All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

டெய்யம்மாவின் "என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ..." - கதை திரி

Status
Not open for further replies.

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே...உயிர் தாராயோ?!

அத்தியாயம் 6



மலர்கள் கூட வெட்க படும் தருணம். . . சந்திரன் கூட மேகமென்னும் ஆடைக்குள் ஒளிந்து கண்ணாமூச்சி விளையாடுகிற வேளை...சில்லென்ற காற்றில் மேனி சிலிர்த்து மெல்லிய நடுக்கம் உண்டாகும் நேரம்... மின்மினி பூச்சிகள் தங்கள் இணைக்காக விளக்கு பிடிக்கும் அந்த இரவுக்கு முந்திய ஏகாந்த மாலை மயங்கிய வேளையில் காலார நடந்தபடி. . . ஆராதனாவின் வீடு நோக்கி ராமும் ஆருவும் வந்து கொண்டிருந்தனர்.

மௌனம் அழகிய மொழி தான்.யார் இல்லை என்றது.. அதற்காக வீடு வரும் வரை வாய் மூடி மௌனிக்க நான் என்ன காந்தி சொன்ன மூன்று பொம்மைகளுள் ஒன்றா என்று நினைத்தாளோ ரதியவள் . . . ?!

“ராம்... உனக்கு தெரியுமா. .?! என் பக்கத்து வீட்டு தீக்கோழி இருக்காளே. . .?!”

இவள் யாரை சொல்கிறாள் என்ற ரீதியில் பார்த்தவனை பார்த்து,

“ஹ்ம்ம்.... அவ தான்... தீ மாதிரி எந்த ஒரு விஷயத்தையும் நம்ம ஏரியாவுக்கே டமாரம் அடிப்பாளே ... அந்த பொண்ணு இருக்காளே. . .”

ஒன்றும் பேசாமல் அமைதியாக இருந்தவனை பார்த்து,

“டேய் என்னன்னு கேளேண்டா . . .!”

“கேட்கலானாலும் அம்மையார் விட்ற போறாங்களாக்கும்..?!” என்று மனதினுள் நினைத்தவன் வெளியே..

“சரி. சொல்லு அவளுக்கு இப்போ என்ன. . .?”

“என்ன ஆசுவாசமா கேட்கிறான்... கொஞ்சம் கூட பொறுப்புங்கிறதே இல்லை...” மனதினுள் நொந்து கொண்டவள் அவனை பார்த்தும் பார்க்காததுமாய் ஒரு பார்வை பார்த்த படி சொன்னாள்

“வர வர... அவளோட போக்கே சரி இல்லை பார்த்துக்கோ. தீக்கோழி இப்போல்லாம் தண்ணீகோழியாட்டம் நடந்துக்கிறா. .?!”

“புரியிற மாதிரி நீ பேசவே மாட்டியா..?!”

“கொஞ்சம் ஃப்பயர். . ரு. . ரூ....
கொஞ்சம் வாட்ட..ரு.. . . .
ரெண்டும் ஒன்றாக சேர்ந்தால் . . .”

பாடி விட்டு புருவம் அசைத்து “என்ன புரிந்ததா?” என்று கேட்டாள்...

தலையில் அடித்து கொண்டான் அவன்.

“சரி விடு.. இப்போ இதை கேளு. . .”

“நீரும் நெருப்பும் கொள்ளை கொண்டால் . . .
ஹ்ம்ம் ஹ்ம்ம் . . .
ம்ம்ம்ம்ம் . . . ம்ம்ம்ம்ம். . . .

கொள்ளை கொண்டால்..
காதல் என்று அர்த்தம் அர்த்தம் . .” என்று உச்ச ஸ்துதியில் கத்தினாள்.

“ஷ் ஷ் ... கத்தாதே எருமை... முதல என்ன விஷயம்ன்னு தெளிவா சொல்லு...” என்று பட்டென சொன்னான்.


“நம்ம தீக்கோழி இருக்காளே.. அவ அவ அவ. .. .” என்று இழுத்தவள் அவன் முகம் போன போக்கை பார்த்தவள்..

“அவ உன்ன லவ் பன்றாளாம்...” என பட்டென காதல் மண்பானையை உடைத்து விட்டாள்.

அவன் முகம் எரிமலையிலிருந்து வெளிவரும் லவா குழம்பை ஒத்து சிவந்து போனது. . கோவத்தால் . .

“ஏய்.. என்ன சொன்ன..” என்று பாய்ந்து விட்டான்..

ஒரு நொடி ஆரு நடுங்கி தான் போனாள். இவன் இத்தனை கோவ படுவானா. . ?!

“காதலென்று வந்துவிட்டால்
கோபமும் ரோஷமும்
பொத்து கொண்டு வருமோ. .?!
இரண்டும் ரெட்டை பிறவிகளா என்ன . . ?!”


“ஷிட்....” என்று தலையை குலுக்கி தன்னை ஆசுவாச படுத்தியவன்..

“லுக் ஆராதனா... என் மனசுல என்ன இருக்குதுன்னு
உனக்கு கண்டிப்பா நான் சொல்லாட்டியும் தெரிஞ்சிருக்கும். அப்படி இருந்தும் நீ இன்னொருத்தி சொன்னான்னு என்ட வந்து சொல்லுற...”

“என்னை பொறுத்த வரை யாரை இந்நாள் வரை மனசுல நினைச்சிட்டு இருக்கிறேனோ அவ தான் என் பொண்டாட்டி.. உன் மர மண்டையில புரிஞ்சிதா. . ஒழுங்கு மரியாதையா.. அந்த பொண்ணுகிட்ட தெளிவா சொல்லிடு...”
“இந்த காதலுக்கு தூது போறதை இத்தோட நிறுத்திடி..!” விரல் நீட்டி எச்சரித்தான்.

பூம் பூம்.. மாடாய் தலையை ஆட்டிக் கொண்டாள் பெண்ணவள்.

“போ. உள்ளே போ. உன் வீடு வந்தாச்சி . .” என்று சொல்லிவிட்டு விறுவிறுவென நடந்து விட்டான்.

இப்போ நான் என்னத்த சொல்லிட்டேன்னு இவன் இப்படி கோவிச்சிகிறான் . .

“வேற ஒரு பொண்ணு இவனை காதலிக்கிறான்னு சொன்னதையே இவனால் ஏத்துக்க முடியல. . ஹ்ம்ம். . . ! பிள்ளைக்கு அந்த அளவு லவ்ஸ் முத்தி போச்சி போல. . . . நடக்கட்டும் நடக்கட்டும். . .”


“காதல் என்றால்
புத்தன் கூட யுத்தம் செய்வானோ...?”


வீட்டினுள் வந்த ஆரு ஹாலிற்கு சென்றடைகையில் .. அ..ப்..ப..டி..யே. . ஷாக் அடித்தது போல் நின்று விட்டாள்..

இவள் எங்கே இங்கே...? அதுவும் இந்நேரத்தில்..?! ஒரு வேளை. . . ஒரு வேளை. . நான் நேற்று புண்ணிய கூத்தை கண்டு பிடித்து விட்டாளோ. . . ?!?!

அங்கே ஆருவின் செல்ல எதிரி வதனா அழகு பதுமையாக கொஞ்சம் புதுமை கலந்து.. அதாவது ஒரு காலை டீப்பாயின் மீதும் மறு காலை தரையில் மடக்கியபடியும்.. செர்ரி இதழ்களில் ஒன்று திறந்த படியும்... அதிலிருந்து தேன் ரசம் வடிந்தும் வடியாமலும்...மெய் மறந்து துயில் கொண்டிருந்தாள் . . . அந்த அழகு பேதை..!

குறுக்கும் நெடுக்குமாய் ஒரு முறை நடந்தவள் வீட்டை தன் முட்டை கண்ணால் ஆராய்ந்தாள்.. “ஹ்ம்ம்.... எல்லாம் சரி தான். இவா வேற என்னவோ பண்ணிருக்கா ..? அது என்னவா இருக்கும்?”

தலையை தட்டி யோசித்தவள் விறு விறுவென மாடி ஏறி தன் அறை கதவை திறந்தாள்.

“இவள் கண்டிப்பாக எனக்கு ஏதாவது ஆப்பு ரெடி பண்ணிக்கியிருக்கணுமே... இல்லாட்டி இவள் ஆருவோட அக்கா இல்லையே. . .? என்ன பண்ணியிருப்பா..?!” என்று புலம்பிய படியே.. அவள் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருளாய் சோதித்து எல்லாம் சரியாக இருக்கிறதா ? என்று உறுதி செய்து கொண்டாள்.

“அது எப்படி? எல்லாம் அது அது இடத்துல பக்காவா எந்தவித சேதாரமும் இல்லாமல் இருக்கிறது. . ?!”

“ஒரு வேளை. . .!!” என்று பதறியவள் நேராக குளியறைக்கு ஓடினாள். ஷாம்பு,பிரஷ் ,பேஸ்ட்,சோப்பு, எல்லாம் கச்சிதமாக இருந்தது.

யோசனையுடன் வெளியே வந்தவள் கண்ணில் சிரித்தது பெட்.

இந்த பெட்சீட் யாரு மாத்தினது . . இது சைடுல கிழிஞ்சி போய் இருந்தே... அதை யாரு இப்படி போட்டா . . . என்ற யோசனையோடே

என கிழிசல் எங்கே இருக்கிறது என தேட ஒரு இழு இழுத்தாள். அப்படியே பெட்சீட் தண்ணீரில் மூழ்கி பல்லிலித்தது. “சரி தான். . இது தான் எனக்கான பனிஸ்மெண்டா. . . அட லூசு அக்கா. . . உனக்கு வேற நல்ல ஐடியாவே கிடைக்கலையா. . ?!”

“ஹா ஹா ஹா...” வாய் விட்டு சிரித்தவள். . “சரியான வெத்து வேட்டுடி நீ . .” என்று கூறிய படியே… நொடி பொழுதில் எல்லாவற்றையும் சரி செய்து ஒழுங்கு படுத்தினாள் .


பின் மெதுவாக பூனை நடை போட்டு ஹாலிற்கு வந்தவள்.. அன்ன நடையிட்டு சென்றாள் வந்தனாவை நோக்கி...

“ஹம்ம்ம்ம்ம்...?!”

“எனக்கே தண்டனையா..? இவளுக்கு ஏதாவது ரீட்டன் கிப்ட் கொடுக்கணுமே..”

தாடை தடவி யோசித்தவள் கண்ணில் அந்த மேசையின் மீது இருந்த பொருள் பட்டது. என்னை கொஞ்சம் தொடேன்.. என்று ஆசையாக பார்த்ததோ. .?! சரி போகட்டும் என்றெண்ணி அதன் மேனியை வருடி கொடுத்தாள் அவள்.

“இனி எப்பவுமே எனக்கு எதிரா தூசு கூட தட்ட கூடாது...புரிஞ்சுதா மிஸ்.வதனா தேவேந்திரன்!” என்று சூளுரைத்தவள். . .பின் மென்மையாக வதனாவின் அழகு முகத்தை வருடினாள்.
______________________________




“எங்கண்ணா. . . .?! இவ்வளவு சீக்கிரமா கிளம்பிட்ட. . ?” என்றபடி வந்தாள் கீதா.

“நம்ம தினேஷ் தம்பி ராஜேஷ் இருக்கிறாம்ல.. அவனுக்கு புதுசா ஒரு வேலை கிடைச்சிருக்கு. கூடிய சீக்கிரமே அவன் நல்ல நிலைக்கு வர சான்ஸ் இருக்கு. அதை கொண்டாட நம்ம போக்கிரில ஸ்வீட்ஸ் கேட்டிருந்தாங்க. . . அவுங்க அம்மா. சோ வீட்டுக்கு வந்து கொடுக்கிறேன்னு சொல்லியிருந்தேன். அதான் சீக்கிரம் கிளம்பிட்டேன். சரி மா. பாய் . . .”

நகர்ந்து விட்டான் அண்ணன், தன் செல்ல தங்கையின் மனதில் பல கோடி மலர்களால் அபிஷேகம் செய்தது தெரியாமல்.


_________________________________





எப்படி தான் இத்தனை விரைவாய் நாட்கள் நகர்ந்ததோ அவனுக்கு. ரவி வர்ம குலோத்துங்கன் இந்தியா வந்து 14 நாட்கள் கடந்து விட்டதை எண்ணி பார்க்கையில் மலைப்பாக இருந்தது..

நாளை யூ எஸ் கிளம்ப வேண்டும் அதற்கு முன் பாட்டிக்கு கண்டிப்பாக ஏதாவது ஒரு நல்ல கிப்ட் வாங்க வேண்டும் என்று நினைத்தவன் நேராக அந்த மாலிற்கு சென்றான்.


ஒவ்வொரு கடையாக சென்று பார்த்தவனுக்கு எதிலும் திருப்தி இல்லை.. மாமா அத்தை , அத்தை பெத்த ரத்தினங்கள் நண்பர்கள் அனைவருக்கும் பரிசை வாங்கி விட்டான். ஆனால் தன் ஆசை பாட்டிக்கு ஒன்றும் அழகாய் மனதிற்கு சாந்தமாய் அமைய வில்லை. . .

சிறு எரிச்சலுடன் அடுத்த கடைக்கு சென்றான். ஏசி காற்று அவன் ஸ்பரிசத்தை தீண்டி சென்றது. இதமான ஏசி அவனை குளிர்விக்க முயன்றும் முடியாமல் போக சோகத்துடன் முகம் கவிழ்த்து கொண்டதோ. . .?!

வாழ்த்து அட்டை,அலங்கார பொம்மை, பூக்கள் அது இது என எல்லாம் கண்ணில் பட்டு காதல் மொழி பேசிட அழைத்தது . ஆனால் அந்த சடை முடி தரித்த முனிவன் அலட்சியத்துடன் அனைத்தையும் தட்டி விட்டான். அய்யோ பாவம் . நொடிக்குள் பூத்து வாடிய காதலால் அவை கலங்கி போனதோ..?!


அவன் வல பக்கத்தில் இருந்த ஷெல்ப்பில். . அம்சமாய் தோன்றிய. . அந்த கண்ணன் மையல் கொண்டு ராதையை பார்த்த படி இருந்த சிற்பம் கொள்ளை கொண்டது அவனை.

கைகள் தாமாக சிற்பத்தை தடவி கொடுத்தது. . !


பரிசு பொருள்கள் எல்லாம் வாங்கி முடித்து அவன் கிளம்ப தயாராகையில் . . அவன் வல பக்கத்திலிருந்து ஒரு குரல் கேட்டது.

“ஹேய் . . வர்மா....?! எப்படிடா இருக்க? பார்த்து எவ்ளோ நாளாச்சு ...” என்று சிரித்த படி வந்தவனை ஒரு நொடி யோசித்த புருவம் சட்டென அடையாளம் கண்டு கொண்டது.

“டேய்! மாதேஷ் நீயாடா ?! . . எப்படிடா இருக்க ? ஐ ம் குட் டா. . . ”என்று மகிழ்ச்சியில் தன் கல்லுரி தோழனை அணைத்து கொண்டான் ரவி வர்மாவும்.


தங்கள் கல்லூரி நாள்களையும் மற்ற நண்பர்களையும் பற்றி பேசியதில் நேரம் சென்றதே அவர்களுக்கு தெரியவில்லை..

கடைசியில் கிளம்புகையில். . “டேய் நாளைக்கு தான கிளம்புற வாயேன் வீட்டுக்கு..” அழைப்பு விடுத்தான் தோழன்.

“ஹ்ம்ம்...வரணும்ம்ன்னு தான் நினைக்கிறேன். பார்ப்போம். வேற ஒர்க் ஏதும் இல்லைனா சொல்றேன்” என்றான் ரவி வர்மா.

“அட.. ஏன்டா பிகு பண்ற. . ? அம்மா அப்பாவை எல்லாம் நீ பார்த்து எவ்ளோ நாள் ஆச்சி. நீ வீட்டுக்கு வந்தா அம்மா ரொம்ப சந்தோஷ படுவாங்க . . அலுத்துக்காத. . . உனக்கும் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆனது போல இருக்கும். .”

“சோ கண்டிப்பா நீ வர. . .!”என்று சொன்னான் தோழன். .


“ஹ்ம்ம்... இவ்ளோ சொன்ன அப்புறம் நான் வராம இருப்பேனா. .? இல்ல நீ தான் சும்மா விட்ருவீயா . ..?! கை கால் எல்லாம் கட்டி தூக்கிட்டு போனாலும் போய்டுவா போல ?!” என்று பயந்தது போல நடித்தவன் கல கலவென சிரித்தான் ரவி வர்மா.
___________________________________



“அ ம் ம் ம் மா மா. . . . . . . . !”

பெண்ணவள் கத்திய கத்தலில் அந்த ஏரியாவே ஒரு நொடி அதிர்ந்தது என்றாள் மிகையில்லை.

ஆக்ரோஷத்துடன் மாடியிலிருந்து இறங்கி வந்தாள் வெள்ளச்சி என்னும் வதனா. இல்லை இப்போது காளி.. பத்திரகாளியாய்..!

சமையல் அறையிலிருந்து வந்த அன்னை கீர்த்தனா இவளை பார்த்ததும் அப்படியே உறைந்து போனாரோ..? இல்லை வந்த சிரிப்பை அடக்க வாய் பொத்தி கொண்டாரோ. .?! அவருக்கு தான் வெளிச்சம்.

“என்னம்மா. . ?! என்ன ஆச்சு ! ஏன் வது குட்டி இப்படி கத்துற. . ?! என்னடி இது முகமெல்லாம் இப்படி இருக்கு?” என்றபடி வந்தார் அப்பா தேவேந்திரன்.

முதுகு காட்டியபடி நின்ற வதானாவின் பின் புறம் நின்றிருந்த தகப்பனுக்கு ஒன்றும் விளங்கவில்லை.

அங்கே எதிரே கீர்த்தனா வாயை பொத்தியப் படி இருந்தது தான் பட்டது. . .

“கீர்த்தனா. . .! என்ன ஆச்சு..? நீ ஏன் இப்படி நிக்குற....?” என்றார் அவர்.

“நீங்களே இங்க வந்து பாருங்க. உங்க பொண்ணு பண்ணி வச்சியிருக்கிற கூத்தை...”

பார்த்த அவருக்கு பொங்கி வந்த சிரிப்பை அடக்க முடியாமல் குலுங்கி குலுங்கி சிரித்தார்.. அதிகமாய் சிரித்ததில் ஆனந்த கண்ணீர் வேறு வந்து அந்த தோற்றத்தை மறைத்தது.

இப்போது கீர்த்தனாவும் வாய் விட்டு சிரித்தார்.

காண்டாகி விட்டாள் வதனா..!!!

“அப்பா...” என்று அலறினாள்.

மீண்டும் மீண்டும் பொங்கி வந்த சிரிப்பை அடக்கியபடி

“ஷ் ஷ் ஷ் . . ஹப்பா . . முடியல மா...
என்னம்மா இது கோலம்... நாடக கம்பெனிக்கு வேஷம் ஏதும் போடுறீயா. . .?!” சிரிப்பின் ஊடே கேட்டார்.


“எல்லாம் உங்க செல்ல மக …அதான் அந்த ஆராதனா வேலையா தான் இருக்கும். அக்கா தங்கை ரெண்டு பேருக்கும் இதே வேலையா போச்சி..!” என்று குறை பாடினார் அம்மா.

“அம்மா நான் எதுவும் பண்ணல. அவ தான் முதல என் ஆபீஸ் பேப்பர்ஸ் எல்லாம் திருடுனது.”

“முதல அவளை கூப்பிடுங்கம்மா. . . இந்த முகத்தை வச்சிக்கிட்டு நான் எப்படிம்மா ஆபீஸ் போவேன்..?!” அழுத படி..கொஞ்சம் நடித்த படி கேட்டாள் பெண்.


“ஆராதனா. . அம்மாடி ஆராதனா. .”


அன்னையின் குரலில் ஆழ்ந்த நித்திரையிலிருந்த ஆராதனா சட்டென படுக்கையிலிருந்து எழுந்தாள். முதலில் ஒன்றுமே விளங்கவில்லை. மீண்டும் அன்னையின் குரல் கேட்கவும் அடித்து பிடித்து எழுந்து கீழ் இறங்கினாள்.


“என்னமா எதுக்கு இப்படி கத்துறீங்க. . .?!” என்று கொட்டாவி விட்ட படி டைனிங் டேபிள் அருகிலிருந்த சேரில் சம்மளம் போட்டபடி ஆசுவாசமாக அமர்ந்தாள்.


தீக்கு எண்ணெய் .. இல்லை இல்லை பெட்ரோல் ஊற்றியது போல இருந்தது அவளது செய்கை.


வதனாவிற்கு பொங்கி வந்த ஆத்திரத்தில், அவளை நோக்கி நடந்தவள் , தன் அழகிய நீள்வட்ட முகத்தை வெண்டை பிஞ்சு போன்ற தன் ஆட்காட்டி விரலால் சுட்டிக்காட்டி ..

“இது என்னது..? என்னதுன். .ன். .ன். .னு கேட்கிறேன். ஹாங்..?!”

“என்னது என்னதுன்னு என்னைய கேட்டா. . . அதான் உனக்கே தெரியுதுல.. நான் தான் செஞ்சேன்னு பின்ன என்ன. . .?”

“ஆராதனா...” கண்டிப்பாய் அழைத்தார் தந்தை.

“அப்படி என்னப்பா நான் செஞ்சேன்.. ஜஸ்ட் ஒரு பெரிய அய்யனார் மீசை.. அதுக்கு மேட்ச்சா ரெண்டே ரெண்டு கொஞ்சம் கோரம பல், அப்புறம் நெற்றியிலே வெற்றி திலகம் தானேப்பா வச்சி விட்ருக்கேன். கண்ணு ரெண்டும் மான் போல இருந்தா அதான் வால் மட்டும் குறையுதேன்னு அதையும் போட்டு விட்டேன்... இது ஒரு குத்தமா...?!”

அவள் வர்ணித்து கேட்ட தினுசில் பெரியவர்களுக்கு சிரிப்பு தான் வந்தது. ஆனாலும் கொஞ்சம் அடக்கி கொண்டனர். பின் வதனாவிடம் யார் வாங்கி கட்டி கொள்வது.

“பின்ன குத்தமில்லையா..? எத்தனை வாட்டி கழுவியும் அழியமாட்டுக்குதுடி... முகமெல்லாம் சிவந்து போனது தான் மிச்சம்...!” புலம்பினாள் சகோதரி...

“வேய் பீலிங் டார்லிங்.. கம்மு .”

அருகே இருந்த தேங்காய் எண்ணெய் பாட்டில்லை எடுத்து வதனாவின் கையில் கொடுத்தவள்..

“பெற்றுக் கொள் மகளே. . .
சிவந்த முகம் மீண்டும் வெள்ளையாய் மாற கடவது.
நீ இன்றும் என்றும் வெள்ளச்சி என்றே அழைக்கப்படுவாயாக. . !!!”

என்று ஆசி வழங்குவது போல பாவனை செய்தவள் பின் அவளை பார்த்து. .


“எப்பேர்பட்ட மை..னாலும் சட்டென அழிந்து விடும். பயன்படுத்தி நீடுழி வாழ்வாயாக.!”

என்று கூறி பாவ விமோச்சனம் கொடுத்தவள் அம்மாவின் புறம் திரும்பி…
“அம்மா எனக்கு.. சூ..டா.. ஆவி பறக்க.. அந்த டிஷை எடுத்து வாங்க பார்ப்போம்...!”

“எந்த டிஷ்டி சொல்ற...?”

“சொல்றேன் கேளுங்க.. காலங்காத்தால என் தூக்கத்தை கெடுத்ததுனால நான் நேரடையா சொல்லமாட்டேன். ஆனா சொல்லுவேன், நீங்க கண்டுபிடிச்சி செஞ்சு தரணும். சரியா? என்று டீல் பேசியவள் .. அப்பா. இதுக்கு நீங்க தான் சாட்சி!” என்று அப்பாவையும் துணைக்கு அழைத்து கொண்டாள்.


“சொல்றேன் கேட்டுக்கோங்க. . .” என்றபடி ..

“தாகத்தை தணிக்கும் இதை....” என்று முழு விவரத்தையும் புதிராய் புனைந்தாள் அந்த புதிர்க்காரி.


“என்னம்மா இது. . ??!”

என்றபடி யோசித்தார் அப்பா.

முகத்தை துடைத்தபடி வந்த வதனாவும் “அப்படி என்னதுடி அது...” என்று கேட்டப்படி யோசிக்கலானாள். இப்போது அவள் முகம் கொஞ்சம் பரவாயில்லை .

“ச் ச் ச்சு .... இது தானா....?! இதோ ஐந்து நிமிஷத்துல ரெடி !!”என்றாள் அன்னை.

தன் முன் சுட சுட ஆவி பறக்க அம்மா நீட்டியதை கண்டதும் வாயடைத்து போயினர் மூவரும். அது அது “லெமன் டீ .!”

புதிரை அவிழ்க்கும் முயற்சியில் வதனா கேட்டாள்.... “அம்மா காய்ந்த சருகு, மஞ்சள் மங்கை அப்படி இப்படின்னு.. இவா என்னன்னவோ சொன்னாளேம்மா... ?!”

“பொறுடி சொல்றேன்....”
என்றபடி அவரும் அருகிலிருந்த சேரில் சாய்வாக அமர்ந்தவர் பின் அவர்களை பார்த்து…
“தாகத்தை தணிப்பது எது..?

தண்ணீர். சரியா..

சூரியன், சூரிய குளியல்ன்னா . .. .
கேஸ் அடுப்பும், சூடும் தான். ..

அப்புறம் பக்குவமா காய்ந்த சருகு..
அப்படி தானே ஆரு..” என வினவினாள் அன்னை. .
“ஆம்” என்பது போல தலையை ஆட்டினாள் அவள்.

“காய்ந்த சருகுன்னா தேயிலை இலை பொடி . . அதை கொதிக்கிற தண்ணீரிலே சரியான அளவுல சேர்த்து...

உடனே கேஸ் ஆப் பண்ணி கொஞ்சம் சூடு ஆற வச்சி. . .அதை தான் குளிர வச்சின்னு இவா சொல்லியிருக்கா..

அப்புறம் மஞ்சள் மங்கைன்னா. .
எலுமிச்சம் பழம். அதை கொஞ்சம் பிழிஞ்சு கலக்கி சுவைத்தா அது ஒரு சுவை. . கூடவே தித்திப்பிற்கு தேன் அல்லது சர்க்கரை சேர்த்தா அது வேறு சுவை ...போதுமா உங்களுக்கு விளக்கம்!” என்றதும் தான் தாமதம்.

“ஹைய்யோ.. இது தானா?!” என்ற வியப்பில் வீடே சிரித்தது...

_______________________



“ராதை மனதில் . . . ராதை மனதில். . .
என்ன ரகசியமோ. .
ராதை மனதில். . ராதை மனதில். . .
என்ன ரகசியமோ. . .
கண்கள் ரெண்டும் தந்தியடிக்க. . .
கண்ணா வா கண்டுப்பிடிக்க. ..”


மேடையில் நடன தேவதையாய் ஆடி கொண்டிருந்தாள் ஆராதனா . கைகள் இரண்டும் வளைந்து வளைந்து ஆடிய படி. . . கண்கள் இரண்டும் அந்த கண்ணனை தேடி கொண்டிருக்க... அந்த மாய கண்ணன் இவள் கண்ணில் அகப்படாமல் ஓடி கொண்டிருந்தான். . ?!..!

"அவள் குறை உயிர் கறையும்முன். . .
உடல் மண்ணில் சரியும்முன். .
கண்ணா கண்ணா வா வா. .
கண்ணீரில் உயிர் துடிக்க. .
கண்ணா வா உயிர் கொடுக்க.."



என்று உருகி உருகி ஆடிய படியே . . . அவள் கண்கள் கூட்டத்தில் துழாவியது . யாரையோ பார்த்ததும் ஒரு வித பட படப்பும்.. இது அவன் தானா. . . ? என்ற ஓர் ஆவல் வேறு தொற்றி கொண்டது..

பாட்டு முடிந்து ஆடல் நிற்கவும்...மீண்டும் ஒரு முறை கூட்டத்தில் அவனை தேடியது கண்கள். ஆனால் அம்மாயக்கண்ணன் தான் ஓடி விட்டானே ..

பலத்த கரகோஷம் அவளை நிஜ உலகத்திற்கு மீட்டு வந்தது... “ச் ச் ச்சு . . இது வெறும் பிரம்மையாக தான் இருக்கும்” என்று தலையை உலுக்கியவள்... நேரே உடை மாற்றும் அறைக்கு செல்லலானாள்.

அந்த நீண்ட ஹாலில் மற்றவர்கள் விழாவிற்கு தயாராகி கொண்டிருந்தனர். அந்த ஏரியாவில் ஆண்டுக்கு ஒரு முறை நடத்தும் கலை நிகழ்ச்சி விழாவிற்காக.

அப்போது. . இவள் எதிர்பாராத விதமாக. . யாரோ இவள் கையை பிடித்து முரட்டுத்தனமாக இழுத்து ஒரு இருட்டிய அறைக்குள் தள்ளி கதவை தாழிட்டது . தீடிரென நடந்த இந்த தாக்குதலில் பெண்ணவள் உறைந்து போனாள்.

“என்ன நடக்கிறது இங்கே...? இது என்ன விளையாட்டு..? யாராக இருக்கும்..?” நொடிக்குள் கேள்விகள் பல முளைத்தது...

அந்த உருவம் இப்போது நகர்ந்து இவள் புறம் வருகிறதோ. . ?!

தொண்டைக்குழியில் எச்சில் விழுங்குவது கூட பெரும் சுமையாக இருந்தது பேதைக்கு... உடலெங்கும் வியர்வையில் குப்பென நனைந்து உடலில் ஒருவித பதட்டம் உண்டானது.

அருகே வந்தவன் குனிந்து இவள் முகம் பார்த்தான்.

முகம் திருப்பினாள் பெண். குடித்திருப்பான் போலும். குமட்டியது.

“ச். .சி. . சி. . சீ. .! யாராடா நீ..பொறுக்கி ராஸ்கல்... எவ்வளவு தைரியம் இருந்தால் என் மேலயே கை வைக்க பார்ப்ப..?! ஒழுங்கு மரியாதையா கதவை திற... இல்லை உன் சாவு என் கையில தான். . .”

உள்ளுக்குள் அத்தனை பதட்டம் இருந்த போதிலும் பெண்ணவள் தைரியமாகவே பேசினாள்.

அந்த உருவம் இப்போது இடி இடியென சிரித்தது.

பெண்ணவள் நடுநடுங்கி போனாள்.

“ஹைய்யோ . . கிருஷ்ணா. . என்ன இது விளையாட்டு..?” தானாக அரற்றியது மனம்.

“டேய்.. நீ யாரடா...?!”

மீண்டும் சிங்கமென கர்ஜித்தாள் அந்த சிங்கப்பெண் . .

“ஏய்...!” என்றபடி அவன் இப்போது ஆக் ரோசமாக பாய்ந்தான்.

அவன் கையை இப்போது இவள் பற்கள் பதம் பார்த்தது..

இருட்டில் தட்டு தடுமாறி ஓடியவள் கதவை திறக்க முற்பட்டாள். அய்யோ.. பாவம்..! அந்த தாழ்ப்பாளும் இவளை நேரங்கெட்ட நேரத்தில் சோதித்தது. . திறக்க முடியாமல் போகவே.. கதவை பலங்கொண்ட வரைக்கும் தட்டினாள்..

“ஹைய்யோ. . ! யாராவது வாங்களேன். . ! காப்பாத்துங்க. . ! காப்பாத்துங்க. . . !”

கத்தியபடி மீண்டும் மீண்டும் குரல் நடுங்க நடுங்க கத்தினாள் .

அதற்குள் பின்னிருந்து அவன் இவள் வாயை பொத்தினான்.

இவள் வலது கையை பின்புறமாக மடக்கி அவள் வாயை அழுந்த மூடினான்...


பெண்ணவள் பயந்து போனாள். . .

“இப்போது என்ன செய்வது. . .? எப்படி தப்பிப்பது. . எதாவது செய்ய வேண்டுமே. . .”

அந்த பயத்திலும் நடுக்கத்தில் புத்தி வேலை செய்ய மறுத்தது.. . கண்கள் வேறு சொருகுவது போல இருந்தது..


அங்கும் இங்கும் கையையும் உடலையும் ஆட்டி.. அவனிடம் இருந்து தப்ப முற்பட்டாள் .

“ஹ்ம்ம்.. இது வேலைக்கு ஆகாது..” என்றெண்ணியவள் சட்டென தன் பின்னந்தலை கொண்டு அவன் முகத்தில் தீடீர் தாக்குதல் நடத்தினாள்.

அவன் இதை எதிர்பார்க்கவில்லை போலும்.

“அம்மா!” என்றபடி அவன் மூக்கை பிடித்துக் கொண்டான்.

இது தான் சமயமென எண்ணியவள் அந்த ரூமில் கிடந்த பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தினாள் . .

பல அடிகளை பட்டப் பின்னும் அவன் வீழ்ந்த பாடில்லை.. பெண்ணவள் எத்தனை நேரம் தான் போராடுவாள்.

அவன் இப்பொழுது முழுதாக சுதாரித்துக் கொண்டான். அவளை பிடிக்க துரத்தினான். இவளும் அசராமல் ஓடினாள். ஒரு கட்டத்தில் அவன் இவள் கையை பிடித்திருந்தான். .

அவளால் இம்மியளவும் தப்பிக்க முடியவில்லை. அவன் பிடி இரும்பு பிடியாய் வலித்தது. . . உடலெல்லாம் இப்போது ரொம்ப. . வே. . . நடுங்கியது. . .

“போச்சி.. எல்லாம் போச்சி. . . நான் செத்தேன். . ஹைய்யோ . . . யா. .ர். . ரா. . வா. . து.. வாங்களேன். .” மயக்கம் வரும் போல இருந்தது. அரை மயக்கத்தில் அந்த பேதையின் இதழ்கள் தானாக உதிர்த்தன. . .

“கிருஷ்ணா. .

கிருஷ்ணா . . .”

குரல் அறையெங்கும் பட்டு சிதறியது.

இப்போது முற்றிலுமாக மயங்கிய நிலைக்கு இருந்தாள் . .

அப்போது. . அப்போது . . . .

சட்டென . . . அந்த அறை கதவு திறந்தது...

விழி திறந்து பார்க்க முற்பட்டாள் பெண்.

வானுலகத்து தேவன் போல உயரமாய் நின்றிருந்தான். தன்னை காக்க வந்த ரட்சகன் போல தெரிந்தான். கஷ்டப்பட்டு விழி திறந்து பார்க்க பிரயாத்தன பட்டாள் பேதை. . அந்தோ. . பரிதாபம். . விழிகள் இரண்டும் மையிருட்டாய் தெரிந்தது.


இவன் காக்க வந்தவனா. . இல்லை பெண்ணை சூறையாட வந்தவனா. . . !?!
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் கண்மணிஸ்....
அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன்.
படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதுவரை like and கமெண்ட் செய்த அனைவருக்கும் நன்றி.

அமைதி வாசகர்கள் மௌனம் கலைத்து ரெண்டு வார்த்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி..
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14562

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 7



யாரும் உடன்வராத
நேரத்திலும் சூழலிலும் . .
யாரோ போல
நம்முடனே ஒட்டிக் கொண்டிருக்கும்...
சுயநம்பிக்கை..!!!



ஓடி ஓடி களைத்து. . கடைசியில் அந்த புலிக்கு இரையாகும் மானை போல. . . தோய்ந்து சரிகையில் கதவு தானாக திறந்தது. இவளை ரட்சிக்க வந்தான் அந்த தேவதூதன். கண்ணை கசக்கி உருவத்தை தரிசிக்க முனைந்தாள். ஒன்றும் தெளிவாக புலப்படவில்லை. அப்போது. . . அப்போது. .

அந்த தேவதூதன் இவளை பார்த்தபடியே அழகாய் புன்னகைத்தான். மதிமயங்கி போனாள் பெண்ணவள். என்ன ஒரு கண் கொள்ளா காட்சி ...! வீட்டுக்கு போனதும் அம்மா அப்பாவிடம் சொல்ல வேண்டும். .

நினைத்தவள் சுற்றி முற்றி பார்த்தாள் . . ஒரே புகை மூட்டமாக இருந்தது...! இது என்ன இடம்.

நிமிர்ந்து பார்த்தாள்.

தேவேந்திரன் இப்போதும் சிரித்த முகமாகவே நின்றிருந்தான் .

“தேவா ! நான் எங்கே இருக்கிறேன்...? இது எந்த இடம்?”

“குழந்தாய்..! பயம் கொள்ளாதே..! உன்னை இங்கு யாரும் எதுவும் செய்ய இயலாது. ஆனால் இப்போது நீ எதற்காக இங்கே வந்தாய்....”

மொழி அறியா குழந்தை போல் முழித்தாள் பெண்.

இதமாக புன்னகைத்தான் தேவன்..

பின் ஆறுதலாய் இவளை பார்த்து..

“செல். உன் உலகத்திற்கே செல். நீ வரவேண்டிய நேரம் இதுவல்ல..." தோள் தொட்டு திருப்பினான் .

“நான் இப்போது எங்கே செல்ல..? வழி தெரியவில்லையே. . . ஒரே புகையாக அல்லவா இருக்கிறது.தெளிவாக பார்க்க த்ரீ-டி கண்ணாடி அல்லது கூகிள் மேப் எதுவும் இருக்கிறதா? தேவா. .”

குறும்பாய் புன்னகைத்த படியே தேவன் இவள் கையில் கூழாங்கற்கள் போல எதையோ ஒன்றை திணித்தான்.

“போய் விடு மகளே. . ! உனக்காக மகிழ்ச்சியான உலகம் காத்துக் கொண்டிருக்கிறது..” சொல்லி கொண்டிருக்கும் போதே தேவன் மறைந்து விட்டான்.

குனிந்து கைகளில் இருந்தவற்றை பார்த்தாள் பெண். “இந்த கற்கள் இப்போது எனக்கெதற்கு. . ?! வீட்டில் மீன் தொட்டி கூட இல்லையே.. இதை நான் எங்கே வைக்க. . . ?”

பெண்ணவள் எதையும் தெளிவாக உணரும் நிலையில் இல்லை. . .

எங்கேயோ. . யாரோ யாரையோ அழைத்தது போல இருந்தது. . ?!!?
“அம்மு. . . அம்மு. . . . அம்மு. . .”

“அது யாரு அம்மு. . ?!!!”

“இங்கே சின்ன குழந்தை ஏதும் இருக்கிறதா என்ன . . ?”

குரல் கேட்ட திசை நோக்கி நடந்தாள் பேதை.

“பேபி...வேக் அப் ..! கம் ஆன்.. பேபி.... கம் ஆன்...”

துடிப்பாய் கேட்டது ஒரு ஆணின் குரல். ஏனோ கண்களை திறக்க முடியவில்லை அவளால்.

“ஓ ! காட் ! பிளீஸ் ஹெல்ப் மீ. . .” குரல் ஏகத்துக்கும் கரகரத்தது .. .
எத்தனை ஆண்மை மிக்க குரல். . இந்த பதற்றத்திலும் நடுக்கத்திலும் கூட எவ்வளவு கம்பீரமாய் ஒலிக்கிறது. . ?! ரசித்துக் கொண்டாள்.

இப்போது.. நெஞ்சுக்குள் ஏதோ செய்தது.. சுவாசத்திற்க்காக நுரையீரல் தூக்கி வாரி போட்டது...
“ஓ..! நோ . . நோ. . டோன்ட் டூ இட். . பேபி. . பிளீஸ் . . பேபி. . நோ . .
நான் இருக்கிற வரைக்கும் உனக்கு எதுவும் ஆகாது. நோ.. ஒன்றும் ஆக விட மாட்டேன்....”

அழுகையுடனே குரல் கரகரத்து ஒலித்தது.

அவளால் தெளிவாக சிந்திக்க முடியவில்லை.. ஏதேதோ நினைவுகள் நெஞ்சில் முட்டி மோதியது...

இப்போது மூச்சு விடவே சிரமமாக இருந்தது.. அப்பொழுது யாரோ. . முகத்திற்கருகே நெருங்குவது போல இருந்தது.. அசைய முடியவில்லை பெண்ணால்.
யாருடைய மூச்சு காற்றோ.. தனக்குள் இறங்குவது போல இருந்தது.. தொண்டை குழியில் கொஞ்சம் கொஞ்சமாக அந்த மூச்சு காற்று சுகமாய் இம்சித்த படியே இறங்கி . . அவள் உடலெங்கும் மின்சாரத்தை பாய்ச்சியது.. பெண்ணவள் சிலிர்த்து போனாள் . . .

“அப்படியே வைத்து கொண்டிருந்தாள் தான் என்ன... பட்டும் படாமலும் .. ஏன் விட்டு விட்டு போகிறது . . இன்னும் கொஞ்சம் அப்படியே இருந்து விடேன். .” மனம் கெஞ்சியது.

“கம் ஆன்.. பேபி. . பிரித் . . கம் ஆன்..”

மீண்டும் குரல் பதறியது.

கண் முகம் காது எல்லாம் கூச்சமாய்… ஏதோ ஊர்வது போல ஒரு பிரம்மை உண்டானது பெண்ணுக்குள். இது யாருடைய கூந்தல். என் மீது ஏன் மோதுகிறது. . கூச்சமாய் வேறு இருக்கிறதே...!

“ஒரு வேளை தேவேந்திரனோ. . ?! மீண்டும் வந்து விட்டானோ..?!”

“ஹ்ம்ம்...” புருவம் சுருக்கினாள் .

அவளிடம் தெரிந்த சிறு அசைவினை அவ்வுருவம் பற்றிக் கொண்டதோ. . ?!

“யெஸ் . யெஸ் . . . பேபி பிரித் . . அவ்வ்ளோ தான். . இப்படி தான். . . நோ . . நோ. . டோன்ட் லாஸ் யுவர் ஹோப். . . எனக்காக.. பிளீஸ். . பேபி. .எனக்காக . .”

என்னன்னவோ செய்தான். அவள் உயிரை காப்பாற்ற அவன் உயிரை கையில் பிடித்தபடி பரிதவித்தான் .

“ஏன் இவ்வளவு நடுங்குகிறான். .?! இப்போது இங்கே யாருக்கு என்ன. .?! அந்த பதற்றத்திற்கு சொந்தக்காரி யாராக இருக்கும் . . ?!”

மீண்டும் மூச்சு முட்டுவது போல இருந்தது. ஆனால் இம்முறை வேறு விதமான அவஸ்தையில். .

யாரோ. . ஆண்மகனின் முரட்டு இதழ் தன் இதழை தீண்டுவது போல இருந்தது. காமமாக இல்லாமல். . காப்பது போல தான் உணர முடிந்தது. அந்த மீசையின் குத்தலும் , கன்னத்து தாடியின் சொர சொரப்பும் , முகத்திலே விழுந்த அந்த கேசமும்... அவனிடமிருந்து வந்த அந்த பிரத்யோக வாசமும் பெண்ணவளை கிறங்கடிக்க செய்ய போதுமானதாக இருந்தது.

“அம்முகத்தை ஒரு முறை பார்த்தால் என்ன. . ?” கஷ்டப்பட்டு முயற்சித்து கண் திறக்க முற்பட்டாள் . லேசாக உருவம் தெரிந்தது.

“தேங்க் காட்... உனக்கு ஒன்றுமில்லை... பேபி.. நான் ரொம்பவே பயந்துட்டேன்..”

என்று படப்படப்பாய் கூறி நெற்றியில் இதழ் பதித்தான். அந்த உஷ்ணம் அவளுள் ஏதோ செய்தது.

அவளுக்கு ஒன்றும் விளங்கவில்லை. அந்தரத்தில் மிதப்பது போல இருந்தது. பின் மெதுவாக எதிலோ கிடத்துவது போல தோன்றியது.

அவுருவத்தினை தெளிவாக பார்க்க முயன்றாள். . நிழலாய் தான் பிடிபட்டது. குரல் மட்டும் அவ்வளவு அன்பாய் இருந்தது... காலம் முழுதும் இப்படியே.. இந்த குரலுக்காகவே ... இந்த தவிப்பிற்காக. . . இப்படியே இருந்தால் என்ன. . .?

“நீ இப்படியே படுத்திரு. நான் உனக்கு குடிக்க ஏதாவது கொண்டு வருகிறேன். சரியா.. பயப்படாதே.. நான் எப்பவும் உன் கூட தான் இருப்பேன்.” என்றபடி கையை மெதுவாக வருடியது.

பின் “இங்கேயே இரு. இப்பவே வந்து விடுவேன். ஓ கே பேபி. . .”

என்றபடி அவன் கதவை சாத்தி விட்டு சென்றதை பெண்ணால் உணர முடிந்தது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------



மேகத்தை தொடும் எண்ணத்தில் ஆங்காங்கே உயர்ந்து கம்பீரமாய் காட்சியளித்த கட்டிடங்களில் இருந்து வந்த ஒளி பார்ப்பதற்கு வானிலிருந்த நட்சத்திரங்கள் எல்லாம் பூமியில் இறங்கி ஊர்வலம் போவது போல மின்னி மின்னி ஒலித்தது.

தூரத்து வானில் தெரிந்த அந்த சந்திரன் கூட தேவதையாய் தகதகத்தாள்.இரவு நேர குளிர் கொஞ்சம் கொஞ்சமாய் அதிகரித்து கொண்டிருந்தது. ஆனால் அவனோ எதையோ கூர்ந்து பார்த்தபடி சிந்தனை வயப்பட்டிருந்தான். அமெரிக்கா வந்து இன்றோடு முப்பது நாட்களை முழுதாய் முழுங்கி விட்டிருந்தது.

அவனது எண்ணங்கள் குழப்பத்திலே மிதந்து கொண்டிருந்தது. எப்படி தன் செயலை செயல்படுத்துவது ? ஒருவித தயக்கமாய் இருந்தது..

அப்போது கிங்கிணியாய் சிரித்தது தொலைபேசி.
எடுத்து காதில் வைத்தவன்..

“யெஸ் , ரவி வர்மா ஹியர் .” கம்பீரமாய் ஒலித்தது..

“எப்போ?” குரலிலே இப்போது பதற்றம்.

“நவ் ஹவ் இஸ் ஹி ?”

“ஓ கே . நான் வரேன்.”

“நோ நோ . . பாட்டிக்கு இப்போ சொல்ல வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.”

ஒரு முறை ஆழ்ந்த மூச்சை இழுத்து தன்னை நிலைப் படுத்தி கொண்டான்.
தான் இப்பொழுது செயலில் இறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டதை உணர்ந்தான். விரைவாக அமெரிக்காவில் தன் பிஸ்னஸ் சம்மந்தமான முடிவுகள் பொறுப்புகள் அனைத்தையும் மாமன்மார்களிடம் எடுத்துரைத்தான். மற்ற இதர வேலைகளையும் துரித வேகத்தில் முடித்தான்.

பாட்டி விஷயம் என்னவென்று கேட்ட பொழுதும் “இந்தியா போய் சொல்றேன்” என்று இறுகிய முகத்துடனே பதிலளித்தான்.

வந்தாயிற்று.. அவசர அவசரமாக... கிடைத்த பிளைட்டில் ஏறி இந்திய மண்ணில் காலடி எடுத்து வைத்தாயிற்று..

அந்த நவீன ரக ஆடி கார் சறுக்கி கொண்டு இவர்கள் அருகே வந்து நின்றது. பாட்டிக்காக கார் கதவை திறந்து விட்டான். ஆயிரம் கேள்விகள் இருந்தும் அவனிடம் ஒன்றும் பேசாமல் அமர்ந்து கொண்டார். கார் நேரே பிரபல மருத்துவமனையின் முன் நின்றது. பாட்டியின் புருவங்கள்... அதீதத்திற்கு முடிச்சிட்டன.

அவன் கைகள் ஸ்டியரிங் வீலை அழுந்த பற்றி கொண்டது...

“ஹ்ம்ம்.. இப்போவது சொல்றீயா..?!”

முதிர்ந்த குரல் கர்ஜித்தது.

“பாட்டி டி . .?” தயங்கினான் அவன்.

“ம்ம்ம்ம்ம்ம்....” கை நீட்டி தடுத்தவர். . .

“விஷயத்தை முதல சொல்லு....”

அப்பொழுதும் அவன் பேச லேசாக தடுமாறினான் .

“சொல்லு ராஜ சேகருக்கு என்ன ஆச்சு...?”

அவன் முகம் ஒரு நொடி வியந்து போனது. இவருக்கு எப்படி....? மேலே யோசித்தவனை அவர் குரல் தடை செய்தது.

“எப்படி இந்த கிழவிக்கு தெரியும்னு பார்க்கிறியா . . நான் உன் அப்பன்னுக்கே அம்மாடா...
நேரே விஷயத்துக்கு வா. உன் அப்பாவுக்கு என்ன ஆச்சு..? இவ்ளோ சீக்கிரமா பிஸ்னஸ் எல்லாம் கை மாத்தி விடற அளவுக்கு விஷயம் கொஞ்சம் சீரியஸ் தான்ன்னு எனக்கு புரியாமாய் இருக்கும்..?ஹ்ம்ம்... சொல்லு...?” தீர்க்கமாய் வந்தது குரல்.

ஹ்ம்ம்.. இனியும் விஷயத்தை மறைத்து பயனில்லை.. “வாங்க பாட்டி உள்ளே போயிட்டே பேசலாம் .”

டக் டக் . . . காலடி சத்தத்துடன் சேர்த்து அவனது குரலும் பேச தொடங்கியது.

“அப்பாக்கு மேஜர் அட்டாக்காம். . .” சொல்லிய படி பாட்டியின் முகம் பார்த்தான். அவர் நின்றது நின்றபடி அசையாமல் அப்படியே நின்றார்.

விரைந்து சென்று அவர் தோள்களை ஆதரவாய் தாங்கியவன் . .

“பயப்பட ஏதும் இல்லை பாட்டி. நொவ் ஹி இஸ் ஆல் ரைட் பாட்டி...”

கண்களை மூடி தியானித்து.. பின் மெதுவாக விழிகளை திறந்தவர் கண்கள் வைரமாய் மின்னியது ..

“பாட்டி . . . .”
என்றபடி அவரை இறுக்கி அணைத்துக் கொண்டான்.

“ஷ் ஷ் ... பாட்டி என்னது இது... தி கிரேட் அயர்ன் லேடி இப்படி மனசு தளர விடலாமா...?” தோள்களை ஆதரவாய் தாங்கியவன் அவர் கண் பார்த்து சொன்னான்.

“ஒன்னும் ஆகாது .. உங்க பையன் இப்போ ஷேப் தான் . நார்மல் வார்ட்ல தான் இருக்கிறாங்க . வாங்க நான் இருக்கேன்ல பாட்டி . ..” என்று தெம்பூட்டியவன் அவரது தளர்ந்த விரல்களை பற்றியபடி அறை நோக்கி சென்றான்.

சாய்வாக படுத்தப்படி இருந்த மகனை பார்த்ததும் விம்மி அழுதாள் அந்த வயதான தாய்.

“அம்மா எனக்கு ஒண்ணுமே இல்லை..
பிளீஸ் ம் ம் மா . . . அழாதீங்க.. . “

“என்னடா இது.. இப்படி பார்க்கவா நான் உயிரோட இருக்கேன்.? அய்யோ ஆண்டவா..!”

“அ. . ம். . மா..” ராஜசேகர்

“பா. . ட். .டி . . .” ரவி வர்மா

அழுதழுது ஓய்ந்தவர்.. பின் கண்களை துடைத்தப்படி . .

“இப்போ டாக்டர் என்ன சொல்றார் ?” தேம்பிய குரலில் கேட்டார்.

“டூ டேஸ் ல டிஸ் சார்ஜ் பண்ணிருவாங்களாம் . நல்லா ரெஸ்ட் எடுக்க சொல்லியிருக்காங்க .”

“ஹ்ம்ம்.. சரி.. அப்போ கொஞ்ச நாளைக்கு நான் பிஸ்னஸ பார்த்துக்கிறேன்.” சொன்னது பாட்டி.

அப்பாவும் மகனும் பதறினர்.

“என்னம்மா நீங்க.. வேண்டாம் உங்களுக்கு எதுக்கு கஷ்டம்.”

“யெஸ் கிரன்னி. நீங்க அப்பாவை பார்த்துக்கோங்க . நான் பிஸ்னஸ் பார்த்துகிறேன்.”

“இல்லை.என்னால பார்த்துக்க முடியும். தேவை இல்லாம உனக்கு எதுக்கு கஷ்டம்.” வீம்பாய் பேசினார் பாட்டி .

“பாட்டி நீங்க என்ன சொல்லுறீங்க.?! அப்பாவுக்கு இப்படி இருக்கும் போ ... வேண்டாம் பாட்டி .. நீங்களும் ரெஸ்ட் எடுங்க. அப்பாவுக்கு துணையா நீங்க இருங்க...?” புரிய வைக்க முனைந்தான் பேரன்.

“அதெல்லாம் முடியாது. நீ இப்போ சரின்னு சொல்லுவ . அப்புறம் அமெரிக்கான்னு பெட்டிய
தூக்கிறுவ .!” அழுத்துக் கொண்டார் பாட்டி.

“நோ பாட்டி. நான் முடிவு பண்ணிட்டு தான் வந்துருக்கிறேன் . இனி அமெரிக்காலாம் இல்லை.. எப்பவும் அப்பா பக்கத்துல இருக்கிற மாதிரி ஐடியாலா தான் இந்தியாவே வந்துருக்கிறேன் . சோ நீங்க ரெண்டு பேறும் ஒர்ரி பண்ணிக்காதீங்க ...”

“நீங்க ரொம்ப டயர்டா இருப்பீங்க. சாப்பிட உங்களுக்கு ஏதாவது வாங்கிட்டு வரேன்” என்றபடி அறையை விட்டு சென்றான் பேரன்.

கிழட்டு அயர்ன் லேடியும், நிறைத்த சிங்க இளைநனும் ஒரு சேர கண்ணடித்து... பின் பக்கென வாய் விட்டு சிரித்தனர்.

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வெண் பஞ்சு மேகங்கள் உடை மாற்ற காத்திருக்கும் அந்த தருணத்தை கண் கொட்டாமல் பார்த்து ரசித்த படி இருந்தாள் அந்த அழகு தேவதை ஆராதனா.

“ஆரு. . . ஆரு . . . ”

மூச்சிரைக்க அழைத்தப்படி . . மாடியேறி வந்தாள் அந்த வெண்ணிற ஏஞ்சல்.

“ஹ்ம்ம்.. சொல்லு.. என்ன அவசரம்? இப்படி ஓடி வர..” அவளையே பார்த்தபடி கேட்டாள்.

“பொறு பொறு . .” இழுத்து இழுத்து மூச்சு விட்டு தன்னை ஆசுவாச படுத்தி கொண்ட வதனா .. பின் கோபத்துடன்

“அந்த தீ கோழி ஓவரா ராம்ட்ட பழகுற பார்த்துக்கோ?! எனக்கு அது சுத்தமா பிடிக்கல. அந்த சனியன்ட்ட சொன்னா அப்படி தான் என் ராம்ட்ட பழகுவேன்! உனக்கு என்னன்னு கேக்குறா . . . ? எவ்ளோ திமிரு இருக்கனும் ! ! என் ராமாம் ராம்.!” மூஞ்சை சுழித்தப்படி குற்றப் பத்திரிக்கை நீட்டினாள் சகோதரி.

“அதுவும் சரி தான். அவ அவளோட ராம்ன்னு சொன்னா உனக்கு ஏன் பத்திக் கிட்டு வருது ..? அவள் அவன்கிட்ட பழகுன்னா உனக்கு என்ன வந்துச்சி..? அது ராமோட கவலை. நீ ஏன் இதுல தேவையே இல்லாம பீல் பண்ற . . . ?” குறும்பாய் மனதினுள் புன்னகைத்த படியே அழுத்தி கேட்டாள் பெண் .

இப்பொழுது அழுத்தி இவள் மண்டையில் புரிய வைக்கா விட்டாள் .. சாகுற வரைக்கும் ராம் பிரம்மசாரியா இருக்க வேண்டியது தான்...

தலை குனிந்த படி இருந்த தன் சகோதரியை பார்த்து ஆராதனா சில நொடி பேசாமல் இருந்தாள் .

“ஹ்ம்ம்... சொல்லு. இப்போ மட்டும் எதுக்கு அமைதியா நிக்குற.. கொஞ்ச முன்னாடி பட படவென பொரிந்த..?? இப்போ எங்க போச்சி அந்த வாய்..?!”

“ஹ்ம்ம்... நானும் ரொம்ப வருஷமாவே பார்த்துகிட்டு தான் இருக்கேன். நீ அந்த ராமை அவொய்ட் பண்றதும்.. அப்புறம் ரூமை சாத்திக்கிட்டு பூஜிக்கிறதும்.. என்னதுடி இது...?”

சட்டென புருவம் உயர்த்தி. . இவளுக்கு எப்படி தெரியும்? என்ற ரீதியில் பார்த்தாள் வதனா.

“ஏய் முழிக்காத..! எனக்கு எல்லாம் தெரியும். அவனோட போட்டோவை தலையணைக்கு கீழ வச்சி நீ பண்ணற ரொமான்ஸ் இருக்கே . . .
அ . . ப். .ப். . ப் . . ப . . ப் . . ப் . . பா . . . !”

நாணத்தால் சிவந்து போனாள் அவள்.

“அய். . . வெள்ளச்சிக்கு வெட்கத்தை பாறேன்...?!” வாரினாள் இளையவள்.

“ஷ் ஷ் . . . சும்மா இருடி. . .” தவித்தாள் மூத்தவள்.

“ம்ம்ம்... சொல்லு . ராமோட காதலை ஏத்துக்கிறதுல உனக்கு எது தடையா இருக்குது..?”

“அது. . அது . . . ஹ்ம்ம்..ச் ச் ... உனக்கு சொன்னா புரியுமான்னு தெரியல.. எனக்கு பயமா இருக்கு. என்னோட ஜாப்க்கும் அவனோட பீல்டுக்கும் ஒத்து வருமான்னு ரொம்ப குழப்பமா இருக்கு....”

“அச்ச.. இதுக்கு போயா . . ? நீ இவ்ளோ வருஷமா தயங்கிட்டே இருந்த... பேசாம ராம்ட்ட மனசு விட்டு பேசியிருக்க வேண்டாமா...?”

“என்ன என்னடி பண்ண சொல்லுற... அவன் என் பக்கத்துல வந்தாலே எனக்கு நடுக்கமா இருக்கு.. இதுல வேற அவன் சில சமயம் காதலை சொல்ல வரும் போ..ரொம்ப பயமா இருக்கும். நான் எதுவும் தெரியாதது மாதிரி கதையை மாற்றி விட்ருவேன்.”

“ஹா ஹா . . . என் அக்காவுக்கு
பயமா. . . ? அதுவும் ராமை பார்த்து.. அவன் எவ்ளோ சாப்ட் கரக்ட்டர் தெரியுமா...?!”
வாய் விட்டு சிரித்தவள் பின் அவளை ஒரு மார்க்கமாய் பார்த்து..

“இது தானா. . .
இது தானா. . .
எதிர்பார்த்த திருநாளும் இது தானா. . .”


“ஹா ஹா . . .” மகிழ்வாய் அணைத்து கொண்டாள் ஆரு தன் சகோதரியை. . காதலில் விழுந்த சகோதரியை. . . !


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
“ஹாய் டாட். . . . இப்போ எப்படி பீல் பண்றீங்க. . .?”

ஆபீஸிலிருந்து நேராக வீட்டிற்கு வந்தவன் அப்பாவின் அருகே அமர்ந்தவாறு கேட்டான் ரவி வர்மா.

“குட் . . !” என்ற படி புன்னகைத்தார் ராஜ சேகர்.

“இந்தாடா... டீ குடி.” என்ற படி பாட்டியும் சேர்ந்து கொண்டார்.

“ஹ்ம்ம்.. அப்புறம் சொல்லுப்பா.. பிஸினெஸ்ல்லாம் எப்படி போகுது. உனக்கு ஒன்னும் கஷ்டமில்லையே.?!”

“நோப்பா.. ஒரு பிரச்சனையும் இல்லை. என்னால நல்லாவே சமாளிக்க முடியுது. கண்டிப்பா இந்த மந்த் ப்ராபிட் ரெண்டு மடங்கு அதிகமா தான் இருக்கும்.!”

“நாம் புதுசா கட்ற ரெஸ்ட்டாரண்ட் ஒர்க் என்ன கண்டிஷன்ல இருக்குப்பா. . ?”

“அது கிட்ட தட்ட முடியிற சிட்டுவேஷன்ல தான் பாட்டி இருக்கு.”

“டேய் . . சீக்கிரம் அந்த சடை முடியை தூக்கி போடுடா. அசிங்கமா இருக்குடா..”

“ஹா ஹா ஹா .. கண்டிப்பா.. நீங்க சொல்லி நான் கேட்காம
இருப்பேனா. . ?
சரி பாட்டி நான் டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வந்திருதேன். .” மாடி ஏறினான் அவன்.

“இது என்னடா ஆச்சர்யம். . இவன் இப்படி ஆளே மாறிட்டான் . எது சொன்னாலும் நோ சொல்லவே மாட்டுக்கிறான். டேய் சேகர் உனக்கு ஏதும் தெரியுமா சங்கதி . . ?”

“இல்லைம்மா . . இன்னும் ஒன்னும் நடந்த மாதிரி இல்லை. இவன் தான் ஆபீஸே கதின்னு கிடக்கிறான்னே . . .? நாமலா பார்த்து ஏதும் மூவ் பண்ணா தான் உண்டு. .”

“ஹ்ம்ம். . . நம்ம ஆட்டத்தை ஆரம்பிச்சிடலாமா ?!”

“இது சரியா வருமாம்மா. . . ?”

“டேய்.. நீ ஏன்டா பயப்படற. . ? எல்லாம் ஆகும். நீ ஒழுங்கா நா சொல்றதை மட்டும செய். புரியுதா...?”

சிறியவர்கள் பார்க்காமலே கண்ணா மூச்சி ஆட. . . பெரியவர்கள் அழகாய் காய் நகர்த்துகிறர்கள். .

---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
ஆடி பறந்து வந்த காற்று அவள் அணிந்திருந்த இலகுவான உடையை பதம் பார்த்து கொண்டிருந்தது..அவள் கண்கள் அந்த நீல நிற கடலை பார்த்து கொண்டிருந்தது . மனதிற்கு இதமளிக்கும் இடங்களில் இதுவும் ஒன்று. எத்தனை முறை தான் ஓடி வந்து கரையை அலைகள் முத்தமிட்டு செல்கிறது. இதற்கு சலிக்கவே சலிக்காதோ.. ?!

இவள் இங்கே ரசித்த படி இருக்க. . . கொஞ்ச தூரம் தள்ளி அங்கே ராமும் வதனாவும் காதல் மொழி பேசி கொண்டிருந்தனர். ராமிற்கு கூட வெட்க பட தெரியும் என்பதை இப்பொழுது எல்லாம் ஆரு அடிக்கடி காண முடிந்தது.

அவர்கள் இருவரது காதல் சேட்டைகள் காண்கையில் இவளுக்கு சிரிப்பு தான் வரும். அத்தனை ரசனையாய் இருக்கும் இருவரது அந்நியோந்யமும்.

இத்தனை நாட்களாய் இவ்வளவு காதலை எங்கு தான் ஒளித்து வைத்திருந்தார்களோ . . ?! மனதிற்கு நிறைவாய் இருந்தது.

தனக்கும் இப்படி ஒரு வாழ்வு கிடைத்தால் எப்படி இருக்கும்.. மனம் தானக அந்த நிழல் உருவத்திடம் சென்றது. . .

“எங்கேயடா போன..? எப்போடா என்னை பார்க்க வருவ . .?”


அப்போது . . . மன்மதனும் தேவேந்திரனும் மேலிருந்து இவளது புலம்பலை கேட்டபடி தங்கள் சம்பாஷணையை தொடங்கினர்.

“என்ன மதன் இது..? இன்னும் காதல் லீலையை தொடங்காமல் இப்படி பிஞ்சு நெஞ்சங்களை பிரித்து வைத்திருக்கிறாயே. . .? இது உமக்கே தகுமோ..?”

“நான் என்னையா செய்யட்டும்?! வழிகளை உண்டாக்கினால் கூட, இவர்கள் எதிலும் நாட்டம் இல்லாமல் இருக்கிறார்களே..?!”

“அட.. போமய்யா. . . உனக்கு உன் ஸ்தீரிகளுடன் நேரம் செலவழிக்கவே சரியாய் இருக்கிறது என்று சொல்.”

வெகுண்டு விட்டார் மன்மதன். .

“அட நிறுத்தும்மய்யா . . . இப்பொழுது நீயே பார். என் மன்மத அம்பு எப்படி அதன் வேலையை சரியாக செய்கிறது என்று. .”

தன் முதுகிலிருந்த மலர் அம்பை எடுத்து குறி தவறாமல்... எறிந்தான் மங்கையவள் மீது. .

“ஹ்ம்ம்... இப்போது பாரும்ம்ம்மய்யா . . .”
“ஹா ஹா ஹா . .” கல கலவென சிரித்தார்.



மணலில் கோலம் போட்டு இருந்த பெண்ணவள் ஆராதனா மீது எங்கிருந்தோ வந்த பலூன் ஒன்று மோதியது. சட்டென அதை பிடித்தவள், யாருடைய பலூனாக இருக்கும் என்று சுற்றும் முற்றும் பார்த்தாள்..

அப்போது தூரத்தில் குழந்தை ஒன்று அழுதபடி இருந்தது.

“ஓ . . நீ இரும்மா.. நான் கொண்டு வந்து தரேன்..”

என்றபடி எழுந்து குழந்தையை நோக்கி ஒரு அடி தான் எடுத்து வைத்தாள். அதற்குள் எங்கிருந்தோ பலத்த காற்று அந்த பலூனை கடத்தி கொண்டு சென்றது. .

அதிர்ந்தவள். . சட்டென அதன் பின்னே மான் குட்டி போல ஓடினாள். .

அந்த பலூனோ சோம பானம் அருந்திய போதையில் இவளுக்கு ஆட்டம் காட்டியது. .

ஓரிடத்தில் நிற்பதும்.. பின் பறப்பதும்... பெண்ணவளுக்கு மூச்சு வாங்கியது.

இதோ.. பார்.. இப்போது உன்னை பிடிக்கிறேன். என்று கருவிய படி வெறி கொண்டு பாய்ந்தாள் .

பட்டென பலூன் மன்மதனிடம் அடைக்கலம் புக. . . இவளோ கால்தடுமாறி தொப்பென அந்த கரையோர இடிந்த சுவர் மீது மோத . . மோத இருந்தாள். . . பயந்து விட்டாள் பெண்.

அப்போது யாரோ பின்னிருந்து தன்னை அணைத்தார் போல இடையில் ஒரு கரம் கொண்டு தாங்கி பிடித்தார் போல இருந்தது.

உடலெல்லாம் ஒரு நொடிக்கு பல முறை சிலிர்த்து அடங்கியது. குனிந்து பார்த்தாள் அவன் கரம் . . வலுவானதாக திடகாத்திரமானதாக பட்டது.

எனக்கு என்ன ஆயிற்று..? ஏன் உடம்பெல்லாம் இப்படி தடுமாறுகிறது..

அந்த கரத்தின் அழுத்தம் கொஞ்சம் கூடியதோ. . ?

ஆனால் ஏன் ?

சட்டென அவளை அவனோடு அணைத்தது படி தூக்கி மணலில் நிலையாக கால் ஊன்ற வைத்தான்.

அவன் இதய துடிப்பு இப்போது அவள் செவியில் தெளிவாக கேட்டது. அத்தனை ஒட்டிய படியா நிற்கிறேன். இவன் யாராக இருக்கும். என்றெண்ணிய படியே தலை நிமிர்த்தி சாய்வாக பார்த்தாள் பெண்.

அவன் முகம்... . . ஏதோ செய்தது பெண்ணுக்குள்.

இந்த கண்கள் ஏன் இத்தனை காதலாய் பார்க்கிறது. . ?

சுவாச காற்று ஏன் என் மீது இப்படி உரிமையாய் வண்ணம் தீட்டுகிறது.?

அந்த இதழ்கள்.... ஏன் என் இதழோடு வாசம் செய்ய தவம் கிடந்தது போல ஏங்குகிறது...?

இதழுக்கும் இதழுக்கும் இடையே ஒரு விரல் நுழையும் அளவு இடைவெளி இருக்குமா. .. இல்லை அத்தனை நெருக்கமா. .. உரசுகிறதா.. இல்லை பதம் பார்க்க காத்திருக்கிறதா. . .

பின்னிருந்து யாரும் பார்த்தால் . . பார்ப்பதற்கு டைட்டானிக் படத்தில் ஜாக்கும் ரோஸ்ஸும் பறப்பது போல குதுகளித்து விட்டு காதலுக்கு பரிசாய் இதழ் முத்தம் ஒன்று பரிமாறுவார்களே அது போல தான் இருந்திருக்கும். .

அத்தனை நெருக்கம்.

இவன் பார்வை ஏன் என்னை வசியம் செய்கிறது. பெண்ணவள் அவனிடமிருந்து விலகும் எண்ணமின்றி அவனையே வைத்த கண் வைத்த படி பார்த்த படி நின்றிருந்தாள்.

அவனும் தான் ஏதோ மாய உலகில் சஞ்சரித்தது போல. . அவளை விட்டு விலகும் எண்ணமின்றி அப்படியே அணைத்த படி இருந்தான்..


“காதல். . .
அது ஒரு மாய உலகம்.
அதில் நுழைந்தால் . .
மீள்வது எளிதோ. . ?”
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பட்டூஸ்...
அடுத்த பதிவு இதோ போட்டாச்சு... படிச்சி பாருங்க. எப்படி இருக்குத்துன்னு நாலு வார்த்தை சொல்லிட்டு போங்க...

இதுவரை cmts and like செய்த அனைவருக்கும் நன்றி. அமைதி வாசகர்களுக்கும் என்னோட நன்றிகள். சீக்கிரம் வெளியே வந்து ரெண்டு வார்த்தை சொல்வீங்கன்னு நம்புறேன்.

நன்றி
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே. .

அடுத்த அத்தியாயம் பதிந்து விட்டேன். வாசித்து விட்டு உங்கள் கருத்துக்களை என்னோடு பகிர்ந்து கொள்ளுங்கள். இது வரை விருப்பம் மற்றும் கருத்து தெரிவித்து என்னை ஆதரித்து வரும் நல் உள்ளங்களுக்கு நன்றிகள்.

அமைதி வாசக பூக்களே. . மௌனம் கலைந்து விருப்பம் தெரிவிக்க அழைக்க படுகிறீர்கள்...

நன்றி...

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ.

அத்தியாயம் 8
14624

14623


“ஜீ பூம் பா
ஹேய் ஹேய் ஜீ பூம் பா
எந்தன் தேவதையை நீ காட்டு....

காட்டினாள்
காதல் கூட்டினால்
அவளை கும்பிடுவேன் பூ போட்டு . . .”


இன்னிசை தென்றல் காற்றின் வழி. . செவியில் நுழைந்து மனதை அழகாய் வருடி சென்றது. . . !

“இது என்ன மாயம்.?! அந்நிய ஆடவன் தொடுகை என்னை ஏன் இப்படி தாக்குகிறது.?!” என்று ஏதேதோ நினைவில் இருந்தவள் கொஞ்சமாய் சுதாரித்துக் கொண்டாள். அவன் தன்னை அணைத்த படி இருந்த அந்த வலிய புஜங்களை தன் பஞ்சு விரல் கொண்டு மெதுவாக பிரித்து விட்டாள். இவள் விலக சொல்கிறாளா? இல்லை இறுக்கி பிடிக்க சொல்கிறாளா. . ?!! அப்படி தான் அவள் விரல்கள் அவன் விரல்களோடு நார்த்தனம் ஆடியது...

"ஹ்ம்ம்..." பெருமூச்சுடன் அவனே விலகி விட்டான்.
பெண்ணவள் கொஞ்சம் முகம் வாடினாளோ . . ?

“ஆர் யு ஓ கே மிஸ் ?” என்றபடி புருவம் உயர்த்தினான்.

அந்த குரலில் மயங்கி போனாள் பெண். "அந்த இரு இமைகளும் ஏன் என்னை இவ்வளவு தூரம் தாக்குகிறது...?!”

அம்சமாய் ஒட்ட வெட்டப்பட்ட தலை முடியும் , அகன்ற நெற்றியும், மொழி பேசும் புருவங்களும், காதல் பேசும் அக்கண்களும் , கூரிய நாசியும்,அழகாய் ட்ரிம் செய்த லேசான தாடியும் , அடர்ந்த மீசை காடும் , சிவந்த அதரங்களும் , மினுமினுக்கும் பற்களும், பார்த்துக் கொண்டே இருக்கலாம் போல தோன்றியது..
“இக்கண்களை நான் எங்கோ பார்த்திருக்கிறேனோ. . ?! இவன் தொடுகை எனக்கு ஏன் பரிட்சியமானதாக தோன்றுகிறது....?”


இதை தானே "தேஜா வூ " என்பார்கள். எங்கோ எப்பவோ பார்த்தது போல இருக்கும். ஆனால் இல்லை.. இது நிஜமும் அல்ல கற்பனையும் அல்ல. . . அது ஒரு வகை உணர்வு..

“ஒரு வேளை எனக்கும் தேஜா வூ வந்து விட்டதா. . . ?!”

“ஷ் ஷ் ஷ் .. இது என்ன சிந்தனை..?” தன் மனதை அடக்கிய படி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

சிரித்த முகம் மாறாமல் நின்றிருந்தான் .

“யெ....ஸ் . . ஜ ம் ஓ கே .” தடுமாறாமல் பேச கொஞ்சம் தடுமாறினாள் பெண்.

“கொஞ்சம் பார்த்து பறக்க கத்துக்கோங்க மிஸ். இல்லைன்னா சேதாரம் தான்..” என்றவன் குறு நகை புரிந்தான்.

அவள் பேந்த பேந்த விழித்தாள்.
“இப்பொழுது எதற்க்காக பறக்க சொல்கிறான்...? யாருக்கு சேதாரம்.?!” குழம்பி போனாள் பெண்.

அவள் குழப்பத்தை கண்டவன், “இப்படி வேகமா போன எங்கயாவது முட்டி மோத வேண்டியது தான். கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.” அக்கறையுடன் சொன்னான்.

“ஓ .. இவன் ஓடி வந்ததை சொல்கிறானா..?”
சட்டென தான் எதற்காக ஓடி வந்தோம் என்பது நினைவு வர
“ஆமா . . . அந்த பலூன் எங்கே. . ?”

பார்வையை சுழல விட்டாள்.

“அந்த பலூன் என்ன கட்டியா வச்சிருந்தீங்க?!! அப்படியே நிக்கிறதுக்கு.. இந்நேரத்துக்கு அது எங்கயாவது பறந்து போயிருக்கும் விடுங்க மிஸ்....” என்று இப்போதும் அவளது குழப்பத்திற்கு பதில் கூறினான்.

“இவனுக்கு எப்படி நாம் மனதில் பேசுவது எல்லாம் கேட்கிறது. இவன் என்ன மந்திரம் படித்தவனா. .? மாயாஜால வித்தை தெரிந்தவனோ . . .?”

“ஹா ஹா ஹா .. அப்படிலாம் இல்லைங்க .. எனக்கு ஒரு மாயாஜாலமும் தெரியாது. உங்க முகம் தான் உங்க மனசை அப்படியே காட்டுது.” என்றபடி அவள் முகம் பார்த்தான்.

“ஓ. . .”

“அந்த குவிந்த இதழ் மொட்டுகளை ஒரு முறை ஸ்பரிசத்தால் என்ன.. ?” பார்வை ஏக்கமாய் படிந்தது மங்கையவள் இதழ் மீது. . கொஞ்சம் அதிகமாகவே. .
தன் நினைப்பை நொடி பொழுதில் தூக்கி எறிந்தவன் அவளுடன் உரையாடலானான்.
“நீங்க தனியாவா வந்தீங்க.?”

“இல்லை . அக்கா ராம் எல்லாம் சேர்ந்து தான் வந்தோம்.” அவளது வாய் தானாக பதில் அளித்தது.

“அவர்கள் எங்கே?”

“இங்க தான் பக்கத்துல இருப்பாங்க.” கைகளை பிசைந்த படி பதிலளித்து கொண்டிருந்தாள்.

“சரி வாங்க. உங்களை உங்க அக்காகிட்ட விட்டுவிட்டு செல்கிறேன்.” என்றபடி அவன் நடந்தான்.

“இல்லை வேண்டாம். நீங்க கிளம்புங்க. நானே போகிறேன் .”

“ஏன்?”
நாணிலிருந்து புறப்பட்ட அம்பாய் சட்டென கேள்வி பிறந்தது அவனிடத்தில்.
“இது என்ன கேள்வி. .?! எனக்கு எங்க அக்காகிட்ட போக தெரியாதா..?? நான் என்ன சின்ன பாப்பாவா...???” கொஞ்சம் கோவம் வந்து விட்டதோ பெண்ணவளுக்கு.

“அப்படியா...?!! சரி போங்க..” வழியை விட்டு நகர்ந்து நின்றான்.

தலையை ஆட்டி விட்டு ஒரு எட்டு வைத்தவள் அப்படியே அதிர்ந்து நின்றாள்.

“ஹைய்யோ இது என்ன .. இங்கே யாரையும் காண வில்லை .. எல்லோரும் எங்கே மாயமாய் போனார்கள்.??!”

“யாரும் எங்கேயும் போகல. நீங்க தான் நானும் பறக்கிறேன்னு ... ஆள் இல்லாத இடம் வரைக்கும் பறந்து வந்திருக்கீறீங்க . . .” நக்கல் தொனித்தது அவன் குரலில்.

“இப்பாவது புரியுதா. .? நான் ஏன் அப்படி சொன்னேன்னு ..?!” குரலில் அழுத்தம் கூடியது அவனுக்கு..

“ச் ச...!” தன் நிலையை நொந்தபடி.

“சாரி .. பட்டுனு பேசுனதுக்கு .. முன்ன பின்ன தெரியாதவங்க கூட எப்படி சேர்ந்து போறதுன்னு ஒரு சின்ன சங்கடம். அதான் வேண்டாம்ன்னு சொன்னேன்.”

சட்டென இறங்கி வந்தாள்.

“புரியுது..” அவன் பதிலும் இலகுவாய் வந்தது..
அவளது இறக்கத்தில் இவன் கோபம் கொஞ்சம் மட்டுப்பட்டதோ . . ?!
“சரி வாங்க. இந்த பக்கமா போனா பத்து நிமிஷத்துல மெயின் ரோடு வந்திரும். அங்க போனா உங்க அக்காவை பிடிச்சிற்லாம்” என்றபடி அவளோடு இணையாக நடந்து வந்தான்.


“உங்களுக்கு இந்த இடம் ரொம்ப பழக்கமோ... நீங்க அடிக்கடி வருவீங்களா..” இவனுக்கு மட்டும் எப்படி வழி தெரியும் என்றெண்ணத்தில் அப்பாவியாய் கேட்டாள் .

“பழக்கம் தான்.எப்பவாது தான் வருவேன்.” எந்த ஒரு தயக்கமும் இன்றி அவர்கள் உரையாடல் தொடர்ந்தது.

“உங்க பெயரை சொல்லலியே .. . .”

“நீங்க கேட்கலையே. .?!” குறும்பாய் புன்னைகைத்தாள் .

அவன் நெளிந்தான்.
பின் அவளே அவன் முகம் பார்த்து சொன்னாள் , “ஆராதனா.”

“உங்க பெயர் என்ன..?”

“ரவி.”

“ஓ. கே. ரவி .. ஹீ ஹீ ஹீ .. சும்மா பெயரை சொல்லி பார்த்துக்கிட்டேன். . .”

“இதழ் குவித்து
நீயே உன் பெயரை உச்சரிக்கையில். . .
மோகம் கொள்கிறேனடி . .
இதழசைத்து என் பெயரை
நீ அழைக்கையில் . . .
கதிகலங்கி போகிறேன் நானடி. .”


“என்ன பண்றீங்க ஆராதனா ... படிக்கிறீங்களா.. இல்லை வேலை எதுவும் . . .?”

“இப்போ ரீசன்ட்டா தான் ஒரு கம்பெனில ஜாயின் பண்ணியிருக்கிறேன். பெயிண்டிங்ஸ் டெலிவரி பண்ணனும் . கஸ்டமர் கேட்கிற மாதிரி வடிவமைச்சு குடுக்கிற கம்பெனி அது.”

“ஓ அப்படியா.. அப்போ நீங்க நல்லா வரைவீங்கன்னு சொல்லுங்க. . .”

சிரித்து கொண்டாள் அவள்.

அவன் என்ன பண்ணுகிறான் என்று அவளும் கேட்கவில்லை. அவனும் சொல்லவில்லை. பேச்சு முழுதும் அவளை சுற்றியே இருந்தது.

காலாரா நடந்தபடி அவர்கள் இப்பொழுது கொஞ்சம் ஆட்கள் இருக்குமிடம் வந்திருந்தனர். அங்கே தின்பண்டங்கள் விற்று கொண்டிருந்த ஒருவனின் கைகளில் மின்னிய அந்த பொருள் “என்னை வாங்கி கொள்ளேன்” என்று ஆருவை பார்த்து கண் சிமிட்டியது. . . யாருக்கும் தெரியாமல். .!

அவள் பட்டென ஓடி சென்று அந்த பையனை நிறுத்தி அந்த பொருளை ஆசையாக வாங்கி சுவைக்க ஆரம்பித்தாள்.
அந்த விரல்கள் நாட்டியம் ஆடியது போல இருந்தது, அவள் அதை எடுத்து வாயில் திணிக்கையில்.! இதழ்களோஆனந்தமாய் சிரித்து . . கொஞ்சம் சுழித்து . . கண்களை மூடி .. அதன் சுவையை அனுபவித்தபடி உண்டு கொண்டிருந்தாள். மெய் மறந்து அவள் சாப்பிடும் அழகை அவன் மனதில் சேகரித்துக் கொண்டான்.

இவள் வளர்ந்தாலும் சிறுபிள்ளை தான்.

“அக்கா.. காசு .” என்று அந்த ஏகாந்த நிலையை கலைத்தான் பையன்.

விழி திறந்தவள் சட்டென பார்த்தாள் பக்கத்திலிருந்தவனை. ..

“என்ன காசு இல்லையா. . ?”

பேந்த பேந்த விழித்தாள் பெண்.
“ஹா ஹா ஹா. . காசு கொடுக்காமையே நல்லா சப்பு கொட்டி சாப்பிடுற. . .! என்ன. .?!” கிண்டல் செய்தான் அவன்.

சங்கட பட்டாள் அவள்.
“சரி விடு. . நானே கொடுக்கிறேன். அப்புறமா தா.”என்றபடி வழக்கை முடித்தான்.

அவன் ஒருமைக்கு தாவியிருந்தான் இப்பொழுது. இவ்வளவு தூரம் அவளுடன் பேசியதன் விளைவோ..?

அவன் அவளை அதிகம் சீண்ட வில்லை. ஏதோ சந்தோஷ மனநிலையில் இருந்தான் போலும்.
அவளும் பின் ஏதும் அவனிடம் பேச வில்லை. கையிலிருந்த பொருளுக்கும் வாயிற்கும் மட்டுமே வேலை கொடுத்தபடி இருந்தாள். . .

பின் சட்டென அவன் புறம் திரும்பி . . “நீங்க ஏதும் வாங்கலையா . . உங்களுக்கு வேணுமா..?” தன் கையில் இருந்ததை காட்டி கேட்டாள். .

அவன் பார்வை கைகளை தாண்டி அவள் இதழோரத்தில் ஒட்டியிருந்த இடத்தை பாசமாய் தீண்டி அப்படியே கூடாரம் போட்டு அமர்ந்து விட்டது.

பெண்ணவள் மீண்டும் கைகளை காட்டி கேட்டாள் அவனிடம்.

தலையை மறுப்பாக ஆட்டினான் அக்கள்வன்.

“உங்களுக்கு தெரியுமா. . இது அவ்வளவு சுவை.. இதை ஒரு முறை சாப்பிட்டா வாழ் நாள் முழுதும் கூடவே ஒட்டிக்கிட்டிருக்கும் .. அப்படியொரு சுவை..!”
“அப்படி என்னம்மா இது. ஆமா இதோட பெயரென்ன ?”

“அதுவா.. .?!” என்றபடி அவள் ஆர்வமாய் விளக்க ஆரம்பித்தாள் .

“ஒரு ரூபாய் காயின் அளவே
இருந்தாலும். .
பனைமர நொங்கை போல
தித்திப்பானது தானது தான். .
நாக்கில் பட்டவனுடன். .
அதன் பாட்டிற்கு
சுவை ஊற்றெடுக்கும் . ..
இதன் மூலப்பொருள் இல்லாத இல்லமே இல்லை. .
சுவைகளில் இரண்டை கலந்து. . .
அழகாய் ஜொலிக்கும். . .!
சூப்பர் ஸ்டார் ரஜினியை போல
தகதகவென மின்னும். ..
மின்னுமையா மின்னும். . . .
சும்மா தக தகவென மின்னும்...!”


“இப்போ சொல்லுங்க . . ? அது என்ன பெயர். இந்த தின்பண்ட பொருளின் பெயர் என்ன...?”

(என்ன மக்களே . .
ரெடியா..? சீக்கிரம் யோசித்து சொல்லுங்க... பார்ப்போம் யாரு கண்டு பிடிக்கிறாங்கன்னு. பதில் சொன்னா . . . . எல்லோருக்கும்….?!!! )

என்று சொல்லியவள் கலகலவென புன்னகைத்தாள் . . .
அழகாய் வாய் விட்டு தெத்துப்பல் தெரிய மலர்ந்தாள் பெண்ணவள்.

அப்ப. . .டி. . .யே. . . உள்ளத்தை கொள்ளை கொண்டது அப்புன்னகை.
“இவ. . ளை. . இ. . வ. . ளை என்ன செய்தால் தகும். . . இம்சிக்கிறாளே. . .?!! ஹ்ம்ம்ம்.... முடியாது.. இனி தாக்கு பிடிக்க முடியாது. . .”

அவள் புறம் சட்டென நெருங்கி . . அவள் நீட்டிய கைகளை பிடித்து . . . கொஞ்சம் மங்கையின் வாசத்தை உள்ளிழுத்து கொண்டே. . . அவள் இடை வளைத்தான் . .

சிரிப்பொலி நின்று பெண்ணவள் விழி விரித்து அதிர்ந்து பார்த்தாள் ..

பார்வை முழுதும் அவனே ஆக்கிரமித்திருந்தான். “இது எ . . ன். . ன . . ? இவன். . என்ன செய்கிறான். .” இதயம் துடித்தது. . யுவராஜ் சிங் மட்டையில் பட்ட பந்தாக. . . !

அவன் கண்கள். . இவள் கண்களோடு கலந்து. . . மாய உலகத்திற்கு அழைத்து சென்றது. அவன் மூச்சு காற்று இவள் நாசியில் பட்டு சிலிர்த்து அடங்கியது.. பேதையவள் வசமிழக்க தொடங்கினாள். மீசை முடி அவள் மூக்கின் நுனி பட்டும் படாமலும் இதமாய் தீண்டி சென்றது.. இதழ்கள் அவள் இதழை நெருங்கி ஏதோ பாஷை பேச காத்திருந்தது வேறு அவளை சுகமாய் போதை கொள்ள செய்தது. .

இதோ. .இதோ. . .தீண்ட போகிறது.. . இன்னும் கொஞ்சம் கடந்தால் போதும். . . அவ்விதழ்கள் இரண்டும் இணையவிருந்த வேளையில். . .

அவன் கண் திறந்து. . பெண்ணவளை விழி மூடாமல் ரசித்து பார்த்தான். . . இதழ்கள் தானாக மலர்ந்தது. . . அவன் நுனி விரல் கொண்டு அவள் இதழோரமாய் ஒட்டியிருந்தவற்றை மெதுவாக துடைத்து விட்டான்.

ஏதோ மாயவலை அறுபட்ட உணர்வில் விழி திறந்தாள் அவள்.

“இ…வ்…ளோ… விலாவரியா பேசுனா மட்டும் போதாது கண்ணு. .. ஒழுங்கா சாப்பிட தெரியணும்....” என்று நகைத்தபடி. . மீண்டும் ஒரு முறை அவளிதழை துடைத்து விட்டான்.

பெண்ணவள் கொஞ்சம் குழம்பி போனாள்.

“ஹேய். . ஆரு. . . .” தூரத்தில் வதனா அழைப்பது கேட்டது.. .

“உங்க அக்கா இவங்க தானா. . சரி அப்போ நான் கிளம்புறேன். . பாய். . .”
கை ஆட்டி விட்டு சென்று விட்டான் அவன். அவன் அவளின் தேஜா வூ. அவள் கைகள் தானாக கழுத்து சங்கிலியை தடவி கொடுத்தது. . .

#################

அந்த ரெஸ்டாரண்ட் காலை நேர பரபரப்புடன் படு வேகமாக இயங்கி கொண்டிருந்தது. கடகடவென ஆர்டர் செய்த உணவுகளை தயாரிப்பதில் மும்மூரமாய் இருந்தது அந்த சமையற்கூடம்.

“ஓ கே டன். .” என்றபடி தான் தயாரித்த உணவை அந்த டேபிளில் வைத்தார் கீர்த்தனா.

நெஸ்ட் வேற ஆர்டர் எதுவும் இருக்கிறதா என அறிய அந்த நோட்டீஸ் ஸ்லிப்பை பார்த்தாள் . இப்போதைக்கு ஒன்றும் இல்லை. மற்றவர்கள் அவர்களுக்கான உணவை தயாரிப்பதில் கவனமாக இருந்தனர்.

அப்பொழுது அருகிலிருந்த "குக்"களின் பேச்சு காதில் விழுந்தது. “அப்புறம் என்ன ஆச்சு.. அந்த பொண்ணு இப்போ புரிஞ்சிகிட்டாளா. . ?!”

“முன்னதுக்கு இப்போ மோசம் தான். இது எங்க போய் முடியுமோ. . ?”

“ஏன் அப்படி சொல்லுற..?”

“அவளுக்கு குழந்தை பிறந்து நாற்பது கூட கழிக்கல, ஆனா அந்த பொண்ணுக்கு எதை பார்த்தாலும் வெறுப்பு,கோபம். பெத்த குழந்தைகிட்ட கூட ஒட்டுதல் இல்ல . .. ஒரே சண்டை தான்.”

“அய்யோ.. இந்த காலத்து பிள்ளைகளுக்கு இது எல்லாம் எப்படி புரிய வைக்கிறது. . ? அந்த காலத்துல கூட்டு குடும்பம், பக்கத்து வீட்டு உறவுகள் அப்படின்னு நிறைய சொந்தங்கள் பேச்சு துணைக்கு இருக்கும். சோ நமக்கு இந்த மாதிரி எண்ணமே வராது . . . ஆனால் இப்போ அப்படியா...?”

“ம்ம்ம்ம்... எனக்கும் அந்த பொண்ணோட மனநிலை புரியுது. ஆனா எப்படி அந்த பொண்ணுகிட்ட விலாவரியா சொல்லி புரிய வைக்கிறதுன்னு தான் தெரியல. . .” வருத்தம் கொண்டார் அவர்.

“ஹே கீர்த்தனா. உனக்கு வேலை முடிஞ்சா. . .?” குரல் இவளை பார்த்து கேட்டது.

“யெஸ் ..” என்றவர், அவர்கள் பேசிய சம்பாஷணையை பற்றி தன் கருத்தை சொன்னார்.

“நீங்க பேசுனதை வச்சி பார்க்கும் போ அந்த பொண்ணுக்கு குழந்தை பிறப்பிற்கு பின்னால வருகின்ற மெண்டல் டிப்ரெஸ்ஸன்னு நான் நினைக்கிறேன். இது அந்த காலம் இந்த காலம்..ம்..னு இல்லை. . எல்லா தாய்மார்களுக்கும் வர்ற பிரச்சனை தான்..

இதை மனசு விட்டு பேசுனாலே பாதி மன அழுத்தம் போயிரும்.

குழந்தை பிறந்தவுடன் உடலளவில் ஏற்படும் மாற்றம் தான் பொண்ணுங்களை முதலில் டென்ஷன் படுத்துறது. பிரசவத்துக்கு முன்ன இருந்த உடல் கச்சிதமா இருந்திருக்கும் . ஆனா இப்போ அப்படி இருக்காது. இதுல வேற குழந்தைக்கு பாலூட்டனும் . . .ராத்திரி தூக்கம் இருக்காது.. நல்லா பசிக்க வேறு செய்யும். உடல் சொன்ன பேச்சை கேட்காது. உடல் எடை கூடி கிட்டே போகும். முடி இஷ்டத்துக்கு கொட்டும்.

சோ இது எல்லாம் சேர்ந்து ஒரு வித அழுத்தத்தை அந்த தாய்க்கு கொடுக்கும். அவளும் தனக்குள்ளே அடக்கி பொறுத்து பொறுத்து பார்ப்பா . முடியாதா பட்சத்தில் சுத்தி இருக்கிறவங்க கிட்ட இல்ல குழந்தைகிட்ட காட்டுவ. . . ஏதோ குழந்தையால தான் தனக்கு இப்படி ஒரு நிலைமை அப்படின்னு அந்த தாய்க்குள்ள ஒரு எண்ணம்.

இந்த மாதிரி நேரத்துல சுத்தி இருக்கிறவங்க தான் பொறுத்து போகணும். அவளை அன்பாய் ஆதரவா அரவணைச்சி வழி நடத்தணும்.

கணவன் கிட்ட முதல் சொல்லுங்க. கூடவே இருந்து பார்த்துக்க சொல்லி. புருஷன் காரன் இந்த நேரத்துல கூடவே இருந்து பொண்டாட்டிய தாங்குன்னா பாதி மனஅழுத்தம் அந்த பொண்ணுக்கு குறைஞ்சிடும்.

அப்புறம் குண்டா இருந்தாலும் நீ அழகு தான். சும்மா ரதியாட்டம் இருக்க. உன் குழந்தை உன்ன மாதிரியே சேட்டை பண்ணுது. . அப்படி இப்படின்னு சொல்லி குழந்தை பக்கம் மனசை நல்ல விதமா திருப்பனும்.

கொஞ்சம் கொஞ்சம் அந்த பொண்ணோட மனசு இதெல்லாம் தாயாக பிறக்க இறைவன் கொடுத்த பரிசுன்னு தானா புரிஞ்சிடும்...”

“சரியா சொன்னீங்க கீர்த்தனா.”

“ஆமாம்.நீங்க சொன்னது கரக்ட் . நான் இனி அந்த பொண்ணோட வீட்ல இப்படியே பாலோவ் பண்ண சொல்றேன்.”

முறுவலித்துக் கொண்டார் கீர்த்தனா.

“மாக்ஸிமம் எல்லா பிரச்சனைக்கும் உங்க கிட்ட சொலுஷன் இருக்குது கீர்த்தனா.. யு ஆர் சோ சூப்பர்... “

அதற்கும் அவரிடம் இருந்து பதில் புன்னகையே....

###########

“இந்த தடி மாடு எங்க போய் தொலைஞ்சா. . ? எவ்வளவு நேரம் தான் இந்த கழுதைக்காக வெயிட் பண்ணறது.. சரியான சோம்பேறி.. போயும் போய் இவள் கூட எல்லாம் என்ன கோர்த்து விட்டு இருக்கிறாரே இந்த மேனேஜர்... ச் ச. . . .. .”

தன் நிலையை தானே எண்ணி.. நொந்த படி வழி மேல் விழி வைத்து காத்து கொண்டிருந்தான் அகில். ஆருவின் அலுவலகத்தில் வேலை செய்பவன் .

கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்தவன் கோபத்தின் உச்சிக்கே சென்று விட்டான். இவளை. . . என்று பற்களை கடித்தான். போன் போட்டு இவள் எங்க இருக்கான்னு கேட்போம் என்றெண்ணிய படி, பேன்ட் பாக்கெட்டிலிருந்து அவன் போனை எடுக்கவும் . .

மூச்சிரைக்க படி எதிரே ஆராதனா ஓடி வந்து. . இவனருகில் நிற்கவும் சரியாக இருந்தது.

வந்தவள் நேராக பக்கத்தில் இருந்த பெண்மணியிடம் கேட்டாள் .

“டவெல் பி பஸ் வந்தா மேம் ...”

“நோ. . இன்னும் இல்லை..”

“ஓ.கே . தங்க் யூ மேம்...” என்று சொன்னவள்.. அவள் பாட்டிற்கு அங்கே காலியாக இருந்த இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டாள்.

“ஹப்பாடா. . . . என்ன வெயில். . .” என்று சலித்து கொண்டே நீண்ட பெரும் மூச்சுகளை இழுத்து விட்டுக் கொண்டாள்.

இதை குரூரமாய் அவன் கண்கள் பார்த்து கொண்டிருந்தது.

ஆனால் அவளோ.. . இயல்பாய் மூச்சு காற்று எடுக்கவும்.. மிகவும் ஆசுவாசமாக அமர்ந்து கொண்டாள்...

இங்கே ஒருவன் இவளை முறைத்தது முறைத்த படி இருக்க.. எதிரே பெண்ணவள் வெகு இலகுவாய் அமர்ந்து கொண்டிருந்தாள். அதுவும் இவனை இது வரை ஒரு முறை கூட தெரிந்தவன் போல கூட காட்டிகொள்ள வில்லை.

அவன் பற்கள் கடிபடும் சத்தம் பக்கத்தில் இருந்த நாய்க்கு தெரிந்ததோ என்னவோ.. அதுவும் அது பாஷையில் நற. . நற. . வென பற்களை கடித்து குலைக்க ஆரம்பித்தது. . ..

“ஹா ஹா ஹா . . .” அங்கே நின்று கொண்டிருந்த ஒன்று இரண்டு பேர் வாய் விட்டு சிரித்து விட்டனர்.

அவனுக்கு தான் சங்கடம் ஆகி போயிற்று.

எல்லாம் இவளால் வந்தது. “இவளை எல்லாம் . . . ?!!?”

“என்ன நீ பெரிய இவன்னு நினைச்சிட்டு இருக்கியா.. ரொம்ப ஓவர் ஆ தான் பண்ற.. வேலைக்கு சேர்ந்து இன்னும் இரண்டு மாசம் கூட ஆகல.. அதுக்குள்ள இவ்வ்ளோ கெத்து காட்டுறது எல்லாம் ரொம்ப . . . ரொம்பவே ஓவர்.. ஒழுங்கா இரு பார்த்துக் கோ. . . .” அவன் பாட்டிற்கு தாளித்து கொண்டிருந்தான்.

ஆருவோ இவன் யாரோ வேறு யாரிடமோ பேசுகிறான் என்ற ரீதியில் முகைத்தை வைத்து கொண்டிருந்தாள்.

கைகளை தோள் பையினுள் விட்டு ஒரு குச்சி மிட்டாயை எடுத்து. . வாயிற்கு வேலை கொடுக்க ஆரம்பித்து விட்டாள். . .

இங்கே இவனது கோபம் வானத்திற்கும் பூமிக்கும் பறந்து கொண்டிருந்தது..

“ஏய். . நான் உன் ட தான் பேசிட்டிருக்கேன்.” கோபத்தில் கத்தி விட்டான்.

அவள் காதுகளை தேய்த்து விட்டு கொண்டாள்.

“ஷ் ஷ் ஷ் ... ஏன் இப்படி கத்துற.. நாலு பேர் பாக்குற இடத்துல இருந்துகிட்டு இப்படியா பிகேவ் பண்ணுவா. . . ஒரு டீசென்ஸி வேணாம்..? இது தான் இவ்ளோ வருஷமா நீ வேலை பார்த்த லட்சணமா. . .?!”

கட்டுக்கடங்காமல் கோபம் வந்தது அவனுக்கு.. “இவளை . . ச் ச. . .” இப்போதைக்கு இவளை ஒன்றும் செய்ய இயலாத நிலையை எண்ணி நொந்து கொண்டான்.

இவள் வரைந்த படங்கள் அத்தனையும் அருமை. முதன் முதலில் பார்த்த பொழுது அவனுக்கே ஆச்சரியம் தான். இந்த சின்ன பெண்ணிற்குள் இத்தனை திறமையா. . மேனஜர்க்கு முன்பாகவே வாழ்த்து தெரிவித்தவன் இவன் தான். மானேஜரும் இவள் பெயிண்டிங்கில் சாய்ந்து விட்டார். இவள் இப்பொழுது எல்லாம் அகிலை விட முன்னுரிமை பெறுவதாய் அவனுக்கு பட்டது. கொஞ்சம் அதிக பிரசங்கி தனமாக தோன்றியது. தன்னை விட சிறப்பாக இவள் செயல் படுவதில் பொறாமை எல்லாம் இல்லை.

ஆனால் இவள் பண்ணும் அலம்பலை தான் அவனால் துளி அளவும் தாங்க முடிவதில்லை. வேலை என்று வந்து விட்டாள் இருவரும் சமத்தாய் மாறி விடுவார்கள். ஆக மொத்தத்தில் இருவரும் நண்பர்களும் அல்ல..எதிரிகளும் அல்ல. . .

அப்படி தான் இப்போது புதிதாக வந்த ஒரு கஸ்டமர்க்கு தங்கள் நிறுவனம் சார்பில் பேச இன்று ஒரு இடத்திற்கு செல்ல வேண்டி இருந்தது. இது ஒரு முக்கியமான ப்ராஜெக்ட். ஆர்டர் கிடைத்தால் நல்ல லாபம். இவனுக்கு ப்ரோமோஷனுக்கு கூட வாய்ப்பு உள்ளது .

அந்த இடத்திற்கு வர சொல்லி விட்டு , எதிரே இருந்த ஒரு பேருந்து நிலையத்தில் இவளுக்காக இவன் காத்து கொண்டிருக்க... இவனை காக்க வைத்து விட்டு அம்மணி மெதுவாக வந்தாள். வந்ததும் வராததுமாய் நக்கல் நையாண்டி வேறு. . .

“ஆரு. . . . இது என்னது. . . லேட்டா வருவேன்னு ஒரு போன் கால் பண்ணி சொல்ல தெரியாதா.. இவ்ளோ நேரமா மனுஷனை காக்க வைக்கிறது..?” கோபத்தை கட்டு படுத்தி கொண்டு கேட்டான்.

“ஹேய். . போன் ஹாண்ட் பாக்ல இருக்குப்பா. . உன்ன வர சொன்னதே மறந்து போச்சி... சாரி . கோவிச்சிக்காத. .. நான் தான் சேர்ந்து போகலாம்னு சொன்னேன். பட் என்னன்னு தெரியல எனக்கு அது நியாபகத்துக்கே வரல. இனி இப்படி பண்ண மாட்டேன் சரியா. . .?!”

இரண்டு கைகளையும் காதை பிடித்த படி அவள் மன்னிப்பு கேட்கும் தோரணையின் அழகில் அவனும் தான் என்ன செய்வான். இவள் செய்யும் சேட்டைகள் எல்லாம் அவனுக்கு.. இப்படி ஒரு தங்கை நமக்கு இருந்தால் என்ன... என்ற எண்ணம் தான் தோன்ற வைக்கும். அவளை பிடிக்கும். ஆனால் வெளியே சொல்ல மாட்டான். சொன்னால் அம்மாவை தான் கையில் பிடிக்க முடியுமா. . ?!!


“சரி சரி.. வா.. கரக்ட் டைம்க்கு என்ட்ரி ஆகணும்.” சொல்லியபடி இருவரும் அந்த வானுயர்ந்த கட்டிடத்தை நோக்கி சென்றனர்.

###########

“டேய் பேராண்டி. . . நில்லுடா... எங்கே.. ஆபிஸ் கிளம்பிட்டியா. . .”

“ஆமா பாட்டி.”

“கொஞ்சம் பொறு . இன்னைக்கு நானும் வரேன்.”

அவன் விழிகளில் ஆச்சர்யம்.

“ஏன் தீடிர்ன்னு..” விழிகளில் ஆராய்ச்சி.

“எவ்ளோ நாள் தான் நானும் வீட்டுக்குள்ளே அடைஞ்சி இருக்கிறது.. அதுவும் இல்லாம நீ பிஸினெஸ் எப்படி பார்த்துகிறான்னு நானும் நேர்ல பார்த்து தெரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கிறேன்.. சரி வா. போகலாம்.”

பேரனும் எதுவும் சொல்லவில்லை. ஏதோ யோசனையில் இருந்தான். கார் ஆபிஸ் நோக்கி பறந்தது.

நேராக தனது கேபின் நோக்கி சென்றவன் பாட்டியை கூடவே அமர வைத்து கொண்டான்.

அவனது ஒவ்வொரு ப்ரோக்ராமையும். . . அதை அவன் கையாளும் விதத்தையும் பார்த்தவர்..

“பரவாயில்லைடா .. பிடிக்காம நீ தொழிலை பார்த்துக்கிறியோன்னு நினைச்சேன். ஆனால் அப்படி இல்லைங்கிற போது ரொம்ப சந்தோஷம்.”

“பாட்டி. நீங்க எதுக்கும் வருத்தபட தேவையே இல்லை. .” என்றபடி அவரை அணைத்து கொண்டான்.

“கம் ஆன் மை அயர்ன் லேடி. . .” என்று கை பிடித்து பாட்டியை எழுப்பியவன்.. “நாம் புதுசா கட்டிக்கிட்டு இருக்கிற ரெஸ்டாரண்ட்க்கு தேவையான பெயிண்டிங்ஸ் ஆர்டர் கொடுக்க நீங்களே நல்லா கம்பெனியா செலக்ட் பண்ணுங்க.. உங்களுக்கும் கொஞ்சம் நல்லா மாதிரி பீல் இருக்கும்.... வாங்க போகலாம்...”

என்று பேசிய படி அந்த மீட்டிங் ஹாலிற்குள் சென்றனர். கதவை திறந்த படி பாட்டி முதலில் நுழையவும் அடுத்து அவன் நுழையவும் சரியாக இருந்தது.

பாட்டியை அவர் இருக்கையில் அமர உதவி செய்தவன், பின் அவன் இருக்கையில் வந்து அமர்ந்து , எதிரே இருந்தவளை நிமிர்ந்து பார்க்கவும் . . . அவன் விழிகள் பளிச்சிட்டன. . .

அங்கே ஆராதனாவோ அதிர்ச்சியில் அந்த மேசையில் இருந்த பெயர் பலகையை ஒரு முறை வாசித்தாள் . .

“ரவி வர்ம குலோத்துங்கன்.” பெயர் பலகை அழகாய் புன்னகைத்தது. கூடவே கிழட்டு அயர்ன் லேடியும்...!
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14653
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ


அத்தியாயம் 9




“எத்தனை முகமூடி அணிந்தாலும்
மனதிடம் மாறுவேடம் போட முடியுமா...?”



தன் எதிரே அத்துணை ஆளுமையாய் அமர்ந்திருந்தவனை பிரமிப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள் ஆராதனா.

“அட... இவள் எங்கே இங்கே...?” கொஞ்சம் யோசித்ததில் அவனுக்கு இதுவாக தான் இருக்கும் என்று தோன்றியது.. கடைக்கண் கொண்டு பாட்டியை பார்த்தான். முகம் தெளிவாக இருந்தது. அவனுக்கு கொஞ்சம் குழப்பமாகி விட்டது.

“இது என்ன கூத்து. . . இவன் எங்கே இங்கே. . ?” -ஆராதனா.
பார்வை தானாக அவனது பெயர் தாங்கிய பலகையின் மீது பதிந்தது.

"ரவி வர்ம குலோத்துங்கன்"
"மேனேஜிங் டைரக்டர் "

கம்பீரமாய் கர்ஜித்தது அதன் அறிவிப்பை.
பெண்ணவள் கொஞ்சம் மிரண்டு போனாள்.
“ஹைய்யோ. . ?! இவன் எம்.டியா. . ?!! பெ. .ரி. . ய. . ஆளோ . . .??!”
“அது தெரியாமல் இவனிடம் நாம் இன்று காலை ஏதும் கிறுக்குத்தனமாக பேசி விட்டோமோ .. . தெரியலயே. . . என்னத்த பேசுனேனு ஒன்னும் நியாபகத்துக்கு வந்து தொலைக்க மாட்டுக்குதே...!”

சட்டென சுதாரித்தவன். . அங்கே குழுமியிருந்த மற்ற கம்பெனி நபர்களையும் பார்த்து வசீகர புன்னகையை உதித்தவன் பேசலானான்.

“குட் மார்னிங் எவெரி படி . . .
உங்கள் எல்லோரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி. எல்லோரோட கம்பெனி பற்றியும் எனக்கு நல்லாவே தெரியும். எல்லோருமே நல்ல திறமையானவங்க தான். இருந்தும் எதுக்கு உங்க மூணு கம்பெனியும் செலக்ட் பண்ணி வர வச்சிருக்கேனா . . .?! ஐ வான்ட் பெஸ்ட் . எங்களுக்கு இந்த ப்ராஜெட் கொஞ்சம் சென்டிமெண்டல் கூட. சோ டூ யுவர் பெஸ்ட். தென் என்னோட பாட்டியோட முடிவு தான் பைனல் டிசிஷன் . பெஸ்ட் விஷேஸ் ச்சு ஆல்.”

கண்கள் சுற்றி இருந்த அனைவரையும் பார்த்து பேசிக் கொண்டிருந்தாலும் அவன் இவளை ரசித்தான் பிறர் பார்வைக்கு படாமல்.

“அட ராட்சஷா …! அப்படி பார்க்காதடா. . . சும்மாவே ஒன்னும் மண்டையில ஏற மாட்டுக்குது. . . இதுல நீ வேற ஆளை விழுங்குற மாதிரி பார்த்தா. . . விளங்கிடும். . . !”

“என்னோட ரெஸ்டாரண்ட் பத்தின உங்களுக்கு தேவையான டீடெயில்ஸ் எல்லாம் இந்த பேப்பர்ல இருக்கு. ரீட் பண்ணி பாருங்க. தென் உங்களோட ஐடியாவை சொல்லுங்க. . .”
“யாரோட ஐடியா எங்களுக்கு பிடிக்குதோ அந்த கம்பெனிக்கு சான்ஸ் .. ஓ.கே . . லேடீஸ் அண்ட் ஜென்டல் மேன் பிளீஸ் டேக் யுவர் டைம்.”

“இவன் பக்கத்துல இருந்தாலே என்னால என்னையே கண்ட்ரோல் பண்ண முடியல... ச் ச் ச. .. ..
ஏய் தேஜா வூ. . . யூ கோ . .
ஹேய் ஆரு... யூ கம் . . வேக் அப். . . நிமிர்ந்து நில்லு...”

பாட்டியின் அருகில் சமத்தாய் அமர்ந்து விட்டான் ரவி.

அந்த பேப்பரில் இருந்தவற்றை அகில் வாசித்து விட்டு இவள் முகம் பார்த்தான்.

“அட தேங்காய் மண்டையா! என்னை ஏன். . டா பார்க்கிற. . .?!”

“ஹ்ம்ம்ம்... சொல்லு. உன்னோட ஐடியா எப்படி..? நம்மால் இவர்கள் விருப்பத்தை நிறைவேற்ற முடியும்ன்னு நினைக்கிறியா..?”

“நல்லா கேட்டா போ. . . . குடுடா அந்த பேப்பரை..” குனிந்து அவர்கள் கண்டிஷன் மற்றும் விருப்பத்தை பார்த்தாள். பின் கொஞ்சம் யோசித்தாள். நிமிர்ந்து பார்த்தவள் அவனை பார்த்து அழகாய் கண்ணடித்தாள்.

##############

அதே நேரம் அங்கே வதனாவின் அலுவலகத்தில்,

"ஹைய்யோ ...! என்ன பண்ற ராம் . . ? !” குரல் கொஞ்சம் பட படப்பாய் வந்தது.
"சு . . ம். .மா. . ." கண்களால் சிரித்தப் படி அழகாய் கண் சிமிட்டினான் கள்வன்.
கைகள் அதுபாட்டிற்கு அவளை தழுவி கொண்டது. இதழ்கள் அவள் முகமெங்கும் ஊர்வலம் சென்றது.

பெண்ணவள் இத்தாக்குதலை எப்படி தாங்குவாள் . ?! வெலவெலத்து போனாள் அக்காரிகை.

"ச் ச் சு .... ராம்...!" பெண்ணவள் கிறங்கினாள். அவளவன் மிஞ்சினான்.

"நோ ராம். டோன்ட் டச் மீ." என்றபடி அவன் கைகளை விலக்க பார்த்தாள் வதனா. ஹும்..ம்ம்.... அக்காதல் மன்மதன் சிறிதும் அசைந்தானில்லையே .
இளக துடித்த மனதை அடக்கியப்படி "இப்போ இங்கே எதுக்குடா வந்த...? இது என்னோட ஆபிஸ்டா.. யாராச்சும் பார்த்திட போறாங்கடா. . ." சிணுங்கினாள் அவள்.

"ஹா ஹா ஹா.... சோ வாட் ஹனி..." இதழ்கள் அவள் கன்னக்கதுப்பை தடவி சென்றது. பெண்ணவள் சிலிர்த்து போனாள் . "அட என்னடா இது. . . இப்படி இம்சிக்கிறாயே. . .?” குரல் கொஞ்சியது.

இருந்தும் தன் மறுப்பை பெண்ணவள் மீண்டும் காட்டினாள்.
"நோ ராம் ... நோ. .." அவன் கைகளை விலக்கியவாறு அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

அக்கண்கள் அவளை காதலோடு சிறையெடுக்க விளைந்தது. "ஹேய் . . டோன்ட் லுக் அட் மீ லைக் தட் ..."

தன் காதல் சிந்தும் பார்வையை துளியும் வீணாக்காமல் அக்கன்னிகை மீது தெளித்து அவளை வீழ்த்துவதிலே குறியாய் இருந்தான் போலும். அவளால் அப்பார்வையை தாக்கு பிடிக்க முடிய வில்லை. உடல் லேசாக உதறியது. இவனை... இப்படியே விட்டால் .... "ஹ்ம்ம்... நோ..."
சட்டென அவன் பிடியிலிருந்து விலகி தூரமாய் தள்ளி நின்று கொண்டாள் . கொஞ்சம் தன்னை திடப்படுத்தி கொண்டு... தன் எதிரே நின்றிருந்த மாயக்கண்ணனை பார்த்து...

"இட்ஸ் எனப்ஃ ராம்.
டோன்ட் கம் நியர்.... ஹே... சொல்றேன்ல .. தள்ளி போ.. பக்கத்துல வராதா. . .!"
பிடிவாதமாய் சொன்னாள் இம்முறை.

"ஓ.கே ஓ.கே. . ரிலாக்ஸ். ." கைகளை உயர்த்திய படி சமாதானமாய் சொன்னான்.

சிவந்திருந்த முகத்தை கைகளால் தேய்த்து கொண்டாள் வதனா. அவன் சிரித்து கொண்டான்.
"சிரிக்காதடா. .. போடா முதல இங்கிருந்து. . ."

பலமாய் சிரித்தான் இப்பொழுது...

"என் நிலைமை உனக்கு வேடிக்கையா இருக்குதாடா . . .?!" மேசையின் மீது இருந்த பேனாவை எடுத்து சட்டென அவன் மீது எறிந்தாள்.

"ஹேய் . . .!" பதட்டமாய் விலகினான் அவன். . அப்படியே மறைந்தும் போனான் அக்கள்வன்.

"என்ன இது. . ? இவன் எங்கே போனான். . இப்போ. .போ. .து தா . . னே . . என் கண் முன்னால் நின்று கொண்டிருந்தான்.

ச் ச்ச . . வெறும் கனவா. . .?!" மூச்சை இழுத்து விட்டபடி சேரில் அமர்ந்தாள் பெண். "டேய் நீ என்னை ரொம்பவே படுத்துறடா . . ." புகார் சொன்னாள் பெண். அவன் மந்தகாசமாய் புன்னகைத்து கொண்டான் அவள் மொபைல் ஸ்கிரீனில் இருந்த படி .


##################

"பாட்டி. . . உங்களுக்கு ஒரு விஷயம் சொல்லவா. . . ?!" ஆர்வமாய் கேட்டான் ரவி.

"என்னப்பா. . .? சொல்லு!" அவருக்கும் அவனது குதூகலத்தில் கொஞ்சம் தொற்றி கொண்டது.

"இன்னைக்கு மார்னிங் நான் வாக்கிங் போயிட்டு வரும் போ ஒரு அழகான குட்டி பாப்பாவை பார்த்தேன். . ."

"அது யாருடா குட்டி. . ?! எனக்கு தெரியாமா. .?”

"ஹைய்யோ பாட்டி . நான் தான் சொன்னேன்ல. மார்னிங் பார்த்தேன்னு. அதுக்குள்ள உங்களுக்கு என்ன அவசரம்...?"

"சரி சரி சொல்லு... அந்த குட்டிக்கு என்ன ஆச்சு. . ?!" ஆர்வமாய் தான் கேட்டார் கூடவே கொஞ்சம் விசாரிப்பு தென் பட்டதோ . . .?!

"ஹ்ம்ம்ம். . . குட்டி பொண்ணு ஒரு மிட்டாய் சாப்பிட்டு கொண்டு இருந்தா . . நான் பக்கத்துல போய் இது என்னனு கேட்டேன். அதுக்கு அந்த பொண்ணு.. . என்னை வச்சி செஞ்சுட்டா. . ." சோகமாய் முகத்தை வைத்த படி சொன்னான் அவன் ..


"அட பாவமே. . ஒரு மிட்டாய் பெயர் கேட்டது ஒரு குத்தமா. . . இந்த பொண்ணு ஏன் இப்படி பண்ணுனா. . . ஆமா அந்த குட்டி உன்ன என்னடா செஞ்சா. . . ?"

"எங்க பாட்டி செஞ்சா. . . நான் தான் செய்யாமா மிஸ் பண்ணிட்டு இப்போ பீல் பண்ணுறேன். . ." சத்தம் வராமல் இதழசைத்தான் அவன்..

"என்ன பேராண்டி சொன்ன. . .?! ஒன்னும் சரியா கேட்கல. . ." பாட்டி கொஞ்சம் அவனுருகில் நெருங்கியபடி அமர்ந்தார்.

"அதுவா. . . சொல்றேன் நல்லா கேட்டுட்டு அது என்ன மிட்டாய்ன்னு சொல்லுங்க. அந்த குட்டியை அடுத்த முறை பார்க்கும்போ நான் கண்டிப்பா அவகிட்ட என்னோட பதில்லை சொல்லணும். சரியா. .?" என்றபடி புதிரை சொல்ல தொடங்கினான்.
"ஒரு ரூபாய் காயின் அளவே இருந்தாலும் . . . .
. . . . . . . . . .
மின்னுமையா மின்னும். . ."

"ஹ்ம்ம்ம்.. அவ்ளோ தான் பாட்டி. . ."

பாட்டி இப்போது சாய்ந்த படி சேரில் அமர்ந்து கொண்டார். காற்றில் கோலம் போட்ட படி... விரலசைத்து தனக்கு தானே என்னமோ பேசி கொண்டார். . பின் இது அதுவா தான் இருக்கணும். . . ஹ்ம்ம். . அப்புறம் அது இதுவா தான் இருக்கணும். . . என்று ஏதேதோ பேசியபடி இருந்தார்.

பின் சட்டென இவன் புறம் திரும்பி. . . "டேய் பேராண்டி. . . அந்த மிட்டாய் சாப்பிடும் போ. . உதடெல்லாம் ஒட்டிக்கிட்டு.. ருசிச்சு சாப்பிட்டாளா என்ன. . .?”

அவன் கண்கள் ஒரு நொடி மின்னி மறைந்தது.
"அய்யோ இந்த பாட்டிக்கு எப்படி தெரிஞ்சி. . . ?! ஒரு வேலை நம்ம பின்னாடியே வந்து இருப்பாங்களோ....?"

உங்களுக்கு எப்படி பாட்டி தெரியும்.. ? சிறுவனாய் மாறி போனான் அவன் விடை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில்.

“அட லூசு பயலே... இது கூட தெரியாம நீ எப்படி தான் இவ்வளவு சாதிச்சியோ... அட போடா..."

"ஏன் .. பாட்டி.. அப்படி என்னது அது. . . சொல்லுங்க..."

அவன் கெஞ்சுவதை பார்க்கையில் அவருக்கு கொஞ்சம் அவனது பால்ய கால நினைவுகள் வந்து போயின... அவன் முகத்தை வாஞ்சையாக தடவி கொடுத்த படியே சொல்லலானார்...

ஒரு ரூபாய் அளவு தான் அந்த மிட்டாய் இருக்குதுன்னா... அது கண்டிப்பா ரொம்ப சின்ன சைஸ் தான்.. அப்புறம் நொங்கு எவ்வளவு சுவை.. அது போல இந்த மிட்டாய்க்கும் கண்டிப்பா மறக்க முடியாத ஒரு சுவை தான் இருக்கணும்.. சரியா பேராண்டி...! அப்புறம் நாக்குல வச்சவுடன் நம்மல அறியாமையே தண்ணீர் ஊறணும்ம்னா . . . . அது என்னவா இருக்கும்... ஒன்று இனிப்பு இல்லை புளிப்பு.. சரியா..? " புருவம் உயர்த்தி கேட்டார்.

"அட ஆமா பாட்டி..."

"இதை செய்யணும்ன்னா... வீட்ல இருக்கிற பொருளே போதும். அதுவும் எல்லோர் வீட்லயும் இருக்கும்ன்னு சொல்லியிருக்கா.. சோ இது கண்டிப்பா அதுவா தான் இருக்கும்.." சொல்லியபடி புன்னகைத்தார்.

"என்ன பாட்டி சொல்லுறீங்க.. அது இது...?! ஹ்ம்ம்.... என்னது அது..? இது..? நீங்களும் புதிர் போடுறீங்க போங்க..." அலுத்துக் கொண்டான் பேரன்.

"டேய் பொறுடா... விவரமா சொன்ன தான் உனக்கு புரியும்." என்றபடி அவர் புதிரின் மெயின் ஸ்விட்ச்யை தொட்டார்.

"சுவையில் இரண்டு.. அது மட்டும் இல்லாம சூப்பரா ஜொலிக்கிறது.. அப்புறம் ரஜினி போலன்னா... அது கருப்பா இருக்கணும்.. அதை தான் இந்த பொண்ணு இப்படி வர்ணனையா சொல்லியிருக்கணும்..."

"அச்ச்சோ . . போதும் பாட்டி .. முதல அது என்னனு சொல்லுங்க..." நொந்து போனான்.

"இதுக்கே உனக்கு பொறுமை இல்லைன்னா... இன்னும் வாழ்க்கையில நீ எதிர் கொள்ள வேண்டியது தெரிஞ்சா எப்படிடா ஹாண்டில் பண்ண போற...?!"

அவன் முறைப்பு இரட்டிப்பாகவும் ....

"வெயிட்! இப்போ சொல்றேன்.. அந்த மிட்டாய் ... "புளி மிட்டாய்" டா மடையா..."

"இனிப்பு ப்ளஸ் புளிப்பு.. சோ ரெண்டு சுவை. அல்சோ பிளாக் கலர்.. அதோட ஐஸ் க்ரீம் ஸ்டிக் இருக்கும் போ தனித்துவமா தெரியும்.. சோ எத்தனை நடிகர்கள் இருந்தாலும் சூப்பர் ஸ்டார் மின்னுறதை போல இந்த மிட்டாயும் பளிச்சுனு மின்னும்.. அதை தான் சொல்லியிருக்கா.. போதுமா..."

"ஹைய்யோ.. ஆமாம்..." சிரித்து கொண்டான் அவன்.. அதை ரசித்து கொண்டார் அந்த முதிர் ரசிகை..

கதவு தட்டும் ஒலியில் சிரித்த படியே திரும்பி பார்த்தான்.. அவனது பி.ஏ நின்று கொண்டிருந்தான்.

"யெஸ். கம் இன் " என்றபடி அவன் புறம் திரும்பி அமர்ந்தான்.

"சார். அங்கே மீட்டிங் ரூம்ல எல்லோரும் உங்களுக்குகாக வைட்டிங். அவர்களோட சாம்பிள் பெயிண்ட்யிங் பார்த்துட்டு நீங்க ரிசல்ட் சொன்னா நாம் அடுத்த ப்ரோசிஜர் மூவ் பண்ணலாம்."

"ஓ.கே.
வாங்க பாட்டி. நாம் போகலாம்." என்றபடி இருவரும் எழுந்து அந்த அறை நோக்கி சென்றனர்.

அந்த கண்ணாடி தடுப்பின் வழியே பார்க்கையில் ஆரு முதுகு காட்டிய படி அமர்ந்திருந்தாள். அருகில் இன்னொரு கம்பெனியில் இருந்து வந்திருந்த வேறொரு ஆடவனுடன் பேசியபடி தான் தெரிந்தாள்.
அருகே நெருங்க நெருங்க. . . ரவியின் முகம் பாறையாய் இறுகி கொண்டே சென்றது.

அந்த அவன் ஆருவை கொஞ்சம் ஆர்வமாய் பார்த்த படி இருந்தான். பெண்ணவள் இதை கவனிக்காது ஏதோ வரைந்து கொண்டிருந்தாள். அவன் பாட்டிற்கு இவளிடம் ஏதோ விஷமமாய்..கண்டிப்பாக ஏதோ வேண்டாத கடலை தான் போட்டு கொண்டிருந்தான் என்பது தூரத்தில் வந்து கொண்டிருந்தவனுக்கு தெளிவாக புரிந்தது.

"இவளுக்கு எங்கே போனது அறிவு.. இவனை ஏன் இவள் பக்கத்தில் அமர அனுமதித்தாள்.?"

அறையை திறந்து கொண்டு உள்ளே சென்ற போதும் பெண்ணவள் நிமிர வில்லையே.. அது வேறு ஆத்திரத்தை கிளப்பியது.
"இவளுக்கு என்னையெல்லாம் எப்படி கண்ணிற்கு தெரியும்.?" பொரிந்து கொண்டிருந்தான்.

"ஹலோ ஹைய்ஸ்.. லெட்ஸ் சி யுவர் ஒப்பீனியன்."
"கம் ஆன் ஸ்டார்ட் ஒன் பை ஒன் ..." என்றதும் முதலிரண்டு கம்பெனி சார்பாக வந்தவர்கள் அவர்களது முன்மாதிரி வரைபடங்களையும் மற்ற கருத்துகளையும் தெரிவித்தனர்.

அடுத்து ஆருவின் முறை. ஆரு அகிலை பார்த்தாள். அவனுக்கு முதலிரண்டு கம்பெனிகளின் விளக்கத்தில் கொஞ்சம் டென்ஷன் தொற்றி கொண்டது போலும் கண்களால் இவளை பேச சொன்னான்.

"ஹ்ம்ம்..." என்றபடி இவள் "தேஜா வூ" வின் புறம் திரும்பி பேசலானாள். .

“சார். எவ்வளவு தான் தொழில் நுட்பம் முன்னேறி இருந்தாலும் பழைய பொருளுக்கு மதிப்பு குறைஞ்சி போறது இல்லை. அது போல.. நாம ஏன் கருப்பு வெள்ளை வரைபடங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடாது..?

அதுமட்டும் இல்லாம எல்லோரோட பார்வைக்கும் பளிச்சுன்னு தெரியும். மனசுக்கு ஒருவித ஆறுதல் தர கூடியதும் கூட... அதோட நாம இந்த ட்ராயிங்ஸ்ல சிலதை மட்டும் குறிப்பிட்டு ஹை லைட் பண்ணி காட்டுனா .. அது சுலபமா எல்லோரோட மனசுலயும் பதிஞ்சிரும்.

நீங்க உங்க ரெஸ்டாரண்ட் உணர்ச்சி பூர்வமா நினைக்கிறீங்க. சோ நாம் வரவேற்பறை பக்கம் சாமி படங்கள் ஏதாவது வைக்கிறது உங்க ரெஸ்டாரண்ட் வர மக்களுக்கு ஒருவித மன நிறைவை கொடுக்கும். அது கூடவே சுவருக்கு நீங்க செலக்ட் பண்ணுற கலர், டைல்ஸ் கலர், இன்டெர் டெகரேஷன் இது எல்லாம் பொறுத்து தான் நாம பெயிண்ட்டிங்ஸ் தேர்ந்தெடுக்க முடியும். அது தான் புத்திசாலி தனமும் கூட...

நீங்க இந்த பேப்பர்ல சொல்லியிருக்கிற விஷயம் கூட, எக்ஸ்ட்ரா தான் பிளான் போட்டுறுக்கணும்... ?!" என்ன சரியா என கண்களால் கேட்டாள்.

"பரவாயில்லையே கண்டு கொண்டாளே ..." மெச்சி கொண்டான் அவளின் தேஜா வூ.

பார்வை பரிமாற்றம் பாட்டியின் கண்களிலும் தவறாமல் பட்டது. கண்டுகொள்ளவில்லை அவர்.

" சோ உங்க அடுத்த பிளான் ஹோட்டல் தொடங்கி இந்த ரெஸ்டாரண்ட் கூட அட்டச் பண்ணுற மாதிரி தான் இருக்கணும்.. ஒரு வேளை ஷாப்பிங் காம்ப்லெஸ் மாதிரி நீங்க இதை மாற்றி கொண்டாலும் ஆச்சரிய பட்றதுக்கு இல்லை.. சோ மெயின் எண்ட்ரன்ஸ்ல நான் முன்னவே சொன்ன மாதிரி அமைதியை தர மாதிரி, இல்லை மனசுக்கு இதம் தருவது போல பெயிண்ட்ங்ஸ் வைக்கிறது தான் செட் ஆகும்.. "

என்றபடி தன் கையில் இருந்த சில மாதிரி பெயிண்ட்டிங்க்ஸை காட்டினாள் .

அவன் ஒவ்வொன்றாய் பார்த்து கொண்டே வந்தான். பின் பாட்டியிடம் நகர்த்தினான்.

"சோ என்னோட கருத்தை நான் சொல்லிட்டேன். முடிவு உங்களோடது. தாங்க் யூ ." என்றபடி அமர்ந்து கொண்டாள் .


அவன் ஒன்றும் பேசவில்லை. பாட்டி தான் அவன் விருப்பத்தை கேட்டார். அவன் உங்கள் விருப்பம் என்று சொல்லி முடித்து கொண்டான்.

சரி தான். பிள்ளை ஏதோ டென்ஷன்ல இருக்கான். என்று நினைத்தபடி பாட்டி பேசலானார்..

"உங்க எல்லோரோட கருத்துமே நல்லா இருந்துச்சி. நீங்க காட்டுன்னா எல்ல வரைபடங்களும் அழகு. வாழ்த்துக்கள். உங்க எல்லோருக்குமே நல்ல எதிர்காலம் இருக்கு. நான் ஒருத்தரை மட்டும் தேர்ந்தெடுக்கிறதுனால இங்க யாரும் யாருக்கும் குறைஞ்சவங்க இல்லை...”
என்று கொஞ்சம் பீடிகை போட்டவர் பின்...

"அல்சோ நாங்க இந்த ப்ராஜெக்ட்டை என்னோட மருமகள்.. ரவியோட அம்மா நியாபகர்த்தமா இருக்கணும்னு நினைக்கிறோம். அவளுக்கு பிடிச்சதும் இந்த பொண்ணு சொல்லுற மாதிரி தான். எதேச்சையா இந்த பொண்ணு சொன்னது எப்படியோ எங்களுக்கு அவளோட விருப்பத்தை நியாபகபடுத்துது ..." என்றபடி ஆராதனா வை பார்த்து கூறியவர், பின் லேசான முறுவலுடன் ....
“சோ என்னோட இந்த ப்ராஜெக்ட் நான் மிஸ் ஆராதனா கம்பெனிக்கு கொடுக்கிறேன். அவர்களோட கணிப்பு சரி தான். நாங்க வச்சிருந்த அடுத்தடுத்த பிளான்ஸ் எல்லாம் பக்கவா ஜட்ஜ் பண்ணியிருக்காங்க. அந்த அறிவு கூர்மைக்காகவே அவர்களை நாங்க தேர்ந்தெடுக்கலாம்...! கங்கிராட்ஸ் மிஸ். ஆராதனா அண்ட் யுவர் டீம் " என்றபடி கைகளை தட்டியபடி வாழ்த்தை தெரிவித்து கொண்டார்.

அனைவரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதில் அந்த ஜொள்ளு பார்ட்டியும் தான். கூடவே அவளது பஞ்சு கரம் பற்றி வேறு வாழ்த்து தெரிவித்தான்..

இங்கே தேஜா வூ வின் கோவத்தை சொல்லவும் வேண்டுமா...?! காது வழி புகை வராத குறை தான்..

எல்லோரும் ஒன்றன் பின் ஒன்றாக கலைந்து சென்றனர். பாட்டியும் தனக்கு கொஞ்சம் சோர்வாக இருக்கிறது என்று சொல்லி சென்று விட்டார்.

ஆருவின் மனம் இவனது வாழ்திற்க்காக கொஞ்சம் ஏங்கியதோ..? அவனை தட்டு தடுமாறி நிமிர்ந்து பார்த்தாள். அவனோ உதாசீனமாய் இவள் பார்வையை எதிர் கொண்டான். பெண்ணவள் கொஞ்சம் வாடி போனாள்.

"ஓ.கே கைஸ் .. நாளையிலிருந்து நீங்க உங்களோட ஒர்க்ஸ் இ..ந்..த.. கம்பெனியி..லி..ரு..ந்..து.. தொடங்கலாம்.." என்றபடி சொன்னவன்... எல்லோரும் கிளம்பிய பின்.. ஆருவும் அகிலும் மட்டும் இருப்பதை உறுதி செய்துகொண்டு.." மிஸ். ஆராதனா... உங்ககிட்ட இந்த ட்ரையிங்ஸ் பற்றி கொஞ்சம் தெரிஞ்சிக்கணும்ன்னு நினைக்கிறன். மிஸ்ட்டர் அகில் நீங்க கொஞ்சம் வெளிய வெயிட் பண்ண முடியுமா..?!" அலுங்காமல் குலுங்காமல் அழகாய் அப்புறப்படுத்தினான்.

பெண்ணவள் மூளையில் மணி அடித்தது. "தனக்கு ஏதோ ஆப்பு ரெடி.. ரை..ட்..டு...."

அகில் கதவை சாத்தி விட்டு சென்றதும்.. மெதுவாக.. அதே சமயம் உறுதியான நடையுடன் இவள் புறம் வந்து கொண்டிருந்தான்.. இவளின் தேஜா வூ...

இதயதுடிப்பு கொஞ்சம் கூடியது...
அவன் பார்வை கூர்மையாய் இவளை துளைத்தது.

"சொல்லுங்க சார்.. உங்களுக்கு எந்த படத்துல விளக்கம் தேவை...?"

"இதோ.. இந்த படத்துல.." என்றபடி அவள் அவன் அறையினுள் நுழையும் போது வரைந்து கொண்டிருந்த படத்தை காட்டி கேட்டான்.

அதில் மேக கூட்டத்தின் நடுவே.. இரு வலியகரங்களில் பச்சை மற்றும் அடர்நீலம் கலந்த இரண்டு கற்களை கொடுப்பது போலவும், அதன் கீழே ஒரு பெண் கை நீட்டி வாங்க முற்பட்டது போலவும் இருந்தது... அந்த வரைபடம்..


"இதை இவன் எப்போது பார்த்தான்..?"

"சொல்லுங்க மிஸ்.ஆராதனா.. இதோட அர்த்தம் என்னனு தெரிஞ்சிக்கலாமா..?"

"நோ சார். இது உங்களுக்கானது அல்ல.. இது என்னோட தனிப்பட்டது." உறுதியாய் சொன்னாள்.

"ஓ... " அளவுக்கு அதிகமாய் வியந்தவன்.. அவள் புறம் இருந்த மேசையின் மீது சாய்ந்த வண்ணம் அவள் முகம் பார்த்தான்...

"அப்போ அந்த அவன் உன்னிடம் வழிஞ்சதும் தனிப்பட்ட விஷயம்ன்னு சொல்லுற..."

"இவன் யாரை சொல்கிறான்..?" யோசித்தவளுக்கு சில நொடி கழித்து தான் அந்த எதிர் கம்பெனிகாரன் ஏதோ பேசியது நினைவில் வந்தது. “இதற்கு தான் இவ்வளவு கோவமா..? அட லூசு பயலே! அந்த பக்கி சொன்னதே நான் கவனிக்கல... இதுல இவன் வேற..." என்று நினைத்தவள்.."அது சரி.. அவன் என்னிடம் வந்து பேசி கை குலுக்கினால் இவனுக்கு என்ன..?"

நிமிர்ந்து ஆண்மகனின் கண்களை சளைக்காமல் பார்த்து சொன்னாள்...

"யெஸ்.. இட்ஸ் மை பர்சனல்...."

சொல்லி முடிப்பதற்குள்.. அவன் கரம் மங்கையவள் சங்கு கழுத்தை இறுக்கியது...

"ஏய்.. என்னடி சொன்ன..?! ஹவ் டார் யூ....." மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கினான்..

பெண்ணவள் உடல் லேசாக உதறியது.. இருந்தும் வீம்பாய் நின்றாள். "இவன் யார் என்னை கேள்வி கேட்க..? இவனுக்கு எப்போது அந்த உரிமையை நான் கொடுத்தேன்.. ஏதோ காலையில் பார்த்தேன்.. பழகினேன்.. அவ்ளோ தான்.. அதற்குள் இவனுக்கு பெரிய இவன் என்று நினைப்பா....?"

அவன் கண்கள் இடுங்கியது இவள் நிமிர்வில்....

"ஹேய்.. உனக்கு புரியவில்லையா..? இல்லை ஒன்றும் தெரியாதா..? அவன் உன் கிட்ட வழியிறான்னா நீ அதை அவாய்ட் பண்ண வேண்டமா.. இப்படியா அலோவ் பண்ணுவா...அறிவு கெட்டவளே..." அவன் பாட்டிற்கு திட்டி கொண்டிருந்தான்.

அவள் அவன் கையை உதறி தள்ள முயன்றாள். அவன் பிடி இறுகியது..

"விடுங்க...முதல உங்க கையை எடுங்க...."

அவன் கோபம் குறைந்த பாடில்லை..

இறுக்கி பிடித்து கொண்டிருந்ததில் மூச்சு விட கொஞ்சம் சிரம பட்டாள்.. வலித்தது பெண்ணவளுக்கு. எவ்வளவு நேரம் தான் தாக்கு பிடிப்பாள் ஆண்மகனின் கோவத்தை.. அதுவும் இவ்வன்மையை ..?!

"பிளீஸ் ரவி.." பெண்ணவள் பலவீனமாய் கெஞ்சினாள்.

கண்ணோரமாய் நீர் கசிவு. அவன் மனதை என்னவோ செய்தது...
நெஞ்சில் வலித்தது அவனுக்கு...
சட்டென கைகளை உதறியவன்...அவள் கன்ன கதுப்பை இரு கரங்களிலும் ஏந்தி கொண்டான்...
நெற்றியை அவள் பிறை நெற்றியோடு சாய்த்தவன். . . "சாரி பேபி..." கரகரத்த குரலில் சொன்னான்.

அவள் உடல் நடுக்கம் அவளது பயத்தை எடுத்துரைத்தது..

ச் ச்ச . .. . முட்டாள் தனமாக நடந்து கொண்டேனே...

"சாரி பேபி.. வெரி சாரி.. இனி இது போல் நடந்து கொள்ள மாட்டேன். பிளீஸ்..." கெஞ்சினான்.

"கெஞ்சினால் எல்லாம் சரியாகி விடுமா.. போடா.." மனம் முரண்டு பிடித்தது அவளுக்கு..

அவன் கைகளை அப்புற படுத்தினாள். அவன் அவளையே பார்த்தான்.

"என்னத்த சாரி..போடா..." வார்த்தைகளை கடித்து துப்பினாள் பெண். ஆத்திரத்தில் மரியாதை எல்லாம் பறந்து விட்டது.

அவன் கண்கள் தீடிரென பளிச்சிட்டது. கண்கள் சிரிக்க உதடுகள் இறுகியது.

அவள் அவனை தள்ளி விட்டு நகர முற்பட்டாள். அவள் கைகளை பற்றி அவன் புறம் சட்டென இழுத்தான் அக்கயவன். பஞ்சு பொதி போல அவன் மார்பு மீது முகம் புதைத்த படி மோதினாள் ரதியவள். அத்தனை நெருக்கத்தில் மங்கையவளை தரிசிக்கையிலே கூடுதல் அழகாய் தெரிந்தாள். கூடவே சுகமான தீண்டல் வேறு...

அவள் பின்னங்கழுத்தில் தன் வலக்கையை பிடித்து சிரம் தாங்கியவன் மறுகரம் பெண்ணரசியின் மெல்லிடை அணைத்தது.

அவன் நெஞ்சில் கைகளை வைத்து விடுபட முற்பட்டது அவ்வெண்புறா.

இரும்பு மனம் படைத்தவன் போல் எதற்கும் அசைந்தானில்லை.. பெண்ணவள் தான் தோற்று போக வேண்டியதாகிற்று ...

அவன் கண்கள் அவளை ரசித்து உண்டது...

"என்ன பண்ணுற நீ? என்னை இப்போ விட போறியா இல்லையா..?" கத்தினாள் அவள்..

"ஷ் ஷ் ஷ்... காம் டவுன்....."

அவள் கண்களை பார்த்தவாறு ஏதோ பாஷை பேசினான். பெண்ணவள் விழி திறந்து கனா கண்டாள். அந்த கண்களின் மொழி இவளை ஏதோ செய்தது. மீண்டும் அதே உணர்வு... தேஜா வூ...! இதயத்தின் அடிஆழம் வரை புரியாத உணர்வு. அவன் கைகளில் பெண்ணவள் உடல் உருக தொடங்கியது...

அவள் காதோரமாய் அந்த முடிக்கற்றையை பட்டும் படாமலும் ஒதுக்கி விட்டான்...

"டோன்ட் டூ லைக் திஸ் பேபி.. டோன்ட் அலோவ் எனி ஒன் நியர் டு யு வித் ராங் தாட்ஸ் . . . ஓ.கே பேபி..." கிசுகிசுப்பான குரலில் கேட்டான்.. இவள் தலை தானாக சரி என்றது.

அவன் இதழ்கள் விரிந்தது. அதையும் இந்த வெட்கங்கெட்ட மனது ரசித்தது.

அவளிடமிருந்து விலகியவன்... "இப்போ நான் போறேன்... ஒரு த்ரீ மினிட்ஸ் கழிச்சி உன்னை சரி செய்துட்டு நீ வா..." என்றபடி அவள் சிவந்த முகத்தையும் கலைந்த முடியையும் சுட்டி கட்டிய படி நகர்ந்து விட்டான்.

பெண்ணவள் குழம்பி போனாள். தனக்கு என்ன ஆயிற்று.. நான் ஏன் இவனுருகில் இப்படி ஆகி போகிறேன்.. கடவுளே என்ன இது....?

“குழப்பங்கள் பிறக்கையில்
தெளிவுகள் பூக்கின்றன...”
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்லம்ஸ்
அடுத்த பதிவு போட்டாச்சு. மறக்காம உங்க கமெண்ட்ஸ் போட்ருங்க. கதை சரியா போகுதா இல்லையான்னு உங்க கருத்துக்கள் தான் என்னை வழி நடத்தும். So ur cmts r my energy tonic. :D;):love::giggle::whistle:

Thank u.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம்10

14702

"நிழல் போல நீயும்..
நிலையில்லா வெளிச்சம் போல
நினைவுகளும்...
எனதெண்ணத்தை ஆக்கிரமிக்கின்றன...
நித்தமும் குழம்பி..
நிஜத்தின் நகலில்
வாழ்கிறேன் நானடா...!"



"டேய்... நீ யாருடா...?! எதுக்காக டா என்னை அன்றைக்கு காப்பாற்றுன... ?!?
சரி...! காப்பாத்திட்ட..!! நல்ல விஷயம் தான்... ஆனால் முகத்தை காட்டிட்டு போயிருக்க வேண்டியது தானடா மடையா...?!! உன்னால நான் தினம் தினம் புலம்ப வேண்டியதா இருக்குது...!

போடா... ராஸ்கல்...! ஒரு மட்டு மரியாதை வேண்டாம்... இப்படியா பச்ச பிள்ளையை காப்பாத்தி.. அம்போன்னு விட்டுட்டு போறது...?!?

இப்போ பாரு நீ யாரா இருக்கும்ன்னு யோசிச்சு யோசிச்சு மண்டையே வெடிச்சிடும் போல இருக்குது...

இனி எப்போடா என்னை பார்க்க வருவ...?! இல்லை நீ வராமலே போய்டுவியா....??!

ஷிட்...!ஒன்னும் புரிய மாட்டுக்குது...

உன் நியபகர்த்தமா இந்த கற்கள் மட்டும் தான் இருக்கு.. இதை எதுக்கு அந்த நேரங்கெட்ட சிட்டுவேசன்ல தந்தன்னு எனக்கு சுத்தமா புரியல....!?

பாரு... இந்த கேணச்சியும்.. அதை பத்திரமா வைத்து கொள்ளனும் அப்டிங்கிற நினைப்பில.. கழுத்து செயின்ல டாலரா டிசைன் பண்ணி போட்டுக்கிட்டு சுத்துரா......!"

அந்த முகம் மறைத்த ஆண்மகன் தந்த.. நீலம் மற்றும் பச்சை நிற கற்களை இதயவடிவில் செதுக்கி அதை ஒன்றோடு ஒன்று பொருந்துமாறு ஒட்டி.. ஒரு பக்கம் நீல நிறம் மறு பக்கம் பச்சை நிறம் தெரியும் படி வடிவமைத்து,அதை தங்க நிற பிரேம்குள் அடக்கி டாலராக மாற்றி விட்டாள்.. இப்போது அது அவளது கழுத்து சங்கிலியில் தொங்கியபடி.. அவளது நெஞ்சை முத்தமிட்டு கொண்டிருக்கிறது....


ஹ்ம்மம்ம்....

"விழி திறந்து
பார்த்திருந்தால்..
விதி மாறி
பாடியிருக்குமோ?!?!..."


கைகளில் அந்த டாலரை ஒரு முறை தூக்கி பார்த்து கொண்டாள் ஆராதனா.

"நான் ஏன் இப்படி ஆனேன். உனக்கும் எனக்கும் என்ன சம்மந்தம்... எதற்காக உன்னை பற்றி அறிய வேண்டும் என என் மனம் துடிக்கிறது...?"

"உன் நினைவு இப்பொழுது எல்லாம் அடிக்கடி வருகிறது. அதுவும் அவனை காண்கையில் ஏதோ பெயர் தெரியா உணர்வு..

நான் என்ன செய்ய... ?!"

எதற்கும் அவளிடத்தில் பதில் இல்லை...

ஹ்ம்ம்... கண்டிப்பா நான் இதை கூடிய சீக்கிரமே தெரிஞ்சிப்பேன் அப்படின்னு தோணுது... ஆனா.. அவன்கிட்ட அந்த தேஜா வூகிட்ட இனி ஜாக்கிரதையா இருக்கணும். ரொம்ப தான் பண்ணுறான்.
நான் யாருன்னு நினைச்சிக்கிட்டான்... காட்டுறேன்...

நான் ஒன்னும் உன்னோட இழுப்புக்கு எல்லாம் வளையிற ரப்பர்ன்னு நினைச்சியா... போடா... டேய்...

இனி தான் இந்த ஆராதனாவோட இன்னொரு முகத்தை பார்க்க போற..
ஹா ஹா ஹா...." தனக்கு தானே கை கொடுத்து கொண்டாள். காலரே இல்லாத சட்டையை தூக்கி விட்டு கொண்டாள் அவள்.

தன் சிந்தனையை ஒதுக்கி விட்டு.. கையில் இருந்த பென்சில் கொண்டு மனதில் தோன்றியதை வரையலானாள் அந்த ஓவியரசி.

இருந்தும் அந்த ஓவியம் கூட பாதகம் செய்தது போல. ஓவிய குவியலில் கடைசியில் பளிச்சிட்டது என்னவோ அந்த நிழல் தேவன் தான்.. கொஞ்சம் அழகாய் சிரித்த படி... இவளை மேலும் பைத்தியம் ஆக்க.

################

"யெஸ்... சேகர்... நாம நினைச்சது போல தான் எல்லாம் சரியா போகுது... "

"என்னாம்மா சொல்றீங்க... நீங்க பார்த்தீங்களா...? அந்த பொண்ணுட்ட பேசுனீங்களா...? ஏதாவது விஷயம் தெரிஞ்சா....?" குரலில் பதட்டம் அப்பட்டமாய் தெரிந்தது...

"ஷ்... எதுக்கு இவ்ளோ டென்ஷன் ஆகுற...?!" அடக்கினார் அன்னை.

"எப்படிம்மா... என்னால அமைதியா இருக்க முடியும்...? என் தேவதைம்மா அவள்...! அவள் இல்லாம இவ்ளோ நாள் நான் பட்ட கஷ்டம் போதாதா...?!?" மனமுடைந்து அழுதார்... அந்த முதிர்ந்த மனதில் இத்தனை நாட்களாய் அடக்கி வைத்திருந்த சோகம்... குமுறளாய் வெளிவந்தது...


"டேய்.. என்ன இது...? முதல கண்ணை துடை...!" அதட்டினார் பெரியவர்.

"எல்லாம் நல்லா படியா நடக்கணும்ன்னா நாம கொஞ்சம் பொறுமையா இருந்து தான் ஆகணும்."

"இன்னும் கொஞ்ச நாள் தான்... நமக்கு கிடைக்க வேண்டியது கிடைக்கட்டும் ... அப்புறம் பாருடா... என்னோட ஆட்டத்தை...." கம்பீரமாய் கர்ஜித்தது பெண் சிங்கம் .

"இது நாள் வரை இங்கே...." என்று இதயத்தை தொட்டு காட்டி "சேர்த்து வச்சிருக்கேன்டா... என்னோட சோகத்தை எல்லாம் வெறியா சேர்த்து வச்சிருக்கேன்டா..."

"எல்லாம் எதுக்குன்னு நினைக்கிறா... பழி வாங்க தான்.... நம்ம குடும்பத்தை இந்த நிலைக்கு ஆளாக்குனவனை எப்படிடா சும்மா விடுவேன்னு நினைச்ச....??!"
இடியாய் வந்தது அவரது கர்ஜனை..

"அம்மா.... எனக்கு அவள் மீண்டும் திரும்பி வந்தா போதும்மா... நான் நிம்மதியா சந்தோஷமா என்னோட மிச்ச நாட்களை அவள் கூட கழிக்கணும். இது தான் என்னோட ஆசை.."

"அட... போடா....! நீ ஏன் கவலை படுற... கூடிய சீக்கிரமே அது நடக்கும்டா..."

"ஆனால் அவள் உன் கூட வாழணும்னா நமக்கு அது தேவை. அதுக்கு தடையா இருக்கிறவனை நாம கண்டுபிடிக்கணும்டா. அவனை தூக்குனா தான் நம்ம வம்சம் நிம்மதியா வாழ முடியும்டா.. புரிஞ்சிக்கோ....!அதுக்காக வேனும் நாம இப்போ இந்த காரியத்தை செய்து தான் ஆக வேண்டும்.

மனசை தேத்திக்கோ. எல்லாம் நல்ல படியா நடக்கும்"


அவரும் ஆமோதிப்பாய் தலை அசைத்தபடியே கேட்டார்..


"அம்மா... நாம் ஏன் இதை வேற டீடெக்ட்வ் ஏஜென்சி மாதிரி யார் கையிலையாவது பொறுப்பை ஒப்படைக்க கூடாது.... ?!"

தாயின் முகத்தின் கோபசாயல் தெரிவதை கண்டதும்..... குரல் பிசிறியது...

"இல்லைம்மா.. ஏன் சொல்றேன்னா... நாம் இவ்ளோ நாள் தனியா தேடியே கிடைக்கல... அதுவும் இல்லாம இப்போ வரை நம்முடைய எதிரி யாருன்னே கண்டுபிடிக்க முடியல... "

"டேய் நிறுத்துடா...! யாரு சொன்னா... கண்டுபிடிகலன்னு....? எப்போ நம்ம குலம் தலைக்க வந்தவளை சாய்த்தானோ.. அப்பவே எனக்கு ஒரு சந்தேகம். இருந்தும் அமைதியா இருந்தேன். ஏன்...?

எலியை பொரி வச்சி பிடிக்க தான்.. ஆனா அது கொஞ்சம் சாமர்த்தியமான எலி. ஆதாரம் இல்லாம நம்மலாள எதுவும் பண்ண முடியாது.

அதுவும் இல்லாம இதுக்கு பின்னாடி யாரெல்லாம் இருக்காங்கன்னு எனக்கு தெரியணும். வேர் நுனி வரை... ஒன்னும் இல்லாம ஆக்கணும்.. அதுக்காக தான்டா.... இவ்ளோ பொறுமையா யாருக்கும் தெரியாம ஹாண்டில் பண்ணுறேன்.

கவலைப்படதடா.. கூடிய சீக்கிரம் நீ பார்க்க தானே போற... இந்த லேடியோட ஆட்டத்தை...!"


பெண் சிங்கத்தின் உறுமல் கொஞ்சம் அதிகமாக தான் இருந்ததோ..?!

#####################

"குமரி பெண்ணின் உள்ளத்திலே..
குடியிருக்க நான் வர வேண்டும்...
குடியிருக்க நான் வருவதென்றால் வாடகை என்ன தர வேண்டும்...."


"ம் ம் ம் ம் ம் ம் ....."

காதல் தந்த உற்சாகத்தில் மனதை மயக்கிய படி பாடி கொண்டிருந்தான் ராஜேஷ். தன் மங்கையவளை பார்த்து.

ஆனால் அப்பெண்குட்டி கீதுவோ... நிமிர்ந்தாள் இல்லை. குனிந்த தலை குனிந்தபடி தன் காரியமே கண்ணாக மிஷினில் தைத்து கொண்டிருந்தாள்.
இப்பொழுது எல்லாம் இவனை அடிக்கடி எங்கேயாவது ஏதேச்சையாக சந்திப்பது போல தினமும் ஒரு முறையேனும் பார்க்க முடிகிறது.

அவளுக்கு இது புரியாமல் இல்லை. ஆனால் அவன் காதலின் மீது கன்னிக்கு அத்துணை நம்பிக்கை இன்னும் பிறக்கவில்லை. அதனால் விலகியே இருக்க விரும்பியது இப்பெண் மனம்.

"ஹ்ம்மம்ம்... இது வேலைக்கு ஆகாதுடா ராஜேஷ்... எடுத்து விடுறா உன் பாட்டை.." என்று தனக்கு தானே சொல்லி கொண்டவன்...

ஜன்னல் வழி தெரிந்த தன் காதல் நாயகியை பார்த்து....

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்"


மயக்கும் குரலில் பாடினான் அவன்.

அவளுக்கு சிரிப்பு பொத்து கொண்டு வந்தது. இருந்தும் அடக்கினாள். எங்கே தன் உள்மனதை அறிந்து கொள்வானோ...? தனக்கே இன்னும் அவன் பால் வந்த உணர்வுக்கு அர்த்தம் சரிவர புரியவில்லை.. இதில் இவன் பாட்டிற்கு ஏதாவது செய்து மனதை கலைத்து விடுவானோ என்று ஒரு அச்சம்.

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்

ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே"


என்ற படி ஜன்னல் வழி தெரிந்த அவளது பாதி உருவத்தை தரிசித்த படியே... ரசனையாய் பாடினான்.

"ராணியின் முகமே ரசிப்பதில் சுகமே
பூரண நிலவோ புன்னகை மலரோ
பூரண நிலவோ புன்னகை மலரோ
அழகினை வடித்தேன் அமுதத்தை குடித்தேன்
அணைக்கத் துடித்தேன்…"


பெண்ணவள் நாணி சிலிர்த்து போனாள். "ச் ச... இவன் என்ன இப்படி பாடுகிறான். இவன் உண்மையிலே என்னை விரும்புகிறானா... இல்லை இதுவும் ஆர்வ கோளாறா...?!"


ரதியின் மனம் அறியாத மன்மதனோ தொடர்ந்து பாடிக்கொண்டிருந்தான்.

"ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்..."



அழகாய் பைக்கில் சாய்ந்த படி ஜன்னல் தேவியை ரசித்த படி.. அவளை இம்சிக்கவே அம்சமாய் பாடினான். கடைசி வரியில் அவன் வார்த்தைகள் வெட்க பட்டதோ என்னவோ... பெண்ணவள் வெட்கம் ஆண் மகன் கண்ணுக்கு அச்சு பிசகாமல் பட்டது...

"அட... பிள்ளை வெட்க படுதே... அப்போ சம் திங் ... சம் திங்..... " என்ற படி அவள் இருந்த திசை நோக்கி ஒரு அடி எடுத்து வைத்தான் அக்காதல் ஆசைக்காரன்.


அதற்குள் பட்டென ஜன்னல் கதவை அடித்து சாய்த்தினாள் அத்தேவி.

யாரோ கன்னத்தில் அடித்தது போல இருந்தது அக்காதலனுக்கு.

முகம் கூம்பி போனது. "நாம் அவசர பட்டு விட்டோமோ.... ஒரு வேளை... நமக்கு தோன்றிய உணர்வு அவளுக்கு தோன்ற வில்லையோ... தேவையில்லாமல் இப்பெண்ணை தொந்தரவு செய்கிறோமோ..." என்றெல்லாம் எண்ணம் தோன்றி மறைந்தது.

வருத்தத்துடன் திரும்பி நடந்து வந்து தன் பைக்கில் ஏறி அமர்ந்தான். மீண்டும் ஒரு முறை தேவியின் தரிசனத்திற்க்காக மனம் ஏங்கியது. மெதுவாக தலை உயர்த்தி பார்த்தான். மூடிய கதவு அவனை பார்த்து கண்ணடித்தது.

ஹ்ம்மம்ம்... பெருமூச்சு விட்டப்படி பைக்கை ஸ்டார்ட் செய்தான்.

அங்கே அச்சத்தத்தை கேட்டதும் பெண்ணவள் உள்ளம் துடித்து போனாள். "எ..ன்..ன.. கிளம்ப போகிறானா... இவ்வளவு தானா இவனது காதல்...?" மங்கையின் மனம் பரிதவித்தது. ஓடி சென்று வாசல் புறம் பார்த்தாள்.

அவனது பைக் தெரு முனையை கடப்பது புள்ளியாய் தெரிந்தது.

இப்போது ஏங்குவது பெண்ணவள் முறையாயிற்று.

"ஓடி மறைந்து...
பாடி களைத்து..
பாரமுகம் காட்டுவது...
காதலின் விந்தைகளில் ஒன்றோ..?!"


###############


"டேய்.. எருமை...ஏன்டா.. இவ்ளோ ஸ்லோவா போற...கொஞ்சம் வேகமா தான் போயென். இப்படி ஒரு தகர டப்பா வண்டியில போய் ஏன் ஆண்டவா என்னை போக வச்ச...... ச்ச...உனக்கு கருணையே இல்லையா..." புலம்பியபடி ஆரு என்கிற ஆராதனா தன் தேரோட்டியை ... அதாவது வண்டி ஓட்டுபவனை.. கொஞ்சினாள். அப்புகழுக்கு சொந்தக்காரன் அகில் என்னும் அடிமை தோழன்.

"இவ்வளவு சொல்றேனே.. கொஞ்சமாது கேட்கிறியா... சரியான வெத்து வேட்டு... " அர்ச்சனை மலர்களால் மாலை தொடுத்தாள் ஆராதனா.

"ஏய்.. நீ தானே காலையிலே போன் போட்டு பஸ் மிஸ் பண்ணிட்டேன். என்னையும் உன் கூடவே கூட்டிட்டு போன்னு கெஞ்சுன... இப்போ என்னடான்..ன்..னா நான் என்னமோ அம்மணியை கெஞ்சி என் வண்டியில ஏற்றிக்கிட்டு வந்தது போல சொல்லுற... நீயெல்லாம் அடங்க மாட்டடி..."

"உன் கொலஸ்ட்ராலை குறைக்க ஒருத்தன் வருவான்டி.. அப்போ இருக்குடி உனக்கு கச்சேரி..."

"அட போடா... இவர் பெரிய விசுவாமித்திரர். சொன்னவுடன் நடந்துற போகுது. போடா... போடா... உன்னை மாதிரி நாங்க எத்தனை பேரை பார்த்திருப்போம்... வந்துட்டான்... சாபம் கொடுக்கிறாராம்."என்றபடி அவன் தலைமுடியை பிடித்து ஒரு ஆட்டு ஆட்டினாள்.

கைகளின் கொஞ்சல் கொஞ்சம் மிஞ்சவே... பொறுத்து பார்த்த அகில் அல்லாலோலோ பட வைத்து விட்டான் ஆருவை.

அவள் எதிர்பாராத நேரத்தில் வண்டியை கீறிச்சிட்டு நிறுத்தியவன்... அவள் என்ன என்று உணர்வதற்குள்ளே அவளை பைக்கிலிருந்து இறக்கி விட்டு விட்டு சென்று விட்டான்.

"அட கிரதகா... சாமுண்டகா..."தலையில் கை வைத்த படி புலம்பினாள் பெண்.

"டேய்.. டேய்... நில்லுடா... டேய்..." பைக் பின்னால் கொஞ்சம் தூரம் ஓடினாள். அவன் நின்றால் தானே... மூச்சு வாங்க ஓடி வந்து நின்றவள்... கோபத்தின் வாசத்தை நுகர்ந்து நாடி நரம்பெங்கும் அனுப்பி கொண்டிருந்தாள் சுற்றம் மறந்து.

"எருமை மாடு... சரியான கடா எருமைடா நீ... போடா போ... போற வழியில எங்கயாவது போய் விழுந்து தொலைப்படா... "

"ஷிட்.. ஷிட்..." கைகளால் காற்றில் ஓங்கி அடித்து தன் கோபத்தை காட்டினாள்.


கோபம்...மனதனின் சிந்தையை மலுங்கடிக்கும் ஆயுதங்களில் ஒன்று..
ஆருவால் இதை ஜீரணிக்கவே முடியவில்லை..

"ஹவ் டார்..."
வார்த்தைகள் கொதித்தன.
"யூ.... ராஸ்கல்...."
குரல் கொப்பளித்தது.

பக்கத்தில் இருப்பவர்களை மறந்து வஞ்சகமில்லாமல் வசைமாரி பொழிந்தது அச்செவ்விதழ்கள்.

தன் சுடும் கண்களால் அக்கம் பக்கம் துலாவியவள்.. வேறு வழியின்றி பஸ் நிறுத்தம் நோக்கி நடக்கலானாள்.


அப்போது.. "ஹேய் ஆராதனா... ஆராத..னா.... என்ன..ங்..க... மிஸ்.ஆராதனா..."

அக்கோப கன்னிகைக்கு காது இப்போது எப்படி வேலை செய்யும்.. அவள் தான் எருமையை மேடையேற்றி வார்த்தைகளால் அலங்கரித்து கொண்டிருந்தாளே..

திரும்பவும்.. இப்போது வெகு அருகில் "மிஸ் ஆராதனா..." அழுத்தமாய் கொஞ்சம் சத்தமாய் அழைத்தது ஒரு ஆண்குரல். அவளது இரத்த அழுத்தத்திற்கு இடைவெளி விட்டது அவளிதயம் இம்முறை. அதனால் சிந்தனை திரும்பியது அப்பெண்ணிற்கு.

அடுத்த அடி எடுத்து வைக்கவிருந்த கால்களை நிறுத்தி திரும்பி பார்த்தாள். அருகில் அழைத்தபடி அவன் வந்து கொண்டிருந்தான். பைக்கின் வேகத்தை குறைத்தபடி வந்தவன், தன் தலைகவசத்தை கழட்டியவன்...

"என்ன ஆச்சு ஆராதனா... கூப்பிட கூப்பிட போய்கிட்டே இருக்கிறீங்க... ஏதாவது டென்ஷன்ல இருக்கிறீங்களா...?!" என்றான் அவன். அவன் அன்று வந்திருந்த எதிர் கம்பெனி காரன். அந்த வழிசல் பார்ட்டி.

"இவனா..?! இவன் கண்ணுல தான் நான் இப்போ மாட்டனுமா... அட.. ஆண்டவரே... உமக்கு இன்று என்ன ஆயிற்று... எனக்கு ஏன் இப்படி சோதனை மேல் சோதனையா கொடுக்கிறீர்...?!" தலையில் அடித்து கொள்ளாத குறையாக வெம்பினாள் பெண்.

"ஹீ ஹீ..."பற்கள் மின்ன முகம் கடுகடுக்க... சிடுசிடு சொற்களை கலகல சொல்லில் பதித்து... பொலபொலவென பேச தொடங்கினாள் இக்காவியரசி.

"ஹே... நீ..யா... என்ன இந்த பக்கம்..."

"என்னோட ஆபிஸ் உன்னோட புது ஆபிஸ் தாண்டி தான் இருக்கு... சோ இந்த பக்கம் தான் வந்தா..க..னு..ம்...?!" சிரித்தபடி பேசினான் அக்கயவன்.

"ஓ.. அப்படியா.. சரி.. ஓ. கே.. பாய்.." கை ஆட்டி விடைபெற முனைந்த மங்கையின் வழி மறைத்து சொன்னான் அக்கள்வன்..

"ஹேய்.. என்ன அதுக்குள்ள கிளம்புற... பொறு.. அந்த ஆபிசுக்கு தானே போற... வா.. நான் உன்னை ட்ராப் பண்ணுறேன்.." அழுங்காமல் குழுங்காமல் உறவை உயிர்பிக்க முனைந்தான்.

"ஒரு எருமை தள்ளிவிட்டா... இன்னொரு காட்டெருமை தூக்க வருதே.. இதுகள்ட்டலாம் இப்படி மாட்டிக்கிட்டு முழிக்க வேண்டியிருக்கே.." மனம் கூக்குரலிட்டது.

இருந்தும் மலர்ந்த முகமாகவே பேசினாள் பெண்.
"நோ.. நோ..நான் போகிடுவேன். உங்களுக்கு எதுக்கு தேவையில்லாத கஷ்டம்.."

"இதுல என்னங்க கஷ்டம். கஷ்டம்ன்னு நான் நினைச்சிருந்தா இஷ்டப்பட்டு இருப்பேனா..?" ஆசை அவன் வார்த்தைகளில் பிரதிபலித்ததோ...?!

"நோ. மிஸ்டர் என்னால தனியா போயிட முடியும். இப்போ உங்களோட உதவி தேவையில்லை. தப்பா எடுத்துக்காதீங்க.." என்றபடி அவள் முன்னேறி நடந்தாள்.

"மிஸ்.ஆராதனா" மீண்டும் அழைத்தது அக்குரல்.

"ச்ச... சரியான இம்சைடா இவன்"

திரும்பி பாராமல் நடையை துரித படுத்தினாள். அவ்விருவழி சாலையின் ஒன்றை வேகமாக கடந்து, மறுபுறம் உள்ள அடுத்த சாலையை கடக்க எண்ணி அவள் கால் வைத்ததும் தான்... நடந்தது அச்சம்பவம்.

எதிர்பாராத நிகழ்வுகளை எதிர்பார்க்கத் தவறினால் அந்த எதிர்பாராத நிகழ்வுகள் எதிர்பார்க்கக் கூடிய நிகழ்வுகளாய் மாறி விடும் ஆபத்து உண்டு என்பது போல... மிக துல்லியமாக... இதய துடிப்பு நிறுத்தும் சிறு இடைவெளிக்குள்ளாக எல்லாம் கச்சிதமாக நடந்தது...

பெண்ணவள் உடல் அந்நொடி ஆட்டம் கண்டது. மூளை கூட அக்கணத்தின் வீரியத்தில் நடுநடுங்கி போனது. செய்வது அறியாமல் நின்ற இடத்திலே அசையாமல் நின்றிருந்தாள் பெண்.

"இதோ... இன்னும் கொஞ்சம் அடி தான் மிச்சம். நான் டயரடியில் வைத்த எலுமிச்சம் பழம் போல ஆக போகிறேன்..

அதோ.. வருகிறான்... மஞ்சள் நிற அரக்கன்... நிச்சயம் எமலோகம் தான்.

அந்த கடாமாடுக்கு சரியான கரிநாக்கு தான் போல. இல்லையெனில் எருமையின் சாபம் இப்படி உடனே பலிக்குமா என்ன..?! ஆனால் இவன் என் கொலஸ்ட்ராலை மட்டுமல்ல... மொத்த பாடியையே நசுக்கிடுவானே...?

நான் இப்போ என்ன செய்ய..?"

மங்கையவள் தேகம் தீண்ட காத்திருந்த அத்தருணத்தில்...

மாயம் நிகழ்ந்தது.. மங்கையவள் கண் முன்னே... மாயாஜாலம் நடந்தேறியேறியது... அந்த மந்திர வித்தைக்காரன் கைகள் தான் எவ்வளவு இலகுவாய் தாங்குகிறது... பஞ்சு போல... மென்மையாக ..

"நான் போகிறேன்.. மேலே.. மேலே....
பூலோகமே கீழே கீழே..."

அதோ அங்கே அந்த வெண்மகளுக்கு நடுவே தெரிவது யாரோ...?!

அ..து... கலர்புல் லேடி தானே.. ஆம்..
உலகத்திற்கே வண்ணங்களை வாரி வழங்கும் அந்த எட்டடுக்கு உடைக்காரியாம் வானவில்லின் நிறங்கள் மாறி மாறி... விழிகளில் நிரம்பி... தலையிலே கொஞ்சம் பட்டாம் பூச்சியாய் ரீங்காரமிட்டது...

அந்த ரகசிய பாஷையை அத்தலைவி தான் எப்படி தாங்குவாள்..?!

தானாக மேல் இமைகள் கீழ் இமைகளை சத்தமின்றி முத்தமிட்டது...
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai friends :love::D
Next ud upload paniten.
Read and share ur cmts.
Thank u for ur support.
 

Deiyamma

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

என்னை சாய்த்தாயே உயிர் தாராயோ

அத்தியாயம் 11

14722
இக்கட்டில் நானிருக்க
இதழணைக்க நீ
இலவசமாய் வருகிறாய்...
இது காதலின் மாயாஜாலமோ?!


காற்று கூட புக முடியாத படி... தன்னை இப்படி இறுக்கி அணைத்தபடி ஆடவன் ஒருவன் இருப்பதை சற்றும் உணராமல் அப்பேதை அழகாய் கண் மூடி காதல் தேவனை தியனித்திருந்தாள்.

அந்நொடி அந்த ஸ்பரிசம்... அவளுக்கு எதையோ உணர்த்தியது... நெஞ்சில் தலை சாய்த்து இருந்ததால் அவனது இதய கீதம் துல்லியமாய் பெண்ணவள் காதில் இசை பாடியது.

முகம் பற்றி கன்னம் தட்டி இதழ் பதித்து அவன் பரிதவித்ததில் அந்த அவனுக்கே உரிய பிரத்யோக வாசனை பழைய நினைவுகளை மீட்டெடுத்தது.

இந்த துடிப்பு..
இந்த பதற்றம்..
இந்த அணைப்பு..
இந்த மன்றாடல்..
இந்த மணம்...
எல்லாம் எதையோ... பெண்ணவளுக்குள் புகுத்தி நாடி நரம்பெங்கும் பரவி... அவளை பாடாய் படுத்தியது...

அவளது நினைவு மெதுவாக அவள் நெஞ்சில் குலசம் விசாரித்த படி கண் திறக்க சொன்னது. பேதையவள் அந்த ஆடவனின் சுகமான அணைப்பில் கட்டுண்டு கிடக்கவே விரும்பினாள்.

"ம்ஹும்...." தலையை இன்னும் நெஞ்சினுள் புதைத்துக் கொண்டாள்.
அதே பாதுகாப்பு உணர்வு பெண்ணிற்குள் எழாமல் இல்லை. மனம் அடித்து சொன்னது இது அவ..ன்..னே தான்.

விழி திறந்து பார்த்தால் என்..ன...
இல்லை வேண்டாம். பார்த்தவுடன் அவன் அன்று போல் மறைந்து விட்டால்.. என்ன செய்வது.. இனி எப்போது வருவானோ..?! இதே போலான இறுகிய அணைப்பு இனி கிடைக்குமோ கிடைக்காதோ... அப்படியே கொஞ்சம் நேரம் போகட்டுமே...


"ஆராதனா.. ஆராதனா..."

"ஹே ஆரு..."

"நான் பேசுறது கேட்குதா..."

குளிர்ச்சியாய் கண்களில் எதுவோ பட்டு சிதறவும் பெண்ணிற்குள் மின்சார தீண்டல். மெதுவாக இமைகளை பிரித்து காட்சியை உள்வாங்க முற்பட்டாள்.

அதற்குள் மீண்டும் ஒரு உழுக்கல்.

"ஆரு... ஆரு..
கண்ணை திறந்து பாரு.. ஹே... கம் ஆன்.."

இப்போது கொஞ்சம் இலகுவாக இருந்தது இமைகளை பிரிப்பதில். எதிரே கொஞ்சம் பதற்றத்தோடு இவளை தாங்கி பிடித்த படி... அமர்ந்த வாக்கில் தெரிந்தான் அவன்.

"ரா..ரா...ம்..."

"யெஸ்.. ராம் தான். கொஞ்ச நேரத்துல நல்லா பயங்காட்டிட்ட போ... எழுந்திடு."

"இப்படியா பார்க்காமா ரோடு கிராஸ் பண்ணுவ.. அப்படி என்ன அவசரம்.?!"

"நல்ல வேளை உனக்கு ஒன்னும் ஆகலை. இல்லைன்னா என்ன நடந்திருக்கும்...

கொஞ்சம் கூட அறிவே இல்லை உனக்கு.."

அவன் பாட்டிற்கு திட்டி கொண்டிருந்தான்.

"நான் எப்படி பயந்து போனேன் தெரியுமா..சரியான லூசுடி நீ.."

முகத்தில் படிந்த நீர்த்திவலைகளை துப்பட்டா கொண்டு துடைத்து விட்டான்.

"ஹ்ம்ம்... கையை பிடி... எழுந்திரு... ம்ம்ம்... சொல்றேன்ல..."

"வா... இங்க வந்து இப்படி உட்காரு... ஹ்ம்ம்.. வா வா..."

அவன் பேச்சிற்கு அப்படியே செயலாற்றினாள்.
அவள் அமர உதவி செய்தவன்,

"இதை குடி. கொஞ்சம் ரிலாக்ஸா பீல் பண்ணுவ."

பேதையவள் எண்ணம் முழுதும் அந்த நிழல் தேவனே ஆக்கிரமித்திருந்தான். அவன் எங்கே போனான்? இவன் எப்போது இங்கே வந்தான்.? குழப்பத்தில் பெண் அருகிலிருந்தவர்களில் அவன் தென்படுகிறானா என தேடினாள்..

"ஹே.. நான் பாட்டிற்கு பேசிட்டு இருக்கேன். நீ யாரை தேடுற...?"

"ஷ் ஷ்... ராம் நீ எப்படி இங்க வந்த... என்னை யாரு காப்பாற்றுனா... முதல அதை சொல்லு..!"

"ஏன்?என்ன ஆச்சு?! ஹேய் ஆர் யு ஆல் ரைட்?" தோள்களை ஆதரவாய் தடவிய படி கேட்டான்.

"யெஸ். ஐ ம் ஓ.கே. சொல்லு என்னை யாரு காப்பாற்றுனா..ஹ்ம்ம்.. சொல்லு."

"அது யாருன்னு சரியா கவனிக்கல. நான் உன்னோட எதிர் பக்கம் நின்னுட்டு இருந்தேன். அப்போ நீ நான் இருக்கிற பக்கம் வந்துகிட்டு இருந்தா. அப்போ பார்த்து அந்த லாரி தீடீர்ன்னு எங்கிருந்து தான் வந்துச்சோ.. அவ்வளவு வேகம்.. இதுல வேற அம்மையார் எதையும் கவனிக்காமா வேகமா வர்றீங்க. உன் பின்னாடி இருந்து தான் யாரோ உன்னை தடுத்து காப்பாற்றுனது. அதுக்குள்ள என்னவோ ஏதோன்னு கூட்டம் கூடிருற்று... பின்ன என்ன நான் ரோடு கிராஸ் பண்ணி வந்து பார்க்கும் போ நீ கீழ படுத்து இருந்த..."

"எனக்கு அப்படியே தூக்கிவாரி போட்ருற்றி.."

"என்னமா இப்போ கொஞ்சம் பரவாயில்லையா...?!"

பெண்ணவள் மனம் அரற்றியது.. இது அவன் தான்.எங்கே போனான்.எங்கிருந்து வந்தான். எதற்காக உடனே போய் விட்டான். மங்கை மனம் குழம்பியது.

"ஹ்ம்ம்.. எழுந்துடுமா.. வா.. நான் உன்னை ட்ராப் பண்ணுறேன். வீட்டுக்கு ரிட்டன் போறியா.. இல்லை ஆபீஸா..?"

"இல்லை ராம். எனக்கு ஒன்னுமில்லை. பதட்டத்துல வந்த மயக்கம் தான் அது. நவ் ஐ ம் ஆல் ரைட். என்னை ஆபீசிலயே விட்ரு."

"ஹ்ம்ம்.. சரி வா. உன்னால முடியும்ல.. ?!"

அவனுக்கு இவள் நிலை கொஞ்சம் கவலையாக இருந்தது.

"யெஸ் ராம். ஐ கேன்." ஒருவாறு தன்னை நிலைப்படுத்தி கொண்டு , அவனுடன் செல்ல தயாரானாள்.

######################


"கால பயணங்களின் வெற்றி பாடங்கள்
வாழ்க்கையில் சிலவற்றை புதிதாக உருவாக்கலாம், இல்லாமல் அழிக்கலாம், இல்லையெனில் பிறருக்கு உதவுமாறு அளிக்கலாம், ஆனால் எப்பொழுதும் அதை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுசெல்ல துணியாதீர்கள்.

அப்படியே நீங்கள் பழைய நிலைக்கு அதை கொண்டு சென்றாலும், அது உங்களுக்கு முந்தைய சந்தோசத்தை எப்பொழுதும் திருப்பித்தருவதில்லை. உங்களது வாழ்வின் நேரம் மட்டுமே வீணாகும். காலத்தின் வேகத்தில் பயணிக்க கற்று கொள்ளுங்கள்.

காலம் உங்களுக்கு பல பாடங்களை கற்றுத்தர ஓடிக்கொண்டிருக்கிறது. காலத்தின் பாடங்களை கற்றுக்கொண்டால் அதுவே உங்களை சிறந்த வெற்றியாளராக மாற்றும். காலை வணக்கம்."


புது நம்பரிலிருந்து தனக்கு வந்த அந்த குறுஞ்செய்தியை விழி அசைக்காமல் பார்த்து கொண்டிருந்தார் அந்த அயர்ன் லேடி.

மனம் அதன் உள்ளர்த்தத்தை தேடி ஆராய்ந்தது.

யாரோ நம் பின்னே நமக்கு தெரியாமலே நம் செயலை கவனிக்கிறார்கள்... அப்படின்னா... நான் இப்போ சரியான பாதையில் சரியான ஆளை தான் தேடி போறேன்.....

"ஹா ஹா ஹா..."உற்சாகமாய் சிரித்து கொண்டார்.

"நீ யாரா இருந்தாலும் கண்டிப்பா உன் மூச்சு என்னால தான் காத்தோடு கலக்கும்டா..."

வெறியோடு முகம் சிவக்க கத்தினார்.

"பாட்டி... பாட்டி..."

என்றபடி வந்து கொண்டிருந்த பேரனை பார்த்ததும் தன் முகத்தை இயல்பு நிலைக்கு மாற்றிக் கொண்டார்.

கனிவு ததும்ப... "என்னடா.. சொல்லு என்ன விஷயம்.."

வந்தவன் ஒன்றும் பேசாமல்... பாட்டியின் மடியில் தலை சாய்த்து படுத்துக்கொண்டான்.

"டேய் என்னடா இது.. இன்னும் சின்ன குழந்தையாட்டம் இருக்க...!"

பாட்டியின் முகம் கனிந்தது.

"ச்..சும்மா.. உங்க மடியில படுத்துக்கணும்ன்னு தோணிச்சி..." அவ்ளோ தான்.

என்றபடி பாட்டியின் கைகளை எடுத்து தன் தலை மீது வைத்து...

"ஹ்ம்ம்... தடவி விடுங்க பாட்டி..." அன்பு கோரிக்கை வைத்தான்.

பாட்டியும் ஏற்றுக்கொண்டார் விரும்பியே.

தாயாக மாறிப் போனார் அவர்.

பழைய நினைவுகள் அம்முதியவரை வாட்டின..

"டேய் கண்ணா..."

"ம்ம்ம்ம்... சொல்லுங்க பாட்டி..."

சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கோடா... உனக்குன்னு ஒருத்தி வந்துட்டா நான் நிம்மதியா இருப்பேன்டா...

குரலில் லேசான நடுக்கம் இருந்தது. அன்பினால் ஏற்பட்ட பாசகுரல் அது.

மூடியிருந்த இமைகளின் உள்ளே தேவதை முகம்கொண்ட பெண்ணொருத்தி மனதை கொள்ளை கொள்ளும் புன்னகையுடன் இவனை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

அவன் இதழும் முகமும் தானாக மலர்ந்தது.

"என்னடா சொல்லுற...? சரின்னு சொல்லேன்டா..." பாட்டியின் குரல் கெஞ்சியது.

"ஹ்ம்ம்.... சொல்றேன் பாட்டி. கூடிய சீக்கிரமே சொல்றேன். உங்களுக்கு நல்ல பதிலா...! சரியா..??!" என்றபடி பாட்டியின் கன்னத்தை ஆசையாய் கிள்ளி கொஞ்சினான்...

பாட்டியின் முகம் மலர்ந்தது. கூடிய சீக்கிரமே தன் பேரனின் வாழ்வும் மலரும் என்பதில் அவருக்கு தெளிவு பிறந்தது.

"அப்புறம் சொல்லுடா... மார்னிங் ஒரு முக்கியமான ப்ரொஜெக்ட் சைன் பண்ண அவசர அவசரமா போனீயே.. ரிசல்ட் என்னடா..."

"எல்லாம் நம்ம பக்கம் தான் . சோ கவலைப்பட எதுவும் இல்லை பாட்டி."

"ஆமா... அந்த பொ..ண்..ணு..."ஏதோ சொல்ல ஆரம்பித்தவன் பேச்சு பாதியில் தடைபட்டது கதவு தட்டும் ஓசையில்.

"யெஸ் கம் இன்.." குரலில் ஆணிற்கு உரிய நிமிர்வு வந்திருந்தது இப்போது.

அங்கே கதவை திறந்த படி.. ஆண்மகன் ரவி வர்மாவின் இதயத்தை சாய்க்கவே கங்கணம் கட்டி கொண்டு ரதியாட்டம் நின்றிருந்தாள் பெண்ணவள் ஆராதனா.

கண்கள் அக்காரிகையை விட்டு நொடி பொழுதும் அகலவில்லை. மனம் மத்தளம் கொட்டியது. ஐஸ் மழை தூவியது. தேவதைகளின் ஆராவாரம் ரீங்காரமிட்டது. மங்கையவள் உச்சி முதல் பாதம் வரை அலசி ஆராய்ந்தது அக்கோமகனின் கண்கள்.

பெண்ணவள் இதய துடிப்பு ஏற தொடங்கியது அவனது பார்வையில்.

"வெல்கம் மிஸ் ஆராதனா... ப்ளீஸ் டேக் யுவர் சீட்" முதிர்ந்த குரல் இயல்பாய் வரவேற்றது.

அக்குரலில் சுதாரித்தவள் தன்னை கட்டுப்படுத்தி கொண்டாள். சிரித்த முகமாகவே அவளும் பதில் கொடுத்தாள். எதையும் அவள் காட்டி கொள்ளவில்லை.

"எப்படி இருக்க ஆராதனா. இப்போ ஓ.கே வா...?!"

நிமிர்ந்த விழிகளில் சிறு குழப்ப சாயல் இருந்தது.

"இவர் எதை கேட்கிறார்.. ஒருவேளை இன்று காலை நடந்தது தெரியுமோ.. எப்படி... யார் சொல்லியிருப்பார்கள்.?!"
மனம் குழம்பியது.

"என்ன அப்படி பார்க்கிற. உன்னை கிராஸ் பண்ணி தான் நாங்க ஆபீஸ் வந்திட்டு இருந்தோம். உனக்கு அந்த இன்சிடெண்ட் நடக்கும் போ நாங்க உன் பக்கத்துல தான் இருந்தோம். சோ விஷயம் எங்களுக்கு தெரியும்.

அப்புறம் அது உனக்கு தெரிஞ்ச பையன் போல.. உன்னை அவன் தான் பார்த்துகிட்டான். எங்களுக்கு அவசரமா ஒரு ப்ரொஜெக்ட் பைனல் பண்ண வேண்டி இருந்து அதான் உன்னை எங்க கூட கூட்டிட்டு வர முடியாம போச்சி.

ஆனாலும் எனக்கு மனசு கேட்கலை. ரவிய மட்டும் அங்கே அனுப்பிட்டு நான் உன் பக்கத்துல தான் இருந்தேன். அவனுக்கும் போக இஷ்டம் இல்லை தான். இப்படி உன்னை அந்த நிலைமையில விட்டுட்டு போக. நான் தான் அவனை சமாதான படுத்தி அனுப்பி வச்சேன்.

அப்புறம் உனக்கு ஒன்னும் இல்லைன்னு தெரிஞ்சதும் தான் நான் கிளம்புனேன். என் மனசு அப்போ தான் நிம்மதி ஆச்சி". எந்தவித பந்தாவும் இன்றி விஷயத்தை சொன்னார் பாட்டி.

இவர் எப்பேர்பட்டவர். பணத்தை விட குணத்தால் உயர்ந்தவர்.

"ஓ. அப்படியா.. ரொம்ப தாங்க்ஸ் மேம். நவ் ஐ ம் ஓ.கே மேம்".

"ரோடு கிராஸ் பண்ணும் போ கொஞ்சம் பொறுமையா பார்த்து போங்க மிஸ் ஆராதனா". அக்கறையையாய் சொன்னான் ரவி வர்மா.

அவன் விழிகளை ஒரு முறை சந்தித்தவள், அந்த ஈர்ப்பில் கட்டுண்டு கிடக்க விரும்பிய மனதை அடக்கி..

"கண்டிப்பா சார்". சாதாரணமாக இருக்க பெரும்பாடு பட்டாள் பெண். உள்மனம் பகாய் உருக.. வெளிமனம் திடமாய் இருந்தது. இது எத்தனை நாளைக்கோ..?!

"ஆராதனா உங்களோட ப்ரொஜெக்ட் ஒர்க் இன்னையிலிருந்து ஸ்டார்ட் ஆகுது.

டேக் திஸ் பைல்ஸ் வித் யு அண்ட் ரீட் திஸ் கம்ப்லீட்லி தென் ஷர் யுவர் ஐடியாஸ். டௌட் இருந்தா கேளுங்க".

"ஓ. கே சார்".

"ரெஸ்டாரண்ட் பார்க்க ஒரு நாள் உங்களை கூட்டிட்டு போறேன். நேர்ல பாருங்க. அதுக்கு அப்புறம் உங்களோட கருத்தை சொல்லுங்க".

"சுவர் சார்".

"நவ் யு கோ டூ யுவர் கஃபின். என்னோட பி.ஏ உங்களுக்கு தேவையான மத்த இன்ஸ்டரக்க்ஷனை தருவார்.

ஓ.கே வா மிஸ்.ஆராதனா.?!"
புருவம் உயர்த்தி கண்களில் கூர்மையுடன் பேசிய ஆண்மகனின் தோற்றத்தில் பெண்ணவள் நெஞ்சம் கொஞ்சம் தடுமாறியதோ...

இவன் தன்னிடம் அனுமதி கேட்கிறானா..?! ஆச்சரியத்தில் கண்கள் விரிந்தது..

அவன் தன் பதிலுக்காக காத்திருப்பதை உணர்ந்து...

"ஹண்டேர்ட் பெர்சன் ஓ.கே சார்". தடுமாறாமல் சொன்னாள் அவள் மனம் தடம் மாறியதை உணர்ந்தும்.

விழிகளில் சுவாரசியம் கூட.. அவளை பார்த்தபடியே சொன்னான்.

"கண்டிப்பா எல்லா விஷயத்திலும் நீங்க இப்படி சொன்னா ரொம்ப நல்லா இருக்கும்".

அவன் கண்ணில் குறும்பு கூத்தாடியது. பெண்ணவளுக்கு புரிந்தும் புரியாமலும் இருந்தது. கிழட்டு லேடிக்கு வேடிக்கையாக இருந்ததோ...?!

அவள் பதற்றம் அவனுக்கு உற்சாகத்தை கூட்டியது. அவளையே ஆவலாய் ரசித்தான்.

இவர்கள் பேச்சிற்கு இடைவெளி கொடுக்கும் பொருட்டு , "பெஸ்ட் விஷஸ் ஆராதனா" வாழ்த்து சொன்னார் பாட்டி.

"தாங்க் யு மேம்". என்றபடி அவள் வெளியேறினாள்.

################

"கண்ணோரமாய். .
கசியும் ஒரு துளியில்...
ஆ..யி..ர..ம் அர்த்தங்கள் உண்டு...
அந்த ஆயிரம் பேரிடத்திலும்..!"


அங்கே குற்ற உணர்வில்.. தலை கவிழ்ந்தபடி..கவலையின் கவனிப்பில்.. பார்க்கவே பாவமாக அமர்ந்திருந்தான் அகில்.

எல்லாம் என்னால் வந்தது. நான் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருக்கலாம். அவளுக்கு மட்டும் ஏதாவது ஒன்று என்றால்... என்னால் எப்படி...?!

மேலே நினைக்கவே அவனுக்கு கஷ்டமாக இருந்தது..

நிமிர்ந்து தலையை கோதி கொண்டான். மூச்சுக்களை இழுத்து விட்டு தன்னை நிலைப்படுத்த தொடங்கினான். அங்கே தூரத்தில் தன்னை நோக்கி நடந்து வருவது... பெண்ணவள்... ஆராதனா தானே....?!

கண்கள் தானாக வேர்க்க தொடங்கியது.
அவள் நலமாக கண் முன்னே வந்ததும் தான் மனம் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்தது.

எழுந்து அவளை ஒரு முறை நன்றாக பார்த்தான். "தாங்க் காட்." அவளுக்கு ஒன்றும் இல்லை. நிம்மதியில் முகம் மலர்ந்தது.

"ஆ..ஆ...ர்..ர்..ரு...." என்றபடி அருகில் வந்தவளை அன்பொழுக அணைத்து கொண்டான். எதிர்பாராத பாச தாக்குதல். பெண்ணவள் உள்ளம் நெகிழ்ந்தது.

"என்னை மன்னிச்சிடு ஆரு. எல்லாம் என்னால தான். சாரி.. வெர்ரி சாரிமா...

நான் இனிமேல் இவ்வளவு மோசமா நடந்துக்க மாட்டேன். ஐ ப்ரோமிஸ் யு. சுயர்.. "

முகம் பார்த்து வருந்தினான். அவன் கண்ணில் கண்ணீரா.. அதுவும் பிடிக்காத ஒருத்திக்காகவா..?! பெண்ணவளுக்கு என்னவோ போல் ஆனது. இதுநாள் வரை ஒருவரை ஒருவர் திட்டி கொண்டும் சண்டை போட்டு கொண்டும் இருந்து விட்டு.. இப்போது உடனே பாச மழை என்றால்...

புரிந்தது அவளுக்கு..
"ஹ்ம்ம்...விடு அகில். என் மேலயும் தப்பு இருக்கு. நான் உனக்கு மரியாதை கொடுத்திருக்கணும். உன்னை மதிக்காத மாதிரி பேசுனது என்னோட தப்பு தான். உன்னோட இடத்துல வேற யாராவது இருந்திருந்தா... இதுக்கு மேல தான் பிகேவ் பண்ணியிருப்பாங்க. சோ விடு.. உன் மேல தப்பு இல்ல.."

அவனது குற்ற உணர்வை போக்கினாள் தேவதை பெண். ஆம் தேவதை பெண்ணவள் அவள்.

"நியாயம் பார்ப்பதாக இருந்தால் முதலில் நம் பக்கம் உள்ள தவறை நாம் உணர வேண்டும். நம் சூழ்நிலை நம்மை மாற்றி விட்டதற்காக பழியை இன்னொருவர் மேல் சுமத்த கூடாது."

ஆம். இது தான் அவளது தாராக மந்திரம். எல்லோருக்குமே சூழ்நிலை மாறும். இக்கட்டுகள் நெருக்கும். உறவுகள் உறங்கும்.மனம் மரணிக்கும். இருந்தும் நாமும் தவறிழைத்திருப்போம்.

அதை உணர்ந்து.. நம்மை முதலில் திருத்தி கொள்ள வேண்டும். எத்தனை இடர்கள் வந்தாலும் அதில் ஒரு துளி அளவேணும் நமக்கு நல்லது என்று ஒன்று ஒளிந்திருக்கும். இது தான் விதியின் சூட்சமம்.

தெளிந்த மனதோடு நல்லதை மட்டும் எடுத்துக்கொண்டு வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நடைபோட வேண்டும்.

இப்போது ஆருவின் முறை. தன் தவறை அவனிடம் தெளியப்படுத்துவது.

"சாரி... என்னை மன்னிச்சிடு.. இனி இப்படி நடக்க வேண்டாம். மறந்திரு..வோ..ம். எ..ல்..லா..த்..தை..யு..ம் மறந்திருவோம். நமக்குள்ள இனி நல்ல நட்பு மட்டும் இருக்கட்டும்.தேவையில்லாத எந்த விஷயமும் வேண்டாம். " குரலில் தெளிவு இருந்தது.

கண்கள் இருவருக்குமே பனித்ததோ.. அங்கே ஒரு அன்பு மலர் பூத்ததோ..
இதழ்களில் மென்னகை அரும்பியதோ...

மானிட்டரில் தெரிந்த அந்த பாச பரிமாற்ற காணொளியை கண் சிமிட்டாமல் கண்டு கொண்டிருந்தான் ரவி. ரவி என்கிற ரவி வர்ம குலோத்துங்கன். கொஞ்சம் பொறாமை கலந்த வதனத்தோடு.


###############

"வதனா..
ஹேய்....
வ...து...
நான் சொல்றதை கேளுடா.. அடம்பிடிக்கத.. ஒரு ரெண்டு வருஷம் போகட்டுமே... அதுக்கு அப்புறம் நம்ம கல்யாணம் பற்றி திங்க் பண்ணலாம். பிளீஸ்டா..."அமைதியாய் கெஞ்சிக் கொண்டிருந்தான் ராம்.

"நோ ராம் நோ... என்..னா..ல முடிய..ல..டா..
எங்க திரும்புனாலும் நீ தான் தெரியுற.. எல்லா வேலையிலும் நீ தான் சிரிக்கிற.. எனக்கு ஒரு வேலையும் நடக்க மாட்டுக்குது... உன் நினைப்பாவே இருக்கு... ப்ளீஸ் ராம் என்னை புரிஞ்சிக்கோ..டா.."அவன் கை பற்றி காதலால் விம்மினாள் வதனா.

"ஹ்ம்ம்.... முதல கண்ணை துடை.."

"பார்க்கிற யாராச்சும் தப்பா நினைக்க போறாங்க.. ம்ம்ம் இதை குடி. கொஞ்சம் ரீலாக்ஸா பீல் பண்ணுவ."

மௌனமாக அவன் சொல்லுக்கு கட்டுப்பட்டாள் காதலி.

"ஹ்ம்ம்... இப்போ கொஞ்சம் பெட்டரா பீல் பண்ணுறியா...?!"

"ஹ்ம்மம்ம்..."அமைதி திரும்பியது அவளுள்.

"இங்க பாரு வது..."குனிந்த தலையை மெதுவாக நிமிர்த்தி அவன் முகம் நோக்கினாள்.

அவன் விழிகள் பேசிய காதல் பாஷை பெண்ணவள் மனதை கலைக்க தொடங்கியது.

"உன்னோட கேரியர்ல இப்போ தான் ரொம்ப முக்கியமான பீரியட். இ..வ்ளோ வருஷம் கஷ்டப்..ப..ட்டு நீ இந்த இடத்துக்கு வந்திரு..க்..க. அதை சட்டுன்னு தூர போட முடியாதுமா.

நான் சொல்லுறதை பொறுமையா கேளு. நீ இப்போ தான் ஒரு ஸ்டேடியான இடத்துல இருக்க. இந்த நேரத்துல மேரேஜ் குடும்பம்ன்னு உனக்கு அதிக பொறுப்புகளை நான் கொடுக்க விரும்பலை."

அவனது காதலில் பெண்ணவள் உள்ளம் நனைந்தது.

"உனக்கே உன்னோட உணர்வுகளை கட்டுப்படுத்த முடியலைன்னா.. எனக்கு எப்படி இருக்கும். அப்படி இருந்தும் நானே இதை சொல்றேன்னா... உன்னால ஏன் உன்னோட பீலிங்க்ஸை ஸ்டாப் பண்ண முடியாது.?!"

"உன்னோட கனவை எந்த காரணத்துக்காகவும் நான் ஸ்பாயில் பண்ண அலவ் பண்ண மாட்டேன். அப்படி இருக்கும் போ நா..னே எ..ப்..ப..டி..டி..?!"

"ஏன்டா என்னை இவ்ளோ லவ் பண்ணுற.. அப்படி நான் உனக்கு என்ன செஞ்சிட்டேன்...?!" பெண்ணவள் குரல் தழுதழுத்தது.

"அட ச்..சி.. பைத்தியமே... ஏன் கலங்குற. இது உன்னோட காதல் பற்றி இல்லை. என்னோட காதல் சம்மந்தப்பட்டதுடி.. நீ என்னோட லய்ஃப்ல வரதுக்கு முன்னாடியே உன்னோட நல்லததுக்காக யோசிக்கறவன்.. இப்போ நீ தான் எனக்கு எல்லாம் அப்டிங்கிற சமயத்துல நான் எப்படி..டி.. இப்படி ஒரு முடிவு எடுப்பேன்". ஆறுதலாய் அவளை அணைத்துக் கொண்டான்.

"ஐ லவ் யு சோ மச் டா..." விசும்பிய படியே அவனது உரோமம் படர்ந்த கன்னத்தில் அவன் வெகுநாள் எதிர்பார்த்த அந்த முதல் முத்தத்தை பதித்தாள்.

"எத்தனை எத்தனை
சந்தோஷ செய்தி கேட்டாலும்
இத்தனை இத்தனை
சந்தோஷம் வந்திடுமா..
பெண்ணே!
உன் பட்டு இதழ் தீண்டலில்
ஆண்மகன் ஆன்மா
ஆடி களிக்கிறதே..
கண்ணே..!"
 
Status
Not open for further replies.
Top