All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "ராட்சசியின் அசுரன்!!"கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 18:


"யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள

அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே
===
புயல் தொட்ட மரமாகவே
தலை சுத்தி போகிறேன்
நீர் அற்ற நிலமாகவே
தாகத்தில் காய்கிறேன்
உனை தேடியே
மனம் சுத்துதே
ரா கோழியாய்
தினம் கத்துதே
உயிர் நாடியில்
பயிர் செய்கிறாய்
சிறு பார்வையில்
எனை நெய்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன
நா சருகாகி போனேனே பாத்த பின்ன
நா தல காலு புரியாமா
தர மேல நிக்காமா
தடுமாறி போனேனே
நானே நானே

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ
====
அடி நெஞ்சு அனல் ஆகவே
தீ அள்ளி ஊத்துர
நூல் ஏதும் இல்லாமலே
உசுர ஏன் கோக்குர
எனை ஏனடி
வதம் செய்கிறாய்
இமை நாளிலும்
உலை வைக்கிறாய்
கட வாயிலே
எனை நெய்கிறாய்
கண் ஜாடையில்
எனை கொல்கிறாய்

யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ
யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ

மீன்கொத்திய போல
நீ கொத்துர ஆள
அடி வெள்ளாவி வெச்சுத்தான்
வெளுத்தாங்களா உன்ன
வெய்யிலுக்கு காட்டாம
வளத்தாங்களா
நா தல காலு புரியாம
தர மேல நிக்காம
தடுமாறி போனேனே
நானே நானே..."பாடல் சகிதம் தொலைக்காட்சியில் ஒலிக்க, அதற்கு தகுந்தார் போன்று ஆடிக் கொண்டிருந்தார் ஒருவர்.



அது யாரென்று நானே சொல்ல வேண்டாம்.இந்நேரம் வாசகர்கள் நீங்களே கண்டுபிடித்து விட்டீர்கள் என நம்புகிறேன்.


வெண்மதி இன்னும் கொஞ்சம் பக்கத்தில் வந்து படுத்துக் கொள்ளலாமா... உன் கன்னத்தில் முத்தமிடும்போது எனக்கு ரொம்ப சந்தோசமாக இருக்கிறேன். அவள் எந்தவிதமான மறுப்பும் சொல்லாது, அமைதியாக இருக்கவும் அதனை சம்மதமாக ஏற்றுக்கொண்ட நிரஞ்சன் மெதுமெதுவாக வெண்மதியை கன்னத்தில் முத்தமிட்டவன் அப்படியே கீழிறங்கி தனது உதடுகளை அவள் உதடுகளை பொறுத்த போன சமயம்,



நிரஞ்சன் காதில் திடீரென பாட்டு ஒலிக்கவும், கனவிலேயே அவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தவன் பாட்டு சத்தம் கேட்டு,


"ஆத்தா..."அலறியபடியே படுக்கையிலிருந்து கீழே விழுந்தான்.


வெண்மதியோ அந்த பாட்டு சத்தத்தை கேட்டு அவளும் அடித்துப் பிடித்துக்கொண்டு எழ, நிரஞ்சன் கீழே விழுந்ததை கண்டவள் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தாள்.


நிஜத்தில் தான் அவளோடு வாழ இயலவில்லை. கனவிலாவது வாழலாம் என்றால் இந்தப் பாட்டை போட்டு அந்த சத்தத்தில் கனவு கலைந்ததில், ஏற்கனவே எரிச்சலாக இருந்தது.


இதில் அவள் விழுந்து விழுந்து சிரிக்கவும்,"என்ன இப்போ எதுக்கு சிரிக்கற..."அவளிடம் எரிந்து விழுந்தவன் யார் இவ்வளவு சத்தம் வைத்துக்கொண்டு காலையிலேயே பாட்டு கேட்பது அதுவும் நம் வீட்டில் கோபத்துடன் கீழே இறங்கி சென்றவன் அங்கு பாட்டு கேட்டதோடு மட்டுமல்லாது அதற்கு ஆடிக்கொண்டிருந்த பாட்டியை கட்டி அதிர்ந்தே போனான்.



மகேஸ்வரியும் தனது தூக்கத்திலிருந்து கிட்டத்தட்ட அலறி அடித்தபடி கீழே இறங்கி வந்த வரும், இதெல்லாம் எனக்கு சகஜம் தான் என்பது போல் கீழிறங்கி வந்தாள் வெண்மதி.



ஆம். அங்கு ஆடிக்கொண்டிருந்தது நீங்கள் அனைவரும் கணித்தது மாதிரி நமது பாட்டியே தான்.


அதுவும், புடவையை தூக்கி சொருகிவாறு சேலை முந்தானையை சரிய விட்டவாறு ஹை ஹீல்ஸ் செருப்புடன் நிரஞ்சன் வாங்கிக்கொடுத்த தோடும் உதட்டில் அந்த லிப்ஸ்டிக், முடியை முன்னே விட்டவாறு,அந்தப் பாட்டுக்கு குத்து குத்து என்று ஆடி குத்திக்கொண்டு இருந்தார்.


பாட்டியின் இந்த புதிய அவதாரம் கண்டு நிஜமாகவே திகைத்துப் போயினர் தாயும் மகனும்.


பாட்டியை அதிர்ந்தபடியே பார்த்துக்கொண்டிருக்கிருந்தவர்கள் அருகில் வந்த பாட்டி அவர்களை சுற்றி சுற்றி தனது வாயால் சேர்ந்து பாடியவாறு ஆடிக் கொண்டே வரவும் மயங்கி விழுந்தார் மகேஸ்வரி.



அவர் திடீரென மயங்கி விழுவதை கண்டதும் அனைவரும் பயந்து போய் விட்டனர்.


மகேஸ்வரி என்று பாட்டி ஒருபக்கம் பதற,"அம்மா..."நிரஞ்சன் ஒருபக்கம் துடித்துப் போய் கத்த,"அத்தை..."வெண்மதி ஒருபுறம் கத்த நிமிடத்தில் அனைவரும் திகைத்து போய் நின்றனர்.


முதலில் சுதாரித்துக்கொண்டது பாட்டி தான். வேகமாக ஓடி ஓடிக்கொண்டிருந்த பாட்டை நிறுத்தியவர் சமையலறைக்குச் சென்று தண்ணீரை கொண்டு வந்து மகேஸ்வரியின் முகத்தில் தெளித்தார்.


அவர் தண்ணீர் தெளித்ததும் சற்றே சுயநினைவு அடைந்தார் மகேஸ்வரி. அவர் கண்விழித்ததைக் கண்டதும் தான் அனைவருக்கும் மூச்சு வந்தது.


சிரமப்பட்டு எழுந்து அமர்ந்தவர் தன்னை சமன் படுத்தி கொள்ள சிறிது நேரம் தேவைப்பட்டது.


டாக்டரான நிரஞ்சன் அவர் கையைப் பிடித்து பரிசோதித்து கண்களை கீழே இறக்கியவன் உற்று நோக்கியவாறு அவர் நாடித்துடிப்பை பரிசோதித்தான். முடிவில் அவர் நன்றாக இருப்பது போன்று தான் இருந்தது.


நன்றாக இருக்கும் இவர் திடீரென மயங்கி விழுந்து அதற்கு காரணம் என்னவாக இருக்கும் என்று குழம்பிப் போனான். அதை அவரிடமே கேட்க நாடியவன் வாயை திறந்து கேட்டான்.


"அம்மா..."நீங்கள் நன்றாக தானே இருக்கிறீர்கள். பிறகு ஏன் திடீரென மயங்கி விழுந்து விட்டீர்கள்.


அதுவா அது ஒன்றும் இல்லை கண்ணா...


இதோ அதற்கெல்லாம் காரணம் இந்த அத்தை தான்.



"என்ன சொல்கிறாய் மஹேஸ்வரி..." நான் உன்னை எதுவுமே செய்யவில்லையே.அத்தோடு இப்பொழுது தானே நீ எழுந்தும் கீழே வருகிறாய். நான் உன்னை சுற்றி ஆடி மட்டும் தானம்மா கொண்டிருந்தேன். இதில், நீ திடீரென மயங்கி விழுந்ததற்கு நான் எப்படி காரணமாவேன்.


அதான் நீங்களே இப்போ சொன்னீர்களே சுற்றி சுற்றி ஆடி வந்தேன் என்று,



"நீங்கள் காலையில் பல் விளக்க வில்லையா...?"திடீரென கேட்கவும்,


பாட்டியோ "இல்லை..."என்று கூறவும்,



நீங்கள் பல் விளக்காததால் என்னருகில் வந்து பாடவும் உங்கள் வாயில் வந்த நாற்றம் தாங்க முடியாமல் தான் கீழே மயங்கி விழுந்தேன்.


அவ்வளவுதான் அதுவரை அங்கிருந்த பதற்றம் மறைந்தது. அனைவரும் பாட்டியை பார்த்து மகேஸ்வரி உட்பட விழுந்து விழுந்து சிரித்தனர்.


"பாட்டி..."நான் உன்கிட்ட எத்தனை தடவை சொன்னேன் ஒழுங்கு மரியாதையாக காலையில் எழுந்ததுமே பல்லை விளக்கு என்று எத்தனை தடவை சொன்னேன்.



இப்ப பாரு, நீ ஒழுங்கா நான் சொன்னதை கேட்காததால் அத்தை மயங்கி விழுந்து விட்டார் ஹாஹா என்னால் முடியவில்லை கிழவி சிரித்துக்கொண்டே கூறியவள் மகேஸ்வரிடம் திரும்பி"அத்தை என்னை மன்னித்துவிடுங்கள் சத்தியமாக நான் நீங்கள் மயங்கி விழுந்ததற்கு சிரிக்கவில்லை"இதற்கு மேலும் என்னால் முடியாது.



காலையிலிருந்து நான் எத்தனை தடவை தான் சிரிப்பது,"மாமா..."காலையில் எழும்போதே நீங்கள் கீழே விழுந்ததை கண்டு நான் சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது.


இப்போது பாட்டி செய்த இந்த வேலையில், என்னால் சிரிப்பை சற்றும் கட்டுப்படுத்த முடியவில்லை நான் நம்ம அறைக்கே செல்கிறேன்.



கணவனின் மானத்தை கப்பலில் ஏற்றியவள் தனது அறைக்குச் சென்று விட்டாள்.


அனைவரும் தன்னை பார்த்து சிரிப்பதை கண்ட பாட்டி சற்று கடுப்பில் தான் இருந்தார்.


வெண்மதி அவன் கீழே விழுந்த விசயத்தை சொன்னதுதான் தாமதம் அவனைக் கண்டு விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்துவிட்டார் பாட்டி.



மகேஸ்வரியும் ஒருகட்டத்தில் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் நிரஞ்சனிடம் வந்தவர்,



"கண்ணா... இப்போது நான் ஏன் உன்னை திருமணம் செய்துகொள்ள சொன்னேன் என்று தெரிகிறதா...?"


"இதற்கு முன்பு நாம் இப்படி சிரித்து எனக்கு ஞாபகம் இல்லை பா ஆனால் என்று உனக்குத் திருமணம் ஆனதோ அன்றிலிருந்து நாம் செய்யும் ஒரே செயல் விடாமல் சிரித்துக் கொண்டே இருப்பதுதான். வெண்மதி உன் வாழ்க்கையின் வாரம் அவளை எக்காரணம் கொண்டும் தவற விடாதே"சொல்லவும்,



இதை நீங்கள் சொல்ல வேண்டுமாம்மா "அவளை என் உள்ளங்கையில் வைத்து தாங்குவேன் என்று தாங்கிக் கொள்வேன்"உறுதி அளித்தவன்,



பிற்க்காலத்தில் அவன் செய்யும் செயலால் அவன் மனைவி தன்னை விட்டுப் பிரிந்து போகப்போகவதையும், இதனால் தனது மகளைப் பிரிந்த சில ஆண்டுகள் வாழ போவதையும், குடும்பத்தில் இருக்கும் சந்தோஷத்தை குழி தோண்டி புதைக்க போவதையும் அறியாமல் போனது தான் விதியின் சதியோ...


விதியை வென்றவர் யார் தான் இருக்கிறார்கள்...



அவரவர் அறைக்கு சென்றவர்கள், தங்களை சுத்தப்படுத்திக் கொண்டு திரும்பி காலை உணவிற்கு ஒன்றுகூடினர்.



காலை உணவிற்கு மகேஸ்வரியும் பாட்டியும் சேர்ந்தது சமைத்திருந்தனர்.



காலை உணவிற்கு இட்லியுடன் வெண்பொங்கல் மணமணக்க கமகம கேசரி தேங்காய் சட்னியும் சாம்பாரும் வடையுடன் தங்களது காலை உணவை தொடங்கினர்.


கேசரியை வாயில் வைத்ததும் தான் இதில் சர்க்கரை போடுவதற்கு பதிலாக உப்பு போட்ட தனது மடத்தனத்தை எண்ணி அசடு வழிந்த வாறு அமர்ந்திருந்தாள் வென்மதி.


அவள் அக்கடி வழிவது அனைவருக்கும் தெரிந்தாலும், யாரும் வெளியில் காட்டிக் கொள்ளாதது தங்கள் காலை உணவை தொடர்ந்தனர்.


உண்டு முடித்ததும் சமையலறையை ஒதுக்க மாமியாருடன் மருமகளும் இணைந்துகொண்டாள்.



பிறகு அனைவரும் ஹாலில் ஒன்று கூட, முதலில் வாயை திறந்தான் நிரஞ்சன்.



"அம்மா..."நான் இப்போது கட்டாயமாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். உங்களுக்கே தெரியும் நாடு இப்போது இருக்கும் நிலைமை.



இந்த நிலைமையில் நாம் எப்படி வெளியில் செல்வது, இப்போது இருக்கும் நிலைமையில் மக்களுக்கு எனது உதவி நிச்சயமாக தேவைப்படும் அம்மா. அதனால், நான் தற்பொழுது மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.



மகேஸ்வரிக்கு அது புரிந்தாலும், திருமணமான மூன்றாவது நாளான இன்று மனைவியை விட்டு கணவன் செல்வதை எந்தப் பெண்ணும் விரும்ப மாட்டார்கள்.


"நீ சொல்வது சரிதான் கண்ணா..."ஆனால், வெண்மதியும் பாவம் தானே. உன்னோடு சேர்ந்து இருக்க வேண்டும் என்றுதான் நினைப்பாள்.


"அத்தை..."வேண்டாம். அவர் இப்போது என்னோடு இருப்பதை விட நாட்டிற்கு தான் அவரது உதவி நிச்சயமாகத் தேவை.



செய்தியைப் பார்க்கும்போது ஒவ்வொரு நொடியும் மனதிற்கு மிகவும் கஷ்டமாக உள்ளது.நீங்கள் அவரை தடுக்க வேண்டாம் அவர் கண்டிப்பாக செல்லட்டும்.



"இல்லை மருமகளே நீ சொல்லுவது சரிதான். இருந்தாலும் உனக்கு கஷ்டமாக இருக்காதா..."



"நிச்சயம் இல்லை அத்தை அம்மா. இப்போது இல்லை என்றாலும் வாழ்க்கை முழுவதும் சேர்ந்து தான் வாழப் போகிறோம். ஆனால் இப்பொழுது அவர் போகாமல் இங்கேயே இருந்தால் பல உயிர்கள் இறந்து போவார்கள்"அவரை தடுக்க வேண்டாம்.


தன்னை புரிந்துகொண்ட மனைவியை கண்டு காதல் அதிகரித்தது ரஞ்சனுக்கு.



அறைக்குச் சென்றவன் பணிக்கு கிளம்பி கீழே வந்தவன், ஹாலில் குழுமியிருந்த அனைவரிடமும் பொதுவாக"சென்று வருகிறேன்"என்றவாரு காருக்குச் சென்று தனது மருத்துவமனையை நோக்கி காரை செலுத்தினான்.



காருக்குள் செல்வம் பொழுதும் கூட, மனைவியின் புரிதல் தன்மையை எண்ணி வியந்து போனவன் ஆஸ்பத்திரிக்கு சென்றான்.



எல்லாம் மருத்துவமனைக்குச் செல்லும் வரை தான். வேலை என்று வந்துவிட்டால் அவனுக்கு எதுவுமே ஞாபகம் வராது.


மருத்துவமனைக்குச் சென்றவன் அங்கு நோயால் அவர்கள் படும் துன்பத்தைக் கண்டு, மனதளவில் கஷ்டப்பட்டாலும் இதை எப்படியாவது முறியடிப்பேன் சபதம் மேற்கொண்டான்.



அதற்கு முதல் கட்டமாக, தலைமை மருத்துவருடன் செய்தியாளர் சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தான்.



அனைவரும் வந்த பிறகு, தனது உரையைத் தொடங்கினான்.



"இப்போது இருக்கும் நிலைமையில், அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டியது மிகவும் அவசியம். அத்தோடு இப்பொழுது பரவி வரும் நோய் குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை"


"ஏன் சார்..."இதற்கு மருந்து கண்டுபிடித்து விட்டீர்களா, என ஒரு செய்தியாளர் கேட்கவும்,


இல்லையென தலையசைத்தவன், இயற்கையாகவே நமது உடம்பில் எதிர்ப்புச் சக்தி அதிகம். யாரும் இந்த நோய் ஒரு பொருட்படுத்தாது எப்போதும் போல் எனக்கும் ஒன்றும் இல்லை நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று மனதளவில் தன்னைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.



பிறகு, எதிர்ப்புச் சக்தி பொருட்களை சாப்பிட்டால் உடம்பில் எப்பேர்ப்பட்ட வைரஸ் நுழைந்தாலும் வெளியேற்றிவிடும்.



"நீங்கள் சொல்வது புரியவில்லை சார்... என்ன மாதிரியான உணவுப் பொருட்களை எடுத்துக்கொள்ள வேண்டும்"அருகிலிருந்த மற்றொரு செய்தியாளர் கேட்க,



அவரைப் பார்த்து புன்னகைத்தான். நான் சொல்லும் இந்த பொருட்களை எடுத்துக் கொண்டாலே போதுமானது.



பூண்டு இதை எடுத்துக் கொள்வதன் மூலம்,ரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும், ஹார்மோன்களைக் கட்டுப்படுத்தவும், காதல் உணர்வைத் தூண்டவும் செய்யும் அருமையான குணங்களைக் கொண்டுள்ளது. எதிர்ப்பு சக்தியைப் பொறுத்த விஷயத்தில் பூண்டின் பங்கு மிகவும் அருமையானது. இதில் உள்ள அல்லிசின் என்னும் பொருள் பாக்டீரியாக்களையும், தொற்றுக்களையும் கொல்லவல்லது.

அடுத்தபடியாக இஞ்சி
நுண்ணுயிர்களுக்கு எதிராகப் போராடும் சக்தி இஞ்சிக்கு உண்டு. இதில் அதிக அளவு ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் எனப்படும் உடலை காக்கும் பொருள் நிறைந்துள்ளது.


தயிரில் உடலுக்கு நல்லது செய்யும் நுண்ணுயிர்கள் நிறைந்துள்ளன. இந்த நல்ல நுண்ணுயிர்கள் செரிமான உறுப்புகளை குறிப்பாக குடற்பகுதியை நல்ல நிலையில் வைக்க உதவுகின்றன. ஆரோக்கியமன செரிமான மண்டலம் ஒரு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை உறுதி செய்யும்.

பார்லி, ஓட்ஸ்
பார்லியும் ஓட்ஸும் ஒரு முக்கியமான நார்ச்சத்தான பீட்டா&க்ளூக்கன் எனப்படும் நுண்ணுயிர் கொல்லும் மற்றும் உடலைக் காக்கும் குணங்களைக் கொண்ட பொருளைக் கொண்டுள்ளன. இவை மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும்.

டீ, காபி
டீ மற்றும் காபி ஆகிய இரண்டுமே மூளையை சுறுசுறுப்படையச் செய்யும் குணம் கொண்டவை. காபியும் டீயும் பல கொடுமையான மனச் சூழ்நிலைகளை தடுக்கவல்லவை.

சர்க்கரைவள்ளி கிழங்கு
பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படும் இந்தக் கிழங்கு இணைப்புத் திசுக்களின் உற்பத்திக்கு உதவும் வைட்டமின் ஏ சத்தை அதிகம் கொண்டுள்ளது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு உடல் சருமத்தை தொற்று மற்றும் நுண்ணுயிர் தாக்குதலில் இருந்து காக்கிறது. உங்கள் சருமம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

காளான்
உடலில் நோய்களோடு போராடும் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஆதாரமான ரத்த அணுக்கள் வளர்ச்சிக்கு காளான்கள் உதவுகின்றன. காளான்கள் துத்தநாகம் எனப்படும் ஜிங்க் சத்து மற்றும் பிற ஆரோக்கியம் தொடர்பான பல நன்மைகளையும் கொண்டுள்ளன.

பழங்கள்
நோய் எதிர்ப்பு சக்தியை தருவதில் பழங்கள் முதலிடத்தில் உள்ளன என்பதில் சந்தேகமில்லை. இவற்றில் வைட்டமின் பி1, சி, ஏ மற்றும் உலோகச்சத்துக்கள் அதிகம் உள்ளதால், உலகிலேயே மிக ஆரோக்கியமான உணவுகளில் ஒன்றாக உள்ளது. இது மேலும் உணவுப்பாதையை இயற்கையாகவே சுத்திகரிக்க வல்லது.

பெர்ரி பழங்கள்
பெர்ரி பழங்கள் இல்லாமல் சத்தான உணவு. ப்ளூபெர்ரி மற்றும் ராஸ்ப்பெர்ரிப் பழங்கள் இவற்றுடன் காய்களையும் கீரை வகைகளையும் எடுத்துக் கொண்டாலே போதுமானது.



மனிதர்கள் இந்த உணவு எல்லாம் நாகரீகம் என்ற பெயரில் மறந்து விட்டார்கள் என்பது வருந்தத்தக்க விஷயம்.


நமது முன்னோர்கள் இப்படி எல்லாம் வாழ்ந்ததால் தான் இன்றும் திடகாத்திரமாக இருக்கிறார்கள். நாமும் இதே வழியைப் பின்பற்றி எந்த வியாதியையும் நம்மையும் நம்மை சார்ந்த குடும்பத்தாரையும், சமூகத்திலுள்ள அனைவரையும் பாதுகாக்கலாம். இப்போதைக்கு இதை செய்தாலே போதும்.



"உண்மையாலுமே நீங்கள் சொன்ன விஷயம் அனைவருக்கும் இந்த சூழ்நிலையில் பயனளிக்கும் சார். உங்களுக்கு எங்களது நன்றிகள்"அவணை பாராட்டியவரே அங்கிருந்து கிளம்பினார் பத்திரிகையாளர்கள்.


இது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் சேர்த்துதான் சொல்கிறேன் வாசகர்களே... நீங்கள் அனைவரும் இம்முறையைக் கடைப் பிடித்து நூறு ஆண்டு காலம் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று உங்கள் நிரஞ்சன் மனமார வாழ்த்துகிறேன்.


 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 19:


இரு மாதங்களுக்கு பிறகு,


நாட்டில் உள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்து விட, இதோ இன்றைய மிகவும் மகிழ்ச்சிகரமாக நிரஞ்சன் வெண்மதி தம்பதிகள் உடன் நமது வள்ளி பாட்டியும், மகேஸ்வரி அம்மா அனைவரும் குடும்பம் சகிதமாக தங்கள் விருப்பப்படியே குடும்பமாக ஊட்டியை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.


இந்த இரு மாதங்களில் நிரஞ்சன் வெண்மதி வாழ்க்கையில் எவ்வித முன்னேற்றமும் இல்லாது அப்படியேதான் சென்று கொண்டிருக்கிறது.


சரி வாங்க அங்க என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்...



"அத்தை..."இப்போநாம் ஊட்டி போயிட்டு இருக்கோம். அங்க எவ்வளவு நாள் அத்தை தங்க போகிறோம்.


"அம்மாடி மருமகளே இந்த கேள்வியை ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி தான் கேட்டுக்கொண்டே இருப்பாய் நீ எவ்வளவு நாள் விருப்பப்படிக்கிறாயோ அவ்வளவு நாட்கள் நாம் அங்கு தங்க போகிறோம்"


இப்போதாவது உனக்கு சந்தோஷமா... சரிமா எனக்கு தூக்கம் வருகிறது.நான் தூங்கப்போகிறேன் உனக்கு இனி எந்த சந்தேகம் என்றாலும் உன் புருஷனிடம் கேட்டுக் கொள்.


"யாரு அந்த சிம்பன்சீ கிட்ட கேக்க சொல்றீங்க..."அது என்னை பார்த்தாலே கடித்து குதறி விடும்.


இந்த விளையாட்டுக்கு நான் வரவில்லை சாமி நானும் உங்களைப் போல் செவனேன்னு படுத்து தூங்கப்போகிறேன் என்றவாறு, தாங்கள் சென்றுகொண்டிருந்த ரயிலில் படுத்துவிட்டால் வென்மதி.


"என்ன இந்த பொண்ணு இப்படி சொல்ற... இவர்களுக்குள் என்ன பிரச்சனை என்று தெரிய மாட்டேங்குது. அவன் என்னவென்றால் வீட்டிற்கு வருகிறான் நொடிப் பொழுதும் கூட தாமதியாது திரும்பிச் சென்றுவிடுகிறான்"


இவர்களுக்குள் இருக்கும் இந்த பிரச்சனை என்று தான் சரியாகும் வாய்விட்டு புலம்பியவாறு, அமைதியாக படுத்து விட்டார்.



மகேஸ்வரி பேசுவது எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த நிரஞ்சன், அன்னை வருத்தப்படுவது புரிந்தாலும் இதற்கான காரணத்தை அவரிடம் எப்படி சொல்லுவான்.


ஆம். இப்போது நிரஞ்சன் நாளுக்கு நாள் அதிகமாக வெண்மதியை காதலித்து கொண்டிருக்கிறான்.


ஒவ்வொரு நாளும் பணிக்குச் சென்று திரும்பி வருபவன் அங்கு கட்டிலில் உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியை கண்டு உணர்வுகள் பேயாட்டம் போட தொடங்கி இருந்தது.


தன் காதலிக்கும் மனைவியை, கைக்கு அருகிலேயே வைத்துக் கொண்டு அவளை பார்த்துக்கொண்டே இருப்பது அவனது விரகதாபத்தை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே சென்று கொண்டிருந்தது.


அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள ஒரு நொடி ஆகாது தான். ஆனால்,அவள் மனதிலும் தன் மீதான நேசம் வெளிப்பட்ட பிறகு தனது காதலை அவளிடம் உணர்த்திய பிறகு அவளை முழுவதுமாக ஆட்கொள்ள வேண்டும் என்ற திண்ணத்தில், கைகளைக் கட்டி அவளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறான்.


நாளுக்கு நாள் அவனது உணர்வுகள் அதிகமாக, ஒரு கட்டத்தில் தாங்க முடியாது அவளிடம் எரிந்து விழ ஆரம்பித்து இருந்தான்.


அன்றும் அப்படித்தான், மருத்துவமனைக்கு காலையில் கிளம்பி கொண்டிருந்தவன் முன் காலையில் குளித்து முடித்து புத்தம் புது மலராக தன் முன்பு நின்றவளை ஏக்க கண்களுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அது புரியாதவள்,"இந்த மாமா நம்ம எதுக்கு இப்படி குறுகுறுன்னு பாக்குறாங்க..."ஒருவேளை நம் முகத்தில் எதுவும் இருக்கிறதோ... திரும்பியவள் கண்ணாடியில் தனது முகத்தை ஆராய அப்படி ஒன்றும் நம் முகத்தில் எந்த வித்தியாசமும் தெரியவில்லையே.


அப்புறம் எதுக்கு நமது ஆத்துக்காரர் (சாரி ஒரு அதிர்ச்சியில் நமது கணவன் என்று சொல்லிட்டேன், யாரும் பங்கு கேட்டா எல்லாம் விடாதீர்கள்... எனது ஆத்துக்காரர்,நீங்கள் இவனை கல்யாணம் பண்ணி கொள்வதில் எந்தவித பிரச்சினையும் இல்லை. ஆனால், போயும் போயும் இவனை மாதிரி ஒருவனா உங்களுக்கு துணையாக வரவேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் தான் சொல்கிறேன். திருமணமான என்ற அண்ணி எல்லாம், உங்கள் தம்பியை சற்று என் மீது அன்பு காட்டச் சொல்லுங்கள்)எதற்கு இப்படி நம்மையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டே இருக்கிறார்.


அவளது அருகில் சென்றவள்"மாமா... மாமா..."இரு முறை அழைத்து பார்த்தும், அவனிடம் எந்த விதமான பிரதிபலிப்பு இல்லாததால்,



அவளது துடுக்குத்தனம் கை தூக்க அருகிலிருந்த குவளையில் உள்ள நீரை அவன் முகத்திலேயே ஊற்றவும்,


மனைவியை மெய்மறந்து ரசித்துக் கொண்டிருந்தவன் தன்மீது தண்ணியை ஊற்றிய மனைவியை கண்டு எரிச்சலானான்.


அவனது உணர்வுகளை புரிந்து கொள்ளாதவள், அவன் முன்பு வந்து சீண்டிக்கொண்டே இருக்க,"இந்த வீட்டில் கொஞ்ச நேரம் கூட மனுஷனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. முகத்தில் தண்ணீரை ஊற்றுவது,சாப்பாடு என்ற பெயரில் கண்ட கண்ட கருமத்தை எல்லாம் திங்க வேண்டி இருக்கு"எல்லாம் என் தலையெழுத்து, இனிமேல் என் கண்ணு முன்னாடியே வாராதே... மனைவியை திட்டி தீர்த்து எங்கே இதற்கு மேலும் இருந்தால் தனது உணர்வுகள் வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்தில் அந்த இடத்தை காலி செய்தான.


அவன் செயலில்,ஒன்றும் புரியாது திருதிருவென விழித்துக் கொண்டிருந்த வெண்மதி "போடா லூசு..."அவனை திட்டியவாறு, தனது வேலைகளை கவனிக்க சென்று விட்டாள்.


இதன் பிறகும் ஒவ்வொரு நாளும் அவனது வசவுச் சொற்களை அதிகமாகிக் கொண்டிருந்தவள் ஒரு கட்டத்தில், அவனிடத்தில் தனது பேச்சு வார்த்தை முற்றிலுமாக குறைத்திருந்தால்.


இன்று ஊட்டி பயணம் தொடரும் போது கூட, மனைவியுடன் அமர்ந்து ஒவ்வொரு இடங்களிலும் ரசித்து பார்த்து விதவிதமான புகைப்படங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் என தோன்றினாலும், உணர்வுகளைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.


அவள் தனது அம்மாவிடம் சிம்பன்சி என்று திட்டியதை பற்றி அறியாமல் போனான். பக்கத்தில் இருந்த பாட்டியை பார்க்க அவரோ,





நேற்று முழுவதும் அதீத ஆர்வத்தில் ஊட்டிக்கு செல்ல போகிறோம் என்ற சந்தோஷத்தில் இரவு முழுவதும் தூங்காது, ஆர்ப்பரித்துக் கொண்டே திரிந்து கொண்டிருந்ததால் அவரும் அசந்து தூங்கிக் கொண்டிருந்தார்.


சிறுபிள்ளை போல் வாயை பிளந்து கொண்டு, உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் தளர்ச்சியுற்று தனது முதுமையின் இறுதியில் இருந்தவரை கண்டு மனம் கனிந்தது நிரஞ்சனுக்கு.



ஊட்டிக்குச் செல்லும் வழியில், சற்றே குளிர் அதிகமாக தமிழ் போர்த்தியிருந்த போர்வை விலகியதும் குளிரில் நடுங்கியவரை கண்டு மனதில் தோன்றிய வாஞ்சையான உணர்வுடன், அவரது கம்பளியை உடல் முழுவதும் இழுத்துப் போர்த்தி விட்டவன் தனக்கு நேரே இருந்த மனைவியின் முகத்தை கண்டு தூக்கத்தை தழுவினான்.


மூன்று மணி நேர பயணத்திற்குப் பின்பு அனைவரும் இதோ ஊட்டியில் நின்று கொண்டிருக்கிறார்கள்.



தாங்கள், முன்பே ஊட்டிக்கு செல்வதென்று பிளான் செய்ததால் ஊட்டியில் இருந்த நிரஞ்சன் தனது பள்ளி நண்பனான விக்கியை தொடர்புகொண்டு, அவனது உதவியோடு அவன் வீட்டின் மேல் பகுதியிலேயே தங்கிக் கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.



ஆரம்பத்தில், அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றுதான் எண்ணிக் கொண்டிருந்தான்.


ஆனால், ஹோட்டலில் தங்கி கொள்வதற்கு தம்பதியர்களுக்கு வேண்டுமானால் இன்பமாக இருக்கலாம். தாயும் பாட்டியும் அவ்வாறு இருக்க முடியுமா...



ஆயிரம் தான் இருந்தாலும் பெரியோர்கள் என்றும் ஒரு வீட்டில் மட்டுமே தங்க வேண்டும் என்று சித்தம் கொள்வர்.


அதனால், வீட்டையே தேர்ந்தெடுத்து இருந்தான். அங்கு சென்று கொண்டிருந்த கால் டாக்ஸியை நிறுத்துமாறு சைகை செய்யவும் அந்தக் கார் டிரைவரும் காரை அவர்கள் அருகில் கொண்டு சென்று நிறுத்தினார்.


"எங்கே போகணும் சார்..."அவனிடம் விசாரிக்க,


*****இந்த அட்ரசுக்கு செல்லுங்கள் அவரிடம் கூறியவன் திரும்பி,"எல்லோரும் இந்த காரில் ஏறுங்கள்"என அவன் சொல்ல,


அவ்வளவு நேரமும் பிரயாணம் செய்து வந்தவர்கள் இதற்கு மேலும் ஒரு பிரயாணமா என களைப்புற்ற படி இருந்தாலும், வேறு வழி இல்லாமல் காரில் ஏறி தங்களது அடுத்த பயணத்தை தொடர்ந்தார்கள்.


ஒரு மணி நேர பயணத்திற்கு பிறகு, விக்கியின் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர் அனைவரும்.


தனது பள்ளி நண்பனை பல வருடங்கள் கழித்துப் பார்த்ததில் குஷி ஆனான் விக்கி. வாயிலில் கார் சத்தம் கேட்டது தான் தாமதம் "அவர்கள் வந்துவிட்டார்கள்"என்று கத்தியபடி விருவிருவென இறங்கி ஓடி அவன், காரிலிருந்து இறங்கிய நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான்.


விக்கியின் இந்த செயலை, எதிர்பார்க்கவில்லை என்று நிரஞ்சனின், தடுமாற்றமே சொல்லியது.


"டேய்... விக்கி உன்னை பார்த்து எத்தனை வருடங்கள் ஆகிவிட்டது நல்லா இருக்கியாடா.."என பரஸ்பர நல விசாரிப்புகளுக்கு பிறகு, தன்னையே சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்த மொத்த குடும்பத்திற்கும் அவனை அறிமுகப்படுத்தி வைத்தான்.


"இதுதான் எனது நண்பன் விக்கி. அம்மா உங்களுக்கு இவனை தெரியும் இல்லையா..."


"ஞாபகம் இருக்கிறது கண்ணா... அந்த மாமரத்தில் மாங்காய் பறிக்க வேண்டும் என்று மரத்தில் ஏறியவன், நிலைதடுமாறி அருகிலிருந்த மாட்டு தொட்டிக்குள் விழுந்து அங்கே இருந்த மாடு தண்ணீர் குடிப்பதற்காக வந்து இவனைக் கண்டு மிரண்டு ஓடிய தே... அந்த விக்கியா இவன்"



"அம்மா..."அதெல்லாம் எப்போதோ நடந்த விஷயம். அதையெல்லாம் ஏன் இப்போதும் சொல்லி என் மானத்தை வாங்குகிறீர்கள். இதை மட்டும் என் மனைவி கேட்டால் நான் அவ்வளவு தான். என்னை நாள் முழுவதும் ஓட்டியே தள்ளி விடுவாள், உங்களுக்குப் புண்ணியமாகப் போகட்டும் தயவுசெய்து இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாதீர்கள்.


ஹாஹா சரிப்பா நான் யாரிடமும் இந்த விஷயத்தை சொல்ல மாட்டேன்.


அவர்கள் சம்பாஷணையை கண்டு, அனைவரின் முகத்திலும் ஒரு புன்னகை.


விக்கி அடுத்ததாக நின்ற வயதான பாட்டி இடமும் அவர் அருகில் நின்று கொண்டிருந்த இளம் பெண்ணையும் யாரென கேள்வியாக நிரஞ்சனை பார்த்தான்.



அவன் பதில் சொல்வதற்கு வாய் திறப்பதற்கு முன்பாகவே,


"உங்களுக்கெல்லாம் கொஞ்சமாச்சும் அறிவு இருக்கா... வீட்டுக்கு வந்த விருந்தாளியை வீட்டுக்குள் அழைத்துச் செல்லாமல் ரோட்டிலேயே வைத்து பேசிக் கொண்டிருக்கிறீர்கள்"உங்களையெல்லாம் என்னதான் செய்வது விக்கி.


தன்னை வருத்து எடுத்தபடியே வந்த மனைவியை கண்டு, ஹி ஹி என பல்லை காட்டியவன் இதற்கு மேல் இங்கே நின்றால், மனைவி மானத்தை வாங்கி விடுவாள் என்று மனைவியை புரிந்த நல்ல கணவனாக,


"முதலில் நீங்கள் எல்லோரும் உள்ளே வாங்க"அனைவரையும் வீட்டிற்குள் அழைத்தவன் அவர்கள் வந்த கார் டாக்சிகும் தானே பிள்ளை கொடுத்தான்.


அனைவரும் வீட்டிற்கு சென்ற பிறகு, அது வீடா இல்லை வேறு எதுவும் ஹோட்டலா என அஞ்சும் படி அவ்வளவு நேர்த்தியாக இருந்தது அந்த வீடு.வீட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் தூசி என்பதை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக அதேசமயத்தில் பழமை மாறாத இயற்கை காட்சிகளுடன் அங்கே காணப்பட்டது அந்த இல்லம்.


தங்களது வீட்டை ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டிருந்த விருந்தாளிகளை,


இருகரம் கூப்பி தலையைக் கீழே தாழ்த்தி"அனைவரும் எங்கள் இல்லத்திற்கு வாருங்கள். உங்கள் பயணம் சுகமானதாக அமைந்திருக்க வேண்டும். இப்போதுதான் பல மணி நேரம் பயணம் செய்து வந்ததால், உங்கள் அறைக்கு சென்று ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள்"


ஆனால், அதற்கு முன்பாக பசியில் இருப்பீர்கள். அதனால் என் பின்னே வாருங்கள் உங்கள் அறையை காட்டுகிறேன்.



முதலில் குளித்து சுத்தமாகி, இங்கு குளிர் அதிகமாக இருக்கும் என்பதால் ஹிட்டரை ஆல்ரெடி ஆன் பண்ணி சுடு தண்ணி போட்டு இருந்தேன். நீங்கள் நால்வரும் குளித்து முடித்துவிட்டு, உங்கள் அறைகளில் கனமான கம்பளி போர்வை இருக்கும். அதை எடுத்து உடம்பில் சுற்றிக்கொண்டு, சாப்பாடு சூடாக இருக்கிறது சாப்பிடுங்கள்.


வந்ததில் இருந்து, தங்களை பேசவிடாமல் கவனித்துக் கொண்டிருந்த அந்தப் பெண்ணைக் கண்டு வாயை பிளந்தனர் வெண்மதி குடும்பத்தினர்.


அதுவும் சில நொடி மட்டுமே... பிறகு, கணவன் மனைவி இருவரையும் பார்த்து


"நீங்கள் இருவரும் இப்போதுதான் கல்யாணமான புது தம்பதிகள் என்று என் கணவர் சொன்னார். அதனால் நீங்கள் இருவரும் மேலே இருக்கும் மாடியில் தங்கிக் கொள்ளுங்கள். அங்கு பெரும்பாலும் யாரும் வர மாட்டோம் அதனால் உங்களுக்கு அந்த அறையை ஏற்பாடு செய்துள்ளேன்"


பாட்டி அத்தையம்மா நீங்கள் இருவரும் சற்று வயதானவர்கள் என்பதால் என் கணவர் உங்களுக்கு மாடியில் அறை ஏற்பாடு செய்ய சொன்னார்.


ஆனால்,உங்களால் எவ்வளவு தூரம் ஏறி இறங்குவது சிரமம் என்பதால் கீழே இருக்கும் இந்த அறையில் தங்கிக் கொள்ளுங்கள். அத்தோடு, உங்களுக்கு எது வேண்டும் என்றாலும் ஒரு வார்த்தை"பத்மினி"எனக் குரல் கொடுத்தால் போதும் உங்களுக்கு தேவையானவற்றை நான் கொண்டுவந்து தந்து விடுகிறேன்.


விக்கி நீங்க என்னோட வாருங்கள். நாம இப்போ போயிட்டு சூடா கச்சோடி செய்ய வேண்டும் அதுமட்டுமே மீதமிருக்கிறது எனக்கு உதவி பண்ணுங்கள் என கணவனை அழைக்கவும்,


வந்ததில் இருந்து தங்களுக்காக ஒவ்வொரு திட்டத்தையும் வகுத்து, ஏற்பாடு செய்த அந்த பெண்ணை அன்பொழுக பார்த்துக் கொண்டு நின்றனர்.


அவர்கள் இன்னும் செல்லாமல் இங்கேயே நிற்பதைக் கண்டு,


"உங்களுக்கு ஏதாவது வேண்டுமா...இன்னும் நீ ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறீர்கள்"


ஒன்றுமில்லை என கோரசாக கூறியவர்கள் தங்கள் அறைக்குச் சென்று பத்மினி சொன்னபடியே குளிருக்கு ஏற்ற பாடி சூடான நீர் உடம்பில் பட்டதும் பிரயாணக் களைப்பு நீங்கி அனைவரும் புத்துணர்வுடன் கீழே இறங்கி வந்தனர்.


அவர்கள் வந்ததும், சமைத்த அனைத்து உணவுகளையும் கொண்டுவந்த அடுக்கிய பத்மினி அனைவரையும் இன்முகத்துடன் நோக்கியவள் "


"தண்ணீர் சூடாக இருந்ததா..." என்று கேட்கவும்,


"ரொம்ப நல்லா இருந்தது மா என வாயை திறந்தார் பாட்டி"


"சரி வந்து உட்காருங்கள், அனைவரும் பசியுடன் இருப்பீர்கள் உணவை உட்கொள்ளுங்கள்"என்று சூடான உணவைப் பரிமாறி முடிந்தவள் அனைவரும் சாப்பிட்டு முடித்த பிறகு, போதும் போதும் என்ற அளவிற்கு,"இன்னும் கொஞ்சம் வைத்துக் கொள்ளுங்கள்"அன்பொழுக இன்முகத்துடன் பரிமாறிக் கொண்டிருந்தாள்.


அனைவரும் உண்டதை கண்டவள்,"சரி இப்போது சென்று ஓய்வு எடுங்கள் நாம் மாலையில் பேசிக் கொள்ளலாம்"


அங்கிருந்தவர்கள் தங்களது உடம்பிற்கு இப்பொழுது ஓய்வு சற்று தேவை என்பதால் பத்மினி சொன்னதை மறுக்காமல் சென்று ஓய்வு எடுத்துக் கொண்டனர்.


தங்களுக்கு ஒதுக்கிய அறைக்கு வந்தவர்கள் சுற்றியிருந்த மேகங்களும், செடி கொடிகளையும் கண்டு எதுவும் பேசாது படுக்கையில் சென்று படுக்க அப்படியே உறங்கி போனவர்களை மாலையில் வந்து எழுப்பினாள் பத்மினி.


"பாட்டி அம்மா இருவரும் எழுந்து கொள்ளுங்கள் சூடாக தேநீர் உண்டு விட்டு பிறகு வேண்டுமானால் ஓய்வெடுங்கள்"என்றதும் அவள் சத்தம் கேட்டு அனைவரும் வெளியில் வந்தனர்.



அந்த சந்தோஷமான மன நிலையில் தங்களை கவனித்துக் கொண்டிருந்த பத்மினியை அன்புடன் பார்த்தவர்கள் டீயை பருகிக் கொண்டிருந்தார்கள்.


அவர்களின் பெயர் என்ன, அவர்களைப் பற்றி அறிந்து கொள்ளாமலே பேச ஆரம்பித்தாள் பத்மினி.


உங்க எல்லாருக்கும் ஒன்று தெரியுமா... ஊட்டியில் முன்பே பார்த்தறியாத இடங்களைப் பற்றி நான் சொல்லுகிறேன். நேரில் நீங்கள் பார்க்கும் பொழுது சந்தோஷமாக இருக்கும். ஊட்டியை பற்றி கூற ஆரம்பித்தாள்.


ஊட்டியில் நீங்கள் பார்வையிட வேண்டிய 18 இடங்கள் – (மலைகளின் ராணி)

ஊட்டி கண்களுக்கு அழகான செயல்பாடுகளாலும், பயணிகளின் மகிழ்ச்சியையும் நிறைவு செய்கிறது இடமாக விளங்குகிறது. ஊட்டியில் அமைந்துள்ள இடங்களை பார்வையிட திட்டமிடும் செயல் கடினமாக இருந்தாலும், கண்களுக்கு விருந்தளிக்ககூடிய காட்சிகளையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது. அக்காட்சிகளின் தொகுப்பையை காண்போம்.

1.ரயில் பொம்மை


இது ஊட்டியில் அழகான பகுதியாக உள்ளது. இதனை நீலகிரி மலை ரயில்பொம்மை நிலையம் என்று கூறுவர். ஊட்டியில் உள்ள சுற்றுலா இடங்கள் பயணிகளை ஈர்க்ககூடிய ஒரு சிறந்த இடமாக உள்ளது. 1899-ம் ஆண்டில் இருந்து பார்வையாளர்கள், காடுகள், சுரங்கப்பாதைகள், பழவகைகள், பனிமூட்டங்கள், பறவைகள் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர்.

2.ஊட்டி ஏரி


இது ஒரு முறையற்ற செயற்கை ஏரி, இது ட வடிவமைப்பில் உள்ளது. இந்த செயற்கை ஏரி, ஜான்சுலிவனால் ஊட்டி மலைப்பகுதியிலிருந்து வரக்கூடிய ஒரு சிறிய ஓடையை ஏரியாக உருவாக்கியுள்ளார். ஊட்டியின் மாணிக்கம் என்று இப்பகுதியை சொல்லலாம்.

3.ஊட்டியிலுள்ள தாவரவியல் பூங்கா


இந்த தாவரவியல் பூங்கா 1848ம் ஆண்டிலிருந்து தமிழ்நாடு தோட்டக்கலைத்துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. பல வகையான பூக்களையும், செடி கொடிகளையும், ஒழுங்கற்ற கிளை தண்டுகளையும், பூங்காவையும் கொண்ட வியக்க வைக்ககூடிய இடமாக உள்ளது.

4.ஊட்டி ரோஜாத்தோட்டம்


ரோஜாக்களை பெரியளவில் உற்பத்தி செய்யக்கூடிய இடமாக அமைந்துள்ளது. இங்கு வளரும் ரோஜாக்கள் விரும்பக்கூடியதாக இருப்பதால் சந்தையில் அதிக விலையை பெற்றுள்ளது. ஊட்டியில் உள்ள இடங்களில் சிறந்த இடமாக இது கருதவில்லை. இருப்பினும் பார்வையாளர்கள் அவசியமாக இங்கு வருகை தருவர்.

5.நூல் தோட்டம்


இந்த நூல் பூங்கா அழகான செயற்கைரீதியான பூக்களாலும், தாவரங்களாலும் தொகுக்கப்பட்ட பூங்காவாக அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டனி ஜோசப் என்ற கலைஞர் இந்த பூங்கா உருவாவதற்கான கருத்தை 12 ஆண்டுகள் முயற்சி செய்து உருவாக்கியுள்ளார்.

6.தொட்டபெட்டா சிகரம்


ஊட்டி மலைகளின் உயர்ந்த சிகரமாக விளங்குகிறது. இது கடல்மட்டத்தலிருந்து 2,623மீ உயரத்தில் அமைந்துள்ளது.

7.டால்பின் மூக்கு


இது ஒரு இயற்கை தளமாக உள்ளது. இங்கு நீண்டு கொண்டிருக்கிற பாறைகள் டால்பின் மூக்கு போன்று காட்சியளிக்கிறது. மலை ஏறுவதற்கு சிறந்த இடமாக விளங்குகிறது.

8.கல்ஹத்தி நீர்வீழ்ச்சி


இந்த நீர்வீழ்ச்சி, பறவைகளை பார்வையிடக்ககூடியவர்களுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. இந்த பகுதியின் சுற்றுப்புறங்கள் அமைதியான மற்றும சாந்தமான சூழலை கொண்டுள்ளதால் ஒரு சிறிய பயணம் மேற்கொள்ள சிறந்த இடமாக உள்ளது. ஊட்டியில் உள்ள இந்த முக்கியமான தூய ஏரியை பெலிக்கல் என்று அழைப்பர். பார்வையாளர்களை வியக்கவைக்கும் இடமாக கல்ஹத்தி நீர்வீழ்ச்சி உள்ளது.

9.எமரால்ட் ஏரி


எமரால்ட் ஏரி அமைதியான பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. இப்பகுதி சுற்றுலாவிற்கும், மீன் பிடிப்பதற்கும் சாதகமான இடமாக உள்ளது. இந்த ஏரியை சுற்றிலும் தேயிலை தோட்டமும், தேயிலை உற்பத்தி செய்யக்கூடிய இடமும் அமைந்துள்ளது.

10.புலிமலை

ஊட்டியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்று. தொட்டபெட்டாவின் அடிப்பகுதியிலும், ஊட்டியிலிருந்து கிழக்காக 6கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. அதிகமான அளவில் மலை ஏறுவதற்கு சிறந்த இடமாகவும் உள்ளது.

11.காமராஜ் சாகர் ஏரி
இந்த ஏரி புறநகரில் அமைந்துள்ளது. இதை சுற்றிலும் புதர்செடிகளும், மூலிகை செடிகளும் அமைந்துள்ளதால், சினிமா மற்றும் படப்பிடிப்பின் ஒரு முக்கியமான இடமாக கருதப்படுகிறது. இங்கு மீன்பிடி தொழிற்சாலை அமைந்துள்ளதால் இந்த இடம் சிறப்புபெற்ற இடமாகவும், பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தளிக்கிறது.

12.கோத்தகிரி

ஊட்டிக்கு அடுத்தப்படியாக இரண்டாவது பெரிய மலைத்தொடர் ஆகும். மலையேற்றத்திற்கு சிறந்த இடமாகவும், இங்குள்ள பள்ளிகள் அப்பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

13.அண்ணாமலை கோவில்

ஊட்டியிலிருந்து 20கி.மீ தொலைவில் அண்ணாமலை கோவில் அமைந்துள்ளது. இந்த மலைப்பகுதியிலுள்ள ஆய்வு மையம் பார்வையாளர்களை கண்களுக்கு அழகான காட்சியளிக்கிறது.

14.துரூக் கோட்டை

இந்த கோட்டை பழமை வாய்ந்தது. சமவெளியில் இருந்து 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. வரலாற்று கூற்றின்படி, திப்புசுல்தான் பயன்படுத்திய புறக்காவல் நிலையமாகவும், அனைவராலும ஈர்க்கக்கூடிய இடமாகவும், இங்குள்ள அற்புதமான காட்சிகளாலும் நிறைந்திருப்பதால், இப்பகுதியை காண்பதற்கு அதிக அளவில் மக்கள் வருகை தருகின்றனர்.

15.லெம்ப் பாறை
ஊட்டியில் இருக்கிற முக்கியமான இடங்களில் குன்னூரில் அமைந்துள்ள பாறையும் ஒன்றாகும். இது நீலகிரி மலைபிரதேசத்தை ஒட்டி இருக்கும். இங்கிருந்து கோயம்புத்தூர் சமவெளியை பார்க்கும் காட்சி மிகச்சிறந்தது. குன்னூரில் வரக்ககூடிய ஓடை 5 ஆயிரம் அடி கீழே அமைந்துள்ளது.

16.கேத்ரின் நீர்வீழ்ச்சி

250 அடி உயரத்தில் இருந்து விழக்கூடிய நீர் பாய்ச்சல், மக்களை ஈர்க்கக்கூடிய அளவில் அமைந்துள்ளது. சாலை வழியாகச் சென்றால் நீர்வீழ்ச்சியின் உச்சிப்பகுதி வரை செல்லலாம். உயரத்திலிருந்து விழக்கூடிய நீர்வீழ்ச்சியை காணும் போது வாழ்க்கைக்கு தேவையான தோற்றத்தை தருகிறது.

17.காட்டெருமை பள்ளதாக்கு
இந்த பகுதியை சுற்றிலும் காட்டெருமைகள் அதிகமாக காணப்படுவதால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பள்ளதாக்கு அழகான பசுமை நிறைந்த இடமாகவும், கரடி, மான், புலி, காட்டெருமை, யானை, போன்றவற்றின் இருப்பிடமாக அமைந்துள்ளது. இந்த பகுதியில் உள்ள மலையேற்றம் என்பது மகிழ்ச்சி தரக்ககூடியதாக உள்ளது.



அனைத்தையும் வாய் மூடாமல் பேசிக்கொண்டே இருந்தவள், தங்களைப் பற்றி அறிய ஆவல் இல்லாது சொந்த குடும்பத்தில் இருப்போரிடம் பேசுவது போன்று பேசிய பத்மினியை கண்டு அனைவரும் புன்னகைத்தனர்.



இதை சொல்ல வேண்டாம் என்றுதான் நினைத்தேன். கதைக்கு அதிகபட்சமாக வருவது வெறும் இரண்டே கருத்துக்கள் தான். கருத்துக்கள்தன் வரவில்லைlikes இதுவும் அதிகபட்சமாக 10 அல்லது 15 தான் கதையில் நான் எங்கோ தவறு செய்கிறேன் என்று தோன்றுகிறது.


இல்லையென்றால் கதைக்கும் உங்களது ஆதரவு குறையாமல் அதிகமாகவே வந்திருக்கும்.










 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 20:


இங்கே நீங்க பாக்குறதுக்கு இவ்வளவு இடம் இருக்கிறது. ஆமாம் அதெல்லாம் இருக்கட்டும். வந்ததிலிருந்து நானே பேசிக் கொண்டிருக்கிறேன் நீங்கள் எதுவுமே பேசாமல் இருக்கிறீர்கள்.



அப்போதும் அவர்களை பேச விடாது, உங்களுக்கு இந்த இடம் எல்லாம் பிடித்திருக்கிறதா... இங்கே நீங்கள் புதுசு என்பதால் உங்களுக்கு முதலில் சிரமமாக இருக்கும். ஆனால், கொஞ்ச நாள் தாக்குப் பிடித்து விட்டீர்கள் என்றால் அப்படியே உங்களுக்கும் பழகிவிடும்.


நானும் என் விக்கியை கல்யாணம் பண்ணிக்கொண்டு வந்த புதுசில், இங்குள்ள குளிருக்கு மிகவும் சிரமப்பட்டேன். அப்புறம் போகப் போக எனக்கும் இது சாதாரணமாக பழகிவிட்டது.


சரி இப்போ சொல்லுங்க உங்களுக்கு நிலைமை எப்படி இருக்கு...


"அடியே என் செல்ல பொண்டாட்டி..."அவங்க கிட்ட நீ கேட்டால் மட்டும் பத்தாது,அவங்களையும் கொஞ்சமாச்சும் வாய திறந்து பேச விடு அப்பதான் அவங்க என்ன சொல்ல வர்றேன்னு தெரியும்.


"ஆமாங்க..."அசடு வழிந்தவள், என்னை மன்னித்து விடுங்கள். உங்களை எல்லாம் பார்க்கும் பொழுது வேறு ஆட்கள் மாதிரியே தெரியவில்லை. இந்த குடும்பத்தில் ஒருத்தர் மாதிரிதான் எனக்கு தெரிந்திருந்தனர்.


"அம்மாடி பத்மினி..."இங்கே எங்களுக்கு எந்தவிதமான தொந்தரவும் இல்லை. நீ செய்த ஏற்பாடு நினைத்தாள் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதைவிட, வீட்டிற்கு வந்த விருந்தாளிகளை உன் சொந்தக்காரர்கள் போல் கவனித்துக் கொள்வதில் பெருமையாக இருக்கிறது. அதிலும் நீ சொன்னியா என் குடும்பம் அந்த வார்த்தை மிகவும் எனக்கு பிடித்துவிட்டதும்மா வாயைத் திறந்து கூறினார் பாட்டி.



அடுத்து வெண்மதி"அக்கா உங்கள் சமையல் எல்லாம் சூப்பராக இருக்கிறது. எனக்கும் உங்கள் சமையல கற்றுத் தருவீர்களா.."


"கிளிஞ்சது போ இங்கேயும் இவள் சாப்பாடு தானா..."நிரஞ்சன் முனுமுனுத்தது அவனது கெட்ட நேரமோ சரியாக யாரை சென்றடைய கூடாதோ அவர் காதில் சென்று விழுந்தது.



அவனை திரும்பி முறைத்தவாறே, அக்கா என் புருஷனுக்கு என்னோட சமையல் மட்டும்தான் சாப்பிடுவார். அதனால் நீங்கள் தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம். நானே அவருக்கு சமைத்துப் போடுகிறேன் கணவனை பார்த்தவாரே கூறவும்,


வாயை சும்மா வைத்துக்கொண்டு இருந்திருக்கலாமோ என காலம் கடந்து யோசித்தான் நிரஞ்சன்.


இவர்களின் சேஷ்டைகளை வேடிக்கை பார்த்தவாறே பாட்டியும் மகேஸ்வரியும் கலகலத்து சிரித்தார்கள். அதன் பிறகு அங்கு கேலிக்கும் கிண்டலுக்கும் பஞ்சமில்லாது போயிற்று.



இரவு பொழுது கவ்வியதும், பாட்டி மகேஸ்வரி பத்மினி கைவண்ணத்தில் சுட சுட தயாராகியது இரவு உணவு. உணவுக் கூடத்தில் சேர்ந்த அனைவரும் திருப்தியாக தங்கள் உணவை உண்டுவிட்டு மேலும் சிறிது நேரம் பேசிவிட்டு தங்கள் அறைக்கு திரும்பினர்.



அறைக்குள் நிரஞ்சன் வெண்மதி இருவரும் தேனிலவிற்கு வந்த தம்பதியர்கள் என்று சொன்னாள் யாராவது பார்த்து சிரித்து விடுவார்கள்.


எங்கேயும் ஊட்டி மாதிரியான இடங்களிலெல்லாம், கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் விட்டு பிரியாமல் அவ்விடத்தைச் சுற்றிப் பார்ப்பார்கள்.



ஆனால் இந்தத் தம்பதியர் சற்று வித்தியாசமான முறையில் இருந்தார்கள்.



ஆம். இருவரும் தங்களின் இணையின் முகத்தை கூட பார்க்க பிடிக்காமல் வேறு வேறு பக்கம் படுத்துக் கொண்டிருந்தனர்.



நிரஞ்சன் நிலைமைதான் மிகவும் மோசமாக இருந்தது."இவளோடு வீட்டில் இருக்கும்போதுதான் அவளை கை கட்டிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் படியிருந்தால், இந்த ஊட்டியில் நிலமையில் இப்போதும் அவளை அப்படியே வேடிக்கை பார்ப்பது மிகவும் கொடுமையான செயல்"


மெதுவாக திரும்பி மனைவியை ஓரக்கண்ணால் நோட்டம் விட, அவளோ எனக்கு தூக்கம் ஒன்றே பெரிதானது என்பதுபோல் போர்வையை தலை முதல் கால்வரை இழுத்துப் போர்த்துக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தவளை கண்டு கடுப்பானான்.



எப்போதும்போல் உணர்வுகளை தனக்குள்ளே புதைத்து கொண்டவன் மெதுமெதுவாக உறக்கத்தின் பிடியில் சிக்கி போனான்.


ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தவன் மீது ஏதோ பாரமான உணர்வில் கண் விழித்தான் நிரஞ்சன்.


"என்னடா இது தூக்கத்தில் நம்மீது யார் எதைப் போட்டது இந்த கணம் கணக்கிறது"கண்களைத் திறந்து பார்க்க அவனது மனைவி ஊட்டியின் குளிர் தாங்கமுடியாமல் கணவனை கட்டி பிடித்துக் கொண்டிருந்தாள்.


அவளுக்கும் கணவன் மீது தோன்றியிருந்த காதலை உணரவில்லை ஆயினும், அதன் தாக்கத்தில் கணவனிடம் கதகதப்பில் ஒன்றினால்.


"இதற்கு மேலும் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது. நானும் சின்னப்பெண் நம் உணர்வுகளை அவளிடத்தில் காட்டக்கூடாது என்று எண்ணினாள் இவள் விடமாட்டாள் போல இருக்கே..."அவளை திட்டியபடியே, தன் மார்பை விட்டு நகர்த்தி படுக்க வைக்க அவளோ விடாபிடியாக மீண்டும் கணவன் மார்பிலேயே தஞ்சம் புகுந்தாள்.


மீண்டும் தன் மார்பின் மீது படுத்த மனைவியை கண்டவனுக்கு உணர்வுகள் தறிகெட்டு ஓட, அவளது நெற்றியில் முத்தமிட்டு தனது தேவையை அவளிடம் உணர்த்த,


அவனது முத்தத்தில் கொஞ்சம் கொஞ்சமாக கண்களை விழித்துக் கொண்டாள் வெண்மதி.


"யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது டிஸ்டப் பண்றது"தன் தூக்கத்தை கெடுத்த வரை திட்டிய வாரே கண் திறந்து பார்க்கவும், அவளை கண்களில் காதல் சொட்ட சொட்ட பார்த்துக்கொண்டிருந்த தனது கணவனை கண்டதும் முதன் முதலாக பெண்ணவளக்கு மனதிற்குள் ஏதோ சலனம்.


ஆளை விழுங்கி விடுவதுபோல் அவன் பார்த்த பார்வையில்,"ஏண்டா இப்படி பார்க்கிறாய்" என அவனிடமே கேட்க,


"என்னை மன்னித்து விடு பொண்டாட்டி இதற்கு மேலும் என்னால் சன்னியாசியாக வாழமுடியாது"தாபத்துடன் அவளை பேச விடாது சிறை செய்தவன், மெது மெதுவாக முன்னேற அவளுக்கு இதில் சம்மதமா என்பது போல் அவளை விட்டுப் பிரிந்து பார்த்தான்.



ஏற்கனவே அங்கிருந்த குளிரும், கணவன் தன் மீது வைத்துள்ள அன்பும் தன்னிடம் எல்லை மீறி சென்றாலும் தனது சம்த்திற்காக ஏக்கத்துடன் பார்க்கும் கணவனைக் கண்டாள்.


சங்ககாலத்தில், வீட்டில் கன்று குட்டிகளை விட்டுவிட்டு தாய்ப் பசுவை மட்டும் ஓட்டிக் கொண்டு செல்வார்களாம்.


அந்தத் தாய்ப் பசுவிற்கு செல்ல மணம் இல்லை எனினும், தான் சென்று உணவு மேய்ந்தால் தான் தனது கன்றுக்குட்டிக்கு பால் கொடுக்க முடியும் என்று தனது குட்டியை ஏக்கமாகப் பார்த்தபடி செல்லுமாம்.



மாலைப்பொழுதில் தனது தாயிடம் பால் அருந்த வேண்டும் என்பதற்காக தனது தாயையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருக்கும் கன்று குட்டி.


கிட்டத்தட்ட அந்த கன்று குட்டி பார்வையைத் தான் நிரஞ்சன் பார்த்துக் கொண்டிருந்தான்.


அவன் பார்வையில் மனைவிக்கு கணவன் மீது காதல் ஊற்றெடுக்க அவனை அணைத்துக் கொண்டு, தன் சம்மதத்தை உணர்த்தவும் அதுவரை இருந்த மனபாரம் விலகியது போன்று "தேங்க்ஸ்டி பொண்டாட்டி"மனைவிக்கு நன்றி கூறியவன் மேலும் அவளுள் மூழ்க,


"மைடியர் பிரண்ட்ஸ். இது என்ன கெட்ட பழக்கம், நீங்கள் கதை படிப்பதெல்லாம் அறைக்கு வெளியே தான் உள்ளே எல்லாம் பார்க்க கூடாது"(நிரஞ்சன் உனக்கு திமிரு அதிகம் தான் வாசகர்கள் திட்டுவது அவன் காதில் நன்றாகவே கேட்டாலும் மனைவியைத் தவிர வேறொன்றும் அவன் காதுக்கு கேட்கவில்லை)



தன் தேவையை அவளிடம் அழுத்தமாக உணர்த்த, முதலில் பயந்தாலும் பின் தனது கணவன் தானே என்று அவனுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தால் மனைவியும்...



அதிகாலை வெண்மையான மேக மூட்டங்கள், இது சற்று மழைக்காலம் ஆதலால் ஆங்காங்கு சற்று சிறு சிறு தூறல், ஊட்டியில் இயற்கையாகவே இருக்கும் பசுமையும் அங்குள்ள ரோஜா இதழ்களில் விழுந்த ஒரு துளி நீரும்,காலை நேர பொழுதில் பறவைகளின் ரீங்காரம் என அழகிய ஒரு விடியல் ஆக இருந்தது அனைவருக்கும்.


பாட்டியும் மகேஸ்வரி அம்மாளும், எப்போதும் போலப் எழுந்து கொண்டார்கள். பத்மினி தயாரித்துக் கொடுத்த டீயை பருகியவாறு கதை அடித்துக் கொண்டு இருந்தவர்கள் மணி 9 ஆகியும் இன்னும் நிரஞ்சன் வெண்மதி ஆகிய இருவரும் கீழே வராமல் போனது எண்ணி மகிழ்ச்சி கொண்டனர்.


கல்யாணமாகி இத்தனை நாட்களில் எப்போதும் ஆறு மணிக்கெல்லாம் தயாராகி கீழே வரும் தனது மருமகள் மணி 9 ஆகியும் வராததற்கு காரணம் தெரியாமல் இருப்பதற்கு மகேஸ்வரி ஒன்றும் சின்ன குழந்தை அல்லவே அவரும் இந்த வயதை எல்லாம் தாண்டி வந்திருப்பவர் தானே..


பாட்டியும் மகேஸ்வரியும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தமுடன் புன்னகைத்துக் கொண்டனர்.


அங்கு அறையிலிருந்த தம்பதிகள் தங்களது மற்றொரு இணை முகத்தை பார்க்கவே வெட்கப்பட்டு கொண்டிருந்தன.



அதிகாலை எழுந்த வெண்மதி இரவு முழுவதும் கணவன் செய்த வேலைகள் நினைவு வர ரோஜா பூவை போல அவள் முகமும் போட்டி போட்டுக்கொண்டு மலர்ந்திருந்தது.


"திருடா... என்னை வசியம் பண்ணி மொத்தமா சுத்த வச்சிட்ட என் செல்ல புருஷன்"தூங்கும் கணவனை கொஞ்சி அவள் மணியைப் பார்க்க அதுவும் 9 என்று கூவ,



"ஆத்தாடி இவ்வளவு நேரமா தூங்கிவிட்டோம்"என அசடு வழிந்தபடி நிரஞ்சன் கன்னத்தில் முத்திரையை பதித்தவள் தயாராகி கீழே சென்றாள்.


தலையில் துண்டு, முகத்தில் நான் ஏறிய சிவப்பும் என்றுமில்லாத புத்துணர்வுடன் இயற்கையாக பெண்களுக்கே உரித்தான நாணத்தில் தலையை கவிழ்ந்தபடி வந்தாள் வெண்மதி.


பேத்தியின் இந்த மாற்றம் கண்டு வள்ளி பாட்டியின் மனம் குளிர்ந்து போனது.


அவளை வம்பிழுக்கும் எண்ணம் தோன்ற"அடியே மகேஸ்வரி யார் இந்த பொண்ணு இவ்வளவு அடக்கமாக காலையிலேயே வந்து விட்டது. ஒருவேளை நம் வீட்டிற்கு வழி தவறி வந்து விட்டதோ"என சீண்டவும்,


அதுவரை இந்த முயக்கம் விடுபட்ட வெண்மதி"ஏய் கிழவி உனக்கு குசும்பு கூடிப்போச்சு"சரி நான் போய் மாமாவுக்கு டீ கொடுக்கிறேன் என கீழே வந்த காரணத்தை கூறி விட்டு தங்கள் இருவருக்குமான டீயை எடுத்துக்கொண்டு மேலே சென்று விட்டாள்.


"உண்மையாலுமே ரொம்ப சந்தோஷமாக இருக்குமா மகேஸ்வரி எங்கே இது இரண்டும் ஒன்றே ஒன்று புரிந்து கொள்ளாமல் போய்விடுமோ என நாம் பயந்தது வீணாகப் போய்விட்டது"ரொம்ப சந்தோஷமா இருக்கு மகேஸ்வரி.


"ஆமாம் அத்தை.."நம் குழந்தைகள் மகிழ்ச்சியாக இருந்தால் அதுவே போதும்.


அறைக்குள் டீயை கொண்டுவந்த வெண் மதிக்கு உள்ளே வந்தது தான் தெரியும். அடுத்து நிரஞ்சன் செயலில் மீண்டும் ஒரு முறை குளித்துவிட்டு வந்தவள் கணவனை முறைக்க, அவனும் குளித்துவிட்டு வந்தவன் தன்னைப் பார்ப்பதை உணர்ந்து அவளைப் பார்த்து கண்ணடிக்க அவ்வளவு நேரம் இருந்த கோபம் மறைந்து வெட்கம் குடி கொண்டது.


மனைவியின் வெட்கத்தில் ஆண் மகனாக கர்வம் கொண்டான் நிரஞ்சன். அங்கிருந்த ஒரு வாரமும் ஒவ்வொரு நொடியும் தங்களது குடும்பத்துடனும், தங்கள் இணையுடன் சந்தோஷமாக செலவிட்டார்கள்.



இவர்களின் சந்தோஷத்தை அளிப்பதற்காகவே திரும்பி வந்து கொண்டிருந்தான் வசந்த்.


"வசந்த் தயவு செய்து என்னை ஏற்றுக்கொள்ளுங்கள், நீங்கள் என்னிடம் கல்யாணம் பண்ணிக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு இப்படி லிவிங் டுகெதர் அப்படின்னு சொல்லிட்டு போறது கொஞ்சம் கூட சரியில்லை"என கெஞ்சி கொண்டிருந்தாள் வெள்ளைக்கார பெண்ணொருத்தி.


"நான் சொல்வதை நம்பி நீ வந்தால் அதற்கு நானா பொறுப்பு"



உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை அந்த பெண்ணை பிடித்து தள்ளியவன் ஏர்போர்ட்டுக்கு நுழைந்ததும், தன் உயிரே பிரிந்தது போன்ற வலியுடன் பார்த்தாள் வெள்ளைக்கார பெண் ரோஸி.



"அடியே வெண்மதி உன்னை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று வெளிநாட்டிற்கு வந்து நான் வேலை பார்த்தாள் நீ எவனையோ ஒருவனைத் திருமணம் செய்து கொள்ள எப்படி மனம் வந்தது"உன் சந்தோஷத்தை அடிப்பதற்காக வந்து கொண்டிருக்கிறேன் நான்.


"ஐ அம் சாரி ரோஸி"என மானசீகமாக மன்னிப்பு கேட்டான் அந்தப் பெண்ணிடம். அந்த மன்னிப்பு எதற்கு என்று அவர்கள் இருவருக்கும் மட்டுமே வெளிச்சம்.



இரு மாதங்களுக்கு முன் தனது தாய்க்கு போன் செய்து அவரின் நலம் விசாரித்தவன் "வெண்மதி எப்படி இருக்கிறாள்"என்று கேட்க,


"அதை ஏண்டா கேட்கிறாய் வசந்த் நாம் மோசம் போய்விட்டோம், நீ யாரை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்று நினைத்தாயோ அவள் வேறு ஒருவனை திருமணம் செய்து கொண்டால்"என ஆதி முதல் அந்தம் வரை தனக்கு தோதான படி மாற்றி கூறினார்.



அவள் திருமண செய்தியை கேட்டு இடிந்து போன வசந்த் இரண்டு வருடங்களுக்கு முன்பு இருந்தவன் இவன் தானா என சந்தேகப்படும்படி மாறி இருந்தான்.



உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள் நன்றி







 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 21:


"சே... இந்த ஒரு வாரம் எப்படி போனது என்றே தெரியவில்லை. இவ்வளவு சீக்கிரமாக சென்றுவிட்டது. இன்னும் கொஞ்ச நாள் ஊட்டியில் இருந்தால் சந்தோஷமாக இருந்திருக்கும்"சலித்தபடியே கூறிய கணவனைக் கண்டு வாய்விட்டு சிரித்தாள் வெண்மதி.


"ஏண்டி என் பிழப்பை பார்த்தால் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா...?"நானே நம்மளோட இந்த பயணம் சீக்கிரம் முடிந்துவிட்டது என்று கவலையில் இருந்தால் நீ என்னைப் பார்த்துச் சிரிக்கிறாயா??



"சிரிச்ச அந்த வாய்க்கு தண்டனை கொடுப்போமா...? என கேட்டவாறே, நெருங்கிய கணவனை பிடித்து தள்ளிவிட்டாள் வெண்மதி.


"யோ மாமா ஒழுங்கு மரியாதையா ரோட்டைப் பார்த்து வண்டியை ஓட்டு இப்போ நீ என் பக்கத்தில் வந்தால் நாம் நேரடியாக ஊருக்கு இல்லை சொர்க்கத்திற்கே போகவேண்டியதுதான்"



அவளது பேச்சில் எரிச்சலான நிரஞ்சன் "வாயை மூடு வெண்மதி..."உனக்கு பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடு இப்படியெல்லாம் பேசாதே மனதிற்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறதுமா.



உன் கூட என் காலம் முழுவதும் திகட்ட திகட்ட வாழவேண்டும்டி, உன்னுடன் ஒவ்வொரு நிமிடத்தையும் அனுபவித்து உனக்கு என்னுடனான வாழ்க்கை சலித்துப் போய் விட்டதா.நீ ஏன் இப்படி பேசுகிறாய் எனக் கூறியவாறு முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் நிரஞ்சன்.


கணவன் கூறியதும் தான் தான் என்ன சொன்னேன் என்பதை புரிந்துகொண்ட மதி தன் தவறை உணர்ந்து அவனிடம் "அச்சோ சாரி மாமா நான் சும்மா விளையாட்டுக்கு தான் சொன்னேன் இதற்குப் போய் கவலைப்படாதீர்கள் நீங்கள் போதும் போதும் என்ற அளவிற்கு உங்களுடன் நானும் வாழ்ந்து பத்து பிள்ளையை பெற்று தரப்போகிறேன் நீங்களும் எங்கள் தொல்லையிலிருந்து தப்பிக்க இயலாது மண்டையை பிய்த்துக் கொள்ள போகிறீர்கள்"கேலி செய்தாள் கணவனை.


"கண்டிப்பா கண்ணம்மா நீயும் நானும் சேர்ந்து இன்னும் பல காலம் ஒன்றாக வாழ்ந்து நமது குழந்தை, அதனுடைய குழந்தை நமது பேரப்பிள்ளைகள், நமது கொள்ளு பேரப்பிள்ளைகள் என்று சந்தோஷமாக வாழ வேண்டும்"


"சரி மாமா ஓவரா சென்டிமென்ட் ஆயிட்டு இருக்காத, சரி நம்ம அத்தையம்மாவும் பாட்டியும் ஊருக்கு கிளம்பினார்கள் அங்கு போய் சேர்ந்துவிட்டார்களா...? உங்களுக்கு தகவல் சொன்னார்களா?"


ஆம் வெண்மதி. இருவரும் நல்லபடியாக சாய்பாபாவின் கோவிலுக்குச் சென்று விட்டார்களாம். அத்தோடு அவர்கள் ராமேஸ்வரமும் போய்விட்டு அப்படியே காசிக்கும் போயிட்டு வருவாங்கடி, அதுவரைக்கும் நீயும் நானும் சேர்ந்து ஒரே ஜாலிதான் போ.


"என்ன பேசுறீங்க மாமா உங்களுக்கு வர வர வாய் கூடிப்போச்சு உங்களை என்ன பண்ணுவது"


சிம்பிள் செல்லம் உன் உதட்டால் தண்டனை கொடுத்து விடு. எப்பா சாமி ஆரம்பிச்சுட்டீங்களா மறுபடியும் உங்கள் அலப்பறையை ஒழுங்கு மரியாதையாக வீட்டை நோக்கி காரை செலுத்துங்கள் என்றதும்,"உத்தரவு மகாராணி" எனக் கூறியவன் வாயை கப்பென்று மூடிக்கொண்டு வாகனத்தை ஓட்ட இருவருக்கும் காலையில் நடந்த சம்பவம் மனதில் வந்து போனது.


ஊட்டியில் அன்று கடைசி நாள், கணவன்-மனைவி இருவரும் காதலில் முக்குளித்து இருவரும் ஓருயிராய் வாழ்ந்த அற்புதமான பொன்னான தருணங்கள் முடியும் தருவாயில் இதோ வந்துவிட்டது.


அன்று காலையிலேயே நிரஞ்சன் சோம்பலுடன் தான் எழுந்தான். கைகளால் மெத்தையை துழாவியவன் தனக்கு தேவையானதை கிடைக்காமல் போகவும், "ப்ச்"காலையிலேயே பக்கத்தில் இல்லாமல் எங்கே போய்விட்டாள்.


காலையில் இவள் முகத்தை பார்க்கலாம் என்றால் அதற்கும் கீழே போய் விட்டாள் போல, மனைவியை திட்டியவாறு தானும் ரெப்ரெஷ் ஆகி கீழே சென்றான் நிரஞ்சன்.


அங்கு பாட்டியும் மகேஸ்வரியும் தங்களது லக்கேஜை நடுக்கூடத்தில் கொண்டுவந்து அடுக்கவும் "இப்போ எதற்காக பையை கொண்டு வந்து நடுக்கூடத்தில் வைத்திருக்கிறார்கள்"என யோசிக்கவும் அப்போதுதான் ரஞ்சனுக்கு இன்று ஊர் திரும்ப வேண்டும் என்பதே ஞாபகம் வந்தது.


"சே எவ்வளவு சந்தோஷமாக இருந்தோம்..."அதற்குள்ளும் ஒரு வாரம் முடிந்துவிட்டதா? ஆனால் மாலையில் தானே கிளம்பவேண்டும் இவர்கள் ஏன் இப்பொழுதே தங்களது உடைமைகளை கொண்டுவந்து வைத்திருக்கிறார்கள் குழம்பியவன் கீழேயே வந்து சேர்ந்தான்.



குழப்பத்திற்கு அவர்களையே பதில் கேட்க நாடி வாயை திறக்கப் போனவன், அங்கு வெண்மதி வரவும் மனைவியை கண்டு நல்ல கணவனாக ஜொள்ளு விட ஆரம்பித்தான்.


அவன் இறங்கி வந்தது முதலே, அவன் முகத்தில் தோன்றிய கவலையும் குழப்பத்தையும் தங்களிடம் பேச வாய் திறந்தவன் கேட்க வந்ததை கேட்காமல் மனைவியைக் கண்டு திறந்த வாய் மூடாமல் பார்த்துக் கொண்டிருப்பவனை கண்டு மொத்த குடும்பமும் கொல்லென்று சிரித்தது.


அவர்களது சிரிப்பின் சத்தத்தில் தான் தன்னை மீட்டுக் கொண்டான் நிரஞ்சன். கணவன் தன்னை கண்களில் காதலோடு பார்ப்பதை கண்டு முகம் சிவந்தாள் வெண்மதி.


"என்னடா மச்சான் காலையிலேயே வாட்டர் பால்ஸ் இப்படி திறந்து விடுகிறாய்"விக்கி கேலி பண்ண "என் மனைவியை தானே பார்க்கிறேன் போடா... நீ சிஸ்டறை கண்டுகொள்ளாமல் இருக்கிற என்பதற்காக நான் என் மனைவியை விட்டு விட முடியுமா..."சரியாக பற்றவைக்க அந்த நெருப்பும் சரியாக பற்றியது.


கணவனை முறைத்துப் பார்த்தாள் பத்மினி."ஆத்தாடி இவ என்ன இப்படி முறைக்கிறாள் இவனை வம்பு இழுக்கலாம் என்று பார்த்தால் நம்மை டைவர்ஸ்கே கொண்டுபோய் விடுவான் போல இருக்கே.."வாய்விட்டு புலம்பியவன் மனைவியைப் பார்த்து ஒற்றைக் கண்ணை அடிக்க அவ்வளவு நேரமும் கணவனை முறைத்த பத்மினி திகைத்துப் போய் கண்களைத் தாழ்த்திக் கொண்டவள் முகம் அந்திவானம் சிவப்பை பூசிக் கொண்டது.


"எப்படி.."என்பதுபோல் நண்பனை மிதப்பாக ஒரு பார்வை பார்க்கவும் "போடா லூசு பையலே"நண்பனை திட்டியவன் தனது தாயைப் பார்த்து,"என்னம்மா நமக்கு இன்று மாலை தானே ரயில் இருக்கிறது நீங்கள் என்ன அதற்குள்ளும் தயாராகி விட்டீர்கள்"சந்தேகத்தோடு கேட்க,


"இல்லை நிரஞ்சன் இன்று மாலை நீயும் வெண்மதியும் தான் ஊருக்கு போகிறீர்கள்"


நானும் பாட்டியும் அப்படியே கோவில் குளம் என்று சுற்றிவிட்டு வருகிறோம் இதனை நாங்கள் ஆரம்பத்திலேயே முடிவு செய்ததுதான் உன்னிடம் சொன்னால் நீ தேவையில்லாமல் எங்களுக்கு ஏதாவது செய்கிறேன் என்று லூசு மாதிரி ஏதாவது பண்ணுவ என்று தான் நாங்கள் உன்னிடம் சொல்லவில்லை.


நாங்கள் வரும் போதே இதேபோல் கோவிலுக்குச் செல்லும் ஒரு குழுவிடம் பேசிவிட்டு தான் வந்தோம். அவர்களும் சுற்றிப் பார்ப்பதற்காக ஊட்டிக்குதான் வந்துள்ளார்களாம் இதுவும் ஒருவகையில் நல்லதாகப் போயிற்று தேவையில்லாத அலைச்சல் இல்லை. அவர்கள் இங்கிருந்து மதியம் புறப்படுகிறார்கள் அப்படின்னு அந்த டூர் கைடு இப்போது தான் போன் பண்ணி சொன்னார் நாங்கள் இப்போது சென்றால் தான் சரியாக இருக்கும் கண்ணா. நீயும் மதியும் இன்று மாலை கிளம்புங்கள்.


"அம்மா நீங்கள் சொல்வதெல்லாம் சரிதான். இருந்தாலும் உடனடியாக செல்ல வேண்டுமா..."இன்னும் கொஞ்ச நாள் சென்று போகலாம் இல்லையா?



"இல்லை கண்ணா நானும் அத்தையும் மதி சொன்னதுபோல் இதுவரை எங்கும் சென்றதில்லை. இப்போதாவது நாங்கள் சென்று விட்டு வருகிறோம்"இதற்கு மேலும் இதைப் பற்றி பேச வேண்டாம் கண்ணா.



"சரிம்மா நீங்கள் சந்தோஷமாக போய்விட்டு வாருங்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருங்கள். இதோ இந்தாங்க என்னுடைய கார்ட் இதில் ஊருக்கு போனதுக்கப்புறம் உங்களுக்கு தேவையான அளவு பணத்தை போட்டு விடுகிறேன்.உங்களுக்கு எவ்வளவு சுற்ற வேண்டுமோ அவ்வளவு சுற்றிவிட்டு, சந்தோஷமாக இருந்து விட்டு வாருங்கள்.



"சரி கண்ணா நாங்கள் கிளம்புகிறோம் என மகனிடம் கூறியவர், தான் பெறாத மகனான விக்கியிடம் திரும்பியவர் இவ்வளவு நாள் இங்கே சந்தோஷமாக இருந்து கொண்டோம் விக்கி நன்றி சொல்லி உன்னை நான் அன்னிய படுத்த மாட்டேன் நீயும் என் மகன் மாதிரி தான் எப்போது வேண்டுமானாலும் நம் வீட்டிற்கு வா, நீயும் உன் மனைவியும் கூடிய சீக்கிரமே நம்ம வீட்டிற்கு வர வேண்டும்"என அன்பு கட்டளையிட்டார்.


"அம்மாடி பத்மினி நிஜமாலுமே நீ சொக்க தங்கம் டா... உன்கூட இருந்ததில் எங்களுக்கு மிகவும் சந்தோஷம் நீயும் நம் வீட்டிற்கு வர வேண்டும்"


"சரி அம்மா..."கணவன் மனைவி இருவரும் ஒருமித்த குரலில் கூற, பாட்டியும்" உங்கள் இருவருக்கும் கூடிய சீக்கிரமே பிள்ளைச் செல்வம் பெற்று சந்தோஷமாக வாழ வேண்டும்"என ஆசீர்வதிக்க உச்சி குளிர்ந்து போயினர் விக்கி பத்மினி தம்பதியினர்.


தாங்கள் கிளம்ப நேரமாயிற்று என்பதை உணர்ந்த மகேஸ்வரி தங்களையே கவலையுடன் பார்க்கும் மருமகள் இடத்தில் சென்றவர் "என்னாச்சு மதி ஏன் இப்படி உன் முகத்தில் கவலை தெரிகிறது எக்காரணம் கொண்டும் என் மருமகள் எதற்கும் கவலைப்பட கூடாது"என மாமியாராக கூற, எனக்கு இல்லை நானும் உங்க கூட வரவா... என ஏக்கமாக கேட்க,


"எதற்கு அங்கேயும் வந்து எங்களது உயிரை வாங்கவா...?"வள்ளிப் பாட்டி கேட்கவும், அதுவரை இருந்த மனநிலை மாறி"கிழவி ஒழுங்கு மரியாதையா ஓடிரு"என பல்லை கடிக்கவும் போடி போக்கத்தவளே முகத்தை திருப்பிக் கொண்டார் பாட்டி.


பின், இருவரும் ஊருக்கு செல்வதே கல்யாணமான புது தம்பதிகள் இருவரும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பதற்காக அவர்கள் கிளம்பினாள் எங்கே தனது பேத்தி அனைத்தையும் சொதப்பி விடுவாவளோ என பயந்து போன பாட்டி அவளை சீண்ட அது சரியாக வேலை பார்த்தது.


அவர்களது சண்டையில் வாய்விட்டு கலகலவென அனைவரும் சிரித்தனர்.


நிரஞ்சன் வெண்மதி இருவரையும் ஜோடியாக நிற்கவைத்து,"நாங்கள் திரும்பி வரும்பொழுது நீங்கள் மூவராக இருக்க வேண்டும்"அன்பு கட்டளையிட்டார் மகேஸ்வரி.


முதலில் அவர் என்ன சொன்னார் என்பது புரியாதவர்கள் அவர் சொன்னதின் செய்தி புரிய முகம் இருவருக்குமே சிவந்து போனது.


"இப்படியே சந்தோஷமாக இருங்கள்" என வாழ்த்தினர் வயதில் மூத்தவர்கள்.


நாங்கள் சென்றபிறகு, அனைத்தையும் எவ்வாறு வைத்துக்கொள்ள வேண்டும் ஆயிரம் அறிவுரைகளை கூறியவாரே இருவரையும் கண்களில் நிரப்பியவாறு கிளம்பினர் மகேஸ்வரியும் வள்ளி பாட்டியும்.


ஒருவேளை இவர்கள் திரும்பி வரும்பொழுது, தங்களது மருமகள் தங்களை விட்டு தூர சென்றிருப்பார் என்றோ, மகன் நடைப்பிணமாக போகிறான் என்பதையோ, அவர்களின் குல வாரிசு அனாதையாக பிறக்கப்போவதையோ இன்றோடு அவர்கள் வாழ்வில் வசந்தம் முடிந்தது என்பதையோ இருவருக்கும் பிரிவு நிகழப்போவதையோ அறிந்திருந்தால் இருவரும் செல்லாமல் இருந்திருப்பார்களோ...? என்ன செய்வது விதி வலியது.


அவர்கள் சென்ற பிறகு, தாங்களும் கிளம்பியவர்கள் நண்பனிடமும் நண்பனின் மனைவி இருவரிடமும் கூறிவிட்டு கண்களில் கண்ணீரோடும் பயணம் ஆயினர் தங்கள் ஊரை நோக்கி.


ரயிலில் வந்து இறங்கிய ஜோடிகள், தங்கள் தனிமையைகாக நிரஞ்சன் தனது காரை ரயில்வே ஸ்டேஷனில் கொண்டுவந்த நிறுத்தும்படி நண்பன் ராஜேஷ் இடத்தில் கூற நண்பனுக்காக உயிரையும் கொடுப்பவன் அவனுக்காக இந்த சிறு உதவியை கூட ராஜேஷ் செய்ய மாட்டானா...


அவன் சொன்னபடியே காரைக் கொண்டு வந்து விட்டவன் இருவரின் தனிமைக்காக தன் நண்பனின் இந்த ஏற்பாடு என்பதை புரிந்து கொண்ட ராஜேஷ் ஆட்டோவை பிடித்து தனது மருத்துவமனைக்குச் சென்று விட்டான்.


அந்தக் காரின் ஸ்பேர் கி ரஞ்சனிடமும் ஒன்று இருந்தது. இது எப்போதுமே அவன் இயல்பு தான், அங்கு வீட்டில் இருக்கும் அனைத்து சாவிகளின் மற்றொரு சாவியை எப்போதும் தன்னுடனேயே வைத்துக் கொள்வான்.


தங்களது ஊர் வந்தடைந்ததும் இருவருக்கும் சற்று நிம்மதியாக தான் இருந்தது. எவ்வளவு இடம் சுற்றினாலும் நம்மூர் போன்று வருமா...


பயணப் பொதிகளை காருக்குள் அள்ளி போட்டவன் மனைவியையும் தூக்க வர"போடா லூசு மாமா"நானே போய் உட்கார்ந்து இருக்கிறேன் நீ ஒரு ஆணியும் புடுங்க வேண்டாம் என்று திட்ட, தாய் திட்டினாள் பல்லைக் காட்டும் சிறு குழந்தை போல தனது பல்லைக் காட்டினான் நிரஞ்சன்.


அந்த சிரிப்பில் மனம் மயங்கி நாளும், இவனிடத்தில் உஷாராக இருக்க வேண்டும் என அவனைப் பார்க்காமல் வேறு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அவளை அப்படியே விட்டுவிடுவானா அவள் கணவன்.கார் முழுவதும் அவளை சீண்டி கொண்டே வந்தவன் தங்களது வீட்டை நோக்கி வந்திருந்தார்கள்.


முதலில் காரில் இருந்து இறங்கிய மனைவியிடம்"இந்தா சாவி வீட்டை திற நான் பேக்கை தூக்கி கொண்டு வர்றேன்"என்க சாவியை வாங்கி வீட்டைத் திறக்க போக அங்கு வீடு ஆல்ரெடி திறந்தே கிடந்தது.


வீடு திறந்து கிடக்க பயந்து போய் விட்டாள் வெண்மதி. பயணப் பொதிகளை எடுத்துக்கொண்டிருந்த கணவனிடம் வேகமாக ஓடி வந்தவள்"மாமா நம்ம வீடு திறந்து கிடக்கிறது" எனக் கூறவும், அதிர்ச்சியுடன் அவளைப் பார்த்தான்.


"என்னடி சொல்ற வீடு திறந்து கிடக்கா நல்லா பார்த்தாயா...!!"


"ஆமா மாமா வீடு திறந்து கிடக்கு எனக்கு ரொம்ப பயமா இருக்கு ஒருவேளை திருடன் எதுவும் வந்திருப்பனோ"தன் சந்தேகத்தை கூறவும், அதே சந்தேகத்தில் தான் இருந்தான் நிரஞ்சன்.


"சரி வா உள்ளே போய் பார்ப்போம்"அருகில் கிடந்த தடியை எடுத்துக்கொண்டு வீட்டை நோக்கி போனவர்கள் அங்கு அமர்ந்திருந்த அவனைக் கண்டு மிகவும் அதிர்ந்து போயினர்.

கருத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்













 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 22:


"வசந்த் மாமா"நீ இங்கே என்ன பண்ணிக்கொண்டிருக்கிறாய்,அதுவும் எங்கள் வீட்டில் எப்படி கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாய், அதை விடு முதலில் நீ எப்பொழுது வெளிநாட்டில் இருந்து வந்தாய் மாமா ஏன் இவ்வளவு நாளாக என்னிடம் நீ போனில் பேசவில்லை. உன்கூட பேச வேண்டும் என்றால் அவ்வளவு ஆசையாக இருக்கும் மாமா ஆனால் நீ தான் நான் ரெண்டு மாசமா ஒரு நாளைக்கு இரண்டு தடவை உனக்கு போன் பண்ணேன் நீ ஏன் எடுக்கவே இல்லை. அப்புறம் எப்ப ஊரிலிருந்து வந்தாய், இப்போ எப்படி இருக்கிறாய் மாமா??


இங்க பாரு வசு மாமா "நிரஞ்சன் மாமாவும் நானும் கல்யாணம் பண்ணிகிட்டோம், அது ஒரு பெரிய கதை மாமா அது எப்படி ஆரம்பித்தது என்றால்", தன் போக்கிலேயே பேசிக் கொண்டிருந்தவள் முன்பு "நிறுத்து"என்பதுபோல் கைகாட்டினான் வசந்த்.


"போதும் உன் வாய கொஞ்சம் மூடு மதி"நான் ஊரிலிருந்து உன் கல்யாண கதையைக் கேட்க வரவில்லை. உன்னால் எப்படி முடிந்தது மதி இந்த வாசு(வசந்த்)மாமா உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தேன். நீ வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் அதற்கு பணம் வேண்டும் நீ என்னக் கேட்டாலும் என்றால் உனக்கு மறுக்காமல் வாங்கித் தர வேண்டும் அதுவும் இந்த மாமன் காசில்தான், என் மதி என்னை தவிர வேறு யாரிடமும் எதற்காகவும் சென்று நிற்கக் கூடாது என்பதற்காகத் தானே உன்னை நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும் தானே நான் உன்னை கஷ்டப் பட்டு பிரிந்து ஊர் பெயர் தெரியாத வெளிநாட்டில் போய் தங்கி கஷ்டப்பட்டு உனக்காக சம்பாதிக்க ஆரம்பிச்சு உன்னை கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையுடன் தானே திரும்பி வந்தேன்.


"ஆனால், நீ என் மதி எனக்காக காத்திருப்பாள் என்று எவ்வளவு ஆசையுடன் உனக்காக வந்தேன்"நீ என்னவென்றால் உனக்கு திருமணமான செய்தியை சந்தோசமாக சொல்லிக் கொண்டிருக்கிறாய். இரண்டு மாதமாக போன் பண்ணுகிறேன் என்கிறாயே, உனக்குத் திருமணம் ஆன விஷயத்தை என்னிடம் போன் பண்ணி பேசினல்ல அப்போ உன் கல்யாண விஷயத்தை என் கிட்ட சொல்லனும்னு தோணி நீ என்னிடத்தில் சொல்லி இருந்தால் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும் இருந்தாலும் எனது குட்டிமா நான் ஆசையாக தூக்கி வளர்த்த என் குட்டிமா சந்தோஷமாக இருக்கிறாள் என்று எண்ணிக்கொண்டு மனசைத் தேத்தி கொண்டிருப்பேன்".


"முடியல மதி இங்கே ரொம்ப வலிக்குது"நெஞ்சைத் தொட்டு காட்டியவன் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் கீழே விழுந்து சிதறின.


முதலில் வசந்த் தன் வீட்டில் இருந்ததை கண்டு "இவன் எப்படி நம்ம வீட்டில்"சிந்தித்துக் கொண்டிருந்த நேரத்தில், மனைவி பேசுவதை கேட்டவன் எதுவும் சொல்லாமல் அவள் பேசட்டும் என்று அமைதியாக நிற்க, தற்போது அவர்கள் இருவரும் பேசுவதை பார்த்து நிரஞ்சனுக்கும் தற்போது குற்ற உணர்வு எழுந்தது.


அவனிடத்தில் உண்மையை சொல்ல நாடி வாயைத் திறந்தான் நிரஞ்சன்.


"இங்கே பாருங்கள் வசந்த்,நான் உங்களை முதன்முதலில் சந்தித்த சந்திப்பு நினைக்கிறது என்று நம்புகிறேன்"அந்த சந்திப்பில் நம் இருவருக்கும் அழகான நட்பு உதயமானது.


நீங்கள் சொல்வது போல எங்கள் இருவருக்கும் திருமணம் நடந்தது தான்.உங்களிடம் இந்த விஷயத்தை மதி சொல்கிறேன் என்று தான் சொன்னாள்.


திருமணம் முடிந்த மறுநாள் தன் அறையில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள் வெண்மதி. காலையில் தூங்கி எழுந்த நிரஞ்சன் அழுகை சத்தத்தை கேட்டு பதறியடித்துக்கொண்டு எழ "எங்கிருந்து வருகிறது அழுகை சத்தம்" சுற்றிலும் நோட்டம் விட,


கட்டிலுக்கு அருகில் அமர்ந்து இரு முழங்கால்களையும் குறுக்கிக்கொண்டு அமர்ந்து அதில் தன் தலையை புதைத்தவாறு அழுது கொண்டிருந்தாள் வெண்மதி.


"இவள் ஏன் இப்படி அழுகிறாள் அதுவும் காலையிலேயே, திருமணம் முடிந்து ஒரு நாள் தான் ஆகி இருக்கு மறுநாளே இவள் இப்படி அழுகிறாள் என்னவாக இருக்கும்" நமக்கு நாமே கேட்டுக் கொள்வதற்கு பதில் அவளிடமே கேட்டு விடுவோம்!!


மனைவியை நெருங்கியவன் அவள் தோளில் கை வைத்து"என்னாச்சு மதி ஏன் இப்படி அழுகிறாய்"


அவன் முகத்தைப் பார்த்தவாறு, திரும்பிக் கொண்டே அழும் குரலில்" நம்மளுக்கு கல்யாணம் ஆன விஷயம் என் மாமாவுக்கு தெரிந்தால் ரொம்ப கஷ்டப்படும். அதற்கு நான் என்றால் சிறுவயதிலிருந்து அவ்வளவு பிடிக்கும், என்னை கல்யாணம் பண்ணிக்கொள்ள வேண்டும் என்பதற்காக சின்ன வயசுல இருந்து என்னையே சுத்தி சுத்தி வரும் இப்போ அதுகிட்ட எப்படி எனக்கு கல்யாணம் ஆன விஷயத்தை சொல்லுவேன்"


"இதற்குத்தான் அழுகிறாயா? அவனிடம் நீ இந்த விஷயத்தை சொல்ல வேண்டாம்"


அப்போ என் மாமாவை ஏமாற்ற சொல்லி சொல்லுகிறீர்களா... என திட்டவும்,


"உன் மாமா இன்னும் சிறிது நாட்களில் இங்கு வந்து விடுவான். நீ அப்போது அவனிடத்தில் உண்மையை சொன்னால் போதும். இப்போ அவன் உனக்குத் திருமணம் ஆன செய்தி தெரிந்தாள் மிகவும் கஷ்டப்படுவான்"அப்படின்னா நினைக்காத... இந்த தொல்லையை ஒழித்துக் கட்டிவிட்டு சந்தோஷமாக இருப்பான் என்று மனைவியை கிண்டல் அடிக்க,



அவ்வளவு நேரமும் அழுகையில் கரைந்து கொண்டிருந்தவள் கணவன் தன்னைக் கேலி செய்யவும் சிலிர்த்துக் கொண்டு எழுந்தாள் மதி.


"யோவ் சப்ப முக்கா என்னைய தொல்லை என்று சொல்கிறாயா உன்னை என்ன பண்ணுகிறேன் பார் "அவனை அடிக்க ஓடி வரவும், நான் இல்லை என மாடிக்குச் சென்று விட்டான்.


அவனின் செயலில் அழகாய் புன்னகைத்து கொண்டாள் வெண்மதி மாமா சொல்வதுபோல வாசு மாமா வந்த பிறகு பார்த்துக்கொள்ளலாம் என தன்னை சமாதானப் படுத்திக்கொண்டாள்.


மாடிக்குச் சென்ற நிரஞ்சன் "எப்படியோ இவளை வேறு வழிக்கு திசைதிருப்பி விட்டாச்சு இனிமேல் இவள் அந்த விஷயத்தைப் பற்றி யோசிக்க மாட்டாள் அவள் சொல்வது போல வசந்த் வந்தால் என்ன பதில் சொல்வது?"குழம்பிப்போய் நின்றவன், காலம் அனைத்து கேள்விகளுக்கும் நிச்சயம் பதில் சொல்லும் என்று தன்னை சமாதானப்படுத்திக் கொண்டான்.


அன்று நடந்த விஷயங்களை எல்லாம் நிரஞ்சன் வசந்திடம் கூறி முடித்தான். அப்புறம் எங்கள் திருமணம் ஒன்றும் நிச்சயம் செய்யப்பட்ட நடந்தது கிடையாது இது எதிர்பாராத ஒரு செயல் (சம்பவம்) என திருமணமான அன்று என்ன நடந்தது என்று தெளிவாக கூற ஆரம்பித்தான் நிரஞ்சன்.




உங்கள் அம்மாவிடம் பாட்டி உங்கள் இருவர் திருமணத்தைப் பற்றியும் பேசுவதற்காக வெண்மதியை கொண்டு அப்படியே பேச்சு வார்த்தை முடிந்தது திருமணம் செய்து விடலாம் என்ற எதிர்பார்ப்புடன், இவர்கள் இருவரும் உங்கள் வீட்டிற்கு செல்ல,


உங்க அம்மா நீங்க இல்லாத சமயம் பார்த்து இருவரையும் அனாதை, போக்கற்றவர்கள் அசிங்கப்படுத்தி அவர்கள் கொண்டு வந்த தட்டை அவர்கள் முகத்திலேயே விட்டெறிந்து வீட்டைவிட்டு துரத்திவிட்டார்.


இதில் பாட்டியும் மதியும் மிகவும் காயப்பட்டு போய்விட்டார்கள், தங்களை சமாதானப்படுத்திக் கொண்டு என் திருமணத்திற்கு இருவரும் கிளம்பி வந்தார்கள்.


அப்போது அங்கு எனக்கு பார்த்த பெண் மண்டபத்தை விட்டு ஓடிவிட்டாள், இதில் என்னம்மா மிகவும் மனமுடைந்து போனவர்கள் அழுது கரையவும், பாட்டியும் எப்படியும் உங்கள் இருவர் திருமணத்தை உங்கள் அம்மா நடத்திவிட மாட்டார்கள் என்று புரிந்து கொண்டவர்கள் எங்கள் இருவருக்கும் அதே மணமேடையில் திருமணம் செய்து விட்டார்கள்.


நீங்கள் வெண்மதியை எவ்வளவு நேசித்தாய் என்று எனக்கு தெரியும் வசந்த். நம்ம ரெண்டு பேருக்கும் கிட்டதட்ட ஒரே வயது தான் இருக்கும் இங்க வாங்க போங்க என்னமோ ரொம்ப வயதானவர்கள் மாறி இருக்கிறது அதனால் நாம் இருவரும் பெயர் சொல்லி அழைத்துக் கொள்ளலாம், இப்ப சொல்லு வசந்த் இதில் எந்த இடத்தில் எங்கள் தவறு இருக்கிறது. எல்லாவற்றிற்கும் மேல் நானும் உன் அத்தை மகள் இருவரும் ஒன்று சேர வேண்டும் என்பது விதி.


இவ்வளவுதான் வசந்த் இனிமேல் நீதான் முடிவு எடுக்க வேண்டும்.


"என்ன முடிவு எடுக்க வேண்டும், என்னம்மா செய்ததும் மிகப்பெரிய தவறுதான் அதை நான் நியாயப்படுத்த விரும்பவில்லை ஆனால் என் மீது நம்பிக்கை கூட உங்கள் இருவருக்கும் அப்போது வரவில்லையா மதி"


"என் அம்மா சொன்னது போல் உன்னை நானே மாற்றி விடுவேன் என்று நினைத்தாயா...?"


நீ பிறந்ததில் இருந்தே உன்னை எப்போது இந்த இரு கைகளிலும் தூக்கி முதன் முதலாக உனக்கு முத்தம் கொடுத்தவன் நான். அப்போ உன் அப்பா எங்கிட்ட என்ன சொன்னார்கள் என்று உனக்கு தெரியுமா?


"அடேய் மருமகனே, இந்தக் குழந்தையை உனக்கு மிகவும் பிடித்திருக்கிறதா... இந்தக் குழந்தையின் வாழ்நாள் முழுவதும் நீ சந்தோஷமாக பார்த்துக்கொள்ள வேண்டும் நாங்கள் அவளை விட்டு சென்றாலும் கூட அவளுக்கு நாங்கள் இல்லை என்ற குறை தெரியாமல் நீ தான் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று சொன்னார்கள்.


அவர்கள் சொன்னது போலவே உன்னை விட்டு சென்றுவிட்டார்கள், நீ சின்ன வயதில் என் கையைப் பிடித்துக் கொண்டு "மாமா அப்பா அம்மாவை வரச்சொல்"என்ற அழுகும் போது நெஞ்சில் எனக்கு உதிரம் வடியும். எனக்கு விபரம் தெரியாத அந்த சிறு வயதில் என்னுடைய அனைத்து ஆசைகளையும் மறந்துவிட்டு உன்னை சமாதான படுத்த ஆரம்பித்தேன். அந்த சிறு வயது முதல் இன்றுவரை உன் அனைத்து ஆசைகளையும் நிறைவேற்றுவது என் கடமை. சரி போனது போகட்டும், இப்போது சொல் வெண்மதி.



"உனக்கு இந்த நிரஞ்சனை பிடித்திருக்கிறதா... இல்லையென்றால் எதற்காகவும் கவலைப்படாதே உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்"


"இல்லை மாமா எனக்கு நிரஞ்சன் மாமாவை மிகவும் பிடிக்கும். என்னால் இவர் இல்லாமல் சிறிது நேரம் கூட வாழ இயலாது. ப்ளீஸ் மாமா எங்களை பிரித்து விடாதீர்கள்"கண்ணீர் குரலில் கூற,


மனைவியின் கண்ணீரைக் கண்டு நிரஞ்சன் மனம் துடித்துப் போனது. வசந்த் சொன்னது கோபம் வந்தாலும், மனைவியின் மறு பதில் அவன் உள்ளத்தை குளிர்வித்தது. அதே சந்தோஷத்துடன் "ஹே கண்ணம்மா... அழக்கூடாது"மனைவியை அணைத்துக் கொண்டான்.


மதியின் முகத்தைப் பார்த்தே அவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதம் தானா என்பதை கண்டறிந்தவன் அவள் வாயாலேயே கேட்க வேண்டும் என்பதற்காக "உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்று"என்று சும்மா சொல்லவும், அவள் பதறியடித்துக்கொண்டு பதில் சொல்லவும் ஒரு புன்னகையை சிந்தினான்.


மதியின் தலையில் கை வைத்தவன் "குட்டிமா உனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ளத்தான் அப்படி கேட்டேன் "என்று தலையை பாசமாக கோதிவிட்டான்.


"உன் மாமா இரண்டு வருடங்களுக்கு பிறகு உன்னை பார்க்க வந்திருக்கிறேன், நீ என்ன ஒரு டீ போட்டு தர மாட்டாயா..."எனக் கிண்டல் அடித்தான்.


"ஏன் இவன் கையால் டீயை குடித்துவிட்டு வந்தவுடனேயே ஆஸ்பத்திரிக்குப் போக வேண்டுமா..."என அவள் கேசரி செய்ததையும் தாங்கள் பட்ட கஷ்டத்தையும் கூற இறுக்கம் தளர்ந்து வெடி சிரிப்பு சிரித்தான் வஸந்த். வெண்மதி கணவனை முறைத்து பார்க்க அவனும் அவளை பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் இறுதியில் தானும் முறைப்பதை நிறுத்திவிட்டு புன்னகைத்தாள்.


இதுதான் நீங்கள் சிரிக்கும் கடைசி சிரிப்பு என்று விதி கை கொட்டி சிரித்தது. இவர்கள் சந்தோஷத்தை மொத்தமாக அழிக்க இந்தியா செல்லும் விமானத்தில் அமர்ந்திருந்தாள் ரோஸி கண்களில் ஒருவித எதிர்பார்ப்புடன்.



தயவு செய்து உங்கள் கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள், கதை இன்னும் சில அத்தியாயங்களின் முடிந்துவிடும்.











 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 23:(இறுதி அத்தியாயம்)


"ஏன் வசந்த் மச்சான் இப்படி செய்தாய்.. நான் உன்னை வெறும் உடம்பிற்கு மட்டும்தான் பயன்படுத்திக்கொண்டேனா.."



"நிஜமாலுமே என் காதல் உனக்கு புரியவில்லையா...?? ஏன் மாமா இப்படி செய்தாய்... நான் உன் மீது எவ்வளவு அன்பு வைத்திருந்தேன், அதையெல்லாம் இப்படி ஒரு நொடியில் தகர்த்தெறிந்து விட்டு என்னை விட்டு செல்ல எப்படி மனம் வந்தது"மானசீகமாக மனதிற்குள் பேசிக்கொண்டாள் ரோஸி.


"நீ என்னை விட்டுச் சென்றாலும் எனக்கு சிறிதும் கவலையில்லை, உன்னை நான் உயிருக்கு உயிராக தான் காதலிக்கிறேன் நீ என்னை விட்டு பிரிந்தாலும் எனக்கு அதை பற்றி கவலை இல்லை உன்னை தேடி நான் வந்து கொண்டே இருக்கிறேன் வசந்த் மச்சான்"வலியோடு எண்ணியவள் மனதில் கல்லை தூக்கி வைத்தது போன்று இதயம் கனத்துப் போனது.


கண்களின் ஓரத்தில் சிறு துளி நீர் கசிய, அதை நாசுக்காக துடைத்துக் கொண்டவள் எதிர்பார்ப்புடன் அனைத்து தடைகளையும் கடந்து இந்தியாவிற்கு வருகை தரும் அவளுக்கு எதிர்பார்ப்பு நடக்குமா...?


வெண்மதி தனது வசு மாமா வந்த சந்தோஷத்தில் அவளுடன் அவள் கணவனும் திக்குமுக்காடிப் போனார்கள்.


மாமா வந்த சந்தோஷத்தை கொண்டாடும் பொருட்டு, தடபுடலான விருந்து ஏற்பாடு செய்திருந்தாள் வெண்மதி.


ஆட்டு பிரியாணி உடன், சிக்கன் 65, முட்டை உடன் தொட்டு கொல்வதற்கு வெங்காய பச்சடி அவனுக்கு மிகவும் பிடித்த கருவாட்டுக் குழம்பு, இறால் தொக்கு, இனிப்புச் சட்னி, சாம்பார், அப்பளம், பாயாசம் என்று தடபுடலான விருந்தை ஏற்பாடு செய்திருந்தாள் என்று நீங்கள் நினைத்தால் சத்தியமாக அது தவறு, எல்லாம் நிரஞ்சன் சிரமப்பட்டு சமைத்த உணவுகள், வெண்மதி அருகில் நின்று அனைத்து உணவுகளையும் செய்ய சொல்லி ஆர்டர் மட்டுமே...


"மாமா... சாப்பாடு நல்ல சமைக்க வேண்டும் சாப்பாடை எடுத்து வாயில் வைக்கும்போதே நாக்கில் கரைய வேண்டும்"


"அப்ப இது எல்லாத்தையும் தூக்கி பிரிட்ஜில் வை கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் எடுத்து வாயில் வைத்தால் நல்லா குளிர்ந்துவிடும்... உன் வாயில் தூக்கி வைத்தால் கரையும்"என்று எரிச்சலுடன் கூற,


"என்ன மாமா... நீங்கதானே எனக்கு விதவிதமா சமைச்சு தருகிறேன் உன்னை பத்திரமாக பார்த்துக் கொள்வேன் என்று உங்கள் காதலை கூறினீர்கள் இப்போது ஏன் இப்படி வெறுப்பாக பேசுவது போன்று இருக்கிறது... நீங்கள் தள்ளிக் கொள்ளுங்கள் நானே என் மாமாவுக்கு சமைக்கிறேன்"என்று நோடித்துக் கொள்ள,


"ஆத்தாடி அப்புறம் அவனுக்கு யார் வைத்தியம் பாக்குறது..."மனதில் நினைத்துக் கொண்டவன் வாயை திறந்து அவளிடம் சொல்லவில்லை. சொன்னால் என்ன நடக்கும் என்று அவனுக்குத் தெரியாதா...


"சாரி செல்லம் தெரியாமல் கோபப்பட்டு விட்டேன்...இனி கோபப்பட மாட்டேன், நீ வருத்தப்படாதே... உன்னை கஷ்டப்படுத்தி இருந்தால் மாமாவை மன்னித்துவிடு"


சரி சரி விடுங்க, இதெல்லாம் சகஜம் இதுக்கெல்லாம் சேர்த்துவைத்து இரவு உங்களை நல்ல கவனிக்கிறேன், இப்ப சந்தோஷமா நல்லா சமைக்க வேண்டும் சரியா... என்றதும்,


"ஐயா ஜாலி அப்படின்னா இன்னைக்கு ஓஹோ ஓஹோ.... நீ தள்ளி போ எல்லாம் சமைத்து முடித்து விட்டேன் இன்னும் நீ கேட்ட பணியாரம் மட்டும் தான் மீதம் இருக்கிறது,அதையும் சிறிது நேரத்தில் சுட்டுக் கொண்டு வருகிறேன். நீ இங்கே நிற்க வேண்டாம் அனல் அடிக்குது பார்... வெளியே செல்"மனைவியை அக்கறை கொண்ட கணவனாக வெளியே போக சொல்ல,


யாருக்கு கிடைப்பார்கள் இப்படி ஒரு கணவன்.அதுவும் இந்த காலத்தில், இப்படி ஒரு மனிதனை பார்ப்பது மிகவும் அபூர்வம் அல்லவா... கணவனை எண்ணி சிலிர்த்துப் போனாள் வெண்மதி.


வெறும் கையில்லாத பனியனுடன் தோளில் போட்ட துண்டுடன் இறுக்கிப் பிடித்த ஷார்ட்ஸும் அதிக நேரம் சமைப்பதால் உடலில் வழிந்த வியர்வையும் சமையல் ஒவ்வொன்றையும் செய்யும் நேர்த்தியைக் கண்டு சொக்கிபோனாள் வெண்மதி.


"இதற்கு மேலும் என்னால் முடியாது போடா மாமா... நீ என்னை ரொம்ப சோதிக்கிற... நான் இங்கிருந்து போகமாட்டேன் உன்னோடு தான் இருப்பேன்"என்றவள் அவன் முதுகில் தன் முகத்தை அழுத்தி பதித்து அவன் கழுத்து வழியாக இறங்கும் வியர்வையின் பாசத்தை நுகர்ந்தாள்.


நன்றாக சமைத்து கொண்டிருந்தவன் அவள் செயலில் ஒருகணம் தடுமாறித்தான் போனான்.


அவனுக்கும் உணர்வுகள் தாக்கு பிடிக்க முடியாது ஒரு கட்டத்தில் அதிகமாக பின்னோடு கையிட்டு அவளை முன்னே இழுத்து அவள் இதழில் தன் இதழை ஆழமாகப் பதித்துக் கொண்டான்.


இவன் இப்படி செய்வான் என்று நன்றாகவே தெரிந்து கொண்டவள் அவன் தலைமுடியில் கை விட்டு மென்மையாக வருடி விட, உண்மையாலுமே மெய்மறந்து போனான் நிரஞ்சன்.


தீஞ்ச வாசனை வரவும் எங்கிருந்து வருகிறது என்று பார்க்க முட்டை கருக ஆரம்பித்து இருந்தது."அச்சச்சோ கொஞ்சம் நகர்ந்துகோ வெண்மதி முட்டை தீய ஆரம்பித்துவிட்டது" ஒரு நொடியில் முட்டையை காப்பாற்றினான்.


மனைவியை கோபமாக முறைத்து பார்க்க, அவளோ ஈ என 32 பல்லையும் காட்ட அதற்கு மேலும் கோபப்பட முடியுமா அவளது கணவனால்...


"சரி சாப்பாடு தயாராகிவிட்டது, வா நாம ரெண்டு பேரும் போய் குளித்துவிட்டு தயாராகி வருவோம்"என்க


"சரி மாமா..."என்ற வெண்மதி அறைக்குச் சென்று குளித்துமுடித்து, மிகவும் பிடித்த மஞ்சள் வண்ண புடவையை அணிந்து கொண்டு, நெற்றியில் குங்குமம் இட்டு தலையில் இருபக்கமும் மல்லிகைச் சரம் வழிய பார்ப்பதற்கு அழகாக இருந்தாள்.


வெளியே தயாராகி வந்த ரஞ்சன்"வெண்மதி வா போவோம்"என்று மனைவியை அழைக்க, பதில் வராது போக அவளை நிமிர்ந்து பார்த்தான்.


மனைவியின் அழகில் சொக்கி போனவன் அவள் அருகில் சென்று கன்னத்தில் முத்தமிட அந்தி வானமும் சிவந்து போனது வெண்மதி முகம்.


சரி வா வெளியே போவோம் வசந்த் நமக்காக காத்துக் கொண்டிருப்பார்..."சரி மாமா வாங்க போகலாம்"மனைவியை அழைத்து கொண்டு கீழே இறங்கி வர அங்கு தயாராகி அமர்ந்து இருந்தான் வசந்த்.


வெளியில் வந்தவள் உணவுகளை எடுத்து வைத்து பரிமாற,"மாமா எல்லா சாப்பாட்டையும் சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் உங்களுக்காக நான் கஷ்டப்பட்டு சமைத்தேன்"என்று ஓரக்கண்ணால் கணவனை பார்க்க அவளைப்பார்த்து கண்ணடித்தான்.


அதில் ஒரு நொடி தடுமாற, வசந்த் இதையெல்லாம் கவனித்தாலும் பார்க்காத மாதிரியே உணவுகளை ஒரு கை பார்த்தான்.


நிரஞ்சனும் அவனருகில் அமர்ந்து தலைவாழை இலை போட்டு நன்றாக சாப்பிட்டுவிட்டு இருவரும் அங்கிருந்து எழுந்துகொண்டு கை கழுவி விட்டு மீண்டும் வந்தவர்களிடம்,


வசந்த் மாமா"சாப்பாடு எப்படி இருக்கிறது உனக்காக கஷ்டப்பட்டு சமைச்சேன்"ஆவலாக அவன் முகத்தைப் பார்த்து அவள் கேட்க,


"சமையல் ரொம்ப பிரமாதம் நிரஞ்சன், உண்மையாலுமே உங்க கை பக்குவம் ரொம்ப பிரமாதம்"



நிரஞ்சன் மாப்பிள்ளை"இதோ ஒரு காலத்தில் சமையல் கூட நன்றாகச் செய்யத் தெரியாதவள் இன்று சமைக்கிறாள் என்று சொன்னால் சத்தியமாக நான் நம்ப மாட்டேன்"சொல்லி விட்டேன் போதுமா வெண்மதி.


"ரொம்ப நன்றி"என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள். அவள் சிறுபிள்ளைத்தனமான செயலில் அனைவரும் வாய்விட்டு சிரித்தனர்.


"நிரஞ்சன் எனக்குச் வெளியில் சிறு வேலை இருக்கிறது... நான் சென்று பார்த்துவிட்டு வருகிறேன்"என்றான் வசந்த்.


"போயிட்டு வாங்க வசந்த்..."


வெண்மதி நீயும் சாப்பிடு நான் வெளியே போயிட்டு வர்றேன்.


"சரி மாமா போயிட்டு வா"என்றதும் தனது பைக்கை எடுத்துக் கொண்டு வெளியில் கிளம்பி செல்ல,


நிரஞ்சன் "வெண்மதி நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன் நீ சாப்பிட்டு தூங்கு"


"என்னாச்சு மாமா ஏன் இந்த நேரத்தில் வெளியில் போகிறீர்கள்..."எதிர்க் கேள்வி கேட்க,


"சும்மா கொஞ்ச நேரம் போய்ட்டு வந்துடுறேன்..."எனவும் "சரி போய்ட்டு வாருங்கள்" என்று ஒருவழியாக அனுமதி கொடுத்தாள்.



இந்தியாவிற்கு வந்து சேர்ந்த ரோஸி, ஏற்கனவே வசந்த் அவளிடம் கொடுத்த அட்ரஸ் பொய்யாக இருக்க, நிச்சயமாக அவன் செய்யும் வேலை சென்னை தான் இருக்கும் என்று புரியாத ஊருக்கு வந்தவள் அவனை எப்படி தேடுவது என்று திகைத்துப் போய்விட்டாள்.


ஒருவழியாக ஒரு ஆட்டோவை பிடித்து சென்னையை சுற்றி வர ஆரம்பித்தாள்.


அப்படி சுற்றியவளின் கண்களில் விழுந்தான் வசந்த். அவனைக் கண்டதும் கண்கள் இரண்டும் ஒரு நொடி பனித்தது.


ஆட்டோ டிரைவரிடம்"அண்ணா வண்டியை நிறுத்துங்கள்" என்றதும், ஆட்டோவில் இருந்து வேகமாக இறங்கி வசந்த் நின்ற இடத்தை நோக்கி வேகமாக ஓடினாள்.


நண்பர்களுடன் பேசி விட்டுத் திரும்பிய வசந்த் மதிக்கு அல்வா என்றால் பிடிக்கும் என்று ஒரு கடையில் அல்வாவை வாங்கிவிட்டு திரும்பியவன் தன் முன்னே வந்து நின்ற ரோஸியை கண்டு அதிர்ந்து போனான்.


"மச்சான்..."ஏன் என்னை விட்டு வந்தாய் என்று அழுதவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவனை அணைத்துக் கொள்ளப் போக அவளை பிடித்து நடுரோட்டில் தள்ளியவன் "உனக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என் கண் முன்னாடி வராதே உனக்கு எல்லாம் அறிவு இல்லை..?"சரமாரியாக அவளைத் திட்டியவன் வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டான்.


அவன் செயலில் துடித்துப் போய் விட்டாள் ரோஸி. எதார்த்தமாக அந்த பக்கம் வந்த நிரஞ்சன் வசந்த் செயலில் திகைத்து விட்டான்.


அவள் அழுவதை ரோட்டில் ஏராளமானோர் வேடிக்கை பார்ப்பது கண்டு அந்தப் பெண்ணை நெருங்கினான் நிரஞ்சன்.


"இதோ பாரும்மா எழுந்திடு"என்று கையை நீட்ட, அந்நிய ஆடவன் கைவிட்ட இப்போது இன்னும் பயந்தாள். அவள் பயத்தை புரிந்து கொண்டவன், நான் இப்போ சென்றான் வசந்த் அவனின் உறவினர் தான். முதலில் எழுந்து வா, என்றதும் தன் மச்சான் பேரைக் கேட்டு மறுப்பு சொல்லாமல் எழுந்து அவனுடன் சென்றாள்.


அவளை அங்கிருந்த காபி ஷாப்பிற்கு அழைத்துச் சென்று "சொல்லுமா உனக்கும் அவனுக்கும் என்ன உறவு... ஏன் இப்படி அவன் உன்னை செய்கிறான்"அடுக்கடுக்காக கேள்வி கேட்க, அவன் கேள்விகளுக்கு அழுது கொண்டே பதில் சொன்னாள்.


அவள் வரிசையாக ஒன்றொன்றாக சொல்லிக்கொண்டே வர இறுகிப் போனது நிரஞ்சன் முகம்.


"சரி அழாதேமா.. உனக்கான வழி நான் ஏற்பாடு செய்கிறேன், நான் சொல்வது போல் நீ செய் அது போதும்"என்றவன் தனது வீட்டருகே இருக்கும் இன்னொரு வீட்டிற்கு அழைத்துக் கொண்டு சென்றான்.


"உள்ளே வாம்மா இதுவும் என்னுடைய இன்னொரு வீடுதான்... சில நாட்கள் மட்டும் இங்கேயே தங்கிக் கொள்... பிறகு உன்னை எங்கே கொண்டு சேர்க்க வேண்டுமோ அங்கு கொண்டு சேர்கிறேன்"என்றதும்,


"ரொம்ப நன்றி அண்ணா... இனி எனக்கு எந்த கவலையும் இல்லை, உங்களை நம்பியே நான் இருக்கிறேன்"என்றதும் மீண்டும் முகம் இறுகி போனது அவனுக்கு, தன்னை கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி கொண்டவன் "சரி நீ பத்திரமாக இரு"என்று அவளிடம் அறிவுறுத்தியவன் நேரே கோபத்துடன் வீட்டுக்குள் நுழைந்து வசந்த் இருக்கும் அறைக்குள் சென்றான்.


அவனைப் பார்த்ததும் கொல்லுமளவிற்கு ஆத்திரம் வந்தாலும், கட்டு படுத்திக் கொண்டு "வசந்த் ரோசி கூட சேர்ந்து உன் வாழ்க்கையை அமைத்துக் கொள் பாவம் அந்தப் பெண்"என்றதும் திடுக்கிட்டுப் போனான் வசந்த்...


தன்னை சமாளித்துக் கொண்டு"யார் அந்த ரோஸி எனக்கு அந்த பெயரில் யாரையும் தெரியாது"என்று கூற,


செல்லை எடுத்து போட்டோவை காட்டி "இவள் யார் என்று உனக்கு தெரியாதா...?"மீண்டும் கேட்க, பெருமூச்சு விட்ட வஸந்த், உனக்கு விஷயம் தெரிந்து விட்டது இனி மறைத்து பிரயோஜனமில்லை,"என்னால் அவனோட வாழ முடியாது...? திமிராக பதில் சொல்ல,


"நீ அவள்கூட வாழவில்லை என்றால் உன் அத்தை பெண் என்னோட வாழ முடியாது" கோபத்துடன் அவன் கூற,


ஒரு நொடி அதிர்ந்தாலும், மனைவி மீது அன்பு வைத்திருப்பவன் அவளை விட மாட்டான் என்ற நம்பிக்கையில் தன்னை மிரட்டுகிறான் என்ற கோபத்தில் "உன்னால் அப்படி செய்ய முடியாது நிரஞ்சன்"என்று கேலி செய்ய கோபத்தில் நிரஞ்சன் "வெண்மதி..."அதிர்ந்து கத்த அங்கு ஓடி வந்தாள் அவன் மனைவி.


"என்னாச்சு மாமா ஏன் கூப்பிட்ங்க.."அழைத்ததன் காரணம் கேட்க,


அவளை திரும்பியும் பாராது அவள் கையை பிடித்து இழுத்துக்கொண்டு வேகமாக வெளியே வந்தவன் கையை விடுத்து கழுத்தை பிடித்தவன் தன் வீட்டை விட்டு வெளியே தள்ளிவிட்டான்.


"இனிமே என் வீட்டில் இருக்கக்கூடாது... இந்த வீட்டில் இருப்பதற்கான தகுதி உனக்கு இல்லை"என்று கதவை அடித்து சாத்தினான்.


தன்னை அழைத்ததில் அவன் கோபம் புரிந்தவள் வேகமாக ஓடி வர, கணவன் செய்கையில் காரணமே இன்றி தன்னை வீட்டை விட்டு போக சொல்ல அந்த இடத்திலேயே உயிரோடு செத்துப்போனாள் வெண்மதி.


ஐந்து வருடங்களுக்கு பிறகு,


"அம்மா..."எங்க போயிட்டீங்க...? எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீக்கிரமா வாங்கம்மா என்று தனது அம்மாவைத் தேடி அழுதுகொண்டிருந்தாள் நான்கு வயது ஹரித்ரா.



மகளின் அழுகையின் விரைந்து வந்த வெண்மதி குழந்தையை சமாதானப் படுத்தும் பொருட்டு, அச்சோ!!"செல்லம் அழக் கூடாது டா... அம்மா இங்க தான் இருக்கேன். நீங்க தூங்கி கிட்டு இருக்கீங்க, உங்களை தூங்க வைத்துவிட்டு அம்மா வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் அம்லு.


நீங்க இப்போ பெரிய பொண்ணு தானே... இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் அழலாமா... என தன் மகளை சமாதானப்படுத்தினாள் வெண்மதி.


****************************

"அம்மா..."நாளைக்கு எங்க ஸ்கூல்ல என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அப்பாவுக்கு கூட்டிட்டு வருவாங்களாம். என்னோட அப்பா எங்க அம்மா இருக்காங்க... நான் பிறந்ததில் இருந்தே அப்பா என்னை வந்து பார்க்கவில்லை. ஏன் என் அப்பாவிற்கு என்னை பிடிக்கவில்லையா... மகளின் கேள்வியில், இந்த நிமிடமே இதுதான் பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என துடித்து போய்விட்டாள் வெண்மதி.



ரஞ்சனை பிரிந்த இந்த ஐந்து வருடங்களில், ஒவ்வொரு நொடியும் நரகமாக கழித்தவள் மகளின் கேள்வியில் முற்றிலுமாக நிலைகுலைந்து போனாள் நிரஞ்சன் மனைவி.


அங்கு நிரஞ்சன் தன் நான்கு வயது மகளுடன் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்க விதி இவர்கள் வாழ்கையில் மொத்தமாக அழித்திருந்தது.


இறுதியில் மனைவிக்கு ராட்சசன் ஆகிப் போனான் கணவன்.


முற்றும்...
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கதை எழுத வாய்ப்பு கொடுத்த ஸ்ரீ ஆண்டிக்கு ரொம்ப நன்றி. இந்தக் கதையை எழுத சொல்லி உன்னால் முடியும் என்று என்னை ஊக்கப்படுத்திய என் தோழி sarena baby நன்றி லவ் யூ டா செல்லம். கதை ஆரம்பம் முதல் இறுதிவரை பயணித்து, கருத்துச் சொல்லி என்னை ஊக்கப்படுத்திய தோழிகளுக்கு மிக நன்றி... கதையின் லிங்க் இரண்டு நாட்கள் மட்டுமே இருக்கும்...


இறுதி அத்தியாயத்திற்கு உங்கள் கருத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.


நன்றி
 
Status
Not open for further replies.
Top