ராஜி,
சிறகை விரித்தாடும் காதல்....
மனமார்ந்த வாழ்த்துக்கள்.. அருமையான ட்ரிப் எங்களை ரசித்து அழைத்து சென்று நல்லபடியாக கொண்டு வந்து சேர்த்ததற்கு. ஹா ஹா.. சஞ்சு கேரக்டர் மறக்கவே முடியாது. உங்களுடைய கதைகள்ல அசோக், சைரஸ், கெளதம் போல சஞ்சவும் ஒரு இடத்தை பிடித்து விட்டான். (ஹ்ரித்திக் மேல உள்ள கிரேஸ் ஹா ஹா).
சஞ்சு பெட் ல தோத்ததும் ரொம்ப மனசு கஷ்டமா போயிடு. எப்டியோ ஜெயிச்சுட்டான். ஆனா கடைசி ரொம்ப பெருசா எதிர்பாத்தேன். போங்க ராஜிமா முக்கியமான சீன்ல சுபம் போடீங்க. மித்ரா சஞ்சுவுடைய அம்மா அப்பாவை இன்னும் கொஞ்சம் படுத்தி எடுத்து இருக்கலாம். பரவால்ல பொழச்சி போகட்டும்.
ஒவ்வொருவர் வாழ்க்கை முறை அதை அவர்கள் சரி செய்து கொண்ட விதம் என்று அழகழகாய் தொடுத்த கதம்பம் போல, அருமை ராஜிமா, பிருந்தா போல கூட்டு குடும்பத்தில் வாழும் சில பெண்களின் வாழ்க்கை இது தான். ஆனால் இதே போல மொத அனுப்பமாட்டார்கள். அனுப்பினாலும் மறுபடி வந்து அவளே செய்வாள் என்பது போன்ற நிலை தான் நான் கேள்வி பட்டது. ஆனால் கதையில் அவளை புரிந்து கொண்ட குடும்பம் பார்த்ததும் சந்தோசமாக இருந்தது.
நிஷா விஷயத்தில் அருமையான அப்பா, அப்பாவை போல சொந்தம் கொண்டாடும் காதலன் வேறு என்ன வேண்டும். பாலு சிறு வயதில் ஊதாரியாக இருந்தாலும் குடும்பம் பணம் இவற்றின் அருமை புரிந்ததும், அதை புரிந்து கொண்டு மாறுவது தான் சில ஆண்களின் அழகு. விக்னேஷ் இளம் வயதில் சபல புத்தி. அதனால் பாதை மாற இருந்தவனை நல் வழி படுத்தும் நண்பர்கள் கூட இருந்தால் சொர்கம் தான். அதில் அவன் அதிர்ஷ்டசாலி தான். சஞ்சுவினால் நிதர்சனத்தை புரிந்து கொண்டு அவன் வாழ்க்கையை மாற்றி கொள்வது நன்றாக இருந்தது.
மித்ரா சொல்லவே வேண்டாம். மூத்த பெண்ணுக்கே உரிய கடமை பக்குவம் என்று ஒரு பக்கம். தவறவிட்ட தருணங்களை கிடைக்கின்ற நேரத்தில் அனுபவிக்க துடிக்கும் ஆசை, பிடிக்காத ஆணாய் அவன் தொட்டதும் கிளர்ந்த கோபத்திலும், காதலனாய் அவன் தொட்டதும் தன்னையே அவனுக்கு கொடுக்க நினைக்கும் காதலிலும் அவளை புரிய வைத்திருக்கிறீர்கள்.
சஞ்சு பெற்றவர்களின் கவனம் தன் மேல் திரும்ப அவன் எடுத்து கொண்ட யுக்தி பெற்றவர்களை தவிர மற்ற அனைவரின் கவனமும் அவன் மேல் தான் இருக்க வைத்தது. அவன் எவ்வளவு தான் பெண்களை சீண்டினாலும் அதில் ஒரு பெர்ஸன்ட் கூட வழிசல் இல்லை. அதை அழகாய் உணர முடிந்தது ராஜிமா. எப்படிப்பட்ட சூழ்நிலையையும் அழகாய் கையாள்வது வியக்க வைக்கிறது. பிருந்தா மாமியாரிடம் அவளை பற்றிய தவறான கருத்தை நொடி நேரத்தில் மாற்றியது எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் ஒரு பெண்ணிடம் கிடைக்காதது இனொரு பெண்ணிடம் கிடைக்கிறதா பாப்போம் என்று அவன் தடம் புரண்டது சராசரி ஆண்களை போல் தான் அவன் என்று நினைக்க வைத்தது. ஆனால் மித்ராவே மனம் உவந்து தன்னை தர சம்மதித்து இவன் விலகி சென்றது உண்மையான ஆண்மையின் தத்துவம். இப்படி பட்ட ஆண்கள் என்றுமே அழகு தான். சோ வினோ விஷயத்தில் சஞ்சு மேல் இருந்த சிறு கோவம் கூட இதில் போய் விட்டது.
முக்கியம் ராஜிமா அடுத்த ட்ரிப் எங்க? எத்தனை நாள் என்று சொல்லி விடுங்கள் எல்லாம் எடுத்து வைத்து ரெடி ஆக வேண்டும்.
ரொம்ப கமெண்ட் சொல்லிட்டேன் போல. மனதில் தோன்றிய எல்லாம் சொல்லி விட்டேன். விடு பட்டிருந்தால் மறுபடி வருவேன். சிறகை விரித்தாடிய காதல் எங்களை சிறகில்லாமல் பறக்க வைத்தது. நன்றி.