Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றி... மா..☺ராஜிமா,
நான் எதிர்பார்க்கவே இல்லை. நீங்க கெஸ் பண்ண கேட்டதும், ஏதோ சாதாரணமா ஏதோ ஒரு சுவாரசியம் இருக்கும் என்று எதிர்பாத்தேன். ஆனால் இவளவு நெகிழ்ச்சியான விஷயம் இருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. இரத்த சொந்தங்கள் இல்லை, நண்பர்கள் இல்லை, உறவுகள் இல்லை, தெரிந்தவர்கள் இல்லை, இப்படி எந்த வரையறுக்கும் உறவுகள் இல்லை ராணுவ வீரர்கள் நமக்கு, இருந்தும் நமக்காக உயிர் கொடுக்க துணிகிறார்கள் என்றால் அதை எப்படி எடுக்க தெரியவில்லை. ஹட்ஸ் ஆப் ராஜிமா . ஆனால் ஜாலியான கதையில் இப்படி எங்களை சிந்திக்க வைத்து விட்டிர்கள். நன்றி.
அதை வைத்து நண்பர்கள் எடுத்த முடிவு, மெய் சிலிர்க்க வைத்தது. ராணுவத்திற்கு போய் விட்டாலே ஒவொரு தடவை வந்து விட்டு போகும் போதும் நம் குடும்பத்தை பார்ப்பது இது தான் கடைசியாக இருக்குமோ என்று அவர்கள் மனதில் கண்டிப்பாக தோன்றும் தான்.
சஞ்சு மித்ராவிடம் பெட் கட்டியது சூப்பர். இதெல்லாம் எங்கே இருந்து கிடைக்கிறது. அதை வைத்து எல்லாரும் சகஜமாக்குவது, என்று சஞ்சு கிரேட் தான். அடுத்த யூடி உடன் பயணம் முடிந்ததா?ரொம்ப மனசு கஷ்டமா இருக்கு. வேறு எங்காவது அப்படி பாரின் ட்ரிப் கூட்டு போங்க ராஜிமா, உங்க தயவுல நாங்களும் பாத்துப்போம்.
இந்த கதையை முடிவு செய்த போதே.. ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு சம்பவம் என்று கதையின் ஆரம்பத்திலேயே தேர்ந்தெடுத்து விட்டேன்.. காஷ்மீர் என்று நினைத்ததும்.. அதன் அழகையும் மீறி.. ராணுவப் பாதுகாப்புடன் என்னேரமும் பயம் கொண்ட இடம் என்று தான் நினைவு வந்தது. அப்பொழுது தான்.. ராணுவர்களின் பணியை அழுத்தமாக எடுத்துரைக்க எண்ணினேன்...
இந்த யூடியைப் படிக்கும் போதுு ஒரு நிமிடம் அவர்களின் பணி பற்றி பெருமிதம் கொண்டார்கள் எனின்.அது எனது வெற்றியாக கருதுகிறேன்...
இதை பெருமையாகவே சொல்லி கொள்கிறேன்...
அந்த சேலேனஜ் ஐடியா எல்லாம் தானா வருது மதி மா... வாட் டூ டூ..