All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கதை திரி

Status
Not open for further replies.

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாளே உயிர் தாராயோ

அத்தியாயம் 23



15974

கண்முன்னே காதல் கதகளி நீயாட..
கட்டி இழுக்க தோன்றுதடி உன்னை...
கண்ணே கனியமுதே என்னில் சேர வருவாயோ...?!
காலம் முழுதும் காத்திருக்கிறேன்..
உன் மூச்சு காற்று என் சுவாசமாகிட...


தன் கண்முன்னே கண்டது நிஜம் தானா... பார்கவி எங்கே..? காணோமே... எங்கே போனாள். ஒன்றுமே விளங்கவில்லை மித்ரனுக்கு. இப்போது என்ன செய்வது. கண்டிப்பாக ராஜசேகர் நம்பும்படி சொல்ல வேண்டும். இல்லையெனில் தான் மாட்டிக் கொள்வது நிஜம். விரைந்து செயல்பட்டார்.

கீர்த்தனாவிற்கு பார்கவிக்கும் ஏதோ பெரிய வாக்குவாதம். அதில் மனமொடிந்து அழுது கொண்டே பார்கவி வந்தார். டிரைவருக்கு உடம்பு சரி இல்லாததால், தானே போய் பார்கவியை அழைத்து வர சென்றார். அப்போது தான் பார்கவி அழுது கொண்டே வெளியே வந்ததை மித்ரன் பார்த்தார். கீர்த்தனா மிகவும் தரக்குறைவாக பேசினார். வரும் வழியில் கொஞ்ச நேரம் கடற்கரையில் இருந்து வருகிறேன். என்னை தனியே விடு என்று பார்கவி மித்ரனிடம் கூறினார். அதனால் மித்ரன் காருக்கு அருகிலே நின்று விட்டார். ஆனால் வெகு நேரம் ஆகியும் பார்கவி திரும்பி வரவேயில்லை.

இது தான் மித்ரனின் கதை. கேட்டதும் ராஜசேகர் பதறிப் போனார். கண்டிப்பாக கீர்த்தனா மேல் தவறு இருக்காது என்று மனம் அடித்து சொன்னது. ஆனால் சூழ்நிலை, நேரம் அவருக்கு எதிராக வாதாடியது. மித்ரன் சொன்ன கட்டுக்கதையை கடைசியில் நம்புவதை தவிர வேறு வழியில்லை. ஏனென்றால் பார்கவி இப்போது உயிரோடு இல்லை. உடலும் கிடைக்கவில்லை.

விஷயம் அறிந்து பதறி ஓடி வந்த கீர்த்தனாவை ராஜசேகர் சந்திக்கவே விரும்பவில்லை. கோபத்தில் தன் உயிருக்கு உயிரான தோழியை ஏதும் சொல்லிவிடுவோமோ.. என அஞ்சினார். அது மித்ரனுக்கு வசதியாய் போய் விட்டது. கீர்த்தனாவை கண்டபடி பேசி அவர் தான் பார்கவி மரணத்திற்கு காரணம் என்று அங்கு இருந்தவர்கள் அனைவரையும் நம்பவைத்து மிகவும் கேவலமாக வெளியேற்றினார் கீர்த்தனாவை.

இருவரும் கோபத்தில் அதன் பிறகு சந்திக்கவில்லை.. இல்லை இல்லை சந்தர்ப்பத்தை தடுத்து நிறுத்தினார் மித்ரன்.

பல வருடங்கள் கழித்து இப்போது தான் எதிர்பாராத விதமாக கீர்த்தனாவும் ராஜசேகரும் சந்தித்துக் கொள்கின்றனர்.

"ஹ்ம்ம்.. சொல்லு ராஜு.. நீ ஏன் அன்றைக்கு என்னைப் பார்க்கவே இல்லை. அப்படின்னா மத்தவங்க சொன்னதை தான் நம்பி இருக்க. என்னை நம்பல. எத்தனை வருஷம் ஒண்ணா பழகியிருப்போம். இருந்தும் உனக்கு நம்பிக்கை இல்ல..ன்..னா... நான் எவ்ளோ பெரிய துரதிஷ்டசாலி..." குற்றம்சாட்டும் குரலில் தொடங்கி வருத்தத்தில் முடித்தார்.

"அதான் சொல்றேன்னே கீர்த்தி.. மன்னிச்சிடு. அன்றைக்கு பார்கவியோட இழப்பை தாங்க முடியாத சோகத்துல இருந்தேன். அந்த நிலைமையில் உன்னை பற்றி தவறாக விஷயம் என் காதுக்கு வருது. அப்போ என்ன செய்வேன் நான். என்னால தெளிவா யோசிக்கக்கூட முடியல. உன்னை ஏதாவது சொல்லிருவேன்னு பயந்து தான் உன்னை பார்க்கல. அதுக்கு அப்புறம் உன்னை சந்திக்க எவ்ளோ தரம் முயற்சி செய்தேன். ஆனால் வாய்ப்பே கிடைக்கல".

இருவரும் கோபத்தை இறக்கி வைத்துவிட்டு மனம்விட்டு பேசினர். கீர்த்தனாவால் பார்கவி ஏன் தற்கொலை செய்தார் என்பதற்கான காரணத்தை சொல்ல முடியவில்லை. ஒரு வேளை தனக்கும் ராஜுவுக்குமான உறவை தவறாக எண்ணிவிட்டோம் என்ற குற்ற உணர்ச்சியில் தற்கொலை முடிவிற்கு போயிருப்பாரா..??!

முஹும்... வாய்ப்பே இல்லை. பார்கவி தைரியசாலியான பெண் ஆயிற்றே.. இறந்த ஒருவரை பற்றி எப்படி தவறாக சொல்வது. அவர் தவறாகவே நடந்திருந்தாலும் அவர் உயிரோடு இல்லாத தருணம் குறை கூறுவது எவ்வளவு பெரிய இழுக்கு. ச் ச...! ராஜுட்ட சொல்ல வேண்டாம். பின் பார்கவியை தப்பா நினைப்பார். அவர் மனைவி பற்றி எப்பவுமே நல்ல விதமாகவே நினைக்கட்டும்.

இந்த மித்ரன் பையன் ஏன் எங்களை பற்றி தவறாக சொல்ல வேண்டும். ஒருவேளை போகும் போது பார்கவியை கட்டிபிடிச்சதை மிரட்டுனதா தப்பாக நினைச்சியிருப்பானோ...??! பார்கவி ஏன் அழுதா..?? கீர்த்தனாவால் ஏன் பார்கவி தற்கொலைக்கு சென்றார் என்பதை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

ஒருவேளை பார்கவியுடனான உரையாடல் பற்றியும், அந்த பரமபத விளையாட்டை பற்றியும் கீர்த்தனா பகிர்ந்து கொண்டிருந்தால் பின்னால் வரும் பெரும் ஆபத்திலிருந்து தப்பியிருக்கலாமோ..?!

"சரி விடு கீர்த்தி. பார்கவி மனசுல என்ன இருந்ததுன்னு நமக்கு தெரியாது. அவளோட ரகசியம் கடைசி வரை அவளுக்கு மட்டும் தெரிஞ்சதாகவே இருக்கட்டும். அப்புறம் இப்போ நீங்க எங்கே இருக்கிறீங்க. அந்த பிரச்சினைக்கு பிறகு வீடு மாறி போயிட்டீங்கன்னு பக்கத்துல இருக்கிறவங்க சொன்னாங்க"

"ஆமா. தேவாக்கு வேலை இங்கே செட் ஆச்சு. சோ உடனே கிளம்ப வேண்டியதா போயிச்சு. அப்புறம் வேலை குழந்தைங்கன்னு வாழ்க்கை அப்படியே ஓடிற்று".

குழந்தைகள் குடும்பம் வேலை என்று பேச்சு நாலாபுறமும் சென்றது. ஒரு நாள் கண்டிப்பாக வீட்டுக்கு குடும்பத்துடன் வருவதாக முடிவெடுத்து விட்டு இருவரும் தற்காலிகமாக பிரிந்து சென்றனர்.

###########

அங்கே ரவியின் அறையில் இருந்த ஆராதனாவிடம், தன் காதல் இவளுக்கு புரியவில்லையே என்ற ஆதங்கத்தில் வார்த்தையை தவறவிட்டிருந்தான். இருவரும் கீரியும் பாம்புமாய் சீறிக் கொண்டிருக்க அவன் ஆராதனா அணிந்திருந்த செயினில் உள்ள அந்த கற்கள் பற்றி சொல்ல வருகிறான்.

"இந்த கல்லு சொல்லும் என்னோடனா காதலை.... உனக்கு எல்லாமே விளையாட்டு தானே..??! உனக்கெங்க புரியபோகுது.?!"

"அப்போ நான் மனுஷி இல்லை. இந்த கல்லு மாதிரின்னு சொல்லறீங்க".

"இல்லை. இந்த கல்லு கூட என்னோட உணர்வுகளை புரிஞ்சிக்கும். ஆனா நீ இருக்கீயே..." ஏதோ சொல்ல வந்தவன் வாயிற்குள்ளேயே முனகி கொண்டான்.

அந்த அளவுக்கு தாழ்ந்து போயிட்டேனா நான்...?? கோபம்... கோபம்... அவ்வளவு கோபம்... பெண்ணவளிடத்தில்.

"சரி தான்.. அப்புறம் எதுக்கு அப்படிப்பட்ட பொண்ணை நீங்க லவ் பண்ணறீங்க. பேசமா போக வேண்டியது தானே. உங்களுக்கும் பிடிக்கல. எனக்கும் பிடிக்கல. பின்ன எதுக்கு சேர்த்து வைக்கணும். பேசாம அவரவர் வேலையை மட்டும் பார்த்துக்கிட்டு போக வேண்டியது தானே...??! எதுக்கு முட்டாள் தனமா நடந்துக்கணும்?"

சட்டென அவன் தோள்களை இழுத்து பிடித்து அழுத்திய வேகத்தில் எலும்புகள் நொறுங்கிவிடும் அளவுக்கு வலித்தது. முகத்தில் அத்தனை கோபம்... அதையும் தாண்டி அந்த கண்களில் வருத்தம் இழையோடியதை பெண்ணவள் மனம் குறித்துக் கொண்டது.

"என்ன சொன்ன... இப்போ நீ என்ன சொன்ன... போக வேண்டியது தானே... அதாவது என் வேலையை பார்த்துட்டு போகணும்ன்னு சொல்லுற... ஹாங்...!"

அவளது தோள்களை பிடித்திருந்த கைகளை உதறிய வேகத்தில் தொப்பென அந்த நாற்காலியில் சாய்ந்தாள். அதிலேயே தெரிந்தது அவனது கோபம். எழுந்து அவன் அங்கும் இங்கும் நடந்தபடியே...

"இப்போ சொல்லுறீயே உன் வேலையை பார்த்துட்டு போன்னு.. அதை அப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே...?"

எப்போ..? நான் என்ன சொன்னேன்..??!
பேந்த பேந்த விழித்தாள்.

"நாலு வயசுல மிட்டாய் வாங்கி தாரேன் என் கூட வான்னு ஒருத்தன், யாருமில்லா இருட்டு பக்கம் கூட்டிட்டு போனானே.. அப்போ நீ கூட நல்லா சிரிச்சிகிட்டே அவன் பின்னாடி நாய் குட்டி கணக்கா போனீயே... அதற்கு அப்புறம் அவன் எந்த மிட்டாய் எப்படி உனக்கு தந்தான்.. எந்தெந்த இடத்துல கொடுத்தான்... நீ அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி.. கத்தும் போது தொண்டை குழி நிறைய வச்சி அழுத்தி உ.. உ... உன்னை... "

"ஷிட்.. ஷிட்..ஷிட்.."

கோபத்தில் பற்களை நறநறவென கடித்து அதற்கு மேல் சொல்ல முடியாமல் வார்த்தைகள் தந்தியடிக்க... விரலால் தலையை அழுந்த கோதி கொண்டான். அவள் அன்று அனுபவிக்க இருந்த வேதனை இன்றும் அவனுக்குள் வலியை மிச்சம் வைத்திருந்தது.

அவளோ.. அவன் சொல்ல சொல்ல அதிர்ச்சியில் விழிகள் தெறிக்க கண் முன்னே காட்சிகள் மங்கலாக தெரிய இப்போது அனுபவித்தது போல தேகம் நடுங்க விதிர்விதிர்த்து போய் அமர்ந்திருக்க.... அவன் தொடர்ந்தான்

"அப்போ உன்னை காப்பாத்த வந்தானே ஒருத்தன்... உன்னோட தலை முடிக்கு கூட எந்த பாதிப்பும் வராம பத்திரமா உன்னோட வீட்ல கொண்டு போய் விட்டானே... அப்போ சொல்ல வேண்டியது தானே... போடா உன் வேலையை பார்த்துட்டுன்னு... அப்போ எதுக்காக என்னை விட்டு போகாதன்னு சொன்ன?!"

அதிர்ச்சியில் சிலையாய் அமர்ந்திருந்தாள் ஆராதனா.

"பத்து வயசு இருக்கும்போ.. கண்ணாமூச்சி விளையாடிக்கிட்டு இருந்த நேரம் தவறுதலா தெருவோரம் இருந்த சாக்கடை குழியில விழுந்து... மூச்சுக்காற்று இல்லாம உயிருக்கு துடிச்சியே அப்போ ஒரு கேணயன் வந்து.. அந்த நாற்றத்தையும் அழுக்கையும் பொருட்படுத்தாம உன்னோட சுவாசமா அவன் இருந்தானே.. அப்போ சொல்லியிருக்க வேண்டியது தானே.. போடா.. முட்டாபயலே உன் வேலையை பார்த்துட்டுன்னு..."

ஹாங்... இவன் என்ன சொல்லிக் கொண்டு இருக்கிறான். அது ராம் தானே..?! அம்மா அப்பாவை எல்லாம் கூட்டிக்கொண்டு வந்து காப்பாற்றியது... ?
அதன் பின் தானே ராம் நட்பு கிடைத்தது, கீது அறிமுகம், எல்லாம் நினைவில் இப்போது தெளிவாக வந்தது.

மெதுவாக அவளது அருகில் வந்து, நாற்காலியின் இருபுறமும் தன் கைகளை தாங்கி, குனிந்து அவள் முகம் பார்த்தபடி, பேசினான்...

"நீ ஒன்பதாம் வகுப்பு பரீட்சை எழுதிட்டு வீட்டுக்கு வர வழியில... உன்னோட ஹார்மோன் மாற்றத்தால, பொண்ணுங்கிற நிலையை உணர்ந்தியே.. அப்போ என்ன பண்ணுறது.. எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியாம பயந்து போய் தவிச்சியே... அப்போ ஒருத்தன் வந்து அவனோட சட்டையை கழற்றி உன்னோட இடுப்புல விரிச்சி கட்டிவிட்டு, பயப்படாத.. இது சாதாரண விஷயம் தான். தைரியமா போ. உன் கூடவே நான் இருக்கும் போது உன்னை யாரும் தப்பா பார்க்க விட்ருவேனா..??! போ. உன் பின்னாடியே நான் வர்றேன்ன்னு சொன்னானே அப்போ அவனை பார்த்து சொல்லியிருக்க வேண்டியது தானே... போடா.. முட்டாள்ன்னு...!!!!"

முட்டை கண் போண்டா கண்ணாக பிளந்தது பிளந்தபடி.. அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.

இடப்புருவம் உயர்த்தி அவன் கேட்ட தினுசில் இருக்கும் சூழ்நிலை மறந்து பெண்ணவள் சொக்கி தான் போனாள் அவன் அழகில்.

"டான்ஸ் ஆடி முடிச்சிட்டு அம்மணி ஒய்யாரமா நடந்து போய் ஒரு லூசுகிட்ட வம்படியா போய் மல்லுகட்டுனீயே.. அப்போ எந்த கிருஷ்ணர் வந்துமா உன்னை காப்பாற்றுனார்...?!!"

இளநகை மின்ன அவன் கேட்ட அழகில் பெண்ணவள் மயங்கி தான் மீண்டாள்.

"கனவுலகில் மிதந்துகிட்டு தத்தி மாதிரி நடு ரோட்டுல போயி மண்டையை முட்டிக்க பார்த்தியே... ஹ்ம்ம்.... அப்போ கூட ஒன்று தெளிவா உலறுனியே.. ஏழடுக்கு வானவில்லுக்கு எட்டடுக்கு உடுப்பு காரின்னு ஏதோ தத்து பித்துன்னு ..." சொல்லிவிட்டு நக்கலாக சிரித்தான்.

"ஹ்ம்ம்... அப்போலாம் சொல்லியிருக்க வேண்டியது தானேமா... போட உன் வேலையை பார்த்துகிட்டுன்னு....!

அப்போ எல்லாம்..
போகாத.. என் கூடவே இரு.. அப்படின்னு வயசு பையன்னு கூட பார்க்காம கையை இழுத்து பிடுச்சு வச்சுக்கிட்டு செஞ்சி...யே அட்டூழியம்!! அப்போலாம் இந்த ரோஷம் எங்க போச்சாம்..??!" சிரித்தபடியே மூக்கோடு மூக்கு உரசி கேட்டான். ஏதோ அடம்பிடிக்கும் குழந்தையிடம் தாய் கொஞ்சி பேசி சமாதானம் செய்வது போல.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சி... ஒரே நாளில் இத்தனை அதிரடி வேண்டுமா...?! குழப்பத்திலும் அதிர்ச்சியிலும் பெண்ணவள் மூளை சோர்ந்து போய் சிந்திக்க மறந்தது.

கொஞ்ச நேரத்திற்கு முன்னால் இருந்த துள்ளல் எல்லாம் அடங்கி அமைதியாக அவனையே பார்த்து கொண்டிருந்தாள்.

"சொல்லும்மா.. இப்போ ஏன் இவ்ளோ அமைதியா இருக்கிற...? வாயை திறந்தா முத்து ஏதும் உதிர்ந்திடுமா என்ன.. ??!" நையாண்டி செய்தான் அவள் இருக்கும் மனநிலை பற்றி அக்கரையின்றி.

எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் இடிச்சு வச்ச புளி மாதிரி அப்படியே இருக்கவும், அவனே அவள் அருகில் இருந்த நாற்காலியில் அமர்ந்து, அவளை பார்த்தபடி சொன்னான்.
"இதோ உன் எதிர்ல தான் இருக்கேன். இப்போ கேளு. உனக்கு என்ன கேட்கணுமோ அத்தனையும் கேளு".

அவன் சொல்லி முடித்த செய்திகளின் வீரியம் இன்னும் அவளுள் மிச்சமிருக்க.. பெண்ணவள் மெதுவாக தன்னை சுதாரித்துக் கொண்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள். இதழ்களை விரித்து அவள் பேசிய வார்த்தையில் அப்படியே ஆணி அடித்தார் போல 'நச்' என்று அதிர்ந்தது இப்போது அவனது முறையாயிற்று.

"ஓ. காட்..! இப்போ நீ என்ன சொன்ன..?! ஒன்ஸ் அகெய்ன்". நம்பமுடியாமல் தெளிவு படுத்திக்கொள்ள மீண்டும் கேட்டான்.

"போ...போடா... ஃபிராடு...டு...!!!
கேட்டுச்சா இப்போ.. ம்ம்ம்.. ??!"

ஓ மை காட்.. மில்லியன் சொத்துக்களின் அதிபதி... எந்தவித பந்தாவும் இல்லாமல் இனிமையாக பழகும் சுபாவம் கொண்டவன்... யாருக்கும் கெடுதல் நினைக்க தெரியாதவன்... யாரையும் எடுத்தெறிந்து பேசாமல் தன் சாதுர்யமான பேச்சால் எதிராளியை தலையாட்ட வைக்கும் திறமை கொண்டவன்... இவ்வளவு பொறுமையாக பேசுவதே இவளிடத்தில் மட்டும் தான். அப்படி இருந்து இவள்... இ..இ...இவள்... எவ்வளவு சுலபமாக சொல்கிறாள்.

"யூ... யூ... இடியட்...ரீயலி யூ ஆர் பிக் இடியட்.."

டென்ஷன் மேல் டென்ஷன் ஏத்துகிறாள் இவள். இவளுக்காக எல்லாம் பார்த்து பார்த்து செஞ்சா கடைசில எ..ன்..னை பார்த்து ஃபிராடுன்னு சொல்லுற.... இ...இ...வ...ளை... கோபத்தில் பற்கள் உடைப்படாமல் இருந்தது ஆச்சர்யம் தான். கண்களை மூடி தன்னை ஒருநிலைப்படுத்த சில நொடித்துளிகள் எடுத்துக் கொண்டான்.

"தென்..."

சொல்லியபடி ஒன்றும் நடவாதது போல் பழைய கம்பீரத்துடன் நாற்காலியில் கால் மேல் கால் போட்டு அமர்ந்தபடி அலட்சியமாக பார்த்தான்.

"நெஸ்ட் வாட்.. ??"

அவனது பார்வையும் பேச்சும் உள்ளுக்குள் உதறினாலும், துணிந்து சொன்னாள்.

"என்னோட ஜிமிக்கி கம்மல் நல்லா இருக்குதா..?"

குடை ஜிமிக்கி அசைத்து ஆட்டிய படி புன்னகை வதனமாய் கேட்டாள்.

பைத்தியம் பிடித்து விட்டதா இவளுக்கு..?! மனதினுள் இவ்வெண்ணம் எழாமல் இல்லை. இருந்தும் அவள் தலை அசைத்து காட்டிய தினுசில் புன்னகை வராமலும் இல்லை. இவளிடத்தில் மட்டும் ஏன் என்னால் கோபத்தை இழுத்து வைத்து கொள்ள இவ்வளவு சிரமமாக உள்ளது. இதழோரமாய் பூத்த புன்னகையை அடக்கிய படி அவளையே கூர்ந்து பார்த்தான்.

"எனக்கு சின்ன வயசுலயே காது
கு..த்..தி... க..ம்...ம..ம...ல்.. தொங்கட்..ட...ம்.. எல்லாம் போட்டு அழகு பார்த்தாச்சு. இத்தனை வருஷம் கழிச்சி வந்து திரும்பவும் காது குத்த பார்த்தா எப்படி..?"

ம்ம்ம்...?? புருவம் உயர்த்தி கேட்ட அழகில் அவன் அவளையே வைத்த கண் அகற்றாமல் பார்த்துக் கொண்டிருந்தான்.

"எப்படி எப்படி... இவர் என்னோட சின்ன வயசுல இருந்து எனக்கு ஆபத்து வரும் போதெல்லாம் வந்து ஹெல்ப் பண்ணாரா... இதை நாங்க நம்பனும்... ஹ்ம்ம்...???

எனக்கு என்ன அந்த அளவு விவரம் இல்லாமையா இருக்கும்.. சின்ன வயசுல வந்த அந்த உருவம் வேணா மறந்திருக்கலாம். ஆனால் டீன் ஏஜ்ல வந்த அந்த பையனை நல்லா நியாபகம் இருக்கு. அவனோட சட்டை கூட என்கிட்ட பத்திரமா இருக்கு. இப்படி இருக்கிறப்போ எப்படி அவன் தான் நீங்கன்னு சொல்லுறீங்க. யார்கிட்டயோ டீடெய்ல் கேலக்ட் பண்ணிட்டு வந்து கப்ஸா விடுறீங்களா...??
யார்கிட்ட... ஹாங்..."

அவன் ஒன்றும் சொல்லவில்லை. சுவாரசியத்துடன்அவளையே பார்த்தது பார்த்தப்படி இருந்தான்.

"நீங்க படிச்சது வளர்ந்தது எல்லாம் அமெரிக்காவில் அப்படின்னு சொல்லறது எல்லாம் ரீ..ரீ..லா..?? அங்கே இருந்துகிட்டு நீங்க எனக்காக வந்தீங்களா..?? சின்ன பாப்பா கிட்ட சொன்னா கூட இந்த காலத்துல நம்ப மாட்டாங்க".

சொல்லியபடி 'உன் பருப்பு என்கிட்ட வேகாது' என்பது போல் லுக் விட்டாள்.


"அப்படின்னா நீ இன்னும் அந்த பையனை மறக்கல.. அவனோட திங்ஸ் பத்திரமா வச்சி இருக்கிறதை பார்த்தா.. உனக்கு அவனை பிடிக்கும் போல..." எதையோ மனதில் கணக்குப் போட்டப்படி தூண்டில் போட்டான், இதையறியாத மீனும் அழகாய் சிக்கியது.

"ஆமா.. நான் இன்னும் அந்த பையனை மறக்கல.. என்னோட முதல் க்ரஷ் அப்டின்னு கூட சொல்லலாம். அதுக்கு இப்போ என்ன..? அவன் இப்போ திரும்பி வந்தா, யெஸ் ஐ லைக் யூ.. அப்படின்னு கூட சொல்லுவேன். அதுல உங்களுக்கு என்ன பிரச்சனை..??"

அவள் வெளிப்படையாக பேசியதில் வந்த புன்னகையை அடக்க பெரும்பாடுப்பட்டான். சரியான மக்குடி நீ.. உன் எதிர்லயே உக்காந்து இருக்கேன். நீ என்னடான்னா... இப்படி பேசுற... சரியான அரை லூசுடி...

"அது சரி...அப்போ மத்த பசங்ககிட்ட.. ஐ மீன் உன்னை மத்த டைம்ல காப்பற்ற வந்தவங்ககிட்ட என்ன சொல்லுவ...??"

"ஐ லவ் யூ ன்னு சொல்லுவேன்..!" பட்டென சொன்னாள்.

வியப்பில் புருவம் உயர்ந்தது மட்டும் தான் அவனிடம் தெரிந்த மாற்றம் . மத்தப்படி அவன் கல்லூளி மங்கனாய் இருந்தான்.

"யார் அந்த லக்கி பாய்...?! போய் சொல்லிட வேண்டியது தானே..."

"யாருக்கு தெரியும்...? அவன் முகத்தை எங்கே காட்டுனான்...?!! இருட்டுல தான் பார்த்தேன். சரியா தெரியல.. இந்த கற்கள் கூட அவன் தான் தந்தான். வெய்ட் பண்ணு திரும்பவும் வருவேன்னு சொன்னான்".

ஹ்ம்ம்... பெருமூச்சு விட்டப்படி நாற்காலியில் சகஜமாக அமர்ந்து கொண்டாள். இதுவரை இருந்த கோபம் எல்லாம் காணாமல் போயிருந்தது. மனதில் உள்ளது மடை திறந்த வெள்ளமாய் வெளிப்படுத்தினாள்.

"பட் இன்னும் வர்ல.. அந்த தேஜாவூக்காக தான் நான் காத்துகிட்டு இருக்கிறேன். சோ இடையில் வந்து நீ குழப்பம் பண்ணாத. கண்டபடி உளறி நீயே உன்னை அசிங்க படுத்திக்காத. உனக்கு என்னை பிடிச்சிருக்கலாம். ஆனால் அல்ரெடி நான் தேஜாவூ கூட கமிட் ஆகிட்டேன்.

பொய் சொல்லி.. உன் காதலை கேவலப்படுத்தி... உனக்கு நீயே ஆப்பு வச்சிக்காத. ஒழுங்கா பெரிய மனுஷனா நடந்துக்க..

புரியுதா...??"

"நான் சொன்ன எதையும் நம்பல. பொய்யா கதை கட்டி விடுறேன்னு நினைக்கிற. சரி தான். திடு திப்புன்னு வந்து இப்படி ஒன்றை சொன்னால் யாருக்கு தான் நம்ப தோன்றும்... என்னோட தரப்பு விளக்கத்தை நான் கொடுத்துட்டேன். நம்புவதும் நம்பாததும் உன்னோட இஷ்டம். சொல்லி புரிய வைக்க முடியாதவங்களுக்கு பட்டா தான் தெரியும்ன்...னா.. அப்படியே விட்டுற வேண்டியது தான்.. இனி நீயா என்னை தேடி வர வரைக்கும் நான் உன்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்.
அப்படியா.. சரி தான். இவ்ளோ தூரம் மனசு விட்டு பேசுனத்துக்கு ரொ..ம்ப தாங்க்ஸ்மா. நவ் யூ கோ". இவ்வளவு நேரம் தோழமையுடன் உரையாடி கொண்டிருந்தவன் திடிரென அந்நியன் மாதிரி மாற்றி பேசவும் பெண்ணவளுக்குள் லேசான சோகம் படராமல் இல்லை.

என்ன.. இவன் உடனே தலையாட்டிவிட்டான். முரண்டு பிடிப்பான் என்றல்லவா நினைத்தேன். குழப்பமாய் இருந்தாலும் ஒன்றும் பேசாமல் எழுந்து சென்றாள். கதவை திறக்க முயன்ற சமயம்,

"ஒன் மினிட்..."

அவள் திரும்பி என்னவென்று பார்க்கவும்...

அவன் அவள் பின்னே வந்து நிற்கவும் சரியாய் இருந்தது. அவன் மீது தேகம் படாமல் இருக்க கதவில் ஒட்டிக் கொண்டாள். அவனோ இன்னும் நெருக்கமாய் அவளருகே வந்தான்.

"தேஜாவூவை உனக்கு எந்த அளவு பிடிக்கும்...???"

ஹ்ம்ம்... இதை கேட்கவா லூசு பயலே கூப்பிட்ட..
ஷ்... ஷப்பா.. நானும் என்னவோ ஏதோன்னு பதறிட்டேன். ஹ்ம்மம்ம்.. இ...வ..னை... இப்படியே விட கூடாதே... கண்டிப்பா ஏதாவது செய்யணுமே..
வெறுப்பேற்றும் எண்ணத்தில் எதையும் யோசிக்காமல் வாய் விட்டாள் அவள்.

"கட்டிபிடிச்சி முத்தம் கொடுக்குற அளவுக்கு.. போதுமா..??!"

சொல்லிமுடிக்கவில்லை.. அவன் முரட்டு இதழ் அவளது இதழை கவ்வியிருந்தது.

ஷாக்... ஹை வால்டேஜ் ஷாக்...
எம்மாடி...
இ.. இ..இவன்... என்ன செய்கிறான்...??!

யோசிக்க இடம் கொடுக்காமல் அவனுள் புதைய விரும்பியது வெட்கங்கெட்ட மனது. எதிர்ப்பு காட்ட கூட மறந்து போய் கற்சிலையாய் நின்றாள்.

காமத்தில் சேராதது...
காதலர்களுக்கு அவசியமானது...
முத்தமாம்...!
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல கண்மணிகளே....

அடுத்த பதிவு போட்டாச்சு.. படித்து பார்த்துவிட்டு உங்கள் எண்ணங்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16736என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ...
அத்தியாயம் 24(a)



காதலித்துப் பார்..
இந்த பூமி அழகாகும்...
வானம் அழகாகும்...
பூக்கும் பூக்கள் ..
இன்னும் என்ன வேடிக்கை.
வெட்டி வீராப்பு, ஈகோ எல்லாம் தூக்கிப்போட்டு , உங்கள் துணையை போய் காதலியுங்கள்...


இதழோடு இதழ் தீண்டி, உடலெங்கும் ஒருவித அவஸ்தை பரவிட, அவனது சுவாசம் அவளது சுவாசத்தில் கலந்திட, காதல் ஹார்மோன் உணர்வுகளை தட்டி எழுப்பியதில், வயிற்றுக்குள் பட்டாம் பூச்சிகள் ஊர்வலம்...!

செய்வது அறியாது பேசா மடந்தையாக விழித்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.

ஆழ்ந்த முத்தத்தை பரிசளித்தவன், அவள் சுவாசிக்க இடமளிக்க பெண்ணவள் நாணத்தால் நடுங்கி போனாள்.

"ம்ம்ம்ம்... இப்போ கூட உனக்கு அந்த நிழல் தேஜாவூ தான் வேணுமா..? உன் கண் முன்னே நிக்கிற நிஜம் வேண்டாமா..? " இதயத்தை உருக்கும் குரலில் அவன் சொன்னது பெண்ணவளை ஏதோ ஒரு விதத்தில் பாதித்தது. 'நா' மேலன்னத்தில் ஒட்டிக்கொண்டு பேச மறுத்தது. எதுவோ ஒன்று அவனிடம் பேச தடையிட்டது.

"அந்த நிலா சாட்சியா...
வானத்துல இருந்து கொட்டுற அந்த புனிதமான மழை போல.. என்னோட காதல் உனக்கு புரியும்... உன்னோட மூச்சு காற்று வெட்பம், இந்த கற்களுக்கு உயிர் கொடுத்தா...

இதுக்கு மேலே நான் எதையும் சொல்லி உன்னை குழப்ப விரும்பலை. நீயே ஒரு நாள் தெரிஞ்சிப்ப, நான் சொன்னது நிஜமா கட்டுகதையான்னு...

அப்போ வாடி நீ எதிர்ல... இத்தனை வருஷமா என்னை தவிக்க விட்டதற்கு எல்லாத்துக்கும் சே..ர்..த்..து 'வச்சி' செய்யுறேன்... " அழுத்தம் திருத்தமாய் சொன்னான்.

மீசையை முறுவி விட்டுக் கொண்டவன் இதழோரம் புன்னகை மலர, அவளுக்கு வழி விட்டான். தப்பித்தால் போதும் என்று அவளும் ஓடிவிட்டாள்.

" ஐ ம் வெயிட்டிங் பேபி.." சத்தமாக இப்போது முறுவலித்துக் கொண்டான்.

அலுவலகத்திலிருந்து வெளியே வந்த ஆராதனாவிற்கு பதற்றம் சிறிதும் குறைந்த பாடில்லை. குழப்பமான மனநிலையில் பெண்ணவள் அவள் பாட்டிற்கு பேருந்தில் அமர்ந்திருந்தாள். அவளது இடம் வந்த பிறகும் இறங்கவில்லை. எண்ணங்கள் எங்கெங்கோ பயணித்து அவன் சொன்ன விஷயங்களிலே வந்து நின்றது.

நினைவுகள் பின்னோக்கி செல்ல... அவள் அமர்ந்திருந்த பேருந்து மட்டுமே இப்போது முன்னோக்கி சென்று கொண்டிருந்தது.

ஆம். அவன் சொன்னது போல் மிட்டாய் காட்டி தன்னை சீரழிக்க இருந்த தருணத்தில் எவனோ ஒருவன் வந்து தன்னை பாதுகாத்து , பத்திரமாக வீடு சேர்த்ததாக அம்மா சொல்லி அவள் கேட்டதுண்டு. நினைவுகளில் அந்த நிகழ்ச்சி அவ்வளவாக இல்லை. ஆனால் அதன் தாக்கம் சிலசமயம் தன்னையும் அறியாமல் வெளிப்படுவதுண்டு.

யாருக்கேனும் தீங்கு நடந்தால்.. அதை தன் வாழ்வோடு ஒப்பிட்டு தனக்கு நடந்தது போல இந்த மனம் கற்பனை செய்து கொள்ளும். அவ்வாறு எங்கேயோ யாருக்கோ ஏதேனும் நடந்தால் பெண்ணவள் கதறி துடித்த சம்பவங்கள் உண்டு. அந்த சமயங்களில் தாயின் அரவணைப்பிலே கழிப்பாள். அம்மா சொன்ன உற்சாக வார்த்தைகள் தான் அவளை அந்த நிலையிலிருந்து படிப்படியாக மீட்டு இயல்புக்கு திரும்ப செய்திருந்தது.

தாயை கடவுள் என்று கவிஞர்கள் வர்ணித்து கேட்டதுண்டு. ஆனால் அதனிலும் மேலான இடம் என்று ஒன்று இருந்தால் அதை தான் நான் பரிசளிப்பேன் என் அம்மாவிற்கு என்று அவளது மனம் அடிக்கடி சொல்லும்.

அவன் சொன்ன இரண்டாவது நிகழ்வு ஓரளவிற்கு நியாபகம் இருக்கிறது. ஆனால் அப்போது தன்னை காப்பாற்றியவனின் முகம் தெளிவாக நினைவில்லை. ராம் குரல் மட்டும் தான் நியாபகம் இருந்தது. ஒருவேளை ராம் பார்த்திருக்கலாம் அவனை. அவனிடம் பேசினால் ஒருவேளை பதில் கிடைக்குமோ...?!

ஆனாலும் அந்த குலோத்துங்கன்... ம்ஹும்...அவ்ளோ பெரிய அரசர் பெயர் இவனுக்கு எதுக்கு... போடா தடியா... எப்போ பாரு என்னை குழப்பி 'ஜாம்'மாக்கி விடுறதே இவன் வேலை... சோ இவனுக்கு வேற பெயர் தான் வைக்கணும்.
என்ன நேம் வைக்கலாம்....??!
மம்ம்ம்ம்...
யோசித்தபடியே ஜன்னல் வழி வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அங்கே கண்ணில் பளிச்சிட்டது குண்டு குண்டு குலோப்ஜாம் விளம்பர பலகை...

"ஹைய்.....ஐடியா..
ஹா ஹா ஹா...
சிக்கிடிச்சு...

என்கிட்ட வந்து... வம்பு செய்து... குழப்பி... இன்பம் காணுவதால் இன்று முதல் நீ குலோப்-ஜாமூன் என்று அழைக்கப்படுவாயாக..."

ஏதோ அவன் எதிரே இருப்பது போல் கற்பனை பண்ணியபடி கை உயர்த்தி ஆசி வழங்கினாள் ஆராதனா.

"ஹா.. ஹா.. நைஸ் நேம்ல...
ஹா ஹா ஹா..."
தனக்கு தானே புகழ்ந்து கொண்டு கலகல பட்டாசாய் சிரித்துக் கொண்டாள்.

மனதிற்குள் ஒரு வித இன்பம் பரவியது. அவன் முகம் கண்முன்னே வந்து கண் சிமிட்டியது. உடலெங்கும் காதல் அணுக்கள் ஆட்டம் போட துவங்கியது. சற்று முன் அவன் தந்த முத்தத்தின் கதகதப்பின் மிச்சம் உள்ளுக்குள்ளே கொழுந்து விட்டு எரிய துவங்கியது.

இவனிடம் மட்டும் என் மனம் ஏன் அடங்க மறுக்கிறது...? அவன் அருகில் வந்தாலே நான் நானாக இல்லையே... என்னுள்ளே எப்படி இத்தனை மாற்றங்கள்...??! இப்பொழுது எல்லாம் அந்த தேஜாவூ நினைவு வந்தால் கூட இவன் முகம் தானே ஊஞ்சலாடுகிறது... தேஜாவூவிற்கும் இவனுக்கும் என்ன சம்மந்தம்...??! ஒருவேளை அ....வன்... தான் தேஜாவூவாக இருக்குமோ... ஆனால் எப்படி இதை நம்ப...? ஹ்ம்மம்ம்...

குரங்கு மனம் நிலையில்லாமல் அங்கும் இங்கும் தாவியது. பெண்ணவள் மனம் குழம்பியது தான் மிச்சம். தன்னுள்ளே பதிலை வைத்துக் கொண்டு வேறேங்கோ தேடினால் எப்படி கிடைக்கும்...??!

"ஹ்ம்ம்...

அப்புறம் என்ன சொன்னான்....??!" யோசித்தபடியே இருக்கவும் பேருந்து நிற்க்கவும் சரியாக இருந்தது. அவள் இப்போது கடைசியாக மெயின் பஸ் ஸ்டாண்ட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள்.

"ஹைய்யோ கிருஷ்ணா.... இது என்ன விளையாட்டு. என்னை ஏன் இப்படி பாடாய்படுத்துற... நான் எங்க வந்து சேர்ந்திருக்கேன். வீட்டுக்கு போகாம அப்படியே இங்க வரை வந்திருக்கேன்.
ச் ச... வர வர இந்த குலோப்ஜாம் ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுறான்..."அலுத்துக் கொண்டாலும் வேறு வழியின்றி இறங்கி, அங்கிருந்த ஆட்டோ ஸ்டாண்ட் நோக்கி போனாள்.

"டேய் குலோப்ஜாம்... என்...ன...டா... செஞ்ச... உன்னால நட்டு கழந்து போய் திரியிறேன்டா...
போடா விளங்காதவனே..."

புலம்பியபடியே நடையை தொடர்ந்தாள்.

அப்போது தட் தட் தட்... என்ற பலத்த காலடி ஓசை அருகே கேட்கவும் சட்டென திரும்பி பார்க்க, அந்த இருட்டில் எங்கிருந்து அந்த நபர்கள் வந்தார்கள் என உணரும் முன்னே அவளை சூழ்ந்து கொண்டனர்.

இது என்னடா வம்பா போச்சி.. நானே நொந்து போய் இருக்கேன் இதுல இவனுங்க வேற...

"யாருடா நீங்க...??"

திடுத்திப்புன்னு எங்கிருந்து வந்தானுங்க... ஒவ்வொருத்தனும் டன் கணக்குல திம்பானுங்க போல... சும்மா கும்...மு..ன்..னு... குண்டு குண்டு குலோப்ஜாமூன் கணக்காலா இருக்காணுங்க... அட... இது அந்த நியூ தேஜாவூ ரவிக்கு வச்ச பெயராச்சே...சோ இவனுங்களுக்கு வேற பெயர்.ர்.ர்.லா.. வைக்கணும்... யோசித்தபடியே இருந்தவளை கலைத்தது அந்த முரடனின் குரல்.

"ஹே பொண்ணு.. சத்தம் போடாமல் நீயாவே எங்க கூட வந்துரு.. இல்லன்னா பேஜராகிடுவா..."

உண்மையாவே இவனுங்க ரவுடி தானா...?

"ஏய்.. என்ன பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு.. நட..."

"டேய்.. இன்னும் என்னடா இவகிட்ட பேசிக்கிட்டு தூக்குங்கடா..."

"ஹே... ஹே... நில்லுங்கடா... யாருடா நீங்க.. என்ன எதுக்கு வர சொல்றீங்க..."

"ஹா ஹா ஹா ஹா......
வேற எதுக்கு ஓடி பிடிச்சி விளையாட தான்... போலாமா..."

"டேய் டேய்... என்னங்கடா நினைச்சிக்கிட்டிங்க.... ஓடி பிடிச்சி விளையாட இதுவாடா நேரம்... போங்கடா.. போங்க.. போய் பிள்ளை குட்டியை படிக்க வைக்க வழிய பாருங்க.." அசால்ட்டாக கூறியபடி நடையை தொடர்ந்தாள் பெண்.

"ஏய்.. எங்கடி போற..."

"நில்லுடி..."

"டேய்.. இன்னும் என்னடா அமைதியா பேசிக்கிட்டு தூக்குங்கடா..."

எல்லோரும் ஒரு சேர பாயவும் அந்த பெண் மான்குட்டி கொஞ்சம் மருண்டு தான் போனது..

இவனுங்க உண்மையாகவே என்னை கடத்த போறாங்களா...?!

அட பாவி தேஜா வூ... எங்கடா போனா...?? டேய்.. தீ வெட்டி மண்டையா... ஏய் குலோப்ஜாமூன் எங்கடா இருக்க.. பெருசா தேஜாவூக்காக காப்புரிமைல்..லா...ம் கேட்டியே...டா.. இப்போ எங்க போய் தொலைஞ்சடா...

அவளை அலேக்காக ஒருவன் தூக்கி கொண்டு செல்லவும் பெண்ணவள் உள்ளம் 'ஃபியர் மோட்'டிற்கு பறந்தது.

டேய் தேஜா வூ.. இது காமெடி ஸீன் இல்லைடா.. டேஞ்சரஸ் சிட்டுயேஷன்.. சீக்கிரம் வாடா.. நாலு வயசுல காப்பத்துனேன்.. பத்து வயசுல காப்பத்துனேன்.. அப்படி இப்படின்னு பீலா வுட்டியேடா... இப்போ தான்டா நீ நிஜமாலுமே காப்பத்தனும்.... வாடா லூசு பயலே..

"டேய் டேய்... மெதுவா போடா.. கொஞ்சம் மேடு பள்ளம் பார்த்து போடா... பாடி ஷேக் ஆகுதுல... நோகமா நொங்கு தின்னு வளர்ந்த உடம்புடா..... தாங்குமா...??!" அவளை தூக்கி கொண்டு செல்லும் ரவுடிக்கு.. கூட சில பாராட்டு பாத்திரங்களை வாசித்தவள் தொடர்ந்து பேசி கொண்டிருந்தாள்.

"டேய்.. சீக்கிரம் நடடா.. இவள் போடுற சத்ததுக்கு எவனாது வந்துருற போறான்".

"டேய் போய் சீக்கிரம் டிக்கிய திறடா..."

"ஏய்... ஏய்... என்னங்கடா நீங்க..
ஆ.. வூ... ன்னா...டிக்கில போட்டு தூக்கிட்டு போறது... தமிழ் சினிமா பார்த்து ரொம்ப கெட்டு போய்ட்டீங்கடா... டிக்கில எல்லாம் என்னால இருக்க முடியாது... போடா போய் டிரைவர் சைடு டோர் ஓபன் பண்ணு... மம்ம்ம்ம்... கம் ஆன்... குயிக்.."

"டேய்..இவள் அடங்க மாட்டா போல.."

"நாங்க உன்னை கடத்திட்டு போறோம்ங்கிற ஒரு பயம் கூட இல்லமா இந்த பேச்சு பேசுற..."

"ஹாங்... அதுக்கு இப்போ என்னங்கிற... நீ என்ன தொழிலுக்கு புதுசா...?"

"ஏய்.. இவ்ளோ அசால்ட்டா சொல்லுற.. இதுக்கு முன்ன எத்தனை முறை உன்னை கடத்திருக்கிறாங்க...??!!! சொல்லுடி.."

"எனக்கு தெரிஞ்சி இதான் ஃபஸ்ட்..." கண்சிமிட்டி சிரித்தப்படி சொன்னாள்.

"என்னடா இந்த பொண்ணு... லூசு மாதிரி சிரிக்கிறா..."

"டேய் முதல பாஸுக்கு போன் பண்ணி இந்த பொண்ணு தானான்னு கன்பார்ஃம் பண்ணு. சரியான மெண்டல் கேஸ்ஸா இருக்கும் போல..."

"டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....
ஹே.. ஹே...
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....

உன் பார்வை.. உன் தேகம்...
உன் கேசம்.... உன் வாசம்...
எல்லாம்....

டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....
ஹே.. ஹே...
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....

மீ மாட்டி... மீ சிக்கி...
மீ முழிச்சி... மீ நொந்து...
எல்லாம்... உன்னால்....
திஸ் பாய்ஸ் ஆர்
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்.....
ஹே.. ஹே...
டே....ஞ்சரஸ்....டே...ஞ்சரஸ்....."


சன்ன குரலில் அழகாய் மைக்கில் ஜாக்சன் பாப் பாடலை உள்டாவாக்கி பாடினாள் பெண். அந்த ரவுடிகளை விமர்சித்தப்படி, தப்பிக்க வழி கிடைக்காத என்றெண்ணத்தில் ஏதேதோ செய்தாள். கிட்டத்தட்ட பையித்தியம் போல. உணர்வுகளை கட்டுப்படுத்த இது ஒரு சிறந்த வழி. வேறு ஏதும் வேலையில் கவனத்தை திசை திருப்புவதன் மூலம், உணர்வுகளை சிந்தாமல் சிதறாமல் கையாள முடியும். அதை தான் ஆருவும் செய்தாள்.

"டேய்..இந்த பொண்ணு தான்டா... பாஸ் கிட்ட கேட்டுட்டேன். சீக்கிரம் தூக்கிட்டு வர சொன்னார். தேவையில்லாம பேசாம வேலையை பாருங்கடா.."

அய்யய்யயோ...... உண்மையாவே தூக்க போறாங்களே.. டேய்... தேஜாவூ வாடா...

உச்சி முதல் பாதம் வரை பாய்ந்தோடி வந்த பயத்தை எச்சில் முழுங்கி அனுபவித்தாள் பெண். குலோப்ஜாமூனும் சரி.. தேஜாவூவும் சரி... யாரும் வரப்போவதில்லை. இனி தானே தான் தன்னை காப்பாற்றி கொள்ள வேண்டும். எண்ணம் வலுப்பெற பெண்ணவள் மனதில் சில திட்டங்கள் உலா வந்தது.

"ஹ்ம்ம்... ஏறு.. சீக்கிரம் சத்தம் போடாம வண்டியில ஏறு".

"டேய்.. எனக்கு டிரைவர் சீட் இல்லையாடா..." பாவமாய் கேட்டாள்.

அவளை சுத்தி நின்றவர்கள் முறைத்த முறைப்பில்... "ஹே.. நான் நல்லா டிரைவ் பண்ணுவேண்டா... பிலிவ் மீடா ரவுடிஸ்".

அவள் சொன்ன தினுசில் அனைவரும் பக்கென சிரித்து விட்டனர்.

"நாங்களும் எத்தனையோ பேரை கடத்திருக்கோம். ஆனால் உன்னை மாதிரி ஒருத்தியை பார்த்ததே இல்லை. சரியான பீஸ் தான் நீ".

"ஹீ... ஹீ.. ஹீ...."

என்னைய காமெடி பீஸ் ன்னு சொல்லுற.. இருடா மவனே... நான் மட்டும் தப்பிச்சி போகட்டும்.. உனக்கு இருக்குடா வேட்டு... மனதிற்குள் கருவி கொண்டு வெளியே ஜோக்கர் ஸ்மைல் காட்டினாள்.

"டேய் நாம தான் இத்தனை பேர் இருக்கிறோமே.. பின்ன என்னடா....டிரைவர் சீட்ல உக்கார சொல்லு. நம்மள மீறி இவளால் தப்பிக்க முடியுமா என்ன... போற வரைக்கும் கொஞ்சம் என்ட்டயிம்மா ஜாலியா இருக்கும்".

ரணக்களத்திலும் இவனுக்கு குதூகலம் கேட்குது. அடா பாவி மனுசா.. உனக்கு அறிவே இல்லையா.. நீயெல்லாம் எப்படிடா ரவுடி ஆனா...?? ஆராதனா மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.

"ஆமா தலைவா... நாமா இப்படி சிரிச்சி பேசியே எவ்ளோ நாள் ஆச்சு. மனசுல இருக்குற டென்ஷன் இந்த பொண்ணால அப்படியே இறங்கிடிச்சு. இன்னும் கொஞ்ச நேரம் அப்படியே சந்தோஷமா இருப்போமே.

"அப்டிங்கிற..." அந்த தலைவன் என அழைக்கப்பட்டவன் சிறிது யோசனைக்கு பிறகு 'சரி' என்றான். தன் சகாக்களை இப்படி சிரித்த முகத்துடன் பார்ப்பது அவனுக்கும் ஆனந்தமே. அதில் வேறு இந்த சின்ன பெண் சரியான சுட்டியாய் இருக்கிறாள். இவளை எதற்கு கடத்தி வர சொன்னர்களோ... ஹ்ம்ம்... இவளுடன் நட்பு வளர்க்காமல் பார்த்து கொள்ள வேண்டும். இல்லையென்றால் நாமே இவளை காப்பாற்றி விட்டாலும் ஆச்சரிய படுவதற்கில்லை.

"ஹ்ம்ம்... இந்தா பொண்ணே.. பிடிச்சிக்கோ சாவியை " என்று சொல்லியபடி அத்தலைவன் டிரைவர் சீட் அருகில் ஏறி அமர்ந்து கொண்டான்.

"தலைவா.. என்ட்ற பேரு ஆராதனாவாக்கும். பொண்ணு மண்ணுன்னுலாம் கூப்பிடாண்டாம்".

"அப்புறம் பாய்ஸ் சொல்லுங்க உங்களை பற்றி.." இயல்பாக சொல்லியபடி வண்டியை கிளப்பினாள். அவளையே அவள் கிட்னாப் செய்துகொண்டாளோ..??!

###############


"ம்… ந ந ந ந….
காதல் ஆசை யாரை விட்டதோ..
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ..
காதல் தொல்லை தாங்கவில்லையே..
அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே...
யோசனை...
ஓ… மாறுமோ ஓ… பேசினால் ஓ… தீருமோ ஓ…

உன்னில் என்னை போல காதல் நேருமோ..
ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே...
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்...
என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே..

நான் பிறந்தது மறந்திட தோணுதே...
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே..
உன் ஒரு துளி மழையினில் தீராதோ என் தாகமே...

காதல் ஆசை யாரை விட்டதோ..
உன் ஒற்றை பார்வை ஓடி வந்து உயிரை தொட்டதோ...
ஓ… காதல் தொல்லை தாங்கவில்லையே..."


யுவன்ஷங்கர் இசையில் சூரஜ் சந்தோஷ் பாடிய பாடலை... இம்மியும் ஸ்ருதி மாறாமல் மனதை கவர்ந்திழுக்கும்படி பாடிய படியே... கம்பீர துள்ளலுடன்... விரலில் கார் சாவியை ஆட்டியபடியே.. துள்ளி அடங்கிய கேசத்தை மறுகையால் வாரியபடியே.. புன்னகை முகமாய்.. பாந்தவாக பொருந்தியிருந்த ரேய்மேண்ட் சூட்டில்.. ஆணழகனாய் வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன்.

பார்த்த மாத்திரத்தில் நெஞ்சில் பச்சக்கென ஒட்டி கொள்ளும் முகம். எந்த பெண்ணிற்கும் ஏக்கத்தை பரிசளிக்கும் தோற்றம்... அத்தனை அழகனாய்.. அதுவும் தன் கண்ணிற்கு எதிரே நடந்து வந்துகொண்டிருக்கும் தன் ஒற்றை ஆசை பேரனை விழிகளுக்குள் நிரப்பியபடி ஜொள்ளு விட்டப்படி பார்த்து... இல்லை இல்லை.. சைட் அடித்துக் கொண்டிருந்தார் அயர்ன் லேடி.

அவன் இப்போது பாட்டியை நோக்கி தான் வந்து கொண்டிருந்தான். இதழ்கள் அதன் பாட்டிற்கு பாடலை ஹம் செய்தது...

"அதை தட்டி கேக்க உன்னை விட்டால் யாரும் இல்லையே..."

"என்னடா பாட்டெல்லாம் பலமா இருக்கு.. யாரடா தட்டி கேட்கணும்..."

அவன் ஒன்றும் சொல்லாமல் பாடியபடி பாட்டியின் கன்னத்தை ஆசையாய் கொஞ்சினான்.

"ஓ… பகலிரவு பொழிகின்ற பனித்துளிகள் நீதானே..
வயதினை நனைக்கிறாய் உயிரினில் இனிக்கிறாய்..."


"டேய்.. இந்த கிழவிக்கு வயசாகிட்டுன்னாடா சொல்லுற..?" அங்கலாய்த்த பாட்டியை கண்டு கொள்ளாமல், அவர் எதிரில் அமர்ந்தபடி அவர் கைகளை தன் கைகளில் கோர்த்து கொண்டே தொடர்ந்தான்....

"நினைவுகளில் மொய்க்காதே.. நிமிடமுள்ளில் தைக்காதே..
அலையென குதிக்கிறேன் உலை என கொதிக்கிறேன்..
வீடு தாண்டி வருவேன் கூப்பிடும் நேரத்தில்.."


"என்னடா... பக்கத்துல தானடா இருக்கேன்.. பின்ன எதுக்குடா வீடு தாண்டி வரணும்..."

"உன்னால் விக்கல் வருதே ஏழு நாள் வாரத்தில்.."

"அச்சச்சோ.. ஏய் லதா.. சீக்கிரம் குடிக்க தண்ணீ கொண்டு வா.. ரவிக்கு விக்கல் எடுக்குதாம்..."

"ஏழு நாள் வாரத்தில்
ஒரு பார்வை பாரு கண்ணில் ஓரத்தில்..."


"டேய்.. தினமும் என்னை பார்த்துட்டு தானடா ஆபிசுக்கே போற.."

அவன் எழுந்து கொண்டு பாட்டியையும் கை கொடுத்து எழுப்பி.. அவன்பாட்டிற்கு ஆட தொடங்கிவிட்டான்...

"ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்..."


"டேய் டேய்.. இந்த கிழவி கூட போய் ஆடுறீயேடா... கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டி கூட ஆடி பாடுறதை விட்டுப்புட்டு.. ஏன்டா.. என்ன பாடாய் படுத்துற..."

"என் நிலைமையின் தனிமையை நீ மாற்று இந்நேரமே அன்பே..."

"எம்மாடி நேகா.. இங்க வாமா... உன்னை தான் ரவி கூப்பிடுறான் பாரு.."

"நான் பிறந்தது மறந்திட தோணுதே...
உன் ஒரு முகம் உலகமாய் காணுதே..
உன் ஒரு துளி மழையினில் தீராதோ.. என் தாகமே...."


பாட்டியின் கைகளை பிடித்து சுற்றி சுற்றி ஆடியவன்.. அப்படியே பாட்டியை சேரில் உட்கார வைத்துவிட்டு... பின்னே வந்து கொண்டிருந்த நேகாவுடன் அடுத்த ஆட்டத்தை தொடர்ந்தான்...

"ம்… விழிகளிலே உன் தேடல்.. செவிகளிலே உன் பாடல்..
இரண்டுக்கும் நடுவிலே இதயத்தின் உரையாடல்.".


விரல்களை பிடித்துக்கொண்டு இடுப்பில் மறுகை வைத்தபடி... கால்களை முன்னும் பின்னும் பாட்டிற்கு ஏற்றப்படி அசைத்து அழகாய் ஆடினர் இளையவர்கள்.

"காதலுக்கு விலையில்லை எதை கொடுத்து நான் வாங்க
உள்ளங்கையில் அள்ளித்தர என்னை விட ஏதுமில்லை.."


இப்போது நேகாவும் கூட சேர்ந்து பாடினாள். அத்தனை நளினமாய்.. அழகாய் இருவரும் அவரவர் உலகில் கனவில் மிதந்தபடியே ஆட்டத்தை தொடர்ந்தனர்.

"யாரை கேட்டு வருமோ காதலின் ஞாபகம்...
என்னை பார்த்த பிறகும் ஏன் இந்த தாமதம்...
ஏன் இந்த தாமதம்...
நீ எப்போ சொல்வாய் காதல் சம்மதம்..!"


நேகாவின் உடல் மொழியில் அவளது ஏக்கம் ரவிக்கு புரிந்தது... "ஹேய்.. ஆர் யூ ஸ்டில் லவ் வித் மாதேஷ்..?!"

(அதான்ங்க முதல் முறை ரவி இந்தியா வந்து அமெரிக்கா திரும்பும் போது மாலில் சந்தித்து கொண்ட ஸ்நேகிதன் ஒருவன் வந்தானே அந்த மாதேஷ் தான் நேகாவின் காதலன். இருவருக்கும் காதல் ஆனால் வெளியில் பகிர்ந்து கொள்ளாத காதல்.)

நேகா ஒன்றும் பேசவில்லை. அவள் கண்கள் மட்டும் 'ஆம்' என்பது போல கண்சிமிட்டி சைகை செய்தது.

"ஓர் குழந்தையின் மகிழ்ச்சியை போலவே
உனை விடுமுறை தினம் என பார்க்கிறேன்.."


நேகாவின் குரலில் காதல் தெரிந்தது. ஒன்றும் பேசாமல் அவனும் மிச்ச ஆட்டத்தை தொடர்ந்தான்.

"இந்தப்பா ரவி தண்ணீ..."என்று வந்த லதா ஆண்டியையும் அவன் விடவில்லை. அவரையும் இழுத்து கொண்டு வந்து ஒரே ஆட்டம் தான்.

சத்தம் கேட்டு என்ன நடக்குதுன்னு பார்க்க வந்த ராஜசேகரையும் அவன் இழுத்து கொண்டான் தன் ஆட்டத்திற்குள். வீடே பாட்டும் ஆட்டமுமாய் களை கட்டியது.

ஆராதனா தன்னை கடத்த வந்த ரவுடிகளிடம் இலகுவாக பேசி காய் நகர்த்த... இங்கே ரவி வர்மனோ ஆடி பாடி தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறான். இத்தனை வருடம் மனதிற்குள் வைத்திருந்த காதலை தன் தேவதையிடம் கொட்டிவிட்ட திருப்தியில் மனம் இலகுவாகி மனதிற்குள் மகிழ்ச்சி மாத்தாப்பூ பிரவேசம்.

அவனது ஆட்டத்தையும் பாட்டையும் ரசித்து பார்த்து கொண்டாடி மகிழ்ந்தது அவனது குடும்பம்.

"போதும்டா பேரா.... எதுக்கு இவ்ளோ ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம். என்ன விஷயம்டா..."

"சும்மா தான்.." கண் சிமிட்டி தோள் குலுக்கி சொன்னான் ரவி.

"ஏய் ரவி. பொய் சொல்லாத. சம்திங் ஸ்பேஷல். டெல் மீ யா".

"ஆமா ரவி. நேகா சொல்லுறது போல ஏதோ விஷயம் இருக்கு. இத்தனை வருஷத்துல உன் முகத்துல இவ்ளோ சந்தோஷம் நாங்க யாரும் பார்த்ததே இல்லை... ஹப்ப்பா... பார்க்கவே எவ்ளோ அழகா இருக்கு தெரியுமா?"

பாட்டி,அப்பா, லதா ஆன்ட்டி, நேகா எல்லோரும் எவ்வளவு கேட்டும் அவன் வெளிப்படையாக எதுவும் சொல்லவில்லை. பிறகு நேரம் வரும்போது சொல்கிறேன் என்று போய்விட்டான் அவனறைக்கு.

"லதா நீ ரவிக்கு புடிச்ச இடியாப்பமும் தேங்காய் பால் குர்மாவும் பண்ணுறீயா...? அவனை சந்தோஷமா பார்க்கும் போது எனக்கு ரொம்ப நிம்மதியா இருக்கு".

"கண்டிப்பா பண்ணுறேன். ஆமாம்மா எனக்கும் அவனை இப்படி பார்க்கும்போது ஹாப்பியா தான் இருக்கு".

"ஹ்ம்ம்...இளங்கோ எங்கே? இன்னும் வீட்டுக்கு வரலையா...?"

"ஃப்ரென்ட் ஒருத்தரை பார்க்க போனதா சொன்னார். லேட்டா தான் வருவேன்னு சொல்லிட்டு தான் போயிருக்கார்".

"ஓ.அப்படியா.. சரி நீ போய் வேலையை பாரு".

"ம்ம்ம்ம்...." சொல்லியபடி லதா கிச்சனுக்குள் சென்றுவிட்டார்.

ராஜசேகர் பாட்டியின் அருகில் வந்து..

"அம்மா கவனிச்சீங்களாம்மா. ஏதோ கண்டிப்பா நடந்திருக்கு. அதான் ரவி முகத்துல அப்படி ஒரு சந்தோஷம்".

"ஹ்ம்ம்... நானும் அப்படி தான் நினைக்கிறேன்".

"அம்மா. நான் இன்றைக்கு கீர்த்தனா அதான் என்னோட சின்ன வயசுல நம்மளோட எதிர் வீட்ல குடியிருந்தாங்களே... அந்த கீர்த்தியை தான் பார்த்தேன். இன்னும் அப்படியே குழந்தையாட்டம் தான் என் கண்ணுக்கு தெரியுற.. ஆனால் என்னை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிட்டா..." மகிழ்ச்சியாய் சொல்ல தொடங்கி சோகத்தில் முடித்தார்.

"என்னடா சொல்லுற.. எப்படி இருக்குறா அந்த குட்டி.. நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருக்க வேண்டியது தானே...?"

"பொறுங்கம்மா... ஒரு நாள் குடும்பத்தோட வரதா அவளே சொல்லியிருக்கிறா..."

"அப்படியா...சரி சரி. அவளை பார்த்து எவ்ளோ வருஷம் ஆச்சி...ஹ்ம்ம்.... ஆமா.. உன்னை எதுக்குடா லெப்ட் அண்ட் ரைட் வாங்குனா...?!"

"அதுவா... பார்கவியோட இழப்புக்கு அவள் தான் காரணம்ன்னு நான் தப்பா நினைச்சிட்டேனாம். அவள் பக்கத்துல இருந்து எந்த ஒரு விளக்கத்தையும் கேட்காம அவாய்ட் பண்ணேனாம். சோ எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கேள்வி மேல் கேள்வி கேட்டு பிண்ணி எடுத்துட்டா..."

"அட... இது வேறயா... அப்புறம் என்ன ஆச்சி.."

"அப்புறம் என்னம்மா... அன்றைக்கு என்னோட சிட்டுயேஷன் என்னன்னு சொன்னேன். அதே மாதிரி அவளும் சொன்னா. அப்புறம் தான் அவள் கோபத்தை இறக்கி வச்சா...."என்றபடி கீர்த்தனவுடன் நடந்த வாக்குவாதத்தை விளக்கமாக கூறினார்.

"டேய்.. இப்போ நீ என்ன சொன்ன...?!!"

"என்னம்மா... என்ன ஆச்சி.. ஏன் இவ்ளோ டென்ஷன் ஆகுறீங்க..?"

"ம்ம்ம்.. நான் கேட்டதை மட்டும் சொல்லு. பார்கவி கீர்த்தனா வீட்டுக்கு போகும் போதும் வரும் போதும் என்ன நடந்து. தெளிவா சொல்லு" குரலில் அழுத்தம் வந்திருந்தது. விஷயம் ஏதோ பெரிது என்று மட்டும் ராஜசேகருக்கு புரிந்தது. இருந்தும் அவசரப்பட்டு எதுவும் பேசாமல் அவர் கேட்ட கேள்விகளுக்கு மட்டும் பதில் கொடுத்து கொண்டிருந்தார்.

அயர்ன் லேடியின் மனம் எஃக்கை விட உறுதியாய் மாறிக்கொண்டிருந்ததை அவர் உடல் இறுகுவதிலிருந்தே தெரிந்து கொள்ள முடிந்தது. முகம் ரௌத்திரமாக மாறியது.

அவரது முகமாற்றத்திலிருந்தே ஏதோ ஆபத்து செய்தி என்று ஊர்ஜின படுத்திய ராஜசேகர் பதறியபடி,

"என்னம்மா... ஏன் இவ்ளோ கோபம்? யார் மேல...!?? சொல்லுங்கம்மா...."

கிழட்டு சிங்கம் பதறியதில் அந்த அயர்ன் லேடி செவிகள் கொஞ்சம் லேசானது. இத்தனை நாட்களாய் தான் தேடிக் கொண்டிருந்த விஷயத்திற்கு பதில் கிடைத்த திருப்தியில் ஏதோ பேச தொடங்கவும், மேசை மீதிருந்த தொலைபேசி அலற தொடங்கியது.

எடுத்து பேசிய அயர்ன் லேடி முகத்தில் வர்ணஜாலங்கள் தாண்டவமாடியது. ஒரு கோடி மின்னல் வெட்டியது போல முகம் பிரகாசமானது. அவரையே பார்த்துக் கொண்டிருந்த ராஜசேகரது மனம் செய்தியை அறிந்து கொள்ள ஆர்வம் காட்டியது.

பேசி முடித்து அலைபேசியை வைத்தவர்... நிம்மதி மூச்சை ஆழ்ந்து சுவாசித்தார். மூடிய இமைகள் வழியே இரு துளி கண்ணீர் துளிகள் வைரமாய் மின்னியது. மெதுவாக இதழ் திறந்து ராஜசேகரை பார்த்தபடியே சொன்னார்,

"பார்கவி இஸ் பேக்".
 
Last edited:

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
16919

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ!
அத்தியாயம் 24 (b)



நீண்ட பிஞ்சு விரல்கள் ஸ்டியரிங் வீலில் நடனம் ஆட.. பெண்ணவள் ஆராதனாவின் இதழ்கள் அதன் வேலையை செவ்வனே செய்ய... சுற்றி இருந்தவர்கள் காதில் குருதி மட்டும் வடியாமல்... மூளை கூட மிச்சம் இன்றி உருகி வடிய தொடங்கி இருந்தது. அவள் பேச்சு கொஞ்சம் ரம்பம் போட்டாலும் மனம் லேசானது போன்ற உணர்வு ஏழாமலும் இல்லை.

அமிர்தம் கூட அளவுக்கு மீறினால் நஞ்சு தானே. அப்படி இருக்கையில் எத்தனை நேரம் தான் இவளது அலம்பளை தாங்குவது. கூட்டத்தில் ஒருவன் பொங்கி விட்டான்.

பின்ன.. ரவுடின்னு ஒரு மட்டு மரியாதை இல்லாம இப்படி 'ஜோக், கடி'ன்னு பெயரில் எத்தனை அடிகளை தான் தங்குவான்.

"அண்ணா... என்னால முடியலன்னா. ஒன்று இவளை வாயை மூடிக்கிட்டு வர சொல்லுங்க.. இல்லை என்னை வண்டிய விட்டு இறக்கி விட்ருங்க.." என்று அந்த ரவுடி கும்பலின் தலைவனிடம் முறையிட்டான்.

"டேய் நீ ஏண்டா பொங்குறா. அடங்குடா.. தங்கச்சி நீ சொல்லும்மா" இதை சொன்னது அவளது குறும்பு பேச்சில் கவரப்பட்ட மற்றொருவன்.

"அப்படி சொல்லுங்கண்ணா... " அவனுடன் கைகளை தட்டி மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டவள்,

"வாவ்வவ்வே..." என்று வசை பாடியவனை பார்த்து பழிப்பு காட்டியவள் மிச்ச சொச்ச கடி ஜோக்குகளை அள்ளி விட்டாள். பின் கொஞ்சம் நேரம் கழித்து தன்னை வம்பு இழுத்தவனுடன் டீல் பேசலானாள்.

"இப்போ நான் சொல்லுறதை மட்டும் நீ செஞ்சேன்னு வை... இனி கார் ஸ்டாப் பண்ணுற வரை நான் வாயே திறக்க மாட்டேன். உங்க ரவுடி பேபி.. சாரி சாரி முறைக்காத தலைவா.. உன் அழகுல மயங்கி காரை எங்கேயாவது கொண்டு போய் மோதிட போறேன்" என்று அருகில் இருந்த அந்த கூட்டத்து தலைவனை வாரியவள்... தொடர்ந்து சொன்னாள்...

"உனக்கு நான் பெரிய வேலையெல்லாம் கொடுக்கல.. நான் சொல்லுற ஆளுக்கு லிப் ஸ்டிக் மட்டும் போட்டு விட்டா போதும்".

"ஹா ஹா ஹா... இது என்ன பிஸ்கோத்து.. இவ்ளோ தான் மேட்டர்ரா..."

"பொறுடா என்னை தூக்கிட்டு வந்தவனே...

அந்த ஆள் வேற யாருமில்லை. நல்லமனுஷன் தான்.. "

"ஹ்ம்ம்.. பெயரை சொல்லு முதல.."

"குட் ஸ்னேகாக்கா".

"என்ன சொன்ன.. நம்ம நடிகை ஸ்நேகா அக்காவா..??"

"ஹாங்.." அவனை மேலும் கீழும் பார்த்தவள்.. "துறைக்கு ஆசை தான். நான் சொன்னது 'நல்ல பாம்பு'டா.
இதே ஆசையோடு நல்ல பாம்புக்கு போய் லிப்ஸ்டிக் போட்டுட்டு வா பார்ப்போம்".

'கொள்'ளென்று அனைவரும் சிரித்தனர். முகத்தில் கரி பூசாத குறையாக காலை வாரி விட்டு விட்டாள் பெண். அவனுக்கு சங்கடமாகி விட்டது.

"ஏய்.. இதெல்லாம் கொஞ்சம் ஓவர்".

"சரி சரி.. விடு. உன் ரேஞ்சிற்கு ஒரு சவால்.

நம்ம விநாயகரை உன்னால மடியில வச்சு கொஞ்ச முடியுமா..."

"ஹா ஹா ஹா.. இதெல்லாம் ஒரு சவாலா.. என் ரேஞ்சிற்கு தருவேன்னு பார்த்தா.. பொம்மையை போய் கொஞ்ச சொல்லுற..?!" கிண்டல் தொனித்தது அவன் குரலில்.

"அடங்குடா ரவுடி பையா. நான் சொன்ன விநாயகர்.... யா...யா....யானை பகவான். புரியுதா?" முட்டை கண்ணை விழித்து உருட்டி விளக்கினாள்.

"அய்யய்யயோ.."

"ஹே. அவ்ளோ பெரிய யானையை எப்படிடா மடியில வைக்க முடியும். இதுல வேற கொஞ்சல் குலாவல்ன்னா.. தாங்குமாடா உன் பாடி..? "- ரவுடிகளில் ஒருவன்.

"டேய் நீ சும்மா இரு. இவள் வேணும்ன்னே என்னை வம்புக்கு இழுக்குறா..."

"நான் எப்படிடா உன் ஜாம்பவான் பாடியை இழுக்க முடியும். நானே தூசி மாதிரி இருக்கேன்".- ஆராதனா.

"பாருங்க தலைவா. இவள் என்னையையே வச்சி செய்..ய்..யு..றா"

"ஹா ஹா ஹா..." ஒட்டு மொத்த ரவுடி கூட்டமும் ரவுடி'பேபி'யாக மாறி புன்னகைத்தது.

"சரி விடு. ஒர்ரி பண்ணிக்காத பேபி. இப்போ அடுத்த சவால் சொல்லுறேன். ரொம்ப ஈஸி தான். நம்ம வாம்பயர் இருக்காருலா... டேய் டேய் பேய் முழி முழிக்காதடா.. முழுசா சொல்லி முடிச்சிடுறேன். அதான் நம்ம இரத்த காட்டேரி கொசு அண்ணாச்சி இருக்காருலா அவர்க்கு ஒரே ஒரு தடவை டி...டி..ரஸ் போட்டு விட்டா போதும்". கண்சிமிட்டி சிரித்த படி அப்பாவியாக சொல்லி முடித்தாள் ஆராதனா.

சிரிப்பு வெடி வானுக்கும் மண்ணுக்கும் பறந்தது தான் அடுத்து நடந்தது.

"ஹா ஹா ஹா...."

"ஹைய்யோ அம்மா..."

மானம் போச்சே... என்று கர்சீப்பால் முகத்தை மூடி கொண்டான் அவன். "இனி நான் உன் பேச்சுக்கே வரல. ஆளை விடும்மா..." பெரிய கும்பிடு போட்டு ஒதுங்கி கொண்டான்.

"ஹா ஹா ஹா..."

"சிரிச்சு சிரிச்சே என் வயிறு வெடிச்சிரும் போல... ஹா ஹா ஹா.. "

அவர்களுக்குள் பேசிய படியே, அனைவரும் சிரித்து கொண்டிருந்தனர்.

"சரியான வானரம் நீ.." அதுவரை அமைதியாக இருந்த அவர்கள் தலைவன் இப்படி சொல்லவும் மற்றவர்களுக்கு ஆச்சரியம் ஆகி போனது.

ஆராதனாவிற்கும் கொஞ்சம் நாணம் கலந்த சங்கடமாகி போனது. பதில் என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் மூடி கொண்டாள்.

சிறிது நேரம் காரில் அமைதி நிலவியது. அது இப்போது அந்த இடத்திற்கு பொருந்தாது போல ஆராதனாவை தவிர அனைவருக்கும் தோன்றியது.

"ஏன் ஸயிலன்ட் ஆகிட்ட...? என்னோட ஆள்களை மட்டும் இவ்ளோ நேரம் கலாய்ச்சியே இப்போ நான் சொல்லுறேன் ஒரு டாஸ்க். அதை முடிஞ்சா செய் பார்ப்போம்". இப்போது பேரம் பேசியது அத்தலைவன்.

என்ன என்பது போல அவன் முகம் பார்த்தாள்.

"இதோ இத்துனுண்டு இருக்கிற எறும்புக்கு அழுத்தமா ஒரு கிஸ் கொடு பார்ப்போம்".

சட்டென கிறீச்சிட்டு நின்றது வண்டி.

"எ..ன்...ன்...ன..ன..து.. எறும்புக்கு கிஸ்ஸ்ஸா... நானா...???"

"ம்ம்ம்.. நீயே தான்".

"என்ன தலைவா சொல்லுறீங்க??".

"ஆமாடா. இவள் வாயை மூட வைக்க அந்த எறும்பால தான் இப்போதைக்கு முடியும். இவள் நான் செஞ்சு காட்டுறேன்னு வீம்புக்கு போய் கிஸ் பண்ணா எப்படியும் அந்த எறும்புகிட்ட கடி வாங்க தான் போற. இதை அவள் செய்யலன்னா அவளோட டீல் படி வாயை மூடிக்கிட்டு வர வேண்டியிருக்கும். சோ எதுனாலும் நமக்கு வசதி தான்".

"தலைவா... நீங்க எங்கேயோ போயீட்டிங்க.."

அவர்களுக்கு முறைப்பை பதிலளித்தவள் அதன் பின் மறந்தும் வாயை திறக்கவில்லை.

"இதோ.. வண்டியை இந்த பக்கம் திருப்பு. ஹ்ம்ம்..."

அவன் வழி சொல்ல சொல்ல அவள் வண்டியை ஓட்டினாள். யாராவது தன்னையே கடத்த தானே வண்டியை ஓட்டி செல்வார்களா.. ? இந்த உலகத்திலே நான் மட்டும் தான் இப்படி செய்திருப்பேன். பெண்ணவள் மனம் நொந்து கொண்டது.

"ம்ம்ம். நிறுத்து வண்டியை. சாவியை குடு". அவள் ஒன்றும் சொல்லாமல் அவன் சொன்னபடி செய்தாள்.

"கீழே இறங்கு". அவன் குரலில் கட்டளை இருந்தது.

பலி ஆடு போல ஒன்றும் பேசாமல் செய்தாள்.

"டேய் அந்த ஆளுக்கு போனை போடுடா. எங்கே இருக்கான்னு கேளு".

"சரி தலைவா".

ஆராதனா சுற்றும் முற்றும் பார்த்தாள். ஆள் அரவமற்ற காலியான இடம். கொஞ்சம் உயரமான இடமாக வேறு தென்பட்டது. ஊரை விட்டு தொலைவில் வந்திருப்பது தூரத்தே தெரிந்த குட்டி குட்டி வெளிச்ச புள்ளிகளின் மூலம் புரிந்தது. கத்தி கூப்பாடு போட்டாலும் ஒரு காக்கா கூட எட்டி பார்க்காது போல.

அட கிருஷ்ணா.. எப்போ வந்து என்னை காப்பாற்றுவ.. அவள் உள்மனம் நம்பியது. நிச்சயம் அவன் வருவான். அது தேஜாவூவோ இல்லை.. அந்த ரவி குலோப்ஜாமுன்னோ.. யாராக இருந்தாலும் சரி. தனக்கு ஒன்றும் ஆகாது. இல்லாத தைரியத்தை எல்லாம் சேர்த்து திடமாக இருக்க பிரயாத்தனப்பட்டாள்.

கண்ணை கூசும் வெளிச்சத்தில் வானில் மின்னல் வெட்டியதில் பெண்ணவள் உள்ளம் கொஞ்சம் நடுங்க ஆயத்தமானது. இதுவரை நண்பர்களை போல சிரித்து பேசிய ரவுடி பேபிஸ் இப்போது இறுகி போய் நின்றிருந்தனர். இவள் பக்கம் திரும்பவே இல்லை. அது வேறு இவள் மனதில் கிலியை பரப்பியது. பொறுக்கமாட்டாமல் வாய் விட்டு கேட்டாள்,

"அட பாவிகளா.. இவ்ளோ நேரம் பல்லை காட்டி சிரிச்சி பேசிட்டு இப்போ யாரோ போல நிக்குறீங்களேடா.. கொஞ்சம் கூட இரக்கமே இல்லையா..."

அவர்கள் ஒன்றும் பேசவில்லை.

"நீங்கயெல்லாம் மனுஷ ஜென்மங்களா.. இல்லை காட்டு மிராண்டிகளா.. இப்படி யாருமில்லாத இடத்துக்கு பச்சகுழந்தையை கடத்திட்டு வந்திருக்கீங்க".

அங்கும் இங்கும் நடந்தபடி யாரேனும் தன்னை காப்பாற்ற வருவார்வகளா... அதான் அவளோட தேஜா வூ அப்படின்னு தேடி தேடி பார்த்தும் யாரும் வந்த பாடில்லை..

இப்போது வானத்தில் இடியுடன் கூடிய மின்னல் வெட்டியது. மழை பெய்வதற்கான அறிகுறிகள் கண் சிமிட்ட சிமிட்ட... பெண்ணவள் தேகம் தூக்கி வாரி போட்டது.

இவனுங்களை நம்பி பயனில்லை. கஷ்டப்பட்டு ஃப்ரென்ட் ஆகி எப்படியாவது தப்பிச்சிர்லாம்ன்னு பார்த்தா... ஒன்னும் வேலைக்கு ஆக மாட்டுக்குதே. இப்போ என்ன பண்ண...?!

கண்ணை கூசி கொண்டு தூரத்தில் ஒரு வண்டி வருவது தெரிந்தது. ஒரு வேளை தன்னை காப்பாற்ற தான் யாரும் வருகிறார்களோ..?! என்று ஆவலுடன் பார்த்தாள். இவள் மனதிற்குள் யோசித்து கொண்டிருக்கும் போதே வண்டி அங்கு வந்து நின்றது. அதிலிருந்து ஒரு பெரிய மனிதர் இறங்கினார். இறங்கியதும் அந்த ரவுடிகளிடம் ஏதோ பேசியவர் பின் இவளை நோக்கி வந்தார்.

இவருக்கு என் அப்பா வயது இருக்குமா...? பார்க்க அப்படி ஒன்றும் வில்லத்தனமாக இல்லையே. இவரா நம்மை கடத்தி கொண்டு வர சொன்னது?! மனதிற்குள் கேள்விகள் படையெடுத்தது. அதற்குள் இவள் அருகே வந்தவர் இவளை பார்த்து கேட்டார்.

"ஹ்ம்ம்... சொல்லு... எங்கே அந்த பொருள்?" கடினமாய் இருந்தது ஒவ்வொரு வார்த்தைகளும்.

ஏன் இத்தனை கோபம்.?அப்படி என்னிடம் என்ன பொருள் இருக்கு.?

"நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியல".

"புரியலையா...?! ஹாங்... இதை என்ன நம்ப சொல்லுறீயா...? கீர்த்தனாவோட பொண்ணாற்றே... அப்பாவியா தான் பேசுவா".

தன் அம்மாவின் பெயரை சொன்னதும் ஆராதனாவிற்கு இவன் தனதன்னைக்கு தெரிந்தவர் என்பதை குறித்துக் கொண்டது.

"எனக்கு இப்போ உன்கிட்ட பேச நேரமில்லை. எனக்கு கண்டிப்பா தெரியும் . அந்த பொருள் உன்கிட்ட தான் இருக்கு. நீயா கொடுத்தா நல்லது. இல்லை நானா எடுக்க வேண்டியிருக்கும்". கொடூரமாய் அவரது முகம் இப்போது மாறியிருந்தது.

"அய்யோ.. சத்தியமா நீங்க என்ன சொல்லுறீங்கன்னு எனக்கு புரியல". கண்ணில் நீர் நிக்காமல் பெருக அதை உதடு துடிக்க அடக்கியபடி அவரிடம் மாஞ்சாடினாள். பெண்ணவள் இப்போது முழுவதுமாக பயந்து விட்டாள் என்பதை அவளது கண்ணீர் துளிகளே சாட்சி சொன்னது.

அங்கிருந்த யாரும் அவளது நிலையை பொருட்படுத்தவே இல்லை. இப்படி கடத்தல் ஸீன் எல்லாம் சினிமாக்களில் பார்த்தது. இப்படி தனக்கு நேரும் என்று கனவா கண்டாள். யாருமில்லா அந்த இரவில்... நிற்கதியாய் ஒரு பெண்ணாய் ஆண்கள் சூழ நிற்கையில் எந்த பெண் தான் ஐயம் கொள்ளாமல் இருப்பாள்.

தொப்பென தரையில் விழுந்து தன் நிலையை எண்ணி அழுதாள் பெண்.

"ஹ்ம்ம்ச்... முதல அழுகிறதை நிப்பாட்டு. உன்னை யாரும் இங்கே தப்பா எதுவும் பண்ண போறது இல்லை. எனக்கு தேவை அந்த பொருள். அதை கொடுத்துட்டா நான் உன்னை விட்ருறேன்".


"நான் அல்ரெடி உன் வீட்டை செக் பண்ணி பார்த்துட்டேன். உன் ரூம்ல இருந்து தான் வித்தியாசமா ஒளி வந்து. சோ கண்டிப்பா அது உன்கிட்ட இருக்கணும்.

இதுல தேவையில்லாம அந்த குர்க்காவ வேற தூக்க வேண்டியதா போச்சி... "

அழுவதை நிறுத்தி விட்டு நிமிர்ந்து அவர் முகம் பார்த்தாள். என்ன?? இவர் அந்த கு...ர்.. க்..கா..வை.. அப்படியென்றால் அன்று எதேச்சையாக எதுவும் நடக்கவில்லையா..??? இவர் எப்போது இருந்து என்னை கவனித்துக் கொண்டிருக்கிறார்..??

குழப்பத்துடன் அவள் அவரது கண்களை ஊடுறுவி பார்த்தாள்.

"ஹ்ம்ம்.. உனக்கு விளக்கமா சொன்னா தான் புரியும் போல" சொல்லியபடி அவளேதிரே அத்தரையில் அமர்ந்தவர், சுற்றியிருந்த அந்த ரவுடிகளை கொஞ்சம் தள்ளி நிற்குமாறு பணித்துவிட்டு அவளிடம் ஒரு புகைப்படத்தை கட்டினார்.

அவளது அம்மா அப்பா சேர்ந்திருக்க கூட ஒரு பெண்மணி அவர் அருகில் இன்னொரு ஆண். விழி விரிய பெண்ணவள் அதை பார்த்தாள்.

"ம்ம். சொல்லு. இதுல இருக்கிறது யாருன்னு தெரியுதா?!".

"எங்க அம்மாவுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம்.?"

"சம்மந்தம் எனக்கும் உன் அம்மாவுக்கும் இல்லை. கூட நிற்கிற இந்த பெண்ணுக்கும் எனக்கும் தான் ஜென்ம ஜென்மான பந்தம் ஆக வேண்டியது. உன் அம்மாவோட அவள் சேர்ந்ததால எல்லாத்தையும் இழந்துட்டு, இப்போ இப்படி உன்கிட்ட வந்து பேசிக்கிட்டு இருக்கிறேன்".

"என்ன சொல்றீங்க..?! எங்க அம்மா யாருக்கும் கெடுதல் நினைக்க மாட்டாங்க".

"யாரு இப்போ இல்லைன்னு சொன்னா..??!"

"அப்படின்னா...?!"

"ஹ்ம்ம்.. உன் அம்மா பக்கத்துல நிக்குற பொண்ணு பேரு பார்கவி. என்னோட பாருவா ஆக வேண்டியவள்".

பார்கவி என்ற பெயரை கேட்டதும் ஆராதனாவின் நினைவடுக்கில் லேசான நினைவு வந்தது. அப்படியென்றால் இந்த பெண்மணி அம்மாவின் ஃப்ரென்ட் ராஜுவோட மனைவியா தான் இருக்கணும். சிறுவயதில் சில சமயம் அவளது அம்மா இவர்களை பற்றி பேசி கேட்டிருக்கிறாள். இவர்கள் சேர்ந்திருக்கும் புகைப்படம் அம்மாவிடம் இருப்பதையும் பார்த்திருக்கிறாள். அதனால் இப்போது இந்த புகைப்படத்தை பார்த்ததும் நியாபகம் வந்தது.

"நீங்க தான் மித்திரன்..னா??!"

அவர் 'ஆம்' என்பது போல் தலை அசைத்தார்.

"அப்போ உங்க பார்கவி ஏன் அந்த ராஜுவோட நிக்கிறாங்க..?"

அவன் முகம் மீண்டும் விகாரமாய் மாறியது. சில நொடிகள் கண் மூடி எதையோ ஜீரணிக்க போராடியவர், பின் மெதுவாக இயல்பு நிலைக்கு திரும்பினார். அவளை கூர்மையுடன் பார்த்து சொன்னார்,

"அப்போ உனக்கு எல்லா விஷயமும் தெரியும்".

"மேலோட்டமான விஷயங்கள் மட்டும் அம்மா சின்ன வயசுல சொல்லியிருக்கிறாங்க. ஆனால் உங்களை பற்றி தான் தெரியல".

"சொல்லுறேன் கேட்டுக்கோ. இந்த பார்கவி என்னோட மனைவியா வர வேண்டியவ..! அ.. ந்த ராஜசேகர் பார்கவியை மட்டும் பார்க்காம இருந்தி...ரு..ந்..தா இந்நேரம் நானும் பார்கவியும் சந்தோஷமா குடும்பம் நடத்திக்கிட்டு இருப்போம். இடையில் உங்க அம்மா வேற வந்து அவளுக்கு நல்லது பண்ணுறதா நினைச்சி எனக்கு கெடுதல் பண்ணிட்டா".

"அப்போ நீங்க அடுத்தவரோட மனைவியை காதலிச்சிருக்கீங்க...?! அவர்களை அடைய ஏதோ தப்பு பண்ண ட்ரை பண்ணியிருக்கிறீங்க"

"ஏய்....!" பாய்ந்து வந்து அவள் கழுத்தை நெறித்தான். தன் காதலை எவ்வளவு ஈசியாக கொச்சை படுத்துகிறாள். ஆராதனாவிற்கு உயிர் பயம் தொண்டை குழியில் மாட்டி கொண்டு தவித்தது.

"அவள் எப்பவுமே என்னோட காதலி தான். இந்த ராஜசேகர் நேத்து வந்த பையன்" என்று கோபத்தில் பொரிந்து தள்ளியவர் அவரது காதல் கதையை சொல்ல ஆரம்பித்தார்.

தான் பார்கவியின் மேல் வைத்த காதலையும் அதை புரிந்து கொள்ளாமல் ராஜசேகரை அவர் மணந்ததையும், பின் தோழனாக அவருடன் இருந்ததையும்.. அதன் பின்... அந்த டைம் ட்ராவல் பற்றி அவனுக்கு தெரிந்ததை அவளுக்கு புரியும் விதத்தில் அவன் சொந்தகதை சோககதையையும் சேர்த்து... அந்த பயணம் மூலம் தன் காதலை அடைய அவருக்கு தேவையான அந்த பொருளில் வந்து முடித்தார்.

என்ன இது.. ஆள் ஆளாளுக்கு வந்து இன்றைக்கு ஏதேதோ சொல்லிகிட்டு இருக்கிறாங்க. அங்கே ஆபிஸ்ல என்னடான்னா அந்த ரவி பையன் ஒரு கதை சொன்னான். இப்போ இந்த மனுஷர் வந்து ஏதோ உருட்டுக்கட்டை கேம்ன்னு சொல்லுறார். ஒருவேளை அந்த ரவிக்கு இவர் சொல்லுற.. அந்த பொருளுக்கும்.. சம்மந்தம் இருக்குமோ.?

"என்ன... இதை நம்ப சொல்லுறீங்களா.. இந்த காலத்துல போய்... ஏதோ கேம்... மேஜிக் ஸ்டோன்... ப்ளூ ஸ்டோன் அப்படின்னு சொன்னா யாராவது நம்புவாங்களா..?"

"அப்போ நான் சொன்னதை நம்பல. சரி அதை விடு. நீ நம்பு நம்பாம போ. எனக்கு எந்த கவலையும் இல்லை. ஆனால் எனக்கு அந்த பொருள் வேணும். அது கண்டிப்பா எங்க இருக்குன்னு உனக்கு தெரிஞ்சிருக்கும். ம்ம்ம் சொல்லு.." என்று தொடர்ந்து பேசியவர் சட்டென தன் பேச்சை நிறுத்தினார்.

நெற்றி புருவம் சுருங்க ஒரு நொடி யோசித்தவர்..
"வெய்ட்... வெய்ட்... இப்போ கொஞ்ச முன்ன என்ன சொன்ன....? கேம்.. ஸ்டோன்ன்னு சொன்னாலா...??? நான் கேம்ன்னு மட்டும் தானே சொன்னேன். ப்ளூ ஸ்டோன் அப்படி...ன்...னு எதுவும் சொல்ல...லீ...யே..?!"

ஹைய்யய்யயோ..! அப்போ நானாக தான் உளறிட்டேனா..??! அந்த ரவி பைய சொன்னப்போவே ஒழுங்கா கேட்டுருந்தேனா இந்த நிலைமை வந்திருக்குமா?? அவன் சொன்னது அந்த கல்லா தான் இருக்கும்னு நினைச்சி வாய் தவறி சொல்லிட்டோமே..! அய்யோ.. இப்போ என்ன பண்ண...?! பீதியில் அவளது முகம் கலவரமானது.

"எனக்கே நான் என்ன தேடுறேன்னு தெரியாது. குத்துமதிப்பா எனக்கு தேவையானது உன்கிட்ட இருக்கும்ன்னு நினைச்சி தான் உன்னை கடத்த சொன்னது. ஆனால் நீ சரியா எனக்கு தேவையான பொருள் அந்த கற்கள் அப்படின்னு சொல்லுற.. எப்படி..? "

போச்சி... செத்தேன்...! கரேக்ட்டா பாயிண்ட்ட பிடுச்சிட்டானே..

"என்ன பதிலை காணோம்...? உனக்கு அப்போ அந்த விஷயங்கள் எல்லாம் தெரிஞ்சிருக்கு. தெரியாதது போல இவ்ளோ நேரம் அப்பாவியா நடிச்சிருக்க..? அப்படி தானே... ?"

அவள் மாட்டிக்கொண்ட அதிர்ச்சியில் பயந்து போய் நிற்க்கையிலேயே ஓங்கி ஒரு அறை விட்டிருந்தார். கன்னம் எரிந்த பிறகு தான் அவளுக்கு அவர் அடித்ததே உரைத்தது.

"அ...ம்...மா..." வலியில் கத்தினாள்.

"ம்ம்ம்ம்ம்... கத்துடி கத்து.. நல்லா கத்து... நீ இங்கே கத்துறது உங்க அம்மாவுக்கு கேட்கட்டும். அன்றைக்கு மட்டும் புத்திமதி சொல்லி பார்கவியை தடுக்கமா இருந்திருந்தா இந்நேரம் நான் காலத்தையே மாற்றியிருப்பேன். எல்லாம் என்னோட இஷ்டப்படி நடந்திருக்கும்".

அவரது கத்தல் சிங்கத்தின் உறுமலாய் பெண்ணவளை அச்சுறுத்தியது.

"ஆனா எல்லாம் போ..யி... கடைசில என்னோட பா...பா..ர்கவியும் போயிட்டா.. இப்போ வரை அவளுக்கு என்ன ஆச்சின்னு தெரியாம நான் செத்துகிட்டு இருக்கிறேன்" குரல் தழுதழுக்க பேசினார்.

இது அவர் தானா..? குரல் நடுங்க தேம்பி தேம்பி.. சிறு பிள்ளை போல் அழுவது அவர் தானா..?! கொஞ்சம் முன்னே கத்திய கத்தல் எங்கே.. இப்போது இங்கே கண்முன்னே குலுங்கி அழுவது எங்கே...?

ஆராதனா குழம்பி போய் அவரையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

பாவம் மனிதர். இயல்பில் நல்லவர் தான். இந்த காதல் வந்து அவரது நல்ல குணத்தை சோதித்து பார்க்கிறது. அதான் மனிதர் பித்து பிடித்துப்போய் தப்பு வழியில் காதலை அடைய நினைக்கிறார். அப்படி அவர் அடைந்தாலும் அது உண்மையான காதல் சுடராய் ஒளி வீசிடுமா என்ன..?

இயற்கையாக விளைந்த பழங்களுக்கும் செயற்கை முறையில் வளர்ந்த பழங்களுக்கும் எவ்வளவு தான் பார்த்து பார்த்து கவனித்தாலும்.. அதன் சுவை அல்லது போஷாக்கில் கடுகளவேனும் வித்தியாசம் தெரியாமலா போய்விடும்...??? அவர் அழுவதை சிறிது நேரம் வேடிக்கை பார்த்தவள் பின் அமைதியாக கேட்டாள்,

"உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா??"

இவள் என்ன சம்மந்தமில்லாமல் எதையோ கேட்கிறாள் என்று நினைத்தவர் கண்களை துடைத்து தன்னை சரிப்படுத்தியவர் பின் அவளை பார்த்து சொன்னார்,

"ஆமா. ஒரு பெண்ணும் உள்ளாள்".

"உங்கள் மகள் பற்றி சொல்லுங்களேன்.."

மகள் பற்றி கேட்டதும் அவரது முகத்தில் கனிவு வந்திருந்தது.
"சீ இஸ் மை ஏஞ்சல். அவளுடன் இருக்கும்போது மட்டும் தான் என்னோட துக்கம் கவலை எல்லாம் பறந்து போயிடும் அவள் தான் என்னோட உலகமே".

"ஓ.. ஸ்வீட்.. உங்க வைஃப் எப்படி..??"

மனைவியின் நினைவில் புன்முறுவல் பூத்தவர், "அவள் என்னோட எனர்ஜி. வாழ்க்கையில எத்தனையோ முறை நான் அடிப்பட்டாலும் அவள் ஒருபோதும் கலங்குனதே இல்லை. என்னை அவள் எதுக்குமே கவலைப்படவிட்டதே இல்லை. சீ இஸ் மை காட்மாதர், எவ்ரி திங்க்".

"ஏன் கேட்குற..? இப்போ இந்த நேரத்துல இது அவசியமா...??!"

"ஆமா. ரொம்ப அவசியம்". என்று சிறு இடைவெளி விட்டவள் தொடர்ந்தாள்,

"சப்போஸ் நீங்க பார்கவியை மேரேஜ் பண்ணி..யி...ருந்தா இப்போ உங்களோட ஏஞ்சல் அன்ட் காட்மாதர் இன்னொருத்தருக்கு சொ..ந்தமாகி...."

அவரது தாடை இறுகுவதிலே தெரிந்தது அடக்கப்பட்ட கோபம். இருந்தும் அவள் தொடர்ந்தாள்.

"அதாவது இன்னொருத்தருக்கு மனைவியா..."

'ஷிட்.....' சொல்லி முடிக்கவில்லை அதற்குள் கன்னத்தில் விழுந்தது பலமாய் ஒரு அரை. பல்லை கடித்து வலியை தாங்கியவள் நிமிர்ந்து அவர் முகம் பார்த்து மீண்டும் சொன்னாள்.

"யாரோ ஒருத்தருக்கு உங்களோட இன்றைய பொண்டாட்டி, அந்த அவரோட மனைவியாவும்... உங்களோட செல்ல பொண்ணு அந்த முகம் தெரியாதவருக்கு பொண்ணாவும் கூட ஆகியிருக்கலாம் இல்லையா...???"

"என்னடி சொன்ன..??" என்று மீண்டும் அவளை அடிக்க கை ஓங்கியவரை தடுத்தவள்,

"சோ உங்க பொண்ணு, பொண்டாட்டின்னு வர்றப்போ மட்டும் கோபம் பொத்துக்கிட்டு வருதாக்கும்..?! அடுத்தவனுக்குன்னு சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னாலே உங்களுக்கு இவ்ளோ கோபம் வருதே... நீங்க மட்டும் இப்போ என்ன பண்ணுறதா இருந்தீங்க..? அடுத்தவரோட மனைவியை உங்களோட மனைவி இடத்துல வச்சி பார்க்கிறீங்க.. இது எப்படி நியாயம் ஆகும்..? ஹாங்... சொல்லுங்க.. இப்போ மட்டும் ஏன் அமைதியா இருக்கிறீங்க..?

உங்கள் பொண்டாட்டி மட்டும் உங்களுக்கு உத்தமமா இருக்கணும் ஆனால் நீங்க ஊர் மேயனுமா...??"

"ஏய்.. பேசணும்ன்னு என்ன வேணும்னாலும் பேசாதா..! பல்லை பேர்த்திடுவேன். என்னோட மனைவியையும் பெண்ணையும் யாருக்காகவும் என்னால விட்டுக்கொடுக்க முடியாது. இனி ஒரு தரம் அவர்களை வேற யார்கூடயாவது சேர்த்து வச்சி பேசுனா... நான் மனுஷனா இருக்க மாட்டேன்". விரல் நீட்டி எச்சரித்தவரை அலட்சியமாக பார்த்தவள்,

"ஓ.. அது சரி. அப்போ நீங்க சொன்ன அந்த டைம் ட்ராவல்... அது மட்டும் எதுக்காக..??"

முகத்தில் கோபம் கொப்பளிக்க நின்றிருந்தவர் சட்டென அமைதியாகிவிட்டார்.

"நீங்க காலத்தையே மாற்றி அமைக்கணும்ன்னு தானே ஆசை படுறீங்க.. அப்படி இருக்கும்போது... உங்கள் மனைவி மகள் எதுக்கு..? அவர்களையும் தூக்கி தூர போட வேண்டியது தானே.. உங்களோட காதலி அடுத்தவரோட மனைவின்னு ஆன பின்னும் அவர்களை அடைய நினைக்கிறது மட்டும் எந்த விதத்தில நியாயம்...?? அதுவும் சொல்லாத ஒரு தலை காதல்..!

உங்க காதலி வேணும்னு தானே இவ்ளோ தூரம் தப்பான வழியில நடந்திருக்கிறீங்க.. அப்படி ஒருவேளை நீங்க காலத்தை மாற்றி அமைத்தால்.. நான் சொன்னது தானே நடக்கும்..!

உங்க மனைவியை இன்னொருவருக்கு தாரம் வார்த்து கொடுத்துட்டு.. உங்களோட காதலியோட டூயட் பாடுவீங்களா.. அது தான் உங்களோட ஆசையா..??"

தீக்கங்குகளாய் அவளது கேள்விகள் நெஞ்சில் பாய்ந்தது. துடிதுடித்துப் போனார். இத்தனை நாட்களாய் இதை எப்படி யோசிக்காமல் போனேன்...? அவர்கள் இல்லாமல் என்னால் ஒரு வாழ்வை எப்படி எண்ண முடியும்..?? அப்படியென்றால் என் காதல் பொய்யா..? கலக்கம் சூழ ஆராதனாவை பார்த்தார்.

அவரது குழப்பத்தை புரிந்து கொண்டவள் சொன்னாள்,

"உங்களோட காதல் பொய்யின்னு இப்போ யாரு சொன்னா..? அது உண்மையா இருக்க போயி தானே உங்கள் மனைவி மகள்ன்னு யோசிக்காமல் இத்தனை வருஷமா அந்த டைம் ட்ராவல் பற்றியே யோசித்திட்டு இருந்திருக்கீங்க..!!"

"பின்னே... என்ன தான் சொல்கிறாய்...??"


"காதலிச்ச பொண்ணு கிடைக்கலன்னா அந்த காதல் அதோட முடிஞ்சிடுமா என்ன..?! உங்களோட நெஞ்சுல சாவுற வரைக்கும் பிரெஸ்ஸா இருக்குமா இருக்காதா...? இதே இது அந்த காதல் கல்யாணத்துல முடிஞ்சிருந்தா அதோட முடிஞ்சிருக்கும். ஆனால் காதல் சேராமல் போகும்போது தான் இ..ன்னும் இ..ன்னும் ஆழமா மனசுக்குள்ள வேர் விட்டு நீக்கும். அதுக்கு தான் பவர் அதிகம்.

அந்த காதலை தாண்டி பொண்டாட்டி பிள்ளைன்னு நிறைவா ஒரு வாழ்க்கை வாழலாம். ஆனால் அந்த காதல்.. முதல் காதல்.. நமக்குள்ள ஒரு வித மாயம் பண்ணும். நம்மளோட நினைவுகளை இனிமையாக்கும் ரொம்ப ரொம்ப... அதுக்காகவே அந்த லவ் தோத்துப் போனதுக்கு சந்தோஷ படலாம்.

அபகரிக்கிறது அன்பு இல்லை.. அரவணைக்கிறது தான் அன்பு....!

நீங்க மனசு வச்சா இந்த உணர்வில் இருந்து விடுதலை தரலாம். உண்மையா சொல்லுறேன் உங்களை யாருக்காவது பிடிக்கலன்னா விடுதலை கொடுங்க. சந்தோசமா வாழணும்ன்னு விடுதலை கொடுங்க. அந்த கண்ணு இருக்குதுலா.. நீங்க காதலிச்ச பொண்ணோட கண்ணு.. அதுல இருந்து கண்ணீர் வரவே கூடாது. அப்படி பார்த்துக்கணும்... உரிமையா கிட்ட இருந்து இல்லை. விலகி இருந்து.. அது தான் லவ். அந்த இடத்துல தான் உங்களோட லவ் உசந்து நிக்குது.

அந்த பொண்ணு நல்லா இருந்துச்சின்னு வைங்க.. உங்களோட பொண்ணு இன்னும் நல்லா இருக்கும். பியூச்சர்ல்ல உன் பொண்ணுக்கு இந்த விஷயம் தெரிஞ்சா கூட, அது சொல்லும் என் அப்பா...டா.. எவ்ளோ பெரிய ஜென்டில்மேன் தெரியுமா..??! பொண்ணுங்களை மதிக்க தெரிஞ்ச ஒரு ஆண்மகன் எனக்கு அப்பாவா இருக்கிறார்ன்னு சொல்லும்...!

இப்போ சொல்லுங்க.. உங்களோட முடிவு என்னன்னு.. காதலை அடைய தப்பான வழியில போக போறீங்களா..??! இல்லை உங்க பொண்ணோட மனசுல ஹீரோவா இருக்க போறீங்களா..??"

இருளின் நிசப்தம் மட்டுமே சில நொடிகள் அங்கே. தூரத்தே தெரிந்த ஒளி விளக்குகள் நகரத்தின் இரவு நிலையை பிரதிபலிக்க, மனதில் ஏதோ யோசித்தவராய் அதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அவரிடம் பேச வார்த்தைகள் இல்லை. இதயத்தில் ஆணி அடித்தார் போல கேள்விகளால் துளைத்தவள்.. நிதர்சனத்தை எவ்வளவு அழகாய்... சொல்லி விட்டாள் இந்த பெண்.. அப்படியே அவள் அம்மா கீர்த்தனா மாதிரியே பேசுறா...

தான் செய்ய இருந்த காரியத்தின் வீரியம் நெஞ்சில் அமிலமாய் எரிந்தது. இந்த பெண் மட்டும் வராமல் இருந்திருந்தால்... நா.. நா..நான்.. என்ன காரியம் செய்திருப்பேன்... நினைக்கவே நெஞ்சம் வலித்தது.

நிமிர்ந்து அவள் முகம் பார்த்து சொன்னார்.

"தாங்கஸ்.. ரொம்ப பெரிய உதவி செஞ்ச.. என்னை என் பொண்ணோட மனசுல ஹீரோவா ஆக்குனதுக்கு.. நான் என்னைக்கும் உனக்கு கடமை பட்டுருக்கேன்.

வா.. நானே உன்னை வீட்ல விட்ருறேன். உன் அம்மாட்ட பேசுறேன்".

"சரி. வாங்க போகலாம்" என்று எழ முற்பட்டவள், அவ்வளவு நேரம் கால் மடக்கி அமர்ந்து இருந்ததால் கால் மரத்து போயிருக்க.. நிலை தடுமாறி.. அருகிலிருந்த பள்ளத்தில் எதிர்பாரமல் விழுந்தாள்.

இதை சற்றும் எதிர்பார்க்காத அவரும் அந்த ரவுடிகளும் திகைத்துப் போய் நிற்க... அங்கே காலத்தின் விதி மேகப் பெண்ணை பிரசவிக்க செய்து தனது இருப்பை மழையாக அறிவித்தது.

பிடிக்க பிடிமானம் ஏதும் இல்லாமால் அவள் சரசரவென கீழே போய் கொண்டே இருந்தாள். வானத்திலிருந்து கொட்டும் மழை மட்டுமே இப்போது அவளை கட்டி தழுவியது. நெஞ்சம் படபடக்க... உள்ளத்தில் தங்கியிருந்த பயம் வீறு கொண்டு எழ.. பெண்ணவள் உள்ளம் தானாக அவனை தேடியது. நெஞ்சோடு கைகளை இறுக்கி பிடித்திருந்தவள் தேஜா வூ நினைவாக அவள் கழுத்தில் அணிந்திருந்த அந்த கற்களை உள்ளங்கையில் தாங்கி பிடித்தபடி,

"தே....ஜா வூ..! நான் நம்புறேன்.. உ...ன்னை நம்புறேன்.. பிளீஸ் சேவ் மீ..! ர..ர...வி....!" உயிரை குரலில் தேக்கியப்படி அந்த கற்களுக்கு தன் மூச்சு காற்று மூலம் உயிர் கொடுத்தாள்.

அந்த நிலா ஒளியில், மழை துளிகள் அந்த கற்களில் பட்டு சிதற... உள்ளங்கையின் கதகதப்பில் அந்த கற்களுக்கு வெட்பம் கிடைக்க... அவள் மூச்சு காற்று தூங்கி கிடந்த கற்களுக்குள் உயிர்மூச்சினை பரப்பியது...

அது வெறும் சாதாரண கல் என்று நினைத்திருந்தவள் சிறிதும் அறிந்திருக்க மாட்டாள். அது ஒரு மாய சக்தி கொண்ட கல் வடிவத்தில் உள்ள 'நண்பன்' என்று.

அவள் 'ரவி'... 'தேஜா வூ'.. என்று மாற்றி மாற்றி புலம்பி கொண்டே ... அந்த மலைச் சரிவிலிரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தாள்.

"வீழ்கிறேன் நான்...
உன்னுடன் வாழ்வதற்கே..!"
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் தோழிஸ்

அடுத்த பதிவு உங்கள் பார்வைக்கு போட்டாச்சு.. படிச்சி பாருங்க. பிடிச்சி லைக் பண்ணுங்க. அப்படியே நாலு வார்த்தை கதை இப்படின்னு சொல்லிட்டு போங்க. என் செல்ல குட்டீஸ் ur words are my energy tonic da.

சோ மறக்காம கருத்து திரி பக்கம் போய் நாலு வார்த்தை அது நிறையோ குறையோ சொல்லிட்டு போங்க.

இது வரை ஆதரவு தெரிவித்து வரும் அனைவருக்கும்..... :Puszi::smiley18::smiley39:
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 25 (a)


உடல் சாய்ந்தாலும்
உன்னை சேர்ந்திடுமே..
என் ஆன்மா..!

ei4NRVW72282.jpg



மித்தரனுடன் உரையாடிய பின்பு எல்லாம் சுபமாய் முடிந்த திருப்தியில் பெண்ணவள் ஆராதனா சட்டென்று எழ எதிர்பாராமல் கால் வழுக்கி அங்கிருந்த பள்ளத்தில் சரிந்தாள். அங்கிருந்த யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. ரவுடிகளும் மித்ரனும் திகைத்துப் போய் இருக்கையிலே, அவள் பிடிப்பதற்கு எந்த பிடிமானமும் இன்றி வேக வேகமாய் கீழ்நோக்கி சென்று கொண்டிருந்தாள். காற்றிலே மிதக்கும் இலையை போல கீழே சரசரவென விழுந்து கொண்டிருந்தாள்.

அப்போது அவள் என்ன நடக்கிறது என உணரும் முன்னே, சட்டென்று காற்றில் மிதக்கும் காகிதம் போல அந்தரத்திலே மிதந்தாள்.

எ..எ..எ..ன்..ன.. நாம் இன்னும் கீழே விழவில்லை?! நமக்கு ஒன்றும் ஆகவில்லையா..? என பயத்தில் மூடியிருந்த கண்களை திறந்து பார்த்தவள் ஆச்சரியத்தில் அதிர்ந்தாள்.

அவள் எந்தவித சப்போர்ட்டும் இல்லாமல் மிதந்து கொண்டிருக்கிறாளா..?? எப்படி..? அவள் ஆராய்ச்சியிலிருக்கும் போதே, அந்த கற்கலிலிருந்து ஒரு மாய ஒளி வீசியது. அது அவளை ஏதோ ஒரு மந்திர உலகத்தில் பயணிக்க வைத்தது. உடல் நடுங்க..இமைகளை மூட மறந்து.. ஆச்சரியத்தில் இதழ்கள் பிரிந்திட.. சுற்றிலும் நிறங்கள் அங்கும் இங்கும் பாய.. கண்கள் கூச.. பெண்ணவள் அதுனுள் தொப்பென விழுந்தாள்.

அவளை சுற்றி இப்போது காலங்கள் பின்னோக்கி ஓடி கொண்டிருந்தது. எதுவும் சரிவர புரியவில்லை. ஆனால் ஒன்றை மட்டும் உணர்ந்து கொள்ள முடிந்தது அவளால். தாம் ஏதோ கால சக்கரத்தில் பயணிக்கிறோம் என்பதை அவளால் அனுமானிக்க முடிந்தது. ரவி சொன்னதும் அந்த மித்ரன் சற்று முன் கூறியதும் இதை பற்றி தானோ..?! சிந்தனையிலிருக்கும் போதே அந்த வண்ண சுழல் சட்டென ஓரிடத்தில் வந்து நின்றது. சுற்றிலும் ஒரே இருட்டு. கனவு காண்கிறோமா நாம்? பெண்ணவள் தன்னை சுற்றி என்ன நடக்கிறதுவென புரியாமலே கவனித்துக் கொண்டிருந்தாள். சட்டென அந்த ஒளி வெள்ளம் குறைந்து ஓரிடத்தில் வந்து நின்றாள்.

தான் எங்கு இருக்கிறோம் என சுற்றிலும் பார்வையை சுழல விட, அவள் இது வரை பார்த்திராத இடமாக இருந்தது. ஏதோ ஒரு நகரத்தின் வீதியில் நிற்பது புரிந்தது. வீடுகள் மற்ற கட்டிடங்கள் எல்லாம் பழைய அமைப்பில் இருந்தது. நெருக்கடியாக இல்லாமல் கொஞ்சம் இடைவெளிவிட்டு அவை அமைந்திருந்தன. தெரு விளக்குகள் நிலா ஒளிக்கு போட்டியாக ஜொலிக்க அந்த இடமே வித்தியாசமாக பெண்ணவளுக்கு பட்டது.

அப்போது அங்கே தூரத்தே யாரோ நடந்து வரும் அரவம் கேட்கவே பார்வையை அங்கே திருப்பினாள். அந்த ஆள் பார்க்க சைக்கோ மாதிரி இருந்தான். அவன் பின்னே ஒரு சிறுகுழந்தை பின்தொடர்ந்து வருவது தெரிந்தது. அவன் பெண்ணாக இருக்குமோ..? பார்க்க பக்கா குடிகாரன் மாதிரி இருக்கிறான் இவனை நம்பி குழந்தையை தாய்காரி அனுப்பி வைத்திருப்பாளோ. ச்...ச்..ச.. இருக்காது.

இவன் இந்நேரத்தில் எங்கே போகிறான், அதுவும் இருட்டு பக்கமாய். அறிந்து கொள்ளும் ஆவலில் அவன் போகும் திசையையே பார்த்துக் கொண்டிருந்தாள். இப்போது இவளை நோக்கி அவர்கள் வருவது தெரிந்தது. எதுவோ தோன்ற பெண்ணவள் அவர்களுக்கு தெரியாமல் மறைந்து நின்று கொண்டாள்.

அவன் இவளை கடந்து சென்றான். பின்னால் அந்த சிறுமியும் வந்துக் கொண்டிருந்தாள். அச்சிறுமி இவளை கடந்து செல்கையில் அதிர்ந்து போய் விட்டாள் ஆராதனா. ஏனென்றால் அந்த சிறுமி இவள் தான். ஆம்! ஆராதனாவே தான். இவளது சின்ன வயதில் இருக்கும் அந்த 'குழந்தை ஆராதனா'. சிறு வயது ஆராதனா..! அப்படியென்றால் என் கடந்த காலத்திற்கு நான் வந்திருக்கிறேன்னா?? நான் பெரிய பெண்ணாக இருக்கிறேன். இந்த பெண் சிறுமியாக இருக்கிறாளா?! அப்படியென்றால் இங்கே இருப்பது இரண்டு ஆராதனா ! குழந்தை பருவ ஆராதனா ஒன்று, பெரிய பெண் ஆராதனா ஒன்று.

இது எப்படி சாத்தியம்?! அதிர்ச்சியில் ஆராதனாவிற்கு மயக்கமே வரும் போலிருந்தது. இருந்தும் இருக்கும் நிலை எண்ணி தன்னை சுதாகரித்துக் கொண்டவள் மெதுவாக அவர்கள் பின்னே யாருமாறியாமல் மறைந்து சென்றாள். அங்கே அவன் யாருமற்ற இடத்தில் அந்த சிறுமியிடம் தப்பாக நடக்க முயற்சித்துக் கொண்டிருந்தான். இவளுக்கு தூக்கிவாரி போட்டது. அய்யோ! இந்நிகழ்ச்சி பார்ப்பதற்க்கு அப்படியே சிறு வயது ஆராதனாவிற்கு நடந்தது போல இருந்தது. எப்படி இது..?? என்று அவள் யோசித்து கொண்டிருக்கும் போதே எங்கிருந்தோ ஒரு சிறுவன் ஓடி வந்தான். அந்த சைக்கோ மனிதனை தள்ளி விட்டு அந்த குழந்தையை காப்பாற்ற முயன்றான்.

அவனோ முரடன். இவனோ சிறுவன். அவனிடம் இச்சிறுவனது மோதல் எடுபடுமா என்ன..?? அந்த குடிகாரன் ஒரே தள்ளு. அந்த பையன் இவள் காலடியில் வந்து விழுந்தான். எழுந்தவன் இவள் இருப்பதை பார்த்து,

"ஆன்ட்டி என்ன பார்த்துக்கிட்டு நிக்கிறீங்க. கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க". என்று ஆராதனாவின் கைகளை பிடித்து இழுத்து சென்றவன் அவள் கையில் கீழே கிடந்த பெரிய கல்லை கொடுத்தவன் "பிடிங்க ஆன்ட்டி. இதை அவன் மேலே போடுங்க" சொல்லிவிட்டு அவன் அங்கே தூரமாய் கிடந்த கட்டை ஒன்றை எடுத்து வந்தான்.

அதற்குள் அவன் அச்சிறுமியிடம் மீண்டும் தவறாக நடக்க முயல, அந்த குழந்தை பயந்து போய் வீறிட்டு அழ, இங்கே ஆராதனா நொடியும் தாமதிக்காமல் அந்த குடிகாரன் மேல் கல்லை வீசினாள். அது அவனது முதுகை பதம்பார்த்தது.

"அய்யோ!அம்மா!" அலறியபடி கீழே விழுந்தான். அந்த சிறுவனும் இது தான் சமயம் என்று அவனை அடி வெழுத்து வாங்கிவிட்டான். அவன் மயக்கம் போட்டு விழும்வரை அச்சிறுவன் விடவில்லை. அப்படி ஒரு முரட்டு அடி. இந்த சிறுவனுக்குள் இவ்வளவு சக்தியா..?! சிந்தனையிலிருக்கும் போதே ஆராதனாவை அந்த 'குழந்தை ஆராதனா' கட்டி அணைத்துக் கொண்டாள். தேம்பி தேம்பி அழுத குழந்தையை ஆறுதல் படுத்தினாள் பெரியவள்.

"ஒன்றுமில்லைடா. கண்ணை துடை. அதான் நாங்க வந்துட்டோம்ல. அழாத குட்டிமா.. என் அம்மு குட்டியில்ல.." செல்லம் கொஞ்சியபடி கண்ணை துடைத்துவிட்ட அவளது கைகள் அப்படியே நின்றது. என்ன இது...? என்னையே நான் சமாதான படுத்துகிறேனா..? அம்மு என்று எனக்கு நானே கொஞ்சி கொள்கிறேனா..? என்ன நடக்கிறது இங்கே..? ஆயசமாக உணர்ந்தாள் ஆராதனா.

"ஹ்ம்ம்... கொஞ்ச நேரத்துக்கு இவன் எழுந்திருக்க மாட்டான் ஆன்ட்டி, நீங்க வாங்க. அம்மு குட்டியை அவுங்க அம்மாட்ட கொண்டு போய் விட்ருலாம்"

"அம்மு.. உனக்கு ஒன்றும் ஆகலையே...?" குழந்தையின் கண்ணீரை துடைத்து விட்டப்படி கேட்டான் சிறுவன்.

ஆராதனாவிடம் இருந்து பிரிந்து அவனை கட்டி அணைத்துக் கொண்டது. குழந்தையின் முதுகை ஆதரவாய் தட்டிக் கொடுத்தவன்.

"ஷ்.. ஷ்... ஒன்றும் இல்லைடா.. அதான் நாங்க வந்துட்டோம்ல.. அழுகாதடா.. என் அம்முல..?!"

கன்னத்தில் விழுந்த கண்ணீரை தன் கரங்களால் துடைத்து விட்டான் அவன். உதடு பிதுக்கி அழும் குழந்தையை சமாதானப் படுத்தியவனிடன்,

" நா..நா..னு... ரொ...ம்ப பயந்த்துட்டேன் பப்பு..." என்று மீண்டும் விட்ட அழுகையை தொடர்ந்தது அக்குழந்தை.

"முதல அழுவுறதை நிறுத்து.. இப்படி தான் யார் என்ன வாங்கி தாரேன்னு சொன்னாலும் பின்னாடி போயிருவீயா? மம்மிட்ட சொல்ல தெரியாது? இனி ஒரு தரம் இப்படி பண்ணு..!!? உனக்கு இருக்கு. ஹ்ம்ம் எழுந்திரு. வீட்டுக்கு போகலாம்".

சொல்லிவிட்டு அந்த சிறுவன் நடக்க ஆரம்பித்தான்.

ஆராதனாவும் 'குழந்தை ஆராதனா'வை தூக்கி கொண்டு அவன் பின்னே சென்றாள்.

மனதில் ஆயிரம் கேள்விகள் இருந்தும் பெண்ணவள் ஆராதனா வாய் திறக்கவில்லை. அவளால் நடப்பதை இன்னும் நம்பமுடியவில்லை. தன்னுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் சிறுவனை பார்த்தாள்.

அந்த கண்கள், மூக்கு, இதழ்கள், தாடை எல்லாம்... எங்கேயோ பார்த்தது போல இருந்தது. இந்த சிறுவன் யாராக இருக்கும்..?? பார்ப்பதற்கு அந்த குலோப்ஜாமூன் ரவி மாதிரியே இருக்கிறானே. எப்படி?!

அவள் வாய் திறந்து எதுவோ கேட்க வரவும், அங்கே ஒரு பெண் பதற்றத்துடன் இவர்களை பார்த்து கூக்குரலிட்ட படியே வந்தாள்.

அ..து.. அ..து..அந்த பெண்மணி கீர்த்தனா தானே. அது ஆராதனாவின் அம்மா தானே.

"அ..ம்..மா.." அதிர்ந்து நின்றாள் பெரியவள் ஆராதனா.

"என் கண்ணே..!" என்று பாய்ந்து வந்தவர், பெரியவள் ஆராதனாவிடம் இருந்து குழந்தை ஆராதனாவை வாங்கி கொண்டார். குழந்தையின் முகத்தை கைகளில் தாங்கியபடி முத்தங்கள் பல கொடுத்தவர், இவளிடம் நன்றி உரைக்கவும் அங்கே கூட்டம் கூட ஆரம்பித்தது. தேவேந்திரன் வதனா மற்றும் சில உறவினர்கள் வந்து விட்டனர்.

இவளை அந்த கூட்டத்திலிருந்து விலக்கி வெளியே கூட்டி வந்த அச்சிறுவன், "ஆன்ட்டி நான் கிளம்புறேன். சான்ஸ் கிடைச்சா மீண்டும் பார்க்கலாம்". சொல்லிவிட்டு அவள் கண்முன்னே அவன் மாயமாய் மறைந்து விட்டான்.

'ஆ..ஆ...இவன் எங்கே போனான்..? என்னை போய் ஆன்ட்டி என்று அழைக்கிறானே. பாவி! நான் உனக்கு ஆன்ட்டியாடா?! வார்த்தைக்கு வார்த்தை ஆன்ட்டின்னு கூப்பிடுறானே. ஹைய்யோ... ஆண்டவா! இந்த கொடுமையை எங்கே போய் சொல்லுவேன்.'

அவள் அவன் மறைந்த அதிர்ச்சியில் ஸ்தம்பித்து நிற்கும்போதே அவளும் ஒரு மாய சூழலில் மாட்டிக் கொண்டாள்.

மீண்டும் அவள் எங்கோ சென்று கொண்டிருந்தாள். இந்த முறை கொஞ்சம் சுதாரித்துக் கொண்டு சுற்றுப்புறம் நடப்பதை மனதில் உள்வாங்கி பார்த்தாள். அந்த வண்ண சூழல் அவளை இப்போது அவர்கள் காலனிக்கு செல்லும் ஒரு தெருவில் கொண்டு வந்து விட்டது. எங்கே யாரையும் காணோம். எல்லோரும் எங்கே போய் தொலைந்தார்கள்..?

அங்கும் இங்கும் இவள் பார்வையை சுழல விட்டு தேடிக் கொண்டிருக்கையில், கையில் குளிர் கண்ணாடியும், சாம்பல் நிறத்தில் சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ்ஸும் அணிந்திருந்த டீன் ஏஜ் பையன் ஒருவன் அங்கே ஓரமாய் நிற்பது தெரிந்தது. அவன் பார்ப்பதற்கு வித்தியாசமாக இருந்தான். ஏதோ ஒன்று அவனிடம் இருக்கும் சுற்றுப்புறத்திற்கு பொருந்தாது போல இருந்தது. அவனும் அவன் உடையும் ஒரு தினுசாக இருந்தது. இருந்தும் இப்போது அவள் இருக்கும் சூழ்நிலைக்கு அவனிடம் பேசினால் ஏதாவது தகவல் கிடைக்கும் என்றெண்ணத்தில் அவனை நோக்கி சென்றவள்,

"டேய் பையா!" அழைத்தவள் அவன் திரும்பி இவள் முகம் பார்த்ததும் அதிர்ந்து போய் விட்டாள்.

"ஏ...ய்.. நீ.. நீ.. நீ... ர...வி தானே..??"

"ஆ..ஆ...மா... உங்களுக்கு எப்படி என்ன தெரியும்..??! நீங்க யாருக்கா?!" திணறிய படி கேட்டவனை முறைத்தவள்,

"துறைக்கு எதுவும் நியாபகம் இல்லையோ..?? இப்போ என்னடா சொன்ன... நான் உனக்கு அக்காவா...?? டேய்...!

எல்லாம் என் நேரம்டா.. எல்லாம் உன்னால தான்.. நான் இங்கே வந்து முழிச்சிக்கிட்டு நிக்குறதுக்கு காரணமே நீ தான்.. நீ என்ன..டா.. ன்..னா.. அக்கா... மக்கான்னு.."

"ஷ்.. ஷ்.. அக்கா பிளீஸ் கொஞ்சம் நேரம் அமைதியா இருங்க. நானே ரொம்ப நாள் கழிச்சு முக்கியமான ஒரு ஆளை பார்க்க வந்திருக்கிறேன். நீங்க வேற சத்தம் போட்டு, தேவையில்லாத கதை பேசி என்னோட நேரத்தை வீணடிச்சிராதீங்க"

"டேய்... யாரு யாரோட நேரத்தை வேஸ்ட் பண்ணுறது...??! ஆமா.. நான் உனக்கு அக்காவாடா..?? இன்னொரு தடவை அப்படி கூப்பிட்டு பாரு.. அப்போ இருக்கு உனக்கு கச்சேரி" அவன் அக்கா என்றழைத்த அதிர்ச்சியில் ஆராதனா அவனை தாளித்து கொண்டிருக்கையில், அவர்களை கடந்து யாரோ செல்வது தெரிந்தது.

ஆராதனாவும் ரவியும் ஒருவரை ஒருவர் பார்த்து நின்று கொண்டிருந்ததால், அவளால் தன் பின்புறமிருந்து தன்னை கடந்து சென்ற அந்த நபரின் முகத்தை பார்க்க முடியவில்லை. அந்த நபர் அணிந்திருந்த யூனிபார்ம் அவள் பள்ளிச் செல்லும் மங்கை என்பதை பறைசாற்றியது.

அது சரி இவன் எதற்கு இப்போ அந்த பொண்ணை இப்படி வெறித்துப் பார்க்கிறான்..?! வில் புருவத்தில் கேள்வி நாண் ஏற்றி எதிரில் நின்றவனை முறைத்தாள். அந்த முறைப்பை எல்லாம் தூக்கி குப்பையில் போட்டு விட்டு அவன் அந்த பெண்ணின் மீதே கண்ணாக இருந்தான். முகத்தில் அவ்வளவு மென்மை. ஏதோ பார்க்க கிடைக்காத பொருளை அதிசயித்து பார்ப்பது போல பார்த்துக் கொண்டிருந்தான்.

"டேய்.. ஜாமூ! என்னடா பார்க்குற..?" பதிலேதும் சொல்லாமல் அவன் அந்த தேவதையை தரிசித்துக் கொண்டிருந்தான்.

'விளங்கிடிச்சி...! இவன் இப்போதைக்கு திரும்ப போறது இல்லை'. தலையில் அடித்துக் கொண்டவள் தலை திருப்பி அந்த பள்ளி சிறுமியை பார்த்தாள். சாதாரணமாக நடப்பது போல இருந்தாலும் அவள் நடையில் ஏதோ வித்தியாசம் இருப்பது போல தெரிந்தது. 'இந்த பெண் ஏன் ஒரு மாதிரி நடக்கிறாள். எங்கேனும் அடி பட்டிருக்கிறதா...?' யோசனையில் இருக்கும் போதே.. தன் அருகிலிருந்த டீன் ஏஜ் ரவி அந்த பெண் பின் ஓடி சென்றான்.

"டேய் டேய்... எங்கடா போற.. நில்லுடா..." உன்னோட பெரிய ரோதனையா போச்சு. மூச்சிரைக்க ஆராதனாவும் அவன் பின்னே ஓடினாள்.

அங்கே டீன் ஏஜ் ரவி அந்த பள்ளி குழந்தையிடம் ஏதோ பேசிக் கொண்டிருப்பது புரிந்தது. அந்த பெண் எதையோ அசௌவுகரியமாக உணர்வதை போல நெளிந்து கொண்டிருந்தாள் .

'படவா ராஸ்கல்.. ஆபிஸ்ல வச்சி என்கிட்ட லவ் சொல்லி கிஸ் வேற பண்ணிட்டு.. நீ இந்த பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருந்துருக்க. மவனே உனக்கு இருக்குடா கச்சேரி' அவனை அடிக்க கைகள் பரபரக்க, கைகளை தேய்துவிட்டப்படி அவனை நோக்கி சென்றாள்.

அவன் தான் அணிந்திருந்த மேல் சட்டையை கழற்றி அந்த பெண்ணிடம் கொடுப்பது தெரிந்தது.

"அட பாவி மவனே.. பட்டப் பகலில் இப்படி பிகேவ் பண்ணுறீயேடா. வெட்கங் கெட்டவனே..! இருடா.. இதோ வரேன்".

விறு விறுவென சென்றவள் அவனது தோள் பட்டையை அழுத்தி பிடித்து சுட சுட தன் கோபத்தை காட்ட நினைக்கையில் அவன்அந்த டீன் ஏஜ் ரவி சட்டென இவளது துப்பட்டாவை உருவினான்.

"ஹைய்யோ... என்னடா பண்ணுற..?!" அதிர்ச்சியில் ஆராதனா நிற்க்கையிலேயே, அவன் அந்த சிறுமியின் கால்களில் வழிந்தோடிய குருதியை துடைத்து விட்டான். அப்போது தான் ஆராதனாவும் அதை கவனித்தாள், அந்த பெண்ணின் ஆடையை.

'ஷிட்... இது தான் விஷயமா... இதை போய் நான் தவறாக நினைத்து விட்டேனே..??'

நிமிர்ந்து அந்த பெண்ணின் முகம் பார்த்தாள் ஆராதனா. ஹை வால்டேஜ் ஷாக்.. 'ஹைய்யோ... இது நானா... திரும்பவும் நானே தானா..?! நானே என்னை மீண்டும் மீண்டும் சந்தித்துக் கொள்கிறேனா..? என்னோட ஒவ்வொரு பருவத்திலும் எனக்கு நானே உதவி செய்து கொண்டேனா..? அப்படி என்றால் அந்த ரவி கூறியது அனைத்தும் உண்மை என்றல்லவா ஆகிறது..???' அத்தனை குழப்பத்திற்கும் தீர்வு கிடைத்தது போல இருந்தது பெரியவள் ஆராதனாவிற்கு.

அந்த பள்ளி சீருடை அணிந்த ஆராதனா, ரவி கொடுத்த சட்டையை அவளது இடுப்பில் கட்டிக் கொண்டிருந்தாள். அவள் முகத்தில் கலக்கம் விலகி நிம்மதி திரும்பியிருந்தது.

"ஹ்ம்ம்... இவ்ளோ தான்மா விஷயம். புரியுதா? தைரியமா போ. உன் வீடு வரை உனக்கு துணையா நான் வரேன். சரியா? உன்னை யாரும் தப்பா பார்க்க மாட்டாங்க. அதுக்கு நான் கேரண்ட்டி".

அந்த பள்ளி செல்லும் ஆராதனா முகத்தில் புன்னகை கீற்றின் சாயல். ரவியின் முகத்திலோ எதையோ சாதித்த உணர்வு..

'இதோடா.. இங்க என்ன நடக்குது? கம்பர் சொன்னது போல, "அவனும் நோக்கினான்.. அவளும் நோக்கினாள்.." அப்படிங்கிற ரேஞ்சிற்கு ரெண்டும் விழி வழி காதல் கீதம் பாடுது. ஹ்ம்ம்... என்னடா ரவி.. ஹீரோவாகலாம்ன்னு ட்ரை பண்ணுறீயா...?? எல்லாம் தெரிஞ்ச நான் இங்கே குத்துகல்லாட்டம் நிக்கிறப்போ அப்படி நடக்க விட்ருவேனா...??!

முதல என்னடான்னா என்னை ஆன்ட்டின்னு சொன்ன.. இப்போ உறவு முறையே மாத்தி அக்கான்னு சொல்லுற. இது பியூச்சர்க்கு நல்லது இல்லை..யே ..டா எ..ன்..ன்..னோ..ட ஸ்வீட் குலோப்ஜா..ம்..ம்..மூ...மூ...!

சோ இன்னும் எதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கிற ஆரு... யூ ஸ்டார்ட்டு..டூ..'

என்றபடி அவனை பின் தொடர்ந்து சென்றாள் பெரியவள் ஆராதனா. அதற்குள் அந்த ரவி அந்த பள்ளி மாணவி ஆராதனாவின் வீட்டை அடைந்திருந்தான்.

'டேய்..அதுக்குள்ள போயிட்டியா.. இருடா வரேன்..'

அந்த பள்ளி ஆராதனா இவனிடம் புன்னகை முகமாக விடைபெறுவது தெரிந்தது. 'இப்போது விட்டால் இவனை பிடிக்கமுடியாது. அந்த பெண்ணோடு வீட்டிற்குள் சென்றாலும் ஆச்சரியப்படுவதிற்கில்லை. அப்புறம் அது இது என்று பேசி வீட்டில் உள்ள அனைவரையும் மயக்கி விடுவான். நான் இருக்கும் வரை அதை நடக்க விட மாட்டேன்'.

குடு குடுவென சென்றவள் ரவியின் காதை பிடித்து திருகினாள்.

"ஆ...ஆ...அம்மா.." தன் காதை பிடித்திருந்த அவள் கையை தடுக்க போராடினான் அந்த இளம் பருவ ஆண்மகன். இவள் விடுவாளா என்ன..?இது தான் வாய்ப்பு என்று அவள் உயரத்திற்கு அந்த பனைமர இளைஞனை குனிய வைத்து துடிக்க வைத்தாள்.

"ஆ...ஆ... வலிக்குது.. ஹே..சொல்றேன்ல.."வலியில் கத்தினான் அவன்.

"வலிக்குதா..?அப்போ எனக்கு எப்படி இருக்கும். நான் உனக்கு அக்காவாடா? முதலில் ஆன்ட்டி.. இப்போ அக்கா.. அப்புறம் அடுத்த தடவை பாட்டின்னு சொல்வீயா...???"

"அய்யோ... நீங்க என்ன சொல்லறீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல. என்னை விடுங்க. உங்ககிட்ட பேச எனக்கு நேரமில்லை". பேசிக் கொண்டிருக்கும் போதே அவன் தன் கைகளில் பற்றிக்கொண்டிருந்தும் அவன் உருவம் காற்றோடு காற்றாய் கலந்தது. எதிர்பாரத இந்த நிகழ்வில் சிற்பி செதுக்கி வைத்த சிற்பம் போல அசைவற்று நின்றாள் ஆராதனா.

'ஹேய்... இது எப்படி... ??? அப்டின்ன்னா??? ரவியும் அவனோட ஒவ்வொரு பருவத்திலயும் டைம் ட்ராவல் பண்ணியிருக்கிறானா...??? ஷ் ஷ் ஷ்... ஷப்பா... கண்ணை கட்டுதே சாமி...'

சுவரின் மீது சாய்ந்த வண்ணம் குழப்பத்திற்கு விடை தேட ஆரம்பித்தாள் அந்த மங்கை ஆராதனா.

'எல்லாம் சரி தான். அந்த ரவி சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை தான். நான் இப்போது.. இங்கே.. இப்படி என் நேரத்தை அனுபவித்து கொண்டிருப்பதை பார்த்தால்.. அத்தனையும் நிஜம். அப்படியென்றால் நானும் டைம் ட்ராவல் பண்ணி கொண்டிருக்கிறேனா..??? எனக்கு ஏன் இவன் அக்கா என்றால் அத்தனை கோபம் வருகிறது..? இவன் எப்படி கூப்பிட்டால் எனக்கென்ன என்று என்னால் ஏன் இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை..??'

நெற்றி புருவம் சுருக்கி யோசித்தவள் அதற்கான காரணம் புரிபடுகையில் ஸ்தம்பித்துப் போனாள்.

'அ...அ..ப்..டி..ன்..ன்..னா நா..நா...னும் அவனை விரும்புறேனா...?' அதற்கு மேலே அவளை யோசிக்க விடாமல் அந்த கற்கள் ஒளிர ஆயத்தமானது. ஒரு வித தெளிவுடன் அவள் அந்த கற்களை பார்த்தாள். அவள் பார்வையின் வீரியத்தில் அந்த கற்கள் தயங்கியதோ...? அந்த கற்களை உள்ளங்கையில் வைத்து நெஞ்சுக்கருகில் தூக்கி தன் மூச்சுக் காற்று படும் தூரத்தில் பிடித்தப்படி வைத்து அதனோடு பேச ஆரம்பித்தாள்.

"நீ எனக்கு பாதுகாப்பா இருப்பன்னு நான் நம்புறேன். என்னை இப்போ எ..எ..என்னோட தேஜா வூ.. ஹம்ச்...இல்ல இல்ல.. என்னோட ரவிக்கிட்ட இப்பவே கூட்டிக்கிட்டு போ. அது எந்த கிரகம்ன்னாலும் சரி.. எனக்கு இப்பவே அவனை பார்க்கனும்.. பாருடா.. உன்னோட ஆரு உன்னை தேடி.. உன்னை முழுசா நம்பி.. உனக்காகவே வந்திருக்கிறேன்.. அப்படின்னு சொல்லணும். உன்னை புரிஞ்சிக்கிட்டேன், நீ சொன்ன அத்தனையும் நான் நம்புறேன். என்னை ஏற்றுக் கொள்வீயான்னு கேட்கணும். ம்ம்ம்.. போ.. சீக்கிரம் போ.. என்னோட ரவிகிட்ட கொண்டு போ".

காதலை உணர்ந்து கொண்ட மங்கை தன் மனதை எந்தவித தயக்கமும் இன்றி அந்த கற்களிடம் முதல் முறையாக தன் காதலை வெளிப்படுத்தினாள். உணர்ச்சி பெருக்கில் தத்தளித்தவள் அந்த கற்களின் மேல் தன் உதடுகளை பதித்தாள். தூது செல்ல தனக்கு தலைவி கொடுத்த இன்பப்பரிசில் திக்கு முக்காடி போனது அந்த நீல பச்சை கற்கள். முதல்முறை அதுவும் வெகுநாள் கழித்து தனக்கு கிடைத்த முதல் முத்தத்துடன் குதூகலமாய் ஒளிர ஆரம்பித்தது. அந்த ஒளி வெள்ளத்தில் சந்தோசத்துடன் தன் கண்களை இறுக்க மூடிக்கொண்ட படியே தன் பயணத்தை தொடர்ந்தாள் ஆராதனா.

காதல் பயணம்...
கற்கால தோழியுடன்..
காதலனை தேடி சரணடைய!


#######################
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே...😁😁😁

பதிவு இவ்ளோ நாள் தாமதம் ஆனதற்கு பிளீஸ் மன்னிச்சு. 😉😊நிறைய குழப்பங்கள் கதை சம்மந்தமா. சுலபமான வார்த்தைகள் யூஸ் பண்ணுறேனா ரீட் பண்ணுறவங்களுக்கு புரியுதா.. கதை சரியா போகுதா இல்லையா.. எங்காவது தப்பு பண்ணுறோமா அப்படின்னு நிறைய குழப்பங்கள். சோ கொஞ்சம் இடைவெளி விடலாம்னு தோணுச்சு. ☺️

அந்த அளவு அப்பாடக்கர் எழுத்தாளர் நான் கிடையாது. கொடுக்கிற பதிவை கொஞ்சம் எனக்கு திருப்தியா தரணும்னு தோணிச்சி. அதான் லேட். 😄😁

என்னோட கதைக்காக காத்துகிட்டு இருந்த மக்களுக்கு முதலில் என்னோட சாரி. தென் இது வரை பதிவிற்க்காக பொறுமையா இருந்த என் செல்லங்களுக்கு நன்றிகள்.😘😍

இதோ உங்களுக்கான அடுத்த பதிவு. பிடிச்சிருந்தா கமெண்ட் பண்ணுங்க. 😍😍😍 பிடிக்கலைன்னா ஏன் எந்த விஷயம் என்னோட எழுத்துல பிடிக்கலன்னு சொல்லுங்க.😎 என்னோட தவறை திருத்திக்க எனக்கு ரொம்ப யூஸ்புல்லா இருக்கும்... 🤗


நன்றி.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே
அடுத்த பதிவு இதோ. படிச்சி பாருங்கள். கருத்து சொல்லுங்கள்.

நன்றி.

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 25 b

பால் நிலா அந்த அடர்ந்த கருத்த வானில் தன் தோழியரான நட்சத்திரங்களின் கலட்டா இன்றி தன் ரோமியோவை மும்மூரமாய் தேடிக் கொண்டிருந்தது . அந்த நிலாமகளின் ஒளிக்கதிர்கள் பார்ப்பதற்கே ரம்மியமாய் எங்கும் பரந்திருக்க, வழியில் ஓரிடம் வந்ததும் தன்னையும் அறியாமல் வெட்கம் கொண்டது.

தன் வெளிச்சத்தை வாரி சுருட்டிக் கொண்டு வான்மேகத்தின் பின்னே ஒளிந்து கொண்டது. நாணத்தால் தேகம் நடுங்க நிலாமகள் முகத்தை ஒரு நொடி மறைத்துக் கொண்டாள் மேகத்தினுள்ளே.

தன்னுள் எழுந்த படப்படப்பை ரசித்தப்படி மேகத்தின் ஜன்னல் வழி விழி விரித்து பார்த்தது அவனை. தன் ரோமியோவை கண்ட மகிழ்ச்சியில் ஒரு நொடி தடுமாறினாலும் பின் சுதாரித்து தன் மனம் கவர்ந்த ஆணழகனை கவரும் பொருட்டு தன்னழகை மிச்சமின்றி வெளிச்சம் போட்டு காட்டியது. இதுநாள் வரை அந்த நிலா இவ்வளவு அழகாக பிரகாசித்திருக்க மாட்டாள் என்பது நிச்சயம். எல்லாம் காதல் செய்யும் மாயம்.

18685

18686

18687


அங்கே மூன்று பக்க கண்ணாடி சுவரும் மேலே ஆகாயம் திறந்தவெளியாகவும் ஒரு புறம் பால்கனி சுவரோடு இணைந்திருக்க, செடிகள் சூழ அமைந்திருந்த அந்த இடத்தில் ஓவல் வடிவ வுட்டன் ஸ்டைலில் ஆன பாத் டப்பின் விளிம்பில் மரத்திலான மெழுகுவர்த்தி தாங்கியில் அழகாய் ஒளிர்ந்து கொண்டிருந்தது மூன்று டீ லைட் கேண்டில்கள்.

வேறு எந்த செயற்கை வெளிச்சமும் இல்லாததால் அதன் வெளிச்சம் கண்ணிற்கு இதமாய் இருந்தது. அதன் அழகை பொறாமையுடன் கண்ட நிலாமகள் தன் ஒளிக்கதிர்களின் வீரியத்தை கொஞ்சம் கூட்டினாள் என்றால் இங்கே கேண்டில்லிருந்து வந்த ஒளி காற்றின் வேகத்தில் தன் இடுப்பை வளைத்து உடலை நெளித்து பெல்லி டான்ஸ் ஆடியது.

இவர்களது கூத்தை லவேண்டேர் ஆயிலுலோடு இனிப்பும் கலந்த அந்த இதமான சுடுநீரில் மிதந்து கொண்டிருந்த வெள்ளை ரோஜா பார்த்து பரிகாசித்து புன்னகைத்தது.

இப்படியே மாறி மாறி நிலாமகளும் கேன்டில்லும் அந்த ஆண்மகனுக்காக மல்லுக்கட்டி கொண்டிருக்க அவனோ தலையை பின்னோக்கி அந்த பாத் டப்பில் சாய்த்து கண்களை மூடியபடியே எதையோ எண்ணி சிரித்துக் கொண்டிருந்தான். அவன் ரவி வர்ம குலோத்துங்கன்.

வெள்ளை ரோஜாக்களும் லவேண்டேர் மணமும் கேண்டில் வெளிச்சத்தில் கலந்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளித்துக் கொண்டிருந்தது. வலிமையான காதலை எங்கிருந்தாலும் எப்படியாவது சேர்த்து வைக்கும் என்பது இக்குளியலின் கூடுதல் சிறப்பு.

இதமான குளிர் காற்று முகத்தில் வீச, கதகதப்பான சுடுநீரில் உடல் புதைந்திருக்க அந்த நிழவொளியில் அவன் அழகனாய் தெரிந்தான். அவன் மனதில் இருந்த மகிழ்ச்சி முகத்திலும் புன்னகையாய் வெளிப்பட்டு கொண்டிருந்தது. தன் செல்ல காதலி ஆராதனாவிடம் காதலை சொல்லிய மகிழ்ச்சியில் வீட்டில் உள்ளவர்களுடன் ஆட்டம் போட்டு விட்டு அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க வேண்டி தனிமையை நாடி அவனறைக்கு வந்திருந்தான்.

நொடிகள் நகர நகர அந்த இன்ப அவஸ்தை கூடியதே தவிர குறையவில்லை. அவன் இருக்கும் நிலையில் இரவு என்றும் பாராமல் ஆராதனாவை தேடிச் சென்றிருப்பான். ஆனால் அவளுக்கு கொடுத்த வாக்கு நினைவில் வர அப்படியே விட்டு விட்டான். அவளாக வரும் வரை அவளை எக்காரணம் கொண்டும் தொந்தரவு செய்ய மாட்டேன் என்று தான் உறுதி கொடுத்திருந்தானே. தன் காதலிக்காக முதன்முதலில் செய்த சத்தியம் வேறு. அதை எப்படி மீறுவான் அந்த கட்டிளங்காளை?

காதலுக்கும் காமத்திற்கு இடையே ஊசலாடிய அந்த உணர்வை அதற்கு மேலும் பொறுக்க முடியாமல் தான் நீருக்குள் வந்து அமர்ந்தான். இருந்தும் அவளது நினைவுகளே அவனை ஆக்கிரமித்து ஆண்டு கொண்டிருந்தது.

இன்றைய நாளின் தொடக்கத்தில் இருந்து தன்னவளுடனான உரையாடல் வரை மனம் அசைப் போட்டுக்கொண்டிருந்தது. அவளிடம் தன் காதலை சொல்லும் பொழுது வந்து போன அந்த மின்னல் பார்வையும், கடந்த கால நினைவுகளை நியாபக படுத்தும் பொழுது அவள் பேந்த பேந்த முட்டை கண் விரிய முழித்ததையும் இப்போது நினைத்தாலும் அவனுக்கு சிரிப்பாய் வந்தது.

'டேய் ரவி. உன்னோட லவ்வர் சரியான டுயுப்லைட்டா இருக்காடா. இவ்ளோ எடுத்து சொல்லியும் இன்னும் மந்திரிச்சி விட்ட கோழியாட்டம் முழிக்கிறா? ஹா ஹா ஹா..' ரவியின் மனசாட்சி அவனை கேலி செய்தது.

"சொல்லுவடா சொல்லுவ. உனக்கென்ன. அவள் பாவம்டா. நான் சொன்னதை நம்ப கஷ்டமா இருந்திருக்கும் அதான் அப்படி நடந்துகிட்டா. அவளுக்கே உண்மை புரியும் போது கண்டிப்பா என்னை புரிஞ்சிப்பா. நீ வேணும்னா பாரு இந்நேரம் அவள் என்னை தான் நினைச்சிக்கிட்டு இருப்பா. ஏன் நாளைக்கே என்னை தேடி வந்தாலும் ஆச்சரியப்படுறதுக்கு இல்லை. ஏன்னா என்னோட காதல் மேல நம்பிக்கை இருக்குடா".

கொஞ்சம் விசித்திரமானது தான் இந்த காதல். மனதில் நுழைந்தவுடன் அடுத்தவர் மனதையும் அறிந்து கொள்ளும் கலையை கற்றுக்கொடுத்து விடுகிறதே!

இங்கே தன் காதல் மீது கொண்டுள்ள அபார நம்பிக்கையில் காதலன் உரைக்க அங்கே நிஜமாலுமே அவள் காதலுக்காக துடித்துக் கொண்டிருக்கிறாள். இது தான் காதலின் விளையாட்டோ?!

அந்த ஏகாந்த நிலையில் அவன் அப்படியே ஒரு வித காதல் கிறக்கத்தில் மிதந்து கொண்டிருக்க, அந்த இரவு நேரத்தை பகலாக்கும் பொருட்டு கண்ணை கூசும் விதத்தில் எங்கிருந்தோ ஓர் பெருவெளிச்சம் வீசியது. தொப்பென ரவி அமர்ந்திருந்த பாத் டப்பில் எதுவோ ஒன்று விழுந்தது. அதன் அதிர்வில் நீர்த்திவலைகள் சிதற கேண்டில் லைட்டுகளின் உயிர் ஒருநொடி ஆட்டம் கண்டு மீண்டது.

திடீரென ஏற்பட்ட இத்தாக்குதலில் அதுவரை கண்களை மூடியிருந்த ரவி விழிகளால் சுற்றுப்புறத்தை துலாவினான். அங்கே அவன் கண்ட காட்சியில் அந்த சுடுநீரிலும் அவனது தேகம் ஓர் நொடி நடுங்கியது.

அங்கே எதிரே அவனது ஆருயிர் காதலி ஆராதனா அவனுக்கெதிரே பாதி உடை நனைந்தபடி அமர்ந்திருந்தாள். விழிவிரித்தப்படி இதழ் மலர இவனை பார்த்துக் கொண்டிருந்தாள்.

'அதெப்படி இவள் இங்கே வரமுடியும்?' என்று அவன் யோசித்து கொண்டிருக்கும் பொழுது அவன் கண்ணில் பட்டது அவள் நெஞ்சில் ஒட்டிக் கொண்டிருந்த நீல பச்சை வண்ண கற்கள். இவன் புரிந்து கொண்டதை அறிந்த அந்த கற்களும் ஒரு முறை ஒளிர்ந்து அணைந்தது.

ரவி யோசனையிலிருந்து வெளிவரும் போது பாய்ந்து வந்து அவனை அணைத்துக் கொண்டாள் ஆராதனா. இப்போது அவள் அவனது ஆராதனாவாக.

தன்னை பாய்ந்து வந்து இறுக கட்டிக் கொண்டிருக்கும் ஆராதனாவை கண்ட ரவி ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்று விட்டான்.

"ர..ர..வி.. ரவி.. என்னோட ரவி! நீ சொன்னதை நான் நம்பாம போயிட்டேனே டா. ஆனா இப்போ நான் தெளிவா புரிஞ்சிகிட்டேன். நான் வந்துட்டேன் ரவி. உன்னை தேடி வந்துட்டேன். என்னோட தேஜா வூ யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.

ர..ர..ரவி! எனக்கு இப்போ எல்லா விஷயமும் தெரியும். நீ சொன்னது சரின்னு இப்போ ஒத்துக்கிறேன் ரவி. என்னை வெறுத்திட மாட்டியே? என்னை ஏத்துப்பல்..ல்..ல்..ல?!

ரவி.. ரவி.. நான் முதல நீ சொன்னதை நம்பல ரவி. ஆனால் அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம் எனக்கு என்னோட தேஜா வூ யாரு? என்னோட ரவி யாருன்னு சொல்லிடிச்சி. ஐ ம் சாரி ரவி. உன்னை நான் ரொம்ப கஷ்டப்படுத்திட்டேனா?"

அழகிய கண்கள் தண்ணீரில் மிதக்க உதடு துடிக்க பெண்ணவள் கேட்டதில் ஆண்மகன் நெஞ்சம் விம்மியது. 'இவளை நான் வெறுப்பதா? அது கனவில் கூட நடக்காதே'. அவளை தழுவி ஆறுதல் சொல்ல முயன்ற கைகளை பிடித்தவள் தன் கண்களில் ஒற்றி அழுகையின் ஊடே இதழ் பதித்தாள். பின் தன் கழுத்திலிருந்து டாலரை அவனிடம் காண்பித்தவள்,

"இ..தோ.. இ..தோ.. இந்த கல்லு இருக்குல்ல.. அது உனக்கும் எனக்குமான உறவை வெளிச்சம் போட்டு காட்டிடிச்சி. நான் உன்னை பார்த்தேன் ரவி. சின்ன பையனா.. டீன் ஏஜ் ரவியா.. இப்படி நீ எனக்காக தேடி வந்து என் மேல கேர் பண்ணுனதை நான் பார்த்தேன் ரவி. இதுக்கும் மேலயும் என்னால உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு தோணிச்சி.

எனக்குள்ள ஏன் உன்னைப்பார்க்கும் போதெல்லாம் படபடப்பா வித்தியாசம ஒரு உணர்வு வந்ததுன்னு இப்போ நான் புரிஞ்சிகிட்டேன். ரவி நான் சொல்லுறதை நம்புற தானே?" என்று அவனை பேச விடாமல் தொடர்ந்து பிதற்றிக் கொண்டிருப்பவளை என்ன சொல்லி சமாதான படுத்துவது என்று தெரியாமல் திணறிக் கொண்டிருந்தான் அந்த பிசினஸ் மக்னேட்.

இதனை பார்த்துக் கொண்டிருந்த இரு வெளிச்ச மங்கைகளான நிலாவும் கேன்டிலும் அழுது கரைந்தனர். தங்கள் காதல் பொய்த்து போனதை விட, தங்களை விட வெகு அழகாய் ஜொலித்தபடி இருந்த இந்த மானுடப் பெண் விசும்புவதை அவர்களால் தாங்க முடியவில்லை போலும்.

தங்கள் சோகத்தை துடைத்துவிட்டு பெண்ணவள் ஆராதனாவை தேற்றும் பொருட்டு தங்கள் ஒளிக்கதிர்களை அள்ளி வீசினர் அவர்கள் மீது. அந்த பாத் டப்பில் ரோஜா இதழ்களின் நடுவில் காதலர்களின் சம்பாஷனைகளை கேட்டப்படி அவர்கள் காதலுக்கு குடை பிடிக்க ஆரம்பித்தனர்.

தன் கன்னங்களை வருடி தோள் தடவி தனக்கு வெகு அருகில் பிதற்றிய படி இருக்கும் தன் காதலியை அதற்கு மேலும் சகிக்க முடியாமல் அவளை இழுத்து தன் கைவளைவில் நிறுத்தி காற்றுக்கு அவசர அவசரமாய் விடுமுறை கொடுத்துவிட்டு அவள் இதழை சிறைசெய்தான் தங்களுக்கான அழகான காதல் சிறையில். அதில் அவர்கள் இருவரும் கைதிகளாக இருக்கவே பிரியப்பட்டனர்.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 26


வெண்பஞ்சு மேகத்தில்
வெள்ளி சலங்கை கட்டியது யாரோ
வெண்பனியா.. வெள்ளி நிலவா..



18974


சுகமாய் உடலுக்கு இதம் கொடுத்த ஜெனுயூன்னி லெதர் அல்டிமேட் பெட்டில் புரண்டு படுத்தாள் ஆராதனா. அதன் மென்மை உடலுக்கு சுகமாய் இருந்தது போல இதழ்கள் லேசாக விரிந்து சுருங்கியது. அந்த பெட் சகல வசதிகளையும் தன்னகத்தே அடக்கியது. ரிமோட் கண்ட்ரோல் மசாஜ் சேர், மியூசிக்கல் சிஸ்டம், புக் செல்ப் வித் லம்ப், மினி ஸ்டோரேஜ் ஏரியா, மொபைல் சார்ஜ் ப்ளக், பாப் அப் மினி டேபிள் என்று பல வசதிகளை ஒருங்கே கொண்டது அந்த படுக்கை.

ஆராதனாவின் கண்கள் இன்னும் தூக்க கலக்கத்தில் இருக்க உடலில் லேசாக விழிப்பு தட்டியிருந்தது. நாசியில் ஏதோ வித்தியாசமான மணம் புகுந்து உடலுக்குள் ஒருவித புத்துணர்ச்சியை கிளப்பியது. மெதுவாக மூக்கு நுனியை சுருக்கி வாசம் பிடித்தாள் பெண். உள்ளுக்குள் எழுந்த ஆவல் அவளையும் அறியாமல் விழி திறக்க உந்தியது.

18975

சோம்பல் ஒருபுறம் தாலாட்ட மறுபுறம் அந்த வாசனை இழுக்க பெண்ணவள் தன் கண்மணிகளை ஒருவாறு திறந்தாள். அங்கே தான் படுத்திருந்த படுக்கையோடு சேர்ந்திருந்த குட்டி மேஜையின் மீது வெள்ளைநிற பீங்கான் தட்டில் காய்ந்த ரோஜா பூக்கள் மற்றும் பெயர் தெரியா சில வகை பூக்களும் இலைகளும் தெரிந்தது. இப்படி மணமிக்க அலங்கார தோரணையை 'பாட்பூரி' என்பர். ரூம் ஸ்ப்ரே போல இயற்கையான பொருட்களை கொண்டு வாசனை பரப்ப பயன்படுத்தும் பிரபலமான முறை.

ஆராதனா மெத்தையில் படுத்தப்படியே மெதுவாக ஊர்ந்து அதன் அருகே சென்று கண்களை மூடியப்படி மூச்சினை இழுத்து சுவாசித்தாள்.

'வுட்டி ஸ்பைசி' வாசம் இது. மிளகு ஏலக்காய் பட்டை கிராம்பு இவை அனைத்தும் கலந்தார் போல அதாவது மசாலா டீ போல கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது அந்த மணம். காலையிலே குடிக்கும் பெட் காஃபி இல்லை இல்லை பெட் டீ போல மனதுக்கும் தேகத்துக்கும் உத்வேகத்தை பரப்பியது அந்த வாசனை. அப்படியே ஆழ்ந்து சுவாசித்தாள் பெண்.

இப்போது மெது மெதுவாக நேற்றிரவு நடந்த நிகழ்வுகள் நினைவுக்கு வந்தது. பெண்ணவள் சட்டென்று இமைகளை திறந்து சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். 'தான் இப்போது எங்கே இருக்கிறோம்? இது யாருடைய இடமாக இருக்கும். கடைசியாக அந்த ரவியை பார்த்தது ஏதேதோ உளறி கொட்டியது அப்புறம் அவன் அணைப்பு கூடவே இதழ் ஒற்றல். பின்.. எதுவும் நியாபகம் வரவில்லை'.

அப்போது தான் கவனித்தாள் அணிந்திருந்த ஆடையை.
"அய்யோ அம்மா.. இது என்ன. என் ட்ரஸ் எங்கே போச்சி. நான் போட்ருக்குற ஷார்ட் யாருக்குள்ளது..? ச் ச.. தொள தொளன்னு லூசா வேற இருக்கு. அய்யோ. பேண்ட் எங்கே போச்சி. காணோமே". போர்வையை உதறி விட்டு பெட்டில் தேடிக் கொண்டிருந்தாள்.

அந்த அறையை ஒட்டினார் போல அமைந்திருந்த இன்னொரு கதவை யாரோ திறப்பது தெரிந்தது. தீடிரென கேட்ட அந்த அரவத்தில் தன் தேடுதலை நிறுத்தி சத்தம் வந்த திசையை பார்த்தாள் ஆராதனா. அந்த உருவத்தை பார்த்ததும் அவள் முட்டை கண்கள் வெளியே தெரித்துவிடும் அளவிற்கு கண்கள் விரிந்து, புருவங்கள் வியப்பில் எவெரஸ்ட் மலை முகட்டின் வடிவத்திற்கு மாறி, செவ்விதழ்கள் வட்டமாய் விரிந்து வெளிப்படையாய் அவளது ஆச்சரியத்தை காட்டியது.

அந்த கதவினை கேஸ்ஸுவலாக மூடிய படியே வந்துக் கொண்டிருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன். அப்போது தான் குளித்து முடித்திருப்பான் போலும் அடர்ந்த கேசத்தின் நுனியிலிருந்து வடிந்தோடிய நீர்த்திவலைகள் சாட்சி சொன்னது. புத்தம் புது மலராய் வதனம் ஜொலிக்க இளநகையுடன் அவளை பார்த்து சிரித்தான். அந்த சின்ன சிரிப்பில் அப்படியே வீழ்ந்து போனாள் மங்கை. பார்வையை லேசாக தளர்த்த அப்போது தான் கவனித்தாள் இடுப்பில் கட்டியிருந்த வெண்ணிற துண்டை. அப்படியென்றால் மேலே சட்டை எதுவும் அணியவில்லையா..?

படாரென விழி உயர்த்தி அவனை முழுவதுமாக பார்த்தாள். கட்டுமஸ்தான உடம்பில் ஆங்காங்கே தசை கோளங்கள் உருண்டு திரண்டு இருக்க இடது நெஞ்சின் ஓரம் ஒரு பறவை சிறகை விரித்துப் பறப்பது போலவும் அதனை சுற்றி நங்கூர வடிவமும் பச்சை குத்தப்பட்டிருந்தது. இது பழநி மலை படிக்கட்டா இல்லை சீன பெருஞ்சுவரா என்று வியக்கும் வண்ணம் சிக்ஸ் பேக் அம்சமாய் காட்சியளித்தது.

அவன் அழகில் ஒட்டு மொத்தத்தில் பெண்ணவள் வீழ்ந்தே போனாள். அவன் அவளருகே வந்து கண்ணெதிரே சொடுக்கி கூப்பிட்டான். அப்போதும் அசைந்தாள் இல்லை. அவனை முழுவதுமாக பருகி கொண்டிருந்தாள். வெகுஅருகில் நின்றதால் அவனிடம் இருந்து வந்த 'ஜாக் ப்ளாக்' லோஷனின் வாசமும் ஆண்மகனின் தேகச் சூடும் பெண்ணவளுக்குள் ஏதேதோ மாயத்தை செய்தது.

"ஹேய்.. ஆரு.. ஆரு.." அவன் தோள் தொட்டு உலுக்கவும் பெண்ணவள் சட்டென்று நினைவுக்கு வந்தாள். மலங்க மலங்க விழித்து கொண்டிருந்தவளை பார்த்து புன்னகையுடனே கேட்டான்.

"என்ன ஆச்சு மா. ஆர் யூ ஆல் ரைட்?"

"ம்ம்ம்.. ஐ ம் ஓ.கே". வார்த்தைக்கு வலிக்குமோ என்று மென்று விழுங்கினாள் பெண்.

"நான் வரும் பொழுது எதையோ தேடிட்டு இருந்தியே என்னது?"

அவன் கேட்டதும் தான் அவளுக்கு தான் தேடிய பொருள் நியாபகத்திற்கே வந்தது. சட்டென்று குனிந்து தொடை வரை இருந்த சட்டையை முட்டி வரை இழுத்துப் பிடித்தாள். அவன் முன் இந்த ஆடையில் இவ்வளவு நேரம் இலகுவாக இருந்ததை எண்ணி சங்கடம் மேலோங்க பெண்ணவள் உதட்டை லேசாக கடித்துக் கொண்டாள். கன்னங்கள் சிவக்க நாணத்தால் திணறிப் போனாள் அவள்.

அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் இவள் இப்போது இப்படி பிகேவ் பண்ணுகிறாள்.

"ஹேய். என்ன விஷயம்" கூறியபடி தன்னை தொட வந்தவன் கைகளில் சிக்காமல் ஒரு அடி பின்னால் நகர்ந்தவள் "என்னோட ட்ரஸ் எங்கே. இந்த ட்ரஸ் ஏன் நான் போட்ருக்கேன்?" ஒருவழியாக மனதின் கலக்கத்தை மறைமுகமாக கேட்டுவிட்டாள்.

ஹைய்யோ இது தான் விஷயமா. "உன்னோட ட்ரஸ் ஈரமா ஆகிட்டு. சோ என்கிட்ட பொண்ணுங்க போடுற ட்ரஸ் இல்லாததால் என்னோட ட்ரஸ் போட்டு விட்டேன்" சொல்லிவிட்டு விஷமமாய் சிரித்தான்.

ரவிக்கிட்ட கூட்டிட்டு போன்னு சொன்னதும் இந்த கல்லு இப்படியா பாத் டப்புக்குள்ள கொண்டு வந்து போடணும். தன்னை காலபயணம் மேற்கொள்ள வைத்து உண்மையை விளக்கிய அந்த கற்களுக்கு சில பல நல்ல வார்த்தைகளால் பாராட்டியவள் தன்னெதிரே நின்றவனிடம் சுட சுட கேட்டாள்,

"அது சரி. போட்டு விட்டவர் கூடவே பேண்டையும் போட்டு விடுறதுக்கு என்ன?"

இவள் என்ன பேசுகிறாள் என்று ஒரு நொடி யோசித்தவனுக்கு அப்போது தான் அவளது கோபத்திற்கான காரணம் விளங்கியது. "ஹே.. இது தான் மேட்டர்ரா..?! ஹா ஹா ஹா..." வாய்விட்டு சத்தமாக சிரித்தபடி பெட்டில் அமைந்திருந்த மசாஜ் சேரில் அமர்ந்தான். அந்த இயந்திரம் தேகத்திற்கு இதம் கொடுத்திட அவன் இவளிடம் எதுவும் பேசாமல் அதை அனுபவிக்க தொடங்கினான்.

பெண்ணவளுக்குள் கோபம் துளிர் விட ஆரம்பித்தது. "என்ன நான் பாட்டுக்கு கேட்டுகிட்டு இருக்கேன். நீங்க இப்படி சிரிச்சிகிட்டு உங்க வேலையை பார்த்தா என்ன அர்த்தம்?"

"யூ ஆர் மை வைஃப்ன்னு அர்த்தம்" ஒற்றை கண்ணை சிமிட்டியப்படி சொன்னான்.

"ஏய்.. ஏய்.." கைகளை அவன் கழுத்தை நெறிப்பது போல பாவனை செய்தவள் கோபத்தை கட்டுப்படுத்தியவள் ஏகவசனத்தில் கேட்டாள். "டேய் உன் மனசுல என்னடா நினைச்சுகிட்ட. உன்னை லவ் பண்ணுறேன்னு ஒத்துகிட்டதுனால நீ சொல்லுற எல்லாத்தையும் கேட்டுட்டு இருப்பேன்னு தப்பு கணக்கு போடாத. மவனே கொன்னுருவேன். ஒழுங்கு மரியாதையா நேத்து என்ன நடந்ததுன்னு சொல்லு. இல்லை நடக்கிறதே வேற".

"ஓ. கே. ஓ. கே. கூல் பேபி. ஒழுங்கா இப்படி மரியாதையா கேட்டா நானே சொல்ல போறேன். அதுக்கு எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற பேபி. அதோ அந்த மூலையில கிடக்குது உன்னோட பேண்ட். நான் உனக்கு ஒழுங்கா தான் ட்ரஸ் போட்டுவிட்டேன். நீ தான் படுத்துகிட்டே ஸ்விம்மிங் பண்ணுறேன் கதகளி ஆடுறேன்னு காலையும் கையையும் சும்மா வச்சிக்காம.." பேசிக் கொண்டிருந்தவன் சட்டென்று பேச்சை நிறுத்தி விட்டு அவளை ஒரு மார்க்கமாக பார்க்கவும் பெண்ணவளுக்குள் கிலி பரவியது.

"வ..ச்..சி..க்..க..மா.." அவளுக்கு வார்த்தைகள் தடுமாறின.

"கையையும் காலையும் அங்க இங்க போட்டு உருண்டதுல லூசா இருந்ததால பேண்ட் கழந்து கீழே விழுந்துருக்கு. இது தான் விஷயம். இதுக்கு போய் ஒரு கன்னிப் பையனை சந்தேக பட்டுடியே. இது தான் பெண் குலம் பண்ணுற நீதியா".

'ஓ. அவ்ளோ தானா. நானும் என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன்'. ஒன்றும் பேசாமல் அங்கே கிடந்த ஆடையை எடுத்து அணிந்தவள் திரும்பி வந்து அவன் முன்னே நின்றாள்.

அவனோ இவளை கண்டு கொள்ளாமல் யாரிடமோ புலம்புவது போல இவளிடம் பேசினான். "நேத்து நைட் செம ஒர்க். சோ டயர்ட் பேபி. என்னை கொஞ்ச நேரத்துக்கு டிஸ்டர்ப் பண்ணாத பேபி".

'எல்லாம் என் நேரம். இவன்கிட்ட வந்து மாட்டிக்கிட்டு முழிக்கிறேன். இந்த ட்ரஸ் ஓட எப்படியும் வெளிய போக முடியாது. இவனாக ஏதாவது செய்தால் தான் உண்டு'. தன் நிலையை எண்ணி நொந்துக் கொண்டவள் அந்த அறையை சல்லடை போட்டு கண்களால் துலாவினாள்.

18976

மரத்திலான அலங்கார பொருள்கள் அதிகம் அந்த அறையில் விரவி கிடந்தது. கட்டிலின் இடதுபுறம் தொட்டில் போன்ற அமைப்பில் கயிறுகளால் கட்ட பட்டிருந்த ஊஞ்சலும், வலப்புறம் வெண்மையும் காஃபி கலரும் கலந்தார் போல வார்ட்ரோப், அதனை ஒட்டி உடைமாற்றும் அறையும் இருந்தது.

பெட் ரூமோடு சேர்ந்து பால்கனியும் இருந்தது. ஆராதனாவின் பாதங்கள் அந்த திசை நோக்கி மெல்ல அடி எடுத்து வைத்தது. பச்சை பசலென்ற புல்வெளியும், சிறு சிறு தொட்டிகளில் பூத்து குழுங்கிய வண்ண வண்ண மலர்களும், புத்தர் சிலையும் என பார்ப்பதற்கே அவ்வளவு அழகாய் அமைந்திருந்தது அந்த பால்கனி தோட்டம்.

18977

அங்கே கொஞ்சம் தள்ளி டென்ட் வடிவில் கயிறுகளால் தாங்கபட்ட கூடாரம் போன்ற ஊஞ்சலும், தூக்கனாங் குருவிகூடு போன்றிருந்த நாற்காலிகளும், ஆராதனாவின் உள்ளத்தை வெகுவாக கவர்ந்தது. இவன் கலை ரசிகன் போலும். ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து வடிமைத்திருக்கிறான்.

இவனுக்கு வெண்மை நிறம் பிடித்த நிறம் போல எங்கு பார்த்தாலும் அதே நிறத்தில் ஏதாவது ஒரு பொருள் காணமுடிகிறதே. அதோடு இவனுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ்வது பிடித்தம் என்பதையும் அவளுக்கு சொல்லியது அந்த அறையில் உள்ள ஒவ்வொரு பொருளும்.

கண்ணாடியால் ஆன அந்த பாதுகாப்பு சுவர்களில் கைகளை படரவிட்டவள் சுற்றுப்புறத்தை வேடிக்கை பார்க்கலானாள். வெளி அழகை கண்டு மெய் மறந்து போனாள். அவன் அறையையே அவ்வளவு அழகாக அமைத்திருப்பவன் சுற்றுப்புறத்தை அதைவிட அழகாக அல்லவா அமைத்திருப்பான். ஏதோ ஒரு மாய உலகத்தில் இருக்கின்ற உணர்வு பெண்ணவளுக்குள்.

அவள் அதை ரசித்து பார்த்துக் கொண்டிருக்கும் பொழுது அவள் பின்னே முதுகோடு ஒட்டினாற் போல வந்து நின்றான் ரவி. மீசை முடிகள் அவளது காது மடலில் மடல் எழுத அவன் இதழ்கள் சொன்னது "இப்போ எப்படி பீல் பண்ணுற பேபி. ரீலாக்ஸ் ஆகிட்டியா?"

'இவனுக்கு என் உணர்வுகளை படிக்க தெரிந்திருக்கிறது. பெண்ணாக என் மனதில் எழுந்த ஐயத்தை கழையவே இவன் கண்டு கொள்ளாதது போல நடித்திருக்கிறான். கள்ளன்'.

"ம்ம்ம்.." ஏனோ வார்த்தைகள் அதற்கு மேல் வரவில்லை. காலை நேர பனி காற்றின் குளிர்ச்சியோ இல்லை ஆண்மகனின் அருகாமையின் கதகதப்போ.

"இப்படி உன் கூட அதுவும் என் வீட்ல என்னோட அறையில ஒன்றா சேர்ந்து சன் ரைஸ் பார்க்கணும்னு எவ்ளோ நாள் கனவு கண்டிருப்பேன் தெரியுமா?" அந்த சூழ்நிலையை அனுபவித்த படி கூறியவன் தொடர்ந்தான். "நீ லேட்டா வந்தாலும் செம மாடர்ன்ன்னா பாத் டப்புக்குள்ள என்ட்ரி ஆகியிருக்க. பியூச்சர்ல நினைச்சி பார்க்கும் போது செம ஜாலியா இருக்கும் போ".

"ஹ்ம்ம்ச். உங்களுக்கு ஜாலியா இருக்கும் எனக்கு கேலியால இருக்கும்". முகத்தை திருப்பி கொண்டாள் பெண்.

"ஹ்ம்ம். உனக்கு என்னை பற்றி இப்போ நல்லா தெரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் இப்படி பேசுனா எப்படி பேபி".

"ச் ச் சு.. எதுகெடுத்தாலும் அதென்ன பேபி".

"பின்ன நீ என்னோட பேபி இல்லையா..?!" அவளை அணைத்தவாறே முகத்தை திருப்பியவன் "யூ ஆர் மை பஃஸ்ட் பேபி ஆல்வேஸ்" என்று கண்ணோடு கண் நோக்கி சொல்லியவன் நெற்றியில் ஈர முத்தத்தை பதித்தான்.

"வா. இங்கே வந்து உட்காரு. நாம் பேச வேண்டிய விஷயம் நிறைய இருக்கு. இதுக்கு மேல நமக்கு இப்படி ரகசியமா பேச நேரம் கிடைக்குமோ என்னவோ?" எதையோ மனதில் நினைத்தபடி சொன்னவன் அவளை கைபிடித்து அழைத்து வந்து அந்த கூடு வடிவ ஊஞ்சலில் அமரவைத்தான். அவளை ஒட்டி அவனும் அமர்ந்து கொண்டான்.

அவள் இடதுக்கையை எடுத்து தன் கைகளுக்குள் பொத்தி வைத்தவன் தான் கடந்து வந்த நிகழ்வுகளை அவளுடன் பகிரலானான்.

"எனக்கு விவரம் தெரியுறதுக்கு முன்னவே என்னோட அம்மா என்னை விட்டு போயிட்டாங்க. அப்போ என்னை கவனிச்சிக்கிறதுக்காக என்னோட பாட்டி வந்தாங்க. உண்மையிலே அவர்கள் என்னோட சொந்த பாட்டி கிடையாது".

"என்ன சொல்றீங்க ரவி?"அதிர்ந்து விழித்தாள் ஆராதனா.
 
Status
Not open for further replies.
Top