All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தீயைத் தீண்டினால்! - கதைத் திரி

Status
Not open for further replies.

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

மற்றொரு கதையின் மூலம் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.. இதன் யூடிகள்.. தினந்தோறும் வந்துவிடும்.

இந்த எந்த மாதிரியான கதை என்றுப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்..

நன்றி
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீயைத் தீண்டினால்!



அனல் 1



(பொருளடக்கம்)

பிற்காலம் அறிவீர்..

முழுதாக அறிவீரோ!

இக்கால நிலை அறிவீர்..

நிலை மாறும் என்றறிவீரோ!


1994 ஆம் வருடம்

நேரம் இரவு பதினொரு மணி


முட்புதர்களும் காய்ந்த மரங்களும் நிறைந்த அந்த மலைத் தொடர்களின் சரிவின் முடிவில் அமைந்திருந்த அந்த சாலையில் மாட்டு வண்டி ஒன்று ஜல் ஜல் என்று ஓசையை எழுப்பியவாறு சென்றுக் கொண்டிருந்தது.


பெட்ரமாஸ் விளக்கு வண்டியில் தொங்கிக் கொண்டிருக்க.. அந்த வெளிச்சத்தில் மெதுவாக மாடு நடந்துக் கொண்டிருந்தது.


வண்டியின் பின்னால் உட்கார்ந்திருந்த ஜோதி “என்ன மாமா! பேசாம வரே! போற பாதை ஏன் இப்படியிருக்கு.. எனக்கு பயமாயிருக்குல்ல! எதையாவது பேசிட்டு வரது..” என்றாள். கதிரேஷன் சற்று கோபத்துடன் திரும்பிப் பார்த்தான். ஆனால் பத்து நாட்களுக்கு முன் அவன் கட்டிய மஞ்சள் மணம் குறையாத தாலி மின்ன.. அந்த தாலிக்கு போட்டியாக முகம் மின்ன அமர்ந்திருந்த தனது மனைவியை பார்த்தவனின் கோபம் அடங்கியது. ஆனால் வம்பிழுக்க நினைத்தான்.


“நான்தான் நாளைக்கு போகலானு சொன்னேன் தானே! ஆனா இப்பவே உன் ஆத்தாளை பார்க்கணுனு அடம் பிடிச்சே.. அதுவும் சீக்கிரம் போகணுன்னா.. இந்த வழியா போனா தான்.. அரைமணி நேரத்துல போயிரலாம். மெயின் ரோட்டு வழியா போனா.. ஒரு மணி நேரம் ஆகும்.” என்றான்.


அதற்கு ஜோதி “அம்மா வழுங்கி விழுந்தாட்டாங்கனு கேள்விப்பட்ட பின்.. என்னால அங்கே உட்கார முடியலை.” என்றுச் சிணுங்கினாள்.


கதிரேஷன் “சரி! நான்தான் கூட்டிட்டு போயிட்டு இருக்கேனே..” என்றான்.


ஜோதி “அதில்ல மாமா! எதாவது பேசிட்டு வரலாம் இல்லனு தானே கேட்டேன்.” என்கவும், கதிரேஷன் “என்னத்த பேச சொல்றே! இந்த வழியா உன்னைக் கூட்டிட்டு போறேனு என் ஆத்தா கேள்விப்பட்டா அவ்வளவுத்தான்.. மார்பை புடிச்சுட்டு உட்கார்ந்திரும்.” என்றான்.


ஜோதி “ஏன் மாமா?” என்றுக் கேட்டாள்.


கதிரேஷன் “இந்த பக்கம் இருக்கிற பெரிய மலைக்காடு தான் காரணம்! இந்த மலைக் காட்டுக்குள்ள அடங்காத கோபத்தோட ஆத்மா ஒண்ணு நாற்பது வருஷமா புதையலை காவல் காக்குதுனு சொல்வாங்க..” என்றான்.


அதைக் கேட்ட ஜோதி சிறுப் பயத்துடன் “என்ன மாமா பயமுறுத்துரே!” என்று அவனை நெருங்கி அமர்ந்தாள்.


அதற்கு கதிரேஷன் “இது இப்போ இல்ல.. நான் சின்னதா இருந்ததில் இருந்து இதைச் சொல்லித் தான் பயமுறுத்திருக்காங்க!" என்றான்.


ஜோதி "அப்போ அது உண்மை இல்லையா.." என்றுக் கேட்டாள்.


கதிரேசன் "யாரும் பார்த்ததில்ல.." என்றுத் தோள்களைக் குலுக்கினான்.


ஜோதி "அதென்ன புதையல்?" என்றுக் கேட்கவும், கதிரேஷன் திரும்பி அவளைப் பார்த்து பதில் கூற முயன்ற பொழுது ஜோதி நேர் எதிரே பார்த்து.. விர்ரென்று கத்தினாள். கதிரேஷன் திடுக்கிட்டு உடனே திரும்பிப் பார்க்கவும், அங்கு ஏழடி உயரத்தில் ஜடாமுடி முகத்தை மறைக்க நின்ற கரும் உருவத்தைக் கண்டு அதிர்ந்தவனின் கையில் மாடு கட்டுப்பாடற்று ஓடி.. பக்கத்தில் உள்ள பள்ளத்தாக்கில் இறங்கியது.



இன்று..



மேசையில் முழங்கையை ஊன்றி.. கையில் இருந்த திருமண அழைப்பிதழைப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலியின் கண்களில் சிறு ஏக்கமும் ஆசையும் தோன்றி பின்.. நிராசை பரவியது.


சிறு பெருமூச்சுடன் மூட நினைத்தவள் மீண்டும் அதைப் பார்த்தாள். அப்பொழுது கதவைத் திறக்கும் கீறிச் என்ற ஓசை சத்தமாக கேட்கவும், பட்டென்று மூடியவள், டர் என்ற சத்தத்துடன் திறந்த மேசை இழுப்பறையில் வைத்து மூடி விட்டு தனது மதியீனத்தை அவளே திட்டிக் கொண்டாள்.


அவளது தாய் கயல்விழி “என்னது மைதிலி.. கல்யாண இன்வேடேஷன் மாதிரி இருக்கு! யாரோடது? யாருக்கு கல்யாணம்?” என்றவாறு மைதிலியின் அருகில் வந்து.. அவளே எடுத்துக் காட்டுவாள்.. என்று மேசை இழுப்பறையை பார்த்தவாறு நின்றார்.


ஆனால் மைதிலி “ஏன் அம்மா? என்ன விசயம்?” என்று வந்ததிற்காக காரணத்தைக் கேட்டு கவனத்தை திருப்ப முயன்றாள்.


கயல்விழி “உன் அப்பாவுக்கு ஃபோனை போடு மைதிலி! டைம் விடியற் காலையில நாலாக போகுது. அந்த காட்டுக்கு போக வேண்டானு சொன்ன கேட்காம நாலு ஆட்களைக் கூட்டிட்டு நேத்து பதினொரு மணிக்கு போனவர்.. இன்னும் வரலை. அவர் அங்கே போகும் போதெல்லாம் எனக்கு பக்கு பக்குனு இருக்கு..” என்றார்.


அன்னை கூறியதைக் கேட்டு தலையில் அடித்துக் கொண்ட மைதிலி “போன முறை போய் தானே மழையில் மாட்டிக்கிட்டு.. தலையில் அடி வாங்கிட்டு வந்தார். எத்தனைப் பட்டாலும் இவர் அடங்கி உட்கார மாட்டாரா..” என்றுவிட்டு தனது ஃபோனை எடுத்தவள், “டவர் கிடைக்குதா.. இல்லையான்னு தெரியலையே..” என்றவாறு அழைப்பு விடுத்தாள். அவ்விடம் எவ்வித சத்தமும் இல்லாதிருக்கவும், மீண்டும் தொடர்பு கொண்டாள். இம்முறை அழைப்பை ஏற்ற அவளது தந்தை மகேஸ்வரன் “எதுக்கு ஃபோனை போடற.. வீட்டு கிட்ட வந்தாச்சு..” என்று கர்ஜீத்துவிட்டு அழைப்பைத் துண்டித்தார்.


அதை கயல்விழியிடம் கூறவும், நிம்மதியுடன் நாற்காலியில் அமர்ந்தவர், முந்தானையை கொண்டு வீசியவாறு “ஏன் இன்னேரத்தில் எழுந்துட்டே மைதிம்மா! தூக்கம் வரலையா..” என்றுக் கேட்டவர், அவள் பதில் தரும் முன்.. “ஏன் ஃபேன் போடாம உட்கார்ந்திருக்கே.. ஃபேனை போடு..” என்றார்.


அதற்கு மைதில் இருகைகளையும் மார்பிற்கு குறுக்கே கட்டிக் கொண்டு “இந்த ஃபேன் ரெண்டு நாளா ஓடறதில்லை.” என்றாள்.


கயல்விழி சுற்றிலும் பார்த்தாள்.


இரண்டு படுக்கையறை கொண்ட முழு வீட்டையே உள்ளடக்கி விடக் கூடிய அளவிற்கு வரவேற்பறை பால்கனி.. உடை மாற்றும் பகுதி.. என்று அனைத்தும் கொண்ட அறை தான்! சுருங்க கூறினால்.. இது இராஜ காலமாக இருந்தால்.. ஒரு இளவரசி.. தனது பணிபெண்களுடன் வசிக்கும் அளவிற்கு ஆடம்பரமான அறை தான்! ஆனால் பார்ப்பதற்கு பெரிதாக மட்டும் இருக்க.. அதற்குரிய ஆடம்பரமும் அலங்காரமும் எவ்வித வசதியும் இன்றி.. வெறிச்சென்று கிடந்தது. இது ஒரு காலத்தில் எல்லா வித ஆடம்பரம் அலங்காரமும் கொண்டதாக தான் இருந்தது. ஆனால் தற்பொழுது?


சுற்றிலும் பார்த்துக் கொண்டிருந்த கயல்விழியின் கண்ணில் உடை மாற்றும் பகுதியில் இருந்த விசிறியின் மேல் சென்றது. நான்கு மாதங்களுக்கு முன்.. அந்த விசிறி ஓடவில்லை என்று மைதிலி கூறிவிட்டாள். அதையே இன்னும் சரி செய்யாமல் இருக்கிறது. ஆனால் அவர்களது பரம்பரை என்ன பழுதடைந்ததை சரிச் செய்து.. பயன்படுத்தும் பரம்பரையா.. புதிதாக அல்லவா வாங்குவார்கள்.


ஆனால் அவர்களது தற்பொழுது நிலைமையில் சரிச் செய்து மாட்டக் கூட முடியவில்லை! பேரும் மட்டும் தான் இருக்கிறது ஜமீன்தார் குடும்பம், ஜமீன்தார் அரண்மனை என்று! ஆனால் அவர்களது வீட்டின் பொருளாதார நிலைமை கீழ் மட்டத்து மக்களின் வாழ்க்கைக்கும் கீழ்! மற்றவர்களிடம் வேலை செய்தால் அவர்களது கௌரவத்திற்கு இழுக்கு என்று மட்டும் தெரிந்த மைதிலின் தந்தைக்கு.. தாங்கள் வாழ உழைக்க வேண்டும் என்றுத் தெரியவில்லை. எனவே அன்றாட செலவிற்கும், ஜமீன்தார் பரம்பரை என்று ஜம்பம் காட்டிக் கொள்வதற்காகவும் செலவிற்கு என்று அவர்களின் ஒரே வருமானமாக குத்தகை பணத்தை செலவு செய்ய ஆரம்பித்தார்கள். நாளடைவில் குத்தகை நிலம் குத்தகை எடுத்தவருக்கே கை மாறிடவும்.. வருமானமின்றி செலவு மட்டும் செய்துக் கொண்டிருக்கவும்.. அவர்களின் அன்றாட செலவிற்கு பற்றாக்குறை ஏற்பட்டது. அப்பொழுது வருமானத்திற்கு உழைக்காமல் அரண்மனையில் இருந்த மதிப்பு மிக்க பொருட்களை விற்க ஆரம்பித்தார்கள். இவ்வாறு சொத்து கரைய கரைய மாளிகையும் பராமரிப்பு இன்றி.. இந்நிலைக்கு சென்றது.


முப்பது வருடங்களுக்காக குத்தகைக்கு கொடுத்த நிலத்தில் இருந்து வந்த வருமானம் என்று நன்றாக தான் இருந்தது. முன்பு இருந்த ஜம்பம் இல்லை என்றாலும்.. இதுவே போதும் என்று கயல்விழி இருந்த நிலையில்.. மகேஸ்வரனை மீண்டும் ஒரு ஜோசியக்காரன் வந்து கிளப்பி விடவும், மீண்டும்.. இந்த நான்கு வருடங்களாக அந்த மலையை குடைய ஆரம்பித்தார்கள். அன்றிருந்து அவர்களது பொருளாதார நிலை மட்டுமில்ல. அவர்களது வாழ்க்கையும் தடுமாறியது.


தன் அன்னையின் பார்வை சென்ற இடத்தை எல்லாம் பார்த்த மைதிலி "அம்மா! அப்பா வந்துட்டு இருக்கிறாராம் போய் பாரு.." என்றாள்.


சரி என்று எழுந்த கயல்விழியை பார்க்க மைதிலிக்கு பரிதாபமாக இருந்தது. கயல்விழியும் பெரும் செல்வந்தர் பெண் தான்.. மகேஸ்வரனின் பரம்பரை பேரை பார்த்து திருமணம் செய்து வைத்து விட இங்கு வந்து கஷ்டப்பட்டு புலம்பிக் கொண்டிருக்கிறார். அவளின் தந்தையின் மீது மைதிலிக்கு கோபம் வந்தது. கூடவே அவனது அண்ணனின் கையிலாகத்தனத்தில் எரிச்சல் வந்தது.


அவளது அண்ணன் கார்த்திகேயன் ஜமீன்தார் வீட்டு பிள்ளையாய் அந்த திமிரும் தெனாவெட்டுமாய் வளர்ந்துவிட்டான். குடும்பத்தின் பொருளாதார நிலை தாழவும்.. அவன் ஜம்பமாய் காட்டும் அவர்களது அரண்மனையும் பொலிவிழந்து போகவும்.. வீட்டில் கோவித்து சில சொத்துக்களை பிரித்து வாங்கிக் கொண்டு நகரத்தில் போய்.. குடும்பத்தின் பெயரை சொல்லி வாழ்ந்தான். சொத்துக்களை விற்று பணத்தில் ஒரு தொழில் தொடங்கியிருந்தால் ஆவது பிழைத்திருப்பான் ஆனால் அங்கு சென்று அந்த பணத்தில் ஆடம்பர மாளிகை வாங்கி.. ஆடம்பரமாக பெண்களும் மதுவுமாக வாழ்க்கை ஓட்டியவன்.. ஒரு பெண்ணை கூட மணந்தான். அந்த பெண்ணும் பெரும் செல்வந்தரின் பெண்ணே! பணம் கரையவும்.. வேறு சொத்துக்களை எழுதி வாங்க இரு வருடங்கள் கழித்து மனைவியுடன் சொந்த ஊருக்கு வந்தான். மகேஸ்வரன் இனி சல்லி காசு தர முடியாது என்றுக் கூறிவிடவும். அவனது மனைவி அவனை விட்டுச் சென்று விட்டாள். கார்த்திகேயன் வேறு வழியில்லாது.. அங்கேயே தங்கி விட்டான். ஆனால் தினந்தோறும் தந்தை மற்றும் அன்னையிடம் சண்டையிடுவான்‌.


கதவு வரை சென்ற கயல்விழி பின் நினைவு வந்தவளாய் “ஏதோ இன்வேடேஷன் கார்ட் வச்சு பார்த்துட்டு இருந்தியா.. யாரோடது அது..” என்றவாறு அருகில் வந்தார்.


இனி மறைப்பதற்கு இல்லை.. என்று அந்த திருமண அழைப்பிதழை எடுத்துக் காட்டினாள். அவளது தோழி ப்ரீத்தியின் திருமண அழைப்பிதழ் அது! கயல்விழி தனது கணவருடன் சண்டையிட்டு மைதிலியை கல்லூரி படிப்பை கோவையில் முடிக்க வைத்தார். கேம்பஸ் இன்டர்வியுவில் மற்றவர்களுடன் மைதிலிக்கும் நல்ல வேலை ஒன்று கிடைத்தது. ஆனால் மகேஸ்வரன் மகளை வேலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை. இதோ இந்த ப்ரீத்தி உடன் வேலை செய்தவனோடு காதல் ஏற்பட்டு.. திருமணத்திற்கு மறக்காமல் தோழியை அழைத்திருக்கிறாள்.


மைதிலிக்கு தோழியின் திருமணத்திற்கு செல்ல மிகவும்.. ஆசையாக இருந்தது. ஆனால் படிப்பு முடித்து நான்கு வருடங்கள் வீட்டில் இருந்துவிட்டு அவர்களின் முன் செல்ல சங்கடமாக இருந்தது. அதுமட்டுமில்லாது அவளது அன்னையின் புலம்பலும் ஒரு காரணம்!


அவள் எதிர்பார்த்தது போல்.. கயல்விழி அதைப் பார்த்ததும் “உன் பிரெண்ட்டிற்கு எல்லாம் கல்யாணம் ஆகுது. உனக்கு இருபத்தியாறு வயசாகிடுச்சு. உன் அப்பாக்கு அதைப் பற்றிக் கவலையே இல்லை. உன் அப்பா இன்னும் பெரிய பெரிய ஆட்களுக்கு கிட்ட இருந்து வரன் வரும் என்று நினைச்சுட்டார் போல! நம்ம ஆட்களாக பார்த்து.. என் அண்ணன் வரன்களை அனுப்பினா.. நம்ம அந்தஸ்துக்கு ஒத்துவரலைனு சொல்றார். ஆனா நம்ம அந்தஸ்து.. இப்போ என்ன நிலைமையில இருக்கு என்று உன் அப்பாக்கு எப்போ புரிய போகுது.” என்று ஆரம்பித்தார்.


அப்பொழுது மெல்லியதாக ஜீப் வரும் சத்தம் கேட்கவும், மைதிலி “அம்மா! ஜீப் சத்தம் கேட்குது. அப்பாவும் மாமாவும் வந்துட்டாங்க போல...” என்கவும், கயல்விழி விரைந்தார். பின்னாலே மைதிலியும் சென்றாள். ஏனெனில் அவளது தந்தையின் குரல் சரியில்லை.


வியர்க்க விருவிருக்க உள்ளே வந்த மகேஸ்வரன் எரிச்சலுடன் கையில் இருந்த பொருட்களை வீசி ஏறிந்தார். அந்த கடப்பாரை டக்கென்ற சத்தத்துடன் விழுந்தது.


அவருக்கு பின்னால் வந்தவன் “ஐயா! அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. எங்களோட வேலு எங்களுக்கு வந்தாகணும். உங்களை நம்பி தானே நாங்க வந்தோம்.” என்றான்.


தொப்பென்று ஷோபாவில் அமர்ந்த மகேஸ்வரன் “அதுதான் தேட வந்ததைத் தேடாம அவனை இத்தனை நேரம் தேடிட்டு கிடைக்காம தானே வந்திருக்கோம். வெளிச்சம் வந்ததும் அவனே அந்த காட்டை விட்டு வந்துருவான்.” என்று எரிச்சலுடன் கூறினார்.


படியிறங்கி வந்துக் கொண்டிருந்த கயல்விழி அவர்கள் பேசுவதைக் கேட்டதும் தலையில் அடித்தவாறு வந்தார்.


“அங்கே போகாதீங்க! போகாதீங்கனு சொன்னா கேட்கறீங்களா! இப்போ ஒரு ஆளை தொலைச்சுட்டு வந்திருக்கீங்க! அங்கே போனாலோ போயிட்டு வந்தாலோ ஏதாவது கெட்டது நடக்குதுனு தெரியுது தானே! பின்னேயும் ஏன் இப்படி வம்படியா போறீங்க! ஏன் இப்படி பேராசை பிடிச்சு.. உள்ளதையும் கெடுத்துக்கறீங்க..” என்றுச் சத்தமிட்டாள்.


அடுத்த நொடி ஆக்ரோஷத்துடன் எழுந்த மகேஸ்வரனின் கை கயல்விழியின் கன்னத்தை பதம் பார்த்தது.


“என்னடி சொன்னே! பேராசை படறேனா! என்னோட சொத்து எனக்கு வேணும்னு நான் நெனைக்கிறது பேராசையா! அது எங்க சொத்துடி! நாலு பெட்டி நிறையா தங்க நகைகளும், தங்க காசுகளுமா இருக்குதுடி! அதோட மதிப்பு இப்போ எவ்வளவுனு தெரியுமா! அது இருந்த.. இந்த மாதிரி நாலு அரண்மனையில இராஜா மாதிரி உட்கார்ந்துட்டே வாழ்க்கை நடத்தலாம்டி! எங்களோடதை திருடி போய் அந்த மலைக்காட்டுக்குள்ள எங்கயோ புதைச்சுட்டு.. எங்களையே அதுக்காக அலைய வச்சுட்டான்.” என்றுக் கோபத்தில் பற்களைக் கடித்தார்.


மகேஸ்வரனின் அடியில் தடுமாறிய கயல்விழியை மைதிலி தான் விரைந்து பிடித்து தனது கைவளைக்குள் வைத்துக் கொண்டாள். அவளது தந்தையின் கோபத்தைப் பற்றி அவளுக்கு தெரியும். அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்று அவளுக்கு தெரியும். எனவே இறுகிய முகத்துடன் தனது அன்னையின் முதுகை தடவிக் கொடுத்தாள்.


பின்னர் மாறாத கோபத்துடன் அங்கு மாட்டப்பட்டிருந்த தனது தந்தை, தாத்தா மற்றும் சித்தப்பா படத்திடம் சென்றவர், அந்த படங்களை எடுத்து கீழே வீசினார்.


“முட்டாள்கள்! திருடனவனைப் பிடிச்சு எங்கே புதைச்சு வச்சுருக்கான் என்கிற விசயத்தை வாங்காம.. கொன்னு போட்டிருக்காங்க..! நானா இருந்திருந்தா.. அவனோட கடைசி சொட்டு இரத்தம் இருக்கிற வரை சித்திரவதை செய்து விசயத்தை வாங்கியிருப்பேன்.” என்று கண்கள் சிவக்க கூறிய அடுத்த நொடி.. இறந்தவர்களின் படங்கள் மாட்டப்பட்டிருந்த சுவற்றின் மேல் மாட்டிப்பட்டிருந்த பழைய அலங்கார விளக்கு சரியாக மகேஸ்வரனின் முன் விழுந்து நொறுங்கியது.



 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 2


(பொருளடக்கம்)

வீழ்ந்தவர்களின் எண்ணிக்கை காணுவீர்!

வீழாதவர்களின் எண்ணங்களை காணுவீர்!

பாவத்திற்கு பரிகாரத்தின் இருவகையும் காணுவீர்!



தனது காலிற்கு முன் விழுந்த விளக்கை பார்த்து மகேஸ்வரன் திகைத்தது ஒரு நொடி தான்! மறுகணமே இன்னும் வெறிக் கொண்டவராய்.. சுற்றிலும் மேலே பார்த்து கத்த ஆரம்பித்தார்.


“ஏய் மாறா! எங்கே இருக்கே! நீ என்ன புதையல் காக்கிற பூதமா! யார் சொத்துக்கு யார்டா காவல் காக்கிறது? தைரியம் இருந்தால் நேரில் வாடா! என்ன என் கிட்டவே விளையாடுகிறாயா! நீ புதையலை காக்கிற ஆத்மா!” என்றுவிட்டு கடகடவென சிரித்தார்.


பின் “அந்த கதையை கட்டிவிட்டதே என் தாத்தா தான்! மாறன் திருடினதை அந்த காட்டுக்குள்ள தான் புதைச்சு வச்சுருக்கான் என்று கிராமத்து சனங்களுக்கு தெரியும். அந்த பேராசை பிடித்த சனங்க வந்திர போறாங்கனு தான்.. அப்படியொரு கதையைக் கட்டிவிட்டார். அதை வச்சுட்டு எவன்டா.. எங்களுக்கே ஆட்டம் கட்டறது?” என்றுக் கர்ஜீத்தார்.


உடனே கயல்விழி மைதிலின் பிடியில் இருந்து விடுப்பட்டு “அப்போ உங்க தாத்தாவை யார் கொன்னது? உங்க தாத்தா தானே அந்த பேய் கதை கட்டினார். ஆனால் அவர் இரத்தம் கக்க அந்த மலைக்காட்டு பாறையில கிடந்தார். அது எப்படி! அடுத்து அடுத்து உங்க வீட்டுல நடந்த சாவு எல்லாம் எப்படி நிகழ்ந்தது. எல்லாரும்.. அந்த மலைக்காட்டுக்குள் போய் மர்மமாய் தானே இறந்தாங்க! இதெல்லாம் எதுக்கு! சனங்களே ஜடா முடியோட.. பெரிய கரும் உருவத்தைப் பார்த்திருக்கிறதா சொல்றாங்க! லைன்னா ஒவ்வொரு சாவா விழவும்.. என் மாமனார் உன் அப்பா.. தேடற வேலையை நிறுத்தி வைக்க சொன்ன பிறகும்.. அங்கே இன்னும் அந்த ஆத்மா உலாவுவதை நிறையா பேர் பார்த்திருக்காங்க! அதுக்கு பிறகு முப்பது வருஷம் அமைதியா தானே இருந்தீங்க.. ஏன் இந்த நாலு வருஷம் மறுபடியும் ஆரம்பிச்சீங்க! அதனால என்னோட குலோத்துனார் உங்களோட தம்பி இறந்தார் தானே! அப்போ ஆவது அதை எச்சரிக்கையா எடுத்துட்டு விட்டுருக்க வேண்டியது தானே! ஆனா நிறுத்தாம அந்த காட்டை தோண்டி பார்த்துட்டு இருக்கீங்க! அதுனால நீங்க ஒவ்வொரு தரம் போகும் போதும்.. எதாவது கெட்டது நடக்குது அது பொய்யா! நீங்க மறுபடியும் தேட ஆரம்பிச்சதில் இருந்து.. நம்ம வீட்டில் எந்த நல்ல காரியமும் நடக்கலைங்க! வேண்டாங்க விட்டுருங்க! அந்த ஆத்மா குடும்பம் மொத்தத்தையும் அழிக்கறதுக்கு முன்னாடி விட்டுருங்க..” என்று அழுதார்.


மகேஸ்வரன் “என்ன கயலு சொல்றே! என்னோட சொத்தை விடச் சொல்றீயா..” என்றார்.


உடனே கயல்விழி “அதுல பாதி தான் உங்க குடும்பத்துக்கு சேர்ந்தது. மீதியெல்லாம் சனங்களை ஏமாத்தி அநியாய வட்டிக்கு வாங்கியது. அதுதான் மாறன் வந்து திருடிட்டு போயிட்டார்.” என்றார்.


உடனே மகேஸ்வரன் “என்ன சொன்னே..” என்று மீண்டும் அடிக்க கையை ஓங்கவும், மைதிலி முன்னே வந்து.. தனது அன்னையை இழுத்துக் கொண்டாள். பின் வெறுப்புடன் சுற்றிலும் பார்த்தாள். அவளது மாமா கணேஷும், அத்தை சாந்தியும் வேடிக்கை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.


அப்பொழுது “என்ன மாறனா! வந்திருக்கானா அவன் எங்கே அவன்? என் குடியை கெடுத்தவனை சும்மா விட மாட்டேன். என் கையாலேயே கொல்வேன்.” என்றவாறு மகேஸ்வரனின் தந்தை தள்ளாடியவாறு வந்தார். அவரது பின்னாலேயே வந்த பெண் ஒருத்தி.. “இன்னேரத்துல அமைதியா இருக்க மாட்டிங்களா! உங்களால ஐயா எழுந்துட்டாங்க. இப்போ நீங்க தான்.. ஐயாவை இழுத்துட்டு வந்து ரூமுக்குள்ள விட்டு சாத்தணும்.” என்றுச் சலிப்புடன் கூறினாள்.


எண்பது வயதைத் தாண்டிய மகேஸ்வரனின் தந்தை சத்தியமூர்த்தியை பார்த்துக் கொள்ள என்று ஏற்பாடு செய்யப்பட்ட பெண் அவர்! வயது சோர்வு தவிர சில சமயங்களில் அவரது மனநிலை இவ்வாறு சரியில்லாது போகும். எனவே அவரைப் பார்த்துக் கொள்ள கற்பகம் என்ற இந்த மத்திய பெண்மணியை தவிர யாரும் முன் வரவில்லை. அதனால் சில சமயம் சலித்துக் கொண்டு பேசுவதை இவர்கள் பொருட்படுத்துவது இல்லை.


“மாறன் எங்கே?” கேட்டவாறு வந்த சத்தியமூர்த்தி மகேஸ்வரன் கூட்டி வந்த ஆட்களில்.. ஒருவனை நோக்கி வேகமாக சென்றார். அவனது சட்டையை எட்டிப் பற்றி “டேய் மாறா! உன்னை சும்மா விட மாட்டேன்டா!” என்று உலுக்க ஆரம்பித்தாா்.


ஏற்கனவே கோபத்தில் இருந்த மகேஸ்வரன் “இந்த கிழவனை உள்ளே இழுத்துட்டு போய் கதவை சாத்துங்க..” என்றுக் கத்தினார். ஆனால் ஏற்கனவே தங்களுடன் வந்தவன்.. காணவில்லை என்ற பயத்திலும் கோபத்திலும் இருந்தவர்கள் அமைதியாக இருந்தார்கள். மகேஸ்வரன் சிறுப் பிள்ளையாக இருந்ததில் இருந்து வேலை செய்துக் கொண்டிருக்கும் ஏழுபது வயதை அடைந்த முனுசாமி தள்ளாடும் நடையுடன் வந்து.. “ஐயா வாங்க! என்று சத்தியமூர்த்தியை அழைத்துக் கொண்டு சென்றார். கற்பகமும் கயல்விழியும் உதவி செய்யவும்.. சத்தியமூர்த்தி அவரது அறைக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். உடனே கற்பகம் கதவை சாத்திக் கொண்டார்.


சாந்தி தற்பொழுது முன்னே வந்து “அண்ணி சொல்றதும் உண்மைத்தான் அண்ணா! ஏதோ தீயச் சக்தி அங்கே கண்டிப்பா இருக்கு! நம்ம குடும்பம் நல்லாயிருக்கணும் என்றால்.. ஒரு பெட்டியில் இருக்கிற நம்மளோட குலத்தெய்வ சிலை வீட்டுக்கு வரணும் என்றுச் சொன்ன ஜோசியர் கிட்டவே தீய சக்தியை அகற்றவும் எதாவது கேட்கணும் அண்ணா!” என்றார்.


அதைக் கேட்ட மகேஸ்வரன் “நீயும் அதை நம்பறீயா..” என்றுக் கேட்டார்.


அதற்கு சாந்தி “நம்பாமல் இருக்க முடியலை. போன முறைக்கு முந்தின முறை.. அதாவது போன மாசம் நைட் போன போது.. என் வீட்டுக்காரர் அந்த அந்த உருவத்தைப் பார்த்தாரே! அதுனால தான் போன தடவை வரலைனு சொன்னார். ஆனா ஒருவேளை பெட்டி கிடைச்சுட்டா.. நீ தனியா எடுத்து வச்சுட்டு.. கிடைக்கலைனு சொல்லிட்டா என்ன செய்ய.. அதுதான் இந்த தடவை வேற வழியில்லாம உங்க கூட வந்தார்.” என்றாள்.


அதைக் கேட்டு வெறுப்புடன் அவளைப் பார்த்த மகேஸ்வரன் “முதல்ல கிடைக்கிறதுக்காக எதாவது செய்யணும். ஒண்ணும் செய்யாம பயத்துல அழற கோழை எல்லாம் அங்கே வர வேண்டாம்.” என்றார்.


தன்னை கோழை என்றதும்.. வெகுண்ட கணேஷன் “கூடப் பிறந்த அண்ணன் குடும்பம் மொத்த பேரையும் வீட்டை விட்டு துரத்தின உங்களை எல்லாம் எங்களால் நம்ப முடியாது.” என்றார்.


உடனே மகேஸ்வரன் “என் மேல் நம்பிக்கை இல்லைன்னா.. நீ தனியா போய் தேடிக்க வேண்டியது தானே! இன்னும் ஏன் என் முதுகில் சவாரி செய்துட்டு இருக்கீங்க..” என்று எரிச்சலுடன் கேட்டார்.


அப்பொழுது கணேஷன் மற்றும் சாந்தியின் மூத்த மகன் ரவீந்தர் மாடியில் இருந்து கோபத்துடன் இறங்கி வந்தான்.


“எதுக்கு! இப்படித்தான் பெரிய மாமா குடும்பத்திடம் எதாவது சாக்கு சொல்லி சண்டை போட்டு துரத்தி விட்டிங்க.. அந்த மாதிரி.. எங்களையும் துரத்தி விட்டுட்டு மொத்தத்தையும் நீங்களே எடுக்கிறதுக்கா! நடக்கிறது எல்லாம் சரியில்லை. அதுக்கு எதாவது பரிகாரம் செய்யணும் என்றுத் தானே. அம்மா சொல்றாங்க! உங்களுக்கும் சேர்த்து தான் அம்மா சொல்றாங்க! ஆனா நீங்க தான் தனியா பிரிச்சு பேசறீங்க..” என்றான்.


மகேஸ்வரன் “சின்னவன் நீயெல்லாம் எனக்கு அறிவுரை சொல்லற மாதிரி வந்திருச்சா! என்னோட அண்ணனால் தான் என்னோட இன்னொரு தம்பியை இழந்துட்டு நிற்கிறேன்.” என்றுக் கர்ஜீத்தார்.


கணேஷன் “ஆனா அவனோட இறப்புக்கு நீதான் காரணம் என்று அவங்க சொல்றாங்க..” என்று இளக்காரத்துடன் கூறினார்.


அப்பொழுது “ப்ளீஸ் ஸ்டாப் இட்..” என்று ஓங்கிய குரலில் மைதிலி கத்தினாள்.


அனைவரும் அவளைப் பார்க்கவும், “பொதுவா.. உலகம் தான் நிம்மதியில்லாத இடம்.. அவங்களுக்கு எல்லாம் வீடு தான் நிம்மதியை தர இடம்! ஆனா இங்கே எல்லாம் தலைகீழா இருக்கு! குடும்பமா இது! எல்லாருக்கும் பாசம், அன்பு, நம்பிக்கை என்று எதாவது இருக்கா! பணமும் நகையும் தானே பெருசா தெரியுது. அப்போ எல்லாரும் இப்படித்தான் அடிச்சுக்கிட்டு ஒருத்தரை ஒருத்தர் நம்பாம சண்டை போட்டு நீங்களும் நிம்மதியா இல்லாம மற்றவங்களையும் நிம்மதியா இருக்க விட மாட்டிங்க! இன்னும் பழைய கௌரவத்தை தலையில் கட்டிட்டு எதிர்காலத்தைப் பற்றி யோசிக்கறீங்களே தவிர.. யாரும் இப்போ வாழப் போற வாழ்க்கையைப் பற்றி யாரும் யோசிக்கிறது இல்ல! எப்போ பாரு.. யார் நம்ம காலை வாரி விடப் போறாங்க என்கிற மாதிரி.. எதிரியை பார்க்கிற மாதிரியே ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டு சண்டை போட்டுட்டு இருக்கீங்க! பறக்கிறதுக்கு ஆசைப்பட்டு இருக்கிறது போன கதை மாதிரி தான் நம்ம பேலஸ் இருக்கு! ஆனா அதைப் பற்றி எல்லாம் கவலைப்படாம என்னேரமும் புதையல், ஆத்மா, துரோகம், பழிக்கு பழி என்று ஒரே நெகட்டிவ் வைப்பா இருக்கு! எனக்கு தலையே வெடிச்சுரும் போல இருக்கு! என்னால முடியலை.” என்றுக் கத்திவிட்டு மாடிப்படி ஏறிச் சென்றாள்.


அழுகையும் கோபமுமாக தனது அறைக்குள் சென்ற மைதிலி.. தலையைத் தாங்கியவாறு அமர்ந்துவிட்டாள். அவளது கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது. சில நிமிடங்கள் சென்ற நிலையில் ஒரு கரம் அவளது தலையை மெல்ல வருடிவிட்டது. மெல்ல நிமிர்ந்த மைதிலி.. அந்த கரத்தை எடுத்து தனது கன்னத்திற்கு அடியில் வைத்துக் கொண்டு அருகில் அமர்ந்திருந்த கயல்விழியின் மடியில் படுத்துக் கொண்டாள்.


கயல்விழி “அடக்கி வச்சு அடக்கி வச்சு.. நீ இப்போ தான் ஆரம்பிச்சுருக்கே! ஆனா நான் ஆரம்பிச்சு.. கத்தி ப்ரோஜனமில்லனு ஓய்ந்து போயிட்டேன். அப்பவும் சில சமயம் இன்னைக்கு கத்தின மாதிரி கத்திருவேன்.” என்றுக் கசந்த சிரிப்பைச் சிரித்தார்.


மைதிலி “அப்போ இதுக்கு தீர்வே இல்லையா அம்மா! மற்றவங்களைப் பார்க்கும் போது எனக்கும்.. என் குடும்பம் சிரித்து பேசி.. நல்லாயிருக்கணும் என்று இருக்கும் தானே” என்றாள்.


அதற்கு கயல்விழி “மலைக்காட்டுக்குள்ள புதைத்த பெட்டிகள் கிடைத்தால் தான் இவங்களோட ஆர்ப்பாட்டத்திற்கும் முடிவு வரும்.” என்றார்.


முகம் கசங்க மைதிலி நிமிர்ந்து தனது அன்னையை நிமிர்ந்து பார்த்தாள். அவளது கன்னத்தை வருடி விட்ட கயல்விழி “அதுவரை நீ அவங்களைப் பற்றி நினைச்சுட்டு இருக்காம நீ உன் வாழ்க்கையை வாழு மைதிம்மா..” என்றார்.


மைதிலி “எப்படிம்மா!” என்று மீண்டும் மடியில் படுத்துக் கொள்ளவும், கயல்விழி “கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி ஒரு இன்வேடேஷன் கார்ட் காட்டினியே.. அங்கே போயிட்டு வாடா! கொஞ்ச நாள்.. இங்கிருந்து போனால் உனக்கு கொஞ்சம் நல்லாயிருக்கும்.” என்றார்.


மைதிலி “இல்லம்மா! நான் போகலை.” என்றாள்.


கயல்விழி “ஏன்டா!” என்றுக் கேட்கவும், மைதிலி “அவங்களுக்கு.. இந்த இடைப்பட்ட நாலு வருஷம் நடந்ததைச் சொல்றதுக்கு நிறையா விசயம் இருக்கு. ஆனா எனக்கு இல்லையே அம்மா..” என்றாள்.


அதற்கு சிரித்த கயல்விழி “இன்னும் சின்ன பொண்ணாவே இருக்கிற.. உன்னை வெளி உலகுகிற்கு அனுப்பாமல் உன் அப்பா உன்னை சுருங்க வச்சுட்டார். என்ன தான்.. இவங்க இப்படி இருந்தாலும் இது பெரிய பெயர் பெற்ற பரம்பரை.. இதுல இந்த ஜெனரெஷன்ல வந்த ஒரே பெண் குழந்தை நீ! இந்த ஜமீனின் இளவரசிடா! அந்த தோரணையோட போயிட்டு வா..” என்றார்.


அதைக் கேட்டு சிரித்தவாறு எழுந்த மைதிலி “என்னம்மா! நீயும் கிண்டலடிக்கிறே..” என்று எழுந்தமர்ந்தாள்.


கயல்விழி “எதைப் பற்றியும் யோசிக்காம போயிட்டு வா! நீ பார்க்க மட்டுமில்ல.. பழகவும் அழகானவா மைதிம்மா! தானா எல்லாரும் உன்கிட்ட வந்து பேசுவாங்க பாரு! கல்யாணவிழாவை முடிச்சுட்டு வரும்போது.. நிறையா பிரெண்ட்ஸையும், சந்தோஷத்தையும் சம்பாதிச்சுட்டு தான் வரப் போறே!” என்றார்.


மைதிலி துள்ளியவாறு எழுந்து “அப்போ நான் வேணுங்கிறதை எடுத்து வைக்கவா..” என்றாள். கயல்விழி சரியென்று தலையை ஆட்டவும், விரைந்து சென்றாள். அவளை அன்புடன் பார்த்துவிட்டு தனது அன்றாட வேலைகளைப் பார்க்க சென்றார்.


காலை ஒன்பது மணியிருக்கையில் மைதிலி பெட்டிகளுடன் கீழே இறங்கி வந்தாள். மூன்று மணி நேரத்திற்கு முன்.. மனமும் இடமும் இருட்டி காணப்பட்ட இடத்தில் தற்பொழுது வெளிச்சம் பரவியிருக்க.. ஆனால் மனதில் வெளிச்சம் பரவாமல் முகம் இறுக அவளது தந்தை ஒரு பக்கம் அத்தையின் குடும்பம் ஒரு பக்கம் அமர்ந்திருந்தது. அவளது அண்ணன் கார்த்திகேயன் இன்னும் உறங்கி எழுந்து அவனது அறையை விட்டுக் கூட வெளியே வரவில்லை.


மைதிலி கீழே வரவும்.. கயல்விழி புன்னகையுடன் அவளை நோக்கி வந்தார். மகளைப் பார்த்ததும் நிமிர்ந்துப் பார்த்த மகேஸ்வரன்.. அவள் வெளியே கிளம்ப தயாராக வந்ததோடு மட்டுமில்லாது.. பெட்டியுடன் வந்திருப்பதைப் பார்த்து புருவத்தை உயர்த்தியவாறு விருக்கென்று எழுந்தார்.


உடனே கயல்விழி அவசரமாக இடைப்புகுந்தார்.


“தப்பா எல்லாம் நெனைச்சுக்காதீங்க! அவ பிரெண்டோட மேரேஜ் கோவையில நாளைக்கு நடக்குது. அதுக்கு தான் போறா! போயிட்டு நாளை மறுநாள் அங்கிருக்கிற பிரெண்ட்ஸ் எல்லாம் பார்த்துட்டு வந்திருவா..” என்றார்.


அதற்கு மகேஸ்வரன் அங்கெல்லாம் எதற்கு போகிறாய் என்றுக் கேட்க வாயைத் திறந்துவிட்டு.. தனது முகத்தைக் கூடப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டு நின்றிருந்தவளைப் பார்த்துவிட்டு.. நாளைக்கு தானே கல்யாணம் நாளைக்கு போனா பத்தாதா..” என்றுக் கேட்டார்.


அதற்கு கயல்விழி “காலேஜ்ல படிக்கும் போது.. அங்கேயே ஹாஸ்டல்ல தங்கி படிக்க ஒத்துக்க மாட்டேன்னு சொல்லிட்டிங்க.. தினமும்.. இங்கிருந்து ஒன்றரை மணி நேரம் கார்ல போய் படிச்சுட்டு வந்தா.. இப்போ கல்யாணத்துக்கு தானே போகிற.. விடுங்களேன்.” என்றுச் சிறுக் கோபத்துடன் கூறவும், மகேஸ்வரன் அமைதியாக அமர்ந்துவிட்டார்.


அவரது மனதில்.. இதுவரை அவரோடு பத்து நாட்களுக்கு ஒரு தரம்.. மலைக்காட்டில் புதைக்கப்பட்ட பெட்டிகளைத் தேடிப் பார்க்க வரும்.. ஆட்களில் ஒருவன் காணாமல் போனதால்.. மற்றவர்கள் இனி அவருடன் வர முடியாது என்றுக் கூறிச் சென்றுவிட்டார். இனி என்ன செய்வது என்று அதைப் பற்றிய யோசனையே ஓடிக் கொண்டிருந்தது. இதுவரை உதவிய அந்த மூவருக்கு.. இதைப் பற்றி யாரிடமும் கூறக் கூடாது என்றுக் கூறி பெரும் தொகையை கொடுத்து.. காணாமல் போனவன், விரைவில் கிடைத்துவிடுவான் என்றுக் கூறி அனுப்பினார். ஆனால் அவர்கள் எந்தளவிற்கு இரகசியம் காப்பார்கள் என்றும் சந்தேகத்துடன் அமர்ந்திருந்தார். அதனால் எங்கே போகிறாய் என்ற கேள்வி மேல் மகளைப் பற்றிய அக்கறை அவருக்கு இருக்கவில்லை.


எப்பொழுதும் அவளை காலேஜ்ஜில் கொண்டு போய் விட்டு கூட்டிட்டு வரும் மாணிக்கமே.. இம்முறையும் அவளைக் கொண்டு போய் விட.. வந்திருந்தார். ஆம் வந்திருந்தார் தான்.. அவர் தற்பொழுது அவர்களுடன் பணி புரியவில்லை. மகளைப் போல் பார்த்து பழகிவிட்ட மைதிலிக்காக வந்திருந்தார். அவர் மகளைப் பத்திரமாக அழைத்துச் சென்று வருவார் என்று கயல்விழி தான் அவரை அழைத்திருந்தார்.


மைதிலி காரில் ஏறியமர்ந்ததும்.. அவளது கையில் ஐம்பதாயிரம் பணக்கட்டை அழுத்திய கயல்விழி “உன் அப்பா கிட்ட இருந்து பாதுகாத்தது. ஒரு காலத்தில் இந்த பணம் என் இலாப பங்கா மாதம் மாதம் என் அப்பா கொடுப்பார். இப்போ என் மகளுக்கு செலவிற்கு கொடுக்கிறேன். நிலைமை ஏறும் என்றுப் பார்த்தால் இறங்கியிருக்கு..” என்று கலங்கிய கண்களைத் துடைத்துவிட்டு மைதிலியை வழியனுப்பி வைத்தார்.


தனது ஜமீன் மாளிகையை திரும்பிப் பார்த்தவாறு சென்ற மைதிலியின் மனதில் ஏனோ இந்த பயணம் பெரும் மாற்றத்தை கொடுக்கும் என்ற எண்ணம் தோன்றியது.


சாலையில் வழுக்கிக் கொண்டு சென்றுக் கொண்டிருந்த காரின் கண்ணாடி வழியாக இரவில் பயமுறுத்தும் அந்த மலைக்காடு.. தற்பொழுது பச்சை பசலென்று காட்சியளித்தது. அதை வெறித்தவாறு வந்துக் கொண்டிருந்தாள்.


அவளது பார்வையை பின்னால் பார்க்கும் கண்ணாடியின் வழியாக பார்த்த மாணிக்கம் “ஏன் சின்னம்மா! ஒரு மாதிரி இருக்கீங்க! அங்கே இன்னும் அந்த ஆத்மா இருக்கு என்று நினைக்கறீங்களா! என்ன கேட்ட அந்த ஆத்மா கொடுத்த சாபம் தான்.. ஜமீன் பரம்பரையே இப்படி ஆகிருச்சுங்க! நீங்க எப்படியாவது நல்ல பரம்பரையோட கலந்திருங்க! அதாவது நல்ல பையனா பார்த்து கல்யாணம் செய்துக்கோங்க. அப்போ தான் அந்த பையன் செய்த நல்ல கர்ம வினைகளால் அவரோட மனைவியான உங்களை.. இந்த சாபம் பாதிக்காதுங்க..” என்றுத் தன்போக்கில் கூறிக் கொண்டே போனார்.


மைதிலி என்னவென்று கூறுவாள். அவனது தாத்தா தான் அங்கு ஆத்மா உலாத்துக்கிறது என்று பொய் கதையைக் கட்டிவிட்டார் என்று கூறுவாளா.. இல்லை.. அந்த பொய் கதை உண்மையாகி.. அவளது குடும்பத்தின் உயிர்களையும் வளத்தையும் சிறிது சிறிதாக அழித்து வருகிறது என்றுக் கூறுவாளா! இன்னும் அவளது குடும்பத்தினர் வெறிக் கொண்டாற் போன்று பெட்டிகளை தேடிக் கொண்டு இருக்கிறார்கள் என்றுக் கூறுவாளா! எனவே பெருமூச்சை ஒன்றை இழுத்துவிட்டவள்,


“எனக்கு.. இந்த ஆத்மா! சாபம்! கல்யாணம்! கர்ம வினை! என்று சொன்னது எல்லாத்தைப் பற்றியும் ஒன்றும் தெரியாது மாணிக்கம் மாமா! ஆனா.. நாங்க நிறையா பாவத்தை சுமந்துட்டு இருக்கிறோம் என்று மட்டும் தெரியுது. அந்த பாவத்தை நான் சரி செய்யணும்.” என்று மட்டும் கூறினாள்.


ஒன்றரை மணி நேரத்தில்.. அவர்களது அறத்தூரை கடந்து கோபியில் இருந்து கோவை செல்லும் பைபாஸ் சாலையின் வழியாக கோவையை சென்றடைந்தது. அவளது தோழியின் திருமணம் ரெஸிடன்ஸில் நடைப்பெற இருப்பதால்.. அங்கேயே மைதிலிக்கும் தங்க அறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.


அவளை அங்கு விட்ட மாணிக்கம் அருகில் இருக்கும் சிறு லாட்ஜ்ஜில் தான் தங்கிக் கொள்வதாகவும், எங்கேனும் செல்வதாக இருந்தால் ஃபோன் செய்து அழைக்குமாறு கூறிவிட்டு சென்றார்.


உள்ளே சென்று வரவேற்பறையில்.. மைதிலிக்கு அவளது தோழி அனுப்பிய விபரத்தை காட்டியதும்.. அறையின் எண்ணை கூறினர். பணியாள் ஒருவன் வந்து அழைத்துச் சென்றான்.


அவளது பெட்டிகளுடன் பணியாள் முன்னால் நடக்க.. தான் கோவை வந்துவிட்டதாக தனது தோழிகளுக்கு செய்தி அனுப்பியவாறு மைதிலி அவனின் பின்னால் சென்றாள். லிப்டில் அந்த பணியாள் ஏறவும்.. அவளும் சென்றாள். மேலும் லிப்டில் சிலர் ஏறினார்கள். அப்பொழுது அவளது தோழிகள் அவள் கோவை வந்ததை நம்ப முடியாமல் ஆச்சரியத்தில் மகிழ்ச்சியுடன் தகவல்களை அனுப்பினார்கள். எனவே அவற்றை பார்த்தவாறு ஒதுங்கி நின்ற.. மைதிலி அவர்களுக்கு பதில் அளித்தவாறு வந்தாள். லிப்ட் நின்றதும் நிமிர்ந்த மைதிலி பணியாளன் வெளியே செல்வதைப் பார்த்தவள் அவளும் அவனின் பின்னால் சென்றவாறு மீண்டும் செல்பேசியில் ஆழ்ந்தாள்.


பணியாளன் ஒரு அறையின் முன் நின்றதும் நின்றவள்.. ஏதோ தோன்ற திரும்பிப் பார்த்தாள். அவளுக்கு அருகே டிப்டாப்பாக உடையணிந்தவாறு நின்றிருந்த ஒரு இளைஞன் “சோ நீங்களும் என் கூட இந்த ரூமில் ஸ்டே செய்ய விரும்பறீங்களா..! கூல்!” என்றுச் சிரித்தான்.


அவன் கூறியதைக் கேட்டு “என்ன” என்று அதிர்ந்தவள், அறையின் எண்ணை பார்த்தாள். அது 5A15 என்று இருந்தது. அவளது அறையின் எண் 5A25. எப்படி இங்கு வந்தேன் என்றுத் திகைத்து சுற்றிலும் பார்த்த பொழுது.. அந்த காரிடரின் ஆரம்பத்தில் நின்றிருந்த பணியாள் அவளை நோக்கி வந்துக் கொண்டிருந்தான்.


அப்பொழுதே.. செல்பேசியில் ஆழ்ந்தவள். பணியாளின் சீருடையை பார்த்தவாறு.. இன்னொருவரின் பணியாளின் பின்னால் வந்திருக்கிறாள் என்று தெரிந்தது.


“ஸாரி! ஸாரி!” என்று அவள் திணறுகையில் அவன் குறும்புடன் சிரிக்கவும், அங்கிருந்து செல்வது உத்தமம் என்று திரும்பியவள், ஒற்றை கண்ணை மூடி உதட்டை கடித்தவாறு ஓடினாள். அவள் ஓடிச் சென்று மறையும் வரை பார்த்திருந்து விட்டு அந்த இளைஞன்.. அவனது அறைக்குள் நுழைந்தான்.



—--------------------------


மகேஸ்வரனின் சந்தேகம் சரியே என்பது போல்.. அவரிடம் இனி பணி புரிய மாட்டோம் என்றுக் கூறிய வேலையாட்கள்.. மூவரும் பதினொரு மணியளவில் மழை பெய்வதற்கான அறிகுறியுடன் இடி மின்னல்களுடன் கூடிய மழைக்காற்று வீசிக் கொண்டிருக்க.. அவற்றை பொருட்படுத்தாது அவர்கள் அந்த மலைக்காட்டில் ஏறிக் கொண்டிருந்தார்கள். மிகவும் கரடு முரடான அந்த பாதை.. இயற்கை சீற்றங்களான மழை பெய்வதற்கான அறிகுறிகளால் மேலும் அவர்களது பயணத்தை கடினமாக்கியது. ஆனால் கையில் டார்ச்சர் லைட்டுடன் அவர்களின் பேராசை அவர்களை நடக்க வைத்தது.


சிறு சிறு இடைவெளி விட்டு வந்துக் கொண்டிருந்தவர்களில் முதலாவது சென்றுக் கொண்டிருந்தவன் “ஒரு வழியா மேலே வந்துட்டோம். இப்போ இது வழியா கீழே இறங்கி அந்த மலையின் அடிவாரத்திற்கு போயிட்டா.. கொஞ்சம் கொஞ்சமா தினமும் தோண்டி பார்த்திர வேண்டியது தான்! ஏன்னா இந்த மலையை புரட்டி போட்டு பார்த்தாச்சு!” என்றான்.


அப்பொழுது அவனுக்கு பின்னால் வந்தவன், “மணி! அங்கே தான் இருப்பானா..” என்றுக் கேட்டான்.


அதற்கு முதலாவது சென்றவன் “அப்படித்தான் நினைக்கிறேன். அவனா காணாம போற ஆள்! அவன் தனியா தேடப் போயிருப்பான் என்றுத் தான் தெரியுது.” என்றவாறு கீழே இறங்க தயாரானான். அப்பொழுது மின்னிய மின்னலில் அவனுக்கு முன் இருந்த புதரில் மணியின் சடலத்தைக் கண்டு அதிர்ந்தவன், மற்றவர்களிடம் சொல்ல திரும்பிய பொழுது.. இடி ஒன்று கடைசியாக வந்தவனின் மேல் இறங்க அவன் சுருண்டு விழுந்தான்.


அப்பொழுது அடுத்து மின்னிய மின்னலில் அடுத்து இருந்த மலையின் உச்சியில் ஒரு உருவம் நின்றுக் கொண்டிருந்தது.




 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 3


(பொருளடக்கம்)

மணம் காண வந்தவள்

மனம் தடுமாறுவதை காண்பீர்!

மனம் பற்றி அறியா

மனம் குழப்புவதையும் காண்பீர்!



மைதிலி குளித்துவிட்டு தயாராகிய போது.. சரியாக அழைப்பு மணி அடித்தது. யார் என்றுப் பார்ப்பதற்காக கெமராவை ஆன் செய்தவள், அதில் தெரிந்தவர்களைப் பார்த்துவிட்டு… குதுகலத்துடன் கதவைத் திறந்தாள். ஏனெனில் வெளியே நின்றிருந்தவர்கள் அவளது காலேஜ் தோழிகள்! நான்கு வருடங்களுக்கு பின் பார்த்ததில் மைதிலியை அவர்கள் கொண்டாடினார்கள். அவளது அழகும் நிறமும் கூடியிருப்பதாக கூறி புகழ்ந்தார்கள். ஏன் ஃபோன் கூடப் பேசுவதில்லை.. என்று குறை கூறினார்கள். இனி தொடர்பில் இருக்க வேண்டும் என்றுக் கேட்டுக் கொண்டார்கள். பின்.. அனைவரும் கல்யாண பெண்ணின் அறைக்கு சென்றார்கள்.


அங்கு சாப்பிட்டு விட்டு.. மாலை நடைப்பெறும் வரவேற்பிற்கு தயாராக சென்றார்கள். நாம் அனைவரும் ஒரே வண்ணத்தில் உடை அணியாலாம் என்று போத்தீஸ் கடைக்கு சென்றவர்கள்.. நான்கு பேரும் ஒரே வண்ணத்தில் லெஹன்கா உடையை தேர்வு செய்தார்கள். அழகுப்படுத்துதல் என்று ஒன்று இருப்பதையே மறந்துப் போயிருந்த மைதிலிக்கு தனது தோழிகள் அவளுக்காக செய்வதைக் கண்டு உற்சாகமாக இருந்தது. மாலை விழாவிற்கு அவர்களே மைதிலியை அழகுப்படுத்தினார்கள்.


மேடையில் அவளது தோழி ப்ரீத்தி கற்கள் வைத்த லெஹன்காவில்.. நாளை தனது கணவனாக வரப் போறவனுடன் அம்சமாய் நின்றிருந்தாள். அவளது முகத்தில் இருந்த பூரிப்பை தோழிகள் கிண்டல் செய்தும், மகிழ்ச்சியுடன் பார்த்தவர்கள்.. தங்களது செல்பேசியில் அந்த காட்சியை படம் எடுத்துக் கொள்வதற்காக மேடைக்கு முன் சென்று நின்றிருந்தார்கள். ஆனால் மைதிலி மட்டும் கண்களில் நிறைத்துக் கொண்டவளை பின்னிருக்கையில் அமர்ந்துவிட்டாள்.


அப்பொழுது அவளருகே யாரோ அமர்வது போன்று தோன்றவும், திரும்பிப் பார்த்தவள்.. திகைத்தாள். ஏனெனில் இன்று மதியம் பார்த்த இளைஞன் அவன்!


மைதிலி திரும்பிப் பார்க்கவும், அவன் முறுவலித்தான். அவளும் புன்னகைத்துவிட்டு மதியம் நடந்ததை தனது தோழிகளிடம் கூறுவனோ என்றுச் சங்கடத்துடன் அமர்ந்திருந்தாள்.


அவன் மெல்ல “நீங்க பிரைடலொட பிரெண்ட்ஸா” என்றுக் கேட்டான்.


அதற்கு ஆம் என்றுத் தலையை ஆட்டிய மைதிலி “நீங்க மாப்பிள்ளையோட பிரெண்டா?” என்றுக் கேட்டாள்.


அவன் “இல்ல..” என்றான்.


மைதிலி “மாப்பிள்ளை ரிலேட்டிவ்வா?” என்கவும்,


“இல்ல..”


“ஓ அப்போ ப்ரீத்தியோட ரிலேட்டிவ்வா..” என்றுக் கேட்கவும்,


அவன் அதற்கும் “இல்ல..” என்றுப் பதிலளித்து மைதிலியை திகைப்பில் ஆழ்த்தினான்.


அவளது திகைப்பைக் கண்டு சிரித்தவன், “இந்த ஹாலை தாண்டி போயிட்டு இருந்தேன்! வாசல்ல இருந்து பார்த்த நீங்க உட்கார்ந்திருப்பது தெரிந்தது.. உடனே வந்துட்டேன். அவங்களும் வாங்கனு கூப்பிட்டாங்க..” என்றுச் சிரியாமல் கூறினான்.


அதைக் கேட்டு மேலும் திகைத்த மைதிலி சுற்றிலும் பார்த்தாள். அவன் மேலும் “யாருக்கும் நான் ஸ்டேன்ஞ்சர் என்றுத் தெரியாது.” என்றுச் சிரித்தான்.


மைதிலி “இட் இஸ் நாட் எ குட் மேனர்..” என்றாள்.


அதற்கு அவன் “யா ஐ னொ! ஆனா ஒரு எக்ஸைட்மென்ட்ல தெரிந்தே தான் வந்தேன்.” என்றுச் சிரித்தான்.


மைதிலி “எதுக்கு?” என்றுக் கேட்கவும்,


அவன் “தெரியலை” என்றுச் சிரித்தான்.


உடனே மைதிலி “என்ன பிளர்ட் செய்யறீங்களா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு அவனோ “அப்படியா தெரியுது. இவ் தட் சோ ஐயம் ரியலி ஸாரி!” என்றுவிட்டு எழுந்துவிட்டான்.


“ஸாரி ஃபார் த டிஸ்டர்பன்ஸ்..” என்றுவிட்டு அங்கிருந்து அகன்றுவிட்டான்.


மைதிலிக்கு தான் சுருக்கென்று ஆனது. ஏதோ ஆர்வத்துடன் நட்பு வைத்துக் கொள்ளலாம் என்று வந்தமர்ந்தவனின் மனம் காயம் படும்படி பேசி விட்டேனோ என்றுத் தோன்றியது.


எனவே சட்டென்று எழுந்து வாசலை நோக்கி சென்றாள். அதற்குள் அவன் வெளியேறி இருந்தான். இன்னும் காரிடரை விட்டுச் சென்றிருக்க மாட்டான் என்று.. தரையை உரசும் லெஹன்கா பாவாடை சற்று உயர்த்தி பிடித்துக் கொண்டு.. வெளியே காரிடருக்கு விரைந்தவள், அங்கு சென்றுக் கொண்டிருந்தவனின் முதுகை பார்த்ததும்.. “ஹலோ” என்றவாறு பின்னே ஓடினாள்.


மைதிலியின் குரல் கேட்டு திரும்பியவன், அவள் ஓடி வருவதைப் பார்த்து நின்றுவிட்டான்.


அவன் முன் சென்று நின்றவள் “நான் உங்களை ஹர்ட் செய்யற மாதிரி பேசியிருந்தா ஸாரி!” என்றாள்.


அதைக் கேட்டவன் கீழ் கண்ணால் அவளைப் பார்த்தான். பின் “இதைச் சொல்றதுக்காக ஓடி வந்தீங்களா!” என்றுக் கேட்டான்.


ஏன் குறிப்பாக கேட்கிறான் என்றுப் புரியாது ஆம் என்று தலையை ஆட்டினாள்.


அதற்கு அவன் “நீங்க ஹர்ட் ஆனாலும் சரி.. நான் கேட்கிறேன். நீங்க தான் என்கிட்ட பிளர்ட் ஆனா மாதிரி இருக்கு! அப்படியா!” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்டு திகைத்த மைதிலி வெடுக்கென்று திரும்பி நடக்க ஆரம்பித்தாள். அவனது சிரிப்பு சத்தம் அவளைப் பின் தொடர்ந்தது.


பின் திருமண ஹாலில் வரவேற்பு முடிந்து.. அதன் பின் நடைப்பெறும் விஷேஷங்களும் நல்லபடியாக நடந்தது. அடுத்த நாள் காலையில் நல்ல முகூர்த்த நேரத்தில்.. மங்கலநாண் அணிவிக்கவும் பட்டது. பின் மற்ற வைபவங்களும் ஃபோட்டோ எடுத்தலும் நடைப்பெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது அவர்களது தோழிகளில் இருவர்.. அலுவக வேலை நேரத்தில் அரைநாள் பர்மிஷன் போட்டு வந்திருப்பதாகவும், முழு நாள் விடுப்பு கிடைக்காது என்று கிளம்பி விட்டார்கள். மற்ற இருவரின் கணவன்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் காலை திருமண விழாவிற்கு வந்திருக்கவும்.. அவர்களுடன் இருந்தார்கள். சிறிது நேரம் அவர்களின் இரண்டு வயது மூன்று வயது குழந்தைகளுடன் மைதிலி விளையாடினாள். பின்னர் அவரவர் குடும்பத்துடன் கிளம்பும் போது.. இன்று மாலை வேலை முடிந்து அவர்கள் வந்ததும்.. அனைவரும் மீண்டும் சந்திக்கலாம் என்றுக் கூறிவிட்டு சென்றார்கள். பின் தனித்து விடப்பட்ட மைதிலி.. ப்ரீத்தியின் அன்னையிடம் தானும் செல்கிறேன் என்றுக் கூறவும், அதற்கு அவர் “ப்ரீத்தி உன் கூடத் தனியா ஃபோட்டோ எடுக்கணுனு சொன்னா.. கொஞ்ச நேரம் வெயிட் செய்யுமா.. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க.. எடுத்துவிட்டு போகட்டும்.” என்றார். மைதிலி மேடையில் நின்றிருந்த ப்ரீத்தியை பார்க்கவும், அவள் கண்களால் கெஞ்சினாள். சரி என்றுத் தலையை ஆட்டிய மைதிலி போரடித்தவளாய் அங்கிருந்த சிறு பால்கனியிடம் சென்றாள்.


அங்கிருந்து பார்த்தால்.. கோவையின் பரபரப்பான சாலைகள் மட்டுமின்றி.. அந்த ரெஸிடன்ஸியின் வெட்டவெளி காபி ஷாப்பும் தெரியும். அந்த காலை நேரப் பொழுதில் பலர் வட்ட மேசையில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருக்க.. மைதிலியின் கண்கள் ஓரிடத்தில் தானே சென்றது. நேற்று சந்தித்த இளைஞன் மூன்று பேருடன் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருந்தான். கலகலவென சிரித்தவாறு பேசிக் கொண்டிருந்தவனை அவளது கண்கள் மொய்த்தது. அதை உணர்ந்தானோ.. நிமிர்ந்துப் பார்த்தான். உடனே மைதிலியும் பார்வையை திருப்பிக் கொண்டு வேறு எங்கோ பார்ப்பது போல் பாவனை செய்தாள். பின் மெல்ல விழியை மட்டும் அவன் புறம் திருப்பியவள். சடார் என்றுத் திரும்பி அங்கிருந்து சென்றுவிட்டாள். ஏனெனில் அவளின் மீதிருந்து அவன் தன் பார்வையை அகற்றிக் கொள்ளவில்லை. அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


எனவே ஹாலுக்குள் நுழைந்தவள், மேடை அருகே சென்று அமர்ந்துக் கொண்டாள். ஏனோ அவளுக்கு படபடப்பாக இருந்தது. தான் ஏன் இப்படி டென்ஷன் ஆகிறேன் என்று அவளுக்கே புரியவில்லை. பின் மணப்பெண்ணின் விருப்பப்படி அவளுடன் ஃபோட்டோ எடுத்துவிட்டு.. ப்ரீத்தியிடம் கூறிவிட்டு தானும் ஓய்வெடுக்க அறைக்கு சென்றாள்.


ஐந்தாவது மாடியிற்கு லிப்டில் வந்தவள், அவளையும் அறியாது ஓரக்கண்ணால் அடுத்து இருந்த திருப்பத்தைப் பார்த்தவாறு சென்றாள். அங்கு அவள் எதிர்பார்த்தது போல்.. அந்த இளைஞன் ஒரு பெண்ணுடன் நின்றுப் பேசிக் கொண்டிருந்தான். மெதுவாக ஓரக் கண்ணால் பார்த்தவாறு சென்றவள், அவனை ஒரு பெண்ணுடன் அதுவும் உரிமையுடன் கையைப் பற்றியபடி பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும் அவளையும் அறியாது நின்றுவிட்டாள். அவள் நின்றுவிட்டதை அறிந்து.. அவனும் சரியாக திரும்பிப் பார்த்தான். உடனே மைதிலி வேகமாக தனது அறைக்குள் சென்று மறைந்துவிட்டாள். அறைக்குள் சென்றவள்.. முட்டாள் என்றுத் தன்னையே திட்டிக் கொண்டாள்.


ஓய்வெடுக்க என்று அறைக்கு வந்தவளுக்கு.. ஓய்வு எடுக்க முடியவில்லை. அவனது எண்ணங்கள் முழுவதும்.. அந்த இளைஞனுடன் அவள் உரையாடிய சம்பவங்களே வந்து சென்றது. இதென்ன கொடுமை என்று எழுந்து அமர்ந்துவிட்டாள்.


ஏன் அவனைச் சுற்றியே எண்ணங்கள் செல்கிறது. ஏன் அவனின் மீது தனிக்கவனம் செல்கிறது.. என்று அவள் அறியாள். இப்படி எதையாவது நினைத்து.. பின் ஏன் அப்படி நினைக்க தோன்றுகிறது என்று நினைத்து வருந்துவதை.. விட எதாவது மாலுக்கு சென்று பொழுதை போக்கிக் கொண்டு வரலாம் என்றுக் கிளம்பினாள். கதவைத் திறந்தவள், திகைத்தாள். ஏனெனில் அவன் கதவின் முன் நின்றிருந்தான்.


மைதிலியை பார்த்ததும் “வாட் யு வான்ட்?” என்றுக் கேட்டான்.


மைதிலி திருதிருவென விழிக்கவும், “எனக்கு உன் பேர் கூடத் தெரியாது. உனக்கும் என் பேர் தெரிந்திருக்காது. என்ன பார்த்ததும் லவ்வா.. சேன்ஸே இல்ல! ஆனா இது லவ் இல்லை வேற என்னமோ கேட்கிறே.. சொல்லு என்ன வேணும். நீ என்னை சைட் அடிக்கிற மாதிரியும் தெரியலை. நான் உன்னை சைட் அடிச்சேன். ஆனா எனக்கு அதோட எல்லை தெரியும். யு னோ ஒன் தின்க்! ஐயம் என்கேஜ்டு! அரென்ஜ் மேரேஜ் தான்! நீ கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என் கூடப் பார்த்தே தானே கவுல்சல்யா.. அவ கூடத் தான் இன்னும் இருபது நாளில் மேரேஜ் ஆகப் போகுது. என்னோட சொந்த ஊர் சென்னை.. இங்கே அவ பிரெண்ட்ஸிற்கு இரண்டு பேரும் சேர்ந்து இன்வேடேஷன் கார்ட் கொடுக்கலானு சொன்னா.. அதனால் வந்திருக்கேன். ஆனா நீ என்னை இப்படிப் பார்த்துட்டு இருந்தா.. அந்த மேரேஜ் இன்வேடேஷன்ஸ் எல்லாத்தையும் வீசிட்டு.. உன் பின்னாடி வந்திர தோணுது.” என்றவாறு எட்டுக்களை முன்னே எடுத்து வைக்க, வைக்க.. மைதிலி பின்னால் நகர்ந்திருந்தாள்.


அதற்குள் அறைக்குள் வந்திருக்கவும், சட்டென்று திரும்பி கதவை சாத்திவிட்டு அவளைப் பார்த்தான். மைதிலி கண்களை விரித்து அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.


“உன் ரூமுக்குள்ள வந்து கதவை சாத்தறேனே பயமா இல்லை. அட்லீஸ்ட் நீ பயமா பார்த்திருந்தால் ஆவது.. நான் பேசாம போயிருப்பேன். ஆனா நீ என்னை ரொம்ப டிஸ்டர்ப் செய்யறே! நான் உன்னை லவ் செய்யணுமா! இல்ல வேற எதாவது ஹெல்ப் செய்யணுமா! இல்லை.. நீ எதாவது என்கிட்ட சொல்லணுமா! இல்ல படத்துல எல்லாம் வர மாதிரி முன் ஜென்மம் விட்ட குறை தொட்ட குறையா! குதிரையோட வந்து உன்னைத் தூக்கிட்டு போறேனு சொல்லிட்டு.. வராம விட்டுட்டேனா! எனக்காக ரொம்ப காத்திருந்தியா..” என்றுப் பேசிக் கொண்டே போகவும், சுயநிலை அடைந்த மைதிலி “ப்ளீஸ் ஸ்டாப் இட்!” என்று அவனது பேச்சில் இடைப் புகுந்தாள்.


பின் “நான் நல்லா தான் இருக்கேன். நீங்க தான் குழம்பி போய் என்னையும் குழப்பி விடப் பார்க்கறீங்க! நம்மளோட முதல் மீட்டிங் நார்மலானது இல்லை. அதுக்கு பிறகு நீங்க நடந்துக்கிட்டதும் நார்மலானது இல்லை. அப்பறம் நீங்க நான் உங்க கிட்ட பிளர்ட் ஆகிட்டேன் என்றுச் சொன்னதும் நார்மல் ஆன விசயம் இல்லை. இப்படி எல்லாம் நீங்க செய்துட்டு.. நான் ஒரு இரண்டு தரம் சும்மா பார்த்துட்டேன். அதுக்கு எதுக்கு இப்படி ஓவர் ரியாக்ட் கொடுக்கறீங்க!” என்றாள்.


அதைக் கேட்டவன் சுற்றிலும் பார்த்தான், “ஏன் ஓவர் ரியாக்ட் கொடுக்கறேன்னு தானே கேட்டே..” என்றுவிட்டு.. அவளது கரம் பற்றி இழுத்துக் கொண்டு போய்.. அங்கிருந்த டிரஸ்டேபிளில் இருந்த கண்ணாடியின் முன் இருந்த இருக்கையில் அமர வைத்து கண்ணாடியில் அவளைச் சுட்டிக் காட்டி.. “அதை இங்கே பார்த்து கேளுங்க! நான் ஒன்றும் இடியட் இல்லை. சும்மா பார்த்ததிற்கு ஏன் பார்த்தே என்றுக் கேட்டுட்டு வரதுக்கு..” என்றான்.


கண்ணாடியில் தன்னைப் பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது. சிறிது நேரத்திற்கு முன்.. அவளே பார்த்து கேட்ட கொண்ட கேள்வி தானே இது! ஆனால் அவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை. அவ்வாறு இருக்க.. அவள் என்னவென்றுக் கூறுவாள்.


அவளது முகத்தைப் பாா்த்தவன், “ஒகே! ஃபோனில் முழ்கிட்டு என்னோட ரூமிற்கு வர ரெடியா நின்றதை நினைச்சு நீங்க அசடு வழிச்சுட்டு ஓடினது.. எனக்கு இன்டர்ஸ்டிக்கா பட்டுச்சு! அதனால் தான் உங்களைப் பார்த்ததும்.. தெரியாத மேரேஜ் பங்ஷனுக்குள்ள புகுந்துட்டேன். ஆனா அது.. யாருடா இந்த முட்டாள் என்கிற மாதிரி தான் தோணுச்சு என்றால்.. பைன்! அப்பவே ஸாரி கேட்டுட்டேன். இப்பவும் ஸாரி கேட்டுக்கிறேன்.” என்றான்.


மைதிலியும் எழுந்து “ஒ.. ஒகே! நான் உங்களை டி…டி..டிஸ்டர்ப் செய்யற மாதிரி இருக்குனு சொன்னீங்க தானே! அதுக்கு ஸாரி கேட்டுக்கிறேன். நீங்க என்னைப் பற்றி குழம்ப தேவையில்லை. நான் நாளைக்கு டிராபிக் எல்லாம் அடங்கியதும்.. எங்க ஊருக்கு போயிருவேன்.” என்றாள்.


அதற்கு அவன் “சூப்பர்! நான் காலைல ஆறு மணிக்கே ட்ரெயின் ஏறிருவேன். அப்போ அத்தோட எல்லாம் சரியாகிரும் என்று நினைத்தால்.. பைன்! அவ்வளவுத் தான் மேட்டர்! அப்படித்தானே..” என்றுக் கேட்டான்.


அவள் ஆம் என்றுத் தலையை ஆட்டவும்.. அவன் தொடர்ந்து “இப்படி ரூம் வரை வந்து வாயடிச்சுக்கு வெரி ஸாரி! கவுசல்யாக்கு மட்டும் இது தெரிஞ்சுது. அவ அப்பா கிட்ட சொல்லி முதுகு தோலை உறிச்சு போடுவா..! பை..” என்றுவிட்டு கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றான்.


அதுவரை அடக்கி வைத்திருந்த காற்றை ஊப் என்று வெளியே விட்டு அந்த இருக்கையில் அமர்ந்த மைதிலிக்கு உடல் சுடுவது போல் இருக்கவும், கழுத்து கன்னத்தை தொட்டு பார்த்தாள். காய்ச்சல் அடிப்பது போல் சூடாக இருந்தது கண்டு திகைத்தாள்.


எனவே மாலையில் தோழிகளுடன் அவளால் உற்சாகமாக கலந்துக் கொள்ள முடியவில்லை. வருத்தத்துடன் அவளைப் பார்த்தவர்களிடம்.. கிளைமேட் ஒத்துக் கொள்ளவில்லை.. என்றுப் பொய்யுரைத்தவள், அடுத்த முறை கோவை வரும்போது.. சந்திக்கலாம் என்றுக் கூறிவிட்டு தங்கியிருந்த அறைக்கு சென்றுவிட்டாள்.


படுக்கையில் விழுந்தவளுக்கு மீண்டும் அவனது நினைவு.. கூடவே கடைசியாக ‘அவ்வளவுத்தானே பை’ என்ற அவனது குரலும் கேட்கவும், அவளையும் அறியாது அவளது கண்களில் இருந்து நீர் வழிந்தது.


‘இதென்ன பைத்தியக்காரத்தனம்’ என்றுத் தன்னையே கடிந்தவளாய்.. போர்வையை இழுத்து போர்த்திக் கொண்டு உறங்க முயன்றாள்.


—-------------------------------


ஊதுபத்தியின் புகையும் மணமும்.. அந்த அறை முழுவதும் நிறைந்திருக்க.. சாந்தி, கணேஷன், ரவீந்தர்.. அவனது மனைவி பிரியா.. என்று நான்கு பேரும்.. கைக்கூப்பி அமர்ந்திருக்க.. அவர்களுக்கு முன்னால்.. தோளை தொட்ட பரட்டையான முடியும்.. நெற்றி நிறைய சிவப்பு குங்குமத்தையும் அப்பி கொண்ட ஜோசியன் ஒருவன் கவனமாக ஆராய்ந்துக் கொண்டிருந்தார்.


பின் தலையை நிமிராமலேயே “அங்கே கோபக்கார ஆத்மா உலாவறது உண்மைங்க! அது உங்களை தலை நிமிரவே விடாது. காவு வாங்கிட்டே.. உங்களை நடுரோட்டிலும் நிறுத்திடும்.” என்றான்.


கணேஷன் “அது எங்களுக்கு தெரியும். அதை அடக்க என்ன செய்யணும்? அதுக்கு தானே உங்க கிட்ட வந்திருக்கோம்.” என்றான்.


அந்த ஜோசியன் “எல்லாத்தையும் பார்த்துட்டேன். அந்த ஆத்மா எந்த பில்லி சூனியம் ஏவி எல்லாம் அடக்க முடியாது. அது பயங்கர கோபத்தில் இருக்கு! அந்த மாகாளியினால் தான் அடக்க முடியும். அதுக்கு மாகாளிக்கு நீங்க இரத்தபலி கொடுக்கணும்.” என்றதும்.. நால்வரும் அதிர்ந்தார்கள்.


அந்த ஜோசியன் தலையை நிமிராமலேயே “உங்க பரம்பரையிலேய இந்த தலைமுறையோட ஒத்த பெண் புள்ளை இருக்கா! அவ இரத்தம் காளிக்கு திருப்தியை கொடுக்கும்.” என்று முடித்தான்.


நான்கு பேரும் திகிலுடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.


அந்த ஜோசியன் தொடர்ந்து “கன்னி கழியாம.. உடல் முழுக்க தங்கத்தோட அந்த பொண்ணை பழிக் கொடுங்க! உங்க காணாம போன பொன் புதையலே கிடைக்கும்.” என்று நிமிர்த்தவனின் கண்கள் பளபளத்தது.


அந்த நான்கு பேரின் கண்களில் ஆசை எட்டிப் பார்த்தது.


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 4


(பொருளடக்கம்)

தனஞ்சயன் இலை கண்டான்..

மரம் காணான் என்றறிவீரோ!

காதல் கண்டால்

மெய் அறியார் என்றறிவீரோ!


காலையில் கண் விழித்த மைதிலிக்கு மிகவும் சோர்வாக இருந்தது. அந்த இளைஞனை பற்றி நினைவே வேண்டாம் அவ்வளவுத்தான் முடிந்தது என்று முடிவு எடுத்து விட்டவளுக்கு அவளது வீட்டின் பிரச்சினைகள் கண்முன் தலை விரித்தாடவும்.. இன்னும் மனம் சோர்ந்தவளாய் படுக்கையில் இருந்து எழ மனம் இல்லாதவளாய் மீண்டும் படுத்துவிட்டான்.


பின் மெதுவாக எழுந்து தனது காலை கடன்களை முடித்துக் கொண்டு.. அறைக்கே காலை உணவை சாப்பிடுகிறேன் என்ற பெயரில் கொறித்தாள். பின் தனக்காவது அந்த வீட்டில் அவளது அன்னை துணை இருக்கிறார். அதுபோல் தனது அன்னைக்கு தானே துணை.. அவள் இல்லாமல் அங்கு தனியாக என்ன செய்கிறாரோ என்ற எண்ணம் மேலிடவும், எழுந்து கிளம்ப தயாரானாள். தயாரான பின்.. மாணிக்கத்தை அழைக்கவும், அவரும் கால்மணி நேரத்தில் அங்கே வந்துவிட்டார்.


மைதிலி காரில் ஏறியதும் கார் கேட்டை கூடத் தாண்டிய வேளையில் மாணிக்கம் “சின்னம்மா! அவங்க உங்களுக்கு தெரிந்தவங்களா..! நம்ம காரை நிறுத்த சொல்லி கை ஆட்டிட்டே ஓடி வரார்.” என்றவாறு காரின் வேகத்தை மட்டுப்படுத்தினார்.


அதைக் கேட்டு திடுக்கிட்டு மைதிலி காரின் கண்ணாடியை இறக்கி விட்டு தலையை நீட்டி எட்டிப் பார்த்தாள்.


அவளது மனதின் குழப்பத்திற்கு காரணமானவன் தான் ஓடி வந்துக் கொண்டிருந்தான்.


மைதிலி அதிர்ந்தாலும் “மாணிக்கம் மாமா! வண்டியை ஓரமா நிறுத்துங்க..” என்றுவிட்டு கார் நிற்பதற்கு முன்பே இறங்கினாள்.


கையை ஆட்டியவாறு ஓடி வந்தவன், கார் நின்றதும்.. கை ஆட்டுவதை நிறுத்திவிட்டு.. முதுகில் மாட்டியிருந்த பையை தோளில் இறுகப் பற்றியவாறு இன்னும் வேகமாக ஓடி வந்தான். மைதிலி திகைப்பு மாறாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.


அவள் முன் மூச்சிரைக்க வந்து நின்றவன், முட்டியில் கையைத் தாங்கியவாறு மூச்சு வாங்கினான். பின் நிமிர்ந்து மூச்சு வாங்கியவாறு “நான்தான் சொன்னேனே.. நீ இப்படிப் பார்த்துட்டு இருந்தால்.. என்னோட மேரேஜ் இன்வேடேஷன் கார்ட்ஸை வீசிவிட்டு உன்கிட்ட வந்துருவேன் என்று இதோ வந்துட்டேன்.” என்றுவிட்டு நிமிர்ந்தவன், தனது இரு கரங்களையும் விரித்துக் காட்டினான்.


மைதிலி மேலும் அதிர்ந்தவளாய் பார்த்தாள்.


“ஏ…ஏ…ஏ…ன்..” என்று அந்த இரு வார்த்தைகள் மைதிலின் வாயில் இருந்து வெளி வர முடியாமல் தடுமாறி வந்தன.


“பிகாஸ்! நாம் லவ் செய்கிறோம் என்று நெனைக்கிறேன்.” என்றவன், “இந்த உலகத்திலேயே பெயர் தெரியாம லவ் செய்தது நம்மளாக தான் இருக்கும்.” என்றுத் தலையை ஆட்டிச் சிரித்தான்.


“ஐயம் சூர்யபிரகாஷ்! உன் பேரு என்ன?” என்றுக் கேட்டான்.


“நான் உன்கிட்ட லவ் செய்கிறேனு சொன்னேனா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா “உனக்கு பசிக்குது, தண்ணீர் தாகம் எடுக்குது, சுடுது, சில்லுனு இருக்கு.. இப்படியெல்லாம் எப்படித் தெரியும். அந்த மாதிரி தான் இதுவும்.. உணர்வு.. அதை நான் உணர்ந்தேன். உனக்கும் எனக்கும் டெலிபதி வொர்க் ஆகிருக்கு..” என்றான்.


மைதிலி “விளையாடாதே!” என்றாள்.


சூர்யா “ஐயம் டேம் சீரியஸ்! இல்லைன்னா நைட் எல்லாம் தூக்கம் வராம உன்னைப் பற்றியே நினைச்சுட்டு.. இருந்துருக்கேன். காலைல மனமே இல்லாம ட்ரெயின் ஏறியவன், சென்னை போக முடியாம திருப்பூரில் இறங்கி.. அங்கிருந்து கால் டாக்ஸி பிடிச்சு வந்தேன். வரும்போது.. நீ கிளம்பியிருக்க கூடாதுனு எப்படி வேண்டிட்டே வந்தேன் தெரியுமா! இங்கே கால் டாக்ஸில் வந்து இறங்கினா.. நீ இந்த காரில் ஏறிட்டே.. உன் கார் பின்னாடியே ஓடி வந்திருக்கேன். சொல்லு.. இந்த க்ரேஸினஸுற்கு பேர் காதல் தானே..” என்றான்.


மைதிலி அவனை ஒரு மாதிரி பார்க்கவும், “இந்த க்ரேஸி ஃபீல் கவுசல்யா கிட்ட தோணுலை. அப்படி இருந்திருந்தா.. உன் கிட்ட வந்திருக்காது. என்னோட ஃபீலை பற்றி எனக்கு நல்லா தெரியும். இப்போ உனக்கு கூடத் தெரிந்திருக்கு! அதையும் உன் கண் காட்டிக் கொடுக்குது.” என்றுச் சிரித்தான்.


மைதிலி “இப்போ ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சது. அப்பறம் மாறிட்டா என்ன செய்வே!” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா “நான் உன்னை விட மாட்டேன். நீ எவ்வளவு பெரிய கோபக்காரியாவோ, திமிர் பிடிச்சவளா இருந்தாலும் சரி! பிகாஸ்.. என் அம்மாவை என் அப்பா பொறுமையா ஹான்டில் செய்வதைப் பார்த்து வளர்ந்தவன் நான்..” என்றான்.


மைதிலிக்கு அவளது அன்னை வளர்மதியின் பொறுமை நினைவிற்கு வந்தது.


மைதிலி விடாது “குணத்தை அட்ஜெஸ்ட் செய்து இருந்துக்குவேனு சொல்றே ஒகே! ஒருவேளை நீ திருடனா இருந்தா..” என்றுக் கண்களால் சிரித்தாள்.


லேசாக மழைத்துளிகள் துளிர்க்க ஆரம்பித்தது.


அவளது குறும்பு புரிந்து சூர்யா “திருடியதில் உனக்கு பங்கு தரேன்.” என்றுச் சிரியாமல் கூறினான்.


அதைக் கேட்டு உதட்டைத் தாண்டிய புன்னகையைக் கட்டுப்படுத்திக் கொண்ட மைதிலி “பங்கு தான் தருவியா! முழுசா தர மாட்டியா” என்றுக் கேட்டாள்.


சூர்யா “என்ன பொண்டாட்டி நீ.. திருடக் கூடாது நியாயமா யாருக்கு சேரணுமோ அவங்க கிட்ட கொடுத்திருனு சொல்வேனு பார்த்தால்.. இப்படிச் சொல்றே..” என்றுச் சிரிக்கவும், உடன் சிரித்த மைதிலியின் சிரிப்பு உதட்டிலேயே மறைந்தது.


அவளது முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா “பொண்டாட்டினு சொன்னதும்.. எனக்கு சிலிர்த்துகிச்சு.. உனக்கு சிலிர்க்கலையா..” என்றுக் கேட்டான்.


அதற்கு மைதிலி “நான் யார்? என் பேக்ரவுண்ட் யார் என்றுத் தெரியாமா.. நீ ரொம்ப ஓவரா பேசற மாதிரி இருக்கு!” என்றாள்.


சூர்யா “நீ என்னோட எதிரியோட பொண்ணா இருந்தா கூட நீதான் எனக்கு வேணும். இதெல்லாம் எதுக்கு.. உன் பேர் கூடத் தெரியாம காதல் வசனம் பேசிட்டு இருக்கிறதுலேயே தெரியலையா..” என்றுக் கேட்கவும், உதட்டைத் தாண்டி வழிந்த முறுவலை உதட்டை கடித்து அடக்கினாள்.


லேசாக பெய்துக் கொண்டிருந்த மழைத்துளிகள் அளவு கூடி.. மழை வலுத்தது. உடனே சூர்யா தனது பேக்கில் இருந்த சிறு குடையை எடுத்து விரித்தவன், மைதிலியை நெருங்கி நின்று.. இருவருக்கும் சேர்த்து குடை பிடித்தான்.


அத்தனை நெருக்கத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பரபரப்பான சாலை அது.. எனவே அதுவரை தங்களது வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். தற்பொழுது மழைக்கு ஓதுங்கிய மக்களுக்கு அவர்களது நிலை கண்களுக்கு விருந்தாகியது.


சூர்யா மெல்ல “பார்த்தியா மழை கூட நம்மளைச் சேர்த்து வச்சுருச்சு..” என்றுச் சிரித்தான்.


மைதிலி “நீ என்னை ரொம்ப லவ் செய்யறீயா! என்னை விட மாட்டியே..” என்றுக் கேட்டாள்.


உடனே சூர்யா சட்டென்று குடையை அகற்றி.. “இந்த மழை சாட்சியா உன்னை லவ் செய்யறேன்.” என்றுக் கத்தினான்.


மைதிலி “ஏ..” என்று குடையை பிடித்து இருவருக்கும் சேர்த்துப் பிடித்தாள். தற்பொழுது அவளது கரம் குடையை பிடித்திருந்த அவனது கரத்தின் மீது இருந்தது.


மைதிலியின் முகத்தில் அத்தனைப் சந்தோஷத்தை அவள் அதுவரை அனுபவித்தது இல்லை. அதை சூர்யா ஆசை தீரப் பார்த்தான்.


மைதிலி "இருபது நாளில் நடக்க போறே உன் கல்யாணம்??" என்றுக் கேட்கவும்.. சூர்யா "கவுசல்யாவுக்கு பண்ற தப்பு தான்.. ஆனா துரோகத்திற்கு தப்பு பரவாலையே!" என்றான்.


மைதிலி "உன் அப்பா அம்மா??" என்றுக் கேட்கவும், சூர்யா "கண்ணுல மாட்டினேன் பலி தான்! ஆனா அவங்க கண்ணுல சிக்க மாட்டேனே.." என்றான்.


மைதிலி 'எப்படி' என்பது போல் பார்க்கவும், சூர்யா "நான் உன் கூட வந்தர போறேன். அதாவது மேரேஜ் பிக்ஸ் ஆனா நான்.. நடுவில் உன்னைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு உன் கூட ஓடி வரப் போறேன்." என்றுக் கண்ணடித்தான்.


மைதிலி 'அடப்பாவி' என்பது போல் வாயைப் பிளந்தாள்.


சூர்யா தொடர்ந்து "உன் அப்பா அம்மாவை கன்வின்ஸ் செய்துட்டு அவங்களோட.. என் அப்பா அம்மாவை பார்க்க போகலாம்." என்றான்.


அதுவரை பிரகாசமாக இருந்த அவளது முகம் தோய்ந்தது. சூர்யா என்ன என்பதூ போல் பார்க்கவும், மைதிலி "நாம் இப்போ மேரேஜ் செய்துக்கலாமா.." என்றுக் கேட்டாள்.


அதைக் கேட்ட சூர்யாவிற்கு தான் சரியாக தான் கேட்டோமா என்ற சந்தேகம் எழுந்தது. அவனது முகத்தைப் பார்த்து சிரித்த மைதிலி மீண்டும் கேட்டாள்.


சூர்யா "ஏன் அப்பா அம்மா.. நம்ம லவ்விற்கு ஒத்துக்க மாட்டாங்கனு இப்பவே மேரேஜ் செய்துக்க கேட்கறீயா.." என்றுக் கேட்டான்.


அதற்கு மறுப்பாக தலையசைத்து மைதிலி "என் வீட்டை பார்த்ததும்.. நான் வேண்டாம் என்று ஓடிட்டா என்ன செய்ய.. அதனால் கேட்கிறேன்." என்றாள்.


அதைக் கேட்டு குபீர் என்றுச் சிரித்த சூர்யா "அட இந்த லாக் கூட நல்லாயிருக்கே! எனக்கு டபுள் ஒகே!" என்றான்.


மைதிலி "எதுக்கும் இன்னொரு தரம் யோசிச்சுக்கோ.." என்றாள்.


அதற்கு சூர்யா "இப்போ என் கையில் தாலியை கொடுத்தா கூட கட்ட ரெடி.." என்றான்.


அதைக் கேட்டு.. மைதிலி மகிழ்ச்சியில் சிரித்தாள். பின்பே இருவருக்கும் சுற்றுப்புறம் உறைத்தது. மழை லேசான துளிகளுடன் குறைந்திருந்தது. ஆனால் இவர்கள் இருவரும் ஒரு குடையின் கீழ் நெருக்கமாக நின்றிருந்தார்கள். அங்கு சென்றார் கொண்டிருந்த மக்கள் மட்டுமில்லாது சில வாகனயோட்டிகளும் இவர்களைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெட்கத்துடன் இருவரும் விலகினர்.


"போகலாங்களா" என்ற குரலில் இருவரும் திரும்பிப் பார்த்தார்கள். அங்கு மாணிக்கம் முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் நின்றிருந்தார்.


வெட்கத்துடன் முன்னே முற்பட்ட கரத்தை பற்றி நிறுத்திய சூர்யபிரகாஷ் "உன் பேர் என்ன என்றுச் சொன்னா ஒகே! அப்படிச் சொல்லலைன்னாலும் ஒகே.. நான் ஆசையா டார்லிங், டியர், பேப் போட்டு கூப்பிட்டுக்கிறேன்." என்றதும் நாக்கை கடித்தவள், "என் பெயர் மைதிலி.." என்றாள்.


மைதிலி என்று அவன் சொல்லிப் பார்த்துக் கொண்டான்.


பின் இருவரும் காரில் ஏறியதும்.. சூர்யா அவளைப் பார்த்தான். மைதிலி மாணிக்கத்திடம் "அவினாசி சிவன் கோவிலுக்கு போங்க.." என்றாள்.


—-----------------------


மகேஸ்வரன் பல வருடங்களாக பூட்டப்பட்டு வைத்திருந்த அறை திறந்து வெகு நேரமாக எதையோ தேடிக் கொண்டிருந்தார்.


கயல்விழி பதட்டத்துடன் வெளியே காத்திருந்தார்.


உடைந்த மற்றும் ஆகாத பொருட்களிடையே தனக்கு வேண்டியதைத் தேடியவர், தேடியது கிடைக்காமல் வியர்த்து ஒழுக வெளியே வந்தார்.


கயல்விழி "அப்படி என்னங்க தேடறீங்க.." என்றுக் கேட்டார்.


"ம்ம்! அந்த ஆத்மாவையே கதிகலங்க வைக்க கூடிய ஒரு பொருள் ஒண்ணு இருக்கு.. அதைத்தான் தேடரேன். அது மட்டும் கிடைச்சுன்னா.. அந்த ஆத்மா இருக்கிறது உண்மைன்னா.. அது எங்களோட பெட்டி புதையலை பாதுகாக்குன்னா.. அதை எங்களுக்கு கொடுத்தே ஆகணும்." என்றுச் சிரித்தார்.


அவரது பேச்சையும் சிரிப்பையும் கயல்விழி திகிலுடன் பார்த்தாள்.








 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 5


(பொருளடக்கம்)

துரதிர்ஷ்டம் அதிர்ஷ்டமாவதையும் காண்பீர்!

கானல் நிஜமாவதையும் காண்பீர்!



அவினாசிலிங்கம் கோவிலில் உள்ள முருகப்பெருமான் சன்னதியில் மஞ்சகொம்பு கட்டிய மஞ்சள் சரடை கையில் ஏந்தியவாறு சூர்யபிரகாஷ் நின்றிருந்தான்.


என்ன தான் இருவரும் காலம் மற்றும் சூழ்நிலை காரணமாக அவசரமாக திருமணம் புரிய முடிவெடுத்திருந்தாலும் இருவரின் மனதிலும் சிறு தயக்கம் ஏற்பட்டது. எனவே ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க தயங்கியவாறு நின்றிருந்தனர்.


பெருமூச்சை இழுத்துவிட்ட சூர்யபிரகாஷ் "இந்த சிட்டிவேஷன்ல இப்படி மேரேஜ் நடக்கணும் என்று இருக்கு.. ஆனா மைதி! ஐ ப்ராமிஸ் யூ! உன் ரிலேட்டிவ்ஸ் என் ரிலேட்டிவ்ஸ் மட்டுமில்லாம உன் பிரெண்ட்ஸ் என் பிரெண்ட்ஸ்.. ஊர் மக்கள் முன்னாடி உன் கழுத்துல தங்கத்துல தாலி கட்டி.. இப்போ என் மனைவியாக போற உன்னை.. இவ தான் என் பொண்டாட்டி எங்களுக்கு முன்னாடியே கல்யாணம் ஆகிருச்சுனு சொல்ல போறேன்." என்றான்.


சூர்யபிரகாஷ் கூறியதை கண்கள் பளபளக்க கேட்ட மைதிலி "அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு சூர்யா.." என்றாள்.


அதைக் கேட்ட சூர்யா "தேங்க்ஸ் மைதி! இந்த நம்பிக்கை போதும்.. இனி எனக்கு தயக்கமில்ல.. சந்தோஷமா தாலி கட்டுவேன். இரண்டு நிமிஷம் காக்க வைத்ததிற்கு ஸாரி.." என்றுவிட்டு அவளது கழுத்தில் மூன்று முடிச்சுகள் இட்டு அவளைத் தனது மனைவியாக முருகன் சன்னதியில் ஏற்றுக் கொண்டான்.


பின் இருவரும் மாலையை மாற்றிக் கொள்ள.. அர்ச்சகர் அர்ச்சதை தூவி வாழ்த்தியவர், தீபராதனை காட்டி.. அந்த குங்குமத்தை மைதிலியின் நெற்றியில் வைத்துவிட கூறினார். அவனும் அவ்வாறே செய்தான். பின் இருவரும் கைகோர்த்துக் கொண்டு.. அந்த கோவில் பிரகாரத்தை வலம் வந்தார்கள்.


அன்று முகூர்த்த நாள் என்பதால் கோவிலில் ஒரளவிற்கு கூட்டம் இருந்தது. மைதிலி குர்த்தா பைஜமாவும், சூர்யா டீசர்ட் மற்றும் ஜீன்ஸிம் அணிந்துக் கொண்டு கல்யாணக் கோலத்தில் செல்வதைப் பார்த்த ஒருவர் “எல்லாம் கலிக்காலம்!” என்று தலையில் அடித்துக் கொண்டார்.


அதைக் கேட்ட சூர்யா “அவருக்கு.. நாம் முந்தாநாள் பார்த்து.. இன்னைக்கு காதலைச் சொல்லிட்டு.. உடனே மேரேஜ் செய்ய வந்திருக்கோம் என்றுத் தெரிந்தால் என்ன செய்வார்?” என்றுக் கேட்கவும், பொங்கிய சிரிப்பை மைதிலி அடக்கினாள்.


பின் அவர்களது கார் அறத்தூரை நோக்கி சென்றது. செல்லும் வழியில்.. தனது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்ட ஃபோனில் இருந்து சிம்கார்ட் எடுத்து பத்திரப்படுத்தி வைத்தான்.


திருமணம் செய்யும் முன்.. தனது தந்தை மற்றும் தாயை அழைத்து.. இன்னொரு பெண்ணை விரும்புவதாக கூறி.. அவளையே மணம் முடிக்க முடிவெடுத்திருப்பதையும் கூறியவன், பத்து நாட்கள் கழித்து.. அவர்களது கோபம் தணிந்ததும்.. அவளை அழைத்து நேரில் சந்திக்க வருவதாக கூறினான். இன்னும் அழைப்பிதழ்கள் கொடுத்திராத நிலையில்.. அவனுக்கு திருமணம் நிச்சயமாகி கைவிட்டதாகவே அவனது சொந்தங்களுக்கு தெரியட்டும்.. என்றுக் கூறி மன்னிப்பு கேட்டவன்.. பின் அழைப்பைத் துண்டித்த கையோடு.. ஸ்வீட்ச் ஆஃப் செய்துவிட்டான்.


பின் செல்லும் வழியில் அமைதியாக இராமல் தனது குடும்பத்தைப் பற்றியும் அவனைப் பற்றியும் வளவளத்தவாறு வந்தான். அவளது குடும்பத்தைப் பற்றியும் அவளைப் பற்றியும் அறிந்துக் கொள்ள முயன்றான். ஆனால் மைதிலி.. அவள் கூறுவதை விட அவனே அறிந்துக் கொள்ளட்டும் என்று விட்டு அவனது தோளில் சாய்ந்துக் கொள்ளவும், அதற்கு மேல் சூர்யா அவளை வற்புறுத்தவில்லை.


திருப்பூர் சாலையைத் தாண்டி குன்னத்தூர் சாலையில் செல்லுகையில் மாணிக்கத்தின் மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்று அழைப்பு வந்தது. அவரது வீடு குன்னத்தூரில் தான் உள்ளது. எனவே அவரை வீட்டில் இறக்கி விட்ட சூர்யா தான் காரை ஓட்டி சென்றுவிடுவதாக கூறி அறத்தூரை நோக்கி சென்றான்.


வழியை கூறியவாறு வந்த மைதிலி.. இரவு சரியாக உறங்காததால் தானே கண்கள் சொருக உறங்கலானாள். அவளை தலையை மென்மையாக வருடிவிட்டு.. தொடர்ந்து அவள் கூறிய வழியில் காரை ஓட்டினான்.


இனிமையான கனவில் ஆழ்ந்திருந்த மைதிலிக்கு திடுமென ஏதோ குரல்கள் கேட்டன. புருவங்கள் சுருக்கியவள், அந்த குரல் அடங்கியதும் மீண்டும் உறக்கத்தை தொடர்ந்தாள். பின் அவளது இனிமையான கனவு மறைந்தது. எதேதோ கனவுகள் வர திடுக்கிட்டு விழித்தவள் வெளியே கண்ட காட்சியைக் கண்டு திடுக்கிட்டாள். ஏனேனில் மலைச்சரிவின் எல்லையைத் தொட்டவாறு சென்றுக் கொண்டிருந்த சாலையில் அவர்களது கார் பயணித்து கொண்டிருந்தது.


"சூர்யா! இப்படி ஏன் போகிறே!" என்றுத் திகைப்புடன் கேட்டாள்.


சூர்யா "ஏன் என்னாச்சு! பயந்துட்டேன்." என்று அவளை விடத் திகைப்புடன் கேட்டான்.


மைதிலி “இந்த வழியாக ஏன் வந்தீங்க?”


“அந்த வழியில் இன்னைக்கு காலையில் பெய்த மழையால்.. மரம் ஒண்ணு சாய்ஞ்சுருச்சாம்.. அதனால்” என்று அவன் முடிப்பதற்குள்.. மைதிலி “இன்னொரு வழி இருக்கே..” என்றாள்.


சூர்யா “அது வந்த வழியே போய்.. பைபாஸ் ரோட்டிற்கு போய்.. சுற்றி வரணும். ஒரு மணி நேரத்திற்கு மேலே ஆகும். இதுல போன அரைமணி நேரத்துல போயிடலானு சொன்னாங்க.. அதுதான் இந்த வழியாக வந்துட்டேன்.” என்றுப் பெருமையாக கூறினான்.


மைதிலிக்கு ஏனோ அச்சமாக இருந்தது. எனவே “வேண்டாம் திரும்பி.. அந்த வழியாக போகலாம்.” என்றாள்.


அதைக் கேட்ட சூர்யா அவளை ஒரு மாதிரி பார்த்த வேளையில்.. அவர்களது கார் அவனது கையில் தடுமாறி நின்றது. ஸ்டார்ட் செய்து பார்த்தான். அப்பொழுதும் இயங்கவில்லை. இதுவரை இந்த மலைப் பற்றிய மர்மங்களைக் கேட்க மட்டும் செய்திருந்த மைதிலிக்கு.. அவளுக்கே நடக்கும் போது.. அவர்கள் கூறியதின் வீரியம் புரிந்தது.


எனவே மைதிலி “நான்தான் சொன்னேனே.. வந்த வழியாக திரும்பிப் போகலானு..” என்றாள்.


சூர்யா “ஈஸி ஈஸி! என்னாச்சுனு பார்க்கிறேன். நீ ஏன் இப்படி பதட்டமாகிறே..” என்று அவளை ஒரு மாதிரி பார்த்தவாறு டிரைவர் இருக்கையில் இருந்து இறங்கிய வேளையில் எதிர்சாலையில் ஒரு லாரி வேகமாக வந்துக் கொண்டிருந்தது.


சற்று தொலைவில் தான் வருகிறது. அதற்கு என்ஜீன் பகுதிக்கு சென்றுவிடலாம் என்றுத் தான் சூர்யா நினைத்தான். ஆனால் அந்த லாரி அவன் நினைத்ததையும் விட வேகமாக வந்தது. எனவே சூர்யா காரை விட்டு இறங்கி.. அவசரமாக கதவை சாத்திவிட்டு திரும்புவதற்குள் நெருங்கிவிடவும், சூர்யா சட்டென்று.. காரோடு ஒட்டி நின்றான்.


சிறிது அசைந்தாலும்.. அவனை இடித்துச் சென்றுவிடக் கூடும் என்ற இடைவெளியில் சூர்யாவை தாண்டி அந்த லாரி சென்றது. காரில் அமர்ந்துக் கொண்டு இதைப் பார்த்துக் கொண்டிருந்த மைதிலி உறைந்துப் போனாள்.


சூர்யாவை கிட்டத்தட்ட உரசி சென்ற லாரியில் இருந்தவர்களில் ஒருவன் "டேய் பாவி! வேகத்தை குறைக்க சொன்னேன் தானே! அந்தாளை இடிச்சிருந்தா என்னாவது!" என்று திகிலுடன் கூறினான்.


அதற்கு லாரியை ஓட்டிக் கொண்டிருந்தவன் "அந்த வழியா போனா சரியான நேரத்துக்கு பொருளை கொண்டு போக முடியாதுனு.. வேற வழியில்லாம இந்த வழியா வேகமா ஓட்டினேன்டா! திடீர்னு வேகத்தை குறைக்க முடியல. நல்லவேள அந்தாளை இடிக்கலை." என்றான்.


ஒரு கணம் உறைந்து அமர்ந்த மைதிலி அடுத்த கணமே "சூர்யா" என்ற கத்தியவாறு கார் கதவை திறந்துக் கொண்டு வெளியே வந்தாள்.


மைதிலியின் அலறில் திரும்பிய சூர்யா "ஹெ.." என்றவாறு அவளிடம் வந்தான்.


"ஐயம் ஒகே!" என்று அவளது தோளைப் பற்றி குலுக்கினான்.


மைதிலி "நான்தான் சொன்னேனே.. இங்கே வேண்டானு பார்த்தீங்களா.." என்றாள்.


சூர்யா கூர்மையான பார்வையுடன் "இங்கே அப்படி என்ன இருக்கு?" என்றுக் கேட்டான்.


மைதிலி என்னவென்று சொல்வாள். என்ன சொல்வது என்றுத் தெரியாமல் "ஒரே நெகட்டிவ் வைப்ஸ்! இங்கே நிறையா ஆக்ஸிடென்ட்ஸ் நடந்திருக்கு.." என்றாள்.


சூர்யா "நான் சின்ன கேப்பில் தப்பிச்சேனே.. அதைப் பார்க்கலையா நீ! நான் அதை அதிர்ஷடமா பார்க்கிறேன். நல்லதை மட்டும் பாரு.." என்றுச் சிரித்து.. அவளது தலையில் செல்லமாக தட்டினான்.


பின் சற்று தள்ளியிருந்த சிறு பாறை திண்டை பார்த்தவன், “நீ அங்கே உட்காரு! நான் என்னாச்சு என்றுப் பார்க்கிறேன்.” என்றான். அதற்கு மைதிலி மறுப்பாக தலையசைக்கவும், “சரி என் கூட ஒட்டிட்டு நில்லு! புது பொண்டாட்டி இப்படி ஒட்டிட்டு நின்னா நல்லா தான் இருக்கு..” என்றுச் சிரித்துவிட்டு.. என்னவாயிற்று என்றுப் பார்த்தான். அவனே சரி செய்துவிடக் கூடிய அளவில் தான் இருந்தது. எனவே அவனே சரிச் செய்ய ஆரம்பித்தான்.


அப்பொழுது மைதிலி “சூர்யா! என் அப்பா அம்மா ஒத்துக்கலைன்னாலும்.. என் வீட்டு ஆளுங்களை பிடிக்கலைன்னாலும் என்னை விட்டுட்டு போயிருவியா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா சரிச் செய்தவாறு “ஒன்று சொல்லட்டுமா! நீ இப்படிக் கேட்க கேட்க தான்.. அப்படி என்ன தான் அங்கே இருக்கு என்றுப் பார்க்க ஆர்வமா இருக்கு..” என்றான்.


பழுதை சரிச் செய்த பின்.. கையைத் துடைத்தவாறு நிமிர்ந்த சூர்யா அவளைத் துளையிடும் பார்வையுடன் “அப்படி என்ன தான் இருக்கு?” என்றுக் கேட்டான். அவள் திணறவும், அவனது வழக்கமான சிரிப்புடன் “அதை நானே தெரிஞ்சுக்கிறேன். காதல் படத்துல வர மாதிரி.. ஊரே கும்பலா வந்து உன்னை என்கிட்ட இருந்து பிரிக்க வந்தாலும் விட மாட்டேன் போதுமா..” என்றுச் சிரித்தான்.


மைதிலிக்கு அவன் என்ன நினைக்கிறான் என்றுத் தற்பொழுது புரிந்தது. திடீர் திருமணத்திற்கு பலத்த எதிர்ப்பு என்று மட்டும் நினைத்திருக்கிறான். ஆனால் அங்கு அதற்கும் மேல் குழப்பங்கள் உண்டு என்று அறிந்தால் என்ன செய்வான் என்ற யோசனையுடன் காரில் சென்று ஏறினாள்.


தானும் காரில் ஏற முயன்ற சூர்யாவின் பார்வை முன் இருக்கும் மலைத்தொடருக்கு அடுத்து இருந்த மலையின் உச்சியிற்கு சென்றது. அங்கு கழுகுகள் வட்டமிட்டு கொண்டிருப்பதைப் பார்த்தான். அதைப் பார்த்தவனின் புருவம் சுருங்கியது. பின் காரில் ஏறிக் கொண்டான். பின் மைதிலி வழி சொல்ல.. அவர்களது கார்.. அவளின் ஜமீன் மாளிகையை நோக்கி சென்றது.


சற்று தொலைவில் வரும்பொழுதே.. பழமையான ஜமீன் மாளிகை தெரிந்தது.


சூர்யா “வாவ்! இதுதான் வீடா.. பெரிய இராஜ பரம்பரையா நீ! ஆனா ஏன் இப்படி இருக்கு! சரியா மெயின்டெயின் செய்யறது இல்லையா! இதெல்லாம் பொக்கிஷம் தெரியுமா!” என்றான்.


மைதிலி அவனது முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவனது முகத்தில் திகைப்பும் இளக்காரமும் இல்லாதிருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தாள்.


பின் கேட் இல்லாத மதிற்சுவருக்குள் அந்த கார் நுழைந்தது. சுற்றிலும் பார்த்த சூர்யாவின் பார்வையில் சிறு யோசனை பரவியது. மைதிலியின் தயக்கத்திற்கு காரணம் புரிவது போன்று இருந்தது. செழித்து வளர்ந்த குடும்பம் தற்பொழுது சற்று தாழ்ந்திருப்பதை அவமானமாக கருதுகிறாளோ என்று எண்ணினான். இதற்கு தான் இத்தனை பயந்தாளா என்று அவனுக்கு இருந்தது. ஆனால் அதற்கும் மேல் அவளது குடும்பத்தில் மர்மங்களும் பிரச்சினைகளும் என்று அவன் அறியவில்லை. எனவே சிறு முறுவலுடன் அவளைப் பார்த்தவன், அவளது தலையை வருடி விட்டான்.


பின் இருவரும் காரில் இருந்து இறங்கினர். அவர்கள் வந்து சேரும் போது.. மதிய வேளையை கடந்திருந்தது. மூச்சை நன்றாக இழுத்துவிட்ட மைதிலி "வாங்க சூர்யா.." என்று அவனை உள்ளே அழைத்து சென்றாள்.


காரின் சத்தம் கேட்டு தனது அறையில் இருந்து வெளியே வந்த கயல்விழி.. மைதிலி ஒரு இளைஞனுடன் நிற்பதைப் பார்த்து திகைத்தாள்.


சூர்யா மைதிலியை பார்த்தான். உடனே நானே சொல்கிறேன் என்பது போல் தலையசைத்து விட்டு.. "அம்மா! இவர் சூர்யா.. எங்களுக்கு ஒருவரை ஒருவர் பிடித்து போய்.. இன்னைக்கு காலைல கல்யாணம் செய்துட்டோம்." என்றாள்.


அதைக் கேட்டு அதிர்ந்த கயல்விழி "என்னடி சொல்றே! போன ரெண்டு நாள்ல கல்யாணம் பண்ணிட்டேன்னு ஒருத்தனை கூட்டிட்டு வந்திருக்கே! நான் உன்னை நல்லா வளர்த்திருக்கிறதா நினைச்சேன் மைதிலி! ஆனா நீ உன் அண்ணனுக்கும் மேலே மோசமா வந்திருக்கியே!" என்று ஆத்திரத்தில் கத்தினார்.


கயல்விழியின் கத்தலை கேட்டு திகைத்த கணேஷ், சாந்தி மற்றும் ரவீந்தர் திகைப்புடன் வெளியே வந்தார்கள். அவர்களின் பார்வை மைதிலியின் கழுத்தில் இருந்த புதிய மஞ்சள் சரடின் மேல் இருந்தது. ஜோசியர் கூறியது அவர்களது காதில் ஓங்கி ஒலித்தது.


மைதிலியின் அண்ணன் கார்த்திகேயன் கூட மது அருந்திய தள்ளாட்டத்துடன் தன் அறையில் இருந்து வெளியே வந்து பார்த்தான்.


பழைய பொருட்கள் இருந்த அறையில்.. தான் இரு நாட்களாய் தேடியது கிடைத்து விட்ட மகிழ்ச்சியில் நின்றிருந்த மகேஸ்வரனின் காதிலும் கயல்விழி கத்தியதைக் கேட்டது. அதைக் கேட்ட கோபம் கொண்டவர்.. ஆத்திரத்துடன் வெளியே வந்தார்.


மைதிலி "அம்மா.." என்றழைத்து பேச தொடங்கிய பொழுது குறுக்கிட்ட சூர்யா "அத்தை! உங்க கோபம் தப்பில்லை. நானே என் அப்பா, அம்மா கோபத்துக்கு பயந்து தான்.. முதல்ல இங்கே வந்தேன். உங்களுக்கு தெரியாம என்கிறதை மறந்துட்டு உங்க மகளுக்கு பிடித்தவனை கணவனா தேர்ந்தெடுத்துக்கிறா.. என்று மட்டும் நினையுங்களேன்." என்று நயமாக கூறினான்.


அதற்கு கயல்விழி "இரண்டு நாள்ல என் பெண்ணை மயக்கி கல்யாணம் செய்துட்டியே! பெரிய ஜமீன் பரம்பரை.. சொத்து நிறையா கிடைக்கும் என்று நினைச்சு கல்யாணம் கட்டிட்டியா! நீ யார்?" என்று ஆத்திரத்துடன் கேட்டார்.


மைதிலி "அம்மா.." என்று இடைப்புகுந்த வேளையில் "நீயா.." என்ற அதிர்ந்த குரல் கேட்டது.


மகேஸ்வரனின் தந்தை சத்தியமூர்த்தி அதிர்ச்சியும் கோபமுமாக சூர்யாவை நோக்கி வந்தார்.


"மாறா! நீயா! மறுபடியும் வந்துட்டியா! உன்னை விட மாட்டேன். உன்னை சும்மா விட மாட்டேன். எல்லாத்தையும் எங்கே வச்சுருக்கே.." என்று அவனது சட்டையை பிடித்து உலுக்கினார்.


தலையில் அடித்தவாறு வந்த கற்பகம் அவரின் கையில் இருந்து சூர்யாவின் சட்டையை விடுவிக்க முயன்றார்.


திகைத்து நின்ற சூர்யாவிடம் மன்னிப்பு கேட்ட மைதிலி "ஸாரி சூர்யா! இவர் என் தாத்தா! இவருக்கு.." என்று இழுக்கவும், சூர்யா "புரிஞ்சுது மைதி.." என்று அவனும் மெல்ல தனது சட்டையை விடுவித்துக் கொண்டான்.


கற்பகமும் மைதிலியும் சத்தியமூர்த்தியை அறைக்கு அழைத்து செல்ல.. அவரோ திரும்பி "மாறா! உன்னை சும்மா விட மாட்டேன்." என்றவாறே சென்றார்.


சத்தியமூர்த்தி செய்த கலவரத்தில் சில நிமிடங்கள் திகைப்பும் அவமானமுமாக நின்ற கயல்விழி.. சூர்யாவை பார்த்ததும் மீண்டும் கோபம் தலை தூக்கியது.


அப்பொழுது வெறித்த பார்வையுடன் வந்த மகேஸ்வரனை பார்த்ததும் அவரிடம் விரைந்த கயல்விழி "இங்கே பாருங்க! மைதிலி பண்ணி வச்ச வேலையை! இவளை முழுசா நம்பினேனே! நம்ம குடும்ப கௌரவத்தை தூக்கி நிறுத்துவா.. என்று நினைச்சேனே! அவ செய்த காரியத்தை பாருங்க! இப்பவே அவளை இந்த வீட்டை விட்டு துரத்துங்க! இந்த வீட்டில் இவ ஒருத்தி தான் எனக்கு துணைன்னு நெனைச்சேன். இப்போ அவளே.. அவ அண்ணனை மாதிரியே நடந்துக்கிட்டா.." என்று அழ ஆரம்பித்தார்.


தனது தந்தையை பார்த்தும்.. மைதிலி அச்சத்துடன் வந்து சூர்யாவின் அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.


அவர்களை உணர்ச்சிகளற்ற பார்வையுடன் அளந்த மகேஸ்வரன் தொண்டையை கனைத்துக் கொண்டு "ஆனது ஆகிடுச்சு! சாமியை கும்பிட்டு.. உன் ரூமிற்கு கூட்டிட்டு போ மைதிலி.." என்றார்.


திட்டுவார் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருக்க.. மகேஸ்வரன் கூறியதைக் கேட்டு அனைவரும் அதிர்ந்து நின்றார்கள்.



 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 6


(பொருளடக்கம்)

கன்னியவளின் காரியத்தை கண்டீரோ!

காளையவன் ஏய்க்கப்பட்டதை அறிவீரோ!

அவனும் இவனும் ஒன்றென நினைத்தீரோ?

அவனும் இவனும் ஒன்றாக்கப்படுவனோ!


மகேஸ்வரன் கோபம் கொள்ளாது.. இணக்கமாக பேசியதைக் கேட்டு அதிர்ந்த நின்ற மைதிலியின் கரத்தைப் பற்றிய சூர்யா “மைதி! இவர் உன் அப்பாவா! இவர் நம்ம மேரேஜ்ஜிற்கு ஒகே சொன்ன மாதிரி தெரியலையே!" என்று யோசனையுடன் கூறினான்.


அதற்குள் கயல்விழி தனது கணவனை ஆச்சரியமும் அதிர்ச்சியுமாக பார்த்தாள்.


மகேஸ்வரன் சூர்யாவை பார்த்து “நடந்து முடிந்ததை மாத்த முடியாது. ஆனா இனி நடக்க போறதை மாத்த முடியும். உன்கிட்ட அப்பறம் பேசறேன். மைதிலி.. நீயே அவனை மேலே கூட்டிட்டு போ..” என்றுவிட்டு அவரது அறைக்குள் நுழைந்தார்.


தற்பொழுது மைதிலியோடு சூர்யாவும் திகைத்து நின்றான். மைதிலியிடம் சரிந்து “உன் அப்பாவோட ரியாக்ஷன் இவ்வளவு தானா! இதுக்கு தான் இப்படிப் பயந்தியா! வாழ்க்கையில முக்கியமான முடிவை எடுத்துட்டு வந்திருக்கிற.. ஆனா அதுக்கு இவ்வளவு தான் ரியாக்ஷன் கொடுப்பார்.. என்று தெரிந்து தான்.. மேரேஜ் செய்துக்கலாம் என்ற முடிவை எடுத்தியா!" என்றுக் கேட்டான்.


திகைப்பில் இருந்த மைதிலி “என்னால நம்ப முடியலை சூர்யா! ஏன் உடனே ஒகே சொல்லிட்டார்?” என்றாள்.


சூர்யா “நீ இன்னும் குழப்பறே!” என்கவும், மைதிலி “இப்போதைக்கு அவர் சொன்னதைச் செய்வோம். வாங்க மேலே போகலாம். உங்க கிட்ட அவர் என்ன பேசப் போறார்னு தெரிஞ்சுக்க ஆவலா இருக்கேன்.” என்றாள்.


ஆனால் சூர்யா “உன் அப்பா நம்ம மேரேஜ் அசெஃப்ட் செய்ததே.. டவுட்டா இருக்குன்னா.. சம்திங் பிஷ்ஷிங்..” என்றான்.


அவளது குடும்பத்தில் நடப்பவை அனைத்தும் மர்மமே! அதில் இணைந்துக் கொண்ட.. அல்லது வம்படியாக அவள் இணைத்துக் கொண்ட சூர்யாவை பார்க்க தற்பொழுது மைதிலிக்கு பாவமாக இருந்தது. அவசரப்பட்டு திருமணம் செய்து அவனுக்கு தவறு செய்து விட்டோமோ என்று இருந்தது.


ஆனால் அதைப் பற்றி விளக்காமல் மைதிலி “ஆமா! இப்போ வா போகலாம்..” என்று அழைத்து செல்வதில் மும்மரமாக இருந்தாள். அப்பொழுது அழுகையை அடக்கியபடி நின்றிருந்த அன்னையை பார்த்ததும் “அம்மா!” என்கவும், அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டு “மதிய சாப்பாடு மாடிக்கே அனுப்பறேன். நீங்க போகலாம்.” என்றுவிட்டு சமையலறைக்குள் புகுந்துக் கொண்டார்.


அடுத்து அங்கு நின்றிருந்த தனது அத்தை குடும்பத்தை பார்த்ததும் “இவங்க என் அத்தை, மாமா, அவங்க பையன் ரவீந்தர், அவரோட வைஃப்ம் பையனும் டவுனில் இருக்காங்க! எப்பவாது இங்கே வருவாங்க! இல்லைன்னா இவர் அங்கே போவார்.” என்று அறிமுகப்படுத்தி வைத்தாள்.


அதைக் கேட்ட சூர்யா "ஸாரி! ஐயம் நாட் கெட் இட்! எப்போவாவது வருவாங்க போவாங்களா!" என்றுக் கேட்டான்.


இந்த வீட்டில் இருக்க விருப்பமில்லாமல்.. ரவீந்தரின் மனைவி.. நகரத்தில் வேறு வீடு பார்த்து இருப்பதை சூர்யாவிடம் சொல்ல மைதிலிக்கு தயக்கமாக இருந்தது.


கணேஷன் சாந்தியை பார்க்க.. சாந்தி தொண்டையை கனைத்துக் கொண்டு “நீ செய்தது ரொம்ப தப்பு மைதிலி! ஏன் நாங்க எல்லாம் பார்த்து கல்யாணம் செய்து வைக்க மாட்டோமா..” என்றாள்.


மைதிலி அமைதியாக தலைகுனிந்து நிற்கவும், சாந்தி “எப்போ கல்யாணம் ஆச்சு?“ என்றுப் பதிலைத் தெரிந்துக் கொள்ள ஆர்வமாக கேட்டார்.


மைதிலி “இன்னைக்கு காலைல தான் கல்யாணம் ஆச்சு அத்தை!” என்றாள்.


உடனே கணேஷன் “அப்போ இப்பவே அவனை தலை முழுகிட்டு உள்ளே வா..” என்றதும்.. மைதிலி அதிர்ந்தாள்.. என்றால்.. சூர்யாவிற்கு ஏனோ சிரிப்பு தான் வந்தது.


அப்பொழுது மகேஸ்வரன் "மைதிலி அந்த பையனை கூட்டிட்டு மேலே போனு சொன்னேன் தானே!" என்றவாறு வந்தார்.


சூர்யா "பையனா!" என்று மைதிலியிடம் கேட்க.. அவளோ "பேசாமல் வாங்க.." என்று இழுத்துக் கொண்டு படியேறினாள்.


மகேஸ்வரன் தொடர்ந்து “நான் அவங்க கல்யாணத்தை ஏத்துக்கிட்டேன். அப்போ இந்த வீட்டில் இருக்கிற எல்லாரும்.. அதை ஏற்றக்கணும்.” என்றுக் கர்ஜீத்தார்.


சாந்தி "நம்ம குடும்பத்திற்கு என்று ஒரு கௌரவம் இருக்கு.. அதை குழி தோண்டி புதைச்சுட்டு வந்திருக்கா.. அதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லாம.. இருக்கீங்க! முதல்ல அந்த பையனை வெளியே அனுப்புங்க! நமக்கு நம்ம பொண்ணு மட்டும் போதும்.." என்றார்.


அதற்கு மகேஸ்வரன் "என்னை விட இந்த குடும்ப கௌரவத்தை பத்தி அக்கறை உங்களுக்கு இருக்கா! நான் என்ன செய்கிறேனு தெரிந்து தான் செய்கிறேன். அதை யாரும் எதிர்த்து பேசக் கூடாது." என்றவர், தொடர்ந்து "இனி இந்த வீட்டை யார் வெளியே போவதாக இருந்தாலும் சரி.. உள்ளே வருவதாக இருந்தாலும் சரி.. என்கிட்ட கேட்டுட்டு தான் செய்யணும்.” என்றுவிட்டு தனது அறைக்குள் விரைந்தார்.


மைதிலியுடன் படியேறிக் கொண்டிருந்த.. சூர்யா மகேஸ்வரன் பேசுவதைக் கேட்டு நின்றுவிட்டான். அவனது முகத்தில் பலத்த யோசனை பரவியது. மைதிலி சங்கடத்துடன் சூர்யாவை அழைத்துக் கொண்டு சென்றாள்.


அறைக்குள் வந்ததும்.. அவனது பார்வை சுற்றிலும் பரவ.. மைதிலி “இப்போ சொல்லுங்க! என் வீடு இப்படித்தான்.. ஆளுக்கு ஒரு மாதிரி இருப்பாங்க! வந்த கொஞ்ச நேரத்தில் உங்களுக்கு எத்தனை கேள்விகள்! நான் இந்த கேள்விகளுக்கு பதில் தெரிந்தும்.. இன்னும் கேள்வி கேட்டுட்டே தான் இங்கே வாழ்ந்துட்டு இருக்கேன். இன்னும் பல விசயங்கள் இருக்கு! இப்போ சொல்லுங்க.. என்னை விட்டுட்டு போயிருவீங்களா..” என்றுக் கேட்டாள்.


தனது தோளில் இருந்த பையை அங்கிருந்த நாற்காலியில் வீசிவிட்டு திரும்பிய சூர்யா “என்னை ஏன் கல்யாணம் செய்துக்கிட்டே?” என்றுப் புருவத்தைச் சுருக்கியவாறு கேட்டான்.


அவனது நேரடி கேள்வியில் திகைத்த.. மைதிலி “நீங்க தான் என்னை லவ் செய்கிறதா சொன்னீங்க! அதனால..” என்றவளின் பேச்சில் இடைப்புகுந்த.. சூர்யா “உஷ்..” என்று உதட்டின் மேல் விரலை வைத்தவன், “நான்.. நீ ஏன் என்னை மேரேஜ் செய்துக்கிட்டே என்றுக் கேட்டேன்.” என்று ஒவ்வொரு வார்த்தையிலும் அழுத்தம் கொடுத்து கேட்டான்.


மைதிலி வார்த்தைகள் வராமல் திணறினாள். தற்பொழுது தான்.. சூர்யாவை திருமணம் செய்து.. இந்த இக்கட்டுக்குள் இழுத்து விட்டோமோ என்று நினைத்துக் கொண்டிருந்தவளுக்கு.. அவன் அதையே கேள்வியாக கேட்கவும்.. என்ன பதில் கூறுவது என்று அறியாது திணறினாள்.


சூர்யா “கண்டிப்பா.. உனக்கு என் மேலே அட்ரெக்ஷன் இருக்கு! அதை ஒத்துக்கிறேன். ஆனா திருப்பி அந்த கேள்வியை கேட்கிறேன். வாட் யு வான்ட் ப்ரம் மீ! ஏன் கல்யாணம் என்ற பெயரில் என்னைக் கூட்டிட்டு வந்தே?” என்றுக் கேட்டான்.


மைதிலியின் இதயம் வேகமாக துடித்தது.


சூர்யா “இந்த வீட்டில் என்ன நடக்குது? எந்த ரிஷனுக்காக என்னை மேரேஜ் செய்துக்கிட்டே? உன்னை இந்த வீட்டில் இருந்து கூட்டிட்டு போறதுக்கு ஒரு ஆளா நான் தேவைப்பட்டேனா? இங்கே உன்னை அடைச்சு வச்சுருக்காங்களா? ஆளுக்கு ஒரு மாதிரி இருப்பாங்க என்றுச் சொன்னே! ஆனா எனக்கு ஆளுக்கு ஒரு காரியத்தை வச்சுட்டு இருக்கிற மாதிரி இருக்கு. இன்குளுடிங் யு! நீயும் பிடிச்சுருக்கு என்ற ரிசனுக்காக இல்லாம.. மேரேஜ் செய்ய ஒரு ஆள் என்கிற மாதிரி தானே.. என்னை செலக்ட் செய்தே! இதுக்கு நீ டைரக்ட்டா என்ன வேண்டுமோ கேட்டுருக்கலாம். நான் செய்துக் கொடுத்திருப்பேன். பிகாஸ் உன்னோட பார்வைக்கு அர்த்தம் புரியாம திணறிட்டு இருந்தேன். நான் லவ்வா என்று உளறிய போது ஆவது உண்மையைச் சொல்லியிருக்கலாமே! நீ மறுக்காம வேறு கேட்கவும் தானே.. நான் டெலிபதினு என்னை சமாதனப்படுத்திக்கிட்டேன். ஆனா ஒண்ணை ஒத்துக்கிறேன். அதுக்காக உன்னை மன்னிக்கிறேன்.. நான்தான் உன்னைத் தேடி வந்தேன். வந்தவனை நீ யுஸ் செய்துட்டே! நாம் ஒண்ணும் ஒருத்தரை ஒருத்தர் வெறுக்கிற எதிரிகள் இல்லை. நம்ம இரண்டு பேர் கிட்டயும்.. சம்திங் அட்ரெக்ட் இருக்கு! நாம் முதலில் பிரெண்ட்ஷீப்பா நம்ம ரிலேஷனை தொடங்கியிருக்கலாம். அது எப்படிப் போகுதோ அதுபடி விட்டுருக்கலாம். நீ ஒரு நண்பனா என்கிட்ட எந்த ஹெல்ப் கேட்டிருந்தாலும் செய்திருப்பேன். ஆனா நீ என்னை விரும்பாத போது.. எதுக்கு மேரேஜ் செய்யலானு கேட்டே! அதுக்கு பதில் சொல்லு!” என்றுக் கேட்டான்.


வந்த அரைமணி நேரத்தில்.. அவர்களது வீட்டினரைப் பற்றியும் அவளைப் பற்றியும் ஏறக்குறையாக சரியாக சூர்யா கணித்து விட்டதைக் கண்டு மைதிலி திகைத்தாள். கூடவே விருப்பமாக இல்லாமல் காரியத்திற்காக திருமணம் செய்தாயா என்ற அவனது கேள்வி இடியென தாக்கியது. அவன் கூறியது உண்மைத்தான் என்றாலும்.. அதை அவன் கூறக் கேட்கிற பொழுது.. பழுத்த கம்பியை நெஞ்சில் பாய்த்தது போன்று மைதிலிக்கு இருந்தது.


எனவே பொங்கிய அழுகையை வாயின் மேல் கரத்தைக் கொண்டு அடக்க முயன்றவாறு தலைகுனியவும், அவளது அருகில் விரைந்து சென்ற சூர்யா அவளது குனிந்த தலையைப் பற்றி.. நிமிர்த்தி தன்னைப் பார்க்க வைத்தான்.


“அழாதே மைதி! அதனால என்ன யுஸ் சொல்லு! இனியாவது உண்மையைச் சொல்லு! நான் இப்போ என்ன பண்ணணும். உன்னை என் வீட்டிற்கு கூட்டிட்டு போகணுமா..” என்று அவளது கண்ணீரை துடைத்துவிட்டவனின்.. விரல் அசையாமல் நின்றது.


பின் மெல்ல கேட்டான்.. “உன்னை இங்கிருந்து கூட்டிட்டு போயிட்டா.. அப்பறம் என் கூட என் வைஃப்பா இருப்பியா? இல்லை நீ நினைச்சது நடந்துருச்சுனு..” என்று அதற்கு கேட்க விருப்பமில்லாமல் அவளது முகத்தைப் பார்த்தான்.


அதற்கு மைதிலி “சூர்யா!” என்றவளுக்கு வார்த்தை வரவில்லை.


சூர்யா “சொல்லு மைதிலி..” என்கவும், மைதிலி மெல்லிய குரலில் “நீ கெஸ் செய்தது சரித்தான் சூர்யா! ஆனா அப்போ எனக்கு பிடிச்ச மாதிரி ஒருத்தனோடு கல்யாணம் என்று என்னை மட்டும் நினைச்சு பார்த்துட்டேன். உன் ஃபீலிங்ஸ் பற்றி கவலைப்படாம விட்டுட்டேன். அது உன்னை இப்படி ஹர்ட் செய்யும் என்று நினைக்கலை. ரியலி ஸாரி! ” என்றாள்.


சூர்யா பெருமூச்சை ஒன்றை இழுத்துவிட்டு “சரி! இனி நடக்கப் போவதைப் பற்றிப் பேசலாம். இங்கே என்ன நடக்குது? ஆள் ஆளுக்கு ஒரு விசயத்தை மறைக்கிற மாதிரி இருக்கு! இதுல உன் அம்மா மட்டும் தான் இல்லை. இந்த வீட்டில் ஒன்றும் சரியில்லை. ஏன் என்னாச்சு? எதாவது ரிஷன் இருக்குமில்ல. அதை முதல்ல சொல்லு! அப்பறம் நம்ம விசயத்தைப் பற்றிப் பேசிக்கலாம்.” என்றான்.


மைதிலி “இது உனக்கு தெரிந்து தான் ஆகணும். டிரைவர் மாமா எனக்கு மேரேஜ் ஆனா தான் இந்த குடும்பத்திற்கு கிடைத்த சாபத்தால் இருந்து விலக முடியும் என்றுச் சொன்னது.. கல்யாண வீட்டில் முதல் முறையா என்னை அட்ரெக்ட் செய்தது.. என்று எல்லாம் வைத்து.. ரொம்ப பெரிய டிஷிஷனை ஈஸியா எடுத்துட்டேன். நீ முதல்ல அப்ரோச் செய்த மாதிரி.. பிரெண்ட்ஷீப்பில் இருந்து நம்ம ரிலேஷன் ஆரம்பித்து இருக்கலாம்.” என்றாள்.


ஆனால் அவன் பதிலளிக்காமல் அவளது விளக்கத்திற்காக காத்திருந்தான்.


மைதிலி என்ன சொல்வது என்றுத் தெரியவில்லை. அவளது இரத்தத்தில் பாழாய் போன குடும்ப கௌரவம்! உண்மையை சொல்ல விடாமல் தடுத்தது. ஆனாலும் அவள் செய்த தவறை சரிச் செய்ய அவளுக்கு தெரிந்ததைக் கூறத் தொடங்கினாள்.


—------------–----


அதே வேளையில்.. கீழே கணேஷின் குடும்பத்தார் ஒன்றுக் கூடியிருந்தனர்.


சாந்தி “இப்போ என்னங்க பண்றது? கல்யாணத்தை பண்ணிட்டு வந்து நிற்கிறா!” என்றார்.


ரவீந்தர் “அப்போ! அந்த ஜோசியர் சொன்ன மாதிரி செய்திற போறீயா..” என்றுத் திகிலுடன் கேட்டான்.


சாந்தி “ஹெ! அப்படியெல்லாம் இல்ல” என்றுத் திணறிவிட்டு.. “அவளால் நம்ம குடும்பத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்றுச் சொன்னாங்க தானே! ஆனா.. கல்யாணம் செய்துட்டாளே என்று மட்டும் தான் சொன்னேன்.” என்று எச்சிலை விழுங்கினாள்.


கணேஷன் முகம் இறுகியவராய் “நாம் ஒன்றும் செய்யப் போவதில்லை. அந்த ஜோசியர் எல்லாம் பார்த்துப்பாங்க!” என்றுவிட்டு எழுந்தவர், சாந்தியுடம் அடிக்குரலில் “அதுக்கு மைதிலி தகுதியானவளா வச்சுருக்கணும் புரிந்ததா..” என்றுவிட்டு.. ரவீந்தரிடம் “உன் பொண்டாட்டியை நாலு நாள் வந்து இருக்க சொல்லு! அவ கிட்ட மைதிலி நல்லா பேசுவா..” என்றுவிட்டு அகன்றார்.


சாந்திக்கும் ரவீந்தருக்கும் கணேசன் கூறுவது புரிந்த மாதிரி இருந்தது.


மகேஸ்வரன் அறையில் கயல்விழி ஆதங்கத்துடன் நுழைந்தாள்.


“என் பொண்ணு.. திடுமென கல்யாணம் பண்ணிட்டு வந்து.. என்னை ஒதுக்கி வச்சுட்டா மாதிரி இருக்கு! ஆனா நீங்க பேசறது.. மைதிலியை வேற யாரோ பொண்ணோ மாதிரி.. எனக்கு என்ன என்று பேசற மாதிரி இருக்கு! ஏன் இரண்டு பேரும்.. என்னைக் கொடுமை படுத்தறீங்க..” என்றுப் புலம்பினாள்.


மகேஸ்வரன் “வாயை மூடு! பின்னே என்ன பண்ண சொல்றே! வீட்டை விட்டு துரத்தவா! இல்லை கணேஷன் சொன்ன மாதிரி.. அந்த பையனை மட்டும் துரத்தவா..” என்றுக் கேட்டார்.


கயல்விழி என்னவென்று கூறுவாள்.. அவளது ஆதங்கத்தை தான் கூறினாள். ஆனால் மகள் வாழ்வு பாழப் போக வேண்டும் என்றுக் கூறவில்லையே!


எனவே கயல்விழி கண்களைத் துடைத்தவாறு “என்னங்க இப்படிப் பேசறீங்க..” என்று இழுத்தவர், “எனக்கு கோபம் அதை இப்படிக் காட்டினேன். ஆனா நீங்க கோபப்படாதது தான் எனக்கு ஆச்சரியமா இருக்கு..” என்றார்.


அதற்கு மகேஸ்வரன் “உன் மகள்.. ஊர் பேர் தெரியாதவனை கூட்டிட்டு வந்திருக்கா! ஆனா நான் அவனுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்க போறேன்.” என்றுத் தனது மீசையை தடவினார்.


கயல்விழி என்ன என்பது போல் பார்க்கவும், தலையாணிக்கு அடியில் வைத்திருந்த பழைய நைந்து போன.. கருப்பு வெள்ளை படத்தை ஒன்றை எடுத்துக் காட்டினார்.


கண்ணாடி சட்டமிட்டிருக்கவில்லை என்பதால்.. மங்கி கிழியும் தருவாயில் அது இருந்தது.


கயல்விழி புரியாமல் பார்த்தாள். அது ஒரு சாமி ஊர்வலமாக வந்த படம்.. சாமி ஊர்வலமாக மாளிகைக்கே வந்து.. மகேஸ்வரனின் தாத்தாவிற்கு மரியாதை செய்துவிட்டு.. தான் நகரத்திற்கு மக்களின் தரிசனத்திற்கு போகும் என்றுக் கேள்விப்பட்டிருக்கிறாள். இது மாளிகைக்கு முன் சாமி ஊர்வலம் வந்த படம் தான்! சரியாக தெரியவில்லை என்றாலும்.. அர்ச்சகர் தட்டில் பவ்வியமாக கும்பத்தை நீட்டிக் கொண்டிருப்பது போலவும், அதை மகேஸ்வரனின் தாத்தா தொட்டு கும்பிடுவது போலவும் இருந்தது.


இதை எதுக்கு காட்டுக்கிறார் என்பது போல் மகேஸ்வரனை அவள் பார்க்கவும், மகேஸ்வரன் பூசாரிக்கு அருகில் பூந்தட்டை ஏந்தியவாறு நின்றிருந்த பெண்ணை காட்டி "இந்த பெண் தான் மாறனின் பொண்டாட்டி.. அவ பக்கத்துல இருக்கிறது. மாறனோட பத்து வயசு பொண்ணு! இதை என்னோட பாட்டி ஒருதரம் சொல்லி இந்த படத்தை தூக்கி வீசினாங்க. மாறன் தான் மாட்டிப்போமினு தெரிஞ்சதும்.. அவனோட பொண்டாட்டியையும் பொண்ணையும் தப்பிக்க வச்சுட்டான். அவங்க எங்காவது போய் உயிரோட இருந்து இந்த பொண்ணுக்கும் எதாவது வாழ்க்கை அமைஞ்சு உயிரோட இருந்திருப்பாங்கனு தோணுது. அதனால இவங்க வம்சத்தை கண்டுப்பிடிச்சு.. இவங்களை வச்சு அந்த புதையல் காக்கிற பூதத்தை ஒரு வழி செய்யலானு நினைச்சு தான் தேடிட்டு இருந்தேன். இப்போ தான் கிடைச்சுது. இது கிடைச்ச சந்தோஷத்தில் வெளியே வந்த போது தான் உன் பொண்ணு.. எவனையோ கல்யாணம் செய்துட்டு வந்தா! அவனைப் பார்த்ததும் எனக்கு எங்கோயோ பார்த்த மாதிரி இருந்துச்சு! உடனே சந்தேகத்திற்கு இந்த படத்தை பார்த்தேன். இங்கே பார்.." என்றுச் சுட்டிக் காட்டினார்.


அந்த படத்தில் சாமி பல்லாக்கு தூக்கிக் கொண்டிருந்த முன்னால் நின்றிருப்பவர்களில் ஒருவனைக் காட்டினார்.


மிகவும் மங்கலாக இருந்தாலும்.. அவனைப் பார்த்த கயல்விழி அதிர்ந்தார். ஏனெனில் அவன் பார்ப்பதற்கு மைதிலி திருமணம் செய்து அழைத்து வந்த சூர்யாவை போல் இருந்தான்.


கயல்விழி "ஏன்ங்க! இது!" என்றுத் திகிலுடன் கேட்கவும், மகேஸ்வரன் "மாறனாக இருக்கலாம். என் தாத்தாவுக்கும்.. அப்பறம் இந்த ஊர்ல இருக்கிற சில பெருசுங்க மட்டும் தான் மாறனை பார்த்திருக்காங்க.." என்றார்.





 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்...

ஒவ்வொரு யூடியின் தொடக்கத்திலும்.. வரும் பொருளடக்கம்.. அந்த யூடியின் சுருக்கம் என்பதை கவனித்தீர்களா..

இனி கவனியுங்கள் ☺
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அனல் 7


(பொருளடக்கம்)

எவ்வினை செய்தாலும்.. கொண்ட

பிறவி குணம் மாறாததை காண்பீர்!



"இந்த அறத்தூர் மட்டுமில்லாம சுத்தியிருக்கிற எட்டு ஊருக்கும் இருக்கிற ஒரு ஜமீன் குடும்பம் எங்களோடது! ஆங்கிலேயருக்கும் எங்க மூதையார் குடும்பத்திற்கும் நல்ல பழக்கம் இருந்ததாலே.. அவங்களோட அடக்குமுறை எங்க குடும்பத்திற்கும் பழக்கமாகிருச்சு! இந்த எட்டு ஊர் சனங்களும் எங்க மூதையாருக்கு அடிமை பட்டு இருந்துச்சு! சிம்பிளா சொல்லணும்னா.. சுதந்திரம் கிடைத்து வெள்ளைக்காரங்க வெளியேறன பிறகும்.. இந்த எட்டு ஊருக்கு.. சுதந்திரம் கிடைக்கலைனு தான் சொல்லணும்."


"வேலையை வாங்கிட்டு கூலி தராம இருக்கிறது, கந்துவட்டி போட்டு.. அவங்க நகைகளையும் நிலங்களையும்.. சில சமயம் அந்த வீட்டு பெண்களையும் அபகரிக்கிறதுனு எல்லா அக்கிரமம் செய்தாங்க! நாளாக ஆக.. வெளியுலகை பற்றி தெரிஞ்சு கிட்ட சனங்க.. இவங்க பிடியில் இருந்து வெளியே வர முற்பட்டாங்க! அப்படி எதிர்த்து குரல் கொடுத்தவர்களுக்கு சாட்டையடி எல்லாம் நடந்திருக்கு! ஆனாலும் சிலர் எதிர்த்துட்டு தான் இருந்திருக்காங்க! அப்படி வந்தவர் தான் மாறன்!"


"மாறன்.. எங்க கொள்ளு தாத்தாவை எதிர்த்து பேசி.. சாட்டையடி நிறையா வாங்கியிருக்கிறார். எங்க மூதையாரோட.. அக்கிரமங்கள் நாளுக்கு நாள் அதிகமாகிருக்கு! அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத மாறன்.. ஊர் சனங்களில நாலு ஆட்களைக் கூட்டிட்டு வந்து.. எங்க கொள்ளு தாத்தாவை கொல்ல பார்த்தாங்க! ஆனா எங்க தாத்தா தப்பிச்சுட்டார். தன்னைக் கொல்ல வந்தவங்களைப் பிடிக்க போன போது.. அவங்க இந்த மாளிகைக்குள்ளவே ஒளிஞ்சாங்க! அவங்க ஒளிஞ்ச இடம் எங்களோட கஜானா அறை!"


"கொள்ளு தாத்தாவும் பாட்டியும்.. ஊர் சனங்க கிட்ட மட்டுமில்லாம.. கொள்ளு தாத்தா கூட பிறந்தவங்களையும் ஏமாற்றி.. நகைகளையும் தங்க காசுகள் ஐயமும் அபகரிச்சு வச்சுருந்தாங்க! இப்படி மத்தவங்க கிட்ட இருந்து அபகரிச்சது, எங்களோட நகைகள், அப்பறம் தங்கம் மற்றும் நவபாசத்துல ஆன சின்ன சின்ன சாமி சிலைகள் என்று எல்லாத்தையும் நாலு பெட்டிகளில்.. வைச்சுருந்தாங்க! அதை அவங்க திருடிட்டு போயிட்டாங்க! கொள்ளு தாத்தாவோட ஆட்களும் விடாம துரத்திட்டு போனாங்க! அந்த மலைக்காட்டுக்குள்ள புகுந்த அவங்களை இரண்டு நாட்கள் கழிச்சு தான் கண்டுப்பிடிச்சாங்க! ஆனா அவங்க கையில் பெட்டி இல்லை. அந்த காட்டுக்குள்ள.. தான் மறைச்சு வச்சுருந்தாங்கனு தெரிஞ்சு அவங்களை பாறை மலை உச்சில கட்டி வச்சு.. சித்திரவதை செய்தாங்க! ஆனா அவங்க அந்த பெட்டி எங்கே இருக்குனு.. அவங்க வாயைவே திறக்கல. கடைசில அவங்க வீட்டு பெண்கள் மேலே கையை வைக்க போறதா மிரட்டினாங்க..” என்றுக் கூறும் போதே.. மைதிலிக்கு மிகவும்.. தர்மசங்கடமாக இருந்தது. கூனிகுறுகிப் போனாள். பின் தொடர்ந்து கூற ஆரம்பித்தாள்.


“அதைக் கேட்ட மாறானோட வந்த மூன்று பேரும்.. அதைக் காண சகியாது.. ஆனா பெட்டிகளை மறைச்சு வச்ச இடத்தையும் சொல்ல.. விருப்பமில்லாம.. அங்கிருந்து குதிச்சு தற்கொலை செய்துட்டாங்க! ஆனா மாறான்.. திருட வரும் போதே.. அவங்க குடும்பத்தினரை.. அந்த ஊரை விட்டு அனுப்பிட்டு வந்தேன். அது தெரியாம கொள்ளு தாத்தாவோட ஆட்கள் போய் தேடிப் பார்த்துட்டு ஏமாந்து வந்தாங்க! அந்த கோபத்தை.. மாறானோடு இருந்த இன்னொருவரையும் அடித்து சித்திரவதை செய்ய ஆரம்பிச்சாங்க! முடிவில் அவங்க இரண்டு பேரும் இறந்துட்டாங்க..” என்றுவிட்டு மெல்ல விழியை உயர்த்திப் பார்த்தாள்.


சூர்யா உணர்ச்சிகளற்று அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.


மைதிலி “இந்த விசயம் எட்டு ஊர் முழுக்க பரவிருச்சு! யாரும்.. அதை அரசாங்கத்திற்கு சொல்ல தைரியம் இல்லை. ஆனா மலைக்காட்டுக்குள்ள.. அந்த பெட்டி இருக்கு என்று அனைவருக்கும் தெரிஞ்சுருச்சு! அதனால என் கொள்ளு தாத்தா.. அந்த காட்டுக்குள்ள மாறானோட ஆவி சுத்தறதா.. ஆளை ஏற்பாடு செய்து.. மக்களை நம்ப வைத்தார். அவர் அந்த பெட்டிகளை எந்த வித தடயமும் இல்லாம தேட ஆரம்பித்தார். அந்த மலைக்காடு.. கிட்டத்தட்ட பெருசும் சிறிசுமாக பதினைந்து மலைகள் கொண்ட மலைத் தொடர் பகுதி! அங்கே அந்த இரண்டு நாள்ல.. அவங்க எங்கே பெட்டியை மறைச்சு வச்சுருக்காங்க என்றுத் தேடறது.. அவ்வளவு ஈஸியான வேலை இல்லை. கிட்டத்தட்ட மூணு மாசம் தேடியிருப்பார். அப்படிப் போன இடத்துல.. தனியா பிரிச்சு போயிட்டார். ஆனா அடுத்த நாள்.. அவர் இறந்து கிடந்தார். அடுத்து இரண்டாம் நாள்.. என் கொள்ளு பாட்டி.. அவங்க ரூமில்.. மர்மமான முறையில் இறந்து கிடந்தாங்க! அப்பறம் கொள்ளு தாத்தா அழைச்சுட்டு போன அடியாட்கள் எங்க பண்ணை வீட்டில் தங்கியிருந்தப்போ.. இரவோடு இரவா.. வீடு பற்றியெரிச்சு அதில் கருகி இறந்துட்டாங்க! பொய்யா பரவின ஆவி.. நிஜமாலுமே.. கொன்றவங்களைப் பழி வாங்குது.. என்று என் வீட்டு ஆளுங்க அமைதியாகிட்டாங்க! ஆனா கொஞ்சம் கொஞ்சமா.. எங்க வீட்டு செழிமையும் நிம்மதியும்.. இருக்கிற பேரும்.. மரியாதையும் போச்சு! என் தாத்தா காலத்தில் குடும்பமே இரண்டாக பிரிச்சு.. எல்லாம் போன நிலை! அதுனால தான் அவர் அப்படியாகிட்டார்.”


“வீட்டின் செல்வ நிலை தாழவும், எங்க வீட்டு ஆளுக்குள்ளவே சண்டை போட்டுக்க ஆரம்பிச்சுட்டாங்க! ஒருத்தரை ஒருத்தர் விரோதிச்சுட்டாங்க! அந்த சண்டையில் என் அப்பா அவரோட அண்ணன் குடும்பத்திடம் சண்டை போட்டார். அவங்க கோவிச்சுட்டு வெளியே போயிட்டாங்க! அவரை சமாதானப்படுத்திக் கூட்டிட்டு வர.. அப்பாவோட தம்பி போனார். ஆனால் அவரைக் காணவில்லை. கடைசியாக மலைக்காட்டுக்குள்ள பார்த்ததாக சொன்னாங்க! அந்த மாறனின் ஆத்மா உருவத்தை ஊர் சனங்கள் பார்த்திருக்காங்க!”


“இப்படி இருந்த போது தான்.. நாலு வருஷத்துக்கு முன்னாடி.. வந்த ஜோசியர் ஒருவர்.. அந்த பெட்டிக்குள்ள.. எங்களோட குலத் தெய்வம் அடைச்சு இருக்கிறதாலே தான்.. எங்க குடும்பம் இப்படி அழிஞ்சுட்டே வருதுனு சொன்னார். முதலிலேயே அந்த பெட்டிகளை எடுத்துடணுமினு இருந்த.. என் அப்பா.. தீவிரமா வேலை தேட ஆரம்பித்தார். மறுபடியும் எங்க வீட்டுல லைன்னா கெடுதல்கள் நடந்துச்சு! என் அப்பா அதைப் பற்றியெல்லாம் கவலைப்படலை. என் அப்பா இன்னும் தேடிட்டு தான் இருக்கிறார். அந்த ஆத்மாவும்.. அவருக்கு ஒவ்வொரு சமயமும் எதாவது இடைஞ்சலை கொடுத்துட்டு தான் இருக்கு!” என்றாள்.


தனக்கு தெரிந்ததை முழுவதையும் கூறிவிட்ட மைதிலி.. சிறிது நேரம் தலைகுனிந்து அமர்ந்தாள். பின் சிறு பெருமூச்சுடன் நிமிர்ந்தவள், “இதுதான் என் குடும்பம்! அன்பு, பாசம், அரவணைப்பு என்றாலே என்னனென்னு தெரியாதது தான் இந்த குடும்பம்! இங்கே நடக்கிறதைப் பார்க்கும் போது.. சில சமயம் எனக்கு தலையே வெடிச்சுரும் போல இருக்கும். யாரும் வேண்டாம் என்று எங்காவது ஓடி விடலாம் போல இருக்கும். அந்த சமயம் தான் என் பிரெண்டோட மேரேஜ் வந்துச்சு! அங்கே கிளம்பறதுக்கு முன்னாடி.. இங்கே வீட்டில் வழக்கம் போல் பிரச்சினை! அம்மாவும் என் மேரேஜ் பற்றிப் பேசினாங்க! போகிற போது.. டிரைவர் மாமா… எனக்கு கல்யாணம் ஆகி.. வரப் போகிற கணவனால்.. இந்த குடும்பத்தில் பிறந்ததால் சுமந்துட்டு இருக்கிற பாவம் கழியும் என்றுச் சொன்னாங்க! என் பிரெண்ட்ஸில் இரண்டு பேருக்கு மேரேஜ் ஆகிருச்சு! அவங்க அவங்களோட ஹஸ்பென்ட் பற்றிப் பேசினது, கல்யாணம் ஆகப் போகிற.. என் பிரெண்ட் முகத்தில் இருந்த சந்தோஷம், முதல் சந்திப்பிலும்.. பிறகு நடந்த சந்திப்பிலும் ஏதோ வகையில் என்னை கவர்ந்த நீங்க.. என்று எல்லாம் சேர்ந்து.. உங்களை கல்யாணம் செய்துக் கொள்ள வச்சுருச்சு! அதுக்கு எத்தனை முறை வேண்டுமென்றாலும் மன்னிப்பு கேட்டுக்கிறேன். ஆனா நீங்களும் நானும் கணவன் மனைவி என்பதை மாற்ற முடியாது தானே! என்னை விட்டுட்டு போக மாட்டிங்க தானே..” என்று அவனை ஏக்கத்துடன் பார்த்துக் கேட்டாள்.


மைதிலி கூறி முடிக்கும் வரை எவ்வித குறுக்கீடும் இல்லாமல் கேட்டுக் கொண்டிருந்த சூர்யா, சிறிது தொண்டைக் கனைத்த பின்.. “நீ ஆரம்பத்தில் சொன்னதில் இருந்து இப்போ சொன்னது வரை.. எதுவும் இதுவரை நான் பார்த்திராத கேள்விப்படாத விசயம்! இந்த மாதிரி நிஜ வாழ்க்கையிலும் நடக்குமானு.. ஷாக்கா இருக்கு! ஆனா நீ நடக்குது என்றுச் சொல்கிறது போது.. என்னால் நம்பாம இருக்க முடியலை.” என்றான்.


உடனே மைதிலி “நான் சொல்றது கேட்க கதை மாதிரி இருந்தாலும்.. எல்லாம் உண்மை சூர்யா! எல்லாருக்கும்.. எதாவது ஒரு வகையில் அந்த பெட்டிகள் கிடைச்சுராதா என்றுத் தான் மூளையில் ஓடிட்டு இருக்கு! அதற்காக அவங்க என்ன வேண்டுமென்றாலும் செய்வாங்க! எனக்கு பயமா இருக்கு சூர்யா! எனக்கு ஒரு துணையா நீ இருப்பே தானே..” என்றுக் கேட்டாள்.


அவளையே பார்த்துக் கொண்டிருந்த சூர்யா “நீ சொன்ன விசயங்களில் சிலது உண்மை, சிலது பொய், சிலது நடக்காதது, சில விசயங்களைச் சொல்லுலை.. ரைட்டா!” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்டு.. மைதிலி திகைத்தாள்.


மைதிலி “நான் என்ன கேட்டுட்டு இருக்கேன். நீ என்ன சொல்றே சூர்யா!” என்றவளின் குரலில் அத்தனை வருத்தம் இருந்தது.


சூர்யா “நீ சொன்னது சரித்தான் என்றுச் சொல்றேன் மைதி! யாருக்கும் நல்ல எண்ணமே இல்லை. எதாவது ஒரு வகையில்.. பெட்டி தனக்கு கிடைக்காதா என்றுத் தான் பார்க்கிறாங்க..” என்றான்.


மைதிலி “ஆமா சூர்யா!” என்றாள்.


தற்பொழுது சூர்யா அவளை நேராக பார்த்து “சொல்லு மைதி! என்னை ஏன் கல்யாணம் செய்துக்கிட்டே?” என்றுக் கேட்டான்.


அதைக் கேட்ட மைதிலி குழப்பமுற்றாள்.


“நீதான் கண்டுப்பிடிச்சுட்டியே சூர்யா! நான் உன்னை லவ் செய்து மேரேஜ் செய்துக்கலைனு! ஆமாம் எனக்கு பாதுகாப்பிற்காக தான் மேரேஜ் செய்துட்டேன். என் கூட இருப்பே தானே சூர்யா..” என்றுக் கேட்டாள்.


அதற்கு சூர்யா “அப்போ நாளைக்கே இங்கிருந்து போகலாம். யார் நம்மை தடுக்க போறாங்க..” என்றான்.


அதைக் கேட்ட மைதிலி திகைப்புடன் “நீ இங்கே பத்து நாட்கள் இருக்கலானு சொன்னே தானே சூர்யா..” என்றாள்.


அதற்கு சூர்யா “ஆமா சொன்னேன். ஆனா இங்கே இருக்க முடியுமா! ஆவி, கொலை, துரோகம், சண்டை, மக்களோட சாபம் என்று ஒரே பயங்கரமா இருக்கு! எனக்கும் பயமா இருக்கு.. என்னால் இங்கே இருக்க முடியாது. உனக்கு தேவை இங்கிருந்து விடுதலை தானே! அதை நான் உன்னை கல்யாணம் செய்த கணவனாய் நான் உனக்கு தரேன். நாளைக்கு வரை கூட வெயிட் செய்ய வேண்டாம். உனக்கு தேவையானதை எடுத்து வை. போகலாம்.” என்றான்.


ஆனால் மைதிலி அசையாமல் அமைதியாக நின்றாள்.


தனது பையை எடுத்து தோளில் மாட்டிக் கொண்ட சூர்யா “நீ இங்கிருந்து எதையும் எடுத்து வர வேண்டாம் மைதி! எதாவது எடுத்துட்டு வந்தா.. அது வழியா.. இந்த குடும்பத்தோட கெட்டது எல்லாம் ஒட்டிட்டு வந்திர போகுது. வா போகலாம்.” என்று அவளது கையைப் பற்றி அழைத்து செல்ல முயன்றான்.


ஆனால் மைதிலி இம்மியளவு கூட அசையாமல்.. நின்றாள்.


சூர்யா விடாது பற்றி இழுக்கவும், “விடு..” என்ற உதறலில்.. தனது கையை விடுவித்துக் கொண்டு ஆத்திரத்துடன் மைதிலி நின்றிருந்தாள்.


அவளைப் பார்த்தவனின் முகத்தில் மெல்ல புன்னகை படர்ந்தது.


மாறாத புன்னகையுடன் சூர்யா “சொல்லு மைதி! ஏன் என்னை மேரேஜ் செய்துக்கிட்டே?” என்றுக் கேட்டான்.


அவனை நேராக பார்த்த மைதிலி “நீ அந்த மாறன் மாதிரி இருக்கே!” என்றாள்.


சூர்யா அமைதியாக பார்க்கவும், தனது மேஜையை திறந்த மைதிலி பழுப்பேறிய பழைய படத்தை ஒன்றைக் காட்டினாள்.


அதில் சிலம்பாட்டம் ஆடிய பொழுது எடுத்த படத்தில் மிக தெளிவாக முகம் தெரியும் படி நின்றிருந்த மாறனின் உருவம் அப்படியே.. சூர்யாவை போல் இருந்தது.


அந்த படத்தை அருகில் இருந்த நாற்காலியில் வீசிய சூர்யா “இதனால் என்ன யுஸ்..” என்று உதட்டை வளைத்தான். அடுத்த கணம் எப்படி என்றுத் தெரியவில்லை. சூர்யா சுவற்றோரம் அழுத்த பற்றியிருக்க.. அவனது கழுத்தில் மைதிலியின் கையில் இருந்த கத்தி அழுத்திக் கொண்டிருந்தது.


மைதிலி “நீ எனக்கு ஹெல்ப் செய்துத்தான் ஆக வேண்டும். இல்லைன்னா.. நீ உயிரோட இங்கிருந்து போக முடியாது. நீதான் அந்த மாறன் மறுபிறவியா வந்திருக்கே.. என்று கதையை பரப்பி விட்டுருவேன். உனக்கு பேய் பிடிச்சுருச்சுனு கதை கட்டி விட்டுருவேன். அப்பறம் உன்னை இந்த ஊர் சனங்க சும்மா விடுவாங்க என்று நினைச்சியா..! ஊர்காரங்க எத்தனை பேரை அந்த ஆவி கொன்றிருக்கு தெரியுமா! அதை நான் உன்கிட்ட சொல்லாம விட்டுட்டேன். இந்த ஃபோட்டோவை வெளியே காட்டின போதும்.. எல்லாரும் உன்னை மொய்க்க ஆரம்பிச்சுருவாங்க..! என் அப்பா, என் ரிலேட்டிவ்ஸில் இருந்து இந்த ஊர் சனங்க வரை உன்னை சும்மா விட மாட்டாங்க! ஆனா எனக்கு ஹெல்ப் செய்வதாய் சொன்னா.. இந்த படத்தை நான் யாருக்கும் காட்ட மாட்டேன். நாம் சைலன்ட்டா.. அந்த மலையில் இருக்கிற.. பெட்டிகளை தேடலாம். யார் கண்ட.. அந்த ஆவியை மாதிரி இருக்கிற உன்னை அது சும்மாவும் விடலாம். உனக்கு ஹெல்ப்பும் பண்ணலாம். பிகாஸ்.. அந்த மலைக்காட்டிற்கு கிட்ட போனே தானே! நீ உயிர் தப்பிச்சுட்டே.. உன் அதிர்ஷ்டத்தை தான் நான் பார்த்தேனே..” என்றுச் சிரித்தாள்.


சூர்யாவின் முகத்தில் மெல்லிய புன்னகை மீண்டும் மலர்ந்தது.


“இந்த குடும்பத்தில் வந்தவ.. எப்படி பயப்படற நல்ல பொண்ணா இருப்பா என்று நான் டவுட் பட்டது சரிதான்! நீ உன் கொள்ளு தாத்தா, உன் அப்பாவையே மீறுவே!” என்றுச் சிரித்தான்.


 
Status
Not open for further replies.
Top