All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணி பாஸ்கரனின் "என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே...!!!" - கதை திரி

Status
Not open for further replies.

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 24 (3)

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

இதோ அதோ என்று சொப்னா அமெரிக்கா கிளம்பும் நாளும் வந்தது. அன்று காலையிலேயே யாதவ் அஸ்வந்த் வீட்டிற்கு வந்து விட்டான்.


அவனின் வரவில் மிகவும் மகிழ்ச்சியுற்ற சொப்னா அவனை அழைத்து கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றாள். ஆனால் வழியில் எதிர் பட்ட சாவித்ரியை பார்த்த யாதவிற்கோ என்ன செய்வது என்றே தெரியவில்லை சாவித்ரி தன்னை ஒரு மாதிரியாக பார்க்க அவனோ அதே இடத்தில் தேங்கி நின்றான்.



அவனோ அவரை பார்த்து சிறிய புன்னகையாவது உதிர்க்க முயன்றான். ஆனால் அதுவோ அவனுக்கு வருவேனா என்று ஆட்டம் காட்டி கொண்டிருந்தது.



ஆனால் சொப்னாவோ இதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் இல்லை. அவள் யாதவ் வந்த மகிழ்ச்சியில் “come yaadhav” என்று கிட்டத்தட்ட அவனை இழுத்து கொண்டு தன்னுடைய அறைக்கு சென்றாள்.



யாதவ் வேறு வழியில்லாமல் அவரை பார்த்து கஷ்டப்பட்டு சிறிய புன்னகை சிந்திவிட்டு சொப்னாவின் இழுப்பிற்கு அவளுடன் சென்றான்.



ஆனால் சற்று திரும்பி பார்த்திருந்தால் சாவித்ரி கண்களில் தெரிந்த கோப அக்னியில் பஸ்பமானாலும் ஆகியிருப்பான். அவரது மனமோ நடத்துடா நடத்து இன்னிக்கு ஒரு நாள் தான உங்க ஆட்டமெல்லாம். அப்புறம் தெரியும்டா இந்த சாவித்ரி யாருன்னு என்று வன்மமாக நினைத்தார்.



அஸ்வந்த்தும் மறுநாள் காலேஜில் ஸ்போர்ட்ஸ் டே அதனை தொடர்ந்து கல்ச்சுரல்ஸ் டேவும் நடக்க இருப்பதால் காலேஜில் ஆங்காங்கே மாணவர்கள் வகுப்புகள் எதுவும் இல்லாததால் சுற்றி கொண்டு இருக்க, கல்ச்சுரல்ஸில் பார்ட்டிசிபேட் பண்ணிருந்தவர்கள் அதன் வேலையாக தீவிரமாக மூழ்கியிருந்தனர்.



காலேஜிற்கு சென்ற அஸ்வந்த்திற்கோ எதுவும் வேலையில்லாமல் போர் அடிக்க சிறிது நேரம் அசோக்குடன் சுற்றி திரிந்தவன் வைதேகியையும் காணமுடியாமல் போக அதன் பிறகு காலேஜில் இருக்க பிடிக்காமல் லீவு போட்டு விட்டு வீட்டிற்கு கிளம்பி விட்டான்.



வீட்டிற்குள் நுழைந்த அஸ்வந்த்திற்கு சொப்னாவின் அறையிலிருந்து சிரிப்பு சத்தம் கேட்கவும், அவள் ரூமிற்கு சென்று பார்த்தவன் அங்கு யாதவும், சொப்னாவும் ஏதோ ஒரு ஆல்பத்தை பார்த்து சிரித்து கொண்டிருப்பதை பார்த்தவன், அவர்களின் அருகில் சென்று என்ன வென்று பார்க்க அதை பார்த்து அதிர்ந்து அந்த ஆல்பத்தினை வேகமாக மூடினான்.



ஆல்பத்தில் வந்த ஒவ்வொரு படத்தையும் யாதவிர்க்கு காண்பித்து எப்பொழுது எடுத்தது என்று சொல்லி கொண்டும், சில போட்டோசை பார்த்து சிரித்து கொண்டும் இருந்தவர்கள் திடிரென்று யாரோ வந்து ஆல்பத்தை மூடவும் அது யாரென்று நிமிர்ந்து பார்த்தனர். அங்கே அஸ்வந்த் சொப்னாவை முறைத்து கொண்டு நின்றான்.



அவனை அப்பொழுது அங்கே பார்த்த சொப்னாவுக்கு போட்டோவில் பார்த்த அஸ்வந்த் ஞாபகத்திற்கு வர அதை அவள் இப்பொழுது கற்பனை செய்து பார்த்து அடக்கமாட்டாமல் சிரித்தவள், “That dress looks so good for you” என்று கூறினாள். ஏற்கனவே தன்னுடைய சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியாமல் திணறி கொண்டிருந்த யாதவிர்க்கு சொப்னா கூறியதை கேட்டதும் அவனும் அஸ்வந்த்தை பார்த்து சிரிக்க ஆரம்பித்து விட்டான்.



அப்படி அந்த படத்தில் என்ன இருந்தது என்று பார்த்தால் ஏழு வயது அஸ்வந்த் ரோஸ் கலரில் இருந்த கவுனையும், ஐந்து வயது சொப்னா பாண்ட் ஷிர்ட்டும் அணிந்து நின்று கொண்டிருந்தனர். அதை பார்த்து தான் சொப்னா அவனை கிண்டலடித்து கொண்டிருந்தாள்.



“Sorry da aswanth” என்று தான் சிரித்ததற்காக யாதவ் மன்னிப்பு கேட்க.



“Hey don’t” என்று யாதவை தடுத்தவன், எல்லாம் இவளை சொல்லணும் என்று சொப்னாவின் தலையில் அவன் கொட்ட போக.



அதற்குள் அஸ்வந்த் என்ன செய்ய போகிறான் என்று அறிந்து கொண்ட யாதவ் சொப்னாவை தன் புறமாக இழுத்து கொண்டான் அவளை காப்பதை போல.



அவனின் செயலில் அஸ்வந்த்திற்கு யாதவை கண்டு அத்தனை பெருமையாக இருந்தது. தான் கணித்தது சரியே. இனி சொப்னாவை யாதவ் நன்றாக பார்த்து கொள்வான் என்ற அவனின் உறுதி இன்னும் அதிகரித்தது.



ஆனால் இதை எதையும் வெளியில் காட்டி கொள்ளாமல், “Finally you got bodyguard” என்று சொப்னாவை பார்த்து சிரித்து கொண்டே கூறியவன், அன்று மாலை சொப்னா அமெரிக்கா கிளம்ப இருந்தததால் அவர்களுக்கு தனிமை கொடுத்து விட்டு கிளம்பினான்.



ஆனால் சொப்னா விட்டால் தானே அவனையும் அருகில் அமர வைத்து கொண்டு விட்ட படத்திலிருந்து யாதவிர்க்கு காண்பிக்க ஆரம்பித்தாள்.



பேச்சும் சிரிப்புமாக அன்றைய பொழுது கடந்தது. மாலை அனைவரும் சொப்னாவின் குடும்பத்தை வழி அனுப்பி வைப்பதற்காக ஏர்போர்ட்டிற்கு சென்றிருந்தனர்.



யாதவிர்க்கு அத்தனை நேரம் இருந்த துணிச்சலெல்லாம் பறந்து போக அவளை தன்னுடனே வைத்து கொள்ள வேண்டும் என்பதை போல் மனம் பர பரக்க ஆரம்பித்தது. அவனால் சுத்தமாக அங்கே நிற்க முடியவில்லை.



அவளிடம் தனிமையில் பேசுவதற்காக ஏங்க ஆரம்பித்தான். ஆனால் சொப்னாவின் பக்கத்திலேயே சாவித்ரி நின்று கொண்டிருந்ததால் அவனால் எதுவும் செய்ய முடியாமல் சொப்னாவையே ஏக்கத்துடன் பார்த்து கொண்டு நின்றான்.



மற்றவர்களிடம் பேசி கொண்டிருந்தாலும், யாதவின் மேல் ஒரு பார்வையை வைத்திருந்த சொப்னாவிற்கு அவன் தன்னுடன் தனிமையில் பேச விரும்புவதை அவனின் கண்களில் தெரிந்த தவிப்பினை கொண்டே புரிந்து கொண்டவள், சாவித்ரியை பார்த்து, “Mom, wait for me. I have some important talk with yaadhav. I will be back” என்று கூறியவள், அவரின் பதிலுக்கு கூட காத்திராமல் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று சிறிதும் கண்டு கொள்ளாதவளாய் யாதவின் கையை பிடித்து தன்னுடன் அழைத்து சென்றவள் கூட்டம் அதிகம் இல்லாத இடத்திற்கு சென்று நின்றாள்.



அவனை தனக்கு நேராக நிறுத்தியவள், “Now tell me what’s going on your mind?” என்று கேட்டாள்.



அவனால் அதற்கு மேல் முடியவில்லை. அவனுடைய மனதின் போராட்டத்தை தாங்கி கொள்ள முடியாதவனாய் அவளை வேகமாக இழுத்து அணைத்தவன் அவள் சுதாரிக்கும் முன் அவளுடைய இதழையும் அழுத்தமாக சிறை செய்திருந்தான்.



அவனுடைய மனதின் பாரத்தை குறைக்க அவளின் இதழில் மூழ்கியவனின் செயல் அவளுக்கு எதையோ உணர்த்த தவிக்க, அவனுடைய அணைப்பும் இறுகி கொண்டே போனது.



சொல்ல போனால் அவளை ஒரு பொம்மையை போல் கையாண்டு கொண்டிருந்தான். தனக்கு பிடித்தமான பொருளை யாராவது தன்னிடம் இருந்து பிடுங்க முயற்சித்தால் எப்படி பிஹேவ் பண்ணுவோமோ அதை போல் இருந்தது அவனுடைய செயலும்.



அவனின் இதழ் ஒற்றலில் உள்ளுக்குள் உருகி கரைந்தவளுக்கு அவனின் இந்த தீடிர் செயலிற்கான காரணமும் புரியாமல் இல்லை. அதனால் அவனை மிகவும் கஷ்டபட்டு தன்னிடமிருந்து விலக்கியவள், “Please da yaadav. Calm yourself” என்று அவன் தலை முடியை தன்னுடைய விரல்களால் கோதினாள்.



அவளுடைய கையை எடுத்து தன்னுடைய கைகளுக்குள் வைத்து கொண்டு அவளை நிமிர்ந்து பார்த்தவனின் முகத்தை கண்டவளுக்கு ஐயோ இவன விட்டு எப்படி இருக்க போறேன்னு தெரியலையே என்று தான் தோன்றியது.



ஏனெனில் அவனுடைய முகம் திருவிழாவில் தொலைந்து போன குழந்தையை போல் தோன்றியது.



“Don’t leave me alone sopna. Please be with me” என்று அவளை கெஞ்சுதலாக வினவினான். அவனுக்கு அவளை தன்னை விட்டு அனுப்புவதில் துளியும் விருப்பமில்லை. இத்தனை நாள் தனிமையில் வாழ்ந்து கொண்டிருந்தவனுக்கு, தன்னுடைய துரு துரு செயலினால் அந்த இடத்தையே மகிழ்ச்சியாய் மாற்றிவிடும் சொப்னாவினால் உலகத்தை புதுமையாக பார்க்க ஆரம்பித்திருந்தவனுக்கு திரும்பவும் பழைய நிலைமைக்கு செல்ல அத்தனை கொடுமையாக இருந்தது.



“Yaadhav, Please understand my situation also da. My visa also got completed. I have to go now. I will be back soon” என்று அவனுக்கு பொறுமையாக விளக்க.



“When?” என்று சிறு குழந்தையை போல் அவளை பார்த்து ஆர்வமாக கேட்டான்.



இப்பொழுது அவளால் சுத்தமாக முடியவில்லை. அவனின் ஒவ்வொரு சிறு பிள்ளை தனமான செயலும் அவளை அவனை விட்டு செல்வதை நினைத்து மிகவும் வருத்தியது. இன்று அவள் வளர்ந்தும் சிறு பிள்ளையாக தோன்றியிருந்த யாதவை தான் பார்த்து கொண்டிருந்தாள். அவன் பாசத்திற்காக ஏங்குவது அவளை தவிப்பில் ஆழ்த்தியது.



அவனை ஒரு முறை அணைத்து விலகியவள், “I will be back as soon as possible. Come let’s go” என்று கூறிவிட்டு அவனை அழைத்து கொண்டு சென்றாள்.



அவர்கள் அனைவரும் கிளம்பும் பொழுது சாவித்ரி மட்டும் திரும்பி யாதவை ஒரு மாதிரி பார்த்தார். அதை யாதவ் கவனித்தானோ இல்லையோ அஸ்வந்த்தின் கண்ணில் அது பட்டது. அவர் எதற்காக அப்படி பார்த்தார். என்ன மாதிரியான பார்வை அது என்று அவன் எவ்வளவோ யோசித்து பார்த்தும் அவனுக்கு அதனின் அர்த்தம் புரியாமல் அதை அப்படியே விட்டுவிட்டான்.



ஆனால் இன்னொருவரும் அதை கவனித்து விட்டதை அஸ்வந்த்தும் உணர வில்லை, சாவித்திரியும் உணரவில்லை. அதனால் அவருடைய திட்டங்கள் அனைத்தும் பாழாக போவதையும் அவர் உணர்ந்திருந்தால் எச்சரிக்கையாக இருந்திருப்பாரோ என்னவோ......



அன்று காலேஜில் ஸ்போர்ட்ஸ் டே என்பதால் அஸ்வந்த் நிதானமாக கிளம்பி காலேஜிற்கு சென்றான். அவனுக்கு விளையாட்டின் மீதெல்லாம் அத்தனை ஆர்வம் கிடையாது. அவனிடம் யாரவது வந்து ஹே நான் மேட்ச்சில வின் பண்ணிட்டேன் என்று சொன்னால் ஓ அப்படியா காங்கிராட்ஸ் என்று கூறி நகர்ந்து விடுவான்.



அதனால் காலேஜ் போக விருப்பம் இல்லாமல் நேற்றும் வைதேகியை பார்க்க முடியாததால் இன்றாவது பார்க்கலாம் என்று காலேஜிற்கு சென்றிருந்தான்.



ஆனால் அவனின் கண்ணில் அன்று காலையும் வைதேகி படாமல் போக எரிச்சலுடன் தன்னுடைய வகுப்பில் அமர்ந்திருந்தவனை அசோக் வந்து இன்னும் அதிகரித்து கொண்டிருந்தான்.



அன்று ஒரு நாள் அவன் கால் பண்ணி போனை உடைத்ததற்கு பிறகு அவன் வைதேகிக்கு கால் பண்ண முயற்சித்ததில்லை. அவளே பண்ணட்டும் அப்புறம் நம்ம பண்ணலாம் என்று நினைத்திருந்தவன், அவளிடம் எந்த ஒரு காலும் வராததால் அவனும் அதற்கு பிறகு பண்ணவில்லை.



“Hey aswanth come with me da. Interesting matches are going on in our ground” என்று அவனை மேட்ச் போய் பார்ப்பதற்காக வற்புறுத்தி அழைத்து கொண்டிருந்தான்.



“I’m not coming ashok. You just go. It must be boring” என்று கூறி அவன் மறுக்க



அவன் மறுப்பை எல்லாம் கண்டு கொள்ளாதவனாய் அவனை தன்னுடன் அசோக் கிரௌண்டிற்கு இழுத்து சென்றிருந்தான்.



அஸ்வந்த் மிகுந்த எரிச்சலுடன் அங்கு நின்று கொண்டிருந்தான். அவனுக்கு எப்பொழுதடா அங்கிருந்து போவோம் என்றிருந்தது. ஆனால் அவனை போக விடாமல் அசோக் அவனுடைய கைகளை கெட்டியமாக பிடித்து கொண்டிருக்க அவன் ஏனோ தானோ என்று தனக்கு முன்னே நடந்து கொண்டிருந்த கேமை பார்த்து கொண்டிருந்தான்.



அப்பொழுது அங்கே பாஸ்கெட்பால் கேம் விளையாடி கொண்டிருந்தனர். அங்கு தங்களுடைய கல்லூரி மாணவிகளும், வேறு கல்லூரி மாணவிகளும் போட்டி போட்டு கொண்டிருந்தனர்.



சிறிது நேரத்தில் அங்கிருந்த வேடிக்கை பார்த்து கொண்டிருந்த மாணவர்கள் உற்சாகமாக கத்த துவங்க அங்கே கோட்டினுள் விளையாடி கொண்டிருந்த ஒரு பெண் பாலினை தூக்கி பாஸ்கெட்டினுள் போட்டு தன்னுடைய அருகில் இருந்த மற்றொரு விளையாட்டு பெண்ணிடம் கையால் தட்டினாள். இருவரும் சமமாக இருந்த நிலையில், தங்களுடைய கல்லூரிக்கான முதல் கோல் என்பதால் கை தட்டல்களும், விசில்களும் பறந்து கொண்டிருந்தது.



அசோக்கும் உற்சாகமாக விசிலடித்து கொண்டிருக்க அப்படி என்னத்த பாக்குறான் என்று அங்கு நடந்து கொண்டிருந்த கேமினை அஸ்வந்த் உன்னிப்பாக கவனிக்க ஆரம்பித்தவன், அங்கு கண்ட காட்சியில் திறந்த வாய் மூடாமல் அப்படியே நின்று விட்டான்.



அங்கே வைதேகி லாவகமாக தன்னுடைய எதிர் அணியினரிடம் இருந்து பந்தினை கை பற்றி பாஸ்கெட்டினை நோக்கி முன்னேறி கொண்டிருந்தாள்.





என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்...................
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 25 (1)

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

பந்துடன் பாஸ்கட்டினை நோக்கி முன்னேறிய வைதேகி தன்னுடைய டீமிற்கான அடுத்த கோலையும் எடுத்து கொடுத்தாள்.


அங்கே கிரௌண்டில் ஒரே அமர்க்களமாக இருந்தது.


போட்டியாளர்களின் அனல் பறக்கும் திறமைகளும், மாணவர்களின் கைதட்டல், விசில் பறக்கும் சத்தங்களும் அந்த இடத்தையே ஸ்போர்ட்ஸ் டேவிற்கான அனைத்து அம்சங்களும் நிரம்பி வழிய காரணமாக காட்சி அளித்து கொண்டிருந்தது.


உற்சாகமாக விசிலடித்த படி தங்களது கல்லூரி மாணவிகளின் பாஸ்கெட்பால் விளையாட்டினை பார்த்து கொண்டிருந்த அசோக் அப்பொழுது திடீரென்று கோல் போட்ட பெண் எதிர் அணியினில் இருந்த ஒரு பெண்ணின் கால் தடுக்கி கீழே விழுந்தாள்.


ஆனால் அவள் எதுவும் நடவாததை போல உடனே எழுந்து நார்மல் ஆகிவிட. அது அங்கே விளையட்டை பார்த்து கொண்டிருந்தவர்களின் இடையில் சிறு சல சலப்பை ஏற்படுத்தியது.


ஐயோ பாவம் அந்த பொண்ணு. அடி எதுவும் பற்றுக்கோமோ. பலமா விழுந்த மாதிரி தான இருந்துச்சு என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டே போனவன் அப்பொழுதுதான் தன்னுடன் வந்த அஸ்வந்த்தின் ஞாபகம் வந்தவனாய் அவனை திரும்பி பார்த்தான்.
அவனின் முகத்தை பார்த்தவனுக்கு குழப்பமே மிஞ்சியது.



அஸ்வந்த்தின் முகம் பாறையை போல் இறுகி போய் அவனை நெருங்கி பேசுவதற்கே அச்சத்தை விளைவிப்பதை போல் இருந்தது.


இவனுக்கு என்னாச்சு. ஏன் இப்படி இருக்கான் என்று அவன் யோசித்து கொண்டே அவன் பார்வை சென்ற திசையை பார்க்க அங்கே அவன் கண்டது கொஞ்ச நேரத்திற்கு முன்பு கீழே விழுந்த பெண்ணையே அஸ்வந்த்தின் பார்வை தொடர்ந்து கொண்டு இருப்பதை கண்டவனுக்கு குழப்பம் இன்னும் அதிகரிக்கவே செய்தது.


அவன் அஸ்வந்த்தின் தோள்களை தொட அவன் அவனை பார்த்த பார்வையின் அர்த்தம் அசோக்கிற்கு சுத்தமாக புரியவில்லை, அவனை புரியாத பார்வை பார்த்தவன், “what happened da? Any problem?” என்று கேட்டான்.


“Nothing” என்று மட்டும் சொல்லி திரும்பவும் அவளையே பார்க்க ஆரம்பித்தவன், சிறிது நேரத்தில் அசோக்கை திருப்பி பார்க்க, அசோக் அப்பொழுதும் அஸ்வந்த்தை தான் பார்த்து கொண்டிருந்தான்.


“Do have tincture and cotton with you?” என்று கேட்டான்.


அசோக்கிற்கு சுத்தமாக அவன் பேசுவது ஒன்றும் புரியவில்லை. அத வச்சு இவன் என்ன பண்ண போறான் என்று புரியாமல் விழித்தவன், “for what?”


ஏற்கனவே கடுப்பில் இருந்தவன், அசோக்கின் கேள்வியில் இன்னும் எரிச்சல் அடைந்தவன், “have or not” என்று பல்லை கடித்து கொண்டே கேட்டான்.


“No da. I don’t have it” என்று கூறியதை கேட்டு அஸ்வந்த்தின் முகம் சுருங்குவதை கண்டவன், திடிரென்று ஞாபகம் வந்தவனாய், “hey aswanth, there is always one first aid box is in our class” என்று கூறினான்.


அதில் அவனுடைய முகம் தெளிவுற, “come. I want it now”.


“What? Now? No da I’m not coming. I want to see this game. This is really interesting. You please go” என்று கூறி அவன் விட்ட கேமை பார்க்க ஆரம்பிக்க…..


அஸ்வந்த் அதையெல்லாம் கேட்டால் தானே, இப்பொழுது அஸ்வந்த்தின் முறையானது அசோக்கை இழுத்து செல்வதில். அவனை இழுத்து கொண்டு தன்னுடைய வகுப்பிற்கு சென்றவன். தனக்கு தேவையானதை எடுத்து கொண்டு கேம் நடந்த இடத்திற்கு அவனுடன் வந்து சேர்ந்தான். ஆனால் அவர்கள் வந்து சேர்வதற்குள் அந்த விளையாட்டு ஏற்கனவே முடிந்திருந்தது.


அது அஸ்வந்த்திற்கு இன்னும் வசதியாக போக அசோக்கை மறந்தவனாய் அவன் கண்கள் வைதேகியை தேடியது.


அசோக்கும் அஸ்வந்த்தையெல்லாம் மறந்தவனாய் அப்பொழுது யார் வின் பண்ணியது என்று அங்கிருந்த மாணவர்களிடம் கேட்டு கொண்டிருந்தான்.


அவர்கள் தங்கள் கல்லூரியே என்று கூறியதில் சந்தோச பட்டவன் அஸ்வந்த்திடம் அந்த விஷயத்தை கூறுவதற்காக அவனை தேட அவன் அந்த இடத்தில் இருந்தால் தானே.
அங்கே வைதேகி இருக்கிறாளா என்று தேடியவன் அங்கே அவள் தன்னுடைய சக தோழிகளுடன் சிரித்து பேசி கொண்டிருப்பதை கண்டவன் வேகமாக அவளருகே நெருங்கி அவள் கைப்பற்றி தன்னுடன் அழைத்து சென்றான்.



அப்பொழுது அங்கே நின்று வைதேகியுடன் பேசி கொண்டிருந்த சில தோழிகள் ஒரு ஹேண்ட்ஸமான பையன் தங்களை நோக்கி நடந்து வரவும் விழி விரித்து பார்த்து கொண்டிருந்தவர்கள் அவன் வைதேகியின் கை பற்றி அழைத்து செல்லவும் அவர்களுக்குள் பொறாமை கொழுந்து விட்டு எரிந்தது. இவளுக்கு கிடைத்த அதிஷ்டத்தை பாருடி என்று சிலர் முணுமுணுக்கவும் கூட செய்தனர்.


திடிரென்று ஒருவர் தன்னுடைய கையை பற்றவும் அதிர்ந்து நிமிர்ந்தவள், அது அஸ்வந்த் என்றதும் தான் அவளுக்கு நிம்மதியாக இருந்தது.


அவனை இரண்டு நாள் பார்க்க முடியாதது, இன்று வெற்றி பெற்றது என்று அவள் வாய் ஓயாமல் அவனுடன் பேசி கொண்டே வந்து கொண்டிருந்தாள்.


அவள் இருந்த மகிழ்ச்சியில் அஸ்வந்த் தான் கூறிய எதற்கும் பதிலளிக்க வில்லை என்பதை கூட உணராமல் பேசி கொண்டே அவனுடன் நடந்து கொண்டிருந்தாள்.


அவளை அழைத்து கொண்டு மர நிழல் விழும் படி வெயில் தெரியாமல் இருந்த கட்டையில் போய் அமர்ந்தவன் அப்பொழுதும் வாய் ஓயாமல் தனக்கு எதிரில் நின்று பேசி கொண்டிருந்தவளை பிடித்து இழுத்து அருகில் அமர வைத்து கொண்டான்.


அப்பொழுது தான் அவனின் முகத்தை ஒழுங்காக பார்த்தவள், அவன் அவளை முறைத்து கொண்டு இருப்பதை கண்டு புரியாமல் விழித்தாள்.


அவன் அவளுடைய இடது கையை தூக்க அவளுக்கு அஸ்வந்த்தின் செயல்கள் ஒன்றும் புரியவில்லை. "என்னங்க ஆச்சு” என்று புரியாமல் கேட்டாள்.


அதில் இன்னும் அவளை அதிகமாக முறைத்தவன், தன்னுடைய கையில் வைத்திருந்த பஸ்ட்டு ஏய்டு பாக்ஸை அவன் திறக்க அப்பொழுது தான் அவன் கையில் வைத்திருந்த பாக்ஸை கண்டு பதட்டமான வைதேகி, “என்னங்க என்ன ஆச்சு எங்கயாவது விழுந்துட்டீங்களா எங்க அடிபட்டிச்சு” என்று அவள் அவனுடைய கை கால்களை எல்லாம் கண்களால் பதட்டமாக அலச


என்ன மாதிரி பெண் இவள் நான் இவ கீழ விழுதிருக்காளேன்னு மெடிசின் எடுத்துட்டு வந்தா இவ அவளை பத்தி யோசிக்காம எனக்கு எதாவது ஆச்சோன்னு பதட்ட படுறாளே என்று அவளின் பால் கரைய தொடங்கிய மனம், சற்று முன்பு அவன் கேமில் கண்ட காட்சி அவனுக்கு திரும்பவும் கண் முன் தோன்ற அவனுடைய கோபமெல்லாம் அவள் மேல் பாய்ந்தது.


கேமில் அவள் கீழே விழுந்தது எதர்ச்சியாக இருப்பதை போல் மற்றவர்களுக்கு தோன்றினாலும், அதனை உற்று பார்த்தால் ஒழிய இது வேண்டும் என்றே செய்தது என்பதை யாராலும் கண்டு பிடிக்க முடியாது.


அவனுடைய கோபத்திற்கு காரணம் ஒரு கேம் விளையாடுறவ இப்படி தான் அஜாக்கரதையா இருப்பாளா கொஞ்சமாவது கவனம் இருக்க வேணாம் என்பது தான்.
அவளுக்கு பதிலளிக்காமல் அவளின் இடது கையை தூக்கி முட்டியில் ஏற்பட்டிருந்த காயத்தினை அவன் டெட்டால் வைத்து தொடைக்க.



முதலில் அவன் கையை தூக்கும் போது புரியாமல் அவனையே பார்த்து கொண்டிருந்தவள், அவன் டெட்டால் வைத்து அடிபட்ட இடத்தை துடைக்கவும் தான், தான் விளையாடும் போது கீழே விழுந்ததே அவளுக்கு நினைவு வந்தது.


அவன் டெட்டாலால் சுத்தம் செய்த இடத்தில் சிறிது டிஞ்சர் வைத்து விட


அது அவளுக்கு எரிச்சலை கொடுக்க அவள் ‘ssssss’ என்று அவனை பார்த்து கொண்டே வலியை பொறுக்க. அத்தனை வழியிலும் அவளுக்கு அஸ்வந்த்தை அணைத்து கொள்ள வேண்டும் போல் கைகள் பர பரக்க கல்லூரியாக இருப்பதால் தன்னை கட்டு படுத்தி கொண்டவள் அவனையே சிரித்த முகமாக பார்த்து கொண்டிருக்க…


அனைத்தையும் முடித்து விட்டு அவளை நிமிர்ந்து பார்த்த அஸ்வந்த் அவள் சிரித்த முகமாக தன்னை பார்த்திருப்பதை கண்டவன், அவள் சிரிப்பில் தடு மாறினாலும் தன்னை கட்டுப்படுத்தி கொண்டவனாக அவளை பார்த்து கோபமாக பேச ஆரம்பித்தான்.


அவனின் கோபத்தில் தன்னை மறந்தவனாய் அவன் தமிழை உபயோக படுத்தி கொண்டிருக்க அவளுக்கு அவனுடைய கோபமெல்லாம் சுத்தமாக மூளைக்கு சென்றடையாமல், அவளுடைய காதல் கொண்ட மனம் அவனின் வாய் மொழியாக வந்த தமிழ் வார்த்தைகளை ரசித்து கொண்டிருந்தது.


அதில் அவன் கேட்ட ஒரு வரி "அறிவுன்றது கொஞ்சமாவது இருக்கா" உனக்கு என்று கேட்டிருந்தான். அவன் கேட்டதற்கு அவன் ஏன் அதை சொல்கிறான் என்பதையாவது அவள் கேட்டிருக்க வேண்டும் ஆனால் அவள் அவன் தன்னை திட்டி முடித்த பிறகு அவனுக்கு தான் சொன்ன ஒரு பதிலோ எதற்கும் சம்பந்தம் இல்லாத ஒன்று.


ஆனால் அந்த வார்த்தை அவனுடைய கோபத்தை எல்லாம் விலக செய்து முகத்தில் அத்தனை பிரகாசத்தையும், மகிழ்ச்சியையும் கொண்டு வந்திருந்தது.


“ஐ லவ் யு மாமா” என்று கண்களில் கண்ணீர் நிறைந்திருக்க முகமெல்லாம் சந்தோசமாக அவன் தன்னவன் என்கிற கர்வமும் சேர அவனை பார்த்து கூறினாள்.




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்......
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 25 (2 )

என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

அவள் ஐ லவ் யு என்று சொன்னதை கேட்டவனுக்கு அவனின் மனதில் விவரிக்க முடியாதளவு தோன்றியிருந்த மகிழ்ச்சியை சந்தோசம் தளும்பிய உணர்ச்சியை அவளுக்கு எப்படி உணர்த்துவது என்று தெரியாமல் திணறி கொண்டிருந்தான்.


அவள் முதன் முறையாக அவனை பார்த்து தன்னுடைய காதலை வெளிபடுத்திருக்கிறாள்.



அன்று ஒரு நாள் பீனிக்ஸ் மாலில் வைத்து தன்னுடைய காதலை அவன் வெளிப்படுத்தியிருந்தாலும், அவள் அதற்கு தனது மௌனம் என்ற மொழியினை கொண்டு தன்னுடைய காதலை அவனுக்கு உணர்த்தியிருந்தாலும், இன்று தான் அவள் அவனிடம் முதன் முறையாக தன் மனதை வாய் மொழியாக அவனுக்கு வெளி படுத்தியிருந்தாள்.



அதை கேட்டவனுக்கு அத்தனை நேரம் அவள் மீதிருந்த கோபம் எல்லாம் துணிக்கொண்டு துடைத்தை போன்று சுத்தமாக இருந்த இடம் தெரியாமல் காணாமல் போயிருந்தது.



அவன் தன்னுடைய மகிழ்ச்சியை அவளுக்கு எப்படி வெளிபடுத்துவது என்று புரியாமல் அவர்கள் இருந்த இடம் அவனை கட்டி போட்டது. ஆனால் அவனுக்கு அவனுடைய ஸ்மைலியை இறுக்கி அணைத்து அவளுடைய அணைப்பில் புதைந்து போக வேண்டும் போல் உள்ளுக்குள் தவித்து கொண்டிருந்தவன், அவளிடம் அதை உணர்த்த முடியாத கவலையில், “"எங்க வச்சு எதடி சொல்ற” என்று அவளை பாவமாக பார்த்து கொண்டே கேட்டான்.



இப்பொழுதெல்லாம் அஸ்வந்த் தான் உணர்ச்சி வசபடும் பொழுதும், தன்னிலையை இழக்கும் பொழுதும் அவனுக்கு தமிழ் அவனை அறியாமல் சரளமாக வெளியில் வந்தது. இப்பொழுதும் அப்படி தான், தான் என்ன மொழியில் பேசுகிறோம் என்பதை கூட உணராமல் அவளிடம் பேசி கொண்டிருந்தான்.



வைதேகிக்கு சிறு வயதிலிருந்து ஒரு பழக்கம் இருந்தது, அவளுக்கு யாரை மனதிற்கு மிகவும் பிடிக்கிறதோ, இல்லை நெருக்கமாக உணர்கிறாளோ அவர்களிடம் மட்டுமே தன்னுடைய குறும்பு தனத்தை வெளி படுத்துவாள்.



இப்பொழுது அஸ்வந்த் அவளை பார்த்து கேட்ட கேள்வியில் அவளுடைய குறும்புதனம் தலை தூக்க, அவன் ஏன் தன்னை பார்த்து அப்படி சொல்கிறான் என்று புரிந்தே இருந்தவள் அவனை பார்த்து “இங்க வச்சி இத மட்டும் தான் சொல்ல முடியும்” என்று அவனை பார்த்து தன் கன்னம் குழிவில சிரித்து கொண்டே சொல்லியவள் இறுதியில் அவனை பார்த்து கண்ணடித்து வேறு வைத்தாள்.



அவளின் செயலிலும் பேச்சிலும் அவனின் கண்களில் அப்பட்டமாக அவளின் மேலுள்ள மயக்கம் தெரிய என்னோட ஸ்மைலிக்குள்ள இப்படி ஒரு கேரக்டர் கூட ஒளிஞ்சிருக்கா என்று அதனை ரசித்தவன், உன்னைய ரொம்ப அமைதியான பொண்ணுன்னு தப்பா கணக்கு போட்டுட்டேன் இப்ப தான் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி கேம் விளையாடி ஷாக் குடுத்தேன்னு பார்த்தா இப்போ அடுத்ததா… ஆனா உன்னோட எல்லாமே எனக்கு பிடிச்சு தாண்டி இருக்கு என்று நினைத்தவன் தான் நின்று கொண்டிருந்த இடத்தை எல்லாம் கிடப்பில் தூக்கி போட்டவனாய் இதற்கு மேல் என்னால் சும்மா கையை கட்டி கொண்டு இருக்க முடியாது என்று மனதில் முடிவெடுத்தவனாய் அவளை நெருங்கினான்.



ஏதோ ஒரு துணிச்சலில் அவனை பார்த்து சொல்லிவிட்டாள். அதை கேட்டு அவன் தன்னை நெருங்குவதை பார்த்தவளுக்கு அப்பொழுது தான் தாங்கள் இருக்கும் இடம் கருத்தில் பதிய அவனை பார்த்து பதறியவளாய் “என்னங்க இது காலேஜ்” என்று பதட்டத்துடன் கூறினாள்.



அதற்கு அவனோ கூலாக “இதை நீ என்கிட்டே அந்த வார்த்தையை சொல்றதுக்கு முன்னாடியே யோசிச்சிருக்கணும்” என்று அவன் சிரித்த படியே அவ்வளவு நேரமும் தங்கள் இருவருக்கும் இடையில் சிறு இடைவெளி விட்டு அமர்ந்திருந்தவன் அவளை மிகவும் நெருக்கமாக ஒட்டி கொண்டு அமர்ந்தான்..



அதில் அவள் பதறியவளாய் அவசரமாக அவளுடைய கண்கள் தங்களை சுற்றி ஆராய்ந்தது.



நல்லவேளை அவள் நல்ல நேரமோ என்னவோ அவர்கள் இருந்த இடத்தில் அந்த அளவிற்கு மாணவர்கள் நடமாட்டம் இல்லை. அந்த பக்கமாக போய் கொண்டிருந்த சிலரும் கூட இவர்கள் ஓரமாக அங்கிருந்த கட்டையில் அமர்ந்திருந்ததால் அவர்களும் கண்டு கொள்ளாதவர்களாய் தங்களுக்குள் பேசி கொண்டு சென்று கொண்டிருந்தனர்.



அப்பாடி நல்ல வேள யாரும் பாக்கல என்று அவள் நிம்மதியாய் நினைக்க கூட விட மாட்டாதவனாய் அவளின் குழி விழும் கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டிருந்தான்.



அவனின் அழுத்தமான முதல் முத்தத்தில் அவளும் சுற்று புறத்தை மறந்தவளாய் கண்களை மூட, அவனோ தன்னுடைய இரு கைகளினால் அவளின் முகத்தை பூ போல் தாங்கியவன் ஸ்மைலி என்று மென்மையாக அழைத்தான்.



அதற்கு அவளிடம் இருந்து “ஹ்ம்ம்” என்ற ஒரு வார்த்தையே பதிலாக வந்தது. ஆனால் அவள் கண்ணை மட்டும் திறந்த பாடில்லை.



அதில் இன்னும் சொக்கி போனவன் தாங்கள் இருக்கும் இடத்தை மனதில் கொண்டு “ஸ்மைலி ப்ளீஸ் கண்ணை திறந்து என்ன பாரேன் என்னால இதுக்கு மேல இங்க இருந்தா நல்ல பையனா இருக்க முடியும்ன்னு தோணலடி” என்று அவன் தன் மனதில் தோன்றி கொண்டிருக்கின்ற புது விதமான உணர்வுகளை கட்டு படுத்தி கொள்ள முடியாதவனாய் தொண்டை கர கரக்க அவளிடம் கூறினான்.



அதில் அவள் பட்டென்று கண்களை திறக்க. அப்பொழுது அவனுடைய முகம் தன்னுடைய முகத்தை ஒட்டி நெருக்கமாக இருப்பதை கண்டவளுக்கு அவளுடைய கண் இமைகள் பட்டாம் பூச்சியை போல் பட பட வென்று அடித்தது. அவனின் கண்களில் தெரிந்த காதலில் அவளுடைய இதயமும் வேகமாக துடிக்க தொடங்க அவனை ஒரு வித பதட்டத்துடன் ஏறிட்டாள்.



அதில் இன்னும் அவளிடம் தன்னை இழந்தவன் இதுக்கு மேல இங்க இருப்பது சரி வராது. அதன் பிறகு தன்னாலே தன்னை கண்ட்ரோல் பண்ண முடியாமல் போய்விடும், தங்களை யாரேனும் பார்த்து விட்டால் தங்களுடைய படிப்பும் கேள்விக்குறியாகின்ற வாய்ப்பும் இருந்ததால் தனக்குள் ஒரு முடிவெடுத்தவனாய் அவளின் மறு கன்னத்திலும் அழுத்தமாக முத்தம் ஒன்றை பதித்தவன் அவளை அங்கிருந்து அழைத்து கொண்டு அவளுடைய டிபார்ட்மெண்டை நோக்கி நடந்தான்.



ஆம் அஸ்வந்த் நினைத்தது அனைத்தும் உண்மையே எந்த அளவிற்கு மாணவர்களுக்கு அந்த கல்லூரி சுதந்திரம் கொடுக்கிறதோ, அதே அளவிற்கு டிசிப்பிளீனிலும் பெயர் பெற்ற கல்லூரியாக அது விளங்கியது.



அந்த ஒரு பெயருக்காகவே பெற்றவர்களும் தங்களது குழந்தைகளை எந்த ஒரு பயமும் இன்றி இந்த கல்லூரியில் சேர்கின்றனர்.



அவளை டிபார்ட்மெண்டில் விட்டவன், அவள் அவனை புரிந்து கொள்ள முடியாமல் அவனை ஏன் என்ற கேள்வியை கண்களில் சுமந்தவளாய் அவனை பார்க்க அவளை பார்த்த மென்மையாக சிரிப்பொன்றை உதித்தவன், அவளை போ என்று அவளை போலவே கண்களால் கூறினான்.



அவள் எதுவும் புரியாதவவளாய் அவனுக்கு கட்டு பட்டு உள்ளே போக எத்தனிக்க அவளை சட்டென்று கைகளை பிடித்து நிறுத்தியவன், “Thanks for everthing smilie. I’m very happy today” என்று சந்தோசமாக கூறியவன், “And one more thing, நாளைக்கி உனக்கு ஒரு surprise waiting. See you tomorrow” என்று கூறிவிட்டு அவன் நகர போக, அவனை தடுத்து நிறுத்தியவள், “என்னங்க surprise” என்று அவனை பார்த்து ஆவலுடன் கேட்டாள்.



அதில் அவளை பார்த்து சிரித்தவன், “that’s the surprise smilee. I can’t tell you now” என்று அவளுடைய மூக்கை செல்லமாக பிடித்து ஆட்டியவன் “bye” என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.



இரவு முழுவதும், அது என்ன சர்ப்ரைஸாக இருக்கும் என்று யோசித்து யோசித்து அவளுடைய மண்டையே வெடிப்பதை போல் இருக்க, பேசாம அவங்களுக்கு கால் பண்ணி கேட்டா தான் என்ன என்று யோசித்தவள், வேணாம் வேணாம் நாமளே கண்டு பிடிப்போம் என்று திரும்ப திரும்ப யோசித்தவள் இறுதியில் முடியாமல் அவனுக்கு முதல் முறையாக அவளுக்கு அன்று அவன் கால் பண்ணியிருந்த போது மனதில் பதிந்திருந்த அவனுடைய எண்ணிற்கு ஒரு ஆர்வத்தில் கால் பண்ணியிருந்தாள்.



அவனுக்கு ரிங் போன பிறகு தான் ஐயோ என்ன பண்ணிட்டு இருக்க வைதேகி என்று அவளுடைய மூளை அவளுக்கு எடுத்துரைக்க அவள் கட் பண்ண போவதற்குள் அவன் மறுமுனையில் “ஸ்மைலி” என்று அழைத்திருந்தான்.



இவருக்கு என்னோட நம்பர் இன்னும் ஞாபகம் இருக்கா என்று அவளுடைய மனம் கேள்வி கேட்க, அவளுடைய இன்னொரு மனமோ உனக்கே ஞாபகம் இருக்கும் போது அவனுக்கு ஞாபகம் இருக்காதா என்று இடித்துரைத்து.



அதற்குள் அவன் பல முறை “ஸ்மைலி ஸ்மைலி” என்று மறுமுனையில் கத்திருந்தான். அவனுக்கு தான் எதிர் பார்த்ததை போல் அவளே தனக்கு கால் செய்ததில் அத்தனை சந்தோசம். அதனால் அவன் உடனே போனை அட்டென்ட் பண்ணி பேச ஆரம்பித்து விட்டான்.



அவள் என்ன பேசுவது என்று தெரியாமல் நேரடியாக "என்ன சர்ப்ரைஸ்ன்னு சொல்லுங்களே" என்று கேட்டு விட்டிருந்தாள்.



அதில் அவன் மறுபக்கம் பலமாக சிரிக்க ஆரம்பிக்க. அதில் இவளுக்கு ஏனென்று தெரியாமல் கோபம் வந்து "நீங்க ஒன்னும் ஏன் கிட்ட சொல்ல வேண்டாம் போங்க" என்று போனை கட் பண்ணி இருந்தாள்.



அவன் "ஹே ஸ்மைலி" என்று கூறுவதற்குள் அவள் போன் கட்டாகி இருந்தது. அதில் அவளை செல்லமாக கடிந்து கொண்டவன், அவளுக்கு மறுபடியும் அழைக்க அவள் கட் பண்ணி கொண்டே இருந்தாள், “சரி உன்னைய நாளைக்கி பார்த்துகிறேன்” என்று சிறிது நேரத்தில் அவனும் அவளுக்கு அழைப்பதை நிறுத்திவிட்டு நாளைக்கு அவளுக்கு தான் தர போகின்ற சர்ப்ரைஸில் மூழ்கிவிட்டான்.



அவளும் அவனை திட்டி கொண்டே உறங்கி விட்டாள்.



மறுநாள் காலேஜில் கல்ச்சுரல்ஸ் டே என்பதால் என்ன டிரஸ் போடுவது என்று தன்னுடைய பெட்டியை ரொம்ப நேரமாக புரட்டி கொண்டிருந்தவள் கையில், அஸ்வந்த் தனக்கு பீனிக்ஸ் மாலில் எடுத்து கொடுத்த மெரூன் கலர் சல்வார் கையில் மாட்டியது.



அதனை ஆசையுடன் வருடியவள், அதனை குளித்துவிட்டு அணிந்து கொண்டாள்.



அவளுடைய அரை தோழிகள் அனைவரும் அவளுடைய ட்ரெஸ்ஸை பார்த்து வியந்து போய் "ஏய் எங்க டி வாங்குன இந்த ட்ரெஸ்ஸ சூப்பரா இருக்கு" என்று அதனை தொட்டு பார்த்தவர்களின் கையை பட்டென்று தட்டி விட்டாள். அந்த ட்ரெஸ்ஸை கூட என்னை தவிர யாரும் தொட கூடாது என்ற எண்ணம் அவளுள் எழுந்தது.



அவள் எப்பொழுதும் அப்படி தான் தனக்கு ஒன்றை பிடித்திருந்தால் அதை தான் ஒருத்தி மட்டுமே சொந்தம் கொண்டாட வேண்டும் என்று நினைப்பவள், அதில் மற்றவர்கள் யாரும் பங்கு கொள்ள கூடாது என்று நினைப்பாள். அப்படி தான் அஸ்வந்த் வாங்கி கொடுத்ததை மற்றவர்கள் தொட்டு பார்ப்பது கூடஅவளுக்கு பிடிக்கவில்லை.



அவளுடைய நேசரை அறிந்திருந்த சில தோழிகள் அதை கண்டு கொள்ளாமல் சென்று விட்டனர். சிலர் அவளின் செயலில் அவளை முறைத்து விட்டே சென்றனர்.



அவள் அதை பற்றி எதையும் கண்டு கொள்ளாதவளாய் காலேஜிற்கு புறப்பட்டு சென்றாள்.



அங்கே அவளுக்கு முன்பாக சுவேதா அங்கு வந்து காத்திருந்தவள், வைதேகியை பார்த்து "ஏய் இது உன்னோட ஆள் வாங்கி கொடுத்த டிரஸ் தான" என்று சந்தேகமாக கேட்க.... அவளின் கேள்வியில் சட்டென்று அவளுடைய முகம் சிவந்து விட அவளை பார்த்து சிரித்த சுவேதா “இந்த டிரஸ் உனக்கு ரொம்ப நல்லா இருக்குடி. nice selection இந்தா உனக்காக பூ வாங்கிட்டு வந்தேன். இத வச்சிக்கோ” என்று தான் வாங்கி வந்திருந்த குண்டு மல்லியை அவளுக்கு கொடுத்து தலையில் வைத்துக்கொள்ள கூறினாள்.



அதன் பிறகு இருவரும் விழா நடந்து கொண்டிருந்த இடத்தை நோக்கி சென்றனர். வைதேகியின் கண்கள் அஸ்வந்த் எங்காவது தென்படுகிறானா என்று தேடி கொண்டே சுவேதாவுடன் சென்று கொண்டிருந்தது.



வைதேகி உள்ளே நுழைந்தவுடன் அஸ்வந்த் அவளை பார்த்துவிட்டான். அவன் அவளுக்காக எடுத்து கொடுத்த சல்வாரில் தேவதை போல் இருந்தவளை கண் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருந்தவன், “என்னய கொல்ர டி ஸ்மைலி” என்று தன்னால் எதுவும் செய்ய முடியாத நிலையில் தனக்குள்ளே புலம்பி கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தான்.




என்னைச் சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்.........
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

என்னை சிரிப்பால் சிதைத்தவளின் அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள் நண்பர்களே.....

Link

ESS 26.pdf
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

என்னை சிரிப்பால் சிதைத்தவளின் அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள் நண்பர்களே.....

Link

ESS 27.pdf
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரண்ட்ஸ்,

என்னை சிரிப்பால் சிதைத்தவளின் அடுத்த அத்தியாயத்தை பதிந்து விட்டேன். படித்து விட்டு எப்படி இருக்கின்றது என்று சொல்லுங்கள் நண்பர்களே.....

Link

ESS 28.pdf
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அத்தியாயம் 29


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்


சொப்னா சிரித்த முகமாக அனைவருக்கும் காபியை கொடுத்துவிட்டு கடைசியாக சாவித்ரியையும் பார்த்து சிரித்து வைத்தாள்.


சாவித்ரிக்கு மகளின் செயலை கண்டு மயக்கம் வராத குறை தான். எப்படியும் தங்களிடம் ஏதாவது அடம் பிடிப்பாள் இல்லையென்றால் வந்தவர்களின் முன் ஏதாவது கோபமாக பேசுவாள் என்று எதிர்பார்த்திருந்த சாவித்ரிக்கு சொப்னாவின் சிரித்த முகம் ஒரு பக்கம் குழப்பமாகவும் மறுப்பக்கம் சந்தோசமாகவும் இருந்தது.



சாவித்திரிக்கு மனதின் ஒரு மூலையில் கவலை இருந்து கொண்டே இருந்தது. தான் பார்த்து பார்த்து ஒவ்வொரு விதமாக காய் நகர்த்தி கொண்டு வந்தவருக்கு சொப்னா அதனை கலைப்பதோடு மட்டுமல்லாமல் வந்தவர்களின் முன் தன்னை அவமதித்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை அவருள் இருந்து கொண்டே இருந்தது.



சொப்னா இந்த கல்யாணத்தை தடுத்திருந்தாலும் அவர் எப்படியேனும் அதை நடத்தி விடலாம் என்பதில் அவருக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை. என்ன தான் இருந்தாலும் மற்றவர்களின் முன் தான் தலை தாழ்ந்து போக கூடாது என்ற கவலை, ஈகோ என்று சொல்ல வேண்டுமோ அவரை உறுத்தி கொண்டிருந்தது.



அதனால் சொப்னாவின் செயலை நினைத்து யாதவை விட அழகிலும், பணத்திலும் நிறைந்திருந்த ரிஷியை கண்டு அவள் மயங்கி மனம் மாறி விட்டதாக அவர் நினைத்து கொண்டார்.



ஆனால் அவரது இன்னொரு மனமோ சொப்னாவை நம்பாதே என்று அவரை எச்சரித்து கொண்டே இருந்தது. ஏனெனில் சொப்னாவின் குணத்தை நன்கு அறிந்தவர் ஆயிற்றே. அவள் இத்தனை வருஷத்தில் சொப்னாவின் விருப்பம் இன்றி எந்த ஒரு விஷயத்திலும் அவளை திணிக்க முடியாது. அதனால் தான் அவரின் மனம் அவரை எச்சரித்தது. ஆனால் அவருக்கு அவள் என்ன செய்து விட போகிறாள் என்ற அசட்டு தைரியம் அது மட்டுமில்லால் அவள் சென்னையில் உள்ளவர்களுக்கு விஷயத்தை கூறி அவர்கள் இங்கு வந்து தன்னை கேள்வி கேட்பதற்குள் அனைத்தையும் முடித்து விடலாம் என்ற அசட்டு தைரியத்தால் சொப்னாவை நன்றாக கண்காணிக்க தவறியிருந்தார்.



ரிஷியின் குடும்பத்திற்கு சொப்னாவை ரொம்ப பிடித்திருந்தது. கணேசனின் நண்பர் என்பதால் பலமுறை சொப்னாவை பார்த்ததுன்டு அதனால் மற்றதை பற்றி எல்லாம் எதையும் யோசிக்காமல் எப்போ எங்கேஜ்மெண்ட் வைத்துக்கொள்ளலாம் என்று நேரடியாக விசயத்திற்கு வந்தனர். அப்பொழுது ரிஷி அவனுடைய தந்தையை பார்த்து “one minute dad” என்று கூறியவன்



கணேசனையும், சாவித்ரியையும் பார்த்து “can I talk to sopnaa for a minute” என்று கேட்டான்.



சாவித்ரி அதற்கு முந்தி கொண்டவராய் “No problem rishi” என்று ரிஷியிடம் கூறியவர் சொப்னாவை பார்த்து “take him to your room” என்று கூறினார்.



சொப்னாவோ அவர் கூறியதை கேட்டு மிகவும் நல்ல பிள்ளையாய் “K mom” என்று சொல்லிவிட்டு “come” என்று கூறி அவனை தன்னுடைய அறைக்கு அழைத்து சென்றாள். அங்கு சென்ற பிறகு சொப்னா தன்னுடைய இரு கைகளையும் கட்டி கொண்டு சிரித்த முகமாகவே பார்த்தாள். அவளின் சிரித்த முகத்தை கண்டவனுக்கு மனதில் குதூலகம் எழ அவளை பார்த்து பேச ஆரம்பித்தான்.



“Hi sopnaa…. I’m Rishi. U already know me right? என்று பேசி கொண்டே போனவன் அவளிடம் எதுவும் பதிலில்லாமல் போகவும் “Do you like me?” என்று நேரடியாக கேட்டான்.



அதற்கு அவளோ ஒரு மாதிரியாக சிரித்தாள். அவனுக்கு அவளின் சிரிப்பிற்கான அர்த்தம் புரியவில்லை அவன் அவளையே புரியாமல் பார்த்தான் அதற்கு அவளோ “Did you finished your talking?” என்று கேட்டாள்.



அதற்கு ஆம் என்பதாக தலையாட்டியவன் “but….” என்று இழுக்க அவளோ அதனை கண்டு கொள்ளாதவளாய் அறையை விட்டு வெளியில் சென்றாள். அவள் கீழே இறங்கி சென்ற பிறகு அவன் மட்டும் என்ன செய்வான் அவனும் அவள் பின்னேயே நடந்து வந்தான்.



கீழே இறங்கி வந்த இருவரையும் பார்த்த சாவித்ரிக்கு ரிஷியின் குழப்பமான முகம் அவரை சிறிது யோசிக்க வைத்தாலும் தன்னுடைய மகளின் முகத்தில் மறையாதிருந்த சந்தோசம் அவரை யோசிக்க விடாமல் தடுத்தது.



அதன் பிறகு அவர்கள் அனைவரும் நல்ல நாள் பார்த்து விட்டு சொல்லுங்கள் என்ற பதிலோடு செல்ல. ரிஷி மட்டும் அந்த வீட்டை விட்டு போகும் பொது சொப்னாவை திரும்பி பார்த்தான். அப்பொழுதும் சொப்னா தாங்கள் வரும்போது எப்படி இருந்தாலோ அப்படியே முகத்தை வைத்திருக்க அவனுக்கு ஏதோ முரண்பாடாக இருப்பதை போலவே தோன்றியது. ஏனெனில் சொப்னாவை இதற்கு முன் ஓரிரு முறை பார்த்தது மட்டுமில்லாமல் அவளிடம் பேசியும் இருக்கிறான். அப்பொழுது இருந்த சொப்னாவுக்கும் இப்பொழுது தான் பார்க்கும் சொப்னாவுக்கும் அதிக வித்யாசம் தெரிந்தது.



அவனுக்கு அவளுடைய செயல் ஏதோ சரியில்லை என்றே தோன்றியது. அவளை கண்காணிக்க அவன் முடிவு செய்தான். ஏனெனில் அழகும் பணமும் நிறைந்திருந்த சொப்னாவை இழப்பதற்கு அவனுக்கு என்ன பைத்தியமா என்ன...



ஆனால் சொப்னாவை பற்றி அவ்வளவாக தெரிந்திருக்கவில்லை. அவன் ஆரம்பிக்கும் முன்னேயே எல்லாத்தையும் முடித்துவிட்டாள் என்று. நீ ரொம்ப லேட் தம்பி போ போய் வேற வேல இருந்தா பாரு என்று விதி அவனை பார்த்து சிரித்தது.



அவர்கள் அனைவரும் சென்றவுடன் சொப்னாவை பார்த்து பேச வந்த சாவித்ரியை கண்டு கொள்ளாதவளாய் விடு விடுவென்று தன்னுடைய அறைக்குள் சென்றவள் அங்கு தான் ஏற்கனவே தயார் பண்ணி எடுத்து வைத்திருந்த சூட்கேசுடன் தான் போட்டிருந்த லாங் டைப் பிராக்கை மாற்றிவிட்டு ஜீன்ஸ் டீஷிர்டில் தன்னுடைய அறையிலிருந்து வெளியேறி தன்னுடைய அன்னையின் முன்பு வந்து நின்றவள் இத்தனை நேரம் தன்னுடைய முகத்தில் வலுக்கட்டாயமாக பூசி கொண்ட அதே புன்னகையுடன் “Bye mom, bye dad” என்று கூறிவிட்டு அவள் வாசலை நோக்கி சென்றாள்.



சாவித்ரிக்கு அவள் தீடிரென்று சூட்கேசுடன் வந்து பை சொல்லிவிட்டு எங்கோ கிளம்புவதை கண்டு ஒன்றும் புரியாதவராய் “where are you going sopnaa?” அவருக்கு அனைத்தும் நல்ல படியாக முடிந்ததில் மிகுந்த சந்தோஷமும் கொண்டவராய் சாதானமாகவே கேட்டார். அவருக்கு அந்த நிமிடத்திலும் சொப்னாவின் மேல் சந்தேகம் வரவில்லை இத்தனை நாள் அவள் எதுவும் தங்களை எதிர்த்து பேசாமல் அதுவும் இப்பொழுது அவர்கள் போகும் வரையிலும் கூட அமைதியாகவே இருந்ததால் அவள் மாறிவிட்டதாகவே அவர் நினைக்க ஆரம்பித்தார்.



சாவித்ரி கேட்ட கேள்விக்கு அவளோ கூலாக “Chennai” என்று கூறிவிட்டு மேலும் நடக்க....



அவள் கூறிய பதிலில் ஒரு நிமிடம் அதிர்ந்தாலும் “stop right there” என்று அவர் கத்திகொண்டே அவள் முன்னே போய் நின்று அவளை கோபமாக முறைத்தார்.



அவரின் கோபத்தை எல்லாம் அலட்சியம் செய்தவளாய் அவரை நேருக்கு நேராக பார்த்து “why should I?” என்று அலட்சியமாக கேட்டாள்.



அது அவருடைய கோபத்தை இன்னும் அதிகரிக்க “go to your room sopnaa….” என்று அவர் தன்னுடைய கோபத்தை காட்ட...



ஆனால் அதற்கெல்லாம் அசராமல் சொப்னா அதே இடத்திலேயே நிற்க….



“If you are not… I will break your legs” என்று அவர் அவளை மிரட்ட...



அவர் கூறியதை கேட்டு பயம் கொள்வதற்கு பதிலாக சொப்னா அவரை பார்த்து பெருங்குரலெடுத்து சிரிக்க ஆரம்பித்தாள்.



அவள் சிரிப்பதை கண்டு அவர் அவளை குழப்பத்துடன் பார்க்க.... அப்பொழுது அங்கே லாண்ட்லைன் போனில் ரிங் அடித்தது.



“Go mom… answer the phone. It’s for you only” என்று அவள் சிரித்து கொண்டே கூற...



போனை எடுத்து காதில் வைத்து ஹலோ சொன்னவருக்கு அந்த பக்கத்திலிருந்து வந்த செய்தி அவரை அப்படியே அதே இடத்தில் உறைந்து நிற்க வைத்தது.



அதற்குள் அவர்கள் வீட்டின் காலிங் பெல்லின் ஒலி கேட்க சாவித்ரி இன்னும் அதிர்ச்சியிலிருந்து மீளாமல் இருப்பதை கண்ட கணேசன் அவரே சென்று யாரென்று பார்க்க அங்கு வீட்டிற்கு வெளியில் இரண்டு போலீஸ் கான்ஸ்டபிள் நின்று கொண்டிருந்தனர்.



அவர்களை பார்த்து இவர்கள் எதற்காக இங்கு வந்திருக்கிறார்கள் என்று முதலில் புரியாமல் குழம்பியவர் சற்று நேரத்தில் அனைத்தும் விலங்கிவிட அவர் அதிர்ச்சியுடன் சொப்னாவை திரும்பி பார்த்தார். அவளுக்கு அவரின் ரியாக்ஷனை கண்டு சிரிப்பு பொத்து கொண்டு வர அதனை கஷ்டபட்டு அடக்கியவள் அங்கு வந்திருந்த கான்ஸ்டபிளை நோக்கி சென்றவள் “hello sir. I’m sopna” அவள் கை குலுக்க.....



“Oh kk fine ma. Inspector already told everything. He said, he will call you and inform before we reach here. Did he called you? என்று அவர் கேட்க.....



“Ya sir. He called just now. My mom only attend his call” என்று சொல்லி கொண்டே தன் அன்னையை திரும்பி பார்த்தவள் அவர் நடப்பது அனைத்தும் நம்ப முடியாமல் பிரம்மை பிடித்தவரை போல் அதே இடத்தில் அசைய கூட மறந்து நின்று கொண்டிருப்பதை கண்டவள்



“I already packed everything sir. Give me two minutes” என்று அவரை பார்த்து சொல்லி விட்டு தன் அன்னையிடம் சென்றவள் “Bye mom. I’m leaving from here. I won’t come back” என்று சொல்லிவிட்டு திரும்பி நடந்தவள். சற்று தூரம் சென்று அவரை திரும்பி பார்த்து, “I know everything mom. Still I have some hope on you. You spoiled everything.But I saved your dignity” என்று கூறிவிட்டு அதன் பிறகு அவரை திரும்பி பார்க்கவும் விருப்பம் இல்லாதவளாக அந்த வீட்டை விட்டு வெளியேறி போலீஸ் ஜீப்பிலேயே ஏறி ஏர்போர்ட்டிற்கு சென்றாள்.



பிளைட்டில் ஏறுவதற்கு முன்பாக யாதவிர்க்கு அழைத்து தான் வரும் நேரத்தையும் மற்றதை எல்லாம் அங்கு வந்து பேசி கொள்ளலாம் என்று சொல்லிவிட்டு போனை சுவிட்ச் ஆப் செய்யவும் அங்கு அவள் போவதற்கான பிளைட்டிற்கான அனௌன்ஸ்மென்ட் வருவதற்கும் சரியாக இருக்க பிளைட்டின் உள்ளே சென்று தன்னுடைய இடத்தில் போய் அமர்ந்தாள்.



அதன் பிறகு தான் அவளுக்கு நிம்மதியாக மூச்சே விட முடிந்தது. அப்பா ஒவ்வொன்றயும் செய்து முடித்ததை விடவும் யாதவை அவள் சமாதான படுத்துவதற்குள் தான் அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது. அவனிடம் ஏண்டா சொன்னோம் என்ற அளவிற்கு அவளை பாடாபடுத்தி எடுத்து விட்டான்.



அவனை நினைத்தவுடன் அவள் முகமெல்லாம் புன்னகை பூக்க அப்படியே கண்ணை மூடி கொண்டவளின் உள்ளே யாதவ் வலம் வர ஆரம்பித்தான். அன்று தன்னை வழியனுப்பி வைக்கும் போது அவளை விட்டு பிரிய முடியாமல் அவனுடைய இறுக்கமான அணைப்புகளும், அவளின் உள்ளேயே சென்று விடுபவனை போன்றிருந்த அழுத்தமான இதழ் ஒற்றல்களும் அவளுக்கு உள்ளுக்குள் சிலிர்ப்பை ஏற்படுத்த அவள் கை தானாக உயர்ந்து தன்னுடைய இதழை வருடி பார்த்தது. அவளுடைய மனமோ “அன்னிக்கு நான் ஒரு கிஸ் பண்ணதுக்கு என்னமோ ரொம்ப ஸீன் போட்ட நீ மட்டும் என்ன ஒழுங்காடா rascal my sweet rascal” என்று அவனை செல்லமாக கடிந்தது.



அதன் பிறகு அவனிடம் தான் இங்கு நடந்து கொண்டிருக்கின்ற ஏற்பாடை சொன்னதை கேட்டு அவன் பண்ணிய அட்டகாசங்களை நினைத்து அவளுக்கும் இப்பொழுதும் சிரிப்புதான் வந்ததது.



நான் இப்போவே கிளம்பி வரேன். நான் தான் அப்போவே சொன்னேன்ல உங்க அம்மாவை நம்ப வேண்டாம்னு. நீ தான் என் பேச்ச கேட்கல. நான் அங்க வந்து உன்ன என்னோட கூட்டிட்டு வந்துறேன் என்று கிளம்ப ஆரம்பித்தவனை சமாளிப்பதற்குள் அவளுக்கு போதும் போதும் என்றாகி விட்டது.



அவளுக்கு சென்னையிலிருந்து கிளம்பும் போது எதேர்ச்சியாக திரும்பி தன்னுடைய அன்னையை பார்த்தவள் அவர் யாதவை ஒருமாதிரி பார்ப்பதை கண்டுவிட்டாள். அங்கிருந்து தான் அவளுக்கு அவர் மேல் சந்தேகமே வர ஆரம்பித்தது.



அதன் பிறகு அவள் அவருக்கே தெரியாமல் அனைத்தயும் கண்காணிக்க ஆரம்பிக்க அவருடைய திட்டமும் அவளுக்கு மெல்ல மெல்ல புரிய ஆரம்பித்தது. முதலில் அதனை நம்ப மறுத்தாலும் ரிஷி தன்னை நடுவில் எதேச்சையாக சந்திப்பதை போல் பார்த்து தன்னிடம் உரிமையெடுத்து பேசியதை கண்டவளுக்கு அதன் பிறகு சிறிதும் சந்தேகம் தோன்றவில்லை.



அதனை உறுதி படுத்திய பின்பு யாதவிடம் அவள் சொன்னதற்கு தான் அவன் அங்கே வருவதாக ஆடம் பிடித்தது எல்லாம். இதில் என்ன ஒரு நல்ல விஷயம் ஆரம்பத்தில் சந்தேகம் வந்த உடனே அவள் தன்னுடைய கல்லூரியில் இருந்து செர்டிபிகேட் வாங்குவதற்கான ஏற்பாடுகளையும் மற்ற இந்தியாவில் நிரந்தரமாக தங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் அப்பொழுதே ஆரம்பித்து விட்டதால். கடைசி நேரத்தில் அவள் எதற்காகவும் தயங்குவதற்கான அவசியமே ஏற்படவில்லை.



அந்த ஒரு காரியம் தான் யாதவையும் வர விடமால் தடுப்பதில் அவளுக்கு மிகவும் உதவியது.



சென்னையிலிருந்து கிளம்பியதிலிருந்து அமெரிக்காவில் இப்பொழுது கிளம்பியவரை அனைத்தையும் யோசித்து கொண்டிருந்தவள் அப்படியே உறங்கியும் விட மறுநாள் சென்னையில் வந்து இறங்கியவள் யாதவ் அவளுக்காக அங்கே நின்று கொண்டிருப்பதை கண்டாள்.



என்னதான் அவளுக்காக பார்த்து பார்த்து தன்னை ரெடி பண்ணி வந்திருந்தாலும்... சொப்னாவின் கண்களில்…. முதலில் இருந்ததை போல் அல்லாமல் பாதியாக குறைந்து விட்ட அவனுடைய தோற்றம் தான் பட்டது.



தான் இங்கு அவனுடன் இல்லாதது அவனை எந்த அளவு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்தவளுக்கு அதற்கு மேல் எதை பற்றியும் சிந்திக்காமல் யாதவ் என்று சத்தமாக அழைத்தவள் அவனை நோக்கி வேகமாக ஓடிவந்து அவனின் மேல் எம்பி இறுக்கமாக கட்டி கொண்டாள்.



அவளின் திடீர் தாக்குதலில் சற்று தடுமாறியவன் அதன் பிறகு அவளை தன்னுடன் சேர்த்து தூக்கி அப்படியே சுற்றினான்.



அப்பொழுது அங்கே பட பட வென்று கை தட்டல் ஒலி கேட்க....



யாதவ் இருந்த சந்தோஷத்தில் அது அவனின் கவனத்தில் பதியாமல் போக... ஆனால் சொப்னாவுக்கு அந்த சத்தம் நன்றாக கேட்டது. யாதவை விட்டு இறங்காமல் அது யாரென்று பார்க்க அங்கே அஸ்வந்த் இவர்கள் இருவரையும் பார்த்து சிரித்து கொண்டே கை தட்டி கொண்டிருப்பதை கண்டவள், “hey asu…. U also came with yadhav ah… why you didn’t tell me before?” என்று அவனை பார்த்து பேசி கொண்டே இங்கே யாதவிடம் “yadhav yadhav stop stop” என்று அவனிடமிருந்து கிட்ட தட்ட விடுபட்டு குதித்தவள் அடுத்து அஸ்வந்த்திடம் போய் செல்லம் கொஞ்ச ஆரம்பித்து விட்டாள். சொப்னா திடிரென்று தன்னிடமிருந்து குதிக்கவும் “hey what happened?” என்று அவளிடம் கேட்டு கொண்டே அவளை பார்த்தவன் அங்கே அஸ்வந்த் நிற்பதை கண்டு அவனுக்கு லேசாக முகம் சிவந்து விட அதனை மறைக்கும் விதமாய் “when did you came aswanth? How do you know that?”



“Aunty told” இதை சொல்லும் போது மட்டும் அவன் சொப்னாவையே பார்த்து கொண்டு சொன்னான். அவள் என்ன விதமாக ரியாக்ட் பண்ணுகிறாள் என்பதை தெரிந்து கொள்வதற்காக....




என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்...
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 29 (2)

என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

தான் கூறியதற்கு சொப்னாவின் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என்று அவளையே பார்த்து கொண்டிருந்த அஸ்வந்த்திற்கு நீ ஏதாவது இப்போ சொன்னியா என்பதை போலிருந்த அவளது முக பாவனையை விட அவள் தன்னை விட்டுட்டு யாதவுடன் வழவழக்க ஆரம்பித்து விட்டதை கண்டு அவனுக்கு சிரிப்பு தான் தோன்றியது.


ஆம் சொப்னா தன்னிடம் அந்த மாதிரி பேசிவிட்டு வீட்டை விட்டு வெளியேறியவுடன் சாவித்ரிக்கு தான் செய்தது தவறோ என்று உறுத்த ஆரம்பித்திருந்தது.



எல்லாம் தெரிந்தும் தான் மற்றவர்களின் முன் தலை குணியக்கூடாது என்பதற்காக சிரித்த முகமாகவே அனைவரையும் வழியனுப்பி வைத்த சொப்னாவின் செயலின் முன்னால் தான் அவளுக்கு செய்தது பெரும் குற்றமாகவே தோன்றியது. எந்த நிலையிலும் அவள் தனக்காக யோசித்து செயல் படும்போது தான் ஏன் அவளின் மனதை முன்னிறுத்தி பார்க்காமல் இந்த நிலையில்லாத ஸ்டேட்டஸை பத்தியே யோசித்து கொண்டிருக்கிறேன். என் மகளை விட இது என்ன பெரிதா. என் மகள் என்மீது வைத்திருந்த நம்பிக்கையை நான் இழந்துவிட்டேனே.



சொப்னா வீட்டை விட்டு சென்றிருந்தது அவரை இந்த அளவுக்கு யோசிக்க வைத்தது. அதனால் அதன் பிறகு அவர் சகுந்தலாவிற்கு போன் செய்து அனைத்தையும் கூறி தன் அன்னையிடமும் தான் அவரை மீறி செய்ய விருந்த தவறுக்காக மன்னிப்பை வேண்டினார். கூடிய சீக்கிரம் அனைத்து ஏற்பாடுகளையும் முடித்துவிட்டு தாங்களும் அங்கு வந்துவிடுவதாக கூறியிருந்தார்.



ஆனால் அஸ்வந்த்திடம் எதையும் கூறாமல் சொப்னா சென்னைக்கு நாளை வந்துவிடுவாள் என்றும் தாங்கள் இன்னும் கொஞ்ச நாளில் வந்துவிடுகிறோம் என்பதை மட்டும் கூறியிருந்தார்.



தன்னிடம் சொப்னா வர போவதாக சாவித்ரி கூறியதை தன்னுடைய கிராண்ட்மாவிடம் அவருக்கு தெரியாதோ என்று நினைத்து அவன் சொல்லும்போது அவர் மனம் கேட்காமல் சாவித்ரி கூறிய அனைத்தையும் சொல்லிவிட்டிருந்தார். அதனால் தான் அவன் சாவித்ரியை பத்தி சொல்லும் போது சொப்னாவையே பார்த்தது.



ஆனால் அவளோட ரீயாக்ஷனிலேயே இதெல்லாம் எனக்கு சப்ப மாட்டெரு என்பதை போல் அவனுக்கு தோன்றியதை விட அவள் யாதவுடன் வழ வழக்க ஆரம்பிக்கவும்... அதற்கு யாதவின் காதல் பார்வையும்.... அவனுக்கு தான் அந்த இடத்தில் இருப்பது அதிகமோ என்ற எண்ணத்தை விளைவிக்க.... அதற்கு மேல் அங்கு இருப்பது அவனுக்கு ஒரு மாதிரியாக தோன்றியது.



இங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று அவன் நினைத்து கொண்டிருக்கும் போதே அவனுக்கு மொபைலில் அழைப்பு வர அதை எடுத்து பார்த்தவன் நம்ப முடியாமல் ஆச்சர்யமாக தனக்கு வந்து கொண்டிருந்த காலயே பார்த்து கொண்டிருந்தவன் அட்டென்ட் செய்து காதில் வைத்தான்.



“மாமா......” என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரித்த வைதேகியின் குரலில் சில நொடிகள் அப்படியே நின்று விட்டவன் “smilie one minute da” என்று அவளிடம் சொல்லிவிட்டு “yaadhav I have some important call da. So you take her home. Sorry bubbly. Bye. I’ll meet you at home” என்று கூறிவிட்டு ஏற்கனவே அங்கிருந்து போக நினைத்தவன் அவர்களின் பதிலுக்கு கூட காத்திராமல் அங்கிருந்து சற்று தூரம் சென்று போனை காதில் வைத்து தன்னுடைய ஒட்டு மொத்த காதலையும் குரலில் கொண்டுவந்தவனாய் “smilie” என்று அழைத்தவன் “நீ மாமான்னு சொல்லும்போது செம்ம கிக்கா இருக்கு தெரியுமா.... இன்னொரு வாட்டி சொல்லேன்....” என்று ஹஸ்கி வாய்ஸில் பேசினான்.



இப்பொழுதெல்லாம் அவனுக்கு ஓரளவு தமிழ் பேச வந்தது. செமஸ்டர் ஹாலிடேஸ் என்பதால் தன்னுடைய க்ராண்டாமாவை போக வேண்டாம் என்று சொல்லிவிட்டு முழு பொழுதும் கம்பெனியை பார்க்க ஆரம்பித்தவன் அங்கே தன்னுடைய தமிழ் பேசுவதற்கான பயிற்சியை அங்கு வேலை பார்ப்பவர்களிடம் செய்ய ஆரம்பித்திருந்தான். அவர்களும் தங்கள் முதலாளியை எதிர்த்து பேசும் துணிவின்றி சில சமயம் அஸ்வந்த் பேசும் கொடுமையான தமிழையும் கேட்டு நொந்து நூடுல்ஸாகி கொண்டிருந்தனர். அவனின் கோபம் அறிந்தவர்கள் ஆயிற்றே. அவர்களுக்கு வேறு வழி இருக்கவில்லை.



ஏற்கனவே தன்னை மறந்திருக்கும் வேலையிலும், உணர்ச்சி வசப்படும் வேலையிலும் தன்னை அறியாமல் வெளிவரும் தமிழ், இப்பொழுது அவனின் முயற்சியால் இன்னும் அழகாக வெளிப்பட்டது.



அவன் தன் எதிரில் இல்லா விட்டாலும் அவனின் ஹஸ்கி வாய்ஸில் அவளுடைய முகம் குப்பென்று சிவந்துவிட அவளுடைய மனது அவன் தன்னிடம் மீண்டும் அதே வார்த்தையை கேட்டதற்காக அவளை மாமா என்று சொல்ல உந்தியது. அதில் அவனை மறுபடியும் மாமா என்று அழைத்தாள். ஆனால் முன்பை போல் சந்தோசத்தோடு மட்டுமல்லாமல் அதனுடன் இணைந்து இப்பொழுது அவளுடைய குரல் அவனின் மேல் தனக்கிருந்த உரிமையில் குழைந்து ஒலித்தது.



அதில் இன்னும் சொக்கி போனவனுக்கு அவளை அப்பொழுதே பார்க்க வேண்டும் என்று அவனின் உடம்பில் உள்ள அனைத்து அணுக்களும் துடிக்க ஆரம்பிக்க அதை அவளிடமே வேண்டினான்.



“வைதேகி என்னால முடில டி எனக்கு இப்போ உன்னைய உடனே பாக்கணும்னு தோணுது. எப்படியும் உன்னால இங்க வர முடியாது. அதனால பேசாம நான் அங்க கிளம்பி வரட்டா....” ல்



அத்தனை நேரமும் அவனின் பேச்சில் மயங்கி போய் நின்று கொண்டிருந்தவள் கடைசியாக அவன் கூறியதில் "அய்யயோ" என்று தான் இருக்கும் இடம் மறந்து கத்தி விட்டாள்.



அவள் கோவிலுக்கு போய் வருகிறேன் என்று வீட்டில் தன் அன்னையிடம் சொல்லிவிட்டு அப்படியே அஸ்வந்த்திடம் அவளுக்கு இன்று நடந்த சந்தோஷமான விஷயத்தை அவனிடம் சொல்வதற்காக மொபைலையும் எடுத்து வந்திருந்தாள்.



அவளின் நல்ல நேரமோ என்னவோ அப்பொழுது அவள் போய் கொண்டிருந்த தெருவில் தூரத்தில் ஒருவர் மட்டுமே அவ்வழியே சென்று கொண்டிருக்க ஆனால் அவருக்கு இவள் கத்தியது கேட்கவில்லை போலும். அவர் திரும்பி பார்க்காமல் சென்று கொண்டிருந்தார். அவருக்கு என்ன முக்கியமான வேலையோ. நமக்கு அது எதற்கு....



வைதேகியின் கத்தலில் மறுமுனையில் இருந்த அஸ்வந்த் பதட்டத்துடன் "என்ன ஸ்மைலி என்ன ஆச்சு. ஏன் கத்துற... எங்கயாவது hit பண்ணிட்டியா.... "



அவனுக்கு அப்பொழுது தோன்றியதெல்லாம் அவள் எப்பொழுதும் நேராக பார்த்து நடக்காமல் தன் மேல் வந்து மோதியது தான் ஞாபகம் வந்தது. அது போல் இன்றும் ஒழுங்காக பார்த்து நடக்காமல் எங்காவது இடித்து கொண்டாளா என்று தான் தோன்றியது.



அவனின் பதட்டமும் தான் கத்தியதற்கு அதற்கு அவன் கேட்ட காரணமும், அஸ்வந்த் எதை நினைத்து இப்படி கேட்கிறான் என்று புரிந்தது அதில் அவளுக்கு ரோசம் வர.... "நான் ஒழுங்கா தான் நடப்பேன்.... உங்க கிட்ட மட்டும் தான் அப்படி ஆச்சு" என்று கடைசி வரியை கூறும்போது மட்டும் வெட்கத்தில் அவள் குரல் உள்ளே போய் விட்டது. அவளின் பதிலில் அவனுடைய பதட்டம் மறைந்து சிரிக்க ஆரம்பித்தான்.



அவன் சிரித்து முடித்ததும்.... "என்னங்க இன்னிக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடந்துச்சு தெரியுமா.... அத சொல்லத்தான் கால் பண்ணேன்..."



அவளின் சந்தோசம் அவனையும் தொற்றி கொள்ள... "என்ன happy news” என்று கேட்டான்.



அஸ்வந்த் என்ன ஹாப்பி நியூஸ் என்று அவளிடம் கேட்டதற்கு.....



"மாமா... அம்மா எனக்கு புது மொபைல் வாங்கி குடுத்தாங்க. தெரியுமா.... "என்று சந்தோசமாக கூறினாள்.



ஆம் வைதேகியை போன்ற காலேஜ் செல்லும் சில பெண்கள் டச் மொபைல் வைத்து யூஸ் பண்ணி கொண்டிருப்பதை பார்த்த ஜெயந்தி தன்னுடைய மகளுக்கும் குறைந்த விலையில் அதே சமயம் டச் ஸ்கிரீநிலிருந்த மொபைலை வாங்கி கொடுத்தார்.



வைதேகி தன்னுடைய காலேஜில் முக்கால்வாசி பேர் டச் ஸ்கிரீன் வைத்து கொண்டிருப்பதை கண்டவளுக்கு. அதை உபயோக படுத்தி பார்க்க ஆசை. சுவேதாவினுடையதை யூஸ் பண்ணியிருக்கிறாள் தான். இருந்தாலும் தன்னிடம் அந்த மாதிரி மொபைல் இல்லையே என்று சில நேரம் யோசித்ததும் உண்டு. அப்பொழுதெல்லாம் தன்னுடைய குடும்பத்தின் சூழலை நினைத்து அந்த எண்ணத்தை அப்படியே ஒதுக்கி வைத்து விடுவாள்.



ஆனால் செமஸ்டர் ஹாலிடேஸ்க்காக வீட்டிற்கு வந்திருந்தவளுக்கு திடிரென்று ஒரு நாள் அவளுடைய அன்னை Redme 3s மொபைலை எடுத்து நீட்டவும். அவளுக்கு சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. அதை அஸ்வந்த்திற்கு உடனே சொல்ல வேண்டும் என்று மனம் பர பரக்க கோவிலுக்கு போகிறேன் என்று மொபைலை எடுத்து கொண்டு வந்து கால் பண்ணி விட்டாள்.



வைதேகி தனக்கு தன் அன்னை புது மொபைல் வாங்கி கொடுத்ததாக கூறியதை கேட்டவனுக்கு.... இதில் என்ன அத்தனை சந்தோசம் இருக்கிறது என்று தான் அவனுக்கு முதலில் பட்டது.



iphone யூஸ் பண்ணி கொண்டிருப்பவனுக்கு அவளுடைய இந்த சந்தோசம் எப்படி புரியும்.... அவனுக்கு புரியவில்லை.



அதனால் அவளிடம், "உன்கிட்ட தான் ஆல்ரெடி மொபைல் இருக்கே ஸ்மைலி" என்று புரியாமல் கேட்டான்.



"என் கிட்ட பேசிக் செட் தான் மாமா இருக்கு. இப்போ தான் பஸ்ட் தடவை டச் மொபைல் யூஸ் பண்றேன்" என்று கொஞ்சமும் மகிழ்ச்சி குறையாமல் அவனுக்கு விளக்கமாக கூறினாள்.



ஆனால் அஸ்வந்த்தோ அதையெல்லாம் கண்டுகொள்ளாதவனாய் அவனுக்கு அவளை பார்ப்பதற்கான வழி தோன்றிவிட, மிகவும் பரபரப்புடன் “ஸ்மைலி உன் மொபைல்ல imo ஆப் இருக்காடா” என்று அதி முக்கியமான கேள்வி கேட்டான்.



அவனுக்கு இப்பொழுது அது தானே முக்கியம். அவனுக்கு அவளின் முகத்தை பார்க்க வழி கிடைத்து விட்டதே.



அவளுடைய தோழிகள் சொல்லி, அந்த ஆப்பை யூஸ் பண்ணி வீடியோ கால் பேசலாம் என்ற வரைதான் தெரிந்து வைத்திருந்தாள். ஆனால் அவன் எதற்கு இதை இப்பொழுது கேட்கிறான் என்று சட்டென்று புரியவில்லை. அவனிடம், "எதுக்கு மாமா கேட்குறீங்க...." என்று கேட்டு வைத்தாள்.



"எதுக்கு கேப்பாங்க உன்கிட்ட talk பண்ண தான். நீ தான் அங்க வரேன்னு சொன்னா ஐயயோன்னு shout பண்றியே".



ஓ புது வழியா என்று மனதில் சிரித்து கொண்டவள். ஆனால் வழி கண்டுபிடித்து என்ன பயம் அவளிடம் அந்த ஆப்பும் இல்லை. அதை டவுன்லோட் செய்வதற்கு நெட்டும் இருக்கவில்லை. அதனால் அவளுடைய சிரிப்பு இன்னும் அதிகரிக்க....அதை அவள் அவனிடம் கூறினாள்.



அவனோ இதுதானா என்று மனதில் நினைத்தவன் அடுத்த இரண்டு நிமிடத்தில் அவளுடைய மொபைலில் மெசேஜ் வந்ததற்கான அறிகுறி வர....



"மாமா ஏதோ மெசேஜ் வந்துருக்கு ஒரு நிமிஷம் இருங்க" என்று மொபைலை பார்த்தவள்..... அதில் நெட் யூஸ் பண்ணுவதற்காக ரிசார்ஜ் பண்ணியிருக்கவும்... வியந்து போய் அஸ்வந்த்திடம், "மாமா அதுக்குள்ள ரிச்சார்ஜ் பண்ணிட்டிங்களா" என்று ஆச்சர்யமாக கேட்டாள்.



அவளுடைய ஆச்சர்யத்தை எல்லாம் ஒதுக்கி வைத்தவனாய் "That’s not a matter…. நீ இப்போ அந்த ஆப்ப டவுன்லோட் பண்ணு பைவ் மினிட்ஸ் தான் டைம்" என்று சொல்லிவிட்டு போனை நிப்பாட்டி விட்டான்.



அவன் சொல்லியதை போல் அவள் டவுன்லோட் பண்ணி இன்ஸ்டால் பண்ணிவிட்டு நிமிர... சரியாக அவளுக்கு அவனிடமிருந்து அந்த ஆப் வழியாக போன் வந்தது. அதனை அட்டென்ட் செய்தாள்.



வைதேகி போனை அட்டென்ட் செய்த அடுத்த நொடி….. அஸ்வந்த் போன் வழியாக தெரிந்த அவளுடைய முகத்தில் சரியாக இதழில் முத்தம் ஒன்று வைக்க....



வைதேகிக்கோ அவன் தனக்கு நேரில் கொடுத்ததை போல் முகமெல்லாம் சிவந்து போய் விட அவனை பார்க்க முடியாமல் தலையை குனிந்து கொண்டாள்.



"ஸ்மைலி என்ன பாரேன்...."



அவளோ தலை நிமிர மறுத்தாள்....



"ப்ளீஸ் டி நிமிர்ந்து பாரேன் எனக்கு உன் முகமே சரியா தெரியல உன் ஹெட் தான் தெரியுது...."



அவனுடைய ப்ளீசில் நிமிர்ந்து பார்த்தவள்...



அவன் அதற்காகவே காத்திருந்ததை போல் மறுபடியும் இதழில் முத்தம் கொடுக்கவும்.....



"ப்ச் போங்க இப்படி பண்ணீங்கன்னா நான் பேச மாட்டேன்" என்று சிணுங்கினாள். அதில் அவளின் முகத்தில் அவனுடைய செயலால் விளைந்திருந்த வெட்கம் அப்பட்டமாக அஸ்வந்த்திற்கு தெரிந்தது.



அதில் அவனுடைய இதழ்கள் புன்னகையில் விரிந்தது. "kk .... ஆமா நீ ஏன் எனக்கு போனே பண்ணல..... நான் பண்ணியிருப்பேன். நீ தான் நான் பண்ணா தான் பண்ணனும்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டியே" என்று சொல்லும் பொது அவனுடைய குரலில் வருத்தம் தென் பட்டது....



"இல்ல மாமா அம்மா இல்லனா தம்பி யாரவது ஒருத்தங்க என் கூட இருந்துட்டே இருந்தாங்க அதான் பண்ண முடியல"



"So what…. என் கூட தான் பேசுறேன்னு சொல்ல வேண்டியது தான" என்று அவன் இதுக்கு போய் யாரவது பேசாம இருப்பாங்களா என்று கூலாக கூறினான்.



அவனுக்கு எப்படி தெரியும் அவளின் பயத்தை பற்றி.... அவன் வளர்ந்த இடமும், அங்கிருந்த பெண்களும் அதுவும் சொப்னாவை பற்றி தெரிந்தவனுக்கு அதை போல் தான் யோசிக்க தோன்றியது.



அவளோ, "ஹ்ம்ம் சொல்லுவீங்க சொல்லுவீங்க" என்று சிரித்து கொண்டே சொல்லிட்டு அடுத்து வேற பேச ஆரம்பித்து விட்டாள்.



அதன் பிறகு அவர்கள் ஏதேதோ என்ன பேசினோம் என்று கூட தெரியாமல் பேசிவிட்டு இருவரும் மன நிம்மதியாக போனை வைத்தனர்.



வைதேகி போனை வைத்து விட்டு நிமிர எதிரே கவிதா அவளை புரியாமல் பார்த்து கொண்டே வந்தவள், அவளை நெருங்கியவுடன் அவள் எதிர் பார்க்காத சமயம் அவளின் கையில் இருந்த மொபைலை பறித்து “யாருகிட்ட டி இவ்ளோ நேரமா சிரிச்சு சிரிச்சு பேசிட்டு இருந்த” என்று கேட்டு கொண்டே மொபைலில் நோண்ட...



வைதேகி இப்பொழுது என்ன செய்வது என்று பயத்துடன் பார்த்து கொண்டு நின்றாள்…
….



என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 30


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

கவிதா மொபைலை தன்னுடைய கையிலிருந்து பிடுங்கி நோண்ட ஆரம்பிக்கவும்...


வைதேகியின் முகமெல்லாம் பதட்டத்திலும்.... பயத்திலும் வேர்க்க ஆரம்பித்தது. அவள் தன்னுடைய கைகளை பிசைந்து கொண்டு அவளையே பார்த்து கொண்டிருந்தாள்.



யாரிடம் இப்படி சிரித்து பேசி கொண்டிருக்கிறாள் என்று அவளிடமிருந்து மொபைலை வாங்கி பார்த்த கவிதாவுக்கு யாரோட பெயரும் இல்லாமல் அதில் நம்பர் இருக்கவும்..... அதில் பார்க்க முடியாததால் வைதேகியிடமே கேட்டு விடலாம் என்று எண்ணி அவளை நிமிர்ந்து பார்த்தவள், அவளின் பதட்டத்தை கண்டவளுக்கு அவள் மேல் சந்தேகம் வர ஆரம்பித்தது.



சும்மா வைதேகியிடம் விளையாண்டு பார்க்கலாம் என்ற எண்ணத்தில் தான் அவள் போனை பிடுங்கி பார்த்தது. ஆனால் அதில் பெயர் அல்லாமல் போன் நம்பரை கண்டவுடன் யாரிது என்று தோன்றியதே தவிர வைதேகியின் மேல் சந்தேகம் எல்லாம் அவளுக்கு தோன்றவில்லை.



ஆனால் வைதேகியின் பதட்டத்தை கண்டவளுக்கு எதுவோ சரியில்லை என்பது தெள்ள தெளிவாக அவளுக்கு புரிந்து விட மொபைலில் இருந்த அந்த எண்ணை அவளின் முகத்திற்கு நேராக காட்டி யாரோட நம்பர் இது என்று முகத்தில் தீவிரத்துடன் அவளை பார்த்து கேட்டாள்.



அதில் வைதேகிக்கு இன்னும் பதட்டம் அதிகரிக்க "அது.... அது... வந்து..." என்று திக்கி திணறினாள்.



அவளின் திணறல் அவள் மேல் ஏதோ தவறு இருப்பதாக கவிதாவுக்கு இன்னும் வலு பெற்றுவிட.... "சொல்லுடி யாருது.... யார்கிட்ட இவ்ளோ நேரம் சிரிச்சு பேசிட்டு இருந்த".



அப்பொழுதும் அவள் சொல்லாமல் ஒரு வித பயத்துடன் அவளை பார்க்க....



அவளின் பயம் கவிதாவிற்குள் உள்ளுக்குள் எதையோ உணர்த்த..... இருந்தும் அதை நம்ப மாட்டாதவளாய் அவளிடம் தயக்கதுடனே "என்னடி யாரையாவது லவ் பண்றியா...." என்று கேட்டாள்.



ஏனெனில் தன்னுடைய ஊரை பற்றி தெரிந்தும் அவள் அப்படி பண்ண மாட்டாள் என்று நினைத்தே அவளிடம் தயக்கதுடன் கேட்டாள்.



ஆனால் கவிதா கேட்டதற்கு வைதேகி அவளை பார்க்க முடியாமல் தலை குனியவும்......



அதில் கவிதாவின் மனதில் வைதேகியை நினைத்து இப்பொழுது அவளுக்கு பயம் பிடித்துக்கொள்ள..... "ஹே சொல்லி தொலையேண்டி” என்று அவளின் முகத்தை வலுக்கட்டாயமாக பிடித்து நிமிர்த்தி தன்னை பார்க்க செய்தாள்.



கவிதாவை நிமிர்ந்து பார்த்த வைதேகிக்கு கண்களில் நிற்காமல் கண்ணீர் வடிந்து கொண்டிருக்க....



கவிதாவுக்கு எல்லாம் புரிந்து விட்டது. வைதேகியை யாரிடமிருந்தோ காப்பதை போல் வேகமாக அணைத்து கொண்டவள்..... "நான் சொல்றத கேளுடி இந்த காதல் எல்லாம் நமக்கு சுத்தமாக செட்டாகாதுன்னு உனக்கு தெரியும்ல. தயவு செஞ்சு அந்த பையன மறந்துடு டி.... இல்லனா அவங்க உன்ன கொன்னுடுவாங்க" என்று சொல்லிக்கொண்டு அவளை தன்னிடமிருந்து பிரித்து அவளுடைய முகத்தை தன்னுடைய கைகளில் ஏந்தியவள் "நம்ம கோகிலா அக்காக்கு என்ன நடந்துச்சுன்னு ஞாபகம் இருக்கா" இதை சொல்லும் போது கவிதாவின் கண்களிலிருந்தும் கண்ணீர் வர ஆரம்பித்தது.



“அன்று நாம் இருவரும் காதலிக்க கூடாது என்று முடிவெடுத்ததை கூட மறந்து விட்டாயா.....”



அதை எப்படி அவள் மறப்பாள்..........



அது ஒரு கொடுமையான சம்பவம்.... தங்களை போன்ற இளையவர்களின் மனதில் ஆரா வடுவை ஏற்படுத்திவிட்டு சென்று விட்டிருந்தது.



கோகிலா இவர்களின் பிரியமான அக்கா, தோழி, வழிக்காட்டி என்று சொல்லி கொண்டே போகலாம்..... இவர்களை விட ஐந்து வயது பெரியவள்.... மிகவும் தைரியமான பெண். படித்து முடித்துவிட்டு கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி கொண்டிருந்தவள், தன்னுடன் பணிபுரியும் ஜோசப் என்ற கிறிஸ்துவ பையனை காதலித்தாள்.



தன்னுடைய காதலுக்கு வீட்டிலிருந்தும், உறவுகளிடமிருந்தும் பயங்கர எதிர்ப்பு வந்தது.



ஆனால் இதை கண்டு எல்லாம் அஞ்சாமல் அவர்களை எதிர்த்து போலீஸின் உதவியுடன் ரெஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கொண்டு ஊரிற்கு வந்தவளை....



போலீஸ் இருந்ததால் அவர்களை எதுவும் செய்ய முடியாமல் சிறிது நாள் அமைதி காத்தவர்கள். அவர்களை ஏற்று கொண்டதை போல் சந்தோசமாக இருப்பதை போல் நடித்து மறுவீடு விருந்து என்று அழைத்தனர்.



இவர்களும்.... கல்யாணம் ஆகிவிட்டது. இனி என்ன அவர்களால் செய்ய முடியும் என்ற அசட்டு துணிச்சலில் செல்ல....



அவர்களின் இறுதி காலம் அது தான் என்ற விதி முடிவெடுத்து விட்டதோ என்னமோ அவர்கள் உண்ட உணவிலேயே அவர்களுக்கு விஷத்தை வைத்து அங்கேயே அவர்களின் கதையை முடித்து விட்டனர்.



போலீஸ் வந்து விசாரித்ததற்கும் இவர்கள் இங்கே உண்ணவே இல்லை. வெளியிலிருந்து உண்டு விட்டு தான் வந்தனர் என்று ஒரு ஊரே சேர்ந்து பேச அவர்களால் ஒன்றும் செய்ய முடியாமல் போயிருந்தது.



அந்த கோகிலாவின் இறப்பு அடுத்து அங்கிருந்த இளையவர்களின் இதை போன்ற செயலுக்கு மறுபடியும் செல்ல முடியாமல் அனைவரின் கைகளையும், கால்களையும் கட்டி போட்டிருந்தது.



அதை நினைத்து கலங்கி போன கவிதா வைதேகியிடம் அவளின் காதலை மறக்க சொல்லி வேண்டி கொண்டிருந்தாள்.



ஆனால் அந்தோ பரிதாபம் வைதேகி அந்த நிலையை எல்லாம் கடந்து விட்டிருந்தது தான்.



"நான் சொல்றத புரிஞ்சிகோ டி. அவனை மறந்துட்டு, வீட்ல பாக்குற பையன கல்யாணம் பண்ணிக்கிறது தான் நமக்கு நல்லது" என்று எடுத்து கூறினாள்.



கவிதாவின் பேச்சை கேட்டவளுக்கு அஸ்வந்த்தை தவிர மற்றவரை நினைக்கவே உடம்பெல்லாம் அருவருத்தது. அவனை மறக்கணும் என்ற எண்ணமே அவள் மனதை வலிக்க செய்ய அவளின் கண்ணீர் இன்னும் உடைப்பெடுத்தது.



அவளின் கண்ணீரை கண்டு வருந்திய கவிதா.... "ப்ளீஸ் சொல்றத புரிஞ்சிக்கோ டி" என்று வருத்தத்துடன் கூற....



அழுகையுடன் அவளின் கூற்றை மறுத்தவள்.... "என்னால அவங்கள மறக்க முடியாது டி... நான் இப்படியே இருந்துறேன்... எனக்கு கல்யாணம்னு ஒன்னு என்னோட வாழ்க்கையில இல்ல..."



வைதேகி தனக்கு திருமணம் என்பதே இனி இந்த ஜென்மத்தில் இல்லை என்று சொன்னதை கேட்ட கவிதாவுக்கு அவள் காதலில் எந்த நிலையில் இருக்கிறாள் என்பது தெள்ள தெளிவாக புரிந்தது. அதை அறிந்த பிறகு அவளுடைய அவளின் மீதான கவலை இன்னும் அதிகரிக்கவே செய்தது.



ஏனெனில் வைதேகி சொல்வதை போல் திருமணம் செய்யாமல் இருப்பதெல்லாம் சாத்தியமே இல்லை. எப்படியும் வலுக்கட்டாயமாக அவளை அந்த பந்தத்தில் திணிக்கவே செய்வார்கள்.



கவிதாவுக்கு அவளின் மேல் சற்று கோபமாக கூட வந்தது. அப்படி என்ன பெரிய பொல்லாத காதல் என்று. அவளுக்கு அது வந்தால் தானே அதனை பற்றி அவள் அறிந்திருப்பாள். அதன் உள்ளே நுழைந்து விட்டால் அதை விட்டு வெளியில் வருவது அவ்வளவு எளிதல்ல என்பதும். அது இன்பமும், துன்பமும் கொடுக்க கூடிய சுகமான உணர்வு என்பதும். காதலில் வலி கூட சுகம் தானே.



இதை அனைத்தையும் நினைத்து ஒரு முடிவுக்கு வந்த கவிதா வைதேகியை பார்த்து அவளிடம் உறுதி செய்துகொள்ள வேண்டி, "அந்த சைடு எப்படி டி அவங்க எல்லா விதத்தலையும், எப்பேர் பட்ட நிலையிலையும் ஸ்டராங்கா இருப்பாங்களா" என்று கேட்டாள்.



தன்னுடைய மனதிலும், வாழ்விலும் அஸ்வந்த்தை தவிர வேற ஒருவருக்கு இடமில்லை என்ற முடிவெடுத்த பிறகு வைதேகியின் அழுகை நின்று விட்டிருந்தது. அவளுடைய மனதில் தங்களுடைய காதல் நிறைவேற போவதில்லை என்ற எண்ணமும் வலுப்பெற ஆரம்பித்திருந்த சமயம் கவிதா, அஸ்வந்த்தை பற்றி கேட்கவும், அவளுடைய மனதில் சிறு நம்பிக்கை எழ கண்களில் ஒலியுடன் "அவங்க கிட்ட இதை பத்தி சொல்லிருக்கேன் டி. அவங்க பாத்துக்குறேன்னு தான் சொன்னாங்க” என்று சொல்லியவளின் எண்ணத்தில் தான் அன்று மறக்க சொன்னபொழுது அஸ்வந்த்தின் கோபத்தை கண்டவளுக்கு சிறிது நம்பிக்கை தோன்ற ஆரம்பித்திருந்தது. அதனால் அன்று அஸ்வந்த் தான் கூறியதை கேட்டு தன்னிடம் அவன் நடந்து கொண்ட விதத்தையும் சேர்த்து கவிதாவிடம் கூறினாள்.



அதை கேட்ட கவிதாவுக்கும் அஸ்வந்த்தின் மேல் நம்பிக்கை தோன்ற.... வைதேகியை பார்த்து, "சரி டி என்ன தான் நடக்குதுன்னு ஒரு கை பாத்துடுவோம்” என்று தீவிரமான முகத்துடன் கூற....



தனது தோழியின் ஆதரவு அவளுக்கு மிக பெரிய வலுவை தர..... அவளை வேகமாக கட்டி கொண்டவள் வாய் ஓயாமல் "தேங்க்ஸ் டி தேங்க்ஸ் டி" என்று சொல்லி கொண்டே இருந்தது.



என்ன தான் கவிதாவுக்கு மனதில் கலக்கம் இருந்து கொண்டே இருந்தாலும், வைதேகியின் மகிழ்ச்சி அவளுக்கு நிம்மதியை தந்தது. தனது தோழிக்காக அவள் என்ன செய்யவும் தயாராகினாள்.



வைதேகி வாய் ஓயாமல் தேங்க்ஸ் சொல்லி கொண்டே இருக்கவும், அவளின் மனதை மாற்ற எண்ணியவள், அவளை தன்னிடமிருந்து பிரித்து, "பாத்தியா தேங்க்ஸ் சொல்ற சாக்குல உன்னோட ஆள் போட்டோவை காட்டாம எஸ்கேப் ஆகி டலாம்னு பாக்குறியா.....” என்று அவள் சிரிக்க....



அதில் அவளை சிரித்து கொண்டே அடித்தவள், "போட்டோ எதுவும் இல்லையே டி.... முன்னாடி நோர்மல் மொபைல் தான வச்சிருந்தேன். அதனால் இல்லையே" என்று வருத்தமாக கூறினாள்.



வைதேகியின் பதிலில் சற்று நேரம் யோசித்தவள், "மொபைல்ல வாட்ஸ் ஆப் இருக்கா" என்று கேட்டாள்.



"ப்ச் எதுவுமே இல்லடி.... இப்போ தான் மாமா சொல்லி Imo இன்ஸ்டால் பண்ணேன்"



"ஹே Imo வச்சிருக்கியா... அதுல போட்டோ வருமே டி"



"அப்படியா...." என்று ஆர்வமாக அதில் அஸ்வந்த்தின் புகை படம் இருக்கா என்று வைதேகி தேட....



அவளை ஏமாற்றாமல் ப்ரொபைலில் அவன் புகை படமும் இருந்தது. அதனை பார்த்து குஷியாகி போனவள், "ஹே இருக்கு டி.... இந்தா பாரு" என்று மொபைலை கவிதாவிடம் நீட்டினாள்.



வைதேகி கொடுத்த மொபைலை வாங்கி பார்த்த கவிதாவுக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை.... தான் இப்பொழுது பார்க்கும் அஸ்வந்த்தின் புகைப்படம் தான் வைதேகியின் வாழ்க்கையையே காப்பாற்ற போகிறது என்று.



அஸ்வந்த்தை பார்த்த கவிதாவிற்கு, அவனின் முகத்தில் தெரிந்த கடுமையும், சிரிப்பென்றால் கிலோ எத்தனை விலை என்று கேட்பதை போன்றிருந்த இறுக்கமாக மூடியிருந்த இதழ்களும் அவளை அச்சமுற செய்தாலும், ஒருவிதத்தில் மனதில் நிம்மதியையே தோற்றுவித்தது. இவன் வைதேகியை காக்க என்ன வேண்டுமானாலும் செய்வான் என்றே தோன்றியது.



கவிதாவுக்கு தெரியாதல்லவா இதே அஸ்வந்த் வைதேகியை பார்க்கும் பொழுது போட்டோவில் இருப்பதை போல் அல்லாமல் கடினம் என்றால் என்ன என்று கேட்க்கும் அளவிற்கு அவனின் முகத்தில் ஏற்படும் மென்மையும், அவனின் கண்களில் அவள் மேலுள்ள காதலும்....



ஆனால் அவனுக்கு அவளை காப்பதற்கான சந்தர்ப்பம் அமையுமா????



கவிதா அஸ்வந்த்தை பார்த்து தீவிரமாக யோசித்து கொண்டிருப்பதை கண்டவள், அவளை அசைத்து "என்னடி" என்று பதட்டமாக கேட்டாள்.



அதில் தன்னிலை அடைந்தவள், அவளின் பதட்டத்தை கண்டு அவளை நோர்மல் ஆக்கும் பொருட்டு, "ஆமா இவ்வளவு அழகா இருக்கவங்க உன்னைய எப்படி டி லவ் பண்ணாங்க" என்று ஆச்சர்ய படுபவளை போல் அவளை கிண்டலடிக்க....



அதில் அவளுடைய பதட்டம் மறந்து அவளை அடிக்க வர.... கவிதா அவளிடம் அக படாமல் ஓட ஆரம்பித்தாள்.



அவர்கள் இருவரையும் அத்தனை நேரமும் ஆட்டி படைத்து கொண்டிருந்த கவலையும் அப்பொழுது அவர்களை விட்டு விலகி சென்றது.



அங்கே ஏர்போட்டிலிருந்து சொப்னாவை அழைத்து கொண்டு சென்ற யாதவ் அவளை அஸ்வந்த்தின் வீட்டில் இறக்கி விட்டுவிட்டு அவளையே பார்த்து கொண்டு நின்றான்.



அவனுக்கு சொப்னாவை பார்த்து கொண்டே இருக்கவேண்டும் போல் இருந்தது. அவளை தன்னுடனே அழைத்து செல்ல அவனுடைய மனம் விரும்பியது. ஆனால் அது சாத்தியம் இல்லையே என்ற நிதர்சனமும் அவனுக்கு புரியாமல் இல்லை. அதனால் அங்கிருந்து புறப்படாமல் அவன் அப்படியே நின்றான்.



வரும் வழியாவும் சொப்னா மட்டுமே வாய் ஓயாமல் அவனிடம் பேசி கொண்டு வந்தாள். யாதவ் அவளின் பேச்சையும், அவளின் அருகாமையும் ரசித்தானே ஒளியே அவளிடம் பேச தோன்றவில்லை. அவனுக்கு அவள் தன்னுடன் இருப்பதே அத்தனை சந்தோசமாக இருந்தது. அந்த நிம்மதியை ரசித்து கொண்டிருந்தவனுக்கு பேச மொழிகள் இல்லாமல் போனது. அப்படி அவனுக்கு பேச தோன்றியிருந்தாலும் அதற்கு சொப்னா வாய்ப்பளித்திருப்பாளா என்பதில் ஆச்சர்யம் தான்.



அவன் உள்ளேயும் வராமல், அங்கிருந்து கிளம்பும் எண்ணமும் இல்லாதவனை போல் அங்கேயே நின்று கொண்டிருந்தவனை கண்டவளுக்கு அவனின் நிலை நன்றாக புரிந்தது.



ஏனெனில் அவனின் கண்கள் அவனுடைய உள் உணர்வுகளை அவளுக்கு அப்படியே பிரதிபலித்து கொண்டிருந்தது.



அதனை புரிந்து கொண்டவள் அதன் பிறகு சிறிதும் தயங்காதவளாய் அவனை அழைத்து கொண்டு வீட்டினுள் நுழைந்தாள்.



அங்கே வீட்டின் ஹாலில் அமைந்திருந்த சோபாவில் அமர்ந்திருந்த சகுந்தலா உள்ளே நுழைந்த இருவரையும் கண்டு வரவேர்பாய் புன்னகைக்க....



சொப்னா அதையெல்லாம் கண்டுகொள்ளாதவளாய் சகுந்தலாவின் முன் போய் நின்றவள் அவரை பார்த்து…. வந்ததும் வராததுமாய் ஒரு குண்டை அவருடைய தலையில் தூக்கி போட்டாள்.



அப்பொழுது சரியாக அஸ்வந்த்தும் அங்கு வீட்டினுள் நுழைந்தவன்.... அவள் கூறியதை கேட்டு அடிப்பாவி என்பதை போல் சொப்னாவை பார்த்தான்.





என்னை சிரிப்பால் சிதைத்தவளே

தொடரும்.....
 

dharani dhara

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 31


என்னை சிரிப்பால் சிதைத்தவளே தாரணி பாஸ்கரன்

வீட்டினுள் நுழைந்த நிமிடமில்லாமல் நேராக சகுந்தலாவின் முன்னால் போய் நின்ற சொப்னா, “Fix the marriage date grandma” என்று கூறினாள்.


அப்பொழுது சரியாக வீட்டினுள் நுழைந்து கொண்டிருந்த அஸ்வந்த்தின் காதிலும் சொப்னா கூறியது விழ.... அவன், "what?" என்று தன்னை மீறி கத்திவிட்டான்.



அப்பொழுது சரியாக சகுந்தலாவும்..... "அடியாத்தி ஆனாலும் உனக்கு இவ்வளவு குசும்பு ஆகாது டி" என்று கூறிவிட்டு சிரிக்க ஆரம்பித்தார்.



அவர் கூறியதை கேட்டு அங்கு இருந்த யாதவும், உள்ளே வந்துவிட்ட அஸ்வந்த்தும் சகுந்தலாவுடன் இணைந்து சிரிக்க ஆரம்பித்தனர். ஆனால் புரியவேண்டிய சொப்னாவிற்கோ அது புரியாமல் அவர்கள் சிரிப்பதை கண்டு திரு திருவென விழித்து கொண்டிருந்தாள்.



சிறிது நேரம் புரியாமல் விழித்தவளுக்கு அவர்கள் தன்னை கிண்டல் பண்ணி தான் சிரிக்கிறார்கள் என்று புரிந்து விட நான் சொன்னத விளையாட்டா எடுத்து கிட்டாங்களா இவங்க என்று நினைத்தவள்….. அப்பொழுது அங்கே அவர்களுடன் இணைந்து சிரித்து கொண்டிருந்த யாதவை பார்த்து, அவங்க சிரிச்சத கூட ஒருவகையில் போனா போகட்டும் என்று தள்ளி வைத்தவளுக்கு யாதவ் சிரிப்பதை ஏனோ பொறுத்துக்கொள்ள முடியவில்லை இவனுக்காக நான் பாத்து பாத்து செஞ்சா இவனும் அவங்க கூட சேந்துக்கிட்டு என்னைய கிண்டல் பன்றான் பாரு இடியட் என்று பல்லை கடித்தவள் அவனை வேகமாக நெருங்கி அவன் சுதாரிக்கும் முன் அடிக்க ஆரம்பித்தாள்.



சொப்னா யாதவை அடிப்பதை கண்ட அஸ்வந்த் இன்னும் பலமாக சிரிக்க ஆரம்பிக்க, யாதவிர்க்கு அவளின் செயல் சிரிப்பை வரவழைத்தாலும் வெளியில் முகத்தை பாவம் போல் வைத்து கொண்டு அவளை பார்த்து கொண்டிருந்தான்.



ஆனால் அவர்கள் இருவரில் யாரும் அவளை தடுப்பதாக தான் தெரியவில்லை.



சகுந்தலாதான் சொப்னாவை கண்டிப்பவராய் “what is this sopna? Where did you learn this menace?” என்று அத்தனை நேரம் இருந்த இலகு மனப்பான்மை மாறி கண்டிப்புடன் கூறினார்.



அதற்கெல்லாம் அசருப்பவளா அவள்.... “Oh what grandma” என்று சொல்லிக்கொண்டே சிறுபிள்ளை போல் கால்களை தரையில் உதைத்தாள்.



அவளை பார்த்து முறைத்த சகுந்தலா, யாதவை பார்த்து “எதுவும் தப்பா நினைச்சிக்காதபா ரொம்ப செல்லமா வளந்துட்டா” என்று சங்கடத்துடன் கூறினார்.



அவரின் கூற்றிற்கு மறுப்பாக தலையசைத்தவன்.... "அவ இப்படி இருக்கறது தான் மா எனக்கு பிடிச்சிருக்கு இப்போ தான் என் வாழ்க்கைக்கு உயிரோட்டம் கிடைச்ச மாறி இருக்கு" என்று அவரிடம் சொல்லியவன், சொப்னாவை தன்னோடு அணைத்து கொண்டான்.



யாதவின் பதிலில் அஸ்வந்த்திற்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஒவ்வொரு முறையும், ஒருவருக்கொருவர் மற்றவரை அடுத்தவரிடம் விட்டுக்கொடுக்காமல் நடந்து கொள்வதை கண்டவனுக்கு தாங்களும் இதே போல் இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆழமாக அவனின் மனதில் பதிந்தது.



சகுந்தலாவிற்கும், சொப்னாவிற்கு நல்ல வாழ்கை அமைந்து விட்டதில் நிம்மதியுற்றவர்... சொப்னாவை பார்த்து, “Now what's the hurry for marriage?” என்று கேட்டார்.



“I like to be with him. I don’t want to stay away from him” என்று அவனுடைய கை விரல்களில் தன்னுடையதை கோர்த்துக்கொண்டு யாதவையே பார்த்துக்கொண்டு சகுந்தாலவிடம் பதிலளித்தாள்.



யாதவிர்க்குமே அவளை பிரிவதில் இஷ்டமில்லை. அவளுடனே இருக்கவேண்டும் போல் தோன்றியதால் தான் அவன் சொப்னாவை வீட்டில் இறுக்கிவிட்ட பின்பும் போகாமல் அவளையே தன்னுடன் வந்துவிட மாட்டாளா என்று ஏக்கமாக பார்த்துக்கொண்டு நின்றான்.



யாதவோ அதற்கு வழியில்லை என்பதை போல் அமைதியாக அவளையே பார்த்து கொண்டிருக்க...



ஆனால் சொப்னாவோ அதற்கான வழியை கண்டுபிடித்தது மட்டுமல்லாமல் அதை செயல்படுத்தவும் ஆரம்பித்திருந்தாள்.



முதலில் சொப்னா கூறியதை கேட்டு விளையாட்டுக்காக கூறுகிறாள் என்று அவன் சிரித்து கொண்டிருக்க.... இப்பொழுது அவள் மறுபடியும் கூறியதை கேட்டு இது நடக்குமா என்பதை போல் அவன் சகுந்தலாவின் பதிலை கண்களில் ஒளியுடன் அவரையே ஆர்வமாக பார்க்க...



சகுந்தலா அதை கவனித்தாரோ என்னமோ.... சொப்னா அதனை கண்டுகொண்டாள்.



அதனை கண்டுகொண்டவளுக்கு தான் எடுத்த முடிவு இன்னும் உறுதியாக இதை எப்படியேனும் நடத்தியே தீரவேண்டும் என்று அந்த நொடியே முடிவெடுத்து விட்டாள்.



“First finish your degree sopnaa…. We will discuss about this latter?” என்று சகுந்தலா கூறினார். அவருக்கு ஏன் இவ்வளவு அவசரம் என்று தான் தோன்றியது. சொப்னாவிற்கு இன்னும் மெச்சூரிட்டி பத்தவில்லை என்றே அவருக்கு தோன்றியது. தன்னுடைய சுட்டி தனத்தால் யாதவை ஏதாவது வருத்தப்பட வைத்துவிட்டால் என்ன செய்வது என்பதை மனதில் கொண்டு தான் அவர் அப்படி கூறினார்.



ஆனால் அவர் ஒன்றை அந்த நேரத்தில் மறந்து விட்டார். அன்று தன் அன்னை யாதவை தவறாக பேசிய பொழுது, யாதவை பற்றி எதையும் அறியாத பொழுதும் அவனை புரிந்து கொண்டு தன் அன்னையை எதிர்த்து நின்றதையும், கடைசியாக தன்னுடைய அன்னையின் வழியிலேயே சென்று அவரின் தவறை உணர செய்தது மட்டுமில்லாமல் அவரை மற்றவர்கள் ஒரு வார்த்தை குறை பேசாமல் நடந்து கொண்ட மெச்சூரிட்டியை அவர் அந்த நேரம் நினைக்க தவறியிருந்தார்.



சகுந்தலா சொப்னாவிடம் முதலில் படிப்பை முடிக்குமாறு கூறியதற்கு, “I will continue my studies with him” அவனுடன் இருந்தே நான் என்னுடைய படிப்பை தொடருகிறேன் என்று கூறிவிட்டாள்.



யாதவிர்க்கு சகுந்தலா கூறியதே சரி என்று பட.... தன்னுடைய சுயநலத்திற்காக அவளின் படிப்பை ஏன் கெடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஓட அவன் சொப்னாவிடம் மறுத்து கூறுவதற்காக வாயை திறக்க...



அவன் என்ன சொல்ல போகிறான் என்பதை முன்னே கணித்தவளாய்... அவனின் வாயை தன்னுடைய கை கொண்டு மூடி, “Please be silent yaadhav. I know you very well” என்று கூறினாள்.



அவளுக்கு தெரியும் அவன் எப்படியும் சகுந்தலா சொல்வதற்கு தான் சரி என்பான் என்று. தனக்காக அவள் கஷ்டப்பட என்றுமே அவன் விரும்பமாட்டான் என்றும்.



ஆனால் அவளுக்கு இனியும் யாதவை தனிமையில் விட விருப்பம் இல்லை. அதுவும் இன்று பாதி உடம்பாக மெலிந்து போய் இருக்கும் யாதவை கண்டு அவளுக்கு அத்தனை வேதனையாக இருந்தது. அதுவும் வீட்டின் வாசலில் நின்று தன்னை அவன் பார்த்த பார்வை....



இதையெல்லாம் நினைத்து பார்த்தவள், சகுந்தலாவிடம் தனக்காகவும், யாதவிர்க்காகவும் பேச ஆரம்பித்தவள் ஒருவழியாக கடைசியில் சம்மதம் வாங்கிக்கொண்டே அவரை அந்த இடத்திலிருந்து நகர விட்டாள்.



ஆனாலும் உனக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாது டி என்று சந்தோசமாக அலுத்து கொண்டே அங்கிருந்து நகர்ந்தார்.



யாதவிர்க்கு அதை கேட்டு மிகுந்த சந்தோசமாக இருந்த அதே சமயம் தன்னால் சொப்னாவின் படிப்பிற்கு எந்த ஒரு இடையூறும் வரக்கூடாது என்பதையும் மனதில் அழுத்தமாக பதிய வைத்து கொண்டான்.



சகுந்தலாவை போலவே அவளின் பிடிவாதத்தை மனதில் ரசித்த அஸ்வந்த் அவளின் தலையில் ரெண்டு தட்டு தட்டி அங்கிருந்து நகர்ந்து யாதவை நோக்கி சென்றவன் “congrats da” என்று கூறி அவனை மகிழ்ச்சியுடன் அணைத்து கொண்டான்,



அங்கு அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சியே நிறைந்திருந்தது.



இதனை கேள்வி பட்ட சாவித்ரிக்கு மனதில் சிறிது வருத்தம் இருந்தாலும், சொப்னாவிற்காக அதனை ஏற்றுக்கொண்டார்.



அவர்களுடைய திருமணம் மூன்று மாதம் கழித்து ஒரு நல்ல நாளில் அனைவராலும் முடிவு செய்யப்பட்டது. திருமணத்திற்கு முதல் நாளே நிச்சயதார்த்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனர்.



அதன் பிறகு நாட்கள் மல மலவென்று ஓட... விடுமுறை முடிந்து கல்லூரியும் ஆரம்பமானது.



சொப்னா, அஸ்வந்த் மற்றும் யாதவை போல தானும் மெக்கானிக்கல் டிபார்ட்மென்ட் தான் எடுப்பேன் என்று அடம் பிடித்து காலேஜில் தன்னுடைய முதல் வருடத்தில் சேர்ந்தாள்.



சொப்னா, வைதேகி மற்றும் சுவேதா மூவருக்கும் இடையில் அழகிய நட்ப்பும் மலர்ந்தது.



வைதேகி தான் சில சமயம் சொப்னாவின் அதிரடி தாக்குதல்களை தாங்க முடியாமல் திண்டாடி கொண்டிருந்தாள்.



அன்று ஒரு நாள் அப்படி தான்.....



காலேஜில் மதிய உணவு இடைவேளை நேரம் அது.....



அஸ்வந்த்திற்கு கால் பண்ணிய சொப்னா, “asu… book five movie tickets da” என்று கூறினாள்.



அந்த புறம் அஸ்வந்த் என்ன கேட்டானோ அதற்கு, "hmm yes that movie only. evening show da " என்று கூறிவிட்டு போனை வைத்தவள் தன்னை வேற்று கிரகவாசி போல் பார்த்து கொண்டிருந்த வைதேகியையும், சுவேதாவையும் அவர்கள் இருவரின் கைகளிலும் நறுக்கென்று கிள்ளியவள்... அவர்களின் "ஆ...." என்ற கத்தலில் “ha ha….” என்று சத்தமாக சிரித்தாள்....



“Hey what movie ya? என்று சுவேதா ஆர்வமாக கேக்க...



வைதேகியோ அதையெல்லாம் கண்டு கொள்ளாதவளாய் "நான் வரல" என்று கூறினாள்.



அதற்கு சொப்னாவோ முகத்தை பாவமாக வைத்து கொண்டு...... “Please vaiyu darling…. This is my last bachelor outing da….. Let’s all go and enjoy today” என்று சிறுபிள்ளை போல் கண்களை சிமிட்டிகொண்டே கேட்க....



"போச்சு டா டார்லிங்னு சொல்லி கவுத்துட்டாளா...” என்று சுவேதா தன்னுடைய கன்னத்தில் கை வைக்க...



இங்கே வைதேகியும், அவளின் டார்லிங்கில் சிரித்து கொண்டே...."kk வரேன்" என்று சம்மதித்தாள்.



சொப்னா காலேஜில் ஜாயின் பண்ணியதிலிருந்து இந்த விஷயம் இவர்களுக்குள் நடந்து கொண்டு வருகிறது....



அஸ்வந்த் அவளை ஸ்மைலி என்று அழைப்பதை பார்த்து இவளும் அதே போல் அழைக்க முதலில் எதுவும் மறுப்புக்கூறாமல் இருந்த வைதேகி, ஒருநாள் சொப்னாவிடம் சென்று, என்ன சொல்வாளோ என்று சற்று பயம் அவளுள் இருக்க தான் செய்தது... ஏனெனில் எதுவாக இருந்தாலும் அவள் மற்றவர்களிடம் முகத்திற்கு நேராக கூறுவதை பார்த்திருந்த வைதேகிக்கு அதை சொல்லும் போது சற்று திணறலாக தான் இருந்தது.



அவளுக்கு அஸ்வந்த்தை தவிர இன்னொருத்தர் அது யாராக இருந்தாலும் சரி அவர்கள் தன்னை ஸ்மைலி என்று கூப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தைரியம் வர பெற்றவளாய் அதனை அவள் சொப்னாவிடம் கூறிவிட அதற்கு அவளின் பதிலை கேட்டு வைதேகி தான் திரு திருவென முழிக்க வேண்டியிருந்தது.



வைதேகி சொன்னதற்கோ அவள் கூலாக “Is darling ok” என்று கேட்டாள்.



அதற்கு தான் அவள் முழித்தது. அதில் அவளை பார்த்து சிரித்தவள், “darling or smilie” என்று கேட்டுக்கொண்டே புருவத்தை ஏற்றி இறக்க....



அதற்கு வைதேகியோ முகத்தை உம்மென்று வைத்து கொண்டு "Darling" என்று சொல்லி தலையாட்டி வைத்தாள்.



முதலில் சொப்னா அவளை டார்லிங் என்று சொல்லி அழைக்கும் போது வேண்டா வெறுப்பாக பதிலளித்தவளுக்கு போக போக அந்த பேரை கேட்டாலே சிரிப்பு வர ஆரம்பித்தது. அதனால் சொப்னா தனக்கு ஏதாவது அவளிடமிருந்து காரியம் ஆகவேண்டும் என்றால் டார்லிங் என்று சொல்லி தான் அழைப்பாள்.



அது தான் இப்பொழுது நடந்திருந்தது.



ஒருவழியாக கடைசி இரண்டு அவரை கட்டடித்து விட்டு அனைவரும் கிளம்பி பீனிக்ஸ் மாலில் இருந்த LUXE தேட்டருக்கு புறப்பட்டனர். சுவேதா மட்டும் அங்கு நேரடியாக வந்து விடுவதாக கூறினாள். வைதேகி வற்புறுத்தியதற்கும் "ப்ளீஸ் டி நீ போயிட்டே இரு நான் வந்து ஜாயின் பண்ணிக்கிறேன்... ஒரு அர்ஜென்ட் ஒர்க்குடி” என்று சொல்லிவிட்டு நழுவிவிட்டாள்.



சுவேதாவிற்கு அவங்க அவங்களோட பேரோட (pair) போகும்போது நான் எதுக்கு எக்ஸ்ட்ரா லார்ஜ் என்று நினைத்து தான் அப்படி செய்தாள்.



யாதவ் தேட்டர்க்கு நேராக வந்து விட... அஸ்வந்த், வைதேகி, சுவேதா மூவரும் இணைந்து பீனிக்ஸ் மாலிற்குள் நுழைந்தனர்.



யாதவ் எண்ட்ரன்ஸிலேயே அவர்களுக்காக காத்திருக்க... அவனை கண்ட சொப்னா மற்றவர்களை மறந்தவளாய் யாதவுடன் இணைந்து எப்பொழுதும் போல் வாயடித்து கொண்டே நடக்க ஆரம்பித்துவிட்டாள்.



அதன் பிறகு யாதவை பத்தி சொல்லவும் வேண்டுமா என்ன.... அவனுக்கு சொப்னாவை தவிர சுற்றியுள்ள யாரையும் தெரியாதவர்களை போல அவனுக்கும் சொப்னாவுக்கும் ஒரு உலகத்தை அமைத்து அதில் மூழ்கி போனான்.



இவர்கள் ஒரு புறம் என்றால்.....



அஸ்வந்த்திற்கும், வைதேகிக்கும் தாங்கள் இருவரும் இங்கு சந்தித்து கொண்டது, பேசிக்கொண்டது.... அதன் பிறகு நடந்தது அனைத்தும் படமாக விரிய....



அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவர்களின் மேல் தாங்கள் கொண்டிருந்த காதலில் இமைக்க மறந்து பார்த்து கொண்டிருக்க..... அதில் இருந்து முதலில் வெளி வந்த அஸ்வந்த்.... வைதேகியை பிடித்திருந்த கையை உயர்த்தி அதில் முத்தம் ஒன்றை வைத்தவன் அவளை அழைத்து கொண்டு தேட்டர் இருந்த இரண்டாவது புளோரை (floor ) நோக்கி சென்றான்.



அங்கு சென்றதும் அவர்கள் உள்ளே நுழைவதற்கான நேரமும் வர... அப்பொழுதுதான் தோன்றியவளாய் "என்ன படங்க" என்று கேட்டாள்.



அதற்கு அவனோ எதையும் சொல்லமால் "உள்ள வந்து பாத்துக்கோ" என்று அழைத்து சென்றான்.



அதை சொல்லும்போது அஸ்வந்த் அவளை பார்த்து சிரித்ததை போலவே வைதேகிக்கு தோன்றியது.



அதன் பிறகு அவளை சிந்திக்க நேரம் கொடுக்காமல் உள்ளே அழைத்து சென்று அவர்களுக்கான இருக்கையில் அமர செய்துவிட.... அவள் ஸ்கிரீனை பார்த்து தான் தெரிந்து கொள்ள வேண்டியிருந்தது....



“Conjuring 2”




என்னை சிரிப்பால் சிதைத்தவளே


தொடரும்.....
 
Status
Not open for further replies.
Top