Raji anbu
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றாக கவனித்தீர்கள் என்றால் ஆரம்பத்தில் இருந்தே அவனை கெட்டவனாக காட்டியிருக்க மாட்டேன்.ஒழுக்கத்தவறு என்றால், கதவை சாத்தும் அம்மாக்கள் இன்று உண்மையிலேயே மிகக் குறைவான அளவே இருக்கின்றனர். அப்படி அதிகமானோர் இல்லாததால் தானோ என்னவோ இன்று பல ஈஸ்வர்கள் குற்றவுணர்வு இன்றி வெளியே சுதந்திரமாக சுற்றித்திரிகின்றனர். ஈஸ்வரின் அம்மா பாவம் தான்....ஆனால் கதையைத்தான் சட்டென்று முடிவுக்கு கொண்டுசென்றது போல உள்ளது, தோழி.. அதுசரி சிரஞ்சீவை ஏன் இப்படி அநியாயத்துக்கு நல்லவனாக காட்டுகிறீர்கள். அப்பப்போ கொஞ்சம் கெட்டவனாகவும் கெத்தா காட்ட மறந்துட்டீங்க போல...நல்லவனா கெத்தா காட்டுனா கடலைமிட்டாய் சாப்பிடறது போல இருக்கு. கெட்டவனா [மோசமானவனா இல்லை] கெத்தா காட்டுனா அல்வா சாப்பிடறது போல இருக்கும் இல்ல. போங்கப்பா. ஆனாலும் நன்றி.
அன்னைக்கு துரோகம் செய்த பிரதாப்பிற்கு தண்டனை..
அவனிடம் பணம் வாங்கும் அரசியல்வாதிகளிடம் கண்டிப்பு..
மான்வியிடம் தவறாக நடந்துக் கொள்ளாதது.
அவர்கள் செல்ல வழி செலவிற்கு வெங்கட்டிற்கு பணம் வைப்பது.
மான்வியின் பதட்டமான குரல் கேட்டு தடுமாறுவது..
என்று அவன் நல்லவனே.. (பொதுவாக என் கதை ஹீரோக்கள்.அநியாயயத்திற்கு நல்லவர்களாக இருப்பாங்க.. )
கெத்து காட்ட மறந்துட்டேனா.. ஈஸ்வரை அசராமல் அடித்ததும் மான்வியிடம் தயங்காது அவனது மனதில் நினைத்ததை சொன்னதும் கெத்து தானே அட்லீஸ்ட் என் அகராதியில்..
இன்னும் அவங்க சண்டை போடுவதையும் ஜீவா மானு காதல் காட்சிகள் வைத்தால் அலுப்பு தட்டும்பா.. சரியாக தான் கொடுத்திருக்கிறேன் என்று நான்.நினைக்கிறேன்.
இதற்கு தான் ஓவர் இமேஜனுக்கு போகாமல் என்.எழுத்தின் வழியே படிங்க என்று டைட்டில் கார்டு போட்டு கதை ஆரம்பித்தேன்..