All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கதை திரி

Status
Not open for further replies.

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மாயம் 10


Screenshot_20190124-192526__01 (1).jpg
நிச்சயம் முடிந்து, நாட்கள் புடவை எடுக்க, நகை எடுக்க என்று விரைவாகச் சென்று, இதோ கல்யாணத்திற்கு முதல் நாள் என்ற நிலையில் வந்து நின்றது..


இடையில் இருந்த பத்து நாட்களும் ராகவ், ரிதுவிடம் பேச எந்த முயற்சியும் எடுக்க வில்லை.. ரிதுவோ அதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாதது போல் இருந்தாள்…


முதல் நாள் இரவே எல்லாரும் மண்டபத்திற்கு வந்தனர்... மண்டபத்திற்கு வந்ததில் இருந்து ஸ்வாதிக்கா ரிதுவின் அருகிலே இருந்தாள்... வெள்ளை மனதுடன் கலகலப்பாகப் பேசும் ஸ்வாதியின் பேச்சில் ரிதுவும் அவள் கவலை மறந்து சிரித்தாள்..


தியாவும் கல்யாணத்திற்கு இரண்டு நாள் முன்னாடியே வந்ததால் ரிதுவும் சிறிது உயிர்ப்போடு இருந்தாள்... அன்றிரவும் முடிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது…


அதிகாலையில் எழுந்த ரிது குளித்து ஊதா வண்ண பட்டு புடவையில் தயாராகி மேடையில் மூகூர்த்த சேலை வாங்க சென்று கொண்டிருந்தாள்…


மூகூர்த்த சேலை வாங்கியதும் மணமகள் அறைக்கு வந்த ரிது கல்யாண சேலையை உடுத்தி தயாராக ஆரம்பித்தாள்... அரக்கு வண்ண பட்டு உடுத்தி தயாராகிக் கொண்டிருந்த அதே நேரம் ராகவும் மணமகன் உடையாகிய பட்டு வேஷ்டி சட்டை வாங்கிக்கொண்டு மணமகன் அறையில் தயாராகச் சென்றான்...


மூகூர்த்த நேரம் நெருங்க ராகவின் கை பிடித்துத் தருண் மணமகன் அறையில் இருந்து வெளியே வந்த அதே நேரம், ஸ்வாதியும் ரிதுஷினி கையைப் பிடித்து மணமகள் அறையில் இருந்து வெளியே அழைத்து வந்தாள்...


இருவரின் பார்வை நேர்கோட்டில் சந்தித்துக் கொண்டது.. ராகவின் பார்வை வீச்சில் தன்னையறியாமல் நிலம் நோக்கிய ரிது மேடை நோக்கி நடக்க ஆரம்பித்தாள்...


மணமேடையில் இருவரும் உட்கார்ந்ததும், ஐயர் சண்டங்குகளை ஆரம்பிக்க இருவரும் ஐயர் சொல்லும் மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தனர்.


மூகூர்த்த நேரம் நெருங்க ஐயர் கையில் தாலியை வாங்கிய ராகவ் ரிதுவின் கழுத்தில் கட்டி ரிதுவை அவனவள் ஆக்கிக் கொண்டான்...


ராகவின் கை கழுத்தில் பட்டதும் தன்னை அறியாமல் சிலிர்த்த ரிதுவை அவள் உடல் மொழியில் அறிந்து கொண்ட ராகவும் சந்தோஷம் அடைந்தான்…


ரிதுவோ ராகவின் கையில் தாலி வாங்கிய நொடி மனதில் 'இவருடனான என் வாழ்க்கை எந்த விதமான பிரச்சனை இன்றி நல்ல படியாகப் போக வேண்டும்' என்று இறைவனை வேண்டிக் கொண்டாள்...


தாலி கட்டி முடிந்ததும் நெற்றியில் குங்குமம் வைக்கக் குங்குமத்தை கையில் எடுத்த ராகவ் ரிதுவை அவன் கைவளைவில் அணைத்தாற் போல் குங்குமம் வைத்தான்…


ராகவின் செய்கையில் ஏனோ ரிதுவின் உடல் சிலிர்த்து அடங்கியது… படப்படப்பாக உணர்ந்த ரிதுஷினி பயத்தில் கண்களை மூடிக்கொண்டாள்…


நெற்றியில் குங்குமம் வைத்து முடிந்ததும் இருவரும் அக்னியை சுற்றி வலம் வர ஆரம்பித்தனர். சுற்றி வரும் போது ரிதுவின் கை ராகவின் கைகளில் கோர்த்திருந்த போது ரிதுவின் கைகளில் உள்ள ஈரத்தை உணர்ந்த ராகவ் அவளின் பயத்தையும் உணர்ந்து சிறிது வருத்தம் கொண்டான்…


அடுத்து இருவரும் பெரியவர்களின் கால்களில் விழுந்து வணங்கி அவர்களின் ஆசிகளைப் பெற்றுக் கொண்டனர். குணசேகரின் கால்களில் ரிது விழுந்தது ஆசிர்வாதம் பெற்றதும் அவளைத் தூக்கிய குணசேகர், ரிதுவை அணைத்து அவரின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்...


தந்தை மற்றும் தாயின் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்த்த ரிது, ‘இவர்களுக்காவது நான் இந்தப் புது வாழ்க்கையை ஏற்றுக்கொண்டாக வேண்டும்’ என மனதில் நினைத்துக் கொண்டாள்…


அடுத்து ராகவின் பெற்றவர்களின் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டனர்… ராகவை அணைத்து அவனின் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய தருண், “ நீ நினைச்சதை முடிச்சிட்ட மாப்பிள்ளை காங்கிரட்ஸ்” என்றபடி அவன் காதில் கிசுகிசுத்தான்….


“தேங்க்ஸ் மச்சான், ரொம்பப் பொங்காத உன் தங்கச்சிக்கு தெரிஞ்சிட போகுது” என்றவாறு தருணை தன் பங்கிற்கு அணைத்து விடுத்தான்…


“காங்கிரட்ஸ் அண்ணி, இனிமேல் நீங்க தான் எங்க அண்ணாவை சமளிக்கணும்!!!” என்றவாறு ஆர்ப்பாட்டமாய் அணைத்த ஸ்வாதிக்காவிற்குப் பதில் எதுவும் கூறாமல் புன்சிரிப்பை மட்டும் உதிர்த்து அவளை அணைத்துக் கொண்டாள் ரிதுஷினி….


அண்ணியிடம் வாழ்த்துக்களைக் கூறிய ஸ்வாதி, அடுத்த ராகவின் கை குலுக்கி, “ காங்கிரஸ் டா அண்ணா, குடும்ப ஸ்திரன் (குடும்ப ஸ்திரிக்கு ஆண்பாலுங்கோ) வாழ்த்துக்கள்!!” என்றவாறு ராகவை அணைத்து அவளின் மகழ்ச்சியைத் தெரிவித்தாள்...


ஒருவாறு குடும்ப உறுப்பினர்களின் வாழ்த்துப் படலம் முடிய அடுத்து வெளி ஆட்களும், உறவினர்களின் வாழ்த்துப் படலம் ஆரம்பித்தது….
 

Attachments

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மதிய நேரம் வரை நீண்ட வாழ்த்துகள் ஒரு வழியாகக் குறைந்ததும் இருவரும் சாப்பிட சென்றனர்… சாப்பிடும் இடத்திலும் போட்டோகிராபர் கைவண்ணத்தில் சாப்பிடும் நேரமும் இழுத்து ஒரு வழியாக முடியவும், மணமக்கள் ரிஷப்ஷனிற்கு முன் சிறிது நேரம் ஓய்வு எடுக்க அவரவர் அறைகளுக்குச் சென்றனர்…


காலையில் இருந்து ரிதுவை பார்த்துக் கொண்டிருந்த ராகவ் அவளின் நிலைகொள்ளா நிலையையும், அவளின் தவிப்பையும், பார்த்து ரிதுவிற்கு ஜீரணிக்கச் சிறிது நேரம் கொடுக்க எண்ணி இந்த ஏற்பாட்டைச் செய்து இருந்தான்…


மணமகள் அறைக்கு வந்த ரிது, மாலை எல்லாம் கழட்டி வைத்த, கண்ணாடி முன் நின்று நகைகள் எல்லாம் ஒவ்வொன்றாகக் கழட்ட ஆரம்பித்தாள்...


இறுதியாகக் கழுத்தில் இன்று காலை ராகவ் கட்டிய புது மஞ்சள் தாலியம், நெற்றி வகிட்டில் அவன் வைத்த குங்குமமும் இருக்க, கண்ணாடியில் அவள் முகத்தைப் பார்த்து மனதில் சொல்லனா துயரம் கொண்டாள்…


'இனிமேல் என்ன நடந்தாலும் என் வாழ்வு ராகவுடன் தான்' என்று நினைத்து ஒருவாறு தன்னைத் தேற்றிய ரிது, ‘வாழ்க்கையை அதன் போக்கில் போக வேண்டும் என்றும் முடிவு செய்து’ கட்டிலில் விழுந்தாள்…


ரிது கட்டிலில் விழுந்த அதே நேரம் ராகவும் கட்டிலில் விழுந்தான்.. ‘என்னதான் அவன் ஆசை படி கல்யாணம் நடந்து முடிந்தாலும், அடுத்து ரிதுவுடனான அவன் வாழ்க்கையை எப்படி இருக்க முடிவு செய்ய வேண்டும், அதற்கு இவ்வாறு தான் இருக்க வேண்டும்’ என்பதை எல்லாம் முடிவு செய்த படி கண்ணயர்ந்தான்…


மாலை ஆனதும் இருவரும் ரிஷப்ஷனிற்குத் தயராகினர்… கருப்பு நிற கோட் சூட் போட்டு ராகவ் தயராகிக்கக் கொண்டிருந்த அதே நேரம் ரிதுவும் சிகப்பு நிறம் லெஃங்காவில் தயராகிக்கக் கொண்டிருந்தாள்…


காலை போல் ராகவ் வெளியே வந்த அதே நேரம், ரிதுவும் ஸ்வாதிகாவுடன் மணமகள் அறையில் இருந்து வெளியே வர, ரிதுவை இம்முறை பார்த்த ராகவின் கண்கள் அவளை உரிமையாய் பார்க்க ஆரம்பித்தது…


ராகவின் பார்வையை உணர்ந்த ரிதுவோ தன்னை அறியாமல், சிவந்தாள்.மேலும் ராகவின் பார்வை வீச்சை தாங்க முடியாமல் குனிந்து கொண்டாள்...


இருவரும் மேடையை ஏறியதும், காலையில் விட்டுப்போன சொந்தங்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள் என ஒருவர் பின் ஒருவராக வர நேரம் ரெக்கை கட்டிக்கொண்டு பறந்தது…


ஒருவழியாக ரிஷப்ஷன் முடிய முதல் இரவு சடங்கை ராகவின் வீட்டிலே வைக்க முடிவு செய்ததால் அதன் படி, எல்லாரும் ராகவின் வீட்டை நோக்கி பயணம் செய்ய ஆரம்பித்தனர்…


ஆலம் சுற்றி வரவேற்றதும் மணமக்கள் இருவரும் ராகவின் வீட்டிற்கு அடி எடுத்து வைத்தனர்.. ரிதுவை விளக்கு ஏற்ற சொன்ன சாரு, ரிதுவிற்கு எல்லாம் எடுத்துக் கொடுத்து அவள் அருகிலே நின்று கொண்டார்..


ரிதுவும் ஏனோ சாருவின் செய்கையில் ஒரு வகையில் ஆறுதல் அடைந்தாள்.. ரிதுஷினியின் பெற்றவர்களும், தருணும் ரிதுவை ராகவின் வீட்டில் விட்டு விட்டு கிளம்பும் நேரம், அதுவரை அடக்கி வைத்து இருந்த கண்ணீரை கொட்ட ஆரம்பித்தாள் ரிதுஷினி..


மகளின் கண்ணீரை பார்த்த குணசேகரும் கண்ணீர் விட்டார்… சூழ்நிலையைக் கையில் எடுத்துத் தருண், ரிதுவின் அருகில் சென்று அவளை அணைத்து ஆறுதல் படுத்தி,


“ரிதுமா எதுக்கு இப்ப இந்த அழுகை, நல்ல விஷயம் தான நடந்திருக்கு, இனிமேல் நீ எதுக்கும் கவலை படக்கூடாது… எல்லாம் இனிமேல் நல்லதாகவே நடக்கும்” என அவளை ஆறுதல் படுத்தினான்…


அண்ணனிடம் ஒரு புன்சிரிப்பை கொடுத்த ரிது,அவர்களை அனுப்பி வைத்தாள். அவர்கள் சென்றதும் ரிதுஷினியை அழைத்த சாரு, “அம்மாடி ரிது நீ கீழ இருக்கிற ஸ்வாதி ரூம்ல போய் ரெடி ஆகிக்கோ,


நான் உங்களுக்குப் பால் எடுத்திட்டு வரேன்!” என்று ரிதுவிடம் கூறி, ஸ்வாதியிடம் ரிதுவை அவளின் ரூமிற்கு அழைத்துச் செல்ல சொன்னார்..


சாரு சொன்னதும் அதுவரை இருந்த துக்கம் போய், பயம் வந்து ஆட்கொண்டது.. கல்யாணம் வரை மட்டுமே யோசித்த ரிது, அதன் பின் நடக்கும் விஷயங்களைப் பற்றி யோசிக்கவில்லை..


இப்போது சாரு சொல்வதைக் கேட்டு ஒருவாறு அடுத்து நடக்கப் போகும் முதல் இரவு விஷயம் புரிய மெல்ல தயக்கத்துடன் ஸ்வாதியை பின் தொடர்ந்து அவள் அறைக்குச் சென்றாள்..


தன் நினைவுகளுடனே ரிது குளித்துத் தயராகிக் கொண்டிருந்த அதே நேரம், ராகவ் அவன் அறையில் உள்ளே பால்கனியில் எவ்வாறு ரிதுவை எதிர்கொள்ள வேண்டும் என்று யோசித்துக் கொண்டிருந்தான்..


ரிது தயாராகி முடிப்பதற்குள் சாருவும் கையில் பாலுடன் ஸ்வாதியின் அறைக்கு வந்தார். “ ரிது மா, என்னை உன்னோட அம்மா மாதிரி நினைச்சிக்கோ
,
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எதுனாலும் என்கிட்ட சொல்லு, ஒன்னும் பயப்படாத அத்தை இருக்கேன் உனக்கு, இந்தா பால் உனக்கும் ராகவிற்குச் சேர்த்து வச்சிருக்கேன், மேல ரைட் சைட் ரூம் ராகவுடையது, நீ போ மா” என்று கூறி ரிதுவை அனுப்பி வைத்தார்...


சாருவிடம் பாலை வாங்கிக் கொண்ட ரிது, ராகவின் அறை நோக்கி சென்றாள்.. அறையின் முன்னாடி நின்ற ரிது, மனதில் ‘இந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்ள வேண்டும்’ என்று ஒருவாறு யோசித்துத் தயக்கத்துடனே கதவை திறந்தாள்…


அவளின் தயக்கத்தைப் பெரிதாக்குவது போல, பூக்கள் நிறைந்த கட்டிலும், அலங்காரமும் என அந்த அறையே முதல் இரவிற்கு என்று பிரத்தேகமாகத் தயராகிக்க இருந்தது…


கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு ராகவும், பால்கனியில் இருந்து உள்ளே வந்தான்.. காலையில் கட்டி இருந்த பட்டு வேஷ்டி சட்டையில் இருந்த ராகவை பார்த்த ரிதுவிற்கு இன்னும் தயக்கம் பெரிதாக வந்தது…


மெல்ல உள்ளே வந்த ரிது, பாலை கட்டிலின் அருகில் உள்ளே டேபிலில் வைத்து கட்டிலின் அருகில் வந்து நின்றாள். அதற்குள் அவளை நெருங்கிய ராகவ், கண்ணசைவில் ரிதுவை உட்கார சொல்லி அவனும் அவள் அருகில் சிறு இடைவெளி விட்டு உட்கார்ந்தான்...


தன் அருகில் உட்காந்திருந்தவளின் முகத்தில் இருந்து எதையும் கண்டு பிடிக்க முடியாமல் அவளின் முகத்தையே ஒரு முறை கூர்ந்து பார்த்து பேச ஆரம்பித்தான், "ஹாய், ரிதுஷினி இது தான உன்னோட நேம்.. ஐயம் ராகவ்" என்று தன்னை அறிமுகப்படுத்தி அவளிடம் பேச ஆரம்பித்தான்...


“நாம இதுக்கு முன்னாடி மீட் செய்தது இல்ல, ஐ நோவ்.... என்னோட வீட்டில என்னோட ரூம்ல இருக்கிற எனக்கே கொஞ்சம் வியர்டா(weird) இருக்கு, அண்ட் ஐ நோவ்(know) உனக்கு இன்னும் சூப்பர் வியர்டா(weird) இருக்கும் புரியுது பட் ப்ளீஸ் மேக் யூவர்செல்ப் கபோர்ட்டபிள் (comfortable)…


நாம இன்னும் பேசி, பழகக் கூட இல்ல, அதுக்குள்ள இந்தச் சடங்கு சம்பிரதாயம் எல்லாம் நம்மளை மாதிரி ஆட்களுக்கு எல்லாம் ஒத்தே வராது, but it doesn’t mean that we have to be husband and wife right away...



இவ்வளோ நாள் வீட்டுக்காகவும், சொசைட்டிகாகவும் வாழ்ந்தது போதும், இனிமேல் நமக்காக வாழ பார்க்கணும், அதுக்காக இப்பவே எல்லாம் நடக்கணும் என்று நான் சொல்லலை, let us have some time, உன்னோட விசா ப்ரோஸஸ் பண்ண ஆரம்பிச்சிடங்க மே பி டூ டு த்ரீ டேஸ்ல கிடைச்சிரும் அண்ட் நாம இன்னும் டென் டேஸ்ல வெலிங்டன் போற மாதிரி இருக்கும்…


Let us have a fresh start, a new life and a new beginning, அங்க வந்தும் நீ டிப்பிக்கள் wife மாதிரி இருக்கணும்னு நான் சொல்ல மாட்டேன், you can have your own space, let us start our life fresh, there in Wellington, and there we can decide, how you can be by my wife,


I don’t know how compatible we are nu எனக்குத் தெரியல, but we will be living under same roof for however this gonna be last, so let us take things slow… எனத் தயக்கமாய் ஆரம்பித்து நீண்டதொரு விளக்கம் கொடுத்து, டேபிளிலில் இருந்த பாலை இரு டம்பிளரில் ஊற்றி ஒன்றை ரிதுவிற்குக் கொடுத்து, தனக்கும் ஒன்றை எடுத்துக் கொண்டான்...


ராகவ் கொடுத்த பால் டம்பிளரை வாங்கிக் கொண்ட ரிது, அமைதியாக யோசித்த படி குடிக்க ஆரம்பித்தாள். அவ்வாறே ராகவும், ரிதுவும் தங்களின் நினைவுகளில் உழன்று கொண்டு பாலை குடித்து முடித்தனர்.. ரிதுவிடம் காலி டம்பிளரை பெற்றுக் கொண்ட ராகவ் அதை டேபிளில் வைத்தான்...


“ஒகே ரிது, I think you too be tired, so let us sleep, good night” என்று கூறி கட்டிலின் ஒரு சைடில் படுத்துக் கொண்டான் .. ராகவ் படுத்ததும் சிறிது நேரம் யோசித்த ரிதுவும், ராகவின் அடுத்தப் பக்கத்தில் படுத்துக் கொண்டாள்...


கட்டிலில் படுத்து ராகவ், ‘அப்பாடி ஒரு வழியா நாம நினைச்சதை பேசி முடிச்சிட்டோம் இனி வெல்லிங்டன் போய் பார்த்துக்க வேண்டியது தான்’ என்றும்,


ரிதுவோ, ‘ நாம நினைச்சது வேற இங்கே நடந்தது வேற, ஆனாலும் இது கொஞ்சம் நிம்மதியா இருக்கு, பார்க்கலாம் அடுத்து என்ன நடக்கும் என்றும் ’ மனதில் நினைத்துக் கொண்டு அவர் அவர்களின் நினைவுகளுடன் கண் அயர்ந்தனர்…


அவர்களுடன் நாமும் பயணிப்போம்…



மாயங்கள் செய்வான்(ள்)…
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்....

"மாயங்கள் உன்னாலே!!!" கதையின் 10 வது அத்தியாயத்துடன் வந்திருக்கிறேன்..

படித்து விட்டு உங்களின் கருத்துக்களை மறக்காமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள திரியில் சொல்லுங்க பிரெண்ட்ஸ்....

கருத்து திரி


சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி


என்றும் உங்களின் ஆதரவை எதிர்பார்க்கும் இந்துமதி...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Screenshot_20190131-203356__01.jpg
ஹாய் பிரெண்ட்ஸ்...

சில தவிர்க்க முடியாத காரணத்தால் இன்று "மாயங்கள் உன்னாலே!!!" கதையின் அத்தியாத்தை போட முடியவில்லை...

அடுத்த வாரத்தில் முடிந்தால் இரெண்டு அத்தியாத்துடன் வருகிறேன் பிரெண்ட்ஸ்

மன்னிச்சு...

 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்...

சில நாள் காணாமல் போன நான் திடீரென்று இன்னைக்கு உங்களை சந்திக்க வந்திருப்பது என் வாழ்வின் முக்கிய நிகழ்ச்சியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள.

பிரெண்ட்ஸ் வரும் 31 ஆம் தேதி ஞயிற்றுக்கிழமை எனக்கு கல்யாணம்..

எல்லாரும் என் கல்யாணத்திற்கு வந்து எங்களை ஆசிர்வாதம் பண்ணுங்க...

கல்யாணம் வந்ததால் என்னால் கதையின் பதிவுகளை முறையாக கொடுக்க முடியவில்லை அதுக்கு ஒரு பெரிய சாரி பிரெண்ட்ஸ்..

சீக்கிரம் கதையின் அடுத்த பதிவுகளை கொடுக்க முயற்சிக்கிறேன் பிரெண்ட்ஸ்....அதுவரைக்கும் கொஞ்சம் காத்திருங்கள் டியர்ஸ்...

என்னை தேடிய அன்பு உங்களுக்கு என் நன்றிகள் பல🙏🙏🙏...

சீக்கிரம் வரேன் பிரெண்ட்ஸ் பை....
 
Last edited:
Status
Not open for further replies.
Top