Thishi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அத்யாயம் - 16
"குட் மார்னிங் சின்னமா " என்ற அழைப்பில் தான் அவளுக்கு அடுத்தநாள் விடிந்தது. கிட்டத்தட்ட 60 வயது மதிப்புள்ள பெண் ஒருவர் தான் அவளை எழுப்பிவிட்டார். அவளது முகத்தை ஆர்வமாக அவர் பார்க்க, இவளோ வாயில் வழிந்த எச்சில் உணர்ந்து போய், தலைமுடி கலைந்து, உடை ஏனோ தானோ என்று 10 நாளாக குளிவிக்கப்படாத நாய் குட்டி போல் இருக்க, தன்னை உற்று உற்றுப் பார்ப்பவரிடம்,
"நான் நடிகை இல்ல ! காலையில் எல்லாரும் இப்படி தான் இருப்போம் ! நேச்சுரலா " என்று வேறு சொல்ல, அந்த பெண் பாக்கியம்
"நீ யாருனு எனக்கு தெரியும் ! அந்த சைட் பாத்ரூம் ! குளிச்சிட்டு, புடவை கட்டிக்கிட்டு வா" என்று அன்பாகக் கனிவான ஆணை ஒன்றை பிறப்பிக்க, நக்ஷத்திரா திடீரென ஏதோ நோபல் பரிசுக்குரிய விஞ்ஞான கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்தார் போல்,
"நீங்க தான் அந்த துருவ்வோட அம்மாவா!!" என்று கணவனை மிகவும் மரியாதையாக விளித்து, புத்திசாலித்தனமாகக் கேட்டு வைக்க, அந்நேரம் அந்த அறைக்குள் துருவ்வும் நுழைந்தான்.
பாக்யம், துருவ்வை வினோதப் பார்வைப் பார்க்க, துருவ் அவரை பார்வையாலே சமாதானம் செய்து வெளியே செல்லும் படி அறிவுறுத்தினான்.
அவரும் சென்றுவிட, நக்ஷத்திரா
"அவங்க தான் உன் அம்மாவா ?" என்று கேட்க, துருவ்
"விஷ் ஷி வாஸ் " என்று கூற, நக்ஷத்திரா
"அப்போ உங்கம்மா எங்கே ?" என்று என்றும் இல்லாத திருநாளாக தனது மாமியாரைப் பார்க்க மிகவும் ஆர்வம் கொண்டாள்.
"குளிச்சிட்டு வா ! அப்பறம் என்னோட அம்மாவை பார்க்கலாம்" என்று அவளிடம் சொல்ல, நக்ஷத்திரா
"நான் குளிக்காம பாடி ஸ்ப்ரே போட்டுக்கிட்டு வந்தா, பார்க்க மாட்டாங்களா ?" என்று குதர்க்கமாகக் கேட்க, துருவ்
"இந்த வீட்டு நாய்க்கு பாடி ஸ்ப்ரே பிடிக்காது , கடிச்சு வைச்சுரும்" என்று முகத்தில் துளி அளவு கூட உணர்வில்லாது அவளைக் கிண்டல் செய்ய, அவளோ அவனை முறைக்க, துருவ் சிறிதளவு இடது உதட்டை வளைத்து,
"குதர்க்கம் உனக்கு பக்கத்து வீடுன்னா, எனக்கு குதர்க்கம் மிடில் நேம் ! சோ …" என்று வாயை ஜிப் செய்வது போல் பாவனை செய்து,
"கெட் ரெடி ! பிரேக் பாஸ்ட் சாப்பிடு ! டேப்ளெட்ஸ் வேற சாப்பிடணும்" என்று கூறியது மட்டுமல்ல, அவளுக்கு உடைகள் எங்கு இருக்கிறது என்று காண்பித்தும் கொடுத்தான்.
சற்றும் மாறாத அவர்கள் நிலை, அப்படித்தான் அவள் நினைக்கிறாள் . அவளை இந்நிமிடம் வரை எக்கேடோ கெட்டு போகட்டும் அவன் நட்ட நடுவாற்றில் விடவில்லை என்பதை அவள் சிந்திக்கவில்லை. அது மட்டுமா ! அவளது கூற்றுப்படி அவன் பெண்கள் விஷயத்தில் சரியானவன் இல்லை என்றால் அவள் மீது ஏன் இந்த அக்கறையும் அன்பும் ?
அன்று ரவி வர்மா வீட்டில் கண்டக் காட்சி மற்றும் வேறோர் விஷயம் மட்டுமே அவளது நினைவில்!
பெருமூச்செறிந்தவள், திரை சீலையைத் திறக்க, வெளியே கண்ட காட்சியில் மெய்மறந்து நின்றாள். எதோ மலைப்பகுதியில் இருக்கிறாள் என்று புரிந்து கொண்டாள். அழகானப் பூந்தோட்டம் அவள் கண் முன் விரிந்து பரந்து கிடந்தது.
பூந்தோட்டத்தில் நடுவே வரை மரம், செடி கொடிகள்! ஓங்கி வளர்ந்த பலா மரங்கள், மா மரங்கள், தோட்டத்தைத் தாண்டி காபி செடிகள். அதன் நடுவே பாக்கு மரங்கள், அதில் மீது பரவி விடப்பட்ட மிளகு கொடிகள் என்று பனி மறைக்காத இடங்களில் அந்த இயற்கை காட்சி தெளிவாக அவளுக்குத் தெரிந்தது.
கண்ணக்கு எட்டாத பகுதில் எங்கும் பனி மட்டுமே! பனி மகள், விடியல் வந்ததில் வெட்கப்பட்டு மறைந்து செல்ல ஓடியபடி, காபி தோட்டத்தைத் தனது சுண்டு விரலால் ஸ்பரிசித்து செல்வது போல் அவளுக்குத் தோன்றியது, இயற்கை அன்னை முன் யாரும் அழகல்ல என்பது அந்தக் காட்சி இருக்க, உடனே தனது அலைபேசியை உயிர்ப்பித்தாள்.
அவள் கண்களில் பட்ட நிஜத்தை, நிழலாக்கினாள். அந்த பூந்தோட்டத்தில் இருந்து காப்பி தோட்டத்திற்குச் செல்ல ஒரு சிறிய கேட் இருந்தது, ஏதோ சொர்க்கத்தின் நுழைவாயில் போல அது அவளுக்கு தென்பட்டது. வெளியே சென்று படமாக்க அவளது இச்சை பெருக, அதை உடனே செயலாற்றினாள்.
"ஹேய் ! தாரா ! எங்க போறே ?" என்ற துருவ்வின் குரலை எப்போதும் போல் அசட்டை செய்தாள். பங்களா விட்டு வெளியே வந்தவளுக்கு தனது அறை எந்த திசையில் இருந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்லை. சுற்றிச் சுற்றி வந்தவளுக்கு, அந்த பங்களா பழக்கமானது போல தோன்றியது . எங்கே பார்த்து இருக்கிறோம் என்று யோசிக்க ஆரம்பித்தவளுக்கு திடீரென உடல் தூக்கி வாரிப் போட்டது.
ஒருவேளை இது...இது...என்று அவளது சிந்தனை நிறைவு பெரும் முன், துருவ்
"கோல்ட் வரும் !" என்று ஒரு சால்வையை எடுத்து போர்த்தி விட்டான் அவள் மீது.
"இது என்ன இடம் ?" என்று அவனையே கேள்வி கேட்க, அதை எதிர்பார்த்து இருந்தவன் அவளுக்கு இப்போதே எல்லாவற்றையும் சொல்ல விருப்பம் இல்லை.
"இது ஒரு பங்களா !" என்று மட்டும் சொல்ல, நக்ஷத்திரா இடுப்பில் கைவைத்து கொண்டு முறைத்து
"எந்த ஊர் இது ?" என்று அடுத்து துவக்க, துருவ்
"சக்லேஷ்பூர் ! பெங்களூர் தாண்டி வெஸ்டர்ன் காட்ஸ் பக்கம் ! இது நம்ம காப்பி எஸ்டேட்! நம்ம பங்களா ! இப்போ உள்ள வா ! அப்பறம் விசாரணை செய்யலாம்" என்று அவளை வற்புறுத்தி உள்ளே அழைத்துக் கொண்டு வந்தான்.
அப்போதும் விடாது,
"இது உன்னொட புது தொழிலா ? இந்த கடத்தல் ப்ரம் சென்னை டு சக்லேஷ்பூர் ?" என்று நக்கல் தெறிக்க அவள் கேட்க, அவனா விடுவான்?
"புது பிசினஸ் வந்து, அடங்காத குதிரையை அடக்கி, அதுக்கு மேனர்ஸ் சொல்லி கொடுக்கறது தான் ! யு நோ நீ லக்கி, உனக்கு நோ பீஸ்" என்று அவளுக்குப் பதிலடி கொடுத்தான். என்ன பேசினாலும் இவனைப் பேச்சில் ஒன்றும் செய்ய முடியாது என்று அவள் வீட்டை நோக்கிச் சென்றாள்.
சற்று நேரம் முன், புகைப்படம் எடுக்க வேண்டும் என்ற அவசரத்தில் அவள் வீட்டின் உள்ளைக் கண்டுகொள்ளாது, ஓடினாள். ஆனால் இப்போது உன்னிப்பாகப் பார்க்க ஆரம்பித்தாள்.
வீட்டைச் சுற்றி ஒரு வராண்டா, அதில் நாற்காலிகள் போடப்பட்டு, பூந்தொட்டியில் செடிகள் என்று அழகாக திருத்தமாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த மாதிரி அமைப்பு ஆங்கிலேயர்கள் மிகவும் விரும்புவர்.
ஆம், ஆங்கிலேய கால பங்களா அது. பல அடுக்குகள் அல்லாது,ஒரே ஒரு அடுக்கு மட்டும் கொண்டு, பெரிய சுற்றளவில் கட்டப்பட்டு இருந்தது. வரவேற்பு அறையில் ஆங்கிலேய கால சாமான்கள் நிரம்பி வழிந்தன.
மர தரையின் மீது, கார்பெட்டுக்கள், கனல் மூட்டுவதற்கு உரிய இடம், பெரிய அளவு ராஜ கம்பீரமான சோபா, வரவேற்பறையின் நடுவே தொங்கும் பெரிய அளவு சாண்டிலியலர் விளக்கு ஜன்னல் ஓர சாய்வான நாற்காலி, ஒரு மேஜை மீது அலங்கார பொருட்கள் மற்றும் முகம் பார்க்கும் கண்ணாடி, அந்த கால ஓவியங்கள் ஒரு புறம், மற்றொரு புறம் பெரிய தொலைகாட்சிப் பெட்டி, மினி பார் என்று பழமையும், புதுமையும் கலந்து அந்த வரவேற்பறை இருந்தது.
ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டு வந்தவள் பார்வை, ஓரிடத்தில் நிலைக்குத்த, துருவ்வும் அவளது பார்வை நின்ற திசையைப் பார்த்தான். அங்கு பெரிய அளவு ஓவியமாக ஒரு பெண்ணின் உருவப்படம் இருந்தது. அவரை எங்கோ பார்த்தது போல் அவளுக்குத் தோன்றியது, அந்த புகைப்படப் பெண்ணையும், துருவ்வையும் மாறி மாறிப் பார்க்க, துருவ்
"என்னோட அம்மா தான் ! " என்று அவளது சந்தேகத்தைத் தீர்த்து வைக்க, நக்ஷத்திராவிற்கு இன்னும் குழப்பம் தீர்ந்த பாடில்லை. இவரை முன்பு பார்த்து இருக்கிறோம் என்ற எண்ணம் திடமாக துவங்க, அவள் மேலும் கேள்வி கேட்கும் முன்,
"அவங்க ஜாடை எனக்கில்லை !" என்று அவள் சிந்தனையைத் திசைத்திருப்ப முயல, நக்ஷத்திரா
"தெரியுது ! நீ உன் அப்பா ஜாடையா இருக்கலாம்" என்று கூறி முடிக்க, துருவ்வின் முகம் இறுகியது.
"போதும் ! போ, ரெப்ரெஷ் யூர்செல்ப்" என்று அவளை அவளது அறைக்கு விரட்டினான்.
அதில் எப்போதும் போல் அவள் அவனை முறைத்தபடியே,
"கண்ட்ரோல் ஃப்ரீக் !" என்று திட்டிவிட்டுத் தான் சென்றாள். அவனோ வெறுமையாக தனது தாயின் புகைப்படத்தைப் பார்த்து கொண்டிருந்தான்.
ஒருவேளை அவர் இன்று இருந்து இருந்தால்... என்ற எண்ணம் தோன்றாது இல்லை அவனுக்கு.
பாக்யம் கூறியபடி அவள் புடவை காட்டிக்கொள்ளவில்லை, எப்போதும் போல், யார் பேச்சும் கேட்காத பழக்கம் உடையவளுக்கு முன் பின் தெரியாத ஒருவர் சொல்வதை எவ்வாறு கேட்கத் தோன்றும் !
தனது இஷ்டப்படி உடை அணிந்து வந்தவளை பாக்யம் ஒருமாதிரி பார்க்க, நக்ஷத்திரா,
"நீங்க என் மாமியாரா இருந்தாலும் இதை தான் செஞ்சிருப்பேன் !" என்று நக்கல் தெறிக்க கூற, துருவ்
"பாக்யம் மா ! இவ இப்படித்தான் ! காலையில் என்னவோ செய்யணும்னு சொன்னீங்களே ! என்ன அது ?" என்று பேச்சை மாற்ற, பாக்யம்
"நீங்களும் அதுக்கு வரணும் சின்னையா!" என்று இருவரையும் அழைத்துக் கொண்டு பூஜை அறைக்கு இழுத்துச் சென்றார்.
ஆங்கிலேய கால பங்களாவில் பூஜை அறை என்ற ஒன்று கிடையாது. நீலகண்டன் தான் அதை வரவேற்பறை தாண்டி தனியாக ஓர் இடமாக உருவாக்கினார். அதில் சுவாமி படங்களை தவிர, நீலகண்டனின் படமும், அவன் அன்னை சந்தியாவின் படமும் இருந்தது.
துருவ்வின் அன்னையை நக்ஷத்திரா, அடையாளம் கண்டு கொள்ள
"உன் அம்மா இப்போ …" என்று கஷ்டப்பட்டு அவனது உயரத்திற்கு எம்பி காதில் கிசுகிசுக்க, அவன் முகத்தை அதே நேரம் திருப்ப, அவனது இதழ்கள் அவளது இதழ்களைத் தீண்டும் அபாயம் நேரிட, நக்ஷத்திரா அது நடவாது இருக்க, சற்று பின்னால் சாய்ந்து விழப் போக, அவள் இடையில் கரம் கொடுத்து, துருவ் தாங்கினான். இதை எல்லாம் கண்ட பாக்கியம்
"சின்னையா ! இது பூஜை ரூம்" என்று கடிய வேண்டியதாயிற்று. அவளைச் சீராக நிறுத்தி வைத்தவன்
"மை மாம் இஸ் நோ மோர் !" என்று அழுத்தமாக அவன் கூற, நக்ஷத்திராவிற்கு உள்ளுக்குள் ஏதோ ஒன்று உடைய ஆரம்பித்தது.
ஒன்று இறந்தவரை பற்றி தவறாக பேசி விட்டாள்! அவர் உயிரோடு இருந்தாலும் அவள் பேசியது தவறு தான்.
மற்றோன்று அவன் அன்னை அவளுக்கு மிகவும் தெரிந்தவர் போல இருந்தார். இந்நேரம் அவரது பெயரைக் கேட்கவும் அவளுக்குத் தயக்கம்!
முகத்தில் வேதனை சாய, அவள் பூஜை அறையை இலக்கில்லாது பார்க்க, அடுத்த அதிர்ச்சியாக பாக்யம் ஒரு தட்டில் பூ, பழம், திருமாங்கல்யம் போன்றவற்றை வைத்து இருந்தார். அதைக் கண்ட துருவ்வின் முகம் இறுக, அவரோ இவர்கள் இருவரின் மன உணர்வுகள் புரியாது,
"சின்னையா ! நீங்க நம்ம சம்பிரதாயத்தை நம்ப மாட்டீங்கனு தெரியும் ! ஆனா அது எப்போதும் சரியா வராது ! இன்னிக்கி நல்ல நாள், உங்க அம்மா முன்னாடி, பெரியய்யா முன்னாடி சின்னமாவுக்கு தாலியை கட்டுங்க" என்று உரிமையாகப் பேச, துருவ் அவரை தீர்க்கமாக பார்த்து
"தாலி கட்டலைன்னா எங்க உறவு மாற போறதில்லை, சாரி பாக்யம் மா ! இது வேணாம் !நாங்க இப்படி இருக்கறது தான் பெட்டர் !" என்று சொல்லிவிட்டு அவன் அங்கிருந்து சென்றும் விட்டான். பாக்கியத்தின் முகத்தில் வேதனை சாய, நக்ஷத்திரா ஒருபுறம் நிம்மதி அடைந்தாலும், மறுபுறம் ஏனோ அவனது இந்த மறுப்பு அவளுக்கு ஒருமாதிரி இடைஞ்சலாக இருந்தது, சிறிய அளவு முள் பாதத்தில் தைத்தால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது.
பாக்யம் வருத்தத்துடன் சந்தியாவின் புகைப்படத்தைப் பார்த்து,
"நீங்க இல்லாம போயிட்டிங்கனு அன்னிக்கி மட்டுமல்ல, இன்னி வரைக்கும் வருத்தமா இருக்கு ! இப்படி இருப்பாரா நம்ம சின்னையா ?" என்று புலம்பி, கண்ணீர் வடிக்க, நக்ஷத்திரா அவரது கண்ணீர் தாங்க முடியாது,
"அது அவர் ...கொஞ்சம் அவருக்கு வேற டென்சன் ! அதான் !" என்று சமாதானம் செய்ய முயல, பாக்யம் அவளைப் பிடித்து கொண்டார் .
"அதென்ன தாலி கட்ட கூடாதுனு டென்ஷன் !" என்று அவளை பிடித்துக் கொள்ள, நக்ஷத்ரா என்ன பதில் கூறுவதென்று தெரியாது விழி பிதுங்கினாள்.
அவரிடம், தான் அவனுடன் சேர்ந்து வாழ விருப்படவில்லை, ஆகையால் ஒருவேளை அப்படிச் சொன்னான் என்று அவளால் சொல்லவும் முடியவில்லை. கூடிய சீக்கிரம் தனக்கு தாலி காட்டுவார் என்றும் சொல்ல முடியவில்லை. ஏதேதோ சொல்லி சமாளித்து ஒருவழியாக அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டாள்.
வரவேற்பறை வந்தவளை, துருவ் ஒரு நாய் குட்டியுடன் வரவேற்றான். அதுவும் அதை மடியில் வைத்துக் கொண்டு அவன் கொஞ்சிக் கொண்டிருக்க, நக்ஷத்திரா அவனிடம் சந்தியா பற்றி தவறாக பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வந்தவளுக்கு, ஒரு குழந்தையை மடியில் வைத்து கொஞ்சுவது போல், அவன் நாய்குட்டியை வைத்து கொஞ்சி கொண்டிருப்பதைப் பார்த்து, பற்றிக் கொண்டு வந்தது.
ஒருவேளை எல்லாம் சரியாக இருந்திருந்தால், தன் வயிற்றில் ஓர் உயிர் இருந்திருக்கும், அது அவளது வாழ்வாதாரமாக இருந்திருக்கும். ஆனால் அவள் மறுபடியும் யாருமற்ற அனாதை ஆகிவிட்டாளே என்பது மட்டும் தான் அவளது அமைதியற்ற மனம் அவளுக்கு எடுத்துக் கூறியது.