All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணி பாஸ்கரனின் "என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 9


என்னைச் சிரிப்பாள் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்



“அஸ்வந்த் உனக்கு புரியுதோ இல்லையோ, ஸ்மைலி கிட்ட பேசணும்னா நீ தமிழ் கத்துக்கிட்டு தான் ஆகணும்” என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு ஒவ்வொரு வார்த்தையாக படிக்க ஆரம்பித்தான்.


கொஞ்சம் கொஞ்சமாக படித்து கொண்டே ஒரு பக்கத்தை முடித்தவன், “oof… finally I finished one page” என்று தன்னை தானே பாராட்டி கொண்டு அடுத்த பக்கத்திற்கு சென்றான். அடுத்த பக்கத்தில் பாதி வரை படித்துவிட்டு,”k aswanth… Let’s try to remember first page words” என்று முதல் பக்கத்தில் படித்த வார்த்தைகளை ஞாபக படுத்தி பார்த்தவனுக்கு ஒரு வார்த்தை கூட நான் ஞாபகத்திற்கு வருவேனா என்று அழிச்சாட்டியம் பண்ணி கொண்டிருந்தது.



“Cool cool aswanth… don’t get tension” என்று தன்னை தானே அமைதி படுத்திக்கொண்டு மீண்டும் முதல் பக்கத்தை எடுத்து முதலில் இருந்து படிக்க ஆரம்பித்தான்.



முதலில் படித்தது வரை இப்பவும் படித்து விட்டு, “k let’s try now” என்று கூறிக்கொண்டே முதல் பக்கத்தில் படித்த வார்த்தைகளை நினைவு கூற முயன்றவனுக்கு இந்த முறையும் ஞாபகம் வராமல் போகவும், முன்னை போல் தன்னை கட்டு படுத்த இயலாதவன், கடுப்பில்,”stupid language” என்று கூறிக்கொண்டே தன் கையில் இருந்த learn tamil through english புக்கினை தன் ரூமின் வாசலை நோக்கி விட்டெறிந்தான். (பாவம் தமிழ் மொழி. இவனுக்கு தமிழ் படிக்க வரலைனா அது என்ன பண்ணும் பாவம். இவன் கையில இப்படி மாட்டிக்கிட்டு முழிக்கிதே. எல்லாம் இந்த வைதேகிய சொல்லணும்).



சகுந்தலா கொடுத்த டீயை குடித்து கொண்டிருந்த சொப்னா,”what he is trying to do? Idiot, he didn’t give me a proper answer also. K no problem. I will go to his room and find it out” என்று முடிவெடுத்தவளாய் டீயை குடித்துவிட்டு அஸ்வந்தின் ரூமிற்கு சென்றாள். சொப்னா லேசாக கதவை தட்டினாள். அஸ்வந்த்திடமிருந்து எந்த பதிலும் வராதலால் கதவை திறந்தவளின் முகத்திற்கு நேர் எதிராக அஸ்வந்த் விட்டெறிந்த புக் வந்தது.


“Oh my god” என்று கத்திக்கொண்டே சொப்னா கீழே குனியவும். அந்த புக் வாசலை தாண்டி வீட்டின் நடு ஹாலில் போய் விழுந்தது.


“Thank god. Great escape. Otherwise it definitely hit my face. Oops…my face is safe” என்று நிம்மதி மூச்சி விட்டவள், அஸ்வந்த்தை பார்த்து முறைத்து கொண்டே உள்ளே சென்றவளுக்கு, அவன் தன் கையில் கிடைத்த வாட்டர் கிளாசை எடுத்து தூக்கி எரிவதற்கு ரெடி ஆக இருக்கவும்...”hey… hey… no no…” என்று கத்தி கொண்டே அவனை விரைவாக அடைந்தவள், அவன் கையில் இருக்கிறதை வாங்க முயற்சி செய்தாள்.


தன்னால் இந்த ஒரு சின்ன விஷயத்தை கூட செய்ய முடியவில்லையே என்ற எண்ணம் நேரம் செல்ல செல்ல தன் மீதே கோபமாக மாற கொஞ்சம் கொஞ்சமாக தன் நிலையை இழந்து கொண்டிருந்தவன் “leave me alone” என்று சொப்னாவின் கைகளை உதறிவிட்டு வாட்டர் கிளாஸ்சினை போட்டு உடைத்தான்.


அந்த கிளாஸ் ஒரு பெரும் சத்தத்துடன் தரையில் பட்டு சுக்கு நூறாக உடைந்தது. அந்த சத்தத்தினை கேட்டு கீழே ஹாலில் இருந்த சகுந்தலா, சாவித்திரி, கணேசன் மூவரும் என்ன ஆச்சுன்னு தெரியலையே என்ற பதட்டத்துடன் அஸ்வந்த் ரூமிற்கு வந்தனர்.


அங்கே ரூம் முழுவதும் அலங்கோலமாகவும், கண்ணாடி துகள்களையும் கண்டவர்கள் ஐயோ என்று உள்ளே வர பார்த்தனர்.


அஸ்வந்த் இருந்த கோலத்தை கண்ட சொப்னாவிற்கு அமெரிக்காவில் நடந்தது நினைவில் ஓடியது.


சொப்னா பத்தாவது வகுப்பில் காலடி எடுத்து வைத்திருந்தாள். பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த கிஷோரிற்கு அவளை பிடித்திருந்தது. என்ன டைம் பாஸ் பண்ணும் அளவிற்கு தான். இதனை அறியாத சொப்னா அவனிடம் எதார்த்தமாக பழகினாள். கிஷோரை பற்றி மற்றவர்களின் மூலம் அறிந்திருந்த அஸ்வந்த் சொப்னாவிடம் “don’t talk to him bubbly. His character is not good da. So just cut his friendship” என்று பலமுறை எச்சரித்தான்.


சொப்னா அவன் பேச்சை அலட்சியம் செய்தவளாய் கிஷோரிடம் பேசுவதை நிறுத்தவில்லை. ஏனனில் கிஷோர் அவளை அந்த அளவிற்கு ஏதேதோ பேசி தன்னை நம்ப வைத்திருந்தான்.

சொப்னாவிடம் பேசி வேலைக்காக வில்லை என்று அஸ்வந்த், கிஷோரை மிரட்டி பார்த்தான். ஆனால் அவன் சொப்னா தன்னுடன் பேசும் தைரியத்தில், “She is on my side da, so you can’t do anything. See you” என்று அவனை பார்த்து கைகளை ஆட்டி கிண்டலாக சிரித்து கொண்டே நகர்ந்தான்.



எல்லாம் இவ குடுக்குற தைரியம் என்று சொப்னாவை திட்டி கொண்டே, “Today I must put an end for this matter” என்று வீட்டிற்கு சென்றான்.


சொப்னா வீட்டிற்கு வந்தவுடன் அவளை அழைத்து கொண்டு தனது ரூமிற்கு சென்ற அஸ்வந்த், “I already told you to stop talking sopna….” என்று கிஷோரின் மேல் இருந்த கோபத்தில் அவளை பார்த்து கத்தினான்.


“I won’t aswanth… you have no right to say this…” என்று அவளும் அவனை பார்த்து கத்தினாள்.
தான் எது செய்தாலும் அவளது நல்லதுக்கு தான் என்பதை புரியாமல் எவ்வளவு பெரிய வார்த்தையை பேசிவிட்டாள். அவள் கடைசியாக கூறியது அவனுக்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தி விட்டது. அவனால் சத்தியமாக அவனை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை, அவளிடம் காட்ட முடியாத கோபத்தை பக்கத்தில் இருந்த கத்தியினை எடுத்து தன் மீதே கிழித்து கொண்டு காட்டினான்.



அவன் கையில் இருந்து ரத்தம் கொட்டுவதை கண்ட சொப்னா “hey asu” என்று கத்தியவள் சிறிது நேரத்தில் அந்த கத்தல் அழுகையாக மாறி அவனை அழைத்து கொண்டு சாவித்ரியிடம் ஓடினாள்.


அஸ்வந்தின் முகத்தில் எந்த ஒரு சலனமும் இல்லாமல் அவளுடன் சென்றான்.


அதன் பிறகு கிஷோரின் புறமே அவள் திரும்பி பார்க்கவில்லை. ஒரு மாதம் வரை அவளுடன் சுத்தமாக அஸ்வந்த் பேசவில்லை. அவள் மேல் இருந்த கோபத்தை அந்த ஒரு மாதமும் அவளிடம் காட்டாமல் தன் மேலே காட்டினான். சிலநேரம் உணவில், ஒரு சிலநேரம் அவள் கூறிய you have no right to say this என்ற வார்த்தை ஞாபகம் வந்தால் தாங்க முடியாமல் தன் கைகளில் மறுபடியும் கீறி கொண்டான்.


அவனிடம் ஒரு மாதமாக போராடி ஒரு வழியாக அவளிடம் பேச ஒத்து கொண்டான். ஆனால் அவனால் எப்பொழுதாவது வரும் கோபத்தை மட்டும் மாத்திக்கொள்ள முடியவில்லை. என்ன ஒன்று தன்னை மட்டும் காயப்படுத்தி கொள்வதுடன் மற்றவர்கள் மாட்டினால் அவர்களையும் கடித்து குதற ஆரம்பித்தான்.


இன்று இப்பொழுது தன்னால் முடியவில்லை என்ற கோபத்தில் தன் கையில் கிடைத்த அனைத்தையும் உடைத்து கொண்டிருந்தான். அவனை பார்த்த சொப்னா….
“Still he is doing the same thing. He didn’t change this character” என்று நினைத்த சொப்னாவிற்கு அஸ்வத்தின் மேல் கட்டு கடங்காமல் கோபம் வந்தது.



அந்த அறையில் நுழைய விருந்த சகுந்தலா, சாவித்ரி, கணேசன் மூவரையும் பார்த்து, “I can handle this problem... So you please all leave from here” என்று கூறியவள் கதவை சாத்தினாள்.


அஸ்வந்த்திடம் வந்தவள் தன் கோபத்தை கட்டு படுத்தி கொண்டு அவன் தோளில் கை வைத்து “calm down aswanth” என்று பொறுமையாக கூறினாள்.


தன்னுடைய கட்டு பாட்டை எப்பொழுதோ இழந்திருந்த அஸ்வந்த்,”I said... leave me alone” என்று கத்தினான்.


அவன் மனம் முழுவதும் இருந்தது ஏன் என்னால முடியல…. முடியல… என்று நினைத்து கொண்டிருந்தவனின் எண்ணம் ஒரு கட்டத்தில் தன் மீதே கோபமாக மாறியிருந்தது. அதுவே அவன் தன்னிலையை இழக்க காரணமாகி இருந்தது.


இவனை இப்படியே விட்டால் இவனையே ஏதாவது காயப்படுத்தி கொள்வான் என்று நினைத்த சொப்னா “Hey asu relax da… come, sit… what’s your problem. Tell me?” என்று பேசி கொண்டே அவனுடைய கைகளை பிடித்து அமைதி படுத்த முயற்சி செய்தாள்.


அவள் சொல்வது எல்லாம் அவனுக்கு சுத்தமாக மண்டையில் ஏறவில்லை “leave me” என்று கூறி அவளுடைய கைகளை உதறி தள்ளினான்.


அவன் தள்ளியதில் கீழே விழ போன சொப்னாவிற்கு சுத்தமாக தன்னுடைய கோபத்தை கன்ட்ரோல் பண்ண முடியவில்லை. இவனை என்று பல்லை கடித்தவள் சுற்றி முற்றி பார்த்தாள்.


அங்கே அறையில் டேபிளில் இருந்த ஜக்கை எடுத்து அதில் இருந்த நீரை கோபத்துடன் அஸ்வத்தின் முகத்தில் ஊற்றியவள், அவனை விட அதிகமாக கத்த ஆரம்பித்தாள்.


அவள் ஊற்றிய நீரிலும், கத்தலிலும் தன்னிலை உணர்ந்தவன், அப்பொழுது தான் தன்னை சுற்றி நடந்ததை கவனித்தான். என்ன பண்ணி வச்சிருக்கோம் என்று நினைத்தவன், சொப்னா மூச்சி வாங்க தன் எதிரில் நின்று கத்தி கொண்டிருப்பதை கண்டவனின் முகத்தில் மெலிதாக புன்னகை அரும்பியது.


அஸ்வந்த் தன்னை பார்த்து சிரிப்பதை கண்டவள் கோபம் இன்னும் எகிறியது, கையில் வைத்திருந்த ஜக்காலயே அவனை மொத்து மொத்து என்று மொத்தினாள்.


அவள் அடிப்பதை சிரித்து கொண்டே தடுத்து “sorry sorry” என்று அவளை இழுத்து அணைத்து கொண்டான்.


அவள் இன்னும் அவனை அடிப்பதை நிறுத்தாமல், “leave me aswanth…. What’s your problem? Why are you suddenly angry?” என்று அவனை விளக்கி கொண்டே கேட்டாள்.


அவள் உச்சியில் தலை முடியை லேசாக களைத்து கொண்டே அவளை தன்னிடம் இருந்து விலக்கியவன், “sit, I will tell you” என்று அவளை பெட்டில் அமரவைத்து தானும் அமர்ந்து கொண்டு, “my smilee….” என்று அவளை பார்த்ததில் இருந்து கூற ஆரம்பித்தான்.


அவன் கூறியதை கண்களை பெரிதாக விரித்து கொண்டு கேட்டு கொண்டிருந்தவள், “what’s her name da asu?”


அவள் கேட்டதற்கு தெரியாது என்று உதட்டை பிதுக்கினான். “Oh… that’s k. do you have her photo?”
அதற்கும் அவன் இல்லை என்பதை போல் தலையை ஆட்டவும், “what lover da you are?” என்று அவனை பார்த்து முறைத்தாள்.



அதற்கு அவன் அவளை பார்த்து அனைத்து பற்களையும் காட்டி சிரித்தான்.


“Don’t laugh… then I will break your all teeth” என்று கூறியவள்.”K… everything is fine. But why did you get angry?”
“I don’t know bubbly. I try to learn tamil. But how many times I have tried… it’s not coming. so that things changed into angry on myself”.



“Hey it’s just simple matter da asu. If you have company, you can easily learn tamil. So Tomorrow onwards I’m going to learn tamil with you… k” என்று அவனை பார்த்து சிரித்தாள்.


“Hey bubbly is it serious… but you don’t like tamil na”


“No problem da asu… You are my cute and lovely brother na. so I can adjust” என்று அவனை பார்த்து கண் சிமிட்டினாள்.


அஸ்வந்த் அவளுடைய மூக்கினை பிடித்து ஆட்டி கொண்டே, “come let’s go... They must be upset”
அவர்கள் இருவரும் சிரித்து பேசிக்கொண்டே கீழே இறங்கி வந்தனர். சொப்னா அஸ்வந்த்திடம், “tomorrow you must take me for shopping. Then only I will help you” என்று டீலிங் பேசிக்கொண்டே வந்தாள்.



இருவரும் வருவதை பார்த்த பெரியவர்களுக்கு அஸ்வந்த் முகத்தில் சிரிப்பை கண்டவுடன் தான் அவர்களுக்கு நிம்மதியாக இருந்தது.


அங்கே ஹாஸ்டெலில் தன்னுடைய பாஸ்கெட்பால் பயிற்சியை முடித்து விட்டு தன்னுடைய அறையில் படுத்திருந்த வைதேகிக்கு சுவேதாவிடம் இருந்து போன் வந்தது. அதனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள், “hey vaithegi… சாப்பிட்டியா டி”.


“ஹ்ம் சாப்பிட்டேன் நீ”


“இல்ல இனிமேல் தான். ஓகே நாளைக்கி உனக்கு முக்கியமான ஒர்க் ஏதாவது இருக்கா என்ன?”


“அப்படிலாம் எதுவும் இல்ல. கொஞ்சம் டிரஸ் இருக்கு அத மட்டும் வாஷ் பண்ணனும்”.


“Oh then super… நாளைக்கி ரெண்டு பேரும் பீனிக்ஸ் மால் போறோம். ஒரு 10 o கிளாக் போல ரெடி ஆகி இரு. நான் உன்னைய காலேஜ் கேட்டுல பிக்கப் பண்ணிக்கிறேன்”.


“நான் வரல நீ மட்டும் போயிட்டு வா”


“ஹே என் அண்ணன் பையனுக்கு கம்மிங் மந்த் பர்த்டே வருது டி அவனுக்கு டிரஸ் வாங்கி கொடுக்கலாம்னு இருக்கேன். அப்படியே நமக்கும் கொஞ்சம் ஷாப்பிங் பண்ணிட்டு வருவோம்”


“எனக்கு எதுவும் வாங்க வேண்டியது இல்ல டி. சோ நீ மட்டும் போயிட்டு வாயேன் ப்ளீஸ். நான் இன்னொரு நாள் வரேன்”


“உன்கிட்ட பெர்மிஷன் கேடகுறதுக்காகலான் நான் உனக்கு கால் பண்ணல. நாளைக்கி நீ பிரீயான்னு கேக்க தான் பண்ணேன். உனக்கு டிரஸ் வாஷ் பண்ற வேல மட்டும் தான இருக்கு. அத சண்டே பார்த்துக்கோ. நாளைக்கி காலையில ரெடியா இரு”.


“ஹே ப்ளீஸ் டி சுவேதா. நீ மட்டும் போயிட்டு வாயேன்”.


“ப்ச் சொன்னதே திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காத. நாளைக்கி ரெடியா இருக்க அவ்ளோதான்... அப்படி மட்டும் இல்லனா... ஹாஸ்டெல்க்கே வந்து இழுத்துட்டு போய்டுவேன் ஞாபகம் வச்சிக்கோ” என்று கட்டளையிட்டு விட்டு வைதேகி பதில் பேசுவதற்கு வாய்ப்பு கொடுக்காமல் போனை கட் பண்ணினாள்.


“இவ ஒருத்தி இருக்காளே” என்று அவளை சலிக்க மட்டும் தான் வைதேகியால் முடிந்தது.
மறுநாள் அழகாக விடிந்தது.



“Hey asu… still you are sleeping in room ah. Open the door da” என்று கூறி கொண்டு பட பட வென்று ரூம் கதவை தட்டினாள்.


அவள் கதவை தட்டுவது அவனுக்கு ஏதோ கனவில் கேட்பதை போல் கேட்டு கொண்டிருந்தது. அதனால் அவன் தன் மேல் இருந்த போர்வையை இன்னும் தலை முழுவதும் இழுத்து போர்த்தி கொண்டு சுகமாக தூங்கினான்.


“Dei asu… it’s already 9.30 da. How long did you sleep? I want to go for shopping. If you are not coming to open the door, see I am going to break this door now” என்று கூறி கொண்டே முன்பை விட வேகமாக தட்டினாள்.


இம்முறை அவளது தட்டலில் விழித்த அஸ்வந்த் வேகமாக எழுந்து வந்து கதவை திறந்தான்.


அங்கே கதவின் மறுபக்கத்தில் நின்றிருந்த சொப்னா பத்ர காளியை போல் அவனை முறைத்து கொண்டு நின்று கொண்டிருந்தாள்.


“Hey what bubbly” என்று இழுத்து கொண்டு போய் தன் பெட்டில் அவளை அமர வைத்தவன், அவளின் மடியில் படுத்து தான் விட்ட தூக்கத்தை மறுபடியும் தொடர்ந்தான்.


“Dei dei get up get up” என்று அவனை போட்டு அடித்தவள் “what I said yesterday da? Today you have to take me out for shopping?” என்று கூறி கொண்டே அவனை பிடித்து உலுக்கினாள்.


ப்ச், “I will take you tomorrow”.


“What?” என்று கத்தியவள். K fine. Erase it all what I said yesterday.


“What erase?” என்று கேட்டு கொண்டே தூக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்தான்.


“Hmm… what erase ah? Yesterday I said na… I will help you in learning tamil. Erase it all. You are not taking me out. So I’m not going to help”


அவள் கடைசியாக கூறியதில் வேகமாக அவள் மடியில் இருந்து எழுந்தவன். “Within 10 minutes. I will be ready” என்று சொப்னாவிடம் சொல்லிவிட்டு பாத்ரூமிற்குள் நுழைந்து கொண்டான்.


அவன் எழுந்து ஓடியதில், “ha ha asu… that much you are loving her ah da” என்று சிரித்து கொண்டே கீழே இறங்கினாள்.


அங்கே ஹாஸ்டெலில் வைதேகி, சுவேதா சொன்ன நேரத்திற்கு ரெடி ஆகி காலேஜ் முன்னாள் வந்து நின்றாள்.


கரெக்டாக சொன்ன நேரத்துக்கு வந்த சுவேதா வைதேகியை பார்த்து, “ஹா ஹா எனக்கு தெரியும் டி நீ வந்திருவன்னு” என்று சிரித்து கொண்டே கூறினாள்.


அவள் கூறியதில் கடுப்பானவள் “நான் ஹாஸ்டல் போறேன்” என்று முறைத்து கொண்டே திரும்பினாள்.


“சரி சரி சும்மா தான் சொன்னேன் திரும்பி எதுவும் போயிடாத. அவளை பார்த்து முறைத்து கொண்டே வைதேகி அதே இடத்தில நின்றாள். சாரி டி செல்லம் முறைக்காம வண்டியில ஏறு” என்று தான் கொண்டு வந்திருந்த ஆக்ட்டிவாவில் அவளை ஏற்றி கொண்டு பீனிக்ஸ் நோக்கி வண்டியை விட்டாள்.


“Hey I’m ready da bubbly. Let’s go” என்று கூறி கொண்டே ஹாலில் அமர்ந்திருந்த சொப்னாவை நோக்கி அஸ்வந்த் வந்தான்.


அங்கே சொப்னாவுடன் அமர்ந்திருந்த சகுந்தலா, “have breakfast and go” என்று இருவரையும் பார்த்து கூறினார்.


“Hmm” என்று அவர்கள் இருவரும் உணவுண்ண டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.


சாப்பிட்டு கொண்டே சொப்னா அஸ்வந்த்தை பார்த்து, “which place is good for shopping da asu” என்று கேட்டாள்.


“There are many places in Chennai for shopping. But today I’m going to take you to phoenix mall”.


“Is it good for shopping?”


“Yes ofcourse bubbly. You can buy all things from one place”.


“That’s nice”.


இருவரும் உணவை உண்டு விட்டு “k grandma… we will have our lunch in phoenix mall itself. So see you on evening. Bye” என்று கூறிவிட்டு காரில் ஏறி பீனிக்ஸ் மால் நோக்கி புறப்பட்டனர்.


வைதேகி நீ இங்கேயே வெய்ட் பண்ணுடி நான் போய் வண்டிய பார்க் பண்ணிட்டு வரேன்.


வைதேகிக்கு இங்கு வரவே சுத்தமாக விருப்பம் இல்லை. இதுல இவ வேற இங்க தனியா நிக்க வச்சிட்டு போய்ட்டாளே என்று நொந்து கொண்டே தன்னை சுற்றி போகிற வரவர்களை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.


வேடிக்கை பார்த்து கொண்டிருந்தவளின் கண்ணில் காரை பார்க் பண்ணிவிட்டு நடந்து வந்த அஸ்வந்த் கண்ணில் பட்டான்.


அவனை பார்த்தவள் அகமும் புறமும் ஒரு சேர மலர்ந்தது, தன் கண்களை அவனை விட்டு இங்கே அங்கே திருப்பாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.


அப்பொழுது, அஸ்வந்த்தை தேடி ஒரு பெண் ஓடி வந்து அவனுடைய விரல்களோடு தன் விரல்களை கோர்த்து கொண்டு சிரித்து பேசி கொண்டே நடந்து வருவது அவள் கண்ணில் தவறாமல் பட்டது.


அவளுடன் அஸ்வந்த்தும் சேர்ந்து சிரித்து கொண்டும், பேசி கொண்டும் வந்தது அவளுடைய மனதில் யாரோ கத்தியால் குத்துவதை போல் மிகுந்த வலியினை ஏற்படுத்தியது.


இதற்கு மேல் தன்னால் இங்கு நிற்க முடியாது என்று நினைத்த வைதேகி, சுவேதா வருகிறாளா இல்லையா என்பதை கூட கவனிக்காமல் அவள் பாட்டிற்கு வேக வேகமாக எதில் இருந்தோ தப்பிப்பதை போல் மாலிற்குள் ஓடினாள்.


அவளுக்கு தான் முதல் நாள் மாலையில் தான் அவனை பற்றி இனிமேல் நினைக்க கூடாது என்று முடிவெடுத்தது எல்லாம் காற்றில் பறக்க விட்டவள், அவனையும் யார் அந்த பெண் என்று யோசித்து கொண்டே மனம் முழுவதும் வலியுடன் உள்ளே சென்றாள்.


வைதேகி வேகமாக உள்ளே செல்வதை பார்த்து விட்ட சுவேதா, "ஹே ஹே" என்று கத்தி கொண்டே அவளும் மாலிற்குள் நுழைந்தாள். அவளை எண்ட்ரன்ஸிலேயே பிடித்து விட்ட சுவேதா "ஹே என்னடி உன்னைய வெளிய தான நிக்க சொன்னேன் நீயென்னனா என் கிட்ட சொல்லாம கூட வந்துட்ட".


“சாரி டி சுவேதா ரொம்ப நேரமா தனியா வெளில நிக்க ஒரு மாதிரி இருந்துச்சா அதான் உள்ள வந்து நிக்கலாமேன்னு வந்துட்டேன்”.


“ஓ அப்படியா சரி சரி வா போலாம்”.


“Hey asu… seriously phoenix looks super da” என்று சுற்றி பார்த்து கொண்டே சொப்னா மாலிற்குள் நுழைந்தாள்.


“I told you na… we can buy all things in same place” என்று அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டே வந்தவனின் கண்களில் எஸ்கலேடரில் போய் கொண்டிருந்த வைதேகி பட்டாள்.


“Hey it’s smilee na. Oh god. I can’t believe this” என்று வாய்விட்டே அவளை பார்த்த மகிழ்ச்சியில் அஸ்வந்த் கூறினான்.


“Hey what asu? Why are you suddenly get surprised?”


“Nothing bubbly. Come let’s go to the first floor” என்று சொப்னாவிடம் கூறியவன் அவளை அழைத்து கொண்டு வைதேகி பின்னாலே சென்றான்.


அஸ்வந்த் மிகுந்த மகிழ்ச்சியோடு வைதேகி போகும் வலியாவும் பின்னையே தொடர்ந்தான்.


“Hey where are you going asu?” என்று சொப்னா அஸ்வந்த்தை பிடித்து நிறுத்த முயற்சித்தாள்.


“Bubbly please da… come with me. I will tell you later” என்று அவள் விரல்களை அழுத்தமாக பிடித்து அழைத்து கொண்டு சென்றான்.


அவனை முறைத்து கொண்டே சொப்னா அவனுடன் சென்றாள்.


எதேச்சையாக திரும்பி பார்த்த வைதேகி தன் பின்னால் அஸ்வந்த் வருவதை பார்த்து மலர்ந்தவளின் முகம் அவனுடைய விரல்களை நோக்கியது.


அங்கே சொப்னாவின் விரல்களை இன்னும் அஸ்வந்த் பற்றியிருந்ததை கண்ட வைதேகியின் முகம் வாடிவிட அவனை ஒரு தவிப்புடன் பார்த்து விட்டு திரும்பி கொண்டாள்.


அவளையே பார்த்து கொண்டிருந்த அஸ்வந்த்திற்கு முதலில் அவள் முகத்தில் தோன்றிய மகிழ்ச்சியையும் அதன் பிறகு தோன்றிய வருத்தத்தையும் கண்டவனின் மனம் ஏன் என்று புரியாமல் குழம்பியது.


"முதல்ல நம்மள சந்தோசமா தான பார்த்தா அதுக்கு அப்புறம் என்னுடை கைய பார்த்தோன தான சோகமானா" என்று நினைத்து கொண்டே தன் கைகளை பார்த்தவனுக்கு அங்கே சொப்னாவின் விரல்களும் இருப்பதை கண்டவனுக்கு அவளுடைய முக மாற்றத்திற்கான காரணம் புரிந்தது.


இவளுக்கு எப்படி இதை புரிய வைக்கிறது என்று நினைத்தவன் அசோக்கிற்கு கால் பண்ணி, “hey ashok I’m in phoenix da…. Ya ya I come with my sister” என்று அவளுக்கு கேட்கும் படி அவளை பார்த்து கொண்டே மொபைலில் உரையாடினான்.


அவன் பேச ஆரம்பித்தவுடன் இது அவனோட குரல் மாதிரி இருக்கே என்று கூர்மையாக தன் காதுகளை தீட்டி கொண்டு என்ன கூறுகிறான் என்று கேட்க ஆரம்பித்த வைதேகி, அவனுடைய “sister” என்ற வார்த்தையில் முகம் மலர்ந்தவளாய் அவனை நோக்கி திரும்பினாள்.



என்னைச் சிரிப்பாள் சிதைத்தவளே


தொடரும்......
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 10


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

அஸ்வந்த் தன்னுடன் வந்த பெண்ணை “sister” என்று போனில் கூறியதை கேட்ட வைதேகிக்கு மனம் முழுவதும் மகிழ்ச்சி அலை அடித்தவளாய் தன்னை மீறி முகம் முழுக்க சந்தோஷமும், நிம்மதியுமாய் அஸ்வந்த்தை திரும்பி பார்த்தாள்.


அவளின் முகத்தை பார்த்தே அதில் தெரிந்த மகிழ்ச்சியையும், நிம்மதியையும் படித்த அஸ்வந்த், அவளுடைய நிம்மதியை கண்டு “இந்த சின்ன விஷயத்துக்கு போய் இப்படி கவல பற்றுக்காளே” என்று மனதினுள் நினைத்தவனுக்கு “நான் உனக்கானவன் ஸ்மைலி. ஏன் தேவையில்லாமல் கவலை படுகிறாய்” என்று அந்த நிமிடமே அவளிடம் சொல்ல வேண்டும் போல் தோன்றியது.


அவள் இன்னும் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்டவன், சொப்னாவின் புறம் திரும்பி “she is smilee” என்று வைதேகியை அவளிடம் காட்டினான்.


“இதுக்கு தான் தன்னை அவ்வளவு வேகமாக கூட்டிட்டு வந்தானா” என்று நினைத்தவள் அவனிடம் “oh she is the one ah. She is looking good da asu. But why her face is this much glowing?”


வைதேகியை பார்த்து கொண்டே கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி நடந்த அனைத்தையும் சொப்னாவிடம் கூறினான்.


“Ha ha ha” என்று அவனை பார்த்து சிரித்தவள், “she is so cute da asu. Come... Introduce me to her” என்று அவனை அழைத்து கொண்டு வைதேகியிடன் சென்றாள்.


அஸ்வந்த் தன்னை நோக்கி நடந்து வருவதை கண்ட வைதேகி, ஐயோ பார்த்துருப்பானோ என்று பதட்டபட்டவள் முன்னே திரும்பி சுவேதாவுடன் ஒட்டி நின்று கொண்டாள்.


தன்னுடைய அண்ணன் பையனுக்காக ட்ரஸினை தேடிக்கொண்டிருந்த சுவேதா வைதேகி தன்னை ஒட்டி நிற்கவும், தன் கையில் இருந்த ஒரு ட்ரஸினை காட்டி "ஹே இந்த டிரஸ் ஓகேவா டி"


“Hmm” என்று கூறி வைதேகி தலையை ஆட்டினாள்.


சுவேதா ஒவ்வொரு ட்ரெஸ்ஸாக எடுத்து காட்ட காட்ட... எல்லாத்துக்கும் “hmm” என்று மட்டுமே வைதேகியிடம் இருந்து பதில் வந்தது.


அதில் கடுப்பான சுவேதா, “ஹே என்னடி எல்லாத்துக்கும் ‘hmm’ சொல்லிட்டு இருக்க. ஒழுங்கா ஒரு ட்ரெஸ்ஸ சூஸ் பண்ணு இல்லனா என் கிட்ட அடிவாங்க போற. அப்புறம் எதுக்கு உன்னைய கூட்டிட்டு வந்தேன்....” என்று அவளை பார்த்து திட்ட ஆரம்பித்தாள்.


வைதேகிக்கு அவள் திட்டுவது எதுவும் சுத்தமாக மண்டையில் ஏறவில்லை. அவளை முழுவதுமாக பதட்டம் மட்டுமே சூழ்ந்திருந்தது.


வைதேகியை நெருங்கி வந்த அஸ்வந்த் அவளுடைய முகத்திற்கு நேராக வந்து நின்று “hi smilee” என்று சிரித்து கொண்டே கூறினான்.


இப்படி தன் முன்னாள் வந்து நிற்பான் என்று எதிர்பார்க்காத வைதேகி சுவேதாவின் கைகளை இறுக பற்றியவள், அவனை மிகுந்த அதிர்ச்சியுடன் நிமிர்ந்து பார்த்தாள்.


வைதேகி தன் கைகளை இறுக பற்றவும் அவளை நிமிர்ந்து பார்த்த சுவேதா, எதிரே அஸ்வந்த் ஒரு பெண்ணுடன் நின்றிருப்பதை பார்த்து அவளுக்கு குழப்பமே மிஞ்சியது. “இவன் வைதேகி பின்னாடில சுத்திட்டு இருந்தான். இது யாரு புதுசா” என்று ஏகப்பட்ட கேள்விகள் அவளுடைய மண்டையில் ஓடியது.


அஸ்வந்த்திற்கு வைதேகியை தவிர மற்ற எவருமே அவன் கண்களுக்கு தெரியவில்லை. அவன் மனம் முழுவதும் வைதேகியே நிறைந்திருந்தாள்.


வைதேகி எதுவும் கூறாமல் அவனையே அதிர்ச்சியுடன் பார்த்து கொண்டிருக்கவும், “hey smilee… what happened? என்று கேட்டு கொண்டே அவள் முகத்திற்கு அருகே கை அசைத்தான்.


அவனின் செய்கையில் அவள் இன்னும் மிரண்டு விழிக்கவும்…


“Hey what da… why are you afraid of me?”


வைதேகியையே பார்த்து கொண்டிருந்த சொப்னா, இவ எதுக்காகவோ பதட்டமா இருக்கா. ஆனா ஏன்… ஓகே கண்டுபிடிப்போம் என்று நினைத்தவளாய் அஸ்வந்த்தை தன் வலது கை முட்டியால் அவனின் இடுப்பில் லேசாக இடித்தவள் இன்ட்ரோ கொடுக்குமாறு கூறினாள்.


“Hey sorry sorry bubbly. I forgot….” என்று சொப்னாவிடம் கூறியவன்…. வைதேகியின் புறம் திரும்பி “this is bubbly”.


அவன் பப்ளி என்று கூறவும் அவனை அடித்தவள் வைதேகியிடம் சிரித்து கொண்டே “he is always like that...” என்று கூறிக்கொண்டே அவனை பார்த்தும் சிரித்தாள்.


அவன் அந்த உலகத்துல இருந்தா தான….


அங்கே நின்று கொண்டிருந்த சுவேதாவிற்கோ இங்க என்ன தான்யா நடக்குது என்று வேடிக்கை மட்டும் தான் பார்க்க முடிந்தது. ஏனெனில் அவள் அங்கு நிற்பதையே யாரும் கண்டு கொள்ளவில்லை.


அஸ்வந்த், சொப்னா இருவரது பார்வையும் வைதேகியிடமே இருந்தது.


வைதேகிக்கோ அவளுடைய அதிர்ச்சி, பதட்டம் எல்லாவற்றையும் மறந்தவளாய்.... சொப்னா அஸ்வந்த்திடம் மிகவும் உரிமை எடுத்து பேசிக்கொண்டிருப்பதை கண்டு உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தாள். வைதேகியின் பார்வை தன்னை சுட்டரிப்பதை உணர்ந்த சொப்னா.... மனதுக்குள் சிரித்து கொண்டே”possessiveness ah... You are very lucku da asu” என்று நினைத்தவள். வைதேகியின் புறம் தன் கையை நீட்டி”Hi smilee… I’m sopnaa. Ashwant is saying a lot about you.” என்று சொல்லிக்கொண்டே அவளுடைய முகத்தை ஆராய்ந்தாள்.


அஸ்வந்த் தன்னை பற்றி கூறியிருக்கிறான் என்பதே அவளுக்கு சொப்னாவின் மேல் இருந்த கோபத்தை போக்குவதற்கு வைதேகிக்கு போதுமானதாக இருந்தது.


அவள் சிரித்த முகமாக சொப்னாவின் கைகளை பற்றியவள் “வைதேகி” என்று தன் பெயரை கூறினாள்.


தன் பெயரை சொல்லி முடிக்கும் போது... அவளுடைய பார்வை கடைசியில் அஸ்வந்த்திடம் முடிந்தது.


அவளுடைய பார்வை அவனுக்கு, “என்னோட பேர் உனக்காக தான்” என்று சொல்லாமல் சொல்வதை போல் இருந்தது.


அவனின் மனதில் சாரல் அடித்தது.


அவன் ‘vaithegi’ என்று இதழ்களை மட்டும் அசைத்து சத்தம் வராமல் கூறி அவளை பார்த்து கண்களால் சிரித்தான்.


அவன் தன் பெயரை உச்சரிப்பதை கண்டு கொண்டவள்... அவன் சிரிப்பை பார்த்து அவனிடம் மாட்டி கொண்ட உணர்வுடன்... அவளுள் பதட்டம் எழ தன்னுடைய உதட்டை பற்களால் கடித்து கொண்டு தலையை கீழே உடனே குனிந்து கொண்டாள்.


அஸ்வந்த்திற்கு வைதேகியின் ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியை வாரி இறைத்து கொண்டிருந்தது. அவளிடம் பேச முடியாமல் தவித்தவனுக்கு வைதேகியின் பார்வை, அவனை எங்கோ இழுத்து கொண்டு சென்றது.


அஸ்வந்த் வைதேகியின் மாற்றங்களை கண்டு ரசித்து கொண்டிருந்தான்.


ஆனால் அவளுடைய மாற்றங்களை அவள் தான் உணர்ந்தாள் இல்லை. அவள் தன் மனம் போகும் வழியிலேயே பயணிக்க ஆரம்பித்தாள்.


வைதேகி தன் பெயரை கூறும் போது அஸ்வந்த்தை பார்த்ததை கண்டுவிட்ட சொப்னாவிற்கு ஒன்று தெளிவாக புரிந்தது. ஆம் இருவரும் தங்களது இணையின் மனதில் இடம் பிடித்து விட்டனர் என்று.


இனிமேல் இவர்கள் இருவருக்கும் நடுவில் நின்றாள் நாம் தான் நந்தியை போல் இருப்போம் என்று நினைத்தவள், இப்போ இவங்க ரெண்டு பேரையும் எப்படி தனியா அனுப்பறது என்று யோசித்து கொண்டே திரும்பியவளின் கண்களில் கையில் சிறு குழந்தைகளுக்கான துணியை வைத்து கொண்டு அஸ்வந்த்தையும், சொப்னாவையும் பார்த்து கொண்டிருந்த சுவேதா பட்டாள்.


அவளை பார்த்தவுடன் குதூகலமான சொப்னா, சுவேதாவை பார்த்து, “hey hi… Are you vaithegi friend?”


இப்பதான் இங்க ஒருத்தி இருக்குறது உனக்கு கண்ணுக்கு தெரியுதா என்று சொப்னாவை மனதினுள் அற்சித்தவள், வெளியில் அவளை பார்த்து “hmm” என்று தலையை ஆட்டினாள்.


“Sorry ya... I didn’t see you” என்று அவளிடம் மன்னிப்பு கேட்டவள். “I’m sopna. Your name? என்று மலர்ந்த முகத்துடன் கேட்டாள்.


இவ மேல கோபப்பட்டு நமக்கு என்ன ஆக போகுது என்று நினைத்தவள் அவளிடம் “suvetha” என்று சிரித்த முகமாகவே அவளும் கூறினாள்.


அஸ்வந்த்தும் வைதேகியும் இவர்கள் பேசுவதை எதுவும் கவனிக்காதவர்களாய் தங்களது உலகத்தில் சஞ்சரித்திருந்தனர்.


அஸ்வந்த் வைதேகியையே வைத்த கண் வாங்காமல் பார்த்து கொண்டிருந்தான்.


வைதேகியோ அஸ்வந்த்தை நிமிர்ந்து நிமிர்ந்து பார்ப்பதும், அவன் தன்னையே பார்த்து கொண்டிருப்பதை கண்டு பதட்டத்துடன் தலையை குனிந்து கொள்வதுமாக செய்து கொண்டிருந்தாள்.


அஸ்வந்த்திற்கு அவளுடைய செய்கை ஒரு பக்கம் சிரிப்பையும் மறு பக்கம் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தி கொண்டிருந்தது. அவளுடன் செலவழிக்கும் நிமிடங்களை ரசித்தவனாய்… வைதேகியின் பதட்டத்தையெல்லாம் லட்சியம் செய்யாமல் தன் பார்வையை அவள் மீதிருந்து அகற்றாமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.


அங்கு சொப்னா சுவேதாவிடம், “Are you looking dress for child?”


இவ எதுக்கு இதல்லாம் கேட்குறா. தெரிஞ்சி மட்டும் என்ன பண்ண போறா என்ற எண்ணம் சுவேதாவினுள் எழுந்தது. “Hmm yes” என்று மட்டும் கூறினாள். சொல்லப்போனால் சொப்னா பத்து வார்த்தை பேசினால், சுவேதா ஒரு வார்த்தை தான் அவளிடம் பேசினாள்.


சுவேதாவிற்கு சொப்னாவை சுத்தமாக பிடிக்கவில்லை.


ஏனெனில், வைதேகியின் நடவடிக்கை அவளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருந்தது. ஒரு வேல வைதேகிக்கு அஸ்வந்த்தை பிடித்திருக்கிறதோ என்ற சந்தேகம் அவளுக்கு இருந்தது.


இப்பொழுது அஸ்வந்த் ஒரு பெண்ணுடன் வந்ததை பார்த்தவளுக்கு, வைதேகியின் மேல் தனக்கிருக்கும் சந்தேகம் உண்மையாக இருந்தால் அவள் மனது எவ்வளவு வேதனை படும் என்று நினைத்தவளுக்கு சொப்னாவை பார்த்தவுடன் பிடிக்காமல் போனது. அதனால் அவளுடன் பேசுவதை அவள் தவிர்க்க பார்த்தாள்.


ஆனால் சொப்னா அதற்கு விட்டால் தானே…


அவளுடைய எண்ணம் முழுவதும் அஸ்வந்த்தும் வைதேகியும் மனம் விட்டு பேசுவதற்கு தனிமை ஏற்படுத்தி தர வேண்டும் என்றிருந்தது. தானும், வைதேகியின் தோழியும் இங்கு இல்லை என்றால் அவர்கள் இருவரும் பேசி கொள்வார்கள் என்று நினைத்தவள், சுவேதாவிடம், “If you are not bother, may I help you for selecting dress” என்று கேட்டாள்.


அவள் கேட்ட விதம் சுவேதாவை ஒரு வித சங்கடத்தில் ஆழ்த்த, “Hey no problem sopna. Join with me”


“அவள் கூறியதில் நிம்மதியுற்றவள், அஸ்வந்திடம்” K da asu. I will help her for selecting dresses. So you both take a look of other places. We will join at lunch time” என்று கூறிவிட்டு சுவேதாவை பார்த்து, “come let’s start” என்று ட்ரெஸ்ஸை பார்க்க ஆரம்பித்தாள்.


இவ என்ன சொல்றா என்று அதிர்ச்சியுடன் சொப்னாவை பார்த்த சுவேதாவிற்கு வைதேகியை அவனுடன் போக வேண்டாம் என்று சொல்வதற்கு மட்டும் மனம் வரவில்லை.


இவ்வளவு நேரம் அஸ்வந்த்திற்கும் வைதேகிக்கும் நடுவில் நடந்ததை பார்த்து கொண்டிருந்தவளுக்கு இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருக்கிறது என்று அவர்கள் முகத்திலேயே தெரிந்தது. சரி அவர்கள் இருவருமே பேசி புரிந்து கொள்ளட்டும் என்று நினைத்தவள், சொப்னாவின் முடிவிற்கு தானும் ஒத்து கொண்டாள்.


சொப்னா அஸ்வந்த்திடம் ஏதோ பேசவும் அவளை திரும்பி பார்த்த வைதேகிக்கு அவள் அஸ்வத்துடன் தன்னை போக சொல்லுவதை கேட்டு அதிர்ந்தவள், சிறிது நேரத்தில் நிதானித்து சுவேதாவின் பதில் என்ன என்று அவளையே பார்த்தாள்.


சுவேதாவின் முகத்தில் எந்த ஒரு மறுப்பிற்கான அடையாளமும் தெரியாததால் குழம்பியவள், இதுக்கு அஸ்வந்த் என்ன சொல்ல போறான்னு தெரியலையே என்று அவனை நிமிர்ந்து பார்த்தவளுக்கு, அஸ்வந்தின் முகத்தில் தெரிந்த அளவுக்கடந்த சந்தோசம் அவளுள் “கூட்டிட்டு போய்டுவானோ” என்ற பதட்டம், பயம், சந்தோசம், எதிர்பார்ப்பு என்ற எல்லாம் கலந்த கலவையான மனநிலையை அவளுள் விதைத்தது.


அங்கே தங்களுடைய கடமை முடிந்து விட்டது என்பதை போல் சொப்னாவும், சுவேதாவும் டிரஸ் தேடும் வேட்டையில் இறங்கி விட்டனர். சொப்னா மட்டும் அஸ்வந்த்தை பார்த்து தன்னுடைய கட்டை விரலை உயர்த்தி காட்டி கண்ணடித்துவிட்டு சுவேதாவுடன் இணைந்து கொண்டாள்.


இது இவ வேலைதானா என்று நினைத்த அஸ்வந்த்திற்கு, “my chella bubbly” என்று அந்த நிமிடம் அவளை கொஞ்ச வேண்டும் போல் இருந்தது. சொல்லப்போனால் அந்த நிமிடம் மட்டும் தான் சொப்னா அவன் எண்ணத்தில் இருந்தாள். அடுத்த நிமிடத்தில் இருந்து அவனுடைய எண்ணம், மனம், உடல் அனைத்திலும் இருந்தது வைதேகி… வைதேகி..... ஆம் அவள் மட்டும் தான் நிறைந்திருந்தாள். வைதேகியுடன் தான் கழிக்க போகும் விலை மதிக்க முடியாத அந்த பொழுதை அப்பொழுதே ஆரம்பிக்க வேண்டும் என்கிற உந்துதலில் மிகுந்த உற்சாகத்துடன் அவளை நோக்கி நடந்து வந்தான்.


அஸ்வந்த் தன்னை நோக்கி நடந்து வருவதை கண்ட வைதேகிக்கு இப்பொழுது என்ன செய்வது என்று புரியாமல் அஸ்வந்த்தையும், சுவேதாவையும் மாறி மாறி பார்த்தாள்.


ஐயோ இவ வேற நம்மள கண்டுக்கவே மாட்டிங்குறாளே... இவன் வேற கிட்ட வர போறானே என்று மனதிற்குள் புலம்பியவள் இருவரையுமே மாறி மாறி பார்த்தாள்.


வைதேகியின் செய்கையில் அவளை பார்த்து சிரித்த அஸ்வந்த், “come with me smilee” என்று சிரித்து கொண்டே அவளை பார்த்து கூறியவன். முன்னே நடந்தான்.


அவள் வருவாள் என்று முன்னே நடக்க ஆரம்பித்தவன் வைதேகி தான் நின்ற இடத்தில் இருந்து கொஞ்சம் கூட நகராமல் சுவேதாவையும், அவனையும் மாறி மாறி பார்த்து கொண்டிருப்பதை கண்டவன்.


‘இவள’ என்று நினைத்தவன், திரும்பவும் வைதேகியின் அருகில் வந்து அவளுடைய இடது கையை தனது வலது கையால் பற்றியவன் “come smilee” என்று அவளை அழைத்து கொண்டு முன்னே நடந்தான்.


தன்னை அழைத்து விட்டு முன்னே நடந்தவன், சிறிது நேரத்தில் தன்னை பார்த்து திரும்பி நடந்து வரவும், அவனை கண்டு அதிர்ந்தவள், வந்தது மட்டும் அல்லாமல் சட்டென்று அவன் தன்னுடைய கைகளை பற்றி முன்னே அழைத்து செல்லவும் அவளுக்கு மூளை வேலை நிறுத்தம் செய்ததை போல் அங்கு நடப்பது எதுவும் புரியாதவளாய் அவன் இழுத்த இழுப்பிற்கு அவன் போகும் இடத்திற்கு சென்றாள்.


அவளை அழைத்து கொண்டு சுடிதார் இருக்கும் இடத்திற்கு சென்றவன், “select one dress smilee” என்று கூறினான்.


அவன் கூறுவது எதுவும் மண்டையில் ஏறாதவளாய் அப்படியே நின்றவளை கண்டவன் தான் பிடித்திருந்த அவள் கையில் அழுத்தத்தை கொடுக்கவும், அவனுடைய அழுத்தம் அவளது மூளை உணர்ந்து விட தான் இருக்கும் சூழ்நிலையை உணர்ந்த வைதேகி அதிர்ச்சியிலும் தன்னை யாராவது பார்த்துவிட்டார்களோ என்ற பதட்டம் எல்லாம் சேர்ந்து அஸ்வந்தின் மேல் கோபமாக மாறியது.


மனதை முழுவதுமாக கோபம் அடியில் தள்ளி அங்கு அவளுடைய மூளை அதிவேகமாக வேலை செய்ய அஸ்வந்த்தை பார்த்து கோபமாக முறைத்து கொண்டே, இது கொஞ்சம் கூட நல்லா இல்லங்க. என்னோட பெர்மிஷன் இல்லாம நீங்க என்னய இங்க கூட்டிட்டு வந்ததே தப்பு. இதுல என் கைய வேற பிடிச்சிட்டு இருக்கீங்க விடுங்க என்று வார்த்தைகளை பற்களுக்கு இடையே மற்றவர்களுக்கு கேட்காத வண்ணம் கடித்து துப்பினாள். அவளுடைய வாய் அவனிடம் பேசிக்கொண்டிருந்தாலும் தன்னுடைய கையை அவனுடைய கையிலிருந்து எடுக்க முயற்சித்து கொண்டிருந்தாள். ஆனால் அவனுடைய பிடி இரும்பு பிடியாக இருந்தது.


அஸ்வந்த்திற்கு வைதேகி பேசியது சுத்தமாக புரியவில்லை, அவனுக்கு புரிந்ததெல்லாம் அவள் தன் மேல் கோபமாக இருக்கிறாள் என்பது தான், அவள் கையை விடுவிக்க முயற்சிப்பதை கண்டவன், இதுக்காக தான் இருக்குமோ என்று அவனாக யூகித்து கொண்டு, “sorry sorry smilee… my mistake” என்று அவளுடைய கையை தன்னுடயதிலிருந்தது விடுவித்தவன், “now ok right. Come let’s select one dress for you” என்று அங்கு இவ்வளவு நேரமும் எதுவும் நடக்காததை போல் கூறினான்.


அவன் கூறியதில் கடுப்பானவள் “இவ்வளவு நேரமும் நான் கதையா சொல்லிட்டு இருக்கேன்” என்று தன் மனதில் நினைத்தவள் அவனை முறைத்து விட்டு அங்கிருந்து நகர போனாள்.


அவள் திரும்ப போகவும், அவளை தடுக்க நினைத்தவன் மறந்து அவள் கையை திரும்ப பற்றவும், அவனை கோபத்துடன் திரும்பி பார்த்தவள், அவனுடைய கண்களில் தெரிந்த தவிப்பு அவளை அதே இடத்தில் நிற்க வைத்தது. அன்று ஒரு நாளும் இப்படி தானே நம்மள பார்த்தான், ஆனா ஏன்? அப்படி என்ன என்கிட்டே இருக்கு என்று அவள் மனம் குழம்ப ஆரம்பித்தது. இந்த எண்ணம் அவள் மனதில் உதித்தவுடன் அவளுடைய கோபத்தையெல்லாம் மறந்தவளாய் அவனையே பார்த்து கொண்டு நின்றாள். அங்கே அவளுடைய மூளை சுத்தமாக வேலை செய்யவில்லை. அவள் மனம் மட்டுமே வேலை செய்து கொண்டிருந்தது.


இவ்வளவு தூரம் வந்துவிட்டு அவள் தன்னை விட்டு போக நினைக்கவும் அவனுடைய மனதில் ஏற்பட்ட வலியுடன் அவன் அவளை பார்த்து, “smilee please da don’t leave me. I want you to be here. Atleast take one dress. That’s enough for me today. என்று மனதில் வலியுடனும், கண்களில் சின்ன எதிர்பார்ப்பையும் தேக்கி வைத்து கொண்டு கேட்டான்.


அவனுடைய வார்த்தையில் அவன் மனதின் வழியை உணர்த்தவளுக்கு அவளுள்ளும் சொல்லொண்ணா வலி ஏற்பட்டது. அவளுடைய மனம் முழுவதும் அவனுடன் போ போ என்று கூறுவதை போல் உணர்ந்தவள், மனதின் உந்துதலில் அவனிடம் சரி என்று தலையை ஆட்டினாள்.


அவளின் சரி என்ற வார்த்தையை கேட்டவனுக்கு தன் காதுகளையே அவனால் நம்ப முடியவில்லை அவன் திரும்ப திரும்ப அவளிடம் கேட்டு உறுதி படுத்தி கொள்ளவும் அவனை பார்த்து சிரித்தவள் “hmm” என்று தலையை ஆட்டினாள்.


அதில் மகிழ்ச்சியுற்றவன் “come” என்று சந்தோஷத்தில்… மறந்தவனாய் அவள் கையை திரும்பவும் பற்றி கொண்டு சல்வார் இருக்கும் இடத்திற்கு சென்றான்.


இம்முறை அவனுடைய கை பற்றுதலில் கோபத்திற்கு பதிலாக அவள் உடம்பில் ஒரு சிலிர்ப்பே ஓடியது. அவளுடைய மனம்… கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி இதுக்கு தான் கோப பட்ட என்று அவளை இடித்துரைத்து. வைதேகி தன்னை நினைத்தே சிரித்தவளாய் அவனுடன் இணைந்து சல்வார் செக்ஷனுக்கு சென்றாள்.



என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்...
 
Last edited:

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 11


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


வைதேகியுடன் சல்வார் செக்ஷனிற்கு சென்ற அஸ்வந்த்திற்கு இது நிஜம் என்றே நம்பமுடியவில்லை. அவனுக்கு ஏதோ கனவில் நடப்பதை போல் தோன்றியது. ஒருவேளை இது கனவாதான் இருக்குமோ என்று நினைத்தவன் அங்கிருந்த சல்வாரை பார்க்காமல் வைதேகியையே பார்த்து கொண்டிருந்தான். ஒரு வேல இது கனவுன்னா நம்ம எழுந்ததும் போய்டுவாளோ என்று நினைத்தவன் இமைக்காமல் அவளையே பார்த்து கொண்டிருந்தான்.


அவனுடைய பார்வை இவளை ஏதோ செய்ய அவள் அவன் கண்களை பார்ப்பதை தவிர்த்து கீழே குனிந்து கொண்டாள். அப்படியும் அவன் பார்வை தன்னை விட்டு அகலாமல் இருப்பதை உணர்ந்தவள் “ஏன் இவன் இப்படி பார்க்குறான்” என்று தன் மனதில் தோன்றிய கேள்வியை அஸ்வந்த்திடமே நேரடியாக கேட்டுவிட்டாள்.”ஏன் என்னையவே ஆச்சர்யமா பார்க்குறீங்க?”



வைதேகி ஏதோ தன் மனதில் தோன்றியதை உடனே கேட்டு விட்டாள். ஆனால் அஸ்வந்த்திற்கு புரியவேண்டுமே……



அவனுக்கு சுத்தமாக ஒரு வார்த்தை கூட புரியவில்லை. முன்பாவது ஒரு யூகத்தில் கண்டு பிடித்தான். இப்பொழுது அதற்கும் ஆப்பு வைப்பதை போல் முழுவதும் தமிழில் பேசியதால் சுத்தம்…. ஒன்றுமே அவனுக்கு புரியவில்லை. வைதேகி தன் பதிலுக்காக காத்திருப்பதை கண்டவனுக்கு இவ்வளவு நேரமும் இருந்த மகிழ்ச்சியெல்லாம் வடிந்தவனாய் அவளை பார்த்து “smilee I can’t get you da. English please”.



“ஐயோ இவனுக்கு தமிழ் தெரியாதுன்றதை மறந்துட்டோமே.... இப்ப இவனுக்கு இங்கிலீஷுல எக்ஸ்பிலைன் பண்ணனுமா.... அய்யயோ இந்த வம்பே வேண்டாம்டா சாமி.... இப்ப என்ன பண்றது” என்று தன் மண்டையை குடைந்து யோசித்தவள் எந்த ஒரு ஐடியாவும் தோன்றாதால்... சரி ஒண்ணுமில்லன்னு சொல்லிடுவோம் என்று முடிவெடுத்து அவனை பார்த்தவள், அவனின் ஆர்வமான பார்வையை கண்டு சற்று தயங்கினாள்.



“வைதேகி… ஏன் தேவையில்லாம தயங்குற எப்படியும் நீ இங்கிலிஷ்ல சொல்ல போறது கிடையாது பேசாம நீ யோசிச்சதே சொல்லிடு” என்று தன்னை தானே கூறிக்கொண்டவள் ஒரு முடிவுக்கு வந்து அவனை பார்த்து “nothing” என்று கூறி தலையை ஆட்டினாள்.



அவள் தன்னிடம் ஏதோ கூற போகிறாள் என்று ஆர்வமாக அவளையே பார்த்து கொண்டிருந்தவன். அவள் “nothing” என்று மட்டும் கூறுவதை கேட்டவனின் காதல் கொண்ட மனது சட்டென்று வாடிவிட்டது. அந்த வாட்டம் அவனின் முகத்திலும் பிரதிபலித்தது.



அவனையே பார்த்து கொண்டிருந்த வைதேகிக்கு அவனின் வாட்டம் அவளுக்குள் கவலையை கொடுத்தது. என்னதான் கவலையாக இருந்தாலும் அவள் இங்கிலிஷ் பேச தயாராக இல்லை. அந்த இங்கிலீஷுக்கு இந்த கவலை எவ்வளவோ தேவலை என்று எண்ணியவள் அதன் பிறகு கொஞ்சம் கூட வாயை திறக்கவில்லை.



என்னதான் அஸ்வந்த்திற்கு அவள் கூறாமல் விட்டதில் வருத்தமாக இருந்தாலும் வைதேகியின் நிலையும் அவனுக்கு புரியவே செய்தது.



அவள் இங்கிலிஷ் பேச தயங்கி கொண்டுதான் தான் கூறியதை மறுபடியும் கூறாமல் தவிர்க்கிறாள் என்று அவளின் மனதை சரியாக கணித்தான். ஏனெனில் அவனின் நிலையும் அவளை போன்று தானே இருந்தது.



இதனால் அவனின் மனதில் தான் தமிழ் கற்க வேண்டும் என்ற எண்ணம் இன்னும் ஆழமாக பதிந்தது.



அந்த பேச்சினை அப்படியே விட்டவன் அவளிடம் “its k da. Come… let’s select” என்று சல்வாரில் கவனத்தை செலுத்தினான்.



ஒவ்வொரு சல்வாராக பார்த்து கொண்டே வந்தவனுக்கு அன்று முதன் முதலாய் வைதேகியை பிங்க் கலர் சல்வாரில் பார்த்தது தான் அவனுக்கு ஞாபகம் வந்தது. அந்த அழகிய காட்சி அவன் கண் முன்னாள் படமாக விரிந்தது.



காகித பூக்கள் மலைபோல் பொழிய பிங்க் கலர் சல்வாரில் தேவதை போல் சிரித்து கொண்டிருந்த அவனுடைய ஸ்மைலி கண்முன்னால் தோன்றினாள். அப்பொழுது அவன் மனதில் மொட்டவிழ்ந்த காதல் உணர்வு இப்பொழுது பன்மடங்கு அதிகரிக்க தன் பக்கத்தில் நின்றிருந்த வைதேகியை பார்த்தான். அவளை திரும்பி பார்த்தவனுக்கு சுத்தமாக தன்னுடைய சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை.



ஏனெனில் வைதேகி அங்கு ஹாங்கரில் அழகிய டிசைனில் வடிவமைக்கப்பட்டு தொங்கி கொண்டிருந்த சல்வாரின் அழகினை ரசிக்காமல் அதன் விலை பட்டியலையே மிரட்சியுடன் பார்த்து கொண்டிருந்தாள்.



அவன் சிரித்து கொண்டே அவளிடம் “what are you doing?” என்று கேட்டான். அவன் முகம் முழுவதும் சிரிப்பே நிறைந்திருந்தது.



அவனுடைய சிரிப்பிலேயே தன்னை கண்டு கொண்டான் என்று உணர்ந்தவள், அவனிடம் தயங்கியவாறே “இந்த ட்ரெஸ்ஸோட ப்ரைஸுலாம் (price) ரொம்ப அதிகமா இருக்குங்க. எனக்கு எதுவும் வேண்டாம்” என்று தனக்கு எதுவும் வேண்டாம் என்பதை போல் அவனை பார்த்து தலையை ஆட்டினாள்.



அவள் தனக்கு எதுவும் வேண்டாம் என்று கூறியதில் அவனின் உற்சாகம் லேசாக குறைய, “hey smilee… don’t worry about the price da. Select one dress”. அவன் எவ்வளவோ கூறியும் வைதேகி சல்வாரை தேர்ந்தெடுக்காமல் விலையை பார்த்து தயங்கவும், இவ சரிவர மாட்டா என்று நினைத்தவன், அவளுக்கான ட்ரெஸ்ஸை தானே தேர்ந்தெடுக்க ஆரம்பித்தான்.



ஒவ்வொரு உடையாக அலசிக்கொண்டே வந்தவனுக்கு மெரூன் நிறத்தில் கண்ணை கவரும் வண்ணத்தில் அமைந்திருந்த சல்வார் அவனின் கண்களில் பட்டது. அந்த மெரூன் நிற சல்வாரினை ஹாங்கரில் இருந்து வெளியில் எடுத்து பார்த்தவனுக்கு மெரூன் நிற சல்வாரின் மேல் புறத்தில் கோல்டன் நிறத்தில் பூக்கள் டிசைனை கொண்ட எம்ப்ராயடரியும் அதன் அடியில் கோல்டன் பார்டராலான ஒர்க்கையும் கொண்டு செய்ய பட்டிருந்த அந்த சல்வார் வைதேகிக்காகவே வடிவமைக்க பட்டதை போல் தோன்றியது.



பூ மலையில் அவளை பார்த்தவனுக்கு பூ வடிவத்திலான எம்ப்ராய்டரி செய்ய பட்டிருந்த அந்த சல்வாரினை அவளுக்கு கொடுக்க நினைத்தவன், அவளுக்கென்று அதனை தேர்வு செய்தான்.



அஸ்வந்த் தான் தேர்ந்தெடுத்த மெரூன் நிற சல்வாரினை வைதேகியிடம் காண்பித்து, “do you like it” என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் கேட்டான்.



அஸ்வந்த் தன்னிடம் காட்டிய சல்வாரினை வாங்கி பார்த்தவளுக்கு அவனுடைய செலெக்ஷனை நினைத்து பிரம்மிக்கமால் இருக்க முடியவில்லை. அந்த சுடிதார் அத்தனை அழகாக இருந்தது. அதனுடைய வேலை பாட்டை கண்டு ரசித்து கொண்டிருந்தவளின் கண்ணில் அந்த சல்வாரிற்கான ப்ரைஸ் டேக் கண்ணில் பட்டது.



அதன் விலையை கண்டு அதிர்ந்தவள், தன் கைகளில் இருந்த சல்வாரினை அது இருந்த இடத்திலேயே மாட்டினாள்.



வைதேகியின் முகத்தில் தோன்றிய ஒவ்வொரு பாவத்தையும் பார்த்து ரசித்து கொண்டிருந்தவன், கடைசில் அவள் அதனுடைய விலையை பார்த்து அதிர்ந்து முன்பு இருந்த இடத்திலேயே சல்வாரை திரும்ப வைக்கவும் அவனுக்கு ஹய்யோ என்று ஆகிவிட்டது.



அந்த ஹாங்கரில் இருந்து திரும்ப சல்வாரை எடுத்தவன் வைதேகியிடம், “smilee don’t worry about the price da. I know you like this dress. This is my gift. So please take it”



அவன் எவ்வளவோ கூறியும் வைதேகி எதற்கும் அசைந்து கொடுத்தாள் இல்லை. தான் இத்தனை சொல்லியும் அவள் மறுத்ததால்… முதன் முதலாக அவளுக்கு என்று தான் வாங்கிக்கொடுப்பதை மறுக்கிறாளே என்று அவன் மனம் வருத்தம் கொண்டது. அவன் தன்னை தானே தேற்றி கொள்பவனாய், “hey aswanth don’t worry da. Before she leave from phoenix mall, you will surely give this to her. So cheer up man” என்று கூறிக்கொண்டவன் சல்வாரினை பில் போட்டு தன்னுடனே வைத்து கொண்டான்.



தான் எவ்வளவோ மறுத்தும் அஸ்வந்த் அந்த சல்வாரினை வாங்கியதில் வைதேகிக்கு அவன் மேல் கோபம் கோபமாக வந்தது. இவன்கிட்ட இருந்து சல்வார் வாங்கவே கூடாது. இவன் எப்படி என்கிட்டே குடுக்கறான்னு நானும் பார்க்கிறேன் என்று மனதிற்குள் முடிவெடுத்தவளாய் எதுவும் வெளியில் காட்டி கொள்ளாமல் அவனுடன் சென்றாள்.



மத்திய உணவு நேரமும் வந்தது, தன்னுடைய மொபைலில் இருந்து சொப்னாவுக்கு அழைத்தவன், “hey bubbly… where are you?”



“Hey asu. Now I’m in second floor da. We both finished our shopping. Where are you both?”



“Oh that’s good. I’m in third floor only. It’s already 1 ‘o’ clock. Food court is here. Come… let’s have our lunch”.



“K…k...Wait for me. I will be there in five minutes” என்று கூறிவிட்டு போனை வைத்தவள், சுவேதாவிடம், “there are in food court. Asu said, it’s in third floor. Do you know that place?”



இந்த இரண்டு மணி நேரத்தில் அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உருவாகி இருந்தது. சொப்னா வாய் ஓயாமல் அஸ்வந்தின் புராணம் தான் பாடிக்கொண்டிருந்தாள். அவள் பேசியதிலேயே அவர்கள் இருவருக்குள்ளும் சகோதர பாசம் இழையோடுவதை சுவேதா கண்டு கொண்டாள்.



சுவேதாவும் சொப்னாவும் பேசுவதுற்கு தடையாக இருந்ததே அந்த விஷயம் தானே. இப்பொழுது அதுவும் தெளிவாகிவிடவும் சுவேதாவிற்கு அவளிடம் நட்பு பாராட்டுவதில் எந்த ஒரு ஆட்சேபணையும் இருக்கவில்லை.



“Ya I know sopnaa. I will take you”.



இருவரும் பேசிக்கொண்டே புட் கோர்ட்டை அடைந்தனர். அங்கே அஸ்வந்த்தும் வைதேகியும் அங்கே போட பட்டிருந்த டேபிள் ஒன்றில் அமர்ந்திருந்தனர்.



அங்கு அமர்ந்திருந்த அஸ்வந்தின் பார்வை முழுவதும் வைதேகியை சுற்றி சுற்றி வந்தது. வைதேகி அதை கவனிக்காதவளாய் சுவேதா வருகிறாளா என்று வழியையே பார்த்து கொண்டிருந்தாள்.



தூரத்திலிருந்தே அஸ்வந்த்தையும், வைதேகியையும் கண்டு விட்ட சொப்னா, “hey there he is” என்று சுவேதாவிடம் கூறியவள், அவளை அழைத்து கொண்டு அவர்கள் இருவரும் அமர்ந்திருந்த டேபிளுக்கு சென்றாள்.



அவர்கள் அமர்ந்திருந்த டேபிளை அடைந்துவிட்ட சொப்னா அஸ்வந்தின் பக்கத்தில் இருந்த சேரை இழுத்து அதில் அமர்ந்தவள், நன்றாக அஸ்வந்தின் புறமாக திரும்பி அமர்ந்து கொண்டு, “hey asu what things did you buy? Show me?”



வைதேகியையே பார்த்து கொண்டிருந்தவனுக்கு அங்கே சொப்னா தன்னை நோக்கி வருவதெல்லாம் அவனுக்கு தெரியவில்லை. அவன் கவனம் எல்லாம் தன்னுடன் அமர்ந்திருந்த ஸ்மைலீயிடமே இருந்தது. திடிரென்று தன் பக்கத்தில் இருந்த சேரில் யாரோ அமரவும் தான் சுற்று புறம் உணர்ந்து வைதேகியிடம் இருந்து பார்வையை திருப்பி பார்த்தவன், அப்பொழுது தான் அங்கு தன் பக்கத்தில் அமர்ந்திருந்த சொப்னாவை கண்டான்.



“Hey bubbly. When did you came?”



இவனுக்கு நேர் எதிரேதான நடந்து வந்தேன். அப்ப இவன் நம்மள பார்க்கவே இல்லையா… என்று மனதினுள் நினைத்தவள், சட்டென்று ஏதோ புரிந்தவளாய்.... சிரித்து கொண்டே அவனுடைய காதினில் ரகசியம் பேசுவதை போல் சென்றவள் அவனிடம், “your heroine is here na. Then how am I visible to you?”



இவர்கள் இங்கே பேசிக்கொண்டிருக்க அங்கே வைதேகியோ சுவேதாவிடம் தன்னை தனியாக விட்டுவிட்டு சென்றதற்காக சண்டை போட்டு கொண்டிருந்தவள் அவனை எதேர்ச்சியாக திரும்பி பார்க்க அங்கே சொப்னா அவனை நெருங்கி காதில் ஏதோ ரகசியம் பேசவும், அவள் சுவேதாவிடம் சண்டை போடுவதை நிறுத்திவிட்டு சொப்னாவை அக்னி பார்வை பார்த்து கொண்டிருந்தாள்.



இதையெல்லாம் தனக்கு தெரிந்து தான் செய்கிறாளா என்றால் அது தான் இல்லை. அவள் மனம் எப்படி செல்கின்றதோ அதனுடன் இவளும் பயணித்தாள். தன் மனதை பற்றி அவள் ஆராய முனையவில்லை.



ஆனால் வைதேகியையே பார்த்து கொண்டிருந்த சுவேதாவிற்கு, அவளின் மனநிலை தெள்ள தெளிவாக விளங்கியது. அவளுக்கு அஸ்வந்தின் மேல் காதல் வந்துவிட்டது என்றும் அதனால் எழுந்த பொறாமை உணர்வு தான் அவள் சொப்னாவை முறைப்பது என்றும் புரிந்து கொண்டாள்.



காதல் வந்தாலே இந்த பொசசிவ்னெஸ்ஸும் சேர்ந்து வந்து விடுகிறது என்று மனதினுள் நினைத்து கொண்டாள்.



ஆனால் என்ன முயன்றும் அவளால் தன் அடி மனதில் எழும் கலக்கத்தை தடுக்க முடியவில்லை. சொப்னா கூறியதை பார்த்தால் அஸ்வந்த் நல்ல வசதியானவன் போல் தெரிந்தது. அவர்கள் வீட்டில் ஒத்துக்கொள்வார்களா என்று தான் கலக்கமாக இருந்தது. சரி இந்த விஷயத்தை கடவுள் கிட்டயே விட்ருவோம். அவர் பார்த்துக்குவாரு என்று முடிவெடுத்தவளாய் தன் கலக்கத்தை தற்போதைக்கு ஒத்தி வைத்தாள்.



சொப்னா தன் காதில் கூறியதை கேட்டு வைதேகியை திரும்பி பார்த்தவன்,



அவள் சொப்னாவையே முறைத்து கொண்டு இருக்கவும், “இவ ஏன் இப்படி முறைச்சு பார்த்துக்குட்டு இருக்கா” என்று சிறிது குழம்பியவனுக்கு அவளின் முறைப்பின் காரணம் புரியவும், “மேடம் மட்டும் தான் நம்ம மேல உரிமை எடுத்துக்கணுமாம், வேற யாரும் அப்படி பேசக்கூடாதாம்… என் ஸ்மைலீக்கு வர கோபத்த பாரு” என்று மனத்தினுள்ளே சிரித்தவன்... அவள் தன்னை பார்க்கவும் சிரித்து கொண்டே யாரும் அறியா வண்ணம் அவளை பார்த்து தன் கண்களை சிமிட்டினான்.



திடிரென்று அவன் கண்சிமிட்டவும்…அவனுடைய கண்சிமிட்டல் உள்ளுக்குள் ஒரு வித படபடப்பை ஏற்படுத்த இமைகள் படபடக்க தலையை குனிந்து கொண்டாள்.



அவளுடைய மனம், இந்த ஒரு பழக்கத்தை புடிச்சு வச்சிருக்கான். அவுன்னா கண்ண சிமிட்டிட வேண்டியது என்று அவனை செல்லமாக திட்டியவளுக்கு, அன்று முதன் முதலில் காலேஜ் மெஸ்ஸில் தன்னை பார்த்து கண் சிமிட்டியது தான் ஞாபகத்திற்கு வந்தது. அதை நினைத்தவுடன் அவளுடைய இதயம் இன்னும் வேகமாக படபடத்தது.



அவளுடைய செய்கையை ரசித்து கொண்டிருந்த அஸ்வந்த்திற்கு அப்பொழுது தான் சொப்னா தன்னிடம் ஏதோ கேட்டது ஞாபகம் வர, சொப்னாவிடம் திரும்பி, “you are asking something na. What’s that?”



அவனை பார்த்து கிண்டலாக சிரித்தவள், “nothing da asu. It is not that much important. So continue your job”.



அவளுடைய கிண்டலில் அசடு வழிந்தவன். “Sorry” என்று கூறினான்.



“Hey sorry for what? I’m just kidding da… I’m asking about your shopping only. That’s it. Nothing much”.



அவள்… தான் என்ன வாங்கினேன் என்று கேட்டதில் அவனுடைய கண்கள் வைதேகியையும், தன்னுடைய கைகளில் இருந்த கவரையும் பார்த்தது.



அவனுடைய பார்வை பயணித்த திசைகளை பார்த்த சொப்னாவிற்கு அஸ்வந்த் வைதேகிக்காக தான் தன் கையில் எதையோ வாங்கி வைத்திருக்கிறான் என்று புரிந்தது. அப்படி என்ன வாங்கினான் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில், “give me that cover” என்று அவனிடம் இருந்து கவரை வாங்கி பிரித்தவளுக்கு அதில் இருந்த மெரூன் நிற சல்வாரினை கண்டவள்,”hey it’s really super da asu. It’s perfectly fit for her. I knew it. Your selection won’t miss. But why didn’t you give this to her? Why are you keeping with yours? “என்று அடுக்கடுக்காக அவனிடம் கேள்வியை கேட்டாள்.



அந்த கொடுமையை அவன் எப்படி சொல்லுவான், அதுவும் இங்கவச்சும் அத சொல்ல முடியாது என்று நினைத்தவன்”I will tell you later bubbly. K...let’s have our lunch” என்று பேச்சை மாற்றி உணவில் கவனத்தை செலுத்தினான்.



அனைவரும் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப புட் கோர்ட்டில் உணவினை வாங்கி வந்து தங்கள் இருக்கையில் அமர்ந்தனர்.



சுவேதாவும், சொப்னாவும் தங்களுடைய உணவுகளை ஷேர் பண்ணி சாப்பிட்டனர். வைதேகியிடம் கேட்டதற்கு அவள் வேண்டாம் என்று மறுத்துவிட்டதால் அவர்கள் அவளை தொந்தரவு செய்யவில்லை.



அஸ்வந்த் தன்னுடைய உணவில் கவனம் செலுத்தாமல் வைதேகியையே ஏதோ யோசனையுடன் பார்த்து கொண்டிருந்தான். வாங்கிய உணவு அப்படியே இருந்தது. அதனை அவன் தொட்டுக்கூட பார்க்காமல் எதையோ தீவிரமாக யோசித்து கொண்டிருந்தான். அவனுடைய பார்வை அடிக்கடி சொப்னாவையும், சுவேதாவையும் பார்த்து பார்த்து மீண்டது.



வைதேகி எதையும் கண்டுக்கொண்டாள் இல்லை. அவளுக்கு எப்பொழுதடா இங்கிருந்து போவோம் என்றிருந்தது. ஏனெனில் அவளுடைய மனநிலை அவளுக்கே சரிவர புரியவில்லை. தனக்கு என்ன தான் வேண்டும் என்று யோசிக்க அவளுக்கு தனிமை தேவைப்பட்டது. இந்த குழப்பத்தில் அவள் யாரையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.



சிறிது நேரம் தனக்குள்ளேயே யோசித்து கொண்டிருந்த அஸ்வந்த் ஒரு முடிவுக்கு வந்தவனாய் தன் உணவை கையில் எடுத்தான். தன் உணவில் பாதியை வைதேகியின் பிலேட்டில் எடுத்து வைத்தவன். அதன் பிறகு எதுவும் நடக்காததை போல் தன் இடத்தில் அமர்ந்து மீதம் இருந்த உணவை உண்ண ஆரம்பித்தான்.



அஸ்வந்த் தன்னுடைய இடத்தில் இருந்து எழுந்தவுடன் என்ன ஆச்சு என்று திரும்பி பார்த்த சொப்னாவிற்கும், சுவேதாவிற்கும் அஸ்வந்த் தன்னுடைய உணவில் இருந்து பாதியை வைதேகிக்கு எடுத்து வைப்பதை கண்டவர்கள்… ஒருவர் மற்றவரை பார்த்து அர்த்த புன்னகை புரிந்து கொண்டனர்.



அந்தோ பரிதாபம் வைதேகியின் நிலை தான் பாவமாக இருந்தது. அஸ்வந்த்திடம் கோபத்தை காட்ட நினைத்தால் அவனோ அப்படியொரு விஷயமே நடக்கவில்லை என்பதை போல் தனது உணவை உண்டு கொண்டிருந்தான்.




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்......
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 12


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

அஸ்வந்த் உணவை ஏதோ ஒரு தைரியத்தில் வைதேகியின் பிலேட்டில் எடுத்து வைத்து விட்டான். ஆனால் அவனுக்கு ஒவ்வொரு நிமிடமும் என்ன நடக்குமோ, வைதேகி எப்படி ரியாக்ட் பண்ணுவாளோ என்று திகிலாகவே இருந்தது. அவனுக்கு மீதம் இருந்த உணவு சுத்தமாக தொண்டையில் இறங்கவில்லை. எங்கே வைதேகியை பார்த்தால் ஏதாவது சொல்லிவிடுவாளோ என்று பயந்தவன் அவளை நிமிர்ந்தே பார்க்காமல், உணவில் கண்ணாக இருப்பதை போல் பாவ்லா செய்து கொண்டிருந்தான். தான் நிமிராவிட்டாலும் அவனுடைய கண்கள் கீழ் வழியாக வைதேகியின் பிலேட்டயே பார்த்து கொண்டிருந்தது.



அஸ்வந்த் இப்படி செய்வான் என்று வைதேகி நினைத்து கூட பார்க்கவில்லை. அஸ்வந்த்தை கோபமாக கத்தலாம் என்று நிமிர்ந்து பார்த்தால் அவன் இவளை கண்டுக்கொண்டான் இல்லை. அப்படி ஒரு காரியமே நடக்க வில்லை என்பதை போல் உணவை உண்டு கொண்டிருந்தான். அஸ்வந்த்தை எதுவும் சொல்ல முடியாத கடுப்பில் சுவேதாவை திரும்பி பார்த்தவளுக்கு அவளும் அஸ்வந்த்தை போல் இருக்கவும், அவளுடைய எல்லா கோபமும் சுவேதாவின் மேல் திரும்பியது. எல்லாம் இவளால வந்தது. அப்பவே நான் வரலன்னு சொன்னேன். இவ கேட்டாளா ஏதேதோ டயலாக் பேசி என்னைய கூட்டிட்டு வந்துட்டா. அது மட்டுமா நடந்துச்சு... கொஞ்ச நேரத்திற்கு முன்னாடி என்னனா என்னைய இவன் கிட்ட தனியா விட்டுட்டு வேற போய்ட்டா, இப்போ இவன் என்னனா என் பிலேட்டுல உரிமையா சாப்பாட்ட வேற எடுத்து வைக்கிறான். இவ என்னடானா யாருக்கு வந்த விருந்தோன்னு யாரு அவ... ஹான்... பப்ளியாம் பப்ளி அவகூட சிரிச்சு பேசிகிட்டு சாப்டுட்டு இருக்கா.



வைதேகி ரொம்ப நேரமாக உணவை உண்ணாமல் அப்படியே இருப்பதை கண்ட அஸ்வந்த்துக்கு, “டேய் உனக்கு ஏன் டா இந்த வேண்டாத வேல, நீ அவளுக்காக வாங்கின ட்ரெஸ்ஸே இன்னும் உ ன் கைல தான் இருக்கு. அதவே எப்படி குடுக்க போறேன்னு தெரியல. இதுல புதுசா ஒரு பிரச்னையை இழுத்து விட்டுட்டு உட்கார்ந்துருக்க. பாவம் டா அவ, எவ்ளோதான் சமாளிப்பா அவளுக்கு கொஞ்சமாவது யோசிக்க டைம் குடுடா” என்று அவனது மனசாட்சி அவனை கடிந்து கொண்டிருந்தது. “ஐயோ அவசர பட்டுட்டோமோ” என்று வருந்தி கொண்டிருந்தான். “செய்றதலான் செஞ்சிட்டு இப்ப பீல் பண்ணா மட்டும் எல்லாம் சரி ஆகிடுமா என்ன” என்று அவனுடைய மனசாட்சி அவனை திரும்பவும் கடிந்தது. அவனுடைய மனசாட்சிக்கே அவனால் பதில் சொல்ல முடியவில்லை. அவளுடைய அமைதி, அவனுக்கு வைதேகி இரண்டு வார்த்தை திட்டினாள் கூட பரவா இல்லை என்று தோன்றியது.



இவன் இப்படி இங்கே குழம்பி கொண்டிருக்க, அந்த புறம் சொப்னாவும், சுவேதாவும்... வைதேகியுடைய ரியாக்ஷன் என்னவாக இருக்கும் என்று காத்து கொண்டிருந்தனர்.



வைதேகி இப்பொழுது என்ன செய்வது என்று தெரியாமல் சிறிது நேரம் திணறியவள், ஒரு முடிவெடுத்தவளாய், யாரோ செய்த தவறிற்கு நாம் ஏன் அன்னபூரணியை வீணாக்க வேண்டும் என்று முடிவெடுத்தவள், அஸ்வந்த் தன் பிலேட்டில் வைத்த உணவினை சாப்பிட ஆரம்பித்தாள். அவளுக்கு மற்றவர்கள் உணவை வீணாக்கினாலே பிடிக்காது. அவர்களிடம் சென்று எத்தனை பேர் இந்த உணவு கூட கிடைக்காமல் கஷ்ட படுகிறார்கள் தெரியுமா என்று கூறுவாள், அப்படி இருப்பவள் தன்னுடைய பிலேட்டில் இருக்கும் உணவை வீணாக்குவாளா என்ன?



இதனை கண்ட சுவேதாவிற்கும், சொப்னாவுக்கும் மிகவும் மகிழ்ச்சி, அவர்கள் என்னவோ வைதேகிக்கு அஸ்வந்த்தை மிகவும் பிடித்திருக்கிறது என்று நினைத்து மகிழ்ந்தனர். ஆனால் அவர்களுக்கு தெரியாதே வைதேகி எதனால் உணவை உண்ணுகிறாள் என்று.



சுவேதாவிற்கு இன்னொரு அதிர்ச்சியான விஷயமும் காத்திருந்தது.



ஆம். அது… இனிமேல் சுவேதா எங்கு வெளியில் கூப்பிட்டாலும் அவளுடன் செல்லக்கூடாது என்று வைதேகி முடிவெடுத்திருந்தாள். அவளுக்கு அஸ்வந்த்தின் மேல் இருந்த கோபத்தை விட சுவேதாவின் மேல் தான் இப்பொழுது அதிகமாக திரும்பியிருந்தது. "அவள் எப்படி தன்னை நம்பி வந்த ஒருத்தியை தனியாக விட்டு விட்டு செல்லலாம்" என்பதில் வந்த கோபம் அது.



வைதேகிக்கே அவளுடைய மனநிலை சரிவர புரியாத போது, அவளுக்கு எங்கே சுவேதா என்ன நினைத்து அவனுடன் அனுப்பி வைத்தாள் என்பது புரிய போகிறது?



வைதேகியின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்று உள்ளுக்குள்ளேயே பயந்து கொண்டிருந்த அஸ்வந்த்திற்கு, வைதேகி எதுவும் சொல்லாமல் தான் வைத்த உணவை உண்ணவும் அவனுக்கு அத்தனை சந்தோசமாக இருந்தது. அவனுடைய மகிழ்ச்சியை சொல்ல வார்த்தைகளே இல்லை.



என்னதான் ஒருபுறம் மகிழ்ச்சியாக இருந்தாலும், அவனுடைய மனம்…. தான் பண்ணியது தவறு, அவளுடைய பெர்மிஷன் இல்லாமல் தான் அவளுடைய பிலேட்டில் உணவை வைத்தது சரியில்லை என்று உணர்ந்தே இருந்தது. அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நினைத்து கொண்டான்.



ஒருவழியாக அனைவரும் உணவை உண்டு விட்டு கை கழுவ சென்றனர்.



அனைவரும் கை கழுவுவதற்காக எழுந்து சென்றனர். சொப்னாவும், சுவேதாவும் முன்னே நடந்தனர். வைதேகிக்கு யாரிடமும் பேச பிடிக்கவில்லை அவள் அவர்கள் பின்னாடி தனியாக நடந்து வந்தாள்.



வைதேகியின் பின்னாடியே வந்த அஸ்வந்த்திற்கு அவளுடைய மனநிலை நன்றாக புரிந்தது. தான் செய்தது அவளை மிகவும் ஹுர்ட் செய்திருக்கிறது என்று உணர்ந்தே இருந்தான். அவனுடைய மனம் அவளிடம் எப்படியாவது மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துடித்து கொண்டிருந்தது.



நேராக சொப்னாவிடம் சென்று தனக்காக கீழே வெயிட் பண்ணுமாறு கூறியவன், சுவேதாவையும் அவளுடன் அழைத்து செல்லுமாறு கூறினான். சுவேதா திரும்பி வைதேகியை பார்த்ததற்கு “I take care of her” என்று கூறினான். சுவேதா அப்பொழுதும் தயங்குவதை கண்டவன் “please sister I want to talk to her. She was upset because of me. So please” என்று அவளிடம் மறுபடியும் கூறினான்.



அவனுக்கு ஏன் சுவேதாவிடம் நாம் ப்ளீஸ் பண்ண வேண்டும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. அவனுடைய மனம் முழுவதும் வைதேகியை எப்படியாவது சரி செய்ய வேண்டும் என்றே நினைத்து கொண்டிருந்தது. அவனுடைய மனம் என்னுடைய ஸ்மைலி எப்பொழுதும் சிரித்து கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றியது. இப்பொழுது அவள் முகத்தில் இருக்கும் வருத்தம் என்னால் தானே ஏற்பட்டது. அதை நானே சரி செய்கிறேன் என்று முடிவெடுத்தவனாய் கை கழுவி வந்தவளை வழியிலேயே மறித்தான்.



தன்னுடைய நினைவிலேயே உழன்றுகொண்டு நடந்தவளுக்கு தன்னுடைய வழியை யாரோ மறைக்கவும் நிமிர்ந்து பார்த்தாள். அங்கே அஸ்வந்த் நிற்கவும், அவளுடைய மனதில் இன்னும் என்னைய விடலையா. இன்னும் செய்ரதுக்கு என்னதான்யா இருக்கு என்று தோன்ற, அந்த உணர்வை கண்களில் தேக்கியவளாய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



தன்னுடைய விருப்பத்தை பற்றி யோசிக்காமல் அவர்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப தன்னை வலைப்பதில் அவளுக்கு சோர்வாக இருந்தது. அவளுடைய மனம் இன்று மிகவும் பாரமாக இருப்பதை போல் தோன்றியது. இப்பொழுது மறுபடியும் அஸ்வந்த் தன் முன்னாள் வந்து நிற்கவும், இன்னைக்கு இன்னும் நான் என்னவெல்லாம் பார்க்கணுமோ தெரியலையே என்று சோர்வுற்றது.



அவள் ஒருவித வலியுடன் அவனை பார்த்து கொண்டு நின்றாள். அவளுடைய வலியை கண்களில் பார்த்தவனுக்கு தன்னுடைய மனதினில் சுருக்கென்று வழியேற்படுவதை உணர்ந்தான்.



அவனுக்கு தன்னுடைய ஆசைகளை அவளின் விருப்பம் இல்லாமல் அவளிடம் திணித்தது தவறு என்று புரிந்து கொண்டான்.



காலம் கடந்த ஞானோதயம் என்ன செய்வது. அவன் ஒன்றை புரிந்தே இருந்தான். அது... அவள் மனதில் தான் இருக்கிறோம். ஆனால் அதை அவள் உணரவில்லை என்பதை. அவன் செய்த தவறு அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தாமல் தன் ஆசைகளை அவளிடம் திணித்தது தான். ஒருவேளை பொறுமையாக செய்திருந்தால் ஏற்றிருப்பாளோ என்னவோ. ஒரே நாளில் இத்தனையும் திணித்தது தான் தவறாகி போய் விட்டது.



அவளுடைய வலிகளை தன் வலிகளாய் உணர்ந்தவனாய், “I’m sorry da smilee”.



அவன் அந்த வார்த்தைகளை உபயோகிக்கும் பொழுது அவன் கண்களில் அத்தனை வலி தெரிந்தது.



அவன் எவ்வளவு வருந்துகிறான் என்பது அவனுடைய கண்களிலேயே அவளுக்கு புரிந்தது. தன்னை விட அவன் அதிகமான வலியை உணர்கிறான் என்பதை புரிந்தவளுக்கு அவள் மனதை யாரோ கசக்கி பிழிவதை போல் உணர்ந்தாள். அவளால் அவன் படும் துன்பத்தை தாங்க முடியவில்லை அவளுடைய கண்களில் நீர் துளிர்க்க ஆரம்பித்தது.



இரு மனதாய் தடுமாறி கொண்டிருந்தவளுக்கு அந்த நொடி அவன் மேல் தான் கொண்ட காதல் புரிந்தது. அறிந்தவளுக்கு இன்னும் கண்ணீர் தான் அதிகமானது.



அவளுடைய வலியை கண்டு எப்படி சமாதான படுத்துவது என்று வருந்தி கொண்டிருந்தவனுக்கு அவள் கண்களில் கண்ணீர் துளிர்க்கவும் பதறியவன், “hey smilee so so sorry da. I’m such a stupid. I hurt my girl” என்று அவன் தன்னையே திட்டி கொண்டு அவளை சமாதான படுத்த முயன்றான்.



ஆனால் வைதேகியினுடைய அழுகை சமாதானம் ஆவதற்கு பதிலாக இன்னும் அதிகரிக்கவும், அவனால் அவள் படும் துன்பத்தை தாங்க முடியவில்லை சிறிதும் யோசிக்காமல் அவளை இழுத்து அணைத்தான். அவளை இறுக்கி பிடித்திருந்த விதமே அவளுக்கு அவனுடைய வலியை உணர்த்தியது.



“Hey smilee… I’m so sorry da. Please… don’t cry. Oh god what am I going to do. I hurt my girl’s heart very badly. I don’t know what to say other than sorry” என்று திரும்ப திரும்ப மன்னிப்பையே அவளிடம் வேண்டினான். அவனுடைய ஒரு மனம் தன்னை விட்டு சென்று விடுவாளோ என்று அஞ்சியது.



எதை எதையோ நினைத்து அழுதவளுக்கு, தன் அழுகை நின்றவுடன் தான் அவனுடைய அணைப்பினில் தான் இருப்பதை உணர்த்தவளுக்கு ஒரு வித பதட்டமும், அதனை மீறிய சிலிர்ப்பும், வெட்கமும் ஏற்பட்டது. அவனிடம் இருந்து விலக நினைத்தவளுக்கு அவன் வாய் ஓயாமல் தன்னிடம் மன்னிப்பை வேண்டியபடி அவளை தன்னுடைய இரு கரங்களின் அணைப்பால் இறுக்கி பிடித்திருக்கவும், அவளுக்கு தேவையில்லாமல் நம்ம குழம்பி இவனை வருத்திட்டோமே என்றே தோன்றியது.



அவனுடைய அணைப்பில் இருந்து கஷ்டப்பட்டு வெளியில் வந்தவளுக்கு அவனை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இல்லை. அவனை எப்படி பார்ப்பது என்று திணறி கொண்டிருந்தாள்.



வைதேகி தன்னுடைய அணைப்பை விளக்கவும், அவளுக்கு இன்னும் தன் மேல் இருக்கும் கோபம் போகவில்லை என்று தவறாக நினைத்தவன் “I’m very sorry da smilee. Everything happens because of me” என்று திரும்பவும் வலியுடன் கூறினான். ஏனெனில் அவனுக்கு வைதேகி என்ன நினைக்கிறாள் என்று சுத்தமாக தெரியவில்லை. அவள் பூமியில் புதைந்து விடுபவள் போல் தலையை குனிந்து கொண்டிருந்தாள்.



அஸ்வந்த் மிகுந்த வலியுடன் தன்னிடம் திரும்ப மன்னிப்பு கேட்கவும், அதனை தாங்கி கொள்ள முடியாதவளாய் தன் கை கொண்டு அவன் இதழ்களை மூடினாள்.



அவள் தன் கை கொண்டு அவனுடைய இதழ்களை மூடவும், ஆச்சர்யம் அடைந்த அஸ்வந்த் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனுடைய பார்வை அவளை ஏதோ செய்ய தன்னுடைய கையை அவனிடம் இருந்து வேகமாக எடுத்தவள் தன்னுடைய கன்னங்கள் சிவக்க தலையை குனிந்து கொண்டாள்.



அவளுடைய எண்ணவோட்டத்தை புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறியவன், “smilee” என்று கூறிக்கொண்டே தன்னுடைய வலது கையால் அவளுடைய முகத்தை தன்னை நோக்கி நிமிர்த்த முயற்சிதான். அவனுடைய செய்கைக்கு உடன் படாமல் அவள் இன்னும் தன் தலையை குனிந்து கொள்ளவும், “smilee please” என்று கெஞ்சியவன் திரும்பவும் அவளுடைய முகத்தை நிமிர்த்த முயற்சித்தான். அவனுக்கு அவள் மனதில் என்ன நினைக்கிறாள் என்பதை தெரிந்து கொள்ளா விடில் மண்டையே வெடித்துவிடும் போல் இருந்தது.



அவனுடைய ப்ளீஸ் அவளை ஏதோ செய்ய தன்னுடைய முகமெல்லாம் வெட்கத்துடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.



அவளுடைய வெட்கம் அவனுக்கு எதையோ உணர்த்த அதை நம்ப முடியாதவனாய் அவளை பார்த்து “do you love me” என்று நேரடியாக கேட்டான். அவனுடைய கேள்வியில் இன்னும் முகமெல்லாம் குப்பென்று சிவந்துவிட அவனுடைய பார்வையை தவிர்த்து தலையை குனிய போனாள்.



அவளுடைய செய்கையை தடுத்தவன், அவளின் பதிலை எதிர் பார்க்காமல், “I love you smilee” என்று தன் மனதை அவளிடம் கூறினான்.



அவன் கூறிய வார்த்தைகளின் உணர்ச்சியை தாங்க முடியாதவளாய் அவள் கண்ணில் மீண்டும் கண்ணீர் துளிர்க்க, அதனை கண்டு பதறியவன், “please don’t cry smilee. Hereafter I won’t hurt you. I’m sorry for all” என்று கூறி வருத்தப்படவும்…. அவனுடைய கைகளை அழுத்திய வைதேகி வேண்டாம் என்பதை போல் தலையை ஆட்டினாள்.



அவள் தன்னை புரிந்து கொண்டாள் என்பதில் மகிழ்ந்தவன் அவளை பார்த்து தலையை ஆட்டி சிரித்தான்.



அவனுடைய சிரிப்பு அவளையும் தொற்றி கொள்ள அவள் தன் கன்னம் குழிவில சிரித்தாள்.



அவளுடைய சிரிப்பை கண்டவனுக்கு அவனுடைய மனதில் "என்னை சிரிப்பால் சிதைத்தவளே" என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.



அதன் பிறகு தன்னுடைய கையில் அவளுக்காக வாங்கி வைத்திருந்த சல்வாரினை கொடுத்தான். அவளும் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று கொண்டாள்.



இருவரும் இணைந்து மகிழ்ச்சியான மனநிலையுடன் சொப்னாவையும், சுவேதாவையும் தேடி சென்றனர்.



அங்கே வெளியில் காத்து கொண்டிருந்த சொப்னாவிற்கும், சுவேதாவிற்கும் ஒவ்வொரு நிமிடம் கடப்பதும் ஒரு யுகம் போல் தோன்றியது. அவர்கள் இருவரும் உள்ளே என்ன நடக்கிறதோ என்பதை தெரியாமல் தவித்து கொண்டிருந்தனர். ஏனெனில் அஸ்வந்த் போகும்போது “வைதேகி அப்செட்டாக இருக்கிறாள்” என்று கூறியதில் கவலையுற்றிருந்தனர்.



சுவேதாவோ “ஒருவேளை தன்னால் தான் வைதேகி இப்படி இருக்கிறாளோ. தான் ஏதாவது அவளின் மனம் வருந்தும் படி நடந்து விட்டோமோ” என்று கவலை பட்டு கொண்டிருந்தாள்.



அஸ்வந்த்தும், வைதேகியும் அங்கே சிரித்த முகமாய் அவர்களை தேடி நடந்து வரவும் தான் அவர்களுக்கு போன நிம்மதி திரும்ப வந்தது.



“சரி என்ன நடந்தது என்று பிறகு கேட்டு கொள்வோம்” என்று இருவரும் முடிவெடுத்தவர்களாய் ஒருவருக்கொருவர் “bye” சொல்லிவிட்டு கிளம்பினர்.



அஸ்வந்த் வைதேகியிடம் தான் கிளம்புவதாக தலை அசைத்துவிட்டு அவன் கார் பார்க் பண்ணி வைத்திருக்கிற இடத்தை நோக்கி சென்றான்.



வைதேகியும் அதனை ஏற்றவளாய் அவனை பார்த்து சிறு புன்னகை ஒன்றை உதிர்த்துவிட்டு சுவேதாவுடன் புறப்பட்டாள்.



சொப்னா அஸ்வந்த்திடம் அனைத்தையும் வீட்டில் போய் பேசிக்கொள்ளலாம் என்று முடிவெடுத்தவளாய் காரில் எதுவும் பேசாதவளாய் அமைதியாக வந்தாள்.



அவளை ஓரிரு முறை திரும்பி பார்த்த அஸ்வந்த் அவளை தொந்தரவு செய்ய விரும்பாமல் உதட்டில் புன்னகை உறைய காரை ஒட்டிக் கொண்டிருந்தான்.



சொப்னா வீட்டிற்குள் நுழைந்த நிமிடமில்லாமல் அஸ்வந்த்தின் கைகளை தயக்கத்துடன் பற்றியவள், “Are you happy? or Anything serious?” என்று கேட்டாள்.



அவளுடைய கேள்வியில் அவளை தூக்கி சுற்றியவன், அவள் கத்தவும் தான் அவளை கீழே இறக்கி விட்டவன், “thanks… thanks… thank you so much da bubbly. Everything happens because of you only” என்று அவளை கட்டி கொண்டு சந்தோஷத்தில் குதித்தான்.



“Hey hey relax man. Tell me from the beginning. What happened today? Why are you so happy?” என்று அவனுடைய சந்தோஷத்தில் அவளும் மகிழ்ந்தவளாய் என்ன நடந்ததென்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் கேள்விகளை தொடுத்தாள்.



அஸ்வந்தின் கத்தலில் ஹாலிற்கு வந்த அனைவரின் கண்களிலும் அஸ்வந்த் சுவேதாவை தூக்கி சுற்றிக்கொண்டு இருந்தது தான் அனைவரின் கண்களிலும் பட்டது. அதனை கண்ட சாவித்திரியும், கணேசனும் ஒருவருக்கொருவர் தங்களுடைய பார்வைகளை பரிமாறி கொண்டனர். அவர்களுடைய பார்வை தப்பாமல் சகுந்தலாவின் கண்களிலும் பட்டது.



அவருடைய மனதில் ஒருவேளை இவர்கள் நினைப்பதை போல் அஸ்வந்த்தும், சொப்னாவும் விரும்புகிறார்களோ என்ற எண்ணம் தோன்றியது.



எனினும் அவருடைய மனதின் முலையில் அன்று அஸ்வந்த் வேற ஏதோ ஒரு பெண்ணை பத்தி பேசிட்டு இருந்தானே. அது என்ன ஆச்சு என்று நினைக்காமல் இருக்க முடியவில்லை.



சரி எப்படியும் இன்னும் ஒரு மாசத்தில் தெரிஞ்சிடும்ல அப்ப பார்த்துக்குவோம் என்று அந்த விசயத்திற்கு அப்பொழுது முற்று புள்ளி வைத்தார்.



இதை எதுவும் அறியாதவர்களாக அங்கே இருவரும் மகிழ்ச்சியில் இருந்தனர். சொப்னா அஸ்வந்தின் கையை பிடித்து கொண்டு “hey asu tell me da” என்று குதித்து கொண்டிருந்தாள்.



என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே



தொடரும்...
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 13



என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


“Hey hey… wait da bubbly. First go and fresh up now. After that, I will tell you everything” என்று சிரித்து கொண்டே அவளை பார்த்து கூறினான்.


“Hmm… no no… “என்று வேகமாக தலையை ஆட்டி அவன் கூறியதற்கு மறுத்தவள் “I won’t go. Tell me da please. Then only I will go for freshup”.


“இவ இப்படி சொன்னாளாம் கேட்க மாட்டா” என்று நினைத்தவன் அவளை கிட்டத்தட்ட தன்னுடன் இழுத்து கொண்டு மாடிப்படி ஏறியவன், அவளை அவள் ரூமில் விட்டு வெளியில் தாழிட்டான்.


“Hey hey what are you doing da… idiot…. Open the door” என்று அஸ்வந்த்தை திட்டி கொண்டே கதவை வேகமாக தட்டினாள்.


“No way bubbly… I will open the door once I completed my work. So don’t waste time of hitting the door. Good girl na. Freshup first. I’m leaving.”


“Dei asu… don’t go da. Open the door first. I will do”.


கதவின் மறுபக்கத்திலிருந்து சிரித்த அஸ்வந்த் “bye bye bubbly” என்று கூறிவிட்டு அவன் ரூமிற்க்கு சென்றான்.


சிறிது நேரம் கதவை தட்டி பார்த்தவள், அவனிடமிருந்து எந்தவொரு பதிலும் வராததால் “idiot, stupid” என்று தன் வாய்க்கு வந்ததெல்லாம் திட்டிவிட்டு பிரஷப் செய்வதற்காக பாத்ரூமிற்கு சென்றாள்.


தன்னுடைய அறைக்கு சென்ற அஸ்வந்த் ஒரு குளியல் போட்டுவிட்டு, டீஷிர்ட்ஸும், ஷாட்சும் அணிந்து தலை வாருவதற்காக கண்ணாடி முன் வந்து நின்றான். தன்னுடைய முகத்தை பார்த்து கொண்டே தலை வாரி கொண்டிருந்தவனுக்கு வைதேகி அங்கு தன் முன்னாள் நின்று அவளுடைய கையால் தன் இதழ்களை மூடுவதை போல் காட்சி தோன்றியது.


அதனை கண்டு அவன் சிலை போல் நின்று விட. எத்தனை நேரம் அப்படியே நின்றானோ... அவனுடைய மொபைல் ஒலிக்கவும் தான்... தான் இருக்கும் இடத்தை உணர்ந்தவன்... கண்ணாடியை பார்க்க அதில் தன்னுடைய உருவத்தை மட்டும் கண்டவன்... தன் தலையில் லேசாக அடித்து கொண்டு சிரித்தான்.


இவன் தன்னுடைய நிலையை நினைத்து சிரித்து கொண்டிருக்க, அவனுடைய மொபைல் ஒரு முறை கட்டாகி... திரும்பவும் ஒழிக்க ஆரம்பித்தது. வேகமாக சென்று யார் அழைப்பது என்று எடுத்து பார்த்தவன், அதில் “bubbly calling” என்று வரவும், வேகமாக அதனை அட்டென்ட் செய்து காதில் வைத்து பேச ஆரம்பித்தவனை... பேசவிடாமல் சொப்னா அந்த புறம் அவனை பொரிந்து தள்ள ஆரம்பித்தாள்.


“Dei idiot… how many times I called you. Why didn’t you pick my call? Already it crossed 30 minutes.what are you doing there still now? Come fast. Otherwise I’m going to break the door” என்று சொப்னா பாட்டுக்கு அஸ்வந்த்தை பேசவிடாமல் பேசிக்கொண்டே போனவள் கதவையும் விடமால் தட்டி கொண்டே இருந்தாள்.


“Hey hey…. Stop stop…. I’m infront of your door only”.


அவன் கூறியதை கேட்டவள் முன்பை விட பலமாக தட்டவும்…


”Stop hitting the door first. Then only I will open. If you are not, stay here till dinner time”.


“Hey asu… don’t leave me here. Please da…. open the door….”அவள் தட்டுவதை நிறுத்தி விட்டு வாயால் அவனுடன் உரையாட ஆரம்பித்தாள்.


“தட்டறத கை நிப்பாடினாலும் வாய் ஓயுதான்னு பாரு” என்று அவளை செல்லமாக கடிந்தவன், கதவை திறந்து விட்டான்.


திறந்த மறுநொடி வெளியில் வந்த சொப்னா அஸ்வந்த்தை பட்பட்டென்று அவனை அடித்தவள், “why did you close the door da idiot”.


அவள் கைகளை பற்றி தன்னை அடிப்பதை தடுத்தவன், அவளை பார்த்து சிரித்தான்.


“இங்க ஒருத்திய இவ்ளோ நேரமா அடச்சி வச்சிட்டு சிரிக்கிறது பாரு” என்று கோப பட்டவள், “smiling at me ah” என்று கூறிக்கொண்டே மறுபடியும் அவனை அடிக்க போக…


“Enough enough da bubbly” என்று சிரித்து கொண்டே கூறியவன்… அவளை பார்த்து “don’t you want to know what happened today?” என்று கேட்டு கொண்டே அவளுடைய தலையை மேலும் கீழுமாக ஆட்டினான்.


அவன் கூறியதில் இதுவரை நடந்தவற்றை எல்லாம் மறந்தவளாக, “ofcourse I want to know da... come come…”என்று அவனை இழுத்து கொண்டு பெட்டினில் அமர்ந்தவள், அவன் புறம் நன்றாக திரும்பி அமர்ந்து கொண்டு.... “Now tell me everything” என்று கூறினாள்.


அவனுடைய நினைவு இன்று காலை பீனிக்ஸில் நுழைந்ததில் இருந்து மாலை நடந்தது வரை பயணிக்க ஆரம்பித்தது.


அவனுடைய நினைவுகளில் மூழ்கியவன் சொப்னாவிடம் கூறுவதை மறந்தவனாய் தன் நினைவுகளில் மூழ்கி போனான்.


அவனையே ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தவள், நிமிடங்கள் பல கடந்தும் அவன் எதுவும் கூறாமல் ஒரே இடத்தையே பார்த்து கொண்டிருக்கவும், கடுப்பானவள்,”hey asu… what da? Are you going to tell me or not?” என்று கேட்டு கொண்டே அவனை பிடித்து உலுக்கினாள். அவளுடைய உலுக்களில் அவளை பார்த்தவன், “Today I proposed her” என்று மட்டும் கூறினான்.


அவன் கூறியதை கேட்டவள், “wow…. Asu super da… what’s her reply?” என்று அவனை பார்த்து ஆவலுடன் கேட்டாள்.


“She didn’t said anything. But…” அவன் சொல்ல வருவதை முழுதாக சொல்லவிடாமல்…..


”what….she didn’t said anything ah…..? She accept your love or not. Then why are you that much happy?” என்று அவள் பாட்டுக்கு கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கவும்…


“hey wait wait….don’t ask any questions in the middle” என்று கூறியவன்….”I know she loves me” அடுத்த வார்த்தை அவனை கூறவிடாமல் மறுபடியும் அவள் கேள்வி கேட்க ஆரம்பித்தாள்


“Hey asu, why are you confusing me da? k. I come to your point. Just now only you said na, she didn’t reply for your proposal.then how did you know that?”


“Why are you so urgent bubbly? Wait for some time. I will tell you from the beginning. U just confirm it whether she loves me or not”.


“K continue” என்று அஸ்வந்த்திடம் சொல்லியவள், எந்த ஒரு கேள்வியும் இடையில் கேட்காமல் அவன் கூற போவதை கவனிக்க ஆரம்பித்தாள்.


இன்று முழுவதும் தனக்கும் வைதேகிக்கும் நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் அவளிடம் கூறியவன், கடைசியில் “now tell me your answer” என்று தன் இரு கைகளையும் கட்டி கொண்டு அவளை பார்த்து கேட்டான்.


ஆரம்பத்தில் சாதாரணமாக கேட்க ஆரம்பித்தவள், அவன் மேலே சொல்ல சொல்ல அவன் கூறுவதை ஒருவித பிரமிப்புடன் கேட்க தொடங்கினாள்.


கடைசியில் அவன் தன்னுடைய பதிலை கேட்கவும்,”ya it’s true man. She loves you a lot more than you. Still I can’t able to believe it da asu. She feels your pain… from heart. Wow…. Till now, I thought she is lucky. But after hearing it all. Now I change that…. You are very lucky to get her da asu. I’m so happy” என்று மனதார கூறினாள்.


“And one more thing asu. Today we must start reading Tamil after finishing our dinner. Because, after hearing your story, I may feel like she is afraid to talk in English. That’s why she said nothing at the time you are selecting the dress for her. So start learning tamil”.


அஸ்வந்த்தும் அதை புரிந்தே இருந்ததால் சொப்னா கூறியதற்கு சரி என்று ஒத்து கொண்டான்


இவர்கள் இருவரும் இங்கே பேசிக்கொண்டு இருக்க கீழிருந்து சகுந்தலா ஒரு வேலையாளை மேலே அனுப்பி அவர்களை சாப்பிட அழைத்து வருமாறு கூறினார்.


அவர்கள் இருவரும் எழுந்து சாப்பிட சென்றனர். அனைவரும் டைனிங் ஹாலில் அமர்ந்திருக்க அங்கே ஒரு சேரில் உட்கார்ந்த அஸ்வந்த் என்ன உணவு என்று கூட பார்க்காமல் சகுந்தலாவை பார்த்து “where is that book grandma” என்று கேட்டான்.


அவன் எந்த புக்கை கேட்கிறான் என்று அறிந்தே இருந்த சகுந்தலா, “இவன் புக்க கேட்பான்... திரும்ப அந்த புக்க கொஞ்ச நேரம் கழிச்சி தூக்கி உட்டெறிவான் அதுக்கு எதுக்கு இவனுக்கு புக்கு” என்று மனதினுள் நினைத்தவர், “which book aswanth? Yesterday you throwed one book right? Is that the same book?” என்று கேட்டார்.


அஸ்வந்த் சகுந்தலாவிடம் பேசிக்கொண்டிருந்ததை கேட்டு கொண்டிருந்தவள், அவர் அஸ்வந்த்தை கிண்டல் செய்யவும் சொப்னாவால் தன்னுடைய சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியவில்லை. அவள் அஸ்வந்த்தை பார்த்து சிரிக்க ஆரம்பித்தாள்.


அவள் சிரித்ததில் அவளை பார்த்து அசடு வழிந்தவன்....


“ஒரு புக்க கேட்டதுக்கு இந்த க்ரானி நம்மள இவ்ளோ அசிங்க படுத்த கூடாது” என்று நினைத்து கொண்டே அவரை பார்த்து கண்களால் ப்ளீஸ் என்று கெஞ்சினான்.


அவனுடைய கெஞ்சலில் சிரித்தவர், செல்பில் அவர் எடுத்து வைத்திருந்த ‘learn tamil through english’ புக்கினை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தார்.


அவரை பார்த்து சிரித்தவன், அந்த புக்கினை வாங்கி தன் மடியில் வைத்து கொண்டான்.


அதன் பிறகு சாப்பிட்டேன் என்ற பேருக்கு இரண்டு கொரித்துவிட்டு... சொப்னாவையும் சாப்பிடவிடாமல் இழுத்து சென்றவன், நேராக தன்னுடைய அறைக்கு சென்று தனக்கு நேராக புக்கினை பிரித்து வைத்தவன், அவளையும் தனது அருகில் அமர வைத்து கொண்டான்.


முதல் இரண்டு வார்த்தைகளை மட்டும் தான் படித்திருந்தனர். அஸ்வந்த்திற்காவது பரவாயில்லை ஒன்றிரெண்டு முறை அந்த புக்கினை திறந்திருக்கிறான். சொப்னாவிற்கு சொல்லவே தேவையில்லை. அந்த புத்தகத்தினை முதல் முறையாக பார்த்த சொப்னாவுக்கு உலகமே தலைகீழாக சுற்றுவதை போல் தோன்றியது.


“Asu I can’t da” என்று கூறிவிட்டு எழுந்திரிக்க போனவளை…


“Bubbly please. Just now only you told na, learn tamil is really need for me. I can’t read without you. You know right… what happened yesterday and all” என்று கூறிக்கொண்டே அவளை பாவமாக பார்த்தான்.


இப்படி கூறுபவனை அவள் என்னதான் செய்வாள். அவனை தனியே விட்டுவிட்டு செல்லவும் அவளுக்கு மனமில்லை.” K wait asu. Let me think” என்று சிறிது நேரம் யோசித்தவள், “hey asu I got one idea… wait for me” என்று கூறிவிட்டு வெளியே ஓடினாள்.



என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்...
 
Last edited:

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 14


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

“இவ எங்க போனா” என்று அஸ்வந்த் கதவையே பார்த்து கொண்டிருக்க சொப்னா சகுந்தலாவுடன் அறையினுள் நுழைந்தாள்.


அவரை அங்கே பார்த்தவுடன் அவனுக்கு எல்லாம் புரிந்துவிட…… சொப்னாவின் செயலை கண்டு அவனுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.



இந்த ஐடியா நமக்கு ஏன் தோணாம போச்சு. தமிழே சுத்தமா தெரியாத இரண்டு பேரு சேர்ந்து படிச்சா... எங்க இருந்து தமிழ் கத்துக்க முடியும். புக்க பார்த்தாலே தூக்கி போடணும்னு தான் தோணும். இதே தமிழ் தெரிஞ்ச ஒருத்தர் நமக்கு சொல்லி கொடுத்தா நமக்கு புரியாதத கூட தெளிவா விளக்கி புரிய வச்சிடுவாங்க. இதுக்கு தான் சொப்னா வேணும்னு சொல்றத... பாரு எவ்ளோ தெளிவா யோசிச்சிருக்கா. நம்மளும் தான் இருக்கோமே புக்க மட்டும் விரிச்சு வச்சா போதுமா உடனே மண்டையில ஏறிடுமா என்ன?



சற்று நேரத்திற்கு முன் நடந்தது....



அஸ்வந்த்திடம் சொல்லிவிட்டு வெளியில் சென்றவள் நேராக சகுந்தலாலாவை தேடி சென்றாள்.



“Grandma… I need your help. Come with me” என்று மட்டும் கூறினாள்.



“what help you need from me?”



“I will tell you everything. First, come with me grandma…” அவள் தன்னுடன் சகுந்தலாவை அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தாள். எதுவும் தெளிவாக சொன்ன பாடில்லை.



சகுந்தலாவிற்கு அவள் சொல்லுவதில் தலையும் புரியவில்லை, வாழும் புரியவில்லை. ஒருவேளை நேற்று போல் அஸ்வந்த் திரும்பவும் கோபமாக இருக்கிறானோ. புக்கை வேறு வாங்கி சென்றானே என்று வேறு நினைத்து கலங்க ஆரம்பித்தார்.



“Sopna what happened ma? Is aswanth angry again?” என்று அவர் ஒரு வித கலக்கத்துடன் சொப்னாவை பார்த்து கேட்டார்.



“No no grandma. This is not that one. Come na. I will tell you there” என்று மட்டும் கூறியவள் அவரை அழைத்து கொண்டு தன்னுடைய ரூமிற்கு சென்றாள்.



“என்ன ஆச்சுன்னு தெரியலையே. இவ வேற மனுஷனோட நிலைமையை புரிஞ்சிக்காம சோதிக்குறா” என்று நினைத்து கொண்டே அவளுடன் சென்றார்.



அங்கே சென்றவருக்கு அஸ்வத்தின் முகத்தில் எந்த விதமான கோபமோ, வருத்தமோ இருப்பதற்கான அறிகுறி தெரியாததை கண்டு தான் அவருக்கு நிம்மதியாக இருந்தது.



ஆனால் அவருக்கு இன்னும் தன்னை ஏன் சொப்னா இங்கே அழைத்து வந்திருக்கிறாள் என்று தான் புரியவில்லை.



சகுந்தலாவை அங்கே பார்த்த அஸ்வந்த்திற்கு அவளின் யோசனையை கண்டு பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்தவன், நேராக சொப்னாவை நோக்கி சென்று, அவளின் கையை பிடித்து குலுக்கி “super da bubbly. This is the best idea. Why I didn’t think before?”



அவன் கூறியதில் தான் போட்டிருந்த டீஷிர்டில் இல்லாத காலரை அவள் தூக்கி விட்டு கொள்ள….



அவளின் செயலில் சிரித்து கொண்டே அவளின் தலையில் லேசாக தட்டியவன், சகுந்தலாவிடம் சென்றவன் அவரை அணைத்து கொண்டு, “Thanks grandma. Thanks a lot. I’m very happy now.Now I got confidence”



சகுந்தலாவிற்கு அவர்கள் எதை பற்றி பேசுகிறார்கள் என்று புரியவில்லை. அஸ்வந்த் திடிரென்று தன்னை அணைத்து கொண்டு தேங்க்ஸ் சொல்லவும், எதற்கு இவன் நமக்கு தேங்க்ஸ் சொல்லிட்டு இருக்கான் என்று புரியாமல் குழம்பியவர்…. “Thanks for what aswanth” என்று கேட்டார்.



அவர் அப்படி கேட்கவும் நிமிர்ந்து அவன் சொப்னாவை பார்த்த பார்வையில், எதுக்குன்னு சொல்லலையா என்ற கேள்வி தொக்கி நின்றது.



அவனுடைய பார்வையில் அசட்டு சிரிப்பு சிரித்தவள், அவனை பார்த்து இல்லை என்பதை போல் தலையை ஆட்டினாள்.



அவளை பார்த்து தலையில் அடித்து கொண்டவன்...”grandma… teach us tamil. It’s very tough to learn tamil from book”.



அவர் அவனை ஆச்சர்யமாக பார்க்கவும்... “Please… won’t you” என்று முகத்தை பாவமாக வைத்து கொண்டு கேட்டான்.



அவர் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவும், அவருக்கு சொல்லித்தர விருப்பமில்லை என்று அவனாகவே நினைத்து கொண்டு “It’s ok grandma. I know… you are not interested to teach me tamil. No problem. I try to learn by myself” என்று வருத்தமாக கூறிக்கொண்டே அங்கிருந்து நகர போனான்.



அவருக்கா தன் பேரக்குழந்தைகளுக்கு சொல்லி தர விருப்பம் இருக்காது... அவர்கள் தமிழ் தெரிந்து கொள்ளவேண்டும் என்று ஆசைப்பட்ட முதல் ஜீவனே அவர் தான்.



அவர் எத்தனையோ வழியில் முயன்றும், அவர்களுக்கு தமிழ் படிப்பதில் நாட்டம் இல்லாததால் அத்தனை முயற்சிகளும் தோல்வியுற அவருக்கு எங்கு அவர்கள் தமிழே கற்காமல் போய் விடுவார்களோ என்று வருத்தம் தான் ஏற்பட்டது.



இப்பொழுது அவர்களே தமிழ் படிக்க முன் வந்ததை நழுவ விடுவாரா என்ன? மிகுந்த மகிழ்ச்சியுடன் அவர்களை அங்கிருந்த சோபாவில் அமர சொன்னவர். அவருக்கென்று அஸ்வந்த் தனது அறையிலிருந்து எடுத்து வந்த சாய்வு நாற்காலியில் வசதியாக அமர்ந்து கொண்டவர்.” சரி கண்ணா… Today I will teach you some basic words in tamil. Take a note and pen” அவர்கள் எடுத்து வரவும், “k before we start… close your eyes. You have some thoughts going on your mind and heart right. Pray for it” என்று அவர்களிடம் கூறியவர் தானும் கண்களை மூடி அவர்கள் இருவரும் நன்றாக கற்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டினார்.



சொப்னா அஸ்வந்த்திற்காக வேண்டி கொண்டாள். கண்களை மூடி கொண்டிருந்த அஸ்வந்த்தோ, “god please help me. I must learn tamil. Then only I can freely talk to my smilee” என்று வேண்டிக்கொண்டான்.



அவர்கள் இருவரும் கண்ணை திறக்கவும், “k let’s start” என்று கூறியவர், “first word... ‘Mother’ means ‘அம்மா’ என்று சொல்லி கொடுத்தார்.



அவர்கள் இருவரும் “அம்மா” என்ற வார்த்தையை திரும்ப சொல்லும் போது அவருக்கு பிறந்த குழந்தை முதன் முதலில் அம்மா என்று கூறும் போது ஒரு சந்தோசம் ஏற்படுமே.... அப்படி இருந்தது அவருக்கு. அவருடைய உள்ளத்து உணர்ச்சிகளை வார்த்தைகளால் சொல்லமுடியாது.



அம்மா என்ற வார்த்தையை சொன்னவர்களுக்குமே அத்தனை மகிழ்ச்சி. தாங்களும் தமிழ் பேசிவிட்டோம் என்ற சந்தோசம்... “Next word grandma” என்று அடுத்த வார்த்தையை கற்க போகும் ஆர்வத்துடன் கேட்டனர்.



அவர்களின் ஆர்வத்தை கண்டு அவரும் மகிழ்ந்தவராய்,”Father- அப்பா; Elder brother- அண்ணன்;



‘அண்ணன்’ என்று கூறும் போது சொப்னா அஸ்வந்த்தை பார்த்து “அஸ்வந்த் அண்ணன்” என்று கூறினாள்.



அவள் கூறியதை சிரித்து கொண்டே ஆமோதித்தவன், சகுந்தலாவை பார்த்து, “Grandma, what is the tamil word for sister?” என்று கேட்டான்.



சொப்னா அஸ்வந்த்தை பார்த்து அண்ணன் என்று கூறவும், முதலில் ஆச்சர்யப்பட்டவர்... பின்பு தனக்குள்ளே நிம்மதி மூச்சு விட்டு கொண்டவராய்... ரெண்டு பேரும் சேர்ந்தே வளர்ந்ததால ஒருவருக்கொருவர் அண்ணன் தங்கை இல்லாத குறையில்லாமல் வளர்ந்திருக்கின்றனர்.



இங்க என்னடான்னா இவங்க ரெண்டு பேரையும் ‘husband and wife’ ஆக்க யோசிச்சிட்டு இருக்காங்க. நல்ல வேள இவங்க கிட்ட அதை பற்றி எதுவும் பேசல “அதுக்கு முன்னாடியே கடவுள் புண்ணியத்துல எல்லாம் தெரிஞ்சிடுச்சு. கடவுளே நினைத்து கூட பார்க்க முடியல இவங்களுக்கு மட்டும் இந்த விஷயம் தெரிஞ்சிருந்தா அவங்க எவ்வளவு கஷ்ட பற்றுப்பாங்க. நாளைக்கி முதல் வேலையா இதை பற்றி சாவித்ரி கிட்ட பேசணும்.” என்று யோசித்து கொண்டிருந்தார்.



தான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் சகுந்தலா ஏதோ யோசித்து கொண்டே இருக்கவும், அவரை லேசாக அசைத்தவன்,”what happened grandma? Why are you suddenly stopped teaching? Anything serious matter? என்று கேட்டான்”.



“Nothing aswanth. What’s your question?”



அவர் கேட்டதற்கு சொப்னாவை பார்த்து சிரித்தவன் சகுந்தலாவிடம், what is the tamil word for sister?” என்று மறுபடியும் கேட்டான்.



மற்றவற்றை எல்லாம் ஒதுக்கி வைத்தவராய் அஸ்வந்த்தை பார்த்து "தங்கை" என்று கூறினார்.



அவர் கூறியதை உள்வாங்கியவன் சொப்னாவை பார்த்து "சொப்னா தங்கை" என்று கூறினான்.



அவன் கூறியதை திருத்தியவர் சொப்னா என்னுடைய தங்கை என்று சொல்லணும் என்று சொல்லி கொடுத்தார்.



“But why grandma? Why I want to add one more word?” என்று தன்னுடைய சந்தேகத்தை கேட்டான்.



“Because… If you are introducing her to another persons. What will you said? Her name is sopna and she is my sister. Likewise you will said right. Samething only here, ‘my’ means ‘என்னுடைய’” என்று தெளிவாக அவனுக்கு புரியும் படி விளக்கினார்.



அவர் அஸ்வந்த்திற்கு விளக்கி கொண்டிருப்பதை கேட்டு கொண்டிருந்த சொப்னா, “then my case also ‘அஸ்வந்த் என்னுடைய அண்ணன்’ correct” என்று சகுந்தலாவை பார்த்து கேட்டாள்.



“Yes… It was correct”



அவர் தான் கூறியதை சரி என்று சொல்லவும் அவளுக்கு அவ்வளவு பெருமை அஸ்வந்த்தை பார்த்து தன்னுடைய கட்டை விரலை தூக்கி இப்படியும் அப்படியுமாக ஆட்டி காண்பித்தாள்.



அவள் தலையில் தட்டியவன்,”Now I understood grandma, next word?” என்று கேட்டான்.



அவர்களுடைய தமிழ் படிக்கும் பயணம் ஒருவிதமாக நன் முறையில் ஆரம்பித்தது.






என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே



தொடரும்......
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,


நான் உங்களிடம் கூறியதை போல் வெள்ளிக்கிழமை போடாமல் விட்டதற்காக இதோ அடுத்த அத்தியாயத்தை இப்பொழுது பதிவிடுகிறேன். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.


நட்புடன்,


தாரணி பாஸ்கரன் :)
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 15


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

வைதேகியை ஏற்றிக்கொண்டு தன் வண்டியில் சென்ற சுவேதா அவளை காலேஜில் ட்ரோப் செய்து விட்டு அவளை மண்டே கல்லூரியில் பார்ப்பதாக சொல்லிவிட்டு சென்றாள்.


சுவேதா வைதேகியிடம் பேச முயற்சித்தும் அவள் எதுவும் பேசினால் இல்லை. அவள் தான் கனவில் மிதந்து கொண்டிருந்தாளே. அவள் கிட்ட என்ன பேசினாலும் சுவேதாவை ஒரு புரியாத பார்வையே பார்த்துவைத்தாள். “இதுக்கு மேல இவ கிட்ட பேசினோம் நமக்கு கிறுக்கு புடிக்க வச்சிருவா இவ. அதனால இவள மண்டே காலேஜ்ல பார்த்துப்போம்” என்று சுவேதா அவளை விட்டுவிட்டு தன்னுடைய ஆக்டிவாவில் கிளம்பினாள்.



சுவேதா அவளை ட்ரோப் செய்துவிட்டு கிளம்பியவுடன், வைதேகி எப்படி தான் தன்னுடைய ரூமிற்கு வந்து சேர்ந்தாளோ, அங்கே அறையில் அவளுடைய தோழிகள் ப்ராக்டிஸிற்காக கிளம்பி கொண்டிருப்பதை பார்த்தவள், வேக வேகமாக குளித்துவிட்டு தன்னுடைய பயிற்சிக்கான உடையை அணிந்துகொண்டு அவர்களுடன் கிளம்பினாள்.



பாஸ்கெட்பால் கோர்ட்டிற்கு சென்றவள் எப்பொழுதையும் போல் விளையாட ஆரம்பித்தாள். பாஸ்கெட்பால் அது அவளுடைய உலகம்…. அந்த உலகத்தில் அவள் நுழைந்து விட்டால் அவளை எந்த ஒரு சக்தியும் நெருங்க முடியாத படி அதன்னுள்ளே பயணித்து விடுவாள்.



இன்று அவளுடைய உலகத்தில் காதலும் இணைந்ததால் அது அவளுக்கு இன்னும் பலமடங்கு சக்தியை அளிக்க... அதன் பிறகு சொல்ல வேண்டுமா என்ன…அவள் சரமாரியாக பாய்ன்ட்ஸினை அவளுடைய அணியினருக்கு வென்று கொடுத்து கொண்டிருந்தாள்.



பாஸ்கெட்பால் பயிற்சி முடிந்த பின்பும் எந்தவொரு சோர்வும் இல்லாமல், “குளித்துவிட்டு சாப்பிட செல்லலாம்” என்று நினைத்துக்கொண்டு தன்னுடைய அறைக்குள் நுழைந்தவளுக்கு கட்டில் மேல் இருந்த அஸ்வந்த் வாங்கி கொடுத்த அந்த மெரூன் நிற சல்வார் தான் அவளை வரவேற்றது.



அதனை கண்டவளுக்கு காலையில் இருந்து மாலை வரை நடந்தது அனைத்தும் படமாக தன் முன்னே விரிய சல்வாரினை தன்னுடைய கைகளில் எடுத்து பார்த்தவளின் மனம் முழுவதும் அஸ்வந்த்தே நிறைந்திருக்க……



எங்கே அதற்கு வலிக்குமோ என்பதை போல் மெதுமாக சல்வாரினை வருடியவளுக்கு அதனை அப்பொழுதே அணிந்து பார்க்க வேண்டும் என்ற ஆசை அலைபோல் தோன்ற…



அதனை எடுத்து கொண்டு குளியல் அறைக்குள் நுழைந்தவள், முதல் முறையாக அதனை அணிய போவதால் தலையை குளித்து விட்டு சல்வாரினை அணிந்து கொண்டு கண்ணாடி முன் வந்து நின்றாள்.



கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய பிரதி பிம்பத்தை பார்த்தவளுக்கு சுத்தமாக அது தான் தான் என்று நம்ப முடியவில்லை.



ஏனெனில் அவள் அணிந்திருந்த சல்வார் அவளை பேரழகியாக காட்டி கொண்டிருந்தது. அவளுக்கென்றே வடிவமைதிருந்ததை போல் அத்தனை அழகு…. அதுவும் கழுத்திற்கு கீழே அமைந்திருந்த கோல்டன் கலராலான பூக்கள் அவளுக்கு இன்னும் அழகு சேர்த்தது.



“நம்ம போட்டிருக்கறதை இப்போ அஸ்வந்த் மட்டும் பார்த்தா” என்று அவளுடைய எண்ணவோட்டம் அவனை நோக்கி பயணிக்க….



அவளின் எண்ணத்தின் நாயகனே அவளை போனில் அழைத்தான்….



“தன் அன்னைதான் அழைக்கிறார்” என்று நினைத்து கொண்டு போனை எடுத்தவள் அதில் தெரிந்த புது நம்பரை கண்டு இப்ப யாரு நமக்கு அடிக்கிறா என்று குழப்பியவளாய் அதனை ஆன் செய்து காதில் வைத்தவள் எதுவும் பேசாமல் மறுமுனை பேசுவதற்காக காத்திருந்தாள்.



சொப்னாவிடம் கெஞ்சி கூத்தாடி சுவேதாவிடம் சொப்னாவை பேசவிட்டு வைதேகியின் நம்பரை வாங்கியவன், அவளின் குரலுக்காக ஆவலுடன் காத்து கொண்டிருக்க, வைதேகி கால்லை அட்டென்ட் செய்தும் பேசாமல் இருப்பதை கண்டவன் ஒரு வேல புது நம்பரா இருக்கவும் யோசிக்கிறாளோ என்று அவளை சரியாக கணித்தவன்….



“Smilee” என்ற ஒரு வார்த்தையில் தன்னுடைய ஒட்டு மொத்த காதலையும் சேர்த்து அவளை அழைத்தான்.



“யாராக இருக்கும்….. ஒருவேள சுவேதா தான் ஏதாவது புது நம்பரில் இருந்து அழைக்கிறாளோ” என்று விதவிதமாக யோசித்து கொண்டிருந்தவளுக்கு அஸ்வந்த் அழைப்பான் என்று கனவில் கூட அவள் நினைத்து பார்க்கவில்லை.



அஸ்வந்தின் குரலை கேட்டவளுக்கு ஒரு நிமிடம் தன்னுடைய மூச்சே நின்று விட்டதை போல் அப்படியே உறைந்து நின்றாள்.



வைதேகியை அழைத்தும் அவள் எதுவும் பேசாததால், “ஒரு வேல நம்பர தப்பா ஏதாவது அமுக்கிட்டோமா” என்று குழம்பியவன், தான் டயல் செய்த நம்பரை சரி பார்க்க அது சரியாக தான் இருந்தது. அப்புறம் ஏன் பேச மாற்றா என்று யோசித்தவன் “பலமுறை ஸ்மைலி என்றும் சிலமுறை வைதேகி என்றும்” போனில் கத்தி கொண்டிருந்தான்.



அவனுடைய கத்தலில் நனவுலகிற்கு வந்தவளுக்கு அவனிடம் என்ன பேசுவது என்று தான் தெரியவில்லை, அந்த புறம் அஸ்வந்த் அவளை அழைத்து கொண்டே இருக்கவும், மிகவும் சிரம பட்டு “ஹ்ம்ம்” என்ற ஒரு வார்த்தையை மட்டும் உதிர்த்தாள்.



எதிர்பார்க்காத நேரத்தில் தனக்கு மகிழ்ச்சி தரக்கூடிய ஒரு செயல் திடிரென்று நடந்தால், ஒரு வித படபடப்பு கலந்த மகிழ்ச்சி ஏற்படுமே அப்படி தான் வைதேகிக்கு இருந்து. அவளுக்கு “ஹ்ம்ம்” என்ற ஒரு வார்த்தை சொல்வதற்குள்ளே போதும் போதும் என்றாகி விட்டது.



ஆனால் மறுமுனையில் இருந்த அஸ்வந்த்திற்கு அவளின் அந்த ஒரு வார்த்தையே போதுமானதாக இருந்தது.



“Hey smilee… why are you so silent? I just confused, I may typed the wrong number something”.



அவன் பேசுவதை கேட்டவளுக்கு புதிதாக ஒரு குழப்பம் தான் பிறந்தது….



அவன் நமக்கு போன் பன்னது சந்தோஷமான விஷயம் தான். ஆனா நீ ஒரு விஷயத்தை மறந்துட்டியே வைதேகி, இப்போ நீ அவன் கிட்ட எப்படி இங்கிலீஷிலே பேச போற…..



நேர்ல இருந்தாலாவது ஆக்ஷன் ஏதாவது செஞ்சு புரிய வச்சிரலாம்... இப்ப அதுக்கும் ஆப்பு வச்சிட்டானே என்று அவள் யோசித்து கொண்டிருக்க….



மறுபடியும் அவளிடம் இருந்து பதில் வராமல் போக... அவனே மறுபடியும் பேச ஆரம்பித்தான். “Smilee…I don’t know how to say this feeling? Evening only we met, but I miss you so much da. I miss you very badly. Wherever I saw, your face is only coming infront of me. Oh God…I’m going mad” என்றவாறு அவன் பேசி கொண்டே இருக்க.



சாதாரண ஒரு போன் காலிற்கே மலைத்து போய் மூச்சடைத்தை போல் நின்றவள், இப்பொழுது அவன் பேசுவதை கேட்டு கொண்டிருந்தவளுக்கு மனதின் உணர்ச்சிகள் அலை அலையாய் பொங்க தன்னுடைய உணர்வுகளை அவனிடம் எப்படி வெளிப்படுத்துவது என்று தெரியாமல் திணறி கொண்டிருந்தாள்.



அப்பொழுது அவளது மொபைலில் இன்னொரு கால் வருவதற்கான அறிகுறி தெரிய, தன்னுடைய காதில் இருந்து மொபைலை எடுத்து அதில் வந்த வெயிட்டிங் காலில் இருந்த தன்னுடைய அன்னையின் நம்பரை பார்த்தவளுக்கு பயத்தில் முகமெல்லாம் வேர்த்து விட மொபைலை கை தவறி கீழே போட போனாள்.



அந்த பதட்டத்தில் தெரியாமல் கை பட்டு அஸ்வந்தின் காலும் கட்டானது.



அஸ்வந்தின் கால் கட்டானதும் இப்பொழுது வெயிட்டிங் கால் அல்லாது நார்மல் காலில் “Amma” என்று மொபைலின் டிஸ்பிலேவில் வரவும் இப்பொழுது முன்பை விட இன்னும் பயம் அதிகரிக்க… நடுங்கும் விரல்களுடன் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்தாள்.





என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே



தொடரும்......
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 16


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

“வைதேகி என்னமா மொபைல் பிசினே வந்துட்டு இருந்துச்சு. யாருக்கிட்டமா இந்த நேரத்துல போய் போன் பேசிட்டு இருந்த?”


அவர் அப்படி கேட்கவும் ஏதோ தான் செய்ய கூடாத தவறை செய்து விட்டதை போல் துடி துடித்து போனவளுக்கு தன் அன்னைக்கு பதில் சொல்வதற்கு வாய் சுத்தமாக வரவில்லை.



ஏதோ தன் நாக்கு மேல் அன்னத்தில் ஒட்டி கொண்டதை போல் ஒரு வார்த்தைக்கூட வாயிலிருந்து உதிரவில்லை.



“வைதேகி என்னமா ஆச்சு…. ஏன் அமைதியா இருக்க…. எதுவும் பேச மாற்ற... உடம்புக்கு எதுவும் முடியலையாமா…” என்று அவர் வைதேகி அமைதியாக இருப்பதற்கும் எதை எதையோ நினைத்து வருத்தப்பட...



அவருடைய பாசம் அவளை தன் செயலை நினைத்து இன்னும் கூனி குறுக செய்ய அவளுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. எங்கு தான் அழுது அன்னை ஏன் அழுதாய் என்று கேட்டால் அன்னையிடம் என்ன சொல்வது என்று அவள் அழுகையை கட்டு படுத்தி கொண்டு எங்கே பேசினால் அழுது விடுவோமோ என்று எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தாள். .



அவளுடைய அமைதி ஜெயந்தியை ஏதோ செய்ய “என்னமா உடம்புக்கு ரொம்ப முடியலையா நான் வேனா நாளைக்கு வந்து உன்னைய பார்க்கவா?”



அவர் அப்படி கூறவும் இன்னும் அதிர்ந்தவள், “இந்த நேரத்தில அவரை பார்க்க தன் மனதில் சுத்தமாக தெம்பு இல்ல, இதுக்கு மேலயும் நம்ம பேசாம இருந்தோம், அவ்ளோ தான்” என்று நினைத்தவள், தன்னுடைய அழுகையை முடிந்த அளவுக்கு கட்டு படுத்தி கொண்டு தன் அன்னையுடன் பேச தயாரானாள்.



அவர் மறுபுறம் “என்னமா வரட்டுமா” என்று கேட்க…



“இல்லமா அதெல்லாம் வேணா நான் நல்லா தான் இருக்கேன். வெளில போயிட்டு வந்ததால தலையை பயங்கரமா வலிக்குது... தூங்கி எழுந்தா சரி ஆகிடும். நான் உன்கிட்ட நாளைக்கி பேசவா" தான் இவ்வளவு பேசியதே அதிகம் என்பதை போல் அவள் தன் அன்னை என்ன கூற போகிறார்களோ என்று பார்க்க...



“சரிமா ஒரு மாத்திரையும் போட்டு கிட்டு தூங்கு. நான் நாளைக்கு பேசுறேன் வச்சிடவா” என்று கேட்க



“ஹ்ம்ம்” என்று மட்டும் கூறி போனை அணைத்து விட்டு கட்டிலில் பொத்தென்று அமர்ந்தவளுக்கு அழுகையை சுத்தமாக கட்டு படுத்த முடியவில்லை.



தன் அன்னையுடன் பேசி கொண்டிருந்த பொழுது அஸ்வந்தின் கால் வெய்ட்டிங்கிலே வந்து கொண்டிருந்ததை கண்டவளுக்கு இனிமேல் அஸ்வந்த்திடம் எப்படி பேசுவது, இல்ல இல்ல இனிமேல் நான் அவன் கூட பேச போறது இல்ல. என் மேல நம்பிக்கை வச்சிதான என் அம்மா என்னைய இங்க அனுப்பி வச்சிருக்காங்க... அவங்களுக்கு நான் துரோகம் பண்ண கூடாது.



அப்பா எங்களை அனாதையா விட்டுட்டு இறந்து போனப்ப கூட தனக்கு தெரிஞ்ச டைலரிங்கை வைத்து என்னையும், தம்பியையும் வளர்த்தாங்களே. அவங்களுக்கு போய் நான் துரோகம் பண்ணலாமா. அவளுடைய மனம் தான் அஸ்வந்தின் மேல் காதல் கொண்டதை தன் அன்னைக்கு செய்த பெரும் குற்றமாகவே கருதியது.



ஆனால் அவளுடைய காதல் கொண்ட மனமோ இதை தாங்கி கொள்ள சக்தி இல்லாமல் ஊமையாக அழுதது.



ஆனால் அது அழுது மட்டும் என்ன பயன் இப்பொழுது அவள் மனம் முழுவதும் அன்னையின் பாசமே மேலோங்கி இருந்தது.



வைதேகி தன்னுடைய காலை கட் பண்ணியதால், எங்க நம்ம கொஞ்சம் ஓவரா பேசிட்டோமோ என்று கலங்கியவன் அவளுக்கு மீண்டும் முயற்சிக்க இப்பொழுது அவளுடைய கால் பிஸி என்று வரவும்… திரும்ப கொஞ்ச நேரம் கழித்து மறுபடியும் பண்ண இம்முறையும் பிஸி என்றே வரவும், “shit” என்று கத்தியவன் திரும்ப திரும்ப பண்ணி கொண்டே இருக்க அவனை கால் மணி நேரம் சோதித்த பின்பே அவளுடைய போன் ரிங் போனது.



தன்னுடைய கண்ணீர் அனைத்தும் எங்கே வற்றிவிடுமோ என்பதை போல் அவள் அழுது கொண்டிருக்க தன்னுடைய மொபைலில் கால் வந்ததற்கான ஒலி கேட்கவும், அழுது கொண்டே அதனை எடுத்து பார்த்தவளுக்கு, அந்த நம்பரை பார்த்து அஸ்வந்துடையது என்று கண்டவளுக்கு தன்னுடைய அழுகை இன்னும் அதிகமாக காலை அட்டென்ட் பண்ணாமல் அதனை அப்படியே பார்த்து கொண்டிருக்க, அது ஒரு முறை கட்டாகி மீண்டும் ஒழிக்க ஆரம்பித்தது.



இம்முறை அவளுடைய ரூமெட்ஸ் அனைவரும் வர ஆரம்பிக்க தன்னுடைய மொபைலை சைலன்ட் மோடில் போட்டவள் ஒரு நைட்டியை தன்னுடைய கையில் எடுத்து கொண்டு பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டாள்.



அந்த சல்வாரினை கழட்டி நைட்டிக்கு மாறும்போது அவளுடைய மனம் படாத பாடு பட்டது. அதனை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.



தன்னுடைய முகத்தை குளிர்ந்த நீரால் கழுவியவளுக்கு அழுகை தான் நிற்பேனா என்று வழிந்தோடி கொண்டிருந்தது.



பாத்ரூமில் இருந்து வெளியில் வந்தவள் யாரையும் நிமிர்ந்து பார்க்காமல் கட்டிலில் படுத்து தன்னுடைய காலில் இருந்து முகம் வரை போர்வையை நன்கு இழுத்து கொண்டு மூடியவளுக்கு அழுகை நிற்காமல் வந்து கொண்டிருந்தது.



தன்னுடைய மொபைலை எடுத்து பார்த்தவளுக்கு அதில் 10 missed calls என்று வரவும், எங்கே அழுகை வாய்விட்டு வந்து விடுமோ என்று வாயை பொத்தி கொண்டு இன்னும் அதிகமாக அழுக ஆரம்பித்தாள்.



ஆனால் அவனுடைய காலை அட்டென்ட் செய்து பேசுவதற்கு தான் அவளுக்கு துணிவில்லை.



எங்கே அவனிடம் பேசினால் தன்னுடைய கட்டு பாட்டை இழந்து விடுவோமோ என்று தனக்குள்ளேயே அனைத்தையும் புதைத்து அழுதே கரைந்தாள்.



ஒருவேளை தன் மனதில் தோன்றிய எண்ணத்தை அஸ்வந்த்திடம் கூறியிருந்தால் அவன் அவளுக்கு இது தேவையில்லாத கவலை என்று அவளுக்கு புரிய வைத்திருப்பானோ.



இவளும் தன்னை வதைத்து அவனையும் வதைத்து கொண்டிருந்தாள்.



தான் பேசியதற்கு தான் தன் மேல் கோபமாக இருக்கிறாளோ என்று அவன் விடாமல் அவளுக்கு கால் செய்து கொண்டிருக்க, அவன் அத்தனை முறை அழைத்தும் அவள் காலை அட்டென்ட் செய்யாததால், “என்ன கோபமாக இருந்தாலும் பேசி தீத்துக்க வேண்டியது தான இது என்ன பழக்கம் கால அட்டென்ட் பண்ணாம இருக்கறது” என்று எப்பொழுதும் போல் வரும் கோபம் தலை தூக்க கையில் இருந்த மொபைலை தூக்கி விட்டறிந்தான். அது அவனுடைய அறையில் இருந்த செவுரில் பட்டு சுக்கு சுக்காக உடைந்தது.



சிறிது நேரம் தன்னுடைய அறையிலேயே குறுக்கும் நெடுக்குமாக நடந்தவன், “எப்படியும் மண்டே காலேஜ் வந்து தான ஆகணும், அப்ப பார்த்துக்கிறேன் அவள” என்று கோபத்துடன் படுத்து விட்டான்.



மறுநாள் காலை வைதேகியை உணவு உண்ண அழைத்த அவளுடைய அரை தோழிகளுக்கு அவளிடமிருந்து எந்த ஒரு பதிலும் வரமால் ஏதோ ஒரு விதமான முனகல் சத்தமே அவளிடம் இருந்து வரவும், அவளை நெருங்கி போர்வையை விளக்கி நெற்றியில் தொட்டு பார்த்தவர்களுக்கு அவளுடைய உடம்பு நெருப்பாக சுடுவதை கண்டனர்.



ஹே பீவர் ரொம்ப அதிகமா இருக்கேடி நீ இவளை பாத்துக்கோ, நான் போய் வார்டேனுக்கு இன்போர்ம் பண்ணி பஸ் அரேஞ் பண்ண சொல்றேன். அவங்க இவளை பக்கத்துல இருக்க சத்தியபாமா ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டு போவாங்க.



அதன் பிறகு அவளை ஏற்றி கொண்டு ஹாஸ்பிடலிற்கு சென்றனர். ஹாஸ்பிடலில் கொடுத்த மாத்திரையை எடுத்து கொண்ட பின்பு வைதேகிக்கு கொஞ்சம் தேவலாம் போல் தோன்றியது. அன்று இரவு சுவேதாவை அழைத்தவள் தனக்கு பீவர் என்றும், தான் மறுநாள் காலேஜ் வரவில்லை என்றும் கூறி போனை வைத்தாள்.





என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்...
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 17


என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

சண்டே முழுவதும் வைதேகி ரெஸ்ட் எடுத்தால் என்றால், இங்கே அஸ்வந்த்தோ கோபத்திலும் எதுவும் செய்ய முடியாத தன்னுடைய இயலாமையாலும் தன்னுடைய அணைத்து கோபத்தையும் தமிழ் படிப்பதில் காண்பித்தான்.


சொல்லப்போனால் ஒரு வெறி பிடித்தவனை போல் அதனை படித்து கொண்டிருந்தான். இரவெல்லாம் ஒரு பொட்டு தூக்கம் கூட இல்லை, மண்டே பார்த்து கொள்ளலாம் என்று படுத்தவனுக்கு தூக்கமும் அவனை விட்டு பறந்து போனது.



நிமிடத்திற்கு நிமிடம் கோபமும், இயலாமையும் அதிகமாக அப்பவே தமிழை எடுத்து படிக்க ஆரம்பித்து விட்டான்.



அவனை காலை சாப்பாடு சாப்பிட அழைத்து வருமாறு சகுந்தலா சொப்னாவிடம் கூறியதற்கு அவனிடம் இருந்து,”I’m not coming” என்ற ஒரு வரியே வந்தது. சொப்னா வற்புறுத்தியதற்கும் “Please don’t disturb me. I told you na, I’m not coming. Leave me alone” என்று கத்த ஆரம்பித்தான்.



இத்தனை உரையாடல்களும் கதவை திறந்து கொண்டு நடந்ததா என்றால், அதுதான் இல்லை. இரவு பூட்டிய கதவு அப்படியே இருந்தது. அவனை அழைத்து பார்த்து சோர்வுற்ற சொப்னா, சகுந்தலாவிடம் சென்றவள், “leave him grandma, he will come once he feels hungry. Idiot. He is shouting me grandma” என்று அவரிடம் புகார் பத்திரம் வாசித்தவள் அவளுக்கு என்று எடுத்து வைத்திருந்த உணவை ஒரு கட்டு கட்டி விட்டு தன்னுடைய அறைக்கு சென்று விட்டாள்.



மதிய உணவிற்காக கீழே இறங்கி வருகிறானா என்று அவனது ரூமையே பார்த்து கொண்டிருந்த சகுந்தலாவிற்கு, நேரம் ஆகி கொண்டே செல்லவும் அவனை அழைத்து வரும்படி சொப்னாவிடம் கூறியதற்கு, “oh no no grandma” என்று மறுத்து விட்டாள். அவர் அங்கிருந்த வேலைக்காரர்களில் ஒருவரை அனுப்பி அஸ்வந்த்தை அனுப்பி அழைத்து வர சொன்னார். ஆனால் காலையை விட இப்பொழுது அதை விட நிலைமை மோசமாகவும் சகுந்தலாவே நேரடியாக அஸ்வந்தின் ரூமிற்க்கு சென்றார்.



“அஸ்வந்த்” என்ற அவருடைய அழைப்பிற்கு அவனிடம் பதிலிருந்தது.



தன்னுடைய கிராண்ட்மாவின் குரலை கேட்டு வேகமாக எழுந்து சென்று கதவை திறந்தவன் அவரை ஒரு வார்த்தை கூட பேசவிடாமல், “come with me grandma. I have so moany doubts to ask” என்று கூறிக்கொண்டே கிட்டத்தட்ட அவரை இழுத்து கொண்டு கட்டிலில் அமர்ந்தவன் முதல்நாள் இரவிலிருந்து இன்று மதியம் வரை படித்ததில் தனக்கு ஏற்பட்ட சந்தேகங்களை ஒரு நோட்டில் குறித்து வைத்தவன் அவரிடம் காட்டினான்.



அவனையும், அவன் கூறுவதையும் கேட்டு கொண்டிருந்தவரின் மனதில் “something happened” என்று தோன்றியது. அவன் காண்பித்த நோட்டை வாங்கி பார்த்தவருக்கு மயக்கமே வந்து விடும் போல் இருந்தது.



ஏனெனில் அவனுடைய தமிழின் வளர்ச்சி அவரை பிரம்மிக்க வைத்தது ஒரு நாளில் இது எப்படி சாத்தியம் என்று யோசித்து கொண்டிருந்தவருக்கு அப்பொழுது தான் அந்த சந்தேகம் முளைத்தது.



“இவன் நைட் நல்லா தூங்குனானா இல்லையா, இரவு முழுவதும் கண் மூடாமல் படித்தால் ஒழிய இது நடப்பதற்கான சாத்திய கூறுகளே இல்லை”. அதன் பிறகு தான் அவனை நன்றாக உற்று பார்த்தார். கண்கள் முழுவதும் சிவந்து, எதையோ அடைய வேண்டும் என்ற வெறி அவனின் முகத்தில் தெரிந்தது. அஸ்வந்த்தை இந்த கோலத்தில் கண்டவர் அதிர்ந்தார்.



“கண்ணா என்னடா what happened to you?”என்று அவனது முகத்தை இரு கரங்களாலும் தாங்கியவாறு கேட்க… அவருடைய கரங்களில் இருந்து தன்னுடைய முகத்தை வலுக்கட்டாயமாக முகத்தை திரும்பியவன் “pch சொல்லு” என்று கூறினான்.



தான் முதன் முதலில் பேசிய தமிழ் வார்த்தையை உணர்ந்து கூறினானா என்றால் அது தான் இல்லை. இரவு முழுவதும் தமிழ் தமிழ் தமிழ் என்று அதிலேயே மூழ்கி இருந்தவனுக்கு தனக்கே தெரியாமல் அவன் படித்த பொழுது அவனுடைய மனதில் பதிந்திருந்த அந்த வார்த்தை வெளிப்பட்டது.



அஸ்வந்த் அதை உணர்ந்தானோ இல்லையோ சகுந்தலா அதனை உணர்ந்து கொண்டார். ஆனால் அவருக்கு மகிழ்ச்சி தோன்றுவதற்கு பதில் கவலையே ஏற்பட்டது. அவனை முதலில் இந்த அறையில் இருந்து வெளியே கொண்டு வரணும், அப்பொழுது தான் அவன் மனதில் எதனாலோ ஏற்பட்டிருந்த இறுக்கம் குறையும் என்று யோசித்தார்.



“Aswanth have some food first, then I will clarify your doubts. So come with me” என்று அவனை வெளியில் கொண்டுவர முயன்றார்.



ஆனால் அஸ்வந்த், “no grandma… I’m not feeling hungry. I have it later. Now clarify my doubts. Now this is important for me”



இவனை இவன் வழியில் சென்று தான் மடக்க வேண்டும் என்று நினைத்தவர், “k aswanth, now I will clarify your all doubts. But you have to promise me. After we completed this, you must come with me” என்று கிட்டத்தட்ட அவனுடன் டீலிங் பேசினார்.



அந்த டீலிங் அவனிடம் நன்றாகவே வேலை செய்தது. சிறிது நேரம் யோசித்தவன்,”k grandma... I promise you” இதனை அவன் கூறும்போது ஏதோ போனால் போகிறது என்பதை போல் இருந்தது.



“எப்படியோ வெளியில் வந்தால் போதும்” என்று நினைத்தவர், அவனுடைய சந்தேகத்தை எல்லாம் தீர்க்க ஆரம்பித்தார்.



கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு அனைத்தையும் முடித்தவர்.



“Everything is clear na aswanth. K come let’s go”



அவன் போக வேண்டுமா என்பதை போல் தயங்கவும்…



“You promised me aswanth” என்று அவர் கண்டிப்புடன் அவனிடம் கூறவும்…



அவருடைய சொல்லிற்கு கட்டு பட்டு “kk grandma. I’m coming. Let me fresh up first. I’ll join with you within 15 minutes”.



அவர் அவனை சந்தேகமாக பார்க்கவும்…



அத்தனை நேரமும் இருந்த இறுக்கம் ஓரளவு குறைந்தவனாய் அவனுடைய முகத்தில் சிறிதாக புன்னகை கீற்று முளைத்தது.



அவனை பார்த்தவருக்கு அப்பொழுது தான் கொஞ்சம் நிம்மதியாக இருந்தது…



சிரித்து கொண்டே அவனை அடித்தவர், “படவா என்னைய பயமுறுத்திட்ட நீ” என்றார்.



அதனை கூறிய பிறகு தான் தமிழில் தான் பேசியதை உணர்ந்தவர் “oh sorry aswanth. I forgot” என்று அவர் தான் கூறியதை மறுபடியும் கூற வரவும்…



அவரை தடுத்தவன் “No problem grandma. I understand”என்று கூறி சிரித்தான்.



“Wow” என்று அவன் கூறியதற்கு ஆச்சர்யபட்டவர்…”tell me aswanth…what I said?” என்று அவனை பார்த்து கேட்டார்.



அவர் தன்னை நம்பாததால் “ha ha ha” என்று சிரித்தவன் அவரை அணைத்து கொண்டு “you are scared right” என்று கூறி கட்டி கொண்டவன், “sorry” என்று தன்னுடைய தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டான்.



அவனுடைய மனமோ “இதையெல்லாம் எதுக்காக இவ்ளோ அவசரமா படிக்கிறேன்னு நிறைக்கிற ஸ்மைலி, நாளைக்கி உன்னைய பார்க்கும்போது நீ பேசுறது எனக்கு புரிய வேண்டாமா. முழுசா புரியலைனாலும் ஒரளவாது புரியனும்ல அதுக்கு தான்”.



இருந்தாலும் நீ போன் அட்டென்ட் பண்ணாததை மட்டும் என்னால ஏத்துக்க முடியல ஸ்மைலி, இதுக்கு ஏதாவது ஒரு வேல்யபுல் ரீசன் மட்டும் உன்கிட்ட இருந்து வராம இருக்கட்டும் அப்புறம் இருக்கு உனக்கு.



இருக்கும்னு நம்பறேன். ஏன்னா நீ என்னோட ஸ்மைலி…..



“என்னோட கெஸ் படி நீ எதையோ போட்டு குழப்பிட்டு இருக்கேன்னு நினைக்கிறன். அப்படி எதுவும் இருந்தா என்கிட்டே தெளிவா பேசிட வேண்டியது தான. ஏன் போன் அட்டென்ட் பண்ணாம உன்னையும் கஷ்ட படுத்தி என்னையும் கஷ்ட படுத்துற” என்று அவன் பாட்டிற்கு அவள் பேசாததற்கு ஒரு காரணத்தை யோசித்து கொண்டிருந்தான்.



மறுநாள் காலை அவளை பாக்க போகும் மகிழ்ச்சியும், அவள் தன்னுடை போனை எடுக்காததால் தோன்றியிருந்த கோபமும் சேர்ந்த மனநிலையில் காலேஜிற்கு கிளம்பி சென்றான்.



காலேஜில் நுழைந்து எப்பொழுதும் அவளை பார்க்கும் இடத்தில் போய் அமர்ந்தவன், 15 நிமிடத்திற்கு மேல் ஆகியும் அவளை காணாததால் அவனுடைய மனநிலையே ஒரு இடத்தில் நிலை கொள்ளாமல் தவித்தது.



எங்க போனா இவ…. இவ்ளோ நேரம் ஆகியும் ஆள காணுமே…. ஒருவேளை நம்ம தான் அவள பார்க்காம மிஸ் பண்ணியிருப்போமோ…. சேச்சே அப்படியெல்லாம் இருக்காது. மிஸ் பண்ண வாய்ப்பே இல்லை. நான் அவளோட டிபார்ட்மென்ட் முன்னாடி தான உட்கார்ந்துருக்கேன்.



அது மட்டுமில்லாம காலேஜ் ஸ்டார்ட் ஆகுறதுக்கு முன்னாடியே வந்துட்டேனே.



சரி அவ பிரண்டு கிட்டயாவது கேட்கலாம்னு பார்த்தா அவளும் கூட கண்ல சிக்க மாட்டிங்கிறாளே. அரை மணிநேரத்தை கடந்து சென்று கொண்டிருந்தது.



வகுப்புகளும் ஆரம்பமானது. மாணவர்களின் கூட்டமும் குறைய ஆரம்பித்தது, அங்கொன்றும் இங்கொன்றுமாக சென்று கொண்டிருந்தனர். அதற்கு மேல் அங்கே அமர்ந்திருந்தாலும் எந்த ப்ரோயஜனமும் இல்லை என்று தோன்றியிருந்ததால் அவன் அங்கிருந்து கிளம்பி தன்னுடைய வகுப்பிற்கு சென்றான்.



போகும் வழியாவும் ஒரு புறம் அவளுக்கு ஏதாவது உடம்பு சரியில்லாம போயிருக்குமோ என்ற வருத்தமும், மறுபுறம் எங்கே தன்னை தவிர்ப்பதற்காக காலேஜ் லீவு போட்டிருப்பாளோ என்றும் தோன்றியது. அவன் மனமே இரு நிலையிலும் யோசித்து அவனை கலங்கடித்து கொண்டிருந்தது.



சரி மறுபடியும் மதியம் லஞ்ச் டைம்ல வந்து பார்ப்போம் என்று மனதை ஒரு வழியாக சமாதான படுத்தி கொண்டு வகுப்பிற்கு சென்றான்.



அவன் என்னதான் சமாதான படுத்தினாலும், அவனுடைய மனதின் ஒரு மூலையில் சரி இவ தான் நம்மள அவாய்ட் பண்றதுக்காக வரலன்னு வச்சுக்கிட்டாலும் அவளுடைய பிரண்டையும் கூட காணுமே. அது ஏன்? என்று குழம்பி கொண்டிருந்தது.



பாவம் அஸ்வந்த்திற்கு ஒன்று தெரியாதல்லவா…..



அஸ்வந்த்தின் போதாத காலமோ என்னவோ, வைதேகி நேற்று இரவு சுவேதாவிடம் தனக்கு உடம்பு முடியாததால் காலேஜ் வரவில்லை என்று கூறியதும், இவளுக்கும் மறுநாள் அவளில்லாமல் தனியாக வகுப்பில் இருக்க போர் அடிக்க சுவேதாவும் லீவு போட்டு விட்டாள்.



வகுப்பின் உள்ளே நுழைந்த அஸ்வந்த்தை முதலில் வரவேற்றது அசோக் தான், “hey you cut the first class da. But great escape da machaan. Oh my god. It’s really boring” என்று ஆர்ப்பாட்டமாக வரவேற்றான்.



அப்பொழுது வகுப்பில் இரண்டாம் வகுப்பிற்கான ஆசிரியர் இன்னும் வந்திருக்கவில்லை. மாணவர்களும் ஆசிரியர் இல்லாததினால் ஒருவர் மற்றவருடன் அரட்டை அடித்து கொண்டிருந்தனர்.



அசோக் தன்னிடம் தான் பேசி கொண்டிருக்கிறான் என்பதை கூட உணராதவனாய் அவனை கடந்து சென்று அமைதியாக தன்னுடைய இடத்தில் வந்து அமர்ந்தான். வைதேகியை பார்க்க முடியாத வருத்தத்தில் இருந்தவனுக்கு அசோக் சுத்தமாக கவனத்தில் பதியவில்லை.



எப்பொழுதும் அசோக்கை கண்டால் ஒரு சின்ன ஸ்மைல் அல்லது அவன் ஏதாவது கிண்டல் அடித்தால் ஒரு முறைப்பையாவது உதிர்க்கும் அஸ்வந்த், இன்று அமைதியாகவே இருக்கவும், “hey aswanth… what happened da? Why are you so sad man? Any problem?” என்று அவன் கேட்டு கொண்டிருக்கும் போதே அந்த வகுப்பிற்க்கான ஆசிரியர் உள்ளே நுழையவும் அனைவரும் அவருக்கு விஷ் செய்து விட்டு அமர்ந்தனர்.



அசோக் உட்கார்ந்த நிமிடமில்லாமல் அவன் அஸ்வந்த்தின் காதில் “என்ன ஆச்சு” என்று ஆசிரியருக்கு கேட்காதவாறு மெதுவாக கேட்டான். அப்பொழுது அட்டெண்டன்ஸ் எடுப்பதற்காக ஆசிரியர் ஒவ்வொரு பெயராக அழைத்து கொண்டே வந்தவர், அசோக்கின் பெயரை அழைத்தும் அவன் அட்டெண்டன்ஸ் கூறாததால் அவனை நிமிர்ந்து பார்த்தவர், அவன் அஸ்வந்த்திடம் ஏதோ பேசி கொண்டிருக்கவும், “Anything serious matter ashok? Some discussion is going on there. You can tell me also right?” என்று கேட்டார்.



ஆசிரியர் அப்படி கேட்டகவும் என்ன சொல்வது என்று தெரியாமல் ஒரு நிமிடம் திணறியவன், “nothing sir”, என்று கூறிவிட்டு நல்ல பிள்ளையாக அமர்ந்து கொண்டான்.



அந்த பீரியட் முடியும் வரை அமைதியாக இருந்தவன், அதன் பிறகு இன்டெர்வல் வரவும், அப்பொழுது அஸ்வந்த்தை பிடித்து விசாரித்தவனிடம், “Ashok… please da. Already I’m so tired. So leave me alone for sometime” என்று அவனை பார்த்து பாவமாக கேட்டான். ஏனெனில் அஸ்வந்துடைய மனம் அவளை பார்க்காமல் மிகவும் வாடி இருந்தது.



அதன் பிறகு அஷோகாலும் அவனை ஒன்றும் கேட்க முடியவில்லை. சரி ஓகே கொஞ்ச நேரத்துல அவனே நார்மல் ஆகிடுவான் என்று அமைதியாகி விட்டான்.



ஆனால் அன்றைய நாள் முழுவதும் யாரிடமும் ஒரு வார்த்தை கூட பேசாமல் எதையோ யோசித்து கொண்டிருந்தவனாகவே அமர்ந்திருந்தான். அசோக் அவனை மதியம் சாப்பிட அழைத்ததிற்கும் “I have some important work to do. So I can’t able to come with you. You please go” என்று கூறிவிட்டு எங்கேயோ சென்று விட்டான்.



வேறு எங்கே எல்லாம் வைதேகியை தேடி தான் அவளை தேடி ஓய்ந்தது தான் மிச்சம் அவளை காணாமல் அவன் மனம் மிகவும் சோர்வுற்றது.



அவனுக்கு காலையில் கிளம்பும் போது இருந்த கோபம் கூட இப்பொழுது சுத்தமாக காணாமல் போயிருந்தது. அவளை காணாமல் மிகவும் சோர்வுற்றவனாய் வகுப்பிற்கு சென்றான். அவனுக்கு மதிய உணவு கூட உண்ண பிடிக்கவில்லை. எதுவும் சாப்பிட தோன்றாமல் நேராக தன்னுடைய வகுப்பிற்கு சென்று தன்னுடைய இடத்தில் அமர்ந்து தன்னுடைய கண்கள் இரண்டையும் மூடி படுத்து கொண்டான்.



மதிய உணவை முடித்து உள்ளே வந்த அசோக் அஸ்வந்த் அங்கே பெஞ்சில் படுத்திருப்பதை கண்டு வருத்த முற்றவன், அவனை நெருங்கி, “hey aswanth… what happened da? What’s eating on you?” என்று கேட்டதற்கு அவனிடம் பதிலில்லை.



இதற்கு மேல் அவனிடம் என்ன கேட்பதும் என்றும் அவனுக்கு தெரியவில்லை. என்ன பிரச்சனை என்று தெரியாமல் அவனை ஆறுதல் படுத்தவும் அவனால் முடியவில்லை. அசோக் அவனிடம் எதுவும் பேசாமல், அவனை கவனிக்க ஆரம்பித்தான்.



அவனையே கவனித்து கொண்டிருந்தவனுக்கு, அஸ்வந்த் கடைசி வகுப்பு ஆரம்பிப்பதற்கு முன்னே தன்னுடைய பாக்கை எடுத்து கொண்டு எங்கேயோ கிளம்பு வதை பார்த்தவன், அவனுக்கே தெரியாமல் அவனும் தன்னுடைய பாக்கையும் எடுத்து கொண்டு அவனை பாலோ பண்ணினான்.



அங்கே அஸ்வந்த் EEE டிபார்ட்மென்ட் முன்னாடி இருந்த கட்டையில் அமர்ந்து யாரையோ தேடி கொண்டிருப்பதை கண்டவனுக்கு தீடீரென்று அஸ்வந்த் ஒரு பொண்ணை பற்றி தன்னிடம் ஒரு நாள் கூறியது நினைவிற்கு வந்தது.



அதனை நினைத்தவனுக்கு அஸ்வந்த்தை நினைத்து சிரிப்பு தான் வந்தது. “அவளை பார்க்கிறத்துக்காக தான் இவன் இன்னிக்கு இப்படி இருந்தானா” என்று மனதிற்குள்ளே சிரித்தவன். அவனை தொடர்ந்து கண்காணிக்க ஆரம்பித்தான்.



ஆனால் நேரம் செல்ல செல்ல அசோக்கின் முகத்தில் சிரிப்பு மாறி, அதில் கவலை தொற்றி கொள்ள ஆரம்பித்தது.



ஏனெனில் அங்கே அஸ்வந்த் யாரையோ தேடி அவர்களை காணாமல் அவன் முகத்தில் தோன்றி கொண்டிருந்த வருத்ததையும், சோர்வையும் கண்டவனுக்கு அதற்கு மேல் அஸ்வந்த்தை வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டு இருக்க விரும்பவில்லை.



அவனை நெருங்கியவன் அவனின் தோளின் மீது கைவைத்து அஸ்வந்த் என்று அழைத்தான். அசோக்கை அங்கு எதிர் பார்க்காததால், முதலில் அஸ்வந்த்திற்கு அதிர்ச்சியே தோன்றியது.



ஆனால் கொஞ்ச நேரத்தில் அவனுக்குள் அசோக் அவனை தேடி வந்திருந்தது ஒரு விதமான நிம்மதி ஏற்பட்டது.



அஸ்வந்த்தின் முகத்தில் தோன்றிய நிம்மதியை கண்டு திருப்தியுற்றவன், அவனின் அருகில் அமர்ந்து, “are you waiting for someone?” என்று அவனது கண்களை நேராக பார்த்து கேட்டான். அவனுடைய கண்களில் இதற்கு மேல் மறைக்க முயற்சிக்காதே என்ற செய்தி மறைந்திருந்தது.



இதற்கு மேலும் அஸ்வந்த் அசோக்கிடம் எதையும் மறைக்க விரும்பவில்லை. அவனுக்கு யாரிடமாவது தன்னுடைய மனதை அழுத்தி கொண்டிருக்கின்ற விசயத்தை கொட்டி தீர்க்க வேண்டும் போல் இருந்தது. அதனால் தான் அவனுக்கு அசோக்கை கண்டதும் ஒரு விதமான நிம்மதியே மனதில் குடி கொண்டது.



அவன் எதையும் மறைக்காமல் பீனீக்சில் ஆரம்பித்து இப்பொழுது தனது மனதில் தோன்றி கொண்டிருக்கும் உணர்ச்சிகள் வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.



அசோக்கிற்கு அஸ்வத்தின் மனநிலை நன்றாகவே புரிந்தது. ஆனால் அவனுக்கு எதை சொல்லி ஆறுதல் படுத்துவது என்று தான் புரியவில்லை.



ஆனால் அஸ்வந்த்தை இப்படியே விடவும் அவனுக்கு மனமில்லை. “Relax da aswanth. Everyting will be fine tomorrow. Don’t take it serious” எதையும் தேவையில்லாமல் நீயே கற்பனை பண்ணி கொள்ளாதே. நாளை எல்லாம் சரி ஆகி விடும் என்று சமாதான படுத்தி அவனை அங்கிருந்து அழைத்து சென்றான்.



இருவரும் கல்லூரி பேருந்தில் ஏறி அவரவர் வீட்டுக்கு புறப்பட்டனர். அசோக்கிடம் அனைத்தையும் கூறிவிட்ட பிறகு அஸ்வந்த்திற்கு கொஞ்சம் தேவலாம் போல் இருந்தது.



சரி நாளை காலேஜில் அவளை பார்த்து கண்டிப்பாக பேச வேண்டும் என்று நினைத்து கொண்டு வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு தெரியவில்லை இன்னும் ஒரு வாரத்திற்கு அவளை பார்க்க முடியாது என்று.





என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்.......
 
Status
Not open for further replies.
Top