Sarena
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம்-2:
நிரஞ்சனின் மீது சாணியை தூக்கி எரிந்தவள் அதைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல், கலகலத்து சிரித்துக் கொண்டிருக்கும் போதே,'ஐயோ! என பதறி தான் போனான் வசந்த்.
ஏற்கனவே கார் கண்ணாடி உடைந்ததில் கோபத்தில் கொந்தளித்துக் கொண்டிருந்த நிரஞ்சன் தன்மீது சாணத்தை தூக்கி எறிந்துவிட்டு, அதற்காக மன்னிப்பு கூட கேட்காமல் விழுந்து விழுந்து சிரிக்கும் அந்த பெண்ணின் மீது எரிச்சல் கொண்டான்.
வசந்தோ அவளின் செய்கையை பிடிக்காதவன் போல ஏய்? 'மதி கொஞ்ச நேரம் வாயை மூடிக் கொண்டிரு... சாரி சார் ஏதோ தெரியாமல் உங்கள் மீது பட்டு விட்டது என மன்னிப்பு கோரவும்', வெண்மதியை முறைத்தவாறே, பரவா இல்லங்க... நீங்க ஏன் மன்னிப்பு கேட்கிறீர்கள்.
ஆனா.."மன்னிப்பு கேட்க வேண்டிய மகராசி விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருக்கிறாள் சரியான ராட்சசியா இருப்பாள் போல இருக்கு... என்று நிரஞ்சன் கூறவும்,
முன்பின் தெரியாத ஒருவன் தன்னை பார்த்து ராட்சசி எனக் கூறவும், கொந்தளித்துப் போனாள் வெண்மதி. "அடியே மதி...இவனுக்கு இதெல்லாம் பத்தாதுடி என்னையவா திட்டுற உன்னை இருடா வச்சிக்கிறேன்" என மனதில் கருவிக் கொண்டவள் தக்க சமயத்திற்காக காத்திருந்தாள்.
வசந்த் தான்'பார்ப்பதற்கு பெரிய இடம் போல் இருக்கிறார் இந்த சார்.. ஆனா, இந்த லூசு இப்படி பண்ண அது மட்டும் இல்லாம இப்படி விழுந்து விழுந்து சிரித்து மானத்தை வாங்குது'என மனதிற்குள் தன் மாமன் மகளை திட்டிக் கொண்டிருந்தான் வசந்த்.
நீங்க வாங்க சார்... இதோ இங்க தண்ணி இருக்கிறது உங்களை சுத்தப்படுத்திக் கொள்ளுங்கள். நான் போய் உங்களுக்கு வேறு ஒரு சட்டையை வாங்கிவிட்டு வந்தர்றேன்... என அவனது பதிலுக்கு கூட காத்திராமல் வேகவேகமாக சென்றான்.
தன்னை சுத்தப் படுத்திக் கொள்வதற்காக, வீட்டின் பின்புறம் வந்தவனை.. தக்க சமயம் பார்த்துக் கொண்டிருந்த, வெண்மதி அவன் முகத்தை சோப்பு போட்டு கழுவி கொண்டு இருக்கவும், அவள் வீட்டில் செத்துக் கிடந்த எலியை சரியாக அங்கிருந்த குண்டானில் போடவும் அதுவும் சரியாக சென்று நிரஞ்சன் வைத்திருந்த குவளையில் விழுந்தது. மெதுவாக அந்த இடத்தை காலி செய்தவள் நடக்கப் போவதைக் காண ஆவலுடன் காத்திருந்தாள்.இது எதுவும் அறியாத நிரஞ்சன் தண்ணீரை எடுத்து முகத்தை கழுவிவிட்டு, அந்தத் தண்ணீரை வாயில் ஊற்றி கொப்பளிக்கவும்,
என்னடா இது தண்ணி ஒரு மாதிரியா இருக்கே... என தண்ணீரை உற்றுப் பார்க்கவும், அதில் கிடந்த எலியை கண்டதும் அந்த சட்டையை தூக்கி தூர போட, சரியாக வந்து கொண்டிருந்த வசந்தின் மீது பட்டது அந்த எலி.
சீ...உகும்.. எவன்டா இது இந்த நாத்தம் புடிச்ச எலிய என் மேலே தூக்கி போட்டது.. அட நாசமா போன நார பய எலியை எவன்டா தூக்கிப் போட்டது என கத்தவும், மாமனின் சத்தம் கேட்ட வெண்மதி அந்த இடத்திலிருந்து துண்டைக் காணோம் துணியைக் காணோம் என அலறி அடித்து கொண்டு ஓட ,
அதற்கு மேலும், எலியின் நாற்றம் பொறுக்க இயலாத வசந்த் அந்த எலியை தூக்கி எறிய அது சரியாக சென்று, வெண்மதியின் மீது விழுந்தது. தன் மேல் எலி வந்து விழுகும், எதிர்பார்க்கதவள் ஆ... என்று அலறியபடி, எலியை தூக்கி வீசவும்,
என்னடி சத்தம் என்று கேட்டபடி வந்த பாட்டி மீது எலி விழவும், "ஐயோ"என்று அலறியபடி பாட்டி கீழே விழ கால் எசகுபிசகாக பிசைக்கி கொண்டது.
அங்கு, எலி விழுந்த தண்ணீரை வாயில் ஊற்றி விட்டோமென்று வாயில் எதுவும் ஆகிவிடுமோ! என்று பயந்து டாக்டர் நிரஞ்சன், அருகிலிருந்த மாட்டுச் சாணி அள்ளி வாயில் போட்டு கக்கி கொண்டிருந்தான்.
வசந்தோ'என்னடா இது... சரியான லூசா இருப்பான் போல இருக்கு... வெண்மதி சாணியை தூக்கி எரீந்ததற்கு அந்த கத்து கத்தினான். இப்போ அவனே சாணி போட்டு கலக்கி குடிக்கிறான் ஐயோ ஒண்ணுமே புரியலையே'.. என மண்டையை ,பிய்த்துக்கொண்டான் வசந்த்.
சார்.. என நிரஞ்சனை அழைக்கவும், சீ எனத் தன் கையிலிருந்த சாணி குவளையை தூக்கி தூரப் போட்டான் , அது சரியாக சென்று வெண்மதியின் மீது ஊற்றியது.அப்பத்தா வழுக்கி விழுந்து விட்டது அதற்கு உதவி செய்ய தனது மாமாவை அழைக்க வந்த, வெண்மதி மீது படவும், மீண்டும் சாணியில் குளித்தால் வெண்மதி.அதில் எரிச்சல் வர, அவனை நோக்கி
"யோவ்... சரியான கூமுட்டையா இருப்பாய் போலிருக்கு, உன் மூஞ்சில என் பீச்சாங்கை வைக்க போடா இஞ்சி தின்ன குரங்கு" என.. ஆ வில் ஆரம்பித்து இ இல் முடித்த பெண்ணைக் கண்டு திகைத்து நின்றான் நிரஞ்சன்.
'என்ன பொண்ணு நீ? சரியான இராட்சசியா இருப்பாள் போலிருக்கிறது"... என திட்டவும், மீண்டும் ஆரம்பிக்க போன வெண்மதியை, இவள் இப்போது ஆரம்பித்தாள் மறுபடியும் எப்போது மூடுவானு எனக்கே தெரியல...
வெண்மதி 'எதுக்காக வேகமா ஓடிவந்த என்னாச்சு?'என்ற வசந்தின் கேள்வியில் தான் வெண்மதிக்கு பாட்டியின் நியாபகமே வந்தது..
"ஐயோ மாமா பாட்டி கீழ விழுந்து எசகு பிசகாக கிடக்கு... அதைத் தூக்க முடியாமல் தான் உன்னை தேடி வந்தேன் மாமா... அந்தக் கிழவியை சோத்த கொஞ்சமா திங்க சொன்னா அது யான உருண்டை மாதிரி சோத்த வாயில வச்சு அம்முகுது... கிழவிய தூக்க முடியலமாமா சீக்கிரம் வா... கிழவி சாப்பிட நேரம் ஆச்சுன்னு உருண்டு கிரண்டு வீட்டுக்குள்ள போச்சுன்னா வீடு உடைந்து விட போகுது"அவசர அவசரமாக வசந்தை இழுக்காத குறையாக கூட்டி சென்றால் வெண்மதி.
அவள் செய்யும் கூத்தை எல்லாம் வாயை பிளந்தபடி பார்த்துக் கொண்டு நின்றான் நிரஞ்சன். அவருக்கு அடி எதுவும் பட்டிருக்கும் என ஒரு மருத்துவராய் எண்ணியவன் காருக்குள் சென்று முதலுதவி பெட்டியை எடுத்துக்கொண்டு அவர்கள் சென்ற திசையை நோக்கி சென்றான்.
அங்கு, இரண்டு பேரும் சேர்ந்து பாட்டியை தூக்கமுடியாமல் தூக்க... பாட்டியும் தட்டுத்தடுமாறி மெதுவாக எழுந்தது.
காலில் ஏற்பட்ட சுளுக்கு அதிக வலியை கொடுக்க, 'அம்மா'என அலறி விட்டார்கள். பதறியடித்து ஓடிவந்த நிரஞ்சன் பாட்டிக்கு முதலுதவி செய்ய ஆயத்தமாக,
வெண்மதியோ,"டேய் என்னடா பண்ற? என் பாட்டியின் காலை வாரிவிட்டு அதை கொல்ல பார்க்கிறாயா?" என்னை எதிர் கொண்டு வரவும்,
பாட்டிக்கோ, தன் பேத்தி தன் மேல் இந்த அளவு அன்பு வைத்துள்ளாள் எனக் கண் கலங்கவும், அந்த எண்ணத்தில் இடி விழுந்தது அவள் அடுத்து கூறியது.
"என் பாட்டியியை போட்டு தள்ளுவதற்கு முன்பாக அது பேரில் உள்ள அந்த ரெண்டு எரும மாடை என் பெயரில் மாற்று கொடுத்துவிடு"எனக் கூறவும், நிரஞ்சன் ஒன்றும் புரியாமல் விழிக்க
பாட்டியோ'அடி கூறுகெட்ட சிறுக்கி'திட்டுவதற்கு முன்பாக நிறுத்துங்க பாட்டி... நிரஞ்சன் நீங்க எதற்காக இதெல்லாம் செய்கிறீர்கள்? என்று வினாவாவும், ஐ அம் ஏ டாக்டர் நிரஞ்சன் என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டான்.
ஓகே நீங்கள் உங்கள் வேலையை கவனியுங்கள்.. பாட்டியின் காலை சோதித்தவன், ட்ரெஸ்ஸிங் போடவண்டும் எனவும் திகைத்துப் போனாள் வெண்மதி.
மாமா... என்ன இந்த ஆளு? பாட்டிக்கு போயி பிரஸ் பண்ணனும்னு சொல்றா சரியான கிறுக்கன போல இருக்கான் என்று நிரஞ்சனை திட்டவும், அவளது கூத்தை பொறுக்க முடியாதவன் அருகிலிருந்த பிளாஸ் திரியை எடுத்து அவளது வாயில் ஓட்டினான். அவள் வாயை மூடிய பிறகுதன், நிம்மதியாக வைத்தியம் பார்த்தான்.
தன்னை சுத்தப் படுத்திக் கொள்ள, வசந்தை நோக்கியவாறு என்னை சுத்தப்படுத்திக் கொள்ள
வேண்டும் என்று கூறவும், அப்போதுதான் வசந்த்க்கும் அவனின் நிலைமை புரிந்தது.
பாத்ரூமுக்குள் அழைத்துச் சென்றவன், இங்கே உங்களை சுத்தப்படுத்திக் கொண்டு இதோ இந்த உடையை அணிந்து கொண்டு வாருங்கள்.. என வெளியில் வந்தவன் பாட்டியை காண சென்றான்.
தன்னை சுத்தப்படுத்திக் கொண்டு வெளியில் வந்த நிரஞ்சன் அங்கு சுவற்றில் இருந்த மாட்டு சாணத்தைக் கண்டு திகைத்து நின்றான்.
அவன் சென்று இவ்வளவு நேரமாகியும் வரவில்லை என்று, அவனைத் தேடி வந்த வெண்மதி அவனை யோவ் டாக்டரே.. என்று அழைக்கவும், அவன் சிறிதும் அசையாமல் வைத்த கண் வாங்காமல் ஒரே இடத்தை பார்த்துக் கொண்டிருக்கவும் அங்கு தனது பார்வையை செலுத்தினால் வெண்மதி.
டாக்டர்... என்று அவள் கத்தவும்,தான் சுயநினைவு அடைந்த நிரஞ்சன் அவளை நோக்கி அவ்வளவு நேரம் இருந்த சஞ்சலத்தை மறந்து அந்த கேள்வியை கேட்க ஒரு நிமிடம் திகைத்தவள் பின் விழுந்து விழுந்து சிரித்தாள்.
அவன் அப்படி என்ன கேள்வி கேட்டு இருப்பான்? உங்களது கருத்துக்களை தயவு செய்து கருத்துக்கள் மட்டும் பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே... கதை திரியில் நீங்கள் பகிர்ந்து கொண்டாள அதற்கு பதில் அனுப்ப முடியவில்லை மனதிற்கு கஷ்டமாக உள்ளது. உங்கள் கருத்தை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
வாழ்க வளமுடன்
தாரணி.