பவித்ரனின் உடைகள் ஒன்று கூட அவனது அலமாரியில் இல்லை. சதி செய்கிறாளாக்கும் என நினைத்தவன், நேற்றைய உடையுடனே கிளம்பினான்.
டேக்சிக்கு போன் செய்ய செல்லை எடுத்தவன், பல்லைக்கடித்தான். அதில் சிம் இல்லை.
ரஞ்சனி தோட்டத்தில் இருந்த இருக்கையில் அமர்ந்து, செடிகளுக்கு தண்ணீர் விடுவதை வேடிக்கை பார்த்தவாறே, காபி குடித்துக்கொண்டிருந்தாள். சற்று தொலைவில் நாய்கள் அதீதமாக குரைத்துக்கொண்டிருந்தது.
விறுவிறுவென வந்தவன், வந்த கோபத்தில், அவள் கையிலிருந்த காபியை பட்டென தட்டிவிட்டான்.
என்ன பவித்ரன், ஏதும் கோபமா?? எனக்கேட்டாள் ரஞ்சனி.
நடிக்காத ரஞ்சனி!! என்னோட சிம்கார்டு எங்க??
எனக்கு தெரியாதே!! என காபியை பிளாஸ்கிலிருந்து அடுத்த கப்பில் ஊற்றிக்கொண்டிருந்தாள்.
டோண்ட் ஆக்ட் டூ ஸ்மார்ட். பேக்டரில நீ என்னல்லாம் செஞ்சனு எனக்கு நல்லா தெரியும். இன்னும் உன்னோட நடிப்ப நம்ப நான் தயாரா இல்லை.
சரி நம்பவேண்டாம். காபி குடிக்கிறீங்களா?? என காபியை அடுத்த கோப்பையில் ஊற்றினாள்.
ரஞ்சனியை கடும் கோபத்தில் முறைத்துப் பார்த்தவன், என்னோட பேக்டரிக்குள்ள இருக்குற உன்னோட ஆளுங்கள அடிச்சு விரட்டுறேன் என வாயிலை நோக்கி நடந்தான்.
ஒரு நிமிடம் என்றவள், அது என்னோட பேக்டரி என்றாள் அவனை அழுத்தமாகப் பார்த்து.
திரும்பி இரண்டெட்டில், அவள் கழுத்தைப் பிடித்தவன், என்னை கொலைகாரனா மாத்தீடாத டி!! எனவும் நாய்கள் அனைத்தும் பலமாக குரைக்க ஆரம்பித்தது.
கையில் வைத்திருந்த காபியை அவன் முகத்தில் பட்டென விசிறினாள். கையை உதறிக்கொண்டு முகத்தைத் துடைத்தவனிடம், இருந்த ஒரு சட்டையும் போச்சா!! சே!! என்றவள் இப்போது ரஞ்சனியாக தனது நாய்களுக்கு கட்டளையிட்டாள் இங்கிருந்து பவித்ரன் ஒரு அடி வெளியே எடுத்துவைக்கக் கூடாது என்றுவிட்டு உள்நோக்கி நடந்தாள்.
இப்போது பவித்ரன் சட்டென வாயிலை நோக்கி ஓட, இரண்டு நாய்களும் அவனை துரத்தி ஓடியது. பவித்ரன் புல்லட்டிலிருந்து வந்த குண்டு போல் வேகமெடுத்தான். ஓடுவதற்காகவே பயிற்சி எடுத்த நாய்கள் அவனை நோக்கி பாய்ந்தன. பவித்ரன் ஓடும்போதே , மருது மருந்து என சத்தமிட, ரஞ்சனி அப்போதுதான் திருப்பி, நாய்கள் பவித்ரனை துரத்தி ஓடிக்கொண்டிருப்பதைக் கண்டாள்.
ரஞ்சனி பவித்ரன் முட்டாள்தனமாக இப்படி ஓடுவான் என நினைக்கவில்லை. நாய்களை தனது பிடியிலிருந்து விட்ட டிரைனரிடம் படபடத்தாள். முதல்ல நாய நிறுத்துங்க, அது மட்டும் பவித்ரனை கடிச்சது, அதுவும் உயிரோட இருக்காது, நீங்களும் இருக்க மாட்டீங்க, அத எப்படியாவது நிறுத்துங்க என கிட்டத்தட்ட கத்தினாள்.
இரு டிரைனரும் கையை பிசைந்து கொண்டு நின்றனர். ஏனெனில் இந்த இரண்டு நிமிடங்களில் கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு பவித்ரனும், அவனை துரத்திய நாய்களும் ஓடியிருந்தனர்..
எல்லோரும் பவித்ரனை பார்க்க, ஒரு மதம் பிடித்த யானை வாயிற்கதவை உடைத்துக்கொண்டு, பவித்ரனை நோக்கி வந்து கொண்டிருந்தது.
ரஞ்சனி உறைந்து நின்றாள்.
பலியாவாளா?? பலிகொடுப்பாளா??