All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணி பாஸ்கரனின் "என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

கொஞ்சம் ஒர்க் அதிகம் அதான் இன்று நேரம் ஆகி விட்டது. அதே போல் இன்னொரு விஷயமும் கூட.... இனிமேல் என்னை சிரிப்பால் சிதைத்தவளே வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று அப்டேட் இருக்கும். முன்பு போல் தினமும் கொடுப்பது கொஞ்சம் சிரமமாக உள்ளது. முடிந்தவரை அதிகமாகவும் கொடுக்க முயற்சிக்கிறேன் நண்பர்களே....






அத்தியாயம் 32


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

வைதேகி என்ன படம் என்று அஸ்வந்த்திடம் கேட்டதற்கு, அங்க போய் நீயே பாத்துக்கோ என்று சொல்லிவிட்டு, தாங்கள் பார்க்க போகும் படம் ஸ்கிரீன் 10 ல் ஓடுவதாக தான் புக் செய்ததை பார்த்து தெரிந்து கொண்ட அஸ்வந்த், யாதவிடம் சொல்ல அவன் சொப்னாவை அழைத்து கொண்டு முன்னே சென்றான்.


இங்கே வைதேகியோ சுவேதாவை இன்னும் காணாததால் அவள் சுற்றி முற்றி சுவேதா வருகிறாளா என்று தேடி கொண்டிருக்க....


தான் அவள் பக்கத்தில் நிற்பதை கூட கண்டுக்கொள்ளாமல் அவள் மிகவும் தீவிரமாக யாரையோ தேடி கொண்டிருப்பதை பார்த்தவன், அவள் தன்னை கவனிக்கும் பொருட்டு மெதுவாக அவள் தோளில் தட்டியவன் அவளை பார்த்து, என்ன என்பதை போல் தன்னுடைய புருவத்தை ஏற்றி இறக்கினான்.


அவனுக்கு தெரியும் அவள் யாரை தேடுகிறாள் என்று....


வைதேகி அஸ்வந்த்தை பார்த்து, "என்னங்க இன்னும் சுவேதா வரலையே.... படம் ஆரம்பிக்கறதுக்குள்ள வந்துறேன்னு சொன்னாளே. மணி வேற ஆகிடுச்சுங்க. இன்னும் காணும். போன் பண்ணா ஸ்விட்ச்ஆப்னு வருது. இப்ப என்ன பண்றது" என்று இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் அவள் படபடவென்று மூச்சு விடாமல் பேச....


அவளின் பேச்சில் சிரித்தவன், தன்னுடைய மொபைலில் எதையோ தேடி எடுத்து அவளிடம் நீட்ட....


அவன் காட்டி இருந்ததோ சுவேதா அவனுக்கு அனுப்பி இருந்த மெசேஜ், அதை படித்தவள் அவள் அனுப்பியிருந்தை பார்த்து அவள் சுவேதாவை முறைக்க முடியாத காரணத்தால் மொபைலை முறைத்து பார்த்து கொண்டிருக்க….


அந்த மெஸ்ஸஜில் அவள் தன்னால் வரமுடியாது என்று ஏதேதோ காரணம் கூறியவள், கடைசியில் அண்ணா வைதேகிக்கிட்டே சொல்லிடுங்க. அவளுக்கு போன் பண்ணி சொன்னா திட்டுவா அதான் என்று அனுப்பி இருந்தாள்.


அவளின் முறைப்பில் மேலும் புன்னகை விரிய அவளிடம் இருந்து கிட்டத்தட்ட மொபைலை பிடுங்குவதை போல் வாங்கியவன் அவளை அழைத்து கொண்டு உள்ளே நுழைந்தான்.


ஏற்கனவே சொப்னாவும், யாதவும் உள்ளே போய் அமர்ந்துவிட.... அஸ்வந்த்தும் வைதேகியும் அவர்களுடன் போய் இணைந்து கொண்டனர். பெண்கள் இருவரையும் நடுவில் விட்டுவிட்டு ஆண்கள் இருவரும் அவர்களின் இணையின் மறுபுறம் அமர்ந்துகொள்ள....


சரியாக அந்த நேரம் லைட்ஸ் ஆப் ஆகி படமும் ஆரம்பமானது. வைதேகி படம் ஆரம்பித்த நிமிடமில்லாமல் அதில் வந்த சில பிச்சர்ஸை பார்த்துவிட்டு அது ஒரு இங்கிலிஷ் படம் போல் அவளுக்கு தோன்ற அஸ்வந்த்தின் புறமாக சாய்ந்தவள் மெதுவான குரலில் "மாமா இங்கிலிஷ் படமா இது. ஏன் சௌண்டலான் ஒரு மாதிரி பயமா இருக்கு. என்ன படம் இது" என்று கேட்டாள்.


தியேட்டர் முழுவதும் ஏதோ மயான அமைதியாக இருப்பதை போல் தோன்ற... படத்தில் இருந்து வந்த சத்தம் அந்த இடத்தையே அதிர செய்து கொண்டு இருந்தது.


எங்கே தான் சத்தமாக பேசினால் மற்றவர்களுக்கு கேட்டுவிடுமோ என்று அவள் அமைதியாக கேட்க.....


அப்பொழுதும் அஸ்வந்த் எதையும் சொல்லாமல் தன் முகத்தை பார்த்து கொண்டிருந்த அவளின் முகத்தை ஸ்கிரீனை நோக்கி திருப்ப.....


அப்பொழுது அங்கே ஸ்கிரீனில் "conjuring 2” என்று படம் பேர் அதில் வந்தது.


ஏற்கனவே conjuring 1 பார்க்கா விட்டாலும் அதனை பற்றி தெரிந்து வைத்திருந்தவள்,


இப்பொழுது அதனுடைய இரண்டாவது பார்ட்டை கண்டு முகமெல்லாம் பயத்தில் வெளிற தன் பக்கத்தில் அமர்ந்திருந்த அஸ்வந்த்தின் கையை இறுக பற்றினாள்.


அவளின் செயலிலேயே அவளை புரிந்து கொண்டவனின் முகத்தில் புன்னகை அரும்ப இப்பொழுது அவன் அவளின் புறம் நன்றாக சாய்ந்து அவளின் காதில் மெதுவாக அதே சமயம் கிசு கிசுப்பாகவும் "என்ன படம்னு தெரிஞ்சுதா” என்று கேட்டவன் அதோடு மட்டுமல்லாமல் அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் ஒன்றை பதித்தவன், "இப்போ பயம் போச்சா" என்று கேட்டவனின் குரல் குழைந்திருந்தது.


அவன் அப்படி செய்தபிறகு அவளுக்கு பயம் போகாமல் இருந்தா தான் ஆச்சர்ய படவேண்டும்.


அவள் அவனையே இமைக்காமல் பார்க்க. அவளை பார்த்து சிரித்தவன், அடுத்ததாக அவள் அமர்ந்திருந்த சீட்டின் உள்ளே கையை நுழைத்து அவளின் இடையை பிடித்து தனக்கு அருகில் உட்கார வைப்பவனை போல் பிடித்திழுத்தவன், அவள் தன்னுடைய கண்களை அகல விரிக்க அதில் இன்னும் சொக்கி போனவன் அவளின் காதின் அருகில் சென்று "இப்போ படம் பாரு" என்று சொல்ல...


அவளுக்கோ இதுவரை போயிருந்த பயம் மீண்டும் தொற்றி கொள்ள அவனை பார்த்து வேகமாக தலையை ஆட்டி மறுத்தாள்.


"ஸ்மைலி இங்க பாரு.... இதுக்கு மேல நீ எந்த ஒரு கோஸ்ட் பிளிமும் (Ghost film) பாத்து பயப்பட மாட்ட. I promise you" என்று கூறியவனின் பேச்சை நம்பி படத்தை பார்க்க ஆரம்பித்தவள்,


சிறிது நேரத்தில் அதில் கோஸ்ட் வர பயந்து போய் அவனின் புறம் திரும்ப....


எப்படியும் இதை பார்த்து தன்னை நோக்கி திரும்புவாள் என்று நினைத்திருந்தவன், அவள் திரும்பிய அடுத்த நொடி அவளின் இதழை தன்னுடையதால் அழுத்தமாக சிறை செய்திருந்தான்.


முதலில் பயத்தில் எதுவும் புரியாமல் விழித்தவள் அதன் பிறகு அவளும் அதில் மூழ்கி போய் விட.... அஸ்வந்த் தான் தன்னை கஷ்டப்பட்டு அவளிடமிருந்து விலக்கியவன், "கோஸ்ட் ஸீன் சமயா இருந்துசு பேபி" என்று மயக்கதுடன் கூறியவன், "K movie பாரு" என்று சொல்ல...


இப்பொழுது அவளுக்கு அவனின் எண்ணம் நன்றாக புரிந்தது. அதை நினைத்து அவளுடைய முகமெல்லாம் சிவந்துவிட, கேட்குமா கேட்காதா என்பதை போன்றிருந்த மெல்லிய குரலில், “ஏன் மறுபடியும் கிஸ் பண்ணவா" என்று கேட்டாள்.


"ஹ்ம்ம் ஆமா ஏன் தர மாட்டியா. உனக்கும் கோஸ்ட் பியர் போன மாதிரி இருக்கும். எனக்கும் கிஸ் கிடைச்ச மாதிரி இருக்கும்ல"


"உங்கள" என்று அவனின் தன் இடையை பிடித்திருந்த கையிலேயே நறுக்கென்று கிள்ள.
அதில் "ஆஹ் வலிக்குது பேபி" என்று கத்த



அவனின் வாயை சட்டென்று பொத்தியவள், "ப்ச் என்னங்க" என்று சொல்லிக்கொண்டே யாரவது பார்த்து விட்டார்களா என்று சுற்றி முற்றி பார்க்க.


அஸ்வந்த் தன்னுடைய வாயை மூடியிருந்த அவள் கையினில் முத்தமிட்டவன் அவளை பார்த்து கண்களை சிமிட்ட....


அவளோ வேகமாக கையை விலக்கி கொண்டு தரையை பார்க்க...


அப்பொழுது ஸ்கிரீனில் கரெக்டாக கோஸ்ட் ஸீன் வர அவளின் முகத்தை நிமிர்த்தி அதை பார்க்குமாறு செய்தவன்....


இப்பொழுது அவள் அதை கண்டு பயம் கொள்ளாமல் அவனை திரும்பி பார்த்து முறைக்க...
"என்ன பயம்லாம் போய்டுச்சு போல"



அவன் கூறியது உண்மை தானே எனக்கு ஏன் இப்பொழுது பயம் வரவில்லை என்று ஆச்சர்யப்பட்டவள் அவனை வியந்துபோய் பார்க்க...


அதில் சந்தோசப்பட்டவன்.... “No kisses ah baby” என்று முகத்தை பாவம் போல் வைத்து கொன்டு கேட்டான்.


அதில் அவள் அவனை மறுபடியும் கிள்ள போக... அவளிடமிருந்து தப்பித்தவன், அவளின் முகத்தை நோக்கி குனிந்தான்.


அவர்களுக்கு அங்கு அப்பொழுது ஓடி கொண்டிருந்த கோஸ்ட் பிலிம், லவ் பிலிமாக மாறி போயிருந்தது.


இங்கே இவர்கள் இருவருக்கும் இடையில் காதல் படம் ஓடி கொண்டிருக்க.... அங்கே யாதவின் நிலை தான் கொடுமையாய் இருந்தது. ஏன்டா இந்த படத்திற்கு வந்தோம் என்ற அளவிற்கு நொந்து போய் விட்டான்.


மற்றவர்களை போல் இல்லையென்றாலும், பெண்களுக்கு இருக்கும் கோஸ்ட் பிலிம்மின் மேல் உள்ள பயம் கொஞ்சமாவது அவளுக்கு இருக்கும் என்று நினைத்து வந்திருந்தவனுக்கு, அவள் படம் ஆரம்பித்ததிலிருந்து அதனை ஆர்வமாக பார்க்க ஆரம்பிக்க அவனுக்கு சப்பென்றாகி விட்டது.


சரி போனால் போகின்றது அவளின் கையையாவது பிடித்து கொண்டே படத்தை பார்ப்போம் என்று பிடித்தவனுக்கு அவளிடம் இருந்து எந்த ஒரு எதிர்ப்பும் இல்லை. அதே சமயம் அங்கு இணக்கமும் இல்லை.


எவ்வளவு நேரம் தான் அப்படியே இருக்க முடியும், அவளின் கையை அவன் வருட ஆரம்பிக்க, சிறிது நேரத்தில் அவனிடமிருந்து தன்னுடைய கையை பிரித்தெடுத்தவள், அவனின் கையோட தன்னுடைய கையை இணைத்து கொண்டு, “It’s very interesting yaadhav. See” என்று அவள் பார்க்க ஆரம்பித்துவிட்டாள்.


ஒரு வழியாக படமும் முடிந்துவிட... அனைவரும் வெளியில் வந்தனர்.


சொப்னா அங்கிருந்த மற்றவர்களை பார்த்து, “How was the movie? I feel good. What about you guys?” என்று கேட்க...


அதற்கு அஸ்வந்த்தோ வைதேகியை பார்த்து சொப்னா கேட்ட அதே கேள்வியை கேட்க...


அதற்கு அவளோ மற்றவர்களை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொள்ள....


சொப்னாவுக்கு எதுவோ புரிவதை போல் தோன்றியது. அவள் திரும்பி யாதவின் முகத்தை பார்க்க.... அவன் அவளை பார்த்து முறைத்து கொண்டிருந்தான்.


அவளுக்கு அனைத்தும் புரிந்து விட... யாதவை பார்த்து சிரித்தவள், அவனிடம் ரகசியமாக கூறுவதை போல், “sorry yaadhu… Let’s equalize this in our first night” என்று சொல்லியவள் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்தவளாய் அங்கிருந்து சிரித்து கொண்டே ஓடிவிட்டாள்.


இப்படியாக அவர்கள் நாட்களும் சந்தோசமாக கழிய.....


அதோ இதோ என்று எதிர் பார்த்து கொண்டிருந்த யாதவ் சொப்னாவின் திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் என்ற நிலையில் வந்து நின்றது.




என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 32 (2)


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

யாதவ் சொப்னாவின் திருமணத்திற்கு முதல் நாள் காலை அஸ்வந்த்தின் வீடே பரபரப்பாக இருந்தது. சகுந்தலா, "அம்மா வைதேகி, திங்ஸ் எல்லாம் கரெக்ட்டா எடுத்து வச்சாச்சான்னு ஒருதடவை நீயும், சுவேதாவும் பாத்துடுங்கம்மா..... அங்க போய் ஏதாவது இல்லனா கஷ்டமா போய்டும்..."


சாவித்ரி, "அதையெல்லாம் நான் ஏற்கனவே பாத்துட்டேன்மா... காலையில எழுந்ததில இருந்து கொஞ்ச நேரம் கூட உக்காராம ரெண்டு பேரும் வேல பாத்துட்டு இருக்காங்க அவங்க போய் ரெடி ஆகட்டும்...."


"அடடா... நீங்க இன்னும் ரெடி ஆகலையா.... அதை நான் கவனிக்கல பாரு... சரி சரி, இனி இருக்கிறத நாங்க பாத்துக்குறோம்... நீங்க போய் ரெடி ஆகுங்க... அப்புறம் அஸ்வத்துக்கு போன் பண்ணி அவங்க ரெடி ஆகிட்டாங்களான்னு கேளுங்கமா... அப்டியே சொப்னாவை ரெண்டு போடு போட்டு எழுப்பிவிடுங்க.... நாளைக்கு கல்யாணம் ஆகப்போற பொண்ணு... ஆனா பாரு இன்னும் எழுந்திரிக்கல.... இந்த புள்ளய வச்சிக்கிட்டு அந்த தம்பி என்ன பாடு பட போகுதுன்னு தெரிலையே....” என்று அவர்களிடம் சொல்லிவிட்டு தனக்குள்ளேயே புலம்ப ஆரம்பித்துவிட்டார்.


அங்கே யாதவின் வீட்டிலோ அஸ்வந்த்தும், அசோக்கும் சேர்ந்து யாதவை கலாய்த்து கொண்டிருந்தனர்.


அஸ்வந்த், "என்ன மச்சான் நைட் புல்லா ஒரே போனா" என்று சிரிக்க...


அசோக், "அத அவன் கண்ண பாத்தே தெரியலையா டா.... பாரு எம்புட்டு செக்க செவேல்ன்னு செவந்து கிடக்கு" என்று நீட்டி முழக்கி அவன் கூற....


யாதவ், "டேய் போதும் போங்கடா... போய் ரெடி ஆவுங்க" என்று சொல்லி சமாளிக்க
அதற்கு சிறிதும் அசையாமல், "அதுக்குள்ளே அவசரமா...." என்று அசோக் கலாய்க்க
இப்படி தான் யாதவ் ஒன்று சொல்ல... அவர்கள் அதற்கும் கலாய்க்க...



அதிலும் அசோக் தான் அஸ்வந்த்தை விட அவனை பயங்கரமாய் கலாய்த்தான்....


அவனின் கலாய்ப்பில் நொந்து போன யாதவ் கடைசியாக, "எங்க இருந்துடா இவன புடிச்ச" என்று அஸ்வந்த்தை பார்த்து முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்டுவிட்டான்.


இவர்கள் கிளம்பி அங்கு செல்ல....


அங்கே அப்பொழுதும் எழுந்திரிக்காமல் தூங்கி கொண்டிருந்த சொப்னாவை எழுப்ப வைதேகியும், சுவேதாவும் படாத பாடு பட்டு கொண்டிருந்தனர்.


சுவேதா, "எப்போ டி இவ தூங்குனா"


"நான் ஒரு மூணு மணி போல பாத்ரூம் போக எழுந்திரிச்ச போதும் கூட பேசிக்கிட்டு தான் இருந்தா" என்று வைதேகி கவலையாக கூற....


ஏற்கனவே டைம் ஆகிட்டே இருக்கே என்று யோசித்த சுவேதா வைதேகியை பார்த்து, "வேற வழி இல்லடி" என்று சொல்லிவிட்டு எங்கோ போக


அவளை புரியாமல் பார்த்து கொண்டிருந்த வைதேகி, சுவேதா பாத்ரூம் உள்ளே இருந்து ஒரு பக்கெட் தண்ணியோடு வெளியே வர....


"ஹே என்னடி பண்ற...” என்று வைதேகி தடுக்க வர...


அதற்குள் சுவேதா சொப்னாவின் மேல் அந்த ஒரு பக்கெட் தண்ணியையும் எடுத்து ஊத்தியிருந்தாள்.


தூங்கி கொண்டிருந்த சொப்னா “mom…..” என்று அலறிக்கொண்டே கட்டிலில் இருந்து வேகமாக எழுந்தாள்.


அப்பொழுது சுவேதா அவளை முறைத்து கொண்டிருக்க...


நியாயமா பாத்தா நான் தான முறைக்கணும்... இவ எதுக்கு என்னய முறைச்சி பாக்குறா...
என்று சொப்னா நினைத்து கொண்டே, “what happened?” என்று கேட்டாள்.



அதற்கு சுவேதாவோ எதுவும் சொல்லாமல் கிலா க்கின் (clock) புறம் பார்க்க....


அதை தொடர்ந்து பார்த்த சொப்னா, அதில் தெரிந்த எட்டு மணியை கண்டு அதிர்ந்தவள், “what 8 o clock?” என்று கேட்டாள்.


“hmm… yaadhav also came” என்று சிரித்து கொண்டே சுவேதா கூற


அதை கேட்ட பிறகு அவள் அங்கிருப்பாளா என்ன….. அதன் பிறகு யாரையும் கண்டு கொள்ளாதவளாய் மளமளவென்று தயாராக ஆரம்பித்தாள்.


"பாருடா யாதவ்னு சொன்னதும் எம்புட்டு பாஸ்டு" என்று அதற்கும் அவர்கள் கிண்டல் செய்ய....


அவர்களை பார்த்து அசடு வழிந்த சொப்னா, இதற்கு மேல் இவர்கள் இங்கு இருந்தால் நம்மளை ஒட்டியே தள்ளி விடுவார்கள் என்று நினைத்து, இருவரையும் இழுத்து போய் ரூமின் வெளியில் தள்ளி கதவை தாளிட்டாள்.


"ஏய் ஏய்" என்ற கத்தலெல்லாம் அவளின் காதில் விழுந்ததாகவே தெரியவில்லை.


நல்ல வேலை அவர்கள் இருவரும் கிளம்பியிருந்தனர்.


சொப்னா வராமல் கீழே இறங்கி வந்த இருவரையும் கண்ட சகுந்தலா, "ஏன்மா வந்துட்டீங்க..... அவ எழுந்திரிக்க மாட்டிக்கிறாளா...." என்று முதலில் கவலையுடன் கேட்டவர், அங்கிருந்த சாவித்ரியை பார்த்து, "இப்படி தான் தூங்கு மூஞ்சியா பிள்ளையை வளர்த்து வச்சிருப்பியா" என்று கடிந்தவர், "போய் ஒரு பக்கெட் தண்ணிய எடுத்து அவள் மேல ஊத்துங்கமா" என்று இருவரையும் பார்த்து கூறினார்.


அவர் கூறியதை தானே அவர்களும் செய்து சொப்னாவை எழுப்பி விட்டிருந்தனர். அதனால் அவர் சொன்னதை கேட்டு இருவரும் கல கலவென்று சிரிக்க ஆரம்பித்தனர்.


"என்னாச்சும்மா ஏன் ரெண்டு பேரும் சிரிக்கிறீங்க" என்று புரியாமல் அவர் கேட்க...


அவருக்கு பதிலளிக்க முடியாமல் இன்னும் சிரிப்பு வந்து கொண்டிருக்க.... சுவேதா அவரை பார்த்து இருங்க இருங்க என்று தன்னுடைய கையால் சைகை செய்து தன்னுடைய சிரிப்பை தொடர்ந்து கொண்டிருக்க...


அப்பொழுது அவர்களும் வந்துவிட்டனர்.... வீட்டினுள் நுழைந்த மூவருக்கும் சிரிப்பு சத்தம் நன்றாக கேட்க....


அசோக், "டேய் என்னடா ஒரே சிரிப்பு சத்தமா கேக்குது" என்று மற்றவர்களை பார்த்து கேட்க...


"எனக்கு மட்டும் என்னடா தெரியும் வா பாக்கலாம்" என்று உள்ளே நுழைந்த அஸ்வந்த், அவனுக்கு முதலில் அங்கிருந்த சகுந்தலா தான் கண்ணுக்கு தெரிய, "என்ன கிராண்ட்மா ஒரே சிரிப்பு சத்தமா இருக்கு" என்று கேட்க...


"எனக்குமே ஏன் சிரிக்கிறாங்கன்னு புரியல… கேட்டா சொல்லாம சிரிச்சிட்டே இருக்காளுங்க பாரு" என்று அவர் அலுப்புடன் கூறினார்.


அப்பொழுது தான் அங்கே வைதேகி நிற்பதை பார்த்தவனுக்கு, அவள் மேலிருந்து சுத்தமாக கண்ணை எடுக்க முடியவில்லை.


ஸ்கை ப்ளூவில் கழுத்து புறத்தில் ஒயிட் கலரில் எம்பிராயடரி ஒர்க் செய்யப்பட்டு வானத்து தேவதை போன்று தன் முன்னே நின்று கொண்டிருந்தவளை அவன் விழுங்கி விடுவதை போல் பார்த்து கொண்டிருக்க...


அவளும் அவனை தான் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தாள். ஸ்கை ப்ளூ டீஷிர்ட் வித் பிளாக் ஜீன்ஸ் அணிந்து தன்னுடைய சல்வாரிற்கு ஏற்ப அணிந்து வந்திருந்தவனை மகிழ்ச்சியும், வியப்புமாக பார்த்து கொண்டிருந்தாள்.


இவர்கள் இருவரும் மற்றவர்களை மறந்திருக்க…. அப்பொழுது சொப்னா கிரே கலர் வித் ரெட் கலரில் பார்டர் வைத்து தன்னுடைய பெத்தேர் கட் முடியில் மேலே மட்டும் கிளிப் போட்டு மீதியை விரித்து விட்டு எங்கே படிக்கு வலிக்குமோ என்பதை போல் மிகவும் நிதானமாக யாதவை பார்த்து நடந்து வந்தவளின் கண்ணில், தன்னுடைய நிறத்திற்கு மேட்சாக கிரே கலர் டீஷிர்ட் வித் பிளாக் ஜீன்ஸ் அணிந்து மற்றவர்களை மறந்து தன்னையே மெய் மறந்து பார்த்து கொண்டிருந்தவனை கண்டு உள்ளுக்குள் சிரித்தவள் வெளியில் அவனை பார்த்து கண் சிமிட்டினாள்.


அவளின் கண் சிமிட்டலில் சுற்று புறம் உணர்ந்த யாதவ் மனதில் "அதானே பாத்தேன் என்னடா சரவெடி அமைதியா வருதேன்னு, பாரு அவ வேலைய ஆரம்பிச்சிட்டா" என்று எண்ணியவனின் முகமும் புன்னகையில் மலர்ந்தது.


அவரவர் அவர்களின் இணையை பார்த்து கொண்டிருக்க அப்பொழுது சுவேதா தொண்டையை வேகமாக கனைத்து, "என்னப்பா எல்லாரும் இங்கேயே இருக்க போறதா ஐடியாவா. அவங்க அவங்க ஜோடியா பாத்தோன எங்களைலாம் கண்ணுக்கு தெரியாதே... எங்க டூயட் பாடிட்டு இருக்கீங்க... பாரினா" என்று சிரித்து கொண்டே கேக்க
அதில் கலைந்தவர்கள்.....



வைதேகி சுவேதாவை பார்க்க முடியாமல் அஸ்வந்த்தை பாவமாக பார்க்க....


அஸ்வந்த் வைதேகியிடம் சொப்னாவை பார்க்குமாறு கண் காட்ட....


நீ இப்போ ஏதாவது சொன்னியா என்பதை போல் அவள் முன்பு போல் யாதவையே பார்த்து கொண்டிருக்க....


சுவேதா தான் தலையில் அடித்து கொள்ள வேண்டியிருந்தது.


அதற்கு இடையில் "சரி இப்போவாது சொல்லலாம்ல எதுக்கு சிரிச்சீங்கன்னு" என்று சகுந்தலா கேக்க....


"இருடி இப்போ உன்னைய டேமேஜ் பண்றேன் பாரு" என்று சொப்னாவை பார்த்து ஒரு சிரிப்பு சிரித்து விட்டு காலையில் நடந்ததை அவள் சொல்ல....


அதற்கும் அவர்களின் இடையில் எந்த மாற்றமும் தெரியவில்லை முன்பு இருந்ததை விட இன்னும் பார்வை அதிகமாக...


"ஐயோ கிராண்ட்மா இதுக்கு மேல என்னால முடியாது. இவங்க வராங்களோ இல்லையோ வாங்க நம்ம கிளம்பலாம்" என்று அவள் தான் ஓடிவிட்டாள்.


ஆனால் அவள் ஒன்றை கவனிக்க தவறிவிட்டாள். மற்ற இருவரையும் போல தன்னுடைய ட்ரெஸ்ஸிற்கு மாட்சாகவும் ஒருவர் அணிந்துள்ளார் என்பது. அதை அவன் கவனித்து விட்டான் என்பதும். இதை மற்றவரும் அறியவில்லை. ஆனால் அவனின் பார்வை அவளையே சுற்றி கொண்டிருந்தது.


ஒருவழியாக அனைவரும் கிளம்பி யாதவின் விருப்பத்தை நிறைவேற்ற கிளம்பினர்.






என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 32 (3)


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

ஒருவழியாக அனைவரும் கிளம்பி யாதவின் விருப்பத்தை நிறைவேற்ற கிளம்பினர்.


அவர்கள் அனைவரும் சென்னையிலிருந்து கிளம்பி கீழ்திருப்பதியை அடைந்தனர்.


பெரியவர்கள் அனைவரும் அங்கிருந்த திருமலை பஸ்ஸில் ஏறி மேல்திருப்பதிக்கு செல்ல....


சிறியவர்கள் பட்டாளம் முன்பே முடிவு செய்ததை போல் ஸ்ரீவாரிமெட்டு வழியாக செல்வதற்கு புறப்பட்டது. முதலில் யாதவ் தன் விருப்பத்தை கூறியபோது எதிர்த்த பெரியவர்கள், சொப்னாவும் அவனின் முடிவில் ஸ்ட்ராங்காக நின்றுவிட அதன் பிறகு இவர்கள் தான் அவர்களுடைய வழிக்கு செல்ல வேண்டி இருந்தது.


அதன் படி திருமணத்தை திருப்பதியிலும், ரிஷப்சனை சென்னையிலும் நடத்த முடிவு செய்தனர்.


இதனை வைதேகியிடமும், சுவேதாவிடமும் கூறியபொழுது....


ஹே சூப்பர் சூப்பர் எங்க ஊருக்கா என்று சுவேதா குதூகலிக்க....


வைதேகியோ, "என்னது அவ்வளவு தூரமா.... நான் ரிசப்ஷனுக்கு வரேனே" என்று அவள் மறுக்க....


அவளை சொப்னா முறைத்த முறைப்பில் முதல் நாள் அஸ்வந்த்தின் வீட்டில் இருந்தாள்.


வைதேகியை தன்னுடைய வீட்டில் கண்ட அஸ்வந்த்துக்கு சொப்னா அன்று அவளை பார்த்த பார்வை அந்த நிமிடம் அவனுக்கு நினைவு வர, அவளை நோக்கி சென்றவன்,
"என்னமோ வரமாட்டேன்னு சொன்ன" என்று அவளை சீண்ட......



அப்பொழுது அங்கே, "வாங்கம்மா" என்று வரவேற்று கொண்டே சகுந்தலா வர....


அப்பொழுது வைதேகியின் தோளில் கையை போட்டவன், "க்ராண்ட்மா நம்ம வீட்டு மருமக எப்படி இருக்கா" என்று வைதேகியை பார்த்து கொண்டே அவரிடம் கேட்க...


இந்த தீடிர் செயலை எதிர் பார்க்காத வைதேகி என்ன சொல்வதென்று புரியாமல் அவரை பார்த்து திரு திருவென விழிக்க....


அவளின் செயலில் கவரபட்ட சகுந்தலா, தன்னுடைய கைகளால் அவளுக்கு திருஷ்டி கழித்து அவளின் கன்னத்தில் முத்தமிட்டவர், அஸ்வந்த்தை பார்த்து.... "என்னோட பேத்தி முந்தானையே புடிச்சிட்டு சுத்திட்டு இருக்காம யாதவ் வீட்டுக்கு கிளம்புற வழிய பாரு" என்று சொல்லிவிட்டு, "நீ ஏன் கூட வாடாமா” என்று வைதேகியையும், அங்கு நின்று கொண்டிருந்த சுவேதாவையும் அழைத்து கொண்டு நகர...


உங்க வீட்டு மருமகளை பாத்தோன என்னய அம்போன்னு விட்டுடுவீங்களோன்னு ஒரு நிமிஷம் ஒரே நிமிஷம் உங்கள பத்தி தப்பா நினைச்சிட்டேன் பாட்டி என்னய மன்னிச்சிக்கோங்க" என்று சகுந்தலாவை பார்த்து கூறிய சுவேதாவின் குரலில் மருந்துக்கும் வருத்தம் இல்லை.


சகுந்தலாவிடமிருந்து வாயாடி என்ற பட்டத்தையும் பெற்று கொண்டாள்.


இன்று..................


அந்த வைகுண்ட நாதனை சேவிக்க அறுவரும், ஏழு மலைகளையும் இணைத்தால் போல் அமைத்திருந்த ஸ்ரீவாரிமெட்டு பாதையில் தங்களுடைய பாத யாத்திரையை தொடங்கினர்.


ஒவ்வொருவரும் தங்களுடைய இணையுடன் இணைந்து மற்றவர்களுக்கு இந்த பாதையின் சிறப்பையும் கூறிக்கொண்டே மனம் முழுவதும் நிம்மதி ஆச்சி செய்ய அவர்களின் பயணத்தை தொடர்ந்தனர்.


வைதேகி கூறியதை சிறிது நேரம் நல்ல பிள்ளையாக அமைதியாக கேட்டு நடந்து கொண்டிருந்த அஸ்வந்த் அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல், “பேபி ஏற்கனவே உன்மேல நான் பைத்தியமா திரியிறேன்.... இதுல இப்படியெல்லாம் டிரஸ் பண்ணிட்டு வந்து என்னைய இன்னும் பைத்தியமாக்குறியே” என்று சொல்லிக்கொண்டே அவளின் கையை எடுத்து உள்ளங்கையில் முத்தமிட்டான்.


"ஐயோ கோவிலுக்கு போகும் போது என்ன பண்றிங்க" என்று அவள் வெடுக்கென்று கையை பிடுங்கி கொண்டு, "சாமி மன்னிச்சிடுப்பா" என்று கன்னத்தில் போட்டுகொண்டாள்.


அதில் சிரித்தவன் அவளின் கையை பிடித்து அதில் தன்னுடையதை கோர்த்துக்கொள்ள...


"மாமா சொன்னா கேளுங்க மாமா" என்று அவள் கையை உருவ முயற்சிக்க...


"ஒன்னும் பண்ணல சும்மா வா” என்று அவள் கையை இறுக்கமாக பிடித்து கொண்டு அவன் முன்னே நடக்க...


அவளும் முகத்தில் புன்னகை உறைய அவனுடன் இணைந்து நடந்தாள்.


முதலில் அமைதியாக நடந்த சுவேதாவும் போர் அடிக்க ஆரம்பிக்க "அண்ணா நீங்க அஸ்வந்த் அண்ணாவோட கூட படிக்கிறிங்களா" என்று பேச்சை ஆரம்பிக்க...


அவளின் அண்ணாவில் முகம் அஷ்டகோணலாக, "அண்ணா வேண்டாமே வேற எப்படி வேணாலும் கூப்டு" என்று சொல்லியவனுக்கு அவளிடம் மரியாதை பன்மையுடன் பேச கூட வாய் வர மறுத்தது. அப்படி இருக்க அண்ணாவை அவனால் எப்படி தாங்க முடியும்.


அவனின் கூற்றில் அவளுடைய குறும்புத்தனம் தலை தூக்க, "அப்டியா எப்படி வேணும்னாலும் கூப்பிடலாமா.... உன் ஆசையை ஏன் கெடுப்பானேன்.... சரிடா மொதல்ல உன் பேரு என்னன்னு சொல்லுடா" என்று கேட்டு கண்ணை சிமிட்ட....


அவளிடம் இதை அவன் சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.


அவளின் 'டா' விலேயே வாயை ஆவென்று பிளந்தவன், அவளின் கண்சிமிட்டலில் சிறிதும் அவள் இதை எப்படி எடுத்து கொள்வாள் என்று கூட யோசிக்காமல் சட்டென்று அவளின் கன்னத்தை பிடித்து கிள்ளியவன், "ஹே ரௌடி" என்று முகம்மெல்லாம் சிரிப்பாக கூறியவன் அவளின் புறம் தன்னுடைய கையை நீட்டி "friends" என்று கேட்டான்.


அவளுக்கும் அவன் அந்நியனாகவே தோணவில்லை போலும் சிறிதும் தயங்காமல் அவனின் கரத்தை கோர்த்து தன்னுடைய நண்பனாக ஏற்று கொண்டாள்.


அதன் பிறகு கேள்விக்கு பிறந்தவள் அவனை கேள்வியாய் கேட்டு கொள்ள... ஒருகட்டத்தில் முடியாமல்... "அம்மா முடியல தாயி என்னய விட்டுடு" என்று கையெடுத்து கும்பிட்டு விட...


அவனை முறைக்க முயன்று முடியாமல் அவள் சிரிக்க ஆரம்பித்து விட.... அவனும் அவளுடன் இணைந்து கொள்ள....அவர்களின் பயணம் அங்கிருந்து ஆரம்பித்தது.


யாதவ், ஆந்திராவில் தனக்கிருந்த நண்பனின் உதவியோடு அனைத்தையும் முன்பே ஏற்பாடு செய்து வைத்திருந்தான்.


மறுநாள் பிரம்ம முகூர்த்தத்தில் யாதவ் சொப்னாவின் திருமணம் நடந்தது. இங்கு சென்னையில் அவர்களின் திருமணம் நடந்திருந்தால் கூட இந்த அளவுக்கு அவர்களின் மனது நிறைந்திருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம் தான்.


யாதவ் சொப்னாவின் கழுத்தில் மூன்று முடிச்சு போடும் போது சொப்னாவின் கண்களிலிருந்து விழுந்த நீர் யாதவின் கையில் பட்டு தெறிக்க....


அவன் பதட்டத்துடன் அவள் கண்ணீரை துடைத்து என்ன என்று கேட்க....


“I’m so lucky yaadhav. You are my god’s gift” என்று கூறினாள்.


அந்த அளவுக்கு அவளின் மனதில் வைகுண்ட நாதனின் உருவம் அழுத்தமாக பதிந்தது. அவரை தனக்கு அறிமுகபடுத்திய யாதவை அவள் இன்னும் அதிகமாக காதலிக்க ஆரம்பித்தாள்.


அவர்களுக்கு சற்று ஒய்வு வேண்டும் என்று பெரியவர்கள் மறுநாள் சென்னையில் ரிஷப்ஷனை ஏற்பாடு செய்திருந்தனர்.


வைதேகியும், சுவேதாவும் மறுநாள் மாலை வருவதாக சொல்லிவிட்டு தங்களுடைய ஹாஸ்டெளுக்கு புறப்பட்டனர்.


அஸ்வந்த் அவர்களை விட செல்ல...


அவனை தனியாக அழைத்து சென்ற அசோக், "டேய் மச்சான் நான் சுவேதாவை கூட்டிட்டு போய் விட்டுக்குறேன் டா... நீ உன்னோட ஆள ட்ரோப் பண்ணுடா..."


அவனை அதிசயமாக பார்த்த அஸ்வந்த், "என்னடா நீயும் மாட்டிகிட்டியா..." என்று சற்று நேரம் கிண்டலடித்தவன், இருந்தும் "அது எப்படிடா..." என்று தயங்க...


"அவளே என்கூட வரேன்னு சொன்னா.... அப்போ உனக்கு ஓகே தான" என்று கேக்க...


அதற்க்கு அஸ்வந்த் தோலை குலுக்க....


அசோக் சுவேதாவிடம் என்ன சொன்னானோ.... "அண்ணா நான் அசோக் கூட போய்கிறேன். நீங்க வைதேகியை ஹாஸ்டெல்ல ட்ரோப் பண்ணிடுங்க" என்று கூறிவிட்டு அவனுடன் கிளம்பினாள்.


"சிஸ்டர் ஒரு நிமிஷம்" என்று சுவேதாவிடம் சொல்லிவிட்டு அசோக்கை தனியாக அழைத்து சென்றவன்... "டேய் எப்படி டா" என்று ஆச்சர்யமாக கேக்க...


"இதுக்கு உங்க ரெண்டு பேருக்கும் தான் டா நான் தேங்க்ஸ் சொல்லணும்" என்று அவனை பார்த்து சிரித்தவன் தான் அவளிடம் கூறியதை சொன்னான்… “"என்கூட வரியா நான் உன்ன ட்ரோப் பண்றேன்" என்று சொன்னதற்கு அவள் கேள்வியாய் பார்க்க... "இல்ல லவர்ஸ்க்குள்ள ஜாலியா பேசிட்டு போவாங்கல்ல நீயேன் அவங்களுக்கு டிஸ்டர்பன்ஸா போய்கிட்டு நான் உன்னைய கொண்டு போய் விடுவேன்ல" என்று அவளின் மனதை சரியாக கணித்து அவன் கூற... அது நன்றாக வேலையும் செய்தது.


அதை அவன் அஸ்வந்த்திடம் கூறியதும், "டேய் நீ பண்றதுக்கு என்னைய யூஸ் பண்ணிக்கிட்டியா... இருந்தாலும் எனக்கும் நல்லது தாண்டா பண்ணியிருக்க... என்ஜாய் பண்ணுடா" என்று வாழ்த்தி அனுப்பினான்.



என்னை சிரிப்பால் சிதைத்தவளே
தொடரும்........
 
Last edited:

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 33 (1)


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


அசோக்கிற்கு வாழ்த்து சொல்லி அனுப்பிவிட்டு வைதேகியை ஹாஸ்டெலில் விடுவதற்காக அங்கு நிறுத்தி வைத்திருந்த பல்சர் பைக்கை நோக்கி சென்று அதில் ஏறி அமர்ந்து ஸ்டார்ட் செய்தான்.


பைக் ஸ்டார்ட் ஆகி வைதேகி அதில் ஏறப்போகும் நேரம், "ஹே ஹே ஸ்டாப் ஸ்டாப்" என்று கிட்டத்தட்ட அவளை பார்த்து கத்தியவனை பார்த்து சட்டென்று அவள் என்னவோ ஏதோவென்று பயந்து பின்னால் நகர....


"ஹே சாரி சாரி ஸ்மைலி.... பயந்துட்டியா.... இல்ல இன்னிக்கு பைக்ல வேண்டாம் கார்ல போகலாம்னு தான்" என்று கூறினான்.


அதற்கு அவள் அவனை புரியாமல் நோக்க...


"இல்ல பப்லிக்கா இருக்கும்ல...." என்று அவன் இழுக்க....


அவளுக்கு அப்பொழுதும் புரியவில்லை. அதனால் முன்பு பார்த்ததை போலவே அவனை இப்பொழுதும் புரியாமல் பார்த்து கொண்டிருக்க....


அதில், "ஐயோ இப்பவும் புரியல போலயே.... நம்ம ஸ்மைலிக்கு சொன்னாலான் சரிவராது போலவே நீ டேரக்ட்டா ஆக்சன்லயே செஞ்சு காமிச்சிடு டா" என்று அவனுடைய மனசாட்சி சொல்ல...


அதில் தன்னை நினைத்தே சிரித்தவன், "ஸ்மைலி அது ஒரு சீகிரட் கிட்டக்க வாயே சொல்றேன்" என்று சுற்றி முற்றி யாரவது இருக்கிறார்களோ என்று பார்த்து கொண்டே சொன்னான்.


அவளும் அதை நம்பி, "என்ன மாமா" என்று கிட்டே செல்ல...


அவளின் காதின் அருகே சென்றவன், "கார்ல போமோது சொல்றேன்" என்று அமைதியாக சொல்லி விட்டு நகர்ந்து அவளை பார்த்து கண் சிமிட்டியவன் அவள் தன்னை அடிப்பதற்குள் அங்கிருந்து ஓடி அங்கிருந்த BMW காரில் ஏறி அமர்ந்து கொண்டான்.


முதலில் புரியாமல் விழித்து கொண்டிருந்தவளுக்கு அவன் தன்னை விட்டு நகர்ந்ததும் புரிந்துவிட "மாமா உங்கள" என்று அவனை அடிப்பதற்காக துரத்தி கொண்டு ஓடி வந்தவள் அவன் அதற்குள் காரில் ஏறியிருக்க, காரினில் ஏறாமல் தன்னுடைய இருகைகளையும் கட்டி கொண்டு அவனை முறைத்து கொண்டு வெளியிலேயே நின்று கொண்டாள்.


அதில் அவளை பார்த்து சிரித்தவன் உள்ளிருந்தே உள்ளே வா என்று கை காட்டினான்.


அவளோ அதை கண்டு கொள்ளாமல் அந்த பக்கம் திரும்பி நின்று கொள்ள...


அதில் அவனுடைய சிரிப்பு இன்னும் பெரிதாக, காரை விட்டு இறங்காமல் உள்ளிருந்தே தன்னுடைய பக்கத்து சீட்டுக்கு வந்தவன் டோரை திறந்து அவளை உள்ளே இழுத்துவிட்டான்.


அதை சிறிதும் எதிர் பார்க்காதவள் அவன் மேலே வந்து விழ...


"மாமா என்ன பண்றீங்க" என்று அவள் அவனை விட்டு எழ முயற்சிக்க...


அதில் அவனும் சற்று தடுமாற... தன்னை நிலைப்படுத்தி கொள்ள அவனின் கை அவளை பிடிக்க அதில் அஸ்வந்த் தான் இன்னும் தவித்து போனான்.


ஏனெனில் அவனின் கை பிடிக்காக அவளின் இடையை இறுக்கமாக பிடித்திருந்தது.


அதில் வைதேகியும் மூச்சு விட மறந்து உறைந்த நிலைக்கு சென்றவளை போல் ஆகிவிட....


அஸ்வந்த்தும் தன்னை கட்டுப்படுத்த முடியாதவனாய் பின்னிருந்தே இறுக அணைத்து கழுத்தில் முத்தமிட்டவன் அதில் ஆழ முகம் புதைத்து கொண்டான்.


ஒரு பக்கம் வைதேகியின் மூளை அவளை விலக சொல்லி அவளுக்கு அறிவுறுத்த...


அவளின் மனமோ அதை செயல் படுத்த இயலாமல் அவனிடம் சிக்குண்டு தவித்தது

.
அவள் இருநிலையாக தவித்து கொண்டிருந்தாள்.



எவ்வளவு நேரம் கடந்ததோ... தன்னிலைக்கு வந்த அஸ்வந்த் அவளை விட்டு நகர்ந்து தன்னிடத்தில் அமர்ந்தவன்.... வண்டியை ஸ்டார்ட் செய்து ஓட்ட ஆரம்பித்தான்.


ஆனால் வைதேகியால் தான் அவ்வளவு எளிதில் அதிலிருந்து வெளிவர முடியவில்லை. அவனின் வாசமும், சூடான மூச்சு காற்றும் இன்னும் தன்னுடைய முதுகில் பட்டு கொண்டிருப்பதை போன்றே அவளுக்கு தோன்றியது.


அந்த உணர்வை தாங்கி கொள்ள இயலாதவளாய் தன்னுடைய கால்கள் இரண்டையும் சீட்டின் மேல் வைத்து அதை இறுக கட்டி கொண்டு அதில் முகத்தை புதைத்து கொண்டாள்.


அஸ்வந்த்திற்கு இன்று தான் செய்தது அதிக படியோ என்ற எண்ணம் மனதில் உதித்திருக்க அதனால் அவளை பார்க்க முடியாமல் அமைதியாக காரை ஒட்டி கொண்டு வந்தவன் வெகு நேரமாகியும் வைதேகி அப்படியே கால்களை கட்டிக்கொண்டு அமர்ந்திருக்க அதற்கு மேல் முடியாமல் காரை ஓரமாக நிறுத்தியவன் அவளை அழைத்தான்.


அவள் அப்பொழுதும் எழாமல் அப்படியே இருக்க... அதில் அவனுக்கு இன்னும் வருத்தமாக அவளின் தோளில் கைவைத்து லேசாக அசைத்தான்.


அதில் நிமிர்ந்து அவனை பார்த்தவளின் விழி வீச்சில் இப்பொழுது அஸ்வந்த் உறைநிலைக்கு போக ஆனால் அவனை செல்லவிடாத படி வைதேகி இறுக்கமாக அணைத்திருந்தாள்.


அவளின் முதல் அணைப்பில் தன்னை முற்றிலுமாக அவளிடம் இழந்தவன் அவளின் செயலை தான் எடுத்து கொண்டவனாய் அவளை தன்னுடன் சேர்த்து இன்னும் இறுக்கி விடுவித்தவன் அவளின் நெற்றியில் முத்தமிட்டு, "தேங்க்ஸ் டி ஸ்மைலி நான் ரொம்ப ரொம்ப சந்தோசமா இருக்கேன். அதே சமயம் என் மேல நீ வச்சிருக்க நம்பிக்கையை நான் காப்பாத்தணும்ல" என்று சொல்லி அவளின் கன்னத்தை தட்டியவன் டிரைவ் பண்ண ஆரம்பித்தான்.


அவன் கூறியதை கேட்ட வைதேகிக்கு அவனை நினைத்து சந்தோசமாகவும், பெருமையாகவும் இருந்தது.
………………………………………………………………



சுவேதாவை தன்னுடன் அழைத்து கொண்டு சென்ற அசோக் தனக்கு இறகு வந்து விட்டதை போல் வானில் பறந்து கொண்டிருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.


ஆனால் அவனின் போதாத காலமோ என்னமோ அவனின் இறகை அன்றே சுவேதா தன்னுடைய பதிலால் சிறிது நேரத்தில் பிய்த்து எறிந்திருந்தாள்.



என்னை சிரிப்பால் சிதைத்தவளே
தொடரும்........
 
Last edited:

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சிரிப்பால் சிதைத்தவளே - 33(2)



சுவேதாவை பைக்கில் ஏற்றி கொண்டு சென்ற அசோக்கிற்கு தலைகால் புரியவில்லை என்று தான் சொல்ல வேண்டாம். அவன் மனம் முழுவதும் உற்சாகத்தில் துள்ளி குதித்து கொண்டிருந்தது. அதுவும் சுவேதா பைக்கில் ஏறி அமர்ந்தவுடன் அவன் கிளம்ப கூட மறந்து அப்படியே நின்றுவிட சுவேதா தான் அவன் தோளின் மீது கை வைத்து தட்டினாள். அதில் இன்னும் சந்தோஷத்தில் குத்தாட்டம் போட தோன்ற அதே உற்சாகத்துடன் விசிலடித்த படியே வண்டியை கிளப்பினான்.


சிறிது தூரம் சென்ற பிறகும் இரண்டு பேருக்கும் இடையில் எந்த பேச்சு வார்த்தையும் இல்லை. அசோக் எப்படி பேச்சை ஆரம்பிப்பது என்று யோசித்து கொண்டிருக்க... ஆனால் வேடிக்கை பார்த்து கொண்டே வந்த சுவேதாவுக்கோ போர் அடிக்க ஆரம்பிக்க அதற்கு மேல் முடியாமல் அவளே பேச்சை ஆரம்பித்தாள்.


"என்ன அசோக் ஹாப்பியா இருக்க மாதிரி இருக்கு என்ன விஷயம்?” என்று தன்னுடைய கேள்வி படலத்தை ஆரம்பிக்க...


"புடிச்ச பொண்ணு கூட போறேன்ல அதான்"


"என்னது என்ன சொன்ன....?"


"அய்யயோ உளறிட்டோமே.... டேய் அசோக் சமாளி டா" என்று அவன் யோசிக்க.... "சரி ஆரம்பிச்சாச்சு.... ஹ்ம்ம் கேட்டிட வேண்டியது தான்" என்று நினைத்தவன்… “"நீ யாரையாவது லவ் பண்றியா சுவேதா" என்று நேரடியாக விஷயத்துக்கு வர...


"ஏன் கேக்குற"


இவ ஒருத்தி எத கேட்டாலும் எதிர் கேள்வி கேட்டுட்டு.... இவ கேள்வி கேக்கறத நிறுத்தவே மாட்டா போலயே... மொதல்ல இப்படி கேள்வியா கேக்குற வாய அடைக்கணும் என்று மனதினுள் அவளை திட்டியவனின் மனசாட்சி, "எப்படி கிஸ் பண்ணியே வா என்று கேட்க..."


அதை நினைத்து அவனின் முகம் புன்னகையில் மலர்ந்தது." அதே புன்னகையுடன், "சும்மா தான். லவ் பண்றியா?"


"ஓ.... அதல்லாம் இல்ல...."


"ஏன்"


"எனக்கு அதுல இண்டெர்ஸ்ட் இல்ல"


"ஏன்"


"என்ன ஏன் ஏன்.... இண்டெர்ஸ்ட் இல்லன்னு சொல்றேன்ல விடேன்" என்று சட்டென்று எரிச்சல் வந்து விட....


அவள் எரிச்சல் படவும் அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது."சாரி.... உனக்கு என்கிட்டே சொல்ல விருப்பம் இல்லனா பரவால்ல" என்று சொல்லும் போதும் அவனுடைய குரலும் தயங்கி ஒலித்தது.


அவனின் தயங்கிய குரலை கேட்டவளுக்கு ஒருமாதிரி ஆகிவிட்டது. "ச்ச என்ன இது புதுசா எனக்கு கோவம் எல்லாம் வருது. இதுக்கு முன்னாடி நான் யார்கிட்டயும் இந்த மாதிரி நடந்து கிட்டது இல்லையே" என்று தன்னை நினைத்தே குழம்பி கொண்டிருந்தவள்... அப்பொழுது தான் வெகு நேரமாகியும் அசோக் பேசாமல் இருப்பது கருத்தில் பட, தன்னையே திட்டி கொண்டவள், "அசோக்" என்று அழைத்தாள்.


அவன் அப்பொழுதும் அமைதியாக இருக்க... "அசோக் சாரி டா.... நான் இதுக்கு முன்னாடி இப்படி நடந்துக்கிட்டதே இல்ல" என்று அவனிடம் கூறி வருத்தப்பட்டவள், அவன் பதில் பேசுவான் என்று பார்த்து கொண்டிருக்க.... அவனோ அதை கண்டு கொண்டதாகவே தெரியவில்லை.


"ஏண்டா பேச மாற்ற"


".................."


"நீ கேட்டதுக்கு நான் பதில் சொல்லலைன்னு தான....."


"................."


“ப்ச் என்னடா..... எனக்கு லவ் மேரேஜ்ல எல்லாம் இண்டெர்ஸ்ட் இல்ல.... எனக்கு அரேஞ்சு மாரேஜு தான் பிடிக்கும். வீட்ல சொல்ற பையன கல்யாணம் பண்ணிட்டு அதுக்கு அப்புறம் லவ் பண்ணனும். அதுல கிடக்கிற கிக்கு இருக்கே" என்று அவள் பாட்டிற்கு சொல்லி கொண்டே போக....


முதலில் சுவேதா எரிச்சல் பட்டத்தை கண்டு அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டாலும், அவள் 'இது மாதிரி நான் யார்கிட்டயும் நடந்து கிட்டாது இல்லை' என்று சொன்னதை கேட்டவனுக்கு அவனுடைய வருத்தம் மறைந்து முகத்தில் தானாக புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது. இருந்தும் அவள் சொன்ன வருகிறாள் என்று கேட்பதற்காக அவன் அமைதியாக இருக்க அவள் சொன்ன அரேஞ்சு மேரேஜில் “அய்யயோ மொதல்ல இவளை கரெக்ட் பண்றதுக்கு முன்னாடி இவங்க வீட்ல உள்ளவர்களா கரெக்ட் பண்ணனுமா” என்று அவனுடைய காதல் கொண்ட மனம் உள்ளுக்குள் அலறியது.


சரி விடுடா அசோக் மொதல்ல இவளை கரெக்ட் பண்ணி வீட்ல பேச நெனச்ச... இப்போ ஆப்போசிட்டா பண்ணனும்... பாத்துக்கலாம் வா என்று தன்னையே தேத்தி கொண்டவன்... "உங்க வீட்டை பத்தி கொஞ்சம் சொல்லேன்” என்று கேட்டான்.


"எங்க வீடு விசாகபட்டினத்தில இருக்கு. அப்பா லாயர். அம்மா ஹவுஸ் வைப், அண்ணா ஆட்டோமொபைல் பிசினஸ், அண்ணி டீச்சர் அப்பறம் எங்க வீட்டு அருந்த வாலு என்னோட செல்ல மருமகன் LKG படிக்கிறான்” என்று ஏதோ சொற்பொழிவு ஆற்றிவிட்டதை போல் “எங்க தண்ணி எங்க ஜூஸ்” என்று கேட்க


“இப்போதான புரியுது இவளுக்கு எங்க இருந்து இந்த கேள்விகேக்குற பழக்கம் வந்திருக்குன்னு” என்று சிரித்தவன் வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு தான் எப்பொழுதும் வண்டியின் கவரில் வைத்திருக்கும் வாட்டர் பாட்டிலை அவளுக்கு எடுத்து நீட்டினான்.


"தேங்க்ஸ் டா தொண்டையே காஞ்சிபோச்சு" என்று சொல்லிக்கொண்டு தண்ணியை வேகமாக குடிக்க...


"இவ பண்ற அலும்பு தாங்களடா சாமி. எனக்கு தெரிஞ்சி அந்த குட்டி பையன விட இவ தான் அருந்த வாலா இருக்கும்" என்று மனதினுள் நினைச்சவன், வெளியில் "போதுங்களா மேடம் இல்ல ஜூஸ் ஏதாவது" என்று சிரித்து கொண்டே கேட்டான்.


அவன் கேட்ட விதத்தில் அவளுக்கு சிரிப்பு வர இருந்தும் அதை மறைத்து கொண்டு, "ஹ்ம்ம் இப்போ கொஞ்சம் பரவால்ல ஜூஸ் குடிச்சா இன்னும் பெட்டரா இருக்கும்" என்று முகத்தை தீவிரமாக வைத்து கொண்டு சொல்ல..


"அப்படியே ஆகட்டும் மகாராணி" என்று அவன் ஒரு சேவகனை போல குனிந்து எழ....
அதில் அவள் சிரிப்பை கட்டு படுத்த முடியாமல் சிரிக்க ஆரம்பித்து விட்டாள்.



அவளுடன் இணைந்து சிரித்தவன் "நீயே வாலு இதுல உன் அண்ணன் பையன வாலுன்னு சொல்றியா"


"நான் வாலா உனக்கு" என்று அவள் அடிக்க வர...


"ஹே ஹே இது ரோடு" என்று சொல்லிக்கொண்டே அவளின் அடியிலிருந்து தப்பித்து வண்டியின் அந்த பக்கம் ஓடி போய் நின்று கொண்டான்.


அதில் அவளும் அமைதியாகி "இன்னிக்கு தப்பிச்சிட்டா என்னிக்காவது மாட்டாமலையா போக போற"


"அதில் மாட்டிக்கொள்ளவே நானும் ஆசை படறேன் 'வேதா'" என்று மனதிற்குள் சொல்லிக்கொண்டவன், "போலாமா" என்று கேட்டான்.


"ஹ்ம்ம்"


"ஜூஸ் கடைக்கு தான"


"டேய் நீ என்கிட்டே அடி வாங்காம போக மாட்ட போலயே"
………………………………………….



மாலை மயங்கிய பொழுதில் யாதவின் வீட்டில் அவனின் அறையில் சொப்னா கையில் பால் சொம்புடன் உள்ளே நுழைந்தாள்.


அவளை எதிர் பார்த்து காத்திருந்த யாதவும், அவளை நோக்கி எழுந்து வந்தான்.


அவளை நெருங்கி அவள் கையில் இருந்த பால் சொம்பை வாங்க போனவனை கண்டு "ஹே ஸ்டாப் ஸ்டாப்” என்று கத்தியவள் பின்னால் நகர...


(யாதவ் அவளுக்கு தமிழ் கத்து கொடுத்து விடுவான் என்ற நம்பிக்கையில் இனி சொப்னா பேசுவதும் தமிழில் கொடுக்க போகிறேன்)


"ஹே என்னாச்சு 'ஷோபி'"


யாதவ் தன்னுடைய பெயரை சுருக்கி அழைத்ததை எல்லாம் கவனிக்காதவலாய், "யாது கொஞ்சம் அமைதியா இருங்களேன் மறந்துட போறேன்" என்று மட்டும் சொல்லியவள் "என்ன சொன்னாங்க" என்று யோசித்து கொண்டே "யாது இதை புடிங்களேன்" என்று அவன் கையில் பாலை கொடுத்தவள் சட்டென்று அவன் காலில் விழ...........


"ஹே என்னடி பண்ற...." என்று அவன் அதிர்ந்தவனாய் தோளை பற்றி வேகமாக தூக்கினான். ஏனெனில் அவன் சொப்னா இப்படியெல்லாம் செய்வாள் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இவ்வளவு நாள் பழகியதில் இருந்து அவன் ஒரு நாள் கூட அவளுடைய முகத்தில் வெட்கம் என்ற ஒன்றை கண்டதே இல்லை. எப்பொழுதும் அதிரடி தான். அதனால் அவள் செய்தது அவனுக்கு வித்தியாசமாக இருந்தது. அவனுடைய மனது அவனின் சண்டிராணியை தான் எதிர் பார்த்தது.


சொப்னாவோ இதை எதுவும் கண்டுகொள்ளாதவளாய் தன் செயலில் கண்ணாக..... சொம்பில் இருந்த பாலை எடுத்து டம்ளரில் ஊற்றி அவனிடம் நீட்டினாள்.


அவன் அதை வாங்காமல் அவளையே புரிந்து கொள்ள முடியாமல் பார்த்து கொண்டிருக்க....


"குடிங்க யாது" என்று கூறினாள்.


அவன் அப்பொழுதும் குடிக்காமல் அவளையே பார்த்து கொண்டிருக்க....


"என்ன யாது யோசன குடிங்க" என்று அவள் மறுபடியும் கூற


"சரி என்ன தான் பண்ரான்னு பார்ப்போம்" என்று அவனும் தன்னுடைய யோசனையை கைவிட்டவனாய் பாலை குடித்தான்.


அப்பொழுது தான் ஞாபகம் வந்தவளாய் "யாதவ் பாதி மட்டும்" என்று அவசரமாக கூறினாள்.


அவனும் பாதியை குடித்து விட்டு அவளிடம் நீட்டினான்.


அவள் அதை குடித்து விட்டு அங்கிருந்த டேபிளின் மீது வைத்தவள் "ஹப்பாடி எல்லாத்தையும் முடிச்சாச்சு" என்று கையை தூக்கி சோம்பல் முறித்தவள் மெத்தையில் போய் இருகால்களையும் தூக்கி சம்பளம் போட்டு அமர்ந்து கொண்டு தன் முன் இருந்த இடத்தை தட்டி “ஏன் அங்கவே நிக்கிற யாது இங்க வந்து உட்காரு" என்று அவனை அழைத்தாள்.


அவன் யோசனையாக அவள் முன் வந்து அமர்ந்தான்.


"என்ன யாது.... இவ்ளோ நேரம் நான் பண்ணதலாம் நம்ப முடியாம பாத்துட்டு இருக்கியா. நீ என்ன இப்படி எதிர் பாக்கல தான"


அவன் ஆம் என்பதாக தலையை ஆட்டினான்.


"நானும் தான் எதிர்பாக்கல........ இந்த கிராண்ட்மாவும், மம்மியும் தான் என்னைய ஒரு வழி பண்ணிடுச்சுங்க".


"அவங்க சொன்னாங்க என்கிறதுக்காக நீயேன் சோபி இதெல்லாம் பண்ற நீ எப்படி இருப்பியோ அப்படியே இரு" என்று சொல்லியவன் அவள் முகத்தை கையில் தாங்கி,
"ஒன்னு தெரியுமா நான் என் சண்டிராணிய தான் ரொம்ப எதிர் பாத்தேன்" என்று காதலுடன் சொன்னான்.



அதில் அவள் முகம் மத்தாப்பாய் ஒளிர, "இந்த சண்டி ராணியவா" என்று சொல்லி அவனின் இதழை அழுத்தமாக சிறை செய்தாள்.


அவளின் அதிரடி தாக்குதலை சமாளிக்க முடியாதவனாய் அவன் மெத்தையில் சாய அவளும் அவன் மீதே சாய்ந்து தன்னுடைய இதழ் யுத்தத்தை தொடர்ந்தாள்.


அவன் மெத்தையிலும் அவனின் மேல் அவள் இருக்க வெகு நேரம் தொடர்ந்த அவள் இதழ் யுத்தத்தில் அவளை அப்படியே கீழே சாய்த்தவன் "ஷோபி" என்று மென்மையாக அழைத்தான்.


"யாது..... எனக்கு இந்த பெட் நேம் ரொம்ப புடிச்சிருக்குடா" என்று அவள் தன் கண்ணை திறக்காமலேயே அதை ரசித்தவளாய் சொன்னாள்.


அதை அவனும் ரசித்தவனாய் அவளின் கன்னத்தில் முத்தம் ஒன்றை பதித்தவன் "ஷோபி மொதல்ல உன்னோட படிப்பு முடியட்டும்" என்று சொன்னான்.


அதுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் என்பதை போல் அவள் அவனை புரியாமல் பார்க்க....


"என்னால உன்னோட படிப்பு எந்த விதத்திலேயும் கெட கூடாது. அது வரைக்கும் மத்தது எதுவும் வேணாம். நான் சொல்ல வரது உனக்கு புரியுது தான"


அவளுக்கு அவன் சொல்ல வருவது புரிந்தது. இருந்தாலும் அவளின் மனதில் ஏன் படிப்பையும், வாழ்க்கையையும் சரி விகிதத்தில் கவனிக்க முடியாதா என்று தான். சரி போக போக பாத்துக்கலாம் என்று நினைத்தவள் அவனிடம் சரி என்று கூறினாள்.


ஆனால் அவன் அப்பொழுது அறியவில்லை இதே படிப்பை சொல்லி தான் அவனும் அவளும் ஒன்று சேர போவதை….


இரண்டு வருடத்திற்கு பிறகு................


அஸ்வந்த்தின் BMW கார் யாதவின் வீட்டின் முன்னே கீரிச்சிட்டு கொண்டு நின்றது.
முன்பே சொல்லிருந்த படியால் யாதவும் சொப்னாவும் வீட்டின் வெளியில் வந்து நிற்க.....
காரில் இருந்து இறங்கிய அஸ்வந்த் தன் ஒட்டு மொத்த கோபத்தையும் அதன் மேல் காட்டுபவனை போல் கதவை வேகமாக அறைந்து சாத்தியவன் தன் பின்னால் வருகிறார்களா என்பதை கூட கவனிக்காதவனாய் வீட்டினுள் சென்றுவிட்டான்.



அங்கே காரின் பாக் சீட்டில் அமர்ந்திருந்த வைதேகியோ என்ன செய்வது என்று அறியாமல் கையை பிசைந்து கொண்டிருந்தாள்.


தொடரும்...
 
Last edited:

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 33 (3 )


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

அஸ்வந்த்தின் கோபத்தின் காரணம் புரியாமல் ஒருவரை ஒருவரை பார்த்து கொண்ட சொப்னாவும், யாதவும் அப்பொழுது தான் காரின் பின் சீட்டிலிருந்து இறங்கிய வைதேகியை கண்டனர்.


வைதேகியை கண்டதும் வேகமாக அவளை நெருங்கிய சொப்னா அவளை இறுக்கமாக அணைத்து கொண்டாள்.


சிறிது நேரத்தில் அவளை விட்டு விலக்கியவள், "டார்லிங் எங்க போன. ஏன் இவ்வளவு நாள் காலேஜ் வரல. ஒரு வார்த்தை கூட எங்ககிட்ட சொல்லிட்டு போகணும்னு உனக்கு தோனலல. நாங்க உனக்கு அவ்வளவு அந்நியமா போய்ட்டோமா. உன்மேல நான் கோவமா இருக்கேன். உன்கிட்ட பேசமாட்டேன் போ" என்று அவள் சிறு குழந்தையை போல் முகத்தை திருப்பி கொள்ள....


அந்த நிமிடம் வரையும் அனைத்தையும் இழந்தவளை போன்ற சோகத்தை பூசியிருந்த அவளது முகத்தில் சொப்னாவின் கோபத்தில் சிறு கீற்று புன்னகையையும் அதே சமயம் கண்களில் நீரையும் உண்டாக்கியது.


வைதேகி தனது மனதின் பாரத்தை தாங்க முடியாதவளாய் சொப்னாவை அணைத்து கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.


அத்தனை நேரமும் அவளிடம் விளையாண்டு கொண்டிருந்த சொப்னா அவளின் அழுகையில், "ஹே நான் சும்மா விளையாண்டேன் டி" என்று பதற்றம் கொள்ள...


அவ்வளவு நேரமும் அங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த யாதவ் அங்கிருந்த சூழ்நிலையை மாற்றும் பொருட்டு, "ஹே என்னடி பண்ண இந்த பொண்ணு இப்படி அழுவுது. இதுக்கு தான் உன்முகத்த யார்கிட்டயும் ஜூம் அப்ள காட்டாதன்னு சொன்ன. என் பேச்ச கேட்டாதானே" என்று ஏற்ற இறக்கத்துடன் கூற.


அதை கேட்டு சொப்னா முறைத்தாள் என்றால், அவ்வளவு நேரமும் அழுது கொண்டிருந்த வைதேகி தன்னை மறந்து சிரித்து விட்டாள்.


"என்னய சைட் அடிச்சது போதும். வீட்டுக்கு வந்தவங்கள மொதல்ல கவனி போ" என்று அவன் சிரித்து கொண்டே கூற


"உங்கள அப்பறம் வச்சிக்கிறேன்” என்று அவனை பார்த்து முறைத்து கொண்டே கூறியவள், "நீ வா டார்லிங் போலாம்" என்று அவளை வீட்டினுள் அழைத்து சென்றாள்.


யாதவிற்கோ பெரிதும் யோசனையாக இருந்தது. வைதேகியின் சிரிப்பை தொலைத்த முகமும், அஸ்வந்த்தின் கோபமான முகமும் இவர்கள் இருவருக்கும் இடையில் ஏதோ பிரச்சனை என்பதை அவனுக்கு சொல்லாமல் சொல்லியது. அவன் அதே யோசனையுடன் வீட்டினுள் நுழைய...


அங்கே மொபைலில் யாருடனோ தீவிரமாக பேசி கொண்டிருந்த அஸ்வந்த், யாதவை கண்டதும், “கே மேன். நான் சொன்ன படி எல்லாத்தையும் கரெக்ட்டா பண்ணிடுங்க” என்று அந்த புறம் உள்ளவர்களிடம் கூறி போனை வைத்தவன், “யாதவ், இவங்க இங்க ஒன் வீக் இருக்கட்டும். அதுக்கு அப்புறம் நான் சொல்லும் போது இவங்கள நான் சொல்ற இடத்துக்கு கூட்டிட்டு வா" என்று கூறினான்.


அஸ்வந்த்தின் செயலுக்கான காரணம் புரியாமல் அவன் யோசனையுடன் எதுவும் சொல்லாமல் பார்த்துக்கொண்டிருக்க...


"உன்னால முடியாதுன்னா சொல்லு. நான் இவங்கள வேற எங்காவது ஸ்டே பண்ண வச்சிக்கிறேன்” என்று வைதேகியை நோக்கி அவன் நகர.


அஸ்வந்த்தின் பேச்சும் செயலும் சொப்னாவிற்கு வித்தியாசமாக பட, அவள் அருகிலிருந்த வைதேகியை திரும்பி பார்த்தாள்.


வைதேகியோ அவனின் அந்நியமான பேச்சில் இதோ அதோ என்று அவளின் கண்ணீர் வெளியில் வர தயாராக இருக்க அவள் உதடு கடித்து அழுகையை கஷ்டபட்டு அடக்கி கொண்டிருந்தாள்.


அதை கண்ட சொப்னாவிற்கு அஸ்வந்த்தின் மேல் கோபம் வர, "டேய் என்னடா புதுசா வாங்க போங்கன்னு சொல்லிட்டு இருக்க. என்ன நெனச்சிட்டு இருக்க மனசுல" என்று அவள் கோபமாக பொரிய ஆரம்பிக்க..


அப்பொழுது யாதவ், “ஷோபி அமைதியா இரு" என்று கூறினான்.


"நீங்க சும்மா இருங்க யாதவ்... நானும்..." என்று அவள் ஏதோ சொல்ல வர...


"சொப்னா சொல்றேன்ல" என்று அவன் அதட்டினான்.


அதில் சொப்னா அவனை அதிர்ந்து போய் பார்த்தாள். அதன் பிறகு அவள் வாயை திறக்கவில்லை.


ஏனெனில் யாதவ், அவள் தவறு செய்தாலோ அல்லது அவள் மீது கோபமாக இருந்தால் தான் அவளின் முழு பெயரை சொல்லி அழைப்பான்.


அதன்பிறகு அஸ்வந்த்தின் புறம் பார்த்த யாதவ், "எனக்கு எந்த ப்ராப்ளமும் இல்ல. அவங்க இங்கவே இருக்கட்டும்" என்று கூறினான்.


“k நான் கிளம்புறேன் வேல இருக்கு ” என்று அங்கிருந்து கிளம்பிவிட்டான்.


அஸ்வந்த் கிளம்பிய பிறகு அப்பொழுது தான் நினைவு வந்தவனாக யாதவ் சொப்னாவை பார்க்க, அவளோ அவனை பார்த்து முகத்தை திருப்பியவளாய் வைதேகியை அழைத்து கொண்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.


அவளின் செயலில் தன்னை மறந்து அவன் வாய்விட்டு சிரிக்க..... அது சொப்னாவின் செவியையும் எட்ட அதில் அவளுக்கு இன்னும் கோபம் ஏற, "டார்லிங் அங்க இருக்கு பாரு அந்த ரூம் தான் நீ போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.... என்று அவளை பார்த்து கூறியவள், "எனக்கு ஒருத்தர கவனிக்க வேண்டியது இருக்கு... நான் அதை முடிச்சிட்டு வந்துறேன்" என்று கடைசியில் யாதவை பார்த்து முறைத்தாள்.


வைதேகி தனக்கிருந்த மனநிலையில் அவள் கூறியதை எல்லாம் ஒழுங்காக கவனித்தால் இல்லை. அவள் எண்ணம் முழுவதும் அஸ்வந்த்தின் நடவடிக்கைகளும், அவனின் அந்நியமான பேச்சுகளும் தான் வலம் வந்து கொண்டிருந்தது. அவளுக்கு இப்பொழுது தனிமை தான் மிகவும் அதிகமாய் தேவை பட்டது. அதனால் அவள் சொன்னதும் மறு பேச்சு சொல்லாமல் அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.


வைதேகி சென்றதும்.... யாதவை நோக்கி கோபமாக சென்ற சொப்னாவை பார்த்து அப்பொழுதும் சிரித்து கொண்டிருந்தவனை கண்டு, "என்னய திட்டினது மட்டுமில்லாம இப்போ சிரிக்கவேற செய்யுறியா உன்ன" என்று அவனை அடிக்க ஆரம்பிக்க.......


அவளின் அடிகளை சுகமாக வாங்கி கொண்டிருந்தவன், அப்படியே அவளை இறுக அணைத்து அவளின் கன்னத்தை பலமாக கடித்தவன், "அப்படியே உன்னைய கடிச்சி சாப்பிடனும் போல இருக்குடி" என்று கிறக்கமாக கூறினான்.


அதில் அவளின் பொய் கோபம் கூட முற்றிலும் பறந்து போக.... அவனின் வார்த்தைகள் தந்த மயக்கத்தில் அவனிடம் ஒண்டியவள், "நானா வேண்டாம்னு சொன்னேன். நீதான அதுக்கு தடா போட்டு வச்சிருக்க" என்று அவள் சிணுங்கினாள்.


அதில் அவளை தன்னுடன் சேர்த்து இறுக்கியவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்து அவளின் வாசத்தை முகர்ந்து தன்னில் நிரப்பியவன் அதில் கிரங்கியவனாய், "இன்னிக்கு அத மீறிடலாமா" என்று கேட்க...


அதில் சட்டென்று அவனை தன்னிடமிருந்து பிரித்தவள், "யாரு நீங்க.... நம்பிட்டேன்" என்று அவள் அவனை பார்த்து சிரித்தாள். அதில் கேலியே அதிகமாக நிறைந்திருந்தது.


"ஓஹோ அந்த அளவுக்கு வந்தாச்சா... நம்மளால ஒரு சின்ன பொண்ணோட படிப்பு கெடக்கூடாதுன்னு நெனச்சா... என்னய கேலியா பண்ற... இன்னிக்கு யார் வந்தாலும் உன்னைய என் கிட்ட இருந்து காப்பாத்த முடியாது" என்று அவன் மூச்சு விடாமல் பேச...


அவளோ அதற்கெல்லாம் அசராமல் அசால்ட்டாக தன்னுடைய காதினுள் விரலை விட்டு ஆட்டி வெளியில் எடுத்தவள், "சும்மா வெட்டி பேச்சு பேசிட்டு இல்லாம போய் வேற ஏதாவது முக்கியமான வேல இருந்தா பாருங்க" என்று அங்கிருந்து நகர்ந்து விட்டாள்.


இந்த இரண்டு வருடத்தில் அவர்கள் இருவருக்கும் நடக்கும் விஷயம் ஆதலால் அவர்கள் இருவரும் சிரித்து கொண்டே தங்களது வேலையை பார்க்க சென்றனர்.


வைதேகியை தேடி சென்ற சொப்னா, அவள் அங்கு கண்ட காட்சி அவளை அதே இடத்தில் உறைய வைத்தது. சிறிது நேரத்தில் தன்னிலைக்கு வந்தவள் அப்பொழுது தான் சூழ்நிலையின் தீவிரம் புரிய யாதவை தேடி ஓடினாள்.
…………………………..



அங்கே கல்லூரியில் அசோக்கின் தோளில் சாய்ந்து சுவேதா அழுது கொண்டிருந்தாள். அவனுக்கு அவளை எப்படி தேற்றுவது என்றே தெரியவில்லை. அவளின் அழுகையை நிறுத்த அவன் எவ்வளவோ முயன்று விட்டான். ஆனால் அது நின்ற பாடு தான் இல்லை.
அவள் வாய் ஓயாமல் வைதேகியை நினைத்தே பிதற்றி கொண்டிருந்தது.






என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

சுவேதா அழுது கொண்டே இருக்கவும், கல்லூரியில் அவளுக்கும் தனக்கும் விடுமுறை சொல்லிவிட்டு அவளை அழைத்து கொண்டு அவள் தங்கியிருக்கும் வீட்டிற்கு சென்றான்.


நேரமே வந்திருந்ததால் அவளின் அரை தோழிகள் யாரும் இன்னும் காலேஜிலிருந்து வந்திருக்கவில்லை. அதனால் பூட்டியிருந்த அவள் வீட்டை அவளிடமிருந்து சாவி கொண்டு திறந்தவன் அவளை அழைத்து கொண்டு வீட்டினுள் சென்றான்.


சுவேதாவை அவளது அறையினுள் விட்டுவிட்டு வெளியில் சென்றவன் அவள் வீட்டின் அருகினில் இருந்த ஜூஸ் கடைக்கு சென்றான். அவனும் சுவேதாவும் அடிக்கடி இந்த கடைக்கு வந்து பழக்கம் ஆதலால் அங்கிருந்த கடைக்காரர், "என்ன தம்பி கிரேப் ஜுசும் மேங்கோ ஜூசும் தான" என்று கேட்க


அவரை பார்த்து புன்னகை ஒன்றை உதித்தவன், "அண்ணே கிரேப் ஜூஸ் மட்டும் போதும். நீங்க ரெடியா வைங்க நான் இதோ வந்துறேன்" என்று சொல்லிவிட்டு அந்த வீதியில் இருந்த மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று தூக்க மாத்திரை வாங்கிக்கொண்டு வந்தவன், "அண்ணே கிளாஸ் அப்புறம் தரேன்" என்று ஜூஸ் கடைக்காரரிடம் சொல்லிவிட்டு சுவேதாவை தேடி சென்றான்.


அவன் உள்ளே வந்து, "வேதா" என்று அழைக்க....


அவனின் குரலில் அவனை நிமிர்ந்து பார்த்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் கன்னத்தின் வழியாக வழிந்தது.


அவளின் நிலையை பார்த்து கஷ்ட பட்டவன், அவளின் அருகில் அமர்ந்து அவளின் முகத்தை தன்னுடைய கைகளில் தாங்கி "ப்ச் என்னமா.... ஏன்டா அழுது உன் உடம்ப இப்படி வருத்திக்கிற" என்று கவலையுடன் கேட்டான்.


அவளோ அவனை அணைத்து கொண்டு, "நான் தப்பு பண்ணிட்டேன் டா..... மொதல்லே உங்ககிட்ட சொல்லிருக்கணும்" என்று அழுதாள்.


முன்பே இதை பற்றி மற்றவர்களிடம் சொல்லிருந்தால் இதை போல் விபரீதம் நடந்திருக்காதோ என்று நினைக்க நினைக்க தான் சுவேதாவின் கண்ணீர் இன்னும் அதிகமாகி கொண்டே போனது.


அசோக்கிடம் அனைத்தையும் சொல்லிவிட்ட பிறகும் அவளுக்கு சிறிதும் மனம் நிம்மதி அடையவில்லை.


அதுவும் அவன் கூறியது இப்பொழுதும் காதில் ஒலித்து கொண்டே இருந்தது.


“என்ன இவ்ளோ நாள் என்னோட தொல்லையில்லாம ரெண்டு பேரும் ரொம்ப சந்தோசமா இருந்தீங்க போல".


அந்த குரலில் அவனின் அறிமுகம் இல்லாமலேயே அவன் யாரென்பதை ஒரு நொடியில் அறிந்து கொண்டவளுக்கோ அவனின் அதீத குழப்பத்தையும் அதே சமயம் கோபத்தையும் அவளுள் ஏற்படுத்தியது.


அவள் மனம் முழுவதும், "இவன் எதுக்கு நமக்கு கால் பண்ணியிருக்கான்" என்றே ஓடிக்கொண்டிருந்தது. அதுவும் அவனின் நடவடிக்கைகளை நேரில் கண்டதால் அவன் மேல் சுத்தமாக நல்ல அபிப்ராயம் என்பதே அவளுக்கு கிடையாது. அதுவும் அவன் வைதேகியிடம் அன்று நடந்து கொண்டதை கண்டவளுக்கு அவன் மேல் இப்பொழுது நினைத்தாலும் கடுங்கோபம் ஏற்பட்டது. அவள் வாய், "இவனையெல்லாம் இப்படியே விட்ருக்க கூடாது. பொருக்கி" என்று தனக்கு முணு முணுத்தது.


"என்னமா சத்தத்தையே காணும். இவன் எதுக்கு நமக்கு கால் பண்ணியிருக்கிறான்னு யோசிச்சிட்டு இருக்கியா......... உன்னோட சந்தோசத்தை இன்னும் கொஞ்சம் கூட்டலாம்ன்ற நல்ல எண்ணத்துல தான்..... சரி நேரடியா விஷயத்துக்கே வரேன். உன் உயிர் தோழிய ரொம்ப நாளா காலேஜில காணும் போல எங்க போயிருக்கா...."


அவன் பேசியதை கேட்டு கொண்டிருந்தவளுக்கு, ஏதோ அசம்பாவிதம் நடக்க போகிறது என்பதை போன்று மனம் முழுவதும் பட படைக்க ஆரம்பிக்க... அவளின் வார்த்தைகளும் வெளிவராமல், "அவ..... அவ.... வீட்டுக்கு போயிருக்கா....” என்று தந்தி அடிக்க ஆரம்பித்தது.


"ஓ............ அப்டியா......" என்று இழுத்தவனின் குரலில் முழுவதும் கேலியே நிறைந்திருந்தது,”சரி உன் தோழிக்கு போன் பண்ணி அவ வீட்ல தான் இருக்காளான்னு பாத்து சொல்லு" என்று கூறியவன் போனை வைத்து விட்டான்.


அவன் வைத்த மறுநொடி, அவசர அவசரமாக வைதேகிக்கு கால் செய்ய... அது, "சுவிட்ச் ஆப்" என்று வந்தது.


இப்பொழுது அவளுக்கு வெளிப்படையாகவே கைகள் நடுங்க ஆரம்பிக்க, அப்பொழுது அவனிடம் இருந்து அழைப்பு வந்தது.


கைகள் நடுங்க அட்டென்ட் செய்து காதில் வைத்தவளுக்கு, அந்த பக்கம் அவனின் நாராசமான சிரிப்பொலியை கேட்டு அவளுக்கு உள்ளுக்குள் குளிரெடுத்தது. இருந்தும் இப்பொழுது பயப்பட கூடாது தைரியமா இரு என்று தன்னையே தேற்றி கொண்டவள், "வைதேகி எங்க டா" என்று கேட்டாள்.


"என்னது டா வா. மரியாதை மா... மரியாதை. அதுவும் இப்போ உன்னோட தோழிக்கு கணவனாக போறவனிடம் போய் மரியாதை இல்லாம பேசலாமா. அத உன் தோழி கேட்டா எவ்ளோ கஷ்ட படுவா" என்று சொல்லி மறுபடியும் சிரிக்க ஆரம்பித்தான்.


அவனின் கணவன் என்ற வார்த்தையை கேட்டவளுக்கு நிற்க முடியாமல் கால்கள் துவள, "என்ன சொல்ற" என்று பயத்துடன் கேட்டாள்.


"ஆமான் டி... அன்னிக்கு என்கிட்டே இருந்து அவளை நீ காப்பாத்திட்ட ஆனா இப்போ எப்படி அவளை என்கிட்டே இருந்து காப்பாத்த போற... நாளைக்கி அவளுக்கும் எனக்கும் கல்யாணம் உன்னால முடிஞ்சா அதுக்குள்ள என்கிட்டே இருந்து அவள காப்பாத்திக்கோ. இப்போ எதுக்கு இவன் என்கிட்டே எத சொல்றான், சொல்லாமலே கல்யாணத்த முடிச்சிருக்கலாமேன்னு நீ நெனைக்கிலாம். அது எப்படி மத்தவங்கள சந்தோஷப்படுத்தி பாத்தா அது அத விட சந்தோசம்ல... அதான். சரி வைக்கட்டா பேபி. ஹாப்பி ட்ரீம்ஸ்" என்று வைத்து விட்டான்.


அவன் போனை வைத்த பின்பும், அரை முழுவதும் அவளுக்கு அவனின் குரலே எதிரொலித்து கொண்டிருந்ததை போலவே இருந்தது, "உன்னால முடிஞ்சா உன்னோட தோழிய என்கிட்டே இருந்து காப்பாத்திக்கோ" என்பதே அவளது காதில் ஒலித்து கொண்டிருந்தது.


"ஐயோ இப்போ அவன்கிட்ட இருந்து நான் எப்படி அவள காப்பாத்த போறேன்னு தெரிலையே. ஆண்டவா" என்று வாய் விட்டு புலம்பி கொண்டிருந்தவள் கண்களில் இருந்து நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது.


அவளின் மூலையில் பளிச்சென்று அஸ்வத்தின் நினைவு தோன்ற, வேகமாக மொபைலை எடுத்து அவனுக்கு அழைத்தவள், "ஐயோ அண்ணா சீக்கிரம் எடுங்களேன்" என்று வாய் பாட்டுக்கு சொல்லி கொண்டிருந்தது.


அந்த புறம் அஸ்வந்த் எடுக்கும் வழியை தான் காணும்.


அவன்அந்த நேரம் முக்கியமான மீட்டிங்கில் இருந்ததால், அவளின் அழைப்பை எடுக்க முடியாமல் போனது.


பலமுறை முயற்சித்தும் அவன் எடுக்கத்தில் இன்னும் மனம் நொந்து போனவள், "ஐயோ இப்போ என்ன பண்றதுன்னு தெரிலையே, ஆண்டவா ஏன்பா எங்களை ப்படி சோதிக்கிற... நாங்க என்ன தப்பு பண்ணோம்" என்று புலம்பியவளின் மூளை அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் மறத்து போனதை போல் ஆகிவிட...


அப்பொழுது அவளின் மொபைலுக்கு அஷோக்கிடமிருந்து கால் வந்தது.


தான் ஏன் அசோக்கை அழைக்க வில்லை என்பதை பத்தி எல்லாம் அவள் சிறிதும் யோசிக்கவில்லை. அவனின் போன் கால் மூழ்கி கொண்டிருந்தவளுக்கு சிறு நுனி கயிறு கிடைத்ததாய் தோன்ற, வேகமாக அதை அட்டென்ட் செய்து காதில் வைத்து, "அசோக்.... வைதேகி.... வைதேகி..." என்று அழுது கொண்டே அவள் சொல்ல...


அந்த புறம் இருந்தவனுக்கோ அவள் அழுது கொண்டே சொல்வதால் பாதி புரிந்தது பாதி புரியவில்லை. ஆனால் இதுவரை அழுதே பார்த்திராத சுவேதா அழுவதையும், அவளின் வைதேகி என்ற சொல்லும் அவனுக்கு ஏதோ பிரச்சனை என்ற அளவு புரிந்தது.


"ஹே என்னமா ஏன்டா அழுற... வைதேகிக்கு என்னாச்சு... அல்லாமா சொல்லு" என்று கேட்டுக்கொண்டே தன்னுடைய கம்பெனியை விட்டு வெளியில் வந்து தன்னுடைய வண்டியை எடுத்திருந்தான்.


"எனக்கு வைதேகியை நெனச்சு பயமா இருக்கு. அஸ்வந்த் போன் எடுக்க மாற்றங்க. நீ இங்க வர முடியுமா" என்று அவள் அழுது கொண்டே சொல்ல...


அதற்குள் அவள் வீட்டை அடைந்திருந்தவன், வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே சென்றான்.
அவனை கண்டதும், தரையில் அமர்ந்த வாக்கில் அழுது கொண்டே அவனிடம் போனில் பேசி கொண்டிருந்தவள், போனை கூட கட் பண்ண தோன்றாமல் அவனை அணைத்து கொண்டு அழுதாள்.



"வேதா.... என்னமா ஏண்டா இப்படி அழற..." என்று கூறிக்கொண்டே அவளை அணைத்த வாக்கிலேயே அழைத்து வந்து கட்டிலில் அமர வைத்தவன், அவளின் கண்ணீரை துடைத்து விட்டு, "முதல்ல இருந்து என்ன ஆச்சுன்னு அழுகாம சொல்லு. எதையும் மறைக்காம சொல்லு. அப்போ தான் வைதேகியை இதுல இருந்து வெளில கொண்டு வர முடியும். "


அது அவளின் அழுகையை சற்று குறைக்க, முதலில் இருந்து அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லியவள் கடைசியாக சற்று முன்பு அவன் தன்னிடம் பேசிய அனைத்தையும் சொன்னாள்.


முதலில் அவள் சொன்னதை கேட்டு அந்த முகம் தெரியா நபரின் மேல் கட்டுகண்டா கோபம் எழ அவள் கடைசியாக சொன்னதை கேட்டு "என்னது" என்று அவன் அதிர்ச்சியில் அந்த இடத்தை விட்டு சட்டென்று எழுந்து விட்டான். அவனுக்கும் அந்த நிமிடம் என்ன செய்வது என்று சட்டென்று ஒன்றும் புரியவில்லை.


இருந்தும் தற்பொழுது தங்களிடம் அந்த அளவு நேர அவகாசம் இல்லை என்று மூளைக்கு எட்ட... "சுவேதா அஸ்வந்த்துக்கு கால் பண்ணி மொதல்ல இந்த விஷயத்தை சொல்லுவோம்" என்று அவன் மொபைலை எடுக்க...


"நான் பண்ணி பாத்துட்டேன் டா. அண்ணா போன் எடுக்க மாட்றாங்க" என்று சொல்லியவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிய இல்லையென்பதாய் தலையை ஆட்டினாள்.


"ஓ ஷீட்" என்று கத்தியவன்... "ஓ கே நீ இங்கேயே இரு நான் நேரா அவனோட கம்பெனிக்கே போய் அவன்கிட்ட சொல்லிட்டு வரேன்" என்று அவன் நகர...


அவனின் கையை இறுக்கமாக பற்றியவள், "நானும் வரேன்" என்று அவனுடன் நடக்க...


"வேண்டாமா... நீ இங்கேயே இரு நான் போயிட்டு வந்துறேன்"


அவன் கூறியதை கேட்டு மறுப்பாக தலையை அசைத்தவள், "ப்ளீஸ் டா என்னையும் கூட்டிட்டு போ... "என்று அவள் கெஞ்சினாள்.


"சரி வேகமா போய் பேஸ் வாஷ் மட்டும் பண்ணிட்டு வா"


அவளும் ரெடி ஆகி வர... இரண்டு பேரும் அஸ்வந்த்தின் கம்பெனிக்கு சென்றனர்.


அங்கு அவனுடைய மேனேஜர் அவர் மீட்டிங்கில் இருப்பதாக சொல்ல...


"சார் ரொம்ப அர்ஜென்ட். இப்பவே பாக்கணும்னு சொல்லுங்க..." என்று அசோக் சொன்னான்.
அவர் அப்பொழுதும் தயங்க…..



"சார் எங்க கிட்ட அவ்ளோ டைம் இல்ல... ப்ளீஸ். நாங்க இப்பவே பாக்கணும்" என்று மறுபடியும் சொன்னான்.


அவனின் பேச்சும், அவன் அருகில் நின்றிருந்த பெண்ணின் அழுத விழிகளும் அவருக்கும் ஏதோ அவசரம் என்று புரிய... சரி என்று ஒத்துக்கொண்டு அஸ்வந்த்தை தேடி சென்றார்.


அவர் அஸ்வந்த்திடம், "சார் உங்கள தேடி அசோக்ன்னு ஒருத்தர் வந்திருக்காரு. அவரு கூட ஒரு பொன்னும் வந்திருக்காங்க. ஏதோ அர்ஜென்ட் இப்போவே பாக்கணும்னு சொல்றாங்க" என்று அவர் தயங்கி தயங்கி கூற...


அவர் கூறியதை கேட்டவன் தன்னுடைய மொபைலை எடுத்து பார்க்க... அதில் வந்த சுவேதாவின் எண்ணற்ற அழைப்புகளை கண்டு எதுவோ சரி இல்லை என்று மனதில் பட..."சாரி அர்ஜென்ட் ஒர்க் இன்னொரு நாள் பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தவனுக்கு சுவேதாவின் அழுத முகம் அவனின் புருவத்திற்கு இடையில் முடிச்சு விழ வைக்க அவர்களை அழைத்து கொண்டு தன்னறைக்கு சென்றவன், அங்கு நின்று கொண்டிருந்த மேனேஜரிடம், “Don’t disturb us” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றான்.


உள்ளே சென்ற மறுநொடி அசோக் அனைத்தையும் அஸ்வந்த்திடம் சொல்ல... சுவேதாவோ அழுது கொண்டிருந்தாள்.


அசோக் கூறியதை கேட்க கேட்க அவனுக்கு கோபம் கட்டுக்கடங்காமல் வர, கண்கள் சிவந்து, "என் வைப்க்கு தாலி கட்ட இவன் யாருடா" என்று அறையே அதிரும் அளவு கர்ஜித்தவன் தன் எதிரே இருந்த மேஜையில் ஓங்கி குத்தினான்.


"அஸ்வந்த் இது கோபப்படறதுக்கான நேரம் இல்ல. நம்ம சீக்கிரமா ஏதாவது பண்ணனும்" என்று அசோக் நிலைமையின் தீவிரத்தை அவனுக்கு புரிய வைக்க முயற்சிதான்.
அதில் சற்று அமைதியானவன், "இனி இதை என்கிட்டே விட்ரு நான் பாத்துக்குறேன். அவனை...." என்று அவன் பல்லை கடித்து கொண்டே அந்த இடத்திலிருந்து நகர்ந்தான்.



"ஹே இருடா சுவேதாவை அவளோட வீட்ல விட்டுட்டு நானும் வரேன்" என்று அசோக் சொல்ல...


"இல்ல என்னையும் உங்க கூட கூட்டிட்டு போங்க. எனக்கு அவள நெனச்சா பயமா இருக்கு” என்று சுவேதா மீண்டும் அழ ஆரம்பிக்க...


"அசோக்... நீ சுவேதாவை பாத்துக்கோ" என்று அசோக்கை பார்த்து கூறியவன், "அவ என்னோட வைப்மா. என்னய மீறி இன்னொருத்தன் அவளுக்கு தாலி கட்டிடுவானா... அது கனவுல கூட நடக்க நான் விடமாட்டேன்" என்று சுவேதாவை பார்த்து கூறியவனின் கண்கள் இரண்டும் கோபத்தில் கோவை பலம் போன்று சிவந்திருந்தது.


இன்று.........


அதை எல்லாம் நினைத்து சுவேதா அழுது கொண்டே இருந்தாள்.


அவளின் அழுகையை நிறுத்த முடியாமல் அசோக், தான் வாங்கி வந்த ஜூஸில் தூக்க மாத்திரை கலந்து அவளை குடிக்க வைத்தான்.


மாத்திரையின் வீரியத்தில் சுவேதா சிறிது நேரத்தில் உறங்கி விட, அசோக்கிற்கு அஸ்வந்திடமிருந்து போன் வந்தது. அதை அட்டென்ட் செய்து காதில் வைத்தவனுக்கு அஸ்வந்த் கூறியதை கேட்ட பிறகு தான் நிம்மதியாக இருந்தது, “வைதேகி இப்போ என்கூட தான்டா இருக்கா... சொப்னா வீட்ல தங்க வச்சிருக்கேன்" என்று கூறினான்.


"சொப்னா வீட்லயா... சரி அங்க என்ன ஆச்சு..." என்று அவன் கேட்க.


அஸ்வந்த் பதில் சொல்வதற்கு முன், அவனின் மொபைலில் வைட்டிங் காலில் யாதவ் பெயர் வர... ஏதாவது பிரச்சனையோ என்று மனதில் எழ, உடனே காலை அட்டெண்ட செய்து காதில் வைத்தான்.



என்னை சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்...

 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34 (2)


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

யாதவை வம்பிழுத்துவிட்டு வைதேகியை தேடி உள்ளே சென்ற சொப்னா அங்கே அறையில் வைதேகி கிடந்த காட்சியை கண்டு அதிர்ந்து அவளை நோக்கி சென்றவள்.... அங்கே தரையில் மயங்கி கிடந்தவளை பதட்டத்துடன், "வைதேகி... வைதேகி..." என்று கன்னத்தில் தட்டி எழுப்ப முயன்றாள். ஆனால் அதற்கு எவ்வித பயனும் இல்லாமல் போக...


வேகமாக எழுந்து அந்த அறையில் கட்டிலுக்கு அருகிலிருந்து மேஜையின் மேலிருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து வந்தவள், வைதேகியை தன்மேல் சாய்ந்தவாறு பிடித்து கொண்டு அவள் முகத்தில் தண்ணீரை தெளித்தாள். அவளிடம் அப்பொழுதும் எந்த அசைவும் தென்படாததால் சொப்னாவுக்கு பயம் பிடித்து கொள்ள "யாதவ்" என்று வீடே அதிரும் அளவுக்கு கத்தினாள்.



சொப்னாவின் கத்தலில், பிசினஸ் விஷயமாக மொபைலில் பேசிக்கொண்டிருந்த யாதவ் அதை கட் பண்ணிவிட்டு என்னவோ ஏதோவென்று வேகமாக அங்கு சென்றான்.



ஏனெனில் அவனுக்கு ஏற்கனவே வைதேகியை நினைத்து சற்று யோசனையாக தான் இருந்தது. அதுவும் அஸ்வத்தின் பாராமுகம் கண்டு அவனுக்கும் வைதேகிக்கும் இடையில் எதுவோ பெரிய பிரச்சனை நடந்திருப்பதாக தோன்றியது.



அதுவும் வைதேகியின் கலங்கிய விழிகள் அவள் ஏதாவது செய்து கொண்டாளோ என்ற எண்ணம் எல்லாம் அவனுக்கு முளைத்தது. இவை அனைத்தும் அவன் அந்த அறையை நெருங்குவதற்குள் வலம் வந்து போக... அங்கே அறையினுள் சொப்னாவின் மடியில் கிடந்த வைதேகியை கண்டு, அப்படி தான் ஏதாவது செய்து கொண்டாளோ என்று நினைவு எல அவனுள் இப்பொழுது பதட்டமும் தொற்றிக்கொண்டது, "என்னமா ஆச்சு" என்று கேட்டான்.



அவளோ கண்களில் குளம் கட்ட ஆரம்பிக்க, "யாது எனக்கு பயமா இருக்குடா... வைது எழவே மாட்டிங்குறா... நான் தண்ணியெல்லாம் கூட தெளிச்சு பாத்துட்டேன்" என்று கூறியவள் கண்களில் இருந்து இப்பொழுது கண்ணீர் கன்னத்தில் வழிய ஆரம்பிக்க...



அவள் கூறியதை கேட்டு வேகமாக மருத்துவருக்கு முதலில் கால் செய்தவன், அஸ்வந்த்திற்கும் கால் செய்து, "டேய் உங்க ரெண்டு பேருக்கும் என்னடா பிரச்னை... அந்த பொண்ணு இங்க மூச்சு பேச்சில்லாம கிடக்கு" என்று அவன் பதட்டமாக அஸ்வந்த்திடம் கூற...



அதை கேட்ட அஸ்வந்த்திற்க்கோ சர்வமும் பதற காற்றை போல் வண்டியை விரட்டி கொண்டு வந்தவன் யாதவின் வீட்டை அடைந்தான்.



அப்பொழுது சரியாக மருத்துவரும் உள்ளே நுழைய, யாதவ் அவரை அழைத்து கொண்டு வைதேகியை நோக்கி சென்றான். அங்கு வந்துவிட்ட அஸ்வந்த்தும் அவரின் பின்னால் செல்ல... அங்கு காய்ந்த கொடியாக கட்டிலில் கிடந்த தன்னவளை கண்டு அவனின் உள்ளம் துடித்தது.



வைதேகியை பரிசோதித்த மருத்துவர் யாதவின் புறம் திரும்பி, "யாதவ் இவங்கள இப்போவே ஹாஸ்பிடல்ல அட்மிட் பண்ணியாகணும்" என்று சொல்ல



அவர் சொல்லியதில் ஏற்கனவே பதட்டத்திலும், அவளுக்கு என்ன ஆனதோ என்ற பயத்திலும் இருந்த சொப்னா, "என்னாச்சு டாக்டர், எதுவும் சீரியசா?" என்று கேட்டாள்.



"ஆமாமா இவங்களோட பாடி ரொம்ப வீக்கா இருக்கு, சுத்தமா எனெர்ஜியே இல்ல, அதுமட்டுமில்லாம டூ, த்ரீ டேஸ் கிட்ட புட்டே (food) எடுத்திருக்க மாட்டாங்கன்னு தோணுது. சோ உடனே ட்ரிப்ஸ் ஏத்தியாகணும். அப்புறம் இன்னொரு விஷயம், இவங்க இப்போ ரீசெண்டா ஹாஸ்பிடல்ல அட்மிட் ஆகிருந்தாங்களா" என்று அவர்களை கேள்வியாய் பார்த்து கேட்க.....



"இல்ல டாக்டர், அதெல்லாம் எதுவும் இல்ல. ஏன் கேக்குறீங்க" என்று சொப்னா பதிலளிக்க



"ஓ இட்'ஸ் ஓகே மா. இல்ல இவங்க ஹாண்ட்ல ட்ரிப்ஸ் ஏறி இருக்கறதுக்கான அடையாளம் இருந்துது. அதான் கேட்டேன். மே பி அதுவும் கூட சேர்ந்து இவங்களோட ஹெல்த் இந்த மாதிரி ஆனதுக்கான ரீஸனாக இருக்கலாம்னு கேட்டேன்"



அவர் சொன்னதை கேட்டு சொப்னா யாதவை யோசனையாய் பார்க்க...



"எஸ் டாக்டர், டுடே மார்னிங் தான் அவங்க ஹாஸ்பிடல்ல இருந்து டிஸ்சார்ஜ் ஆனாங்க" என்ற பதில் அஸ்வந்த்திடம் இருந்து வந்தது.



இந்த செய்தி யாதவிற்கும், சொப்னாவிற்கும் புதிது என்பதால் அவர்கள் இருவரும் அஸ்வந்த்தை கேள்வியாக பார்த்தனர்.



ஆனால் அஸ்வந்த்தோ இவர்களின் பார்வையை எல்லாம் உணராதவனாய் வைதேகியின் சோர்ந்த வாடியிருந்த முகத்தையே பார்த்து கொண்டிருந்தான்.



"எதுக்கு அட்மிட் ஆகிருந்தாங்க, என்ன ப்ரோப்ளம்" என்று மருத்துவரை தன்னுடைய அடுத்த கேள்வியை கேட்க



அஸ்வந்த்திடம் இருந்து சிறிது நேரம் இந்த பதிலும் இல்லை. அதன் பிறகு ஒருவாறு தன்னை நிதான படுத்தி கொண்டு, "ஹெல்த் ப்ரோப்ளம்" என்று கூறியவனின் முகம் பாறையை போன்று இறுகி இருந்தது.



“ஓ இட்'ஸ் ஓகே. மே பி அதனால கூட இவங்க பாடி வீக் ஆகியிருக்க நிறைய சான்ஸ் இருக்கு" என்று சொல்லிவிட்டு, "கொஞ்சம் பாடில எனர்ஜி வந்துருச்சுனா நார்மல் ஆகிடுவாங்க நீங்க இவங்கள இப்போ ஹாஸ்பிடல் கூட்டிட்டு வந்துருங்க. மத்ததை நான் பாத்துக்குறேன்" என்று சொல்லிவிட்டு அவர் கிளம்பினார்.



அவர் கிளம்பிய மறுநொடி அங்கு யார் இருக்கிறார்கள் என்பதை கூட கண்டு கொள்ளாதவனாய் வைதேகியை பூ போல் கையில் ஏந்திய அஸ்வந்த், அவளை தன்னுடைய காரில் கிடத்தி ஹாஸ்பிடலை நோக்கி சென்றான்.



இங்கே வீட்டில் சொப்னா, "யாதவ் வா போலாம்" என்று அவனை அவசர படுத்த....



அதுவரை அஸ்வந்த்தின் இறுகிய முகத்தையும், அவன் வைதேகியை தங்களிடம் கூட சொல்ல மறந்தவனாய் சென்றதையே யோசித்து கொண்டிருந்த யாதவிர்க்கு, அஸ்வந்த் கூறியதை போன்று வைதேகி வெறும் ஹெல்த் ப்ரோப்ளதால் ஹாஸ்பிடலில் அட்மிட் ஆனதாக அவனுக்கு தோன்றவில்லை. இவன் இங்கே யோசித்து கொண்டிருக்க அவனின் யோசனையை கலைத்த சொப்னா அவனை அழைத்து கொண்டு ஹாஸ்பிடலிற்கு புறப்பட்டனர்.



ஹாஸ்பிடலில் வைதேகியை அட்மிட் செய்து. அவளுக்கு ட்ரிப்ஸ் ஏறி கொண்டிருக்க, அவளின் கட்டிலின் அருகில் ஒரு நாற்காலியை போட்டு அமர்ந்தவன் அவளையே கண் இமைக்காமல் பார்த்து கொண்டிருந்தான்.



அவன் மனம் முழுவதும் அவளின் நிலையை கண்டு உள்ளுக்குள் துடித்து கொண்டிருந்தது.



"எப்படி டி உனக்கு மனசு வந்துச்சு. நீ இல்லாம நான் எப்படி இருப்பேன்னு கொஞ்சமாவது நீ நெனச்சு பாத்திருந்தா இந்த முடிவை எடுத்துருப்பியா. ஒருவேளை உனக்கு ஏதாவது ஒன்னு ஆகியிருந்தா......" என்று மனதோடு அவளிடம் பேசி கொண்டிருந்தவனின் காதல் கொண்ட நெஞ்சம் அதனை ஏற்க முடியாமல் வலித்தது. அதை நினைத்து ஊமையாக அழுது கொண்டிருந்தவனின் மனம் சிறிது நேரத்தில் அது எல்லாம் சேர்ந்து அவள் மீது கோபமாய் திரும்பியது. அதில் அவன் முகம் முன்பை போல் பாறையாய் இறுகியது.



அதே இறுக்கத்துடன் வெளியில் வந்தவன் தன்னுடைய மொபைலை எடுத்து அதில் இருந்த ஒரு நபருக்கு அழைக்க, அப்பொழுது ஹோச்பிடலில் அங்கே வந்து கொண்டிருந்த யாதவை கண்டவன் வேகமாக அவனை நெருங்கினான்.



“யாதவ், அவளை இன்னிக்கு ஒரு நாள் மட்டும் நல்லா பாத்துக்கோடா. எனக்கு ஒரு முக்கியமான வேலையிருக்கு" என்று அஸ்வந்த் கூற



என்னதான் அஸ்வந்த் வெளியே இறுக்கமாக முகத்தை வைத்திருந்தாலும் அவனுடைய கண்கள் அவனின் அவள் மீதான தவிப்பை அப்பட்டமாய் யாதவிர்க்கு காட்டி கொடுக்க, அதனை சரியாக புரிந்து கொண்ட யாதவ், "ப்ச் என்னடா பெரிய வார்த்தையெல்லாம் சொல்லிட்டு அவங்க என் சிஸ்டர் மாதிரிடா, அவங்கள நான் பத்திரமா பாத்துக்குறேன்" என்று சொல்லியவன், "நீ எதையோ மனசுல போட்டுட்டு கஷ்ட படறன்னு மட்டும் எனக்கு புரியுது. உனக்கு எப்போ சொல்லணும்னு தோணுதோ அப்போ என்கிட்டே சொல்லு. சரி, சிஸ்டரை விட்டுட்டு அப்படி என்னடா முக்கியமான வேல” என்று மனம் தாங்காமல் கேட்க



யாதவ் தன்னுடைய மனதை புரிந்து கொண்டதில் சிறிது நிம்மதியில், "இனி அவளை பிரிஞ்சு என்னால ஒரு நிமிஷம் கூட தனியா இருக்க முடியாது டா. ஒன் வீக் அப்புறம் மேரேஜ் வச்சிக்கலாம்னு நெனச்சேன். பட் அவளை இப்படி பாத்ததுக்கு அப்புறம் என்னால முடியல டா. சோ நாளைக்கே ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ண போறேன். அதுக்கு அப்புறம் ரிசப்ஸன் வச்சி எல்லாருக்கும் சொல்லிக்கலாம். அந்த வேலையா தான் போகணும். இன்னிக்கு மட்டும் அவளை பாத்துக்கிட்டா போதும்" என்று கடைசி வரியை சொல்லும் போது அவன் குரல் தயங்கி ஒலித்தது.



"ப்ச் இப்போ தான சொன்னேன். அவ எனக்கு சிஸ்டர்ன்னு. அதுக்கு முன்னாடியே நீ எனக்கு பிரண்டு. என்கிட்ட எதுக்கு தயக்கம். நாளைக்கி அவளை பத்திரமா உன் கைல ஒப்படைக்கிறேன் சரியா" என்று சிரித்து கொண்டே சொன்னவன், "சரி அவங்க பேரன்ட்ஸ் கிட்ட சொல்ல வேண்டாமா" என்று கேட்க



"அவங்க இருந்தா தான சொல்றதுக்கு" என்று சொன்னவனின் முகம் முன்பை போல் இறுகியது, " அவளுக்கு நான் மட்டும் தான்" என்று இறுகிய குரலில் சொல்லியவன் அதற்கு மேல் அங்கு நிற்காமல் கிளம்பிவிட்டான்.



அவன் சொன்னதை கேட்ட யாதவின் முகத்தில் குழப்ப ரேகைகள் சூழ ஆரம்பிக்க, "சரி அவனே என்னிக்காவது சொல்லுவான்ல அப்போ பாத்துக்கலாம்" என்று நினைத்து கொண்டு வைதேகியை பார்க்க கிளம்பினான்.



ஆனால் யாதவ் ஒன்றை அறியவில்லை. அஸ்வந்த் எப்பொழுதும் யாரிடமும் தங்களுக்குள் நடந்த விசயத்தை சொல்ல போவதில்லை என்று.



அஸ்வந்ஜ் தன்னிடம் பேச வரும் போதே சொப்னா இங்கிருந்தால் ஏதாவது கேள்விகள் கேட்டு அஸ்வந்த்தின் மனதை காயப்படுத்தி விட்டால் என்ன செய்வது என்று தோன்ற, யாதவ் அவளை அப்பொழுதே, "சோபி நீ போய் வைதேகியை பாத்துகோடா. நான் அஸ்வந்த் கிட்ட பேசிட்டு வரேன்" என்று அனுப்பி வைத்து விட்டான்.



யாதவ் வைதேகியின் அறையில் நுழைய, அங்கே கண்கள் கலங்க வைதேகியின் கையை பிடித்து கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்த சொப்னாவை கண்டவன், அவளிடம் நெருங்கி அவளின் தோளின் மீது கை போட்டு ஆறுதலாக அணைத்து கொண்டு, "நல்லா ஆயிடுவா மா" என்று அவளை தேற்றினான்.



அதில் திரும்பி அவனை அணைத்து கொண்டவள், "யாது, டார்லிங்கு என்னடா ஆச்சு. ஏன் இப்படி இருக்கா. அதுவும் அவளை பாரேன் எப்படி வாடி போய் இருக்கான்னு. என்னால அவளை இந்த நெலமையில பாக்க முடியல டா" என்று கண்களில் இருந்த கண்ணீர் கன்னங்களில் வழிந்தோட யாதவை கேட்டாள்.



"ப்ச் என்னமா. அழாத டா. உனக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லவா. நாளைக்கு அஸ்வத்துக்கும், வைதேகிக்கும் மேரேஜ் நடக்க போகுது" என்று சொல்ல



அதில் அவளுடைய முகம் சோகத்தை விடுத்தது பிரகாசமாக, "ஹே யாது உண்மையாவா. ஆனா ஏன்டா திடிர்னு ஏதாவது ப்ரோப்ளமா" என்று அவள் யோசனையாக கேட்க



"அதுவா உன் அருமை அண்ணனால அவங்க ஆள விட்டு பிரிஞ்சி இருக்க முடியலையான். அதான் நாளைக்கு ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிட்டு உடனே பஸ்டு நைட்டுக்கு ரெடி பண்ண போய்ட்டான்" என்று கண்ணடித்து கூற



"டேய் அசுவயாடா கிண்டல் பண்ற. உன்னைய" என்று அவள் அவனை அடிக்க ஆரம்பிக்க. அதன் பிறகு அங்கு சந்தோசமே நிறைந்திருந்தது.



அதே சந்தோஷத்தில் வைதேகியின் நெற்றியில் முத்தமிட்ட சொப்னா, "கங்கிராட்ஸ் டார்லிங். இன்னிக்கு உடம்பு சரியில்லாததால என்கிட்டே இருந்து நீ தப்பிச்சிட்ட. நாளைக்கு உன்னைய ஒரு வழி பண்றேன் இரு" என்று அவள் மனதுக்குள் சொல்லி கொண்டிருந்தாள்.



வைதேகியோ இதை எதையும் அறியாமல் இன்னும் மயக்கத்திலேயே இருந்தாள். அவள் கண்விழிப்பதற்கு நள்ளிரவு ஆகிவிடும் என்று மருத்துவர் சொல்லி இருந்ததால் அவளுக்கு தெரியாமலேயே எல்லா ஏற்பாடுகளும் ஜெட் வேகத்தில் நடந்து கொண்டிருந்தது.





என்னை சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்..................
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 34 (3)


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

தூக்க மாத்திரையின் உபயத்தில் நன்றாக தூங்கி எழுந்த சுவேதா மணியை பார்க்கும் போது அது இரவு ஒன்பது என்று காட்டியது. அதை கண்டு அதிர்ந்து எழுந்து கட்டிலில் அமர்ந்தவளுக்கு முதலில் ஒன்றுமே புரியவில்லை, "நான் எப்படி தூங்குனேன். வைதேகிக்கு என்னாச்சு" என்ற கேள்விகள் அடுத்தடுத்து மண்டைக்குள் ஓட ஆரம்பிக்க, அதனால் அவளின் தலையும் வலிக்க ஆரம்பித்தது. கடைசியாக அவளுக்கு அசோக் ஜூஸ் கொடுத்தது மட்டுமே நினைவிலிருக்க, "ஒருவேளை அசோக் தான் தூக்க மாத்திரை ஏதாவது கலந்து கொடுத்துருப்பானோ" என்ற யோசனையெல்லா, உடனே தன்னுடைய மொபைலை எடுத்து அவனுக்கு அழைத்து விட்டாள்.


முதல் ரிங்கிலேயே மறுமுனையில் போன் எடுக்க பட, இவள் இங்கு "அசோக்" என்று சொல்வதற்குள் அந்த புறம் அசோக், "வேதா... எழுந்துட்டியாமா. சரி ரெடியா இரு. நான் வந்து உன்னைய ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போறேன்" என்று அவன் கூற அதை கேட்ட சுவேதவிற்கோ "எதுக்கு ஹாஸ்பிடலுக்கு? எனக்கு தான் எதுவும் இல்லையே" என்ற யோசனை ஓட, "ஏன்டா ஹாஸ்பிடலுக்கு? நான் இப்போ நல்லா தான் இருக்கேன். உனக்கு ஏதாவது உடம்பு முடியலையா டா" என்று கேட்க


அவளின் அக்கறை அவனின் காதல் கொண்ட மனதின் அடிவரை சென்று இனிக்க, “ஐ லவ் யு டி" என்று மனதோடு சொல்லி கொண்டவன் வெளியில், "எனக்கு ஒன்னும் இல்லடா. வைதேகி வந்துட்டா. இப்போ தான் அஸ்வந்த் போன் பண்ணி அவ ஹாஸ்பிடல்ல இருக்காதா சொன்னான். அதான் பாக்க போலாம்னு சொன்னேன்"


வைதேகியின் பெயரை கேட்டதும் அவளுடைய நாடி நரம்பெல்லாம் சுறு சுறுப்பாக அவன் கூறுவதை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தவளுக்கு வைதேகி இப்பொழுது ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்று சொன்னதை கேட்டவளுக்கு மனம் பதற, "ஐயோ என்ன ஆச்சுன்னு தெரிலையே" என்று மனம் வேகமாக அடித்து கொள்ள, " ஏன்டா ஹாஸ்பிடல்ல இருக்கா? என்னாச்சு அவளுக்கு? ஏதாவது ப்ரோப்ளமா? அவ நல்லா தான இருக்கா?" என்று அடுக்கடுக்காக கேள்விகள் வந்து விழ


அவளின் பதட்டத்தையும், பயத்தையும் புரிந்து கொண்டவன், "ப்ச் வேதா, ஏன்டா இவ்ளோ டென்ஷன் ஆகுற. அவளுக்கு ஒன்னும் இல்ல. ஜஸ்ட் ஹெல்த் ப்ரோபலம்முன்னு தான் அஸ்வந்த் சொன்னான். நீ ரெடியா இரு நான் ஒரு டென் மினிட்ஸ்ல அங்க வந்துருவேன். அப்புறம் ரெண்டு பேரும் போய் பார்க்கலாம்" என்று அவளை சமாதான படுத்தும் விதமாக பொறுமையாக கூறினான்.


அதில் அவளும் சமாதானம் ஆகி, "ஹ்ம்ம் சரி டா" என்று அவள் போனை வைத்து விட்டு தயாராக சென்றாள்.


சிறிது நேரத்தில் அசோக்கும் வந்துவிட இருவரும் சேர்ந்து வைதேகியை பார்ப்பதற்காக கிளம்பினர்.


போகும் வழியாவும் அவள் வைதேகியை நினைத்து புலம்பி கொண்டே வர, அசோக் எவ்வளவோ முயற்சித்தும் அவள் சமாதானமாகும் வழி தான் தெரியவில்லை. அதனால் ஒரு கட்டத்தில் "சரி அவ அங்க போய் வைதேகியை பாத்த பிறகு தான் நோர்மலாவா” என்று நினைத்து விட்டுவிட்டான்.


அசோக்கும், சுவேதாவும் வைதேகியின் அறையினுள் நுழைய அங்கே யாதவும், சொப்னாவும் எதையோ பேசி சிரித்து கொண்டிருந்தனர். இவர்களை கண்டதும் வரவேற்பாய் புன்னகை புரிய... சுவேதாவோ அதையெல்லாம் உணராதவளாய் வைதேகியின் அருகில் வேகமாக சென்றவள், அதை விட வேகமாக வைதேகியின் தலையிலிருந்து கால்கள் வரை அவளுடைய கண்கள் அலசியது. அவளுக்கு எதுவும் இல்லை என்று அறிந்து கொண்ட பின்பு தான் அவள் மனம் அமைதியடைந்து. அந்த நிம்மதியுடன் வைதேகியின் முகத்தில் ஒன்றிரண்டு சிலும்பி கொண்டிருந்த முடியை ஒதுக்கிவிட்டவள், அவளின் முகத்தை மிருதுவாக வருடினாள். அப்படி வருடும் பொழுது இந்த இரண்டு நாட்களாக ஏற்பட்ட மனஉளைச்சலில் சுவேதாவின் கைகள் நடுங்கியது.


சுவேதா வைதேகியை நெருங்கியதிலிருந்தே அவளையே பார்த்து கொண்டிருந்த அசோக்கிற்கு அவளின் முகத்தில் மாறிமாறி ஏற்பட்ட மாறுதல்களும், ஒவ்வொரு செய்கைகளும் அவள் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டிருக்கிறாள் என்பது அவனுக்கு நன்கு விளங்கியது.


அதுவும் அவளை நன்கு புரிந்து வைத்திருப்பவனுக்கு அது புரியாமல் இருந்தால் தான் ஆச்சர்யம்.


அவன் சுவேதாவின் கைகளை பிடித்து ஆறுதலாக அழுத்த. அதில் தன் கட்டுப்பாட்டை இழந்து அவனை அணைத்து கொண்டு அழுதுவிட்டாள்.


என்று அசோக் சுவேதாவின் வாழ்க்கையில் நுழைந்தானோ அன்றிலிருந்து அவன் சுவேதாவிற்கு இன்றியமையாதவனாக மாறி போனான். அதுவும் சுவேதாவிற்கு ஒவ்வொரு விஷயத்திற்கும் அசோக் வேண்டும். எதுவாக இருந்தாலும் அவனுக்கு சிறிதும் யோசிக்காமல் கால் செய்து விடுவாள். ஒருவேளை அவளே மறந்தாலும் அந்நேரம் அசோக்கிடம் இருந்து அவளுக்கு கால் வந்திருக்கும்.


ஆனால் அதை சுவேதா, அசோக் தனக்கு ஒரு நல்ல நண்பன் என்பதை மீறி அவள் ஆராய்ந்து பார்த்ததில்லை. ஆராய விரும்பவில்லை என்று சொல்லவேண்டுமோ.


ஒரு முறை சுவேதாவிடம் உனக்கு எந்த மாதிரி பையன் மாப்பிள்ளையா வரணும் என்று அவளின் மனதை அறிய முற்பட்டு கேட்ட பொழுது, சிறிதும் யோசிக்காமல் "எனக்கு உன்னைய மாதிரி ஒருத்தன் தாண்டா என் லைப் பாட்னரா வரணும். என்னய நல்ல புரிஞ்சிகிட்டு, என்னோட கேள்விக்கெல்லாம் பொறுமையா பதில் சொல்லிக்கிட்டு, என்னுடைய எல்லாத்துலயும் அவன் இருக்கணும்" என்று சொல்ல.


அதற்கு அவனோ, "அப்போ என்னையவே கல்யாணம் பண்ணிக்கோ" என்று கண்கள் பளபளக்க கூற


ஆனால் அவள், அவனின் காதலை சிறிதும் புரிந்துகொள்ளாமல், அவனின் வாயில் பட்டென்று ஒரு ஆதி வைத்து, "நீ என் ப்ரண்டுடா எது மாதிரிலான் என்கிட்டே பேசாத" என்று முகத்தை கோபமாக திருப்பி கொண்டாள்.


அதில் அவன் முகம் வாடா, "ஏன் ப்ரண்டு லவராக கூடாதா" என்று மனம் தாங்காமல் கேட்க
"அசோக் நான் உன்கிட்ட ஆரம்பத்திலேயே சொல்லிருக்கேன். எனக்கு எங்க வீட்ல யாரை பாக்குறாங்களோ அவங்கள தான் லவ் பண்ணுவேன்னு" என்று அவள் கண்டிப்புடன் கூற.
அதை கேட்டு அவனின் வாடி இருந்த முகம் மீண்டும் மலர்ந்தது. ஏனெனில் சுவேதாவிற்கே தெரியாமல் ஒரு விஷயத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்திருந்தானே. அதனால் அவன் வேகமாக அவள் கூறியதற்கு தலையாட்டினான்.



அதை எல்லாம் எப்பொழுது நினைத்து பார்த்தவனின் அணைப்பு இறுகியது.


அவனின் இறுகிய அணைப்பில் சுவேதாவின் அழுகையும் கொஞ்ச கொஞ்சமாக குறைந்து ஒரு கட்டத்தில் நின்று விட்டது. அதன் பிறகு தான், தான் இருக்கும் நிலைமை புரிய அவனை விட்டு அவசரமாக பிரிந்தவள் அப்பொழுது தான் அங்கு நின்று கொண்டிருந்த யாதவையும், சொப்னாவையும் பார்த்தாள்.


"ஹே நீ எங்க தான் இருக்கியா" என்று ஆச்சர்யமாக கேட்க


"பரவாலயே நான் இங்க இருக்கறது ஒருவழியா உன் கண்ணுக்கு தெரிஞ்சிருச்சு" என்று சொப்னா சுவேதாவை கிண்டலடிக்க


"ஹே சாரி டி வைதேகியை பத்தின டென்ஷன்ல நான் உன்னைய கவனிக்கல" என்று அவள் மன்னிப்பு வேண்ட


"சரி பரவால்ல, என் ப்ரண்டா போயிட்ட, பொழச்சி போ" என்று பெரிய மனசு பண்ணி மன்னித்தவள், "ஹே சுவி பேபி, நாளைக்கி அஸ்வந்த்க்கும் டார்லிங்கும் மேரேஜ். உனக்கு தெரியுமா" என்று சந்தோசமாக கேட்க


"அவளோ இது என்னடா புது கத" என்று தோன்ற அவள் அசோக்கை திரும்பி அப்படியா என்பதை போல் பார்த்தாள். அவனும் அதை ஆமோதித்து கண்களை மூடி திறந்தான்.


சுவேதா இதை ஓரளவு எதிர் பார்த்தாள் தான். ஆனால் இவ்வளவு அவசரம் என்? அவன் என்ன ஆனான்? வைதேகியுடைய அம்மா, தம்பி எங்க? அவங்க என்ன ஆனாங்க? என்ற கேள்வியெல்லாம் சேர்ந்து யோசிக்க யோசிக்க அவளுக்கு மீண்டும் தலை வலிப்பது போல் இருந்தது.


சுவேதாவின் மேல் ஒரு கண்ணை வைத்து கொண்டே யாதவிடம் பேசி கொண்டிருந்த அசோக், அவளின் முக சுருக்கத்தையும், நெரிந்த புருவங்களையும் கண்டு, "யாதவ் ஒரு பைவ் மினிட்ஸ் எப்போ வந்துறேன்" என்று சொல்லிவிட்டு சுவேதாவிடம், "வேத உன்கிட்ட கொஞ்சம் பேசணும் வெளில வரியா" என்று கேட்க


அவளுக்கு இருந்த தலை வழியில் தன் மனதில் இருப்பதை யாரிடமாவது கொட்ட வேண்டும் என்று தோன்ற அவனின் அழைப்பை மறுக்காமல் அவனுடன் வெளியில் சென்றாள்.


இங்கே யாதவ் சொப்னாவிடம், "சோபி அவங்க ரெண்டு பேரும் லவ் பண்ராங்களா என்ன?" என்று கேட்க


"நானும் அதான் நினைச்சேன். பட் சுவேதா கிட்ட ஒரு தடவ கேட்டதுக்கு அவ என்கிட்டே சண்டைக்கே வந்துட்டா. அசோக் அவளுக்கு ப்ரண்டாமா..... ஆனால் எனக்கு என்னமோ ரெண்டு பேருமே லவ் பண்றங்கன்னு தான் தோணுது யாது. இவன் தான் அதை புரிஞ்சிக்காம ப்ரண்டு ப்ரண்டுன்னு சொல்லிட்டு திரியுறா. உனக்கு எப்படி தெரியுது?" என்று கேட்டாள்.


"ஹ்ம்ம் எனக்கும் நீ சொல்ற மாதிரி தான்மா தோணுது" என்று அவனும் சொப்னாவின் பேச்சை ஒத்துக்கொண்டான்.


வெளியில் சுவேதாவை அழைத்து கொண்டு சென்ற அசோக், அங்கிருந்த பெஞ்சில் அவளை அமரவைத்து, அவள் அருகில் தானும் அமர்ந்து கொண்டவன், "என்ன பிரச்னை. எது உன் மூளையை போட்டு கொடையுது?" என்று அக்கறையாக கேட்டான்.


அவள் தன் மனதில் தோன்றியதை எல்லாம் அவனுக்கு விளக்க


"இங்க பாருடா... அவங்களுக்குள்ள ஏதோ நடந்துருக்கு அஸ்வந்த்தும் எதையும் என்கிட்டே சொல்ல மாட்டிங்குறான். நீ எத பத்தியும் யோசிக்காத. வைதேகி இப்போ சேபா இருக்கா. நாளைக்கி அவங்க ரெண்டு பேருக்கும் மேரேஜாக போகுது. அத மட்டும் மனசுல வச்சிக்கோ" என்று அவளுக்கு மனதில் பதியும்படி பொறுமையாக கூறினான்.


"இல்ல டா" என்று சுவேதா வேறு எதுவோ சொல்ல வர


"நான் தான் சொல்றேன்ல" என்று அசோக் அத்துடன் அந்த பேச்சை முடித்து விட்டான்.


அவளும் வேறு வழியில்லாமல்,"ஹ்ம்ம் சரி" என்று அதை அப்படியே விட்டுவிட்டாள்.


"ஓகே இப்போ நீ இங்க இருக்கியா, இல்லனா ரூம் போறியா? ரூம் போறதுனா சொல்லு நான் உன்னைய விட்டுட்டு போறேன்" என்று சொல்ல


"இல்ல டா. நா இங்கேயே வைதேகி கூட இருக்கேன். அவ கண் முழிச்சாதான் எனக்கு நிம்மதியா இருக்கும். அங்க போனா எதையாவது யோசிச்சிட்டு இருப்பேன். நான் வரல. நீ போ"


"சரி அப்போ நான் போய் அஸ்வந்த்க்கு ஏதாவது ஹெல்ப் வேணுமான்னு போய் பாக்குறேன்" என்று சுவேதாவிடம் சொல்லிவிட்டு யாதவிடமும், சொப்னாவிடமும் விடைபெற்று கிளம்ப.... அப்பொழுது, "ப்ரோ இருங்க நானும் வரேன்" என்று யாதவும் அவனுடன் இணைந்து கொண்டான்.


நள்ளிரவில் வைதேகிக்கு விழிப்பு தட்ட, அந்த அறையினை சுற்றி பார்த்தவளின் கண்ணில் தன்னருகில் அமர்ந்தவாக்கிலேயே உறங்கியிருந்த சுவேதாவும், சொப்னாவும் தான் முதலில் பட்டனர். அவளுடைய கண்களோ அவசரமாய் வேறு ஒருவரை தேடி அந்த அரை முழுவதும் வலம் வர, அவன் அங்கு இல்லாததால் மனம் சோர்வுற அதற்கு மேல் முடியாமல் கண்களை சோர்வுடன் மூடி கொண்டாள்.



ஆனால் அவளின் மூடிய விழிகளில் இருந்து அவளின் அனுமதி இன்றி கண்ணீர் வலிந்து கொண்டிருந்தது. அவளுடைய மனமோ,"எனக்கு வேற வழி தெரில மாமா" என்று தன்னவனிடம் மன்றாடி கொண்டிருந்தது.





என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்
 
Last edited:

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 35 (1)



என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


மறுநாள் காலையில் வைதேகியை டிஸ்சார்ஜ் செய்ய யாதவ் தான் அவர்களை அழைத்து செல்ல வந்திருந்தான். சொப்னா, சுவேதா, வைதேகி மூவரும் அவனுடைய காரில் ஏறி புறப்பட வைதேகிக்கோ தன்னை டிஸ்சார்ஜ் செய்யும் பொழுதாவது அஸ்வந்த் கண்டிப்பாக வரக்கூடும் என்று மனதில் சிறிது நம்பிக்கையுடன் இருந்தவளுக்கு யாதவ் அழைக்க வரவும், தன்னை பார்க்க கூட அவனுக்கு விருப்பம் இல்லையா என்று அவளுடைய மனம் அனிச்சம் மலராய் வாட அவளுடைய கண்களில் குளம் கட்ட ஆரம்பித்தது.



தன்னுடைய துன்பம் தன்னுடனேயே போகட்டும். தன்னால் மற்றவர்கள் துன்ப பட அவள் விரும்பவில்லை. ஏற்கனவே தன்னுடைய தைரியமின்மையாலும், முட்டாள்தனத்தாலும் ஒருவனின் மனதை காயப்படுத்தியது போதாதா என்று நினைத்தவள் வெளியில் வேடிக்கை பார்ப்பது போல் தன்னுடைய கண்ணீரை யாரும் அறியும் முன்னர் உள்ளிழுத்து கொண்டாள்.




ஆனால் அவளுக்கு தெரியாதல்லவா அஸ்வந்த் தான் வைதேகியை டிஸ்சார்ஜ் செய்வதற்கான அனைத்து வேலையையும் ஏற்பாடு செய்ததென்று. அதுமட்டுமல்லாமல் மருத்துவர் மறுப்பு கூறிய போதும் கூட தான் அவளை பார்த்து கொள்வதாக கூறி அவரை ஒத்துக்கொள்ள வைத்திருந்ததும்.




காலையில் ஒரு ஏழு மணியளவில் அவளை பார்க்க வந்தவனுக்கு தனிமை கொடுத்து சுவேதாவும், சொப்னாவும் வெளியில் சென்றுவிட மாத்திரையின் விளைவில் நன்றாக உறங்கி கொண்டிருந்த வைதேகியின் அருகில் சிறிது நேரம் அமர்ந்தவன் பின்பு எழுந்து அவளது நெற்றியில் மென்மையாக தன்னுடைய இதழை ஒற்றி எடுத்தவனின் உதடுகள், "ஐ லவ் யு பேபி" என்று முணுமுணுத்தது. அதன் பிறகு மருத்துவரை சென்று பார்த்தவன் அவர் கூறிய அறிவுரைகளை எல்லாம் உன்னிப்பாக கவனித்து கொண்டவன் மற்ற போர்மாலிட்டிசையும் செய்துவிட்டு கிளம்பியிருந்தான்.




ஆனால் வைதேகி கண்விழிக்கும் பொழுது சரியாக யாதவும் அழைக்க வந்துவிட அஸ்வந்த் வந்து இவளை பார்த்து விட்டு சென்ற விஷயம் அவளுக்கு தெரியாமலேயே போனது. மற்றவர்களும் அடுத்து நடக்க வேண்டிய விசயத்தில் கவனம் செலுத்தியிருந்ததால் இதை அவளிடம் சொல்ல மறந்திருந்தனர்.




மாலை 6 மணிக்கு சைதாப்பேட்டை ரெஜிஸ்டர் ஆஃபிஸில் அஸ்வந்த்திற்கும் வைதேகிக்கும் திருமணம் ஏற்பாடு செய்திருந்ததால் வீடே பரபரப்பாக இருந்தது. அனைவரும் அதற்கு தயாராகி கொண்டிருக்க ஆனால் தயாராக வேண்டியவளோ பால்கனியில் நின்று கொண்டு விட்டதை வெறித்து கொண்டிருந்தாள். அவளுக்கு அங்கு தனக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றது என்பது கூட தெரியாமல் தன்னுடைய தனி உலகத்திலேயே சஞ்சரித்து கொண்டிருந்தாள். நள்ளிரவில் கண் விழித்ததிலிருந்து அவனை எதிர் பார்த்து தோற்ற கண்களும், மனதும் நேரம் செல்ல செல்ல அவன் தன்னை முழுவதும் வெறுத்துவிட்டானோ என்ற எண்ணம் அவளையும் மீறி அவளின் மனதை ஆக்கிரமதிக்க ஆரம்பித்தது. அதில் அவள் சுற்றம் மறந்து தனக்குள் ஒடுங்க ஆரம்பித்தாள்.




அவளுக்கு ஒரு நிலையில் தான் ஏண்டா பிழைத்தோம் என்ற எண்ணமும் எழாமல் இல்லை. அவள் தன்னை மட்டுமே யோசித்தாளே தவிர அஸ்வந்த்தின் மனநிலையை சிறிதும் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. இப்பொழுதும் அவள் அதே தவறையே மீண்டும் செய்து கொண்டிருந்தாள். அந்த நிமிடம் தன்னுடைய நினைப்பை அஸ்வந்த் அறிய நேர்ந்தால் எவ்வளவு துடித்து போவான் என்பதை அவள் உணராமல் போனாள்.




வைதேகி இப்படி தன்னினைவில் சிக்கி இருக்க, மணியும் அது பாட்டிற்கு வேகமாக நகர்ந்து கொண்டிருந்தது.




மாலை ஐந்து மணி வேளையில் சொப்னா வீட்டிற்கு தயாராகி வந்த சுவேதாவை அங்கே விட்டுவிட்டு அசோக்கின் வண்டி அஸ்வத்தின் வீட்டை நோக்கி புறப்பட்டது.




வாசலில் வந்து அவளை அழைத்து சென்ற சொப்னாவுடன் சிரித்து பேசிக்கொண்டே வந்து கொண்டிருந்த சுவேதா அப்பொழுதுதான் அங்கே பால்கனியில் இன்னும் தயாராகாமல் நின்று கொண்டிருந்த வைதேகியை கண்டு அதிர்ச்சியுற்றவள் சொப்னாவை பார்த்து "ஹே என்னடி இவ இன்னும் ரெடி ஆகலையா. இவளுக்கு இன்னிக்கு மேரேஜ் தான அந்த பரபரப்பு எதுவும் இல்லாம ஹாஸ்ப்பிட்டல்ல இருந்து வந்து அதே ட்ரெஸ்ஸோட நிக்கிறா" என்று குழப்பமாக கேட்க




அதற்கு சொப்னாவோ அசால்டாக, "அவளுக்கு தான் இன்னிக்கு மேரேஜ்னே தெரியாதே" என்று கூலாக சொல்ல




அதை கேட்டு இன்னும் குழப்பமாக, "ஹே என்னடி குழப்பிட்டு இருக்க. மேரேஜ்னே தெரியாதா? ஏன்? நீங்க யாரும் அவகிட்ட சொல்லலையா?" என்று எப்பொழுதும் போல் தன்னுடைய கேள்வி படலத்தை ஆரம்பிக்க




அவளின் கேள்வி படலத்தில் சொப்னாவுக்கு சிரிப்பு வர, "உன்னைய எப்படி டி அசோக் சமாளிக்கிறாரு" என்று கிண்டலடிக்க




"இப்போ அது ரொம்ப முக்கியம். மொதல்ல நான் கேட்டதுக்கு பதில் சொல்லு" என்று சுவேதா முறைக்க




அதில் அவளை பார்த்து சிரித்தவள், "அஸ்வந்த் தான் சொல்லவேண்டாம்னு சொன்னான்"




"ஏன்?"




"அதெல்லாம் சொல்லல... நான் சொன்னதை மட்டும் செய்யுன்னு சொல்லிட்டு போயிட்டான். நான் கூட சர்ப்ரைஸா ஏதாவது கொடுக்க போரியான்னு கூட கேட்டேன். அதுக்கு அவன் கிட்ட இருந்து ஒரு சிரிப்பு மட்டும் தான் வந்தது.. எனக்கு என்னமோ அப்படி தான் இருக்கும்னு தோணுது. சரி வா அவளை ரெடி பண்ணுவோம்" என்று சொப்னா சுவேதாவை அழைத்து கொண்டு செல்ல




அங்கு வைதேகியோ யாருக்கு வந்த விருந்தோ என்ற நிலையில் இங்கு நடப்பதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை போன்று அங்கு தன் கண் முன்னால் தெரியும் வானத்தை வெறிப்பதே தன்னுடைய முதற் கடமை என்பதை போன்று அதையே வெறித்து கொண்டிருக்க. அவளை நெருங்கிய இருவரும் "வைதேகி" என்று ஒருமித்த குரலில் அழைத்தனர். அவளோ அதை உணராமல் அதே நிலையில் நின்று கொண்டிருக்க




அவள் திரும்பாமல் இருக்கவும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்து கொண்ட இருவரும், அவளை அழைத்து கொண்டே அவளின் தோல் பற்றி தங்கள் புறம் திருப்ப, அப்பொழுது வைதேகியின் கலங்கிய விழிகளை கண்டவர்களுக்கு பதற்றம் சூழ, “ஹே என்ன டி ஆச்சு.உடம்பு எதுவும் முடியலையா” என்று சுவேதா கேட்க




அதில் தன்னுணர்வுக்கு வந்த வைதேகி, தன்னுடைய துக்கத்தை தன்னைக்குளேயே புதைத்து கொள்ள வேண்டும் என்று தான் முடிவெடுத்தது நினைவிற்கு வர வேக வேகமாக தன்னுடைய கண்களை துடைத்து கொண்டவள், “ஹே அதெல்லாம் இல்ல டி. நான் இப்போ நல்லா தான் இருக்கேன்” என்று தன்னுடைய முகத்தில் வழிய வரவழைத்து கொண்ட புன்னகையுடன் கூறியவள், அப்பொழுது தான் வெளியே எங்கோ தயாராகி செல்வதை போன்ற இருவரின் உடைகளையும் கண்டவள், “என்னடி ரெண்டு பேரும் எங்கயாவது வெளில கிளம்புறீங்களா. அதான் சொல்லிட்டு போகலாம்னு வந்திங்களா” என்று கேட்டாள்




அவளின் சரளமான பேச்சு அவர்களுக்கும் நிம்மதியை தர அவளை பார்த்து சிரித்த சொப்னாவும், சுவேதாவும், “நீயும் தான் எங்க கூட வர டார்லிங். ஒரு இம்போர்ட்டண்ட் பங்கஷன் இருக்கு. அங்க தான் போக போறோம். வா சீக்கிரம் கிளம்பு. உனக்காக அங்க ரூம்ல சாரி எடுத்து வச்சிருக்கேன். அதை கட்டிக்கிட்டு வா” என்று சொப்னா சொன்னாள்.




"நானா நான் எதுக்கு. நீங்க ரெண்டு பேருமே போய்ட்டு வாங்களேன்" என்று வைதேகி மறுத்து கூற முயற்சிக்க.




ஆனால் சொப்னாவோ அதற்கெல்லாம் அவளுக்கு வாய்ப்பளிக்காமல், "இங்க பாரு டார்லிங் ஏற்கனவே ரொம்ப லேட்டாகிடுச்சு. நீ மட்டும் தான் பாக்கி. போ போய் சீக்கிரம் ரெடி ஆகிட்டு வா. சுவேதா இவளை கிளப்பி கொண்டு வாடி. நான் மத்தது எல்லாம் கரக்ட்டா இருக்கான்னு பாத்துட்டு வரேன்" என்று அவள் பதிலுக்கு காத்திருக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்றுவிட்டாள்.




வைதேகி வேறு வழியில்லாமல் சுவேதாவை பாவமாக ஏறிட அதற்கு சுவேதாவோ ஒரு தோள்குலுக்களை அவளுக்கு பதிலாக தந்துவிட. அதன் பிறகு அங்கு அனைத்தும் மள மளவென்று தயாராகியது.




சுவேதாவும், சொப்னாவும் வைதேகியை அழைத்து கொண்டு சரியாக ஆறு மணிக்கு அங்கு வந்து சேர்ந்தனர்.




விருப்பமே இல்லாமல் அவர்களுடன் வந்து கொண்டிருந்த வைதேகி கார் நின்ற பிறகு தான், தான் வந்திருக்கும் இடத்தையே சுற்றி பார்த்தாள்.




அவர்களின் கார் சைதாப்பேட்டை ரெஜிஸ்டர் ஆஃபீஸின் முன் வந்து நின்றது. அதை பார்த்தவளுக்கு தாங்கள் ஏன் இங்கு வந்திருக்கிறோம் என்று ஒன்றும் புரியவில்லை. வைதேகி தன் அருகில் அமர்ந்திருந்த இருவரையும் கேள்வியாய் பார்த்தாள்.




அவளை பார்த்து சிரித்த சொப்னா, "என்னடா பங்கஷனுக்கு போகணும்னு சொல்லிட்டு இங்க கூட்டிட்டு வந்துருக்காங்கன்னு யோசிக்கிறியா. இங்க தான் அந்த பங்கஷன் நடக்க போகுது" என்று சிரித்து கொண்டே சொன்னவள் அவளின் இன்னும் அதிகமாக குழம்பிய முகத்தை கண்டு, "ஹே என்னடி சொல்லிடுவோமா" என்று சுவேதாவை பார்த்து கண்ணடித்தாள்.




அதற்கு சுவேதாவோ, "நம்மலாம் சொன்னா கரெக்ட்டா இருக்காது. அதான் அவங்களே வந்துட்டாங்களே அவங்களே சொல்லிக்கிட்டும்" என்று அங்கு காரை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்த அஸ்வந்த்தை கண்காட்டினாள்.




அவர்கள் எதை பத்தி பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று புரியாமல் அவர்களையே மாறி மாறி பாவமாக பார்த்து கொண்டிருந்த வைதேகி, சுவேதா யாரையோ பார்த்து கண்காட்டவும், அவர்களின் பார்வையை தொடர்ந்து பார்த்தவள், அங்கு நடந்து வந்து கொண்டிருந்தவனை கண்டு இமைக்க கூட மறந்தவளாய் கண்கள் இரண்டும் சாசர் போல் விரிய அவனையே திறந்த வாய் மூடாமல் பார்த்து கொண்டிருந்தாள்.




அவளின் நிலையை பார்த்த இருவரும் தங்களுக்குள் சிரித்து கொண்டே காரை விட்டு கீழிறங்கி உள்ளே சென்றனர். அவர்கள் கீழே இறங்கி போனது கூட தெரியாமல் பட்டு வேஷ்டி சட்டையில் தலை முடி காற்றில் அலை அலையாய் பறக்க அதை கோதி விட்டவாறு, நம் நாட்டின் உடை அவனுக்கு தனி கம்பீரத்தை தர ஒரு வித அலட்சியம் தன்னுடைய நடையில் வெளிப்பட அவளை நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தவனையே கண்ணை கூட சிமிட்டாமல் பார்த்து கொண்டிருந்தாள்.




காரை நெருங்கி விட்ட அஸ்வந்த் அவள் அமர்ந்திருந்த புறத்தின் கார் கதவை திறந்தது மட்டுமல்லாமல் அவள் இறங்குவதற்காக தன்னுடைய கையை நீட்டினான்.




அதில் அவள் இன்னும் தன்னுடைய கண்களை அகல விரித்து அவனையே விழுங்கி விடுவதை போல் பார்த்து கொண்டிருந்தாலே தவிர சில மணி நேரம் கடந்த பின்பும் கூட தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து இம்மியளவு கூட நகர்ந்தாகவும் தெரியவில்லை, அவனின் கையை பிடித்ததாகவும் தெரியவில்லை.




அவளின் செய்கையில் அஸ்வந்த்திற்கு தான் அவஸ்த்தையாக இருந்தது. மெரூன் வித் கோல்டன் பார்டர் பட்டு புடவையில் தன்னுடைய அடர்த்தியான முடியை இருக்க பின்னி அதில் மல்லிகை பூ வைத்து அதில் ஒரு சரம் முன்னால் விழுந்திருக்க மிதமான ஒப்பனையில் தேவதை போன்று ஒளிர்ந்து கொண்டிருந்தவளை அள்ளி அணைக்க சொல்லி அவனின் கைகள் இரண்டும் பரபரத்து கொண்டிருந்தது.




ஆனால் அதே சமயம் அவளின் மீதிருந்த கோபமும் சிறிதும் குறையாமல் அப்படியே இருக்க... அவன் இரண்டுக்கும் இடையில் திண்டாடி கொண்டிருந்தான்.




அவனின் நிலை புரியாமல் வைதேகியோ நகராமல் அவனையே விழுங்கி விடுபவளை போன்று பார்த்து கொண்டிருக்க... அதற்கு மேல் முடியாமல் அவளின் கையை தானே பற்றி வெளியில் இழுத்தவன் அதே வேகத்தில் ஒரு முறை அவளை தன்னுடன் எலும்புகள் நொறுங்கிவிடும் அளவுக்கு இறுக்க அணைத்து விடுவித்தவன் அவளை அழைத்து கொண்டு விடு விடுவென்று உள்ளே சென்றான்.




வைதேகியோ கீ கொடுத்த பொம்மையை போன்று அவனின் இழுப்பிற்கு அவனுடன் உள்ளே சென்றவளுக்கு அடுத்து அடுத்து நடந்த நிகழ்வில் வாய் மொழியற்று சந்தோச மலையில் திக்கு முக்காடி கொண்டிருந்தாள். அவளுக்கு அங்கு நடப்பது கனவா நினைவா என்று கூட பகுத்தறிய முடியாமல் திணறி கொண்டிருந்தாள். அதுவும் அவன் தன்னுடைய கழுத்தில் மாலை அணிவித்து தாலி கட்டிய நொடி அவளின் உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை என்று தான் சொல்லவேண்டும்.




கடைசியில் அஸ்வந்த் தான் நினைத்த படியே திருமணத்தை நடத்தி முடித்திருந்தான். தங்களுடைய திருமணத்தில் வைதேகிக்கு சிறிதும் அன்றய நினைவுகள் எழாத வண்ணம் இருக்க வேண்டும் என்று அவன் ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்திருந்தது வீண் போகவில்லை என்று தான் சொல்லவேண்டும்.




அதன் பிறகு அனைத்து போர்மாலிட்டிசையும் முடித்து அவர்கள் இருவரையும் ஆரத்தி எடுத்து வீட்டுக்குள் அழைத்து வந்தனர்.




அதன் பிறகு மற்றவர்கள் அனைவரும் அவரவர் வீட்டிற்கு புறப்பட




வைதேகி தான் இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டு ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்தவாறு வீட்டையே சுற்றி சுற்றி பார்த்து கொண்டிருந்தாள்.




எவ்வளவு நேரம் தான் அப்படியே அமர்ந்திருக்க முடியும், சிறிது நேரத்தில் அவளை தேடி வந்த சகுந்தலா அவளுடைய கையில் பால் நிரம்பிய இரு டம்ளர்களை கொடுத்து, "நீயும் அஸ்வந்த்தும் இதை குடிச்சிடுங்க மா. ரெண்டு பேரும் சாப்பாடு தான் வேண்டாம்னு சொல்லிட்டீங்க. இதையாவது குடிங்க" என்று சொல்லிவிட்டு தன்னுடைய கடமை முடிந்து விட்டது என்பதை போன்று அவருடைய அறைக்கு அவர் சென்றுவிட.




எவ்வளவு நேரம் தான் நேரத்தை கடத்த முடியும். கையில் இருந்த பாலும் ஆற ஆரம்பிக்க அதற்கு மேல் வேறு வழியில்லாமல் அவனின் அறையை நோக்கி சென்றாள்.





என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்


 
Status
Not open for further replies.
Top