All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என் வானின் துருவ(வ்) நக்ஷத்தி(ரா)ரம் - கதைத் திரி

Status
Not open for further replies.

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 21



"சாம்?" என்று கஷ்டப்பட்டு தனக்கு ஏற்பட்டத் திகிலை மறைத்து கேட்டே விட்டான். அவனது புருவ நெரியல், சற்று திகைத்த பயந்த முகப் பாவத்தை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை. எல்லா நேரமும் அவனால் நடிகனாக இருக்க முடியவில்லை. அதை அவள் கவனித்தது அவனது துரதிர்ஷ்டமா அல்லது அதிர்ஷ்டமா ?


அவனைக் கூர்ந்து கண்ணாடியில் பார்த்தவன், சற்று புன்முறுவல் பூத்து,

"நீ பயப்படறே ! எங்கயாச்சும் என்னோட ஒரு லவ் ஸ்டோரியை நான் சொல்லலையோன்னு " என்று அவள் கூற, அவன் ஒன்றும் சொல்லாது அவளைக் கூர்ந்து கண்ணாடியில் பார்க்க, நக்ஷத்திரா


"சாம், என்னோட பெஸ்டி, என்னோட சைல்ட் ஹூட் க்ரஷ் ! என்னோட சுவீட் ஹார்ட் இன்னிவரை...ம்ஹும் என்னிக்கும் அவன் தான் என்னோட சுவீட்டி பை ! ஒருவேளே நான் சென்னைக்கு போகாம இருந்திருந்தா, நான் அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டு இந்த மாறி ஒரு எஸ்டேட்டில் இருந்திருப்பேன், யு நோ அவனுக்கு ப்ரபோஸ் வேற பண்ணி இருக்கேன், அப்போ எனக்கு 6 வயசுன்னு நினைக்கிறேன் !" என்று கடகடவென்று சாம் புராணத்தை, துருவ் என்ற சாம்மிடம் ஒப்பிக்க, துருவ்வின் மனம் கொதிக்கும் எண்ணையில் அவனை வைத்து வதக்கியது போல் வேதனை அடைந்தது.


துக்கம் என்பது நெருங்கின உறவு மறையும் போதோ, உற்றவர்களை நிரந்திரமாக பிரியும் போதோ மட்டுமல்ல, தனது துணையிடம் கூற வேண்டிய விஷயத்தைக் கூற முடியாச் சூழ்நிலையில் கூட வரும்! அது தான் அவனுக்கு ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவளிடம்,


"அந்த படுபாவி சாம் நான் தாண்டி" என்று கத்த வேண்டும் போல் அவனுக்கு இருந்தாலும், இப்பொது அவள் தேறி வருகின்ற நிலை அவனைத் தடுக்க,


"குட் டு நோ" என்று ஒருவாறு உணர்வில்லாக் குரலில் கூறி முடித்தான். அவனது வெறுமை கலந்த குரல் ஒருவேளை சாம் மீதான பொறாமையோ என்று அவள் மனதில் நினைத்துக் கொண்டு, 2 கைகளை இடுப்பில் வைத்தபடி, திரும்பி அவனை உற்று நோக்கி


"உனக்கு பொறாமையா இருக்கா ? லுக்! சாம் இஸ் எ பார்ட் ஆப் மி ! நீ என்னோட கணவன், அதுக்காக அவனை என் கிட்ட ..ம்ஹும் எனக்குள்ள இருந்து எடுத்து தூர போட முடியாது! ஓகே !" என்று மிரட்ட, துருவ் உதட்டைக் குவித்து ஒரு மாதிரி கிண்டல் எனும் போர்வைக் கொண்டு தனது கஷ்டங்களை மறைத்து,


"முதலே தெரிஞ்சு இருந்தா.நல்ல இருந்து இருக்கும் " என்று கூற, நக்ஷத்திரா தலையைச் சற்று சாய்த்து அவனைப் பார்த்து,


"ஓஹோ ! விஷயம் அப்படி போகுதோ!உன்னை என்கிட்ட இருந்து யாரும் காப்பாத்த முடியாது ! ஐ ஓன் யு மிஸ்டர்.நக்ஷத்திரா " என்று அவனுக்கு புதிய அடைமொழியைக் கொடுக்க, துருவ் சற்று கேலியைக் கூட்டி,


"நல்லவேளை அந்த சாம் தப்பிச்சான் ! பாவம் அவன் ! இந்த ராட்சசியை தாங்கிருக்க மாட்டான் ! ஓடியே போயிருப்பான்! பயந்தாங்குள்ளி " என்று முன்ஜாக்கிரதையாக 2 அடிகள் பின்னால் செல்லப் போக, நக்ஷத்திரா சீண்டப்பட்டப் பெண் சிங்கமாக மாறி அவனைத் துரத்த, இருவரும் வீட்டுக்குள் ஓடிச் சாடி, ஒருவழியாக வேறோர் அறையில் இருக்கும் சோபாவில் சரணடைய, அவனைச் சரமாரி அவள் அடிக்கத் துவங்க, துருவ் அவளது கையைப் பிடித்துக் கொண்டான்.


"ஏன் இன்னிக்கி உன்னோட எக்ஸ்-லவ்வை பத்தி பேச ஆரமிச்சே ?" என்று வினவ, அவனது பிடியில் இருந்து தனது மலர் போன்ற கரங்களைப் விடுத்துக் கொண்டவள், கன்னக்குழி விழுந்த அவனது கன்னப்பகுதியைத் தொட்டு


"சாம்முக்கு இது மாறி கன்னக்குழி, கிட்டத்தட்ட இதே இடத்துல நினைக்கிறேன்....இருக்கும் !" என்று அவனைக் கூர்ந்து நோக்கி, அவனது ரகசியத்தை தனது லேசர் கண்களால் ஊடுருவி அறிய முயலும் பார்வையைப் அவள் பார்க்க, துருவ் தனது கையினால் அந்தப் பார்வையைத் தடைச் செய்தான்.


"நீ நந்தினி இல்லே, நான் பெரிய பழுவேட்டரையர் இல்லே " என்று அவளது ஊடுருவும் பார்வையைக் கிண்டல் செய்துவிட்டு,


"சொல்லு ! ஏன் இத்தனை நாள் ஒரு தடவை கூட உன்னோட இந்த பப்பி லவ்வை பத்தி சொல்லவே இல்லே ?" என்று அவளது பதிலை ஆவலுடன் கேட்டான்.


அவன் மடியில் சுவாதீனமாக அமர்ந்தவள்,

"முன்னே நீயும் நானும் இருந்த நிலைக்கு என்னோட காதல் கதை ரொம்ப முக்கியம் பாரு ! பட் இப்போ ஐ வாண்ட் டு நோ யு, அதே நேரம் என்னை பத்தியும் நான் சொல்லணும் ! ஆனா என்னை பத்தி நான் சொல்லாமலே உனக்கு என்னை பத்தி நிறைய தெரிஞ்சு இருக்கு, எனக்கு என்னோட அம்மா சூடு வச்சது கூட. என்ன ? ஏதாச்சும் ஸ்பை வச்சியா ? சொல்லு " என்று கொஞ்சிக் கொஞ்சி மிரட்ட, அவன் நிலையோ ...




ஏற்கனவே 'சாம்' என்ற அழைப்பிலேயே தன்னை இழந்து விட்டான். பதிலுக்கு 'சிக்கு' என்று சொல்ல முடியாது தவித்தான். அவள் முகத்தில் சாம் பற்றி பேசும் போது தோன்றிய மகிழ்ச்சி வேறு! அதைக் கெடுத்து குட்டிச் சுவராக்க அவனுக்கு இஷ்டமில்லை. ஆனால் அவள் கேட்கும் கேள்விகளோ, ஒரு மார்க்கமாகவே இருக்க, அந்த நேரம் அவளது மகிழ்ச்சியைக் கெடுக்கவும் கூடாது, அதே நேரம் தான் இப்பொது எல்லா வித உண்மைகளைக் கூறவும் கூடாது என்று முடிவு எடுத்துக் கொண்டவன், அவளது தலையில் முட்டி,


"எதுக்கு ஸ்பை ! அதான் நீ இருக்கியே ! ஓட்ட வாய், உளறு வாய் !" என்று விளையாட்டாக அவளைக் கிண்டல் செய்ய, அவள் விழி மணிகள் அவளது கண்ணின் வெள்ளைப் படலத்தில் நடுவில் நின்று அதிர்ச்சி அடைந்தாலும்,

தான் அவ்வாறு அவனிடம் ஒன்றும் சொல்லவே இல்லை என்றுத் தீர்மானமாக நம்பினாள். அவனது தோளைப் பிடித்து அடித்தவள்,



"பொய் ! பொய் ! புளுவுண்ணி புருஷா " என்று செல்லமாக வைய, அவளது செல்ல அடிகளைப் பெற்றுக் கொண்டவன்,


"ஒருநாள் உன்னை நான் டைட்டா கட்டி பிடிச்சுக்கிட்டு தூங்கினேன் ஞாபகம் இருக்கா ? அன்னிக்கி நைட் தூக்கத்துல நீ தான் உளறி கொட்டினே ! " என்று உண்மை பாதி, பொய் மீதி என்று கலந்து கூற, நக்ஷத்திராவிற்கு அது நன்றாக ஞாபகம் வந்தது.


"ம்ம்ம்...நல்ல ஞாபகம் இருக்கு ! அன்னிக்கி சாம் பத்தி ஏதாச்சும் உளறினேனா ?" என்று தூண்டில் போட, வினாடிக்கு குறைவான தருணத்தில் அவனை முகம் மாறியது.


'விஷ் யு டிட்' என்று மனதில் சொல்லி கொண்டவன், அன்றைய இரவை நோக்கி தனது ஞாபகங்களைச் செலுத்தினான்.


அன்று இரவு இடியுடன் கூடிய மழை வேறு, போர்வை ஒன்றும் போர்த்திக் கொள்ளாது, ஏ சி யின் உபயத்தில் தூக்கத்திலேயே நடுங்கிக் கொண்டு இருந்தாள். திடீரென துருவ்விற்கு முழிப்பு வர, முதலில் அவளைத் தேடினான்! சோபாவில் நடுங்கிக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்த் அவளைப் பார்த்து பரிதாபப்பட்டு, ஒரு கனத்த போர்வையை அவள் மீது போர்த்த, அவளோ அதன் பிறகு சன்னமாக,


"மா ! ஏன் இப்படி ...என்னை…..எனக்கு பயமா இருக்கு …" என்று தெளிவாகப் பிதற்றிவிட்டு பின்னர் தெளிவில்லா உளறல்கள் தொடர, அதற்கு மேல் அவளை அவ்வாறு தனியாகப் படுக்க விட அவனுக்கு இஷ்டமிருக்கவில்லை. உடனே தன் கைகளில் ஏந்திக் கொண்டு தனது படுக்கையில் கிடத்த, அவளும் அவன் அருகே, அவன் மீது, இவன் தான் என்னுடைய காவலன் என்பது போல், சாய்ந்து கொண்டாள். அப்போதைய மன நிலையில், அவளாகத் தனது சுயநினைவில், அவனைக் கட்டிப்பிடித்துக் கொள்வது என்பது கனவில் கூடநடவாத காரியம் என்று அறிந்தவன், இப்பொது அவளாகத் தன்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டதை விட மனமில்லாது அவளைத் தன் பிடியில் இருந்து வெளியே விடவேயில்லை.


"என்ன ஆச்சு ? அந்த நாள் ஞாபகமா ?" என்று அவள் கேட்டதில் அவள் குரலிலும் ஒருவித வருத்தம் இருக்கத்தான் செய்தது.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அது

'ஏன் துருவ் நாம அப்போ ஜாலியா இந்த மாறி இருக்கலே ? நீ ஏன் எனக்கு வில்லனா இருந்தே ? நான் ஏன் அப்படி உன்கிட்ட பேசினேன்?' போன்ற உணர்ச்சிகளைக் கொண்டு அடக்கி இருக்க, துருவ் அவளது வருத்தங்களை நீக்கும் வழியாக,


"அப்பறம் உன்னை பத்தி எவ்வ்ளோ பீத்தல் உனக்கு தூக்கத்திலே ! சான்ஸே இல்லே போ " என்று அவள் மனதைத் திசைத்திருப்ப முயன்றான். அதற்கும் பரிசாக செல்ல அடிகள் கிடைக்கத்தான் செய்தன. அதன் பின் சாம் பற்றி, அவளது பார்வதி அம்மாவை பற்றி பேசினாலும் தனது தாய்-தந்தையைப் பற்றி அவ்வளவாக அவள் பேசவே இல்லை. முக்கியமாக தந்தையைப் பற்றி அவள் ஒருவார்த்தை கூட குறிப்பிடவில்லை.


"அம்மாக்கு அவங்க துக்கம் பெருசா போச்சு துருவ் ! ஆனா பார்வதி அம்மா எனக்காக எவ்வளோ ஏச்சு பேச்சு கேட்டு இருப்பாங்க தெரியுமா ! ஒருத்தங்க அம்மா ஆக கர்ப்பப் பை மட்டும் முக்கியமான தகுதி இல்லே துருவ், பெத்த புள்ளைக்காக வாழனும், கடவுளா கூப்பிடற வரை. ஷி கமிடெட் ...அவங்க தற்கொலை பண்ணிகிட்டாங்க ! என்னை எப்படி விட்டிட்டு போலாம் ? அன்னிக்கி நைட் ....யு நோ நான் தனியா இருந்தேன் அவங்களோட உயிரில்லாத உடல் ஒரு சைட், எனக்கு பசி வேறே ...துணைக்கு சாம் கொடுத்த சோல்ஜர் பொம்மை...அந்த பொம்மை தான் என்னோட ஒரே துணை எப்போ எனக்கு பயம் வந்தாலும், அவனே கூட இருக்கற மாறி ஒரு பீல் அதில் " என்று தன்னைப் பெற்ற அன்னையின் மரணத்தைப் பற்றி அவள் கூறு போது அவள் கண்களில் நீர் துளிகள் கோர்க்காது இல்லை, ஆனால் சாம் பற்றி பேசும் போது அவள் முகத்தில் ஒரு பெருமிதம் மற்றும் துணிவும் வர, துருவ் அடைந்த வேதனை வார்த்தைகளால் வடிவமைக்க முடியாது.


அவனும் அவளும் சேர்ந்து இருந்திருந்தால், அவளுக்கு இம்மாதிரியான ஒன்று நிகழ்ந்திருக்காது, சாம் என்ற காவலன் அவளை பாதுகாக்காது இருந்து இருக்கவும் மாட்டான். அவள் தான் தனது சிக்கு என்று தெரிந்திருந்தால், அவன் அன்று அப்படி அவளைப் பலவந்தப்படுத்தி இருந்திருப்பானா ? அல்லது அவன் தான் தனது சாம் என்று தெரிந்திருத்தால், நாவடக்கத்தை அனுஷ்டிக்காது இருந்திருக்க மாட்டாள். என்ன சொல்ல? விதி என்ற ஒன்று இங்கே வில்லன் அதே விதி தான் சிலசமயம் நாயகனும் கூட.


இந்த விதி இவர்கள் வாழ்வில் இனி நாயகனா இல்லை வில்லனா ?


தனது சிறுவயது நிகழ்வுகள் முக்கியமாக சென்னை வந்தபின் நடந்தவற்றை அவள் கூறிக் கொண்டு இருந்தவள், ஒரு கட்டத்தில் நிறுத்தி,


"நீ உன்னை பத்தி ஒன்னும் சொல்லவே இல்லே ? உன்னோட அப்பா, ஐ மீன் மாமா எங்கே ? அத்தைக்கு என்ன ஆச்சு? அந்த பொண்ணு ரோகினி யாரு உனக்கு" என்று கேட்டே விட்டாள்.


ஆனால் அவன் முகம் போன போக்கைப் பார்த்தவள் பயப்படவில்லை, ஆனால் வருத்தம் அடைந்தாள். முகத்தில் மலர்ச்சி என்ற ஒன்றை அறியாதவன் போல் அவன் முகம் மாறி விட்டது. அதுவும் அவளது கதையைச் சுவாரஸ்யமாகக் கேட்டுக் கொண்டு இருந்தவன், இந்த கேள்வியில் அப்படியே நேர் மாறாக மாறிவிட்டான். இருண்டக் குகைக்குள் ஒரு கொடூரமான பிராணியைச் சந்தித்தால் எப்படி முகம் மாறுமோ, அது போல அவன் முகம்!


"சாரி ! வேணாம் விடு ! நான் கேக்கலே, உனக்கு என்னிக்கி சொல்ல தோணுதோ, அன்னிக்கி சொல்லு ! பட் உன்னோட கேர்ள் ப்ரெண்ட்ஸ் கவுண்ட் வேணும் எனக்கு ! எத்தனை பேர் உன் பின்னாடி சுத்தினாங்க ? நீ யார் பின்னாடி சுத்தினே ?" என்று பேச்சை மாற்ற, அவன் முகத்தை சற்று மலர்வாக வைத்துக் கொண்டு,


"இந்த தமிழ்நாடு ஃபுல்லா என் பின்னாடி தான் சுத்துது !நான் யார் பின்னாடி சுத்தினேன்....ம்ம்ம்ம் ஒரு அழகான குட்டை பொண்ணு அவ ...அவ கண்ணு அப்படியே எல் இ டி லைட் மாறி எப்போதும் பிரகாசமா இருக்கும்…" என்று அவளது கண்களைப் பார்த்து கூறியவன், அவளது மூக்கைப் பிடித்துக் கொண்டு,



"சீஸ் மாறி அவளோட மூக்கு செம சாப்ட் ...அதே நேரம் கொஞ்சம் ஷார்ப் லைக் எ கூர்மையான பென்சில் முனை " என்று கூற, நக்ஷத்திரா


"நல்லவேளை நீ கவிதை எழுத போகலே! மொக்கை உவமயணி " என்று வாரி விட்டாள். அதை எல்லாம் கண்டு கொள்ளாது, அவன்


"ஷுஷ் ! அவ காது ..."என்று அவளது காது மடலை, அவள் சிலிர்க்க மென்மையாக தனது நகத்தால் வருடியவன்,


"இந்த வெண் சங்கு மாறி ஒரு ஷேப் ...அட்டராக்ட்டிவ் அண்ட் ஐ ......." என்று அவன் தாபமாக ஒருவித ஹஸ்கி குரலில் அந்தரங்கமாக முணுமுணுக்க, அவள் முகம் குப்பென்று சிவந்தது. அந்த வெட்கத்தை ரசித்தவன், தனது மன உறுதியை, மனக்கட்டுப்பாட்டினை முற்றிலும் இழந்தான்.


"ஹர் லிப்ஸ் ....தே ட்ரைவ் மி கிரேசி ...லைக் ராஸ்பெரி ஃப்ரூட் ..சில சமயம் வெரி சுவீட்...சில சமயம் ..ஐ ஜஸ்ட் வாண்ட் டு ......" என்று கவிழ்ந்த மலர் போல் இருக்கும் அவளது முகத்தை நிமிர்த்தியவன், தனது கட்டை விரலால் அவள் அதரங்களை நீவி விட்டாலும் அவளது இதயத்திற்கு இணையாக துடிக்கும் அவன் உயிர் வாங்கும் இரட்டை கத்திகளான இவள் இதழ்களுக்கு அதன் இணையான தனது அதரங்களை கொடுக்க முன் வர, இருவர் மூச்சு காற்று மோதிய அந்நேரம் ஷோபாவின் தொண்டைச் செருமல் கேட்க, இருவரும் டக்கென்று எழுந்து நின்றனர்.



எப்போதும் ஷோபா ஒரு அறையில் வைத்து அவளிடம் பேசி, தெரபி என்ற கவுன்சிலிங் செய்வாரோ அந்த அறையில் தான் இருவரும் இருந்தனர். அவர் வரப்போவதை இருவரும் மறந்து விட்டிருந்தனர். அந்த அளவு அவர்கள் தத்தம் இணையுடன் இழைந்து கொண்டிருந்த தருணத்தில், ஷோபா தான் ஒரு கரடியோ என்று நினைக்கும் நிலையில், அவர்


"நான் அப்பறமா வரேன்" என்று சொல்ல, நக்ஷத்திராவின் முகம் வெட்கத்தால் சிவந்தது என்றால், துருவ்வின் முகம் தான் என்ன காரியம் செய்யத் துணிந்தோம் என்று எண்ணி மருகினான். அவன் செய்யப் போனதுடன் அவன் நின்று இருப்பானா?



சந்தேகமே ! இதழ் அணைப்பு வேறு திசையில் கண்டிப்பாக அவனை இழுத்துச் செல்லும், அவளையும் தான்! அவளது மாறி வருகின்ற மனநிலையில் அவனை அவள் ஏற்றுக் கொண்டிருப்பாள். அதுவா அவன் விரும்புவது ! அவள் சாதிக்க வேண்டிய விஷயங்கள் பல, அதை தூரத்தில் இருந்து தான், தான் கண்டு ரசிக்க வேண்டும் என்று அவன் எடுத்த முடிவு ஆட்டம் கண்டதை எண்ணி அவன் முகம் கன்றிப் போனான்.


கிட்டத்தட்ட கொலைக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவன் , அதை ஒத்துக்கொள்ளும் போது எப்படி இருப்பானோ அந்த நிலை. இருவரின் முக பாவங்களைப் பார்த்த ஷோபா, துருவ்வைப் பார்த்து முகம் சுளித்து,


"ஐ நீட் டு டாக் வித் யு " என்று சொல்ல, துருவ் அவரை எதிர்த்துப் பேச முடியாது,


"ஷ்யூர்!" என்று சொல்லி வைத்தான்.



ஷோபாவின் அன்றைய கேள்விக்கு அவருக்குப் பதில் கிடைத்து விட்டாலும், துருவ்வின் மனப்போக்கு அதற்கு ஏதுவாக இன்னும் மாறவில்லை என்பது அவரது ஐயம். அது ஐயமில்லை, உண்மையே என்று துருவ் தீர்மானமாக உரைத்தும் விட்டான், அவளது கவுன்சிலிங் முடிந்தப் பின்.


"ஏன் சின்னு ?" என்று வருத்தம் கலந்த குரலில் அவர் வினவ, அவன் இறுக்கமாக,


"டு யு திங்க் அம் குட் இனஃப் ?" என்று கேட்டவன் குரலில் வருத்தம் இல்லாது இல்லை. நிறைய பேருக்கு வாழ்க்கை இரண்டாம் வாய்ப்பு எனும் உயிர் காப்பானை அளித்து இருக்கிறது. இங்கே இவனுக்கு அது வேண்டும் என்று ஷோபா என்பவளின் தாய் உள்ளம் கூறுகிறது, ஆனால் அதே நேரம் ஒரு பெண்ணாக அவன் சொல்வது சரி என்றும் கூறுகிறது. இந்த இரண்டும் கெட்டான் நிலை என்று சொல்வார்களே, அது தான் ஷோபா அனுபவித்துக் கொண்டு இருந்தார்.


"டேக் கேர் ! உன்னோட முடிவு அவளையும் பாதிக்கும்ன்னு உனக்கு தெரியும்னு நான் நம்பறேன்" என்று அன்று கடைசி முறையாக கவுன்சிலிங் செய்துவிட்டு அவர் பெங்களூர் புறப்பட்டார்.


அதன் பின், அன்று துருவ், நக்ஷத்திரா கண்ணில் படவேயில்லை. அவளும் கேட்டுப் பார்த்து, தேடிப் பார்த்துச் சோர்ந்து போனாள். இரவு நேரத்தில், அவள் உறங்கி இருப்பாள் என்று நினைத்துக் கொண்டு அவன் தள்ளாடியபடி வீடு வர, அவளோ ஆந்தையைக் கொண்டு அன்று விழித்துக் கொண்டு இருந்தாள். அவனது தள்ளாட்டம், அவளுக்கு 1000 சந்தேகங்களை விதைக்க, முதலில் அவனை நேருக்கு நேர் பார்த்து அவள் கேட்டது என்னவோ,


"குடிச்சு இருக்கியா ? அதான் வீட்டில் குட்டி பார் வச்சு இருக்கியே ! பத்தலியா?



ஓ ! துரைக்கு சீமை சரக்கு வேண்டாமா? ஒன்லி நாட்டு சரக்கு வேணுமா ? அது சரி தான், அதோட கிக்கே தனி ! சொல்லிருந்தா, நானும் வந்திருப்பேனே!


புருஷனும், பொண்டாட்டியும் சியர்ஸ்ன்னு கிளாஸை இடிச்சு சரக்கு அடிச்சு இருந்திருக்கலாம் ! ஓ நோ ! பொன்னான வாய்ப்பு போச்சே " என்று வடை போச்சே என்ற ரீதியில் அவள் பேச்சு இருந்தாலும் அதில் இருந்த குதர்க்கம் காரமாகத் தான் இருந்தது.


அவனோ ஒரே ஒரு பதில் தான் அளித்தான்,


"ஷட் அப் " என்று கூறிவிட்டுத் திரும்பி மாடிப்படியை நோக்கி முன்னேற, அவனது குரலில் குடித்த அடையாளம் எதுவும் தெரியாது, அவனது நடையில் மட்டும் இருக்கும் தள்ளாட்டம் அவளுக்கு வேறு ஒன்றை தோற்றுவிக்க, ஓடிச்சென்று அவனது முதுகைத் தட்டினாள். அதில் வேதனைப் பெருக, அவன் வலியினால்


"ஸ்ஸ்ஸ்" என்று முனங்கினான். அதுமட்டுமல்ல, தன்னைக் கண்டு கொண்டாளோ என்று வந்த ஆத்திரத்தில்,


"ஏண்டி என் உயிரை வாங்கறே ?" என்று கத்தியே விட்டான். தன்னுடைய சந்தேகம் உண்மைதான் என்று உணர்ந்தவள்,


"யு ஆர் கில்லிங் மி துருவ்! " என்று அவளும் கத்த, இருவரின் சத்தம் மட்டும் அந்த அறையில் நிரம்பி வழிந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முறைத்து, முறுக்கிக் கொண்டிருக்க, அவனுக்கு உடல் வேதனை அதிகமாயிற்று. இவளையே பார்த்துக் கொண்டிருந்தால், ஒன்றும் ஆகப் போவதில்லை என்று முடிவு கட்டியவன்,


"குட் நைட்" என்று சொல்லிவிட்டு, முயன்று படி ஏறி தனது அறைக்குச் செல்லப் போனான். அவள் அவனைத் தனியாக விடுவாளா, அதுவும் இந்தக் காயப்பட்ட நிலையில்! சிறுத்தை ஏற்படுத்திய காயங்கள் இப்பொது தான் ஆறி, தழும்புகள் மட்டும் காணும் நிலைக்கு இருக்க, இவன் என்னடா என்றால் மேலும் தன்னை வருத்திக் கொள்கிறானே என்று வருந்தினாள்.


கையில் மருந்துடன் அவனது அறைக்குச் சென்றவள், தனது மேல்ச் சட்டையைக் கூட அவிழ்க்க முடியாது திணறிக் கொண்டு இருந்தவனைப் பார்த்து


"வாவ் ! எல்லாம் தனியா செய்ய முடியும்னு ஓவர் கான்பிடென்ஸ் ! பட் ஐ பிட்டி யு துருவ் !" என்று கூறியவள் குரலில் வருத்தம், கோபம், இளக்காரம் எல்லாம் சம விகிதத்தில் கலந்து இருக்க, துருவ் அவளை முறைத்துத் தள்ளினான்.



அவனுடைய மேல்ச் சட்டையை அவிழ்க்க அவனுக்கு உதவியவள், மருந்தினை மென்மையாக தடவ முயன்றாலும், அவனுக்கு வேதனை இருக்கத்தான் செய்தது, பல்லைக் கடித்துப் பொறுத்துக் கொண்டு இருக்கிறான் என்று அவனது விறைப்பான உடல் மொழியில் இருந்து அவள் புரிந்துக் கொண்டாள்.



"ஏன் துருவ் ? மார்னிங் நாம ரெண்டு பேரும் சந்தோஷமா இருந்தோமே ! அதுனாலயா ? அப்போ நானும் தான் இந்த மாறி சாட்டையாலே என்னை ஹர்ட் பண்ணிக்கணும் ! உன்னை இப்படி ப்ரொவோக் பண்ணினத்துக்கு ! அத்தையை பத்தி அன்னிக்கி வாயில் வந்ததை பேசினத்துக்கு ! உன்னை தப்பா புரிஞ்சிகிட்டு …" என்று அதற்கு மேல் அவளால் பேச இயலவில்லை.


அவனது நிலைக்கண்டு அழ ஆரம்பித்தாளா அல்லது நடக்கப் போகும் நிகழ்வுகள் இது போல் இருக்கப்போகிறது என்று ஊகித்து அழ ஆரம்பித்தாளா ! அவளுக்கே வெளிச்சம்.


"தாலி கட்டி, அம்மி மிதிச்சு, அருந்ததி பார்த்து நானும் நீயும் கல்யாணம் செய்யலே. இன் ஃபாக்ட் எனக்கு தெரியாம எப்போ எப்படி என்னோட கையெழுத்து வாங்கினேன்னு எனக்கு ஒரே ஒரு கெஸ் தான் இருக்கு.



ஐ டோன்ட் கேர் ஹௌ ஐ பிகேம் யூர் வைஃப் ! பட் அம் யூர் வைஃப் நவ் ! நீ என்ன செய்ஞ்சாலும் அதில் 50% என்னோட பங்கு உண்டு. லெட் மி ஸ்டார்ட் இட்! அந்த சாட்டை எங்கே ? வேர் தி ஹெல் இட் இஸ்? அது கிடைக்காம போனா என்ன? வேற ஏதாச்சும் கிடைக்கும்" என்று கண்களைத் துடைத்துக் கொண்டு அவள் கத்தி விட்டு, கண்ணுக்கு தெரிந்த ட்ராவில் இருக்கும் கத்திரியை எடுத்து தன்னைக் காயப்படுத்திக் கொள்ள முனைந்தாள்.


அதைப் பிடுங்கி தூர எறிந்தவன், வேதனைத் ததும்பிய குரலில்


"வேண்டாம் தாரா ! ப்ளீஸ் விடு ! யு ஆர் மை ஏஞ்சல் ..ப்ளீஸ் டோன்ட் .." என்று கிட்டத்தட்ட கெஞ்ச, அவனது 'நீ எந்தன் தேவதை' என்ற வாக்கில் அவள் தணிந்தாள். அவனது மனப்போராட்டத்தின் ஒரு பகுதி அவளுக்கு புரியாது இல்லை. அந்த ஓர் இரவு, அதை நினைத்து தான் இவன் தன்னைத் தானே இப்படி வருத்திக் கொண்டு இருக்கிறானே என்று முடிவு கட்டினாள். அது மட்டுமா என்ன?


கணவன் துருவ்விற்கும், அவளது சிறு வயது நண்பன் சாம்மிற்கும் இடையே அவன் கடந்து அல்லாடுவது அவனுக்கு மட்டும் தான் தெரியும். எந்தப் பெண்ணைத் தான், பாதுகாப்பேன் என்று வாக்கு கொடுத்தானோ, அவளை அவன் …….அதை தாங்க முடியாது தனக்கு இந்த தண்டனையை வழங்கிக் கொண்டு இருக்கிறான். அதுவும் இன்று காலை தான் வகுத்த எல்லையை மீறி விட்டோம் என்ற மனக்குமறல் வேறு. அவளைச் சந்திக்கும் முன் அவன் வாழ்ந்த வாழ்வு முறை என்று பல விஷயங்கள் அவனது இந்த சுய தண்டனைக்கு காரணம். தண்டனை இதற்கு தீர்வா என்றால்..அவனுக்கும் அதன் பதில் தெரியாது, ஆனால் அதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.




அவன் அவளுடன் இருப்பான், ஆனால் அதற்கு காலக் கெடு இருக்கிறது, அதன் பின் அவன்.....அவன் நினைத்த பாதையில் பயணம் செய்வான் ! ஆனால் இருவர் சேர்ந்து பயணம் செய்யும் கல்யாண உறவில், அவளுக்கும் முடிவுகள் எடுக்கும் உரிமை உண்டு என்பதை அவன் மறந்தானா இல்லை அதற்கு வாய்ப்பளிக்க மாட்டேன் என்ற பிடிவாதமா ? அவனுக்கு மட்டும் தான் வெளிச்சம்.



அவனது வேதனையைத் தாள முடியாதவள்,


"துருவ் ! நெஸ்ட் டைம் நீ இப்படி பண்ணினே ! என்னை ஏதாச்சும் பண்ணிப்பேன் ! பண்ண மாட்டேன்னு நினைக்காதே ! கண்டிப்பா பண்ணுவேன்! நீ சொன்ன யு ஆர் மை ஏஞ்சல் ....அது என்கிட்ட சாம் சொல்லிருக்கான், அது ஏன்ன்னு தெரியலே, உனக்கும் சாம்முக்கும் ஏதோ ஒரு கனெக்ஷன் இருக்கற மாறி இருக்கு, பட் என்னோட சாம் ...." என்று அவன் முகத்தைப் பற்றி , புருவங்கள் நெரிய அவனை உற்று நோக்கியவள்,


"சொல்ல தெரியல ...ஆனா எதோ இருக்கு...ஆனா அது ஏனக்கு தெரிய வேணாம் இப்போ " என்று அவனை அணைத்துக் கொண்டாள். அவனைக் கட்டிக் கொண்டவள் மனதில்,



'இவன் ஒருவேளை சாம்மாக இருந்தால்....சே சே ....வேண்டாம் ' என்று ஒருநிமிடம் அந்த இரவை நினைத்து உடல் நடுங்கியது.


"துருவ்! வேண்டாம் துருவ் !" என்று அவள் கெஞ்சியது,


"யு ஆர் எ மோரான் ...யு ஆர் எ பா*************" என்று அவனைத் திட்டியது. தன்னை அவனிடம் இழந்து, அவள் அழுது கரைந்தது எல்லாம் வரிசையாக ஞாபகம் வர, அவளது நடுக்கத்தை உணர்ந்தவன் அதைத் தேற்றும் வழி அறியாது உணர்வில்லா சிலையாக நின்றான்.




இருவரின் பெருத்த அமைதியில் சில நாட்கள் கழிய, அவளுடைய வேதனை ததும்பிய கண்களைப் பார்த்தவன்


"நான் செத்து போனா, இந்த மாறி நீ இருப்பே, அதை நான் பார்க்க முடியாதுனு இப்போவே டெமோ காட்டறியா?" என்று கோபித்துக் கொள்ள, அவளும்



"சீ போடா ! வாயை கழுவு ! இடியட்" என்று திட்டித் தீர்க்க, அவளை எப்படி சரி செய்ய என்று யோசித்தவன்,



"கம் ! லெட்ஸ் ஃபிளை " என்று கைக்கொடுத்து அவளை எழுப்பி ஹெலிகாப்டர் வைக்கப்பட்டு இருக்கும் கொட்டகைக்குக் கூட்டிக் கொண்டுச் சென்றான். அவன் சென்ற போது, அந்த ஹெலிகாப்டரின் பைலட் அங்கே தான் இருந்தான்.


"நான் இப்போ ஓட்ட முடியுமா ! இஸ் ஆல் செட் ?" என்று வினவ, அவன்


"கொஞ்சம் செக் பண்ணிட்டு சொல்லறேன் சார் !" என்று கூறிவிட்டு, துருவ்விடம் எல்லாம் சரியாக இருக்கிறது என்று சொல்ல, துருவ் மற்றும் நக்ஷத்திரா ஹெலிகாப்டரில் பயணம் செய்ய ஆரம்பித்தனர்.


நிலத்தில் நிற்கும் போது, தன் முன் ஓங்கி வளர்ந்து இருக்கும் மரங்கள், அந்த பெரியதோர் அரண்மனைப் போல் இருக்கும் பங்களா, பச்சைப் பசேல் காபித் தோட்டம், சிறுத்தை வந்த தடாகம் என்று இவை அனைத்தையும் மேலிருந்து பார்க்கையில் அவளுக்கு வேறோர் தினுசாக இருந்தது.


முக்கியமாக பெரிதாக இருப்பவைகள் எல்லாம் சிறிய கொலு பொம்மை சாமான்கள் போல் இருப்பதைப் பார்க்க அவளுக்குத் தனி குஷி. சிறுபெண் போல் கைகளைத் தட்டிக் கொண்டு பயணத்தை அவள் ரசிப்பதைப் பார்த்தவனுக்கு மகிழ்வே!


"பிளைட் இல் தான் போயிருக்கியே ! " என்று அவன் கூறு, அவள்


"அது எனக்கு தெரியாத பைலட் ஓட்டினான், இது என்னோட துருவ் ஓட்டி , அவன் பக்கத்துல நான் உட்கார்ந்துகிட்டு இருக்கேன், இட்ஸ் ரொமான்டிக்" என்று சொல்லி விட்டு, அவன் எப்போது ஹெலிகாப்டர் ஓட்டக் கற்றுக் கொண்டான் என்று வினவினாள்.


ஏதோ அவனது படத்திற்காக ஹெலிகாப்டர் ஓட்டப்படித்துக் கொண்டான். ஆனால் அதில் மிகவும் ஆர்வமாகி இன்னும் பயிற்சி பெற்றுக் கொண்டான் என்று அறிந்துக் கொண்டவள்


"வாவ் ! உன்னோட இந்த டெடிகேஷன் ...நாட் பேட்.." என்று போலியாக கேலி செய்ய, அவனும் விளையாட்டாக


"நாட் பேட் ...தட்ஸ் பேட் ….எக்சலண்ட்னு சொல்லணும் தாரா பேபி" என்று மேலும் ஹெலிகாப்டர் உயரத்தைக் கூட்ட, அப்போது தான் அது நிகழ்ந்தது .....



ஹெலிகாப்டர் அவன் கட்டுப்பாடின்றி, தரையை நோக்கி விழ ஆரம்பித்தது, இருவரும் பீதி அடைந்தனர். ஆனால் துருவ் ஹெலிகாப்டர் ஓட்டுவதில் பயிற்சிப் பெற்று இருந்ததால், அந்த பீதியைப் பின்னால் தள்ளினான், நொடி அளவில்.


ஹெலிகாப்டர் பயிற்சியில் 'ஆட்டோ ரொட்டேஷன்' எனும் ஒரு முறை உண்டு. அதாவது ஹெலிகாப்டர் என்ஜின் பழுதடையும் நொடிகளில், மேலே சுற்றும் பிளேடுகள் எனப்படும் ரோட்டர் பகுதியை தன் வசப்படுத்தி, சரியான முறையில் தரை இறக்கும் முறை அது.



அதன் படி, துருவ் மிகவும் ஜாக்கிரதையாக ஹெலிகாப்டரைத் தரை இறக்கினான்.



இறக்கியபின் தான் அவனுக்கு உயிரே வந்தது. ஏனென்றால் என்ஜின் பழுதானால் சில சமயம் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்துச் சிதற வாய்ப்புகள் அதிகம். அது மட்டுமா, சில சமயம் தரை இறக்கும் போதும், முக்கியமாக இந்த மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளதாகவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவன் சற்று திறமையான ஹெலிகாப்டர் ஓட்டுனர் என்பதால் இருவரும் உயிர் தப்பினர்.


வெளியே வந்தவள் அவனை இறுக்கமாக கட்டி அணைத்துக் கொண்டாள்.


"நீயும் நானும் நிஜமா இருக்கோம் ...உண்மை தானே ! உனக்கு ஏதாச்சும் ஆகி இருந்தா …" என்று ஆரம்பிக்க அவளது வாயைப் பொற்றியவன்,


"ஒருவேளை ஏதாச்சும் ஆகிருந்தா, ரெண்டு பேரும் சேர்ந்து கடவுள் இருக்காறானு மேலே போய் தெரிஞ்சிக்கிட்டு இருந்திருப்போம் , சோ அந்த சோ கால்ட் கடவுளை சந்திக்க இன்னும் டைம் இருக்கு " என்று விளையாட்டாக அவன் பேசினாலும் , அவளது காதல் ஊற்றாக இல்லாது, பொங்கும் நதியாகப் பெருகுவதை உணர்ந்தான், அதுவும் காட்டாறு போல். அதன் விளைவு ….



அடுத்த 2 நாட்கள் கழித்து ..அவன் தன் கோப இளக்கார முகத்துடன் அவளை நோக்கி, அவளோ கண்ணீருடன் அவனைப் பார்க்க, அவன் முகம் மேலும் இறுகியது.


"தட்ஸ் இட் ! வி ஆர் டன் " என்று அவன் உரைத்து விட்டு அவளை நீங்கினான். தன்னை விட்டுச் செல்லும் அவன் பின், அகத்தை விட்டொழித்து விட்டவள்


"துருவ் ! ஒன் லாஸ்ட் டைம்....போகும் முன்னாடி ஒரே ஒரு முறை ...உன்னை ஹக் பண்ணி பை சொல்லணும் ..ப்ளீஸ்"


என்று கெஞ்ச, உலகில் மிகவும் கடினமான வஸ்துவான வைரம் போன்ற இதயத்தவன், அவளது கெஞ்சலைச் செவி சாய்க்காது, கீழே மாடிப்படிகளைக் கடந்து, தனது காரில் விருட்டென்று ஏறி அவளை ஒருமுறை கூட நேரே காணாது சென்று விட்டான்.


வானில் துருவ் நட்சத்திரம் என்றும் மறையாது !

ஆனால் இவர்கள் ?

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 22

ஹெலிகாப்டர் கீழே விழப் போன சம்பவத்தையே துருவ் யோசித்துக் கொண்டு இருந்தான். அவனது மனம் அது தானாக, ஏற்பட்ட விபத்து என்று ஏனோ நம்ப மறுத்தது. அதன் காரணம், அவன் அதனை தரை இறக்கியப்பின் அந்த ஹெலிகாப்டரை எப்போதும் ஓட்டும் விமானியை முதலில் அழைத்து,


"ஹேய் ராப் ! ஒரு சின்ன இன்சிடென்ட் …" என்று விவரித்து விட்டு,


"நான் மேலே பறக்கும் போது, திடீர்ன்னு கூலண்ட் அளவு பயங்கரமா குறைஞ்சு போச்சு ...வை ? எனி ஐடியா ?" என்று கேட்க, ராப்பிடம் இருந்து ஒருசில நொடிகள் பதிலே வரவில்லை.


"ராப் ! ஆர் யு தேர் ?" என்று 2 முறை துருவ் கூப்பிட, ராப் சமாளித்தபடி,


"தெரியலே சார் ! செக் செய்யணும் " என்று பொதுவாக ஒரு பதிலைக் கூற, துருவ்விற்கு ஏனோ அந்த நொடி சற்று உறுத்தலாகத் தான் இருந்தது. ஆனால் காண்பித்துக் கொள்ளவில்லை. பாக்யத்திடம் செய்தியைத் தெரிவித்து, தான் தற்போது இருக்கும் இடத்தை குறிப்பிட்டு ஒரு ஜீப்பை அனுப்பி வைக்கச் சொன்னான். நல்லவேளை, அவர்கள் தரையிறங்கிய இடத்தில், அலைபேசிப் பின்னல் வலை எனப்படும் நெட்வொர்க் கொஞ்சம் வேலை செய்தது.


வீடு வந்து சேர்ந்தவன், ஹெலிகாப்டரை அதன் கொட்டகைக்கு அழைத்து வரவும் ஏற்பாடு செய்தான். அவனுக்கு ஓரளவு ஹெலிகாப்டர்க்குள் இருக்கும் சமாச்சாரங்கள் தெரியும், தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் வந்தபின், அதற்கான நேரம் ஒதுக்கித் தெரிந்தும் கொண்டான்.


என்ன பிரச்சனை என்று ராப் ஆராய முற்பட்ட நேரம், துருவ்வும் அங்கே இருந்தான். ராப், துருவ் அருகே சற்று அசௌகர்யமாக இருப்பது போல் துருவ்விற்குத் தோன்றியது. அவனுடைய தாத்தா வழி வந்த வியாபாரி மூளை அதனைச் சரியாகக் கண்டு எடுத்தது.



ஒரு திறமையான வியாபாரி என்பவன் எப்போதும் மற்றவர்கள், அதிலும் முக்கியமாக கூட இருப்பவர்கள் எப்படி நடக்கிறார்கள் என்று கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று சொல்வார் நீலகண்டன்.


அதனால் தான் என்னவோ ராப் மீது அவன் சந்தேகம் பெருக ஆரம்பிக்க, நடந்தவற்றை அசைப் போட்டபடி சாய் நாற்காலியில் உட்கார்ந்து விட்டதைப் பார்த்துக் கொண்டு இருந்தவனின் கவனத்தை அவன் மனைவி கலைத்தாள்.




தலை முடியில் இருந்து சிறிதளவு நீர் சொட்ட அவள் அறை வாயிலில் நின்று கொண்டிருக்க, மென்மையான தென்றல் காற்றுடன் அவனது அறைக்கு கீழே இருக்கும் மல்லிப் பந்தலில் இருந்து மல்லிப் பூ மலர்ந்து கொண்டு இருப்பதால் வந்த ஆளைக் கிறுக்கும் மல்லிப் பூ வாசனை உடன் அவளும் !


அழகாய் பூப்போட்ட இரவு நேர உடை, அசிங்கமாக இருக்கவில்லை, ஆனால் அவனுக்கு இம்சையாக இருந்தது. மனைவி, மனைவி என்றும் அவன் கொண்டாடிய காலங்களில் ஒரு வித ஈர்ப்பென்றால், கணவன் கணவன் என்று அவள் கொண்டாடும் காலத்தில் அவனுக்கு வேறு விதமான ஈர்ப்பு பெருகியது. அவன் வேண்டாத ஈர்ப்பு அது. அவனுக்கு வேண்டவே வேண்டாம். அதை அவளிடம் எப்படி உரைக்க என்ற ஒரு போராட்டம்.


கண்கள் எடுக்காது அவளைப் பார்க்க, அவளோ,


"நீ வாங்கி வச்ச ட்ரெஸ் தான் ! வெரி நைஸ் இட் இஸ் . உனக்கு நல்ல டேஸ்ட் !" என்று அவனைப் பாராட்டியவள்,


"என்ன ஆச்சு ? என்னவோ போல இருக்கே ?" என்று அவன் அருகில் வர, சற்று நேரம் முன் குளித்து இருந்ததால் , அவளிடம் இருந்து புறப்பட்ட அவளது மணத்துடன் சேர்ந்து அவள் பயன்படுத்தும் ஷாம்புவின் மணமும் சேர்ந்து அவனை முழுப் பித்தனாக்கிக் கொண்டு இருப்பது தெரியாது அவன் அருகில் அவள் இன்னும் நெருங்க துருவ் தனது வசத்தை மெல்ல இழக்க ஆரம்பித்தான். போதைப் பொருள் பயன்படுத்தும் நேரம் வரும் போது, அதைப் பயன்படுத்த ஏதேனும் தடை வந்தால் கைகள், உடல் எல்லாம் ஒருவித நடுக்கம் கொள்ளுமே, அது போல் அவனுக்குள் ஒருவித நடுக்கம் பெருக ஆரம்பிக்க, அவளை அந்த அறையில் இருந்து போக சொல் என்று மூளை கட்டளை இட்டாலும், காதல் மனம் என்ற சர்வாதிகாரி அவனது நாவைக் கட்டி வைக்க, அவனால் ஒன்றும் சொல்ல முடியாது தற்காலிக ஊமையாகப் போனான்!


மீண்டும் அவள்

"என்ன ஆச்சு ? உடம்பு முடியலியா ?" என்று அவனது நெற்றியில் மீது கைவைத்துப் பார்க்க, அந்த மென் தீண்டலில் அவனுள் இருக்கும் சாம் என்பவனை முழுதும் தொலைத்தான்.


அவள் கணவனாக மட்டுமே அங்கு இருக்க, அவளது கரம் படர்ந்த அவன் நெற்றியில் அந்த தீண்டல் தந்த வெம்மையைக் கண்கள் மூடி ரசித்து உள்வாங்கிக் கொண்டான். மனம் முழுவதும் அவள் வேண்டும் என்ற ராட்சச உணர்வு அவனை ஆட்கொள்ள ஆரம்பிக்க, துருவ் மீண்டும் தனது கட்டுப்பாட்டினை இழக்க ஆரம்பித்தான். அவள் முகத்தினைப் பற்றி ஆவேசமாக முத்தமிட ஆரம்பிக்க, முதலில் அந்த முத்தப் போரை எதிர்பார்க்காது அவள் பின் வாங்கினாலும், அவனுக்கு இணையாக அவளும் மாற, காற்றாற்றின் வெள்ளம் போன்ற அந்தக் காதல் வெளிப்பாடு மெல்ல, சீராக ஓடும் ஓடையைப் போல் ஆக, இருவரும் இணையைப் பிரிய மனமில்லாது தவிக்க, அடுத்த கட்டத்தை நோக்கி அவன் செல்ல தீர்மானித்தான்.



அவள் இதழ்களுக்குத் தற்காலிக விடுமுறை அளித்தவன், அவள் முற்றிலும் எதிர்பாராத நேரத்தில் அவளைக் கைகளில் ஏந்த, நக்ஷத்திரா


"துருவ் ! என்ன செய்யறே ! ஆர் யு ஆல்ரைட் ?" என்று மெலிதாகக் கத்த ஆரம்பிக்க, அதனைப் பொருட்படுத்தாத நிலைக்கு அவன் ஏற்கனேவே சென்று விட்டான். இவள் என்னவள் என்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில். அதன் தாக்கத்தில் மட்டுமே அவன் இருந்தான். அவளை மஞ்சத்தில் கிடத்தியவன், அவளது அதிர்ச்சியைக் கண்டு கொள்ளாது அவளது கணவனாக மாற முயன்ற நேரம், அவளது கண்களைச் சந்திக்க, அந்தக் கண்களில் அவன் அன்று அவன் காணத் தவறிய வேதனையின் சாயல் ஒரு க்ஷண நேரம் இருந்தாலும் அதை அவள் அவனுக்காக அவள் மாற்றிக் கொண்டு அவனை முழு மனதுடன் ஏற்க தயாராக, துருவ் விழித்துக் கொண்டான்.


தன் மீதான வெறுப்பு படர, மஞ்சத்தின் ஓரத்தில் உட்கார்ந்து விட்டான், தலையில் கைவைத்தபடி, மனம் வெறுத்தப்படி. சாட்டை அடி தழும்புகள் படர்ந்த அவனது வெற்று மார்பில் கைவைத்தவள் அவனிடம் என்ன ஆயிற்று என்று கேட்பதற்கு


"துருவ் ....எ....?" என்று ஆரம்பிக்க, அவன் அவளைத் திரும்பிப் பார்க்காது,

"கெட் அவுட் நக்ஷத்திரா !" என்று சீற, அவள் திகைப்படைந்தாள். அதனுடன் கோபமும் அடைந்தாள்.


"ஐ டிட் நாட் ...." என்று அவள் மீண்டும் ஆரம்பிக்க, துருவ்


"ஜஸ்ட் ….கெட் லாஸ்ட்..ஐ டோன்ட் வாண்ட் டு ஸீ யு .." என்று கத்திவிட்டு அறையின் பால்கனிக்குச் செல்ல, நக்ஷத்திரா அந்த கத்தலில் ஒளிந்து கொண்டிருக்கும் வேதனையைப் புரிந்து கொள்ள முடியாது, அவன் அருகே சென்றாள் .



தான் செய்யப் போனதை நினைத்து சுய கோபத்தில் துடிக்கும் பாறாங்கல்லை ஒத்த அவனது பரந்து விரிந்த வெற்று மார்பு அவளுக்குச் சிறு பீதியைக் கொடுக்காது இல்லை. அவனுக்கு மூச்சிரைப்பு இருக்குமோ என்று எண்ணும் அளவு அவன் மார்பு மேலும் கீழும் இறங்கிக் கொண்டு இருந்தது. இடுப்பில் கைகளை வைத்துக் கொண்டு கம்பீரமான அவன் உடல் அமைப்பு, அவள் கூறியப் படி, கிரேக்க கடவுள் தான், என்ன கோபமான கிரேக்க கடவுள் இப்போது.


"இட்ஸ் நாட் ....." என்று மீண்டும் ஏதோ கூறப் போக, அவன் வேதனை தாங்கிய முகத்துடன்,


"தாரா! ப்ளீஸ் கோ " என்று மனச்சோர்வுடன் ஒரு வேண்டுகோளை வைக்க, அவன் மனம் அவளுக்குப் புரிந்தது.


அந்த இரவின் தாக்கம் அவளுக்கு மட்டுமல்ல அவனுக்கும் தான் என்று நன்றாக புரிந்து கொண்டாள், ஆனால் அவனுள் இருக்கும் சாம்மை தான் அவளுக்குத் தெரியவில்லை. தெரியும் நாள் அவன் நிலை? அவளது மனம் ?

நினைக்க தெரிந்த மனதிற்கு மறக்கவும் தெரியுமாம் ! ஆனால் மறக்க அவர்கள் இருவரும் வெவ்வேறு ஆட்கள் அல்லவே, என்றோ மனதில், மனதால் இணைந்தவர்கள். மொத்தத்தில் விதிக்கு ஏற்ற எதிராளிகள் இவ்விருவர்.



தன்னால் அவன் துன்புறுகிறான் என்று உணர்ந்து வருந்தினாள். மொத்தத்தில் தூங்கா இரவு இருவருக்கும். அவள் கண்களில் நீர் கோர்க்க, மாறி மாறித் துடைத்தாலும் கண்ணீர் சுரப்பிகள் வேலையைச் செய்வவனே செய்தன.



சில மாதங்கள் முன், அவளிடம் துருவ்வைப் பிடிக்குமா என்று கேட்டால், அவள் கேள்வி கேட்டவரை ஒரு வழி செய்திருப்பாள். ஆனால் இன்று அவனைத் தவிர யாரையும் பிடிக்கவில்லையே!


என்ன இது பைத்தியக்காரத்தனம் என்று அவளுக்கு தோன்றினாலும், இந்த பைத்தியக்காரத்தனம் அவளுக்கு பிடித்துத் தான் இருக்கிறது. ஏன் அவன் அவள் உயிரை இரு முறை காப்பாற்றினான் என்பதாலா ? ம்ஹும் ..அதையும் தாண்டி ஒன்று, அவள் என்ற நக்ஷத்திராவுக்கும், அவன் என்ற துருவ்விற்கும் உள்ளே கண்ணுக்கு புலப்படாத, ஆனால் அவளால் உணர கூடிய ஒன்று. அதுவும் இந்த பங்களா..அவன் அன்னை ...பாக்யம், அவன் வாசித்த அந்தப் பாடல் ...எல்லாம் சரியாக இருப்பது போல் இருந்தாலும் ஏதோ அதையும் தாண்டி இருக்கிறது என்று புரிகிறது.


அதைத் தெரிந்து கொள்ள ஆசை ஆனால் அதே நேரம் அதனால் ஏதோ கெட்டதாக நடக்குமா என்ற பயமும் அவளுக்கு இருந்தது. அவளுக்கு தானும் அவனும் மகிழ்ச்சியாக, அவர்கள் கொண்ட காதல் சாட்சியாக பிள்ளைகளைப் பெற்றுக் கொண்டு வாழ வேண்டும் என்றத் தீரா ஆசையும் வளர்ந்தது. இவ்வாறு ஏதேதோ யோசித்துக் கொண்டிருந்தவளின் எண்ணங்களை ஒரு கார் வெளியேறும் சத்தம் தடைச் செய்ய, சால்வை ஒன்றை சுற்றிக் கொண்டு வாயிலை நோக்கி ஓட, அங்கும் இங்குமாக தெரிந்த பனியைக் கிழித்துக் கொண்டு ஒரு கார் வேகமாகச் செல்வதைக் கையிலாகாத்தன்மையுடன் பார்த்தாள், கண்ணில் நீர் வழிய, வாயில் கதவின் மீது சாய்ந்தபடி.


அவன் தான் அது ! தெரியும் அவளுக்கு ! தன்னிடம் சொல்லாதுச் சென்றவன் மீது கோபம் உண்டா என்று கேட்டால் , கண்டிப்பாக மனைவியாக அந்தக் கோபம் இருக்கிறது. அதே நேரம் அவன் விடிந்து விடியாதப் பொழுதில் சொர்க்கம் போன்ற இடத்தை விடுத்து இப்படி செல்கிறான் என்றால் அதன் காரணம் தான் என்று உணர்ந்து அதன் வருத்தமும் அவளைக் கவ்வியது.


பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், பொங்கி எழுந்து, கிட்டத்தட்ட அவனை 30 முறைக்கு மேல் அழைத்து விட்டாள். அவன் எடுத்தால் தானே!

"ஹை திஸ் இஸ் துருவ் ! ப்ளீஸ் லீவ் எ வாய்ஸ் மெசேஜ்" என்ற செய்தி கேட்டுக் கேட்டு அவள் காது புளித்துப் போனது. நேரில் ஒருவேளை அந்த க்ஷ்ணம் பிரசன்னமாகி அவன் இருந்திருந்தால், அவன் உடலுக்கு சேதாரம் கண்டிப்பாக நிகழ்ந்திருக்கும்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அவன் அழைப்பை எடுக்காது தன்னை நிராகரிக்க அவளுக்கும் கோபமும் வந்தது, மஞ்சத்தின் மீது அலைப்பேசியை எறிந்தவள், வருத்தத்தில் வருகின்ற கண்ணீரைக் கோபம் கொண்டு கட்டுப்படுத்திக் கொண்டு, பெரிய மூச்சுக்களை இழுத்துக் கொண்டு, விரிந்த தனது கூந்தலை உச்சிக் குடுமி போல் போட்டுக் கொள்ளப் போன அந்த தருணத்தில் தான் அவனது எண்ணில் இருந்து அழைப்பு வந்தது.


அதனை ஏற்றவள் ‘ஹலோ’ என்ற சம்பிரதாய வார்த்தையைச் சொல்லவே இல்லை. மறுமுனையில் இருப்பவரைச் சொல்ல விடவும் இல்லை.



"அம் கோயிங் டு கில் யு துருவ் ! பெரிய இவனா டா நீ ! நீ என்னை ஒரு காட்டுக்கு கடத்திகிட்டு வருவே ...அப்பறம் என்னை ....யு நோ வாட் ஐ மீன் !அண்ட் தென்...எங்கயாவது போய் தொலைவே ! சொல்லிட்டு போனா குறைஞ்சு போயிடுவியா? இடியட் ! நீ போன வேகம்..அவ்வ்வ்ளோ பனி வேற...மலை பகுதி..போன் கூட எடுக்காம...உனக்கு என்னவோ..ஏதோ ...ஏண்டா நீ இப்படி என்னை டார்ச்சர் செய்யறே .." என்று கோபத்தில் ஆரம்பித்தவள், கடைசியில் நா தழுதழுக்க கண்ணீருடன் முடிக்க, மறுமுனையில் இருந்த ஷோபா


"ரிலாக்ஸ் நக்ஷத்திரா ! அவன் என் கூட பெங்களூரில் இருக்கான் ! வந்திருவான் ! நம்பு ..அவனுக்கு கொஞ்சம்..." என்று அவர் பேசி முடிப்பதற்குள், அவள் மூக்கை நன்கு உறிஞ்சிக் கொண்டே,


"நக்ஷத்திராங்கற பொண்ணு அவன் மேலே பைத்தியமா இருக்கா ..அவன் இல்லாம அவ இருப்பாளா மாட்டாளான்னு ...அவனுக்கே தெரியும், ஒருவேளை மறந்திருந்தா, அதை நல்ல அவனோட பனங்கா மண்டை மேலே கொட்டி கொட்டி புரிய வைச்சு அனுப்பி விடுங்க " என்று பொரிந்துவிட்டு அழைப்பைத் துண்டித்து விட்டாள்.



"என்ன சொன்னா என்னருமை காதல் மனைவி ?" என்று சற்று நக்கலாக துருவ் வினவ, ஷோபா அவரை முறைத்து விட்டு,


"வீட்டுக்கு போகும் போது, ஒன்னு அயர்ன் மேன் சூட் இல்ல பேட் மேன் சூட் போட்டுக்கிட்டு போ !" என்று சொல்ல, அவன் முகத்தில் வேதனை ததும்பிய புன்னகை.


"போணுமா ஆன்டி ?" என்று வேறு கேட்க, ஷோபா காண்டானார்.


"நீ குழந்தை இல்லே, அந்த 15 வயசுல கூட நீ இப்படி சைல்டிஷ்ஷா நடக்கலே ! உன்னை நம்பி ஒரு பொண்ணு இருக்கா ! அவளா இந்த உறவை விரும்பல ! நீ போர்ஸ் பண்ணி கட்டி கிட்டே ! இப்போ அவ …" என்று நிறுத்தியவர்,


"ஷி இஸ் கிரேசி அபோட் யு ! அண்ட் யு ...உன்னை என்ன சொல்லி திட்ட ? ஏன் துருவ் ? ஹேப்பிலி லிவ்ட் எவர் ஆஃப்ட்டர் வந்தா தப்பு இல்லே ! அது நம்பிக்கை, பாஸிட்டிவ் திங்கிங் ! யு ஆர் சோ ...போடா போ ! என்னவோ பண்ணி தொலை ! ஐ விஷ் சந்தியா வாஸ் அலைவ் " என்று கடுமையாக பேசி, ஆதங்கத்துடன் முடித்து விட்டார், அவர் திட்டியதை அவன் ஏற்றுக் கொண்டான். எதிர்த்து ஒரு வார்த்தை பேசவில்லை. அன்று சக்லேஷ்பூர் திரும்பவும் இல்லை. இன்னொரு நாள் கழித்து வருகிறேன் என்று அவளுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டான். அவள் அழைத்தாலும் அவன் அலைபேசியை எடுக்கவில்லை. அவளும், அவன் வரட்டும் என்று விட்டு விட்டாள்.


வந்தான்! அவன் வரும் வழியைப் பார்த்தவள், ஆவலாகச் சென்றாள். ஆனால் அவனது இறுக்கமான முகம், தன்னிடம் சொல்லாது சென்ற கோபம் சேர்ந்து அவளது ஆவலை அணைப் போட்டு நிறுத்த, அவளும் நின்றாள், அவனை முறைத்தப்படி.


அதைக் கண்டாலும் காணாத பாவத்தில், பாக்யத்திடம்,


"ஹாய் ! குட் மார்னிங்" என்று அவள் அங்கே இல்லவே இல்லை என்ற விதத்தில் அவன் பேச்சு இருக்க, இந்த சுபாபத்தைப் பாக்யத்தால் கூட தாள முடியவில்லை.


"ரெண்டு பேர் இருக்கோம் இங்க." என்று அவர், அவனைக் கடிய, துருவ் சுரத்தே இல்லாது அவளிடம்


"மார்னிங்" என்று முணுமுணுக்க, அவள் காண்டாகி



"எனக்கு ஸ்கூலில் குட் மார்னிங் சொல்லறது தான் குட் மேனேர்ஸ்னு சொல்லி கொடுத்து இருக்காங்க" என்று மூக்கறுத்தாள்.



"ரியலி! இன்டெரெஸ்டிங்" என்று பதிலுக்கு அவனும் குதர்க்கத்தை விடாது பிடித்துக் கொண்டான். இருவரின் பார்வை ஒரே நேர் கோட்டில். அவள் பார்வை,


'உன்னை என்ன செய்தால் தேவலாம்?' என்பது போல் இருக்க, அவனோ



'நான் இப்படி தான்' என்று அலட்சியம் கலந்து இருந்தது. பார்வைப் பரிமாற்றத்தை அவன் நீடிக்க விடாது, தனதறைக்கு செல்ல, அவனை ஒன்றும் சொல்ல முடியாது தவித்தவள், நாற்காலியின் மேல் பகுதியில் இருக்கும் குமிழியைப் பிடித்துத் திருகினாள்.



2 மணிநேரம் மேல் ஆயிற்று, அவன் கீழே வரவேயில்லை. அப்படி என்னத்தான் செய்து கொண்டு இருக்கிறான் என்று அவளுக்கு ஒரே குடைச்சல். மேலே சென்று நோக்க அவளது தேகத்தில் உள்ள உப்பளவு இடம் கொடுக்கவில்லை. இருந்தாலும் அவளுக்கு அவன் என்ன செய்கிறான் என்று தெரிய வேண்டும்.


காப்பியை எடுத்துக் கொண்டு மேலே செல்லப் போன வேலையாளிடம் இருந்து, காபிக் கோப்பையை வாங்கி கொண்டு மேலே சென்றாள். அவன் ஏதோ தனக்கு ஒவ்வாத ஒன்றைத்தான் செய்யப் போகிறான் என்று அவளுக்கு தோன்றியது. ஆகையால் இந்த மன மாற்றம்.


'உனக்கு ரோஷம் இல்லியா' என்று ஒரு புறம் மனம் காறித் துப்ப,


'இதுக்கு மேலே நான் அவன் கிட்ட ஏதாச்சும் கேட்டா..என்னை என்ன வேணா செய்' என்று பதில் சவடால் விடாது இல்லை. மொத்தத்தில் அவன் என்ன செய்கிறான் என்று தெரிய விரும்பி ஏன்தான் மாடிக்குச் சென்றோம் என்ற நிலைக்கு உள்ளானாள்.


போனில் இரத்தின சுருக்கமாக,


"ம்ம்", "அப்படியா", "செய்", "விடாதே" "நோ வே" என்று மட்டுமே அவன் பேசிக் கொண்டு இருந்தான். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள், ஒரு கட்டத்தில் அறைக்கதவைச் சாற்றி, தாழ் இட, அப்போது தான் அவன் நிமிர்ந்து அவளைப் பார்த்தான். ஆயினும் கண்டு கொள்ளாது அலைபேசியில் மூழ்கினான்.


பால்கனி புறம் சென்றவன்,

"ஓகே ! அம் கம்மிங் தென். நம்ம பசங்களை அனுப்பு" என்று அழைப்பைத் துண்டித்துவிட்டு திரும்ப, அவள் அவன் அருகே தான் நின்றுக் கொண்டு இருந்தாள்.


"கதவை தட்டிட்டு வரதை பத்தி உன்னோட ஸ்கூல் இல் ஒன்னும் சொல்லலியா ?" என்று நக்கலாகத் தான் ஆரம்பித்தான்.


"பொண்டாட்டியை அம்போன்னு விட்டிட்டு போறதை பத்தி உனக்கு யாரும் அட்வைஸ் பண்ணலியா ?" என்று ஏட்டிக்குப் போட்டி நிற்க, துருவ் கடினமான முக பாவத்தை எடுத்துக் கொண்டவன், அவளுக்குப் பதில் உரைக்காது தனது உடைகளை எடுத்து வைக்க ஆரம்பிக்க, அவள் திகில் அடைந்தாள்.


"என்ன திடீர்ன்னு ? நானும் வரேன் " என்று கூற, அவன்


"நீ வேண்டாம்" என்று சொன்னான். அந்த நேரத்தில் அந்த வாக்கியம் பல்வேறு அர்த்தங்களை அவளுக்குக் கொடுத்தன.


"வேண்டாம்னா ? தெளிவா சொல்லு " என்று நேரிடையாக அவள் காரமாகக் கேட்க, துருவ் தனது துணிவை வருத்திக் கொண்டு,


"வேண்டாம்னு சொன்னா வேண்டாம் ! " என்று தனது பெட்டியை மூடப் போக, அவள் அதைத் தடுத்து, கண்கள் கலங்க அவனைப் பார்த்து,


"டிவோர்ஸ் செய்ய போறியா ?" என்று நா தழுதழுக்க கேட்டாள். அவனைச் சுக்கு நூறாக உடைத்து விட்டாள், அந்தக் கேள்வியில். அவளைப் பிரிவதும் அவன் தன்னைத் தானே கொல்வதும் ஒன்றே, ஆனால் அவளது முன்னேற்றம் தான் அவனுக்கு முக்கியம், அவளுடன் அவன் இருப்பதை விட.


இங்கே மன மாறுதலுக்குக் கூட்டிக் கொண்டு வந்தான். மனம் மாறியது, ஆனால் அவன் எதிர்பார்க்காத கோணங்களிலும் மாறியது, அதற்கு தான் முக்கிய காரணம் என்று தான் இப்பொது பிரிகிறான். சந்திப்பானா என்றால்....சந்திக்க வேண்டிய காலமும் நேரமும் கூடினால் கண்டிப்பாகச் சந்திப்பான். அவளுக்குத் துணை இருப்பான். அது இப்போது அல்ல.


அவனுள் இருக்கும் சாம் மற்றும் துருவ் அவனைத் தினம் படுத்தும் பாட்டை அவனே அறிவான். தன்னுடைய நல்லதிற்காக அவளைப் பிரிகிறானா என்று கேட்டால், அவளுடைய நல்லதும் இதில் அடக்கம். அவனும் அவளும் வேறில்லை, ஆனால் சிறிது காலம் வேறாகித் தள்ளித் தான் இருக்க வேண்டும், உடலளவில். மனதால் ?



மனதிற்கு மரணம் ஒன்று நிகழும் போது பிரிவர் ! ஆனால் அது நடக்கும் வரை, இருவரும் மனதால் ஒருவரே !


இப்போது இவளை நீங்குவதற்கு வேறு வழி அறியாதவன், கொடிய ஆலகால விஷத்தைப் போன்ற வார்த்தைகளைச் சொன்னான்,


"தேவைப்பட்டா செய்வேன்" என்று சொல்லிவிட்டு அவளது அதிர்ந்த மன நிலையால், வலு இழந்த அவள் கைகளைப் பெட்டியில் இருந்து அப்புறப்படுத்தி விட்டு அதனை மூடினான்.



கண் முன் கணவன் தன்னை விட்டு செல்கிறான். இதற்கு மேல் தான் எதற்கு இங்கே ? என்ன செய்ய போகிறோம் ? என்ற கேள்விகள் ஒன்றுமே அவள் மனதில் தோன்றாது அவள் நிற்க, அவன் அந்த அறையை விட்டுச் செல்ல தயாரானான்.


அவளது அதிர்ந்த தோற்றம், அவளது மனம் படும் பாட்டை எல்லாம் உணர்ந்தவன் ஒரு முறை, ஒரே ஒரு முறை அவளை அணைத்துக் கொண்டு விட்டுப் பிரிய வேண்டும் என்று விரும்பினான். தேகப் பசி இல்லை அது ! ஆதரவு வேண்டும் அவனுக்கு ! யாருமில்லை, யாரும் வேண்டாம் என்று இருந்தவனுக்கு நான் உனக்காக என்ற நம்பிக்கையை அவனது சிறு வயதில் ஊட்டி விட்டவள் அவள். அன்று


'ஐ லவ் யு ன்னா என்ன சாம்?' என்று கேட்ட சிக்குவிடம், அவளது வயதை உணர்ந்து


''ஐ லவ் யு ன்னா...உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்" என்று மட்டும் சொன்னான். அதற்கு சிக்கு


"அப்படினா எனக்கு ஐஸ் க்ரீம் பிடிக்குமே, அந்த மாறியா?" என்று விடாது வினவ, அவன்


"ஐ லவ் ஐஸ் க்ரீம் னு சொல்லலாம், சரி தான்" என்று கூறிவிட, அவளோ


"ஒரு ஆள் ஒரு பொண்ணு கிட்ட சொன்னா?" என்று சரியானப் புள்ளியைப் பிடிக்க, அவன் அந்நேரம்



"அவங்க மேலே நல்ல அன்புன்னு அர்த்தம். அவங்க கூட எப்பவும் இருப்பேன்னு அர்த்தம் வரும் சிக்கு! யார் யார் கிட்ட சொன்னா" என்று அவன் பதில் கேள்வி கேட்க,



சிக்கு என்ற நக்ஷத்திரா


"அப்போ ஐ லவ் யு சாம் " என்று சொல்லிவைக்க, 15 வயதில் அம்மா-அப்பா கவனிப்பு இல்லாது, நண்பர்கள் விரும்பாது, யாரும் வேண்டாம் என்று வெறுத்த நிலையில் இருந்தவன் , அந்த 3 எழுத்து கெட்ட வார்த்தையில் தனக்காக ஒருவள் எப்போதும் இருப்பாள் என்று நம்பிக்கைக் கொண்டான். அந்த நம்பிக்கை அவள் பிரிந்த போது முற்றிலும் இழந்தான், மீண்டும் அவள் வந்தாள்! ஆனால் சிக்குவை தொலைத்து விட்டு.



இன்று அவள் தன்னுள் இருக்கும் சிறுமியை உணருகிறாளா என்றும் அவன் அறியான். ஆனால் அவன் அவளை அறிவான், சிக்குவைக் கண்டிப்பாக உணர்கிறான். அவள் தான் அவனது வாழ்வாதாரம். அப்படிப்பட்டவளை விலக வேண்டும் என்று முடிவெடுத்து விட்டான்.



அவளிடம் 'பை' என்று கூட உரைக்காது செல்வது நலம் என்று அவன் நினைக்க, அவளோ அவனது மன வேதனையை உணராது, அவனது காதல் மனதை மீண்டும் காண,


"கடைசியா ஒரு முறை என்னை ஹக் பண்ணப்பியா?" என்று அவனிடம் கேட்டே விட்டாள். அதில் ஏக்கம், காதல் ..அவனது சிக்கு என்று எல்லாம் இருக்க, அவனால் அதைத் தாள முடியாது,


"தட்ஸ் இட் ! வி ஆர் டன் " என்று சீறிவிட்டு புறப்பட்டு விட்டான். அவளை ஒருமுறை கூட திரும்பி அவன் பார்க்கவில்லை. உயிர் போய் விட்டால் நன்றாக இருக்கும் என்று நினைத்தபடி, ஆனால் பிராயசித்தம் என்ற ஒன்றை தான் செய்து முடிக்க வேண்டும் என்ற உறுதி அவனை அப்போது ஆட்டிப்படைக்க அவன் விரும்பாத அவனது உயிரும் முக்கியமாகப் பட்டது!



அவளோ சொல்லொண்ணா வேதனையில் உழன்றாள். தைரியசாலியை அவன் கோழை ஆகிவிட்டான். அவளுக்கு அவளைப் பிடிக்காது செய்து விட்டான். எப்படி எல்லாம் தான் இருக்க கூடாது என்று உறுதிப் பூண்டு இருந்தாளோ அதற்கு நேர்மாறாக இப்பொது அவள்.



'சீ ! வெக்கம் கெட்டவே !' என்று பழைய நக்ஷத்திரா ஒரு புறம்,


'என்னை உன் கூட கூட்டிகிட்டு போ !' என்று அவனது அன்பு மனைவி மற்றொரு புறம்,


'வாழ்க்கை என்பது உன் கையில்' என்று அறிவுறுத்திய ஷோபாவின் குரலும் அப்போது ஓங்கி அவள் மனதில் ஒலிக்க, கண்ணீரைத் துடைத்துக் கொண்டு அவன் சென்ற திசையைப் பார்த்தாள். மாடிப்படி இறங்கியவன், நேரே காரில் ஏறிச் செல்ல, அதே நேரம், அவள் அந்த அறையில் இருந்த ஒரு ஒரு பரிசுப் பெட்டியைப் பார்த்தாள்.


மடமடவென்று அதனைப் பிரிக்க, ஒரு காகிதம் தான் முதலில் விழுந்தது…


அதில் கொட்டை எழுத்துக்களில்,


'பி மி ஃபார் யு' என்று எழுதி இருந்தான். அதாவது


'நானாக, நீ உனக்காக இரு' என்ற அர்த்தம். சற்று கிறுக்குத்தனமாக முதலில் தோன்றினாலும், அதன் ஆழ்ந்த அர்த்தத்தை மெல்லப் புரிந்துக் கொண்டாள். அவர்கள் இருவரும் வெவ்வேறு இல்லை என்ற பொருள் அதற்கு. அவளுக்காக, அவளது முன்னேற்றத்துக்காகத் தான் அவளை விட்டுப் பிரிகிறான் என்று புரிந்துக் கொண்டாள். ஓடிச் சென்று அவள் பால்கனியில் நிற்க, அவன் செல்லும் காரைப் பார்த்தாள்.


அவனது காரின் பின்பக்கம் காட்டும் கண்ணாடியில் அவள் முகம் தெளிவாகத் தெரிந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக சிறியதாக மாற ஆரம்பித்தது. மனத்துணிவுடன் பிரிவை எதிர்கொண்ட அவளைப் பார்த்தவன் முகத்தில் அமைதி பெருகியது.


சமாளித்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையில் அவன் சென்று விட்டான்.


அன்றைய சக்லேஷப்பூர் நினைவுகளில் இருந்து நக்ஷத்திரா விலக, அவளது கவனம் முழுவதும் துருவ் இருக்கும் ஐ சி யு பகுதி மீதே இருந்தது. அவனுக்குக் குண்டடி பட்டு 2 தினங்கள் ஆகிவிட்டன. குண்டை எடுத்து விட்டனர். மருத்துவ மயக்க நிலையில் அவன் ஆழ்த்தப்பட்டு ஒரு முறை நினைவும் வந்தது. அதன் பின் மயக்கம். என்ன ஆயிற்று என்று புரியாது திகிலுடன் இவள் இருக்க, ஐ சி யு வில் இருந்து மருத்துவர் வெளியே வந்து அவனுக்கு நினைவு திரும்பிவிட்டது என்று கூற, அவள் சிறிது நேரத்தில் உள்ளே சென்று பார்த்தாள். கிறிஸ்துமஸ் கழிந்த பின் அவள், அவனுடன் அதிகம் பேசவேவில்லை. அவனும் இதை எதிர்பார்த்தான். அவள் அவளாக இருக்கட்டும் என்று விட்டு, தனது பணிகளில் கவனத்தைத் திருப்பினான். அவளது சட்டப்படிப்பும் முடியும் தருவாயில் இருக்க, நண்பர்களுடன் ஹைதிராபாத் வந்திருந்தாள். அவன் இங்கே இருக்கிறான் என்று கேள்விப்பட்டவள் தனது கோபத்தை இழுத்து வைக்க முயன்றாலும், அவளது நண்பர்கள் பட்டாளம் விடவில்லை. அவனைப் பார்த்தே தீரவேண்டும் என்று பிடிவாதம் பிடிக்க, வேறு வழி இல்லாது அவர்களைக் கூட்டிக்கொண்டு படப்பிடிப்பு தளத்திற்கு வந்தாள். அவள் கண் முன் அந்தத் துப்பாக்கிச்சூடு. அவ்வளவு தான்! அவள் தன் உயிரைப் பறிகொடுத்த நிலைக்கு சென்று விட்டாள்.


2 நாட்கள் அன்னம், ஆகாரமின்றி அவன் திரும்பி வர வேண்டுமே என்ற பிராத்தனை மட்டுமே! ஐ சி யூ அறைக்கு சென்றவள் கண்ணில் பட்டது அவனுக்கு உயிர் வாழ உதவிக் கொண்டிருக்கும் இயந்திரங்கள். அவளுக்கு ஒவ்வொன்றும் என்ன செய்யும் என்று தெரியாது. ஆனால் அவைகள் அவளுக்குக் கடவுள் இப்போது.


இதயத்துடிப்பைக் காட்டும் இயந்திரத்தில் அவள் உயிரின் துடிப்பு தெள்ளத் தெளிவாக தெரிய, அவள் கண்கள் கலங்கின. பல்வேறு குழாய்கள் பொருத்தப்பட்டு இருக்கும் அவன் உருவம் கலங்கலாகத் தெரிய, வழியும் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாலும் அமுத சுரபியாக கண்ணீர் பெருகத் தான் செய்தது.



"ஹாய்.. வெல்கம் பேக்" என்று நா தழுதழுக்க அவள் உரைக்க, அவன் அவளை வேதனையாக நோக்கினான். உடல் நலம் தேறி, தன்னை சுட்டவர்களைக் கண்டுபிடித்து, ரவி வர்மாவின் படத்தை முடித்துக் கொடுத்தான். அவன் தனது கடமைகளை முடித்து விட்டு கிளம்பினான். திரும்பிவரவேயில்லை!






சில வருடங்கள் கழித்து, நீதிமன்ற வழக்காடும் அறையில்,


"மிஸ்.நக்ஷத்திரா ! எனி கொஸ்டின்ஸ் ?" என்று நீதிபதி கேட்க, நக்ஷத்திரா தனது கருப்பு அங்கியை சரி செய்துக்கொண்டு


"தேங்க யு யூர் ஆனர் !" என்று நன்றி தெரிவித்துவிட்டு தனது கேள்வி கணைகளால் எதிராளியைத் திணறடிக்க, அந்த வழக்கை விசாரித்துக் கொண்டு இருந்த நீதிபதியில் இருந்து ஆரம்பித்து, எதிர் தரப்பு வக்கீல் வரை அவளது வாதத் திறமையைப் பாராட்ட, அவர்களது பாராட்டுக்களைப் பெற்றுக் கொண்டவள் தனது அறைக்கு வந்து, எப்போதும் தனது கைப்பையில் இருக்கும் பார்வதியின் புகைப்படத்தை பார்த்து,


'உங்க பொண்ணுக்கு வாய் ஜாஸ்தின்னு நீங்களே சொல்வீங்க ! இன்னிக்கி அந்த வாய் இந்த கேஸை ஜெயிக்க வச்சு இருக்கு' என்று மானசீகமாக பேச ஆரம்பிக்க, அவளது



மௌன உரையாடலைக் கலைக்கவும் ஒருவன் வந்தான், அவன் ரிஷி. எந்த நிறுவனதிற்காக அவள் வாதாடினாளோ அதன் முதலாளி. பூங்கொத்தைப் பரிசாக அவளுக்கு அளித்துவிட்டு


"கங்கிராட்ஸ் ! எ பிக் வின் " என்று அவளைப் பாராட்ட, அவள் அந்த பூங்கொத்தை ஏறெடுத்துக் கூட பார்க்காது, அதனை அருகில் இருந்த மேஜையில் வைத்துவிட்டு,


"தேங்க யு..ஜட்ஜ் மென்ட் வரட்டும் ! அப்பறம் செலிப்ரேட் செய்யலாம்" என்று பொதுவாகக் கூறி வைத்தாள்.


"வெல் ! அட்லீஸ்ட் டின்னர் ?" என்று அவளது குணம் தெரிந்தும் கேட்டான். அவளோ புன்னகை முகமாக


"நோ ரிஷி ! லேட் ஆகிடும் " என்று பணிவாக மறுத்து விட, அவன் அதனை எதிர்பார்த்து இருந்தவன்,


"ஓகே காபி தென் !" என்று அவளை அழைத்துக் கொண்டு காபி அருந்த காரில் இருவரும் செல்லத் துவங்க, ரிஷி எதேச்சையாக ரேடியோவை ஆன் செய்தான்.


"ஹோப் யு டோன்ட் மைண்ட் ! இந்த சென்னை டிராபிக் இஸ் டெரிபில் ! நீட் சம் ம்யூசிக்" என்று கூற, அவள் அதற்கு ஒன்றும் சொல்லவில்லை.


ரேடியோவில் உரையாடுபவர்,


"ஓகே நேயர்களே ! இன்னிக்கி நம்ம தமிழ் சினி ஃபீல்டில் இருந்து காணாம போன ஹீரோஸ்-ஹீரோயின்ஸ் பத்தி பேச போறோம் ! முதலில் துருவ் ! அவர் இருந்த வரை, தமிழ் சினி ஃபீல்டின் நட்சத்திர நாயகன்..பாலிவுட்டில் கூட ஒரு கலக்கு கலக்கினார்..ஆனால் அதுக்கு அப்பறம் ஜெ……" என்று ஆரம்பிக்கும் போதே, நக்ஷத்திரா அந்த ரேடியோ பெட்டியை அணைத்து விட்டு, போக்குவரத்து நெரிசலைக் கூட பொருட்படுத்தாது, ரிஷியிடம் ஒன்றும் கூறாது அவன் காரை விட்டு இறங்கி ஓடினாள்.


அவள் பின்னால் ஒரே ஹார்ன் சத்தம், நெரிசலில் இருந்தோர் அவளைத் திட்டி தீர்த்தனர். ரிஷியோ,


"நக்ஷத்திரா ! ஹேய் …" என்று கூப்பிட்டான். ஒன்றும் அவள் காதில் விழவில்லை. கிடைத்த ஆட்டோவில் ஏறியவள், வீடு வந்தால் போதும் என்று வீட்டை அடைந்தவள், எண்ணற்ற முறை அவள் கிழித்து, ஒட்டி இருந்த அவனது பெரிய அளவு புகைப்படத்தை மீண்டும் கிழித்து எறிந்தாள். அவளை விட்டு அவன் சென்று விட்டான் ..எங்கே இருக்கிறான் என்று அறியாள் ! அவளை நல்வழியில் பயணிக்க வைத்துவிட்டு அவன் …

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒருமுறை அவள், அவனுக்கு

"நீ எல்லாத்தையும் இழந்து நிப்பே " என்று சாபம் இட்டாள். அவளது நாக்குவன்மை, அது பலித்தது. எல்லாவற்றையும் அவளிடம் இழந்து விட்டு எங்கோ சென்று விட்டான்.


அவனை நினைத்து அவளுக்குப் பெருகிய ஆத்திரத்தில் அறையில் கிடைத்த பொருட்களைத் தூக்கி வீசி அடித்தாள். அவனை நினைத்து என்ன செய்வது என்று தெரியாது தவித்தாள்.


ஏனென்றால் திரைப்படத்துறை வேண்டாம், அவனது சொத்து பத்துக்கள் வேண்டாம், அவன் மேல் உண்மையான அன்பு வைத்திருப்போர் வேண்டாம் என்று அவன் சென்றே விட்டான்.


அவள் காதல் வேண்டாம் என்று சென்று விட்டான். அவர்கள் கல்யாணம் வேண்டாம் என்று சென்று விட்டான். அவள் கிழித்து எறிந்த அவனது புகைப்படத் துகள்களைக் கையில் ஏந்தி முகத்தில் வைத்துக் கொண்டு அழுது தீர்த்தாள்.


ரிஷி எண்ணற்ற முறை அவளை அழைத்ததை அவள் உணரவில்லை. அவள் தானும் அவனுமான உலகில் சஞ்சரிக்க ஆரம்பித்தாள் கையில் மதுக்கோப்பையுடன்.


அவன் கையெழுத்தில் அவளுக்குக் கடைசியாக அவளுக்கு எழுதிய கடிதத்தை பிரேம் போட்ட கண்ணாடி புகைப்படமாக மாட்டி இருந்தாள் அவளது படுக்கை அறையில். மது போதையில் அவள் அதைப் பார்த்துக் கொண்டே தனது ஸ்மரணையை முற்றிலும் இழந்தாள். இனி அவனில்லாத உலகம் தான் அவளுக்கு.



காலங்கள் மாறின !

காட்சிகளும் மாறின !

அவர்கள்?

வானில் ஒரே ஒரு துருவ நட்சத்திரம் மட்டுமே !

இந்த துருவனுக்கு, அவள் மட்டுமே !

அவனும் அவளும் சேரும் காலம் வருமா?

அறியோம் !

காலச் சக்கரம் மாறும் போது, இந்தக் காட்சியும் மாறும் என்று நம்புவோம் !

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 23


"டேய் ரிஷி ! உன்கிட்ட பொறுப்பை ஒப்படைச்சுது என்னோட தப்பு ! உன்னை போய் நம்பினேன் பாரு ! நீ வாங்கி தந்த ஹை ஹீல்ஸாலே என்னைய அடிக்கணும் நானே " என்று பாலா கத்திக் கொண்டு இருந்தாள். பாலா, முழு பெயர் பாலசரஸ்வதி. ரிஷிக்கு அவள் சரஸ். நக்ஷத்திராவிற்கு பாலா! இவர்கள் இருவருக்கும் அப்பா ஒருவரே, தாய்மார்கள் வேறு.



பாலா இப்பொது இருப்பது நக்ஷத்திராவுடன், திரைப்பட துறையில் இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவு, அதற்கு தகுந்தப் படிப்பினைப் படித்து இருக்கிறாள். இயக்குனர் அஜய்யிடம் இணை இயக்குனராக பணியாற்றிக் கொண்டு இருக்கிறாள். அஜய் என்பவன் தான் கிட்டத்தட்ட 15 வருடங்கள் முன் துருவ்விடம் ஒரு குணமில்லாத கணவனின் கதையைக் கூறியவன்! அந்தக் கதையைத் துருவ் தான் தயாரித்தான். அந்தக் கதைக்குத் துருவ் சொன்ன முடிவைத்தான் கொடுத்தான், மக்கள் பலருக்கு அது ஏற்பு இல்லாவிட்டாலும், ஆழ்ந்த திரைப்படத்துறை விமர்சகர்கள் அதை விரும்பினர். அந்த வருடம், சிறந்த புதுமுக இயக்குனர் மற்றும், விமர்சகர்கள் பரிந்துரைக்கும் இயக்குனர் விருது அவனுக்கே.


பெரிய ஹிட் என்று இராவிட்டாலும் அது அவனுக்கு நல்ல அடையாளத்தைக் கொடுத்தது. அதன் பின் நல்ல வாய்ப்புகள் அஜய்க்கு. அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டான். இன்று புகழ்பெற்ற இயக்குனர். அவனிடம் பணிப்புரியும் இளைஞர்-இளைஞிகள் ஏராளம். அவனுக்கு துறையில் நல்லப் பெயரும் கூட.


இப்போது அவன் எடுக்கப்போகும் படத்திற்காகத் தான், அவள் லொகேஷன் எனப்படும் ஸ்தல தேர்வுகளைச் செய்ய சென்று விட்டு இன்று காலை தான் திரும்பினாள். ரிஷி, இவளை ஒரு பட விழாவில் பார்த்தவுடன், காதல் கொள்ள, அம்மையார் அவனைச் சுத்தலில் விட்டு, கடந்த 6 மாதம் முன் தான் அவனது காதலை ஏற்றுக் கொண்டாள். ரிஷியின் நிறுவனத்திற்குத் தான் நக்ஷத்திரா பணிபுரியும் சட்ட நிறுவனம், சட்ட ஆலோசனை செய்கிறது. ஆகையால் அவனுக்கு இருவரையும் நன்றாகத் தெரியும்.


நேற்று நக்ஷத்திராவின் வாழ்வில் ஒரு முக்கியமான நாள், துருவ் அவளுக்கு விவாகரத்து கொடுத்து விட்டு அவள் யாரோ, தான் யாரோ என்றும் அவளை விட்டுச் சென்ற நாள். அதன் துக்கம் காலையில் இருந்தே அவளைப் பிடித்து அழுத்தியது. அவன் அவளை விட்டுச் சென்று இன்றுடன் 15 ஆண்டுகள் ஆகிவிட்டன. சக்லேஷ்பூரில் அன்று அவளை விட்டு பிரிந்தவன், அவள் சட்டக் கல்லூரியில் சேரும் போது தான் மீண்டும் சந்தித்தான்.


அவள் படிக்கச் சென்று விட, இடைப்பட்ட அந்த 5 ஆண்டுகளில் அவனது திரைப்பட வாழ்வு ஓஹோ என்று இருந்தது, ஹிந்தி படங்களில் வேறு நடித்தான். அவளது படிப்பு முடிந்தபின் தான் செய்ய வேண்டிய வேலைகளை அவன் செவ்வனே செய்து முடித்த திருப்தியில், தன்னுடைய முதன்மையானத் திட்டங்களை நிறைவேற்றினான். அதில் ஒன்று அவளைச் சட்ட ரீதியாக பிரிவது. அவள் எவ்வளவு கெஞ்சியும், மிஞ்சியும் அவன் கேட்கவேயில்லை. அது மட்டுமா ...அவள் நினைக்காத ஒன்றையும் செய்தான். முடிவாக அவன் தற்போது எங்கு இருக்கிறான் என்று யாரும் அறியார்.


அவர்கள் பிரிவின் போது தான், பாலா தனது தந்தை நக்ஷத்திராவிற்கும் அவளது அன்னைக்கும் செய்த துரோகத்தை அறிந்து, பெற்றோர்களைப் பிரிந்து இவளுடன் வசிக்க ஆரம்பித்தாள்.



இன்று வரை அவளை, தனது சொந்த தமக்கையைப் போல் தான் பாவிக்கிறாள்.


"நீ இதை செய்யணும்னு அவசியம் இல்லே ! தனியா தான் பொறந்தேன் ! தனியா தான் வளர்ந்தேன் ! தனியா வாழ்வேன் அண்ட் தனியா சாவேன் ! உன்னோட அம்மா-அப்பாக்கு நீ வேணும்" என்று நக்ஷத்திரா அறிவுறுத்தினாலும், பாலா


"எனக்கு பேர் வச்சவருக்கு, சரஸ்வதி பெரியம்மாவின் முழு பெயர் வைக்க கூட தில் இருக்கலே ! கூட ஒரு முன் பெயர் பாலான்னு ! அப்படிப்பட்டவர் உன்னை அவர் பொண்ணுன்னு ஊர் முழுக்க சொல்ல சொல்லு ! அப்போ நான் போறேன் !" என்று வழக்கறிஞரையே வாயடைக்கச் செய்தாள், பாலா.


"என்னவோ பண்ணு ! ஆனா என் மேலே அன்பு, அம்பு னு இருக்காதே ! எனக்கு அன்புன்னா என்னனு தெரியாது ! தெரியவும் வேணாம் " என்று சண்டைப் போட்டுக் கொண்டே இருவரும் குடித்தனம் நடத்துவது எல்லாம் வேற லெவல் !


அவள் நேற்று ஊரில் இருக்க மாட்டாள் என்று ரிஷியிடம் அவளை நேற்று ஒரு நாள் துருவ் நினைவுகள் அதிகம் வராது, பார்த்துக் கொள்ளும்படி சொல்லி இருந்தாள், பாலா, துருவ் -நக்ஷத்திரா வின் கதையை நன்கு அறிவாள் ! அக்கா மீது பாசம், துருவ் மீது கோபம் கலந்த ஒரு மரியாதை வேறு ! ஆம், அவளுக்கு அவனைப் பிடிக்கும், அதே நேரம் பிடிக்காது!


"உன்னால தான் அக்கா நைட் முழுக்க ஃபுல்லா ….! போடா ! நாளைக்கு எப்படி தான் உன்கூட குடித்தனம் நடத்த போறேனோ ! வைடா போனை " என்று மாபெரும் மரியாதையுடன், அவளே அழைத்து விட்டும், அவனை ஒரு வார்த்தை கூட பேச விடாது அவளே அழைப்பைத் துண்டித்தாள். மறுமுனையில் ரிஷி தான் பாவம் ! இவளுக்கு வாக்கப்பட்டு என்னவெல்லாம் அனுபவிக்க போகிறானோ !


அவனுக்கு நக்ஷத்திரா மீது நிறைய மதிப்பும் மரியாதையும் உண்டு, அதே நேரம் அது என்ன அவளை வேண்டாம்மென்று நிராகரித்துப் போனவனை எண்ணி இப்படி ஆகிறாள் என்ற ஆதங்கமும் உண்டு. அவளது புத்திசாலித்தனத்துக்கும், அவளது இந்த பரிதாப நிலைக்கும் சம்பந்தமே இல்லாது போல் அவனுக்குத் தோன்றும்.


நேற்று அவளது மனநிலை எவ்வாறு இருக்கும் என்று பாலா மூலம் அறிந்து இருந்தவனுக்கு, எப்படித்தான் வழக்கை வாதாடினாள் என்பதில் அதிர்ச்சி தான். அவன், நீதி மன்றம் செல்லவே வேண்டாம். எல்லாம் அவன் கட்டிக் கொள்ளப் போகும் பெண்ணால் தான் சென்றான்.


நக்ஷத்திரா வீசி அடித்த பீங்கான் பொருட்களை அப்புறப்படுத்தி, அறையைச் சீர் செய்து கொண்டிருந்தச் சத்தத்தில் தான் நக்ஷத்திரா எழுந்தாள். அவள் மீது சுள்ளென்று விழக்கூடிய சக்தியைக் கொண்ட சூர்யபகவான் தனது கிரணங்களை அவள் மீது வீசி அடிக்க, கண்களை கையால் மறைத்துக் கொண்டு, மீண்டும் உறங்க முற்பட, பாலா வாக்யூம் க்ளீனரை இயக்க, அதன் சத்தம் அவள் காதில் நாராசமாக விழுந்து,


"ஆப் பண்ணி தொலை ! ஏண்டி என்னை சாவடிக்கறே ?" என்று தலையணையைத் தனது முகம் மீது போட்டுக் கொண்டு மீண்டும் உறங்க முயற்சிக்க, பாலா வேண்டும் என்றே, அவள் அருகில் வந்து அந்த இயந்திரத்தை இயக்க, நக்ஷத்திரா


"கெட் அவுட் பாலா !" என்று கத்த, பாலா கண்டு கொள்ளாது இயந்திரத்தின் வேகத்தைக் கூட்ட, நக்ஷத்திரா அதனை பிடித்து, அதன் இயக்கத்தை நிறுத்தினாள். வாயில் இருந்து கோடைவாய்நீர் வழிய, தலைமுடி எல்லாம் கலைந்து, மது அருந்தியதால் அவளிடம் இருந்து புறப்பட்ட ஒருவித துர்நாற்றம் என்று தலையாய குடிமகளாக அவள் காட்சி அளிக்க, பாலா


"சரக்கு அடிக்க எங்கடி படிச்சே ? பூனா லா காலேஜிலா ?" என்று மூக்கைப் பொத்திக் கொண்டு ஆரம்பிக்க, நக்ஷத்திராவிற்குக் கோபம் சுருக்கென்று ஏறியது.


"நான் உன்னை என் கூட இருக்க சொல்லலே ! இப்ப கூட, யு மே கோ !" என்று கத்தரித்து பேச, பாலா எகத்தாளமாக


"நான் மது மறுவாழ்வு மையம் நடத்த இங்க பிராக்டிஸ் பண்ணறேன் !" என்று பதிலடி கொடுக்க, நக்ஷத்திரா அதற்கு பதில் பேசும் முன், வாயில் மணி அடிக்க, பாலா,



"என்ன சொல்லி என் மூக்கை அறுக்கலாம்னு யோசிங்க வக்கீலம்மா ! பட் உனக்கு இருக்கற அந்த குதர்க்க ஜீன்ஸ் எனக்கும் இருக்கன்னு ஞாபகம் வைங்க" என்று பேசிவிட்டுத்தான் சென்றாள்.


வாயிலைத் திறக்காது அவள் வரவேற்பு அறைக்கு மீண்டும் வர, அழைப்பு மணி மீண்டும் அடித்தது. வாயில் பல் துலக்கியை வைத்துக் கொண்டே



"பாலா! உன்னோட ஆளா இருக்கும் பாருடி!" என்று கத்த, பாலா அதை காதில் வாங்கித் கொள்ளாது தினசரியில் ஆழ, மீண்டும் பலமுறை அழுத்தப்பட்ட வாயில் மணியால், நக்ஷத்திரா கதவைத் திறந்தாள்.



பாலாவின் அன்னை வீணா தான் வந்திருந்தார். அவருக்கு மகள் பாசம், நக்ஷத்திரா மீது அவருக்கு துவேஷம். அவரால் சரஸ்வதி மற்றும் நக்ஷத்திரா வாழ்வு தடம் புரண்டது என்ற கோவம் பாலாவின் மனதில். அவரை வா என்றோ வராதீர்கள் என்றோ நக்ஷத்திரா கூறவே இல்லை.


கதவைத் திறந்துவிட்டு உள்ளே சமையல் அறைக்குச் சென்று விட்டாள். அன்னை-மகள் பிரச்சினை இது, தான் மூக்கை நுழைக்க இயலாது என்று அறிவாள். வீணா உரக்க பேசுவது அவள் காதில் விழாது இல்லை.


"அவளால தனியா இருக்க முடியாதா..கூட எதுக்கு நீ? துணை வேணும்னா யாரையாவது கட்டிக்க சொல்லு..உனக்கு என்ன பைத்தியமா..எங்க கூட இருக்கற விட்டு..இப்படி ஒரு சின்ன வீட்டுல..அவளுக்கு வேலை செஞ்சுக்கிட்டு…" என்று கத்திக் கொண்டு இருக்க, அவர் பேசிய சிலபல வார்த்தைகள் தாங்க முடியாது, நக்ஷத்திரா சமையல் அறை விட்டு வெளியே சென்று அவரிடம் சண்டை இட தயாராக, அதற்குள் பாலா



"கெட் அவுட்ன்னு பெத்த பொண்ணு, அம்மாவை பார்த்து சொன்னா கேவலம். ஸோ.." என்று வாயிலை நோக்கி கைக்காண்பிக்க, வீணா வெகுண்டு எழுந்தார்.



"எல்லாம் இவ உன்னை நல்ல பிரெயின் வாஷ் பண்ணி விட்டிருக்கா..நீ நல்லா இருப்பியாடி.." என்று நக்ஷத்திராவை நோக்கி அடிகளை வைக்க, பாலா இருவர் இடையே புகுந்தார்.


"நான் மேஜர்..என் இஷ்டப்படி தான் இருப்பேன்..யாருக்கும் அதை பத்தி கேக்க ரைட்ஸ் கிடையாது. அண்ட் அக்காவும் பெரியம்மாவும் நமக்கு முன்னாடியே உன் புருசன் வாழ்க்கையில் வந்துட்டாங்க..டெக்னீகல்லி உங்களுக்கு நாம யாருன்னு தெரியும்...என்னன்னு தமிழில் சொன்னா கேவலமா இருக்கும்" என்று அவரை வாயடைக்க செய்து வீட்டை விட்டுப் போகச் செய்ய, போகும் முன் வீணா



"என்னோட நாத்தனார் ஜாடை மட்டுமில்ல உனக்கு, அவங்க நெஞ்சழுத்தமும் தான்..ஆனா கடைசி வரை அவங்க, தன் புருஷனோட சேர்ந்து வாழவே இல்ல" என்று சாபம் கொடுத்துவிட்டு செல்ல எத்தனிக்க, நக்ஷத்திராவிற்கு அது வலித்ததா..


எத்தனையோ பார்த்து விட்டோம், இது என்ன தூசு என்றபடி நின்றது மட்டுமல்ல,


"உங்களோட இந்த தீர்க்க தரிசனம், உங்க புருஷனுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆனது தெரிஞ்ச போது என்ன செஞ்சுக்கிட்டு இருந்திச்சு! ஜிம்மில் த்ரெட் மில்லில் வாக் எடுக்க போயிருச்சோ.. இல்லே கிளப்?" என்று அவரது பழக்கவழக்கங்களைக் குத்திக் காண்பித்தாள். அதில் அவர் முகம் செத்து விட்டது.



இதை கேட்டுக்கொண்டிருந்த பாலா, தன் அன்னையை


'இது தேவையா?' என்று பார்க்க, வீணா



"யு ஆர் அரகண்ட்! மேனேர்லெஸ்" என்று பொரிய, நக்ஷத்திரா


"தேங்க யு" என்று ஏகத்தாளமாகப் பதில் உரைத்தாள். இனி சரியாக எதுவும் இருக்காது என்று


பாலா,



"என்னை பத்தின கவலை வேணாம். என்னோட அக்கா கூட தங்கி இருக்கேன். பாய் பிரென்ட் இருக்கான். ஏதாச்சும் எனக்கு ஆச்சுன்னா அவங்க ரெண்டு பேரும் பார்த்துப்பாங்க..சோ ப்ளீஸ்…!நாங்க வேலைக்கு போகணும். போய் உங்க புருஷனை கவனிங்க!" என்று வழி அனுப்பிவிட்டாள்.



அவள் அப்படி பேசியது என்னவோ நக்ஷத்திராவிற்கு உவப்பாக இல்லை. அதை அவளிடம் சொல்லவே செய்தாள். பாலா அவளை முறைத்து,


"என்ன செய்ய சொல்லறே ! உன் லைஃப் இப்படி ஆனதுக்கு அவங்களும் ஒரு காரணம் ! அவங்களுக்கு பொறந்ததால நானும் காரணம். உனக்கு எப்படினு தெரியல. பட் ஐ அம் நாட் ப்ரவுட் ஆப் மை செல்ப் " என்று வருத்தம் கலந்த கோபத்துடன் அவள் கூற, நக்ஷத்திராவிற்கு அவளுக்கு எவ்வாறு ஆறுதல் தருவது என்று புரியவில்லை.


அவளது முதுகை ஆறுதலாக தடவியவள்,


"இன்னும் என் கூட தான் இருக்கணும்னு இல்லே . சீக்கிரம் கல்யாணம் கட்டிக்கே ! உனக்குன்னு ஒரு குடும்பம் உருவாகிக்கே ! நான் தனியா எல்லாம் பீல் பண்ணவே மாட்டேன் ! படிப்பு இருக்கு, நாட்டுல நிறைய வழக்கு இருக்கு ! சோ புவாக்கு நோ ப்ரோப்ளேம்!"


என்று கூற, அவளது கரங்களைத் தட்டி விட்டாள் வெடுக்கென்று.


"நான் அட்வைஸ் கேட்டேனா உன் கிட்ட ?" என்று காரமாகச் சொல்லிவிட்டு, வேலைக்குச் சென்றும் விட்டாள். 30 வயதிற்கு மேல் வரும் பக்குவப்பட்ட மனநிலையில் நக்ஷத்திரா அவளை ஒன்றும் சொல்லவில்லை.


பொறுமையைப் படித்துக் கொண்டு இருக்கிறாள். ரிஷியைக் கூப்பிட்டு மன்னிப்பு கேட்டவள்,


"உங்க வருங்காலம் செம டெர்ரர் பீஸ்...அந்த எல் ஈ டி லைட் தான் வேணுமா ? ஆமாம் இன்னும் எதுக்கு வெயிட்டிங் நீங்க ரெண்டு பேரும்! உங்க அம்மாக்கு ஓகே! கோ அண்ட் மேரி !" என்று கூற, ரிஷி மறுமுனையில் பெரிதாக சிரித்தவன்,


"என்ன பண்ண, இந்த எல் இ டி கிட்ட கமிட் ஆகிட்டேனே ! உண்மையில் ஃபர்ஸ்ட் டைம் உங்களையும் அவளையும் சேர்த்து பார்த்தப்போ, நீங்க அவளோட தங்கைன்னு நினைச்சேன் ! அப்பறம் தான் உங்களை பத்தி தெரிஞ்சிது. அண்ட் அபோட் மேரேஜ், அது அவ என்னிக்கி சொல்லறாளோ, அன்னிக்கி தான் ! அவளுக்கு சிலபல கடமைகள் இருக்காம் ! வெயிட் பண்ணுவேன் !" என்று அழகாக அவளை விட்டுக்கொடுக்காது பேச, நக்ஷத்திரா எதை நினைத்துக்கொண்டு பாலா இப்படி கல்யாணத்தைத் தள்ளிப்போடுகிறாள் என்று உணர்ந்து,


"நான் இப்படி தான் இருக்க போறேன் ரிஷி ! நோ சேஞ் !" என்றுத் தீர்மானமாக உரைக்க, ரிஷி இப்படி பேசினால் வேலைக்கு ஆகாது என்று, அவளிடம்



"நக்ஷத்திரா, நான் உங்களை விட சின்னவன் ! உங்க அளவு கஷ்ட-நஷ்டங்களை பார்த்தது இல்ல, பட் பிராக்டிகல் லைஃப் பத்தி கொஞ்சம் தெரியும் !


அவர் உங்களை வேண்டாம்னு எதோ ஒரு ரீசனால சொல்லிட்டு போயிட்டார் ! அண்ட் உங்க கல்யாண பந்தத்தை ரத்து செய்ய அவர் தன்னோட பங்கை செஞ்சிட்டாரு ! இன்னும் எதுக்கு அவரையே நினைச்சு கிட்டு இருக்கீங்க ? உங்களுக்கு இதில் இருந்து வெளிய வர இஷ்டம் இல்லியா ?


ஓகே ஃபைன் ! உங்களோட மனசுக்கு அவர் தான் எனக்குன்னு இருக்குன்னா, தென் அவரை கண்டுபிடிங்க ! அதுவும் ஏன் செய்யலே ! இப்படி நீங்க இருக்கறது பார்த்து ஒரு ஆதங்கம் ! நீங்க நல்லவங்க, அவரும் தான் ! ஏன் இப்படி இருக்கீங்க !


இப்போ அம் இன் லவ், சோ இந்த காதலோட பரிணாமங்கள் கொஞ்சம் தெரியும் ! கண்டிப்பா உங்களை பிரிஞ்சு அவர் சந்தோஷமா இருப்பார்னு தோணலே ! ஏன் ஒருத்தரை ஒருத்தர் தண்டிச்சுக்கிட்டு இருக்கீங்க ?


உனக்கு இதெல்லாம் தேவையான்னு கேட்டா, யு ஆர் மை பேமிலி ! அந்த உரிமையில் சொல்லிட்டேன். கண்டிப்பா இதுக்கு சாரி கேக்க மாட்டேன்" என்று சொல்லிவிட்டு வைத்து விட்டான்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
துருவ்வைப் பிரிந்த காலத்தில் அவளுக்குச் சொந்த பந்தங்கள் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், அவள் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் சில ஜீவன்கள் அவளுக்கு கிடைத்து தான் இருக்கிறது. அதுவும் அவன் மூலமாகத் தான். அவள் தனியாக இருக்கக்கூடாது என்று அவன் அவளுக்கு ஏற்படுத்திக் கொடுத்தான், ஆனால் அவன் இப்பொது யாரும் இல்லாது இருப்பானோ என்று கவலைக் கொண்டாள்.


தினம் அவன் சாப்பிட்டானா இல்லை உறங்கினானா , தன்னை பற்றி நினைத்தானா இல்லை வேறு பெண்ணோடு...சீ சீ என்ன நினைப்பு அது ! அவன் அவளை நீங்கினான், மனதால் அல்ல. ரிஷி சொல்வது போல் இது ஒரு தண்டனை ! ஆயுள் தண்டனையா என்று தான் தெரியவில்லை.


அவனது நினைவில் உழன்றவள் தான் கிழித்துப்போட்ட அவனது புகைப்படத்தை ஓட்ட வைக்க, முதலில் அவற்றை சேகரித்தாள். எல்லா பகுதிகளும் அவளுக்குக் கிடைத்தன ! நிழலில் அவ்வளவு வசீகரம் ! அவனது அந்த அளவான புன்னகை கூட அழகு தான்.


"குட் மார்னிங் துருவ் ! நீ நிழல் இல்ல, என்னோட நிஜம்!" என்று உரைத்துவிட்டு கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்ற ரீதியில் வேலைக் கடமைகளுக்குச் சென்று விட்டாள்.


*************************

அஜய்யின் அலுவலகத்தில், பாலா


"அஜய் ! துருவ் ஜெயில் போன பகுதிக்கு அப்போ அந்த டைமில் இருந்த ஜெயிலர் சார் கிட்ட பேச அப்பாயிண்ட்மெண்ட் கேட்டு இருந்தோம் ! அது கிடைச்சிருக்கு ! சோ நெஸ்ட் அந்த டேட்டா கலெக்ட் செய்யணும் ! அண்ட் சக்லேஷ்பூர் மாறி இடம்...பிரிட்டிஷ் பங்களா ..அது தான் கிடைக்க மாட்டேங்குது ! சின்ன வயசு துருவ்வுக்கு ஆள் கிடைச்சாச்சு …" என்று வரிசையாக சொல்லிக் கொண்டே போக, அஜய்


"கொஞ்சம் மூச்சு விடு பாலா ! எல்லாம் செய்யலாம் ! நீ இதுல...யு நோ இந்த பயோபிக் கொஞ்சம் உன்னோட பெர்சனல் சைட்டும் வரும் ..உனக்கு நல்ல தெரியும்...ஸ்டில் நீ இதுல வர்க் பண்ண போறியா ?" என்று துருவ்வின் சொந்த கதையைப் படமாக்கும் முயற்சியில் இருக்கும் நாசூக்கானச் சிக்கலைக் அவளிடம் இன்னொரு முறை எடுத்துக் கூற, பாலாவின் முகம் சற்று மாறியது.


"தெரியும் அஜய் ! இது கொஞ்சம் பெயின்புல் தான் ! ஆனா இதுல நான் எதிர்பார்க்கிற விஷயம் நடந்தா அம் ஹேப்பி !" என்று குரலை மிகவும் சிரமப்பட்டு சாதாரணமாக வைத்துக் கொண்டு கூறினாள். அஜய் அவளிடம் ஒரு வேதனையான குரலில்,


"நானும் அதை தான் எதிர்பாக்கிறேன் ! தினம் வேண்டறேன் அந்த கடவுள் கிட்ட" என்று சொல்லிவிட்டு அந்த அறையில் இந்த சுயசரிதைப் பட முயற்சிக்காக மாட்டப்பட்டு இருந்த துருவ்வின் வாழ்வின் பல காலக்கட்டத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களின் கொலேஜ்ஜை நோக்கினான்.


'கம் பேக் துருவ் சார் !' என்று மானசீகமாக நினைத்துக் கொண்டான், ஆழமாக. கடைசியாக, அஜய்யின் பார்வை அஜய் மற்றும் துருவ் விருது வாங்கும் விழா ஒன்றில் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தின் மீது படிந்தது.


"பாலா ! அந்த ஜெயிலர் இருக்கட்டும், உன்னோட அக்கா கிட்ட நான் பேசணும் ! துருவ் சாரோட சின்ன வயசில் அவங்களும் உண்டு அண்ட் அவரோட மனைவி என்ற முறையில் நான் அவங்க கிட்ட பேசணுமே ! கொஞ்சம் டைம் கொடுக்க சொல்லு " என்று கேட்க, பாலா


"முதலில் துருவ் பொறுத்தவரை அவ, அவரோட எக்ஸ்-வைஃப் . அந்த கதை சொல்வாளானு தெரியாது ! இன் பாக்ட் முதலில் இந்த பயோபிக்கு அவ ஒத்துக்கிட்டதே பெரிய விஷயம் ! இனியும் கேட்டா, என்னை வீட்டை விட்டு துரத்துவா !" என்று கடைசியில் சற்று விளையாட்டாகச் சொல்ல, அஜய் சிறிதளவு புன்னகைத்து,


"நல்லதா போச்சு ! இனி ஆபீஸிலேயே தங்கிக்க ! எனக்கு கொஞ்சம் வாடகை மட்டும் கொடு! பாக்கெட் மணி கொடுக்க மாட்டேங்கிறா என் பொண்டாட்டி !" என்று அவளைச் சீண்ட, பாலா அவனை முறைத்தாள்.


"ஜோக்ஸ் அபார்ட் ! நமக்கு சக்லேஷ்பூர் போகணும் ! அவங்க வீட்டுல ஒரு ஓல்ட் லேடி இருக்காங்களே..பேர் என்ன ...ஹான் பாக்யம் ..அவங்கள பார்க்கணும் , அதுக்கும் ஏற்பாடு செய் !கோ கேர்ள் ! என்னை சைட் அடிச்சது போதும் ! ரிஷி பாவம் மா !" என்று விளையாட்டுத்தனத்துடன் அவளை வேலையும் வாங்கினான்.


அவளா அசருபவள் !


"அஜய் ! உங்க வைஃப் நம்பர் என்கிட்ட இருக்கு ! சோ " என்று அவனை சற்று செல்லமாக மிரட்டி விட்டு அவன் சொன்ன வேலையையும் செய்யப் போனாள்.



************

"துன்பப் புடத்திலிட்டுத் தூயவனாக்கி வைத்தாய்

தொடர்ந்தமுன் மாயம்நீக்கிப் பிறந்த பயனைத்தந்தாய்

அன்பைப் புகட்டியுந்தன் ஆடலைக் காணச்செய்தாய்

அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டேஸ்வரி !

ஸ்ரீ சக்ர ராஜ ஸிம்ஹாஸனேஸ்வரி ..ஸ்ரீ லலிதாம்பிகே …"


என்ற பாடலை ஒருவர் பெசன்ட் நகர், அஷ்ட லட்சுமி கோவில் விழாவில் ஒரு மேடையில் உட்கார்ந்துக் கொண்டு பாட, அதனை ஷோபா கண்கள் மூடி ரசித்துக் கொண்டிருந்தார். நக்ஷத்திராவின் பொறுமையோ அதன் எல்லையைக் கடந்து கொண்டு இருந்தது. இன்றுவரை அவன் பிரிந்ததில் இருந்து அவள் செய்ய விரும்பாத காரியம், கோவில் செல்வது தான். கடவுள் என்பவர் இல்லவே இல்லையே என்று அவள் தீர்மானமாக நம்புகிறாள். ஆனால் ஷோபா அவளுடைய மனநிலை அறிந்தும், தான் சென்னை வந்தால் எப்போதும் செல்லும் அஷ்ட லட்சுமி கோவிலுக்கு அவளை அழைத்துச் செல்வதை வழக்கமாகக் கொண்டு இருக்க, அவருக்காகப் பொறுத்துப் பார்த்தாலும், அவளது பொறுமை, அவள் சொன்னப் பேச்சைக் கேட்டால் தானே !


பாடல் முடிய, ஷோபா

"வா ! இன்னொரு டைம் தரிசனம் பண்ணிட்டு வரலாம் !" என்று அவளை இழுக்க, நக்ஷத்திரா


"என் உடம்புக்கு இன்னும் ஒரு ரவுண்ட் சுத்தினா, ரொம்ப இளைச்சு, அனீமியா வந்து ட்ரிப்ஸ் ஏத்த வேண்டிருக்கும் " என்று ஓர் குதர்க்க மறுப்பைக் கொடுக்க, ஷோபா அவளைப் பார்த்து புன்னகைத்து


"அப்படியா ! பரவாயில்லை ! ஹாஸ்பிடல் செலவை நான் பார்த்துக்கறேன் " என்று அவளுக்குப் பதிலடி கொடுத்து அவளைக் கூட்டிக்கொண்டு செல்ல, நக்ஷத்திரா அவரை இனியும் எதிர்த்து பேச முடியாது என்று செல்ல,


எத்தனிக்க, ஏதோ ஓர் மன உந்துதலில் சட்டென்று பின்னால் திரும்பி ஒரு குழப்பமான முக பாவத்தைத் தத்து எடுத்தாள். இதே போன்று தன்னை யாரோ, அன்று அவளுக்கு விவாகரத்து கொடுக்கப்பட்ட தினத்தன்று, நீதிமன்றத்தில் தான் காரில் இருந்து இறங்கிய போது, உற்று பார்த்தது போல் தோன்றியது. ஒன்றும் தெரியாது போக, மெல்லத் திரும்பினாள்.


"என்ன ஆச்சு ?" என்று ஷோபா கேட்க, அவளோ


"நத்திங்" என்று சொல்லிவிட்டு, அவருடன் சென்றாள்.




ஷோபா தரிசனம் முடிந்து அவள் நெற்றியில் குங்குமம் வைக்கப் போக, அவளோ


"அதை வைக்க எனக்கு …." என்று மறுக்கும் முன் அதை வைத்தே விட்டார்.


"பொட்டு வச்சா அழகா இருக்கே ! உனக்கொண்ணும் அப்படி வயசாகலே ! ஜஸ்ட் 33, ஏன் கொஞ்சம் நல்ல ட்ரெஸ் பண்ணிக்கிட்டு யிருக்கலாமே ! எப்போதும் ஒரு அழுது வடியற கலருல சல்வார் தானா " என்று அவளை தாயன்புடன் கடிய, அவளோ


"எதுக்கு ? தேவையேயில்லை. உடம்பை மறைக்க உடை...அவ்ளோதான் என்னோட கான்செப்ட் ! " என்று காரை இயக்கியபடி வெறுத்துக் கொள்ள, ஷோபா அவளை ஓர் ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, நக்ஷத்திரா புன்முறுவல் பூத்து,


"எனக்கு நோ மோர் கவுன்சிலிங் ! அம் ஓகே !" என்று உறுதியாகத் தெரிவிக்க, ஷோபா நக்கலாக


"அதான் அன்னிக்கி தண்ணி அடிச்சு வீட்டை க்ளீன் பண்ணியா?" என்று விசாரிக்க, நக்ஷத்திரா


"அது ஏன் ஆம்பளைங்க தண்ணி அடிச்சா இஷ்யூ ஆக்காம, லேடீஸ் பண்ணினா இஷ்யூ பண்ணறீங்க ? ஒரு நாள்! ஒரே ஒரு நாள் ! தண்ணி அடிக்கறேன் ! எனக்கு வாலிட் ரீசன் இருக்கு ! உங்க பிரென்ட் புள்ள என்னை விட்டிட்டு ஓடிட்டான் ! ஒரேடியா ! நான், அவன், எங்களோட வாழ்க்கை, கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டு போனான் ! அன்னிக்கி நான் துக்கப்பட கூடாதா ? டெல் மி !" என்று அவரைச் சாட, ஷோபா அவளைத் தீர்க்கமாகப் பார்த்து,


"உனக்கு ஏன்னு தெரியும் ! அவனால தான் செஞ்சதை தாங்க முடியலே. அவன் செஞ்சது சரினு சொல்ல வரல ..அந்த இடத்தில அவனுக்கு அது சரினு தோணிச்சு ! இனி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இருந்தா...உங்க பெர்சனல் லைஃப் ..யு நோ வாட் ஐ மீன் !" என்று சமாதானம் செய்தாலும், நக்ஷத்திரா அதனை ஏற்கவில்லை.




"சோ இந்த டைம் ஹீல்ஸ் எல்லாம் மத்தவங்களுக்கு தான், அவனுக்கு இல்லே ! ரைட் ?" என்று சற்று உஷ்ணமாகவே அவளது கூற்று இருக்க, ஷோபாவிற்கு அதில் இருக்கும் உண்மை மற்றும் வேதனைப் புரியாது இல்லை. அதன் பின் ஒன்றும் பேசாது இருவரும் வீட்டை அடைந்தனர்.


"தாரா! ஏன் நீ அவன தேடலே ?" என்று கேட்டே விட்டார். அவளும் துளியும் தனது நிலையில் இருந்து இறங்காது,


"இந்த கேள்வியை உங்க தத்து புத்திரன் திரும்பி வரும் போது அவன் கிட்ட கேளுங்க ! அவனுக்கு தெரியும் நான் ஏன் அவன தேடலேன்னு ! " என்று கூற, ஷோபா அவளை நன்கு புரிந்து கொண்டவர்,


"எனக்கு என்ன சொல்லறதுனு தெரியலே ! எனக்கு நீங்க 2 பேரும் முக்கியம் ! அவன் சரின்னா, நீயும் சரி ! அவன் தப்புன்னா, நீயும் தப்பு " என்று சொல்லிவிட்டு அந்தச் சம்பாஷணையை முடிவுக்குக் கொண்டு வந்தார்.



இரவு உணவை மிகவும் அமைதியாக உண்டனர் இந்த முப்பெரும் தேவியினர். பாலாவிற்கு நக்ஷத்திராவின் முகம் சரியில்லாது இருப்பது போல் தோன்ற, ஷோபாவிடம் ஜாடை மாடையாகக் கேட்க முயன்று கொண்டிருந்தாள். அதைக் கண்ட நக்ஷத்திராவோ,


"இன்னிக்கி நான் குடிக்க மாட்டேன் ! டோன்ட் வர்றி !" என்று பாலாவின் பயத்தைச் சரி செய்ய, பாலா அவளது தங்கை தானே, அவளது குதர்க்கம் போல், அவளுக்கும் உண்டே ! ஆகையால்


"அது சரி ! என்னிக்கும்ன்னு சொல்லிருந்தா இன்னும் பெட்டரா இருந்திருக்கும் !" என்று சொல்லவே செய்தாள். ஆனால் அதை நக்ஷத்திரா கண்டு கொள்ளவே இல்லை.


உணவை முடித்தபின் தனது அறையில் புதிதாக மாட்டப்பட்டு இருந்த துருவ்வின் புகைப்படத்தைப் பார்த்தாள். அதை எடுத்தது நக்ஷத்திரா தான் ! அதனைத் தற்போது பெரிதாக்கி மாட்டியது பாலா!


ஒரே ஒரு கிறிஸ்துமஸ் பண்டிகையை இருவரும் சேர்ந்து கொண்டாடினர். அப்போது அவள் சட்ட கல்லூரியில் 4 ஆம் ஆண்டில் இருந்தாள். சக்லேஷ்பூர் பங்களாவில் தான் அது எடுக்கப்பட்டு இருந்தது.


சிகப்பு நிற ஸ்வட்டர், நீல நிற ஜீன்ஸ், மெல்லிய தாடி என்று பச்சை புல்வெளி மற்றும் கார்மேக பிண்ணனியில் மிகவும் இயல்பான தோற்றத்தில் அவன், ஒரு பெஞ்சின் மீது கால் மேல் கால் போட்டுக் கொண்டு ஒரு புத்தகத்தைப் படித்து கொண்டிருந்தான், அப்போது அந்த புத்தகத்தில் இருந்திருந்த ஹாஸ்யப் பகுதியில் தனது மனதைச் சற்று லகுவாக உணர்ந்து இருந்தான் என்று அவனது இந்தப் புகைப்படம் பறைசாற்றும். மெல்லியப் புன்னகை இழையோட அவனது முகம். அதனை மிகவும் அவள் ரசித்து எடுத்து இருந்தாள்.


அந்த கிறிஸ்துமஸை அவளால் மறக்கவே முடியாது! அவர்கள் இருவரும் கடைசியாக கொண்டாடியப் பண்டிகை அது! அது மட்டுமா ...என்று அவளது நினைவலைகள் மெல்ல பின்னோக்கிச் செல்ல, திடீரென அவள் காதில்,


"என்ன மேடம் ! பிடிச்சிருக்கா !" என்று பாலாவின் குரல் கேட்டது.


"ம்ம் …" என்று முதலில் திடுக்கிட்டவள், தனது கண்ணில் இருந்து வழியப்போன கண்ணீரை சாமர்த்தியமாக உள்ளடக்கிக் கொண்டாள்.


"எஸ் ! க்ளாஸிக் பிக் !" என்று சிலாகித்தாள். அது மட்டுமா,


"எப்போ சுட்டே இந்த போட்டோவை என்கிட்ட இருந்து ?" என்று விசாரணையைத் துவக்க,


பாலா,


"உன் கம்ப்யுட்டர் பாஸ்வேர்ட் அப்படியே செம கஷ்டம் போ ! துருவ்1234....இல்ல துருவ் போட்டு அவரோட பிறந்த வருஷம் ….! மொக்கை பாஸ்வேர்ட்டி ! " என்று அவளைப் போட்டு வார, நக்ஷத்திராவின் முகத்தில் வேதனையானப் புன்னகை ஒன்று தவிழ, பாலா அந்த விரக்தியைத் தாங்க முடியாது,


"ஹேய் ! பேப்ஸ் ! சும்மாடி ! என்னால நீ இப்படி கஷ்டப்படறது தாங்க முடியல ! உண்மையில் மாமாவை நேரில் பார்த்தா என்ன செய்வேன்னு எனக்கு தெரியாது ! அம் சோ மேட் அட் ஹிம் !" என்று தனது தமக்கையை அணைத்துக் கொண்டாள்.


"வருவார் ! கண்டிப்பா வருவார் ! என் அக்காவை தேடி வருவார் ! எனக்கு நல்ல தெரியும், உன்னை விட்டிட்டு அவர் கண்டிப்பா சந்தோஷமா இல்ல. " என்று சமாதானம் செய்து கொண்டு இருந்தவள் குரலும் கலங்கின.

தன்னால் இவளும் வேதனைக் கொள்கிறாளே என்று உணர்ந்த நக்ஷத்திரா,


"பார்றா ! கலங்கரை விளக்கு கலங்குது!" என்று கண்களைத் துடைத்தவாறு அவளது உயரத்தைக் கலாய்க்க, தன் மீது சாய்ந்திருக்கும் நக்ஷத்திராவைப் பார்த்து,


"தோடா ! உன் ஹைட்டுக்கு, உன்னை விட 1 இன்ச் அதிகமா இருக்கற 6 ஆம் க்ளாஸ் படிக்கற கமலா ஆன்டி புள்ள கூட லைட் ஹவுஸ் தான் " என்று பதிலுக்கு வாரி விட்டாள்.


தலையணையால் அடித்துப் பிடித்து, சிறிது நேரம், இருவரும் அறைக்குள் ஓடிப்பிடித்து விளையாடி முடிவாக படுக்கையில் மூச்சு முட்ட வீழ, இருவரின் கண்களும் துருவ்வின் புகைப்படம் மீது படிந்தது.


"உனக்கு நம்ம அப்பா மாறி நல்ல போட்டோ எடுக்கற திறமைடி !" என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டாள் பாலா. அவளுக்குத் தங்கள் தந்தையை எவ்வளவு தூரம் பிடிக்கும் என்று அறிவாள். தேவையில்லாது அவளை நோகடித்துவிட்டோமோ என்று அவள் வருந்த, நக்ஷத்திரா


"ம்ம்..ஐ நோ! அவர் படத்துல சினிமாட்டோகிராபி நல்ல இருக்கும் " என்று பொதுவாகச் சொல்லிக் கொண்டாள்.


சிறிது மௌனத்திற்குப் பிறகு, பாலா


"சக்லேஷ்பூர் அழகுல ! இந்த மலை...பச்சை பசேல் காப்பி தோட்டம்...பனி ...வாவ் " என்று சக்லேஷ்பூரைச் சிலாகிக்க, நக்ஷத்திரா


"ம்ம்ம் அவனுக்கு மலை பிரதேசம்ன்னா ரொம்பவும் பிடிக்கும் பாலா ! இப்போவும் எங்கையாவது மலை பிரேதசத்துல தான் இருப்பான்" என்று துருவ்வைப் பற்றி நன்கு தெரிந்தவளாகக் கூற, அவளது நாயகன், அவளுள் இருப்பவன், அவளது உயிர் பிரியும் போது மட்டுமே அவளைப் பிரியக்கூடியவன் ஒரு சாதாரண பேருந்தில் பிரயாணம் செய்து கொண்டிருந்தான்.


அவன் துருவ் ! ஒரு நடிகன், ஒரு வியாபாரி, தென்னகம் மற்றும் பாலிவுட்டில் பரிச்சியமான முகம் என்று இருந்தவன், தான் யார் என்று அதிகம் அறியாத ஊரை நோக்கிப் பிரயாணம் செய்து கொண்டிருந்தான். இரவு முழுவதும் ரயிலில் உறக்கமே இல்லை அவனுக்கு. ரயில் டெல்லியை அடைந்த போது அர்த்த ராத்திரி. அங்கிருந்து ஷிம்லாவிற்குப் பேருந்தில் பிரயாணம். இதோ இன்னும் சற்று நேரத்தில் ஷிம்லாவை அடைந்து விடுவான். அதைக் கூட உணராது ஒரே தூக்கம். இப்போது தூங்கினால் தான் உண்டு. அதன் பின் வேலைக்குச் செல்ல வேண்டும். வீடு திரும்ப இரவு ஆகிவிடும். ஆகையால் காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்று இருக்கிறான்.


பக்கத்தில் உட்கார்ந்தவர், அவன் தோளைத் தொட்டு, ஷிம்லா வந்து விட்டது என்று எழுப்பி விட, அவன் தனது வாயில் இருந்து வழிந்த கோடைவாய் நீரை துடைத்துக் கொண்டு எழுந்தான். சற்று நைந்து போன ஸ்வட்டர், சாதாரண ஜெர்கின்ஸ், ஏனோ தானோ என்று பொருத்தமே இல்லாத பேண்ட் ஷர்ட், முகத்தில் மெல்லிய ஆட்டுத்தாடி, உழைக்கும் வர்க்கத்தின் உடல் வாகு, நிறம் சற்று மங்கல் அவனுக்கு இப்போது.


ஜிப் சரியாக மூடாத ஏர் பேக்கை எடுத்துக் கொண்டு, ஷிம்லாவின் குளிரை உள்ளாக்கிக் கொண்டபடி தனது வீட்டை நோக்கிச் சென்றான். ஆட்டோவில் செல்லலாம் என்றால், தேவையில்லா செலவு என்று மனதில் வரவு-செலவைக் கணக்கு செய்தபடி, மீண்டும் பேருந்து பயணம்.



இம்முறை இறங்கும் போது பேருந்து கம்பிப் பகுதியில் மாட்டிக்கொண்டு அவனது ஜெர்கின்ஸ் சற்று கிழிந்து போனது. நடைபாதைக் கடையில், குளிர் காலத்திற்காக வாங்கினான். அதன் ஆயுசு அவ்வளவு தான் போலும் என்று கிழிசலைப் பார்த்துக் கொண்டு நினைத்தான். டிசைனர் வேர் எனப்படும் ஆடை வடிவமைப்பாளர்களின் கைவண்ணத்தில் உருவாகும் அழகான, நேர்த்தியானப் பிரத்யேக உடைகளை அணிந்து கொள்ளும் பழக்கமுள்ளவன் இன்று உடலை மறைக்க உடை என்று இருக்கிறான். பிறந்ததில் இருந்தே கார் பிரயாணங்களுக்குப் பழக்கப்பட்டவன் பேருந்து, ரயில், கால்நடை என்று தனது பிரயாணங்களை வழி வகுத்துக் கொண்டு விட்டான். அதில் துக்கமில்லை அவனுக்கு.


இதுவும் தனது வாழ்வு தான் என்று ஏற்றுக்கொண்டு விட்டான். ஜெயில் வாழ்க்கை வாழ்ந்தவனுக்கு இது சொர்க்கம் தான். புறநகரப் பகுதிகளில் இருந்து சற்று தள்ளி இருக்கும் அவனது ஒரு படுக்கையறை மற்றும் சமையலறை வீடு. இன்னும் மங்கலாக எரிந்து கொண்டிருக்கும் அவனது வீட்டில் முன் இருக்கும் தெரு விளக்கின் உதவிக்கொண்டு சாவியை இட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்றான். சிறிய வரவேற்பறை, ஆனால் அது தான் சாப்பிடும் அறையும்.


2 நாற்காலிகள், சிறிய தொலைக்காட்சிப் பெட்டி , ஓரத்தில் ஒரு கட்டில் என்று இருக்கும் அவனது வீட்டுக்குள் நுழைந்தவன், வரவேற்பறைக் கட்டிலில் மணிமாலா இருமிக் கொண்டு இருக்க, அவருக்கு வெந்நீர் வைத்து உடனே கொடுத்தான். சமையல் அறையில் சத்தம் கேட்டு விழுத்தவள் தனது அறையை விட்டு வெளியே வர, அங்கே அவனைக் கண்டவள்,


"சாம் !" என்று கூற, மணிமாலாவிற்கு நீர் புகட்டியவன், அந்த குரலுக்குச் சொந்தக்காரியைப் பார்த்து நிறைவாகப் புன்னகைத்து அவளை அணைத்துக் கொண்டான் !
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 24


"டாக்டர் என்ன சொன்னாரு தம்பி ! உங்க கிட்ட தனியா பேசினாறே !" என்று மணிமாலா துருவ்வை நேரிடையாக கேட்க, துருவ் ஒரு அமைதியான புன்னகையைக் கொடுத்து,


"ஒன்னும் இல்ல, என் கிட்ட எல்லா பொறுப்பும் கொடுத்தாச்சு ! இனி நிம்மதியாக நீங்க இருக்கணும், அதுக்கு நான் அந்த மாறி பொறுப்பா நடக்கணும்னு சொன்னார் " என்று மட்டும் கூறினான்.


மணிமாலா அதில் அவனை நம்பவில்லை.


"அப்படியெல்லாம் அவர் சொல்லிருக்க மாட்டார் ! சும்மா சொல்லறீங்க ! இதுக்கு மேலே ஒரு ஆம்பளை பொறுப்பா இருக்க முடியாது ! " என்று துருவ்வை நினைத்து பெருமிதமும், அதே நேரம் அவன் வாழும் இந்த வாழ்வையும் எண்ணிக் கூற, துருவ்


"நான் பொறுப்பா இருந்திருந்தா , இப்படி இங்க ஷிம்லாவில் நின்னுக்கிட்டு இப்படி பேசிகிட்டு இருக்க மாட்டோம் ஆன்டி !" என்று கடந்ததை நினைத்து அவன் கூற, மணிமாலா


"இப்படி ஆனதுக்கு நீங்க மட்டும் காரணம் இல்ல! அது தான் உண்மை. சென்னை போனீங்களே, எப்படி இருக்காங்க நக்ஷத்திரா ?" என்று பேச்சை மாற்ற, துருவ் முகத்தில் தோன்றிய வேதனையை அவன் எப்பாடு பட்டு மறைக்க முயன்றாலும் அது அவனால் முடியவில்லை.


"இருக்கா ! நல்ல வக்கீலா இருக்கா ! அவளோட வாழ்க்கையை அவ பார்த்துக்கறா ! நான் அவளை பத்தி இனி கவலை பட வேண்டாம் " என்று ஒரு பதிலைக் கொடுக்க, மணிமாலா கலங்கினார்.


"என்னோட பாவ மூட்டையை நீங்க ரெண்டு பேரும் கூட்டறீங்க !" என்று எவ்வளவு முயன்றும் அவரால் அழாது பேச முடியவில்லை. அவனோ அவரை ஆறுதலாக அவரது தோளை அணைத்துக் கொண்டு,


"எனக்கு இனி நீங்களும், தியாவும் முக்கியம்! எப்பவும் !" என்று 'நக்ஷத்திரா எனக்கு வேண்டாம்' என்பதை சூசகமாகக் கூறி, அவரைச் சமாதானம் செய்ய முயன்றான். ஆனால் உள்ளுக்குள் அது ஆலகால விஷத்தை விழுங்குவது போன்ற ஒன்று. அவர், அதை ஒத்துக்கொள்ளவில்லை, அவனிடம் அதைப்பற்றி வாதிடவும் இல்லை. வாதாடி உபயோகம் இல்லை என்று அறிவார்.


ஆனால் அவன் நன்றாக எப்போதும் இருக்க வேண்டும் என்று எப்போதும் போல் இறைவனை வேண்டிக் கொண்டார். மனிதனால் முடியாத ஒன்று நடக்க வேண்டும் என்றால், அந்த பரப்ரம்மத்தின் அருள் வேண்டும். எல்லா விதத்திலும் ஒரு மனிதனை சோதித்து விட்டே, அந்த அருள் கிட்டுகிறது என்ற நம்பிக்கை உண்டு நம்மிடம். அந்த அருள் கிடைக்கும் நேரம் எப்போதென்று யாரும் அறியார் ! அந்த அருளுக்காகக் காத்திருப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை.


*******************

அன்று வேலை முடிந்து விட்டது என்று வீட்டிற்கு சீக்கிரம் திரும்பிவிட்டான் துருவ் ! சுற்றுலாப் பயணிகளுக்குக் கார் ஓட்டும் வேலை அவனுக்கு. ஷிம்லாவில் தட்பவெப்பநிலை சீராக இருந்தால், நள்ளிரவு தான் வீட்டை அடைவான். ஆனால் இப்பொது குளிர் காலம் துவங்கும் நேரம். ஆகையால் சுற்றுலா பயணிகள் வருவது குறைந்து கொண்டு வருகிறது. ஆகையால் வீட்டிற்கும் சீக்கிரம் திரும்புகிறான். அடுத்து குளிர் காலம் துவங்கி பனி விழும் வரை இன்னும் கடுமையாக, சுற்றுலா பாதிக்கப்படும். பனி விழந்த பின், பனி படர்ந்த மலைச் சிகரங்களைப் பார்க்க நிறைய சுற்றுலாப் பயணிகள் வருவார்கள். பனிச் சறுக்கல் விளையாட்டு ஒரு பெரியத் திருவிழா போன்று நடக்கும். அப்போதெல்லாம் வாடகை கார் ஓட்டுனர்களுக்குப் பெரிய அளவு வருமானம் உண்டு. ஆனால் இப்பொது கொஞ்சம் வருமானம் மங்கும் நேரம். தனியாக இருந்தால் வேறு மாதிரி, அவனை நம்பி 2 ஜீவன்கள் உண்டே.




என்ன செய்யலாம் , கடந்த ஆண்டை போல், வாகனத்தில் ஒரு கடைக்கு பலசரக்கு சாமான்களைக் கொண்டு வரும் பணியை மேற்கொள்ளலாமா அல்லது இம்முறை வேறேனும் செய்யலாமா என்று யோசித்தபடி வீட்டின் பின் முற்றத்தில் கொடியில் உலர்ந்த துணிகளை எடுத்து மடித்து வைத்துக் கொண்டிருந்தான்.


அவர்கள் வீட்டில், வீட்டுப்பணிகளை எல்லோரும் செய்வர். மணிமாலா பெரும்பாலும் சமையல் வேலை செய்து விடுவார். தியா, அவருக்கு உடல் சரியில்லாது போனால், சமையல் வேலை செய்வாள், பிற நாட்களில் அவள் சமையல் உதவி புரிவாள். வீட்டை சுத்தப்படுத்தும் வேலையை தியாவும், துருவ்வும் செய்வர். இப்படியாக மூவர்க்குள் நல்ல புரிதல் உண்டு. அவரவர் துணிகளை அவரவர்களே துவைத்துக் கொள்வர். சமீபத்தில் தான் குளிர்ச் சாதன பெட்டி வாங்கிருந்தனர். துணி துவைக்கும் இயந்திரம் இனி தான் வாங்க வேண்டும். கணக்குப் பார்த்து செலவு, முடிந்த அளவு சேமிப்பு என்று இருக்கிறான் துருவ்.


கடமையே கண்ணாயிரம் என்று இருக்கும் துருவ்வை, துருவிச் செய்திகளை எப்படி சேகரிக்க என்று நடை பயின்று கொண்டு இருந்த தியா,



"சாம் ! நீ சென்னை போய்ட்டு வந்து கதையே சொல்லலே ! நான் கேட்ட சுவீட் வாங்கிட்டு வந்தே ! பட் எனக்கு கதை வேணும் ! அவங்கள பார்த்தியா ?" என்று அவன் முதுகை விளையாட்டுத்தனமாக சொறிந்தபடி கேட்க, துருவ்


"விடு தியா ! வலிக்குதடி ! கதை எல்லாம் நிறைய பேசியாச்சு ! இனி நோ ஸ்டோரீஸ் ! போய் உருப்படியா ஏதாச்சும் பண்ணு" என்று அவளைக் கடிய, அவளோ விட்டால் தானே,


"அட்லீஸ்ட் வக்கீலம்மாவை ஒரு போட்டோவாச்சும் எடுத்தியா ? சொல்லு " என்று அரித்துப் பிடுங்கினாள்.


துருவ் அவளை முறைத்துப் பார்க்க, தியா சற்று தள்ளி நின்றுக் கொண்டாள். அந்தப் பார்வைக்கு அவளுக்கு அர்த்தம் தெரியும் ! இதுக்கு மேல் பேசினால் நல்லது அல்ல என்ற பொருள் . அவளும் விடாது அவனை ஆழமாக நோக்கி, துருவ் அவளது கண்களைப் பொற்றி


"ஹப்பா ! லேசர் பார்வை ! தாங்க மாட்டேன் ! போட்டோ எடுத்தேன் ! அப்பறமா காமிக்கறேன் ! இப்போ நீ உன்னோட வேலைய பாரு ! உன்னோட ட்யூஷன் பிள்ளைங்க வந்துருவாங்க ! போ " என்று அவளை வீட்டுக்குள் அனுப்பி வைத்து விட்டு, உலர்ந்த துணிகளை எடுத்து மடித்து வைக்கும் பணியைத் தொடர்ந்தான்.



எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்யும் துருவ்வை பார்த்து பெருமூச்செறிந்த மணிமாலா,


"போதும் தம்பி ! சூடு போகறக்கு முன்ன இந்த டீயை குடிங்க !" என்று சுடச்ச்சுட தேநீரைக் கொடுக்க, அவன் அதனை ரசித்துக் குடித்தான்.


"உங்க டீ , காபி, சமையல் எல்லாம் தூள் ஆன்டி " என்று சிலாகித்தபடியே, தியாவுக்கு தேநீர் கொண்டு போய் கொடுத்தான். அவளுக்குத் தேவையானவற்றை அவன் பார்த்து செய்யும் அழகில் அவள் நெகிழந்து போனாள். கடந்த 2 வருடங்களாக அவன் உடன் அவள் இருக்கிறாள், அவனது அக்கறை அன்பு ,அரவணைப்பு, கண்டிப்பு என்றும் அவனது பரிமாணங்கள் ஓரளவு அவளுக்கு அத்துப்படி. அவனைப் பிடிக்குமா என்று கேட்டால், அவன் அவளுடன் இல்லாத நாட்கள் எப்படி கழித்தாள் என்று அறியாள், ஆனால் அம்மாதிரியான நாட்கள் இனி அவளுக்கு வேண்டாம். இது தான் அவனைப் பற்றிய தியாவின் மனநிலை.



அவனைக் கண்டவுடன் அவனுடனான தனது உறவு என்னதென்று தெரிந்தாலும் அவள் உடனே ஒன்றும் அவனை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாளடைவில் அவனை ஏற்றுக் கொண்டாள். அதற்கு காரணம் இல்லாது இல்லை. அவளைப் பொறுத்தவரை அவனாக ஏற்படுத்திக் கொண்டு இருக்கும் துன்பங்கள் அவனுக்கு போதும், இதற்கு மேல் தானும் அவனுக்குத் துன்பம் கொடுத்தால், அதைத் தாங்கிக் கொள்வான், ஆனால் அது அவனுக்கு வேண்டாம். மணிமாலாவிற்கு பிறகு அவளுக்கு அவன் மட்டுமே ! அவனுக்கு அவர்கள் மட்டுமே என்று இருக்கிறான், இதற்கு மேல் அவளுக்கு என்ன வேண்டும். தான் அநாதை இல்லை என்று அவன் உணர்த்தி விட்டான். அவனது அன்பில் நெகிழ்ந்து அந்தத் தேநீரைக் குடிக்காது அவள் இருக்க,


"தியா ! சீக்கிரம் குடி ! டோன்ட் டே ட்ரீம் " என்று அவன் கடியவும் செய்தான். அவள் குடித்த அந்த டம்ளரை அவன் கழுவி வைத்து விட்டு, வெளியே சென்று விட்டான். இரவு உணவிற்கு தான் வீடு வந்து சேர்ந்தான். இரவு உணவு பெரும்பாலும் சப்பாத்தி மற்றும் ஏதேனும் காய் அல்லது தால் எனும் மசித்தப் பருப்பு. விதவிதமாக பல் நாட்டு உணவு வகைகளைச் சுவைத்து இருக்கிறான். ஆனால் அவனுடன் ஒரு குடும்பம் என்று இருந்தது கிடையாது. நக்ஷத்திராவுடன் இருக்கும் போது, உணவு உண்ணும் வேளையைப் பெரிதும் எதிர்பார்ப்பான். உற்றார்கள் இல்லாது போனவனுக்கு, தனக்காக ஒருவள் என்று ஆன போது அவளுடனான சமயங்களை நன்றாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று எண்ணினாலும் அது 100% சரியாக அமையவில்லை. அவனால் மறக்க முடியாத ஒன்று அவள் தன் கையால் அவனுக்கு சமைத்து கொடுத்த தருணங்கள், அதில் அவளுள் இருக்கும் அன்னையை அவன் உணர்ந்து இருக்கிறான். இருவரும் நல்ல பெற்றோர்களாக, ஓர் நல்ல கணவன்-மனைவியாக இருக்க வேண்டும் என்றெல்லாம் கற்பனைச் செய்தான். ஆனால் அது நடக்கவில்லையே !


இருவரும் காரணம் ஆயினர், அதுவும் அவன் செய்தது அவனால் இன்றுவரை அவன் மனசாட்சிப் படி அவனுக்கு ஏற்புடையது அல்ல. ஆகையால் இந்தப் பிரிவு. கடந்த காலத்தை யோசித்துக் கொண்டே அவன் உணவைச் சரியாக உண்ணாது இருக்க, தியா,


"டீ மட்டுமில்ல, சப்பாத்தி கூட சூடா சாப்பிட்டா தான் நல்ல இருக்கும் இந்த வெதருக்கு !" என்று அவனுக்குத் தாயாக மாறி உபதேசம் செய்ய, அவளைப் பார்த்து புன்முறுவல் பூத்தவன் ,


"என் அம்மாக்கு அடுத்து என்னை அதிகம் அதட்டறது நீ தான் " என்று அவளை மெலிதாக கிண்டல் செய்ய, அவள்


"ஏன் வக்கீலம்மா சத்தம் போட மாட்டாங்களா ?" என்று அவனைத் துளைக்க, அவன்


"அவ, நான் இப்படி சாப்பிடாம இருந்தா, அந்த தால் எடுத்து தலையில் கொட்டிருப்பா ! உனக்கு அவள தெரியாது" என்று நக்ஷத்திராவை நினைவு கூற, தியா


"அவங்கள உனக்கு நல்ல தெரியுமே ! அப்பறம் ஏன்...." என்று தாள முடியாது அவர்கள் பிரிவைப் பற்றி கேட்டே விட, துருவ்வின் முகம் இறுக்கி அவளைச் சுட்டெரிக்கும் பார்வை ஒன்றை வீசி,


"இனி நீ அவளை பத்தி என்கிட்ட பேச கூடாது புரியுதா ! இது லாஸ்ட் ! இதுக்கு மேலே கேட்டே…" என்று சாப்பாட்டைப் பாதியில் நிறுத்திவிட்டுச் செல்ல, மணிமாலா


"தம்பி ! அவ கிடக்கறா !அதிகப்ரசங்கி ! நீங்க சாப்பிடுங்க ! ப்ளீஸ் " என்று இறைஞ்ச, அவன் அவருக்காக சாப்பாட்டை முடித்தான். வீட்டை விட்டு சற்று வெளியே சென்று தனது கோபத்தைத் தணிக்க முயன்றான். முடியவில்லை! தன் மீதான கோபத்தை தியா மீது காட்டிவிட்டான்! அந்த வெறுப்பு அவனைப் பாடாய் படுத்தி எடுத்தது.


தூரத்தில் தியா தன்னைத் தேடி வருவதை உணர்ந்தவன், அவளை நோக்கி வேகமாகச் சென்று,


"எதுக்கு இந்த குளிரில் வந்தே ! அறிவு இருக்கா ?" என்று தன்னைச் சுற்றி இருக்கும் சால்வையை அவள் மீது போற்றினான்.


"அம் சாரி சாம் ! உன்னை கஷ்டப்படுத்திட்டேன் ! அம் வெரி சாரி ! ப்ளீஸ் என் கூட பேசாம இருக்காதே ! என்னால அது தாங்க முடியாது !" என்று அழ ஆரம்பிக்க, அவளை அணைத்துக் கொண்டவன்


"உன்கிட்ட கோவிச்சுக்கிட்டு நான் எங்க போக ! எனக்கு, நீதானே ! எங்கேயும் நான் போக மாட்டேன் ! இனிமேல் ஆல்வேய்ஸ் வித் மை தியா பேபி ஒன்லி ! அம் சாரி சுவீட் ஹார்ட் !" என்று கூறி அவள் தலை உச்சியில் இதழ் பதித்து தலைச் சாய்த்துக் கொண்டான். அவள் தன் மீது அவனது கண்ணீர் சொட்டு விழுந்ததை உணர்ந்தாள். நிமிர்ந்து அவனைப் பார்க்க, அவன் கண்கள் நிலா வெளிச்சத்தில் கலங்கி இருப்பது போல் இருக்க, அந்த சூழ்நிலையை மாற்ற முடிவு செய்தவள்,


"யூ நோ ! ட்யூஷனில் ஒரு வாலு ! என்கிட்ட என்ன டவுட் கேட்டான்னு தெரியுமா ? பி யு டி-ஐ புட் சொன்னா, ஏன் சி யு டி - ஐ கட் ன்னு சொல்லறோம்னு கேட்டு, என்னை வாய அடைச்சுட்டான் ! பதில் தெரியாம ஒரே ஷேம் ஷேம் பப்பி ஷேம்! எல்லாரும் ஒரே சிரிப்பு ! உண்மையில் அவன் கேள்வி சரிதான் " என்று தான் ஆங்கிலம் பயில்விக்கும் பிள்ளைகளைப் பேசி அவனது கவனத்தைத் திசைத்திருப்பி இருவரும் ஒருவழியாக வீடு வந்தடைந்தனர்.


வீட்டுக்குள் செல்லும் முன், வானில் தெரிந்த அந்த பிரகாசமான துருவ நட்சத்திரத்தைப் பார்த்தான். போல் ஸ்டார் எனப்படும் துருவ நட்சத்திரம், இரவில் நன்றாக தெரியும்.



கொஞ்சம் வானியல் சாஸ்த்திரம் தெரிந்தால், எளிதாக துருவ நக்ஷ்த்திரத்தை எளிதாக வானில் கண்டுப்பிடித்து விடலாம். இந்த நட்சத்திரத்தைக் காண வேண்டுமென்றால், பூமியில் நின்று கொண்டு, வட திசையில் பார்க்க வேண்டும். வடக்கு திசையில் தான் இருக்கும் இடத்தில் இருந்து பெரிதும் நகராது, ஆகையால் ஒரே இடத்தில் இருப்பது போல் தோன்றும். ஆகையால் தான் மாலுமிகள் அந்தக் காலத்தில், வழி தடுமாறினால் இதை வைத்து திசையைக் கண்டுபிடித்துக் கொள்வர்.


அவனுக்கு சிறுவயது முதல் இந்த நட்சத்திரத்தை வானில் காணப் பிடிக்கும், அப்படி தானே துருவ்வும், நக்ஷத்திராவும் அறிமுகமாகினர். மழையில்லா இரவில் துருவ நட்சத்திரம் வானில் மின்ன, அதனைப் பார்த்து ஓர் உணர்வு ! மகிழ்ச்சியா இல்லை துக்கமா அல்லது இரண்டும் கலந்ததா அல்லது நிம்மதியா …


அவனது பார்வை போன திசையைப் பார்த்தவள்,


"என்ன போல் ஸ்டாரா ?" என்று தியா சரியாகக் கண்டெடுக்க, அவன்


"ம்ம்ம் ..மறைஞ்சிரும் !" என்று தனது வாழ்வை அதில் பிணைத்துக் கூற, அவள்


"இல்ல மறையாது !" என்று துணிவாக அவன் மனதைப் புரிந்துக் கூறினாள். அதில் அவன் மேலும் அவளைக் கடியும் முன்,


"சூரியன் வரும் போது அதோட வெளிச்சத்துல தான் நமக்கு வானத்துல இருக்கற நட்சத்திரம் தெரியறதில்லை ! நான் சயின்ஸ் படி சொன்னேன் மறையாதுன்னு " என்று சாமர்த்தியமாக அவனை மடக்க, அவளைத் தெரியாதவனா அவன்!


"ஸ்மார்டி பேண்ட்ஸ் ! ஐ நோ யு " என்று அவள் சாமர்த்தியமாகப் பேசியதை குறிப்பிடும் ஆங்கில சொற்றோடரை வைத்து கூறி, அவளை செல்லமாக அடிக்க வர, அவனது பிடியில் சிக்காது தியா,


"நான் ஸ்மார்ட்டி சல்வார் !" என்று தனது அறைக்குச் செல்லும் முன் அவனுக்கு இரவு வணக்கத்தைச் சொல்லிவிட்டுச் சென்றாள். அவனும் புன்முறுவல் பூத்து, தனது படுக்கையை வரவேற்பறையில் விரித்துப் படுத்துக்கொண்டான். மனதில் முழுவதும் அவளே ! அதுவும் சென்னை சென்று அவளைப் பார்த்தபின் அதிகமான அவளது நினைவுகளைக் கட்டுக்குள் கொண்டு வர முடியாது தவித்தான். அவனைக் கண்டால் ஜொலிக்கும் அவள் கண்களைச் சுற்றி கருவளையம் அவளது தூக்கமின்மையும், அவனை நினைத்து அவளது துக்கத்தையும் பறைசாற்ற, அவளது இந்நிலைக்கு, அவன் மிகவும் வருந்துகிறான். சரியாகச் சாப்பிடுகிறாளா என்று யோசிக்கவைக்கும் அளவு மெலிந்த அவளது தேகம், அவள் படித்த வக்கீல் படிப்பு கொடுக்கும் தன்னம்பிக்கை என்று உலா வந்து கொண்டு இருக்கிறாள் என்று அவன் உணர்ந்தான்.
 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அதுவும் நீதிமன்ற வளாகத்தில் அவள் காரில் இருந்து இறங்கிய போது, அவன் அவளை ஓர் மறைவான இடத்தில் இருந்து புகைப்படம் எடுக்க, சட்டென்று அவள் திரும்பவும் செய்தாள். அதில் அவன் தடுமாறித்தான் போனான். அவளது முகத்தில் தெரிந்த ஒருவித தேடல் அவனை உருக்கியது. இன்னும் அங்கே இருந்தால், தனது மனஉறுதி பறந்து விடுமென்று அவன் உடனே அவ்விடம் நீங்கிவிட்டான். அதன் பின் ரயில் பிடித்து இங்கே வந்தும் விட்டான்.


உறக்கம் வரவில்லை. பஞ்சு மெத்தை இல்லாக் காரணமா? ம்ஹூம் அவளை பிரிந்த அன்று முதலில் இருந்து, இது தான் அவன் நிலை. அவன் தன் வீட்டில் இருந்தாலும் அவனுக்கு உறக்கம் வராது, எல்லாவற்றையும் அவள் களவாடிக் கொண்டுச் சென்று விட்டாளே!


உடல் இருக்கிறது, அதில் ஒரு துளி உயிரும். உயிர் வாழ வேண்டும், தனக்காக இல்லை, தியாவிற்காக. அவளும் அவன் உயிரின் ஒரு பகுதியை ஆட்கொண்டுவிட்டாள். கண்களை மூடினால் நக்ஷத்திரா, அவனது சிக்குவாக, அவனது தாராவாக, அவன் காதல் கொண்ட பெண்ணாக, அவனுக்கு அன்னமிட்ட மனைவியாக, அவனது தோழியாக, அவன் பார்க்க விரும்பிய வழக்காறிஞராகத் தெரிந்தாள்.


இந்த ஆயுள் தண்டனை தான் அவன் செய்த எல்லாத் தவறுக்கும் பிராயச்சித்தம். இனி அவளைக் காணவே கூடாது. அவள் நினைவு வரவே கூடாது என்று உறுதிக் கொள்ள முயற்சித்தான். முயற்சி திருவினையாக்கும் என்பர், ஆனால் அவனது முயற்சி இங்கு வீண்! எதைப்பற்றி நினைக்கக் கூடாது என்று அவன் எண்ணுகிறானோ, அது மட்டுமே அவன் மனக்கண்ணில், அவனது கடந்த காலத்துடன்.



மும்பையின் பிரபல இரு பாலர் சேர்ந்து படிக்கும் பள்ளி


துருவ் தன் முன் வைக்கப்பட்டிருந்த கேள்வித்தாளையே பார்த்துக் கொண்டிருந்தான். ஜூவாலஜி எனப்படும் விலங்கியல் பாடம். 9 ஆம் வகுப்பில் வைக்கப்படும் காலாண்டுத் தேர்வு இன்று. அவனுக்குக் கேள்விகளுக்கு பதில் தெரியும். ஆனால் எழுத மணமில்லாது, கேள்வித்தாளை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.


நேற்று இரவு தனது அன்னைக்கும்-தந்தைக்கும் நடந்த வாய்ச்சண்டை தான் அவன் மனதில் ஓடிக் கொண்டு இருந்தது. தந்தை தாமோதர் சிங்கானியா, பிரபல பாலிவுட் நடன இயக்குனர். தாய் சந்தியா, தொழிலதிபர் நீலகண்டனின் ஒரே செல்ல மகள். நடனம் பயில வேண்டும் என்ற சந்தியாவின் பிடிவாதம், துணை நடன இயக்குனராக இருந்த தாமோதரனிடம் நடனம் பயில வழி வகுக்க, பணக்காரன்-ஏழை, தமிழ்-ஹிந்தி பாகுபாடு என்று எல்லாவற்றையும் கடந்து மனிதன் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல என்ற நிலையை அடைந்து, நீலகண்டனின் காதினை எட்டவும் செய்தது.



நீலகண்டன், திரைப்படத் துறையில் தயாரிப்பாளர்களுக்கு முதலீட்டில் உதவி செய்தாலும், அவருக்கு இந்த திரைப்பட துறை மீது ஈர்ப்பு கிடையாது, முக்கியமாக திரைப்பட துறையினர் மீது. அவருக்கு அவர் பணம் முக்கியம், 2 மடங்காய் அல்லது பல மடங்காய் திரும்பிவர வேண்டும், அவ்வளவு தான்



திரைப்படத் துறையினர் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கொள்கையை காற்றில் பறக்கவிட்டு திரிகின்றனர் என்பது அவர் கூற்று, அதை உண்மையாக அவர் கண்டும் இருக்க, அவர் மகள் இப்போது திரைப்பட துறையில் பணிபுரியும் ஒருவனைக் காதலிக்கிறாள் என்று அறிந்து வெகுண்டு எழுந்து, முதலில் நல்ல வியாபாரியாக வியாபாரம் பேசினார்.


ஆனால் இது அமரக் காதல் என்று தாமோதர் எகிற, அடுத்து அவன் குடும்பத்தைச் சந்தித்து, 'வேறு விதமாக' இந்தக் காதலை முறியடிக்க முயற்சிக்க, சந்தியா, நீலகண்டனின் அழுத்தத்தைக் கொண்டு, தாமோதரை ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டு வந்து அவரை வாயடைக்க செய்தாள். அவருக்கு தான் மனம் ஒப்பவில்லை. செல்ல மகள் என்ற கூற்று அவரைக் கூறு போட, இருவரையும் தன்னுடைய பாதுகாப்பில், தனது வளையத்தில் வைக்க முயற்சி எடுக்க அது சந்தியாவின் பிடிவாதம் முன் தவிடுபொடியாகியது.


தாமோதரைத் தனியாகச் சந்தித்து,


"எனக்கு பாலிவுட்டில் நிறைய பேரை தெரியும். உனக்கு டான்ஸ் மாஸ்டரா ஆகனுமா? உனக்கும் லாபம், எனக்கு என் மகள் நல்ல இருக்கணும், என் பக்கத்துல. என்ன சொல்லறே?" என்று இம்முறை பட வாய்ப்பு எனும் அஹிம்சா ஆயுதத்தைக் கையில் எடுக்க, இதற்கு தானே இத்தனை நாள் காத்திருந்தோம் என்று தாமோதர், நீலகண்டன் பேசிற்குக் கட்டுப்பட்டு, வாய்ப்பினையத் தக்க வைத்துக் கொள்ள, அவன் நல்ல நேரம், அடுத்தடுத்து நிறைய நல்ல வாய்ப்புகள்.



தாமோதர் புகழ் பெற்ற நடன இயக்குனராக உருவாக, புகழ், பண போதையும் தலையில் ஏறியது. சந்தியாவின் கவனம் முழுவதும் தான் பெற்ற மகனிடம் இருக்க, தாமோதர் தனது அமரக் காதலை ஆட்டம் காண வைக்க, கூடா நட்புகளைத் தனது வாழ்வில் புகுத்த, அது துருவ்வை பெரிதும் பாதித்தது. குதிரைப் பந்தயம், குடி என்று துவங்கி மாதுவில் போய் முடிய, தனது பெண்ணைத் தனது பாதுகாப்பில் வைத்திருந்த நீலகண்டன் வெகுண்டு எழுந்தார்.


தாமோதரைக் கூப்பிட்டுக் கண்டிக்க, அவனுக்கு சற்று பயம் பிடித்தது. ஆனால் தான் திருந்தி விட்டேன் என்று பேர் செய்தவன், தனது மாமனார் அறியாதவாறு தனது கேளிக்கைகளைத் தொடர்ந்தான். எல்லாம் சரியாக இருக்கிறது என்று சந்தியா நினைத்துக் கொண்டு இருக்க, ஒருநாள் அவனை மற்றொரு பெண்ணுடன் வெளியே கண்டு விட்டாள், மிகவும் நெருக்கமாக!

கேட்டதிற்கு,



"ஆமாம் ! நான் அப்படிதான் ! முடிஞ்சதை பண்ணுடி" என்று திமிரானப் பதில் வேறு.



இம்முறை நீலகண்டன் இந்த உறவே வேண்டாம் என்று சந்த்யாவிடம் அவனை விவாகரத்துச் செய்யச் சொல்ல, அவள் மறுத்தாள். அவளுக்குத் தனது காதல் மரித்துப் போய் விட்டதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவளது குற்றவுணர்வு, கல்யாண வாழ்வின் தோல்வி எல்லாம் சேர்ந்து அவளை மதுவின் பிடியில் தள்ள, துருவ் பாக்கியத்தின் அரவணைப்பில் வளர ஆரம்பித்தான்.


பாக்யம் அவர்கள் வீட்டில் நெடுநாளாக வேலைச் செய்பவர் ! பணக்கார வீட்டில் ஹவுஸ் கீப்பர் என்ற ஒருவர் இருப்பார் ! அவர் அந்த வீட்டை மொத்தமாகப் பராமரிப்பார் , பாக்யம் அவர்கள் வீட்டின் ஹவுஸ் கீப்பர் ! அவருக்கு துருவ் மீது அளவு கடந்த பாசம் ! என்னத்தான் பாக்யம், தாயின் இடத்தில் இருந்து அவனைப் பார்த்துக்கொண்டாலும் அவர் அவனது பெற்ற தாயல்லவே !


நெடுங்காலம் தாயின் அன்பில், அரவணைப்பில் வளர்ந்தவன், இன்று தாய் பெரும்பாலும் ஸ்மரணையில் இல்லா நிலையில் இருக்கும் அவன் மிகவும் வேதனை அடைந்தான். தந்தையோ வீட்டிற்கு வருவதில்லை, அப்படித் தப்பித்தவறி வந்தால், இருவரும் சண்டை போட்டுக்கொள்வர்.


9ஆம் வகுப்பில் இருக்கும் துருவ், ஓரளவு என்ன நடக்கிறது என்று புரிந்துக் கொண்டான். தந்தையை வெறுக்க ஆரம்பித்தான். கல்யாணம், காதல் என்ற உறவுகள் மீதான நம்பிக்கையின்மை அந்த கட்டத்தில் தான் அவனுக்கு ஆரம்பம் ஆயிற்று ! தந்தை வந்தால், ஏறெடுத்துக் கூட பார்க்க மாட்டான்.


"அந்தாளை ஏன் உள்ள விடறீங்க ?" என்று அன்னையைக் கடிவான்.


சந்தியாவிற்கோ, தாமோதர் தன்னிடம் ஒரு நாள் திரும்பி வர மாட்டானா என்ற ஏக்கம், நப்பாசையாக மாறி, ஒரு வெறி போல் ஆட்டுவிக்க, துருவ் யாரிடம் தனது மனதைக் கொட்டுவது என்று தெரியாது தன்னுள் குமைந்தான்.


நண்பர்களிடம் இதைப்பற்றி பேச தயக்கம். தனது தந்தை சரி இல்லாதவன் என்று கூறி கிண்டல் செய்து தன்னை வேதனை அடையச் செய்வார்களோ என்று பயம் வேறு.



மனஅழுத்தம் அவனை போட்டுப் பாடாய் படுத்தி எடுக்க, அதைக் கடந்து வர வழி தெரியாது, மனம் போல் ஆடுவான். ஆம், அவனுக்குத் தந்தை போல் நடனத்தில் ஆர்வம், நன்றாக, எவ்வித பயிற்சி இன்றி ஆடுவான் ! ஆனால் அவன் ஆட ஆரம்பித்தால், சந்தியா


"டான்ஸ் ஆடினே ! காலை உடைச்சு போட்டுருவேன் " என்று கத்துவார் .


தாத்தாவோ ஒரு படி மேலே போய், அவனை அடி விளாசி விடுவார் ! பெரியவர்களின் சுயநலம், கவலை மற்றும் கோபத்தில் பலியானது துருவ்வும் அவனது குழந்தைப்பருவமும் தான்.


நேற்று அவன் தேர்விற்கு படித்து விட்டு சீக்கிரமே உறங்கிவிட்டான் ! ஆனால் நடு ராத்திரியில் அவனது தந்தை, நீலகண்டன் ஊரில் இல்லாத தைரியத்தில் வீட்டிற்கு வந்து சந்தியாவிடம் தனக்கு விவாகரத்து கொடுக்கும்படி சண்டை இட, சந்தியாவின் கூச்சல் , தாமோதரின் கோபப் பேச்சுக்கள் என்று அவனைத் தூக்கத்தில் இருந்து எழுப்பி விட, தனது அன்னையின் அறைக்குச் சென்றான்.


அங்கே தாமோதர்,



"குடிகாரி ! உன்னோட மனுஷன் இருப்பானடி ! எனக்கு உன்னை விட பெட்டரா ஒருத்தி கிடைச்சு இருக்கா ! விவாகரத்து குடு ! இனி நீ வேண்டாம் எனக்கு" என்று அவளது அறையில் இருக்கும் மது பாட்டில்களைச் சுட்டிக்காட்டி அவளை இகழ்வாகப் பேச, அவளோ


"எல்லாம் உன்னால் தாண்டா ! நான் இப்படி ஆனேன் ! என் உயிரே போனாலும் உனக்கு விவாகரத்து கொடுக்க மாட்டேன் ! நீ வேற யாரையும் கல்யாணம் செய்ய முடியாது ! உனக்கு நான் தான் பொண்டாட்டி கடைசிவரை " என்று ஆங்காரமாகக் கத்த, தாமோதர் ஆத்திரத்தின் உச்சிக்குச் சென்று,


"அப்போ சீக்கிரம் செத்து போய் தொலை ! இல்ல நானே உன்னை சாவடிக்கறேன்" என்று எல்லையை மீறி அவளை அடிக்க என்ன கிடைக்கும் என்று தேடிப் பார்த்து




எதுவும் கிடைக்காத ஆவேசத்தில் அவளது கழுத்தை நெரிக்கப் போக, துருவ்


"மா …" என்று கூவியபடி, இருவர் இடையே புகுந்து , தாமோதரைத் தள்ளி விட, அவன் ஆத்திரம் கொண்டு, துருவ்வை அறைய, அவன் சற்று தடுமாறி கீழே விழுந்தான்.



"பிள்ளைய போட்டு அடிக்கறியே பாவி !" என்று சந்தியாவின் கூச்சல் பெருக, துருவ் தட்டுத்தடுமாறி எழுந்து தாமோதரிடம்


"கெட் அவுட் ஆப் மை ஹவுஸ் !" என்று முதன் முறையாக தந்தையைப் பகிங்கரமாக எதிர்த்து நின்றான். துருவ் சிறுவயதில் அப்படியே தாமோதரின் மறுபதிப்பு !


இம்மாதிரியான பேச்சை மகனிடம் இருந்து எதிர்பார்க்காது, தாமோதர் திகைத்து நிற்க,



துருவ் அவனது அதிர்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டு, அவனை இழுத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே துரத்த, இவர்கள் பின்னால் சந்தியா! அந்த வயதில் சற்று அதீத வளர்ச்சியும், உயரமும் துருவ் கொண்டு இருந்தான் ! அத்துடன் அவனுக்கு தந்தை மீதான கோபம் வேறு ஒரு மத யானையின் பலத்தைக் கொடுத்து இருக்க, எளிதாக தந்தையை வீட்டை விட்டு அப்புறப்படுத்த முயல, தாமோதர் சுய உணர்வு பெற்று,


"என்னடா உன் தாத்தன் ட்ரெயினிங்கா ! என்னை மாறி இருந்துகிட்டு என்னையே வீட்டை விட்டு துரத்தறியா! அடி பிச்சு புடுவேன் " என்று எகிற, துருவ் அவனை ஒரு அருவெறுப்பான உயிரினத்தைப் பார்ப்பது போல் பார்த்து,


"விட்டல் !" என்று வீட்டுக்காவலாளி பெயரைக் கத்தி விளித்தான். விட்டலும்


"ஜி சாப் !" என்று வர, அவர்கள் இருவரும் அவனை வீட்டை விட்டு வெளியே தள்ளி விட்டு,


"இனி உன்னை இங்க பார்க்க கூடாது ! வந்தே " என்று ஒற்றை விரலைக் காட்டி மிரட்ட, தாமோதர் சந்தியாவிடம்


"என்னடி புள்ளைய வச்சு மிரட்டரியா ! இனி ஒருநாளும் உன்னை பார்க்க வர மாட்டேன் ! இனி விவாகரத்து எதுக்கு ! அவளோட வாழ போறேன் ! ஒரே வீட்டில் ! நீ வாழா வெட்டியா குடிச்சு சீரழிஞ்சு சாவு" என்று அசிங்கமாகக் கத்த, துருவ் பெற்ற தந்தை என்று கூட பாராது அவனை அடிக்கப் போக, சந்தியா இந்த உடல் தளர்வில், சோர்வில் மயங்கி கீழே விழுந்தாள்.


அவளை மருத்துவமனையில் உடனே சேர்த்து, சிகிச்சை அளித்து நினைவிற்கு கொண்டு வர, அவளோ நினைவு வந்தபின் முதலில் கேட்டது என்னவோ


"தாமு ! என்னோட தாமு என்னை விட்டு போயிட்டாரா " என்று பிதற்ற, துருவ் மனவேதனையில் உச்சிக்கே சென்று விட்டான். இன்னும் சிறிது நேரத்தில் அவன் பள்ளிக்குச் செல்ல வேண்டும், அன்னையோ இன்னும் சரியாகாது எதோ பிதற்ற, பாக்கியம் தான்


"தம்பி ! நீங்க போங்க ! நான் பார்த்துக்கறேன் " என்று சமாதானம் செய்து அனுப்பி வைக்க முயன்றார். ஆனால் அவன் சத்தியமாக சமாதானம் ஆகவில்லை.



"மா! நானிருக்கேன்..அவன்...அந்தாள் வேண்டாம் மா..பாருங்க இப்படி ஆகிட்டிங்க" என்று அவரது நிலையைச் சுட்டிக் காட்ட, சந்தியா அதைக் கேட்கும் நிலையில் இருந்தால் தானே!



"எனக்கு தாமு தான் வேணும்..ஐ லவ் ஹிம்.. ஐ வான்ட் ஹிம்..ஐ நீட் ஹிம்" என்று பித்து பிடித்தாற் போல் அவன் சட்டையைப் பிடித்து, அதைக் கிழித்துப் பிதற்ற, துருவ் அவரை சமாதானம் செய்ய முடியாது தவித்தான்.


மருத்துவர் குறுக்கிட்டு சந்தியாவிற்கு மயக்க மருந்து கொடுத்தப்பின் தான் அவன் அவ்விடம் நீங்கினான்.



தாயின் இந்த நிலை, அவனை நிலைக்கொள்ளாச் செய்ய, தேர்வை எழுத முடியாது வெற்று வினாத்தாளைக் கொடுத்துவிட்டு தேர்வு அறையை விட்டுச் சென்று விட்டான்.


அவன் வினாத்தாளை வாங்கிய ஆசிரியர்


"துருவ்! வாட்ஸ் திஸ்!" என்று கேட்ட கேள்விக்குக் கூட அவன் பதில் அளிக்கவில்லை. மரியாதை தெரியாதவன் அல்ல அவன். பணக்காரத் திமிர் கிடையாது, படிப்பில் வெகு சுட்டி என்றெல்லாம் அவன் இருந்தது இல்லை. எல்லாப் பாடங்களிலும் 75% மேல் வாங்கிவிடுவான். கூடியவரை எல்லோரிடமும் நன்கு பழகுவான். அவனைப் பற்றி இதுவரை எவ்வித புகாரும் வீட்டை அடைந்தது இல்லை.



ஆனால் இன்று முதல் முறையாக அவனைப் பற்றிய புகார் வீட்டை அடைந்தது பெரிய அளவில்.


வெளியே வந்தவன் தனது நண்பர்கள் குழுவிற்காக காத்திருந்தான். அதில் ஒருவன், பிரவீன். அவனது பக்கத்து பங்களாவில் இருக்கிறான். அரசல்புரசலாக துருவ்வின் தந்தை, அவர்களுடன் இல்லை என்ற செய்தி பரவி இருந்த சமயம் அது. நேற்று இரவு நடந்த களேபரம், அதனை ஊர்ஜிதம் செய்ய, அவரவர் கற்பனையுடன், நிஜமும் கலந்து பெரிய அளவில் வதந்திகள் பரவ ஆரம்பித்து விட்டன. தனது வீட்டார் பேசுவதைக் கேட்ட பிரவீன் சும்மா இராது தங்கள் நண்பர்கள் குழுவில் இதனைப் பரிமாறிக் கொள்ள அவர்கள் எல்லோரும் துருவ்வைக் கேலிப் பொருளாகப் பார்த்து



"டேய் மச்சான்! இனி இவன் அம்மா கூட இவன் அப்பா இருக்க மாட்டாராம்! அவருக்கு செட் அப் இருக்காம்..இன்னொரு பிள்ளையும்! துருவ் உனக்கு தங்கச்சியா இல்ல தம்பியா" என்று கூறி


"நானா இருந்தேன்...இந்த மாறி ஒரு ஆளை" என்று அவ்வயதில் பிரவீனுக்கு தெரிந்த சிலபல கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தி வேண்டுமென்றே அவனைச் சீண்ட, துருவ் தன் வசத்தை முற்றிலும் இழந்து,


பிரவீன் மீது பாய்ந்தான்.


இருவரும் கட்டிப்பிடித்து சண்டையிட, பள்ளி மைதானம் போர்க்களமாயிற்று. ஆசிரியர்கள் அவர்களைப் பிரித்து விட்டாலும்,துருவ் மனதளவில் அடிபட்ட புலியாக சீற, அது அவன் உடல் மொழியில் தெள்ளத்தெளிவாகத் தெரிந்தது. 2 ஆசிரியர்கள் அவனைக் கட்டுக்குள் வைக்க முயன்றாலும், எந்நேரம் வேண்டுமென்றாலும் அவன், பிரவீன் மீது பாயும் நிலையில் இருந்தான். மீண்டும் பாயவும் செய்தான்.


பிரவீன் சட்டையைப் பிடித்து, அவனை தன் பிடிக்கு கொண்டு வந்து, கூடைப்பந்து 'போல்(pole)' எனப்படும் கூடைபந்தை போடும் கூடையைத் தாங்கும் கம்பி மீது அவன் முகத்தை மோத வைக்க அவன் தயாராக, துருவ்வைக் கட்டுக்குள் கொண்டு வர பெரும் பாடு பட்டு, ஒருவழியாக கொண்டும் வந்தனர்.


இருவர் முகத்தில் ரத்த காயங்களும், வீக்கங்களும் பஞ்சமில்லாது இருக்க, இருவரின் வீட்டுப் பெரியவர்கள் அழைக்கப்பட்டனர். நீலகண்டன் இராததால், பாக்யம் வந்தார். சந்தியா வரக்கூடிய நிலையிலும் இல்லை. விஷயம் நீலகண்டன் காதிற்கு சென்றபோது அவர் இம்முறை சந்தியா மீதிருக்கும் பாசத்தைச் சற்று துறந்து, ஒரு சில முடிவுகளை தீவிரமாக செயல்படுத்தினார். அதன் பலன், நக்ஷத்திராவிற்கு துருவ், சாம் ஆனான். பின்னாளில் அவளால் தனது சாம் தான் இந்த துருவ் என்று கண்டுபிடிக்க முடியாதபடியும் ஆயிற்று… அது எப்படியென்றால்….

 

Thishi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 25


புகழபெற்ற ஓர் ஹிந்தி பாடல் ஒலிக்க, துருவ் அதில் வரும் நடன அசைவுகளை அப்படியே தன்னில் புகுத்தி, ஆடிக்கொண்டிருந்தான். மனம் மகிழ்ச்சியாக இருக்கிறதா ! ம்ஹூம்...சத்தியமாக இல்லை. மனம் கொதித்துக் கொண்டு இருந்தது. அதனை எப்படிச் சீர் செய்ய என்று தெரியாது இந்த பேய் நடனம்.


மனதை அதில் முழுவதும் ஆழ்த்தித் தனது காயங்களுக்கு மருந்திட முயன்று கொண்டு இருக்க, அவன் பயன்படுத்திக் கொண்டு இருந்த கேசட் பிளேயர் நிறுத்தப்பட்டது. எந்த நடன அசைவை ஆடிக் கொண்டு இருந்தானோ, அந்த அசைவில் அப்படியே நின்றான், யார் இசையை நிறுத்தினார்கள் என்று கூட அவன் பார்க்கவில்லை. இவ்வளவு நேரம் ஆடியதால் அவனுக்கு மூச்சு வாங்கியது, அத்துடன் வேர்த்தும் கொட்டியது..


"துருவ் !" என்ற கம்பீர குரல் ஒலிக்க, அது தனது தாத்தா நீலகண்டன் என்று உணர்ந்துக் கொண்டான். அவர் அவனை எப்போதும் துருவ் என்று தான் அழைப்பார் . அன்னையும், தந்தையும் அவனை 'சாம்' என்று அழைப்பர். 'துருவ்' என்பது தாமோதரின் தந்தையின் பெயர். ஆகையால் மரியாதை நிமித்தம், அவர்கள் இருவரும் அவனை துருவ் என்ற பெயரைக் கொண்டு கூப்பிட்டதில்லை.


அவனது முழு பெயரில் உள்ள மற்றொரு பகுதியைக் கொண்டு கூப்பிடுவர், ஆனால் நீலகண்டன் அவனை எப்போதும் துருவ் என்று தான் கூப்பிடுவார்.


தாத்தா கூப்பிட்டும் அவன் திரும்பவில்லை. அவர் மற்றொரு முறை அவனை,


"துருவ் ! திரும்பி பார்" என்று சற்று கடுமையை ஏற்றி கூற, அவன் அப்போதும் திரும்பாது இருந்தான். அவரது பொறுமையை அவன் வெகுவாக சீண்டிப் பார்த்துக் கொண்டு இருந்தாலும், அவர் அன்று சற்று பொறுமையைக் கடைப்பிடித்தார்.


அவன் அருகே சென்று, அவனது தோளைத் தொட்டு, அவனை நேரே பார்த்தார். முகத்தில் வீக்கங்களும், காயங்களும், ஒரு பிளாஸ்டரும் இருக்க, அவரது புருவங்கள் சுருங்கின.


"நீ யார் வீட்டு பிள்ளைன்னு தெரியுமா ?" என்று அவனைக் கோபமாக ஏறிட்டார். இம்மாதிரி வெட்டவெளியில் கட்டிப்புரண்டு சண்டை போடும் அளவா தனது வளர்ப்பு இருந்து இருக்கிறது என்ற கோபம் அவருக்கு.


"நான் யார் வீட்டு புள்ளனு சொல்லுங்க ! நீங்க என்னோட தாத்தா, தாத்தா மட்டுமே ! என்னோட அம்மா குடிக்கிறாங்க லைக் எ....." என்று தான் சொல்ல வந்த வார்த்தையைத் தன்னுள் விழுங்கிக் கொண்டான்.




"அன்ட் ..என்னோட அப்பா..சாரி..என்னோட பிறப்புக்கு காரணமானவர் மட்டுமே அந்த ஆளு..ஹி இஸ் ஸ்க்****.." என்று அவன் மேலும் பேசுவதற்குள் நீலகண்டன் அவனை அறைந்திருந்தார்.



அவன் வயதிற்கு அது சற்று அதிகப்படியான வார்த்தை. அவனை தீயாய் உறுத்து விழிக்க, அவனோ கன்னத்தில் அடிவாங்கினாலும், கலங்கவில்லை. அவன் பேச்சின் உக்கிரம் இப்பொது அவன் கண்களில்.



"நான் சொன்னது உண்மை தான் ! பொய்யில்லே ! அண்ட் இவங்க எல்லாரும் பண்ணற வேலைக்கு நான் வெக்கப்படறேன் ! என்னை என்ன சொல்லறாங்க தெரியுமா ! யு நோ வாட் ஐ அம் கால்ட் ! யு ஹேவ் எனி ஐடியா ! டெல் மி " என்று கத்தித் தீர்த்துவிட்டான் !



அவனும் எத்தனை நாள் தான் தனது மனதில் வைத்து புழுங்குவான் ! ஒரு வடிகால் வேண்டாமா !



அவனது பேச்சில் உண்மை இல்லாது இல்லை. அவன் சொல்வது அனைத்தும் அவனது மனம் படும் பாடு ! யாரால் அவன் அடைந்து கொண்டிருக்கும் துன்பத்தைப் போக்க முடியும் ! பணத்திற்கு பஞ்சமில்லை. ஓர் சாதாரண குடும்பத்தில் பிறந்து இருந்தால் , நல்ல அம்மா-அப்பா வின் அருகாமை, அரவணைப்பில் வளர்ந்து, இம்மாதிரியானப் பேச்சுக்களை அவன் கேட்டு இருக்க மாட்டான், இம்மாதிரி அவன் பேசவும் மாட்டான். அவனைக் கண்டு நீலகண்டனுக்குத் துக்கம் பெருகியது !


அவரது ஒரே நம்பிக்கை நட்சத்திரம் அவன் மட்டுமே ! மகளுக்கு நல்ல தொழிலதிபனைத் திருமணம் செய்து வைத்து, தனது தொழிலை நல்ல இடத்தில் ஒப்படைத்து முக்தியை நோக்கிச் செல்லலாம் என்றால், அவர்க்கு அந்த பிராப்தம் இப்போது இல்லை என்று விதி வேறு வழியில் அவரைக் கொண்டுச் செல்ல, அவருக்கு சந்தியாவிற்கு மகன் பிறந்தபின் தான் நிம்மதி ! சந்தியா ஓரளவு அவரது தொழிலைப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவருக்கு அவரைப் போல் ஒருவனோ ஒருத்தியோ வேண்டி இருந்தது .


துருவ் முகஜாடையில் மட்டும் தான் தாமோதர், மற்றபடி அவனுக்கு நீலகண்டனின் குணநலன்கள் நிறைய உண்டு. இவ்வாறு, இவன் தான் தன்னுடைய வாரிசு என்று அவர் முடிவு கட்ட, இவனோ இப்படி மனதால் வெகுவாகப் பாதிக்கப்பட்டு, இப்படி மனதளவில் மிகவும் உடைந்துப் போயிருப்பதைக் கண்டு அவரும் மனது ஒடிந்துப் போனார் !


ஆனால் அதைக் காட்ட முடியாதே ! தான் இன்னும் மன உறுதியுடன் செயல்பட வேண்டும் என்று முடிவு செய்தவர்,


"துருவ் ! உன்னோட அம்மா அப்பா பத்தி எனக்கு கவலையில்லை, நீ என்னோட பேரன் ! இந்த வீட்டு வாரிசு ! இந்த வீட்டுக்கு மட்டும் தான் வாரிசு !இப்படி தெரு பொறுக்கி மாறி சண்டை போட்டு வரது இஸ் நாட் அலோட் ! அண்ட் உன் வயசுக்கு ஏத்த பேச்சு பேசு ! அண்ட் நோ டான்ஸ் ! அபாலாஜி லெட்டர் எழுது ! கோ"


என்று அவனைக் கடிய, அவனோ


"நான் இனி ஸ்கூல் போக மாட்டேன் ! படிக்க மாட்டேன் ! டான்ஸ் மட்டும் தான் ஆடுவேன்! என் இஷ்டப்படி தான் இருப்பேன் ! எல்லாரும் என்ன நினைச்சுகிட்டு இருக்கீங்க ? உங்க இஷ்டப்படி என்னால் ஆட முடியாது ! ஐ வில் டான்ஸ் ஒன்லி டு மை ட்யூன்ஸ் !" என்று தெளிவாக எதிர்த்துப் பேச,



நீலகண்டன் தனது கட்டுப்பாட்டினை இழந்து மீண்டும் கையை ஓங்க,


துருவ், இம்முறை


"அடிச்சு கொல்லுங்க என்னை ! இந்த உயிர் வேண்டாம் ! இன்னொரு ஜென்மமும் வேண்டாம் ! நான் என்ன தப்பு செஞ்சேன் ? என்னோட அம்மா, என் கிட்ட நான் என்ன படிக்கறேன் , சாப்பிட்டேனானு கேட்டு எத்தனை நாள், எத்தனை மாசம் இருக்கும் தெரியுமா ? அந்தாளு, என் கிட்ட ஒழுங்கா பேசி எத்தனை மாசம் இருக்கும் தெரியுமா ?


நம்ம விட்டல் நேத்து தன்னோட பையனுக்கு கிரிக்கெட் மேட்ச் அடுத்த வாரம் இருக்கு, போகணும் நெஸ்ட் வீக் ஒருநாள் வர முடியாதுனு பாக்கியம் மா கிட்ட சொல்லிவிட்டு இருந்தார் ! அந்த பையனை நான் பார்த்ததில்லை, பட் எனக்கு அவன் மேலே எவ்வளவு பொறாமை தெரியுமா ? அவன் பணக்காரன், நல்ல அம்மா-அப்பாக்கு பொறந்த லக்கி பாய், நான் துரதிஷ்டசாலி , அந்த விதத்தில் பரம ஏழை.


அவருக்கு அவர் பையன் மேல இருக்கற பாசம், குடும்பத்து மேலே இருக்கற அக்கறை ஏன் அந்தாளுக்கு இல்ல? விட்டல் கிட்ட நம்மள மாறி பணம் இல்லை ! ஆனா அன்பு இருக்கு ! அதுக்கு ஈடா ஒன்னும் இல்ல ! என் ப்ரெண்ட்ஸ் சொல்லற மாறி நான் வேஸ்ட் ! அன்பு இல்லாத என்னோட லைஃப் ஒரு நரகம்! கில் மி ஐ சே ! ஐ டோன்ட் வாண்ட் டு லிவ் ! கில் மி " என்று கத்தி, பெருங் குரல் எடுத்து அழ ஆரம்பிக்க, நீலகண்டன் கல்லாய்ச் சமைந்தார் .


இவ்வாறான மனநிலையை அவனிடத்தில் அவர் எதிர்பார்க்கவில்லை ! அவன் புண்பட்டு, வெறுத்து, தன்னைத் தானே இவ்வளவு தூரம் தாழ்த்திக் கொண்டு இருப்பான் என்று எதிர்பார்க்கவில்லை . ஓங்கிய கையைக் கீழே இறக்கியவர், அவனைத் தேற்ற வழி தெரியாது, தான் வாழ்க்கையில் தோற்றுக்கொண்டு இருக்கிறோமோ என்ற உணர்வு அவருள் பரவ ஆரம்பித்து, அவரை ஆக்கிரமிக்க, அந்த அறையை விட்டுச் சென்றார் .


துருவ் தனது மனநிலையைச் சொல்லிவிட்டு, பெரும்பாரத்தை இறக்கி வைத்து விட்டான். அவனது அழுகை மெல்ல குறைந்து, அவன் இது தான் தன்னுடைய விதி என்பது போல், தேற்றிக் கொண்டான். அவனுக்கே இந்த அழுகையை நினைத்து ஏனோ வெட்கமாக வந்தது.


முகத்தைக் கழுவிவிட்டு, கண்ணாடியில் தனது முகத்தைப் பார்க்க, மீண்டும் ஆத்திரம் பெருகியது . அப்படியே அவன் தனது தந்தையின் ஜாடை ! ஆத்திரத்தில் அந்த கண்ணாடியை உடைக்க வேண்டும் போல் வர, தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொள்ள மிகவும் பாடுபட்டான். இந்த முக ஜாடை வேறு அவனை, சந்தியாவிடம் இருந்து பிரிக்கிறதோ என்று அவன் உணர ஆரம்பித்தான். அவனை காணும் போதெல்லாம், சந்தியாவிற்கு, தாமோதரின் ஞாபகம் வருகிறதோ, ஆகையால் தன்னைத் தானே போதையில் ஆழ்த்தி இப்படி தன்னிலை மறந்து, பெற்ற பிள்ளையையும் மறந்து எல்லாவற்றையும் மறந்து, எங்கே செல்கிறோம் என்று அறியாது இருக்கிறாரா என்று அவனுக்குத் தோன்ற ஆரம்பிக்க, இவை எல்லாவற்றிக்கும் காரணமான தனது முகத்தைப் பட்பட் என்று அடித்துக் கொண்டான்.


அவன் இருந்த நிலையில் அந்த முகத்தை தீ வைத்து கொளுத்திக் கொள்ள வேண்டும் என்பது போல் இருந்தது. இம்மாதிரியான விவகாரமானச் சிந்தனைகளுக்கு அவனது பருவக்கோளாறு வயதும் காரணம் . அந்த வயதில் வரும் பல உணர்வுகள் ஓர் உச்ச நிலையில் இருக்கும் ஓர் சிலருக்கு. தன்னைப் பற்றிய ஓர் தாழ்வு மனப்பான்மை நிலை வேற அவனுக்கு. இவை எல்லாவற்றிக்கும் காரணம் தானில்லை, தன்னைப் பெற்றவர்கள் என்று நினைக்கும் போது, அவனால் அதையும் தாங்க முடியவில்லை.


தனது நிலையை எண்ணி வெறுத்துக் கொண்டு இருந்தவனின், அறைக்கதவு தட்டப்பட, கதவைத் திறந்தான்.


வெளியே பாக்யம்,


"பசி இருக்கும், சாப்பிட வாங்க சின்னையா !" என்று விளிக்க, அவனுக்கு அவரது அக்கறை அந்நேரம் பெரிதும் தேவைப்பட்டது போல்,


"தேங்க்ஸ் ! நான் ஒருத்தன் இந்த வீட்டுல இருக்கேன்னு ஞாபகம் வச்சுக்கிட்டு இருக்கறதுக்கு ரொம்ப தேங்க்ஸ் பாக்யம் மா" என்று சொல்லியே விட்டான்.


"அச்சோ ! ஏன் தம்பி இப்படி பேசறீங்க ! " என்று அவர் அவனைப் பார்க்க, அவன்


"உண்மை தானே ! சரி வாங்க ! தாத்தா வீட்டில் இருக்காறா ?" என்று பேச்சை மாற்ற, பாக்யம்,


"ஐயா அவர் ரூமில் இருக்கார் !உங்க கிட்ட பேசிட்டு ரூம் போனவர் தான் ! வெளிய வரவேயில்லை ! என்னாச்சு தம்பி ?" என்று சற்று கவலைக் கலந்து விசாரிக்க, துருவ்வின் முகம் மாறியது.


"வரேன் " என்று சொல்லிவிட்டு , அவன் நேரே நீலகண்டனின் அறைக்குச் சென்றான், அங்கே அவர் ஓர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து தனது பெண்ணின் சிறுவயது புகைப்படங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவள் படித்த பள்ளியில் அவள் விருது வாங்கும் புகைப்படத்தில் அவர் கண்கள் நிலைகுத்தி இருக்க, அந்நேரம் துருவ் அவரது அறைக்குள் நுழைந்தான்.


சந்தியாவைச் சிறுப்பெண்ணாக, இரட்டை ஜடையிட்டு, முகம் கொள்ளா மகிழ்ச்சியுடன் பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி ! அதன் அருகே துருவ் சைக்கிளில் அமர்ந்து இருக்க, சந்தியா அவன் அருகே மட்டற்ற மகிழ்ச்சியுடன் நின்று கொண்டிருக்கும் புகைப்படம்.


"அம்மா இஸ் வெரி ப்ரெட்டி அண்ட் ஹேப்பி !" என்று துருவ்வின் குரல் அவரது மோன நிலையைக் கலைக்க, நீலகண்டன் திரும்பி அவனைப் பார்க்க, துருவ்வும் தனது தாத்தாவைப் பார்த்தான். அவரது கண்கள் கலங்கி, கண்ணில் நீர் வழிய இருக்க, அவன் பதறிவிட்டான்.


"தாத்தா !'" என்று அவன், அவர் புறம் சென்று மண்டியிட்டு அந்தப் புகைப்பட ஆல்பத்தை மூடிவிட்டு, அவரது மடியில் தலைவைத்துக் கொண்டான்.



"சாரி தாத்தா ! உங்களை ஹர்ட் பண்ணிட்டேன் ! அம் சாரி தாத்தா ! இப்படி நீங்க இருக்கறதுக்கு நான் தான் ரீசன் ! நான் நல்ல படிப்பேன் ! உங்களை ஏமாத்த மாட்டேன் ! ப்ளீஸ் இப்படி இருக்காதீங்க ! ஐ ஹேவ் ஒன்லி யு தாத்தா !" என்று கடைசியில் அவனது குரல் கரகரக்க ,


அவன் முகம் மீது நீலகண்டனின் ஓர் கண்ணீர் துளி விழுந்தது.


"எனக்கு நீ மட்டும் தான் துருவ் ! நீயும் இல்லன்னா ...நான்....." என்று அதற்கு மேல் அவரால் பேச முடியாது போக, அவரது மடியில் இருந்து நிமிர்ந்து, அவரது கன்னங்களைத் துடைத்து ,


"சாரி தாத்தா ! ப்ளீஸ் ! எனக்கு என்னோட தாத்தா இப்படி இருக்கறது பிடிக்கல ! அவர் ஒரு ராஜா மாறி ! நான் அப்படி இனி பேசவே மாட்டேன் ! சாரி தாத்தா !" என்று கணக்கற்ற முறை மன்னிப்பு கேட்டான். அவனுடைய இந்தப்பேச்சு தான் அவருக்குப் பெரிய ஆறுதல் !




தொண்டையைச் சீர் செய்து கொண்டவர்,


"கமான் துருவ் ! லெட்ஸ் ஹேவ் டின்னர் !" என்று பேச்சை மாற்றி, இருவரும் சாப்பிடச் சென்றனர். பெரிதும் மௌனம் தான் சாப்பிடும் நேரத்தில் ! பெரும்பாலும் துருவ் தனித்து தனது அறையில் உண்டு கொள்வான். வார இறுதியில் தாத்தா இருந்தால், அவருடன். அத்திப்பூத்தாற்போற் அன்னையும் இருப்பார் அப்போது.


சாப்பிட்டு முடித்தவுடன், துருவ்விடம்


"கூடியவரைக்கும் உன் கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணனும்னு நினைப்பேன் ..பட் ..பிசினஸ்...அண்ட் டிராவல்...இனி கண்டிப்பா உன்கூட நிறைய டைம் ஸ்பென்ட் பண்ணுவேன் " என்று அவனை ஆறுதல் படுத்தும் விதமாகக் கூற, அவன் விரக்தியாகச் சிரித்துக் கொண்டான்.


"புரியுது தாத்தா ! எனக்காக நீங்க எடுக்கற ஸ்டெப்ஸ் புரியுது . பட் தட்ஸ் ஓகே ! டேக் கேர் " என்று பட்டும்படாமலும் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்று விட்டான். துருவ் எனும் பள்ளிச்சிறுவனுக்குள் இருக்கும் அழுத்தத்தை அவர் அன்று சற்று உணர்ந்தார் .



யாருக்காக இல்லாவிடினும், துருவ்விற்காக சந்தியா சரியாக வேண்டும் என்ற அவரது எண்ணம் இன்று புது உறுதியைக் கொண்டது. அவர் எத்தனை முறை அவளிடம் சொல்லிப் புரியவைக்க முயற்சித்து தோற்றுப் போயிருப்பார், ஆனால் இன்று என்ன ஆனாலும் அவளைச் சரி செய்து தீர் வேண்டும் என்று அவர் முடிவைக் கட்டிக் கொண்டு அடுத்த நாள் மருத்துவமனைக்குச் சென்றார். சந்தியா மிகவும் சோர்வாக இருந்ததால் அவளை மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப மருத்துவர் அனுமதிக்கவில்லை.


 
Status
Not open for further replies.
Top