இருபத்தி ஐந்தாம் பகுதி...
பவித்ரன் ரஞ்சனியைக் காண அவள் வீட்டிற்கு சென்றான். அங்கு வாட்ச்மேன் தவிர வேறு எவரும் இல்லை.
அந்த காவல் காரனும் கிட்டத்தட்ட ராஜாவைப்போலத்தான், எதைக்கேட்டாலும் யாரிடம் சொல்லக்கூடாது என ரஞ்சனிமேடம் சொல்லிருப்பதாக கூறினான்.
நான் ரஞ்சனியின் கணவன் என பவித்ரன் சினந்தான்.
காவல் காரன், அப்படினா நீங்க பவித்ரன் சாரா?, என்றான்.
பவித்ரன், ம்.. இப்போதாவது சொல் என்றான்.
மன்னிச்சிடுங்க சார், உங்ககிட்டத்தான் வாயே திறக்கக்கூடாதுனு மேடம் சொன்னாங்க, ஆமா சார் கல்யாணங்கட்டின பொண்டாட்டி ஐஞ்சே நாள்ல, ஓடிவந்து, கண்காணாத இடத்துக்கு ஓடீட்டாங்களே, அப்படி என்னா சார் பண்ணீங்க???
அவன் கேட்ட கேள்வி பவித்ரனை சுருக்கென தைத்தது.
பவித்ரன், அவசியம் தெருஞ்சுக்கனுமா?? என்றான்.
ஆமா சார். சொன்னீங்கன்னா, எனக்கும் கெல்ப்பா இருக்கும், எப்பொண்டாட்டி பேஜாருசார், வருசத்துக்கு ஒருதரம் அவங்க அம்மாவீட்டுக்கு கூட போமாட்டுது,
பவித்ரன் அந்த காவல்காரனை கூர்ந்து பார்த்தான். வயது ஐம்பதை நெருங்கியிருக்கும். ஆனால் மனைவியை அவன் இங்கே கிண்டலாக சொன்னாலும், சொல்லும்போது அவன்முகம் பிரகாசமடைகிறது. அவன் வார்த்தைகளில் என்மனைவி என்னைவிட்டு செல்லமாட்டாள் என்ற கர்வம் தெரிகிறது.
ஐம்பதைக் கடந்த தம்பதியரின் ஈர்ப்பு கூட, ரஞ்சனிக்கு என்மேல் இல்லையா? நான் உன்னை தேடுமளவு நீ என்னை தேடவில்லையா? உன் மனதில் நான் பதியவே இல்லையா? என மனதில் மருகினான் பவித்ரன்.
ஆனால், எதிரே உள்ள கிழவனிடம் அதற்கு மாறாக இதை நீங்கள் ரஞ்சனியிடம் கேட்கவில்லையா?? ஏன் எதற்காக ஐந்தேநாட்களில் வந்தாய்?? என, என்றான் கண்களில் குறும்புடன்.
பவித்ரன் நினைத்தது போலவே, ரஞ்சனி என்றதும், ஐயயோ, நான் அவ்வளவுதான் செத்தேன் என்றார் அவர்.
அடுத்ததாக, ராஜன் நகைக்கடைக்கு சென்றான் பவித்ரன்.
அங்கு அந்த நகைகடையை மூன்றுவருடம் லீசில் விட்டுச்சென்றிருந்தார் ராஜன்.
பவித்ரன், ராஜனை நீங்கள் தொடர்பு கொள்ள ஏதேனும் தொலைபேசி எண் கொடுத்தாரா? என்றான்.
தற்காலிகமாக, அந்த கடையை நிர்வாகம் செய்பவரோ, இருக்கிறது சார்! என இரண்டு தொலைபேசி எண்களை தந்தார்.
அதில் ஒன்று, ரஞ்சனி கடையின் நிர்வாக அதிகாரி ராஜாவுடையது. திரும்பவும் இவனா? என பவித்ரன் அடுத்த எண்ணை பார்த்தான்.
அது சென்னை கமிஷ்னர் செல்வபாண்டியன் உடைய தொலைபேசி எண்.
பவித்ரன் கமிஷ்னருக்கு அழைத்தான்.
ஹலோ, சார் நான் பவித்ரன், ராஜன் சார் கடைல இருந்து உங்க நம்பர் கிடைச்சது என்றான்.
பவித்ரன் ....?? ரஞ்சனி முன்னால் கணவரா??? என்றார், கமிஷ்னர்.
முன்னால் கணவரா? என்ற வார்த்தையில், பவித்ரன் மனமோ,அப்படியானால் ரஞ்சனி வேறுதிருமணம் செய்துகொண்டாளா? அப்படி திருமணம் செய்து கொள்ளாமல், நான் எப்படி முன்னால் கணவனாவேன். அதற்காகத்தான் என்னை தவிர்க்கிறாளா? யாரை திருமணம் செய்தாள் என பலவாறு யோசிக்க ஆரம்பித்தது.
ஆனால், கமிஷ்னரிடமோ, முன்னால் கணவன் அல்ல, இன்னாள் கணவன் என்றான், சற்று அழுத்தமாக.
அப்படியா??? சரி, சரி அப்படினா உங்களுக்கு விஷயம் தெரியாதுன்னு நினைக்கிறேன்.
என்ன விசயம்??? என்றான் பவித்ரன் ஒருவிய பரபரப்புடன்.
ஓகே பவித்ரன், எனக்கு கொஞ்சம் அவசரவேலை இருக்கு. சோ நீங்க இன்னைக்கு நைட் ப்ரியா இருந்தீங்கனா ஒரு எட்டு மணிக்கு தாஜ்ல மீட் செய்து பேசலாமா ?? என்றார் கமிஷ்னர்.
நன்றி சார் என பேசியை அணைத்தவன் மனம் குழம்பித் தவித்தது. என்ன விஷயம்?? என்ன நடந்தது ரஞ்சனி??? எங்க இருக்குற டாலி.... என மனசீகமாக ரஞ்சனியிடம் பேசினான்.