுக் கூட முடிச்சுருவாங்க! ஆனா.. எனக்கு தீர்வு என்று ஒன்று கிடைக்கணும் என்று எதிர்பார்க்கிறேன்.” என்றான்.


பின் “ஒகே ஸார்! எதாவது வேண்டுமென்றால் கண்டிப்பாக சொல்கிறேன்.” என்றுவிட்டு.. அழைப்பைத் துண்டிக்க போனவன், அந்த பக்கம் என்ன சொன்னார்களோ.. சிரித்துவிட்டு.. “நானே வந்து சொல்லிக்கிறேன் ஸார்! எப்படியும் திட்டு உண்டு. ஆனா மைதிலி தான் என் வைஃப் அதில் எந்த மாற்றமும் இல்லை.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தான்.


சிம்மை மீண்டும் பத்திரப்படுத்தி வைத்துவிட்டு.. திறந்திருந்த சன்னலை பார்த்தான். பலத்த மழை சற்று வலு குறைந்திருந்தது. ஆனாலும் தொடர்ந்து பெய்ந்துக் கொண்டிருந்தது. சன்னல் அருகே சென்றான். பலத்த மழை பெய்த பொழுது தெறித்த சாரலின் காரணமாக.. சன்னல் அருகே தரை ஈரமாக இருந்தது. அங்கு பாதம் வைத்ததும் சில்லென்று இருந்தது. மெல்ல சன்னல் அருகே சென்றவன்.. சற்று தொலைவில் தெரிந்த மலைத் தொடர்களைப் பார்த்தான். அதை வெறித்தவாறு நின்றிருந்தான்.


சற்று நேரத்தில் கதவு திறக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான். மைதிலி தான் வந்தாள். ஆனால் அவளது முகத்தை குழப்பம் தத்தெடுத்து இருந்தது.


“என்ன சொன்னாங்க மைதிலி?” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “சுருக்கமாக சொல்லட்டுமா” என்றவள், “உன்னை கல்யாணம் செய்தது தப்புனு சொன்னாங்க! எங்க குல தெய்வ சாமி.. அதை மன்னிக்காதாம்! அதனால் உன்கிட்ட இருந்து பிரிய சொன்னாங்க!” என்றாள்.


சூர்யா “அதாவது இன்னைக்கு தான் கல்யாணம் ஆச்சு! உடனே டைவர்ஸ் வாங்க சொன்னாங்களா..” என்றுச் சிரித்தான்.


உடனே மைதிலி “கல்யாணம் கல்யாணம் என்று திருப்பித் திருப்பி சொல்லாதே! நான் ஒரு காரியத்துக்காக தான் உன்னை கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தேன். அது உனக்கே தெரியும். அதனால அதைப் பெருசா எடுத்துக்காம அப்படியே விட்டறேன்.” என்றாள்.


சூர்யா “ஏன் நீ கல்யாணமே செய்யாம.. சன்னியாசி ஆகப் போறீயா! எப்படியும் நடக்கும் தானே! அந்த மாப்பிள்ளை நானாக இருந்துட்டு போறேனே!” என்றுச் சிரித்தான்.


அதற்கு மைதிலி “நோ! நோ! நான் எதிர்பார்த்த ஹஸ்பென்ட் மெட்டிரீயலே வேற! நான் சொல்கிற படி அடங்கி நடக்கணும். என்னை ராணி மாதிரி.. பார்த்துக்கணும். ஆனா நீ.. என்னை அடக்குறே!” என்றாள்.


சூர்யா “என்னை அடக்குறது உன் கையில் தான் இருக்கு..” என்றுச் சிரித்தான்.


மைதிலி “கடவுளே!” என்று காதில் கையை வைத்துக் கொண்டு அமர்ந்தாள். பின் திடுமென நினைவு வந்தவளாய் “ஆங்! இன்னொன்னும் சொன்னாங்க.. நான் வர அஷ்டமி அன்னைக்கு.. ஏதோ பூஜை செய்த.. காணாம போன பெட்டிகள் கிடைச்சுருமாம்.” என்றாள்.


அதைக் கேட்டு சிரித்த சூர்யா “உங்களோட முட்டாள்தனத்திற்கு ஒரு அளவே இல்லையா..” என்றவன், “இப்போ அவங்க விஷம் வைத்து உணவை தருவதற்கும்.. திடீர்னு பூஜை செய்ய சொல்வதற்கும்.. கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லையே..” என்றான்.


மைதிலியும் ஏன் என்றுத் திகைத்தாள்.


சூர்யா “இதுக்கு முன்னாடி.. உன் அத்தை என்கிட்ட எப்படி பிஹேவ் செய்வாங்க?” என்றுக் கேட்டான்.


மைதிலி “கண்டுக்கவே மாட்டாங்க! அவங்க பாட்டிற்கு இருப்பாங்க..” என்றாள்.


சூர்யா “சோ! இப்போ தான் வந்து அக்கறையா பேசியிருக்காங்க அப்படித்தானே! அந்த விஷம் எனக்காக இருக்கும் என்று நினைக்கிறேன். அதே மாதிரி.. இப்போ பிரிய சொல்றாங்க! சோ அவங்க குறி நான்தான்! ஆனா இந்த திடீர் பூஜை தான் இடிக்குது.” என்றான்.


உடனே மைதிலி “ஒருவேளை நீ மாறன் மாதிரி இருப்பது அவங்களுக்கு தெரிந்திருக்குமோ!” என்றுப் பதட்டத்துடன் கேட்டாள்.


அதற்கு மறுப்பாக தலையசைத்த சூர்யா “இருக்காது! பிகாஸ்.. அவங்க குறி நானாக இருந்தாலும்.. அவங்களோட அட்டேன்ஷன் என் மேலே இல்லை. என்னைக் கண்டுக்கவே இல்லை. அவங்களுக்கு பிடிக்காதது நான் இல்லை. நம்ம கல்யாணமாக இருக்கலாம்.” என்றான்.


மைதிலி “ஏன்?” என்றுக் கேட்கவும், சூர்யா தோள்களைக் குலுக்கியவாறு “சரியாக தெரியலை. ஆனா உனக்கு மேரேஜ் நடந்தா.. இந்த குடும்பத்தில் இன்னொரு ஆள் சேர்ந்த மாதிரி தானே! அதாவது பங்கு போடும் பணத்தின் அளவு பகிரப்படும். இதுவும்.. உங்களோட பணத்தாசை வைத்து என்னோட கெஸ்..” என்றான்.


“ஓ!” என்று அவன் சொன்னதைக் கிரகித்துக் கொண்ட மைதிலி “எப்படி அவங்க மனசுல என்ன நினைக்கிறாங்க.. என்று ஊடுருவி பார்த்த மாதிரி சொல்றே! எனக்கு உன்னைப் பார்த்தா தான் பயமா இருக்கு..” என்றாள்.


அதற்கு சூர்யா “உன் புருஷனை பார்த்து என்ன பயம்?” என்றுக் கேட்கவும், மைதிலி “புருஷனா! எனக்கு என்னவோ நீ தான் அவங்களை விட டேன்ஞ்சரான ஆள் மாதிரி தெரியுது. நான் உன்கிட்ட மாட்டிட்ட மாதிரி இருக்கு..” என்றவள், பின் தொடர்ந்து “இப்போ என்ன செய்ய?” என்றுக் கேட்கவும், சூர்யா “நீ கையில் வைத்திருக்கிற பையில் என்ன இருக்கு.. என்றுச் சொல்லாமே..” என்றான்.


உடனே மைதிலி வேண்டா வெறுப்புடன் பையில் இருந்த டிபன் பாக்ஸை எடுத்து மேசையில் வைத்தவாறு “அத்தை கிட்ட பேசிட்டு.. பிறகு அம்மாவை பார்க்க போனேன். அம்மா கதவைச் சாத்திட்டு உட்கார்ந்திருந்தாங்க! அப்பறம் எனக்கு பயங்கர பசி.. அதுதான் கிச்சனுக்கு போய்.. பார்த்தேன். அங்கே சாப்பாடு எடுக்கவே பயமா இருந்துச்சு! அதுதான் தோசை வார்த்து தேங்காய் சட்னி அரைச்சு எடுத்துட்டு வந்தேன்.” என்றவள், பின் “உனக்கும் சேர்த்தி தான்..” என்று முணுமுணுத்தாள்.


சூர்யா மைதிலி தான் தனது மனைவி என்றுத் தான் எடுத்த முடிவு சரித்தான் என்றுப் புன்னகைத்தவாறு சாப்பிட அமர்ந்தான்.


அவளுக்கும் தனக்குமாக தோசையை எடுத்து வைத்துக் கொண்டிருந்தவளைப் பார்த்தவன், “உன்னோட பயத்தை போக்கவா..” என்றுக் கேட்டான்.


மைதிலி ‘எப்படி’ என்பது போல் பார்க்கவும், சூர்யா “என்னை இறுக்கி கட்டிப்பிடிச்சுக்கோ..” என்றவாறு தோசையை பிய்த்து வாயில் போட்டான்.


மைதிலி திகைத்துப் பார்க்கவும், சிரித்த சூர்யா “நான் நிதர்சனத்தை சொன்னேன். நீ ஒதுங்கினா தான்.. பயம் பயமா தெரியும்.. தைரியமா.. பேஸ் செய்துப் பார்! உன் பயம் போயிரும். இது எல்லாத்திற்கும் பொருந்தும்.. நினைவில் வச்சுக்கோ..” என்றுவிட்டு தொடர்ந்து சாப்பிட்டான்.


—-----------------------------------


மைதிலியிடம் பேசிய பின்.. சாந்தி தனது கணவரிடமும், மகன் ரவீந்தரிடமும் நடந்ததைக் கூறினார். அவர்களுக்கும் விஷத்தை சாப்பிட்டு எப்படி உயிர் தப்பினான் என்று ஆச்சரியம்! அப்பொழுது அவர்களுக்கு.. ஜோசியர் ஆதிகேசனிடம் இருந்து ஃபோன் வரவும், மூவரும் காரை எடுத்துக் கொண்டு.. ஊர் எல்லையின் அருகில் உள்ள ஜோசியரின் குடிசைக்கு சென்றார்கள். அங்கு அவர் எப்போதாவது தான் வருவார். அவர் அங்கு தங்கும் போது.. அழைப்பு விடுத்தால்.. இவர்கள் சென்று வருவார்கள்.


தனது சிறு ஷென்ட்ரோ காரை பின்னால் இருந்த வைக்கோல் கொட்டகையில் நிறுத்திவிட்டு அங்கிருந்த சிறு குடிசையின் பூட்டை திறந்து உள்ளே சென்ற ஜோசியர் ஆதிகேசனாக இருக்கும் சோமேஸ்வரன்.. அங்கிருந்த கண்ணாடியில் தனது வேஷத்தை சரிப் பார்த்துக் கொண்டார். கண்களைச் சுற்றிலும் மையை அப்பிக் கொண்டவர், காரில் வரும் போதே.. சாந்திக்கு ஃபோன் செய்துவிட்டதால்.. இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவார்கள் என்று.. ஊதுபத்தி கட்டை பிரித்து குடிசையின் நாலு மூலையிலும் வைத்து பற்ற வைத்தார். பின் அங்கு பானையில் வைத்திருந்த சில்லென்ற நீரை எடுத்து தொண்டையை கரகரப்பாக முயன்றார். வெளியே கார் சத்தம் கேட்கவும்.. தனக்கு என்றுப் போடப்பட்டிருந்த பலகையில் சென்றமர்ந்தார்.


கதவைத் தட்டவும், “வாருங்கள்..” என்றுக் குரலை மாற்றி அழைத்தார்.


அவர்கள் உள்ளே வந்ததும்.. அவர்களை அமர வைத்தவர் கண்களை மூடியவாறு “என்ன சாந்தி.. நான் சொன்ன பரிகாரத்தில் தடங்கலா..” என்றுச் சிரித்தார்.


உடனே சாந்தி “ஆமாங்க! என்ன செய்யறதுனு தெரியலை. அதுதான்.. ஒருதரம் என் அண்ணாவிற்கு கொஞ்சம் கொஞ்சமா பாலில் கலந்துக் கொடுக்க சொன்ன விஷத்தை அவங்க சாப்பிடற சாப்பாட்டில் கொஞ்சம் அதிகமா கலந்து கொடுத்துட்டேன்.” என்றாள்.


அதைக் கேட்டு படார் என்று கண்களைத் திறந்த ஆதிகேசன் (சோமேஸ்வரன்) அவர்களை உற்றுப் பார்த்தார். அவரது மனது.. மாறனை போல் இருக்கும் சூர்யா பறிக் கொடுத்துவிட்டோமோ என்று படபடத்தது.


சாந்தி தொடர்ந்து “ஆனால் இரண்டு பேருக்கும் ஒன்றும் ஆகலைங்க!” என்றதும்.. சிறு நிம்மதி பெருமூச்சை இழுத்துவிட்டார்.


சாந்தி சற்று தயக்கமான குரலில் “மைதிலி.. நம்ம பரிகாரத்திற்கு தகுதியானவளா இருக்கணும் என்று என்னால் முடிந்த அளவிற்கு சொல்லி அனுப்பியிருக்கேன். ரவீந்தரின் மனைவி பிரியாவையும் வரச் சொல்லியிருக்கேன்.” என்றாள்.


ஆதிகேசன் “உங்க மருமகள் இங்கே இல்லையா! உங்க கூடத் தானே இருக்க வைத்திருக்க கூறினேன். நீங்க குடும்பத்தோட கூட்டுப் பிராத்தனை செய்தால் தானே.. நீங்க நினைத்தது நடக்கும்.” என்றார்.


அதற்கு சாந்தி “அவளுக்கு அங்கே இருக்க பயமாக இருக்காம். இரண்டு நாளுக்கு முன்.. உங்களைப் பார்த்துட்டு அவ அப்படியே அவ அப்பா வீட்டுக்கு போயிட்டா.. இப்பவும் மழை வருது. நாளைக்கு காலையில் வரேன்னு சொல்லியிருக்கா..” என்றார்.


அதைக் கண்களை மூடி ஆதிகேசன் கிரகித்துக் கொண்டார்.


பின் கண்களைத் திறக்காமலேயே “அந்த பையனை நான் பார்த்துக்கிறேன். நீங்க.. மைதிலியை பார்த்துக்கோங்க!” என்றார். பின்னர் கை நிறைய குங்குமத்தை அள்ளி.. அவர்களது கையில் கொடுத்து.. “இதை வைத்து.. இன்னைக்கு பொழுது சாய்கிற வேளையில் மூன்று பேரும் குங்கும அர்ச்சனை.. செய்யுங்க..” என்றுவிட்டு அனுப்பி வைத்தார்.


பின் அவர்களின் கார் மறைந்ததும்.. வேகமாக குடிசையை பூட்டிவிட்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த தனது காரில் ஏறிய சோமேஸ்வரன் மைதிலியை அழைத்தார்.


அப்பொழுது தான் சாப்பிட்டுவிட்டு எழுந்த மைதிலிக்கு சோமேஸ்வரனிடம் இருந்து அழைப்பு வரவும், அழைப்பை ஏற்றுப் பேசினாள்.


“சொல்லுங்க சித்தப்பா!”


“மைதிலி! நான் வழக்கம் போல் தோட்டத்திற்கு வந்தரேன்.. அங்கு வந்து பாரு மைதிலி.. இன்னும் கால் மணி நேரத்தில் அங்கே இருப்பேன்.” என்றார்.


மைதிலி “சூர்யாவையும் கூட்டிட்டு வரவா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு சோமேஸ்வரன் “வேண்டாம்! வேண்டாம்! நீ மட்டும் வா..” என்றார்.


“சரி சித்தப்பா! உங்க கிட்ட நான் நிறையா சொல்லணும்.” என்றாள்.


சோமேஸ்வரன் “ஆமா மைதிலி! நானும் உன்கிட்ட நிறையா கேட்கணும்.” என்றுவிட்டு அழைப்பைத் துண்டித்தார். பின் காரில் அமர்ந்தவாரு.. தனது தோற்றத்தை ஒரு தோட்டக்காரன் போல் மாற்றினார். தொங்கிக் கொண்டிருந்த பெரிய தாடியையும் தலைப்பாகையும் அகற்றினார். அவரது மொட்டையடிக்க பட்ட தலையும், தாடையை தொடும் பெரிய மீசையும்.. ஒரு கண்களை மறைத்த கட்டும்.. ஆடையையும் காருக்குள்ளவே மாற்றிக் கொண்டார். பின் அவரது கார் ஜமீன் அரண்மனையை நோக்கி சென்றது.


மைதிலி பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா “என்ன! உன் சித்தப்பா.. என்னைக் கூட்டிட்டு வர வேண்டான்னு சொன்னாரா..” என்று ஏளனத்துடன் கேட்டான்.


அதற்கு மைதிலி “ஆமா! உன்னை எப்படி நம்புவார்! நானே நம்பலை..” என்றாள்.


சூர்யா “அவர் சொல்லை அப்படியே தட்டாம செய்ய போறீயா..” என்றுக் கேட்டான்.


மைதிலி “ஆமா! நீ இங்கேயே இரு! நான் போய் பார்த்துட்டு வரேன்.” என்றுவிட்டு சென்றாள்.


தோட்டத்திற்கு சென்றவள், அங்கிருந்த நாய்களிடம் விளையாட்டு காட்டிவிட்டு.. பின் கதவைத் திறந்துவிட்டாள். அதன் வழியாக வந்தவன், அவளைப் பார்த்து வணங்கிவிட்டு, வேட்டியை மடக்கிக் கட்டிக் கொண்டான். பின் கையில் சிறு கொடுவ கத்தியை எடுத்தவன், மரம் மற்றும் செடி கொடிகளில் தொங்கிக் கொண்டிருந்த கிளைகளையும், காய்ந்த கிளை மற்றும் இலைகளை வெட்ட ஆரம்பித்தான்.


நாய்களுக்கு சோறு போட வந்த முனுசாமி “வாப்பா! கந்தா.. நீ மட்டும் தான் பணத்தை எதிர்பாராம இந்த குடும்பத்தில் மேலே இருக்கிற விசுவாசத்துல உன் வேலையை செய்ய வந்திருக்கே! உன் அப்பாவும் இப்படித்தான்..” என்றார்.


அதற்கு கந்தன் “நீங்களும் தான்..” என்றுவிட்டு தனது வேலையைப் பார்த்தான். நாய்களுடன் விளையாடியவாறு கந்தனின் அருகில் வந்த மைதிலி “சித்தப்பா! இங்கே நிறையா விசயம் நடந்திருக்கு சித்தப்பா..” என்றுவிட்டு மகேஸ்வரன் அவளது திடீர் திருமணத்தை ஏற்றுக் கொண்டது, சாந்தி.. உணவில் விஷத்தை கலந்துக் கொண்டு வந்ததைக் கூறினாள்.


சோமேஸ்வரின் கிளைகளை வெட்டியவாறு “அந்த சூர்யா எப்படிப்பட்ட ஆள்? நம்ம பிளனுக்கு ஒத்துக்க வச்சுட்டியா! எதுக்கு ஃபோனில் அப்படி அலறினே! மாறன் என்று வேற என்னவோ சொன்னே! என்னாச்சு?” என்றுக் கேட்டார்.



மைதிலி “சூர்யா.. ரொம்ப ஷார்ப்! நான் முட்டாளா இல்லை அவன் புத்திசாலியானு தெரியலை. மாறன் மாதிரி எனக்கு தெரிந்தான். ஆனால் அவன் மாறன் இல்லை. மாறனுக்கும் மேலே இருப்பான் போல.. மூணு தலைமுறைக்கு முன்.. மாறனால் நம்ம குடும்பத்திற்கு கெடு வந்துச்சு என்றால்.. இப்போ இந்த சூர்யாவாலே வரும் என்று என் உள்மனசு சொல்லுது. நாம் ஒரு பாதையில போயிட்டு இருந்தால்.. அவன் பாதையை மாற்றிவிட்டு.. பெட்டிகளை அவன் எடுத்துட்டு போய் விட வந்திருக்கிறானோ என்றுக் கூடத் தோணுது. அவனைப் பார்த்தாலே எனக்கு நடுங்குது. அவன் என்ன சொன்னாலும் சரினு மண்டையை ஆட்டிறேன்.” என்றாள்.


சோமேஸ்வரன் “எல்லா விசயத்தையும் உளறிட்டியா..” என்று ஆத்திரத்துடன் கேட்டார்.


மைதிலி “அதை விட அவனுக்கு நிறையா தெரிஞ்சுருக்கு...” என்றாள்.


சோமேஸ்வரன் “என்ன சொல்றே?” என்றுக் கேட்டார்.


“அதை என்கிட்ட கேளுங்க..” என்றுக் குரல் கேட்கவும், இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு சூர்யா நின்றிருந்தான்.


முழு உயரத்திற்கும் நிமிர்ந்து நின்றிருந்த சூர்யாவை பார்த்த மாத்திரத்தில் இவன் லேசுப்பட்டவன் இல்லை என்று சோமேஸ்வரனுக்கு தெரிந்துவிட்டது.

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 12


(பொருளடக்கம்)

சூரியனும் இரவும் சந்திப்பதைக் காண்பீர்!

சூரியனின் வெளிச்சம் ஓங்க..

இரவின் இருள் கலையுமோ!



சூர்யாவை பார்த்ததும்.. மைதிலி மெல்ல தனது சித்தப்பாவிடம் ஒதுங்க போனாள். ஆனால் சூர்யா அவளது கரத்தைப் பற்றி இழுத்து தனக்கருகே நிற்க வைத்தான்.


சோமேஸ்வரனின் பார்வையில் இருந்து.. அது தப்பவில்லை. சுற்றிலும் பார்வையோட்டிய சோமேஸ்வரன்.. யாரும் இல்லை.. என்பதையும், முனுசாமியும் சென்றுவிட்டார் என்பதையும் உறுதிப்படுத்திக் கொண்டு “மைதிலியை என்ன சொல்லிப் பயமுறுத்தி வச்சுருக்கே?” என்றுக் கேட்டார்.


அதற்கு சூர்யா “பயமுறுத்த எல்லாம் இல்லை. நீங்க செய்துட்டு இருக்கிறது முட்டாள்த்தனம் என்று மட்டும் சொன்னேன்.” என்றவன், மைதிலியிடம் திரும்பி “உன் சித்தப்பா கிட்ட என்னைப் பற்றி என்ன சொன்னே மைதிலி! என்னை எதிரியை பார்க்கிற மாதிரி பார்க்கிறார்.” என்றுச் சிரித்தான்.


பின் சோமேஸ்வரனை பார்த்து “மைதிலி என்கிட்ட கிட்டத்தட்ட அவளுக்கு தெரிந்தது எல்லாம் சொல்லிட்டா.. நான் அவளுக்கு ஹெல்ப் செய்யறேன்னு சொல்லிட்டேன். ஆனா முதலில் மறுத்துட்டு நான் போறேன்னு சொன்ன போது போக விடலை. சரி.. இப்போ.. ஹெல்ப் செய்யறேன்னு சொன்னா.. நம்பலை. நான் என்ன செய்வேன். ஒகே உங்க கிட்டவே கேட்கிறேன். நான் என்ன செய்யணும் என்றுக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்று நேரடியாக கேட்டான்.


சோமேஸ்வரன் திடுமென திரும்பி.. காய்ந்த கிளைகளை வெட்ட ஆரம்பித்தான். அங்கிருந்த சிறு தாழ்வாரத்தில் கயல்விழி வந்து நிற்பது தெரிந்தது. உடனே சூர்யா மைதிலியின் தோளில் கரத்தைப் போட்டு “வா மைதிலி..” என்று அழைத்துச் சென்று அங்கிருந்த துருப்பிடித்த நீண்ட இருக்கையில் அவளுடன் அமர்ந்தான்.


கயல்விழியை அப்பொழுது தான் பார்ப்பவன் போல் வணக்கம் வைத்தான். ஆனால் கயல்விழி.. வருத்தத்துடன் அவர்களைப் பார்த்தார். அதைப் பார்த்து தாங்க முடியாத மைதிலி.. “நான் அம்மாவை பார்த்துட்டு வரேன்.” என்று எழுந்தாள். அவனுடன் நெருங்கி அமர்ந்திருப்பதும்.. அவளுக்கு சங்கடமாக இருந்தது.


எழுந்தவளின் கரத்தைப் பற்றி நிறுத்திய சூர்யா “அவங்க சந்தோஷப்படற மாதிரி பேசிட்டு வா..” என்று அனுப்பி வைத்தான்.


மைதிலி சென்றதும்.. சூர்யா “இப்போ சொல்லுங்க? எதுக்கு என்னைக் கூட்டிட்டு வந்திருக்கீங்க?” என்றுக் கேட்டான்.


சோமுஸ்வரன் மும்மரமாக வெட்டும் பாவனையுடன் “முதல்ல நான் உன்னை எச்சரிக்கிறேன். மைதிலி.. ரொம்ப அப்பாவி! அவளை ஏதேதோ சொல்லி பயமுறுத்திய மாதிரி என்னைப் பயமுறுத்த முடியாது. அதனால் போலீஸிடம் செல்வது, அல்லது தப்பிக்க ட்ரை செய்வது, இந்த விசயத்தை மீடியாவிற்கு சொல்வது என்று எந்த விசயத்திலும் ஈடுபடக் கூடாது. அப்படிச் செய்தால்.. சென்னையில் இருக்கிற உன் குடும்பத்தினரின் உயிருக்கு நான் உத்தரவாதம் கிடையாது.” என்றார்.


சூர்யா “நான் என்ன செய்ய வேண்டும் என்றுத் தான் கேட்டேன். என்ன செய்யக் கூடாது என்றுக் கேட்கவில்லை.” என்றான்.


கிளையை வெட்டிக் கொண்டிருந்த சோமேஸ்வரனுக்கு சூர்யாவின் பேச்சு திறமையை மெச்சாமல் இருக்க முடியவில்லை. நேற்று வரை அவருடன் திடமாக நின்ற.. மைதிலி தற்பொழுது பயந்திருப்பதிலும் ஆச்சரியமில்லை என்றுப் புரிந்தது.


ஆனாலும் தனது பாராட்டுதலை அவனிடம் காட்டிக் கொள்ளாது, “இந்த தெளிவு எப்பவும்.. இருந்துட்டா உனக்கு நல்லது.” என்றுவிட்டு சிறு அமைதிக்கு பின் “மாறனோட வாரிசு நீதான் என்று உன்னை நடிக்க வைக்க கூட்டிட்டு வந்திருக்கோம்.” என்றார்.


அதற்கு சூர்யா ஏளனச் சிரிப்புடன் “நான்தான் மாறனோட வாரிசு என்றால் உருவ ஒற்றுமை வச்சு நம்பிருவாங்க.. ஒகே! ஆனா நீங்க தேடிட்டு இருக்கிற பெட்டி எப்படிக் கிடைக்கும்?” என்றுக் கேட்டான்.


சோமேஸ்வரன் “என் தாத்தாவும், நாங்களும்.. அந்த மலைகளை புரட்டியே போட்டு எடுத்துட்டோம்.” என்றார்.


சூர்யா “அந்த இன்னொரு கும்பலை மறந்துட்டிங்க…” என்றான்.


சோமேஸ்வரன் திரும்பிப் பார்க்கவும், சூர்யா “மைதிலி என்கிட்ட எதையும் மறைக்கலைனு சொன்னேனே!” என்றான். சோமேஸ்வரன் கண்கள் இடுக்கி அவனைப் பார்க்கவும், சூர்யா “மாறனின் ஆவி.. அந்த மலையில் இன்னும் உலாத்திட்டு இருக்கு.. அங்கே பெட்டி தேட வந்தவங்களைக் கொல்லுது. உங்க குடும்பத்தின் கஷ்டத்திற்கும், சில உயிர்கள் போவதற்கும்.. அந்த ஆவி தான் காரணம்! உன் கொள்ளு தாத்தா செய்த அநியாயங்கள் என்று கிட்டத்தட்ட அவளுக்கு தெரிந்ததை எல்லாம் சொல்லிட்டா..” என்றான்.


சூர்யா கூறியதை முழுவதையும் கேட்ட சோமேஸ்வரன்.. அதற்கு பதில் எதுவும் கூறாமல்.. விட்ட பேச்சில் இருந்து தொடர்ந்தார்.


“ஆமா! அந்த இன்னொரு கும்பல் இன்னும் தேடிட்டு இருக்கிறாங்க.. என்பதில் இருந்து இன்னும் பெட்டி அவங்களுக்கு இன்னும் கிடைக்கலை. ஆனா அவங்களும் இங்கே பெட்டி இருக்கு.. என்பதை நம்பறாங்க.. என்றுத் தெரியுது. அதையே நம்பிக்கையா வச்சு நாங்களும்.. மும்மரமாக தேடிட்டு இருக்கோம்.” என்றார்.


சூர்யா “அப்போ.. அவங்களுக்கும் நீங்க தேடிட்டு இருக்கிறது தெரியும் தானே! ஒருவேளை அந்த ஆவி பயத்தை அவங்க கிரியேட் செய்திருந்தா?” என்றுக் கேட்டான்.


அதற்கு அவர் “அந்த இன்னொரு கும்பலில்.. இருக்கும் ஆட்களை.. அந்த ஆவி கொன்னுட்டு தான் இருக்கு! நாங்க தேடப் போகிற வழியில்.. காட்டு விலங்குகள் குதறி வைத்த உடல்களை பார்த்திருக்கேன். ஆனால் அவங்க விடாம தேடிட்டு தான் இருக்காங்க! ஆனால் இன்னும் நேருக்கு நேராக நாங்க பார்த்ததில்லை. இப்படி மலைக்காட்டில் தேடற வேலை ஓயா மாட்டேன்குது. அதனால் உன்னை வைத்து வேற வழியில் எங்கே புதைத்து வைத்திருக்காங்க.. என்றுக் கண்டுப்பிடிக்க போகிறேன்.” என்றான்.


சூர்யா “எப்படி?” என்றுக் கேட்டான்.


அதற்குள் சோமேஸ்வரன் வெட்டியதால் கீழே விழுந்திருந்தா.. காய்ந்த சருகுகளை சேகரித்தவாறு “உன்னை மாறனோட வம்ச வழியில் வந்த வாரிசு என்று கொண்டு போய் நிற்க வைக்க போகிறோம்.‌ எங்க கிட்ட மறைக்கிற சில மாறனோட வாரிசு‌ என்று நம்பி உன் கிட்ட சொல்லலாம். அதுக்கு பிறகு என்ன நடக்கிறது என்பதைப் பொருத்து தான் எங்களோட இந்த முயற்சிக்கு பலன் கிடைக்குமா என்றுத் தெரியும். அதனால் நாளைக்கு தயாராக இரு! முக்கியமா.. என் அப்பாவிடம் இருந்தும் அண்ணனிடம் இருந்தும் விலகியே இரு! என் அப்பா மாறனை பார்த்திருக்கிறார். என் அண்ணன் பார்த்தது இல்லை என்றாலும்.. உங்க கல்யாணத்திற்கு அவர் உடனே ஒத்துக்கிட்டது.. எனக்கு டவுட்டா இருக்கு!” என்றார்.


சூர்யா “ஆனா நான் அவங்க கூடப் பேசணும் என்று நினைக்கிறேன்.” என்றான்.


உடனே சோமேஸ்வரன் சற்று கோபத்துடன் “சொன்னதைச் செய்! அண்ணாவோட கையில் நீ மாட்டிக்கிட்டா.. அவர் உன்னை வேற மாதிரி யூஸ் செய்வார். அப்பறம் சேதாரம் உனக்கு தான்! அதுமட்டுமில்லாம எங்களோட பிளனே.. கெட்டுரும். இப்படித்தான் பலமுறை.. நானும் தேடுகிறேன் என்று சில ஆட்களைக் கூட்டிட்டு வந்து.. எங்க வேலையைக் கெடுப்பார். அதனால்.. அவரிடம் தனியா பேசாதே!” என்று எச்சரித்தார்.


சூர்யா “ஆமா! ஆமா! நீங்க செய்துட்டு இருக்கிறது தெய்வப்பணி அதில் அவர் வேற குறுக்கீடுகிறார். நீங்க யூஸ் என்றதும் தான் நினைவிற்கு வருது. இப்போ நான் ஒண்ணு கேட்கலாமா..” என்றுக் கேட்டான்.


சோமேஸ்வரன் அமைதியாக மழையினால் தேங்கியிருந்த நீரை அகற்றவும், சூர்யா “ஒய் மைதிலி? அதாவது உங்க பார்டனரா மைதிலியை ஏன் செலக்ட் செய்தீங்க?” என்றுக் கேட்டான்.


அதற்கு சோமேஸ்வரன் “அவன் என் பொண்ணு மாதிரி! அவ அப்பன் அவளை ஒண்டியாக்க பார்க்கிறான். அதனால.. நாங்க ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்தோம். எல்லாத்தையும் சொன்ன.. மைதிலி இதையும் சொல்லியிருப்பா தானே!” என்றார்.


அதைக் கேட்டு மெல்ல சிரித்த சூர்யா “சொன்னா! சொன்னா! ஆனா எனக்கு வேற அர்த்தத்தில் கேட்டுச்சு! அதுதான் கேட்டேன்.” என்றான்.


அதற்கு சோமேஸ்வரன் திரும்பி அவனைப் பார்த்து முறைத்தார். பின் “என்ன! என்னைச் சந்தேகப்படறீயா!” என்கவும், சூர்யா ஆம் என்பது போல் சிரித்தான்.


அப்பொழுது மைதிலி முகத்தைத் தொங்க போட்டவாறு வந்தாள். சூர்யா “அத்தை என்ன சொன்னாங்க மைதி?” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “அத்தையை நான் பார்க்கலை. என் அம்மாவை தான் பார்த்துட்டு வந்தேன்.” என்றாள்.


அதைக் கேட்டு அவளது தலையில் நறுக்கென்று கொட்டிய சூர்யா “உன் அம்மா தான் என் அத்தை..” என்று விளக்கினான். அவன் முறை வைத்து பேசுவதைப் பார்த்து மைதிலி திகைத்து நின்றாள்.


சோமேஸ்வரன் பொறுமையிழந்தவராய் இடைப்புகுந்து “அண்ணி என்ன சொன்னாங்க..” என்றுக் கேட்டார்.


மைதிலி “சூர்யாவை கூட்டிட்டு இங்கிருந்து போகச் சொல்றாங்க. கோவைக்கு போனாலும் சரி.. ஆனா சென்னைக்கு போனாலும் சரினு சொல்றாங்க..” என்றாள்.


அதைக் கேட்ட சூர்யா “நானும் இதைத்தான் சொன்னேன். இந்த டென்ஷன், பிராப்பளம்ஸ், பயம் என்று எதுவும் வேண்டாம், வா போய் விடலாம் என்றுச் சொன்னேன். ஆனா நீதான்.. எனக்கு என்னோட பரம்பரை நகை எனக்கு வேண்டும், அது என்னோட உரிமை அப்படினு சொல்லி.. உன்னோட பிளனுக்கு ஒத்துக்க சொல்லி மிரட்டினே! சரி பொண்டாட்டி கேட்கிறாளே.. உங்களோட பிளனுக்கு ஒத்துக்கிறேன் என்றுச் சொன்னேன். ஆனா இப்பொழுதும் என்னை நம்ப மாட்டேன்கிறே!” என்றுச் சிரித்தான்.


சோமேஸ்வரன் “இரண்டு நாளுக்கு முன்னாடி பார்த்த பொண்ணு கேட்டதும் கல்யாணம் செய்ததே டவுட் ஆகிற விசயம் தான்! சரி பொண்ணு அழகா இருக்கா பணக்காரியாகவும் தெரிகிற என்று வந்துட்டே! ஆனா இங்கே நடக்கிற விசயத்தைப் பார்த்து.. அரண்டு போகாமல் தில்லா நிற்கிற பார்த்தியா! அதுதான் டவுட்டா இருக்கு..” என்றார்.


அதற்கு சூர்யா “எல்லாம் காதல் செய்யும் மாயை!” என்றான்.


அதைக் கேட்டு ஏளனத்துடன் சிரித்த சோமேஸ்வரன் “இரண்டு நாளா பழகின பொண்ணு கிட்ட.. இத்தனை காதலா..” என்றுச் சிரித்தார்.


சூர்யா சிறிதும் கூட அசராமல் பதிலளித்தான்.


“கூடப் பிறந்து வளர்ந்த சொந்தங்களுக்கு நீங்க துரோகம் செய்யறீங்க.. தன்னைப் பெற்ற அப்பாவையே இவ நம்பலை. இதை விட ஒண்ணும் என் காதல் நடக்க கூடாதா விசயம் இல்லை. இதுவரை பார்த்திராத பெட்டிக்கு நீங்க இத்தனை அடிச்சுக்கிறதை விடவா.. இரண்டு நாள்ல பார்த்து கல்யாணம் பண்ணிக்கிற விசயம் பெருசா இருக்க போகுது.” என்றுச் சிரித்தான்.


அதற்கு சோமேஸ்வரன் “நீ நல்லா பேசறே!” என்றுவிட்டு மைதிலியிடம் “நமக்கு கிடைச்ச.. ஃபோட்டோ எடுத்த ரூமில்.. மாறனோட வேற ஃபோட்டோ இல்லை தானே! நல்லா தேடிப் பார்த்துட்டே தானே..” என்றுக் கேட்டார்.


அதற்கு மைதிலி “நல்லா தேடிப் பார்த்துட்டேன் சித்தப்பா! பழைய ஃபோட்டோஸில் மாறன் இருந்த ஃபோட்டோ எடுத்துட்டு வந்துட்டேன். மீதி நிறையா இருந்துச்சு.. அதில் நல்லா பார்த்துட்டேன். எதிலும் மாறன் இல்லை.கோவில் விஷேஷ ஃபோட்டோ தான் இருந்துச்சு..” என்றாள்.


சோமேஸ்வரன் “பின்னே ஏன்?” என்று யோசனையில் ஆழ்ந்தார்.


இருவரும் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து சிரித்த சூர்யா “உங்களுக்கு டவுட்டே வேண்டாம். அத்தைக்கும் மாமாவுக்கும்.. நான் மாறனின் சாயலில் இருப்பதைக் கண்டுப்பிடிச்சுட்டாங்க..” என்றான்.


அதற்கு இருவரும் சூர்யாவை திகைப்புடன் பார்க்கவும் சூர்யா “கோபக்கார மாமா.. நம்ம கல்யாணத்தை ஏத்துக்கிட்டதும்.. முதலில் கோபப்பட்ட அத்தை இப்போ இங்கிருந்து போகச் சொல்வதிலும்.. புரியலையா..” என்றான்.


மைதிலி திகைப்புடன் “சித்தப்பா! இப்போ என்ன செய்வது.. நாம் இவர் தான் மாறனோட வாரிசு என்றுச் சொல்வதற்குள்.. அப்பா வேற மாதிரி கதைக் கட்டி விடப் போகிறார். இவரைக் கூட்டிட்டு போயிட்டா நம்ம பிளன் என்ன ஆகும்?” என்றுத் திகைத்தாள்.


அதற்கு சூர்யா “அதை நான் சமாளிச்சுக்கிறேன்.” என்றான்.


சோமேஸ்வரன் “உன்னால் முடியுமா..” என்றுக் கேட்டார்.


அதற்கு சூர்யா “நம்பிக்கை தான்..” என்றுச் சிரித்தவன், தொடர்ந்து “மாமா, அத்தை பற்றி மட்டும் பேசறீங்களே.. மைதிலிக்கும் எனக்கும் கொடுத்த சாப்பாட்டில் விஷம் கலந்திருந்தது என்று அவள் சொன்னதைக் கவனிக்கலையா! அதைப் பற்றி ஒரு வார்த்தை கூடக் கேட்கலை. ஒருவேளை உங்களுக்கு அந்த விசயம் தெரியுமா? இல்லை எதிர்பார்த்ததா!” என்றுக் கேட்டான்.


மைதிலி கூட ‘ஏன் அந்த விசயத்தைப் பற்றிக் கேட்கவில்லை’ என்றுக் குழப்பத்துடன் சோமேஸ்வரனை பார்த்தாள்.


சோமேஸ்ரவன் ஒரு கணம் திணறிவிட்டு “நீ கல்யாணம் செய்துட்டு.. இன்னொரு ஆளைக் கூட்டிட்டு வந்தது அவங்களுக்கு பிடித்திருக்காது. அதுதான் அப்படி நடந்திருப்பாங்க! நல்லவேளை தப்பிச்சுட்டிங்க! முதலில் தனது மகனை வச்சே.. உன்னை வளைக்க பார்த்தவங்க தானே..” என்றுவிட்டு சொல்லக் கூடாததைக் கூறிவிட்ட வருத்தத்துடன் பார்த்தார். மைதிலி யாரையும் பார்க்க இயலாது. வேறு பக்கம் பார்த்தாள். சூர்யாவிற்கு.. மைதிலி கூறாமல் விட்ட விசயங்கள் இன்னும் இருக்கிறது என்றுப் புரிந்தது.


பின் சோமேஸ்வரன் “இனி கவனமா இருங்க! நீதான் மாறனோட வாரிசு என்று எல்லாரும் நம்பிட்டா.. பெட்டிகள் புதைத்து வைத்திருக்கிற விசயம் மட்டுமில்லை. எதிரிகளும் உன்னை நெருங்குவாங்க.. அதனால இன்னும் நீ கவனமா இருக்கணும். நாளைக்கு தயாராக இருங்க..” என்றுவிட்டு செல்ல தொடங்கினார்.


அப்பொழுது சூர்யா “அது நாளைக்கு பார்க்கலாம். ஆனால் இன்னைக்கு நான் அந்த மலைக்கு போகலாம் என்று இருக்கிறேன். நீங்களும் வறீங்களா..” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்டு திடுக்கிட்ட சோமேஸ்வரன் “இது விளையாட்டு இல்லை. சாதாரணமாக போனாலே உயிருக்கு உத்திரவாதம் இல்லை. இப்போ தான் கடுமையா மழை பெய்திருக்கு.. இந்த நேரத்தில் நைட் இருட்டில் போவது ரொம்ப ஆபத்தான விசயம்..” என்றார்.


அதற்கு சூர்யா “இந்த நேரத்தில் போவது டேன்ஞ்ர் என்று எல்லாருக்கும் தெரியும். அப்போ யாரும் போக மாட்டாங்க! அப்போ இந்த மாதிரி நேரத்தில்.. போய் பெட்டியை தேடுவது தான்.. சரியாக தருணம்! இது தெரியாமல் நீங்க திருட்டுத்தனமா தேடுவதற்கு நல்ல நேரம் பார்த்துட்டு இருக்கிறதால் தான் எழுபது வருஷமா தேடிட்டு இருக்கீங்க!” என்றுச் சிரித்தான்.


சூர்யா கூறியதைக் கேட்ட சோமேஸ்வரன் எதுவும் பேசாமல் அவன் முன் நேராக நின்றார். பின்னர் அவனை ஊடுருவும் பார்வையுடன் கேட்டார்.


“யார் நீ?”


சூர்யா மெல்லிய முறுவலுடன் “நான் சூர்யா! மைதிலியை பொருத்தவரை.. மாறனோட ஆவி! மைதிலியின் அப்பாவை பொருத்தவரை மாறனோட வாரிசு! உங்களைப் பொருத்தவரை மாறனை போல் இருப்பவன்..” என்றான்.


சோமேஸ்வரன் திகைப்புடன் “இந்த நாலு பேரில் நீ யார்?” என்றுக் கேட்டார்.


சூர்யா அழுத்தமான பார்வையுடன் “நாலும் நான்தான்..” என்றுச் சிரித்துவிட்டு.. அதிர்ச்சியுடன் நின்றிருந்த மைதிலியை அழைத்துக் கொண்டு சென்றான்.


ஆனால் சோமேஸ்வரன் திகைப்பு மாறாமல் அங்கேயே நின்றுவிட்டார்.


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 13


(பொருளடக்கம்)

மனம் மறைத்தவள்..

குணம் மறைத்தவள்..

சரணகதி அடைவதை காண்பீர்!


பிடித்த மைதிலியின் கரத்தை விடாமல் பற்றிக் கொண்டு.. அவர்களது அறைக்கு செல்ல படியேறிய பொழுது.. அவளது அத்தை சாந்தி அழைத்தார். இருவரும் திரும்பிப் பார்த்த பொழுது.. அவரது பார்வை.. அவர்களின் இணைந்த கரத்தின் மேல் இருப்பதைக் கண்டனர்.


சாந்தி மைதிலியிடம் “அஷ்டமிக்கு நாளைக்கு மதியம் இருந்து ஆரம்பிக்குது. ஆனா அதுக்கு முன்னாடி சில பூஜைகள் செய்யணும் வா மைதிலி..” என்றார்.


மைதிலி பதிலளிக்கும் முன் முந்திக் கொண்ட சூர்யா “எங்க குடும்பம் நல்லா தான் இருக்கு.. யாராவது டிஸ்டர்ப் செய்வது தான் பிரச்சினையாக இருக்கு! அந்த பிரச்சினையைத் தீர்க்க நாங்க பூஜை செய்யலானு இருக்கோம்.” என்று அவரிடம் கூறியவன், “வா மைதி..” என்று அழைத்து சென்றான்.


உடனே வேகமாக வந்த சாந்தி சூர்யாவின் முன் சென்று நின்று.. “அவ எங்க குடும்பத்தோட.. இந்த தலைமுறையின் ஒரே பெண் வாரிசு! அதுவும் எங்க குலதெய்வ சாமி சிலை.. எந்த வித பூஜையும் இல்லாமல் பல வருஷங்களா பெட்டிக்குள்ள அடைஞ்சு கிடக்கு. அதனால் அது உக்கிரமா.. இருக்கு! எங்க குல தெய்வத்தோட சக்தி.. மைதிலி மேலே தான் இறங்கியிருக்கு! இப்போதைக்கு அவ சாமி மாதிரி.. அதனால் அவளைத் தொடாதே! மீறி தொட்டா நீ பஸ்பம் ஆகிருவே..” என்று எச்சரித்தவர், மைதிலியிடம் திரும்பி “மைதிலி! ஜோசியர் சொன்னதை தட்டாதே! அவர் சொன்னது எல்லாம் நடந்திருக்கு.. பிரம்மச்சாரியின் உயிர் பலியாகும் என்றுச் சொன்னார். உன் சித்தப்பா.. இறந்துட்டார். இப்போ அந்த தெய்வம் கன்னி பூஜை கேட்குது. அதை நிறைவேற்றிரு மைதிலி..” என்றார்.


அவர் கூறியதைக் கேட்டு குபீர் என்றுப் பொங்கிய சிரிப்பை அடக்கிய சூர்யா “அப்படியா! அப்போ இந்த தெய்வத்துக்கு கிட்ட நான் வரம் வாங்கணும். எங்களை டிஸ்டர்ப் செய்யாதீங்க..” என்றுவிட்டு அவரைத் தாண்டிச் சென்றான்.


சாந்திக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. அவளது மருமகள் வந்தாலாவது.. கல்யாணமான பெண்களுக்குள்ளான விசயம் என்று.. ஆண் பெண் உறவைப் பற்றி.. மைதிலியிடம் எதாவது பொய் சொல்லி எச்சரிக்கை செய்யலாம் என்றால்.. அவளும் இன்னும் வரவில்லை. எனவே கடைசி முறையாக “மைதிலி! தப்பு செய்யாதே! நம்ம குடும்பமே உன்னை நம்பித் தான் இருக்கு..” என்றார்.


திரும்பிப் பார்த்த மைதிலியை நிற்க கூட விடாது.. சூர்யா அழைத்துச் சென்றான்.


சூர்யாவோடு அறைக்குள் நுழைந்த மைதிலி.. அடுத்த கணமே “அம்மா! என் கூட பேசணும்னு சொன்னாங்க.. என்னனென்னு கேட்டுட்டு வரேன்.” என்றுத் திரும்ப எதானித்தாள். ஆனால் அவளைத் தடுத்த சூர்யா கையோடு உள்ளே இழுத்துக் கொண்டு வரவும், அவனது பிடியில் இருந்து தனது கையை விடுவித்துக் கொள்ள போராடினாள்.


பால்கனி வரை.. இழுத்து வந்தவன், தனது பிடியைத் தளர்த்தவும், தனது கரத்தை விடுவித்து கொள்ள போராடிக் கொண்டிருந்தவள், அவன் திடுமென பிடியை விடவும், தடுமாறி நின்றாள். தடுமாறியவளைப் பிடிக்க போனவன், அவள் இன்னும் ஒதுங்குவதைக் கண்டு அமைதியாக நின்றான்.


மைதிலி “நீ ரொம்ப அராஜகம் செய்யறே! நான் வேண்டுமென்னா.. எனக்கு கிடைக்கிற பங்கில் இருந்து.. இன்னும் தரேன். ப்ளீஸ் கணவன் மனைவினு பேசிட்டு இருக்காதே! ஒரு காரியத்திற்காக இங்கே இருக்கே! அது முடிந்ததும் நீ கிளம்பிரணும். இது என் கழுத்தில் இருக்கிறதால் தான்.. இப்படிப் பேசறேனு சொன்னா.. அதைக் கழற்றவும் ரெடி! இப்போதைக்கு வெளியில் போகும் போது.. போட்டுட்டு நானும் உன் மனைவி மாதிரி நடிக்கிறேன். நம்ம காரியம் முடிந்ததும்.. மொத்தமாக கழற்றிக் கொடுத்தறேன். மற்றபடி.. என் பக்கத்தில் வராதே! இது என்னோட வார்னிங்! உன் கழுத்தில் கத்தியை வைக்க தெரிந்த எனக்கு.. என் கழுத்திலும் கத்தியை வைக்க தெரியும்.” என்றுப் படபடவென பேசி முடித்தாள்.


அவள் பேசி முடிக்கும் வரை.. அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த சூர்யா தாழ்ந்த குரலில் “என்னாச்சு மைதிலி! என்கிட்ட சொல்லாம விட்ட விசயம் என்ன மைதி! நீ இப்படி கல்யாணம்.. ஆண் என்றாலே வெறுக்கிற மாதிரி என்ன நடந்துச்சு! உன் சித்தப்பா சொன்னதை வச்சு.. என்னால் கொஞ்சம் பயங்கரமா கெஸ் பண்ண முடியுது. ஆனா நானே சொல்ல வேண்டாம் என்றுப் பார்க்கிறேன். நீயே சொல்லு.. என்னாச்சு?” என்றுக் கேட்டான்.


ஆனால் மைதிலி அமைதியாக வெறித்துப் பார்க்கவும், சூர்யா “சரி நான் செய்த தப்பிற்கு மன்னிப்பு கேட்டு ஆரம்பிக்கிறேன்.” என்றவன், சற்று கூனி குறுகியவாறு “நான் உன்கிட்ட முரட்டுத்தனமா நடந்திருக்க கூடாது. என்ன தான் நான் உன் கணவன் என்றாலும்.. உன் பயமுறுத்த நினைச்சேன் என்றாலும்.. ஒரு பெண்ணிடம் இப்படி முரட்டுத்தனமா நடந்திருக்க கூடாது. ரியலி ஸாரி! ஆனால் நிஜமா சொல்றேன். என்னோட முரட்டுத்தனத்தில்.. புதிதாக மனைவியான உன் மேல் உரிமையும்.. மோகமும் தான் இருந்துச்சு! அதை உன்னை பயமுறுத்த யுஸ் செய்துட்டேன். அப்படிச் செய்திருக்க கூடாது. ஆனா நான் விரும்பி தான் உன் கிஸ் செய்தேன். ஆனா என் மோகம் உன்னைப் பயமுறுத்தியிருந்த ஸாரி கேட்டுக்கிறேன்.” என்றான்.


சூர்யாவிடம் பேசிவிட்டு மூச்சு வாங்க நின்றிருந்த.. மைதிலி, அவன் பேச பேச.. படபடப்பு குறைந்தவளாய் அமைதியாக நின்றாள்.


அதைக் கவனித்த சூர்யா “என்ன ஒகேவா! இப்போ நான் இன்னொன்னு சொல்லட்டுமா! அப்போ நான்.. உன்னை ஆர்வமா அணுகியதை.. ஆவி புகுந்திருச்சு என்கிற மாதிரி காட்டினேன். நீயும் அதுக்கு ரொம்ப பயந்துட்டே! இப்போ அப்படியில்லைனு தெரிஞ்சுருச்சு தானே! கிளியர் தானே!” என்றுத் தலையைச் சரித்துக் கேட்டான்.


மைதிலி வேறு எங்கோ பார்த்தாள்.


சூர்யா தொடர்ந்து “இப்போ சொல்லு! என்னாச்சு! உன் அத்தை.. அவங்க பையனை கல்யாணம் பண்ணிக்க சொல்லிக் கேட்டாங்களா..” என்றுக் கேட்டான்.


வேறு பக்கம் முகத்தைத் திருப்பி இருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


சூர்யா அதிர்ச்சியுடன் “மைதி!” என்கவும், கன்னத்தில் வழிந்த நீரை துடைத்துவிட்டு அவன் புறம் திரும்பியவள், “நீ ரொம்ப டிசன்ட்டா சொல்லிட்டே! ஆனா என்ன நடந்தது தெரியுமா! எனக்கு பதினெழு வயசு கூட முடியலை. அத்தை அவங்களோட பையனுக்கு என்னை கல்யாணம் செய்து வைக்க என் அப்பா கிட்ட பேசினாங்க! என் அப்பாவும் ஒகே சொல்லிட்டார். நானும் என் அம்மாவும் தான்.. அழுது அடம் பிடித்து இதை நிறுத்தினோம். என் அப்பா வேற வழியில்லாம.. அத்தை கிட்ட வேண்டான்னு சொல்லிட்டார். அந்த ஆத்திரத்தில்.. அத்தை அவங்க பையன் கிட்ட.. எப்படியாவது என்னை கல்யாணம் செய்துக்க சம்மதிக்க வச்சுருனு.. சொல்லியிருக்காங்க! அதை அந்த முட்டாள் வேற மாதிரி புரிஞ்சுட்டு.. நான் இந்த ரூமிற்குள் வருவதற்கு முன்பே வந்து ஒளிஞ்சுட்டான். நான் வந்து கதவை சாத்தியதும்.. என்கிட்ட…” என்றவள்.. உதட்டை கடித்து அழுகையை நிறுத்திவிட்டு.. தொடர்ந்து கூறினாள்.


“நான் ரொம்ப போராடினேன். என்னை வெறித்தனமா படுக்கையில் வீசியவன், என் மேலே விழப் போனான். ஆனா திடீர்னு பால்கனியை பார்த்து கத்திட்டு.. அங்கிருந்து ஓடிப் போயிட்டான். எனக்கு என்னனென்னு தெரியலை. அவன் என்கிட்ட தப்பா நடக்க இருந்ததால் வந்த பயம்.. அவன் எதையோ பார்த்து கத்தியதால் வந்த பயம்.. என்று அன்னைக்கு நான் செத்துட்டேன். கண்களை கூட திறக்காம.. நிமிர்ந்து பார்க்காம.. கொஞ்சம் கூட அசையாம படுக்கையில் முகத்தை புதைச்சுட்டு.. அன்னைக்கு நைட் புல்லா இருந்தேன். காலையில் வெளிச்சம் வந்ததும்.. வெளியே முனுசாமியின் குரல் கேட்டதும் தான் படுக்கையை விட்டு அசைந்தான். யார்கிட்டயும் சொல்லுலை. சித்தப்பா கிட்ட மட்டும் சொன்னேன். அவர் அவனை நல்லா அடிச்சார். இப்போ அந்த சம்பவத்தை நினைச்சாலும்.. என் உடல் புல்லா நடுங்கும். அந்த ரவீந்தர் அதுக்கு பின்னாடி நான் இருக்கிற இடத்தில் இருக்க மாட்டான். அப்படியிருந்தாலும் என் முகத்தைக் கூடப் பார்த்து பேச மாட்டான். இதைத் தான் என் சித்தப்பா சொன்னார். என் நிலைமை இப்போ புரிந்ததா..” என்றாள்.


மைதிலி பேசியதைக் கேட்ட சூர்யாவிற்கு கோபம் தலைக்கேறியது. இப்பொழுதே ரவீந்தரை… அடித்து துவம்சம் செய்ய வேண்டும் என்றுத் துடித்தான். மைதிலி தொடர்ந்து பேசவும், தனது ஆத்திரத்தை அடக்கிக் கொண்டு.. கவனித்தான்.


பின் மைதிலி தொடர்ந்து “அதனால தான்! அந்த பெட்டி அவங்களுக்கு எல்லாம் கிடைக்க கூடாதுனு இருக்கேன். அதே மாதிரி.. என்னைப் பற்றிக் கவலைப்படாம.. விட்டேறியா இருக்கிற என் அப்பாவுக்கும் கிடைக்க கூடாது. அவங்களுக்கு எல்லாம் கிடைத்தா.. அதை வைத்து அவங்க.. இன்னொரு மாளிகை வாங்கி ஆடம்பரமாக வாழ தான் நினைப்பாங்க! ஆனா சுற்றிலும் பாரு! இது என் மூதையர் வாழ்ந்த இடம்.. இது எப்படியிருக்கு! அவங்க நல்லவங்களோ கெட்டவங்களோ.. ஆனா அவங்க வாழ்ந்த இடத்தையும் அவங்க வாரிசான நான் இப்படியே விட முடியாது. என் அப்பா, அத்தை மாதிரி என்னால் இருக்க முடியாது. இந்த இடத்தைச் சரி செய்ய விரும்பறேன். சம்பாதிக்க சொன்னே தானே! நான் சம்பாதித்தால்.. எவ்வளவு கிடைத்து விடப் போகுது? அது இந்த இடத்தைச் சரிச் செய்ய அது போதுமா! இந்த இடத்தை சரிச் செய்த பின்.. கண்டிப்பா நான் வேலைக்கு போவேன். என் குடும்பத்தைக் காப்பாத்தணும் தானே! இந்த குடும்பத்தில் பிறந்ததாலே நான் நிறையா பாவத்தை சுமந்துட்டு இருக்கேன். அதுக்கு பிராய்ச்சித்தம் செய்யணும். அந்த பெட்டி கிடைத்தா.. அதுல இருக்கிற எங்களுக்கு சொந்தமான நகைகளைக் கொண்டு.. இந்த மாளிகையை சரிச் செய்யணும். விற்ற நிலப் புலன்களை வாங்க ட்ரை செய்யணும். அது போக.. மீதம் இருக்கிற சனங்களோட நகையை வச்சு.. இந்த ஊர் மக்களுக்கு எதாவது செய்யணும். இப்போ புரியுதா அந்த பெட்டியை தேடுவதில் நான் ஏன் இப்படி மும்மரமாக இருக்கேன் என்று! அந்த பெட்டிகளுக்காக நான் என்ன வேண்டுமென்றாலும் செய்வேன். உன்னை எங்கேயும் போக விடாம கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்ததும்.. அப்படித்தான்! அதுனால.. இந்த கல்யாண விசயத்தில் சீரியஸா இருக்காதே! அதே மாதிரி.. அந்த பெட்டி எங்களுக்கு கிடைக்க ஹெல்ப் செய்!” என்றாள்.


தற்பொழுது மைதிலி பேசியதைக் கேட்ட சூர்யாவின் முகத்தில் மெல்ல மென்முறுவல் மலர்ந்தது.


பின் “நீயும்.. உன் சித்தப்பாவும் மாறி.. மாறி.. ரெண்டு நாள்ல பார்த்ததும் காதல் கல்யாணம்.. அதுவும்.. இப்படியொரு சிட்டிவேஷனில் இருக்கும் பெண் மேலே எப்படி வந்ததுனு.. கேட்டு கேட்டு.. அட அதுதானே! அப்படி என்ன சொக்கு பொடி போட்டேனு நானே ஒரு நொடி என்னைப் பார்த்துக் கேட்டுருக்கேன். ஆனா என்னோட ஃபீலிங்ஸிம், வேவ்லென்த்தும் சரியாக தான் இருந்திருக்கு.. வாவ் என் வைஃப்க்கு எவ்வளவு கைன்ட் அன்ட் கோல்ர்ட் ஹார்ட் இருக்கு! ஐயம் ஃபெரளவுட் ஆஃப் யு மைதி! ஐ லல் யு..” என்றான்.


பின் சூர்யா “முதலில் நான் நியாயம் அநியாயம் பற்றிப் பேசின போது.. ஏன் அப்படி விட்டேறியா பேசினே!” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி சற்று திணறலுடன் “இப்போ உளறினாயே! ஐ லவ் யு, ப்ரௌவுட் ஆப் யுனு அந்த மாதிரி உளற கூடாதுனு தான்! என் மேல் எந்த நல்ல எண்ணமும் உனக்கு வர வேண்டாம். இப்போ கிளியரா சொல்லிட்டேன் தானே! இனி பொண்டாட்டினு என் பக்கம் வந்திராதே!” என்று கையை எடுத்துக் கும்பிட்டாள்.


முறுவலுடன் சூர்யா “இந்த ரிஷனுக்காக எல்லாம் என்னால் உன்னை விட முடியாது. நான் கேட்டதிற்கு பதில் சொல்லு..” என்றவன்,


“இப்போ நான் உன்கிட்ட நெருங்கினா.. அன்னைக்கு அந்த ரோக் மோசமா நடந்தது உனக்கு நினைவிற்கு வருமா..” என்றுக் கேட்டான்.


“ச்சே! ச்சே! நீ என்கிட்ட ரோக் மாதிரி நடந்தது தான் ஞாபகத்திற்கு வரும்.” என்று முறைத்தாள்.


“ஓ! என்னைப் பிடிக்கலையா?” என்றுக் கேட்டான்.


“ஆமா!”


“ஏன்?”


“அதுதான் சொன்னேனே..! நீ என்னை டாமினேட் செய்யறே!”


“ஆமா! டாமினேட் செய்யறேன். அது உனக்கு பிடிக்கலையா! வெறுப்பாக இருக்கா! இல்லை இதுவரை இல்லாமல் திடீர்னு யாருடா நீ.. என் லைஃப்பில் வருவது என்பது மாதிரி இருக்கா?” என்றுக் கேட்டவன், அவளது பதிலுக்காக காத்திருந்தான்.


சூர்யா கேட்டதும்.. அவன் கூறியதை ஆராய்ந்தவள், பின் யோசித்து “நீ யாருடா என் லைஃப்பிற்குள் வருவதற்கு என்கிற மாதிரி எரிச்சலா இருக்கு..” என்று முறைத்தாள்.


அதைக் கேட்டு சூர்யா சிரித்தான்.


சூர்யா சிரிப்பதைப் பார்த்து.. மைதிலி குழப்பமுற்றாள்.


சூர்யா தலையை ஆட்டியவாறு சிரித்தவன், “இவ்வளவு சீக்கிரமா மாட்டிக்கிட்டியே!” என்றான். அவன் கூறுவது புரியாது.. பார்த்துக் கொண்டிருந்த மைதிலி அடுத்த கணம் அவனது கைவளைக்குள் இருந்தாள். உடனே சுதாரித்து அவனது பிடியில் இருந்து விடுப்பட்ட மைதிலி அருகில் மேசையில் இருந்த பெரிய ஃபோட்டோ ப்ரெம் கொண்டு அடிக்க வீசினாள். ஆனால் அதற்குள் குனிந்த சூர்யா.. அவளுக்கு சென்று.. அவளைப் பின்னால் இருந்து அசைய விடாமல் கட்டியணைத்தான். இம்முறை அவளது திமிறல்.. அவனிடம் எடுப்படவில்லை.


மைதிலியை இறுக கட்டியவாறு அவளது கையில் இருந்த ஃபோட்டோ ப்ரெமை அகற்றியவன், இரு கரங்களால் அவளது கரங்களைப் பற்றி. அவளது கரங்களோடு.. அவளை இறுக அணைத்தான். மைதிலிக்கு பாதுகாப்பாய் எங்கோ அடங்குவது போன்று இருந்தது.


அவளது தோளில் தனது முகவாயை வைத்த சூர்யா “நான் உன் லைஃப்பிலும் புகுந்ததை ஏற்றுக் கொள்ள முடியலைனு சொன்னியே அதுக்கு அர்த்தம் என்னனென்னு தெரியுமா! நான் உன் மனதிற்குள் புகுந்ததையும் உணரலையா மைதி! உன்னோட பயம்.. மாறி.. அது தடுமாற்றமா ஆனது கூடத் தெரியலையா! சும்மா நீ பார்த்ததிற்கு… பின்னாடியே வந்து கல்யாணம் வரை வந்த நான் ஒன்றும் முட்டாள் இல்லை. உன் கிட்ட அப்பவே நான் காதலை உணர்ந்தேன் மைதிலி.. எப்பவும் உணர்கிறேன். இப்போ கூட..” என்று ஆளை மயக்கும் கிசுகிசுப்பான குரலில் கூறினான்.


அதைக் கேட்ட மைதிலி திணறியவளாய் “எ.. எ.. என்..ன சொல்றே?” என்றுக் கேட்டாள்.


அவளது கழுத்து வளைவில் அழுத்தமாக முகத்தைப் புதைத்தவனுக்கு.. அவளது கேள்வி மறந்துப் போயிற்று! கேள்விக் கேட்டவளுக்கும் அது மறந்துப் போயிருந்தது. அவனது நெருக்கமும், கிறக்கமும் அவளை எங்கோ அழைத்துச் சென்றது. அவளது உடலில் இளக்கத்தையும், சிலிர்ப்பையும் உணர்ந்த சூர்யா.. அவளைப் பின்னால் இருந்து அணைத்தவாறு.. மெதுவாக பின்னால் எட்டுக்களை வைத்து நடந்தான்.


அவளும் அவனுக்கு கட்டுப்பட்டு.. அவனுடன் நடந்தாள். மெதுவாக பின்னெட்டுக்கள் வைத்து நடந்து வந்தவன், படுக்கையை அடைந்ததும்.. அவளுடன் அமர்ந்தான்.


அவனது கரங்கள் அவளைச் சுற்றி வளைத்திருந்ததால்.. சூர்யா அமர்ந்ததும்.. மைதிலி அவனின் மடியில் அமர்ந்தாள். அந்நிலையில்.. அவளது பின்னங்கழுத்தில் தனது முகத்தை சூர்யா அழுத்தவும், மைதிலி துவண்டாள். துவண்டவளுடன் அப்படியே படுக்கையில் சாய்ந்தான். பின் சட்டென்று அவளைப் புரட்டிப் போட்டவன், அவளின் மேல் படர்ந்திருந்தான்.


தனது முகத்திற்கு நேராக இருந்த சூர்யாவின் முகத்தைப் பார்த்தவாறு மைதிலி பேச்சின்றி கிடந்தாள். அவளுக்கு இருபக்கமும் கரங்களை ஊன்றி படுத்திருந்த சூர்யா சிறு முறுவலுடன் “எனக்கு ஒன்றும் ஆகாது மைதி! என்னை ஒதுக்காதே! அதைத் தான் என்னால் ஏத்துக்க முடியலை.” என்றான்.


அதைக் கேட்டவளின் கை தானே உயர்ந்து.. அவனது கன்னத்தைப் பற்றியது. பின் “என் குடும்பத்திற்கு பெரிய சாபம் இருக்கு சூர்யா! நான் மதியம் சொன்னது எல்லாம் உண்மைத்தான்! என் குடும்பத்தை சேர்ந்தவங்க.. பெண்களுக்கு நிறையா கொடுமைகளை செய்திருக்காங்க! அதில் இருந்து எங்க வீட்டில் யாருக்கும் சரியான மணவாழ்க்கை அமையலை. அம்மா மாதிரி ஒரு மனைவி கிடைத்தும்.. அப்பாக்கு அம்மா மேலே அன்பே இல்லை. கணேஷ் மாமாவுக்கு.. இன்னொரு பெண் கூடத் தொடர்பு உண்டு. பெரியப்பாவோட மனைவி.. மர்மா இறந்துட்டாங்க, சித்தப்பாவுக்கு கல்யாணமே ஆகலை. அண்ணன் மனைவியும், ரவீந்தர் வைஃப்பும் இங்கே இருக்க மாட்டேன்னு விட்டுட்டு போயிட்டாங்க! அதே மாதிரி தான்.. எனக்கு நடக்கும் என்றுப் பயந்தேன் சூர்யா! போதாக்குறைக்கு ஆண் நெருக்கம் என்றாலே ரவீந்தர் ஏற்படுத்திய பயம் வேற.. சேர்ந்திருச்சு.. அதனால..கல்யாணம் என்று ஒன்று வேண்டாவே வேண்டானு இருந்தேன். ஆனா நீ சொன்னது நிஜம்.. என் மனசுல நீ சின்ன சலனத்தை ஏற்படுத்திட்டே.. அன்னைக்கு நீ எந்த விதத்திலும் என்னைப் பாதிக்கலைனு பொய் சொன்னேன். மாறன் மாதிரி நீ இருந்ததால் உன் மேல் அட்டென்ஷன் திரும்பியிருக்கு.. எனக்கு நானே பல முறை சொல்லிட்டேன். ஆனா அதை எல்லாம் மீறி.. உன்னைப் பார்க்கிற போதெல்லாம்.. மனசு தடுமாறும். அதுனால என்ன தான் நீ மாறன் மாதிரி இருந்தாலும்.. நீ வேண்டாம் என்றுப் போனேன். ஆனா பின்னாடியே வந்து என் வாயாலேயே கல்யாணம் வரை கேட்க வச்சுட்டே! ஆனா என் மனதை மறைச்சுட்டு.. எங்க பிளன் சக்கஸஸ் ஆகிற வரைக்கும்.. நீ இருந்தா போதும்.. என்று நினைச்சேன். உன்னைப் பிடிக்கலை என்பது போல் காட்டினேன். ஆனா நீ என்னை விட என்னைப் பற்றி நல்லா தெரிந்து வச்சுருக்கே! என்னோட பொய்யும் உண்மையும் உனக்கு நல்லா தெரிந்திருக்கு..” என்று மனதில் இருந்த முழுவதையும் திறந்து பேசியவளுக்கு கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.


சூர்யா மெல்ல குனிந்து.. அவளது நெற்றியில் அழுத்த முத்தமிட்டான். அவனது கன்னத்தைப் பற்றியிருந்த அவளது கரங்கள்.. அவனது கழுத்தை வளைத்து தன்னுடன் இறுக்கவும், சூர்யாவின் உதடுகள்.. நெற்றியில் இருந்து இறங்கி.. அவளது நாசியின் மீது பயணம் செய்து.. அவளது அதரங்களை அடைந்தது. அவளது இதழில் கவிதை புனைந்தான். பின் அவளது அதரங்களை விட்டு.. அவனது உதடுகள் அவளது கழுத்து சரிவில் இறங்கின.


கண்களை மூடி லயித்திருந்த.. மைதிலிக்கு ஏதோ ஒரு உணர்வு உந்தவும், இமைகளைத் திறந்துப் பார்த்தாள். திரைசீலைகள் கொண்டு மூடியிருந்த பால்கனியில் யாரோ நின்றுக் கொண்டிருப்பது தெரிந்தது. உடனே வீல் என்று அலறினாள். திடுக்கிட்டு நிமிர்ந்தவனை.. “சூர்யா! நான் சொன்னேனில்ல.. அது வந்துருச்சு! இதுக்கு தான் என் அன்பை சொல்லாம இருந்தேன்.” என்று அலறியவாறு அவனை இறுக்கமாக கட்டிக் கொண்டாள்.


அவள் கூறியதைக் கேட்டு “எங்கே?” என்றுத் திரும்ப எதானித்தவனைக் கூட விடாமல் இறுக்கமாக பற்றிக் கொண்டாள். சிரமத்துடன் தன்னிடம் இருந்து அவளைப் பிரித்தான். ஆனால் மீண்டும் அவனின் மார்பை அவள் நாட முயல்வதைக் கண்டு.. “ஸ்டே ஸ்ட்ரான்ங்க் மைதி! பேஸ் த பியர்!” என்று உலுக்கி அவளை நிதானப்படுத்தியவன், “நீ இங்கேயே இரு.. நான் யார் என்றுப் பார்க்கிறேன்.” என்று பால்கனியை நோக்கி விரைந்தான்.


அங்கிருந்த திரைசீலையை விளக்கிவிட்டு பால்கனியில் சென்றவன், தனது பாக்கெட்டில் இருந்த டார்ச் லைட்டை எடுத்து.. அடித்துப் பார்த்தான். கீழே யாரும் இருக்கவில்லை. நாய்கள் படுத்துக் கொண்டிருந்தது. மதிற்சுவற்றோரம் அடித்துப் பார்த்தான். அங்கேயும் யாரும் இருக்கவில்லை.


பால்கனியில் ஏறி வந்தவன், அவன் மைதிலியை சமாதானப்படுத்திக் கொண்டு.. வருவதற்குள் இறங்கி இருக்கலாம். ஆனால் ஆள் வந்த சுவடே அறியாமல் காணாமல் போனது எப்படி என்று யோசனையில் ஆழ்ந்தான்.


அப்பொழுது.. அவர்களது அறையின் கதவு பலமாக தட்டப்பட்டது.


சூர்யா சென்றுத் தேடுவதையே தடுக்க இயலாது.. அச்சத்துடன் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி.. கதவு பலமாக தட்டப்படவும், மேலும் அச்சத்துடன் விரைத்து அமர்ந்தாள்.


கதவு தட்டப்படும் சத்தத்தில் திரும்பிப் பார்த்த சூர்யா.. மைதிலி கதவை திறக்காமல் மேலும் அச்சத்துடன் இருப்பதைக் கண்டு.. அவனே சென்று கதவைத் திறந்தான். அங்கு முனுசாமி தான் பதட்டத்துடன் நின்றுக் கொண்டிருந்தார்.


சூர்யாவை பார்த்ததும்.. “சின்னம்மா! மாடிப்படியில் இருந்து கீழே விழுந்துட்டாங்க! பலமா அடிப்பட்டிருக்குங்க..” என்றதும்.. சூர்யா விரைந்தான். முனுசாமி கூறியதைக் கேட்டு.. மைதிலியும் “அம்மா!” என்று விரைந்தாள்.


அங்கு முகத்தை சுளித்துக் கொண்டு காலைப் பிடித்தவாறு கயல்விழி படுத்திருக்க.. கணேஷனும், சாந்தியும் நின்றுக் கொண்டு.. “என்னவாகிற்று..” என்று விசாரித்துக் கொண்டிருந்தார்கள்.


வெளியே சென்ற மகேஸ்வரன் இன்னும் வீடு திரும்பியிருக்கவில்லை.


விரைந்து சென்ற சூர்யா.. மெதுவாக அவரது காலை நேராக வைத்து.. எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா என்று ஆராய்ந்தான்.


மைதிலி தனது அன்னையின் தலையை எடுத்து தனது மடியில் வைத்துக் கொண்டு.. அமர்ந்துக் கொண்டாள்.


மைதிலி “என்னம்மா! பார்த்து வரக் கூடாதா!” என்று அழுகையினிடையே கேட்டாள்.


அதற்கு கயல்விழி “நான் கவனமாக தான் வந்தேன் மைதிம்மா! ஆனா யாரோ என்னைப் பின்னால் இருந்து தள்ளிய மாதிரி இருந்துச்சு..” என்றார்.


உடனே சாந்தி “நான்தான் அப்பவே சொன்னனே.. நம்ம குடும்பம் நல்லாயிருக்கணும் என்றால்.. நீ பரிகாரம் செய்யணும் என்று இப்போ பாரு…” என்று இதுதான் தருணம் என்றுத் தனது கருத்தை எடுத்து வைத்தார்.


ஆனால் மைதிலி தன் அன்னையிடம் சிறு அச்சத்துடன் “யாரோ உறுமின மாதிரி இருந்துச்சா அம்மா!” என்றுக் கேட்டாள்.


கயல்விழி கண்கள் பெரிதாக விரிய “ஆமா மைதி! என்றார்.


“பிடித்து தள்ளிய உருவம் கருப்பா இருந்துச்சா அம்மா!” என்றுக் கேட்டாள்.


உடனே கயல்விழி “ஆமா மைதி..” என்று அச்சத்துடன் கூறினார்.


உடனே மைதிலி சூர்யாவிடம் “நான்தான் சொன்னேனே மாறன் ஆவி இருக்கிறது நிஜம்! இப்போ தான் அங்கே பார்த்தோம். அடுத்த நொடி.. அங்கிருந்து இங்கே வந்து அம்மாவை தள்ளி விட்டுட்டு போயிருச்சு..” என்று அழ ஆரம்பித்தாள்.











 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 14


(பொருளடக்கம்)

மனங்கள் கலந்தது ஆச்சரிய குறியாக!

தலைவன் இன்னும் கேள்விக் குறியாக


சூர்யா மைதிலியிடம் “போதும் நிறுத்து மைதிலி..” என்றுச் சற்று ஓங்கி குரல் கொடுத்தான். அந்த குரலுக்கு கட்டுப்பட்டவளாய்.. மைதிலி தனது அழுகையை நிறுத்திவிட்டு அவனைப் பார்த்தாள்.


பின் கயல்விழியை பார்த்தவன், “பிரெக்சர் எல்லாம் இல்லை அத்தை! சின்ன சுளுக்கு தான்.. நீங்க லக்கி! வேற எங்காவது அடிப்பட்டிருக்கா?” என்றுக் கேட்டான்.


கயல்விழி “கை வலிக்குது..” என்றார்.


சூர்யா “விழும் போது.. கையில் அடிப்பட்டிருக்கும்.. இரண்டு நாளுக்கு கைக்கும் காலுக்கும் வேலை கொடுக்காம இருங்க சரி ஆகிரும்.” என்றவன், மைதிலியிடம் “அத்தையை எழுப்பு மைதி! நானும் ஹெல்ப் செய்யறேன்.” என்றான்.


மைதிலி “சூர்யா! உன்னோட ரியாக்ஷன் இவ்வளவுத்தானா!” என்றாள்.


அதற்கு சூர்யா “முதலில் உன் அம்மாக்கு பலமா அடிப்படலைனு சந்தோஷப்படு! அப்பறம் நாம் அதைப் பற்றிப் பேசலாம்.” என்றுச் சிறுக் கண்டிப்புடன் கூறவும், மைதிலி அமைதியாக கயல்விழி எழ உதவி செய்தாள்.


கயல்விழிக்கு.. காலில் வெந்நீர் ஒத்துடம் கொடுத்துவிட்டு.. அவரை ஓய்வு எடுக்க.. சொல்லிவிட்டு வெளியே வந்தவளை.. சாந்தி எதிர்கொண்டார்.


“மைதி! கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்ன சொன்னே? மாறன் ஆவியை பார்த்தியா?” என்று அதிர்ச்சியுடன் கேட்டார்.


அதற்கு மைதிலியின் அதிர்ச்சியான முகமே.. காட்டிக் கொடுக்கவும், சாந்தி மெல்ல “நீயும் உன் ஹஸ்பென்ட்டும் தனியா.. இருக்கும் போதா..” என்றுக் கேட்டார்.


சாந்தி கூற வருவது புரிய.. மைதிலி தலைகுனிந்தாள். அதைப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த சாந்தி கோபத்துடன் “மைதி! நான் சொல்ற பேச்சை கேட்கததால்.. நடந்ததைப் பார்த்தியா! இன்னும் எல்லாரையும் கொன்னுட்டு.. இந்த வீட்டில் நீ மட்டும் வாழலானு பிளன் போட்டுருக்கியா! எங்க எல்லாரையும் உன் தலையில் சுமக்கவா சொன்னேன். நான் சொல்ற பூஜையை செய்ய தானே சொன்னேன்.” என்றுக் கொதித்தார்.


பின் நயமாக “இன்னேரம் நீ என் மருமகளா வந்திருக்க வேண்டியவ.. சம்மதம் சொன்ன என் அண்ணன் திடீர்னு வேண்டானு சொன்னார். கட்டினா உன்னைத் தான் கட்டுவேனு ஒத்த காலில் நின்ற என் பையன் திடீருனு இரண்டு நாள் காணாம போயிட்டு திரும்பி வந்த போது, உன்னைப் பற்றிப் பேச்சே எடுக்க வேண்டானு சொல்லிட்டான். இதுக்கு எல்லாம் காரணம் நம்ம வீட்டுல இருக்கிற தீய சக்தி தான்! அதை வெளியேற்ற தான் உன்னைக் கூப்பிடுறேன்.” என்றுக் கூறினாள்.


அப்பொழுது “மைதிலி..” என்று வீடே அதிரும்படி.. சூர்யா அழைத்தான். மைதிலியும் சாந்தியும் நிமிர்ந்துப் பார்த்தார்கள். மேல்படிக்கட்டின் இரு கைகளையும் பின்னால் கட்டியவாறு சூர்யா நிமிர்ந்து நின்றிருந்தான். அந்த தோற்றம் இருவருக்கும் திகிலை ஏற்படுத்தியது.


சூர்யா “நான் உன்னைக் கூப்பிட்டேன் மைதிலி..” என்றதும்.. அடுத்த கணமே மைதிலி படியேறி சென்றாள். மைதிலி படியேறிய பின்பே சாந்திக்கு சுயநிலை வந்தது. அவள் தடுக்க நினைப்பதற்குள்.. மைதிலி சூர்யாவை சென்றடைந்திருந்தாள்.


மைதிலி நெருங்கையில்.. தானே.. நான்கு படிகள் இறங்கிய சூர்யா அவளது கரத்தைப் பற்றிக் கொண்டு அழைத்துச் சென்றான்.


அவர்களது அறைக்குள் சென்றதும்.. மைதிலி பேசும் முன் முந்திக் கொண்ட சூர்யா “எதுக்கு உன் அத்தை கூட நின்னு பேசிட்டு இருக்கே!” என்றுக் கோபத்துடன் கேட்டான்.


மைதிலி “அவங்க.. மாறன் ஆவியை பார்த்தியானு விசயத்தை தொடங்கினாங்களா.. அதுதான் நின்னுட்டேன்.” என்றவள், தொடர்ந்து “சரி இனி பேச மாட்டேன். நான் சொன்னது உண்மை என்று இப்போ நம்பறீயா.. எங்க எல்லாரையும் ஆட்டி வைக்கிறது ஒரு ஆத்மானு சொன்னதிற்கு.. அதெல்லாம் பொய்.. ஆளை ஏற்பாடு செய்திருக்காங்கனு சொன்னே தானே! இப்போ நம்பறீயா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா “இப்போ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி.. அத்தை கிட்ட.. அப்படித்தானே.. என்று நீ கேட்டதும்.. அவங்க அப்படித்தான் என்று பதில் சொன்னாங்களே.. அந்த மாதிரி ஆமாம் என்றுப் பதில் சொல்ல சொல்றீயா..” என்றுக் கேட்டான்.


மைதிலி குழப்பத்துடன் பார்க்கவும், சூர்யா “நீ யார் உங்களைத் தள்ளிவிட்டாங்கனு கேட்காம.. கருப்பா ஒரு உருவம் தள்ளுச்சா.. அது உறுமுச்சா.. இருமுச்சானு கேட்டா.. விழுந்த அதிர்ச்சியிலும், வலியிலும் இருந்தவங்க.. ஆமாம் அப்படித்தான்னு சொல்வாங்க! ஒரு விசயம் தெரியுமா.. எப்பவும் முதல்ல பேஷன்ட் கிட்ட அவங்க டிடெய்ல்ஸ் கேட்க மாட்டாங்க! அந்த மாதிரி தான் இதுவும்.. நீ அத்தை கிட்ட அப்படித்தானே என்றுக் கேட்டதும்.. ஆமாம் அப்படித்தான்னு சொல்லிட்டாங்க..” என்று நக்கலடித்தான்.


அதைக் கேட்டு முகம் சிறுத்து போன மைதிலி “என்னைத் தான் நம்பலை. அம்மாவையுமா நம்பலை. அவங்க பார்த்ததைத் தான் சொன்னாங்க! சரி அதை விடு நீயும் தானே பார்த்தே சூர்யா! நீ கண்ணால் பார்த்தும் நம்பலையா! இந்த திரைசீலைக்கு பின்னாடி ஒரு உருவம் நின்னதைப் பார்த்தேன். அப்பறம் பார்த்தா.. கீழே அம்மாவை தள்ளிவிட்டிருக்கு! இங்கே இருந்த ஆள்.. எப்படி அங்கே போக முடியும்?” என்று அவனிடமே கேட்டாள்.


அதற்கு சூர்யா “ஓ முடியுமே! இரண்டும் வேற வேற ஆளாக இருந்தால்..” என்றான்.


மைதிலி “சரி.. இங்கே நின்ன உருவத்தை நீ பார்த்தே தானே! அது பால்கனியை தாண்டியதைப் பார்த்தியா” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா “எங்கே நீதான்.. என்னை விடாம இறுக்க கட்டிப்பிடிச்சுட்டே.. உன்னைச் சமதானப்படுத்திட்டு போறதுக்குள்ள.. அவன் எட்டி குதிச்சுட்டான்.” என்றான்.


அதற்கு மைதிலி “நீதான் பயமா இருந்தா.. கட்டிப்பிடிச்சுக்கோனு சொன்னே..” என்றுத் தன்போக்கில் கூறியவளுக்கு நாணம் மேலிட.. சூர்யாவும் உதட்டை கடித்து சிரித்தான்.


பின் மைதிலி தலையை சிலுப்பி தற்போதைய மனநிலையை சரிச் செய்துவிட்டு தொடர்பு அறுப்படாமல் பேசினாள்.


“நீ போய் எட்டிப் பார்த்த தானே.. அதுக்குள்ள ஒரு மனிதன் இறங்கி.. மாயமா மறைந்துப் போ முடியுமா? அதுவும் என் ரூமிற்கு கீழே வெறும் சுவர் தான் இருக்கு! அந்த பக்கம் ஸ்டோர் ரூம் என்பதால் சின்ன.. சன்னல் கூட இருக்காது. தோட்டத்திலும் நாய்கள் இருக்கு.. வெளியாட்களைப் பார்த்தா.. அது பாய்ந்திரும். தோட்டத்திலும்.. மறைந்து ஒளிக்கிற மாதிரி பெரிய புதர் எல்லாம் இல்லை. பின்னே எப்படி மாயமா போனான்? அம்மா தான் சொன்னாங்களே.. யாரோ தள்ளிவிட்ட மாதிரி இருந்துச்சு! யாரோ உறுமின மாதிரி இருந்துச்சுனு..” என்றாள்.


சூர்யா “ஒவ்வொரு கேள்விக்கா பதில் சொல்றேன். முதல் கேள்வி.. அவன் எப்படி மாயமாக போனான் என்றுத் தானே! கீழே சுவற்றிற்கு பக்கத்தில் எதாவது இரகசிய வழி இருக்கலாம். நாய்கள் குரைக்காமல் படுத்திருக்கு என்றால்.. கண்டிப்பாக நாய்களுக்கு பழக்கமானவனாக தான் இருப்பான். அடுத்து உன் அம்மாவை யாரோ தள்ளிவிட்டிருக்க தான்! ஆனா தள்ளிவிட்டது மாறனோட ஆவி இல்லை. உன் அத்தை தான் என்பது.. அவங்க உன்னைப் பார்த்து.. உன் அம்மா விழுந்தது கூடப் பெருசா தெரியாம.. பேசியதை வச்சு சொல்றேன். அடுத்து அந்த உறுமல் சத்தம் அதற்கு பதில் சொல்லியாச்சு நீ சொன்ன பிறகு தான் ஆமாம் என்றுச் சொன்னாங்க..! அவங்களுக்கு இருக்கிற பயம் மற்றும் வலியில்.. வெள்ளை காக்கா பறக்குதுனு சொன்னா கூட ஆமாம் என்றுத் தான் சொல்லியிருப்பாங்க..” என்றான்.


மைதிலி பதில் கூற முடியாமல் திணறவும், அவளது முகவாயைப் பற்றிச் செல்லமாக ஆட்டிவிட்டு தனது பையை எடுத்தவன், அதில் இருந்த டார்ச் லைட், சிறு கத்தி, இருட்டில் பார்க்க உதவும் கண் கண்ணாடி, அவனது செல்பேசி மற்றும் சிறு தொப்பி போன்றவற்றை எடுத்து வெளியே வைத்தான்.


மைதிலி அவனை நேராக பார்த்து.. “எல்லாத்துக்கு பதில் சொல்வதால்.. நீ சொன்னது தான் சரி என்று ஆகிவிடாது சூர்யா! என்னோட ஒரு கேள்விக்கு உன்னால் பதில் சொல்ல முடியாது.” என்று வருத்தமும் சிறு கோபமுமாக கூறினாள்.


சூர்யா என்ன என்பது போல் பார்த்தான்.


மைதிலி “நீ யார்?” என்றுக் கேட்டாள்.


அதைக் கேட்ட சூர்யா முறுவலித்தவாறு “உன் ஹஸ்பென்ட்!” என்றான்.


மைதிலி “பார்த்தியா! உன்னால் ஓப்பனா ஒன்றும் சொல்ல முடியலை. ஆனா உனக்கே தெரியாதது எனக்கு தெரியும். ஆனா நீ ஒத்துக்க மாட்டே..” என்றவள், தொடர்ந்து “உன் கிட்ட மாறனோட ஆத்மா கிலிம்ப்ஸ் வந்துட்டு போகுது சூர்யா! அது உனக்கு தெரிய மாட்டேன்குது.” என்றாள்.


அதற்கு சிரித்த சூர்யா “நான்தான்.. உன் சித்தப்பா கிட்டவே சொல்லிட்டேனே! நான் சூர்யா, உன்னைப் பொருத்தவரை.. மாறனோட ஆவி! உன் அப்பாவை பொருத்தவரை மாறனோட வாரிசு! உன் சித்தப்பாவை பொருத்தவரை.. மாறன் மாதிரி இருக்கிறவன்..” என்று கண்ணடித்தான்.


மைதிலி “நீ என்கிட்ட இருந்து எதையோ மறைக்கிற மாதிரி இருக்கு! முதல்ல எப்படியோ.. இப்போ.. என் மனசில் உன்னைப் பற்றி இருந்த எல்லாத்தையும் சொன்னேன் தானே! என் மனசுல இருக்கிறது எல்லாம் வெளியே வரவழைத்தது நீதான்! இப்போ தான் நான்.. நம்ம உறவை முழுமையாக உணர ஆரம்பிச்சுருக்கேன். இப்போ நீ என்கிட்ட இருந்து சம்திங் மறைக்கும் போது.. என்னால தாங்க முடியலை சூர்யா..” என்றவளுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது.


அவனை மென்முறுவலுடன் பார்வையால் வருடியவன், தனது டீசர்ட்டை கழற்றியவாறு “நான் உன்கிட்ட இருந்து எதையும் மறைக்கலையே மைதி!” என்கவும், வெற்று மார்புடன் அவனைப் பார்த்ததும் வெட்கம் பிடுங்கி தின்க.. திரும்பி நின்றுக் கொண்டாள்.


அதைப் பார்த்து நன்றாகவே சிரித்தவன், அவளைப் பின்னால் இருந்து அணைக்கவும், கூச்சத்தாலும் கோபத்தாலும் “விடு..” என்று திமிறினாள். ஆனால் அவன் மேலும் இறுக்கவும்.. அவள் தனது உணர்வுகளுடன் போராட வேண்டியதாகி போனது.


“சூ..சூ..சூர்யா..” என்றுத் தனது கைகளுக்குள் நடுங்கிவளை ஆறுதலாக இறுகிவிட்டு.. விடுவித்தான். ஆனால் மைதிலி திரும்பிப் பார்க்க திறனில்லாதவளாய்.. அசையாமல் நின்றுவிட்டாள்..


தனது பையில் இருந்து.. கருப்பு நிற டீசர்ட்டை எடுத்துப் போட்டவன்.. அவளது தோளைப் பற்றி திருப்பி.. தனது மார்போடு அணைத்துக் கொண்டான்.


சூர்யா "நீ இப்போ நாம் நமது என்றுப் பேசுவதைக் கேட்க எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா மைதி! நம்மளோட வாழ்வு இந்த மூவ்மென்ட்டோட போகாது. எதிர்காலமும் நல்லாயிருக்கணும். அதுக்கு தான் போராடுகிறேன். கொஞ்சம் வெயிட் செய்.. நான் சொல்வதை விட.. நீயே தெரிந்துக் கொள்ளும் போது.. நான் உன்கிட்ட இருந்து எதையும் மறைக்கலனு உனக்கே தெரியும்." என்றான்.


அவன் கூறுவது முழுமையாக புரியவில்லை என்றாலும்.. அவனது வார்த்தைகள் அவளை அமைதிப்படுத்தவும், அவனது மார்பில் நிம்மதியாக சாய்ந்தாள்.


பின் சூர்யா "ஒகே மைதி! நான் கிளம்பறேன்." என்று அவளைத் தன்னிடம் இருந்து பிரித்தவன், மேசையின் மீது வைத்திருந்த பொருட்களை எடுத்து பாக்கெட்டில் சொருகினான்.


அதைப் பார்த்து திகைத்த மைதிலி.. "நீ நிஜமாலுமே.. மலைக்காட்டுக்கு போறீயா.." என்றுக் கேட்டாள்.


சூர்யா மெல்ல சிரித்து "பின்னே உன் சித்தப்பாவை பயமுறுத்த அப்படிச் சொல்லியிருப்பேனு நினைக்கறீயா.." என்றான்.


ஆனால் மைதிலி பதறியவளாய் "வேண்டாம் சூர்யா! அங்கெல்லாம் போக வேண்டாம். நான் எத்தனை சொன்னேன். அதெல்லாம் கட்டுக்கதை இல்லை.. நிஜமாலுமே நடந்தது. சித்தப்பா சொன்னதையும் கேட்டிங்க தானே! இன்னொரு கும்பலின் கண்ணில் பட்டாலும் சரி.. அந்த ஆத்மாவின் குறி நீங்க ஆனாலும் சரி..” என்கையில் சூர்யா “ஓ கிவ் மீ எ பிரெக் மைதி! எனக்கு உன் நிலைமை புரியுது. சின்ன வயதில் இருந்து உன்னைச் சுற்றியிருக்கிறவங்க.. இதைப் பற்றியே பேசி.. உன் மைன்ட் செட் இப்படியாகிருச்சுனு புரியுது. நான் அதைச் சரிச் செய்ய போராடுகிறேன். நீ கொஞ்சம் ஹெல்ப் செய்! ஒகே நான் உன் வழிக்கே வரேன். நான் சில சமயம் மாறனா மாறுகிறேன் என்றுச் சொன்னே தானே! அப்போ நான்தான் மாறன்.. மாறன் தான் நான்.. என்று நினைச்சுக்கோ..” என்றான்.


மைதிலி தற்பொழுது வேறு சொல்லி அவன் செல்வதைத் தடுக்க எண்ணினாள். “சித்தப்பா சொல்ற மாதிரி.. மழை பெய்ந்து.. மலையில இருக்கிற மண் எல்லாம் ஈரத்துல ஊறிப் போயிருக்கும். பழக்கப்பட்டவங்க இந்த நேரத்தில் போவது ஆபத்து! நீ இப்போ தான் அந்த மலையையே பார்க்கிறே! எப்படி கொஞ்சம் கூடப் பயம், தயக்கம் இல்லாம போறேன்னு சொல்றே..” என்று திகைப்பும்.. வருத்தமுமாக கேட்டாள்.


சூர்யா “என் தைரியத்தை பாராட்டலாமே மைதி..” என்றுச் சிரிக்கவும், மைதிலி “பேச்சை மாத்தாதே சூர்யா! நான் சொல்றது புரியலையா.. இல்லை புரியாத மாதிரி நடிக்கறீயா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா “நீ பயப்பட தேவையில்லைனு சொல்கிறேன்.” என்றான்.


மைதிலியின் முகத்தில் யோசனை படர்ந்தது. மெல்ல “நான்.. சித்தப்பாவிடம் சொன்னது சரியா போச்சு.. எங்களை திசை திருப்பி விட்டுட்டு.. நீ மட்டும் அந்த பெட்டியை எடுத்துட்டு போகப் பார்க்கிற தானே! அதுதானே உன்னோட சீக்ரெட்! உன்னோட ஆக்டிவிட்டிஸ்.. பேச்சு எல்லாத்தையும் இப்போ நினைச்சு பார்த்தா.. எல்லாம் உனக்கு ஏற்கனவே பழக்கம் ஆனாது போல இருக்கு! நீ எல்லாத்திற்கும் பிரிப்பேர் செய்துட்டு தானே வந்திருக்கே! இது எல்லாம் அந்த பெட்டிக்காக தானே..” என்றுக் கேட்டாள்.



 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 15


(பொருளடக்கம்)

இரகசியங்களின் குவியலை காண்பீர்!

இரகசியத்தின் இரகசியம் சிலதை அறிவீர்!



ஒரு கணம் திகைத்து நின்ற.. சூர்யா மறுநிமிடமே.. அவனது வழக்கமான முறுவலுடன் “வாவ்! உன் கற்பனை எப்படியெல்லாம் போகுது! உன்னை கழற்றி விட்டுட்டு மொத்தமா அடிச்சுட்டு போக.. உன் சித்தப்பா பிளன் போட்டுட்டு இருக்கிறார். அவர் மேலே உனக்கு டவுட் வரலை. அது எனக்கு ஆச்சரியமா இருக்கு! நான் இரண்டு கேள்வி கேட்டேன். நீங்க செய்துட்டு இருக்கிறது.. யுஸ்லஸ் தின்க்ஸ்னு உண்மையைத் தான் சொன்னேன். அதுக்கு உன் ஹஸ்பென்ட் மேலே சந்தேகப்படறீயா..” என்று பொய்யான கோபத்துடன் இடுப்பில் கையை வைத்துக் கொண்டு அவளைப் பார்த்து முறைத்தான்.


ஆனால் மைதிலி அசையாது அவனைப் பார்க்கவும், அதற்கு மேல் பொய்யான கோபத்தைக் காட்ட முடியாமல் சிரித்தவன், “இதற்கும் அதே பதில் தான்.. நான் சொல்லி நீ தெரிந்துக் கொள்வதை விட.. நீயே தெரிந்துக் கொள்ளும் போது.. நான் சொன்னது எல்லாம் உண்மைத்தான் என்று உனக்கு தெரியும் மைதி! ப்ளீஸ் அதுவரை என் மேலே இருக்கிற.. நம்பிக்கையை விட்டுறாதே!” என்றான்.


பின் அவளிடம் வந்து அவளது தலையில் கையை வைத்து “என்னோட சீக்ரெட் நீதான் போதுமா!” என்றுச் செல்லமாக ஆட்டினான்.


பின் சூர்யா “நான் உன்கிட்ட காட்டுகிற லவ்விலும் சந்தேகப்படறீயா மைதிலி” என்றுத் தாழ்ந்து குரலில் கேட்டான். உடனே மைதிலி அவனது மார்பில் அடைக்கலம் புகுந்தாள். அவனும் பதில் கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் புன்னகையுடன் அவளை அணைத்துக் கொண்டான்.


அவளை தன்னிடம் இருந்து நிமிர்த்தியவன் “ஒகேடா! நம்ம விசயத்தை அப்பறம் பேசலாம். நாம் தான் பேசிட்டே இருக்க போறோமே! நான் இப்போ சொல்ல போவதைக் கவனமா கேள்! நீ இந்த ரூமில் இருக்க வேண்டாம். கீழே அத்தை கூட இருந்துக்கோ! நானே வந்து கூப்பிடும் வரை.. அந்த ரூமை விட்டு வெளியே வராதே! மறுபடியும் சொல்றேன்.. எந்த காரணத்திற்காகவும்.. அந்த ரூமை விட்டு வெளியே வராதே! அத்தை கூடவே இரு! எதுக்கு சொல்றேன் என்றுப் புரிந்திருக்கும். உன் அத்தை ஏதோ பிளன் வச்சுருக்காங்கனு சொன்னே தானே.. அந்த பிளனே நீதான் போல தெரியுது. அவங்க உன்னை மட்டும் தான் டார்கெட்டா பேசிட்டு இருக்காங்க! அதனால.. முக்கியமா உன் அத்தையோ அவங்க பேமலியை சேர்ந்தவங்களோ கூப்பிட்டா வெளியே வந்திராதே!” என்றான்.


மைதிலி “என்னை இங்கே விட்டுட்டு போறது.. இத்தனை டேன்ஞ்ரஸ் என்றால்.. உன் கூடவே கூட்டிட்டு போக வேண்டியது தானே..” என்றாள்.


அதற்கு சூர்யா “அது அதை விட டேன்ஞ்சரஸ்! இன்னொரு விசயமும் சொல்லிடரேன். என்னை உளவு பார்க்கிறேனு நினைச்சுட்டு என்னால் பின்னால் வந்து வம்பில் மாட்டிக்காதே! அதையும் இப்பவே சொல்லிடறேன்.” என்கவும், மைதிலி உதட்டை கடித்து குனிந்ததிலேயே அவள் அந்த எண்ணம் தான் கொண்டிருக்கிறாள் என்பது புரிந்து விட.. ஏனோ சூர்யாவிற்கு சிரிப்பு தான் வந்தது. எனவே சட்டென்று குனிந்து அவளது இதழில் அழுத்த முத்தமிட்டவன், அடுத்த கணமே நிமிர்ந்து “இது சரிப்பட்டு வராது. நட..” என்றுக் கையோடு அழைத்துச் சென்றான்.


கயல்விழியிடம் விட்டவன், மைதிலியின் தந்தை மகேஸ்வரனை காணாது சுற்றிலும் பார்த்தான். கயல்விழி.. சிறுக் குன்றலுடன் “சாயந்திரம் வெளியே போனவர்.. இன்னும் வரலை.” என்றார்.


பின் மைதிலியிடம் மீண்டும் பார்வையால் எச்சரித்துவிட்டு.. அங்கிருந்து வெளியேறினான்.


மாளிகையை விட்டு.. சிறிது தொலைவு வேகமாக நடந்து சென்றவனின் வேகம்.. ஒரிடத்தில் மட்டுப்பட்டது. பின் மெதுவாக நடக்க ஆரம்பித்தான், பின் நின்றுவிட்டான்.


பின் நின்ற இடத்தில் இருந்தே “மிஸ்டர் சோமேஸ்வரன்! நீங்க என்னை ஃபாலோ செய்துட்டு இருக்கீங்க என்றுத் தெரியும். இப்படி மறைந்து வருவதற்கு அவசியமே இல்லை. முதலிலேயே நீங்களும் வாங்க என்று உங்களைக் கூப்பிட்டேன் தானே..” என்கவும், மெல்ல சோமேஸ்வரன் வெளிப்பட்டார்.


தற்பொழுது கடா தாடி முடியுடனும் இல்லை ஒற்றை கண்ணை மறைத்து தொங்கிய மீசையுடனும் அவர் இல்லை. பேன்ட் சர்ட்.. அணிந்துக் கொண்டு.. மொட்டை தலையில் தொப்பியை கவிழ்த்திருந்தார்.


சோமேஸ்வரன் வெளியே வந்ததும்.. அவரிடம் “போகலாமா..” என்றுக் கேட்டவன், அவருடன் நடந்தான்.


சோமேஸ்வரன் "நீ சும்மா சொன்னே.. வர மாட்டேன் என்று நினைச்சேன். உனக்கு தைரியம் தான் வந்துட்டே..” என்றார்.


அதற்கு சூர்யா “ஆர்வம் தான்..” என்றான்.


சோமேஸ்வரன் “ஆர்வத்துல ஆபத்தான காரியத்தில் இறங்கிட்டு.. அதற்கான பலனை கொடுத்தவங்க அதிகம்..” என்றார்.


சூர்யா “அந்த அவேர்னஸோட தான் இறங்கியிருக்கேன்.” என்றான்.


அதைக் கேட்டு சிரித்த சோமேஸ்வரன் “ம்ம்! இந்த தில்லு, முன் ஜாக்கிரதை எல்லாம் ஒண்ணா பிறப்பிலேயே வரும்.. இல்லைன்னா.. சொல்லிக் கொடுத்து வரும்..” என்றார்.


சூர்யா சிறு முறுவலுடன் “நீங்க என்ன கேட்க வரீங்க? அதை டைரக்ட்டா கேளுங்க..” என்றான். அவனது முகத்தில் அவர் என்ன கேட்க போகிறார் என்று தெரியும் என்பது போன்ற சிரிப்பு இருந்தது.


சோமேஸ்வரனும் சட்டென்று கேட்டார்.


“நீ போலீஸா?"


அதற்கு முறுவலித்த சூர்யா "அதுக்கு மைதிலி என் மேலே ஆவி புகுந்திருச்சானு கேட்டாளே அந்த டவுட்டே பரவாலை!" என்றுச் சிரித்தான்.


சோமேஸ்வரன் விடாது "பின்னே எதுக்கு நீ இதெல்லாம் செய்யறே?" என்றுக் கேட்டார்.


சூர்யா "அதுதான் சொன்னேனே.. ஆர்வம் கூடவே.. மைதிலிக்கு நான் பிராமிஸ் செய்திருக்கேன்." என்றான்.


சோமேஸ்வரன் அடுத்து கேட்க வாயைத் திறக்கும் முன் முந்திக் கொண்ட சூர்யா "அடுத்த நான் ஒரு கேள்வி கேட்கவா?" என்றவன், தொடர்ந்து "நீங்க ஏன் கையில் கத்தியோட நடக்கறீங்க? அதாலே என்னைக் கொல்லவா?" என்றவாறு சுற்றிலும் பார்த்தான்.


ஆனால் சோமேஸ்வரன் திடுக்கிட்டு நின்றுவிட்டார்.


சூர்யா முறுவலுடன் திரும்பவும், சோமேஸ்வரன் கத்தியை ஓங்கி கொண்டு வந்தார். சட்டென்று சூர்யா.. சோமேஸ்வரனின் ஓங்கிய கரத்தை அடித்து கத்தியை தட்டிவிட்டு, மறுகரத்தால்.. அவருக்கு ஒரு குத்து விட்டான். அவர் இரண்டி தள்ளிப் போய் விழுந்தார். இவை இரு நொடி பொழுதில் நிகழ்ந்து விட்டது.


கீழே விழுந்தவரை எட்டி உதைத்து புரட்டி போட்ட சூர்யா அவரின் முதுகின் மேல் அமர்ந்து அவரது இரு கைகளையும் பின்னால் முறுக்கி இறுக கட்டினான். அந்த கரங்களைக் கட்டிய கயிற்றோடு உடலையும் சேர்த்து வயிற்றில் இருந்து மார்பு வரை சுற்றி கட்டியவன், பின் அவரை நேராக புரட்டி போட்டான்.


எழக் கூட முடியாமல் சோமேஸ்வரன் படுத்திருக்க.. அவருக்கு நேராக வந்து நின்ற சூர்யா "என்ன அன்கிள்! நீங்க தான் எனக்கு டஃப் பைட் கொடுப்பீங்க என்றுப் பார்த்தா.. இப்படிப் பொசுக்குனு என்கிட்ட மாட்டிக்கிட்டிங்க! நான் உங்க கிட்ட இருக்கிற ஒரு சீக்ரெட் சொல்லவா..” என்று தலையைச் சரித்து கேட்டான்.


பின் அவனின் முகம் சற்று இறுகியது. “நீங்க தனியா பெட்டிகளை தேடுவதற்கு மைதிலி ஒரு காரணத்தை சொன்னாள். நான் அதை நம்ப மாட்டேன். உங்க அண்ணன்ங்க கூட ஒண்ணா சேர்ந்து தேடாம ஏன் தனியா தேடரீங்க? ஒருவேளை பெட்டி கிடைத்தால்.. மூணா பங்கு போட்டா.. உங்களுக்கு குறைவா வரும்னு உங்க இரண்டு அண்ணன்களையும் பிரிச்சு விட்டது நீங்க தானே!" என்றுக் கேட்டான்.


சோமேஸ்வரன் முறைத்தவாறு படுத்திருந்தார். சூர்யா விடாது முழங்காலில் கரங்களை ஊன்றி அவரை நோக்கி குனிந்து "மைதிலி கிட்ட ஏதேதோ சொல்லி.. அவளைக் கூட்டு ஏன் சேர்த்தீங்க? அவளும் கல்யாணமே செய்ய மாட்டேனு சொல்லிட்டு இருக்கிறா.. அதுனால அவளை ஏமாத்திட்டு.. மொத்தத்தையும் நீங்க சுருட்டி எடுத்துட்டு போயிடலானு.. இருந்தீங்களா! இப்போ கல்யாணம் செய்துட்டு வந்துட்டானு.. என்னைக் கொல்ல வந்தீங்களா.." என்றுக் கூறிக் கொண்டே வந்தவன், "வெயிட்! வெயிட்! நீங்க மட்டும் என்னைக் கொல்ல பார்க்கலை. மைதிலியோட அத்தையும் தான் கொல்ல பார்த்தாங்க.." என்று யோசனையில் ஆழ்ந்தான்.


பின் சூர்யா "உங்க இரண்டு பேரோட.. எய்ம் மைதிலி மேரேஜ் செய்துட்டு வந்தவனான நான்தான்! அப்போ நீங்க இரண்டு பேரும் கூட்டா? நீங்க உயிரோட இருக்கீங்கனு.. அவங்களுக்கு தெரியுமா?" என்றுக் கேட்டான்.


முழுமையாக இல்லை என்றாலும் கிட்டத்தட்ட ஆணி வேர் வரை கண்டுப்பிடித்து விட்டவனை சோமேஸ்வரன் திகைப்புடன் பார்த்தார்.


சூர்யா “ஆனா அதையும் ஏற்றுக் கொள்கிற மாதிரி இல்லையே! ஒரு ஆள் கூட கூட்டு சேர்ந்து மொத்தத்தையும் ஏமாற்றி எடுத்து செல்லலாம்.. என்று பிளன் போட்டு இருக்கிற நீங்க.. எப்படி.. சாந்தி அன் கோ கும்பலோட கூட்டு சேருவீங்க! எங்களுக்கு விஷம், கத்தி வச்சுருக்கிற மாதிரி.. அவங்களுக்கும் எதாவது வச்சுருக்கீங்களா? மைதிலியோட அப்பா.. அவரே யோசித்து.. அவரே கோபப்பட்டு.. பைத்தியம் ஆகிருவார் போல! உங்க முதல் அண்ணன் பரமேஸ்வரன் குடும்பத்தை என்ன சொல்லி இங்கிருந்து துரத்தி விட்டிங்க? இவ்வளவு கான்பிடன்டா.. எல்லாரையும் துரத்திட்டு இருக்கிற நீங்க.. எந்த ஆதாயத்தில் இதைச் செய்துட்டு இருக்கீங்க! இந்த பெரிய மலைத் தொடரில் புதைத்து வைத்திருக்கிற.. பெட்டி கிடைத்திரும் என்ற நம்பிக்கையா! இல்லை பெட்டி கிடைத்து விட்டாதா! அதை யாருக்கும் பங்கு போட விருப்பம் இல்லாம இந்த வேலையை செய்யறீங்களா! அதனால் தான் கொலை செய்கிற அளவிற்கு.. போயிருக்கீங்க! நீங்க.. உங்க அண்ணன் குடும்பத்தை துரத்தின போதே அந்த பெட்டியை கண்டுப்பிடிச்சுட்டிங்கனு கெஸ் செய்கிறேன். சொல்லுங்க.. நான் சொன்னது சரித்தானே! அந்த பெட்டிகளை எங்கே ஒளிச்சு வச்சுருக்கீங்க! அதை எடுக்க தான்.. முதலிலேயே காட்டுக்குள் போக உங்களைக் கூப்பிட்டேன். என்ன போகலாமா.. அந்த பெட்டிகள் எங்கே இருக்குனு சொல்றீங்களா?” என்றுச் சிரித்தான்.


சோமேஸ்வரன் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றார். உடலும் உள்ளமும் நடுங்க.. நடுக்கத்துடன் “நீ யார்?” என்றுக் கேட்டார். அப்பொழுது குனிந்திருந்தவனின் தலைக்கு பின்னால் தெரிந்த வானத்தில்.. மின்னல் ஒன்று வெட்டி சென்றது.


—--------------------------


சூர்யா சென்றதும் வலி நிவாரணி கொடுத்தத்தின் பயனாக கயல்விழி அயர்ந்து உறங்கி விட.. இன்று நடந்து விட்ட பல்வேறு சம்பங்களால்.. மைதிலி உறக்கம் வராமல் அனைத்தையும் நினைத்து பார்த்தவாறு படுத்திருந்தாள். அப்பொழுது அந்த அறையின் கதவு பலமாக தட்டப்பட்டது.


திடுக்கிட்டு மைதிலி எழுந்தமர்ந்தாள். கயல்விழியின் உறக்கமும் கலைந்தது. திகைப்புடன் தட்டப்பட்ட கதவை பார்த்துக் கொண்டிருக்கையில்.. கணேஷன் “கயல்விழி, மைதிலி சீக்கிரம் வாங்க! சாந்தி நெஞ்சை புடிச்சுட்டு விழுந்துட்டா! ரொம்ப வியர்த்து கொட்டுது. கண் எல்லாம் வேற சொருகி இருக்கு.. எனக்கு பயமா இருக்கு..” என்றவாறு தட்டினார்.


உடனே கயல்விழி “அச்சோ!” என்று படுக்கையில் இருந்து இறங்க முயன்றார். மைதிலி அவரைத் தடுத்து “அம்மா! நீ காலை ஊன்றாதே! அப்பறம் சுளுக்கு.. மூட்டு விலகலா மாறியிரும்.” என்று எச்சரித்தாள்.


கயல்விழி “இதை சொல்றதுக்கு இதுவா நேரம்.. முதலில் என்னவென்று போய் பார்த்துட்டு வா..” என்றார். அதைக் கேட்டு மைதிலி திகைத்தாள். சூர்யா அவளை இந்த அறையை விட்டு வெளியே செல்ல கூடாது என்று எச்சரித்திருக்கிறான். குறிப்பாக அவளது அத்தை குடும்பத்தார் சார்ந்த யாரும் அழைத்தாலும் செல்லவே கூடாது என்று எச்சரித்திருக்கிறான். எனவே மைதிலி தயங்கினாள்.


வெளியே ஒருவர் உயிருக்கு ஆபத்து என்றுக் கத்திக் கொண்டிருக்க.. தயங்கியமர்ந்திருந்த தனது மகளைப் பார்த்து கயல்விழிக்கு கோபம் தான் வந்தது.


“நீயும் உன் அப்பா மாதிரி ஆகிட்டேயில்ல..” என்றவாறு மீண்டும் படுக்கையில் இருந்து இறங்க முயன்றார். ஆனால் அவரது கையைப் பிடித்து மைதிலி தடுத்தாள்.


அதற்குள் வெளியே நின்றிருந்த கணேஷன் “பெரியதா ஹெல்ப் ஒன்றும் செய்ய வேண்டாம்.. காரை எடுத்துட்டு ரவீந்தர் அவனோட வைஃப் பிரியாவை கூப்பிட போயிருக்கான். ஊருக்குள்ள போய்.. வேற காரை கூட்டிட்டு வரணும். இந்த ஊருக்கு ஃகால் டாக்ஸிகாரனும் வர மாட்டான். நான்தான் காரை ஓட்டணும். அதுனால சாந்தி கூட துணையா உட்காரணும். முனுசாமியை காணோம் கற்பகத்தை கூப்பிட போனா.. அவ எங்க கூட வந்துட்டா.. மாமா வெளியே வந்திருந்தார். அப்பறம் அவரை அடக்க யாருமில்லனு சொன்னா அதனால தான் உங்களைக் கூப்பிடறேன்.” என்றுக் கிட்டத்தட்ட கதறினார்.


கயல்விழி மைதிலியின் பிடியில் இருந்து தனது கையை விடுவிக்க முற்படவும், மைதிலி “நானே போறேன்.” என்றுவிட்டு கதவைத் திறந்தாள். அங்கு கணேஷன் பதட்டத்துடன் நின்றிருந்தார்.


மைதிலியை பார்த்ததும் “வாம்மா மைதிலி! சாந்தி எங்க ரூமில் தான் இருக்கிறா..” என்று அழைத்துச் சென்றார். சாந்தியின் மற்றும் கணேஷனின் அறை.. வரவேற்பு அறைக்கு அருகில் சிறு டிரையிங் அறை உள்ளது. அதை அடுத்து இருக்கிறது. கணேஷன் பரபரப்பாக முன்னே செல்லவும், மைதிலி பின்னால் சென்றாள். அங்கு சாந்தி நெஞ்சை பிடித்தபடி படுத்துக் கிடந்தார்.


கணேஷன் “நீ இங்கே இரு மைதிலி! எனக்கு தெரிந்தவங்களோட காரை வாங்கிட்டு வரேன்.” என்றுவிட்டு சென்றார். மைதிலியை பார்த்ததும் ‘மைதிலி’ என்று அவரது கையைப் பிடித்துக் கொண்டவர், இது எல்லாம் அந்த சாமி சிலை பெட்டிக்குள் அடைந்துக் கிடப்பது தான் காரணம்’ என்று புலம்ப ஆரம்பித்தார். வேறு வழியில்லாமல் கேட்டுக் கொண்டிருந்த மைதிலியின் மூளைக்குள்.. சூர்யா எச்சரித்தது ஓடிக் கொண்டே இருந்தது. எனவே சிறு கவனத்துடன் சுற்றிலும் பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.


காரை கேட்டு வாங்கிக் கொண்டு வருகிறேன்.. என்றுச் சென்றவர் ஐந்தே நிமிடத்தில் வந்தது மைதிலிக்கு சந்தேகத்தை கிளப்பியது. மேலும்.. சாந்தியின் வலி கூட நடிப்பு என்று நன்றாக தெரிந்தது. ஆனால் தனது அன்னையின் சொல்லிற்கு கட்டுப்பட்டு வந்துவிட்டாள். எனவே இவர்களிடம் இருந்து எப்படித் தப்பிப்பது என்றுத்தான் அவளது மூளையில் ஓடிக் கொண்டிருந்தது.


கணேஷன் முன்னே நடக்க.. பின்னால் சாந்தியுடன் வந்துக் கொண்டிருந்த மைதிலிக்கு ஏதோ சரியில்லை என்றுத் தோன்றியது. காரின் அருகே வந்ததும்.. இருவருக்காக கணேஷன் காரின் கதவை திறந்து விட்டார். முதலில் சாந்தி ஏறியமர்ந்தார். பின் காரில் ஏறிய.. மைதிலியின் நாசி.. வேறு மணத்தை நுகர்ந்தது. சந்தனம், ஊதுபத்தி, மஞ்சள் போன்ற பொருட்களின் நறுமணத்தை நுகர்ந்தாள். முதலில் சாந்தி அமர்ந்ததும்.. அவரது கால் பட்டு.. முன் இருக்கையின் அடியில் சிறு துணிப்பை தென்பட்டது. முதலிலேயே சந்தேகத்துடன் இருந்த மைதிலிக்கு தற்பொழுது அவர்கள் தன்னை வேறு எங்கோ அழைத்துச் செல்கிறார்கள் என்று ஊர்ஜீதமாகி விட்டது. காரில் ஏறியமருவது போல் பாசங்கு காட்டவும், கணேஷன் சுற்றி சென்று காரின் முன்னிருக்கையில் அமர முயன்றார். அவ்வேளையை பயன்படுத்திக் கொண்ட மைதிலி சட்டென்று கதவை சாத்திவிட்டு.. காருக்கு எதிர்திசையில் ஓடினாள். வீட்டிற்கு சென்றால்.. கணேஷனை தாண்டித் தான் ஓட வேண்டும். எனவே தற்போதைக்கு அவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என்று இருந்ததால்.. கார் இருப்பதற்கு எதிர்திசையில் ஓடினாள்.


அது அவர்கள் வீட்டின் தோட்டப்பகுதியாகும். அறுபது வயதுகளில் இருக்கும் அத்தையும் மாமாவும் தன்னை என்ன செய்து விட முடியும்.. என்று நினைத்தவள், ஓடுவதை விட.. இங்கேயே எங்காவது ஒளிந்துக் கொள்ளலாம்.. என்று சுவற்றோரம் இருந்த பெரிய புதருக்குள் புகுந்து மறைந்துக் கொண்டாள்.


புதருக்குள் நன்றாக மறைந்திருந்த மைதிலி “நல்லா நடிக்க தெரிந்த உங்களுக்கு.. அவள் மேல் ஒரு கவனத்தை வச்சுருக்க கூடாதா! அப்பாவை அங்கேயே நிற்க சொல்லுங்க.. பின் கேட் திறக்கலை. அவ வெளியே ஓடியிருக்க முடியாது. அதனால சுத்தி முன்னாடி தான் ஓடி வர முடியும். அப்பா அங்கே நின்னுட்டா பங்களாகுள்ளயும் ஓட முடியாது. வெளியேயும் ஓட முடியாது. வேற வழியே இல்லை.” என்று கடிந்த ரவீந்தரின் குரலைக் கேட்டதும் திகைத்தாள்.


ஊருக்கு செல்வதாக இருந்த.. ரவீந்தர் இங்கே இருக்கிறான் எனில்.. சூர்யாவின் சந்தேகம் முற்றிலும் சரி! இன்று மதியம் விஷம் வைத்தது, அன்னையை கீழே தள்ளிவிட்டது.. இதெல்லாம் எதற்காக செய்கிறார்கள்.. என்ற கேள்வி அவளது மனதில் எழுந்தது. அதற்கான பதில்.. ரவீந்தர் தனது வாயிலேயே கூறினான்.


“அம்மா நீ இங்கே நில்லு!” என்றுவிட்டு “இன்னைக்கு புருஷனையும் பொண்டாட்டியையும் எப்படிப் பிரிக்கிறது என்று நாம நினைச்சுட்டு இருந்தோம். நீங்க அத்தையை தள்ளிவிட்டது ப்ரோஜனம் இல்லையோனு நினைச்சேன். ஆனா சூர்யா எங்கோ கிளம்பி போனது.. நல்லதாகி போச்சு.. அப்பறம் தனியா கிடைச்சவளை இப்படி கோட்டை விட்டுட்டு வந்து நிற்கறீங்களே! நாளைக்கு அவளோட உயிர் நமக்கு வேண்டும்.” என்றவாறு.. மாளிகையின் மறுபக்கம் தேட ஓடினான்.


ரவீந்தர் கூறியதைக் கேட்ட மைதிலிக்கு திக்கென்று இருந்தது. விஷம் வைத்து சூர்யாவை கொன்றுவிட்டு.. அடுத்த நாள் அவளது உயிரையும் எடுக்க திட்டமிட்டிருக்கிறார். ஆனால் ஏன்?!’ என்று அதிர்ச்சியுடன் பின்னால் இருந்த சுவற்றில் இரு கைகளையும் தரையில் ஊன்றியவாறு சாய்ந்தவளின் வலக்கை அங்கிருந்த புதருக்குள் கீழே சென்றது. திடுக்கிட்ட மைதிலி.. தனது கை உள்ளே சென்ற.. புதரை விலகிப் பார்த்தாள். அங்கு கும்மிருட்டில் சுரங்க பாதை ஒன்று இருப்பதைக் கண்டு அதிர்ந்தாள். மெல்ல நிமிர்ந்து பார்த்தாள். அவளது அறையின் கீழ் இந்த சுவர் தான் அந்த பகுதி!


சூர்யா சற்றுமுன்.. அந்த உருவம் வேகமாக காணாமல் போனதைப் பற்றிக் கேள்வி எழுப்பியது நினைவிற்கு வந்தது. அந்த உருவம் இதன் வழியாக சென்றிருக்க வேண்டும் என்றுத் தெரிந்தது. முதலிலேயே சூர்யா அந்த உருவம் மாறனின் ஆத்மா இல்லை.. ஆவி போல் நடிப்பவன்.. என்று தற்பொழுது என்றது உண்மை என்று ஊர்ஜிதமாகிற்று. ரவீந்தர் சற்று முன்.. தன் வாயிலேயே கயல்விழியை தள்ளிவிட்டது.. சாந்தி என்றுக் கூறிவிட்டான். எனவே இத்தனை நாட்கள் அவர்களைப் பயமுறுத்திக் கொண்டிருந்தது.. அனேகமாக அந்த இன்னொரு கும்பல் ஏற்பாடு செய்த ஆளாக இருக்க வேண்டும் என்றுத் தெரிந்துக் கொண்ட மைதிலி மிகுந்த கோபம் கொண்டாள். இந்த வழியை சித்தப்பாவிடம் சூர்யாவிடமும் கூற வேண்டும் என்று நினைத்தவளுக்கு.. அந்த வழியாக தான் ஏன் சென்றுப் பார்க்க கூடாது என்றுத் தோன்றியது. நிச்சயம் இந்த திடமும் தைரியமும் சூர்யா அளித்தது தான். பயத்தை எதிர்கொள் என்ற அவனது வார்த்தைகள் அவளது காதில் ஒலித்தது. எனவே மெல்ல.. அந்த சுரங்கப் பாதைக்குள் இறங்கினாள்.


ஒரு ஆள்.. தவழ்ந்து சென்றுவிடக் கூடிய அளவிற்கு இருந்த அந்த பாதை செல்ல செல்ல.. இறங்கியது. திக் திக் என்று மைதிலிக்கு இருந்தாலும்.. மனதைத் திடப்படுத்திக் கொண்டு அவளும் மெல்ல இறங்கினாள். தவழ்ந்து போகும் அளவிற்கு வழி குறுக்கலாக இருந்தது. இருட்டில் ஒன்றும் தெரியவில்லை. என்றாலும்.. இருளை கண்களுக்கு பழக்கப்படுத்திக் கொண்டு மெல்ல தவழ்ந்து சென்றாள். அப்பொழுது ஓரிடத்தை கடக்கும் போது.. சிறு துணி ஒன்று அவளது கையோடு சிக்கிக் கொண்டது. அந்த துணியை எடுத்துப் பார்த்த பொழுது சிறு வெளிச்சம் தென்பட்டது. கைகளால் தடவிப் பார்த்தாள். சிறு மரக்கதவு போல் இது இருந்தது. அந்த கதவை மறைக்க என்று.. அந்த துணியை அங்கு வைத்திருப்பார்கள் என்றுப் புரியவும், சென்றுப் பார்த்துவிட முடிவு செய்தாள். அது பழைய கால சிறு கதவு என்பதால்.. போடப்பட்டிருந்த தாழ்பாளை நகர்த்தியதும்.. அந்த சிறு கதவு திறந்துக் கொண்டது.


அதனுள் மெதுவாக உள்ளே தவழ்ந்தவாறே சென்றாள். ஏனெனில் நிமிர்ந்து நிற்க முடியாத உயரத்தில் குனிந்து செல்ல கூடிய அளவில் உயரத்துடன் சிறு அறை அது. அங்கு வேலைப்பாடுகள் கொண்ட மர மற்றும் இரும்பு அலமாரிகள் தாறுமாறாக கிடந்தன. அங்கு மங்கிய ஒளியை பரப்பிக் கொண்டு சிறு விளக்கு எரிந்துக் கொண்டிருந்தது. அதனால் ஏற்படும் நிழல் உருவம் கூட பயத்தைக் கிளப்பியது. தனது நிழலை பார்த்தே மைதிலிக்கு பயமாக இருந்தது. சிறிய அறையில் வேறு ஒன்றும் பெரிதாக இல்லை. ஆனால் மறைந்துக் கொள்ள ஏதுவான இடம் என்று மட்டும் புரிந்தது.


பின் திரும்பி வந்த வழியாக செல்ல திரும்பியளின் முட்டியில் ஒரு பெட்டி தட்டுப்பட்டது. அதன் தாழ்பாள்.. நவீன மிஷின் கொண்டு அறுக்கப்பட்டிருப்பதற்கான அடையாளம் தெரிந்தது. அந்த அடையாளம் மைதிலிக்கு ஏதோ என்று உணர்வு தோன்றவும்.. மெல்ல அந்த பெட்டியை திறந்துப் பார்த்தவளின் விழிகள்.. அதிர்ச்சியில் விரிந்தது.


அந்த மங்கிய ஒளியில் அந்த கால தங்க நகைளும், தங்க சிலைகளும் மின்னின.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கடந்த இரண்டு மாசமா.. என் வாழ்வு பயங்கரமா இருந்துச்சு.. இப்போ முக்கால் கிணறு தான் தாண்டிய இருக்கேன். உங்களுடைய அன்பிற்கு மிக்க நன்றி 🥰💜🙏

என்னை உங்களுக்கு அறிமுகப்படுத்திய எழுத்தாளர் அவதாரத்தையும் விட விரும்பல..

இந்த விஜயதசமி நன்னாளில் அனைவரின் இல்லத்திலும் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகட்டும்.

இன்னைக்கு சின்ன டீசர் போடலானு இருக்கேன்.

முதலில் போட்ட "தீதும் நன்றும் பிறர் தர வாரா" அப்படியே இருக்கு.. 😕😕"விக்ரம், லியோ, ஜெயிலர்" படத்தில வர வன்முறையில கரைஞ்சு இருப்பீங்க.. 😁😁 அது திகட்டிய பிறகு அந்த கதை தருகிறேன்.😜

இப்போ வேற கதை..🥰

Love என்பது இரு மனம் கலக்கும் அழகிய உறவு..‌ அது obsession ஆனால்!!😯 காதல் திகட்டி போனால்!?🥴 காதல் பயத்தை கொடுத்தால்!?🫣

அதுதான் கதை.. இரவு டீசருடன் வருகிறேன்.😍😍

34696
 
Status
Not open for further replies.
Top