All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "ராட்சசியின் அசுரன்!!"கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நாயகன்: நிரஞ்சன்
நாயகி: வெண்மதி


சுற்றிலும், கல்யாண வேலைகள் விருவிருப்பு டன் நடந்து கொண்டிருக்க, மாப்பிள்ளை மணையில் அமர்ந்து, மந்திரங்களை கூறிக்கொண்டிருக்க...


"பொன்னை அழைச்சுண்டு வாங்கோ!"என்ற ஐயரின் குரலுக்கு ஐயோ பெண்ணை காணவில்லை என்றதும் முகம் இறுகிப் போனது நிரஞ்சனுக்கு, உள்மனதில் (ஹப்பா! இப்பவாச்சும் இந்தத் திருமணம் நின்றது என்று உள்மனம் குத்தாட்டம் போட) வெளியில் முகத்தை சீரியசாக வைத்துக் கொண்டான்.


அதைக் கேட்டு நிரஞ்சன் தாயார் பெரும் ரகளை கட்ட, அடியே ஈஸ்வரி என் பேத்தி பாக்குறதுக்கு ஐஸ்வர்யாராய் மாதிரி இருப்பா அவள் எல்லாம் உன் கண்ணுக்கு தெரியவில்லையா? என்று கேட்ட அந்தப் பாட்டி மகேஸ்வரியின் கண்களுக்கு தெய்வமாக தெரிந்தவர்,


எங்கே என் மருமகள். அவளை கூட்டிட்டு போய் திருமணத்திற்கு தயார் செய்யுங்கள், என மகேஷவரி கூறவும், நிரஞ்சன் இன் மனதில் கட்டிவைத்த கோட்டைகள் சரசரவென இடிந்து அவன் தலையிலேயே விழுந்தது.


தன் பக்கத்தில் அமர்ந்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல், கெட்டி மேளம் கெட்டி மேளம் என்ற ஐயரின் குரலுக்கு, தாலியை கட்டி முடித்தவன் அப்போதுதான் நிமிர்ந்து பெண்ணின் முகத்தை பார்க்க நீயா என வாய் விட்டு அலறி விட்டான்.


அடியே, உன்னை இன்னும் 20 நாள்ல உன்னை வீட்டை விட்டு துரத்து கிறேன் என சபதம் கட்டவும், அவனது மனைவியோ ஐயோ அசுரனான என மனதில் அலறியபடி அடுத்தடுத்த சடங்குகளையும் மேற்கொண்டனர்.


**************************************

முதலிரவு அறைக்குள் நுழைந்த நிரஞ்சனை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டாள் அவனது மனைவி.


ஏய், ஒழுங்கு மரியாதையா போய் வெளியிடப்படு,என கூறவும் நல்ல பிள்ளையாக பாய் தலையணையை கொண்டு வெளியில் போட்டவள், ரூமிற்குள் மீண்டும் வந்து குட்நைட் அசுரா எனவும் என்னவென்று யோசிப்பதற்கு, முன்னதாகவே அவனை பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்தினாள்.
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
விருப்பமுள்ளோர் கருத்துக்களை கருத்து திரியில் மட்டும்பகிர்ந்து கொள்ளுங்கள்.
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 1:



"வேயுறு தோளிபங்கன்விடமுண்ட கண்டன்


மிகநல்ல வீணை தடவி


மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என்


உளமே புகுந்த அதனால்


ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி


சனிபாம்பி ரண்டு முடனே


ஆசறு நல்லநல்ல அவைநல்ல நல்ல


அடியார் அவர்க்கு மிகவே"



என அந்த வீட்டில் காலையிலேயே சாம்பிராணி புகை மணக்க, தனக்கு மிகவும் பிடித்த, சிவபெருமானின் பாடலை பாடியவாறு, எப்போதும் போல் பூஜை செய்து கொண்டிருந்தார் மகேஸ்வரி.



பூஜையை முடித்தவர்,'எம்பெருமானே! இன்று போல் என்றும் இவ்வுலகில் உள்ள அனைத்து உயிர்களும், சந்தோஷமாக வாழ வேண்டும். யாருக்கும் எந்தவித தொந்தரவும், பிரச்சினையும் பிணியும் அன்றி அவர்கள் வாழ்நாள் முழுவதும், மகிழ்வுடன் வாழ நீங்கள்தான் மணம் புரிய வேண்டும் பெருமானே'! என வேண்டிக்கொண்ட அன்னையை தனக்காக அன்றி.. பிறருக்காக வேண்டிக் கொள்வது கண்டு என்பது எப்போதும் போல் புன்னகையை உதிர்த்தான் நிரஞ்சன்.




நிரஞ்சன் பற்றி '26 வயது இளைஞன். பார்ப்பதற்கு அப்படியே, தனது தந்தையின் தோற்றத்தை உரித்து வைத்திருப்பவன். அழகிய வில்லென வளைந்த இரு புருவமும், சிரித்தால் குழி விழும் அழகிய உதடுகள் பிறரை எள்ளி நகைக்கும் கண்களும்,அதே சமயத்தில் எதிரியை நடுநடுங்க வைக்கும் பார்வையும், தினமும் யோகா செய்ததன் பலனாக விளைந்த அழகிய கட்டுமஸ்தான உடலும், ஒரு காலை தூக்கி எதிரி மீதுவைத்தால் அவன் அந்தநொடியே இறந்து போவது உறுதி'...



தந்தை ஒரு விபத்தில் பறி போய் விட, மகேஸ்வரி இளம் வயதில் விதவையாக மாற, எதற்கும் துவளாது ஒரு சிறிய தையல் கடையை ஆரம்பித்தவர்,தனது கடின உழைப்பால் இன்று அங்கு அவரைப் போலவே பல பெண்கள் வேலை பார்க்கும் அளவிற்கு, முன்னேறி உள்ளார்.




தாயின், அன்பு ஒன்றே பற்றாக கொண்டு வாழ்பவன் தான் நிரஞ்சன். மிகவும் சிரமப்பட்டு கண் விழித்து படித்ததன் பயனாக, இன்று மருத்துவராக சிறந்த மருத்துவ மனையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறான்.



அவர் அனைத்து பூஜைகளையும் முடிக்க, சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தவன் அம்மா..என்றழைத்த மகனிடம் திரும்பியவர்,



அவன் நின்ற கோலத்தை கண்டு அதிர்ந்து போனார். 'அடேய்…என்னடா கோலம் இது? விளக்கமாருக்கு பட்டுக் குஞ்சம் கட்டினது போலிருக்கிறதே? சரியான பிச்சைக்காரன் மாதிரி இருக்க... உன்கிட்ட டிரஸ் எடுக்க காசு இல்லன்னு சொல்லியிருந்தா... நானாச்சும் தந்திருப்பேன் இல்லையா? அதை விட்டுவிட்டு இப்படி உள்ள பாதி வெளியில் பாதின்னு, போட்டுட்டு வந்து நிக்கிறியே போட்டுக்கொண்டு வந்து நிற்கிறாயே? ஆமா.. நீ சேர்த்து வைத்த பணம் எல்லாம் என்னடா பண்ற? ஒருவேளை ஒன்ன ஆஸ்பத்திரியை விட்டு தூங்கிட்டாங்களா... ஐயோ ஈஸ்வரா!இப்படி காலங்காத்தாலே என்ன இந்த பாவி புலம்ப வச்சுட்டான்'என தானாகவே அனைத்தையும் கற்பனை பண்ணிக் கொண்டு பேசும் தாயை கண்டவன் எரிச்சலடைந்த நிரஞ்சன்,



அம்மா... என்னம்மா? இந்த ட்ரஸ் கிண்டல் பண்ணிட்டு இருக்கீங்க, இதோட விலை எவ்வளவு தெரியுமா? இதோட விலை கிட்டத்தட்ட 5000 ரூபாய். ஆனா நீங்க என்னென்ன இந்த ட்ரஸை போய் இப்படி குறை சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.. என சலித்துக் கொள்ளவும், அவனை மேலிருந்து கீழாக ஒரு முறை நோக்கியவர்



முகத்தை அப்பாவியாக வைத்துக் கொண்டு, கையில பாதி காணோம்.. கீழே உள்ள பேண்ட்ல முட்டியை மறைத்துக் கொண்டிருக்கும் துணியை காணோம்! இதெல்லாம் ஒரு துணிமணினு சொல்லி சொல்லிக்கிட்டு திரியுற? நானும் ஒரு தையல் கடைக்காரர் பெண்மணி தான். எனக்கும் உடைகளைப் பற்றி தெரியும்.



இந்த மாதிரி துணி எல்லாம் எப்படி தான் இந்த காலத்து பசங்க போடுறீந்களோ? ஒழுங்கு மரியாதையா ஒரு டாக்டர் மாதிரி போய் டிரஸ் பண்ணிக்கிட்டு வாடா.. என்ற அன்னையை, முறைத்துப் பார்த்தவன் தனது அறைக்குச் சென்று உடையை மாற்றி கொண்டு வந்தான்.



மீண்டும் வந்தவனை கண்டதும், தான் ஆசுவாசம் எய்தினார் மகேஸ்வரி. காலை உணவு எப்போதும் போல் கேப்பை களி செய்தவர் அவனுக்கு பரிமாறினார். அதை எடுத்து வாயில் வைத்ததும், எப்போதும் போல் சப்புக் கொட்டி தின்றான் நிரஞ்சன்.



அதைக் கண்டு உள்ளுக்குள் புன்னகைத்துக் கொண்ட மகேஸ்வரி வாஞ்சையாக அவனது தலையை தடவிக் கொடுத்தார். சரிப்பா.. உனக்கும் 26 வயது ஆகிவிட்டது. உனக்குன்னு ஒரு கல்யாணத்த காலாகாலத்தில் பண்ணாதான் எனக்கும் கொஞ்சம் நிறைவாக இருக்கும்.



நீயும், 24 மணி நேரமும் ஆஸ்பத்திரியே கதி என்று கிடக்கிறாய்.."நானும் எவ்வளவு நேரம் தான் வீட்டிலேயே தனியாக இருக்கிறது. தையல் கடையையும் இனிமேல் வேண்டாம் என்று விற்று விட்டேன். தயவுசெய்து ஒத்துக்கொள் நிரஞ்சன்"என அன்னை மன்றாடுவதை, காண மனம் பொறுக்க இயலாதவன்



இப்போது என்ன அவசரம் அம்மா? எனக்கு இப்போ வெறும் 26 வயது மட்டும் தான் ஆகிறது. இன்னும் இரண்டு வருடங்கள் செல்லட்டும் அம்மா... அதற்குள் நானும் எனக்கென்று சொந்தமாக ஒரு ஆஸ்பத்திரியை உருவாக்கிக் கொள்ள வேண்டும். அதில், நம்மை மாதிரியே எத்தனையோ கஷ்டப்படும் குடும்பத்திற்கு, இலவசமாக மருத்துவம் பார்க்க வேண்டும் அம்மா அதன் பிறகு வேண்டுமானால் உங்களுக்காக திருமணம் செய்து கொள்கிறேன் என தன் தரப்பை எடுத்துக் கூறினான் நிரஞ்சன்.



இப்போது உள்ள அனைத்து இளைஞர்களும், எந்தெந்த வழியிலோ செல்ல தன் மகன் மட்டும் அதில் இருந்து சற்று விலகி, தன்னைப்போலவே பிறரும் நல்லா இருக்க வேண்டும் என நினைக்கும் மகனை கண்டு இவன் என் மகன் என பெருமையாக புன்னகைத்தார்.



சரிப்பா.." நீ சொல்றது மாதிரியே உனக்கு இன்னும் இரண்டு வருடம் தான் கால அவகாசம். அதன்பிறகு, நான் சொல்லும் பெண்ணை நீ நிச்சயமாக திருமணம் செய்துகொள்ள வேண்டும்" எனக்கட்டளை விதிக்க



கவலைப்படாதீர்கள் அம்மா எனக்கென்று பிறந்த ஒரு பெண் இந்த உலகில் இருப்பாள். அவள் தானாகவே என்னிடம் வந்து சேர்ந்து விடுவாள் என் அன்னையிடம் கூறியவன் மருத்துவமனைக்கு தாமதமாகிவிட்டது அம்மா நான் கிளம்புகிறேன். என் அவரின் கன்னத்தில் முத்தம் வைத்தவன் தனது காரை எடுத்துக் கொண்டு மருத்துவமனையை நோக்கி பறந்தவனின்,



மனதிற்குள் என்னுடைய அழகி எனக்காக பிறந்த என்னுடைய தேவதை இந்த உலகத்தில் எங்கு எப்படி இருக்கிறாளோ? மேலும் மைடியர் ஸ்வீட் ஏஞ்சல். இன்னும் இரு வருடங்களில், நாம் ஒன்று சேர்ந்து விடுவோம். அதுவரை நீ உன் வாழ்க்கையை என்ஜாய் பண்ணு... என்று அவனது தேவதையை பார்த்துக் கொண்டிருந்த நேரம்,



அவனுடைய தேவதையும் அங்கே மாட்டு சாணியை உருட்டி கொண்டிருந்தது. இது எனக்கு வழக்கம்தான் என சரியாக சாணியை உருட்டி சுவற்றில் அடித்தவள் அது பச்சக் என சரியாக சுவற்றில் ஒட்டிக்கொண்டது. அதைக் கண்டு, பெருமையாக புன்னகைத்தபடி அடியே வெண்மதி உன்னோட போட்டிபோட இந்த உலகத்துல யாருடி இருக்கா?



எப்போவுமே, இந்த மதி மாதிரி யாருமே சுவற்றில் சரியாக குறிவைத்து சாணியை அடிக்க முடியாது, எனத் தன்னைத்தானே பெருமை பேசிக் கொண்டிருந்த நேரம்!



மொத்தமாக குவித்து வைத்திருந்த சாணியில், அங்கு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மட்டையாளன் பந்தை உயர்த்தி அடிக்க, அதை தவற விட சரியாக அந்த பந்து சென்று சாணியில் முக்க பெருமை பேசிக் கொண்டிருந்தவளின் முகத்தில் பட்டு தெறித்தது.



வேகமாக ஓடி வந்த சிறுவர்கள், அங்கு வெண்மதி இருக்கும் நிலைமையை கண்டு விழுந்து விழுந்து சிரிக்க, தன்மேல் சாணியை பட வைத்ததோடு மட்டுமல்லாமல், தன்னை பார்த்து சிரிக்கும் சிறுவர்களை கண்டதும், வேகமாக அந்த பந்தை எடுத்து சாணியின் ஞாபகத்தில் சுவற்றில் பலமாக அடிக்கவும், அது சுவற்றில் பச்சக் என ஒட்டிக் கொள்ளாமல் மீண்டும் வந்து அவளையே தாக்கியது.


அதில் கோபம் அடைந்தவள், அந்த பந்தை தூக்கி எறியவும் அது சரியாக சென்று அங்கு வண்டியில் வந்து கொண்டு இருந்த நிரஞ்சன் காரில் பட்டு முன் கண்ணாடி சில்லு சில்லாக உடைந்து போனது. வண்டியை வேகமாக நிறுத்தியவன், திடீரென இப்படி நடந்ததில், நிரஞ்சனின் கைகளில் இருந்த கார் ஒரு நிமிடம் ஆட்டம் கண்டது. வேகமாக வண்டியை ஒடித்து திருப்பினான். இதற்குக் காரணமானவர்களை காண வண்டியை நிறுத்திவிட்டு தேடிச் சென்றான்.



அவளின் செய்கையில், எரிச்சலடைந்த குழந்தைகள்'எரும மாடு! உனக்கு கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா? பந்தை தூக்கி எறிந்து விட்டாய் லூசு என அவளைத் திட்டிய வாண்டுகள் பந்தை தேடிச் சென்றனர். ஏற்கனவே கோபத்தில் இருந்தவளை சிறுவர்கள் திட்டவும் அவர்களை அடிப்பதற்காக எழுந்தவளை



வெண்மதி.. என்ற வசந்தின் குரலில் தடைபட்டு நின்றாள். வெண்மதி வசந்த் பற்றிய ஒரு அறிமுகம்.



வெண்மதி பார்ப்பதற்கு அழகாக இல்லை எனினும், அடுத்தவரின் மனதில் ஒருமுறையாவது பதியும் முகம். பால் போன்ற அழகிய சருமத்தை கொள்ளாது வெயிலில் திரிந்த காரணத்தால், மாநிறமாக தான் இருப்பாள். சிறு வயதில், பெற்றோர்கள் ஒரு திருவிழாவிற்கு சென்று மீண்டு வரும் வழியில் ஒரே அடியாக இறைவனிடமே சென்றார்கள். மதிக்கு அப்போது உடம்பு சரியில்லாத காரணத்தால் தனது அம்மாவிடமே விட்டுச் சென்றார் மதியின் தந்தை.அப்போதிலிருந்து வெண்மதி வளர்க்கும் பொறுப்பு அவளின் தந்தையின் அம்மா (அவளது அப்பத்தா) பொறுப்பு ஆயிற்று.



பள்ளிப்படிப்பை முழுவதாக படிக்காதவள். மிகவும் அவளுக்குப் பிடித்தது அவர்கள் வீட்டில் உள்ள கோழி, ஆடு, மாடு போன்ற ஜீவராசிகள் மட்டுமே. அதனால், படிப்பெல்லாம் ஒரு பொருட்டாகவே அவள் இதுவரை எண்ணியது கிடையாது.



வசந்த் வெண்மதியின் தாய் மாமன் மகன். அவள்மீது எல்லையற்ற நேசம் கொண்டவன். அவளை தனது மனைவியாக எண்ணி வாழ்ந்து கொண்டிருப்பவன், அவளது ஜாதகத்தில் திருமண யோகம் கூடி வராத காரணத்தால் சற்று காத்திருக்கிறான்.



இப்போது கதைக்குள் செல்வோம்…



வெண்மதி…என்ற அவளது மாமா வசந்தின் குரலில், என்ன என்பது போல் திரும்பி பார்க்க அவள் இருந்த நிலையை கண்டதும், எதற்காக அழைத்தானோ? அந்த விஷயத்தையே மறந்து அவள் முகம் முழுவதும் இருந்த சாணியைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான்.



ஏற்கனவே அந்த சிறுவர்களின் செயலில், கோபத்தில் இருந்தவள் இப்போது தனது மாமாவும் சிரிக்க,



மாமா'ஒழுங்கா சிரிக்கிறது நிப்பாட்டு.. இல்லடி உன் மூஞ்சிலேயே சானிய வீசி விடுவேன்' என மிரட்டவும், அவளது கூற்றில் சிரிப்பை கட்டுப்படுத்த நினைத்தவன் அவளது முகத்தை காண காண சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது.



இன்னும் சிரிப்பை கட்டுப்படுத்தாமல், சிரிக்கும் மாமாவை கண்டவள் அருகிலிருந்த சாணியை தூக்கி அவனை நோக்கி எறியவும், எஸ்யூஸ் மி? என தனக்கு பின்னால் ஒரு குரல் கேட்கவும், வசந்த் நகர்ந்து கொள்ள திரும்பி நின்ற வசந்தை தாண்டி நிரஞ்சன் மீது விழுந்தது.



அதைக் கண்டு விழுந்து விழுந்து சிரித்தாள் நிரஞ்சனின் ராட்சசி.



அசுரன் வருவான்...






உங்களது கருத்தை கருத்து திரியில் பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி.

வாழ்க வளமுடன் 😍😍😘😘
 
Status
Not open for further replies.
Top