All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கதை திரி

Status
Not open for further replies.

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 17


15044



"சந்தோஷமே நம் உறவு
சங்கமிக்கும் இடத்தில்
சாமி சிலையாய் நீயிருந்தால்..."


எத்தனை வருடங்கள் கடந்தாலும்... எவ்வளவு காலம் வசித்தாலும்.. பூக்களின் தேனை உறிஞ்ச ஓடோடி வரும் தேனீக்கு வாடகை கேட்பதில்லையே பூக்கள். அதன் நிறங்களின் எண்ணிக்கையை அறிய முற்பட்டால் பிரமிக்க வைக்கும் எந்தவொரு அறிஞனையும். ஆளை மயக்கும் மணத்தை எத்தனை பொருத்தமாய் செயற்கை முறையில் மனிதன் தயாரித்தாலும் இயற்கையாய் மலர்ந்த மலரின் மணத்திற்கு ஈடு உண்டோ...?! பூக்களை பிடிக்காத ஜீவன் தான் உலகில் உண்டோ...?! எத்தனை அழகாய் இருந்தாலும் அவ்வழகையே அலங்கரிக்க பூக்களை தானே நாடி வருகின்றனர். அப்படி இருக்கையில் பூக்களுக்கு இறுமாப்பு இருக்க கூடாதா...? கர்வம் பிறக்க கூடாதா...?! என்று பூக்களுக்குள் சொற்பொழிவு விறுவிறுப்பாய் நடக்க... இவை எதுவும் அறியாமல் அப்பூக்களுக்கு நீர் கொடுத்து உபசரித்து கொண்டிருந்தார் ஆரதனாவின் அன்னை கீர்த்தனா.

தன் வீட்டில் வளர்க்கும் எல்லா செடிகளுடன் காலையில் வேலைக்கு செல்லும் முன் கொஞ்ச நேரம் செலவழித்து விட்டு போவது தான் அவரது வழக்கம். இன்றும் அதே போல செய்து கொண்டிருக்கும் சமயத்தில் வீட்டு வாசலிலிருந்து யாரோ அழைக்கும் சத்தம் கேட்டது.

"கீர்த்தனா அக்கா... கீர்த்தனா அக்கா..."

கையிலிருந்த தண்ணீர் பைப்பை கீழே போட்டு பைப்பை அடைத்து விட்டு வாசலிற்கு விரைந்தார் அவர்.

அங்கே பக்கத்து வீட்டு மாலதி நின்றிருந்தார்.

"என்னம்மா.. என்ன விஷயம்?"

"அக்கா. இன்றைக்கு என்னோட பொண்ணு 'மகி'யோட ஸ்கூல இருந்து அவளோட கிளாஸ் மிஸ் வர சொல்லி கூப்பிட்டு இருக்கிறாங்க. என்னோட துணைக்கு நீங்களும் வந்தா எனக்கு உதவியா இருக்கும்".

"அப்படியா மாலதி. எனக்கு பத்து மணிக்கு ரெஸ்டாரண்ட்ல இருக்கணுமே".

"இல்லக்கா. நாம போய்ட்டு உடனே வந்திரலாம். இப்போ மணி இன்னும் ஒன்பது கூட ஆகல. அதுவும் இல்லமா இவள்ட்ட மட்டும் தான் அவளோட மிஸ் வர சொல்லியிருக்கிறாங்க. மத்த பசங்க பேரெண்ட்ஸ் அல்ரெடி மீட் பண்ணி ஆச்சாம். சோ நீங்க பத்து மணிக்கு எல்லாம் வேலைக்கு போயிறலாம்".

"அப்போ சரி மாலதி. இதோ வந்துர்றேன்". சொன்னவர் வீட்டை பூட்டி விட்டு அவருடன் பள்ளியை நோக்கி செல்லலானார்.

##############

மேகத்தை தொட்டு விடும் நோக்கில் உடலை குறுக்கி சிறகை விரித்து பறக்க தயாரானது போல ஒரு வித ஆயத்ததுடன் இருக்கும் பறவையை போல இருந்தது அந்த அறையில் குழுமியிருந்தவர்களின் நிலை. எந்த நேரம் வேண்டுமானாலும் அவர்கள் உழைப்பிற்கான பதில் வரலாம். தத்தம் இடத்தில் அமர்ந்திருந்தாலும் எல்லோர் மனமும் ஒரு சேர அந்த தொலைபேசியிலேயே கவனம் செலுத்திய படி இருந்தது.

ஆனால் எதை பற்றிய அக்கறையும் சிந்தனையும் இன்றி ஆராதனாவிடம் தன் காதலை சொல்லிவிட்ட நிம்மதியில் நாற்காலியில் தலை சாய்த்து உதட்டிலே இளநகை மின்ன கனவுலகில் சஞ்சரித்து கொண்டிருந்தான் வர்மா குரூப்பின் சக்கரவர்த்தி ரவி வர்ம குலோத்துங்கன்.

சில சமயம் என்றோ நடந்த உரையாடல்கள் நினைவலையில் எழும்பி இதழ்களை மலர செய்யும் அன்பின் ஆதிக்கம் அதிகமிருந்தால். அதேபோல காதல் சொல்லியதும் அவள் முகத்தில் வந்து போன மாற்றங்களை எண்ணி ரசித்து கொண்டிருந்தான். என்னை பிடிக்கும் அவளுக்கும் அது இவன் மனதுக்கும் தெரியும். ஆனால் ஏனோ ஒத்துக்கொள்ள மறுக்கிறாள். மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறாளோ. அவள் மனம் அறிந்து கொள்ளாமல் இவன் மேற்கொள்ளும் இந்த வாழ்க்கை பயணம் பற்றி எப்படி சொல்வது அவளிடத்தில். முதலில் அவள் இவனை நம்ப வேண்டுமே.

விஷயத்தை சொன்னால் "அட போடா பைத்தியகாரா என்று சொல்லிவிட்டால்..?! உண்மையை சொல்லி அவள் காதலை பெறுவதை விட அவள் எனக்காக... என் ஒருவனுக்காக.. என் மனம் புரிந்து... என்னை ஏற்று கொள்ள வேண்டும். அவள் முழு காதலும் எனக்கு மட்டும் வேண்டும். இந்த ரவியை தான் அவள் நேசிக்க வேண்டும். அடைமொழி கொண்ட ரவியை அல்ல. அவளறிந்த அந்த சாதாரண மனிதன் ரவிக்காக மட்டும். அப்படி ஒரு காதல் தான் எனக்கு வேண்டும். வேறு எந்த காரணத்திற்க்காகவும் அவள் என் காதலை ஏற்று கொள்ள கூடாது". அவனது கருத்தில் உறுதியாய் இருந்தான்.

"கண்டிப்பாக அவளே வருவாள். வந்து என் மீதான காதலை மூச்சு முட்ட கொடுப்பாள். நடந்தே தீரும் என் காதல் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது". அடித்து சொல்லியது அவனது காதல் கொண்ட மனது.

"எக்ஸ்குயுஸ் மீ சார்" கதவை தட்டியபடி தலையை நீட்டி அனுமதி கேட்டாள் ஆராதனா. அவன் மனம் கவர்ந்த தேவதை. கண்களை திறக்காமலே வந்தது அவள் தான் என்று குரலை வைத்தே அறிந்து கொண்டவன் அமர்ந்திருந்த நாற்காலியை அவள் புறமாக சுழற்றியவாறே

"யெஸ் கம் இன்" சொல்லியபடி கண்களை திறந்து விழி முழுதும் பெண்ணவளை நிரப்பி கொண்டான்.

ஒரு நொடி அவனது பார்வையில் தடுமாறியவள் எதையும் முகத்தில் காட்டாமல் புன்னகை முகமாக உள்ளே வந்தாள்.

"குட் மார்னிங் சார். இப்போ நீங்க பிரீயா இருந்தா நாம் ரெஸ்டாரண்ட் சம்மந்தமா சில டிடைல்ஸ் பேசலாமா..?"

" ஓ..பேச..லா..மே.. ஆனால் இப்போ இல்ல. கொஞ்ச நேரம் கழிச்சு. என்னோட காபின்ல. எனக்காக கொஞ்சம் காத்திருக்க முடியுமா மிஸ்.ஆராதனா...??!"

கண்கள் வேறு பாஷை பேச இதழ்கள் வேறு சொன்னது. அவன் காதலை புரிந்து கொண்ட மங்கைக்கு இது என்ன புரியாமலா இருக்கும். மெதுவாக உதடுகளை கடித்து கொண்டாள் பெண். தன்னுள் எழும் அந்த பெயர் அறியா உணர்வை அடக்க வழி தேடியது உள்ளம். அவள் தவிப்பை அதிகப்படுத்தாமல் அவனே அதற்கு முற்றுப்புள்ளி வைத்தான்

"பிளீஸ் டேக் யுவர் சீட் மிஸ்".

எதுவும் பேசாமல் அமைதியாக அவன் சுட்டி காட்டிய நாற்காலியில் அமர்ந்து கொண்டாள். கையில் இருந்த பையில்லில் அவள் கவனம் செலுத்துவது போல குனிந்திருந்தாலும் அவனது பார்வை அவளை கூறு போட்டதை பெண்ணவளால் உணர முடிந்தது. கன்னங்கள் சிவப்பதை அவளால் தடுக்க முடியவில்லை. அந்த கள்வன் அதையும் தான் கண்டு கொண்டானே. மீண்டும் அவன் முகத்தில் புன்னகை மலர்ந்தது. அந்த ஏகாந்த நிலையை கலைத்தது போன்று குரல் எழுப்பியது மேசையில் இருந்த தொலைபேசி.

"ட்ரிங்... ட்ரிங்... ட்ரிங்..."

ரவி கண்ணசைக்கவும் அவனது செக்கரட்டி அதை எடுத்து காதில் வைத்து பேசலானான்.

சுற்றி இருந்தவர்கள் முகத்தில் ஆர்வம் குடி கொண்டது. செக்கரட்டியின் பேச்சை கூர்ந்து கவனிக்கலானார்கள். இவர்களது ஆர்வம் கண்டு ஆருவும் அதில் கவனம் செலுத்தினாள். அவர்கள் பேசிய அந்த குறுகிய வார்த்தைகள் கொண்டு அவளால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. வெறுமனே பார்த்து கொண்டு இருந்தாள்.

செக்கரட்டி போன் பேசி முடித்ததும் அவன் வெற்றி குறியை காண்பிக்கும் வகையில் மற்ற நான்கு விரல்களை உள்நோக்கி மடக்கி பெருவிரலை உயர்த்தி காட்டவும் அங்கிருந்தவரகள் "ஓ ஓ" வென ஆர்ப்பரித்தனர். ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லி கை குலுக்கி கொண்டனர்.

"ஓ. எதுவும் நல்ல செய்தி போல". எல்லோரும் சந்தோஷத்தில் ஆர்பரிப்பதை பார்த்து புரிந்து கொண்டாள் ஆராதனா.

அனைவரையும் கை உயர்த்தி அமர சொன்னவன் தன் ஆறடி உயரத்திற்கும் முழுதாய் எழுந்து நிமிர்ந்து நின்றான் ரவி. முறுக்கேறிய புஜங்கள் உருண்டு திரண்டு அந்த மூடிய ஆடைக்குள்ளும் காட்சியளிக்க ஆணழகனாய் தெரிய அழகாய் புன்னகைத்தான். அனைவரையும் வீழ்த்த இந்த இவனது ஒற்றை புன்னகை போதுமே. அங்கியிருந்த ஆண்கள் உட்பட கொஞ்சம் என்ன அதிகமே அதில் கவர பட்டனர். ஆரதனாவின் மனமும் அவனில் மயங்கி போனதில் ஆச்சரியம் இல்லையே.

"காங்கிராட்ஸ் கைஸ். நூறு கோடி பெறுமானம் மிக்க இந்த ப்ரொஜெக்ட் வின் பண்ணுனதை விட உங்க எல்லோராட சந்தோஷத்தையும் பார்க்கும் போது தான் எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. இது உங்க எல்லோராட உழைப்பு. இந்த வெற்றிக்கு நீங்க எல்லோரும் தான் காரணம். ஆனால் இது மட்டும் போதாது. இன்னும் இன்னும். உங்களுக்குள்ள இருக்கிற எல்லா திறமையும் வெளியே கொண்டு வாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு என்னோட டீம் இதுக்கு மேலயும் டலேண்ட் ஆனவங்க. நான் உங்க எல்லோரையும் நம்புறேன். தாங்க் யு கைஸ்" எல்லோருக்கும் பொதுவாக வாழ்த்தினை சொன்னவன் கண்ணசைவில் ஆருவையும் வெளியே வருமாறு சொல்லி விட்டு வெளியேறினான்.

###########

மலாதியும் கீர்த்தனாவும் ஆசிரியரை சந்தித்து விட்டு வெளியேறி கொண்டிருந்தனர். அப்போது மாலதி

"ரொம்ப தாங்க்ஸ் அக்கா. டீச்சர் கூப்பிட்டவுடன் என்னமோ ஏதோன்னு பயந்து போய்ட்டேன். சாதாரண மீட்டிங் தான் அப்படின்னு பொண்ணு சொன்னப்போ கூட கொஞ்சம் உதறல் இருக்க தான் செய்து. அதான் உங்களை துணைக்கு கூப்பிட்டேன். நீங்க கூட இருந்தா ஒரு பலம் வந்த மாதிரி இருக்கும். அப்படி ஒரு மேஜிக் உங்ககிட்ட இருக்குக்கா".

"ஹே ஹே.. என்ன இது.. மேஜிக் அப்டிலாம் ஒன்னும் இல்லை. எல்லாம் நாம நம்ம மேலே வைக்கிற நம்பிக்கை தான். எதிரிலேயே பதிலை வச்சிக்கிட்டு விடை தேடி வேற எல்லா இடத்திலும் தேடுவோம். அது மாதிரி தான். அடுத்த தடவை மீட்டிங்கிற்கு நீ தனியா தான் போற. சரியா!? பஸ்ட்டு உன் மேல நம்பிக்கை வை. வாழ்க்கையை நாம் தனியா தான் வாழனும். கடைசி வரை துணைக்கு யாரும் வர மாட்டாங்க. புரியுதா உனக்கு".

"ஹ்ம்ம்... நீங்க சொல்லுறதும் சரி தான். நான் முயற்சி பண்ணுறேன் அக்கா".

"ம்ம்ம்ம்.. தட்ஸ் மை கேள். ஓ கே. எனக்கு நேரமாச்சு. நான் இப்போ கிளம்புனா தான் சரியா இருக்கும். நீ பஸ் பிடிச்சி தனியா போயிருவீயா..?!"

"என்னக்கா நீங்க. இவ்ளோ நேரம் நீங்க பேசுன பேச்சை கேட்டதுக்கு அப்புறம் நான் தனியா போய் சேர மாட்டேனா. அதெல்லாம் போயிருவேன். நீங்க முதல கிளம்புங்க". சொல்லியபடி இருவரும் அவரவர் பாதையில் பிரிந்து சென்றனர்.

ரெஸ்டாரண்ட்ற்கு செல்லும் பேருந்தில் ஏறியவர் சரியாக பத்து மணி ஆக மூன்று நிமிடம் இருக்கும் பொழுது அவர் இறங்க வேண்டிய இடத்திற்கு சென்றடைந்தார்.

"ஓ.காட். த்ரீ மினிட்ஸ் ஒன்லி". சொல்லியபடி அவசர அவசரமாக பேருந்தில் இருந்து இறங்கியவர் ரெஸ்டாரண்ட் நோக்கி நடையை எட்டி போட்டார். கொஞ்சம் தாமாதமானலும் அங்கே யாரும் இவரை கேள்வி கேட்க போவதில்லை. ஆனாலும் அவருக்கென்று ஒரு நேர்த்தி வேண்டும் என்று விரும்புபவர்.

கையில் கட்டியிருந்த தங்க நிற டைட்டான் வாட்ச்சில் நேரத்தை பார்த்தவாறு சாலையை கடந்தவர் அந்த ஓரமாய் வந்து கொண்டிருந்த காரை கவனிக்க தவறினார். இதோ அடுத்த சில அடிகளில் ரெஸ்டாரண்ட் வாசலை தொட்டு விடும் சமயம் 'கீர்ச்' சத்தத்துடன் அந்த கார் கீர்த்தனாவின் ஆடையை தொட்டு பார்த்தது.

"ஹைய்யோ! அம்மா..." அலரலுடன் அவர் மயங்கும் நிலைக்கு செல்லலானார்.

##########


அங்கே தன்னை பின் தொடர்ந்து வருமாறு சைகை செய்து விட்டு சென்றவன் பின், தன் பைலை எடுத்து கொண்டு சென்றாள் ஆராதனா. அவன் வேக எட்டுகளுக்கு அவளால் ஈடு கொடுக்க முடியவில்லை. வேகமாக சென்றவன் சட்டென்று நிற்க்கவும் அவன் மீதே பட் டென்று மோதி கொண்டாள் பெண்.

"ஷ் ஷ்.."

கையிலிருந்த பேப்பர் எல்லாம் காலடியில் தஞ்சம் புகுந்தது. அது கூட பரவாயில்லை. முன் நெற்றி அவனது பாறை போன்ற பரந்த முதுகில் மோதியதில் நெற்றி 'விர் விர்' ரென்று வலித்தது.

'தடி மாட்டு பைய. இப்படியா உடம்பை வளர்த்து வைப்பான். இது முதுகா இல்லை இரும்பா. சை...' மனதில் சலித்து கொண்டு நிமிர்ந்தவள் முன் சிவப்பேரிய கண்களுடன் இவளையே பார்த்தபடி அழகாய் முறைத்து கொண்டிருந்தான்.

இடது புருவம் யுடேர்ன் போட்டு வில்லேந்திய நாண் போல வளைந்து இருக்க, மருதாணி வைத்ததும் சிவக்கும் கை போல அவனது கண்கள் சிவக்க, அவன் திரும்பியதில் அலை அலையான கேசம் ஒரு முறை துள்ளி அடங்க, அழுத்தமான கொஞ்சம் என்ன ரொம்பவே அம்சமாய் இருந்த அந்த ஸ்டராபெர்ரி உதடுகளும், இறுகிய தாடையும் அவனது கோபத்தை பறை சாற்றியது.

'அட. கொக்கா மக்கா.. இப்போ கொஞ்ச முன்னாடி தான் அப்படி சிரிச்சு பேசுனான். இப்போ என்னடா..ன்..னா இப்படி பாசமா லுக் விடுறான். இது சரி இல்..லை..யே ஆரு..' நினைத்தபடி முகத்தை அப்பாவியாய் வைத்து கொண்டாள். மெதுவாக குனிந்து கீழே சிதறி கிடந்த பேப்பரை எடுத்துவிட்டு ஒரு முடிவுடன் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'ஹ்ம்ம்.. வருவது வரட்டும். எதற்கும் தயாராக இருப்போம்'.

மிரண்டு விழிக்கும் குழந்தை போல தோற்றத்தை மாற்றினாள் சடுதியில் கிடைத்த நேரத்தில். அவன் இந்த குழந்தை தனமான விளையாட்டை எதிர்பார்க்கவில்லை போலும். தன் காதலை சொல்லி அவள் இன்னும் பதில் கூறாமல் இருப்பது மட்டுமின்றி ஒன்றுமே நடக்காதது போல அங்கே மீட்டிங் ஹாலில் நடந்து கொண்டது அவனது கோபத்தை கிளறி விட்டிருந்தது. அதை கேட்கலாம் என்று நினைத்தால் இவள் என்னடா வென்றால் பச்சை பிள்ளையாட்டம் நடிக்கிறாளே..? ! அட ஆண்டவா.. மானசீகமாக தலையில் அடித்து கொண்டான்.

கோபமாக ஏதோ சொல்ல வந்தவன் சட்டென நிறுத்தி தலையை குலுக்கி விட்டு பின் "கம் டூ மை காபின்" சொல்லியவன் திரும்பி ஒரு எட்டு வைத்தவன் சட்டென இவள் புறம் திரும்பினான். இதையும் அவள் எதிர் பார்க்கவில்லை போலும். இம்முறை அவனது ஆளுமை மிகுந்த நெஞ்சில் தலையை முட்டி கொண்டாள். மூக்கு நுனி வரை கோபம் எட்டி பார்த்தது. கஷ்டப்பட்டு கோபத்தை கட்டுப்படுத்தினாள் பெண்.

'இவன் என்ன நினைத்து கொண்டிருக்கிறான். வா என்பானாம் பின் சுவர் மாதிரி வழியிலே நிற்பானம். தடிமாடு. தடிமாடு. எத்தனை முறை தான் என் நெற்றியை பதம் பார்ப்பான். ஒரு வேளை நே..ற்..று.. நெற்றியில் தானே முத்தம் கொடுத்தான். அதற்கு தான் இப்போ சேர்த்து வச்சி கொடுக்கிறானோ. இது தான் முத்தத்தால் அடிக்கிறதோ.?! அட கிரதகா. உனக்கு வேற இடமே கிடைக்கலையா... இப்படி ஒரே இடத்தில் இடிக்கிறியே'. எல்லாம் மனத்திற்குள்ளாகவே சலித்து கொண்டாள்.

'இப்போ என்ன.. ?' என்பது போல பார்த்தாள் கொஞ்சம் காட்டமாகவே.

"நேரே என்னோட அறைக்கு வரணும். அங்க நின்னு இங்க நின்னு கதை அளந்துகிட்டு இருக்க கூடாது. புரியுதா..?!"

'ஆமா. நான் இவன் பொண்டாட்டி பாரு. சொன்னதும் செய்றதுக்கு. ஆர்டர் போடுறாராம் துறை. போடா போடா..' தூசி போல அவன் பேச்சை தட்டி விட்டு கொண்டது மனம்'.

அவள் ஒன்றும் சொல்லாமல் நிற்கவும், "என்ன நான் சொல்றது உனக்கு புரியுதா..? ஹ்ம்ம்..? "

ஏற்கனவே பக்கத்தில் தான் இருந்தான். இப்போதோ இன்னும் நெருக்கமாய் வந்தால் நான் என்னடா செய்வேன். மூச்சு முட்டுதடா. ஆண் மகனுக்கே உரிய வாசம் பெண்ணவள் இதயத்தை பதம் பார்க்க... அக்காதலனின் அருகாமை பாடாய் படுத்தியது. காதலில் கசிந்துருக துடித்த இதயத்தை காரி துப்பி அடக்கினாள். அவள் முகத்தில் வந்து போன மாற்றத்தை அக்கள்வனும் கண்டு கொண்டான். அவள் முகம் நோக்கி குனிந்தவன் கண்ணோடு கண்கள் கலக்க விட்டு மூக்கு நுனி லேசாக உரச... பெண்ணவள் நெஞ்சிலோ காதல் சரவெடி!

வியப்பில் விழிகள் விரிக்க அந்த அழகில் கவரப்பட்டவன் உள்ளம் கவிபாட விரும்பியது அவளிடத்தில். மீசை நுனி கீழ் மூக்கு பிரதேசத்தில் வருட சிலிர்த்து அடங்கியது ஆருவின் உடல். குழந்தையின் தவழல் போல மெது மெதுவாக காதல் தேவனிடம் அடைக்கலம் புக சென்றது ஆருவின் மனம். கண்கள் தானாக மூட அடுத்த செயலுக்காக ஏங்கியது அவ்வுள்ளம்.

அவளது அந்த காதல் சிந்தும் முகத்தை அருகில் கண்டவனது உள்ளம் ஆரவாரம் போட்டது. இத்தனை காதலையும் உள்ளத்தே வைத்து விட்டு ஒன்றுமே இல்லாதது போல இவள் நடந்து கொள்வது தான் என்ன..? முத்தமிட துடித்த இதழ்களை அடக்கியவன் குழந்தைதனம் கொண்ட அவளது முகத்தை ஒருநொடி ஆழ்ந்து பார்த்தவன் சட்டென்று பின்னோக்கி நகர்ந்து விட்டான்.

"ம்ம்ம்... சீக்கிரம் வந்து சேர்". சொல்லியபடி வேகமாய் மறைந்தும் விட்டான்.

காதல் உலகில் சஞ்சரித்து கொண்டிருந்த ஆராதனாவால் இந்த திடீர் புறக்கணிப்பை ஏற்று கொள்ளமுடியவில்லை. 'இவன் மனதில் என்ன நினைத்து கொண்டிருக்கிறான். நான் என்ன இவனுக்கு விளையாட்டு பொம்மையா..? வேண்டும் என்றால் பக்கத்தில் வருவானாம். இல்லை என்றால் தூர நிறுத்துவானாம். என் உணர்வுகளோடு விளையாட இவனுக்கு யார் அனுமதி கொடுத்தது.?' வானுக்கும் மண்ணுக்கும் கோபம் பறந்து பறந்து சென்று பெண்ணவளை ஆக்கிரமித்தது.

'இருடா... உனக்கு ஒரு நாள் இதுக்கு எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி கொடுக்கிறேன்'. மனதினுள் கருவி கொண்டவள் பெரிய எட்டுகளுடன் அவனது அறை நோக்கி சென்றாள்.

###########

சரியான நேரத்திற்கு ரெஸ்டாரண்ட் செல்ல வேண்டும் என்ற அவசரத்துடன் வந்த கீர்த்தனாவை அந்த கார் பதம் பார்க்க நினைத்த தருணத்தில் டிரைவரின் சமார்த்தியத்தால் அவர் ஆடையை மட்டும் பதம் பார்த்தபடி கர்ஜித்த கொண்டு நின்றது அந்த பென்ஸ் கார். ஏதோ விபரீதம் நடக்க போகிறது என்று உணர்ந்த கீர்த்தனாவும் பதட்டத்தில் "அய்யோ அம்மா" என்று அலறி இருந்தார். மயக்கம் கூட வருவது போல தான் இருந்தது.

ஒரு நொடி அவரது உலகமே ஆட்டம் கண்டது. படபடத்த உடலை அமைதியாக்கியபடி மூடிய கண்களை மெதுவாக திறந்து பார்த்தார்.

அங்கே அந்த காரின் கதவை திறந்தபடி வந்த அந்த மனிதரை பார்த்ததும் முகம் கோபத்தில் ஜொலிக்க... இதற்கு இந்த காரிலேயே அடிபட்டு செத்திருக்கலாம். யார் முகத்தில் முழிக்கவே கூடாது என்று எண்ணியிருந்தேனோ அவரது முகத்திலேயே விழிக்க வேண்டிய தன் விதியை எண்ணி நொந்து போனார் கீர்த்தனா.

அப்படி யார் மேல் இத்தனை கோபம். அதுவும் கனிவிற்கு மறுஉருவமாய் இருப்பவர் இவ்வளவு வெறுத்து பேசும் படி என்ன நடந்திருக்கும்..?!
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மை டியர் கண்மணிஸ்.... :smiley6::smiley6:
அத்தியாயம் 17 பதிவு பண்ணிட்டேன். படிச்சு பாருங்க. ரெண்டு வார்த்தை சொல்லிட்டு போங்க.


ஆதரவும் ஊக்கமும் அளித்து என்னை இதுவரை கொண்டு வந்து சேர்த்த அனைத்து வாசகர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ கருத்து திரி
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 18


20200722_141406.jpg

அட இது என்ன கூத்து...
அட அது என்ன பாரு...
அட இது எப்படி ஆச்சி..
அட அது எங்க போச்சி...
அவ்ளோ தான் வாழ்க்கை...


யாருடைய நினைப்பே வேண்டாம் என்று நினைக்கிறோமோ அவர்களை பற்றி தான் இருபத்தி நான்கு மணி நேரமும் உள்ளம் கூப்பாடு போடுமாம். அது போல யாரை தன் வாழ்நாளில் இனி சந்திக்க கூடாது என்று நினைத்திருந்தாரோ அவரையே இன்று கண்ணெதிரே கொண்டு வந்த விதியை சபித்து கொண்டார் கீர்த்தனா.

தன் எதிரே அத்தனை வயதாகியும் அதேபோல அன்று பார்த்த அதே ஆளுமை தோரணை கொஞ்சமும் குறையாமல் வந்து நின்ற அந்த நரைத்த இளஞனை கொலைவெறியோடு முறைத்து கொண்டிருந்தார் கீர்த்தனா.

"ஹேய்.. கீர்த்தி.. நீ தானா இது.. பார்த்து எவ்ளோ நாள் ஆச்சு. எப்படி இருக்க..?!"

யாரோ யார் கூடவோ பேசுகிறார்கள் என்ற தோரணையில் நின்றிருந்தவர் அவரது கீர்த்தி என்ற அழைப்பில் முகம் கடுமையாக , ரொம்பவும் அக்கறையாய் கேட்டவரை இன்னும் அதிகமாய் முறைத்து பார்த்தார் கீர்த்தனா.

"ஹேய்.! நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கிறேன். என்னை நியாபகம் இல்லையா..?"

"மறக்க கூடிய மனிதரா நீங்கள். எப்படி அவ்வளவு சுலபத்தில் மறக்க முடியும்". விரக்தியாய் பதிலளித்தார் கீர்த்தனா.

"நீ இன்னும் பழசை மறக்கலயா கீர்த்தி.?!"

"மறந்தால் தானே நினைப்பதற்கு..?
எல்லாத்தையும் மறக்கிற மாதிரியா நீங்க அன்றைக்கு நடந்துகிட்டிங்க?!"

"ஹம்ச்.. ஏன் இவ்ளோ ஹார்..ர்..ஷா.. பிஹேவ் பண்ணுற. அன்றைக்கு இருந்த நிலைமையே வேற"..

"என்ன நிலைமை...?! ஹாங்..!? சக்கரவர்த்தி ராஜ சேகர வர்மாக்கு அப்படி என்ன பரிதாபமான நிலைமை?? கொஞ்சமாது பொருந்துற மாதிரி சொல்லுங்க.."

"ஏன் மனசை கஷ்டப்படுத்துற மாதிரி பேசுற..?"

"பின்ன என்ன உங்களை கொஞ்சி புகழ் பாடி ஆராதிக்க சொல்லுறீங்களா...?!"

அவரது வஞ்ச புகழ்ச்சி அணியால் லேசான குறுநகை மீசையோரமாய் துடித்தது அந்த நரைத்த வாலிபனுக்கு. ( வஞ்ச புகழ்ச்சி அணி என்பது தமிழ் இலக்கியத்தில் புகழ்வது போல செய்து குற்றம் சுமத்துவது). மீசையை முறுக்கிவிட்ட படியே லேசாக தலை சாய்த்து சிரித்து கொண்டார்.

பெப்பர் சால்ட் ஹேர் என்பார்களே அது போல கருப்பும் வெள்ளையுமாய் கலந்த கேசம். இன்றைய தலைமுறையினரின் ஸ்டைல்க்கு ஏற்ப நாகரிகமாய் வெட்ட பட்ட கேசம் ஜெல் போட்டு நிமிர்ந்து நிற்க... முறுக்கிய மீசையும் நவ நாகரிகமாக காட்சியளிக்க.. கொஞ்சம் பணக்கார கலையும் அழகு சேர்க்க... கொஞ்சம் சொக்கி தான் போனார் கீர்த்தனா.

அதே வசீகரம்... அதே ஸ்டைல்... வயசானாலும் இன்னும் உன்னோட அழகும் கம்பீரமும் கொஞ்சம் கூட குறையலடா. கீர்த்தனாவின் உள்ளம் மயங்கி தான் போனது.

மயங்க நினைத்த மனதை தடுத்து கோபம் என்னும் கவசத்தை ஆயுதமாக பயன்படுத்தினார் கீர்த்தனா. எள் பொரியும் அளவு கோபத்தை முகத்தில் தாண்டவமாட விட்டப்படி நிமிர்ந்து கண்ணோடு கண் பார்த்து முறைத்தார் இப்போது.

"ஹம்ச்.." அவரது தோற்றத்தில் தன் நிலையை எண்ணி அலுத்து கொண்டவர்,
"ஏட்டிக்கு போட்டியா பேசாதா கீர்த்தி. கொஞ்சம் அமைதியா பேசு. வா இங்க எங்காயாவது ரீலாக்ஸா உக்காந்துகிட்டே பேசலாம்".

"ஒன்றும் தேவையில்லை. அவ்ளோ பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி ஆளுகின்ற எஜமான் நீங்க. போயும் போய் ஒன்றும் இல்லா எங்க கிட்ட பேச என்ன அவசியம் வேண்டி கிடக்கு...?!"

ரொம்பவும் முறுக்கி கொண்டார் கீர்த்தனா. அவர் அன்று பட்ட வேதனை அப்படியோ...?!

"ஹ்ம்ம்..." ஆழ்ந்த பெருமூச்சினை விட்டவர் கீர்த்தானவை நிமிர்ந்து பார்த்து அந்த வார்த்தைகளை சொன்னார்.

"மன்னிச்சிடு".

ஒரு நொடி கீர்த்தனாவால் அவர் சொன்னதை நம்ப முடியவில்லை. கேட்டது நிஜம் தானா...??!
அ..அ..அ..வர் தானா.. இதை சொன்னது...?? அதுவும் எத்தனை இறுமாப்பாய் இருந்தவர் இன்று ஒன்றும் இல்லாதது போல... எதையோ இழந்தது போல... இத்தனை தூரம் அதுவும் தன்னிடம் இறங்கி வரும் அளவிற்கு என்ன ஆயிச்சு.? பழைய உறவில் இருந்த பாசம் லேசாக துளிர் விட்டது. இயற்கையாகவே இரக்க குணமும், அன்புள்ளமும், பிறருக்கு உதவும் மனப்பான்மையும், கொண்டவரால் இவரது கசங்கிய முகத்தை அதற்கு மேலும் காண முடியவில்லை. ஒன்றும் பேசாமல் இரண்டு அடி எடுத்து அவரை கடந்து சென்றவர் பின் அவரை அமைதியாக திரும்பி பார்த்து சொன்னார்.

"பாலோவ் மை ஃபுட் ஸ்டெப்ஸ்"

நரைத்த இளைஞன் புன்னகைத்து கொண்டார்.

"நீ இன்னும் மாறவே இல்லை கீர்த்தி. கொஞ்ச நேரம் கூட உன்னால கோபத்தை தக்க வச்சிக்க முடியல. இதுல எப்படி இத்தனை வருஷம் என்கிட்ட பேசாம இருந்த". மனதினில் நினைத்து கொண்டவர் காரை லாக் செய்து விட்டு கீர்த்தனாவின் பின் தாயோடு செல்லும் பூனை குட்டியாய் நடந்தார்.

பார்க்கவே அத்தனை ரம்மியமாக இருந்தது. சிங்கம் கூட மானுக்கு இரையாகிறதே... அதுவும் தானாக மனமுவந்து...

#################T####

"சத்தியமா நான் சொல்லுறேன்டா...
உன் தொல்லை என்னை கொல்லுதடா...
பைத்தியமா நான் சுத்துறேன்டா..
உனக்காக நான் கோமாளி ஆகிறேன்டா...
நீ..தான் நீ...தான்...
எனக்கேத்த வில்லன் நீதான்...
நான் தான் நான் தான்..
உனக்கேத்த பேமாளி நான் தான்...
அட கிறுக்கா கிறுக்கா...
நான் தான் இப்போ கிறுக்கா...
ஹ்ம்ம்.....ஹ்ம்மம்ம்.......
மம்ம்ம்ம்ம்ம்ம்....."


வேண்டுமென்றே அந்த குலோத்துங்க ராஜாவை வெறுபேற்ற வேண்டியே அவனுக்கு கேட்கும் படி கதவில் மறைந்து இருந்த படி ரிதமாக பாடியபடியே கொஞ்சம் தாமதமாகவே அவனது கேபினுக்குள் சென்றாள்.

' நீ சொ..ன்..னா நான் உடனே பின்னாடி ஓடி வந்துரணுமா.. போடா... '

பொறுமையாய் எடுத்து சொல்லியும் என் பேச்சு கேட்காமல் வேண்டும் என்றே தாமதமாக வந்த தன் ஆருயிர் காதலி ஆராதனாவை முறைப்பதை தவிர வேறு எதுவும் அவனால் இப்போதைக்கு பண்ணமுடியவில்லை.

"ஹ்ம்ம்.உட்காரு". அழுத்தமாய் உத்தரவிட்டான்.

இதுக்கெல்லாம் அசருர ஆளா நான்... என்பது போல வெகு நிதானமாக அமர்ந்தாள் ஆராதனா.

கையில் இருந்த பைலை திறந்து அதில் தான் குறித்து வைத்திருந்த ஐடியாக்களை அவனிடம் சொல்லலானாள். ஒவ்வொரு குறிப்பையும் அதற்கு எப்படிப்பட்ட ஓவியம் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்பது முதற்கொண்டு தனது விருப்பங்களை முன் வைத்தாள்.

"இட்ஸ் மை ஒப்பினியன். சாய்ஸ் இஸ் யுவர்ஸ்".

அவன் பதில் ஏதும் சொல்லாமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் முகத்தில் இருந்து எதையும் அனுமானிக்க முடியவில்லை. அழுத்தமாய் முகம் காட்சியளிக்க டேபிள் மீது இருந்த பேப்பர் வெயிட்டரை அழகாக அங்கும் இங்கும் உருட்டி நாட்டியம் ஆட வைத்து கொண்டிருந்தது அவனது இடக்கை. அது கூட நளினமாய் இருந்தது.

'எவ்வளவு சுத்தமாய் பளிச்சென இருக்கிறது விரல்கள். விரல் நகம் கூட அவனது ஆளுமையை இப்படி பறைசாற்றுகிறதே. அட குலோத்துங்கா... ஏன்டா இம்புட்டு அழகா இருந்து தொலைக்கிற....??
ஹ்ம்மம்ம்...
சரி தான். இவன் ஏதோ ஃபார்ம்க்கு போய்ட்டான். அதான் பிள்ளை இவ்ளோ சைலெண்ட்டா இருக்கிறான். இன்னைக்கு நல்லா வச்சி செய்ய போறான்.அது மட்டும் உறுதி ஆரு பி கேர் ஃபுல்லு மா... "

அவன் ஒன்றும் சொல்லாமல் இருக்கவும் இவளே பேச்சை தொடர்ந்தாள்.

"தென் உங்களுக்கு ஒன்று தெரியுமா... ரவிவர்மா வரைந்த ஓவியங்கள்.. மிகவும் புகழ் வாய்ந்தவை அதை நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு அவசியம் இல்லை. ஆனாலும் ஏன் சொல்றேன்னா.. அவர் சின்ன நுணுக்கங்களையும் கலைநயத்தோடு வரைந்திருப்பார்.. நான் அந்த அளவுக்கு வரையல. ஆனாலும் மோசம் இல்லை".

சிரித்தபடி அவனருகே தன் நாற்காலியை நகர்த்தி, அவனை பார்த்து பேசலானாள்.

"ஓவியங்களை நேர் பார்த்து பேசும் அழகு கொண்டவை அப்படின்னு சொல்லுவாங்க. இதோ இந்த பிச்சர் பாருங்க. என்டரன்ஸ் ப்ளேஸ்ல எல்லோர் பார்வையும் படும் இடத்துல வச்சா சூப்பர்ரா இருக்கும்".

மனதை மயக்கும் அந்த மான் விழி கண்களை அங்கும் இங்கும் உருட்டியபடியும், ரூச் தடவாமலே சிவந்த கன்னங்கள் பற்றி அக்கறையின்றியும், உதட்டில் புன்னகையுடனும், கைகளை காற்றிலே விளையாடவிட்டபடியும், விரிந்திருந்த கூந்தலை கதோரோமாய் ஒதுக்கியபடியும் அவள் பேசியதை அணு அணுவாக ரசித்து கொண்டிருந்தான் ரவி வர்ம குலோத்துங்கன்.

அவளறியாமல் அவளை நோக்கி நெருங்கி வந்தவன் அவள் கையில் இருந்த பேனாவை டேபிள் மீது வைத்தவன், அவள் இரு கைகளையும் தன் கைகளுக்குள் அணைத்து, அவளை நிமிர்ந்து பார்த்தான்.

எதிர்பாரமல் நிகழ்ந்த இந்த தொடுகையில் பெண்ணவள் உள்ளம் ஒரு நொடி நின்றது. ஒரு வித கலக்கத்துடன் அவனை அவளும் நிமிர்ந்து பார்த்தாள்.

"எவ்ளோ அழகா இருக்கிற தெரியுமா...?!"

'ஹாங்.. இவன் என்ன கேணையனா..? லூசு மாதிரி பேசுறான். நான் என்ன சொல்லிகிட்டு இருக்கிறேன் இவன் என்ன செய்யுறான். மண்டையில நட்டு கலந்துட்டா...?'

'கொஞ்சம் முன்னாடி கூட தெளிவா தானயா இருந்தான். அதுக்குள்ள பிள்ளைக்கு என்ன ஆச்சி..?! ஒன்னும் விளங்களையே...??'

"உனக்கு என்னோட தவிப்பு கொஞ்சம் கூட புரியலல..? லூசு மாதிரி தெரியிறேனா?!"

'அதை எப்படிப்பா என் வாயால சொல்லுவேன்...?' தமிழ் திரைப்பட காமெடி நடிகர் வடிவேல் பாணியில் சலித்து கொண்டாள் ஆரு மனதில்.

"உன்னை பார்க்காம நான் தவிச்ச தவிப்பு எனக்கு மட்டும் தான் தெரியும்". சொல்லியபடி இதயத்தில் அவளது வலக்கையை எடுத்து அழுத்தியவன்...

"இங்கே நீ ராஜ்ஜியம் பண்ணி என்னை உனக்கு அடிமையாக்கிட்ட..."

'அட.. இது என்ன கூத்து.. நான் எப்போடா அங்கே வந்தேன்... ராஜ்ஜியமாம் ராஜ்ஜியம். வேற யார்கிட்டேயும் சொல்லிராத.. பைத்தியம்ன்னே முடிவு காட்டிருவாங்க. நானே பத்து பைசாக்கு பிரயோசனம் இல்லாம இருக்கேன். நான் உன்னை அடிமையாக்குனேனா...? உனக்கு மனசாட்சியே இல்லையாடா...?! கண் அவிஞ்சி போயா கிடக்குறா...?'

"உன்னை சந்திக்கிற ஒவ்வொரு தடவையும் சொல்லிரலாம்ன்னு நினைப்பேன் ஆனால் அதற்கான அவகாசம் கிடைக்காது".

'தலையும் புரியல.. வாலும் புரியல.. சாவடிக்கிறடா...'

"உனக்கு தெரியுமா...?!"

'என்னது..?! நீ பைத்தியம் மட்டும் இல்லை அவார்ட் வாங்குன மென்டல்ன்னா...?'

"நான் உன்னை முதல் முதலா எப்போ மீட் பண்ணேன் தெரியுமா...?!"

'ஹ்ம்ம்... சொல்லி தொலை...'

"நம்மளோட சின்ன வயசுல மீட் பண்ணியிருக்கிறேன். அதை இப்போ நினைச்சாலும் மனசுக்கு இதமா இருக்கு". பேசியபடியே அவளது கைகளில் முத்தம் ஒன்றினை பரிசளித்தான். சிலிர்த்து போனாள் ஆராதனா.

'இவனை எப்போது நான் பார்த்தேன். ஒன்னும் நியாபகத்துக்கு வர மாட்டுக்குதே...'

சிந்தனையில் புருவம் சுருங்க யோசித்தவளை.. அருகே இழுத்து அவளது புருவத்தை நீவி விட்டான். ஆண்மகனது மெல்லிய தொடுகை அவளுள் காதல் ஹார்மோன்களை தட்டி எழுப்ப போதுமானதாக இருந்தது.

விழி உயர்த்தி அவன் முகம் பார்த்தாள். அந்த கண்கள் பொய் பேசுவது போல தெரியவில்லை. ஆனால் எப்படி இது சாத்தியம். ஹ்ம்ம்.. இனி மனதுக்குள் பேசி ஒரு பயனும் இல்லை. அவனிடமே வாய்விட்டு கேட்டுவிட வேண்டியது தான்.

"நீங்க என்ன சொல்லறீங்கன்னு எனக்கு சத்தியமா புரியல" ஒரு வழியாக வாய் திறந்து கேட்டுவிட்டாள்.

அமர்ந்தபடியே அவளை தன் நோக்கி இன்னும் அருகில் இழுத்தவன், அவளது ஆடைக்குள் ஒழிந்திருந்த செயினை கண் முன்னே தூக்கி காட்டினான். நீலம் பச்சை கற்கள் பதித்த அந்த டாலர் அங்கும் இங்கும் நடனம் ஆடியபடியே மின்னியது.

அவனது இத்திடீர் நெருக்கத்தில் மலங்க மலங்க விழித்தப்படி இருந்தவள், அவனது இந்த தொடுகையை சற்றும் எதிர்பார்க்கவில்லை. எப்படி இவன் அந்த இடத்தில் தொடலாம். விரல் நுனி கூட படாமல் அவன் செயினை எடுத்தது வேறு விஷயம். அந்த நிமிடம் பெண்ணவள் எதையும் உணரவில்லை.

எப்படி இவன் தொடலாம். அதுவும் இல்லாமல் எனது பெர்சனல் செயினை இவன் எப்போது பார்த்தான். இவனுக்கு எப்படி தெரியும். இவ்வளவு தூரம் என்னிடம் உரிமை எடுத்து கொள்ள இவனுக்கு முதலில் யார் அனுமதி கொடுத்தது...?
யூ ராஸ்கல். ஹவ் டார் யு...?! மனம் குமுறினாள் பெண். ஜிவு ஜிவு வென்று கோபம் தலைக்கேறியது. காதில் புகை வராத குறை.

நொடியும் யோசிக்காமல் அவளது வலக்கை அவனது இடக்கன்னத்தை பதம் பார்த்தது.

முதல் அடி..! எந்த ஆண்மகனுக்கும் பிடிக்காதது.

விவரம் தெரிந்த நாளிலிருந்து யாரிடமும் தலை வணங்காமல், யார் கையும் மேலே படாமல் பொத்தி பொத்தி வளர்ந்தவன்அதுவும் தங்க தட்டிலே சீராட்டி வளர்ந்தவன், வாங்கிய முதல் அடி. அதுவும் தன் உயிருக்கு உயிரான காதலியிடமிருந்து. எப்படி இருக்கும் அந்த ஆண்மகனது நிலை.

கை கொட்டி சிரித்தது விதி. விதியை சதியால் வெல்ல வேண்டும். அதை விட்டு காந்திய வழியில் போனால் அடி என்ன மிதி கூட கிடைக்கும். இதை இந்த வளர்ந்த ஆண்மகனுக்கு யார்
சொல்வது..?!

முகம் ரௌத்திரமாக மின்ன, பற்கள் நறு நறுவென அரைபட, உடல் இறுக அவன் இருந்த நிலையே அவனது கோபத்தின் அளவை பறைசாற்றியது.

"அக்னி குஞ்சொன்று கண்டேன்
கொழுந்துவிட்டு எரிந்தபடி...
அடங்கா திமிராய் தெரிந்ததும்
கெட்டி இழுக்க விளைந்ததடி- சகியே

பாலும் பழமும் வேண்டாம்
புசிக்க உன் காதல் போதும்
நித்தமும் உன்மத்தம் அடைந்து
நினைவெங்கும் நீயாக வேண்டும் - சகியே"


அழுத்தம் திருத்தமாய் தன் மனதில் அவளுக்கான காதலை எடுத்துரைக்க... அவளோ அவனை கண்ணாலே பஸ்பமாக்கி விடுவது போல் பார்த்தாள்.

"வீழ்வேன் என்று நினைத்தாயோ?
அகிலமாளும் குலோத்துங்கா...
உன் காதல் சுடரில் மாய
நான் என்ன விட்டில் பூச்சியா?

சிவபெருமானின் சக்தியடா நான்...

வெட்டி வீழ்த்தி விடுவேன்
மங்கையவள் அங்கம் தீண்டினால்...!
மதியிழந்து மாண்டு போகாதே
வர்மா குலத்தின் ஒற்றை வேந்தே...!"


உனக்கு மட்டும் தான் பாரதி வரியையும் சங்க தமிழையும் உனக்கு சாதகமாக மாற்ற முடியுமா...? என்னாலும் முடியுமடா... நான் ஆராதனா டா... அனைவரும் ஆராதிக்க பிறந்த பெண் குல வேங்கையடா...

பெண்ணவள் மூச்சு காற்று கூட கர்ஜித்தது. ஆண்மகன் முன் சற்றும் தரம் தாழ்ந்து போக விரும்பவில்லை.

அவளை பொறுத்தவரை தவறு தவறு தான். அது எப்படி அவன் என்னை தொடலாம்.? நானே கொஞ்சம் தடுமாறினாலும் இவனுக்கு எங்கிருந்து இவ்வளவு அதிகாரம் என்னிடத்தில் வந்தது.. அவனுக்கு பிடித்திருந்தால் உரிமை உண்டா...? நான் சொ..ல்..ல வேண்டும். நான் ஒத்துழைக்க வேண்டும். இவன் பாட்டிற்கு என்னை ஆக்கிரமித்து ஆள நினைத்தால் எப்படி..?

உச்ச கோபத்தில் பெண்ணவள் என்ன சிந்திக்கிறோம்.. என்ன செய்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல் அவனை அடித்து விட்டு.. இப்போது அவனுடன் மல்லு கட்டி கொண்டிருந்தாள்..

அவன் தொட்டவுடன் உருகி உருகி காதல் கொள்ள துடித்த அவளது மனம் இப்போது எங்கே போய் ஒழிந்து கொண்டதோ.. யாம் அறியேன்.. இப்போது இங்கே தீக்கங்காய் இருப்பது சத்தியமாய் அந்த சுட்டிப் பெண் ஆராதனா இல்லை. அது மட்டும் நிச்சயம்.

கோபம் என்னும் அம்பை கண்ணில் தேக்கி இருவரது நாணிலிருந்தும் எந்நேரம் வேண்டுமானாலும் அம்புகள் பாயலாம். யாரும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. நொடிகள் நிமிடங்களாக கோபத்தீயின் வீரியம் மெது மெதுவாக வடிய ஆரம்பித்ததும் ஆண்மகன் தாழ்ந்து வந்தான்.

"தப்பான எண்ணத்துல நான் உன் செயினை எடுக்கல. நான் சொல்ல வரதை முதல பொறுமையா கேளு... நீயா ஏதாவது நினைச்சிக்கிட்டு சண்டை போடாதா..." குரல் லேசாக தட்டு தடுமாறினாலும் அழுத்தமாய் சொன்னான்.

கொஞ்சம் ஆசுவாசமானது பெண் மனம். இருந்தும் தன் கம்பீரத்தை தளர்த்தவில்லை. நீ செல்வதால் நான் கேட்கவில்லை. எனக்கு தோன்றியதால் இறங்கி வருகிறேன் என்ற ரீதியில் அமைதியாய் அமர்ந்தாள்.

பெரும்பாலும் ஆண்களுக்கு ஒரு குணம் உண்டு. நன்மை செய்கிறேன் என்ற பெயரில் ஓவர் அக்கறை எடுத்து கொள்வார்கள். அவர்களாகவே ஒன்றை நினைத்து கொண்டு அதை அன்பால் திணிக்க பார்ப்பார்கள். அது நல்லது என்றாலும் பெண்ணிடம் அவள் விருப்பம் என்னவென்று கேட்க பல ஆண்மகன்களுக்கு தோன்றுவதே இல்லை. எல்லாம் உன் நலனுக்காக தானே என்று முடித்துவிடுவர். ஆனால் பெண் மனம் ஏங்கும்... விரும்பும்.. தவிக்கும்... எதிர்பார்க்கும்...தனது அபிப்பிராயத்தை கேட்க வேண்டி.. ஆனால் அது நடக்கவே நடக்காது.

அது போல தான் ஆராதனாவும் நினைத்தாள். என்னிடம் முதலில் எதற்கும்... எல்லாவற்றிற்கும் விருப்பம் கேள் என்று. ஆண்மகன் அவனை.. அவன் காதலை... தெளிவுபடுத்த விருப்புகிறானே தவிர பெண்ணவள் மனதில் என்ன இருக்கிறது என்பதை அறிய முற்படவில்லை. இது ஆராதனாவின் வாதம்.

எவ்வளவு பொறுமையாக இப்பெண்ணிடம் பேசுகிறேன். இவள் என்னடாவென்றால் வானுக்கும் மண்ணுக்கும் 'தாம் தூம்' என்று குதிக்கிறாள். இவள் என்ன எனக்கு அந்நியமா..? இப்படி கூச்சலிடுகிறாள். தொட்டது தப்பு என்றே சொல்லி கொண்டு இருக்கிறாள். இது இவளுக்கு ஓவர் ஆக தெரியவில்லை. அவள் விருப்பத்தை வார்த்தையாக சொல்லாவிட்டாலும், அந்த கண்கள் காதல் சொன்ன பிறகு தானே நெருங்குகிறேன்". இது ரவி வர்ம குலோத்துங்கன்னின் வாதம்.

அவரவர் வாதம் அவரவர்க்கு நியாயம்.

இங்கே புதல்வன் தன் காதலியுடன் சொற்போர் யுத்தம் நடத்த.. அங்கே அந்த நரைத்த வாலிபன் சிங்கமாய் கர்ஜிப்பதை மறந்து... பூனை குட்டியாய் மானின் பின்னால் செல்கிறார்... ஹ்ம்ம்...
சொற்போர் யுத்தம் முடிந்து காதல் போர் தொடங்குமா...?
புள்ளிமான் பூனை குட்டியை அடித்து துவம்சம் செய்யுமா..?
அடுத்த பதிவில் காணலாம்.
 
Last edited:

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 19

15339
கல்லெறிந்து கலைத்து போட்டாலும்
கலகலவென சிரிப்பேன்
கட்டி கொடுக்க நீ இருந்தால்...


தன்னை பின் தொடர்ந்து வருமாறு சொல்லி விட்டு கீர்த்தனா நேராக தனது ரெஸ்டாரண்ட் நோக்கி சென்றார். சென்றவர் தன் தோழியிடம் சென்று ஏதோ சொல்லிவிட்டு அங்கே வெளியே அந்த ஏரிக்கரை தெரியும்படி போடப்பட்டிருந்த மேசை நோக்கி நகர்ந்தார். தன்னை பின் தொடர்ந்து வந்த அந்த நரைத்த வாலிபனிடன் அங்கிருந்த நாற்காலியில் அமருமாறு சொல்லிவிட்டு தானும் அமர்ந்து கொண்டார்.

"ம்ம்ம்ம்.. சொல்லுங்க எஜமான். வர்மா கோட்டையின் சக்கரவர்த்தி ராஜ சேகர வர்மா அவர்களே சொல்லுங்க... உங்களுக்கு இப்போ என்ன சொல்லணுமோ அதை என்கிட்ட தாராளமா சொல்லலாம். நான் காது கொடுத்து கேட்கிறேன்...." அழுத்தமாய் சொன்னார் கீர்த்தனா.

"ஏன் இப்படி யாரோ மாதிரி பேசுற".

"பின்ன நீங்க என்ன எனக்கு உறவா...?"

சாட்டையடி கேள்வியாய் அவரது இதயத்தை தாக்கினார். எங்கே எப்படி அடித்தால் வலிக்கும் என்று தெரிந்தவராயிற்றே கீர்த்தனா. கண்களை மூடி இதயத்தின் வலியை குறைக்க விரும்பினார் ராஜசேகர்.

கலங்கிய முகத்துடன் கீர்த்தனாவை பார்த்து,

"உறவுன்னு சொல்லி அதை முடிச்சிக்க விரும்பலை. நீ எனக்கு அதுக்கும் மேலே. பெயர் சொல்லி தெரியவைக்க வேண்டிய உறவு நமக்கு...ள்....ள..து.. இல்லன்னு நான் நினைக்கிறேன். அது உனக்கு புரிஞ்சா சரி".

உறவினும் மேலானது என்று சொன்னதும் கோப கடலில் தத்தளித்த கீர்த்தனாவின் மனம் அமைதி அடைந்தது.

கொஞ்சம் ஸ்ருதி இறங்க அமைதியாக ஆனால் கூர்மையாக கேட்டார்.

"பெயர் இல்லாத அந்த உறவு என்ன உறவு மிஸ்டர் ராஜசேகர வர்மா. உரிமையான உறவு இருக்கிறவங்களுக்கே மதிப்பு இல்ல. இதுல இப்படிபட்ட உறவுலாம் எங்கி...ருந்து...? சொடக்கு போட்டு முடிக்கறதுக்குள்ள காணாமா போய்டும்".

"ஷ்... அப்படி பேசாத கீர்த்திமா.. அதுவும் உன் வாயால அப்படி சொல்லாத. அப்பவும் சரி... இப்பவும் சரி... எப்பவுமே நீ எனக்கு ஸ்பெஷல் தான். இதை யார்கிட்டயும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை". கொஞ்சம் காட்டமாகவே ராஜசேகரும் பதில் கொடுத்தார்.

"அவ்வளவு உரிமை கொண்டாடுபவர் அன்றைக்கு மட்டும் ஏன் என்னை ஒதுக்கி தள்ளுனார். அதுவும் எந்த விளக்கமும் கேட்காமா...? அப்டின்னா என் மேலே நம்பிக்கை இல்லைன்னு தானே அர்த்தம்".

"ஷ் ஷ் ஷ்.... கீர்த்திமா அப்டிலாம் இல்லைடா..." சொல்லியபடி கீர்த்தனாவின் கைகளை ஆதரவுக்காக பிடித்து கொண்டார். கீர்த்தனா கைகளை விலக்கவில்லை. அவருள்ளும் ஒரு இதம் பரவியது. இது என்ன மாதிரியான உறவு.. யாரேனும் கேட்டால் சொல்ல தெரியாது. நட்பா என்றால்.... இல்லை! காதலா என்றால்.. அதுவும் இல்லை...! அப்படி என்றால் சகோதர பாசமா என்றால்.. அதுவும் இல்லை..! எல்லாம் கலந்த ஒரு புது உணர்வில் பிறந்த உறவு. இதற்கு பெயர் இல்லை. அது எல்லோரிடத்திலும் உணர முடியாது. எல்லோருக்கும் புரியவும் புரியாது.

காதலுக்கும் மேலே உள்ள உறவு... நட்பு என்னும் கைகளுக்குள் அடங்கி போகாத உறவு. தாயின் உறவை போன்றது.. தந்தையின் பாதுகாப்பை உணர்த்துவது... 'தாயும் தந்தை'யுமான உறவு இது. சில பேருக்கு தான் இப்படி ஒரு நட்பு கிடைக்கும். அவர்கள் உண்மையிலேயே வரம் வாங்கியவர்கள் தான்.

மனம் நெகிழ்ந்து போனார் கீர்த்தனா. அவரது கைகளை பிடித்துக் கொண்டிருந்த ராஜசேகருக்கும் புரிந்தது.

"மறந்துரு.. நான் அன்றைக்கு அப்படி நடந்துருக்க கூடாது . மன்னிச்சிடு". மனமுவந்து வருந்தினார். கீர்த்தனாவின் மனமும் சேர்ந்து கலங்கியது. எதுவும் பேசவில்லை. அமைதியான அந்த சூழ்நிலை அவர் நினைவுகள் பின்னோக்கி இழுத்து சென்றது. ராஜசேகர்க்கும் கீர்த்தனாவுக்கும்மான இளமை பொழுதுகள் கண்முன்னே கட்சியாய் விரிந்தது.

அப்போது கீர்த்தனாவிற்கு பத்து வயது இருக்கும். வேலை நிமித்தமாக அவரது குடும்பம் புது இடத்திற்கு மாற்றலாகி வந்திருந்தது. அங்கே தான் ராஜசேகரை சந்தித்தது. இவரது வீட்டுக்கு நேர் எதிர்வீடு தான் ராஜ சேகரதும். அந்நியோந்நியமாய் ஆரம்பித்தது அவர்களது நட்பு. ஒருவர் பின் ஒருவர் சுற்றி கொண்டே திரிவர்.

அது போல அன்று ஒரு பௌர்ணமி மழை நாளில் கீர்த்தனாவிற்கு வெளியே செல்லவேண்டும் என்று ஆவல் பிறந்தது. வீட்டில் சொன்னால் அடி விழும். எனவே யாருக்கும் தெரியாமல் வீடிஞ்ச ஜன்னல் வழியே போர்வையை கயிறாக கட்டி கீழே மெதுவாக இறங்கி வீட்டின் கம்பவுண்டு சுவர் ஏறி குதித்து எப்படியோ யார் கண்ணிலும் படாமல் வெளியே வந்து விட்டார்.

"ஷ்... ஹப்படா.."

என்று வெளியே வந்து ஒரு அடி எடுத்து வைத்திருப்பார். அதற்குள் அங்கே எதிரே ராஜசேகர் நின்றிருந்தார்.

ஆச்சர்ய பட்டுப்போனார் கீர்த்தனா.

"டேய் ராஜு! எப்படிடா கண்டுபிடிச்ச.?! எங்கேபோனாலும் டோகோமோ டாக் மாதிரி பின்னாடியே மோப்பம் பிடிச்சி வந்துடுற.. எப்படிடா...??"

"ஹம்ச்... அதை விடு.. இந்நேரத்துல எங்கே கிளம்பிட்ட.. மழை வேற தூத்துது..ஹ்ம்ம்?"

"இல்லடா.. இந்த சாரல் மழையில நனைஞ்சிக்கிட்டே அந்த பால் நிலாவை பார்க்கணும்ன்னு தோணிச்சிடா.. அதான் சட்டுன்னு கிளம்பிட்டேன்".

"யார்கிட்டயும் சொல்லாம திருட்டுத்தனமா..?!

ஹ்ம்ம்..

நல்ல ஆசை போ. சரி வா. நானும் கூட வரேன். பட் சீக்கிரம் திரும்பி வந்துரனும்". அலுத்து கொண்டாலும் அக்கறையாய் அழுத்தமாய் டீல் பேசியே கூட்டி சென்றான்.

இருவர் மட்டும். அந்த நிலவொழியில் காலாற நடந்தபடி, அந்த அழகான சூழ்நிலையை ரசித்தபடி செண்டிருந்தனர்.

இதமான சூழ்நிலை மனதை வெகுவாக இலகுவாக்கியது. இதழ்கள் தானாக பாடியது...

காதல் கொஞ்சம்...
காற்றுக் கொஞ்சம்...
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்...
தூரம் எல்லாம்...
தூரம் இல்லை...
தூவானமாய்...
தூவும் மழை...

அலுங்காமல் உனை அள்ளி
தொடுவானம்வரை செல்வேன்..
விடிந்தாலும் விடியாத பொன்காலையைக்
காணக் காத்திருப்பேன்...

காதல் கொஞ்சம்...
காற்றுக் கொஞ்சம்...
சேர்த்துக்கொண்டு செல்லும் நேரம்...
தூரம் எல்லாம்...
தூரம் இல்லை...
தூவானமாய்..
தூவும் மழை...


முதல் வரி அவன் பாட.. அடுத்த வரி அவள் பாட ரம்மியமாக சென்றது அவர்களது நடைபயணம். காலார நடந்தபடி அருகே இருந்த கடற்கரைக்கு வந்திருந்தனர். அங்கே பால் நிலா என்னை அள்ளி பருக வா என்று காற்றோடு காற்றாக கலந்து தூது அனுப்ப... அலைகடல் நிலாமங்கையை கவர வேண்டி அலை அலையாய் நடனம் ஆட... பார்ப்பதற்கே கண் கொள்ளா கட்சியாய் இருந்தது.

கைகளை கன்னத்தில் தாங்கியபடி அந்த நிலா மங்கையை ரசித்து கொண்டிருந்தாள் கீர்த்தனா.

"டேய் ராஜு.. நிலா எவ்ளோ அழகா இருக்குது பார்த்தியா...?? பார்த்துக்கிட்டே இருக்கலாம் போல இருக்குதுடா..."

"ஹ்ம்ம்... அது சரி.. இங்கேயே டேரா போட்ருலாம்னு முடிவு பண்ணிட்டியா...?"

"ஹேய்.. அப்டிலாம் இல்ல.. கொஞ்ச நேரம் தான். நான் தான் உனக்கு டீல் பேசியிருக்கிறேனே.. சோ புல் டே லாம் ஸ்டே பண்ணுற ஐடியா இல்லை. சோ கூல் பேபி".

மீண்டும் நிலா பெண்ணிடம் அடைக்கலம் புகுந்து கொண்டார் கீர்த்தனா. இருவரும் அப்படியே கொஞ்சம் அந்த நிலவொளியில் நனைந்தனர்.

நேரம் கடந்து கொண்டிருந்தது.

"ம்ம்ம்... போதும் கீர்த்தி. கிளம்பலாம். இல்லன்னா லேட் ஆகிடும். யார் கண்ணுலயாவது மாட்டிருவோம்".

"முஹூங்.. இன்னும் கொஞ்ச நேரம்டா.. பிளீஸ்...." கண்களை சுருக்கி கேட்ட அழகில் ராஜசேகர் மயங்கி போனார். குழந்தை தாயிடம் கெஞ்சுமே அது போல இருந்தது. இப்படியே சில பல கெஞ்சல் போட்டு நேரம் கடத்தினார் கீர்த்தனா. நேரம் கடக்கவே பொறுத்து பார்த்தவர் அவர் கைகளை பிடித்து எழுப்பினார்.

"கீர்த்தி.போதும். எழுந்திரு".

"ஹேய்... பிளீஸ்..."

"நோ... கம் ஆன். கெட் அப்.."

சலித்து கொண்டே எழுந்தார் கீர்த்தனா. 'கிளம்பவா சொல்கிறாய் இருடா உனக்கு விளையாட்டு காட்டுகிறேன்'. எண்ணிய மாத்திரத்தில் ஓட்டம் பிடித்தார்.

"ஹே... நில்லு.. ஓடாத....

நில்லுன்னு சொல்றேன்ல..

ஹே.."

"முடிஞ்சா பிடிச்சிக்கோ..."

சொல்லியபடி மூச்சிரைக்க ஓடியவர் ஒரு கட்டத்தில் எதுவோ தடுக்க கால் தடுமாறி கீழே விழுந்துவிட்டார்.

"ரா.....ஜு..." கீர்த்தனாவின் அலறல் சத்தம் கேட்டு ராஜசேகர் விரைந்து சென்றார்.

கீழே விழுந்து கிடந்த கீர்த்தனாவை கை கொடுத்து தூக்கி விட்டவர். "பார்த்து போக வேண்டியது தானே. இப்படியா கால் கையை உடைச்சு வச்சுப்ப.." ஆடையில் ஒட்டியிருந்த கடல் மணலை தட்டி விட்டார்.

"ஹே.. அது என்ன...?!" கீர்த்தனா சுட்டிக்காட்டிய திசையில் ராஜசேகரது பார்வையும் சென்றது.

குனிந்து அந்த பெட்டியை கையில் எடுத்தார் ராஜசேகர்.

"பரமபதம் கேம் மாதிரி இருக்குதுடா.."

15340

மரத்தாலான அந்த சதுரவடிவ பெட்டியின் நடுவில் சதுரமான கட்டத்திற்குள் சில எண்களும் ஏணிகளும் பாம்புகளுமாய் ஆன வரைப்படங்களும் அதில் இருக்க, அந்த எண்கள் அடங்கிய சதுர வடிவத்தின் வலது மற்றும் இடது புறத்தில் இருபுறமும் மூன்று சிறிய கட்டங்கள் அடங்கியதுமாய் அதன் மேலே ஏதோ எழுத்துகளுமாய் இருந்தது.

"ராஜு இதுல ஏதோ எழுதி இருக்கிற மாதிரி தெரியுதுடா.."

"ம்ம்ம்ம்... கொஞ்சம் தள்ளு. சரியா வெளிச்சம் இல்லை.நிலா வெளிச்சத்துல பார்ப்போம்".

"குறிப்பு மாதிரி இருக்குதுடா. எப்படி இந்த கேம் விளையாடனும்ன்னு சொல்லியிருக்கிறாங்க போல..."

"ஹ்ம்ம்... எனக்கும் அப்படி தான் தோணுது".

ஆனால் இதற்கு விளையாட தாயகட்டை வேணுமே... அது இல்லையே. இந்த பாக்ஸ் கிடைச்ச இடத்துல போய் பார்ப்போமா..?

"அதெல்லாம் வேண்டாம். இந்த இருட்டுல அங்கே போறது சரியா இருக்காது".

"அதுவும் சரி தான். இந்த இருட்டுல போய் தேடுனாலும் கிடைக்காது".

"சரி சரி நடையை கட்டு. வீட்டுக்கு போய்கிட்டே பேசலாம்".

"டேய் டேய் அதை என் கையில குடுடா. ஒரு முறை பார்த்துகிட்டு தர்ரேன்" .

"நோ. உன் கையில தந்தா நீ இது என்னது ன்னு ஆராய்ச்சி பண்ணியே நேரத்தை கடத்துவ. ஹ்ம்ம்... நட நட..."

"போடா..."

வீட்டை நெருங்கும் சமயம் கீர்த்தனா ராஜ சேகர் கையில் இருந்து அந்த பெட்டியை பறித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தார்.

"ஏய்... திருடி...நில்லுடி..."

"போடா..."

கத்தியபடி ஓடியவரை ராஜ சேகர் கொஞ்ச நேரத்தில் பிடித்துக் கொண்டார்.

"ஹே. அதை முதல என்கிட்ட கொடு".

"முஹும்... தர மாட்டேன். விடுடா.."

"கீர்த்தி 'தா'ன்னு சொல்றேன்ல.."

இருவரது கைகளிலும் பெட்டி அங்கேயும் இங்கேயும் இழுப்பட்டது. அப்போது சடாரென வானத்தில் மின்னல் வெட்டியது. அதில் பயந்த கீர்த்தனா சட்டென தன் கையை விட்டுவிட்டார். ராஜுவின் கையில் இப்போது பெட்டி மாறியது.

"டேய்... தாடா.."

"நோ நோ.. தள்ளி போ".

"ஏய் அதை பாரு. ஏதோ பாக்ஸ் ஓபன் ஆகிருக்கு".

கையில் இருந்த பெட்டியை பார்த்தார் அவர்.இருவரும் பெட்டியை இழுத்ததில் எப்படியோ திறந்திருக்க வேண்டும்.

இடதும் வலதுமாய் குறிப்புக்கள் எழுதி இருந்த பகுதில் வலப்புறமிருந்த அந்த சிறிய மூன்று வடிவ சதுர பக்கத்தின் நடுவில் இருந்த ஒரு சதுர வடிவ பகுதி மட்டும் திறந்த படி இருந்தது.

"இது ஏதோ பாக்ஸ் போல இருக்குதுடா.. அப்போ இடது பக்கத்துலயும் பாக்ஸ் இருக்க சான்ஸ் இருக்குதுடா. அம்மா, இந்த பாக்ஸ் குள்ள என்ன இருக்கு..?? ஏதோ மண்ணு மாதிரி இருக்கு...?!"

"பொறு. நான் பார்க்கிறேன்".

பார்க்க மண் துகள் போல தான் இருந்தது. இடது பக்க பாக்ஸ்யை திறக்க பார்த்தார் அவர். ஆனால் முடியவில்லை. இது யூஸ் பண்ணி நாளாகிருக்கும் போல. ஜாம் ஆகிருக்கு.

"ஹ்ம்ம்.. இங்கே காட்டு. என்னென்ன குறிப்பு எழுதி இருக்குதுன்னு பார்ப்போம்".

சந்திர தேவதை
சூரிய கதிரை
திருடி கொள்ள..
வான்மகள் மடி திறக்க..
அங்கே புதிதாய் பிறந்தது
புது உலகம்..!
நேரத்தை தாயம் கொண்டாடிய படியே!
விரும்பினால் என்னை தொடு..!


என்னதுடா இது...? ஏதோ புதிர் மாதிரி இருக்கு... ஒன்னும் விளங்கலையே..?

"எனக்கும் சரியா தெரியல கீர்த்தி.
வேற என்ன குறிப்பு எழுதி இருக்குதுன்னு பார்ப்போம்".


நான் நீயாகலாம்..
நீ நானாகலாம்...
நாம் காணாமல் லாகளாம்...
என்னை தாயம் விருந்தாக்கினால்...
உன் விருப்பப்படி என்னை உனதாக்கிக்கொள்!


"அப்படின்னு எழுதியிருக்கு. அப்படின்னா என்னவா இருக்கும்...?"

"சரி அதை விடு. இந்த கேம் எப்படி விளையாடுறதுன்னு ஏதாவது ரூல்ஸ் போட்ருக்கான்னு பார்ப்போம்.."

குற்றமில்லை குற்றமில்லை..
காலபகவானை வதம் செய்தால்..
குறுக்கு வழி துணிந்தால்...
கண்சிமிட்டும் நேரத்தில்
காணாமல் போவாயடா...!!


"அப்படின்னு இங்கே ஒரு குறிப்பு இருக்கு கீர்த்தி. எனக்கென்னமோ இந்த கேம்மை தப்பா யூஸ் பண்ண ஏதோ பிரச்சனை வரும்னு தோணுது".

"ஹ்ம்ம்... ஏமாத்தாமா நேர்மையா விளையாட சொல்லியிக்கும்மா இருக்கும்டா".

"ஹ்ம்ம்.."

முக்காலமும் தோகை விரித்தாட
ரசித்து பார்க்கையில்
தற்காத்து கொள்ள..
உற்ற தோழனாய்
உடன் வருவேன் நான்...!


அப்படின்னு எழுதியிருந்தது.

"ஹ்ம்ம்... நான் நினைக்கிறேன் இது திறக்காத இந்த பாக்ஸ் பற்றின க்குளுவா இருக்கும். ஏதாவது பிரச்சனை வந்தா நமக்கு உதவி செய்யுமா இருக்கும்".

"ஹ்ம்ம்... அப்படியும் இருக்கலாம். சரி சரி டைம் ஆகுது. நீ வீட்டுக்குள்ள போ. நாளைக்கு பார்க்கலாம்".

"டேய் டேய்.. பிளீஸ் டா...இவ்ளோ தூரம் வந்தாச்சு. ஒரே ஒரு தடவை இந்த கேம் விளையாண்டு பார்த்துட்டு அப்புறம் போகலாம்டா..."

"உனக்கு என்ன ஆச்சு கீர்த்தி... இன்றைக்கு ஏன் இப்படி அடம் பிடிக்கிற..?"

"பிளீஸ் டா.." விட்டால் அழுது விடுவாள் போல கண்ணில் நீர் கோர்த்திருந்தது.

"ஹ்ம்ம்... சரி ஒரே ஒரு தடவை தான். முதல உன் வீட்டுக்குள்ள போவோம். இங்கே தெருவுல நின்னு விளையாட வேண்டாம். போ. உள்ளே போ. நானும் வரேன்".

"ஹைய்யா.. ஜாலி..."

துள்ளி குதித்து மான் குட்டியாய் கீர்த்தனா செல்ல... பின்னே ராஜ சேகரும் சென்றார். தங்கள் விதியே இதனால் மாற போகும் என்பதை அறியாமல்....
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 20


15341
காலங்கள் மாறினாலும்
தேகங்கள் மறைந்தாலும்
நினைவுகளை அழிக்க முடியுமா..??!


பரமபதம் (ஏணியும் பாம்பும்) ஒரு பாரம்பரிய பலகை விளையாட்டு. இரண்டுக்கு மேற்பட்டோர் விளையாடும் இவ்விளையாட்டில் பலகை சதுரக் கட்டங்களைக் கொண்டதாக இருக்கும்.(செஸ் போர்ட் மாதிரி இருக்கும்) இதற்கு தாயக்கட்டையும், வழி நடத்தும் 'கல்'லும் தேவை.

ஏணி, பாம்பு என இரண்டு படங்கள் வைத்து, 100 எண்ணிக்கை கொண்ட கட்டங்கள் இருக்கும். தாயக் கட்டையில் விழும் எண்களை வைத்து(1,2,3,4,5,6,7,8), காயை நகர்த்த வேண்டும். இந்த விளையாட்டால், கணிப்பு திறன், கணித திறன் கிடைக்கும். வெற்றி, தோல்வி, ஏற்றம், இறக்கம் பற்றிய அறிவு கிடைக்கும்.

'தாயம்' என்றால் 'உரிமை' என்று பொருள்படும். உறவினர்களை 'தாயத்தார்' என்று அழைக்கும் பழக்கம் இருந்தததாக தொல்காப்பியத்தில் கூறப்படுகிறது.


மூச்சு விடாமல் அந்த நோட்டு புத்தகத்தில் எழுதியிருந்தவற்றை வாசித்து முடித்தாள் கீர்த்தனா.

"இத்தனை விஷயங்களையும் எப்படி கீர்த்தி தெரிஞ்சி வச்சிருக்க..?!"

"நான் எங்கே...??! இது என் பாட்டியோடது. கிராமத்துக்கு போகும் போ விளையாடுவோம். அப்போ ஏதாவது டௌட் வந்தா கிளியர் பண்ண பாட்டி தான் இதை தந்தாங்கா. சோ இது இப்போ யூஸ் ஆகுது".

"சரி வா... தாயக்கட்டை எங்கேன்னு பார்ப்போம்.

"இந்த மூடி இருக்கிற பாக்ஸ்குள்ள தான் இருக்கும்னு நினைக்கிறேன். ஆனால் இதை எப்படி ஓபன் பண்ணுறது..??" மெதுவாக தட்டி திறக்க முயற்சித்தார் ராஜ சேகர்.

"முஹும்... என்னால முடியல. நீ ட்ரை பண்ணி பாரு".

தட்டி தடவி கீர்த்தனாவும் முயன்றார். ஆனால் அவராலும் முடியவில்லை. சட்டென ஒரு ஐடியா தோன்ற, தன் தலையில் இருந்த ஹேர் பின் கொண்டு அதை திறக்க முயன்றார்.

"திறந்துடு சிஸே....
ஹை.. ய்.... ஓபன் ஆகிட்டுடா.."

இருவரும் அதை திறந்து பார்க்க... அங்கே இரண்டு கற்கள் ஒளிர்ந்தது. அந்த அறையே இப்பொழுது ஏதோ அனுமாய்ஷ்யம் நிறைந்தது போல மனதை திடுக்கிட வைத்தது.

"ஹே இது என்ன.. இப்படி லைட் அடிக்குது... டைமண்ட்டா இருக்குமோ...?!!"

"ஹம்ச்.. சும்மா இரு கீர்த்தி. நான் பார்க்கிறேன்".

கைகளில் எடுத்து அதை கூர்ந்து பார்த்தார் ராஜ சேகர். "ஏதோ வித்தியாசமான கல் மாதிரி இருக்கு. நிலா வெளிச்சம் பட்டதுனால இப்படி தக தக ன்னு மின்னுது. அவ்ளோ தான்".


"பட் இதுல புள்ளி எதுவுமே இல்லையே.. எப்படி தாயம் உருட்டுவது...?" -கீர்த்தனா

"ஹ்ம்ம்.. பொறு நான் பஸ்ட் செக் பண்ணி பார்க்கிறேன். சொன்னவர் அந்த கற்களை கண்களின் அருகில் வைத்து பார்த்து விட்டு...
ஹ்ம்மம்ம்.. ஒன்றும் இருந்த மாதிரி தெரியல.. வேஸ்ட்..." கையில் இருந்த கற்களை அந்த மரபலகை மீது தூக்கி போட்டார்.

அப்போது நடந்தது அதிசயம். அந்த பரமபதத்தில் இருந்த ஏணிகளும் பாம்புகளும் மறைந்து, நேர்கோட்டு வரிசையில் நம்பர்கள் மாறி மாறி சுழல ஆரம்பித்தது. இருவரும் ஷாக் அடித்தது போல உறுத்து விழித்தனர். கீர்த்தனா அதன் அருகில் சென்று தொட்டு பார்த்தார். மந்திரத்திற்கு கட்டுப்பட்டது போல அந்த எண்கள் அப்படியே அசையாமல் நின்றன. விழிகள் ஆச்சரியத்தில் மின்ன கீர்த்தனா ஒவ்வொரு இலக்கங்களையும் அசைத்து எண்களை தேர்ந்தெடுத்தார்.

"ஹே என்ன பண்ணுற...??"

"சும்மா... நானே ஒரு டைம் செட் பண்ணுறேன். எவ்ளோ நேரத்துக்குள்ள இந்த கேம் முடியனும்னு. சும்மா ஒரு கெஸ் தான்".

அவர் இலக்கங்களை தேர்வு செய்து முடித்த பின் அந்த கற்களை கையில் எடுத்துக்கொண்டார். உடனே அது மறைந்து அதிலிருந்து வந்த ஒளி இவர்களை உள்ளே இழுத்து சென்றது.

"ஆ ஆ ஆ ஆ...." அலரலுடன் இருவரும் ஏதோ மாய உலகத்தில் பயணிப்பது போன்ற பிரம்மை.

இப்போது இருவரும் அவர்கள் வீட்டு பால்கனியில் நின்று ஏதோ பேசியபடி நின்ற இரு உருவங்களுக்கு பின்னால் இருந்தார்கள். அவர்கள் பின்னே இவர்கள், ஆம் இவர்கள் மாய உருவம் நின்று கொண்டிருந்தது. அங்கே பால்கனியில் நின்றிருந்தவர்கள் ஒரு கீர்த்தனா ராஜசேகர் என்றால் பின்னே நின்றுருந்தவர்கள் மாய தோற்றம் உடைய கீர்த்தனாவும் ராஜசேகரும்.

மாயா தோற்றம் உடையவர்களுக்கு அதிர்ச்சி என்றால் அப்படி ஒரு அதிர்ச்சி.. ஒரு வேளை நாம் இறந்து விட்டோமோ... ஆவியாகி வந்திருக்கிறோமோ..??!!! என்றெல்லாம் விபரீதமான கற்பனைகள் எழுந்தது.

"ஷ் ஷ் ஷ்... கீர்த்தி. அவர்கள் என்ன பேசுறாங்கன்னு பார்ப்போம். பொறு".

அங்கே நிஜ உருவம் கொண்ட கீர்த்தனாவும் ராஜசேகரும்..

"டேய்.. என்னால நம்பவே முடியவில்லை. எப்படிடா இது... ரொம்ப திரில்லிங்கா இருந்ததுடா..." கைகளை கன்னத்தை தாங்கியபடி பிரம்மித்து போயிருந்தார்.

"ஹ்ம்ம்... என்னாலும் தான். நம்மளால் ட்ராவல் பண்ண முடியுது. எதிர்காலத்துல போய் என்ன நடக்கும்ன்னு தெரிஞ்சிக்க முடியுது. ஆனால் இது எல்லா முறையும் நல்லது இல்லை. ஆபத்து கூட வர வாய்ப்பு இருக்கு".

"என்னடா சொல்லுற..?"

"ம்ம்ம்... இங்க வா". கீர்த்தானவை தன் அருகே அமர வைத்தவர். அந்த தாயம் விளையாடிய பலகையை காண்பித்து.. ஒவொவொன்றுக்கும் விளக்கம் செல்லலானார். அங்கே இருந்த ஒவ்வொரு குறிப்புக்கும், அவரால் அந்த வயதுக்கும் மீறிய அவரிடம் இருந்த புத்தி கூர்மையால், உள்ளே பொதிந்து கிடந்த அர்த்தங்களை, இப்போது அவர்கள் பயணித்த கால பயணத்தின் அனுபவத்தையும் சேர்த்து , சொன்னார்.

முதல் குறிப்பு.

சந்திர தேவதை
சூரிய கதிரை
திருடி கொள்ள..
வான்மகள் மடி திறக்க..
அங்கே புதிதாய் பிறந்தது
புது உலகம்..!
நேரத்தை தாயம் கொண்டாடிய படியே!
விரும்பினால் என்னை தொடு..!


"சூரியன் இல்லாம நிலா இருக்கும் போது... அதாவது ராத்திரி நேரத்துல, வானத்துல இருந்து மழை பெய்யும் நேரம், இந்த கால பயணம் நடக்கும். அதாவது நேரத்தை திருடும் உரிமை. பிடிச்சா இந்த கேம் விளையாடுங்க. அப்படின்னு சொல்லுது".


"ஹ்ம்மம்ம்... சரி சரி.. கால பயணம் பற்றி சரியா புரியலடா".

"பொறு சொல்லுறேன். இந்த கற்கள் தாயம் விளையாடுற பலகை மீது பட்டவுடன் எண்கள் மாறி மாறி ஓடுதுலா.. அது தான் காலத்தின் நேரம். இந்த தேதி இந்த நேரம் அப்படின்னு ஒரு நேரத்தை செட் பண்ணி அதை தொட்டவுடன் நம்மலால் அந்த நேரத்துக்குள்ள பயணம் செய்து அந்த குறிப்பிட்ட நேரத்துக்குள்ள போக முடியும். நம்ம உருவம் அங்கே நிழல் போல போகும். நாம் விரும்புன்னா அங்கே நிஜமான தோற்றத்துக்குள்ள போகலாம். இல்லைன்னா அப்படியே மாய தோற்றம் நிழல் மாதிரி திரும்பி நாம் முதல எந்த காலத்துல இருந்தோமோ அங்கேயே திரும்பி வந்துரும்.

இதை கால பயணம் அதாவது டைம் ட்ராவல் அப்படின்னு சொல்லுவாங்க. அதாவது நேரத்தையும் காலத்தையும்... நம்ம கட்டுப்பாட்டுக்குள்ள கொண்டு வர முடியும். அது எதிர் காலமா இருக்கலாம், நிகழ் காலாமா இருக்கலாம், கடந்த காலமா கூட இருக்கலாம்".

மீண்டும் ஏதோ சந்தேகம் கேட்க வந்த கீர்த்தனாவை கை உயர்த்தி தடுத்தவர், "பொறு மற்ற எல்லா குறிப்புக்கும் அர்த்தம் பார்த்துட்டு கேள்வி கேளு".

குறிப்பு 2.

நான் நீயாகலாம்..
நீ நானாகலாம்...
நாம் காணாம லாகளாம்...
என்னை தாயம் விருந்தாக்கினால்...
உன் விருப்பப்படி என்னை உனதாக்கிக்கொள்!


"அதாவது நாம் கால பயணம் செய்து போனதும் நமது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளலாம். நான் உன்னோட வாழ்க்கையை மாற்றலாம். இல்ல என்னோட காலத்தில் மாற்றத்தை கொண்டு வரலாம். இல்லன்னா காணாமல் கூட போகலாம். ஏதாவது அந்த நிழல் உருவத்துக்கு ஆபத்து வந்தா... இந்த தாயக்கற்கள் நாம பயன்படுத்தி நாம் காலத்தின் ஓட்டத்தில் பயணம் செய்யலாம். அதுவும் நம்ம விருப்பப்படி".

அடுத்த குறிப்பு 3.

குற்றமில்லை குற்றமில்லை..
காலபகவானை வதம் செய்தால்..
குறுக்கு வழி துணிந்தால்...
கண்சிமிட்டும் நேரத்தில்
காணாமல் போவாயடா...!!


"இதுல என்ன சொல்லியிருக்குதுன்னா.. நாம் இப்படி காலத்தின் நேரத்தை பயன்படுத்தி கொள்வதால் எந்த தப்பும் இல்லை. தவறான எண்ணத்தோடு இல்லை தவறான குறிக்கோளோடு இந்த பரமபத விளையாட்டை விளையாடினால் நம்மளோட வாழ்க்கை அழிஞ்சி போய்டும். ஒரு வேளை செத்து கூட போகலாம்".

"அய்யய்யோ... டேய் என்னடா இது.. ரொம்ப பயமா இருக்குதுடா..."

"ஷ்... ஏன் பயப்படுற.. நான் தான் இருக்கிறேன்லா... ஒன்றும் ஆகாது. பொறு அடுத்த குறிப்பையும் பரர்த்திரலாம்..."

குறிப்பு 4.

முக்காலமும் தோகை விரித்தாட
ரசித்து பார்க்கையில்
தற்காத்து கொள்ள..
உற்ற தோழனாய்
உடன் வருவேன் நான்...!


"முக்காலம் அதாவது மூன்று காலங்கள், கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம். இந்த மூன்று காலத்திற்குள்ளும் நாம் போகலாம். நமக்கு ஏதாவது பிரச்சனை இல்லை ஆபத்து வந்தா ஒரு பிரெண்ட் மாதிரி கூட வருமாம். அதாவது நமக்கு உதவி செய்யுமாம். அதாவது இந்த தாய கற்கள் தான் நமக்கு உதவி செய்யும். அப்படின்னு சொல்லுது".

"அது சரி இந்த கற்கள் நமக்கு உதவி செய்யும். அப்படின்னா இந்த பக்கத்துல இருக்கிற மண்துகள் எதுக்கு.?"

"அது தான் எனக்கு சரியா கெஸ் பண்ண முடியல.."

"ஆமா உனக்கு எப்படி...எங்கே இருந்து... இவ்ளோ அறிவு வந்து...??! இந்த புதிர்க்கு எல்லாம் எப்படிடா அன்செர் கண்டுபிடிக்க முடிஞ்சு...?"

"அதுவா... எனக்கு பழங்கால இலக்கியங்கள் மீது ஆர்வம் உண்டு. அதுல வரும் பாடல்களுக்கு விளக்கம் கத்துகிட்டதுனால என்னால இந்த குறிப்புக்கும் விளக்கம் கண்டு பிடிக்க முடிஞ்சி".

"அதுவும் இல்லாம நான் கொஞ்ச நாளைக்கு முன்ன தான் 'ஜும்மாஞ்சி' அப்படின்னு ஒரு ஆங்கில படம் பார்த்தேன். அதுலயும் இப்படி தான் தாயக்கட்டை கேம் வரும். அவர்கள் விளையாட விளையாட ஒவ்வொரு விபரீதம் நடக்கும்".

"ஹே.. அப்படியா... அப்போ ரொம்ப பயங்கரமா இருக்குமே".

"ஆமா.. சோ நாம இந்த கேம் இனி விளையாடமா இருக்கிறது தான் நமக்கு நல்லது".

"டேய் என்னடா சொல்லுற....??"

"ம்ம்ம். நாம இப்படி டைம் ட்ராவல் பண்ணுனா, அது நம்மளோட வாழ்க்கையை பாதிக்கும்.ஒரு வேளை எதிர் காலத்துல நமக்கு பிடிக்காதது நடந்தா... நாம் அதை மாற்றி, நமக்கு ஏற்றமாதிரி மாத்திக்க விரும்புவோம். சோ நம்ம வாழ்க்கையில நடக்க இருந்த ஒரு நிகழ்வை மாற்றி அமைக்கிறோம். அதனால கண்டிப்பா ஏதாவது ஒரு பாதிப்பு இருக்கும். அதனால எதையும் நாம் தெரிஞ்சிக்க வேண்டாம். மாற்றி அமைக்கவும் வேண்டாம். வாழ்க்கை அதுபாட்டிற்கு போகட்டும். நடப்பது நடக்கட்டும்".

"ஹ்ம்ம்.. நீ சொன்னா சரி தான்".

"இது தான் என் கீர்த்தனா. குட் கேள்". இருவரும் 'ஹை-பை'கொடுத்து அன்பை பரிமாறி கொண்டனர்.

"டே...ய்.... டே...ய்..."

"என்ன இழுக்குற...??"

"ஒரு சந்தேகம்..."

"ஹ்ம்ம்.. கேளு..."

"அது எப்படிடா மூன் லைட் (நிலா வெளிச்சம்)அண்ட் மழை பெய்யுற நேரம் மட்டும் தான் தாயக்கட்டை கேம் விளையாட முடியும்ன்னு கண்டுபிடிச்ச..."

"அதுவா... முதல இது நம்ம கைக்கு கிடைக்கும் போ நிலா வெளிச்சத்துல தான் எழுத்துக்கள் எல்லாம் தெளிவா தெரிஞ்சி. இருட்டுல இல்லை சாதாரண ஒளியில் பார்த்தா ஏதோ ட்ராயிங் மாதிரி தான் இருந்து. அதுல வேற... மழை துளி பட்ட அப்புறம் தான் இதுக்கு உயிர் வந்துருக்கு. இப்போ கொஞ்ச முன்னாடி ரூம்க்குள்ள வச்சி நான் பார்க்கும் போது கூட ஒரு எழுத்து கூட தெரியல.. ஏதோ சுவத்துல மாட்டுற பெயின்டிங்ஸ் மாதிரி தான் இருந்துச்சி. ஃபேன் காத்துல மழை துளி எல்லாம் காய்ந்த பிறகு தாயக்கற்கள் போட்டாலும் அதுக்கு உயிர் வரல. ஒரு ஆக்சனும் இல்லாம இருந்து. சோ மூன் லைட் அண்ட் ரையின் வாட்டர் தான் இதோட சார்ஜர் ".

"வாவ்... சூப்பர்.. ஏதோ மேஜிக் ஸ்டோரி கேட்டது போல இருக்குதுடா".

"அதுலாம் இருக்கட்டும். இனி நீ இந்த கேம் பக்கமே வர கூடாது. இது என் கூடவே இருக்கட்டும். நானே நாளைக்கு இதை தூர போட்டுர்றேன். எங்கே இருந்து இதை எடுத்தோமோ அதை மாதிரி அந்த கடல்லேயே தூக்கி தூர போட்டுர்றேன். சரியா. நீ எதையும் நினைச்சி பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. போ போய் தூங்கு". சொன்னவன் அப்படியே அந்த தாயக்கட்டை பலகையை தன்னோடு தூக்கி கொண்டு அவன் வீட்டிற்கு சென்றான்.

இதோடு அந்த நிழல் உருவங்களும் மறைந்து பழைய அதாவது கடந்த காலத்திற்கே திரும்பி வந்தனர். கையில் அந்த கற்களோடு.

இப்போது அவர்களுக்கு புரிந்தது. தங்கள் கையில் இருக்கும் அந்த தாயக்கற்கள் மகிமையும் தாயக்கட்டையின் வீபரீதமும்.

"இந்தா பிடி. இதை நீயே வச்சிக்கோ. ஆளை விடுடா சாமி".

சொல்லியபடி கீர்த்தனா நடந்து சென்று அந்த பால்கனி பக்கம் நின்று கொண்டார்.

இப்போது மீண்டும் தொடங்குகிறது அவர்களது நிகழ் காலம். இங்கே நிழல் இல்லை நிஜம் மட்டும்.

அங்கே மீண்டும் அந்த காட்சி விரிகிறது. ராஜசேகரும் கீர்த்தனாவும் டைம் ட்ராவல் பற்றி பேசிய பின் இருவரும் அன்றைய இரவு தூக்கத்திற்கு சென்று விட்டனர்.

நாட்கள் அதன் போக்கில் செல்ல அவரகள் அந்த பரமபத விளையாட்டை மறந்தே போயினர். அதை கடலில் தூக்கி போடுவதாக சொன்னதையும் தான். ராஜசேகரது வீட்டில் ஒரு மூலையில் கிடந்தது அந்த பரமபத பலகை.

ஒரு நாள் வேலைக்காரி கண்ணில் பட...

இவ்ளோ அழகான பெயின்டிங்ஸ் யார் தூர போடுவார்கள். இங்கே எங்கேயாவது மாட்டி வைக்கலாம் என்றேண்ணத்தில் அங்கே இருந்த கெஸ்ட் ரூமில் மாட்டி வைத்தார்.

நாட்கள் மாதங்களாக... மாதங்கள் வருடங்களாக இப்போது ராஜசேகர் திருமணம் வரை வந்துவிட்டது.

திருமணம் நல்லபடியாக முடிந்து வந்த நாள் முதல் ராஜசேகரது மனைவி பார்கவிக்கு ஏனோ கீர்த்தானவை பிடிக்கவில்லை. வெளியே காட்டிக்கொள்ளமாட்டார். ஆனால் உள்ளே கொழுந்து விட்டு எரியும். ராஜ சேகரை 'ராஜு' என்று அழைத்து கொண்டு இன்னும் சின்ன பிள்ளை போல அவர் கூடவே சுத்துவது என்னவோ பார்கவிக்கு பொறாமையாக இருக்கும். தான் செய்யவேண்டியதை இவள் எப்படி செய்யலாம். என்னை விட இவளுக்கு என்ன உரிமை என் கணவரிடத்தில்.

சில சமயம் பொறுக்கமாட்டாமல் கேட்டும் விடுவார். ஆனால் இருவரும் அதை பெரிதாக என்ன.. விஷயமாக கூட கருத மாட்டார்கள். அவரது மனதில் வன்மம் நாளாக நாளாக கூடி கொண்டே போனது. பார்கவிக்கு ரவி பிறக்க, கீர்த்தனாக்கு அப்போது தான் திருமணம் ஆகியிருந்தது. முன்பு போல இப்போது அடிக்கடி சந்திப்பதில்லை. அதுவே அவருக்கு போதுமாய் இருந்தது.

அப்போது தான் பார்கவியின் அண்ணன் தோழன் அவரது வீட்டில் தொழில் விஷயமாக தங்க வேண்டி வந்தது. அவருக்கு பார்கவியை பிடிக்கும். திருமணம் வேறு ஒருவருடன் ஆன பின்பு அந்த காதலை மனதிற்குள் புதைத்து கொண்டார். பார்கவிக்கும் அவரை பிடிக்கும் ஆனால் காதல் என்றில்லை.

அப்போது தான் அவர் கண்ணில் பட்டது அந்த பெயின்டிங். அது அந்த பரமபத பலகை. சாதாரணமாக பார்க்க அழகான ஓவியம் போல காட்சியளித்தது.

அதன் அழகில் மயங்கியவர் அதை பற்றி ஒரு நாள் பார்கவியிடம் எதேச்சையாக கேட்டார். பார்கவிக்கு ஒன்றும் தெரியவில்லை. பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. ஆனாலும் அதில் ஏதோ இருப்பது போல் தோன்றியது. அதன் பழமையான தோற்றம் வேறு அவரை வெகுவாக கவர்ந்திருந்தது.

ராஜசேகரிடம் இது பற்றி ஆஃபீஸ் விட்டு வந்ததும் கேட்டார். அவருக்கு அதிர்ச்சி. இதை எப்படி மறந்தேன்.

"பாரு.. இதை முதலில் தூக்கி தூர போடு. இதை இங்கிருக்கிறதை ஒரு நிமிஷம் கூட விரும்பலை". சொல்லிவிட்டு அவர் சென்று விட்டார்.

பார்கவிக்கு அதை அறிந்து கொள்ளும் ஆர்வம் பிறந்தது. எதை தொடதே... என்று சொல்கிறோமோ, அதை தொட்டு பார்த்தால் என்ன? என்று தோன்றும்..! எதை செய்யாதே... என்று சொல்கிறோமோ.. அதை ஒரு முறை செய்து பார்த்தால் என்ன? என்று தோன்றும்..! இது தான் மனித இயல்பு.




உயிர் தருவாளா.........
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் செல்லம்ஸ்...

எல்லோரும் பாதுகாப்பா இருந்துக்கோங்க. கொரோனா பூச்சாண்டி சுத்திக்கிட்டு இருக்கான். வெளியே போனீங்க உச்சந்தலைய பிடிச்சு தர தரன்னு இழுத்து கொண்டு போயிருவான். So be safe makkas....

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ கதையின் அத்தியாயம் 19 &20 பதிவு போட்ருக்கேன். படிச்சி பாருங்கள். கதையோடு முக்கியமான பகுதிக்கு வந்திருக்கிறோம். இப்போ ஓரளவுக்கு கதை கெஸ் பண்ண முடியும். உங்கள் யூகங்களை தெரிஞ்சிக்க ஆவலாக இருக்கிறேன். ஏமாத்திடாதீங்க பட்டூஸ்.

உங்களுக்கு நான் சொல்ல வந்தது புரியுதான்னு சொல்லுங்க. இந்த எபில நிறைய பேருக்கு பல சந்தேகம் தீரும். சில பேருக்கு பல டௌட்ஸ் வரும். எல்லாத்தையும் என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

இது வரை என் எழுத்துக்கு அங்கீகாரம் கொடுத்து எனக்கு பூஸ்ட் கலக்கி தரும் எல்லா முகம் தெரியா தேவதைகளுக்கும் உ..ம்..மா... :smiley18::Puszi::smiley39:

போற போக்குல இந்த பக்கம் வந்து ரெண்டு எட்டு பார்த்துட்டு பார்க்காதது போல ரசிச்சுகிட்டு போகிற அந்த பென்குயின்களுக்கும் ஒரு சின்ன உ..ம்..மா
:Puszi:
(why பென் குயின் பேரு.. கொஞ்சம் யோசிங்க பாஸ்... இறக்கை இருந்தும் இல்லாதது போல.... படிச்சி பார்த்தாலும் ரெண்டு வரி கமெண்ட் சொல்லதாது போல... ஹீ ஹீ....)


Support and boost me until end . Thank you guys...:smiley2::smiley9::love:
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ
அத்தியாயம் 21


கண்ணாமூச்சி ஆடி
கனவை விதைக்கிறாய் என்னுள்...
கேட்டால் காதல் பாஷை பேசுகிறாய்..
இது என்ன விளையாட்டு கண்ணா...!



"ஒளியின் வேகத்தில் பயணிக்கும் பொழுது நம்மால் காலத்தின் ஓட்டத்தை மாற்ற முடியும்.

எல்லா பொருள்களை காட்டிலும் ஒளியின் வேகம் தான் அதிகம். அப்படியெனில் ஒளியை விட வேகமாக செல்லும் ஒரு பொருள் கிடைத்தால் நம்மால் அதை விட வேகமாக பயணிக்க முடியும் தானே..?

காலபயணம் பற்றி ஒரு சின்ன எடுத்துக்காட்டுக்கு சொல்றேன்.. இந்துக்களின் புனித நூல்களில் ஒன்றான மகாபாரதத்தில் 'ரைவதா அரசன்' பற்றிய கதையில், அவர் படைப்புக் கடவுளான பிரம்மாவைக் காண்பதற்காக சொர்க்கத்திற்கு பயணிக்கிறார். காரணம் அவருக்கு ஒரு மகள் உண்டு. மகள் என்றால் சாதாரண மகள் அல்ல... பேரழகி. தேவதை போன்ற பிரம்மிக்க வைக்கும் அழகு. ஒரு முறை தரிசித்தாலும், சித்தம் கலங்கி போனாலும் நினைவில் அழியாமல் நிற்கும் அழகு. அப்படி ஒரு அழகிய மகளை மணமுடிக்க இவ்வுலகில் எவரேனும் உண்டோ...? இதை அறிந்திட தான் படைப்பு கடவுள் பிரம்மனை தேடி சொர்க்கலோகத்திற்கு சென்றாராம். (எப்படி ? இந்த காலத்தில் ராக்கெட்,விண்வெளி கலம் உண்டு. ஆனால் அக்காலத்தில்... யோசிக்க வேண்டிய விஷயம்.)

அங்கே சில காலம் பிரம்மனுடன் தங்கி விட்டு பின்னர் பூமிக்கு திரும்பி வருகிறார். ஆனால் பூமியில் இப்போது பல யுகங்கள் கடந்துவிட்டதைக் கண்டு ரைவதா அரசன் அதிர்ச்சி அடைகிறார். அவர் போன நோக்கம் என்ன... இப்போது இங்கே நடப்பது என்ன..?

(அவர் மகளுக்கு கல்யாணம் ஆச்சா இல்லையான்னு மகாபாரதம் படிச்சி தெரிஞ்சிக்கோங்க..)

அப்படியெனில் இவர் காலத்தை வென்று அதில் பயணம் செய்து, அவர் விரும்பிய காரியத்தை முடிக்க சென்றிருக்கிறார். திரும்பி சொந்த இடத்திற்கு வருகையில் அவர் வயது மாறவில்லை. ஏனெனில் அவர் பூமியில் இல்லை. பூமியில் உள்ளவர்களுக்கு வயது ஆகும். வேறு கிரகத்தில் வாழ்பவர்களுக்கு நம்மை காட்டிலும் வயது குறைவாக தான் இருக்கும். எப்படி ஒருவரது எடை பூமியில் ஒரு அளவாகவும் விண்வெளியில் வேறு அளவாகவும் இருக்கிறதோ அது போல இதுவும்.

பொதுவாக பூமியில் வசிப்பவர் ஒருவர் தன் இருபது வயதில் காலபயணம் செய்கிறார், அப்போது அவர் நண்பருக்கும் அதே இருபது வயது தான். அவர் கால பயணம் செய்து விட்டு திரும்பி வந்து பார்த்தால், அவர் அதே இருபது வயதில் தான் இருப்பார். அந்த இருபது வயது நண்பர் இப்போது நாற்பது வயதில் அல்லது அறுபது வயதில் அல்லது இறந்தும் கூட போயிருக்கலாம். இது தான் அந்த கால பயணத்தில் ஏற்படும் ஒரு மாற்றம். கால பயணத்தின் அளவை பொறுத்து வயது மாறும்".

"இன்ட்ரெஸ்டிங்.... அப்புறம்...?? " ஆர்வமாய் கேட்டு கொண்டிருந்தார் பார்கவி கீர்த்தனாவிடம்.

"நமக்கு பிடித்தவர்கள் நம்முடன் இல்லாமல் ஏதோ ஒரு புது உறவுகளுடன் வாழ நேர்ந்தால் நம் உணர்வுகள் என்ன மாதிரி இருக்கும்...? அப்படி ஒரு வாழ்க்கை தேவையா...? நாம் நினைத்ததை சாதித்து காட்டலாம்... ஆனால் விதியை எப்படி மாற்ற முடியும்.

கால பயணம் செய்து ஒரு நிகழ்வை மாற்றினால் கண்டிப்பாக அது ஏதாவது ஒரு விபரீதத்தை கொடுக்கும்.

இப்போ சொல்லு பார்கவி இப்படி ஒரு ஆபத்தான விளையாட்டு தேவையா...??"

"அதான் ராஜுவும் நானும் இதை தூக்கி போட நினைத்தோம். அவன் ஏன் இதை பத்திரபடுத்தி வச்சிருந்தான்...?"

"அவரும் இதை தூக்கி போட தான் நினைச்சாராம்.. ஆனால் அடுத்த நாளே அவர் ஏதோ டூர் போயிட்டாறாம். திரும்பி வந்ததுக்கு அப்புறம் அப்படியே மறந்தும் போயிட்டாராம்.

இதை இன்னும் தூக்கி போடலயா..? எப்படி மறந்தேன்னு தெரியல. எனக்கு அவசர வேலை இருக்கு. நீயே தூக்கி போட்டுருன்னு சொன்னார். நான் தான் உங்க கிட்ட ஒரு வார்த்தை கேட்டூர்லாம்ன்னு வந்தேன்.

அப்புறம் சொல்லுங்க கீர்த்தனா. இதை எப்படி யூஸ் பண்ணுறது...?"

கீர்த்தனாவின் பார்வை தன் மேல் படுவதை கண்டும் காணாதது போல... தொடர்ந்து பேசினார்.

"ஏன் கேட்கிறேன்னா... சும்மா ஒரு ஆர்வம் தான். எப்படி இது ஒர்க் ஆகுதுன்னு தெரிஞ்சிக்கலன்னா எனக்கு இருப்பே கொள்ளாது. எப்படியும் தூக்கி போட தானே போறேன்.

அவர் கிட்டேயே கேட்டேன். அவர் பிசியா இருக்கிறதுனால உன்கிட்ட கேட்டுக்கச் சொன்னார்".

"ராஜுவே சொன்னானா...? நம்பமுடியலயே..."

"நான் என்ன பொய்யா சொல்லுறேன். இல்லன்னா இதை தூக்கிக்கிட்டு உன்கிட்ட ஏன் வர போறேன்".

கீர்த்தனாவிற்கு விருப்பமில்லை. இருந்தும் ராஜசேகரே சொல்லியப்...பின்... எப்படி... மறுப்பது?

அவரை மேலும் யோசிக்கவிடாமல் பார்கவி தன் பேச்சு சாமர்த்தியத்தால் அவரை திசை திருப்பி வந்த காரியத்தை சாதித்துக் கொண்டார்.

குறிப்புகளுக்கான விளக்கங்கள், பரமபதம் வேலை செய்யும் நேரம், அதற்கு தேவையான எனர்ஜி எங்கிருந்து எப்போது கிடைக்கும், அந்த வண்ண தாயகற்கள் பயன் எல்லாம் இப்போது பார்கவியின் மூளையில் பத்திரமாக சேமித்து வைக்கப்பட்டது.

"திரும்பவும் சொல்லுறேன் பார்கவி. இந்த கேம் விளையாடனும்ன்னு கனவுல கூட நினைச்சிறதா. இப்போ வீட்டுக்கு போகும் போதே தூக்கி போட்டுரு. புரியுதா..."

"கண்டிப்பா கீர்த்தனா".

"ஹே.. கீர்த்தி குட்டி. இங்கே கொஞ்சம் வாடா.." தேவேந்திரன் தன் மனைவியை அழைக்கும் குரல் கேட்டது.

"பார்கவி கொஞ்சம் பொறு. அவர்கிட்ட என்னன்னு கேட்டுட்டு வந்துர்றேன்". கீர்த்தனாவின் தலை மறைந்ததும்
பார்கவியின் கண்கள் குருட்டு ஆசையில் பரமபத பெட்டியை வருடியது.

அங்கே அறையினுள்ளே,

"ஏய் கீர்த்தி டார்லிங்... இந்த சிகப்பு சரீல(saree) எவ்ளோ அழகா இருக்க தெரியுமா... உன்னை விட்டு பிரிஞ்சி இருக்கவே முடியல".

கை வளைவில் மனைவியை அணைத்தபடி நின்று தேவேந்திரன் கொஞ்சிக் கொண்டிருந்தார்.

"ஹம்ச்... விடுங்க தேவா... என்னது இது.? பார்கவி வேற இருக்க. இப்ப
போய்... விடுங்க..."

"ஹே.. யார் இருந்தா எனக்கென்ன.. என் பொண்டாட்டி நான் கொஞ்சுவேன்.. போடி..."

"உங்ககிட்ட பேச முடியுமா... முதல என்னை விடுங்க. அவள் காத்துகிட்டு இருக்கிறா.."

"முஹும். ஒரு கிஸ் குடு. உன்னை விடுறேன்". சொல்லியபடி இன்னும் இழுத்து நெருக்கமாய் அணைத்து தன் முகத்தில் முத்தத்திற்காக அழைப்பு விடுத்தார்.

குங்குமாய் சிவந்த முகத்தை மறைத்தப்படிக் கீர்த்தனா,

"விடுங்க என்னை. தேவா நான் சொல்றேன்ல. அப்புறம் தாரேன்".

"நோ. ஐ வான்ட் நவ்". அடம்பிடித்தார் அவர்.

"உங்களை..."

அலுத்துக்கொண்டாலும் வேறு வழி இல்லாததால்,

"ஹ்ம்ம்...இப்போதைக்கு ஒன்னே ஒன்னு தான்". மெதுவாக எம்பி பட்டு இதழ்களால் கன்னத்தில் முத்தம் கொடுத்தவர், சட்டென அவரை தள்ளிவிட்டு அலங்காட்டி(பழிப்பு) விட்டு ஓடி விட்டார்.

அறையிலிருந்து சிவந்த முகமாக சிரித்தபடி வெளியே வந்த கீர்த்தனாவை பொறாமை கலந்த வன்மத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார் பார்கவி. இவளுக்கு மட்டும் எப்படி எல்லாம் கிடைக்கிறது. ஆசை கணவர், தோள் கொடுக்க ஓடி வரும் நட்பு, நிறைவான வாழ்க்கை. எப்படி இவளுக்கு மட்டும் அமையலாம். இங்கே நான் கணவரின் அன்பிற்காக ஏங்கி கொண்டிருக்க இவள் கொஞ்சி குழாவுவது எங்கே...?

இவளால் தான் என்னால் என் கணவரிடத்தில் நெருங்க முடியவில்லை. இவள் மட்டும் என் கணவரது வாழ்வில் வராமல் இருந்திருந்தால்.... இருந்திருந்தால்....

சட்டென மின்னல் வெட்டியது அவரது மனதில். கண்கள் அந்த பரமபத பலகையை ஒரு வித வெறியுடன் பார்த்தது. உன்னால் முடியும் தானே...!!! எல்லாவற்றையும் என் மனம் விரும்பும்படி நடத்த கண்டிப்பாக இதன் உதவி எனக்கு இப்போது தேவை.

நான் விரும்பியது போல என் கணவர் வாழ்விலிருந்து கீர்த்தானவை நீக்கி விட்டால் .... கற்பனை பண்ணவே அவ்வளவு சந்தோசமாக இருந்தது. புன்னகைத்துக் கொண்டார்.

"என்ன பார்கவி தனியா உக்காந்து எதை நினைச்சு சிரிச்சுக்கிட்டு இருக்கிற...?!" தேநீர் கப்புடன் வந்தார் கீர்த்தனா.

"அதுவா கீர்த்தனா... இது ஒரு சாதாரண பலகை. ஆனால் இதுக்குள்ள எவ்ளோ சக்தி அடங்கி இருக்குது. அதை தான் நினைச்சேன். தானாக சிரிப்பு வந்துட்டு..."

"ஹ்ம்ம்... இந்த டீ எடுத்துக்கோ".

"ம்ம்ம்...."


"ப்பாம்.....ப்பாம்...."

வெளியே பார்கவியை அழைத்து செல்ல வண்டி வந்ததற்கு அடையாளமாக ஹார்ன் சத்தம் கேட்டது.

"சரி கீர்த்தனா. அப்போ நான் கிளம்புறேன்".

"ஹ்ம்ம்.. சரி".

வெளியே வந்தவர் அப்போது தான் கவனித்தார் டிரைவர் வராமல் அங்கே அவர் அண்ணணது தோழன் நிற்பதை.

"யார் அது பார்கவி. புதுசா தெரியிராரு...?"

"அவரா.. என் அண்ணாவோட ஃபிரென்ட் மித்ரன். பிஸ்னெஸ் விஷயமா வந்திருக்கிறார். எங்க வீட்ல தான் தங்கியிருக்கிறார்".

"ஓ.. சரி சரி..."

"அப்போ நான் கிளம்புறேன் கீர்த்தனா".

"ஷ். ஷ்.. ஷ்... என்னது இது பார்கவி.. போகும் போ இப்படி அபசகுணமா கிளம்புறேன்னு சொல்ல கூடாது. போயிட்டு வர்றேன் அப்படின்னு தான் சொல்லணும். பத்திரமா போயிட்டு வா".

"சரி . இனி திருத்திக்கிறேன்". புன்னகை முகமாகவே பதில் அளித்தார்.

"அப்புறம் பார்கவி... சொல்லணும்னு தோணிச்சி. சொல்றேன். தப்பா எடுத்துக்காத..."

"ஹே.. ஏன் இப்படிலாம் பேசுற. உனக்கு இல்லாத உரிமையா...??"

"நம்ம கலாசாரத்துல பெண்கள்தான் கணவர் வீட்டுக்குப் போகிறோம். கணவர் வீடுங்கிறது வேற மாதிரி தான் இருக்கும். நிச்சயமா நம்ம அம்மா வீடு மாதிரி இருக்காது. பெண்கள் நாம அதுக்கேத்த மாதிரி மாற வேண்டி வரலாம். அதனால, நம்ம கணவர், அவருடைய குடும்பம், அவர் கூடப் பிறந்தவங்க, நட்பு வட்டம்ன்னு புகுந்த வீட்டின் பழக்க வழக்கங்களுக்கு ஏத்தபடி நம்மளை மாத்திக்கிறது தான் நல்ல வாழ்க்கைக்கு அழகு. என்னைப் பொறுத்தவரைக்கும் நீண்ட கால தாம்பத்தியத்துக்கும் இதுதான் சரியான வழி. நான் ஒன்றும் பெரிய அனுபவசாலி கிடையாது. ஆனாலும் எனக்கு இந்த கொஞ்ச நாள்ளிலயே தெரிஞ்சிக்க முடிஞ்சிது.

நீ பொறாமை படுற அளவுக்கு நான் ஒன்றும் ஒர்த் இல்லை பேபி. சோ உன்னை நீயே குழப்பிக்காத.

மனசு விட்டு பேசி ஒரு பிரச்சனையை தீர்க்கிறது ஒரு வகைன்னா... நம்மளோட மனசுக்கு நெருக்கமானவங்க கூட பழகி அவர்களோட செயல் மூலமா, அவர்கள் நம்ம மேலே வச்சியிருக்கிற அன்பை புரிஞ்சிக்கிறது ரெண்டாவது வகை.

கூர்ந்து கவனி. உன்னை சுத்தி என்னை நடக்குதுன்னு அமைதி...யா.. மூன்றாவது மனுஷியா இருந்து பாரு. அப்போ தான் உன்னோட குழப்பத்துக்கு பதில் கிடைக்கும்".

"இதெல்லாம் இப்போ என்கிட்ட ஏன் சொல்லுற கீர்த்தனா...?!!" கண்டுகொண்டாலோ மனதை... ?! நெஞ்சம் படப்படத்தாலும் குரல் நடுங்காமல் கேட்டார்.

ஒன்றும் பேசாமல் நெருங்கி வந்து பார்கவியை அணைத்துக் கொண்டார். தோள் வளைவில் முகத்தை தாங்கிய படி,

"பதறாத பார்கவி. இதை பிடி. நீ மறந்து அங்கே சோபாவிலே வச்சிட்டு வந்துட்ட". என்றபடி ஒரு பொருளை பிறர் கவனம் படாமல் அவரது கைப்பையில் திணித்தார்.

அது ஒரு காகிதம். பரமபதம் பற்றிய விளக்கங்களை பார்கவி எழுதி வைத்திருந்தார். கீர்த்தனாவிடம் பேசிய பின் அந்த பேப்பரை கைப்பையில் வைப்பதற்கு பதில் சோபாவிலே வைத்துவிட்டார். அதை கீர்த்தனா பார்த்து விட்டார். அதை தான் இப்போது பார்கவியிடம் கொடுத்தார்.

பின் அவர் கண்களை பார்த்து... நான் உன் மனதை தெரிந்து கொண்டேன் என்பது போல், ஒரு முறை கண் சிமிட்டி 'ஆம்' என்பது போல செய்கை செய்தார். பார்கவியின் குட்டு வெளிப்பட்டு விட்டது.

பார்கவியின் உள்ளம் நடுங்கியது. எப்படி இப்பெண்ணால் இலகுவாக இருக்க முடிகிறது. எல்லாம் தெரிந்தும்...??! அப்படியெனில் நான் தான் தவறாக எண்ணி கொண்டிருக்கிறேனா...??! இவள் மீது தவறில்லையா..?

கீர்த்தனாவோ மாறாத அதே புன்னகையுடன்...

"மனசுக்கு சந்தோஷமோ துக்கமோ.. தோள்தாங்க கணவன் கிட்டதான் போக தோன்றும். இது தான் பெண்களோட குணம். அந்த உரிமையை நான் என்னைக்கும் 'தேவா'வை தவிர யாருக்கும் கொடுத்ததில்லை. என்னால உன்னோட மனசை புரிஞ்சிக்க முடியுது. கொஞ்சம் பொறுமையா யோசி. அப்போ நீயே புரிஞ்சிப்ப.."

ஒன்றும் பேசாமல் பார்கவியும் விடை பெற்றார்.

நம் வாழ்நாளில் ஒரு முறையேனும் நினைத்திருப்போம்... நமக்கு மட்டும் காலத்தை மாற்றும் திறன் இருந்திருந்தால்.. இதை இப்படி மாற்றியிருப்பேன். இதை நடக்க விடாமல் தடுத்திருப்பேன். இந்த நிகழ்வை அனுபவித்திருப்பேன். இதை இன்னும் கூடுதலாக, சிறப்பாக செய்திருப்பேன். இப்படி எத்தனையோ விருப்பங்களை மனம் சொல்லும். ஆனால் இவற்றை மாற்றுவதால் எல்லாம் வாழ்க்கை இனிமையானதாக மாறி விடுமா என்ன... ? ஒன்று போனால் இன்னொன்று...வரும் தானே.. இது தானே இயற்கையின் நியதி.

ஹைய்யோ! கையில் இருந்த ஒரு ரொட்டி துண்டும் போயிற்றே என்று மனிதன் புலம்பினால், அந்த காக்கைக்கு உணவு எங்கிருந்து வரும்? ஒன்றை நினைத்தால் இன்னொன்று நடக்குமா..???! ஒன்றை மாற்றினால் தொடர்ந்து பலவற்றை நாம் மாற்றி கொண்டே இருக்க வேண்டியது தான். அதனால் எதையும் மாற்ற முயலாமல், இருப்பதை இருக்கிறப்படியே ஏற்று, அதை கொண்டு முன்னேறும் வழியை பார்ப்பதே சிறந்தது. அது தான் நிலையான மகிழ்ச்சியை தரும்.

இதை எப்படி இந்த பார்கவிக்கு சொல்வது. சொன்னாலும் இப்போது ஏற்று கொள்ளும் மனநிலையில் பெண் இல்லை. அவள் கணவனிடம் மனம் விட்டு பேசியிருந்தால் இத்துணை தூரம் தவறாய் கற்பனை செய்திருக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. ராஜசேகரை பொறுத்தவரை மனைவிக்கு தேவையானதை பார்த்து பார்த்து தான் செய்கிறார். ஆனால் கீர்த்தனாவிடம் காட்டும் துள்ளல் மனைவியிடம் கொஞ்சம் குறைவு. அவள் தோழி. இவள் மனைவி. இரண்டிற்கும் வேறுபாடு உள்ளதே. மனைவி மனைவி தான். தோழி தோழி தான். மனைவியின் இடத்தை தோழியால் ஒருபோதும் நிரப்ப முடியாது. அதுபோல குழந்தை மனம் கொண்ட நட்பிற்கு நிகராக எந்த உறவுமே ஈடு ஆகாது.

ராஜசேகரை பொறுத்தவரையில் அவர் நல்ல கணவர். தெரிந்தவர்களுக்கும் அப்படி தான் தெரியும். பார்கவியின் உள்மனதும் அதை தான் சொல்லும். ஆனாலும் ஒரு போட்டி. தன் கணவன் எப்படி தன்னிடம் காட்டும் அதே அன்பை வேறு ஒரு பெண்ணிடம் காட்டலாம். எனக்கு மட்டும் தான் அவரது முழுஅன்பும் வேண்டும். குழந்தை சொல்லுமே தன் தாய் தனக்கு மட்டும் தான் வேண்டும் என்று அதுபோல... இது பெரிய குற்றமில்லை. ஆனால் அதை பெரிய விஷயமாக எண்ணி ஒருவர் வாழ்வை அழிக்கும் நிலைக்கு சென்றால்... அது..?!

இப்போது அந்த நிலைக்கு தான் பார்கவியும் சென்று கொண்டிருக்கிறார்.

கீர்த்தனாவின் இலைமறை பேச்சு பார்கவியின் மனதை சாய்க்குமா..??


என்னை சாய்ப்பாயோ...?!
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்


என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 22


மந்திர புன்னகையோ
மயக்கும் மான்விழியோ...
வேண்டாம் பெண்ணே...!
நாணமேந்திய வதனம் போதும்
நான் ஆயுள் முழுதும்
உனக்கு அடிமைசாசனம் எழுதிதர...!


காலம் எப்பொழுதும் ஒரே மாதிரி இருக்காது. அது மாறிக் கொண்டே இருக்கும் அம்மாற்றம் நன்மையும் கொண்டு வரலாம். தீமையையும் கொண்டு வரலாம். காலத்தின் மாற்றத்தில் நாம் எல்லோரும் விளையாட்டு பொம்மைகள்.

கணத்த மனதோடு அமைதியாய் அமர்ந்திருந்தார் பார்கவி. மித்ரன் கூட இரண்டு முறை அழைத்தும் பதில் இல்லை. அவனும் பின் அமைதியாகி விட்டான். அவளே வாய் திறந்து பேசட்டும் என்று.

கீர்த்தனா தன் வாழ்வில் வந்தது... கணவரதுடனான நட்பு... தான் ராஜசேகரது வாழ்வில் அடியெடுத்து வைத்தது...தனக்கான காதல்.. எல்லா நினைவுகளையும் மனதில் அமைதியாக அசை போட்டார். மூன்றாம் நபராக பார்க்கையில் எங்கேயும் தவறு நடந்தது போல தெரியவில்லை. தான் தான் அதீத காதலால் தவறாக புரிந்து கொண்டதை உணர்ந்து கொண்டார்.

"மித்ரா..."அமைதியான குரலில் இனிமையாய் ஒலித்தது பார்கவியின் குரல்.

காதலித்த பெண்ணின் வாயால் தன் பெயர் கேட்கையில் உடலின் ஒவ்வோர் அணுவும் துள்ளி கூப்பாடு போட்டது.

"என்னமா... சொல்லு.. என்ன ஆச்சு..?" கனிவு ததும்பிய குரலில் ஆதரவாய் கேட்டார்.

மனம்விட்டு பேச ஒரு நபர் கிடைத்தால், இந்த பெண் மனம் இருக்கிறதே.. அப்பப்பா.. அப்படியே அனைத்தையும் சொல்லி கதறி துடித்திட விரும்பும். அதை தான் பார்கவியும் செய்யலானார்.

"வாழ்க்கை எத்தனை எதிர்பாராத திருப்பங்களையும் மாற்றங்களையும் அடக்கி வச்சியிருக்குது தெரியுமா? நிஜம்ன்னு நினைச்சா... நிழலை தேடி ஓடுது... அந்த நிழலை நம்பி இத்தனை காலமும் சந்தோஷத்தை முழுசா அனுபவிக்காம அவசர அவசரமா ஓடியிருக்கேன். கடைசில என்னோட நினைப்பு தான் தப்புன்னு நெத்தியடியா சொல்லாம... அன்பால என்னோட நெஞ்சை சாய்த்துட்டா அவள்..." சொல்லியபடி விம்மி அழுதார் பார்கவி.

அந்த கடற்கரை ஓரமாய் காரை நிறுத்தியிருந்தார் மித்ரன். இருள் பரவ தொடங்கியிருந்தது. ஆங்காங்கே மக்கள் நடமாட்டம் இருந்தது. தூரத்தே தெரிந்த கடலலைகளை கொஞ்ச நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்.

பார்கவி மனதில் இருக்கும், இல்லை இல்லை இதுவரை இருந்த அழுக்கு போகுமட்டும் அழுது கரைந்தவர் நடந்ததை சுருக்கமாக சொன்னார். அந்த பரமபத விஷயத்தின் விளக்கத்தை தவிர்த்து மீதி அவர்கள் உறவில் இதுவரை இருந்த மனக்கசப்பை.

"நான் முட்டாள் மித்ரா.. அழகான நட்பை இவ்ளோ நாள் புரிஞ்சிக்காம கெடுதல் செய்ய இருந்தேன். நல்ல வேளை இப்போவாது புரிஞ்சி. இல்லைன்னா எவ்ளோ பெரிய தப்பு பண்ணியிருப்பேன்".

"அப்படி என்ன பண்ணலாம்ன்னு முடிவு பண்ணியிருந்த பார்கவி....??!" கூர்மையுடன் பிறந்தது கேள்வி.

சிறு அமைதிக்கு பிறகு,
"நீ கேட்டியே உன்னோட ரூம்ல இருக்கிற பெயின்டிங்ஸ் பற்றி. அது சாதாரணது இல்லை. ரொம்ப விசேஷஷமானது!!".

"என்ன சொல்லுற நீ...?!"

கால பயணம் பற்றி எடுத்துக் கூறினார். ஆனால் அதை இயக்கும் விதத்தை சொல்லவில்லை. நொடி பொழுதில் மித்ரனது மனம் ஆயிரம் தப்பு கணக்கு போட்டது. கொஞ்ச நேரத்திற்கு முன்னால் பார்கவி நினைத்தது போல தன் காதலை தக்க வைத்து கொள்ள திட்டம் தீட்டினார். பார்கவியின் திருமணத்தை நிறுத்தினால்... தனது காதலை அவளிடம் சொல்லி அவளை மனைவியாக்கி இருக்கலாமே... ?! குருட்டு புத்தி கச்சிதமாக ஆலோசனை வளங்கியது.

இந்த காதல் தான் எத்தனை ஆபத்தானது. எதையும் யோசிக்காமல்.. யாரை பற்றியும் கவலைப்படாமல்... சுயநலமாய் சிந்திக்க வைக்கிறதே!?!

"அது எப்படி 'ஒர்க்' ஆகுதுன்னு உனக்கு தெரியுமா...??!!!" குரலில் ஆர்வம் அவரையும் மீறி தெரிந்தது.

பழைய பார்கவி திரும்பி இருந்தார் இப்போது. கொஞ்சம் மனம் விட்டு அழுதளாலோ.. என்னவோ... மனம் தெளிவாயிருந்தது.

"காலபயணமெல்லாம் எதுக்கு நமக்கு மித்ரா...?"

"நீ இதை ஏன் தெரிஞ்சிக்காமல் வந்த... இதனால எவ்ளோ விஷயத்தை நாம சாதிக்கலாம்...???!" கண்களில் குள்ளநரி தனம் அப்பட்டமாய் தெரிந்தது.

பார்கவி சுதாரித்துக் கொண்டார். ஏதோ சிறு வயதிலேயே பழக்கமானவர். நன்றாக தெரிந்தவர்தான். அதற்காக எல்லோரிடமும் எல்லாவற்றையும் சொல்லிவிட முடியுமா... அதுவும் இல்லாமல் இது எத்தனை ஆபத்தானது..?? இது வேறு எவரேனும் கைகளில் கிடைத்தால் இந்த உலகமே மாறிடுமே.. முதலில் இதை தூக்கி எரியவேண்டும்.

ஒன்றும் சொல்லாமல் தனது கைப்பையை எடுத்துக்கொண்டு கீழே இறங்கி நடக்கலானார்.

"என்ன பண்ணுற பார்கவி... எங்கே போற..??"

"நான் அதை தூக்கி தூர போட போறேன். யாரோட கைக்கும் கிடைக்காதப்படி..." விரைவாக நடந்தபடி பதில் கூறினார்.

மித்ரன் பதறி போனார். அவரும் காரிலிருந்து இறங்கி அவர் பின்னே ஓடலானார்.

"நில்லு பார்கவி.. நான் சொல்லுறதை கேளு".

"நோ... நான் எதையும் கேட்கிறதா இல்லை.. " மணலில் கால் புதைய வேகமாக நடக்க முயன்றார். ஆனால் எவ்வளவு வேகமாய் நடந்தாலும் அவரால் கொஞ்ச தூரத்தை கூட கடக்க முடியவில்லை..

"சொன்னா கேளு.. நில்லு.." வேகமாய் வந்தவர் பார்கவியின் கைகளை பிடித்து தடுத்தார்.

"நீ இப்படி செய்ய கூடாது. செய்யவும் நான் விட மாட்டேன். உனக்கு வேண்டாம்ன்னா என்கிட்ட கொடு. அது எனக்கு வேண்டும்". குரலில் உறுதி இருந்தது.


"நோ.. நான் தர மாட்டேன். ஒரு நாளும் நீ சொன்னதை செய்யமாட்டேன்".

"இப்போ மட்டும் நான் சொன்னதை நீ செய்யலன்னா உன்னோட பையனை உயிரோட பார்க்க முடியாது".

அவரது நடை பிரேக் போட்டது போல சட்டென நின்றது.

"ஏய்.. என்ன சொல்லுற..?" சட்டை காலரை பிடித்து உலுக்கினார்.

"ம்ம்ம்.. உண்மையை தான் சொல்லுறேன். உன் கைப்பையில் இருக்கிற அந்த காலபயணம் செய்யக்கூடிய பெட்டியை இப்போ என்கிட்ட கொடுக்கிற. கீர்த்தனாகிட்ட இதை எப்படி வேலை செய்ய வைக்கணும்ன்னு நீ கேட்டு என்கிட்ட சொல்லுற... இல்லை...ன்..னு வை நடக்கிறதே வேற". தோழன் மித்ரன் வில்லன் கேரக்டர்க்குள் இப்போது முழுமையாக புகுந்திருந்தான்.

கடலலைகளின் பேரிரைச்சல் எல்லாம் இப்போது காதில் விழவில்லை. தன் மகன் ரவியை சுற்றியே அவரது உலகம் வலம் வந்தது.

"நோ. நீ பொய் சொல்லுற. உன்னால என் ரவியை ஒன்றும் பண்ண முடியாது".

"ஹா ஹா ஹா.. ஏன் முடியாது...??"

ஒற்றை புருவம் மேலேற மீசையை நீவி விட்டப்படியே வில்லன் சிரிப்பு சிரித்தபடியே கேட்டான்.

இவன் கண்கள் பொய் சொன்னது போல தெரியவில்லையே... எதற்காக இப்படி செய்கிறான். இவனுக்கு எதற்கு அந்த பரமபதம். இவனிடம் இல்லாத சொத்தா...??!

கால பயணம் செய்து எதை மாற்ற போகிறான்...

"உனக்கு என்ன வேணும் மித்ரா...??"
இக்கட்டான நிலையிலும் தைரியமாய் எதிரியின் இலக்கை அறிய விரும்பினார்.

"நீ தான் வேணும்னு சொன்னா தந்துருவீயா...?? ஹ்ம்மம்ம்...?"

"ச் ச் சி.... என்ன பேச்சு இது...??" அருவருப்பில் முகம் சுளித்தார் பார்கவி.

"ஏன்.. உனக்கு என்னை பி..டி..க்..க..லை...யா... கவி..?!" காதல் சிந்தியது அவன் குரலில்.

"உனக்கு என்கிட்ட என்ன பிடிக்கலைன்னு அ...ந்...த... அ...ந்த ராஜசேகரை கல்யாணம் பண்ணுன...? நான் உன்கிட்ட எத்தனை முறை என்னோட... என்னோட காதலை புரிய வைக்க முயன்றேன் தெரியுமா...?"

இவன் என்ன சொல்கிறான்... காதலா.. என் மீதா...?

"என்னடா சொல்ற...?"

"நான் உன்னை காதலிச்சேன்...ன்...னு சொன்னேன். இப்பவும் நீ தான் என்னோட மனசுல இருக்கன்னு சொல்றேன். ஒன்று இப்பவே என் கூட வா.. இல்லை அந்த காலபயணம் பற்றி முழுசா சொல்லு. என்னோட காதலை எப்படி உனக்கு புரியவைக்கிறதுன்னு எனக்கு தெரியும்..."

"என்ன பேச்சு இது. இப்போ நான் இன்னொருவரோட மனைவி. அது மட்டும் இல்லாமல் எனக்கு அழகானா குழந்தை இருக்கு. குடும்பமா வாழ்ந்துகிட்டு இருக்கிற என்கிட்ட வந்து இப்படி கேட்கிறீயே அசிங்கம் பிடிச்சவனே! உனக்கு வெட்கமா இல்லை.

த் த் தூ....

இப்படி ஒரு கேவலமான எண்ணத்தோட இவ்ளோ நாள் பழகி இருக்கிறீயே...
ச் சி... நினைச்சாலே வாந்தி வருது.
தயவு செய்து என் கண் முன்னாடி நிக்காத. போயிடு".

"என்ன.. போகணுமா.. அதற்காகவே இவ்ளோ நாள் உன் கூடவே உறவுங்கிற பெயருல சுத்திக்கிட்டு இருந்தேன். முடியாது. உனக்கு இப்போ என் கூட வர முடியலன்னா போகட்டும். நான் உன்னை இந்த நினைவுகளே இல்லாத அந்த புது உலகத்துக்கு கூட்டிட்டு போறேன். வா. உனக்கு கல்யாணமே ஆகாத, நாம் நல்ல நண்பர்களா பழகுன அந்த பால்ய காலத்துக்கு போவோம். அப்போ உனக்கு என்னை பிடிக்கும். என் காதலையும் பிடிக்கும். அந்த ராஜசேகர் மட்டும் வரலன்னா கண்டிப்பா நீ என் மனைவி ஆகியிருப்ப.

மம்ம்ம்ம்... டைம் வேஸ்ட் பண்ணாத. சீக்கிரம் போய் கீர்த்தனாகிட்ட கேளு. நாம் உடனே எல்லாத்தையும் மாற்றணும். இல்லைன்னு வை... உன்னோட குழந்தை இப்போ என்னோட ஆட்கள்கிட்ட".

சர்வமும் நடுங்கியது பார்கவிக்கு. வசமாக இவனிடம் தான் மாட்டிக்கொண்டதை உணர்ந்தார். டிரைவரை என்ன பொய் சொல்லி வர விடாமல் தடுத்தானோ... என்ன செய்வது. ஒன்றும் புரியவில்லையே...

"என்ன யோசிக்கிற பார்கவி.. ம்ம்ம்ம். நட.. காருக்கு போ". மிரட்டலாக சீறினான் அவன்.

முஹும்... இவனிடம் சொல்லி புரிய வைக்க முடியாது. சாதுரியமாக நடித்து தான் தப்பிக்க வேண்டும். நிமிடத்தில் யோசித்தவர், மெதுவாக முன்னே நடப்பது போல் நடந்து, அவனுக்கு முதுகு காட்டி எங்கேயோ பார்ப்பது போல திரும்பி கொண்டு, கைப்பைக்குள் கை விட்டு அந்த பரமபத பலகையின் உள்ளே இருந்த அந்த தாயக்கற்களை கை மறைவில் எடுத்துக்கொண்டார்.

சாலையை அடைந்ததும் விறுவிறுவென அவன் எதிர்பாராத அசந்த தருணத்தில் ஓட்டம் பிடித்தார்.

மித்ரன் திகைத்துப் போனார்.

"என்னையே ஏமாற்ற பார்க்கிறீயா...???"

வேகமாக அவரும் பின் தொடர்ந்து ஓடினார்.

கால்கள் அதன் போக்கில் போக, எங்கே போகிறோம் என்ற இலக்கின்றி கால் போன போக்கில் ஓடினார். கொஞ்சம்
யோசித்து செயல்பட்டிருந்தால் மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிக்கு
சென்றிருக்கலாம். அவசர அவசரமாய் அவனிடம் இருந்து தப்பித்து தன் குழந்தையை காப்பாற்ற வேண்டும் என்ற பதட்டத்தில் அவரே அந்த காலபயணம் செய்து மாற்ற எண்ணினார்.

இது தான் விதியின் ஆட்டம் என்பதை அறியாமல், அதை மாற்ற அவர் அவரது உயிரையே பயணம் வைத்து காலபயணம் மேற்கொள்ள திட்டமிட்டார். ஆபத்து சமயத்தில் நிதானமாக யோசித்தாலே போதும் சுலபமாக விடை கிடைத்துவிடும். அவசரகதியில் சீக்கிரம் செய்யவேண்டும் என்கிற படப்பிடிப்பில் முட்டாள்தனமாக முடிவெடுத்தார் பார்கவி.

இருள் நன்றாக பரவத் தொடங்கியது. மழை தூரளாய் ஆரம்பித்து கொட்டி தீர்த்தது. தேகம் நடுங்கியது. கால் தடுமாறியது. இனி முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்.

கையில் இருந்த பரமபத பலகையை நிலவொளியில் பிடித்துக்கொண்டு கற்களை கையோடு பிடித்தபடி வைத்தார். இத்தனை ஆண்டுகளாய் அன்ன ஆகராமின்றி கோர பசியுடன் இருந்த அந்த பரமபத பலகை வெறியுடன் செயல்பட ஆரம்பித்தது. நாடி நரம்பெங்கும் நிலவொளியின் ஆற்றலும், மழை நீரும் சுவாசமாய் அதன் தேகமெங்கும் பரவியது. அதன் இலக்கங்கள் மாறியது, பிரகாசமான ஒளி அதிலிருந்து புறப்பட்டது, இதை எதையும் லட்சியம் செய்யாமல் தன் உலகமே அழிந்தாலும் குழந்தையை காக்க வேண்டும் என்ற தாயுள்ளத்தில் அவர் அவசர அவசரமாக கால பயணம் செய்தார் காலத்தின் அளவை குறிப்பிடாமலே.

வெகு அருகில் மித்ரன் வருவதை அறிந்து கொண்டு அந்த பலகையை அப்படியே வெறி கொண்ட மட்டும் தூர வீசியபடியே அந்த மாய ஒளியின் பிடியில் விழுந்தார்.

"ஆ...ஆ.....ஆ....
ர..........வி.......
வந்துட்டேன்டா அப்பு...மா..."

எக்காரணம் கொண்டும் அவன் கையில் சிக்கக்கூடாது , காலபயணமும் மாட்டக்கூடாது. இதற்கு ஒரே வழி கண் எட்டாத தூரத்தில் வீச வேண்டும் என்றெண்ணத்தில், பார்கவி தூக்கிப் போட்ட பரமபத பலகை அப்படியே கடல் அலைகளில் சிக்கி, கடலுக்குள் மெது மெதுவாக சென்று ஜலசமாதி ஆகியது.

அபிமன்யூ எப்படி மகாபாரதப் போரில் சக்கரயூகத்தில் மாட்டிக்கொண்டு வெளிவராமல் மாண்டுப்போனானோ... அதே மாதிரி பார்கவி கால பயணத்தில் சிக்கி கொண்டார் வெளிவரும் மார்க்கம் அறியாமலே.





சாய்த்தாளே... உயிர் தருவாளா...??!
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பட்டு குட்டீஸ்...

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தாமத பதிவிற்கு பிளீசு மன்னிச்சு பேபிஸ்....

எனக்கு உறுதுணையாக இருந்துவரும் வாசகர்களுக்கு நன்றி.
 
Status
Not open for further replies.
Top