All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

தாரணியின் "ராட்சசியின் அசுரன்!!"கதை திரி

Status
Not open for further replies.

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 9:


"ஏய்...கதவ தொறடி வெண்மதி. உனக்கு அவ்வளவு தைரியம் இருக்கா... என்னோட ரூம் உள்ளே வந்து என்னையவே கழுத்தைப் பிடித்து வெளியில் தள்ளுவ... உன்னை... ஒழுங்கு மரியாதையா கதவைத் திற..." என்று வெளியில் நின்று மெதுவாக அவளுக்கு மட்டும் கேட்கும்படி கத்தினான் நிரஞ்சன்.


அவனது சத்தத்தில் கடுப்பானவள் வேகமாக வந்து கதவை திறந்தவள் அதே வேகத்தில் தான் கையில் கொண்டு வந்த வாழைப்பழத்தை கத்திக் கொண்டிருந்த அவன் வாயில் கையோடு கொண்டு வந்திருந்த வாழைப்பழத்தை பேசிக்கொண்டு இருக்கும்போதே அவன் வாயில் திணித்தாள்.


அவள் கதவைத் திறக்கும் சப்தம் கேட்டு சும்மா இராமல் "அது.. அந்த பயம் இருக்கட்டும்? அவ்வளவு பயம் இருக்கிறவ எதுக்கு நீ கதவை சாத்தினாய் என்று கூறி கொண்டிருக்கும்போதே அவன் கூறிய வீர வசனத்தை கேட்டு கடுப்பானவள்,


அவன் காலையிலிருந்து உணவு உண்ணவில்லை என்பது ஞாபகம் வரவும், சரி பரவால்ல போ... ஆயிரம் தான் இருந்தாலும் கண்ணாலும் கணவன் புண் ஆனாலும் புருஷன் என்ற பழமொழியை மாற்றிக் கூறினாள்.


சுற்றுமுற்றும் மழையை நோட்டமிட்டவள் அங்கு தட்டில் அடுக்கி வைத்திருந்த பழங்கள் மீது பார்வை விழுந்தது.


"ஆமா... இவங்க எல்லாம் என்ன லூசா? நேரத்துக்கு சாப்பாடு கொடுக்கிறார்கள் முதலிரவு அறைக்குள் அனுப்பி வைக்கிறார்கள்... இங்கே வந்து இவ்வளவு பழத்தையும் பால் குடிச்சிட்டு படுத்தாள் எப்படி உறக்கம் வரும்... கொஞ்சம் கூட இவங்களுக்கெல்லாம் இந்த யோசனையை வராது போல... அடியே மதிப்புள்ள நீ இருக்குற அறிவுக்கு எங்கேயும் இருக்க வேண்டிய ஆளு... உன் கிரகம் இந்த ஊர்ல மாட்டி கிட்டே... என்று புலம்பிய வாரே தட்டில் உள்ள அனைத்து பழங்களையும் இனிப்புகளையும் தின்று முடித்து இருந்தாள்.



அனைத்தையும் தின்று வயிறு புடைக்க அமர்ந்திருந்தவள் "சரி போனாப் போகுது... இத மட்டும் ஆச்சு அவனுக்கு கொடுப்போம்"என்றவாறு அவன் கதவைத் தட்டவும், கதவை திறந்ததும் அவன் வாயை மூடிக்கொண்டு இருக்காமல் வீரவசனம் பேச கொண்டு வந்திருந்த வாழைப்பழத்தை அவன் வாயிலேயே திணித்து விட்டு கதவை சாத்திக் கொண்டாள்.


வாய்க்குள் திணித்த வாழைப்பழத்தை கஷ்டப்பட்டு விழுங்கியவன்"நம்ம நேரம் அவள் கதவை திறந்தாள்... வாய மூடிட்டு சும்மா இருந்தேனா... இப்போ கதவை சாத்திட்டு போயிட்ட!!"என்று புலம்பினான்.


மறுபடியும் முதலில் இருந்து ஆரம்பித்தான்."அடியே வெண்மதி கதவைத்திறடி..."என்று இம்முறை வேகமாக கத்தவும், கீழே இருந்து மகேஸ்வரி "என்ன அங்க சத்தம்..."என்று கேட்கவும், கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டான்.


ஒருவேளை கதவை தட்டினாலும், சத்தம் கேட்ட அம்மா வந்தாலும் வந்துவிடுவார்கள். அப்போ இங்கே தான் படுக்க வேண்டுமா... என்று தலைவிதியை நொந்து கொண்டபடி கதவை ஒட்டிய குறுகலான இடத்திலேயே படுத்துக்கொண்டான்.


வழக்கமாக கல்யாணமாகும் பெண்ணிற்குத் தான் அடுத்த வீட்டிற்குச் செல்லும் பொழுது, புது வீடு, புது சொந்த பந்தங்கள், புது இடம் என்று கவலை இருப்பதால் தூக்கம் வராது என்று கூறுவர்.


ஆனால், இங்கு நடந்ததோ எல்லாம் தலைகீழ்...


அங்கு அறைக்குள் படுத்திருந்த வெண்மதி கணவனைப் பற்றிய சிறிய எண்ணம் கூட இல்லாது, அவளது சிம்ரன் கூட தனது கனவை சுகமாக கண்டபடி ஆழ்ந்த நித்திரையில் புகுந்தாள்.


பாவம் நிரஞ்சன் தான் அந்தக் குறுகலான இடத்தில் படுக்க முடியாது விடிய விடிய விழித்தபடியே கிடந்தான்.


பொழுது விடிந்தபின் சற்று கண்ணயர, பொழுது விடிந்தது என்பதற்கு அடையாளமாக அருகில் உள்ள சேவல் கூவ, சற்று நித்திரையில் ஆழ்ந்தவன் மணியைப் பார்க்க அது ஐந்து என்று காட்டியது.


வழக்கமாக மகேஸ்வரி ஐந்து மணிக்கு எழுந்து விடுபவர். எங்கே, அன்னை வந்து மேலே பார்த்தாள் தான் வெளியில் இருப்பதைக்கண்டு அவர் மனம் வாடினாலும் வாடக் கூடும் என்று அவர் மனம் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக அறைக்குள் செல்லும் வழியை யோசிக்க ஆரம்பித்தவனுக்கு அப்போதுதான் அவனது ரூமில் இருக்கும் குளியல் அறைக்கு பக்கத்தில் உள்ள ஜன்னல் ஞாபகம் வந்தது.


"ஸ் இது ஏன் நைட்டு எனக்கு ஞாபகம் வராமல் போனது..."என்று எண்ணியபடியே கையில் வைத்திருந்த போர்வை தலையணையை பக்கத்தில் இருந்த மேஜைக்குள் திணித்தவன் அவனது ரூமிற்கு பின்புறம் சென்றான்.


"எங்கே அதை சாத்தி வைத்துவிட்டு வந்துட்டேன் ஒரு வேலையாக ஜன்னலை மட்டும் சாத்தி இருந்தால் என் நிலைமை அவ்வளவு தான்..." என்று பயந்தவாறே அவனது ரூமின் பின்புறம் சென்றான்.


அவனது நல்ல நேரம் பின்னாலிருந்த ஜன்னல் சாத்தப்படாமல் இருந்தது. வேகமாக அதன் அருகில் சென்றவன் சிரமப்பட்டு ஒருவாறு ஜன்னலுக்குள் நுழைந்தவன், திணறியவாறே தனது உடம்பை உட்புகுத்தினான்.


இனிமே எனக்கு நல்ல நேரம்தான்... என்று கத்திக்கொண்டே குதித்தவன் ஜன்னலைத் திறந்து வைத்திருந்தவரே கழிப்பறையும் மூடாமல் திறந்து வைத்திருக்க,உனக்கு இன்னும் நல்ல நேரம் வரவில்லை என்பது போல் சரியாக அந்த கழிப்பறை குழிக்குள் விழுந்தான்.


அப்படி விழுந்ததில் ஒருகால் மொத்தமும், கழிப்பறையின் அடிப்பகுதி வரை சென்று வந்தது.


"அய்யோ..."என்று கத்தியவாறு தனது காலை எடுத்தவன் முழுவதுமாக சுத்தப்படுத்திக் கொண்டு அறைக்குள் வர அங்கு அவனது மனைவியும் அவனைப் போலவே ஒரு காலைக் கீழே போட்டவாறு மறுகாலை சரியாக அவனது டி ஷர்ட்டில் கிடக்க தலையணையை கட்டி பிடித்தபடி ஆழ்ந்த நித்திரையில் இருந்தவளை கண்டு கொலைவெறி கொலைவெறி எழுந்தாலும், கட்டுப் படுத்திக் கொண்டான்.


அப்படியே பார்வையை கதவு புறம் திருப்ப அங்கு அவன் கண்ட காட்சி அவன் இதயம் ஒரு நிமிடம் நின்று துடித்தது. அடிப்பாவி கதவுக்கு தாழ்ப்பாள் போடமல் தூங்கினியா... நான் ஒரு கிறுக்கன். அதுல ஒரே ஒரு தடவ கைய வச்சிருந்தாலும், இவ்வளவு கஷ்டப்பட வேண்டியே இருந்திருக்காது என்று வடிவேல் பாணியில் கூறியவன் வராத கண்ணீரைத் துடைத்துக் கொண்டான் .



பிறகு, தூக்கம் கண்ணை சுழற்ற அவளது பக்கத்திலேயே படுத்தவன் நிமிடத்தில் உறங்கிப் போக, சற்று நேரத்திலேயே மீண்டும் உறக்கம் கலைந்து கஷ்டப்பட்டு இமைகளை பிரிக்க, அங்கு அவனது ஆருயிர் மனைவி அவன் மீது கையை காலை போட்டவாறு உறங்கிக் கொண்டிருந்தாள்.


ஏற்கனவே, அவர்மீது ஒரு உணர்வின் இருந்தவனுக்கு அவளது ஸ்பரிசம் உயிர் வரை சென்று தித்தித்தது.


அப்போதுதான் அவளை முழுமையாக கவனிக்க ஆரம்பித்தான்.


அழகிய வில்லென வளைந்த புருவமும், நிலவை கொண்டுவந்து ஒட்டினாற் போன்று நுதலும், பாலைவனம் மண் போன்ற அழகிய கண்களும், கூர்மையான கத்தி போன்ற மூக்கு, அழகிய செப்பு இதழ்கள் என்று மாநிறத்தில் இருந்தாலும் அவனுக்கு அழகியாக தெரிந்தாள்.


உணர்வின் பிடியில் இருந்தவன் தன்னையும் அறியாமலேயே உறங்கிக்கொண்டிருந்தவள் இதழில் தன் இதழை பதிக்கவும், சரியாக தூக்கம் கலைந்தது விழித்தவள் அதிர்ந்து போனாள்.

தொடரும்...
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 10:

தன்னையுமறியாமல் அவள் இதழில் தன் இதழை பதித்தான். சரியாக அந்நேரம் அவளிடம் அசைவு தெரிய வேகமாக விலகி கொண்டவன் உறங்குவது போல் பாவ்லா செய்தான்.


"என்னாச்சு... எங்கே இருக்கிறோம்? இவன் யாரு என் பக்கத்துல வந்து கிடக்கிறான்..."என்றவாரே நடந்த அனைத்தையும் மறந்தவள் உறங்கிக் கொண்டிருந்த (நடித்துக் கொண்டிருந்த) கணவனுக்கு கோபத்தில் விட்டால் ஒரு உதை.


அதில் உறங்கிக் கொண்டிருப்பது போன்று நடித்தவன் பொத்தென்று அருகிலிருந்த குப்பை தொட்டியில் விழுந்தான்.


அதில் நச்சென்று அவனது தலை அந்தத் தொட்டியில் மோத"அவுச்..."என்று வலியில் முனகினான்.


அப்போதுதான் அவளுக்கு தனக்குத் திருமணம் நடந்த விஷயமே ஞாபகம் வர, பதறி எடுத்துக்கொண்டு கணவனிடம் பதறியடித்துக்கொண்டு கணவனிடம் சென்றாள்.


"ஐயையோ... சாரிங்க எதுவும் எனக்கு ஞாபகம் இல்லை. நான் எந்திரிச்சு பார்க்கவும் நீங்க திடீருன்னு என் பக்கத்தில் இருக்கவும், அதிர்ச்சி அடைந்துவிட்டேன். அதனால் இதை தெரியாமல் செய்துவிட்டேன் மன்னித்துவிடுங்கள் மாமா"என்று அவனிடம் மன்னிப்பு வேண்டினாள்.


அவ்வளவு நேரமும், இரவு தூங்காமல் இருந்தது, ஜன்னல் வழியாக சிரமப்பட்டு வந்தது, தாளிடாப்படாத கதவு, இப்போது அவளது உதை என்று எரிச்சல் கொண்டிருந்தவனுக்கு அவளது "மாமா.." என்ற அழைப்பு சுகமாக மனதை வருடிக் கொடுத்தது.


அவ்வளவு நேரமும் அவன் மனதில் இருந்த பாரமான உணர்வு அகன்றது போன்று இருந்தது.



அவளையே கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான்."அவன் தன்னையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருக்கவும், தன்னை கீழே குனிந்து பார்த்தவள் தன் ஆடைகள் விலகி இருப்பதை கண்டு வேகமாக சரி செய்து கொண்டவள் அடுத்து அவள் செய்த செயலில் எதுவும் பேசாமல் மீண்டும் சென்று படுத்துக் கொண்டான்.


அவ்வளவு நேரமும், ஏதோ ஒரு உணர்வில் இருந்தவன் உதட்டில் உறைந்த புன்னகையோடு தூங்கி போனான்.


அவளோ சென்று தன்னை சுத்தப் படுத்திக் கொண்டவள் தலையில் துண்டை சுற்றி கொண்டு அழகிய இளம் ஊதா கரை வைத்த புடவை கட்டிக் கொண்டவள் கண்ணாடியின் அருகில் வந்து நெற்றியில் குங்குமம் இடும் போது தன்னையுமறியாமல் அவள் தேகம் சிலிர்த்தது.


நேற்று அவளிடம் யாராவது உனக்கு நாளை திருமணம் என்று கூறி இருந்தால் வாய்விட்டு நகைத்து இருப்பாள். அப்படி இல்லை எனில் அவர்களது மண்டையை உடைத்து இருப்பாள்.ஒரே நாளில் தனது வாழ்வில் நிகழ்ந்த மாற்றம் கண்டு இதழில் உறைந்த புன்னகையோடு திரும்பியவளூக்கு தரிசனம் தந்தான் அவள் கணவன்.


அதில் திடீரென குறும்பு தோன்றவும், கையிலிருந்த லிப்ஸ்டிக், கண்மை ஆகியவற்றை அவனிடம் எடுத்துக் கொண்டு சென்றவள் அவனது உதட்டில் சாயத்தை பூசினாள். பிறகு பிறகு கண் மை கொண்டு முகம் முழுவதும் பவுடர் அடித்தவள் சிறு குழந்தை போல் அழகாக மை தீட்ட நிஜமாலுமே வளர்ந்த குழந்தை போல் இருந்தான் நிரஞ்சன்.


கீழே இருந்த மகேஸ்வரி, மணி எட்டு ஆகியும் மகனும் மருமகளும் கீழே வராததால் தானே மேலே சென்று பார்த்துவிடுவோம் என்று மேலே வந்தவர் அறைக்கதவை திறக்க சாத்தப்படாமல் இருந்த கதவு திறந்துகொண்டது. அங்கு மகன் இருந்த கோலம் கண்டு வாய்விட்டு நகைத்தார்.


அவரது சிரிப்பில் தூக்கம் கலைந்தவன் எழுந்து அமர திடீரென தன் தாய் தன்னை பார்த்து நகைக்கவும், குழம்பிப் போனான்.


அவருக்கு இதெல்லாம் தனது மருமகளின் கை காரியம்தான் என்று புரிந்து கொண்டவர் அவனிடம் எதுவும் கூறாமல் அதே புன்னகையுடன் கீழே சென்று விட்டார்.


ரஞ்சனுக்குத்தான் அவர் எதற்கு வந்தார் எதற்கு சிரித்தார் என்று ஒன்றும் புரியாமல் திருதிருவென விழித்தவன் அங்கு அவனது மனைவியும் அவனைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தாள்.


ஒன்றும் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தவனிடம் அவன் விழிப்பதை கண்டு கண்ணாடியை நீட்ட அதில் தனது முகத்தை பார்த்தவன் அதிர்ந்து போனான். அப்போதே அவனுக்கு தெரிந்து விட்டது இதெல்லாம் மனைவியின் செயல் தான் என்று,


உள்ளுக்குள் அவளது செய்கை கண்டு புன்னகைத்தான். இருந்தாலும் அவளிடம் கோபப்படுவது போல் வெளியில் நடிக்க ஆரம்பித்தான்.


"ஏய்... உனக்கு எவ்வளவு தைரியம் இருந்தால் இந்த மாதிரி செஞ்சு இருப்பே? இப்படித்தான் ரூமை விட்டு வெளியில் தள்ளி கதவை சாத்து கிறாய்? உனக்கு அவ்வளவு தைரியமா? என்று கோபப்படுவது போல் கேட்கவும்,


அவனது கோபத்தில் நிஜமென்று நம்பியவள் முகம் கவலையை தத்தெடுக்க அழுகையில் அவளது கண்கள் சுருங்கவும், அதைக் கண்டு மேலும் பொறுக்காதவன் "ஓய் சும்மா சொன்னேன் அழுகாத..."என்று கூறவும் இவன் என்ன லூசா என்பது போல் ஒரு பார்வை பார்த்தாள்.


"லூசு மாமா.. நான் எதற்கு அழ போகிறேன் கண்ணில் தூசி விழுந்து விட்டது"என்று அவளது காலை வாரினாள்.


சரி அதிருக்கட்டும் எதுக்கு என்னை "மாமானு கூப்பிடுற..." என்று அவன் கேட்டதற்கு தயங்காமல் புருஷனை அப்படித்தான் கூப்பிடுவார்கள் நான் கீழே போகிறேன் என்றவாறு கீழே சென்றாள்.


அவள் பதிலில் உச்சி குளிர்ந்து போனான் நிரஞ்சன். தானும் குளித்துமுடித்து கீழே சென்றவனுக்கு டீயை கொடுத்த மகேஸ்வரி அவன் காலையிலிருந்து நிலைமை கண்டு மீண்டும் சிரிக்க ஆரம்பித்துவிட்டார்.


அவரை முறைத்தவாறே, டீயை குடிக்க ஆரம்பித்தவன் மனதிற்குள், அன்னை எவ்வளவு வருடங்களுக்கு பிறகு மனம் விட்டு சிரிக்கிறார். இதற்கெல்லாம் காரணம் தன் மனைவி தானே என்று கண்களில் மையலுடன் அவளை பார்க்கவும், அவன் பார்வை புரியாத வெண்மதி தனது பாட்டியிடம் தீவிர விவாதத்தில் ஈடுபட்டாள்.


அவள் பாட்டியிடம் என்ன கேட்டால் என்பது விளங்கவில்லை. எனினும், பாட்டி இறுதியாக முடியாது என்று கூறவும் கண்களில் கண்ணீருடன் மேலும் கூற போனவளை தடுத்து நிறுத்தினான் நிரஞ்சன்.


டீயை குடித்து முடித்து அருகில் இருந்த டீபாயில் வைத்தவன் "வெண்மதி..."என்ற அழைப்புடன் மனைவியிடம் வந்தான்.


"என்னாச்சு? ஏன் அழுகிறாய்" என்று கேட்கவும், அழுகையின் அவன் மார்பில் சாய்ந்தபடி "இந்தப் பாட்டி நம்ம வீட்ல இருக்காதா... அப்புறம் என் ஆடு, கோழி, எரும மாடெல்லாம் இங்க கொண்டு வர முடியாது சொல்லுது எனக்கு ரொம்ப அழுகையா இருக்கு மாமா"என்று கூறவும்,


அவள் உரிமையாக தன்னிடம் பழகுவதில், ஆனந்தம் கொண்டவன் "இவ்வளவுதானா..." என்றவாரே "நீ கவலைப்படாத பாட்டியும், உன்னுடைய அந்த மற்ற உயிரினங்களும் இங்கேதான் இருப்பார்கள்"என்று கூறவும், சந்தோஷத்தில் அவனது கன்னத்தில் முத்தமிட்டாள்.


சுற்றியிருந்த பாட்டிக்கும், மகேஸ்வரி அம்மாளுக்கும் அவர்களின் நிலை கண்டு வெட்கமாகி போகியது.


இருவரும் வாழ்வில் இணைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தவர்கள் அதே புன்னகையுடன்"வெண்மதி நீதான் இன்று சமைக்க வேண்டும்"எனக் கூறவும், திகைத்துப் போனான் நிரஞ்சன்.


தொடரும்....
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 11:


"இன்று நீ தானம்மா... சமைக்க வேண்டும். இது நம் குடும்பத்தின் வழக்கம். வீட்டிற்கும் வரும் முதல் மருமகள் என்றென்றும் அனைவரின் மனதிலும் நிலைத்து நிற்பதற்காக செய்யும் ஏற்பாடுதான் இந்த சமையல்"


"ஏன் அத்தை... ஒருவேளை சமையல் நல்லா இல்லை என்றால் அந்த மருமகள் கெட்டவள் என்று அர்த்தமா..."என்று தனக்கு சமைக்கத் தெரியாததை மறைமுகமாக கூறினால் தனது மாமியாரிடம்.


ஆனால் இதற்கெல்லாம் கவலைப்படும் ஆள் மகேஷ்வரியா?


"ஆமாம் மருமகளே... கிட்டத்தட்ட அப்படித்தான். சமையல் என்பது வெறும் உணவு மட்டுமல்ல. அதில் நம் அன்பையும் சரிவிகிதமாக கலந்து கொடுக்க வேண்டும். அப்போதுதான் அந்த உணவில் ருசியுடன் கூடிய அன்பும் கிடைக்கும்"


அதுமட்டுமில்லை மருமகளே..."இப்போதுள்ள பெண்கள் எல்லாம் சமைக்கிறார்கள் தான்... ஆனால், அதில் அன்பு, ஒருவிதமான பாசம் எல்லாம் குறைந்து கொண்டே வருகிறது.நாங்கள் வாழ்ந்த காலத்தில் எல்லாம் கணவனுக்கு உணவு பரிமாறும்போது அவரது முகத்தைப் பார்த்து உணர்வுகளை உள்வாங்கிக் கொண்டு பார்த்து பார்த்து பரிமாறுவதில் அவ்வளவு அலாதி சுகம். ஆனால் இப்போது உள்ள பெண்களெல்லாம் சமையலில் அப்படி கிடையாது."


அதற்காக அனைத்துப் பெண்களையும் அப்படி கூறிவிடமுடியாது.... ஏனெனில், சில பெண்கள் இப்போதும் அப்படி கணவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறுகிறார்கள் தான்மா.



ஆனால் சில பொண்ணுங்க கையில் ஒரு பக்கம் செல்போன், இல்லாட்டி டிவி பாக்குறேன் பரிமாறுவதில் அங்கு கவனம் சிதறும் போது சாப்பிடுபவர் மனநிலையும் மாறுகிறது. இதனால், அவருக்கு உணவு உண்ணுவதை தவிர்க்க ஆரம்பித்து விடுகிறார்.


ஆதலால், "நீ இந்த மகேஸ்வரியின் மருமகள். அத்தோடு நீயும் கிராமத்து பொண்ணு... உனக்கு அன்பு, பண்பு இதெல்லாம் சொல்லித் தரவேண்டிய அவசியமில்லை. என் மருமகள் கற்பூரம் மாதிரி கப்பென்று பத்தி கொள்வாள் என்று நினைக்கிறேன்"என்று சமையலைப் பத்தி பெரிய பாடமே எடுத்தார் தனது மருமகளுக்கு மகேஸ்வரி.



அவர் கூறியதைக் கேட்டு மலைத்து போய் விட்டாள் வெண்மதி. பின் அவர்கள் குடும்பத்தில் இருப்பதே பாட்டி பேத்தி இருவர் மட்டும்தான்... அதனால் எப்பொழுதும் சமையல் வேலையை பாட்டி மட்டும் தான் பார்த்துக் கொள்வார்.



இப்போது திடீரென வென்மதியை சொல்லவும், மாமியாரிடம் சமைக்க தெரியவில்லை என்றால் பெரிய அசிங்கமாகிவிடும் என பயந்தவள் அவரிடம் கெத்தாக"நான் சமைக்கிறேன் அத்தை"என்றவாறு சமையலறை நோக்கி சென்றாள்.


ஆனால், அவளுக்கு தெரியவில்லை. மகேஸ்வரி மற்ற மாமியார்களை போன்று கொடுமையாயணவர் அல்ல என்று.


சமையல் அறைக்குள் சென்றாள் மருமகளிடம்,"அம்மாடி வெண்மதி வீட்டுக்கு வந்த மருமகள் தான் முதல் நாளன்று சமைக்க வேண்டும் அம்மா. நீ உனக்கு தெரிந்த இனிப்பு வகைகள் ஏதாவது செய்தால் போதும்"என்று கூறினார் மகேஸ்வரி.





சரிங்க அத்தை... நான் போய் சமையல் வேலையை கவனிக்கிறேன். அத்தை... நீங்கள் பார்க்க மிகவும் நல்லவராக இருக்கிறீர்கள். அதனால் முதல் சமையலை நான் என் கணவனுக்கு, பரிமாறி அவர் நன்றாக இருந்தாள் பின்பு உங்களுக்கு பரிமாறுகிறேன் என்று கூறி அவளை ஒரு ஜோடி கண்கள் முறைக்க, அதை கண்டு கொள்ளாதது சமையலறைக்குள் சென்றாள்.





"பாத்தியாடா கண்ணா... மருமக பொண்ணுக்கு என் மேல எவ்வளவு பாசம் என்று"என்று கூறிய தாயை முறைத்தவன் அவங்க டேபிலில் இருந்த கட்டையை பாவமாக பார்த்தான்.


அந்தக் கட்டை வேறொன்றுமில்லை. அதுதான் மகேஸ்வரி கொண்டு வந்து கொடுத்த அல்வா. அத்தோடு, நிரஞ்சன் சுவற்றை உடைத்த அதே அல்வாதான் அது.


"அடேய்... நிரஞ்சன் உன்னை பெற்றதும் சரியில்லை. கட்டியதும் சரியில்லை. அப்போ, இவளுக்காக பரிதாபப்பட்ட அந்த துரதிர்ஷ்டசாலி நான் தானா... இனி வாழ்நாள் முழுக்க நல்ல சாப்பாடு சாப்பிட முடியாதா..."என்று புலம்பியவாறு தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான்.


ஒருவேளை வாயை திறந்து கூறலாம் என்றாலும், இந்த அல்வா கட்டையை பொசுக்குன்னு தலையில தூக்கி போட்டா... அப்புறம் எனக்கு தான் ஒரு டாக்டர் வைத்தியம் பார்க்கணும்... என்று புலம்பியவாறு அமர்ந்திருந்தான்.



சமையலறைக்குள் சென்ற வெண்மதி கோ அவர் இனிப்பு வகை மட்டும் செய்தால் போதும் என்றதும் வயிற்றில் பால் வார்த்தது போல இருந்தது.


"தேங்க்ஸ் மாமியாரே"என்று மனதிற்குள் மாமியாருக்கு நன்றி சொல்ல சமையல் வேலைகளை ஆரம்பித்தாள்.



"சரி... நாம கேசரி கிண்ட ஆரம்பிப்போம். அதைத் தின்று விட்டால், இவர்களுக்கெல்லாம் மதிய உணவு என் கையால் தான் சமைக்க வேண்டும்"என்று பேசியவாறு சமையல் வேலையை ஆரம்பித்தாள்.


அவளுக்கு இது தான் முதல் சமையல் என்பதால், கேசரி எப்படி கிண்ட வேண்டும் என்று தெரியாமல் திருதிருவென விழித்தாள்.


"சரி போ... நான் செய்வதுதான் கேசரி என்றவாரே..."அடுப்பில் பாத்திரத்தை வைத்து அதில் பாலை தூக்கி ஊற்றினாள். இப்போ எதுக்கு என்ன மாவு போடலாம்... இதுதான் சரியாக இருக்குமென்று அரிசி மாவையும், கோதுமை மாவையும், கடலை மாவு என அனைத்தையும் ஒன்று கொட்டி பாலைக் கலந்தால்.


ஓகே...அப்புறம் படிக்கிற வாசகர்களுக்கு எல்லாம் எப்படி கேசரி செய்வது என்று சொல்லி தாரேன். செஞ்சு விட்டு என்னோட அக்கவுண்ட்ல ஒரு அம்பது ஆயிரம் பணத்தை எல்லாரும் போட்டு விட்டு விடுங்கள்.


ஓகே... இப்போ அடுத்த சேர்ப்போம். எப்போ இதில் கொஞ்சம் மிளகாய் தூளை, கொஞ்சம் உப்பும் (இரண்டும் ஒரு கையளவு தான்) அப்புறம் இங்க இருக்கிற. மல்லித்தூள், மஞ்சத்தூள், எல்லாத்தையும் ஒண்ணா கலந்து ஒன்றாக சேர்த்து நல்ல விதமாக சேர்க்கவும்.


பிறகு, கொஞ்சம் கடுகு, சீரகம், பிரிட்ஜில் இருக்கிற காய்கறியில் கொஞ்சம் கொஞ்சம், பழங்கள் கொஞ்சம் போட்டு நல்ல கிண்டி அதோட கொஞ்சம் ஒரு கரண்டி சீனி போடுங்க.... இதோ கமகமக்கும் கேசரி தயார்...


ஐ... சிரிக்கிற வேலை ரொம்ப ஈசியாக இருக்கு... நானே சாம்பார் வைத்து விடுகிறேன் என்றவள் வஞ்சகமில்லாது மகேஸ்வரி வைத்திருந்த அனைத்து காய்களையும் ஒன்றாகக் கொட்டி, என்னென்னமோ சேர்த்து சாம்பாரையும் வைத்துவிட்டாள். பருப்பு இல்லாமல்...


சமையல் அறைக்குள் சென்றவள் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு,"புடவையை இழுத்து சொருகியவாறு வெளியில் வந்தவள் எல்லோரும் சாப்பிட வாருங்கள்... அத்தோடு நான் உங்களுக்கு எல்லாம். கேசரி, சாம்பார், சட்னி, இட்லி எல்லாம் ரெடி செய்து வைத்துள்ளேன்.



அத்தம்மா...நீங்க சொல்றது மாதிரியே எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுங்கள் நான் பரிமாற ஆரம்பிக்கிறேன் என்று உணவை கொண்டுவந்து அடுக்கினாள்.


"அடியே கூறுகெட்ட சிறுக்கி... ஒரு மணி நேரத்தில் இவ்வளவு சமைத்து விட்டாயா..."என்று ஆச்சரியமாக கேட்டவாறே தனது மோவாயை இடித்து கொண்டார் வள்ளி பாட்டி...


ரஞ்சன் பயந்து கொண்டே சென்று அமர்ந்தான். அவள் கொண்டு வந்த அடுக்கியது எல்லாம் கண்டு அங்கேயே மயங்கி விட்டான்.



தொடரும்...



நாளை எனக்கு தேர்வுகள் ஆரம்பிக்கின்றனர். அதற்கு இடையிலும் உங்களுக்காக கொடுத்துள்ளேன். தயவுசெய்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.



 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 12:




"அத்தை... நீங்கள் சொன்னது மாதிரியே... நான் சமைத்து விட்டேன். அதிலும், நான் முதன் முதலாக கேசரியும், சாம்பாரும் வைத்துள்ளேன். சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்" எல்லாம் உங்களுக்காக மட்டும் தான் அத்தை. சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க...

மருமகள் பேச்சில் உச்சி குளிர்ந்து போன மகேஸ்வரியும் அவளை பெருமையாக மனதிற்குள் என் மருமகள் எவ்வளவு திறமைசாலி என்று சொல்லிக் கொண்டவர்.



மகனிடம் திரும்பி "டேய் கண்ணா... பாத்தியாடா என் மருமகளும் முதன்முதலில் கேசரி கிண்டி உள்ளாள்"சூப்பர் இல்ல... அவர் முதன்முதலாக உனக்காகச் சமைத்து உள்ளாள் என்று பெருமையாக பேசிக்கொண்டிருந்தவருக்கு அப்போதுதான் அவள் முதன் முதலாக சமைத்து உள்ளேன், என்று சொன்னது நினைவு வரவும், அதிர்ந்த படி அவளை நோக்கி




'என்னது.... மருமகளே நீ இப்பொழுது தான் முதன்முதலில் சமைக்கிறாயா...?'என்று சந்தேகத்தோடு வினவாவும்,

ஆமாம் அத்தை. அதுவும் உங்களுக்காக கேசரியில் உப்பு சற்று தூக்கலாகவே உள்ளது. நீங்களும், மாமாவும், அப்புறம் கிளவி நீயும் தான் சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள். எனக்கு பப்ளிசிட்டி எல்லாம் ரொம்ப பிடிக்காது. இருந்தாலும் நீங்கள் என்னை பாராட்டினாள் வேண்டாம் என்று சொல்ல மாட்டேன்.


அவள் முதன்முதலாக சமைத்து உள்ளாள் என்பதிலேயே அதிர்ந்து போயிருந்த மொத்த குடும்பமும், கேசரியில் உப்பு என்றதும் திகைத்துப் போயினர்.




திகைப்பில் இருந்து முதலில் மீண்ட மகேஸ்வரி "என்னது? என்ன மருமகளே சொல்ற... கேசரியில் உப்பா"என்று அதிர்ந்து வினாவினார்.

என்ன அத்தை இத்தனை வருடங்களாக சமைக்கிறார்கள். இது கூட உங்களுக்கு தெரியாதா? சரி சரி வாங்க அதான் இனிமே நான் வந்துட்டேன் இல்ல.... இனிமே உங்களுக்கு நாக்கிற்கு ருசியா சமைத்துப் போட்டு அசத்தி விடுகிறேன்.



இனிமே உங்களுக்கு என்ன என்ன சாப்பாடு வேணும்னு என் கிட்ட சொல்லிடுங்க, நான் உங்களுக்கு சமைத்து போட்டு விட்டுதான் மறுவேலை பார்ப்பேன்.


இதுக்காக நீங்க, எனக்கு சிலை எல்லாம் வைக்க வேண்டாம் அத்தையம்மா.


மகேஸ்வரியோ மனதிற்குள்,"ரவா இல்லாமல் உப்பு மட்டும் போட்டு கேசரி செஞ்ச உனக்கு நான் உயிரோடு இருந்தால் அம்மா தாயே... அகிலாண்டேஸ்வரி உன் கோவிலுக்கு வந்து என் மகனை மொட்டை போட வைக்கிறேன்... நீதான் எனக்கு எதுவும் ஆகிவிடாது காப்பாற்ற வேண்டும்"என்று மானசீகமாக இறைவனிடம் கோரிக்கை வைத்தார்.


மற்றொரு பக்கம், பாட்டியின் நிலைமைதான் சற்று கவலைக்கிடமாக இருந்தது.


"கடவுளே... உனக்கு ஏன் இந்த விபரீத ஆசை?? நான் என்ன அவ்வளவு வயதான கிழவியா..."மிஞ்சிப்போனால் எனக்கு 75 வயது தான் ஆகிறது. இதெல்லாம் ஒரு வயதா... ஏன் என்னை இப்படி அல்பாயுசில் கொல்ல நினைக்கிறாய்... கடவுளே.



சரி...'நீ கூட்டிட்டு போகணும் தான் முடிவெடுத்தே... அதுக்கு நீ என்னை இப்படியா ஒரு நரகத்தில் தள்ளி விடுவாய்... இதுக்குத்தான் என் ஹப்பி(கணவர்) அப்போவே கரெக்டா சொன்னார் என்று தனது வாய்க்கு வந்தபடி புலம்பிக் கொண்டிருந்த பாட்டியை கண்டு,



"ஏய்...கிழவி நான் என்ன உன்னைக் கொலையா பண்ணப்போறேன்... உன்னை சாப்பிட தானே சொன்னேன். அதுக்கு என்னமோ ஓவரா பில்டப் கொடுத்ததோடு அல்லாது,செத்துப்போன உன் புருஷனையும் இப்ப எதுக்கு இங்க இழுத்து விட்டு இருக்க... இதெல்லாம் பத்தாதுனு "ஹப்பியாம் ஹப்பி..."இந்தக் கொடுமை எல்லாம் பார்க்காமல் அந்த கிழவன் போய் சேர்ந்துட்டார்.



சரி நானும் போனா போகிறது... கிழவி லூசுத்தனமாக பேசுகிறது. விட்டு விடலாம் என்று பார்த்தால் என் சமையலை நீ குறை கூறுகிறாயா...? என்ற திட்டவும்,



பாட்டியோ"என்னை பார்த்து கிழவி என்று கூறியதோடு மட்டுமல்லாது, என்னைய பார்த்தே நீ லூசு னு வேற சொல்லி திட்டுவடி நீ..."


உனக்கு வர வர திமிரு அதிகமாகிவிட்டது. உனக்கெல்லாம் என் அருமை இப்ப புரியாது. மாமியார் என்ற ஒருத்தி, வந்த பிறகு உன்னை கொடுமைப் படுத்தும் போதுதான் என் அருமை எல்லாம் உனக்கு புரியும். அதுவரை, நீ என்னை இப்படி தான் பேசுவாய்.உனக்கு வர்ற மாமியார் உன்னை நல்ல கொடுமைப்படுத்த வேண்டும். அப்போதுதான் நீ எல்லாம் அடங்கு வாய் என்று தனது வாய்க்கு வந்தபடி திட்ட ஆரம்பித்துவிட்டார்.



பாட்டி திட்ட ஆரம்பத்தில் மதியும்,தனக்கு திருமணம் ஆனதை மறந்துவிட்டு வீட்டில் இருக்கும்போது பாட்டியிடம் எப்படி பேசுவாவளோ அதேபோன்று, அவள் மாமியார் வீட்டில் வைத்து, தனது வருங்கால மாமியாரை எப்படி எல்லாம் திட்டுவாளோ, அப்படியே திட்ட ஆரம்பித்துவிட்டாள்.


அவள் உணவு சமைத்து வைத்ததில் , குழம்பிப்போன மகேஸ்வரியும் நிரஞ்சனும் அவள் திட்ட ஆரம்பித்ததில் இருவரின் முகமும் இஞ்சி தின்ன குரங்கு போன்று மாறி விட்டது.




"ஏய் கிழவி... நான் உன்கிட்ட அப்பவே சொல்லிட்டேன். எனக்கு வரப் போகிற மாமியார் உன்னை மாதிரி இருந்தால், அவர்களை அந்த நிமிடமே நான் ஒரு பானை சோற்றில் வைத்து முக்கி எடுத்து விடுவேன்"


உன்னை செய்வதுபோல அவர்களையும் செய்து விடுவேன். இந்த மதி அழகிலும், அறிவிலும் என்னை மிஞ்ச யார் இருக்கிறார்கள்...நீ உன் வேலையை அங்கேயும் காட்ட வேண்டும் என்று நினைத்தால் எனது மாமியாரை போன்று உனக்கும் ஒரு பெரிய ஆப்பு தான் கிழவி



ஹாஹா உனக்கும் நிறைய சோறு போட்டு, உன் வயிறு ஏற்கனவே பானை போன்று தான் இருக்கிறது. இதில் மேலும் நான் உனக்கு சோறு போட்டால் உன் நிலமை என்னாகும்... நீ பாக்குறதுக்கு அப்படியே ரோடு ரோலர் போல இருப்பே... நீ சாதாரணமாகவே அப்படித்தான் இருக்கிறாய். இதில் மேலயும் நான் உனக்கு சோறு போட்டால் மொத்தமாக வெடித்து விடுவாய் கிழவி... அதுக்கப்புறம் உன்னை நான் தேடி தேடித்தான் எடுக்க வேண்டும் அதை நினைத்தால் சிரிப்பாக வருகிறது என்று கூறியதோடு மட்டுமல்லாமல் விழுந்து விழுந்து சிரிக்கும் வெண்மதியை கண்டு கோபத்தின் உச்சிக்கே சென்றார் பாட்டி.



அடியே... உன் மாமியாருக்கு நீ சோறு போடும் போது நான் உன் மாமியார் சாப்பிடற சாப்பாட்டுல... ஒரு கிலோ மிளகாய் தூள் அள்ளிப் போட்டு விடுவேன்.


அப்போ நீ என்னடி செய்வே... என்னை பார்த்தால் ரோடு ரோலர் போன்று இருக்கிறதா.... உன்னை பார்த்தால் தான் குண்டு சட்டி மாதிரி இருக்கிறாய்... நீ என்னை சொல்கிறாயா...?



என்னை பார்த்து என்ன வார்த்தை சொல்லிவிட்டாய் கிழவி உன்னை என்ன செய்கிறேன் பார் என்றவாறு அவர் அருகில் சென்றவள் நொடியும் தாமதியாது அவரது முடியைப் பிடித்து ஆட்டு ஆட்டு என்று ஆட்டி வைத்து விட்டாள். இள ரத்தம் பொங்கி எழும் போது நமது பாட்டி மட்டும் அமைதியாக இருப்பாரா என்ன... அவரும் பொறுத்தது போதும் என்று பொங்கி விட்டார்.



இருவரும் குடுமிப்பிடி சண்டை போடுவதைக் கண்டு திகைத்து போய் நின்றனர் தாயும் மகனும்.




அசுரன் ஆவான்...


உங்களுக்காக ud type kastapattu panni கொடுத்தேன் pls pa comments
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 13:



"என் தலைய பிடிச்சு இழுக்கிற... என் தலையை பிடித்து இழுத்தது போல் உன் புருஷனின் தலையையும் பிடித்து இழுத்து விடாதே... அதுக்கப்புறம் அவன் என்னை முழுப் பைத்தியம் என்று சொல்லி மறுபடியும் என் தலையில் வைத்து கட்டி விட்டு போய் விட போகிறான் அந்த வீணாப்போன கடங்காரன் உன் புருஷன்"சொல்றதை ஞாபகம் வச்சுக்க டி... என்று பாட்டி கூறவும்,



"ஏய்... கிழவி அவன் மட்டும் அப்படி சொன்னான் என்றால் உன்னோடு சேர்த்து அவனையும் போட்டு தள்ளி விடுவேன்... அதுக்கப்புறம் இதுக்கு என் மாமியார் எதுத்து நின்னா அவங்களையும் விட மாட்டேன் எல்லோரையும் போட்டு தள்ளி விடுவேன்"ஹாஹா அப்போ நீ என்ன செய்வாய் கிழவி என்று வெடி சிரிப்பு சிரித்தாள்.



மகேஸ்வரியோ மருமகள் கூறியதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றுவிட்டார். மெதுவாக மகனின் காதில் கிசுகிசுக்க ஆரம்பித்தார்.



'அய்யோ... கண்ணா என்னடா இது நமக்கு வந்த சோதனை. முன்னாடி கேசரி உப்பு போட்டேன் என்று சொன்னாள். அதிலிருந்து வெளிவருவதற்குள், அடுத்து இப்படி பேசுறா இவ... அய்யோ என்ற மகனே நீ மட்டும் என் பக்கத்தில் எப்போதும் வந்து விடாதே... உனக்கு சப்போர்ட் பண்ணினால் அந்த மருமக பொண்ணு என்னையும் போட்டு தள்ளி விட போகிறாள்"என்று பாசத்தில் ஆரம்பித்தது கெஞ்சலில் முடித்தார் மகேஸ்வரி.



அவனுமே வெண்மதி பேசியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றவன் தாய் பேசவும் அதற்கு செவி மடுத்தவன் ஆரம்பத்தில் தாய் பேசவும், தன் மீது அவருக்கு எவ்வளவு பாசம் என்று மனதிற்குள் நினைத்தவன் அவர் இறுதியாக கூறியதை கேட்டு உச்சகட்ட அதிர்ச்சியானான்.



இவரை என்ன செய்தால் தகும் என்று சுற்றும் முற்றும் நோட்ட மிட்டவன் அங்கிருந்த டைனிங் டேபிளில் சாப்பாடு இருக்கவும், திடீரென யோசனை ஒன்று உதயமானது.


தாயை ஏறெடுத்து பார்த்தவன்"மன்னித்து விடுங்கள் அம்மா... இதை விட்டால் எனக்கு வேறு வழி இல்லை. இந்த மோசமான சாப்பாடை சாப்பிடுவதற்கு பதிலாக நான் உங்களை திட்டுவது எவ்வளவோ மேல்... சாரி மதர் நாலு பேரு நல்லா இருக்க ஒருத்தரை பனையம் வைப்பதில் தவறே இல்லை..."என்று மனதிற்குள் நொடியில் திட்டத்தை தயார் செய்தவன்,



"அம்மா..."உங்களுக்கு எவ்வளவு தைரியம் இருந்த என்ன பார்த்து இப்படி ஒரு வார்த்தையை சொல்லி இருப்பீங்க... என்னால் உங்களை இந்த விஷயத்தில் மன்னிக்கவே முடியாது. "


"ஏனம்மா... என்னை பார்த்து இப்படி ஒரு வார்த்தை சொன்னீர்கள். ஆயிரம் தான் இருந்தாலும் என்னுடைய மனைவி. அவள் முன்பாக வைத்து நீங்கள் என்னை இப்படி சொல்லி இருக்கக் கூடாது"



"நீங்கள் எல்லாம் அம்மாவா... இதோ இந்த வயிற்றில் தானே என்னை பெற்றீர்கள் (காஞ்சனா ராகவா லாரன்ஸ் கோவை சரளாவிடம் கேட்டதை நினைவில் கொள்ளுங்கள் மக்களே அதனை கற்பனை பண்ணிக் கொண்டு இதைப்படிங்க.. அப்பதான் உங்களுக்கு கொஞ்சம் காமெடியாக இருக்கும்)இருந்தாலும் நீங்க இப்படி ஒரு வார்த்தை சொல்லி இருக்கக் கூடாது என்று வராத கண்ணீரை துடைத்துக் கொண்டவன் அங்கிருந்து நகரப் பார்க்கவும்,



அவன் பேச ஆரம்பித்த போதுதான் பாட்டிக்கும் பேத்திக்கும் இது தங்கள் வீடு அல்ல... என்பதே நினைவிற்கு வந்தது.


வெண்மதியயோ மனதிற்குள்"ஐயையோ இந்தக் கிழவி கூட எப்பவும் சண்டை போடுறது மாதிரி எப்படி எல்லாம் பேசுவது மாதிரி இப்படி மாமியாரை திட்டிவிட்டேன். போதாக்குறைக்கு என் புருஷனையும் மட்டமாக திட்டி விட்டேனே... இப்போ நான் என்ன செய்வது"என்று மனதிற்குள் பேசியவள் வெளியில் முகத்தை பால் வடியும் முகமாக நொடியில் மாற்றிக் கொண்டாள்.



வள்ளி பாட்டியும் கிட்டத்தட்ட அதே நிலைமையில்தான் இருந்தார்.



"அடக்கடவுளே... இந்தக் கூறுகெட்ட சிரிக்கி கிட்ட எப்பவும் பேசுறது மாதிரி இப்படி பேசி விட்டேனே... இந்த நிரஞ்சன் தம்பி மகேஸ்வரியும் நம்மளைப் போட்டுத் தள்ளி விட்டாள் இளம் வயதிலேயே நான் சாக வேண்டுமா..."என்று மனதிற்குள் நொந்தவாறு நின்று கொண்டவர் தன் முகத்தை பால் வழியும் முகமாக மாற்றிக்கொண்டார்.



ஆளாளுக்கு மனதிற்குள் யோசித்தவாறு நின்று கொண்டிருக்கும்போதே நிரஞ்சன் பேசுவதைக் கேட்டு அதிர்ந்து போய் நின்றனர்.



மகேஸ்வரியோ "நான் என்னடா மகனே" உன்னை பேசினேன் என்று யோசித்தவாறு நிற்க, பாட்டியும் வெண்மதியும் அப்படி என்ன தனது மாமியார் கணவனை கூறிவிட்டார் என்றவாறு பார்த்துக் கொண்டு நின்றனர். சட்டென்று பேச்சை மாற்றினாள் ரஞ்சன்.



"என்ன பெண் இவள் இப்படி வாய் அடிக்கிறாள். இவள் கூட நான் காலம் முழுவதும் எப்படி வாழ முடியும். கொஞ்சம் கூட வாய்கூசாமல் கட்டிய கணவனை போட்டு தள்ளி விடுவேன் என்கிறாள் இவளை நம்பி எப்படி நான் பக்கத்தில் படுப்பது"இதுக்கெல்லாம் காரணம் நீங்கள்தான் அம்மா... என்று தாயை சாடினான்.


மனதிற்குள்"மன்னித்துவிடு வெண்மதி. இப்படி பேசினால் தான் நீ உன் சமையலை மறந்து விடுவாய்... உன்னை கஷ்ட படுத்துவதற்காக பேசவில்லை மா என்று மனதிற்குள் மானசீகமாக மன்னிப்பு வேண்டினான்"அனைவரும் அமைதியாக நிற்பதைப் பார்த்து,





"ஸ் அப்பாடா... எல்லோரும் யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள் நாம் இங்கிருந்து தப்பித்து விட வேண்டியதுதான்"என்று மெதுவாக நகர்ந்தவனை


அங்கிருந்து நகரப் போனவனை,"என்னங்க...
என்ற வெண்மதியின் குரல் அவன் நடையை தடை செய்தது.



"மாமா... நான் சும்மா விளையாட்டுக்கு தான் எல்லாவற்றையும் பேசினேன். நீங்க தப்பா எடுத்துக்காதீங்க மாமா. என் மனம் மிகவும் காயப்பட்டு விடும்"



நான் இப்படி உங்களை பேசியதற்காக என்னை வெறுத்து விடுவீர்களா... அப்படி மட்டும் செய்து விடாதீர்கள். நான் என் பாட்டியிடம் எப்பொழுதுமே அப்படிதான் பேசுவேன்.


ஏனெனில், நான் சின்ன வயசாக இருக்கும்போது என் ஆத்தாவும்,ஐய்யாவும் என்னை இந்த உலகத்தில் தனியாக விட்டுவிட்டு சென்றுவிட்டார்கள். அப்போது எனக்கு வயது வெறும் மூன்று தான். சின்ன வயதில், எல்லோரும் அம்மா அப்பா கூட சந்தோஷமாக இருப்பார்கள். ஆனால் நான் மட்டும் தனியாக இருப்பேன். அப்போலாம் என் கிழவி மட்டும்தான் என் பக்கத்திலேயே அமர்ந்து என் பெற்றோர் நினைவு வரவிடாமல் என்னை பார்த்துக் கொள்ளும்.


நீங்க பெரிய படிப்பு படிச்சவரு, உங்க படிப்புக்கு பக்கத்துல எல்லாம் நான் நிற்க கூட தகுதி இல்லை தான். நீங்கள் சொன்னது போன்று நான் உங்களுக்கு தகுதி இல்லாதவள் தான்...


ஆனால், நான் சிறு வயதில் பள்ளிக்கு செல்லும் பொழுது எல்லோரும் அவங்க அப்பா அம்மா கூட வருவாங்க...என்னதான் கிழவி என்னை பாசமாக பார்த்துக் கொண்டாலும், 3 வயது குழந்தைக்கு தாயின் இடத்தை எவராலும் நிவர்த்தி செய்ய இயலாது.



அதைப் பார்த்து நான் ஏங்கி ஏங்கியே காய்ச்சல் வந்து விடவும், பாவம் என் அப்பத்தா மிகவும் பயந்து போய் விட்டார்கள்.


எனக்கு இப்பவும் அது ஞாபகம் இருக்கிறது. நைட் 12 மணிக்கு யாருமே இல்லாதபோது, ஜுரம் எனக்கு ரொம்ப அடிக்க ஆரம்பித்துவிட்டது. அப்போது என் பாட்டி ஒற்றை பெண்மணியாக இருந்து என்னை மருத்துவமனைக்கு நைட்டு பன்னெண்டு மணிக்கு அழைத்துக்கொண்டு சென்றார்கள்.



என்னை சோதித்த டாக்டர்கள் எனக்கு அதிகமாக ஏக்கம் வரவும் தான் இப்படி ஆகிவிட்டது என்று கூறவும், பாவம் என் அப்பத்தா மிகவும் துடித்துப் போய் விட்டார். அப்போ என் பாட்டி அழுத அழுகையை பார்த்து அந்த நிமிடம் முடிவெடுத்தேன்.3 வயது குழந்தையாய் நான் இனி எக்காரணம் கொண்டும் என் பாட்டியை கஷ்டப்படுத்த கூடாது என்பதை,


என் பாட்டியும் என் ஏக்கத்தை புரிந்து கொண்டு, என் பெற்றோரை பரித்த விதியை சபித்தவாறு என்னை பள்ளிக்கூடம் செல்வதையே நிறுத்தி விட்டார்.


நானும், படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், அங்கு போனாள் கண்டிப்பாக மீண்டும் எனக்கு இப்படி ஏதாவது ஆகுமென்று அத்தோடு என்னுடைய படிப்பை நிறுத்திவிட்டேன்.



அதன்பிறகு, என் பாட்டி வீட்டில் உள்ள ஆடு, மாடு, கோழி ஆகியவை என்னுடைய சொந்தமாக மாறியது. அதன் பிறகு நான் வளர வளர எனது ஏக்கத்தை புரிந்துகொண்ட எனது அப்பத்தா வெறும் பாசம் காட்டினாள் நான் சிறிது நேரம் மட்டும் சிரிப்பேன். மறுபடியும் அப்பா அம்மா நினைவு வந்துவிடும். அதுக்கப்புறம் மறுபடியும் அழுவேன் அதனால் அப்பத்தா என்னை கொஞ்சம் கொஞ்சமாக சீண்ட ஆரம்பித்தார்.நானும் என் பாட்டியிடம் பழையதை எல்லாம் மறந்துவிட்டு போட்டி போடுவேன். வேண்டுமென்றே எனது அப்பத்தாவை வம்பு இருப்பதற்காக, பாட்டி என்று கூற ஆரம்பித்தேன். பிறகு பெரிய பெண்ணாக ஆக கிளவி என்று வம்பு இழுப்பேன்.


நானும் எனது அப்பத்தாவும் வீட்டில் இப்படித்தான் பேசிக்கொள்வோம். அதையே நினைத்து நமக்கு திருமணமான தையும் மறந்து நான் இப்படி பேசி விட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள் மாமா... தயவுசெய்து வெறுத்து விடாதீர்கள் என்று கண்களில் கண்ணீர் வழிய கணவனிடம் கெஞ்சினாள்.


அவள் பேச பேச துடித்துப் போய் விட்டனர் மூவரும். இவ்வளவு நாளும் இவள் வெறும் குறும்புக்காரி என்று நினைத்துக் கொண்டிருக்க, அவள் மனதில் உள்ள அனைத்து விஷயங்களையும் அவள் வாய்வழியாக கேட்க மெய்யாலுமே பதறிப்போனார்.



அவளிடம் வேகமாக வந்தவன்"மன்னித்துவிடு கண்ணம்மா... உன் மாமா விளையாட்டுக்கு தான் சொன்னேன். ஆனால் நீ இப்படி இதை சீரியஸாய் எடுத்துக் கொள்வாய் என்று எண்ணவில்லை. தயவு செய்து மன்னித்து விடுமா"


நீ எதற்கும் கவலை கொள்ளாதே... இதோ என் அம்மாவும் உன் அம்மாதான் என்று தாயை நோக்கி கை நீட்டவும்,



மகேஸ்வரியும் மகனின் மனதை புரிந்து கொண்டவர் வேகமாக அவனது அருகில் வந்தவர் "கண்ணா சொல்வது சரிதான் கண்ணம்மா... நீ இனிமே எனது மகள் தான். என்னை உன் அன்னை போல் நினைத்துக் கொள்"என்று கட்டி அணைக்க,


தானும் இந்த குடும்பத்தில் ஒருவராக இருக்க மாட்டோமா என்ற ஏக்கத்தோடு பாட்டி பார்க்க, அவர் ஏக்கத்தை புரிந்து கொண்டவன் கையை நீட்டவும் அனைவரும் மொத்தமாக அணைத்துககொண்டு ஒரு குடும்பமாக சில நிமிடங்கள் அந்த அனுபவத்தை மனதிற்குள் ரசித்தனர்.



"ஐயோ..."என்று வெண்மதி பதரவும், என்னாயிற்று வெண்மதி என்று மூவரும் கோரசாக கேட்டனர்.


நான் பேசியதில் நான் சமைத்ததை மறந்து விட்டேன். எல்லோரும் முதலில் வந்து உட்காருங்கள், சாப்பாடு வேறு ஆரப் போகிறது என் கவும், அவ்வளவு நேரமும் வருத்தத்தில் இருந்தவர்கள் இப்போது உணவு உண்ண வரச் சொல்லவும், பீதி ஆகி நின்றனர்.



அனைவரும் எச்சியை விழுங்கியபடி,ஒருவர் முகத்தை ஒருவர் பரிதாபமாக பார்த்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அங்கு செல்ல, மகேஸ்வரி நிரஞ்சனின் காதை கடித்தார்.


"டேய்... மகனே, நான் உன்னை என்னடா சொன்னே... எனக்கு எதுவும் ஞாபகமே வரமாட்டேங்குது"என்று கேட்கவும்,


ஈ என்று இளித்தபடியே,"நீ ஒன்றுமே சொல்லவில்லை அம்மா...எப்படியாவது இந்த சமையலில் இருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக சும்மா சொன்னேன்"என்று சொல்லவும், அவ்வளவு நேரமும் குழப்பத்தில் இருந்தவர் கொலைவெறி ஆனார்.


"மகனே உன்னை வச்சிக்கிறேன் வா" என்று மனதிற்குள் கருகியவாறு சென்று அமர்ந்தவர்,


மூவருக்கும் தட்டை வைத்து பரிமாறிய வெண்மதி அனைவர் தட்டிலும் கேசரியை வைத்தாள்.


"அம்மாடி வெண்மதி..."என் மாமியார் அழைக்கவும்,


"சொல்லுங்கள் அத்தை"இன்னும் கொஞ்சம் கேசரி வேண்டுமா, என்று கேட்க 'இதையே எங்க திங்க போறேன்... இதில் நிறைய வேண்டுமா'என்று மனதிற்குள் கூறியவர்,


நானும் உன் பாட்டியும் வயதானவர்கள். நாங்கள் உணவில் அதிகமாக உப்பு சேர்த்துக் கொண்டால் சக்கரை நோய் வந்துவிடும் நீ உன் கணவனுக்கு பரிமாறு, பாவம் என் மகன் நீ சமைத்ததை சாப்பிட ஆர்வமாக இருக்கிறான் என்று போட்டுக் கொடுத்தார்.


அன்னையை கொலைவெறியோடு நோக்கியவன் தட்டில் இருந்த கேசரியை எதிரியை பார்ப்பது போல் வெறித்துப் பார்த்தான்.






மறக்காம கருத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்...


 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 14:


"மாமா..."இவங்க யாருக்கும் இதை திங்கும் கொடுப்பினை இல்லை... உங்களுக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்"


நான் சமைத்த இந்த உணவில், அதுவும் உங்களுக்காக ஸ்பெஷலாக இந்த கேசரியில் 2 முட்டை சேர்த்து உள்ளேன் மாமா.



"சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்"என்று உணவு பரிமாறியவள் அவன் என்ன சொல்லப் போகிறான் என்று ஆர்வமுடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


"என்னது கேசரியில் முட்டையா..."என வாய் விட்டே கூறிவிட்டான் நிரஞ்சன். அவள் சொன்னதை வைத்தே பீதி அடைந்தவன் அவளிடம்,


"வெண்மதி டார்லிங்"மாமா இத சாப்பிட்டே ஆகணுமா... நமக்கு வேற இப்பத்தான் புதுசா கல்யாணம் ஆச்சு.



இன்னும் வாழ்க்கையில், நாம் ஒன்றை கூட செய்யவே இல்லை. அதற்குள் என் வாழ்க்கையை நான் முடித்துக் கொள்ள வேண்டுமா... இந்த சாப்பாடு எனக்கு மட்டும் தருகிறாயே... இவர்களுக்கு எல்லாம் வேண்டாமா என அன்னையையும் பாட்டியையும் போட்டுக் கொடுத்தான்.


அதெல்லாம் காதில் வாங்காதவள் கஷ்டப்பட்டு சமைத்த உணவை சாப்பிட வேண்டுமா என்று கேட்கவும் கடுப்பாகிவிட்டாள்.



அதில் கணவன் என்று கூட பார்க்காமல்,"யோவ்..."உனக்காக கஷ்டப்பட்டு சமைச்சிருக்கேன் நீயும் அந்த கிழவி மாதிரி ரொம்ப பண்ற... நீ எல்லாம் சொன்னா சாப்பிட மாட்டே என்று மிரட்டினாள்.



பின் அவளாகவே கற்பனை செய்துகொண்டு,"ஓ... இந்த சினிமாவுல எல்லாம் காட்டுவார்களே! பொஞ்சாதி புருஷனுக்கு ஊட்டி விடுற மாதிரி? அதே மாதிரி நான் உனக்கு ஊட்டி விட வேண்டுமா?இதை வாயை திறந்து சொன்னால் உன் வாயில் உள்ள முத்து என்ன கொட்டி விடுமா, சரி நானே உங்களுக்கு ஊட்டி விடுறேன்னு மாமா" என்று பாசமாக கூறியவள் தட்டில் வைத்த (அது என்ன சாப்பாடு எனக்கே தெரியாது. அதப் போய் அந்த வெண்மதி கிட்ட கேட்டா எனக்கும் அந்த சாப்பாடு குடுத்து விடுவாள், அதனால் உங்களுக்கு பிடித்த உணவை நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள் மக்களே) கையில் எடுத்து பிசைந்து அவன் வாய் அருகே கொண்டு சென்றாள்.


"அய்யய்யோ..."சாப்பிடவானு கேட்டதுக்கு "யோவ்"அப்படின்னு கூப்பிடுறா... இந்த லட்சணத்துல நான் மட்டும் இந்த சாப்பாடு வேணாம்னு சொன்னா என்ன பண்ணுவான்னு தெரியலையே மனதிற்குள்ளேயே கவுண்டர் கொடுத்து கொண்டான்.



தப்பிப்பதற்கு சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த மகேஸ்வரியும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள நினைத்தவர்.



"அம்மாடி வெண்மதி... நீ உன் புருஷனுக்கு சாப்பாடு ஊட்டி விடுமா..."


நீங்க புதுசா கல்யாணம் ஆன ஜோடி வேற சின்னஞ்சிறுசுக அப்படி எப்படி இருப்பீங்க, நானும் பாட்டியும் எதற்கு உங்களுக்கு தொந்தரவாக, நாங்கள் ரூமுக்கு போகிறோம் என்று கூறிய மகேஸ்வரி அவள் என்ன பதில் கூறினால் என்று கூறுவதை கூட காதில் வாங்காது,


"வாங்க அத்தை"என்று வள்ளி பாட்டியை அழைத்துக்கொண்டு ரூமிற்கு சென்று கதவை அடைத்துக் கொண்டார்.


"ஏன் மகேஸ்வரி உனக்கு நிரஞ்சன் மீது கொஞ்சம் கூட அன்பே இல்லையா..."என்று வள்ளிப் பாட்டி கேட்கவும்,


"ஏன் அத்தை இப்படி திடீர்னு கேட்கிறீங்க..?"எனக்கு இருக்கிறதே அவன் ஒரே புள்ள தான் என்பதில் மறைமுகமாக எனக்கு இருக்கும் ஒரே குழந்தையை பிடிக்காமல் போகுமா என்று மறைமுகமாக கூறினார்.


"பின்பு ஏன் அவன என் பேத்தி சமைத்த அந்த சாப்பாட சாப்பிட சொல்லி சொன்னே பாவம் தானே அந்த புள்ள..."


இல்லை அத்தை. இனி வெண்மதி தான் இந்த வீட்டில் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க வேண்டும். அவளைப் பொறுத்தவரையில், அந்த உணவு அவளது கணவனுக்காக சமைத்தது. அதை நாம் தடுத்தால் அவள் மனம் வேதனைப்படும்.


'நீ சொல்றது சரிதான் மா இருந்தாலும் பாவம் இல்லையா அந்த புள்ள...'


அய்யோ அத்தை உங்க பேரன் தான், என்கிட்ட கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி வந்து,



"அம்மா... வெண்மதிக்கு இதுதான் முதல் சமையல். அதனால அவள் சமையல் எப்படி இருந்தாலும், நானே அதை முழுவதுமாக சாப்பிடவேண்டும். நீங்கள் வயதானவர் அதனால் நீங்கள் பாட்டியை அழைத்துக்கொண்டு நான் சொல்லும் காரணத்தைக் கூறி அழைத்துக் கொண்டு மாடிக்கு சென்று விடுங்கள்... என்று அவன் திட்டத்தை கூறிவிட்டு சென்றான்"


கண்டிப்பா மதி கொஞ்சம் கொஞ்சமா சமைப்பதற்கு கற்றுக்கொள்வாள் பாட்டி.


அத்தோடு அவளுக்கு இப்போதைக்கு சமைப்பதற்கு என்ன அவசியம், அதுதான் நான் வீட்டில் இருக்கிறேன். என் மருமகளுக்கு என்னென்ன உணவு பிடிக்கும் என்று மட்டும் சொல்லுங்கள்.அவளுக்கு புடிச்ச எல்லாவகையான சாப்பாட்டையும் சந்தோஷமாக நான் சமைச்சுப் போட போறேன். என் புள்ளையோட, என் மருமக பொண்ணு சந்தோஷமா இருந்தாலே அதுவே எனக்குப் போதும் அத்தை.



"அம்மாடி மகேஸ்வரி"என்று அழைத்த பாட்டி கண்கலங்கியவராய்,



"ஊருக்குள்ள எத்தனையோ மாமியார்கள் தன் பிள்ளையைக் கைக்குள் போட்டுக்கொண்டு மருமகளை கொடுமைப்படுத்துவதை நான் பார்த்துள்ளேன். ஆனால் நீ சொல்வதையெல்லாம் கேட்கும் போது, நிஜமாலுமே என் பேத்தி அதிஷ்டக் காரி தான்"இனி என் பேத்தியை பற்றிய கவலை எனக்கில்லை.


ஒருவேளை என் பேத்தியை அந்த வசந்த் பயலுக்கு கல்யாணம் பண்ணி கொடுத்து இருந்தாலும், அந்த வேணி என் பேத்தியை வாயாலேயே பேசிப்பேசி துடிதுடிக்க வைத்திருப்பாள்.



எந்த ஜென்மத்து புண்ணியமோ, என் பேத்திக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைத்துள்ளது. ஆனால் பாவம் உன்ற மகன் என நிரஞ்சனுக்காக வருத்தப்பட்டார்.


"பரவாயில்லை விடுங்க அத்தை. நான் நம்ம ரெண்டு பேருக்கும் மருமக பொண்ணு சமையலைப் பத்தி நீங்க சொன்ன உடனேயே கடைக்கு போயிட்டு நல்ல லெக் பீஸ் வச்சு, சிக்கன் 65 உடன், ரெண்டு முட்டை உங்களுக்கு இரண்டு பொட்டலம் பிரியாணியும், எனக்கு இரண்டு பொட்டலம் பிரியாணியும் வாங்கி வந்துள்ளேன். வாங்க நல்ல நம்ம சாப்பிடுவோம்" என்று இருவரும் சாப்பாட்டை வெளுத்துக் கட்ட ஆரம்பித்ததில் நிரஞ்சன் பற்றி மறந்தே போயினர்.



கீழே நிரஞ்சன் நிலைமையோ பரிதாபமாக இருந்தது."ஐயோ வாய சும்மா வச்சுக்கிட்டு இருக்காமல் எங்க அம்மாகிட்ட என் பொண்டாட்டி சமையலை பற்றி சொன்னது இவ்வளவு பெரிய தப்பா போச்சு"



ஆத்தா இருந்திருந்தால் ஏதாச்சும் ஐடியா கிடைத்திருக்கும் இப்போ அதுக்கும் நானே ஆப்பு வச்சுக்கிட்டேன் என் விதியை நொந்தபடி அமர்ந்திருந்தான் நிரஞ்சன்.


"ஆ சொல்லுங்கள் மாமா"என்று அவன் வாயை திறந்ததும், மூவரின் தட்டில் வைத்த உணவையும் அவன் வேண்டாம் வேண்டாம் என்று மறுக்க திணறத் திணற அவன் வாயில் வைத்து திணித்து விட்டாள் வென்மதி.



உணவை ஊட்டி முடித்ததும்,"மாமா சாப்பாடு எப்படி.."என ஆர்வமுடன் அவன் முகத்தைப் பார்க்க,



நீ கொடுத்த உணவு நல்ல இல்லை என்றாலும் என் அம்மா சொன்னதற்காக சென்று சமைத்ததோடு, எனக்கு ஊட்டியும் விட்டாய் அந்த உணவு நல்லாவே இல்லை எனினும், அதை எனக்கு ஊட்டும்போது உன் முகத்தில் தெரிந்த அந்த மகிழ்ச்சியை ஒரு போதும் அழிய விடமாட்டேன் வெண்மதி என்று மனதிற்குள் கூறியவன்,


தன் முகத்தை ஆவலுடன் பார்த்தவளை "சாப்பாடு சூப்பர் மா... என் அம்மா கூட இப்படி சமைப்பதில்லை நீ அவரையும் மிஞ்சி விட்டாய்"சரி எனக்கு பணிக்கு நேரம் ஆகிறது நான் கிளம்புகிறேன் என்று நைசாக நழுவியவன் காரில் சென்று அமர்ந்துகொண்டான்.



"அய்யய்யோ..."வாந்தி வர்ற மாதிரி இருக்கு, முதலில் ஒரு மாதிரி எடுத்து போட்டுட்டு தான் மறு வேலை பார்க்கணும்"என்று கார் டேஷ்போர்டில் வைத்திருந்த முதலுதவிப் பெட்டியை வெளியில் எடுத்தான்.



"கடவுளே... எத்தனையோ பேருக்கு வழியில் உதவி தேவைப்படும் என்று நான் முதலுதவிப் பெட்டியை வாங்கி வைத்தாள் கடைசியில் அது எனக்கே உதவி ஆகிவிட்டது"நன்றி என கடவுளிடம், மானசீகமாக கூறியவன் மாத்திரை பிட்டு வாயில் போட்டுக்கொண்டு மருத்துவமனையை நோக்கி சென்றான்.



ஆனால் அவன் போதாத நேரம்,அதற்கு மேலும் தாக்கு பிடிக்க இயலாது வண்டியை வேகமாக நிறுத்தியவன் வேகமாக மருத்துவமனைக்குள் தனது நண்பனான ராஜேஷின் அறைக்கு சென்றான்.



அப்போதுதான் ஒரு கேசை முடித்துவிட்டு வந்த நண்பனை என்ன ஏது என்று கூட, சொல்லாமல் அவன் கையை பிடித்து இழுத்து சென்றவன்"அவசரமா ஆபரேஷன் தியேட்டர் ரெடி பண்ணுடா"எல்லாம் சீக்கிரமாக நடக்க வேண்டும் என உத்தரவிட,




"டேய் மாப்ள... உனக்கு நேத்து தானே கல்யாணம், எனக்கு முக்கியமான கேஸ் வந்ததால் உன் திருமணத்தை அட்டன் பண்ணமுடியவில்லை. நீ புதுமாப்பிள்ளை இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறாய். சரி யாருக்கும் மருத்துவம் பார்க்க வேண்டும் அதாவது சொல்" என்றவனை,



"எனக்கு தான்டா மாப்பிள... அது பெரிய கதை முதலில் எனக்கு மருத்துவம் பார்.நான் சாப்பிட்ட சாப்பாடு ஃபுட் பாய்சன் ஆவதற்குள் அதனை சீக்கிரமாக தடுக்க வேண்டும்"எனக் கடகடவென கூறியவன் அடுத்த அரை மணி நேரத்தில் மருத்துவம் பார்த்து முடித்தான்.



அவனைத் தொந்தரவு செய்யாத நண்பன் ராஜேஷ் சிறிது நேரம் அவனை ஓய்வு எடுக்கும்படி கூறிவிட்டு தனது அறைக்கு சென்றுவிட்டார்.



அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும் மருத்துவம் அவனுக்கு,இன்று வேறொருவர் மருத்துவம் பார்க்கும் நிலை அவனது மனைவி புண்ணியத்தில் கிடைத்தது.


இரண்டு மணி நேரங்கள் சென்ற பிறகு, ஓரளவுக்கு மாறியிருந்தான் நிரஞ்சன். பின் தனது நண்பனான ராஜேஷின் அறையை நோக்கி சென்றான்.



கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்தவன் அங்கிருந்த இருக்கையில் சென்று அமரவும், அவனே சொல்லட்டும் என எதுவும் பேசாமல் இருந்தான் ராஜேஷ்.


நண்பன் அமைதியாக இருப்பதைப் பார்த்த நிரஞ்சன் "எதுக்கு மாப்பிள்ளை இப்படி பாக்குற... உனக்கு என்ன ஆச்சு என்று தெரியனுமா?" என கேட்டவன் திருமணம் ஆரம்பம் முதல் இறுதிவரை சொல்லி முடிக்கவும், விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான் ராஜேஷ்.



"ஏண்டா... என் நிலைமையைப் பார்த்தால் உனக்கு சிரிப்பாக இருக்கிறதா..."என்று முகத்தை தூக்கி வைத்துக் கொண்டான் நிரஞ்சன்.


"சாரி மாப்பிள்ளை...உன்னை நினைத்தால் சிரிப்பை கட்டுப்படுத்த முடியவில்லை. நிஜமாலுமே சிஸ்டர் சூப்பர்டா"



உனக்கு தங்கச்சிய முதலில் பிடித்துள்ளதா... என்று கேட்கவும்,


நண்பனின் "தங்கை" என்ற விழிப்பில் உச்சி குளிர்ந்து போனோன் நிரஞ்சன்.


"நிஜமாலுமே மாப்பிள்ளை... அவ பாக்குறதுக்கு தாண்டா பெரிய மனுஷி, ஆனால் குழந்தை டா... அவளை யாருக்கு தான் பிடிக்காது"என தன் மனைவியை கண்களில் காதல் மின்ன கூறிய நண்பனை கண்டு தானும் சந்தோஷமடைந்தான் ராஜேஷ்.



"சீக்கிரமே உங்களுடைய வாழ்க்கையில் நல்லது நடக்கும் வேண்டும் மாப்பிள்ளை. உங்கள் திருமணத்திற்கு எனது வாழ்த்துக்கள். கூடிய சீக்கிரமே என் தங்கச்சிய பார்க்க வரேன் ஆனால் சாப்பாடு மட்டும் வேண்டாம் மாப்பிள்ளை என் முன்னெச்சரிக்கையாக கூறினான் ராஜேஷ்".


அவனை முறைத்து பார்த்த நிரஞ்சன் இறுதியில் முறைப்பதை கைவிட்டு புன்னகையுடன் தனது வேலையை பார்க்கச் சென்றான்.



அனைத்து பணிகளையும் முடித்து மாலையில் வீடு திரும்பி அவனை புன்னகையுடன் வரவேற்றாள் அவனது இல்லத்தரசி.


"மாமா... இப்போ புதுசா ஒரு ஐட்டம் தயார் செய்துள்ளேன்.சாப்பிட்டுவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள்"என்று அவள் சொல்லி முடிப்பதற்குள்,



"ஆத்தாடி..."எனக்கு வேண்டாம் கண்ணம்மா என்று தனது அறைக்குள் ஓடியே விட்டான் நிரஞ்சன்.


அவனைப் பின்தொடர்ந்த வெண்மதிக்கு அவன் மீது நேசம் பெருகியது. கதவை திறந்தவள் அங்கு மூச்சு வாங்கியபடி நின்ற நிரஞ்சன் அருகில் சென்றவள்,


"மாமா..."என்ற விழிப்போடு அவன் கன்னம் தாங்கியவள் அவன் நுதல் ஆரம்பித்து கண்ண தாடை வரை முத்தம் வைத்தவள் அவன் உதட்டில் தன் உதட்டை ஆழமாக அழுத்தினாள்.


அந்நாளில் மீண்டும் ஒருமுறை அதிர்ந்து போனோம் நிரஞ்சன் உட்பட நாமும்...


"எதுவும் இல்லாது எதற்காகவே வாழ்ந்து கொண்டிருந்தேன்


நீ என் வாழ்வில் வந்தாயடி (வந்தாயடா) என் வாழ்வின் சோலையை மனம் பரப்பினாய்!


உன் முத்தத்தில் என் மொத்த உயிரும் உருகி போகுதடி என் கண்ணம்மா...



நீ சிறு மழலை ஆகவே இரு நான் உன்னை என் இரு கண்களிலும் வைத்து பார்த்துக்கொள்வேன் என் கண்ணம்மா..."


பின்குறிப்பு:இது கவிதை படித்துவிட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் ...



















 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டீஸர்:


"அம்மா..."எங்க போயிட்டீங்க...? எனக்கு ரொம்ப பயமா இருக்கு சீக்கிரமா வாங்கம்மா என்று தனது அம்மாவைத் தேடி அழுதுகொண்டிருந்தாள் நான்கு வயது ஹரித்ரா.



மகளின் அழுகையின் விரைந்து வந்த வெண்மதி குழந்தையை சமாதானப் படுத்தும் பொருட்டு, அச்சோ!!"செல்லம் அழக் கூடாது டா... அம்மா இங்க தான் இருக்கேன். நீங்க தூங்கி கிட்டு இருக்கீங்க, உங்களை தூங்க வைத்துவிட்டு அம்மா வேலை பார்த்துக் கொண்டிருந்தேன் அம்லு.


நீங்க இப்போ பெரிய பொண்ணு தானே... இந்த மாதிரி சின்ன விஷயத்துக்கெல்லாம் அழலாமா... என தன் மகளை சமாதானப்படுத்தினாள் வெண்மதி.


****************************

"அம்மா..."நாளைக்கு எங்க ஸ்கூல்ல என்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் அவங்க அப்பாவுக்கு கூட்டிட்டு வருவாங்களாம். என்னோட அப்பா எங்க அம்மா இருக்காங்க... நான் பிறந்ததில் இருந்தே அப்பா என்னை வந்து பார்க்கவில்லை. ஏன் என் அப்பாவிற்கு என்னை பிடிக்கவில்லையா... மகளின் கேள்வியில், இந்த நிமிடமே இதுதான் பூமிக்குள் புதைந்து விட மாட்டோமா என துடித்து போய்விட்டாள் வெண்மதி.



ரஞ்சனை பிரிந்த இந்த ஐந்து வருடங்களில், ஒவ்வொரு நொடியும் நரகமாக கழித்தவள் மகளின் கேள்வியில் முற்றிலுமாக நிலைகுலைந்து போனாள் நிரஞ்சன் மனைவி.
 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 15:


"என்னாச்சு மாமா.."ஏன் முத்தம் கொடுத்தால் திகைத்துப் போய் நிற்கிறீர்கள்...


அவளின் பேச்சில் சுயநினைவு அடைந்தவன் "அது ஒன்னும் இல்ல கண்ணம்மா நீ திடீர்னு முத்தம் கொடுக்கவும் மாமா திகைத்து போயிட்டேன்"என வெளியில் கூறினாலும்,


மனமோ"இவளை நம்பாதே! அடுத்து உனக்கு ஏதோ சாப்பாடு ரெடி பண்ணிட்டா போல இருக்கே, ஐயையோ இப்பத்தான் கேசரிய தின்னு முடிச்சுட்டு படாதபாடுபட்டு வரேன். இப்போ மறுபடியும் ஒரு சோதனையா..."என உள்மனம் அழற,



அதை சிறிதும் முகத்தில் காட்டிக் கொள்ளாது வெளியில் புன்னகைத்தான்.


அவளோ அவனை ஒரு மாதிரியாக பார்த்துவிட்டு,"சரி ரெடியாகி சீக்கிரம் கீழே வாருங்கள் மாமா இன்னைக்கு புதுசா ஒரு ஐட்டம் தயாரித்து வைத்துள்ளேன்".


"சாப்டுட்டு எப்படி இருக்குதுன்னு சொல்லுங்க..."


மாமா உண்மையாலுமே என் அத்தைக்கும் அந்த கிழவிக்கும் எது செய்தாலும் சாப்பிடுவதே மாட்டேங்கிறாங்க,


அவங்க முன்னாடி நான் சவால் விட்டு இருக்கேன் மாமா.


"நான் செஞ்ச சாப்பாட என் மாமா கண்டிப்பாக சாப்பிடுவார்" என்று,



என்ன மாமா நான் சொன்னது சரிதானே என்று நிரஞ்சனை பார்த்து கேட்கவும்,



அவனோ "ஆமாண்டா செல்லம்" என்றதும், சரி மாமா நான் கீழே போகிறேன். நீங்கள் சீக்கிரம் தயாராகி வாருங்கள் உங்களுக்காக எனது சமையல் காத்துக்கொண்டிருக்கிறது என்று கூறிவிட்டு கீழே சென்றாள்.



திகைத்துப்போய் நின்றவன்"ஆடு வெட்டுவது உறுதியாயிற்று, அதற்கு மாலை போட்டால் என்ன போடாவிட்டால் என்ன, அதேபோல் ஆடு தலையை ஆட்ட வில்லை என்றால் மட்டும் விட்டு விடுவார்களா...??"



"சீ... என்னாச்சு நிரஞ்சன் உனக்கு இப்படி சமந்தா சம்பந்தமே இல்லாம பேசுற", என தன்னை திட்டி கொண்டவன்..



"அய்யய்யோ... கல்யாணம் ஆயி இன்னும் ஒரு நாள் கூட முழுதாக முடியவில்லை, இந்த லட்சணத்தில் நான் எப்படி இவளோடு காலம்பூரா வாழப்போறேன் உஷ் அப்பா இப்பவே கண்ண கட்டுதே!!"பெருமூச்சுவிட,



கீழே இருந்து வெண்மதி"மாமா வந்துட்டீங்களா..."என குரல் கொடுக்கவும்,


இன்னைக்கு தப்பிக்க முடியாது கன்பார்ம் ஆயிடுச்சு.



இப்போ மட்டும் நம்ம ஏதாச்சும் சொல்லவில்லை என்றால் ராட்சசி மேலே வந்துவிடும்.



"இதோ வந்துட்டேன் மா..."கூறிவிட்டு,


அடுத்த ஐந்து நிமிடங்களில் சோதனைக் கூடத்துக்கு செல்லும் எலியை போன்று பயத்துடனேயே கீழே சென்றான்.


அவன் பயப்படுவதற்கும் காரணம் உண்டு.



சோதனைக் கூடத்தில் மருந்தை கொடுத்து எலியை சோதனை செய்வர்.



இங்கு அவன் மனைவியோ, அவனை வைத்து உணவு பரிசோதனை செய்கிறாள்.



சோதனைகள் முடியும் போது அங்கு ஒன்றில் வெற்றி கிடைக்கும் இல்லை என்றால் தோல்வி கிடைக்கும். ஆனால் நிரஞ்சனை பொருத்தவரை அவன் மனைவியை சந்தோஷப்படுத்துவது ஒன்றே குறிக்கோளாக கொண்டு வெற்றி பெற செய்பவன் அந்த உணவில் தன் தோல்வியைத் தழுவுகிறான்.



கீழே வந்தவனுக்கு அங்கு பாத்திரத்தில் இருந்த ரசகுல்லாவை எடுத்து நீட்டினாள்.


அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது போல,



நிரஞ்சனுக்கு அவள் நீட்டிய அந்த ரசக்குல்லா பாத்திரமும் கிட்டத்தட்ட கேசரியை தான் நினைவுக்கு கொண்டு வந்தது.



"ஆத்தாடி..."இவ உள்ளதையே நல்லா செய்யமாட்டா, இதுல ரசகுல்லா வேற செஞ்சிருக்கா நான் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆவது உறுதியாயிற்று என மனதிற்குள் புலம்பித் தள்ளியவன்,


அதை வெறித்துப் பார்த்தவாறு இருக்க, அவன் இன்னும் எடுத்து திங்காமல் இருப்பதை கண்ட வெண்மதி,



"என்ன மாமா அடிக்கடி இப்படி ஆகி விடுவீர்களா..."என்றவள் அவனைப் பார்த்து சிரிக்க ஆரம்பித்துவிட்டாள்.


அருகில் நின்ற அன்னையை பரிதாபமாக பார்க்கவும், அவரோ இதற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த,"நெஞ்சம் பேசுதே"என்ற மெகா சீரியலை மும்முரமாக பார்த்துக் கொண்டிருந்தார்.


அதில் சரியாக மோகன் வீனாவிடம் தனது காதலை சொல்ல, அவள் முதலில் மறுத்து விடுவது உடன் அவன் வேறொரு பெண்ணை திருமணம் செய்ய சரியாக அந்த நேரத்தில் தனது காதலை அவனிடம் வெளிப்படுத்துகிறாள்.



ஏற்கனவே திருமணமான மோகனுக்கு அவனுடைய பதில் என்னவாக இருக்கும் என்று, அது மட்டுமே கணக்கு மிகவும் முக்கியம் என்பது போல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த அன்னையைக் கண்டு பல்லைக் கடித்தான் நிரஞ்சன்.


இனி அவரை நம்பி பிரயோஜனம் இல்லை என்று தனது பார்வையை வள்ளி பாட்டியின் புறம் திருப்பினான்.


அவரோ திருமணமானது தனக்குத்தான் என்பதுபோல் புது வகையான கவுன் ஒன்றை அணிந்து கொண்டு அதற்குத் தோதான நகைகளையும், மேக்கப்பையும் செய்து கொண்டிருந்தவரை கண்டவன் தலையிலேயே அடித்துக்கொண்டான்.


"இனி இது ரெண்ட நம்பி பிரயோஜனமில்லை"நம்ம தலையெழுத்து எப்படியோ அப்படியே நடக்கட்டும்.



அவள் இன்னும் கிண்ணத்தை நீட்டியவாறு அவன் புறமிருக்க, அவளது குழந்தை முகத்தை கண்டவன் காலையிலேயே எண்ணியது போல் இந்த முகத்திற்காக எந்த சோதனையையும் எதிர்கொள்ள தயார் ஆனான்.



கடவுளை எண்ணியபடியே, கிண்ணத்தில் இருந்த ரசகுல்லாவை விஷத்தை எடுத்து வாயில் வைப்பது போல் பயந்துகொண்டே வைத்தவன் ஒரு கடி கடிக்கவும்,


என்ன ஆச்சரியம் ரசகுல்லா அப்படியே வாயில் கரைந்து போயிற்று.



இயல்பாக ரசகுல்லா இருக்கும் இனிப்பை விட இது மிகவும் அவனுக்குப் பிடித்தது.


அடுத்த நொடி தட்டில் இருந்த மொத்த ரசகுல்லாவை தனது வயிற்றில் நிரப்பிக் கொண்டவன்,



மனைவியைப் பார்த்து"கண்ணம்மா உண்மையாலுமே உனது சாப்பாடு மிகவும் அருமை, நான் காலையில் சொன்னதுபோல நீ சமையலில் எனது தாயையும் மிஞ்சி விடுவாய்"எனக் கூறியது தான் தாமதம்,



கிண்ணத்தை அருகில் இருந்த டேபிளில் வைத்தவள் கண்களில் துளிர்த்த ஆனந்தக் கண்ணீருடன் கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள்.


அவள் கண்களில் கண்ணீரைக் கண்டதும் துடித்துப் போய்விட்டான் நிரஞ்சன்.


"அச்சோ... என்னாச்சு கண்ணம்மா? எதுக்கு அழுவுற நான் ஏதாவது உன்னை தவறாக சொல்லி விட்டேனா...!!"என பதரவும்,


இல்லை என தலையை ஆட்டி அவள் அவன் மார்பில் புதைத்துக் கொண்டாள்.



பிறகு ஏன் அம்மா இப்படி இருக்கிறாய்?


"நீங்கள் சாப்பிட்ட இந்த ரசகுல்லா செய்தது அத்தையம்மா தான் மாமா"என்றதும் தூக்கிவாரி போட்டது அவனுக்கு.


அவனுக்கா தெரியாது அதுதான் அன்னைதான் செய்தது என்று,


இத்தனை வருடங்களாக அவரது கைகளில் உண்பவனுக்கு அவர் சமையல் எப்படி இருக்கும் என்று தெரியாதா?



அதை வாயில் வைக்கும்போது அன்னை செய்ததுதான் என்பது புரிந்து போனது.


இருந்தாலும், இல்லாளின் முகத்தில் புன்னகையை காண்பதற்காக அவளை மேலும் பாராட்ட, அவள் கண்ணீரைக் கண்டதும் அவன் மனம் துடித்து போனது என்னவோ உண்மைதான்.


"சரிடா இப்போ அதற்கு என்ன...?"


நீ காலையில் செய்த உணவு அருமையாக தான் இருந்தது. பிறகு ஏன் அழுகிறாய்?


நான் சமைத்த உணவை நானும் காலையில் சாப்பிட்டேன் மாமா என்றதும்,


"அட ஆமால்ல... நீ அந்த சாப்பாடு அதனை சாப்பிட்டு இருப்ப உனக்கு எதுவும் ஆகவில்லையே" என்று பதறும் கணவனை கண்ணிமைக்காமல் பார்த்தாள் வெண்மதி.



உங்களுக்கு தெரியுமா மாமா நீங்க கிளம்பி போனதுக்கப்புறம் என்னோட அத்தையும் இந்த கிழவியும் அந்த கேசரி தின்றுவிட்டு என்னை ஆகா ஓகோ என்று புகழ்ந்து தள்ளினர்.


சரி நான் செய்த உணவு மிகவும் அருமையாக உள்ளது போன்று நினைத்துக்கொண்டேன்.


அதை சாப்பிட்ட பிறகுதான், அது எவ்வளவு கேவலமாக இருந்தது என்று தெரிந்தது.


ஆனால்,"நீங்க யாருமே ஒரு வார்த்தை என்னை திட்டாமல், அந்த சாப்பாட்டையும் என் மனம் கஷ்டப்படும் என்று உங்களை வருத்திக் கொண்டு சாப்பிட்டீர்களே" நெஜமாலுமே எனக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைத்ததற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கு.



அப்புறம் நான் காலையில் அழுததும், அத்தையும் பாட்டியும் தான் என்னை சமாதானப் படுத்தினார்கள்.



இப்ப கூட நீங்க வந்ததும் உண்மையை சொல்லலாம் என்றுதான் இருந்தேன்.


ஆனால், அத்தை அம்மாதான் உங்களுடன் விளையாண்டு பார்க்கவேண்டும் என்று அவர் செய்ததை நான் செய்தேன் என்று சொல்ல சொன்னார்.



நான் சொல்லிவிட்டேன். உங்கள் ரியாக்ஷன் என்னவென்று பார்த்தால் நீங்கள் அப்போ கூட உன் சாப்பாடு சரியில்லை என்று சொல்லாமல் எனக்காக வந்து சாப்பிட்டீங்களே, நெஜமாலுமே எனக்கு அவ்ளோ சந்தோசம் என அவன் மார்பில் சாய்ந்தவாறே கூறிக் கொண்டிருந்தாள்.


"ஓய் அதனால்தான் என்னை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்தாயா"எனக் கேட்கவும், வெட்கத்தில் முழுவது மாக அவள் முகம் சிவந்து போனது.


அவள் கூறி முடித்ததும்,"அம்மாடி மருமகளே நீ உன் புருஷனை கட்டிக்கொண்டு இதெல்லாம் போதும்,இங்கு நானும் உன் பாட்டியும் இருக்கிறோம் எதுவாக இருந்தாலும் உங்கள் அறையில் வைத்துக் கொள்ளுங்கள்" என வம்பு இருக்கவும்,


"பாருங்கள் மாமா இந்த அத்தையை"என அழகாக சினிங்கினாள்.



இப்போது முழுமையாக மகன் பக்கம் திரும்பியவர் "கண்ணா... மருமகளை கூட்டிக்கொண்டு சினிமாவிற்கு போய்ட்டு அப்படியே இரவு உணவையும் சேர்ந்து சாப்பிட்டு வாருங்கள்"



அத்தோடு நீ ஆஸ்பத்திரிக்கு ஒருவாரம் விடுமுறை சொல்லிவிட்டு, மருமகளை எங்காவது தேனிலவுக்கு அழைத்துச் செல் என்றதும்,



"முடியாது"என்று மறுத்திருந்தால் வெண்மதி.



"ஏன்மா..."என்று மகேஸ்வரி அதிர்ந்து வினவவும்,


இல்லை அத்தை நீங்களும் பாட்டியும் இங்கு தனியாக இருக்கும்போது நானும் என் மாமாவும் எங்கும் செல்ல மாட்டோம் என முழுமையாக மறுத்துவிட்டாள்.


"இவ்வளவுதான மருமகளே நானும் உன் பாட்டியும் சமாளித்துக் கொள்வோம் நீ சந்தோஷமாக தேனிலவிற்கு கிளம்பு" என்று வற்புறுத்த,


"மன்னித்து விடுங்கள் அத்தை அம்மா உங்களை எதிர்த்துப் பேசுவதாக என்ன வேண்டாம்"


எங்கோ ஒரு இடத்தை சென்று நாங்கள் இருவரும் மட்டும் சுத்தி பார்ப்பதற்கு பதிலாக, நாம் குடும்பமாக எங்காவது செல்லலாம்.


அத்தோடு நீங்களும் எனக்குத் தெரிந்து மாமாவை வளர்ப்பதிலேயே, உங்கள் காலம் முடிந்திருக்கும்.



அப்புறம் என் பாட்டிக்கும் என்னை வளர்ப்பதிலேயே அவர்கள் காலம் முழுவதும் முடிந்து விட்டது.


ஒருவேளை நீங்கள் இப்படி எங்காவது தனியாக செல்ல வேண்டும் என்று நினைத்திருந்தால் கூட எங்களுக்காக சென்று இருக்க மாட்டீர்கள்.



போதும் நீங்கள் இருவரும் எங்களுக்காகத் செய்த தியாகம்.



எம்முடைய இறுதி முடிவு இதுதான் என்று அவள் கணவனிடம் திரும்பி"மாமா நாம ஊட்டிக்கு போறோம் அதற்கான ஏற்பாடுகளை செய்யுங்கள்"என மாடிக்கு சென்று விட்டாள்.


இம்முறை கண் கலங்குவது பாட்டி மகேஷ்வரி அம்மா முறை ஆயிற்று. ரஞ்சனுக்கு தன் மனைவி என்ற கர்வ புன்னகை தோன்றியது.


"பாத்தியாடா நிரஞ்சன் என் மருமகள் என சொல்லிவிட்டு செல்கிறாள்" என்று,



நாம் அவளை சிறுபெண் என்றுதான் எண்ணிக் கொண்டிருக்கிறோம்.



உண்மையாலுமே என் மருமகள் பெரிய ஆள் தாண்டா, சரி சரி நீங்கள் இருவரும் இப்போது கிளம்பினால் தான் சரியாக இருக்கும் என்று அவனை விரட்டினார்.



அறைக்குச் சென்ற நிரஞ்சன் அங்கு வெண்மதி கிளம்பி நிற்பதை பார்த்ததும் அப்படியே மொத்தமாக அவளை விழுங்குவது போல் பார்க்க ஆரம்பித்தான்.



அவள் அறைக்கு வந்ததும் குளித்து தயாராகி இதுவரை சிறுவயதிலிருந்தே பாவாடை சட்டையும் வயதுக்கு வந்த பிறகு தாவணி பாவாடை அணிந்தவள் சுடிதார் என்ற ஒன்றை அறியாமலே போனாள்.



ரஞ்சன் கிளம்பியதும், மகேஸ்வரியும் பாட்டியும் சென்றது அவளுக்கு தேவையான பொருட்களை வாங்கி வந்தனர். அதில் சுடிதாரும் அடக்கம்.



முதல்முதலாக வெளியில் போகப் போகிறாய் இந்த சுடிதாரை அணிந்து கொள்கின்றனர் கூறவும்,


"இல்லை அத்தை நான் இந்த மாதிரி உடை எல்லாம் அறிந்ததில்லை"என முதலில் மறுக்கவும்,


"அத்தைக்காக போட மாட்டாயா?"என்ற ஒரே கேள்வியில், அந்த உடையை வாங்கிக்கொண்டு மேலே வந்து விட்டாள்.


வெள்ளையும் பால் ரோசும் கலந்த அந்த சுடிதார் பல வேலைப்பாடமைந்தது.


அதற்குத் தோதான நகைகளையும் அணிந்தவள் முடியை இருபக்கமும் எடுத்து பின்னி அவள் முடியை தளர விட்டவாறு, மல்லிகை பூவை வைத்து ரோஜா பூ சைடில் வைக்கவும், மொத்தமாக அவளது அழகில் வீழ்ந்து போனான் நிரஞ்சன்.



தயாராகி திரும்பியவள் பின்னின்ற கணவனைக் கண்டு, ஒரு நொடி புருவம் சுருக்கினாள்.


அவன் தன்னையே விழுங்கி விடுவது போல் பார்க்கவும், வெட்கத்தில் கன்னங்கள் ரோஜா பூ போன்று சிவக்க அவனைத் தள்ளிவிட்டு கீழே ஓடிச் சென்றாள்.


தன்னை தள்ளிவிட்டு அவள் ஓடியதும் தான் சுயநினைவு அடைந்தான் நிரஞ்சன்.


வெட்கப் புன்னகையுடன் தலையை கோதியவாறு தானும் கிளம்பியவன் வெளியில் தாயிடமும் பாட்டி இடமும் கூறிவிட்டு கிளம்பினார்கள்.


அவர்களை சந்தோஷமாக வழியனுப்பி வைத்தார்கள் பெரியோர் இருவரும்,


அவர்கள் மனம் புரிந்தது போல் தொலைக்காட்சியில் அழகாக இசைத்தது அந்த சீரியலின் பாடல்.


"பேசாமல் ரெண்டு நெஞ்சம் பேசுதே...


நில்லாமல் கண்கள் தூண்டில் வீசுதே...


என் பூக்கள் எங்கும் பூக்கும் போது காற்றில் வாசம் வீசுதே...


நான் பேச வந்த வார்த்தை யாவும் கண்கள் இங்கு பேசுதே...



பேசுதே பேசுதே அடடா நெஞ்சமே பேசுதே..... அடடா



பேசுதே பேசுதே நெஞ்சம் பேசுதே..."



தயவு செய்து ஒருவர் இருவர் மட்டும் கருத்து சொல்லாமல் அனைவரும் சொன்னாள் மிகவும் சந்தோஷப்படுவேன். கதையில் குறையையும் கூறலாம்.


நன்றி


 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 16:


"நீயே என் காதல் சகியே மலையில் கொஞ்சும் மயிலே...


கரைகள் தொடும் போது என்னை கட்டி இழுக்கும் பேரழகி...


வசந்தத்தின் பிடியில் வாழ்க்கையை வீச என் காதலை அதிகரிக்கச் செய்தவளே..."



இருவரும் கிளம்பி காரின் உள்ளே சென்று அமர, சரியாக அங்கு ஓடி வந்தார் வள்ளி பாட்டி.



"ஏய்... வெண்மதி நில்லடி"எனக் கத்திக் கொண்டே வரவும்,



இருவரும் சந்தோஷமாக காரில் சென்ற அமரப் போகும் தருணம் பாட்டி அழைக்கவும் கடுப்பானாள் வெண்மதி.


"என்னாச்சு கிழவி ஏன் இப்படி பேய் மாதிரி கத்திக்கிட்டே வர, அது சரி நீ என்ன உடை போட்டிருக்கிறாய்... இது எல்லாம் இன்னும் நீ விடவில்லையா... அங்க நம்ம வீட்டுல இருக்கும்போது தான் கோமாளித்தனமாக பண்ணிக்கிட்டு இருக்கேன் பார்த்தாள் இங்கும் இப்படி செய்து கொண்டிருக்கிறாய் கிழவி"இன்னைக்கு என்ன பண்ணினாலும் உன்னை ஒரு வழி பண்ணாமல் விடப்போவதில்லை.


தன் கைகளில் பிடித்திருந்த நிரஞ்சனின் கைகளை"மாமா விடுங்கள் இந்த கிழவியை ஒரு வழி பண்ணிட்டு வரேன்" கோபத்துடன் சொல்லவும்,



"எங்கே இருக்கும் நல்ல மனநிலையை கெடுத்து விடுவார்களோ இந்த பாட்டி"



நானே இப்பத்தான் அவளை மெதுமெதுவாக காதலிக்க ஆரம்பித்து உள்ளேன்.


"என்னது நான் அவளை காதலிக்கிறேனா... அதுவும் திருமணமான ஒரே நாளில் இது எப்படி சாத்தியம்"தனக்குள்ளேயே குழம்பி கொண்டவனாக தன் மனத்திடம் கேள்வி கேட்டுக் கொண்டவனை,



"ஐயோ... மாமா உங்களுக்கு அடிக்கடி என்னதான் ஆகிறது. இப்படி அடிக்கடி ஒண்ணுமே சொல்லாம திகைத்துப்போய் நிற்கிறீர்கள்"என அவள் கத்த,


"ஹிஹி... ஒன்றும் இல்லை செல்லம்"



"நாம இருவரும் வெளியில் போக போகிறோம். இப்போ போயிட்டு நீ இந்த பாட்டிகிட்ட எதுக்கு சண்டை போட்டு வீணா மனநிலையைக் கெடுத்துக் கொள்கிறாய்"


அத்தோடு பாட்டி அம்மாவிற்கும் இதுதான் அவரது வீடு.



உனக்கு இங்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதே உரிமை பாட்டிக்கும் இருக்கிறது. சரியா... அவர் விருப்பப்படியே அப்படியே இருக்கட்டும்.



"சரி மா வா நாம இருவரும் இப்போது கிளம்பலாம்"அவள் கையை இழுத்துக் கொண்டு மீண்டும் அவன் விடாமல் மீண்டும் கிளம்பும் சமயம் பாட்டியின் குரல் மீண்டும் ஒருமுறை ஒலித்தது.



"ஏய் வெண்மதி நில்லு சொல்றேன்ல"மீண்டும் கத்தவும்,


மூச்சை இழுத்து விட்ட வளாக அவரை நோக்கி திரும்பியவள்"சொல்லு கிளவி இப்போ எதுக்கு என்ன கூப்பிட்டுக்கிட்டு இருக்கா"


"அது ஒண்ணும் இல்ல ராசாத்தி இதோ நான் ஒரு ரோஸ் கலர் சுடிதார் வைத்துள்ளேன். அதற்குத் தோதான இரண்டு செட்டு தொடும், அதற்கு தகுந்தார் போன்று லிப்ஸ்டிக்கும் வாங்கிவிட்டு வா"கூறியதுதான் தாமதம்,



"கிழவி வர வர உனக்கு கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு. உன் வயசுக்கு இதெல்லாம் ரொம்ப அவசியமா.... உனக்கு என்ன இளமை மீண்டும் திரும்புகிறது என்று நினைப்போ..."



"ஒழுங்கு மரியாதையா போ ஒரு மண்ணும் உனக்கு வாங்கிட்டு வர மாட்டேன்"



நீங்க வாங்க மாமா இந்த கிழவிக்கு வேற வேலை இல்ல...



"அடியே ஒரு பியூட்டி பார்த்து வயசாகுது நான் சொல்ற... உன்னை என்ன பண்றேன் பாரு"அவளிடம் நெருங்கி வரவும்,


"ஆத்தாடி;எங்கே அன்று பாட்டியும் பேத்தியும் என்னையும் என் அம்மாவையும் திட்டியது மாதிரி இன்றைக்கும் ஆரம்பித்து விடுவார்களோ என பயந்து போனான் நிரஞ்சன்"



அவர்கள் இருவருக்கும் பேச்சு வார்த்தை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ,



"நில்லுங்கள் பாட்டியம்மா உங்களுக்கு என்ன தோடும் லிப்ஸ்டிக்கும் வேண்டும் அவ்வளவு தானே நானே வாங்கிட்டு வந்து தருகிறேன்"


"நீங்க போங்க கண்ணம்மா நீ வண்டியிலேயே ஏறுமா"



"இல்லை மாமா... இந்தக் கிழவி இப்படித்தான் ஏதாவது உளறிக் கொண்டே இருக்கும். அது கேட்டதெல்லாம் நாம் வாங்கி கொடுத்தால் பிறகு ஒவ்வொன்றையும் கேட்க ஆரம்பித்துவிடும்"



"நான் உனது பாட்டிக்கு வாங்கி தரவில்லை.நான் எனது பாட்டிக்கு வாங்கி தருகிறேன் அதில் நீ தலையிடாதே"வெடுக்கென கூறவும், தொங்கிப் போனது வெண்மதி முகம்.


மதியின் முகம் வாடி போனதை கண்ட பாட்டி தன்னையே நொந்து கொண்டவர் ரஞ்சனிடம்,


"பேராண்டி... நான் சும்மா விளையாட்டுக்கு தான் பா கேட்டேன். நீ என் பேத்தியை திட்டாதே..."கவலையுடன் கூறவும்,


"நீங்க கவலைப்படாதீங்க பாட்டி என் பொண்டாட்டியை நான் சமாதானப்படுத்துகிறேன்"


என் மனைவி எவ்வளவு முக்கியம் என்று எனக்கு தெரியும்.


அதேபோல நீங்களும் எனக்கு முக்கியம் என்று இவளுக்கும் தெரிய வேண்டும் சரி நாங்கள் கிளம்புகிறோம்...



அவளை வண்டியில் பிடித்து வலுக்கட்டாயமாக தள்ளியவன் காரை எடுத்துக்கொண்டு புறப்பட்டான்.


நிரஞ்சன் நினைத்து உண்மையாலுமே எனக்கு பெருமையாக இருக்கிறது கண்ணா... மகேஸ்வரி உன்னை மிகவும் அருமையாக வளர்த்து இருக்கிறாள் அம்மாவையும் மகனையும் பெருமையாக நினைத்தது பாட்டியின் மனது.



பேத்தியின் முகம் வாடினாலும், தனது பேரன் (அவளது கணவன்) இனி சமாளித்துக் கொள்வான் என்று பாட்டி கவலை இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்தார்.


அங்கு மகேஸ்வரி, வெளியில் நடந்த எந்த கலவரத்தையும் அறியாது "கொக்குக்கு ஒன்றே மதி போலும்"என்ற பழமொழிக்கேற்ப,


இன்னும் நெஞ்சம் பேசுதே மெகா சீரியலை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தவரை கண்ட பாட்டி தலையிலடித்துக் கொண்டவர் அங்கிருந்து நகர்ந்து தனது வேலையான மேக்கப்பை மீண்டும் தொடங்கினார்.


அங்கு காருக்குள்ளே, நிரஞ்சன் நிலைமைதான் மிகவும் கவலைக்கிடமாக இருந்தது.


வண்டியில் அமர்ந்திலிருந்து அவன் முகத்தை கூட பார்க்காமல் வெளியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் வெண்மதி.


அவளை சமாதானப்படுத்த எண்ணிக் கொண்டிருந்த நிரஞ்சன், ரேடியோவை ஆன் செய்ய அதில் விஜய் சமந்தாவின் காதல் பாடல் ஒலிக்க அதில் ஒன்றி போனது வெண் மதியின் மனம்.


"உன்னாலே என்னாலும் என் ஜீவன் வாழுதே...


சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே...


உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி என் கண்கள் ஓரம் நீர் துளி...


உன் மார்பில் சாய்ந்து வாழ்ந்து சாகத் தோன்றுதே..."



பாடல் ஒலிக்க அதில் தனது கணவனை கண்களில் காதல் மின்ன பாட்டியுடன் நடந்த சண்டையை முற்றிலும் மறந்தே போனாள்.


வெண்மதி எப்போதும் இப்படித்தான். அளவுக்கதிகமாக ஒருவர் மீது அன்பு வைப்பவள் அவர்கள் ஏதேனும் அவளை சொல்லிவிட்டால் சற்று நேரம் முகத்தை தூக்கி வைத்துக் கொள்வாள்.



ஆனால், அதேசமயம் அவளை அந்த நினைவுகளிலிருந்து வேறு விஷயத்தை அவளது மூளையில் திணித்து விட்டால் அதில் முன்பு நடந்த சம்பவத்தை மறந்து விடுவாள்.


அத்தோடு அவர் மீதான கோபத்தையும் நிரம்ப நேரம் பிடித்து வைத்துக்கொள்ள மாட்டாள்.


"மாமா..."இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.


இந்த மாதிரி நான் காரில் சென்றதெல்லாம் மிகவும் அபூர்வம் தானே... அத்துடன் எங்கள் ஊரில் வரும் காரை எல்லாம் நான் ஏக்கத்துடன் தான் பார்த்துக்கொண்டே இருப்பேன்.



ஆனால் இப்போது உங்களால் நான் காரில் வருகிறேன் என்றதும், தன் மனைவியின் ஆசையை நிறைவேற்றி அதை கண்டு மனம் குளிர்ந்து போன நிரஞ்சன்.



அப்படியே வெண்மதி தன் மனதில் உள்ளவற்றை எல்லாம் கணவனிடம் கூறிக் கொண்டே வர, சாலையில் பார்வையை பதித்தவன் மனைவி சொல்வதற்கெல்லாம் தலையை ஆட்டிக்கொண்டிருந்தான்.



பேசியபடியே இருவரும் திரையரங்கிற்கு வந்து இருந்தனர்.


காரை பார்க் செய்து அவன் மனைவியை அழைத்து கொண்டு, தற்போது வெளிவந்த ஒரு பேய் படத்தை பார்க்கவும் அடிக்கடி பயந்துபோன மதி கணவனை கட்டி அணைத்து கொண்டாள்.



அதில் நிரஞ்சனின் இதயத்துடிப்பு ஏகத்துக்கும் எகிறி கொண்டிருந்தது.



மனைவியை சமாதானப்படுத்த அவளை தோளோடு அணைத்து தட்டிக் கொடுத்தவன் அவளை கேட்ட பொருட்களையும் (தின்பண்டத்தை) வாங்கிக் கொடுத்தான்.


பிறகு ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றவன் தனது காதலை அவளிடம் வெளிப்படுத்த தயாராகி நின்றான். அவளிடம் தனது காதலை வெளிப்படுத்த தயங்கியவன் தன்னை திடப்படுத்திக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.




"மதி நான் உன்னை உயிருக்கு உயிராக காதலிக்கிறேன் "மை டியர் ஸ்வீட் ஹார்ட் வெண்மதி டியர்"உன் கூட என் மொத்த வாழ்க்கையையும், சந்தோஷமாக வாழ வேண்டும் என ஆசைப்படுகிறேன்.





'இந்த உலகத்தில் வாழும் ஒவ்வொரு நொடியும், உனக்காக நானும், எனக்காக நீயும் என நாம் இருவரும் வாழ வேண்டும்'என்னை விட்டு எப்போதும் பிரிந்து சென்று விடாதே வெண்மதி.





" ஃபைனலி ஐ எம் லவ்விங் வித் யூ டூ யூ லவ் மீ?"என்று தன் மனதில் உள்ள மொத்த காதலையும் நிரஞ்சன் வார்த்தைகளில் வடிக்க,







அவன் அவ்வளவு நேரமும், தமிழில் பேசியது ஏதோ புரிந்தது போல் ஆர்வமுடன் பார்த்து கொண்டிருந்தவள், அவன் ஆங்கிலத்தில் கூறவும் சந்தோஷமாக வாயை திறந்தவள்,







'ஆமாம் மாமா.. நானும் காதலிக்கிறேன். அதுவும் முன்னைவிட அதிகமாக அவள் கூறியதும், ஆயிரம் ரோஜா பூ தலையில் விழுந்தது போல் இருக்க அடுத்து அவள் சொன்னது பெரிய இடி இறங்கியது அவன் தலையில்'







கண்டிப்பா கண்டிப்பா மாமா இந்த உலகத்தில் நான் வாழும் ஒவ்வொரு நொடியும், சுவையான பரோட்டா , குருமா, சால்னா, பிரியாணி, சிக்கன் 65, கச்சோடி, பூரி, புலாவ், வித் பிரைஸ், அந்த வெள்ளை அரிசி (ஒயிட் ரைஸ்) அப்புறம் என்னென்ன இன்னும் நிறைய இன்னைக்கு சாப்பிட்டேன் மாமா. நான் அது எல்லாத்தையும் உயிருக்குயிராய் காதலிக்கிறேன் மாமா. ஐ லவ் யூ மாமா... ஐ லவ் மை டியர் மாமா சூப்பர் சமையல் மாமா




இறுதியில் நிரஞ்சன் நிலைமைதான் மிகவும் கவலைக்கிடமாக போனது.




Comment please

 

Sarena

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்தியாயம் 17:


" ஹாஹா என்ன நிரஞ்சன் உன் நிலமை இப்படியாகிவிட்டதே"


"யாரது.. வெந்த புண்ணில் வேலை பாய்ச்சுவது, நானே ஏற்கனவே வயித்தெரிச்சலில் இருக்கிறேன் நீங்க வேற யாருங்க அது இந்த நேரத்தில் வந்தது மட்டுமில்லாமல் என்னை தொந்தரவு செய்கிறீர்கள்"


"ஹாஹா நான்தான் உங்கள் இருவரையும் உருவாக்கியவர் தாரணி"



அடடா நீங்களா உங்களை தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன் எங்க போயிட்டீங்க...


"உங்களுக்கு நான் என்ன பாவம் செய்தேன் உங்களுடைய முதல் கதையின் கதாநாயகனா நான் வந்ததே பெரிய விஷயம் இதில் நீங்க என்னவென்றால் உங்கள் கதையின் நாயகனை பெரிய ஆளாக காட்டவில்லை என்றாலும், அட்லீஸ்ட் ஒரு ஹீரோவா என்னை காட்டி இருக்கலாம் இல்ல..."


"சரி சரி அதெல்லாம் விடு, இப்போ உனக்கு என்ன பிரச்சனை ஏன் இவ்வாறு சோகமாக உள்ளாய்..."



"அந்த சோக கதையை நீங்கள் ஏன் கேட்கிறீர்கள் ரைட்டர், நீங்கள் எனக்கென்று கொண்டுவந்து சேர்த்து வைத்துள்ளீர்கள் ஒரு கதாநாயகி எல்லாம் அதனால் வந்த வினை தான்"


"கொஞ்சமாச்சும் புருஷன் சொல்றேன்னு அதை சீரியஸா எடுத்துக்கிட்டு ஏதாவது செய்கிறாளா... எனக்கு வரும் ஆத்திரத்திக்கு",


"வெயிட் வெயிட் என்ன பண்ண போகிறாய் நிரஞ்சன். நான் வேண்டுமென்றால் உனக்கு புது நாயகி போடவா..."


"ஆத்தாடி உங்க சகவாசமே வேண்டாம் எனக்கு என் வென்மதியே போதும்... சரி சரி எங்களுடைய கதைகளில் நீங்கள் என்ன செய்கிறீர்கள், அந்தப் பக்கம் செல்லுங்கள்"



ஓரமா போய் நில்லென்று சொல்லாம சொல்ற, பரவாயில்லை இருவரும் சந்தோஷமாக உங்கள் திருமண வாழ்க்கையை வாழுங்கள். வெண்மதி இடத்திலும் சொல்லிவிடுங்கள் நிரஞ்சன் நான் கிளம்புகிறேன்.


கணவன் கோபத்துடன் எழுந்து சென்று விட்டானே என்கிற எந்த பதட்டமும் இல்லாமல் ஆற அமர அவன் வாங்கி கொடுத்தா அனைத்து உணவுகளையும், ஒருகை பார்த்தால் வெண்மதி.


எல்லாவற்றையும் வாயில் திணித்தவள் அந்த உணவுகள் மிகவும் பிடித்துப்போக,


அங்கிருந்த சர்வரை"அண்ணா" அழைத்தவள் அவர் அருகில் வந்ததும்,


"சொல்லுங்க மேடம்"இன்னும் உங்களுக்கு ஏதாவது வேண்டுமா... இல்லை பில் கொண்டு வரவா?


"உங்களுக்கு ஏன் அண்ணா இவ்வளவு அவசரம் அதுக்குள்ள பில் கொண்டு வரேன் சொல்றீங்க... இப்பத்தான் நான் சாப்பிடவே ஆரம்பித்தேன் அதற்குள்ளேயே பிள் கொண்டு வரவா என்று கேட்கிறீர்கள்"சத்தம் போடவும்,


அக்கம்பக்கத்தில் உள்ள அனைவரும் அவளை திரும்பி ஒருமாதிரியாக பார்க்க, அதெல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டால் அது வெண்மதி அல்லவே...


"சாரி மேடம்.. நீங்கள் நிறைய சாப்பிட்டீர்கள் அதனால்தான் உங்களிடம் போதுமா வேண்டுமா என்று கேட்டேன்"


கண்ணு வைக்காதீர்கள் அண்ணா இப்போ நீங்க என்ன பண்றீங்க அண்ணா.. முதலில் கொண்டு வந்தது போன்று மறுபடியும் எனக்கு எல்லா உணவு வகைகளிலும் மீண்டுமொரு பிளேட் வேண்டும்.



அப்படியே அந்த உணவுகள் எல்லாவற்றையும் 2 பார்சல் கட்டி விடுங்கள் ஆர்டர் கொடுத்தவள் வந்த உணவுகளை மீண்டும் வெளுத்துக்கட்ட ஆரம்பித்தாள்.


அந்த சர்வர்"சரியான தின்னி பண்டாரமா இருக்கும் போல, இப்படி திங்குது"முணுமுணுத்த வரே அவளைத் திரும்பிப் பார்த்தவாறு திட்டிக்கொண்டே சென்றவன் எதிரில் வந்தவர் மீது மோதிக் கொண்டான்.


"சாரி சார்..."மன்னிப்பு வேண்டியவாறு, நிமிர்ந்த பார்த்தவன் எதிரில் நின்று தன்னையே முறைத்துக் கொண்டிருக்கும் சற்று முன்பு ஆர்டர் கொடுத்தவனை கண்டு பயந்துபோன அந்த சர்வர் நடுங்கியவாறு நின்றான்.


"எச்சூஸ்மி இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி அங்க இருக்க என் மனைவியை பார்த்து என்ன சொன்னீங்க..."


"சரியான தின்னி பண்டாரமா இருக்கு..."


இதைத்தானே சொன்னீர்கள்... அவள் எவ்வளவு உணவு சாப்பிட்டால் உங்களுக்கு என்ன?


நீங்கள்தான் பணம் சாப்பிடும் உணவிற்கு பணம் கொடுக்கப் போகிறீர்களா...

நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அப்படித்தான் இருக்கிறது.


"இல்லை சார்... என்னை மன்னித்து விடுங்கள் நான் தெரியாமல் சொல்லிவிட்டேன்"


என்ன மன்னிப்பு சொல்வது எல்லாம் சொல்லிவிட்டு பிறகு நீங்கள் மன்னிப்பு கேட்கிறீர்கள் நீங்கள் மன்னிப்பு கேட்பதால் மட்டும் சொன்னதில்லை என்று ஆகிவிடுமா..?


இதற்கு கண்டிப்பாக நீங்கள் பதில் சொல்லியே ஆகவேண்டும் உங்கள் முதலாளியிடம் நீங்கள் சொன்னதை கேட்போம். அவரே, நீங்கள் கூறியதற்கு பதில் சொல்லட்டும் எங்கே உங்கள் முதலாளி நான் இப்போது அவரை பார்க்க செல்கிறேன்.


எங்கே அவன் சென்று தனது முதலாளியிடம் கூறினால் தனது வேலை பறிபோய்விடும் அத்துடன் அவனை நம்பி இருக்கும் அவனது குடும்பத்தை யார் காப்பாற்றுவார்கள்?


தடாலடியாக நிரஞ்சன் காலில் விழுந்தவன் "சார்... மன்னித்துவிடுங்கள் சொல்லிவிட்டேன் நான் பிள்ளை குட்டிக்காரன் இந்த வேலையையும் வருமானத்தையும் நம்பியே எனது குடும்பம் ஓடுகிறது. நீங்கள் மட்டும் இப்பொழுது தயவு செய்து என்னை பற்றி எதுவும் சொல்லி விடாதீர்கள்"காலில் விழுந்து கெஞ்சியவனை பார்கவே பாவமாக இருந்தது நிரஞ்சனுக்கு.


"முதலில் என் காலில் இருந்து எழுந்திருங்கள்"


என்னைவிட வயதில் பெரியவராக இருக்கிறீர்கள். இந்த மாதிரி உணவகம் எல்லாம் எதற்கு வைத்து நடத்துகிறீர்கள்.



உணவு உண்ண வருபவர்களை உணவு பரிமாறுவதற்கு என்றுதானே வேலை செய்கிறீர்கள்.


பின் எதற்கு அதிலும் சாப்பிடும் அவரைக் கண்டு பழிக்கிறார்கள்,


அவள் சாப்பிடும் உணவிற்கு தேவையான பணத்தைக் கொடுப்பது என் பொறுப்பு. அதனால் அதைப்பற்றி நீங்கள் கவலைப்படாமல் உங்கள் வேலையை மட்டும் செய்யுங்கள்.



பிறகு ஒரு முக்கியமான விஷயம். சாப்பிடும் ஒருவரை கண்டேன் கண் வைக்காதீர்கள் பின் அவர்கள் சாப்பிடும் சாப்பாடு செரிமானம் ஆகாது இதற்கு அவர்கள் சாப்பிடாமல் இருப்பதே மேல், இதற்கு மேலாவது யாரையும் தவறாக எண்ணாதீர்கள் சென்று உங்கள் வேலையை பாருங்கள்.


"ரொம்ப நன்றி தம்பி..."அந்தப் பொண்ணு என்னை அண்ணன் என்றுதான் கூப்பிட்டது.


இங்கு வேலை செய்யும் யாருமே எங்களை எல்லாம் ஒரு பொருட்டாக மதிப்பதே கிடையாது.


ஆனால், அந்தப் பெண் என்னை அண்ணன் என்று கூப்பிட புத்தி தடுமாறி, அந்தப் பெண்ணைப் பற்றி தவறாக பேசிவிட்டேன். உண்மையாக சொல்ல வேண்டுமென்றால் அந்த பெண் மிகவும் நல்லவள் தம்பி.



என்னை மன்னித்து அதற்கு மிக்க நன்றி. உன்னிடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் என்னை சென்று எனது முதலாளியிடம் புகார் கொடுத்துவிட்டு மறுவேலை பார்த்திருப்பார்கள்.



" சரி போனது போகட்டும் விடுங்கள், உங்களை நம்பி உங்கள் குடும்பம் இருக்கிறது. ஒருவேளை உங்கள் குடும்பத்தில் ஒருவர் எவ்வாறு உண்பதை உங்களைப் போன்று குறை கூறினால், நீங்கள் என்ன செய்வீர்கள்"என்று கேட்கவும் மௌனமாக தலைகுனிந்தார் அந்த சர்வர்.


பெருமூச்சு விட்டவன் சரி செய்து உங்கள் வேலையை பாருங்கள்.


"சரிங்க தம்பி..."என்றவாரே அங்கிருந்து நகர்ந்தார்.


இங்கு தன்னை பற்றி ஒருவர் குறை கூறியதை, அதை கண்டு தனது கணவன் கோபப்பட்டு தனக்கு ஆதரவாக பேசியதை எல்லாம் அறியாதவள் உணவிலேயே கவனமாக இருந்தாள்.


அவளிடம் காதலை சொன்னவன் அவள் கூறிய பதிலைக் கண்டு திகைத்துப் போய் இருந்தாலும், கோபத்துடன் அங்கிருந்து வெளியில் சென்றவன் அப்போது தன் ஒரு விஷயத்தை யோசித்தான்.



தன் மனைவி குமரியாக இருந்தாலும் மனதளவில் குழந்தையாகவே இருப்பதை...இப்போதும் அவள் சொன்ன பதிலை கேட்டதும் சிரிப்புதான் வந்தது அவனுக்கு.


"ராட்சசி..."என்னை பதற வைக்கிறது ஒரே நாளில் மட்டும் எத்தனை தடவை வச்ச செய்கிறாள்.


பரவாயில்லை"மை கண்ணம்மா இந்த கண்ணனின் கண்ணம்மா..."நீ எப்போ என்னை மனமார ஏற்றுக் கொள்கிறாயோ அன்றே நம் வாழ்க்கையை ஆரம்பிக்கும் நாளாக ஏற்றுக்கொள்கிறேன் கண்ணம்மா.



தனக்குள்ளேயே பேசிக் கொண்டிருந்தவன் அப்போதுதான் மனைவி உள்ளே அமர்ந்து உணவு உண்கிறார் என்பதே நினைவிற்கு வந்தது.



"அச்சோ... நடந்த இந்த கலவரத்தில் அவளை மறந்து விட்டேன். பாவம் எனக்காக சாப்பிடாமல் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருப்பாள். அத்தோடு அவளுக்கு இந்த மாதிரி இடம் எல்லாம் புதுசு என்று வேறு சொன்னாள்"தன்னையே நொந்தவாறு வெண்மதியை வேகமாக தேடி போனவனின் மீதுதான் வந்து மோதிக்கொண்டார் அந்த சர்வர்.


சர்வரிடம் சண்டை போட்டுவிட்டு மனைவியை தேடி வந்தாள்,


அவளோ அங்கே இருந்த அனைத்தையும் தின்று விட்டு மேலும் மற்றொரு ரவுண்டில் இறங்கி இருந்தவளை கண்டு முறைத்தவாறே அமர்ந்தான் நிரஞ்சன்.


சாப்பிட வாரே அவனை நிமிர்ந்து பார்த்தவள் "என்ன மாமா எதுக்கு இப்படி பார்க்கிறீர்கள். நீங்கள் இப்படி பார்த்துக் கொண்டே இருந்தாள் நான் சாப்பிடுவது எப்படி செரிமானம் ஆகும்"அவனை திட்டியவாறு திரும்பி அமர்ந்து உன்ன ஆரம்பித்தாள்.


அவளை வெட்டவா குத்தவா என்ற ரீதியில் முறைத்து பார்த்தவன் அவள் சாப்பிட்டு முடித்ததும், பில் கொண்டு வந்து வைத்தார் அந்த சர்வர்.


பில்லை எடுத்துப் பார்த்தவன் அதிர்ந்து போனேன்.


உங்கள் கருத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் பா....
 
Status
Not open for further replies.
Top